About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, March 30, 2015

ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-12/03/04





என் பதிவுக்கு வருகை தந்து கருத்தளிப்பவர்களின் அனைத்துப் பின்னூட்டங்களையும் நான் மிகவும் ரஸித்துப்படித்து, அவற்றை ஓர் பொக்கிஷமாக நினைத்து மகிழ்வதுண்டு. 

ஒரு சிலர் மிகுந்த ஈடுபாட்டுடன் வாசித்து சிரத்தையாக அளிக்கும் பின்னூட்டங்களைப் படிக்கவே மிகவும் உற்சாகமாகவும், சந்தோஷமாகவும், மனதுக்கு மகிழ்ச்சியாகவும், மேலும் நாம் இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற உந்துதலையும், பொறுப்புக்களையும் ஏற்படுத்துவதாகவும் அமைந்து விடுவதுண்டு.  

நான் பதிவு எழுத ஆரம்பித்த முதல் ஆறு மாதங்களில் [January to June 2011] மட்டும், வெளியிட்டிருந்த என் 97 பதிவுகளிலிருந்து சுமார் 10 பதிவுகளை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதில் வந்திருந்த பின்னூட்டங்களில் சிலவற்றை மட்டும் தங்களின் பார்வைக்கு தினமும் கொஞ்சமாக இந்தத் தொடரினில் கொடுக்க விரும்புகிறேன்.

பொதுவாகவே அந்தக்காலக்கட்டத்தில் என் பதிவுகளுக்கு ஏராளமாகவும், தாராளமாகவும் பின்னூட்டங்கள் கொடுத்துள்ள திருமதிகள்: மஞ்சுபாஷிணி, இராஜராஜேஸ்வரி, நுண்மதி, பூந்தளிர், ஆதிவெங்கட், ஸாதிகா, ஏஞ்ஜலின், அதிரா, ஆச்சி மற்றும் திருவாளர்கள்: அன்பின் சீனா ஐயா, தி. தமிழ் இளங்கோ, ஆரண்ய நிவாஸ், வெங்கட் நாகராஜ், ஹரணி, புலவர் இராமநுசம், திண்டுக்கல் தனபாலன் போன்ற பலரையும் விட்டுவிட்டு, குறிப்பிட்ட ஒரு சிலரின் பின்னூட்டங்களை மட்டுமே காட்டுவதாக உள்ளேன். இடநெருக்கடிக்காக மட்டுமே இவர்களை நான் இங்கு தவிர்த்துள்ளேன். அவர்கள் ஏதும் தவறாக நினைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது.


அன்று உரமிட்டவர்களில் ஒருசிலர்



//அந்தக் குளத்துக்கு என் மீது இன்றும் கூட 
எவ்வளவு பாசம் பொங்கி வந்தது தெரியுமா?
நான் முதல்படியில் காலை வைத்ததும் அப்படியே ஒரு பாசத்தில் 
பத்தாம் படிவரை என்னையுமறியாமல் இழுத்துக் கொண்டது.//

ஐயா நான் சிரித்துக்கொண்டே இருக்கிறேன் ..... 
ஏன் தெரியுமா நீங்கள் சொல்லியுள்ள கதை அப்படி.... 
கொஞ்சநேரம் என்னால் படிக்க முடியவில்லை....
ஹிஹிஹிஹிஹிஹிஹி....

** அடடா, நான் வழுக்கி விழுந்ததில்,

உங்களுக்கு இப்படி ஒரே சிரிப்பா? ;))))) **


ஐயா நீங்கள் வழுக்கி விழுந்ததற்கு நான் சிரிக்க வில்லை...... 
உங்களின் எழுத்து வடிவம் என்னை சிரிக்க வைத்தது... 
மறுபடியும் உங்கள் கருத்தை படித்தவுடனும் எனக்கு சிரிப்புதான் வருகிற ஐயா...


**தாங்களும் என் மீது [அந்தக்குளம் போலவே] நிறையத்தான் பாசம் வைத்துள்ளீர்கள் 
என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.**

என்னை புகழ்ந்ததிற்க்கு மிக்க நன்றிகள் ஐயா...


//தோசைக்கு மாவு அரைத்து, தோசைகள் முழுவதும் முறுகலாக வார்க்கப்பட்டதும், 
கடைசியில் பாத்திரத்தில் மிஞ்சிய மாவை ஒட்ட வழித்து சற்றே கனமாக ஊத்தப்பம் போல 
கெட்டியாக வார்த்து விடுவார்களே, அதே போலத்தான் ஆகி விட்டது போலிருக்கு என் பிறப்பும். 
அன்று முதல் இன்று வரை நான் ஆள் கெட்டி தான். எல்லாவற்றிலுமே கெட்டிதான், 
கெட்டிக்காரன்தான்னு அவசரப்பட்டு தப்பா ஏதும் நினைச்சுடாதீஙக. 
நாளுக்கு நாள் உடம்பு வெயிட் ஏறுமுகமாகவே இருக்கு, அதைத்தான் கெட்டி என்று சொன்னேன். //

நீங்கள் கூறியிருக்கும் உவமைகள் எல்லாம் படிக்க நகைச்சுவை கலந்த சுவாரஷ்யமாக இருக்கிறது.....


//நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன். இல்லாவிட்டால் 
எனக்கு பிறந்த இடம் மட்டுமல்லாமல் அதுவே என்னை ஆட்கொண்ட இடமாகவும் ஆகியிருக்கும்.//

என்னால் முடியவில்லை ஐயா......
சிரிப்பு ....... ஹிஹிஹிஹிஹிஹிஹி


ஐயா நீங்கள் கூறியுள்ள கோயிலின் பெருமை பற்றியும் அந்த ஊர் பற்றியும் செய்திகள் 
அனைத்தும் நேரில் கண்டதற்கு சமமாகிறது
...
உங்களின் பெயர்காரணத்திற்க்கு நீங்கள் கொடுத்துள்ள விளக்கமும் அதன் நகைசுவையும் அருமை ஐயா.... 
உங்கள் தாத்தாவின் பெயர்தான் உங்களுக்கு வைக்க பட்டுள்ளது என்றும் தெரிந்து கொண்டேன்..... 
நல்ல அருமையான பெயர்காரண கதை.....
நகைச்சுவை மிளிரும் அருமையான எழுத்து ..

படிக்கவே ரொம்ப சுவாரசியமாக இருக்கு!

அந்த ஊத்தப்பம் மேட்டர்...சூப்பர்! 

புது ரூபாய் நோட்டுக்கு 'வீ.......ஜீ' என்ற செல்ல அழைப்பு...! 

நல்ல நகைச்சுவை உணர்வு சார் உங்களுக்கு!


மிகவும் நகைச்சுவையாக....எழுதி இருக்கிறீர்கள். 

பிறந்த கோவிலூர் பற்றியும், பாசமான குளம் பற்றியும், ஆர்வத்துடன் அக்கா 
துணையோடு பிறந்த இடத்தைகண்டுவந்ததும் அருமை.


ஜாதகம் பார்த்து நீங்கள் அறிந்து கொண்ட விஷயம் முற்றிலும் 100 / 100 உண்மை தான்.


பெயர் காரணமும், அவரவர் அழைக்கும் விதமும், 
தாங்கள் 2005 பரிசு வாங்கியதும் அருமை ஐயா அருமை. 
வாழ்த்துக்கள்

உங்கள் எழுத்துக்கள் ஒருவிதமான உற்சாகத்தை 
தொற்றிக் கொள்ள வைக்கிறது ஐயா. நன்றி

அனுபவம்தான் மனிதனை புடம் போடும். 

பட்டாபிக்கும், அவர் மனைவி பங்கஜத்துக்கும் 
காசிக்குச் சென்று திரும்புவதற்குள் கண்டிப்பாக 

இது போல் ஒரு அனுபவம் காத்திருக்கிறது 
என்றே நினைக்கிறேன்.


கதையின் போக்கும், தெளிந்த நீரோடை 


போன்ற உங்கள் நடையும் அருமை.

அடடா! என்ன இது இப்படி எழுதிட்டேளே.

முதல் நான்கு பத்திகளைப் படித்ததும்:

மே 1, 2013 எங்களுக்கு முப்பதாவது திருமணநாள். 
எங்களுக்கும் இது போல் ஏதாவது 

வரம் கிடைக்குமான்னு யோசிச்சேன்.

முழுக்க படிச்சதும் புஸ்ஸுன்னு காத்து இறங்கின 


பலூன் மாதிரி ஆயிடுத்து மனசு.

சாமி கிட்ட எறும்பு, நான் கடிச்சதும் சாகணும்ன்னு 


முட்டாள்தனமா வரம் கேட்ட மாதிரி இல்ல இருக்கு.

ஆனா ஒண்ணு. திரு ரமணி (அதான் எங்காத்துக்காரர்) 


இந்த மாதிரி பைத்தியக்காரத்தனமா எல்லாம் 
வரம் கேக்க மாட்டார். ரொம்ப கெட்டிக்காரராக்கும்.


அச்சா, பஹூத் அச்சா.

நீங்க சோகமான முடிவு தர மாட்டீங்கன்னு நான் நம்பறேன்.

காதலும், கத்தரிக்காயும் அருமை.


2011 காதலர் தினக்கதையை 2013 காதலர் தின மாதத்தில் படித்தேன்.



