என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 14 மார்ச், 2016

ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 1

2
ஸ்ரீராமஜயம்

 

    


ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் துணை

{ இந்தப்பதிவினில் ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய
ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம் இடம்பெற்றுள்ளது }


   

அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். நீண்ட நாட்களுக்குப்பின் தங்கள் அனைவரையும் இந்த என் பதிவின் மூலம் இன்று சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியுள்ளதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

பல்வேறு சொந்தக்காரணங்களாலும், என் கணினியில் அடிக்கடி ஏற்பட்டு வந்த BLOGGER PROBLEMS முதலியவற்றாலும் என் வலைத்தளத்தினையும், பிறர் வலைத்தளங்களையும் என்னால் திறந்து படிக்க முடியாமலும், கருத்தளிக்க முடியாமலும் இருந்து வந்தது. பிறகு சமீபத்தில் ஒருநாள், அந்தப்பிரச்சனை தானாகவே சரியாகி விட்டது. 

இதற்கிடையில் ’பயணங்கள் முடிவதில்லை’ என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவு ஒன்று என் இனிய நண்பர் திருச்சி தி. தமிழ் இளங்கோ அவர்களின் வலைத்தளத்தினில் 28.01.2016 அன்று வெளியிட நேர்ந்தது உங்களில் பலருக்கும் நினைவிருக்கலாம். அதில் என் மறுமொழிகள் உள்பட 127 பின்னூட்டங்கள் உள்ளன. 

இதோ அதற்கான இணைப்பு: 

oooooOooooo

07.02.2016 ஞாயிறன்று மாலை துளசிதளம் வலைப்பதிவரும், தற்சமயம் நியூஸிலாண்டில் வசிப்பவருமான திருமதி. துளசி கோபால் அவர்களை, அவர்களின் கணவருடன் திருச்சி ஸ்ரீரங்கத்தில் நேரில் சந்திக்க நேர்ந்தது. இவரே நான் நேரில் சந்திக்க நேர்ந்த 40வது பதிவராவார். அதுபற்றிய படங்களும் பதிவுகளும், அந்த சந்திப்பில் கலந்துகொண்ட சில பதிவர்களால் வெளியிடப்பட்டிருந்தன. அவைகளுக்கான இணைப்புகள்:




oooooOooooo

அதன்பிறகு, 13.02.2016 அன்று திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் ‘திரு. V.G.K. அவர்களுக்கு ஓர் வேண்டுகோள்’ என்ற தலைப்பில் ஓர் தனிப்பதிவும் வெளியிட்டிருந்தார்கள். 

அதற்கான இணைப்பு: 

அதில் அவரும், பின்னூட்டமிட்டிருந்த பலரும், நான் மீண்டும் வலைத்தளத்தினில் எழுத வேண்டும் என கோரிக்கை விடுத்து விரும்பிக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதில் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு நான் நன்றி கூறி, என் நிலைமைகளை விளக்கி, அவர் மட்டுமல்லாமல், அனைவருமே புரிந்துகொள்ளுமாறு ஒரேயொரு பின்னூட்டமும் கொடுத்திருந்தேன். அதன் முக்கியமான ஒரு பகுதி இதோ:

-=-=-=-=-=-

தற்சமயம் என் இல்லத்திலும், உள்ளத்திலும், உடல்நிலையிலும், என் கணினியின் உடல்நிலையிலும் பல்வேறு நெருக்கடிகளை நான் சந்திக்க வேண்டியுள்ளது. அதனால் என் வலைத்தளத்திலிருந்து நான் சற்றே ஒதுங்கி ஓய்வு எடுத்துக்கொண்டுள்ளேன். என் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் எனக்கு சாதகமாக மாறும்போது, ஒருவேளை நான் மீண்டும் என் வலைத்தளத்தினில் எழுத நேரிடலாம். இப்போதைக்கு அதுபற்றி ஏதும் என்னால் தெளிவாகக் கூற இயலாமல் உள்ளது.

என் மீதுள்ள பிரியத்தினால் அன்புடன் இந்தப்பதிவினை வெளியிட்டுள்ள தங்களுக்கும், அதில் பின்னூட்டங்கள் கொடுத்துள்ள வாசக நண்பர்கள் + என் நலம் விரும்பிகள் அனைவருக்கும் என் இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

என்றும் அன்புடன் VGK / 14.02.2016

-=-=-=-=-=-

இவ்வாறு வலையுலகிலிருந்து சற்றே ஒதுங்கி ஓய்வு எடுத்துவந்த எனக்கு, என் இனிய நண்பரும், என் எழுத்துலக மானஸீக குருநாதருமான திரு. ரிஷபன் அவர்களின் சமீபத்திய வெளியீடான ‘முற்றுப் பெறாத ஓவியங்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலினை முழுவதுமாக ரஸித்துப் படித்து மகிழ முடிந்தது. 

