என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 18 மார்ச், 2015

ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-2


பதிவுலகில் நான் எழுத ஆரம்பித்து [02.01.2011 முதல் 28.02.2015 வரை] 50 மாதங்கள் முடிந்து விட்டன. இதுவரை 735 பதிவுகளும் வெளியிட்டாகி விட்டன என புள்ளிவிபரங்கள் சொல்லி வருகின்றன. 

இதையெல்லாம் தொடர்ச்சியாக ஆர்வத்துடன் செய்து முடிக்க, மிகவும் ஊட்டம் அளித்தது, அவ்வப்போது வாசகர்கள் அளித்து வந்த பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம்  மட்டுமே. அனைத்துப் பதிவுகளையும், அவற்றிற்கான வாசகர்களின் கருத்துக்களையும் மீண்டும் படித்துப்பார்த்து இன்புற்றேன். அவற்றை தனியாக வகை படுத்திக்கொண்டேன்.

பின்னூட்டங்கள் ஏதும் தரப்படாத பதிவுகள் என்று எதுவுமே என் தளத்தில் இல்லாததில் என் மனதுக்கு சற்றே மகிழ்ச்சி. 

என் பதிவுகள் அனைத்துமே, நான் பெற்ற குழந்தைகள் போல எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக  இருப்பினும், பிறர் அளித்துள்ள பின்னூட்டக் கருத்துக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவற்றை தரம் பிரித்து எடை போட்டுப் பார்த்தேன். 

எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இதுவரை வெளியிட்டுள்ள 735 பதிவுகளில் ........

10க்கும் குறைவான பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 3%
அதாவது 22 பதிவுகள் மட்டுமே.

11 முதல் 40 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 30% 
அதாவது 220 பதிவுகள்.

41 முதல் 49 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 50% 
அதாவது 367 பதிவுகள்.

50க்கும் மேல் பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 17%
அதாவது 126 பதிவுகள். 

பின்னூட்ட எண்ணிக்கைகள் 49 அல்லது 49க்குக் கீழேயுள்ள அனைத்தையும் தனியாக ஒதுக்கிக்கொண்டு விட்டதில், நான் செய்ய நினைத்த வேலை சற்றே சுலபமாகியது. 

1] பின்னூட்ட எண்ணிக்கைகள் 50 முதல் 100 வரை

2] பின்னூட்ட எண்ணிக்கைகள் 101 முதல் 150 வரை

3] பின்னூட்ட எண்ணிக்கைகள் 151 முதல் 200 வரை

4] பின்னூட்ட எண்ணிக்கைகள் 201 முதல் 250 வரை

5] பின்னூட்ட எண்ணிக்கைகள் 251 க்கு மேல்

என பிரித்துக்கொண்டேன். இருப்பினும் இந்த எண்ணிக்கைகளில், பின்னூட்டமிட்டவர்களுக்கு நான் அளித்துள்ள சில மறுமொழிகளான என் பதில்களும்  சேர்ந்துள்ளன என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். 

இதுவரை தொடர்ச்சியாகப் பின்னூட்டமிட்டு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள அனைவருக்கும் மீண்டும் என் அன்பான இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய தேதியில், சுய மதிப்பீட்டு ஆவணமாக இவற்றை ஓர் சிறிய தொடர் பதிவாக்கி, சேமித்து வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.
 பட்டியல் எண்: 1 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/03/1.html

பின்னூட்ட எண்ணிக்கைகளில்
பின்னிப்பெடலெடுத்துள்ள என் பதிவுகளைப் பற்றி
இங்கு தினமும் பட்டியலிட விரும்புகிறேன்.

