’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot. in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.
தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.
”கங்கையைச் சொம்புக்குள் அடக்க முடியாதுதான். ஒரு நூற்றாண்டில் தமிழில் எழுதிக்குவித்த ஆயிரக்கணக்கான எழுத்துக் கலைஞர்களில் 37 என முடிவுக்கு வந்தது மிகவும் அநியாயம்தான் என்றாலும் பக்கக் கணக்கு நெருக்கடியில், ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில், தமிழ் எழுத்துலகை வாசித்து அறிய இந்த அளவே சாத்தியமாயிற்று. பேராசியர் கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், நவீன இலக்கிய ஜெயமோகன் போன்றோருக்கு தனிப்புத்தகம்தான் போட வேண்டும்” என்கிறார் ஜீவி தன் முன்னுரையில்.
நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி
முதற்பதிப்பு: 2016
வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979
அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225
ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள், செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி.
இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.
1) இயற்கையை நேசித்த
ந. பிச்சமூர்த்தி
[பக்கம் 11 முதல் 16 வரை]
அசப்பில் தாகூர் போன்றதோர் தோற்றம். இவரின் பல கதைகள் பொறி போன்ற ஒரு வெளிச்சத்தைத் தாங்கிக்கொண்டிருக்கும். அந்தப்பொறி எதுவொன்றையும் உன்னிப்பாய்ப் பார்த்து ரசித்த அவர் மனத்தின் வெளிப்பாடாக இருக்கும். அவராகப் புனைவாக ஒரு விஷயத்தை நீட்டி முழக்கிச் சொல்லாமல் அவர் பார்த்த காட்சி பற்றிய அதிசயப் படப்பிடிப்பாய் இருக்கும். சில அன்றாடம் நாம் பார்க்கக்கூடியவைதான் என்றாலும் ‘அடடா! இந்த மனிதர் இதை இப்படி நோக்கியிருக்கிறாரே. அவருக்குத்தோன்றியது நமக்குத் தோன்றவில்லையே’ என்று அவர் பார்த்த பார்வையை நாமும் ரசிக்கத்தோன்றும்.
ந. பிச்சமூர்த்தி எழுதியுள்ள சிலகதைகளை உதாரணமாக எடுத்துக்கொண்டு ஜீவி தனக்கே உரிய பாணியில் திறனாய்வு செய்து நமக்கு இந்த நூல் வாயிலாகச் மிகச்சிறப்பாகச் சொல்லியுள்ளார்கள். ஒவ்வொன்றையும் படிக்கப்படிக்க பரமானந்தமாக உள்ளது.
இவரது பிற்கால பெயர் சொல்லும் வாழ்க்கைக்கு முன்னாலேயே அச்சாரமாக அமைந்தது, கலைமகளில் பிரசுரமான இவரின் ‘முள்ளும் ரோஜாவும்’ என்ற சிறுகதை என்கிறார் ஜீவி.
இவர் எழுதியுள்ள ’காபூலிக் குழந்தைகள்’; ‘குட்டிக்குளவி’ ஆகிய கதைகளையும், தமிழின் முதல் புதுக்கவிதையான ‘பெட்டிக்கடை நாரணன்’ பற்றியும் ஜீவி அலசி ஆராய்ந்து வெகு அழகாகச் சொல்லியுள்ளார்.
இவரது பிற்கால பெயர் சொல்லும் வாழ்க்கைக்கு முன்னாலேயே அச்சாரமாக அமைந்தது, கலைமகளில் பிரசுரமான இவரின் ‘முள்ளும் ரோஜாவும்’ என்ற சிறுகதை என்கிறார் ஜீவி.
இவர் எழுதியுள்ள ’காபூலிக் குழந்தைகள்’; ‘குட்டிக்குளவி’ ஆகிய கதைகளையும், தமிழின் முதல் புதுக்கவிதையான ‘பெட்டிக்கடை நாரணன்’ பற்றியும் ஜீவி அலசி ஆராய்ந்து வெகு அழகாகச் சொல்லியுள்ளார்.
2) சிறுகதைச் சிற்பி
கு.ப. ராஜகோபாலன்
[பக்கம்: 17 முதல் 25 வரை]
கு.ப. ராஜகோபாலன்
[பக்கம்: 17 முதல் 25 வரை]
கதைப்போக்கின் நடுவே யார் சார்பாகவும் கதாசிரியரான இவர் ஒரு வார்த்தை பேசமாட்டார். கதையின் கடைசி வரிக்கு அப்புறம் படிப்பவரின் மன உணர்வுக்கு எல்லா முடிவுகளையும் விட்டுவிடுவார். பெரும்பாலும் எல்லாக்கதைகளிலும் கு.ப.ரா. அவர்கள் இப்படி ஒரு நட்சத்திர மினுக்கு வைத்திருப்பார். இல்லை, மொத்தக் கதையையும் சுருட்டி ஒரு பந்தாக்கி விளையாடுகிற மாதிரி ஒரு திருப்பம் காத்திருக்கும். இதுதான் கு.ப.ரா.வின் கதை சொல்லும் பாணி என்கிறார் ஜீவி.
கு.ப.ரா.வின் 'விடியுமா?' என்ற சிறுகதையை எடுத்துக் கொண்டு அவர் எழுத்துச் சிறப்பை எடுத்துச் சொல்கிறார் ஜீவி. அதைவிட ‘நூருன்னிசா’ என்ற சிறுகதையைப் பற்றியும் ’சிறிது வெளிச்சம்’ என்றதொரு கதையைப்பற்றியும் ஜீவி விரிவாக எழுதியிருப்பது என்னை மிகவும் கவர்ந்தன. ’சிறிது வெளிச்சம்’ என்ற கதையில் ஓர் இளம் மனைவி விரக்தியடைந்த நிலையில் சொல்லும் வசனமான ’பெற்றோர்களாவது, புருஷனாவது? .... எல்லாம் சுத்த அபத்தம்’ என்பது படிக்கும் நம்மைக் கண்கலங்கி விக்கித்துப்போக வைக்கிறது.
கு.ப.ரா. வின் ‘திரை’ என்ற கதையை ஜீவியின் விமர்சனத்தின் வாயிலாகப் படிப்பவர்களே அதிர்ஷ்டசாலிகள் என்பேன். இதில் வீணையின் சுருதிலயம் சேர்ந்து ஓர் விதவைப் பெண்ணின் ஏக்கம் மறைமுகமாகச் சொல்லப்பட்டுள்ளது ..... படித்ததும் எனக்கு ஒரே ஆச்சர்யம் !!!!!
கு.ப.ரா. அவர்களின் இளைய சகோதரியும் ஓர் பிரபல எழுத்தாளராக இருந்துள்ளார். ‘கலைமகள்’ பத்திரிகையில் நிறைய எழுதியுள்ள கு.ப.சேது அம்மாள். தமது இளம் வயதிலேயே கணவனைப் பறிகொடுத்த இவருக்கு, மறுமணம் செய்துவைத்த புரட்சியாளர் கு.ப.ரா. கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் இதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்கள் என்கிறார் ஜீவி.
மேலும் கு.ப.ரா. பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை தகுந்த உதாரணங்களுடன் ஜீவி நூலில் படித்து ரசித்து உணரலாம்.
இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும்.
என்றும் அன்புடன் தங்கள்,
(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்
இதன் அடுத்த பகுதியில்
இடம்பெறப்போகும்
இரு பிரபல எழுத்தாளர்கள்:
வெளியீடு: 18.03.2016 பிற்பகல் 3 மணிக்கு.
காணத் தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள் !!
கு.ப.ரா.அவர்களின் கதை சொல்லும் பாணி அருமை...
பதிலளிநீக்குதிண்டுக்கல் தனபாலன் March 16, 2016 at 4:30 PM
நீக்குவாங்கோ, வணக்கம். இந்த என் பதிவுக்குத் தங்களின் முதல் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.
//கு.ப.ரா.அவர்களின் கதை சொல்லும் பாணி அருமை...//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். மேலும் எழுத்தாளரான இவர் அந்தக் காலத்திலேயே சமூகப் புரட்சி செய்துள்ளவராகவும் இருந்துள்ளார் எனக்கேட்பதில் கூடுதல் வியப்பாக உள்ளது. - VGK
பதிலளிநீக்குதமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவரான வேங்கட மகாலிங்கம் என்ற இயற்பெயருடைய திரு ந.பிச்சமூர்த்தி அவர்கள் பற்றி எனது அண்ணன் மூலம் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் கதைகள் மட்டுமல்லாமல் புதுக்கவிதைகளையும் படைத்திருக்கிறார் என கேள்விப்பட்டிருக்கிறேன். திரு ஜீவி அவர்களின் நூலை திறனாய்வு செய்து .சுருங்கச்சொல்லி விளங்க வைத்து திரு ந.பிச்சமூர்த்தி அவர்களின் கதைகளைப் படிக்கவேண்டும் என்ற ஆவலைத்தூண்டிவிட்டுள்ளது நீங்கள் தந்திருக்கும் அறிமுகம். பாராட்டுக்கள்!
சிறுகதைச் சிற்பி திரு கு,ப.ராஜகோபாலன் அவர்கள் பற்றி திரு ஜீவி சொல்லியிருப்பதை படிக்கும்போது அவரது கதை சொல்லும் பாணி பற்றி அறிய ஆவல் ஏற்படுவது உண்மை..எண்பது ஆண்டுகளுக்கு முன்பே இளைய சகோதரிக்கு மறுமணம் செய்துவைத்த இந்த புரட்சியாளர் பற்றி மேலும் அறிய திரு ஜீ.வி அவர்களின் நூலை படிக்க ஆவலைத் தூண்டுகிறது தங்களின் திறனாய்வு வாழ்த்துக்கள்!
திரு ந.பிச்சமூர்த்தி அவர்களும் திரு கு,ப.ராஜகோபாலன் அவர்களும் கும்பகோணத்துக்காரர்கள் என அறிந்தபோது மேலும் ஆச்சரியமாய் இருக்கிறது
பெற்றோர் வைத்த (சர்மா) பெயர்: வேங்கட மஹாலிங்கம். கூப்பிட்ட பெயர்: பிச்சமூர்த்தியை சுருக்கி பிச்சை.
நீக்குபிச்சமூர்த்தி அவர்கள் பிஷூ, ரேவதி ஆகிய புனைப்பெயர்களையும் கொண்டிருந்தார். இன்றைய புதுக்கவிதையின் பிதாமகர் அவர்.