//மிகவும் போற்றுதலுக்குரிய என் பெற்றோர்களுக்கு 

நான் கட்டக்கடைசியாகப் பிறந்த பிள்ளை. 

எனக்கு ஒரு தம்பியோ தங்கையோ பிறக்க எனக்குக் 

கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது.//

அன்றே அந்த இறைவனுக்குத் தெரியும், 

இந்தக் குழந்தை எழுத்துலகில் எண்ணில்லா தம்பி, 

தங்கைகளை ஊக்குவித்து உருவாக்கப்போகிறது என்று.
நான் முதன் முதலில் உங்கள் பெயரைப் பார்த்ததுமே 

வை.கோ என்று சொல்லலாமா என்றுநினைத்தேன். 

எனக்கு அரசியலில் நாட்டமில்லாததால் 

அந்தப் பெயர் வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

உங்கள் எழுத்து நுனி முதல் அடிவரை இனிக்கும் கரும்பு. 



எதைச் சொல்ல எதை விட. 


படிக்க ஆரம்பித்து முடிக்கும் வரை சுவாரசியம். 



படிப்பவரை எழுத்தாற்றலால் கட்டிப்போடும் லாவகம். 
http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html




பாவம் கூரியர் ஆள்!

படித்துக் கொண்டே வந்தவள் கூரியர் ஆள் சொன்னதைக்கேட்டு 
வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். 

தொலைக்காட்சியில் சுவாரஸ்யமாக சாம்பியன் கிரிக்கெட் 
பார்த்துக் கொண்டிருந்த கணவர் திரும்பிப் பார்க்க அவரிடமும் 
உங்கள் கதையைப் படித்துக் காட்டி இப்போது இருவருமாக 
சிரித்துக் கொண்டிருக்கிறோம்.


அருமையான நகைச்சுவை கதை! 


பலவிடங்களில் இப்படி நடக்கின்றன. 

அதனால் இதைக் கதை என்று சொல்ல முடியாது!


பாராட்டுக்கள் கோபு ஸார் எங்களையும் வாய்விட்டு சிரிக்க வைத்ததற்கு! 



இந்த கதை ஒரு தெளிவான நீரோடை. 


அதன் மூலம் காவிரியையும் கங்கையையும் 


இணைத்த பெருமை உங்களையே சாரும். 


கங்கை மண்ணுக்குச் சென்று காவிரி மண்ணின் 

கல்வி பெருமையை விளக்கிய இடத்தில் 

நீர் நிஜமாகவே கலையுலகம் தந்த காவிரிக் கரை மன்னன் .


கணேஷ்.


பொடி போடும் ஆசாமியோட நிறைய காலம் 

பழகி இருந்தால் மட்டுமே இவ்வாறு எழுத முடியும்.

தோசை பார்சல், பிடில் ..  


நகைச்சுவையின் உச்சக்கட்டம்.


//ஒரு அடி நீளத்திற்கு மேல் நீண்ட ஒரு மெல்லிய இரும்புக்குச்சிபோல 

ஒரு கரண்டி வைத்திருப்பார்கள். அதன் கொண்டைப்பகுதியில் ஒரு 

10 சிட்டிகை மட்டும் பொடி பிடிக்கும் அளவு குழிவான பகுதி இருக்கும். 

பொடி ஜாடிக்குள் அதை நுழைத்து, அடிக்கடி 5 நிமிடங்களுக்கு ஒரு முறை வீதம், //


எனக்கும் அந்த அனுபவம் உண்டு. 


ஒவ்வொரு முறையும் டனக் டனக் என்று ஜாடி சத்தம் வேறு. 

எப்படி சலிக்காமல் பேரெழுச்சியுடன் எடுத்து தருகிறார்கள் என்று வியப்பதுண்டு .

அடுத்த பகுதிக்கு எழுச்சியோடு காத்திருக்கிறோம்.



//தீட்க்ஷையாகப்பெற்றுக்கொள்கிறேன்.//


பொருத்தமான இடத்தில் பொருத்தமான வார்த்தை.



//ஆமாம், சார், ஏதோ மத்யானம் ஆபீஸ் ஆர்டர் வரப்போகுதுன்னு சொன்னீங்களே, 

ஆபீஸே முடியும் நேரமாகப்போவுது, இன்னும் வரக்காணோமே”//

காலை முதல் மாலை வரை வெட்டி பேச்சு பேசுவதை 


அழகாக சொல்லியுள்ளீர்கள் .

நல்ல ஓபி ..


இந்த புது ஆள் வ .வ .ஸ்ரீ, யின் பதவிக்கு பொருத்தமானவரே.



//காஃபி பில்டரில் தங்கியுள்ள சக்கைபோல தேங்கி..//


பத்தாயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே 


தோன்றக் கூடிய நகைச்சுவை ...


விமானப் பணிப்பெண்கள் ஒருவருக்கு கூட பொடி பழக்கம் இல்லாதது வருத்தமே ..

இருந்திருந்தால் அந்த சேவையும் செய்திருப்பார்கள் ..



//விமானம் ஏறும் முன்பு என்னைப் பரிசோதித்த அதிகாரிகள், 

என் சட்டைப்பையிலிருந்த பொடிட்டின்னைத் திறக்கச்சொல்லி, 

அதில் நான் புதுசாக வாங்கி அடைந்திருந்த மூன்று ரூபாய்ப்பொடியையும் 

ஒரு ஓரமாக தரையில் என்னை விட்டே கொட்டிவிடச்சொல்லிவிட்டனர். //


பொடியை அவர்களே கொட்டிருந்தால் கூட 


அவ்வளவு வருத்தம் தந்திருக்காது.

ச்சே ..என்ன ஒரு அராஜகம்
.



அனுபவம் மிக்க பெரியவர்களுடன் பத்து நிமிட சந்திப்பு கூட 

நம் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் 

என்பதை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள்.

கம்பன் வீட்டு கைத்தடியும் கவி பாடும் என்பது போல 



தங்கள் சிந்தனையில் தோன்றிய 

கைத்தடியும் காவியம் படைக்கிறது.


சிறந்த படைப்பு . வாழ்த்துக்கள் .



கல்யாணத்துக்கு முன்னரே மாமியாரை பற்றி இவ்வளவு 

தெரிந்து வைத்து கொண்டு விட்டதால் இந்த பெண்ணின் 

திருமண வாழ்க்கை சுலபமாக செல்லும். 


ஒவ்வொரு வார்த்தையிலும் நீங்கள் கடந்த 

அனுபவங்கள் பிரதிபலிக்கின்றன. 



சிறந்த நடை.



ஒரு நல்ல விசு படம் பார்த்தால் போல் இருக்கிறது .



வாழ்த்துக்கள் .




ஈரோட்டுக்காரியின் சந்திப்பு வெகு சுவாரசியம்.

இன்னும் அவள் கதாநாயகன் மீது அன்பாய் இருப்பது 

நாயகன் தூரத்தை அனுசரிப்பதும் வெகு ஜோர்.

முதலிலும் முடிவிலும் ஒரே மாதிரி.

மெட்ராஸ்காரி மீது நாயகனின் அன்பை வெளிப்படுத்துதலையும் 


திறமையாகக் கையாண்டிருக்கிறீர்கள். 

வேறு எப்படி கதை போனலும் சிக்கலே.

கதையை ஆராய்ச்சி செய்யாமல் அப்படியே ரசித்துப் படியுங்கள் என்று 


நீங்கள் உரிமையாக கடிந்து கொள்வீர்களோ??

ரசித்து ஆராய்கிறேன் சார்.

ருசிகரமான பதிவு. நன்றி.



கடைசியில் சுடிதர் ரிஜெக்ட் ஆகிவிடக்கூடாதே என்ற 

பதைபதைப்பு எனக்குள்ளும் இருந்தது.

இந்த மாதிரியான ரிஸ்க் நம்மால் முடியாது 


என்று தீர்க்கமாக முடிவு செய்து விட்டேன். 


பல நாட்களுக்குப்பிறகு லயித்துப் படித்த சிறுகதை.

அந்த காலத்தைக் காட்டிலும், இன்றைய தினத்தில் தான் 

நகை வாங்குவது எளிதாகப் படுகிறது. 

இருந்தாலும் மூக்குத்தி வாங்கிய அனுபவம் இல்லை. 

உங்கள் கதை மூலம் ஓர் உண்மை அனுபவம் போன்ற 

உணர்வு கிட்டும் என்ற எதிர்பார்ப்பு .....

தொடர் கதையின் அழகே அது தானோ?


ரூ 4820/- க்கு மூக்குத்தியா? 

ஏதோ பெரிய விஷயம் இருக்கும் போலேயே. !!.

Waiting waiting Venkat naan,


How I wonder what is on !!



அந்தப் பெரியவரின் நூறு சதவிகித கவன சிதாறாமை 

அவருக்கு வெற்றியை உறுதி செய்திருக்கிறது.

PRESENT MOMENT LIVING - என்ன என்பதை விளக்கும் நல்ல கதை.

POSITIVE MENTAL ATTITUDE- என்பதையும் அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.


கடைசிவரை பெரியவர் அந்தப் பையனை சந்தேகப்படவில்லை 

என்பதைத்தான் குறிப்பிடுகிறேன்.

இந்த இரண்டும் ஒரு சேர இருந்தால் எடுத்த காரியம் கைகூடும்.



உங்கள் கதையில் வரும் பெரியவர் ரொம்பா பிராக்டிகலான ஆளாக இருக்கிறார். 