அதைவிட ஆச்சர்யமாக என் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ’ஜீவி’ அவர்களின் சமீபத்திய நூல் வெளியீடு ஒன்றினை, முழுவதுமாக மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும், சுவாரஸ்யமாகப் படித்து மகிழும் வாய்ப்பும் கிட்டியது. 

ஜீவி அவர்களின் இந்த நூல் என்னுள் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தி விட்டதாலும், வாசகர்களும் இன்றைய வலைத்தள எழுத்தாளர்களும் அவசியமாகப் படிக்க வேண்டிய நூல் இது என்று நான் கருதுவதாலும், அதைப்பற்றி தங்களுடன் என்னால் பகிர்ந்துகொள்ளாமல் ஒதுங்கி இருக்க இயலவில்லை. 

எனவே எனக்குள்ள பல்வேறு சொந்தப்பிரச்சனைகள் + கணினியில் அவ்வப்போது ஏற்பட்டு வரும் BLOGGER சோதனைகளையும் தாண்டி, இதுவே இந்தப்புத்தாண்டு 2016-இல் என் வலைத்தளத்தினில் நான் மகிழ்ச்சியுடன் வெளியிடும் முதல் பதிவாகவும் அமைந்துள்ளது என்பதையும் தங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன் தங்கள்
  
(வை. கோபாலகிருஷ்ணன்)



 

’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்.

”கங்கையைச் சொம்புக்குள் அடக்க முடியாதுதான். ஒரு நூற்றாண்டில் தமிழில் எழுதிக்குவித்த ஆயிரக்கணக்கான எழுத்துக் கலைஞர்களில் 37 என முடிவுக்கு வந்தது மிகவும் அநியாயம்தான் என்றாலும் பக்கக் கணக்கு நெருக்கடியில், ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில், தமிழ் எழுத்துலகை வாசித்து அறிய இந்த அளவே சாத்தியமாயிற்று. பேராசிரியர் கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், நவீன இலக்கிய ஜெயமோகன் போன்றோருக்கு தனிப்புத்தகம்தான் போட வேண்டும்” என்கிறார் ஜீவி, தன் முன்னுரையில்.




நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

நூலின் முதல் பக்கத்தில் 
’சந்தியா பதிப்பகம்’ 
வெளியிட்டுள்ளவை

மூத்த எழுத்தாளர் ஜீவியின் படைப்புகள் பல பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. 1958-இல் இவரின் 15வது வயதில் ‘கல்கண்டு’ பத்திரிகையில் இவரின் முதல் கதை பிரசுரமானது. தொடர்ந்து கவிதை, கட்டுரை, சிறுகதை, நெடுங்கதை என்று எழுதுகலையின் எல்லா வகையிலும் எழுதிப் பார்த்தவர் இவர். இன்றும் இணையத்தில் எழுதிக்கொண்டிருப்பவர். ஜீவி கும்பகோணத்துக்காரர். சென்னையில் வசித்து  வரும் இவர் தொலைபேசித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.   


’ஜி. வெங்கடராமன்’,  ’ஜீவி’யானது அந்தக்கால பிரபல எழுத்தாளர் ‘ஆர்வி’யைப் பார்த்து வைத்துக்கொண்டது. ’முதலில் நான் வாசகன்.  அந்த வாசக உள்ளம்தான் என்னையும் எழுத வைத்தது’ என்று இன்றும் வாசகனாய் இருப்பதில் பெருமை கொள்பவர். அதுவே எல்லா காலத்து இலக்கியங்களையும் நேசிப்பவராய் இவரை வைத்திருக்கிறது. இவரில் படிந்து போயிருக்கும் அந்த வாசக உள்ளம்தான் தமிழின் தலைசிறந்த எழுத்துச்சிற்பிகளின் எழுத்தாக்கங்களில் தோய்ந்து இந்த நூலாக உருவெடுத்திருக்கிறது. ஒரு நூற்றாண்டு தமிழ் எழுத்துலகை வலம் வந்த உணர்வையும் நம்மில் ஏற்படுத்துகிறது.

ooooooOoooooo

இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் (ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாகப்) பார்ப்போம்.

இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப் படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும். 

என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)


48 மணி நேர இடைவெளிக்குப் பிறகு 
தொடரும்....