-- ஜீவி
வே.நடனசபாபதி March 16, 2016 at 4:32 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவரான வேங்கட மகாலிங்கம் என்ற இயற்பெயருடைய திரு ந.பிச்சமூர்த்தி அவர்கள் பற்றி எனது அண்ணன் மூலம் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் கதைகள் மட்டுமல்லாமல் புதுக்கவிதைகளையும் படைத்திருக்கிறார் என கேள்விப்பட்டிருக்கிறேன்.//
ஆஹா, இதையெல்லாம் தங்கள் மூலம் இங்கு கேட்கவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.
//திரு ஜீவி அவர்களின் நூலை திறனாய்வு செய்து சுருங்கச்சொல்லி விளங்க வைத்து திரு ந.பிச்சமூர்த்தி அவர்களின் கதைகளைப் படிக்கவேண்டும் என்ற ஆவலைத்தூண்டிவிட்டுள்ளது நீங்கள் தந்திருக்கும் அறிமுகம். பாராட்டுக்கள்! //
ஜீவி அவர்கள் எழுதியுள்ளவற்றை முழுவதுமாக மனதில் வாங்கிக்கொண்டு படித்துவிட்டு, அதனை மிகவும் சுருக்கோ சுருக்கென்று சுருக்கி, ஏதோ கொஞ்சூண்டு மட்டுமே, நான் இந்தத்தொடரின் என் பதிவுகளில் தந்து வருகிறேன்.
//சிறுகதைச் சிற்பி திரு கு,ப.ராஜகோபாலன் அவர்கள் பற்றி திரு ஜீவி சொல்லியிருப்பதை படிக்கும்போது அவரது கதை சொல்லும் பாணி பற்றி அறிய ஆவல் ஏற்படுவது உண்மை.//
மிக்க மகிழ்ச்சி, சார். இந்த ஆவல் அனைவருக்கும் ஏற்பட்டு விடும் என நாம் சொல்ல இயலாது. தங்களுக்கு ஏற்பட்டுள்ளதில் எனக்கும் சந்தோஷமே.
//எண்பது ஆண்டுகளுக்கு முன்பே இளைய சகோதரிக்கு மறுமணம் செய்துவைத்த இந்த புரட்சியாளர் பற்றி மேலும் அறிய திரு ஜீ.வி அவர்களின் நூலை படிக்க ஆவலைத் தூண்டுகிறது தங்களின் திறனாய்வு வாழ்த்துக்கள்! //
இதுபோன்ற நூல் அறிமுகப்பதிவுகளின் நோக்கமே இதுபோன்றதோர் ஆவலை சிலருக்காவது மனதில் தூண்டிவிட வேண்டும் என்பதுதானே! அதில் எனக்கும் கொஞ்சம் வெற்றி ஏற்பட்டுள்ளதாகத் தங்கள் மூலம் அறிந்துகொண்டதில் மேலும் எனக்கு மகிழ்ச்சியே.
//திரு ந.பிச்சமூர்த்தி அவர்களும் திரு. கு.ப.ராஜகோபாலன் அவர்களும் கும்பகோணத்துக்காரர்கள் என அறிந்தபோது மேலும் ஆச்சரியமாய் இருக்கிறது//
இவர்கள் இருவர் மட்டுமல்ல. பிரபலங்களில் மேலும் சிலரும் கும்பகோணத்தைச் சார்ந்த எழுத்தாளர்களாகவே உள்ளனர்.
இந்த நூல் ஆசிரியரான ஜீவி அவர்களே கும்பகோணத்துக்காரராக இருக்கிறார் :)
சமீபத்தில் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் மகாமகம் திருவிழா நடந்த இந்த 2016ம் ஆண்டிலேயே இந்த நூல் வெளியீடும் நடந்துள்ளது மேலும் ஓர் வியப்பாக என்னால் உணரமுடிகிறது.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான ஆத்மார்த்தமான, நல்லபல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். தொடர்ந்து வருகை தாருங்கள். - VGK
ஜீவி March 17, 2016 at 12:02 PM
நீக்கு//பெற்றோர் வைத்த (சர்மா) பெயர்: வேங்கட மஹாலிங்கம். கூப்பிட்ட பெயர்: பிச்சமூர்த்தியை சுருக்கி பிச்சை.//
அந்தக்காலத்தில், இன்றைய நவீன மருத்தவ வசதிகள் ஏதும் இல்லாமல் இருந்ததால், ஒருதாய் கர்ப்பம் தரித்தபின் குழந்தை அந்தத் தாயின் வயிற்றில் 9-10 மாதங்கள் நிரந்தரமாகத் தங்காமல் இருந்ததோ அல்லது அப்படியே தங்கினாலும் குழந்தை பிறந்தபின், கொஞ்ச நாளிலேயே அது இறந்துவிடுவதாக இருந்ததோ மிகவும் சர்வ சாதாரண நிகழ்ச்சிகளாக இருந்து வந்தன.
அதுபோன்று அடுத்தடுத்து நிகழும்போது, மன வேதனைப்படும் பெற்றோர்கள் ......
”இந்த ஒரு குழந்தையாவது எங்களிடம் தங்கட்டும், மடிப்பிச்சை போடு ... தெய்வமே; குழந்தைக்குப் ’பிச்சை’ என்றே பெயரிட்டு அழைக்கிறேன்”
எனக் கடவுளிடம் வேண்டிக்கொள்வார்களாம்.
‘பிச்சை’ என்ற பெயருடையவர்கள் பலருக்கும் இதுவே பெயர்க் காரணமாக இருக்கக்கூடும், என நான் என் முன்னோர்கள் மூலம் கேள்விப்பட்டுள்ளேன். இது அனைவருக்கும் ஓர் தகவலுக்காக மட்டுமே.
- VGK
அருமையான அறிமுகம்
பதிலளிநீக்குதொடர்க நண்பரே வாழ்த்துக்கள்
Ajai Sunilkar Joseph March 16, 2016 at 11:51 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//அருமையான அறிமுகம். தொடர்க நண்பரே, வாழ்த்துக்கள்//
தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. தங்களுக்கு இந்தத்தொடர் பிடித்திருந்தால் தொடர்ந்து வருகை தாருங்கள். - VGK
தங்களின் தொடர் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது. தொடர்கிறேன். அய்யா!
பதிலளிநீக்குS.P.SENTHIL KUMAR March 17, 2016 at 7:46 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//தங்களின் தொடர் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது. தொடர்கிறேன். அய்யா!//
தங்களின் அன்பான வருகைக்கும், ஆர்வத்திற்கும், தொடர்ந்து வருவதாகச் சொல்லியிருப்பதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK
ஐயா பிச்சை மூர்த்தி அவர்களுடன்
பதிலளிநீக்குஒரு கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் பாக்கியம்
எனக்கு மிகச் சிறிய வயதிலேயே கிடைத்தது
அதுவும் கவிஞன் என்னும் அங்கீகாரத்தோடு
வானப்பாடி கவிஞர்கள் சிலரோடு...
அந்த நாளை தங்கள் பதிவின் மூலம்
நினைவு கூர்ந்தேன்
அருமையான புத்தகத்தை அற்புதமாக
அறிமுகம் செய்து போகிறீர்கள்
அவசியம் வாங்கிப்படித்துவிடுவேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
ஜீவிMarch 17, 2016 at 12:15 PM
நீக்குரமணி சார்! கோவையில் உயிர் பெற்று ஒருகாலத்தில் தமிழகம் எங்கணும் சிறக்கடித்த வானம்பாடி குழுவினருடன் உங்களுக்கு அறிமுகம் உண்டா?.. கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறுவயதில் உங்களில் துளிர்த்த கவிதைச் செடி, இந்தவயதில் சந்த அழகில் எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் பூத்துக்குலுங்கும் அழகின் ரகசியம் புரிந்தது. ந.பி. அவர்களுடான அரிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
--ஜீவி
Ramani S March 17, 2016 at 9:53 AM
நீக்குவாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.
//ஐயா பிச்சை மூர்த்தி அவர்களுடன் ஒரு கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் பாக்கியம்
எனக்கு மிகச் சிறிய வயதிலேயே கிடைத்தது
அதுவும் கவிஞன் என்னும் அங்கீகாரத்தோடு
வானப்பாடி கவிஞர்கள் சிலரோடு...
அந்த நாளை தங்கள் பதிவின் மூலம்
நினைவு கூர்ந்தேன்.//
இதைத்தங்கள் வாயிலாக இங்கு கேட்க எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
மேலே நம் ஜீவி சாரும் மிக அழகாகவே எடுத்துச் சொல்லிவிட்டார்கள் ... தங்களின் இன்றைய படைப்புக்களின் ‘பூத்துக்குலுங்கும் அழகின் இரகசியம்’ பற்றி. ஸ்பெஷல் நல்வாழ்த்துகள்.
//அருமையான புத்தகத்தை அற்புதமாக அறிமுகம் செய்து போகிறீர்கள். அவசியம் வாங்கிப்படித்துவிடுவேன். பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்//
மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், பூத்துக்குலுங்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். VGK
இந்த பதிவில் எழுத்துக்கள் மிகவும் சிறியதாக படிக்க முடியாதபடி இருக்கு. பின்னூட்டம் போட்டிருப்பவர்களின் கருத்துகள் படிக்க வசதியாக பெரிய எழுத்துகளில் இருக்கு.ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன் இவர்களைப்பற்றி எனக்கு தெரிந்திருக்கவில்லை. நல்ல எழுத்து எங்க இருந்தாலும் யாரு எழுதி இருந்தாலும் தேடித்தேடி படிக்கும் ஆர்வம் நிறையவே உண்டு. நீங்க தொடங்கி இருக்கும் இந்த பதிவு மூலம் நிறைய எழுத்தாளர்களையும் அவர்களின் திறமையான எழுத்துக்களைப்படிக்கும் அற்புதமான வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி... March 17, 2016 at 10:07 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//இந்த பதிவில் எழுத்துக்கள் மிகவும் சிறியதாக படிக்க முடியாதபடி இருக்கு.//
நானும் என்னால் ஆன எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்துவிட்டேன். Draft இல் எழுத்தினைப் பெரியதாக மாற்றி SAVE செய்து பிறகு முன்னோட்டம் பார்த்துவிட்டு பிறகுதான் வெளியிட்டேன். இருப்பினும் Publish கொடுத்தபின் பார்த்தால் அவை சிறிய எழுத்துக்களாகவே வருகின்றன. ஏதோ கணினியிலோ ப்ளாக்கரிலோ தொழில்நுட்பக் கோளாறுகள் உள்ளன போலிருக்கு. அதுபற்றி எனக்கும் ஒன்றும் புரியவில்லை.
எனக்கும் இதுபோன்ற சிறிய எழுத்துக்களில் என் பதிவுகளை வெளியிடுவதோ, பிறர் பதிவுகளைப் படிப்பதோ எப்போதுமே திருப்தியாக இருப்பது இல்லைதான். மிகுந்த எரிச்சலும் ஏற்படும்.