ஆனால் கொஞ்சம் சுயநலவாதியோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. 


கதாசிரியரை சந்திக்க வரும் நேரம் மற்றும் இரவு முழுவதும் பேசுவதற்கு 

ஆள் வைத்திருப்பது போன்ற விஷயங்கள் தான் இந்த சிந்தனையைத் தருகிறது.


இரவில் தூங்கமுடியாத ஒரு நிலை ஒரு குறைபாடுதான். 


அதை எப்படி லாவகமாக சமாளிக்கிறார் 

என்ற உங்கள் கற்பனை அற்புதம்.



என் தாய் தந்தை என்னுடனே இருக்கிறார்கள். 


வேறு சில பெரியவர்களுக்கும் நான் உதவியும் வருகிறேன். 

65 வயது முதல் 85 வயதுடைய ஆண், பெண் இருபாலரும் இதில் உண்டு. 

எந்தக் காரணத்தினாலோ இவர்கள் அத்தனை பேரும் குழந்தைகளைப் 

போலவே நடந்து கொள்கிறார்கள். 

சில சமயம் நல்ல அறிவுரைகளை வழங்குவார்கள். 

பலசமயம் நம் பொறுமையை சோதிக்கிறார்கள். 

முதுமை வரும் பொழுது நாம் எப்படி இருக்க வேண்டும் 

என்பது பற்றி நான் சிந்திப்பதுண்டு.

சாகம்பரி மேடம் சொல்லியிருப்பது போல் ஒரு முதியோர் 


நிலையத்தை அமைப்பது தான் சிறந்த தீர்வாகப்படும். 


ஒருபுறம் பெரியோர்கள் சிலர் புறக்கணிக்கப் படுகிறார்கள் என்பது உண்மை. 

நல்ல படியாக கவனிக்கப்பட்டுவரும் பெரியவர்கள் திருப்தியில்லாமல் இருப்பதும் யதார்த்தம். 


என்னதான் பாசம் நேசம் என்று பேசினாலும், இன்றைய சூழ்நிலையில் பெரியவர்களை 

சரியானபடி பார்த்துக் கொள்ள ஒரு குடும்ப அமைப்பை இழந்து நிற்கிறோம் என்பது உறுதி.


சிந்தனையைத் தூண்டிய பதிவுக்கு நன்றி. 



எல்லாப் பின்னூட்டங்களும் அருமை.


உங்கள் கதைகள் படிக்கப் படிக்க 

சுவாரசியமாகப் போகும். 



இப்பொழுதெல்லாம் பின்னூட்டங்களும் 

சுவையாக இருக்கின்றன.



பேஷ் பேஷ் ! ரொம்ப நன்னா இருக்கு.




நாத்தனாருக்கு சப்போர்டாக இன்னும் 


யாரும் பின்னூட்டம் தரவில்லை.



அடுத்தப் பகுதி எப்ப சார் வரும்?

//“அத்தை உடம்புக்கு கட்டிண்டா ரொம்ப நன்னா இருக்கும் 

என்று நான் தான் தனியாக ஒன்று எடுத்து வந்தேன்” என்றேன்//


I AM OK, YOU ARE OK என்ற நிலைப்பாட்டுக்குள் வந்துவிடுதல்


அதனால் கிடைத்த வெற்றி.



//சற்று நேரத்தில் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் மணத்துடன் 


கேசரி கிளறும் வாசனை எங்கள் எல்லோருடைய மனதையும் 

ரம்யமானதொரு சூழலுக்கு கொண்டு சென்றது. //


மென்திறன் பயிற்சிக்கு நல்ல கதை.



ஒரு புடைவை போதுமென்று நாத்தனார் சொல்லமாட்டார்களா 


என்று ஆர்வத்துடன் கடைசி பத்திகளைப் படித்தேன். 


ஆனால் உங்கள் முடிவுதான் நடக்கக்கூடிய ஒன்று. 


சிறந்த முடிவும் அதுவே.



உளவியலை அழகாக புரிந்துவைத்திருப்பது மட்டுமல்லாமல் 


அதைக் கதையில் இயல்பாக வெளிப்படுத்தியிருப்பது 


உங்களின் தனிச் சிறப்பு.



அன்பென்றால் என்னவென்று கேட்டு நம் இருவருக்கும் பொதுவான 

பதிவுலக நண்பர் GMB அவர்கள் அவர் பாணியில் கேள்வி எழுப்பி 

என்னை சிந்தனையில் ஆழ்த்திவிட்டார். 


கஷ்டமான கேள்வி CHOICE லே விட்டுடலாமென்று 

முடிவு செய்தும் விட்டேன்.


பதில், இந்தக் கதையில் எவ்வளவு அழகாக வடித்திருகிறீர்கள்.

சூப்பரோ சூப்பர் சார். ( தமிழில் இணையான சொல் கிடைக்கவில்லை)


கோபு சார், நகைச்சுவையாக மட்டுமல்ல, 

சீரியஸாகவும் எழுதி கலக்குகிறீர்கள். 


சில நிகழ்வுகளின் பாதிப்புகள் கற்பனைக் கலந்து கதையாக உருவாகும்போது, 

அதன் தாக்கம் எந்த வாசகனையும் சற்றே சிந்திக்கச் செய்யும். 


தரமான பதிவு, நீரோட்டமான நடை. 


வாழ்த்துக்கள்.


பெண்களின் மன ஆழத்தைக் காண முடியாது என்பார்கள். 

ஆனால் நீங்கள் அவர்களின் ஆழ்மனசுக்குள் மூழ்கி 


முத்தெடுக்கிறீர்கள்.


பாராட்டுக்கள்.




//300 ரூபாய் மதிப்புள்ள அந்த சூட்கேஸை எப்படியும் கிஃப்ட் 

பொருளாகப் பெற்றுவிடத்துடித்த அந்த ஆசாமி, 

ஏற்கனவே 90000 ரூபாய்க்கு நகைகள் வாங்கிய பின்னும், 

மேலும் 10000 ரூபாய்க்கு நகைகள் வாங்க ஏ.டி.எம். கார்டு, 

கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் என தன்னிடமிருந்த 

எல்லாவற்றையும் குடைந்து ஏதேதோ கணக்குப்போட்டுக்கொண்டிருந்தார்

அவரைப் பார்க்கவே எனக்கு பரிதாபமாக இருந்தது.//


இது மாதிரியான பேர் வழிகள் நிறைய உண்டு,



ஆயினும் நீங்கள் உங்களின் சக மனிதர்களை எத்தனை தூரம் 

கூர்மையாய் நோக்குகிறீர்கள் எனபது நிருபணமாகிறது.


நல்ல தொடர்


தொடர வேண்டிய தொடர்




நன்றி ஐயா நாட்களின் அளவை குறைத்ததற்கு

//அந்தப்பிள்ளையாரிடம், “இன்று காலையில் மட்டும் எனக்குப்பழக்கமாகி, 

நகை திருட்டுப்போகாமல் இருக்க என்னை சரியான நேரத்தில் உஷார்படுத்தி, 

வயதான எனக்கு அந்த கும்பலான பஸ்ஸில் உட்கார இடம் போட்டுக்கொடுத்து 

பலவழிகளில் உதவிசெய்த மனிதாபிமானமிக்க, அந்தப் புளியங்கொட்டைக்கலர் சட்டை 

அணிந்திருந்த பையனுக்கு, அவன் தொலைத்ததாகச் சொல்லும் நகைகள் திரும்பக்கிடைத்து, 

அவனும் சந்தோஷமாக இருக்க வேண்டும்” என மனதார வேண்டிக்கொண்டேன்.//


என்ன ஒரு நல்ல மனது அந்த முதியவருக்கு , 


இன்னமும் சொல்லுவேன் அந்த புளியங்கொட்டை 

கலர் சட்டை பையன் திருடன் அல்ல

நல்ல கதை பல திருப்பங்களையும், 


வெள்ளேந்தியான மனிதர்களைபற்றியும் , 

நடப்பு உலக வியாபாரத்தை பற்றியும் சொன்ன விதம் அருமை ஐயா


நன்றிகள்

//கண்ணாம்பாக்கிழவியின் திண்ணைக்கு ஆஜராகி,

உரிமையுடன் அந்தத்திண்பண்டங்களை எடுத்துச்சாப்பிட்டு விட்டு, 

திரும்பச்செல்லும் சமயம் கண்ணாம்பாவின் கைகளைத்தொட்டு 

(நன்றி தெரிவிப்பதுபோல) தடவிக் கொடுத்துவிட்டுச் செல்வது வழக்கம்.//


அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் , 


யாருமற்றவர்களுக்கு அந்த ஆண்டவனே துணை 

என்பதைச் சொல்லி செல்லும் சந்தன வரிகள் ஐயா இவை.



//மரத்திலிருந்து தவறி விழுந்த குரங்கொன்றுக்கு 


இறுதி மரியாதை செலுத்திக் கோயில் எழுப்பிய நல்ல மனிதர்கள் 

அன்று இருந்தார்கள். 

இன்று பைக், கார், லாரி, பேருந்துகளில் அடிபட்டு நடு ரோட்டில் 

துடிப்பவர்களுக்குக்கூட உதவி செய்ய மனமோ நேரமோ இல்லாமல் 

ஓடும் மக்களைத்தான் காணமுடிகிறது.//


உண்மை ... மிக உண்மை. 