  

இதன் அடுத்த பகுதியில் 
இடம்பெறப்போகும் 
இரு பிரபல எழுத்தாளர்கள்:

 

வெளியீடு: 16.03.2016 பிற்பகல் 3 மணிக்கு.

காணத் தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள் !! 

 



  


74 கருத்துகள்:

  1. தாங்கள் மீண்டும் வந்தமைக்கு ரொம்ப சந்தோஷம் ஐயா....

    ஜீவி ஐயாவின் இந்த நூலை கண்டிப்பாக வாங்கி வாசிக்கிறேன்.

    48 மணி நேர இடைவெளிக்குப் பின் சந்திக்கிறோம்...தங்களின் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொண்டது :).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. R.Umayal Gayathri March 14, 2016 at 2:58 PM

      வாங்கோ, வணக்கம்.

      //தாங்கள் மீண்டும் வந்தமைக்கு ரொம்ப சந்தோஷம் ஐயா....//

      ஆஹா, தங்களின் தங்கமான வரவேற்புக்கு என் நன்றிகள்.

      //ஜீவி ஐயாவின் இந்த நூலை கண்டிப்பாக வாங்கி வாசிக்கிறேன்.//

      மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

      //48 மணி நேர இடைவெளிக்குப் பின் சந்திக்கிறோம்...//

      :)))))))))))) :))))))))))))
      :)))))))))))) :)))))))))))) வாழ்க !

      [ 48 முறை வாழ்த்தியுள்ளேனாக்கும் :) ]

      //தங்களின் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொண்டது :).//

      தங்களைத் தொற்றிக்கொண்டுள்ள என் உற்சாகத்துடன், இந்த என் தொடருக்கே ‘பிள்ளையார் சுழி’ போல முதன் முதலாக மிகுந்த உற்சாகத்துடன் வருகைதந்து பின்னூட்டத்திலும் முதலிடம் பெற்றுள்ளீர்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். மேலும் மேலும் உற்சாகமூட்டக்கூடிய இந்தத்தொடருக்கு தொடர்ச்சியாக வருகை தாருங்கள் எனத் தங்களை நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். - VGK

      நீக்கு
  2. முதலில் தாங்கள் மீண்டும் பதிவுலகத்தில் வந்தமை மகிழ்ச்சி சார்.

    ஜிவி சாரின் புத்தகம் பற்றி அறிந்தோம். தாங்களும் இப்போது அதைக் குறித்த விரிவான தகவல்களும் கொடுத்திருக்கிறீர்கள். ஜீவி சார் பற்றியும் தெரிந்து கொண்டோம். சுவாரஸ்யமாக இருக்கும் என அறிய முடிகிறது. தங்களின் கருத்துகளை அறிய காத்திருக்கிறோம்.

    அடுத்த பதிவிற்குக் காத்திருக்கிறோம் சார்.

    மிக்க நன்றி பகிர்விற்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thulasidharan V Thillaiakathu March14,2016at3:14 PM

      வாங்கோ, வணக்கம்.

      //முதலில் தாங்கள் மீண்டும் பதிவுலகத்தில் வந்தமை மகிழ்ச்சி சார். //

      ஆஹா, தங்களின் தங்கமான வரவேற்புக்கு முதலில் என் நன்றிகள்.

      //ஜீவி சாரின் புத்தகம் பற்றி அறிந்தோம். தாங்களும் இப்போது அதைக் குறித்த விரிவான தகவல்களும் கொடுத்திருக்கிறீர்கள். ஜீவி சார் பற்றியும் தெரிந்து கொண்டோம். சுவாரஸ்யமாக இருக்கும் என அறிய முடிகிறது. தங்களின் கருத்துகளை அறிய காத்திருக்கிறோம். அடுத்த பதிவிற்குக் காத்திருக்கிறோம் சார். மிக்க நன்றி பகிர்விற்கு//

      சுவாரஸ்யமான நூல்தான். மிக்க மகிழ்ச்சி. இதன் தொடர்ச்சியான அடுத்த பதிவு நாளை 16.03.2016 புதன்கிழமை மதியம் 3 மணி சுமாருக்கு வெளியிடப்பட உள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      இந்தத்தொடருக்கு தொடர்ச்சியாக தாங்கள் வருகை தந்து கருத்தளியுங்கள் எனத் தங்களை நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். - VGK

      நீக்கு
  3. தொடர்பகிர்வு. தொடர் விமர்சனம். சபாஷ். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். March 14, 2016 at 3:22 PM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம், வணக்கம்.

      //தொடர்பகிர்வு. தொடர் விமர்சனம். சபாஷ். தொடர்கிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.