இருப்பினும் எனக்குத் தெரிந்த ஒரு எளிய உபாயத்தினைத் தங்களுக்கு இப்போது சொல்கிறேன். அதன்மூலம் இதுபோன்ற பொடிப்பொடியான எழுத்துக்களைப் பெரியதாக்கி தாங்கள் மிகச்சுலபமாகப் படிக்க முடியும்.
படிக்க வேண்டிய பகுதியில் கிரஸரை (ஆரோவை) வைத்துக்கொண்டு, மெளஸை பிடித்து ஒருமுறை லெஃப்ட் க்ளிக் செய்யவும். பிறகு Key Board இல் Control and Plus (Ctrl+) ஆகிய இரு பட்டன்களையும் ஒரே நேரத்தில் ஒருமுறை அழுத்தவும். இப்போது எழுத்து சற்றே பெரியதாகும். மீண்டும் அதுபோல ஒருமுறை செய்தால் எழுத்துகள் மேலும் பெரியதாகும். படித்து முடித்ததும் கண்ட்ரோல் மற்றும் மைனஸ் ஆகியவற்றை, ஒரே நேரத்தில், ஒருமுறையோ, இரு முறைகளோ அழுத்தினால் பழையபடி நார்மலுக்கு வந்துவிடும்.
இதைத்தாங்கள் செய்து, வெற்றிகரமாக என் இந்தப்பதிவினைப் பெரிய எழுத்துகள் ஆக்கிப் படிக்க முடிந்ததா என்ற தகவலை எனக்கு இங்கே இன்னொரு பின்னூட்டத்தின் மூலம் தெரிவிக்க வேண்டுகிறேன்.
//பின்னூட்டம் போட்டிருப்பவர்களின் கருத்துகள் படிக்க வசதியாக பெரிய எழுத்துகளில் இருக்கு.//
அது நம் கையில் இல்லை. அவை STD. SIZE ஆக மட்டுமே அதுவாகவே வெளியாகக் கூடியவைகளாகும்.
// ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் இவர்களைப்பற்றி எனக்கு தெரிந்திருக்கவில்லை.//
இந்த நூலில் உள்ள பலரையும் எனக்கும் தெரியாதுதான். நூலைப்படித்த பின்பே ஓரளவு அவர்களின் மகிமைகளை அறிந்து கொள்ள முடிந்தது.
//நல்ல எழுத்து எங்க இருந்தாலும் யாரு எழுதி இருந்தாலும் தேடித்தேடி படிக்கும் ஆர்வம் நிறையவே உண்டு.//
மிகவும் சந்தோஷம். அந்த ஆர்வம் எல்லோருக்கும் வாய்க்காத ஒன்று ... தங்களுக்கு வாய்த்துள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே.
//நீங்க தொடங்கி இருக்கும் இந்த பதிவு மூலம் நிறைய எழுத்தாளர்களையும் அவர்களின் திறமையான எழுத்துக்களைப்படிக்கும் அற்புதமான வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.//
என்னைப்போலவே தங்களுக்கும் அந்த சுகானுபவம் நிச்சயமாகக் கிடைக்கும்.
தங்களின் அன்பான தொடர்வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK
எனக்கு இந்த மாதிரி நூல்களில் ஆர்வம் இல்லை. ஆகவே பின்னூட்டங்கள் போடவில்லை என்று நினைக்கவேண்டாம்.
பதிலளிநீக்குபழனி.கந்தசாமி March 17, 2016 at 10:42 AM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//எனக்கு இந்த மாதிரி நூல்களில் ஆர்வம் இல்லை.//
அதனால் பரவாயில்லை சார். எல்லோருக்கும், எல்லாவற்றிலும், எப்போதுமே ஆர்வம் இருக்கும் எனச்சொல்ல இயலாது என்பதை என்னாலும் நன்கு உணரமுடிகிறது. தங்களின் மனதில்பட்ட உண்மையை உண்மையாகத் தாங்கள் இங்கு எடுத்துச் சொல்லியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அதற்காக உங்களை நான் மிகவும் பாராட்டுகிறேன்.
இந்த நூலில் குறிப்பிட்டுள்ள பல்வேறு எழுத்தாளர்களுக்குள் நிறைய தலைமுறை இடைவெளிகளும் உண்டு. இவர்களில் சிலர் இன்று இருந்தால் வயது 100 க்கு மேல் 125க்குள் இருக்கக்கூடும். அவர்களின் அன்றைய காலக்கட்ட எழுத்துக்களை மிகவும் ரசித்து நமக்குச் சொல்வதையே கடமையாக இந்த நூலாசிரியர் முயற்சி எடுத்துக்கொண்டு செய்துள்ளார்.
இன்றைய எழுத்தாளர்களாகிய நம்மில் சிலருக்கு இதில் குறிப்பிடப்பட்டுள்ள பிரபலங்களில் சிலரைப்பற்றி தெரிந்துகொள்ள ஓர் ஆர்வம் இருக்கக்கூடும் என்பதால் மட்டுமே நானும் இந்த ஓர் தொடரினை சில பதிவுகளாகப் பிரித்து வெளியிடத் துவங்கியுள்ளேன்.
>>>>>
VGK >>>>> Dr. Palani Kandaswamy Sir (2)
நீக்குஇவர் இந்த நூலில் சுட்டிக்காட்டியுள்ள 37 பிரபலங்களில் ‘சுஜாதா’ ஒருவர் தவிர மற்ற யார் எழுத்துக்களையும் நான் இதுவரை படித்ததும் இல்லை. சுஜாதாவின் படைப்புகள் அனைத்தையும் படித்தவனும் அல்ல நான். சுஜாதாவின் ஏதோ ஒருசிலவற்றை மட்டுமே படித்துள்ளேன். மீதி 36 பேர்களில் ஒரு 5-6 எழுத்தாளர்களின் சிறப்புகள் பற்றி மட்டும் என் காதுகளால் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் நான் அவற்றைப் படித்தது இல்லை.
இவரின் இந்த ஒரே நூலினைப்படித்து பலரையும் பற்றி ஓரளவுக்காவது என்னால் அறிய முடிந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே. மிகக் குறுகிய நம் வாழ்நாளில் விட்டுப்போன எல்லாவற்றையும் ஆர்வமாக வாசிப்பது என்பதும் நமக்கு நம்மால் நினைத்தாலும் சாத்தியப்படக்கூடிய விஷயமும் அல்ல.
இவரின் இந்த ஒரு நூலை வாசித்ததே அனைத்து 37 பிரபல எழுத்தாளர்களின் நூல்களையும் வாசித்த திருப்தியை எனக்கு அளித்து விட்டது. அதனால் நான் பெற்ற இன்பத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பி இந்தத்தொடரை வெளியிட நானாகவே விரும்பி எடுத்துக்கொண்டுள்ளேன்.
>>>>>
VGK >>>>> Dr. Palani Kandaswamy Sir (3)
நீக்குஇன்றைய எழுத்தாளர்களாகிய நம்மைப்பற்றியும் ஒரு ஐம்பது ஆண்டுகளுக்குப்பின், இவ்வுலகில் யாராவது ஒருத்தராவது, ஏதோவொரு மூலையிலாவது, படித்துக்கொண்டோ, பேசிக்கொண்டோ, எழுதிக்கொண்டோ, வியந்துகொண்டோ இருக்கக்கூடும். அதுதான் நம் வலைத்தளங்கள் இன்று நமக்குக்கொடுத்துள்ளதோர் வரப்பிரசாத சீதனமாக உள்ளது.
இந்த ஓர் அரிய பெரிய வாய்ப்பு ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்துள்ளோருக்கு இல்லாததால், அவைகள் அவர்களின் நூல்கள் என்ற பெயரில் அங்கும் இங்குமாகச் சிதறிக் கிடக்கின்றன. அங்குமிங்குமாகச் சிதறிக்கிடக்கும் இவற்றை இந்த நூலாசிரியர் அரும்பாடுபட்டு ஒருங்கிணைத்து, நமக்கு ஒரு நூலாக ஆக்கிக்கொடுத்துள்ளார்கள். அதுதான் இந்த நூலில் உள்ள ஓர் தனிச்சிறப்பாகும்.
>>>>>
VGK >>>>> Dr. Palani Kandaswamy Sir (4)
நீக்கு//ஆகவே பின்னூட்டங்கள் போடவில்லை என்று நினைக்கவேண்டாம்.//
நிச்சயமாக நான் நினைக்க மாட்டேன். இந்த என் தொடருக்கு என் நிரந்தரமான வாசகர்கள் அனைவரிடமிருந்தும் மிக அதிகமாக வரவேற்புகளோ, பின்னூட்டங்களோ வழக்கம்போல வராது என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும். இருப்பினும் நம்மில் சிலராவது நிச்சயமாக இதனை வரவேற்பார்கள், பின்னூட்டமும் இடுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.
இந்தத்தொடரின் சில பகுதிகளில் மட்டும் ஆங்காங்கே என் சொந்தக் குறிப்புகளும் நான் கொடுத்துள்ளேன். அவை நிச்சயமாக ஒருவேளை தங்களுக்குப் பிடிக்கலாம் என நான் நினைக்கிறேன். அவ்வாறு அவைகள் மட்டுமாவது தங்களுக்கு ஒருவேளை பிடித்திருந்தால், தங்கள் கருத்துக்கள் எதுவாயினும் பதிவு செய்யுங்கோ, சார்.
>>>>>
VGK >>>>> Dr. Palani Kandaswamy Sir (5)
நீக்குஎன்னைவிட வயதிலும் மற்ற அனைத்துத் திறமைகளிலும் மூத்தவரான, தங்களின் கற்பனையும், நகைச்சுவை உணர்வுகளும், துணிச்சலும், எழுத்தார்வமும், நேர்மையும், தங்களின் பேச்சில் உள்ள உண்மைத்தன்மையும், எதையும் சுருங்கச்சொல்லி விளங்க வைக்க வேண்டும் என்ற தங்களின் கொள்கைகளும், எனக்கு எப்போதுமே பிடிக்கும்.
தங்களை என்பக்கம் வர வேண்டும் என்றும், பின்னூட்டமிட வேண்டும் என்றும் நான் வற்புருத்திக் கட்டாயப்படுத்தவே மாட்டேன்.
தாங்களாகவே ஒருவேளை வருகை தந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.
http://swamysmusings.blogspot.com/2016/03/3.html
மேற்படி பதிவினில் நான் தங்களுக்குக் கொடுத்துள்ள பின்னூட்டம் ஒன்றினை இங்கு மற்றவர்களின் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன்.
-=-=-=-=-=-=-=-=-=-
Most Respected Sir,
’வாஷிங்கடனில் திருமணம்’ எழுதிய சாவி அவர்கள் போல தங்களிடம் ஏராளமான நகைச்சுவை உணர்வுகளும், எழுத்துத்திறமையும் குவிந்துள்ளன.