பட்டியல் எண்: 2 
பின்னூட்ட எண்ணிக்கைகள் 
61 முதல் 70 வரை
TOTAL NUMBER OF COMMENTS : 61 Each


http://gopu1949.blogspot.in/2011/03/4.html
வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ. - பகுதி 4 / 8http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_06.html
ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆக வேண்டுமா?
சுலபமான வழியிருக்கு .... வாங்க!


http://gopu1949.blogspot.in/2011/05/blog-post_11.html
தங்கமே தங்கம்


http://gopu1949.blogspot.in/2013/11/77.html
ஆசை என்ற அரிப்பு


TOTAL NUMBER OF COMMENTS : 62


http://gopu1949.blogspot.in/2013/10/70.html
குங்குமப்பொட்டின் மங்கலம் .... !


TOTAL NUMBER OF COMMENTS : 63 Eachhttp://gopu1949.blogspot.in/2011/04/1-of-3.html
சுடிதார் வாங்கப்போறேன் - பகுதி 1 / 3


http://gopu1949.blogspot.in/2011/06/4-of-4_26.html
மறக்க மனம் கூடுதில்லையே - இறுதிப்பகுதி 4 / 4


http://gopu1949.blogspot.in/2011/12/3-of-5.html
தேடி வந்த தேவதை - பகுதி 3 / 5காவேரிக் கரை இருக்கு !
கரை மேலே ___ இருக்கு !!

http://gopu1949.blogspot.in/2013/10/60.html
குருவிடம் வந்து சேரும் பாபங்கள்


http://gopu1949.blogspot.in/2013/11/74.html
பக்தி சிரத்தை


TOTAL NUMBER OF COMMENTS : 64 Each http://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html
ஐம்பதாவது பிரஸவம்
[’மை டியர் ப்ளாக்கி’ + ‘தாலி’]http://gopu1949.blogspot.in/2014/06/vgk-11-to-vgk-20_16.html
VGK-11 to VGK-20 பரிசு மழை ஒட்டுமொத்த அலசல்


TOTAL NUMBER OF COMMENTS : 66http://gopu1949.blogspot.in/2013/12/97.html
தியாகம்


TOTAL NUMBER OF COMMENTS : 67 Each
http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_13.html
சிரிக்கலாம் வாங்க [உலக்கை அடி]http://gopu1949.blogspot.in/2011/03/8.html
வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ. இறுதிப்பகுதி 8 / 8 


http://gopu1949.blogspot.in/2011/04/3-of-3.html

சுடிதார் வாங்கப்போறேன் - இறுதிப்பகுதி 3 / 3TOTAL NUMBER OF COMMENTS : 68 Eachhttp://gopu1949.blogspot.in/2014/01/108.html
ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை?http://gopu1949.blogspot.in/2014/12/blog-post.html
இன்பச்சுற்றுலா இனிதே நிறைவடைந்தது [துபாய்-1]


TOTAL NUMBER OF COMMENTS : 69 Each
http://gopu1949.blogspot.in/2011/03/7.html
வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ. - பகுதி 7 / 8http://gopu1949.blogspot.in/2013/10/61-2-2.html
மீண்டும் பதிவர் சந்திப்பு -
அன்பின் திரு. சீனா ஐயா அவர்களின் திருச்சி விஜயம்


TOTAL NUMBER OF COMMENTS : 70http://gopu1949.blogspot.in/2013/11/86.html
சுதந்திரம் .... நாட்டுக்கும் நமக்கும். 

தொடரும்என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்]

28 கருத்துகள்:

 1. என் பதிவுகள் அனைத்துமே, நான் பெற்ற குழந்தைகள் போல எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருப்பினும், பிறர் அளித்துள்ள பின்னூட்டக் கருத்துக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவற்றை தரம் பிரித்து எடை போட்டுப் பார்த்தேன். //

  ஆம்! நம் எழுத்துக்கள் நம் குழந்தைகள் தான் ஆனால் அதை வளர்ப்பது பின்னூட்டங்கள் தான்! போற்றி, பேணி, சீராட்டி, பாராட்டி, அறிவுரைத்து, ஊக்கப்படுத்தி அவற்றைச் செம்மை செய்வது பின்னூட்டங்கள் தான். அவற்றையும் கருத்திற் கொண்டு தாங்கள் இங்கு பகிர்ந்திருப்பது தங்களின் உயர்ந்த உள்ளத்தையே காட்டுகின்றது. தங்களின் எழுத்துக்கள் சீரியதாக இருப்பதால் தானே இத்தனைப் பின்னூட்டங்கள்! மனதிற்கு மகிழ்வளிப்பதால்தானோ!! வாழ்த்துக்கள்! ஆதரவு கொடுக்கக் கைகள் இருக்கும் போது என்ன வேண்டும் வேறு!!