      இந்தத்தொடருக்கு தொடர்ச்சியாக தாங்கள் வருகை தந்து கருத்தளியுங்கள் எனத் தங்களை நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். - VGK

      நீக்கு
  4. மிக்க மகிழ்ச்சி
    தொடர்வதற்கும்...தொடர் அதற்கும்
    ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S March 14, 2016 at 3:58 PM

      வாங்கோ, வணக்கம் Mr. Ramani Sir.

      //மிக்க மகிழ்ச்சி தொடர்வதற்கும்... தொடர் அதற்கும்
      ஆவலுடன்...//

      தங்களின் சொல்லாடல் மிகவும் அருமை. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

      இந்தத்தொடருக்கு தொடர்ச்சியாக தாங்கள் வருகை தந்து கருத்தளியுங்கள் எனத் தங்களை நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். - VGK

      நீக்கு
  5. ஜீவியின் நூலை வாங்கிப் படிக்க வேண்டும் இந்த நூல் விமரிசனம் உங்கள் தளத்தில் தொடராக வருவது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. G.M Balasubramaniam March 14, 2016 at 4:56 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //ஜீவியின் நூலை வாங்கிப் படிக்க வேண்டும்.//

      நல்லதோர் எண்ணம் இது. சந்தோஷம் சார்.

      //இந்த நூல் விமரிசனம் உங்கள் தளத்தில் தொடராக வருவது மகிழ்ச்சி.//

      ஜீவி அவர்களுக்கும் தங்களுக்கும் நல்லதோர் பரிச்சயம் இருப்பதாலும், அவர் எழுதியதோர் நூல் பற்றிய என் எண்ணங்களின் வெளிப்பாடு, இந்த என் தொடர் என்பதாலும், தாங்கள் தொடர்ச்சியாக இந்தப்பதிவின் அனைத்துப் பகுதிகளையும் வாசித்து, கருத்தளிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. என் நம்பிக்கை வீண் போகவில்லை.

      //வாழ்த்துக்கள்//

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். - VGK

      நீக்கு
  6. பதில்கள்
    1. பழனி.கந்தசாமி March 14, 2016 at 5:00 PM

      வாங்கோ, வணக்கம்.

      //சந்தோஷம்.//

      சந்தோஷமான தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      இந்திரப்பதவியே தங்களுக்கு இப்போது கிடைத்திருந்தும் இங்கு அடியேனின் பதிவுக்கும் வருகை தந்து ஓர் வரியாவது பின்னூட்டமிட்டுள்ளது எனக்கும் சந்தோஷமாகவே உள்ளது.

      ரம்பா, ஊர்வசிகளுடன் சேர்ந்து தொடர்ந்து வருகை தாருங்கள் ஐயா :) - VGK

      நீக்கு
  7. பதில்கள்
    1. ராமலக்ஷ்மி March 14, 2016 at 5:16 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //நல்ல பகிர்வு.//

      தங்களின் அன்பான வருகைக்கும், ‘நல்ல பகிர்வு’ என்ற நல்ல கருத்துக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம். - VGK

      நீக்கு
  8. ஜிவி சாருக்கு வாழ்த்துகள். தாங்கள் திரும்ப வலைப்பதிவில் தொடர்வதற்கும் மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள் தொடர்கிறோம் சார் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thenammai Lakshmanan March 14, 2016 at 5:30 PM

      வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

      //ஜீவி சாருக்கு வாழ்த்துகள்.//

      சந்தோஷம். :) மிக்க நன்றி.

      //தாங்கள் திரும்ப வலைப்பதிவில் தொடர்வதற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.//

      மிகவும் சந்தோஷம். தங்களின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு, என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      //தொடர்ந்து எழுதுங்கள்.//

      தேன் போன்ற உத்தரவு ! :)

      இந்த ஒரு தொடரினையாவது மொத்தம் இருபது பகுதிகளாகத் தொடர்ந்து எழுதத்தான் நானும் நினைத்துள்ளேன். அதற்கான சங்கல்ப்பம்தான் இந்த முதல் பகுதி.

      //தொடர்கிறோம் சார் :)//

      மிக்க மகிழ்ச்சி மேடம். தொடர்ந்து வாங்கோ, மேடம்.

      பிரியமுள்ள கோபால்

      நீக்கு
  9. ஜி.வி சாருக்கு வாழ்த்துகள் நெருக்கடிகள் இனி வராதிருக்கட்டும் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha M March 14, 2016 at 5:49 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //ஜீ.வி சாருக்கு வாழ்த்துகள்//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம்.