ஒரு துக்கச்செய்தியைக் கேள்விப்பட்டு உடலும் உள்ளமும் மிகவும் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு மூன்று நாட்களாக அவ்வப்போது அழுதுகொண்டிருக்கும் எனக்குத் தங்களின் இந்த நகைச்சுவைப் பதிவுதான் மனதுக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல ஓர் ஆறுதலைத் தந்து வருகிறது.
ஒவ்வொரு வரியையும் ரஸித்து ருசித்துப் படித்து வருகிறேன்.
இந்தத்தொடரை சீக்கரமாக முடித்துவிடாமல், ஒரு 100 பகுதிகள் கொண்ட மிக நீள நகைச்சுவைத் தொடராக எழுத வேண்டும் எனத்தங்களை நான் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
பாராட்டுகள். வாழ்த்துகள். அன்புடன் VGK 07.03.2016
-=-=-=-=-=-=-=-=-=-
>>>>>
VGK >>>>> Dr. Palani Kandaswamy Sir (6)
நீக்குஇந்த என் பதிவுக்குத் தங்களின் அன்பான வருகைக்கும், மனம் திறந்து வெளிப்படையாகச் சொல்லியுள்ள உண்மையான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.
என்றும் அன்புடன் தங்கள் VGK
அறிமுகங்கங்களின்பதிவு சிறப்பு. இனிமேலதான் தேடிப்பார்த்து படிக்கணும். உங்களின் இந்தப் பதிவு பல எழுத்தாளர்களை தெரிந்து கொள்ளமிகவும் உதவியாக இருக்க போகுது. நன்றி ஸார்...
பதிலளிநீக்குஆல் இஸ் வெல்....... March 17, 2016 at 10:46 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//அறிமுகங்கங்களின் பதிவு சிறப்பு. இனிமேல்தான் தேடிப்பார்த்து படிக்கணும். உங்களின் இந்தப் பதிவு பல எழுத்தாளர்களை தெரிந்துகொள்ள மிகவும் உதவியாக இருக்க போகுது. நன்றி ஸார்...//
மிக்க மகிழ்ச்சி. நிச்சயமாக மிகச்சிறந்த எழுத்தாளர்கள் சிலரைப்பற்றி நாம் நன்கு அறிய உதவியாகத்தான் இருக்கும்.
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், சிறப்பான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK
எனக்கு இந்த எழுத்தாளர்கள் புதியவர்கள். இது வரை இவங்க பேரு கூட கேள்வி பட்டதா நினைவில் இல்ல.பல புதியவர்களைத்தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு.
பதிலளிநீக்குசிப்பிக்குள் முத்து. March 17, 2016 at 10:55 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//எனக்கு இந்த எழுத்தாளர்கள் புதியவர்கள். இது வரை இவங்க பேரு கூட கேள்வி பட்டதா நினைவில் இல்ல.//
எனக்கும் அப்படியே தான். இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் பிறந்திருப்போமா என்பதே சந்தேகம்தான்.
//பல புதியவர்களைத்தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு.//
ஆமாம். அதே அதே ..... தங்களின் அன்பான தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. - VGK
நல்ல அறிமுகங்கள். நல்ல பல எக்ழுத்தாளர்களை தெரிந்து கொள்ளப்போகிறோம் ரொம்ப சந்தோஷமான விஷயம். நன்றி ஸார்.
பதிலளிநீக்குsrini vasan March 17, 2016 at 11:27 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//நல்ல அறிமுகங்கள். நல்ல பல எழுத்தாளர்களை தெரிந்து கொள்ளப்போகிறோம். ரொம்ப சந்தோஷமான விஷயம். நன்றி ஸார்.//
மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், சந்தோஷமான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. - VGK
பல புதிய (பழைய) எழுத்தாளர்களை தெரிந்து கொள்ள அருமையான வாய்ப்பு. நன்றிகள்.
பதிலளிநீக்குsrini vasan March 17, 2016 at 12:23 PM
நீக்குவாங்கோ, மீண்டும் வணக்கம்.
//பல புதிய (பழைய) எழுத்தாளர்களை தெரிந்து கொள்ள அருமையான வாய்ப்பு. நன்றிகள்.//
அருமையான கருத்துக்களுக்கு மீண்டும் மிக்க நன்றி-VGK
இந்த தொடர் பதிவு எங்களுக்கெல்லாம் ரொம்ம சந்தோஷத்தைக்கொடுக்குது. இந்த கால தலைமுறையினருக்கு பழைய எழுத்தாளர்களை அறிந்து கொள்ள சிறப்பான முயற்சி. எவ்வளவு நன்றி சொன்னாலும் அது கம்மிதான்.
பதிலளிநீக்குப்ராப்தம் March 17, 2016 at 12:36 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//இந்த தொடர் பதிவு எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்குது.//
மிகவும் சந்தோஷம்.
//இந்த கால தலைமுறையினருக்கு பழைய எழுத்தாளர்களை அறிந்து கொள்ள சிறப்பான முயற்சி. எவ்வளவு நன்றி சொன்னாலும் அது கம்மிதான்.//
ஏதோ ஒரு ப்ராப்தம் .... இதுபோல நூலாசிரியர் ஒரு சிறந்த நூலை வெளியிட, அது பற்றி நான் என் பதிவுகளில் ரத்தின சுருக்கமாக எடுத்துச் சொல்லிவர, அதனை ‘ப்ராப்தம்’ அவர்கள் படித்து மகிழ எல்லாமே ஓர் ப்ராப்தம் இருப்பதால்தான் நடைபெற்று வருகிறது.
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK
கு.பா.ராவின் விடியுமா படித்து இருக்கிறீர்களா? என்று என் கணவரிடம் கேட்ட போது அவர்கள் அளித்த கதை சுருக்கம் கீழே வருவது.
பதிலளிநீக்குதன் கணவரை ஆபத்தான நிலையில் சென்னை பொது மருத்துவ மனையில் சேர்த்து இருப்பதாய் தந்தி வரவே ரயிலில் புறபட்டு செல்லுகின்ற மனைவியின் மனநிலையை வெளிபடுத்தும் கதைதான் விடியுமா என்று என் கணவர் சொன்னர்கள்.
//இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும்.//
உங்கள் விருப்பம் சரிதான். சார்.
அருமையாக எழுத்தாளர்களை பற்றி சொல்லி இருக்கிறார் ஜீவி சார்.
கோமதி அரசு March 17, 2016 at 6:42 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//கு.பா.ராவின் 'விடியுமா?' படித்து இருக்கிறீர்களா? என்று என் கணவரிடம் கேட்ட போது அவர்கள் அளித்த கதை சுருக்கம் கீழே வருவது.
தன் கணவரை ஆபத்தான நிலையில் சென்னை பொது மருத்துவ மனையில் சேர்த்து இருப்பதாய் தந்தி வரவே ரயிலில் புறpபட்டு செல்லுகின்ற மனைவியின் மனநிலையை வெளிபடுத்தும் கதைதான் 'விடியுமா?' என்று என் கணவர் சொன்னர்கள்.//
தங்களின் கணவருக்கு மிகவும் அபார ஞாபக சக்திதான். அவருக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகளைச் சொல்லவும்.
அந்த (மனைவி) கதாபாத்திரத்தின் பெயர் ஞாபகம் உள்ளதா என்று மட்டும் கேட்டு வையுங்கோ. நான் மீண்டும் அந்தக்கதை பற்றி ஜீவி எழுதியுள்ளதை என் பாணியில் சற்றே விளக்க இங்கு வருவேன். அன்புடன் VGK
>>>>>
கோமதி அரசு March 17, 2016 at 6:42 PM
நீக்கு**இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும்.**
//உங்கள் விருப்பம் சரிதான். சார். அருமையாக எழுத்தாளர்களை பற்றி சொல்லி இருக்கிறார் ஜீவி சார்.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
>>>>>
VGK >>>>> கோமதி அரசு (3)
நீக்கு’கு.ப.ரா’ அவர்களின் ‘விடியுமா?’ கதையின் கதாநாயகி பெயர்: குஞ்சம்மா.
குஞ்சம்மா ஓர் நோன்பு சடங்குக்காக கும்பகோணத்தில் உள்ள தன் பிறந்தகம் வந்திருக்கிறாள். அப்போது சென்னை பொது மருத்துவமனையிலிருந்து ஓர் தந்தி வந்துள்ளது.
‘சிவராமய்யர் டேஞ்சரஸ்’ என்ற இரண்டே வார்த்தைகள் அந்தத்தந்தியில் உள்ளன.
தன் தம்பியைத் துணைக்கு அழைத்துக்கொண்டு அரக்கப்பறக்க இரயிலில் ஏறி கும்பகோணத்திலிருந்து சென்னைக்குப் புறப்படுகிறாள் .... குஞ்சம்மா.
தந்தியில் இடம் பெற்றுள்ள ’டேஞ்சரஸ் சிவராமய்யர்’ குஞ்சம்மாவின் கணவராகத்தான் இருக்க வேண்டும் என்பதையும், சிவராமய்யர் இப்போது மட்டுமல்லாமல் எப்போதுமே டேஞ்சரஸ் ஆக நடந்து கொண்டிருப்பார் போலிருக்கு, தன் மனைவியான குஞ்சம்மாளிடம். என்பதையும் நாம் இங்கே கதையில் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது .... அவளின் இரயில் பயணத்தில், அவள் தன் தம்பியிடம், கண்ணீர் விட்டுச் சொல்லும் சில வார்த்தைகளால்.
”அம்பி, உங்க அத்திம்பேருக்கு வாக்கப்பட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்....”
“என்னிக்கும் பிடிவாதம். என்னிக்கும் சண்டை."
"நான் அழாத நாள் உண்டா? ... என் வாழ்வே அழுகையாக.....”
“எதிலாவது நான் சொன்ன பேச்சைக் கேட்டது உண்டா?”
”எப்படியோ அவர் ஆயுசுடன் இருந்தாப் போதுமென்று தோன்றிவிட்டது, போன தடவை உடம்புக்கு வந்தபோது...”
என்று எதை எதையோ தன் நினைவிலிருந்து பிய்த்தெடுத்து சொல்ல முயற்சிக்கிறாள், குஞ்சம்மா தன் தம்பியிடம் .... ஓடும் இரயிலில்.
நள்ளிரவு சுமார் ஒரு மணிக்கு இரயில் விழுப்புரத்தில் வந்து நிற்கிறது. அங்கு ஓர் அழகிய பணக்காரப் பெண்மணி (நகரத்தார் பெண்மணி) ஏறிக்கொண்டு குஞ்சம்மா அருகே அமர்ந்து கொள்கிறாள். சற்றே ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்தபின், அவள் மூலம் நடந்ததொரு மிகச்சிறிய செயல், குஞ்சம்மாளை சற்றே மன நிம்மதியும், சந்தோஷமும், செளபாக்யமும் அடையச் செய்கிறது.