காலம் எல்லோரையும் மாற்றுகிறது , 

எல்லாவற்றையும் மாற்றுகிறது.


நல்ல மனம் கவர்ந்த தொடர் கதை ஐயா

//மனைவி என்ற ஒருத்தி இல்லாதவன் பாடு, 

அதுவும் வயதான காலத்தில் ரொம்ப ரொம்பக் கஷ்டம் தான். 

அவள் ஒருத்தி இருந்தால் தானே இவனுக்கு, இவனுடைய எண்ணங்களுக்கு, 

இவனுடைய தேவைகளுக்கு, ஒரு வடிகாலாக இருந்து செயல்பட முடியும். 

அவள் இல்லாத நிலையில் வடிகால் தேடி இவர் 

வெளியே பலரிடம் செல்ல வேண்டியுள்ளது.//


அம்மா போனா அன்பு போச்சு


அப்பா போனா பரிவு போச்சு


அக்கா போனா கனிவு போச்சு

சகோதரன் போனா ஆதரவு போச்சு


மனைவி போனா எல்லாமே போச்சு

என்பதை அழகாய் சொல்லி இருக்கீங்க ஐயா.




பெண்கள் ஆண்களை விட தைரிய சாலிகள் அதனால் தான் 

கணவனை இழந்ததும் பலபேர் வாழ்க்கையை தெளிவாய் 

எதிர்கொள்கிறார்கள். 


ஆனால் ஆண்கள் பாடு திண்டாட்டம் தான்.


ஆறுதலின் தேறுதல் சொல்லிய அசத்தல் கதை 



தொடருங்கள் ஐயா


முதியோர் இல்லங்களை பற்றிய உங்களின் மாறுபட்ட சிந்தனை அருமை, 




அதே நேரத்தில் வயதான தாய் தந்தை உள்ளவர்களுக்கு தாங்கள் கூறியுள்ள 

அறிவுரை மிக அருமை ஐயா. 



ஒரு முதியவரின் வாழ்க்கை வழியே பல 

கோணங்களை கொண்டு அதை கதையை 

எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.



//”உனக்கு சதாபிஷேகம் (80 வயது பூர்த்தி) ஆகி நான் பார்க்கணும் 


என்று இருக்கோ என்னவோடா” என்பாள் அந்தத்தாயார்.


“எனக்குக் கொஞ்சமாவது உடம்பில் தெம்பு இருக்கும் போதே 


நீ டிக்கெட் வாங்கிவிட்டாள் தான் உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது” 

என்று இவர் அந்தக்கிழவியின் காதில் பலக்கக் கத்திச்சொல்லுவார்.


அப்படியும் அந்தக்கிழவியின் காதில் என்ன விழுந்ததோ தெரியாது 


சிரித்துக்கொண்டே ”நீ மஹராஜனா 100 வயசு இருக்கனும்டா, 

நீ கவலையே படாதே, உன் சதாபிஷேகம் வரைக்கும் நான் 

கண்டிப்பா இருப்பேன்டா” 

என்று சொல்லி ஆசீர்வாதம் செய்வாள். //


ஆஹா


என்ன அழகான உரையாடல், தனக்கு ஏதாவது காதில் விழவில்லை 


என்றால் அன்னையிடமிருந்து ஆசிர்வாதம்தான் வெளிவரும் என்பதை

அற்புதமாய் சொல்லி இருக்கீங்க ஐயா.



மனம் நெகிழவைத்த கதை 

//தங்கக்கலரில் அரக்கு பார்டர், 

அரக்குக்கலரில் பச்சை பார்டர், 

புட்டா போட்டது, புட்டா போடாத ப்ளைன் புடவை, 

ராமர் கலர், மயில்கழுத்து இரட்டைக்கலர், 

தலைப்பு பூராவும் ஜரிகை அது இதுன்னு பட்டுப்புடவைகள் பலரகங்களில் போடப்பட்டன. 

மூவாயிரம் முதல் முப்பதாயிரம் வரை விலைகளில் பல தினுசுகள், பல டிசைன்கள்.//


எந்த பிரிவை, வகையை, விதத்தை எடுத்தாலும்


அதன் ஆதி முதல் அந்தம் வரை சொல்லும் 


உங்களை எழுத்து நடை யாருக்கும் வாய்க்காது ஐயா.



அந்த அம்மாவை நினைத்தால் பாவமாக இருக்கிறது ஐயா. 


அவர்களை ரொம்ப வேதனை பட வைக்காதீர்கள். 

இது என் வேண்டுகோள்

கதை மிகவும் தத்ரூபமாக உள்ளது. 

என்ன கஷ்டம் என்றால் இந்த வயதில் எவ்வளவு 


ஜாக்கிரதையாக இருக்கவேண்டியுள்ளது பாருங்கள்.
http://gopu1949.blogspot.in/2011/05/7-of-7.html




vaaramaalar sirukathai muulam entha peyar maarralum illaamal ithu varai athe peyaril thotarvatharkku 
vaalththukkal. antha thana lakshmi kitta ippa kaathal illaiiyaa... panam valkkaikku eppoothum mukkiyam sir 
sorry vg. vaalththukkal. thanks for sharing. வார மலர் சிறுகதை மூலம் எந்தப் பெயர் மாற்றமும் 
இல்லாமல், இதுவரை அதே பெயரில் தொடர்வதற்கு வாழ்த்துகள். அந்த தனலக்ஷ்மி 
கிட்டே இப்போ காதல் இல்லையா ? ... பணம் வாழ்க்கைக்கு எப்போதும் முக்கியம் சார் ...
ஸாரி வீ.....................ஜீ. வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html


அவ்வப்போது என் பதிவுகளுக்கு அருமையாகவும், திறமையாகவும், வித்யாசமாகவும், என் மனதுக்குத் திருப்தியாகவும், பின்னூட்டமிட்டு, எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளவர்களில், என்றும் என் நினைவுகளில் பசுமையாக நிற்கும், சில அன்புள்ளங்களின் பெயர்களை கீழ்க்கண்ட இரு பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். 

பட்டியல் எண்: 4  .... 60 GENTS

பட்டியல் எண்: 5 .... 70 LADIES

அவ்வப்போது என் பதிவுகள் பக்கம் கொஞ்சம் வருகை தந்து கருத்தளித்துள்ள நட்புகள் பட்டியல்களும் இரண்டு தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளன. 

பட்டியல் எண்: 7 ....  50 LADIES

பட்டியல் எண்: 8  ....  40 GENTS

இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.  






பதிவுலகில் நான் எழுத ஆரம்பித்து [02.01.2011 முதல் 28.02.2015 வரை] 50 மாதங்கள் முடிந்து விட்டன. இதுவரை 735 பதிவுகளும் வெளியிட்டாகி விட்டன என புள்ளிவிபரங்கள் சொல்லி வருகின்றன. 

இதையெல்லாம் தொடர்ச்சியாக ஆர்வத்துடன் செய்து முடிக்க, மிகவும் ஊட்டம் அளித்தது, அவ்வப்போது வாசகர்கள் அளித்து வந்த பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம்  மட்டுமே. அனைத்துப் பதிவுகளையும், அவற்றிற்கான வாசகர்களின் கருத்துக்களையும் மீண்டும் படித்துப்பார்த்து இன்புற்றேன். அவற்றை தனியாக வகை படுத்திக்கொண்டேன்.

பின்னூட்டங்கள் ஏதும் தரப்படாத பதிவுகள் என்று எதுவுமே என் தளத்தில் இல்லாததில் என் மனதுக்கு சற்றே மகிழ்ச்சி. 

என் பதிவுகள் அனைத்துமே, நான் பெற்ற குழந்தைகள் போல எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக  இருப்பினும், பிறர் அளித்துள்ள பின்னூட்டக் கருத்துக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவற்றை தரம் பிரித்து எடை போட்டுப் பார்த்தேன். 

எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இதுவரை வெளியிட்டுள்ள 735 பதிவுகளில் ........

10க்கும் குறைவான பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 3%
அதாவது 22 பதிவுகள் மட்டுமே.

11 முதல் 40 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 30% 
அதாவது 220 பதிவுகள்.

41 முதல் 49 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 50% 
அதாவது 367 பதிவுகள்.

50க்கும் மேல் பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 17%
அதாவது 126 பதிவுகள். 

பின்னூட்ட எண்ணிக்கைகள் 49 அல்லது 49க்குக் கீழேயுள்ள அனைத்தையும் தனியாக ஒதுக்கிக்கொண்டு விட்டதில், நான் செய்ய நினைத்த வேலை சற்றே சுலபமாகியது. 

1] பின்னூட்ட எண்ணிக்கைகள் 50 முதல் 100 வரை

2] பின்னூட்ட எண்ணிக்கைகள் 101 முதல் 150 வரை

3] பின்னூட்ட எண்ணிக்கைகள் 151 முதல் 200 வரை

4] பின்னூட்ட எண்ணிக்கைகள் 201 முதல் 250 வரை

5] பின்னூட்ட எண்ணிக்கைகள் 251 க்கு மேல்

என பிரித்துக்கொண்டேன். இருப்பினும் இந்த எண்ணிக்கைகளில், பின்னூட்டமிட்டவர்களுக்கு நான் அளித்துள்ள சில மறுமொழிகளான என் பதில்களும்  சேர்ந்துள்ளன என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். 