  ஒவ்வொன்றாகச் சென்று வாசிக்கின்றோம் சார்! பகிர்வுக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thulasidharan V Thillaiakathu March 18, 2015 at 4:49 PM

   வாங்கோ, வணக்கம்.

   //ஆம்! நம் எழுத்துக்கள் நம் குழந்தைகள் தான் ஆனால் அதை வளர்ப்பது பின்னூட்டங்கள் தான்! போற்றி, பேணி, சீராட்டி, பாராட்டி, அறிவுரைத்து, ஊக்கப்படுத்தி அவற்றைச் செம்மை செய்வது பின்னூட்டங்கள் தான். அவற்றையும் கருத்திற் கொண்டு தாங்கள் இங்கு பகிர்ந்திருப்பது தங்களின் உயர்ந்த உள்ளத்தையே காட்டுகின்றது. தங்களின் எழுத்துக்கள் சீரியதாக இருப்பதால் தானே இத்தனைப் பின்னூட்டங்கள்! மனதிற்கு மகிழ்வளிப்பதால்தானோ!! வாழ்த்துக்கள்! ஆதரவு கொடுக்கக் கைகள் இருக்கும் போது என்ன வேண்டும் வேறு!!

   ஒவ்வொன்றாகச் சென்று வாசிக்கின்றோம் சார்! பகிர்வுக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான பல கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
 2. என்ன ஒரு அழகான தொகுப்பு. பல பதிவுகளைத் தவறவிட்டிருக்கிறேன் என்று தெரிகிறது. விமர்சனப்போட்டியின் மூலம் தங்களுடைய பல கதைகளையும் ஆழமாக வாசித்து கருத்தும் விமர்சனமும் எழுத முடிந்தது. வாய்ப்பும் அளித்து பரிசுகளும் அளித்து சிறப்பித்த தங்களைப் பாராட்டியே ஆகவேண்டும். இனிய பாராட்டுகள் கோபு சார்.

  பதிலளிநீக்கு
 3. //பின்னூட்டங்கள் ஏதும் தரப்படாத பதிவுகள் என்று எதுவுமே என் தளத்தில் இல்லாததில் என் மனதுக்கு சற்றே மகிழ்ச்சி. //

  வாழ்த்துக்கள், சார்.

  பதிலளிநீக்கு
 4. பின்னூட்டங்கள் இல்லாத பதிவுகளே இல்லை! கொடுத்து வைத்த பதிவர் சார் நீங்க! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. இதில் பல பதிவுகளை வாசிக்காமல் இருக்கிறேன். நேரங்கிடைக்கும் போது வாசித்து ப் பின்னூட்டமிடுவேன். பின்னூட்டமில்லாத பதிவுகளே இல்லை என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்! பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Kalayarassy G March 18, 2015 at 9:00 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இதில் பல பதிவுகளை வாசிக்காமல் இருக்கிறேன். நேரங்கிடைக்கும் போது வாசித்துப் பின்னூட்டமிடுவேன். //

   மிக்க நன்றி. சந்தோஷம்.

   இவ்வாறு தங்களைப்போன்ற நகைச்சுவைப் பிரியர்களுக்காகவும், உண்மையான வாசிப்பு ஆர்வம் உள்ளவர்களுக்காகவுமே, அதிக பின்னூட்டங்கள் [50 +] கிடைத்துள்ள என் பதிவுகளை மட்டும் FILTER செய்து இந்தத்தொடரினில் கொடுத்துள்ளேன்.

   அவசரமே இல்லை. நேரம் கிடைக்கும்போது மெதுவாகவே வாசியுங்கோ, போதும்.