சுப சகுனம் போன்ற இந்த ஒரு நிகழ்வையும் நானே இங்கு சொல்லிவிட விரும்பவில்லை. சஸ்பென்ஸ் கொடுத்துள்ளேன். :)
இரயில் சென்னையை நெருங்கும்போது, ‘அப்பா ... விடியுமா?’ என்றோர் நினைப்பு ஒரு பக்கம். ‘ஐயோ விடிகிறதே!’ இன்று நான் என்ன பாடு படுவேனோ?’ என்கிற நினைவு மறுபக்கம். குஞ்சம்மா இதுபோல இரு நினைவுகளில் தத்தளிக்கிறாள் என்பதை மூலக்கதாசிரியர் கு.ப.ரா. ஜோராகத்தான் சொல்லியிருக்கிறார் போலிருக்கு.
விடிந்ததா ? விடியவில்லையா ? என்பதே கதையின் சுவாரஸ்யமாகத் தெரிகிறது.
’விடிந்துவிட்டது’ என அந்தக்கதை முடிகிறதாம் ...... நம் ஜீவி சொல்கிறார்.
’விடியுமா?’ என்ற கேள்வியுடன் ஆரம்பித்த இந்தக்கதை ‘விடிந்துவிட்டது’ என்ற பதிலுடன் முடிகிறது. இதற்கு என்ன அர்த்தம் என்பதை வாசகர்களாகிய நாமே யூகித்துக்கொள்ள வேண்டியுள்ளது.
-=-=-=-=-=-
திருமதி கோமதி அரசு அவர்கள், ஏற்கனவே இந்தக்கதையை வாசித்துள்ள, தன் கணவர் திரு. அரசு அவர்களுடன், இந்தக்கதை சம்பந்தமாக விவாதித்து ஓர் இறுதி முடிவினைச் சொன்னால் நானும் தெரிந்துகொண்டு மகிழ்வேன்.
அன்புடன் VGK
எழுத்தாளர் திரு. ந. பிச்சமுத்து மற்றும் திரு. கு. ப. ராஜகோபாலன் ஆகியோர் பற்றியும் அவர்களது கதைகள் பற்றியும் திரு. ஜீவி. அவர்கள் எழுதியதன் சுருக்கமான பதிப்பை சிறப்பாக வெளியிட்டுள்ளீர்கள்...
பதிலளிநீக்குதொடரட்டும் (இறை நாட்டம்...)
அ. முஹம்மது நிஜாமுத்தீன் March 17, 2016 at 8:53 PM
நீக்குவாங்கோ நண்பரே, வணக்கம்.
//எழுத்தாளர் திரு. ந. பிச்சமுத்து மற்றும் திரு. கு. ப. ராஜகோபாலன் ஆகியோர் பற்றியும் அவர்களது கதைகள் பற்றியும் திரு. ஜீவி. அவர்கள் எழுதியதன் சுருக்கமான பதிப்பை சிறப்பாக வெளியிட்டுள்ளீர்கள்...
தொடரட்டும் (இறை நாட்டம்...)//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
இறை நாட்டத்துடன் தொடர்கிறேன். தாங்களும் தொடர்ந்து வாருங்கள். அன்புடன் VGK
தாமதமான வருகைக்கு வருந்துகிறேன். இரண்டாவது பதிவும் அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களும் பிரமாதம்.தமிழில் முதல் நவீன கவிதை ந.பிச்சமூர்த்தியின் பெட்டிக்கடை நாரணன் என்பது தான் இப்புத்தக மூலமே அறிந்து கொண்டேன். அக்கவிதையையும் கொடுத்திருக்கலாமே என்று தோன்றியது.புத்தக பக்கநெருக்கடியே இதற்கும் காரணமாயிருந்திருக்கும். ந.பி,யின் குளவி வர்ணனை படித்து ரசித்தேன். "என்ன அற்புதமான ஆகாய விமான உடல்! எவ்வளவு லேசான இடுப்பு! நூல் போன்ற இடை! அந்தி நேரத்து செங்காவி போன்ற என்ன பளிங்கிருள் உடல்! நட்சத்திரம் போன்ற என்ன கண்கள்!" கு.ப.ராவின் விடியுமா எப்போதோ படித்ததாக நினைவு. ஜீவிசாரின் விமர்சனம் பார்த்தபிறகு படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது. சுவாரசியமாகச் செல்கிறது. தொடருங்கள், தொடர்வேன்.
பதிலளிநீக்குஞா. கலையரசி March 17, 2016 at 9:40 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//தாமதமான வருகைக்கு வருந்துகிறேன். இரண்டாவது பதிவும் அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களும் பிரமாதம்.//
இந்த நூலை வாசித்துள்ள தாங்கள் தாமதமாக வருவதே எப்போதும் நல்லது. அதனால் வருந்தவே வேண்டாம். மேலும் சற்றே தாமதமாக வருவதால் பலரின் பின்னூட்டங்களையும் தாங்கள் பொறுமையாகப் படித்து இங்கு ’பிரமாதம்’ எனக் குறிப்பிடும் வாய்ப்பும் கூடுதலாய்த் தங்களுக்குக் கிடைக்கிறது.
//தமிழில் முதல் நவீன கவிதை ந.பிச்சமூர்த்தியின் பெட்டிக்கடை நாரணன் என்பது தான் இப்புத்தக மூலமே அறிந்து கொண்டேன். அக்கவிதையையும் கொடுத்திருக்கலாமே என்று தோன்றியது. புத்தக பக்கநெருக்கடியே இதற்கும் காரணமாயிருந்திருக்கும்.//
அதிலும் பாருங்கோ. அன்று தமிழில் முதன்முதலாக இவர் இயற்றிய புதுமையான வசன நடைக் கவிதைகளை அன்றைய பண்டிதர்களே ஏற்காமல் வீண் வாதங்கள் செய்து கிண்டலடித்து விமர்சனம் செய்து மனம் நோகச்செய்துள்ளனர். பிறகு அதே பண்டிதர்களே, மக்களிடம் பிரபல வரவேற்புகள் பெற்ற இவரின் வசன நடை கவிதைப் பாணியையே தாங்களும் பின்பற்றி, புகழடைந்துள்ளனர்.
// ந.பி,யின் குளவி வர்ணனை படித்து ரசித்தேன். "என்ன அற்புதமான ஆகாய விமான உடல்! எவ்வளவு லேசான இடுப்பு! நூல் போன்ற இடை! அந்தி நேரத்து செங்காவி போன்ற என்ன பளிங்கிருள் உடல்! நட்சத்திரம் போன்ற என்ன கண்கள்!"//
நானும் அந்த வர்ணனைகளை எனக்குள் மிகவும் ரசித்து மகிழ்ந்தேன். விரிவஞ்சி இங்கு இந்தப்பதிவினில் அவற்றைக் நான் கொண்டுவரவில்லை.
//கு.ப.ராவின் விடியுமா எப்போதோ படித்ததாக நினைவு. ஜீவிசாரின் விமர்சனம் பார்த்தபிறகு படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.//
பழைய பிரபல எழுத்தாளர்களின் ஆக்கங்களைப்பற்றி தாங்கள் எவ்வளவோ விஷய ஞானம் உள்ளவர் என்று ஜீவி சாரே என்னிடம் சொல்லி வியந்துள்ளார்.
//சுவாரசியமாகச் செல்கிறது. தொடருங்கள், தொடர்வேன்.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான, ஆத்மார்த்தமான பல நல்ல கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் மிக்க மகிழ்ச்சி மேடம்.
நன்றியுடன் கோபு
//திருமதி கோமதி அரசு அவர்கள், ஏற்கனவே இந்தக்கதையை வாசித்துள்ள, தன் கணவர் திரு. அரசு அவர்களுடன், இந்தக்கதை சம்பந்தமாக விவாதித்து ஓர் இறுதி முடிவினைச் சொன்னால் நானும் தெரிந்துகொண்டு மகிழ்வேன்.//
பதிலளிநீக்குஎன் கணவரிடம் கேட்ட போது இறுதி முடிவு இல்லை ரயில் பயணத்தோடு கதை முடிந்து விடும் என்கிறர்கள். குஞ்சம்மாவின் நினைவுகள் தான் கதை என்கிறார்கள்.
கோமதி அரசு March 18, 2016 at 6:48 AM
நீக்கு//என் கணவரிடம் கேட்ட போது இறுதி முடிவு இல்லை ரயில் பயணத்தோடு கதை முடிந்து விடும் என்கிறர்கள். குஞ்சம்மாவின் நினைவுகள் தான் கதை என்கிறார்கள்.//
அப்படித்தான் இருக்க வேண்டும் என நானும் நினைத்தேன். மிக்க நன்றி, மேடம்.- VGK
அவள் வாழ்வு விடியுமா? என்பதை வாசகர் விருப்பத்திற்கே விட்டு விட்டார் போலும் கதை ஆசிரியர்.
பதிலளிநீக்குகோமதி அரசு March 18, 2016 at 6:59 AM
நீக்கு//அவள் வாழ்வு விடியுமா? என்பதை வாசகர் விருப்பத்திற்கே விட்டு விட்டார் போலும் கதை ஆசிரியர்.//
இருக்கலாம். அதுதான் கு.ப.ரா அவர்களின் ஸ்பெஷாலிடி போலத்தெரிகிறது, ஜீவி அவர்களின் எழுத்துக்கள் மூலமும். மிக்க நன்றி - VGK
ரயில் பயணதிற்குப் பிறகும் கதை நீள்கிறது.
நீக்குஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் போய் தந்திச் செய்தி உண்மை என்று தெரிந்து கொள்கிறார்கள்.
ஒரு வழியாக மனத்தில் இருந்த பயம் தீர்ந்தது. திகிலும் தீர்ந்தது.
பிறகு?.. விடிந்து விட்டது. -- என்று கதை முடிகிறது.
என்ன விடிந்து விட்டது?.. யாருக்கு விடிந்து விட்டது என்பதை வாசகர் யோசிப்புக்கு விட்டது தான் இன்றளவும் இலக்கிய ஆய்வார்களால் பேசப்பட்டு வருகிறது. கு.ப.ரா. என்றாலே அவரது 'விடியுமா?' கதை தான் நினைவுக்கு வருகிற மாயம் நிகழ்ந்திருக்கிறது.