இதுவரை தொடர்ச்சியாகப் பின்னூட்டமிட்டு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள அனைவருக்கும் மீண்டும் என் அன்பான இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய தேதியில், சுய மதிப்பீட்டு ஆவணமாக இவற்றை ஓர் சிறிய தொடர் பதிவாக்கி, சேமித்து வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.



பட்டியல் எண்: 1 க்கான இணைப்பு:
 பட்டியல் எண்: 2 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 3 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 4 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 5 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 6 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 7 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 8 க்கான இணைப்பு:

பட்டியல் எண்: 9 க்கான இணைப்பு:


பட்டியல் எண்: 10 க்கான இணைப்பு:


பட்டியல் எண்: 11 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 12/01/04 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 12/02/04 க்கான இணைப்பு:





பின்னூட்ட எண்ணிக்கைகளில்
பின்னிப்பெடலெடுத்துள்ள என் பதிவுகளைப் பற்றி
இங்கு தினமும் பட்டியலிட விரும்புகிறேன்.

 



பட்டியல் எண்: 12 [Part : 03 of  4] 
பின்னூட்ட எண்ணிக்கை : 270
http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html
அடடா ..... என்ன அழகு !
அடையைத் தின்னு பழகு !!

TOTAL NUMBER OF COMMENTS : 
2 7 0
THE HIGHEST ONE 
IN MY BLOG HISTORY !



 

இந்த மேற்படி ஒரு பதிவுக்கு மட்டும் இதுவரை 270 பின்னூட்டங்கள் வந்துள்ளன. ஆனால் என் மேற்படி பதிவின் அடியில் சென்று பார்த்தால் என்னைத்தவிர பிற பார்வையாளர்களுக்கு முதலில் வந்துள்ள 1 to 200 பின்னூட்டங்கள் மட்டுமே படிக்கக்கூடியதாக உள்ளன. 200க்கு மேற்பட்ட பின்னூட்டங்கள் வரும்போது, அவற்றை என்னால் மட்டும் வேறு ஒரு வழியில் சென்று காணமுடிகிறது. BLOG SYSTEM அதுபோல அமைக்கப் பட்டுள்ளது. எனவே என் பதிவினினில் கடைசியாக காட்சியளிக்கும் பின்னூட்டத்திற்குப் பிறகு கிடைத்துள்ள பின்னூட்டங்களையும் இங்கு தனித்தனியே நான்கு பகுதிகளாகப் பிரித்துக் காட்டிவிட நினைக்கிறேன். இதனால் இந்தப்பதிவுக்கு சற்றே தாமதமாகப் பின்னூட்டமிட்டவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடும்.


  

COMMENT Nos: 236 TO 254


  1. ஹலோ கோபு ஸார்!
    அடை குறிப்புக்கு பரிசு கிடைத்ததற்கு பாராட்டுக்கள்.
    அங்கும் போய் வாழ்த்து சொல்லிவிட்டு வந்தேன்.

    மேலும் மேலும் பரிசுகள் வாங்கிக் குவிக்க வாழ்த்துகள்!

  2. Ranjani Narayanan January 17, 2013 at 9:04 AM

    ஹலோ கோபு ஸார்!

    அடை குறிப்புக்கு பரிசு கிடைத்ததற்கு பாராட்டுக்கள்.
    அங்கும் போய் வாழ்த்து சொல்லிவிட்டு வந்தேன்.

    மேலும் மேலும் பரிசுகள் வாங்கிக் குவிக்க வாழ்த்துகள்!//

    ஆஹா, மிக்க நன்றி, மேடம்.

    இந்த கீழ்கண்ட இணைப்பினில் பரிசுக்கு என் இந்தப்படைப்பினைத் தேர்ந்தெடுத்துள்ளது பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளதாக நம் ஏஞ்சலின் நிர்மலா தான் எனக்கு மெயில் மூலம் முதல் தகவல் சொன்னார்கள்.

    http://samaiyalattakaasam.blogspot.co.uk/2013/01/blog-post_5444.html

    அதற்குள் நீங்கள் அங்கு போய்விட்டு இங்கு வந்துள்ளீர்களே!
    ஆச்சர்யமாக உள்ளது. நான் இனிமேல் தான் அங்கு போய்ப்பார்க்கப் போகிறேன்.

    எனினும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்,
    கோபு

  3. பரிசு பெற்றமையையிட்டு என் வாழ்த்துக்கள் அண்ணா.

  4. Congragulations sir. For getting second prize.
    Adhu seri. Eppadai thorkin eppadai vellum?
    Seriyana theervu.
    viji















    1. viji January 17, 2013 at 1:54 PM
      //Congragulations sir. For getting second prize.//
      Adhu seri. Eppadai thorkin eppadai vellum?
      Seriyana theervu.
      viji

      இரண்டாம் பரிசு வென்றதற்கு வாழ்த்துகள்.
      அதுசரி, இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
      சரியான தீர்வு.
      -விஜி//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      பிரியமுள்ள
      கோபு

  5. இமா January 17, 2013 at 1:40 PM
    //பரிசு பெற்றமையையிட்டு என் வாழ்த்துக்கள் அண்ணா.//

    அன்பான வாழ்த்துகளுக்கு என் இனிய நன்றிகள், இமா. ;)))))

  6. வாழ்த்துகள் சார்.

  7. ஸ்ரீராம். January 17, 2013 at 4:40 PM
    வாழ்த்துகள் சார்.//

    தங்க்ளின் அன்பான வாழ்த்துகளுக்கு என் இனிய நன்றிகள்,
    ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் ! ;)))))

  8. ”சமையல் அட்டகாசங்கள் ஜலீலாகமால்” அவர்களின் KITCHEN’S QUEEN – ( http://samaiyalattakaasam.blogspot.com ) விருதுகளில் இரண்டாம் இடத்தினைப் பெற்றமைக்கு வாழ்த்துக்கள். நீங்கள் QUEEN அல்ல KING!















    1. அன்புள்ள திரு. தி.தமிழ் இளங்கோ ஐயா,

      வாருங்கள்,வணக்கம். தங்கள் வாழ்த்துகளுகு மிக்க நன்றி, ஐயா.

      சான்றிதழிலும் KING என்று தான் போட்டுள்ளார்கள், ஐயா.

  9. கோபி சார் ,
    என்னது இது
    அடை க்கு அடை , அடையாய் விளக்கங்கள்
    அடையை எதோ அமிர்த ரேஞ்சிற்கு உயர்த்திவிட்டீர்கள்
    நீங்கள் ஓட்டல் வைத்து நடத்தினால் அது உலக ரேஞ்சிக்கு போய்விடும் அல்லது
    ஓட்டலுக்கு விமர்சனம் வரைய உங்களை அமர்த்தட்டும் ஓட்டல் உரிமையாளர்களே இந்த பதிவை படியுங்கள் .
    இப்படி ஒரு பக்கம் என்றால் நீங்க பேச்சிலர்களுக்கு சமையல் சொல்லி கொடுகிறேன் என்று
    அடையை பிரகட னபடுத்திவிட்டீர்கள் பிட்ஸா கார்னர் எல்லாம் உங்கள் மேல் படை எடுத்து விட
    போகின்றன அவர்கள் வியாபாரசரி வுக்கு
    இருந்தும் உங்கள் அடை யின் நடை சிறப்பு . ஆண்களுக்கு குறி ப்புகள் ஏராளம் தலைப்பை ஆண்கள் அடை என்று கூட வைத்திருக்கலாம்
    அ டையால் வந்த அடையாளங்களுக்கு வாழ்த்துகள்! வாழ்த்துகள் !















    1. malar balan January 17, 2013 at 8:55 PM

      வாருங்கள், வணக்கம்.

      //உங்கள் அடை யின் நடை சிறப்பு. ஆண்களுக்கு குறிப்புகள் ஏராளம் தலைப்பை ஆண்கள் அடை என்று கூட வைத்திருக்கலாம். அடையால் வந்த அடையாளங்களுக்கு வாழ்த்துகள்! வாழ்த்துகள் !//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நீண்ட கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      VGK

  10. போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்!















    1. ராமலக்ஷ்மிJanuary 18, 2013 at 6:39 PM
      //போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்!//

      வாருங்கள் திருமதி ராமலக்ஷ்மி மேடம். வணக்கம்.

      வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      VGK

  11. தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
    http://blogintamil.blogspot.com














    1. மனோ சாமிநாதன் January 18, 2013 at 7:50 PM
      தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
      http://blogintamil.blogspot.com//

      வாருங்கள் என் அன்புச்சகோதரி திருமதி மனோ மேடம்,

      வணக்கம். இந்தத்தங்களின் செய்தி எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      கட்டாயம் [சற்றே தாமதமாக] வந்து பார்க்கிறேன்.

      இனிய தகவலுக்கு மிக்க நன்றி.

      பிரியமுள்ள சகோதரன்
      வை. கோபாலகிருஷ்ணன்

  12. அந்த மோன நிலையை விடுத்து, மாதம் இரு பதிவுகளாகவாவது போட வேண்டுமென்று நான் இங்கே சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.//
    வலைச்சரத்தில் திருமதி, மனோ சுவாமிநாதன் அவர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து வேண்டுகோள் விடுக்கிறேன். விரைவில் நிறைய பதிவுகள் தாருங்கள்.

    வாழ்த்துக்கள் ”அடடா ..... என்ன அழகு!