      //நெருக்கடிகள் இனி வராதிருக்கட்டும் சார்.//

      அதுவே எனது பிரார்த்தனைகளும்கூட மேடம். எதுவும் நாம் நினைப்பதுபோல நம் கைகளில் இல்லையே .... என்ன செய்வது? பார்ப்போம். நாம் நல்லதையே நினைப்போம்; நமக்கும் நல்லதே நடக்கட்டும்.

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

      முடிந்தால் இந்தத்தொடரின் மற்ற அனைத்துப் பகுதிகளுக்கும் வருகைதர முயற்சி செய்யுங்கோ, மேடம். - VGK

      நீக்கு

  10. பதிவுலகிற்கு திரும்பவும் சுவையான பதிவுகளைத்தர இருக்கும் தங்களை வருக வருக என இரு கரம் கூப்பி வரவேற்கின்றேன். தற்காலிக ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த தாங்கள் திரும்பவும் வலையுலகிற்கு உடனே அழைத்து வரக் காரணமாய் இருக்கும் திரு ஜீவி அவர்களுக்கு நன்றி! அவரது எழுத்தை தங்களின் நூல் திறனாய்வு மூலம் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி March 14, 2016 at 5:58 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //பதிவுலகிற்கு திரும்பவும் சுவையான பதிவுகளைத்தர இருக்கும் தங்களை வருக வருக என இரு கரம் கூப்பி வரவேற்கின்றேன்.//

      ஆஹா, மிக்க மகிழ்ச்சி சார். தங்களின் இந்த பலமான வரவேற்பு என்னை உச்சி குளிர்ந்து மனம் மகிழச்செய்கிறது.

      //தற்காலிக ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த தாங்கள் திரும்பவும் வலையுலகிற்கு உடனே அழைத்து வரக் காரணமாய் இருக்கும் திரு ஜீவி அவர்களுக்கு நன்றி! //

      ஆமாம் சார், ஜீவி அவர்களின் இந்தத் தரமான நூலே ஓய்விலிருந்த என்னை உடனடியாக தரதரவென்று பதிவுலகுக்கு இழுத்து வந்துள்ளது. அவருக்குத் தங்களுடன் சேர்ந்து இங்கு நானும் என் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

      //அவரது எழுத்தை தங்களின் நூல் திறனாய்வு மூலம் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். //

      மிக்க மகிழ்ச்சி சார். அவரின் இந்த நூல் 264 பக்கங்கள் கொண்டது. அதில் 37 பிரபல எழுத்தாளர்களைப்பற்றி அலசிச் சொல்லியிருக்கிறார். சராசரியாக மிகப்பொடிப்பொடியான எழுத்துக்களில் ஒவ்வொரு பிரபலத்திற்கும் சுமார் ஏழு பக்கங்கள் வீதம் ஒதுக்கி எழுதியுள்ளார்.

      அதை நான் நன்கு ஜூஸாகப் பிழிந்து, ஒவ்வொரு பிரபலத்தைப்பற்றியும் சற்றே தடித்த எழுத்துக்களில் 15-20 வரிகளில் சொல்வதாக உள்ளேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      இந்தத்தொடரின் அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து, தங்களின் அரிய பெரிய கருத்துக்களை பதிவு செய்து, என் பதிவுகளையும் அவரின் நூலினையும் ஒளிரச்செய்யுமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அன்புடன் VGK

      நீக்கு
  11. திரு தமிழ்இளங்கோ ஸார் பக்கம் மற்றவர்கள் நீங்கள் மறுபடியும் எழுதவரவேண்டும் என்று விரும்பி அழைத்தவர்களில் நானும் இருக்கேன்ன்))))))உங்களின் ரிப்ளை
    பின்னூட்டங்கள் பாரத்தேன். ஜி.வி. ஸாரருக்கு நன்றி சொல்லணும். அவர்களின் நூல் அறிமுகத்தை காரணமாக வைத்து நீங்கள் மீண்டும் எழுத வந்ததில் ரொம்ப சந்தோஷமாக உணர்கிறோம். படிப்பது என்பது வாசிப்பது டோல இல்லாமல் ஸ்வாசிப்டதுடெபோல ரசித்து உணர்ந்து படிக்கணும். ஸாரி தமிழ் இன்று தகறாரு பண்ணுது. இந்த பதிவு மூலமாக நல்ல ஸ்வாசிப்பு அனுபவம் கிடைக்கப்போவதை நினைத்து சந்தோஷமாக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... March 14, 2016 at 6:09 PM

      வாங்கோ, வணக்கம்.