நள்ளிரவு சுமார் ஒரு மணிக்கு இரயில் விழுப்புரத்தில் வந்து நிற்கிறது. அங்கு ஓர் அழகிய பணக்காரப் பெண்மணி (நகரத்தார் பெண்மணி) ஏறிக்கொண்டு குஞ்சம்மா அருகே அமர்ந்து கொள்கிறாள். சற்றே ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்தபின், அவள் மூலம் நடந்ததொரு மிகச்சிறிய செயல், குஞ்சம்மாளை சற்றே மன நிம்மதியும், சந்தோஷமும், செளபாக்யமும் அடையச் செய்கிறது.
பதிலளிநீக்குசுப சகுனம் போன்ற இந்த ஒரு நிகழ்வையும் நானே இங்கு சொல்லிவிட விரும்பவில்லை. சஸ்பென்ஸ் கொடுத்துள்ளேன். :)//
நகரத்தார் அம்மா கோவில் பிரசாதமாக குங்குமம் கொடுப்பார்களோ அதனால் செளபாக்யம் நிலைக்கும் என்ற நிம்மதியோ குஞ்சம்மாவிற்கு?
அந்த கால பெண்மணிகள் கணவன் எவ்வளவு கொடுமைக்காரர்களாக இருந்தாலும் அவர் நல்வாழ்வை விரும்பும் தியாகசீலிகள் அல்லவா?
கோமதி அரசு March 18, 2016 at 7:04 AM
நீக்கு//நகரத்தார் அம்மா கோவில் பிரசாதமாக குங்குமம் கொடுப்பார்களோ அதனால் செளபாக்யம் நிலைக்கும் என்ற நிம்மதியோ குஞ்சம்மாவிற்கு?//
தங்களின் யூகமும் அருமை. தன் பக்கத்திலிருந்த ஓலைப்பெட்டியிலிருந்து மணக்கும் மல்லிகைப்பூ சரம் ஒன்றை குஞ்சம்மாளிடம் கொடுக்கிறாள் அந்த மிகவும் அழகான பணக்காரப் பெண்மணி.
குஞ்சம்மாள் மெய்சிலிர்த்துப்போகிறாள். வெகு ஆவலுடன் அந்த மல்லிகைப்பூவை வாங்கித் தன் கண்களில் ஒத்திக்கொண்டு, வெகு ஜாக்கிரதையாகத் தலையில் சூடிக் கொள்கிறாள்.
அம்பாளே அந்தப்பெண் உருவத்தில் வந்து தனக்குப் பூவைக்கொடுத்து ‘கவலைப்படாதே! உன் பூவிற்க்கு ஒருநாளும் குறைவில்லை’ என்று சொன்னதுபோல குஞ்சம்மாளுக்குத் தோன்றுகிறது.:)
//அந்த கால பெண்மணிகள் கணவன் எவ்வளவு கொடுமைக்காரர்களாக இருந்தாலும் அவர் நல்வாழ்வை விரும்பும் தியாகசீலிகள் அல்லவா?//
நிச்சயமாக அப்படித்தான். தங்களின் மீண்டும் வருகைக்கும், அருமையான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK
வாழ்த்துகள். பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் என்று புரிகின்றது.
பதிலளிநீக்குதிருமதி ஆச்சி ஸ்ரீதர் March 18, 2016 at 7:23 AM
நீக்குஅடடா, வாங்கோ ஆச்சி. வணக்கம். என்ன மிகவும் அதிசயமாகவும் அபூர்வமாகவும் இந்தப்பக்கம் வந்துள்ளீர்கள்! இங்கு திருச்சியில் நான்கு நாட்களாக 100 டிகிரிக்கு மேல் நன்கு கொளுத்தும் வெயிலுக்கு, தங்களின் அபூர்வமான வருகையினால் கோடை மழை இன்று கொட்டோ கொட்டெனக் கொட்டினாலும் ஆச்சர்யமே இல்லை. :)
//வாழ்த்துகள். பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் என்று புரிகின்றது.//
மிக்க மகிழ்ச்சி, ஆச்சி. தங்களின் அன்பான வருகைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - பிரியமுள்ள கோபு
ஸார் மீண்டும் வந்துவிட்டேன். நான் மொபைல்ல நெட் யூஎஸ் பண்றேன். ஸோ நீங்க சொல்லி இருக்கும் கீபோர்ட் வசதி இதில் இல்லை. அப்படியும் விடாப்பிடியாக பிடியாக தேடித்தேடிப் ஒரு வழி கண்டு பிடித்து எழுத்துக்களை பெரிதாக்கி ஆனந்தமாக படித்து ரசிக்க முடிந்தது. என்ன வழின்னு சொன்னா உங்களால் புரிந்து கொள்ள முடியுமா தெரியலை. ஆனா வேற யாருக்காவது பயன் படுமேன்னு சொல்லலாம்னு நினைக்கிறேன். கீழ வியும் மையமாக கம்ப்ளீட் ப்ரொஃபல் னுபிட்டு வரதில்லயா அத்துக்கும் மேல வியுவெப்வர்ஷன் அப்படின்னு ஒரு ஆப்ஷன் வரது. அதை கள்ளிக் பண்ணினா கம்ப்யூட்டரில் வருவதுபோல் பதிவு தெரியுது எழுத்துகள் நல்லா பெரிசாக வரது. படிக்க படிக்க சுகானுபவமா இருந்தது. ஸைடு பார்த்து விஷயங்களும் தெளிவாக வரது. எப்படியும் உங்க பதிவை மிஸ் பண்ணிடக்கூடாதுன்னு ஒரு அதிக ஆர்வத்தில் என்னலாமோ பண்ணிடக்கூடாதுன்னு பார்த்தேன். ந. பிச்சமூர்த்தி ஸார், குடும்பத்தவர்களுக்கு.ப. ராஜகோபாலன் ஸார் பற்றிய தகவல்கள் படித்து ரசிக்க முடிந்தது. அந்தக்காலத்திலேயே சகோதரிக்கு மறுமணம் செய்து வைத்தது. அவரின் மனிதாபிமானத்தை புரிந்து கொள்ள ஒரு உதாரணம்தான். இன்னும் என்னவெல்லாம் புதுமையான புரட்சிகளைப்பண்ணி இருப்பாரோன்னு நினைக்கிறேன் தோணுது.
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி... March 18, 2016 at 11:23 AM
நீக்குவாங்கோ, மீண்டும் வருகைக்கு நன்றிகள். சந்தோஷம்.
//ஸார் மீண்டும் வந்துவிட்டேன். நான் மொபைல்ல நெட் யூஎஸ் பண்றேன்.//
அப்போ அதைப் பெரிதாக்கிப் படிப்பதும் சுலபம்தானே. படிக்க வேண்டிய பகுதியில் வலது கை கட்டைவிரல் நுனியையும் ஆள்காட்டி விரல் நுனியையும் ஒன்றாக சேர்த்து வைத்துக்கொண்டு, பிறகு அவற்றை சற்றே அழுத்தி அகட்டி விட்டால் போதுமே. அந்த எழுத்துக்கள் பெரியதாகி விடுமே.
வாட்ஸ்-அப்பில் வரும் படங்களை அகட்டிப் பெரியதாக்கிப் பார்ப்பீர்கள் அல்லவா, அதே மெத்தேடில் இதனையும் பெரியதாக்கிப் படிக்க முடியும் என்பதை அறியவும்.
தாங்கள் ஏதேதோ மேல் அதிக விஷயங்களும் சொல்லியுள்ளீர்கள். அதுபற்றி எனக்கு இப்போது புரியவில்லை. என் மகன்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறேன். மிக்க நன்றி - VGK
இல்லை ஸார் நீங்க சொல்லி இருப்பதுபோல விரல்களால் அகட்டி பிடித்து எழுத்துகளை பெரிதாக்கி பார்க்க முடியல.
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி... March 18, 2016 at 12:55 PM
நீக்கு//இல்லை ஸார் நீங்க சொல்லி இருப்பதுபோல விரல்களால் அகட்டி பிடித்து எழுத்துகளை பெரிதாக்கி பார்க்க முடியல.//
என்னிடம் உள்ள SAMSUNG LATEST SMART PHONE இல் அவ்வாறு அகட்டிப்படிக்க முடிகிறது என்பதால், ஏதோ எனக்குத் தெரிந்ததை உங்களுக்கும் சொன்னேன். இருப்பினும் மிகப்பெரிய திரை உள்ள மேஜை கணினியில் நிம்மதியாக நாம் படித்து மகிழ்வதுபோல எந்த அலைபேசியிலும் வரவே வராதுதான்.
அன்புடன் VGK
என் கணவருக்கு எம்.ஏ படிக்கும் போது சாகித்ய அகடமி வெளியிட்ட சிறுகதை தொகுப்பு பாடமாக வந்ததில் விடியுமா கதையும் ஒன்றாம்.
பதிலளிநீக்குவெகுநாட்கள் முன் தான் எழுதி வைத்து இருந்ததை கிழித்து விட்டார்களாம்.( மோகன்ஜி கதை கூளத்தில் வருவது போல் நிறைய சேமிப்பை கிழித்து விட்டார்களாம்.)
//தங்களின் யூகமும் அருமை. தன் பக்கத்திலிருந்த ஓலைப்பெட்டியிலிருந்து மணக்கும் மல்லிகைப்பூ சரம் ஒன்றை குஞ்சம்மாளிடம் கொடுக்கிறாள் அந்த மிகவும் அழகான பணக்காரப் பெண்மணி. //
அருமை.
சாவின் விளிப்புக்கு போய் திரும்பி வந்த குஞ்சம்மா கண்வர் ஒருவேளை திருந்தலாம் குஞ்சம்மாவை அன்புடன் நடத்தலாம் குஞ்சம்மாவும் மன்னித்து கணவரை ஏற்றுக் கொள்ளலாம். விடியுமா என்று ஆசிரியர் வாசகர் முடிவுக்கு விட்டுவிட்டார்.
ஒரு சிலர் கொடுமை படுத்திய கணவரை மன்னிக்க கூடாது என்றும், ஒரு சிலர் மன்னித்து விடலாம் என்றும் சொல்லலாம்.
கோமதி அரசு March 18, 2016 at 1:55 PM
நீக்குவாங்கோ, வணக்கம். மீண்டும் மீண்டும் தங்களின் வருகை மீண்டும் மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.
//என் கணவருக்கு எம்.ஏ படிக்கும் போது சாகித்ய அகடமி வெளியிட்ட சிறுகதை தொகுப்பு பாடமாக வந்ததில் விடியுமா கதையும் ஒன்றாம். //
ஆஹா, இதையெல்லாம் கல்லூரி நாட்களில் நாம் ஒரு பாடமாகப் படிக்கக் கொடுத்துத்தான் வைத்திருக்க வேண்டும். அவருக்கு அந்த கொடுப்பினை இருந்துள்ளது கேட்க எனக்கும் மகிழ்ச்சியே.