    ’அடை’யைத் தின்னு பழகு!!’பதிவுக்கு கிடைத்த

    இரண்டாம் பரிசுக்கு.














    1. கோமதி அரசு January 18, 2013 at 8:29 PM

      **அந்த மோன நிலையை விடுத்து, மாதம் இரு பதிவுகளாகவாவது போட வேண்டுமென்று நான் இங்கே சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.**

      - வலைச்சரத்தில் திருமதி, மனோ சுவாமிநாதன் அவர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

      நானும் அவர்களுடன் சேர்ந்து வேண்டுகோள் விடுக்கிறேன். விரைவில் நிறைய பதிவுகள் தாருங்கள்.//

      வாருங்கள் திருமதி கோமதி அரசு மேடம். வணக்கம். தங்கள் இருவரின் வேண்டுகோள்களும் எனக்கு மனதுக்கு மிகுந்த உற்சாகம் தருவதாகவே உள்ளன. தற்சமயம் குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக இல்லை. இருப்பினும் கட்டாயமாக நானும் முயற்சிக்கிறேன். மிக்க நன்றி.

      //வாழ்த்துக்கள் ”அடடா ..... என்ன அழகு! ’அடை’யைத் தின்னு பழகு!!’பதிவுக்கு கிடைத்த இரண்டாம் பரிசுக்கு.//

      ரொம்பவும் சந்தோஷம். மிக்க நன்றி, மேடம்.

      அன்புடன்
      கோபு

    2. கோமதி அரசு January 18, 2013 at 8:29 PM

      **அந்த மோன நிலையை விடுத்து, மாதம் இரு பதிவுகளாகவாவது போட வேண்டுமென்று நான் இங்கே சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.**

      - வலைச்சரத்தில் திருமதி, மனோ சுவாமிநாதன் அவர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

      நானும் அவர்களுடன் சேர்ந்து வேண்டுகோள் விடுக்கிறேன். விரைவில் நிறைய பதிவுகள் தாருங்கள்.//

      வாருங்கள் திருமதி கோமதி அரசு மேடம். வணக்கம்.

      தங்கள் இருவரின் வேண்டுகோள்களும் எனக்கு மனதுக்கு மிகுந்த உற்சாகம் தருவதாகவே உள்ளன.

      தற்சமயம் குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக இல்லை.

      இருப்பினும் கட்டாயமாக நானும் முயற்சிக்கிறேன்.

      மிக்க நன்றி.

      //வாழ்த்துக்கள் ”அடடா ..... என்ன அழகு! ’அடை’யைத் தின்னு பழகு!!’பதிவுக்கு கிடைத்த இரண்டாம் பரிசுக்கு.//

      ரொம்பவும் சந்தோஷம். மிக்க நன்றி, மேடம்.

      அன்புடன்
      கோபு

 








 

தொடரும்

என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்]


36 comments:

  1. தங்களுடைய அடை பதிவைப் பலரும் பாராட்டி சிறப்பித்திருப்பதில் ஆச்சர்யமே இல்லை. அத்தனை அற்புதமான பதிவு அது. ஒவ்வொரு முறை நான் அடைவார்க்கும்போதும் தாங்கள் அடையில் குழி செய்து எண்ணெய் ஊற்றும் அழகின் வர்ணனை நினைவுக்கு வந்து முறுவல் பூக்கவைக்கும். மீள்பார்வையானாலும் பின்னூட்டமிட்ட அனைத்துப் பதிவர்களுக்கும் ஒரு சிறப்பான தூண்டுகோல் என்பது மறுக்கமுடியாத உண்மை.

    ReplyDelete
    Replies
    1. கீத மஞ்சரி March 30, 2015 at 2:06 PM

      வாங்கோ .... வணக்கம்.

      //தங்களுடைய அடை பதிவைப் பலரும் பாராட்டி சிறப்பித்திருப்பதில் ஆச்சர்யமே இல்லை. அத்தனை அற்புதமான பதிவு அது.//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      //ஒவ்வொரு முறை நான் அடைவார்க்கும்போதும் தாங்கள் அடையில் குழி செய்து எண்ணெய் ஊற்றும் அழகின் வர்ணனை நினைவுக்கு வந்து முறுவல் பூக்கவைக்கும்.//

      :)))))))))))) மிகவும் சந்தோஷம். :))))))))))))

      //மீள்பார்வையானாலும் பின்னூட்டமிட்ட அனைத்துப் பதிவர்களுக்கும் ஒரு சிறப்பான தூண்டுகோல் என்பது மறுக்கமுடியாத உண்மை.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  2. நண்பர்களின் பின்னூட்டங்கள் பார்த்தேன். இதில் இடம்பெற்றுள்ள நண்பர் மதுரை சரவணனுக்கு இன்று பிறந்தநாள் தெரியுமோ!!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம். March 30, 2015 at 2:15 PM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      //நண்பர்களின் பின்னூட்டங்கள் பார்த்தேன்.//

      சந்தோஷம்.

      //இதில் இடம்பெற்றுள்ள நண்பர் மதுரை சரவணனுக்கு இன்று பிறந்தநாள் தெரியுமோ!!//

      அடடா, அப்படியா ? தெரியாது. தெரிவித்தமைக்கு நன்றிகள்.

      அவருக்கு என் அன்பான வாழ்த்துக்களையும், இந்தப் பதிவு இன்று வெளியீடு செய்துள்ளது பற்றியும் தாங்களே முடியுமானால் தயவுசெய்து தெரிவித்து விடவும்.

      அன்புடன் VGK

      Delete
  3. இத்தனை பூங்கொத்துகளில் எனதும் இருக்கிறது என்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது. பதிவைப் படிக்கும் போது தோன்றுவதை சுருக்கமாகப் பின்னூட்டமாக இடுவேன். எங்கும் என் பின்னூட்டம் நீண்டு இருக்காது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. G.M Balasubramaniam March 30, 2015 at 2:31 PM

      வாங்கோ, வணக்கம். நமஸ்காரங்கள்.

      //இத்தனை பூங்கொத்துகளில் எனதும் இருக்கிறது என்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது. பதிவைப் படிக்கும் போது தோன்றுவதை சுருக்கமாகப் பின்னூட்டமாக இடுவேன். எங்கும் என் பின்னூட்டம் நீண்டு இருக்காது. வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      Delete
  4. MAIL MESSAGE COMMENT FROM Ms. R.UMAYAL GAYATHRI

    R.Umayal Gayathri has left a new comment on your post "ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-12/03/04":

    ஒவ்வொருவரும் சிலாகித்து கருத்துரையிட்டதை படிக்கும் போது ரசனையுடன் சிரிப்பும் வருகிறது...

    பாசமான குளம்....இனிமைதான்.

    அடை அருமை. நாங்களே நேரில் நின்று அடைவார்ப்பதை பார்ப்பது போல் இருந்தது பதிவு. ஆனா...ஒரே..ஒரு குறைதான்..என்ன...? அப்படிங்குறீங்களா....நாங்க எடுத்து சாப்பிட முடியலையே அதான்...ஹிஹிஹி...

    எல்லோரும் இட்ட கருத்துரையை தொகுத்து வழங்கியது இனிய நினைவுகளாகி இருக்கிறது. இந்த அனைவருடனும் என்னையும் இணைத்து ம ல ர் க் கொத்தாக்கி அமைத்ததில் மிக்க மகிழ்வுடனான நன்றிகள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. R.Umayal Gayathri

      வாங்கோ, வணக்கம்.

      //ஒவ்வொருவரும் சிலாகித்து கருத்துரையிட்டதை படிக்கும் போது ரசனையுடன் சிரிப்பும் வருகிறது...//

      தங்களின் சிரிப்பொலியை கற்பனை செய்து பார்த்தேன். :)

      //பாசமான குளம்....இனிமைதான்.//

      கொஞ்சநஞ்சமல்ல .... என்னிடம் ரொம்பவும் பாசத்துடன்தான் (பழகியது) அந்தக்குளம். :)

      //அடை அருமை. நாங்களே நேரில் நின்று அடைவார்ப்பதை பார்ப்பது போல் இருந்தது பதிவு. //

      அப்படியா ! மிகவும் சந்தோஷம்.

      //ஆனா...ஒரே..ஒரு குறைதான்.. என்ன...? அப்படிங்குறீங்களா.... நாங்க எடுத்து சாப்பிட முடியலையே அதான்... ஹிஹிஹி... //

      தாங்கள் தினமும் வெளியிடும் அநேக பதார்த்தங்களை என்னாலும் எடுத்துச் சாப்பிட முடிவதில்லையே என்ற ஏக்கம் எனக்கும் தினமுமே வருவது உண்டு. :)

      //எல்லோரும் இட்ட கருத்துரையை தொகுத்து வழங்கியது இனிய நினைவுகளாகி இருக்கிறது. இந்த அனைவருடனும் என்னையும் இணைத்து ம ல ர் க் கொத்தாக்கி அமைத்ததில் மிக்க மகிழ்வுடனான நன்றிகள் ஐயா.//

      தங்களின் பின்னூட்டத்தை என்னால் அப்படியே நேரிடையாக ஏனோ வெளியிட முடியவில்லை. அதனால் இந்த மாற்று ஏற்பாடு செய்துள்ளேன்.