      //திரு தமிழ்இளங்கோ ஸார் பக்கம் மற்றவர்கள் நீங்கள் மறுபடியும் எழுதவரவேண்டும் என்று விரும்பி அழைத்தவர்களில் நானும் இருக்கேன். )))))) உங்களின் ரிப்ளை பின்னூட்டங்கள் பாரத்தேன்.//

      என் பதிவுகளில் நீங்கள் இல்லாமலா? இன்று நீங்கள் ஒருவர் மட்டுமே தினமும் என் ஏதாவது ஒரு பதிவினில், பின்னூட்டப்பகுதிகளில், என் தொடர்பு எல்லைக்குள் இருந்து வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

      //ஜீ.வி. ஸாருக்கு நன்றி சொல்லணும்.//

      ஆம். எல்லாப்புகழும் அவருக்கே. நானும் தங்களுடன் சேர்ந்து இங்கு அவருக்கு மீண்டும் என் நன்றிகளைச் சொல்லிக் கொள்கிறேன்.

      //அவர்களின் நூல் அறிமுகத்தை காரணமாக வைத்து நீங்கள் மீண்டும் எழுத வந்ததில் ரொம்ப சந்தோஷமாக உணர்கிறோம்.//

      ஜீவி அவர்களின் இந்தத் தரமான நூலே ஓய்விலிருந்த என்னை உடனடியாக தரதரவென்று பதிவுலகுக்கு இழுத்து வந்துள்ளது. தங்களையும் சந்தோஷமாக உணர வைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி.

      //படிப்பது என்பது ஏதோ வாசிப்பது போல இல்லாமல் ஸ்வாசிப்பது போல ரசித்து உணர்ந்து படிக்கணும். ஸாரி.... தமிழ் இன்று தகராறு பண்ணுது. இந்த பதிவு மூலமாக நல்ல ஸ்வாசிப்பு அனுபவம் கிடைக்கப்போவதை நினைத்து சந்தோஷமாக இருக்கு.//

      -=-=-=-=-

      "வாசிப்பது என்பது சுவாசிப்பது !

      வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள் !!”

      -=-=-=-=-

      என்று என் நெருங்கிய நட்பு வட்டத்தில் ஒருவர் அடிக்கடி என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். அவரை நினைத்து என்னை இப்போது மீண்டும் கண் கலங்கச் செய்துவிட்டீர்கள்.:(

      எனினும், தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      ஒருநாள்விட்டு ஒருநாள் வீதம் வெளியிடப்பட இருக்கும் இந்த என் தொடர் பதிவுக்குத் தொடர்ந்து வருகை தாருங்கள் எனத் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். - VGK

      நீக்கு
  12. நீங்க மீண்டும் எழுத வந்திருப்பது மிகவும் சந்தோஷமான விஷயம். தொடர்ந்து பிஸியாக இதுபோல ஏதாவது பதிவு டோட்டுக்கொண்டே இருக்கவும். உங்க எழுத்துக்கு (என்னையும்) சேர்த்து நிறைய ரசிகர்கள் இருக்காங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆல் இஸ் வெல்....... March 14, 2016 at 6:18 PM

      வாங்கோ, வணக்கம்.

      //நீங்க மீண்டும் எழுத வந்திருப்பது மிகவும் சந்தோஷமான விஷயம்.//

      தங்கள் மூலம் இதைக்கேட்பதே சந்தோஷமான விஷயம்தானே !

      //தொடர்ந்து பிஸியாக இதுபோல ஏதாவது பதிவு போட்டுக்கொண்டே இருக்கவும். உங்க எழுத்துக்கு (என்னையும்) சேர்த்து நிறைய ரசிகர்கள் இருக்காங்க.//

      அது ஏதோ நான் செய்துள்ளதோர் பாக்யம். என் ரசிகர்கள் எல்லோரும் க்ஷேமமாக, செளக்யமாக, சந்தோஷமாக இருக்கட்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன். தாங்கள் உடனே இங்கு பறந்து வந்துள்ளதுதான் எனக்கு ஒரே ஆச்சர்யமாக உள்ளது. :)

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      ஒருநாள்விட்டு ஒருநாள் வீதம் வெளியிடப்பட இருக்கும் இந்த என் தொடர் பதிவுக்குத் தொடர்ந்து தாங்கள் வருகை தரவேண்டும் எனத் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். - VGK

      நீக்கு
  13. Yes me too.
    Interested in reading. Waiting
    Waiting to read.
    viji

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. viji March 14, 2016 at 7:26 PM

      வாங்கோ விஜி, வணக்கம்மா.