   //பின்னூட்டமில்லாத பதிவுகளே இல்லை என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்! பாராட்டுக்கள்!//

   ஆரம்பம் முதலே யாராவது ஒரு 10 பேர்களாவது வருகை தந்து கருத்தளித்து உற்சாகப்படுத்தி வந்தார்கள். நாளடைவில் அந்த எண்ணிக்கை அதிகமாக ஆரம்பித்தது, ஒரு காலக்கட்டத்தில் மிகவும் அதிகமானது. அதில் கிடைத்த சந்தோஷமும் ஆத்ம திருப்தியுமே என்னைத் தொடர்ந்து பதிவுகள் கொடுக்க வைத்தது.

   தங்களின் பாராட்டுக்களுக்கு என் நன்றிகள், மேடம்.

   நீக்கு
 6. வாழ்த்துகள் சார் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 7. சேமிப்பு சிறப்பாக தொடரட்டும் ஐயா... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 8. பின்னூட்ட எண்ணிக்கைகள் மலைக்க வைக்கிறது.
  ஒவ்வொரு பின்னூட்டங்களுக்கும் நீங்கள் அளிக்கும் மறுமொழி ஒரு புது பதிவுக்கு வேண்டிய விஷயம் இருக்கும்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அரசு March 19, 2015 at 3:34 PM

   வாங்கோ, வணக்கம்.

   //பின்னூட்ட எண்ணிக்கைகள் மலைக்க வைக்கிறது.// :)

   //ஒவ்வொரு பின்னூட்டங்களுக்கும் நீங்கள் அளிக்கும் மறுமொழிகளில் ஒரு புது பதிவுக்கு வேண்டிய விஷயம் இருக்கும்.//

   ஓஹோ ! அப்படியா ? இதைத் தங்கள் மூலம் கேட்க எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. :)

   //வாழ்த்துக்கள்.// மிக்க நன்றி மேடம்.

   நீக்கு
 9. சார், தங்களின் 500வது பதிவுக்கு நான் ஏற்கனவே பாராட்டுக்களும், வாழ்த்துகளும் தெரிவித்துப் பின்னூட்டம் கொடுத்துள்ளேன்.

  அதில் உள்ள கீதமஞ்சரி அவர்களின் விமர்சனத்தை இன்றுதான் பொறுமையாக வாசித்து மகிழ்ந்தேன். சூப்பராக நகைச்சுவையாக எழுதியுள்ளார்கள். இந்தப்பதிவினில் அதைப்பற்றிய தங்களின் நினைவூட்டலுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //thirumathi bs sridhar March 20, 2015 at 12:11 AM
   சார், தங்களின் 500வது பதிவுக்கு நான் ஏற்கனவே பாராட்டுக்களும், வாழ்த்துகளும் தெரிவித்துப் பின்னூட்டம் கொடுத்துள்ளேன்.

   அதில் உள்ள கீதமஞ்சரி அவர்களின் விமர்சனத்தை இன்றுதான் பொறுமையாக வாசித்து மகிழ்ந்தேன். சூப்பராக நகைச்சுவையாக எழுதியுள்ளார்கள். இந்தப்பதிவினில் அதைப்பற்றிய தங்களின் நினைவூட்டலுக்கு மிக்க நன்றி.//

   This Comment is related to my next post:
   http://gopu1949.blogspot.in/2015/03/3.html

   However thank you Aatchi alias Parameshwari ! :)

   VGK

   நீக்கு
 10. பின்னூட்டங்கள் இல்லாத பதிவுகள் என்று எதுவுமே உங்கள் பதிவுகளில் இல்லை என்ற தங்களின் செய்தி மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்கு முக்கிய காரணம் உங்களது கடினமான உழைப்பு மற்றும் வலைப்பதிவர்கள் மீது நீங்கள் காட்டும் அன்புதான் என்பதனை அனைவரும் அறிவோம்.