      தாங்கள் அனுப்பியுள்ள அன்பான + அழகான பின்னூட்டக் கருத்துக்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
    2. நான் எப்போதும் போல தான் கருத்துரைப் பெட்டியில் கருத்து இட்டேன்,ஏன்னு எனக்கு தெரியவில்லை? ஐயா. நன்றி

      Delete
    3. R.Umayal Gayathri March 31, 2015 at 2:33 PM

      வாங்கோ, வணக்கம். மீண்டும் வருகைக்கு மகிழ்ச்சி.

      //நான் எப்போதும் போல தான் கருத்துரைப் பெட்டியில் கருத்து இட்டேன், ஏன்னு எனக்கு தெரியவில்லை? ஐயா. நன்றி.//

      தாங்கள் எப்போதும் போலத்தான் என் கருத்துரைப் பெட்டியில் கருத்தளித்துள்ளீர்கள். அது எனக்கு அப்படியே வந்து சேர்ந்தும் விட்டது.

      ஆனால் அவசரத்தில் அதில் ஓர் வார்த்தையில் ஓர் எழுத்து விட்டுப்போய் இருந்தது. அதனால் அதன் பொருளே மாறிப் போகும் ஆபத்தும் அதில் இருந்தது.

      அதனால் நான் அதனை அப்படியே வெளியிடாமல், அந்த விட்டுப்போன ஓர் எழுத்தினை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து இவ்வாறு வெளியிட்டுள்ளேன்.

      தாங்கள் அனுப்பும் பின்னூட்டங்களை, தனியே ஓரிடத்தில் தற்காலிகமாக சேமித்து வைத்துக்கொண்டு பிறகு அனுப்பினால், எப்போதுமே நல்லது. நான் எப்போதுமே அவ்வாறு தான் செய்து வருகிறேன்.

      நம் பின்னூட்டங்கள் பிறருக்குச் சரியாகப் போய்ச்சேராமல் போனாலோ, இதுபோன்ற ஏதேனும் எழுத்துப்பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டாலோ அவற்றை நாமும் மீண்டும் ஒருமுறை சரி பார்த்துக்கொள்ள ஏதுவாகும்.

      ஏதோ பல காரணங்களால்.... கணினி + நெட்-வொர்க் கோளாறுகளால், நாம் கஷ்டப்பட்டு எழுதி அனுப்பியும் சம்பந்தப்பட்டவர்களுக்குப் போய்ச்சேராத பின்னூட்டங்களை நாம் மீண்டும் அனுப்பி வைக்கவும், இவ்வாறு நம்மிடம் தனியாக சேமித்து வைத்துக்கொண்டு அனுப்பினால், பிரச்சனை இல்லாமல் மிகச்சுலபமாக இருக்கக்கூடும்.
      -=-=-=-=-=-=-

      இன்று 31.03.2015 நான் வெளியிட்டுள்ள பதிவுக்கு [இந்த என் தொடரின் இறுதிப்பகுதிக்கு] முதல் பின்னூட்டம் அளித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி.

      அதிலும் அவசரத்தில் இரு எழுத்துப்பிழைகள் உள்ளன, பாருங்கோ.

      //இராஜேஸ்வரி அம்மா வி ர வி ல் குணமடைய பிரார்த்திக்கிறேன். //

      வி ர வி ல் = வி ரை வி ல்

      //சகோக்கள் சரமாரி கடுத்திடுக.//

      கடுத்திடுக = கருத்திடுக.

      ஏற்கனவே என் மீது கடுப்புடன் இருப்பவர்கள், கருத்திடாததோடு மேலும் என் மீது கடுப்பெடுத்துக்கொண்டு விடுவார்களோ என்ற அச்சமும் ஏற்படுகிறது :)

      -=-=-=-=-=-=-

      இவை எல்லாமே ஒரு ஜாலிக்காக தமாஷாக மட்டுமே எழுதியுள்ளேன். தாங்களாவது என் மீது கடுப்பேதும் இல்லாமல், நான் அறிவித்துள்ள இந்த என் புதிய போட்டியினில் கலந்துகொண்டால், எனக்கும் மகிழ்ச்சியே! :)

      அன்புடன் VGK

      Delete
  5. சார், மிக அருமை.. சுவாரசியமான பின்னுட்டங்கள். நீங்க வெளியிட்டுள்ள படங்கள் எல்லாம் மிக அழகு.. அந்த வைர மாலை யாருக்கு????

    ReplyDelete
    Replies
    1. RAMA RAVI (RAMVI) March 30, 2015 at 3:46 PM

      வாங்கோ ... வணக்கம்.

      //சார், மிக அருமை.. சுவாரசியமான பின்னுட்டங்கள். நீங்க வெளியிட்டுள்ள படங்கள் எல்லாம் மிக அழகு.. //

      சந்தோஷம். மிக்க நன்றி.

      //அந்த வைர மாலை யாருக்கு????//

      உங்களுக்கே தான் .... எடுத்துக்கொள்ளுங்கோ.

      ’உனக்கே உனக்காக !’ படியுங்கோ .....
      http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_28.html

      தங்களைப்போன்ற என் பழைய நட்புக்களுக்காக மட்டுமே மீண்டும் ஓர் மிகச்சுலபமான பரிசுப்போட்டி நாளைய என் பதிவினில் அறிவிக்கப்பட உள்ளது.

      காணத்தவறாதீர்கள்!
      கலந்துகொள்ள மறவாதீர்கள் !!

      அன்புடன் கோபு

      Delete
  6. எல்லாவற்றிலும் ஒரு தனித்துவம், ஒரு தனிச்சுவை
    இது உங்களுக்கு மட்டுமே வாய்த்த வரம் சார், என் பின்னூட்டங்கள் என்னையே ரசிக்க வைக்கின்றன என்றால், உங்களின் படைப்பின் அற்புதம் அதில் தெரிகின்றது.
    நன்றி சார். அருமையான பதிவுகளின் பின்னூட்ட பிரவாகமான பதிவு என்னை பரவசப்படுத்தியது.

    ReplyDelete
    Replies
    1. A.R.ராஜகோபாலன் March 30, 2015 at 4:23 PM

      வாங்கோ சார், வணக்கம் சார். ’ஆயுத எழுத்து’ பார்த்து ஆண்டுகள் பல ஆனது. தாங்கள் இங்கு இன்று மீண்டும் வருகையளித்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

      //எல்லாவற்றிலும் ஒரு தனித்துவம், ஒரு தனிச்சுவை
      இது உங்களுக்கு மட்டுமே வாய்த்த வரம் சார்,//

      எழுத்து அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

      //என் பின்னூட்டங்கள் என்னையே ரசிக்க வைக்கின்றன என்றால், உங்களின் படைப்பின் அற்புதம் அதில் தெரிகின்றது.//

      அந்தக்காலக் கட்டத்தில், தங்களில் பல பின்னூட்டங்கள் என்னையும் மிகவும் ரசிக்கத்தான் வைத்துள்ளன. அவற்றில் ஏதோ ஒருசிலவற்றை மட்டுமே இங்கு என்னால் காட்டிட முடிந்தது. [Just a Random selection only]

      //நன்றி சார். அருமையான பதிவுகளின் பின்னூட்ட பிரவாகமான பதிவு என்னை பரவசப்படுத்தியது.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
  7. தங்களின் குறும்புக்கும் சாப்பாட்டு இரசனைக்கும் அந்த அடை பற்றிய பதிவு நிச்சயமாக ஓர் " அ டை " யாளம் என்றால் மிகையில்லை அல்லவா?

    ReplyDelete
  8. அ. முஹம்மது நிஜாமுத்தீன் March 30, 2015 at 8:45 PM

    வாருங்கள் நண்பரே, வணக்கம்.

    //தங்களின் குறும்புக்கும் சாப்பாட்டு இரசனைக்கும் அந்த அடை பற்றிய பதிவு நிச்சயமாக ஓர் " அ டை " யாளம் என்றால் மிகையில்லை அல்லவா?//

    ஆஹா ! என் 'அடை'ப்பதிவினை நன்கு 'அடை'யாளம் காட்டி சிறப்பித்துள்ளீர்கள்.

    என் குறும்புக்கும் சாப்பாட்டு இரசனைக்கும் மட்டுமல்லாமல், சமையல் சம்பந்தமாக நான் வெளியிட்டுள்ள முதல் பதிவான இது, பல பெண்மணிகள் கலந்துகொண்டதோர் போட்டியில் இடம்பெற்று, எனக்கு இரண்டாம் பரிசினையும், KITCHEN KING என்ற சிறப்புப் பட்டத்தையும் வாங்கித் தந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அதற்கான இணைப்பு இதோ:
    http://gopu1949.blogspot.in/2013/01/blog-post.html

    அதுமட்டுமல்ல என் வலைப்பதிவினில் இதுவரை என்னால் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளிலேயே மிக அதிக எண்ணிக்கையில் 'அடை அடை'யாகப் பின்னூட்டங்களைப் பெற்றுத் தந்துள்ளதும் இந்த 'அடை'ப்பதிவு மட்டுமே.

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வித்யாசமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    என்றும் அன்புடன் VGK

    ReplyDelete
  9. உங்களுடைய அடை ரெசிபிக்கு நானும் ரசிகை .
    இங்கு குறிப்பிட்டுள்ள அத்தனை பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இந்தத் தொடரை கனகச்சிதமாக செய்து கொண்டிருக்கும் உங்களைப் பாராட்ட எனக்குத் தகுதி இருக்கிறதா தெரியவில்லை. .
    ஆனாலும், "பாராட்டுக்கள்".........சொல்லாமல் இருக்க முடியவில்லை.
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. rajalakshmi paramasivam March 30, 2015 at 9:55 PM

      வாங்கோ ..... வணக்கம்.