      நல்லபடியா காரடையான் நோன்பு ஆச்சா! நான் அனுப்பியிருந்த இணைப்பில் உள்ள செய்முறைப்படி கொழுக்கட்டைகள் மிகவும் ருசியாகச் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எங்காத்திலும் அதுபோலவேதான் செய்தோம். அந்தக் குறிப்பிட்ட பதிவரின் அந்தக் குறிப்பிட்ட பதிவிலும் தங்களின் உடனடிப் பின்னூட்டத்தினைக் கண்டு மகிழ்ந்தேன். :)

      //Yes me too. Interested in reading. Waiting Waiting to read. - viji//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, விஜி.

      ஒருநாள்விட்டு ஒருநாள் வீதம் வெளியிடப்பட இருக்கும் இந்த என் தொடர் பதிவுக்குத் தொடர்ந்து தாங்கள் வருகை தரவேண்டும் எனத் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். - பிரியமுள்ள கோபு

      நீக்கு
  14. ஆஹா! உங்களிடமிருந்து ஒரு தொடர் என்றறியும் போது மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது. நீங்கள் வந்தவுடன் பதிவுலகமே களை கட்டிவிட்டதே! இப்புத்தகத்தை ரசிக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. உங்கள் பார்வையில் நூலை மீண்டும் ஒரு முறை ரசிக்கக் காத்திருக்கிறேன். நன்றி! நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞா. கலையரசி March 14, 2016 at 7:49 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //ஆஹா! உங்களிடமிருந்து ஒரு தொடர் என்றறியும் போது மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது.//

      எனக்கும்கூட இப்போது இது ஏதோ ஒருவிதத்தில், மகிழ்ச்சியாகவேதான் இருக்கிறது.

      //நீங்கள் வந்தவுடன் பதிவுலகமே களை கட்டிவிட்டதே! //

      அடாடா, திருச்சியில் நேற்றும் இன்றும் 100 டிகிரிக்கு மேல் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. அதற்காக திருச்சி மலைக்கோட்டை சைஸுக்கு இவ்வளவு பெரிய ஐஸ் கட்டியைத் தூக்கி என் தலைமேல் வைத்து விட்டீர்களே ! நியாயமா?

      இதனால் எனக்கு இப்போ கடுங்குளிர் என்னை நடுங்க வைக்கிறது. குளிருக்கு பயந்து கடும் கம்பளியைப் போர்த்திக்கொண்டுள்ளேன். :)

      //இப்புத்தகத்தை ரசிக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. //

      அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்ததோடு மட்டுமல்லாமல் இந்த நூலைப்பற்றி உலகிலேயே முதன்முதலாக அறிமுகம் செய்த பதிவர் என்ற பெருமையும், வாய்ப்பும்கூட தங்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளதில் என் மகிழ்ச்சி இரட்டிப்பாகி உள்ளது, மேடம். பாராட்டுகள். வாழ்த்துகள்.

      //உங்கள் பார்வையில் நூலை மீண்டும் ஒரு முறை ரசிக்கக் காத்திருக்கிறேன். நன்றி!//

      ஆஹா, தன்யனானேன். மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள்!//

      சந்தோஷம். மிக்க நன்றி.

      தங்களின் தட்டாத வருகைக்கும், தரமான தங்கமான விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள், மேடம்.

      ஒருநாள்விட்டு ஒருநாள் வீதம் வெளியிடப்பட இருக்கும் இந்த என் தொடர் பதிவுக்குத் தொடர்ந்து, தாங்கள் வருகை தரவேண்டும் எனத் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். - நன்றியுடன் கோபு.

      நீக்கு
  15. மிக மிக ஆனந்தமாக இருக்கிறது நீண்ட நாளைக்குப்பின்னர் தங்கள் பதிவைக் காண்பதற்கு. மிக நல்ல நூல் ஒன்றைப் பற்றி எனும்போது இன்னும் மகிழ்ச்சியாக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கே. பி. ஜனா... March 14, 2016 at 8:35 PM

      வாங்கோ சார், வணக்கம்.

      //மிக மிக ஆனந்தமாக இருக்கிறது நீண்ட நாளைக்குப்பின்னர் தங்கள் பதிவைக் காண்பதற்கு. மிக நல்ல நூல் ஒன்றைப் பற்றி எனும்போது இன்னும் மகிழ்ச்சியாக...//

      தங்களின் அன்பு வருகைக்கும், மிக மிக ஆனந்தமான + வழக்கத்திற்கும் மாறான நீண்ட கருத்துரைக்கும் ’மிக நல்ல நூல்’ என்று இன்னும் மகிழ்ச்சியுடன் எடுத்துச் சொல்லியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      ஒருநாள்விட்டு ஒருநாள் வீதம் வெளியிடப்பட இருக்கும் இந்த என் தொடர் பதிவு, எழுத்துலகப் பிரபலங்கள் பலரைப் பற்றி பேசப்போவதாக இருப்பதால், இன்றைய தரம் வாய்ந்த பிரபல எழுத்தாளரான தாங்கள் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்துச் சொல்ல வேண்டுமாய் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். - VGK

      நீக்கு
  16. மகிழ்ச்சியான என் வரவேற்பு.