விழுப்புரத்தில் அந்த இரயிலில் நள்ளிரவில் ஏறிய அந்த நகரத்தார் பெண்மணி பற்றிய வர்ணிப்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்ததுடன், நம் பதிவர்கள் ‘ஆச்சி’ + ‘ஹனி மேடம் (தேனம்மை லெக்ஷ்மணன்)’ ஆகிய இருவரையும் உடனடியாக நினைத்துக்கொள்ளவும் வைத்தது. அதற்கு ஏற்றாற்போல நம் ஆச்சி இங்கு அதிசயமாக வருகை தந்து ஓர் பின்னூட்டமும் இட்டு இருக்கிறார்.
அந்த வர்ணனையில் என் கற்பனையும் கொஞ்சம் கலந்து இதோ:-
** மிகவும் லட்சணமான பெண்ணாம். குழந்தையும் பெட்டியுமாக இரயிலில் ஏறுகிறாளாம். வைரத்தோடுகள் + வைர மூக்குத்தி அந்த இருட்டு வேளையில் ’சும்மா’ ஜொலிக்கிறதாம். கழுத்து நிறைய தங்க நகைகளாம். கைநிறைய தங்க வளையல்களாம். அப்படியே அம்பாள் நேரில் பிரசன்னமானதுபோலவே உள்ளதாம். ** :)))))
அன்புடன் VGK
அஹா விஜிகே சார். அந்தக் கதை 100 சிறந்த சிறுகதைகளில்( எஸ்ரா தொகுத்ததில்) இருக்கு. அந்தக் கதையைப் படித்தபோதை விட ஜிவி சாரின் பின்னூட்டத்தில் இங்கே படித்தபோது அருமையாக இருந்தது.
பதிலளிநீக்குந பிச்சமூர்த்தியையும் கு ப ராவையும் படித்தால்தான் சிறுகதை என்பதையே தெரிந்துகொள்ளமுடியும். பிதாமகர்கள். :)
அருமையான புத்தக & ஆசிரியர்கள் அறிமுகத்துக்கு நன்றி விஜிகே சார்.
அதில் வரும் நகரத்தார் பெண்மணி நம்பிக்கை கொடுப்பார். ஆனால் முடிவில் குஞ்சம்மாவின் மனதில் இருந்த பயம் விடியும் தருணம்தான் முக்கியமானது. நாம் எப்படி ஒரு விஷயத்துக்குப் பயப்படுகிறோம் என்றால் அதன் பின் அதை கடக்கும்போது எவ்வளவு துணிவடைகிறோம் என்பதும்தான் கதை. :)
Thenammai Lakshmanan March 18, 2016 at 3:01 PM
நீக்குவாங்கோ ஹனி மேடம், வணக்கம்.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
//அதில் வரும் நகரத்தார் பெண்மணி நம்பிக்கை கொடுப்பார்.//
ஆஹா, அதேபோல இங்கு வருகை தந்துள்ள ஹனியும், ஆச்சியும் நம்பிக்கை கொடுத்துள்ளீர்கள் .... தொடர்ந்து நாங்களும் இந்தத்தொடருக்கு வருகை தந்து கருத்தளிப்போம் என்று :)
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி மேடம்.
பிரியமுள்ள VGK
// நாம் எப்படி ஒரு விஷயத்துக்குப் பயப்படுகிறோம் என்றால் அதன் பின் அதை கடக்கும்போது எவ்வளவு துணிவடைகிறோம் என்பதும்தான் கதை. ://
நீக்குஅந்த 'விடியுமா?' கதையிலிருந்து பெறப்பட்ட அற்புதமான கருத்து.
ஒரு விஷயம் நடக்கிற வரை தான் மனித மனசு கிடந்து அல்லாடும். நடந்து முடிந்து விடும் எல்லாமுமே நடந்ததற்கான தீர்வை உள்ளடக்கிக் கொண்டிருப்பது தான் விசேஷம்.
பின்னூட்டங்கள் ரொம்பவே சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குஸ்ரீராம். March 18, 2016 at 3:22 PM
நீக்கு//பின்னூட்டங்கள் ரொம்பவே சுவாரஸ்யம்.//
வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.
மூலக்கதைகளை எப்படியாவது எங்காவது தேடிக்கண்டு பிடித்துப் படிக்க முடிந்தவர்கள் படித்துக்கொள்வார்கள்.
குறைந்தபக்ஷம் இவர் எழுதி வெளியிட்டுள்ள இந்த நூலையாவது வாங்கிப் படிக்க முடிந்தவர்களும் படித்துக்கொள்வார்கள்.
இதைப்பற்றி நாம் எழுதிவரும் நம் பதிவுகளின் சுவாரஸ்யமே, அதில் அவரவர்கள் மனம் திறந்து சொல்லும் பின்னூட்டங்களில் மட்டும் தானே உள்ளன! :)
அவை சுவாரஸ்யமாக உள்ளன என்பதைத் தங்கள் வாயால் சொல்லி நான் இங்கு இப்போது கேட்பதில் எனக்கும் ஓர் தனி மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. மிக்க நன்றி, ஸ்ரீராம் ஜி. - VGK
தமிழிலக்கியத்தின் அற்புதமான எழுத்தாளர்களின் பெயரைக்கூட அறிந்திருக்க வாய்ப்பில்லாத என் போன்றோர்க்கு அமிர்தமாய் அள்ளித்தருகிறார் ஜீவி சார், அறிமுகத்தோடு அவர்களுடைய படைப்புகளின் பெருமையையும். நூலை வாசிக்கும் ஆர்வத்தை இப்பகுதி ஏராளமாய்த் தூண்டியுள்ளது என்றால் அது மிகையில்லை. இப்படியொரு சீரிய முயற்சியை மேற்கொண்ட தங்களுக்கு மனமார்ந்த நன்றி கோபு சார். பின்னூட்டங்கள் மூலமும் பல கூடுதல் தகவல்களைப் பெற முடிவது இன்னும் சிறப்பு.
பதிலளிநீக்குகீத மஞ்சரி March 19, 2016 at 5:05 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//தமிழிலக்கியத்தின் அற்புதமான எழுத்தாளர்களின் பெயரைக்கூட அறிந்திருக்க வாய்ப்பில்லாத என் போன்றோர்க்கு அமிர்தமாய் அள்ளித்தருகிறார் ஜீவி சார், //
நானும் அதுபோலவே தான் மேடம். 2007 பிப்ரவரியில் திருச்சியிலிருந்து ஜாம்ஷெட்பூருக்கு போக வர இரயிலில் தனியே ஒரு ஏ.ஸி. கோச்சில் பயணிக்க நேர்ந்தது. அதுசமயம் வாசகசாலையிலிருந்து சுஜாதா கதைகளில் சிலவற்றை மட்டும் வாங்கிக்கொண்டு என்னுடன் எடுத்துச்சென்றிருந்தேன். அந்தப்பயணத்தின் மூலம் சுஜாதா எழுதியவற்றில் (அதுவும் ஒரு 5% மட்டும்) தெரிந்து கொண்டுள்ளேன்.
புதுமைப்பித்தன், அகிலன், தீபம் நா. பார்த்தசாரதி, ஜெயகாந்தன், சிவசங்கரி, பாலகுமாரன் போன்ற ஒருசிலரைப்பற்றி மட்டும், பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, அவர்களின் படைப்புகள் எதையும் நான் படித்தது இல்லை.
ஜீவி சார் குறிப்பிட்டுள்ள 37 பிரபலங்களில் சுஜாதாவில் கொஞ்சம் தவிர, மீதி 36 பேர்களின் படைப்புக்களில் எதையும் நான் படித்ததே இல்லை.
//அறிமுகத்தோடு அவர்களுடைய படைப்புகளின் பெருமையையும் நூலை வாசிக்கும் ஆர்வத்தை இப்பகுதி ஏராளமாய்த் தூண்டியுள்ளது என்றால் அது மிகையில்லை.//
ஜீவி சாரின் இந்த ஒரு நூலைப்படித்ததுமே, அவரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அனைத்து 37 பிரபலங்களின் தனித்திறமைகளையும், எழுத்தாற்றல்களையும் பற்றி நன்கு தெரிந்துகொண்ட ஓர் உணர்வு எனக்கு ஏற்பட்டுள்ளது
//இப்படியொரு சீரிய முயற்சியை மேற்கொண்ட தங்களுக்கு மனமார்ந்த நன்றி கோபு சார். பின்னூட்டங்கள் மூலமும் பல கூடுதல் தகவல்களைப் பெற முடிவது இன்னும் சிறப்பு.//
:) தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான, ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
அன்புடன் கோபு
அன்புள்ள திரு V.G.K அவர்களுக்கு வணக்கம். இந்த தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன். பின்னூட்டம் எழுதுவதில் எனக்கு கொஞ்சம் தாமதம் ஆகலாம். மன்னிக்கவும்.
பதிலளிநீக்குதி.தமிழ் இளங்கோ March 20, 2016 at 5:36 AM
நீக்குவாங்கோ சார், வணக்கம்.
//அன்புள்ள திரு V.G.K அவர்களுக்கு வணக்கம். இந்த தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன்.//
மிக்க மகிழ்ச்சி, சார். தாங்கள் நிச்சயம் என் பதிவுகளைப் படித்துவிடுவீர்கள் என்பது எனக்கும் மிக நன்றாகவே தெரியும். சந்தோஷம் :)
//பின்னூட்டம் எழுதுவதில் எனக்கு கொஞ்சம் தாமதம் ஆகலாம். மன்னிக்கவும்.//
அதனால் பரவாயில்லை சார். மெதுவாக எழுதுங்கோ, போதும். அவசரமே ஏதும் இல்லை.
தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்
அன்புடன் VGK
அன்புள்ள திரு V.G.K அவர்களுக்கு வணக்கம். இந்த தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன். பின்னூட்டம் எழுதுவதில் எனக்கு கொஞ்சம் தாமதம் ஆகலாம். மன்னிக்கவும்.
பதிலளிநீக்குதி.தமிழ் இளங்கோ March 20, 2016 at 6:39 AM
நீக்குநேற்று இரவு என் கணினியை SWITCH OFF செய்யாமலேயே நான் தூங்கிப்போய் உள்ளேன். அதனால் தங்களின் பின்னூட்டம் உடனடியாக என்னால் வெளியிடப்படவில்லை. அது ஒழுங்காகப் போச்சோ போகலையோ என்ற சந்தேகத்தில் மீண்டும் அதையே மற்றொரு முறை அனுப்பியிருப்பீர்கள் என நினைக்கிறேன். நேற்று இரவு முழுவதும் நான் ON LINE இல் இருப்பதாகத் தாங்கள் நினைத்திருக்கக்கூடும்.