      //உங்களுடைய அடை ரெசிபிக்கு நானும் ரசிகை.//

      ஆஹா! மிகவும் சந்தோஷம்.

      //இங்கு குறிப்பிட்டுள்ள அத்தனை பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.//

      அனைவர் சார்பிலும் என் நன்றிகள்.

      //இந்தத் தொடரை கனகச்சிதமாக செய்து கொண்டிருக்கும் உங்களைப் பாராட்ட எனக்குத் தகுதி இருக்கிறதா தெரியவில்லை. .//

      இதனை நான் கனக்கச்சிதமாகச் செய்துகொண்டிருப்பதாக தாங்கள் கூறியிருப்பது ஒன்றே போதுமே .... தாங்கள் என் பார்வையில் எப்பேர்ப்பட்ட தகுதி உடையவர் என்பதற்கு ’அடை’யாளமாக ....... :)

      //ஆனாலும், "பாராட்டுக்கள்".........சொல்லாமல் இருக்க முடியவில்லை. பாராட்டுக்கள்! //

      தங்களைப்போன்ற தாயுள்ளம் படைத்தவர்கள் பாராட்டாமல் வேறு யார் இந்த சாதாரணமானவனைப் பாராட்டப் போகிறார்கள் ? தன்யனானேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      அன்புடன் கோபு

      Delete
  10. எத்தனை பின்னூட்டங்கள்.... உங்கள் பதிவுகள் மேலும் தொடரட்டும்....

    ReplyDelete
    Replies
    1. வெங்கட் நாகராஜ் March 30, 2015 at 10:37 PM

      வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

      //எத்தனை பின்னூட்டங்கள்.... உங்கள் பதிவுகள் மேலும் தொடரட்டும்....//

      மிக்க நன்றி, ஜி.

      Delete
  11. அருமையான பின்னூட்டங்கள்... பின்னூட்டமிட்ட சிலர் வலைப்பூவை மீண்டும் தொடங்கவும் எண்ணம் வரும்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலன் March 31, 2015 at 6:59 AM

      வாங்கோ, வணக்கம்.

      //அருமையான பின்னூட்டங்கள்... பின்னூட்டமிட்ட சிலர் வலைப்பூவை மீண்டும் தொடங்கவும் எண்ணம் வரும்... வாழ்த்துக்கள் ஐயா...//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், உண்மையான எதிர்பார்ப்புகளுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், DD Sir.

      Delete
  12. ஆஹா, எனக்கும் கௌரவம் கெடச்சுட்டுதே!

    ReplyDelete
    Replies
    1. பழனி. கந்தசாமி March 31, 2015 at 12:01 PM

      வாங்கோ, வணக்கம். நமஸ்காரங்கள்.

      //ஆஹா, எனக்கும் கௌரவம் கெடச்சுட்டுதே!//

      இந்த வயதிலும் பேரெழுச்சியுடன் அடிக்கடி பல்வேறு (படிக்க) சுவாரஸ்யமான + தெளிவான பதிவுகள் தந்து கொண்டிருக்கும் தங்களை கெளரவிக்காமல் வேறு யாரை நான் கெளரவிக்க இயலும்.

      மேலும் மேற்படி பின்னூட்டம் தாங்கள் இதுவரை எழுதியுள்ளவற்றிலேயே மிகவும் நீளமான பின்னூட்டமாக அமைந்துள்ளது இதில் ஓர் சிறப்பாக எனக்குத் தோன்றுகிறது, ஐயா :)

      மேலும் தங்களின் நகைச்சுவையான + வெளிப்படையான எழுத்துக்கள் என்னை எப்போதுமே ஆச்சர்யப்படுத்தி வருகின்றன.

      உதாரணமாக தாங்கள் என் சிறுகதை விமர்சனப்போட்டிக்கு எழுதிய நேயர் கடிதத்தை என்னாலும் வேறு யாராலும் மறக்க இயலுமா ! :)

      இதோ அதன் இணைப்பு:
      http://gopu1949.blogspot.in/2014/10/blog-post_2.html

      அன்புடன் VGK

      Delete
  13. உங்களின் அடைப்பதிவு தான் நான் முதலில் படிக்க ஆரம்பித்தது. பின்னூட்டம் கொடுத்த அனைவரையும் நினைவில் வைத்துக் கொண்டு பின்னூட்டங்களைத் தேடி எடுத்துப் போட்டுக் கௌரவிக்கும் உங்கள் பொறுமைக்கு அளவே இல்லை. 750 பதிவுகளுக்குப் பாராட்டுச் சொல்ல மறந்துட்டேன். இங்கே சொல்லிக்கிறேன். 750 பதிவுகளுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam April 12, 2015 at 6:40 PM

      வாங்கோ, வணக்கம்.

      //உங்களின் அடைப்பதிவு தான் நான் முதலில் படிக்க ஆரம்பித்தது.//

      எனக்கும் நன்றாகவே நினைவில் உள்ளது. சந்தோஷம்.

      //பின்னூட்டம் கொடுத்த அனைவரையும் நினைவில் வைத்துக் கொண்டு பின்னூட்டங்களைத் தேடி எடுத்துப் போட்டுக் கௌரவிக்கும் உங்கள் பொறுமைக்கு அளவே இல்லை.//

      ஏதோ ஒரு மிகச்சிறிய முயற்சி. அதுவும் என் ஒருசில மிகப்பழைய பதிவுகளிலிருந்து RANDOM ஆக எடுத்துப் போடப்பட்டவை மட்டுமே. அதற்கு மேல் எனக்கும் இதில் பொறுமை இல்லை.

      //750 பதிவுகளுக்குப் பாராட்டுச் சொல்ல மறந்துட்டேன். இங்கே சொல்லிக்கிறேன். 750 பதிவுகளுக்குப் பாராட்டுகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அங்கு யாருமே சொல்லாததோர் மதிப்புமிக்க பாராட்டுகளுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

      Delete
  14. பொடி போடும் விதத்தை மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  15. உங்க பதிவில் எதைத்தான்ரசிக்காம இருக்க முடயம். அத்தனையம் சுவாரசியமான பதிவுகளே.

    ReplyDelete
  16. அடை மழையாய் பின்னூட்டங்களை அள்ளிக்கொடுத்து
    இனிமை சேர்த்த அருமையான பதிவுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 8:33 PM

      //அடை மழையாய் பின்னூட்டங்களை அள்ளிக்கொடுத்து
      இனிமை சேர்த்த அருமையான பதிவுக்குப் பாராட்டுக்கள்..//

      வாங்கோ, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அடைமழை போன்ற பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்..

      Delete
  17. இன்னும் உங்கள் கதைகளுக்குப் பின்னிப் பெடலெடுக்கும் பின்னூட்டங்கள் கொடுக்க ஆசை தான்.

    பார்க்கலாம். அதற்கேற்ப நேரம் கிடைக்கிறதா என்று.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya October 31, 2015 at 5:21 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //இன்னும் உங்கள் கதைகளுக்குப் பின்னிப் பெடலெடுக்கும் பின்னூட்டங்கள் கொடுக்க ஆசை தான்.

      பார்க்கலாம். அதற்கேற்ப நேரம் கிடைக்கிறதா என்று.//

      பரவாயில்லை ஜெ. வாரம் ஒருமுறையாவது ஒரு ஐந்து நிமிடமாவது என் பதிவுகள் பக்கம் சும்மா எட்டிப் பார்த்து விட்டுப்போங்கோ, போதும்.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
  18. கமண்டு போட்டவக ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் பண்ணி இருந்துகிட்டா அதயும் திருத்தி சரி பண்ணிபோடுறீகளே. அப்படின்னா நானுகூட தைரியமா இருந்துகிடலாம். ஏன் தெரியுமா மொபைலுல தமிளு எளுத்தெல்லா எறும்பு சைசுலதா இருக்குது. த ன்னு டைப்பினா அது நா ன்னு விளுது ப ன்னு டைப்பினா ட ன்னு வுளுது. ஸோ நானுகூட தப்பு தப்பா தான் எளுதி இருப்பேனுங்க.

    ReplyDelete
  19. நான் கூட ஆரம்பத்தில் உங்க பதிவுகள் நிறைய படித்து பின்னூட்டமெல்லாம் போட்டதில்லை. ஒரு சில பதிவுக்கு பின்னூட்டம் போட்டிருக்கேன். பின்னூட்டப்போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்ததும் உற்சாகமும் ஊக்கமும் கொடுத்தீங்க. லிங்க் எல்லாம் வரிசையா அனுப்பி பெரிய ஹெல்ப் பண்ணினீங்க. இதையெல்லாம் நன்றியுடன் நினைக்கிறேன்.

    ReplyDelete
  20. சாப்புடுற ஐட்டம்னாலே பின்னூட்டம் தூக்கல்தான்.அட-டே!!

    ReplyDelete
  21. என்னுடைய பதிவுகளைப் படித்து, பின்னூட்டமிட்டு ஊக்கமளித்தவர்களில் நீங்கள் முதல்வர்! அதனை நன்றியுடன் இத்தருணத்தில் நினைவுகூர விரும்புகிறேன்! தொடர்கிறேன்!

    ReplyDelete