  பதிலளிநீக்கு
 11. ippadi oru thodar ezhuthavendum endru thangalaukku thondriyullathe..... arumai sir.

  பதிலளிநீக்கு
 12. கணக்கருக்கு கணக்குப் போட சொல்லியா கொடுக்கவேண்டும்?

  பதிலளிநீக்கு
 13. அதானே.புள்ளி விவர புலிக்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்லதான்.ஆனாலும் அயராத உழைப்பு பிரமிக்க வைக்குதே.

  பதிலளிநீக்கு
 14. பிறர் அளித்துள்ள பின்னூட்டக் கருத்துக்களின் எண்ணிக்கை அடிப்படையில் தரம் பிரித்து எடை போட்டுப் பார்த்து அளித்த சிறப்பான. பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 9:14 PM

   வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

   //பிறர் அளித்துள்ள பின்னூட்டக் கருத்துக்களின் எண்ணிக்கை அடிப்படையில் தரம் பிரித்து எடை போட்டுப் பார்த்து அளித்த சிறப்பான. பகிர்வுகள்..பாராட்டுக்கள்..//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
 15. சுய மதிப்பீட்டு ஆவணமாக சிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 9:21 PM

   //சுய மதிப்பீட்டு ஆவணமாக சிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
 16. என் பதிவுகள் அனைத்துமே, நான் பெற்ற குழந்தைகள் போல எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருப்பினும், பிறர் அளித்துள்ள பின்னூட்டக் கருத்துக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவற்றை தரம் பிரித்து எடை போட்டுப் பார்த்தேன்.//

  ஆமாம். பின்னூட்டங்கள் தானே ஒரு பதிவருக்கு BOOST.
  அந்த BOOST அதிகமா கிடைத்ததால்தான் பூரிப்பா இருக்கீங்களோ?

  உங்க ஒருவரின் பின்னூட்டமே எங்கள் அனைவருக்கும் BOOST.

  வாழ்த்துக்களுடனும்,
  வணக்கத்துடனும்,
  நன்றியுடனும்

  ஜெயந்தி ரமணி

  பதிலளிநீக்கு
 17. கரீட்டா சொல்லினிங்க. பதிவுங்குற கொளந்தய உற்சாகமான கமண்டுகதா ஊட்டி வளக்குது. நல்ல நல்ல கமண்டுகளுக்கு ஊடாவும் நா போடுர கமண்டயும் சேத்துகிட்டீகளே. சந்தோசமாகீதுங்க.

  பதிலளிநீக்கு
 18. கரீட்டா சொல்லினிங்க. பதிவுங்குற கொளந்தய உற்சாகமான கமண்டுகதா ஊட்டி வளக்குது. நல்ல நல்ல கமண்டுகளுக்கு ஊடாவும் நா போடுர கமண்டயும் சேத்துகிட்டீகளே. சந்தோசமாகீதுங்க.

  பதிலளிநீக்கு
 19. நீங்க போடும் ஹிவரமான பின்னூட்டங்கள் போல யாராலயுமே சுவாரசியமாக போட முடியாதுதான். நினைப்பு மட்டும் இருக்கு. டெம்ப்ளேட் கமண்ட் போடக்கூடாது பதிவுக்கு தகுந்த பின்னூட்டம் போடணும் என்று. நடைமுறையில் சாத்தியப்படமாட்றது.

  பதிலளிநீக்கு
 20. புள்ளிவிவரம் எங்களுக்கும் உசுப்பேற்றி தூக்கிவிடும் PULLEY-விவரம்!!! மேலே இதயம் கீழே சூப்பர்-ஸ்டார். அழகு.

  பதிலளிநீக்கு
 21. கலைஞனை மேலும் மேலும் மெருகூட்டுவது இரசிகர்கள் தரும் ஊக்கமும், பாராட்டுகளும்தான்! தொடர்பவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தாலே தெரிகிறது நீங்கள் பலரின் உள்ளம் கவர் கள்வன் என்று! வாழ்த்துகள் சார்!

  பதிலளிநீக்கு