அதனால் பரவாயில்லை. இன்று காலை 10.30 மணிக்கு மேல்தான் நான் தூங்கி எழுந்திருந்து அனைத்தையும் பப்ளிஷ் கொடுக்க முடிந்துள்ளது என்பதை அறியவும்.
அன்புடன் VGK
ஜீவி சார் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் பலரின் பெயரும் அறிமுகமானதே ஆனால் ஜீவி போன்ற வாசிப்புத் திறனோ நினைவாற்றலோ எனக்கில்லை. ஜீவியின் நூலையும் உங்கள் விமரிசனத்தையும் ஒரு சேரப் படிக்க வேண்டும் ரசனைகளே ஒரு விதம்தான்
பதிலளிநீக்குG.M Balasubramaniam March 20, 2016 at 5:50 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம்.
//ஜீவி சார் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் பலரின் பெயரும் அறிமுகமானதே//
மிகவும் சந்தோஷம். எனக்கு இந்த 37 பிரபலங்களில் அதிகபக்ஷமாக 6 அல்லது 7 பேர்களை மட்டுமே அதுவும் பெயரளவில் மட்டுமே தெரியும். சுஜாதாவின் ஒருசிலவற்றைத் தவிர யாருடைய எழுத்துக்களையும் நான் படித்தது இல்லை. நீங்கள் என்னைவிட மிகவும் மேலாக உள்ளீர்கள், இது விஷயத்தில். சந்தோஷம்.
//ஆனால் ஜீவி போன்ற வாசிப்புத் திறனோ நினைவாற்றலோ எனக்கில்லை.//
இதையெல்லாம் நாம் பிறருடன் ஒப்பிட்டுப் பார்ப்பதில் பயன் ஏதும் இல்லை சார். உங்களிடம்கூட எவ்வளவோ தனித்திறமைகள் ஒளிந்துகொண்டு இருக்கலாம், அது என்னைப்போன்ற சாதாரணமான மற்றவர்களிடம் இல்லாமலும் இருக்கலாம்.
தாங்கள் ஓர் 25 வருடங்களுக்கு முன்பாகவே நம் BHEL இல் Dy. General Manager Rank இல் இருந்து ஓய்வு பெற்றுள்ளீர்கள் என நினைக்கிறேன். தங்களிடம் தனித்திறமை + Technical Knowledge இல்லாமல் இதெல்லாம் எப்படி சாத்தியமாகி இருக்கக்கூடும்?
//ஜீவியின் நூலையும் உங்கள் விமரிசனத்தையும் ஒரு சேரப் படிக்க வேண்டும். ரசனைகளே ஒரு விதம்தான்//
மிக்க மகிழ்ச்சி சார். தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான மனம் திறந்த கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK
குருஜி மேலாக்கா ஸொலி ஸொலிக்குதே ரோஸாபூவுகொத்து சூப்பராகீது...பொறவால குருஜி கீளால ஒங்கட பெயருகிட்டால ஒரு தாமர பூவு புதுசா காட்டினிக. ஏன்ன்ன்ன்ன்.......
பதிலளிநீக்குmru March 21, 2016 at 12:49 PM
நீக்குவாங்கோ முருகு, வணக்கம்மா.
//குருஜி மேலாக்கா ஸொலி ஸொலிக்குதே ரோஸாபூவுகொத்து சூப்பராகீது...//
மிக்க மகிழ்ச்சி. ரோஜாப்பூவாக ஜொலிக்கும் தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, முருகு.
//பொறவால குருஜி கீளால ஒங்கட பெயருகிட்டால ஒரு தாமர பூவு புதுசா காட்டினிக. ஏன்ன்ன்ன்ன்.....//
இதற்கு முன்பாக (02.01.2011 முதல் 31.12.2015 வரை) நான் வெளியிட்டுள்ள அனைத்து 808 பதிவுகளிலும், பின்னூட்டப்பகுதிகளில் அந்த மிக அழகிய தாமரைப்பூ நிறையமுறை மலந்து, ஓர் அழகிய ‘தாமரைத் தடாகம்’ போலவே எனக்குக் காட்சியும் அளித்து மகிழ்ச்சியும் அளித்திருந்தது.
அதனால் அந்த இனிய நினைவலைகளுடன், அதுவே இன்றும் என் பெயரினைத் தாங்கி நிற்பதாக எனக்குள் கற்பனை செய்துகொண்டு, அங்கு நன்றியுடன் நான் அதனைக் காட்டியுள்ளேன்.
தங்களின் அன்பான வருகைக்கும், நியாயமான கேள்விகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், முருகு.
என்றும் அன்புடன் குருஜி கோபு.
பின்னூட்டங்களே ஒரு சிறுகதையைப் படித்தாற்போல் உள்ளது. ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா இருவரின் சிறுகதைகளையும் நிறையப் படித்துள்ளேன். புதுமைப்பித்தன் மட்டும் ஒன்றிரண்டு தான் படிக்கக் கிடைத்தது! விடியுமா கதை படித்த நினைவு லேசாக இருக்கிறது. மணிக்கொடி கதைகள் சேமிப்பு வெளியிட்ட பெரிய புத்தகத்தில் படித்த நினைவு. யு.எஸ்ஸில் ஹூஸ்டன் மீனாக்ஷி கோயில் நூலகத்தில் படித்த நினைவு! சி.சு.செல்லப்பாவின் சுய சரிதையைக் கூட அங்கே தான் படித்தேன். :)
பதிலளிநீக்குGeetha Sambasivam March 21, 2016 at 1:46 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//பின்னூட்டங்களே ஒரு சிறுகதையைப் படித்தாற்போல் உள்ளது.//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! மிகவும் சந்தோஷம்.
//ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா இருவரின் சிறுகதைகளையும் நிறையப் படித்துள்ளேன். புதுமைப்பித்தன் மட்டும் ஒன்றிரண்டு தான் படிக்கக் கிடைத்தது! விடியுமா கதை படித்த நினைவு லேசாக இருக்கிறது. மணிக்கொடி கதைகள் சேமிப்பு வெளியிட்ட பெரிய புத்தகத்தில் படித்த நினைவு. யு.எஸ்ஸில் ஹூஸ்டன் மீனாக்ஷி கோயில் நூலகத்தில் படித்த நினைவு! சி.சு.செல்லப்பாவின் சுய சரிதையைக் கூட அங்கே தான் படித்தேன். :)//
ஆஹா, அனைவரைப் பற்றியும் சரமாரியாக, தாங்கள் எங்கு படித்தீர்கள் என்ற இட விபரங்களுடன்கூடச் சொல்வது என்னை புல்லரிக்க வைக்கிறது.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பல கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். அன்புடன் VGK
நல்ல திறனாய்வு செய்திருக்கிறீர்கள். வருவதற்குக் கொஞ்சம் இல்லை, நிறைய தாமதம் ஆகலாம். :) மற்றபடி உங்களை விட அழகாக எனக்கு விமரிசனம் செய்யத் தெரியாது!
பதிலளிநீக்குGeetha Sambasivam March 21, 2016 at 1:47 PM
நீக்குவாங்கோ மேடம். தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.
//நல்ல திறனாய்வு செய்திருக்கிறீர்கள்.//
:) மிக்க மகிழ்ச்சி மேடம். இதைத்தங்கள் வாயிலாகக் கேட்க தன்யனானேன். :)
//வருவதற்குக் கொஞ்சம் இல்லை, நிறைய தாமதம் ஆகலாம். :)//
நிறைய தாமதம் ஆகட்டும் மேடம். அதனால் என்ன?
//மற்றபடி உங்களை விட அழகாக எனக்கு விமரிசனம் செய்யத் தெரியாது!//
அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ. In fact எனக்கு பிறரின் எழுத்துக்களை விமர்சனமே செய்யத் தெரியாது என்பதே உண்மை.
உங்கள் விமர்சனத் திறமை உங்களுக்குத் தெரியாது. ஆஞ்சநேயருக்கு அவரின் பலம் தெரியாது எனச் சொல்லுவார்கள். அதுபோலத்தான் தங்களின் எழுத்துத் திறமைகளும் தங்களுக்கே தெரியாது.
அது எனக்கும், அன்று என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’களுக்கு நடுவராகவும், இன்று இந்த நூலுக்கு ஆசிரியராகவும் உள்ள ஜீவி சாருக்கும் மட்டுமே தெரிந்த இரகசியங்களாகும்.
மறக்க முடியுமா?
==================
http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html
ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பட்டியலில் தங்களுக்கு ஐந்தாம் இடம்.
-=-=-=-=-
http://gopu1949.blogspot.in/2014/11/part-1-of-4.html
’ஜீவி-வீஜீ’ விருது
-=-=-=-=-
http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html
VGK-31 to VGK-33 HAT-TRICK வெற்றியாளர்
-=-=-=-=-
http://gopu1949.blogspot.in/2014/11/part-3-of-4.html
15 முறை பரிசுகளுடன் ’கீதா விருது’ பெற்றவர்
-=-=-=-=-
http://gopu1949.blogspot.in/2014/09/blog-post_13.html
நடுவர் யார் யூகியுங்கள் போட்டியிலும் வென்றவர்
-=-=-=-=-
அதனால் எழுச்சியுடன் நீங்களும் உங்கள் வலைத்தளத்தினில் உங்கள் பாணியில் விமர்சனம் எழுதுங்கள். படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அன்புடன் கோபு
ஓல்ட் இஸ் கோல்ட்....அருமையான எழுத்தாளர்களைப் பற்றி ஜிவி சார் எழுதியிருப்பதைத் தாங்களும் இங்கு அறிமுகப்படுத்துவது மிகவும் சிறப்பாக இருக்கிறது. தொடர்கின்றோம் சார். தாமதமாகிவிட்டதுவ் வருகைக்கு...
பதிலளிநீக்குThulasidharan V Thillaiakathu March 21, 2016 at 7:15 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//ஓல்ட் இஸ் கோல்ட்....//
:) மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள்
//அருமையான எழுத்தாளர்களைப் பற்றி ஜிவி சார் எழுதியிருப்பதைத் தாங்களும் இங்கு அறிமுகப்படுத்துவது மிகவும் சிறப்பாக இருக்கிறது.//
மிகவும் சந்தோஷம்.
//தொடர்கின்றோம் சார்.//
மிக்க மகிழ்ச்சி.
//தாமதமாகிவிட்டது வருகைக்கு...//
அதனால் என்ன? பரவாயில்லை.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள் - VGK
இவர்களை வாசிப்பேனா என்பது சந்தேகமே. ஜீவியைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.
பதிலளிநீக்குஅப்பாதுரை March 26, 2016 at 11:16 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம்.
//இவர்களை வாசிப்பேனா என்பது சந்தேகமே. ஜீவியைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.//
கரெக்ட். அதே அதே .... தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி, சார். - VGK