    நூலின் சில பகுதிகளைத் (தொகுத்துத்) தர இருக்கிறீர்கள்.
    சுவாரஸ்யமாயிருக்கும் என்று நம்புகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் March 14, 2016 at 9:02 PM

      வாங்கோ நண்பரே, வணக்கம்.

      //மகிழ்ச்சியான என் வரவேற்பு.//

      தங்களின் இந்த வரவேற்பு எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது, நண்பரே.

      //நூலின் சில பகுதிகளைத் (தொகுத்துத்) தர இருக்கிறீர்கள்.//

      நூல் கண்டு மிகவும் பெரியது. அதுவும் இடையே கலர் கலராகவும் கவர்ச்சியாகவும்கூட உள்ளது. என்னால் முடிந்த அளவுக்கு அதன் முக்கியப்பகுதிகளில் ஏதும் விட்டுப்போகாமல், நூலின் நடுவே சிக்கு சிடுக்கு ஏற்பட்டுவிடாமல், தாங்கள் பட்டம்விட (படித்து மகிழ) தரலாம் என்று நினைத்துள்ளேன்.

      //சுவாரஸ்யமாயிருக்கும் என்று நம்புகிறேன்...//

      நூலை எழுதி வெளியிட்டுள்ளவரோ எழுத்துலகிலும், விமர்சனங்களிலும், பலரின் எழுத்துக்களை அலசி பின்னூட்டமிடுவதிலும் ஓர் ஜாம்பவான்.

      அதுதவிர நாம் நடத்திய நம் சிறுகதை விமர்சனப் போட்டிகளில் 40 வாரங்கள் தொடர்ச்சியாக நடுவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டு தன் முழுத்திறமைகளையும் நமக்கு நன்கு உணர்த்திய பெருமைக்குரியவர். இவ்வாறெல்லாம் இருக்கும்போது சுவாரஸ்யத்திற்கு குறைச்சலே இருக்காது என நீங்கள் கட்டாயம் நம்பித்தான் ஆக வேண்டும். :)

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. இதன் அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வாருங்கள் .... நண்பரே. - அன்புடன் VGK

      நீக்கு
  17. மீண்டும் எழுத வந்து இருப்பது மகிழ்ச்சி தரும் விஷயம். நானும் நீண்ட நாட்களாக இணையம் பக்கம் வரவில்லை. நீங்கள் கொடுத்துள்ள பதிவுகளை படிக்க வில்லை. படிக்க வேண்டும் அனைத்தையும். ஜீவிசார் நூல் விமர்சனம் படிக்க தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு March 14, 2016 at 9:23 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //மீண்டும் எழுத வந்து இருப்பது மகிழ்ச்சி தரும் விஷயம்.//

      அதுபோல நேர்ந்துள்ளதில் எனக்கும் மனசுக்கு ஓர் ஆறுதல் + மகிழ்ச்சியே.

      //நானும் நீண்ட நாட்களாக இணையம் பக்கம் வரவில்லை. நீங்கள் கொடுத்துள்ள பதிவுகளை படிக்க வில்லை. படிக்க வேண்டும் அனைத்தையும்.//

      என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால் என்ன? மெதுவாக நேரம் கிடைக்கும்போது படியுங்கோ, போதும்.

      //ஜீவிசார் நூல் விமர்சனம் படிக்க தொடர்கிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி. தாங்கள் இந்த என் தொடர் பதிவினைத் தொடர்ந்து படிக்கப்போவது, என்னைவிட நம் ஜீவி சாரை மேலும் மகிழ்விக்கக்கூடும். அதற்காகவாவது தொடர்ந்து வாங்கோ மேடம். மிக்க நன்றி, மேடம்.- VGK

      நீக்கு
  18. மறுபடியும் நீங்கள் எழுத வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் March 14, 2016 at 9:43 PM

      வாங்கோ மேடம். வணக்கம் மேடம்.

      //மறுபடியும் நீங்கள் எழுத வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது!!//

      அதுபோல நேர்ந்துள்ளதில் எனக்கும் மனசுக்கு ஓர் ஆறுதல் + மகிழ்ச்சியே.

      தங்களின் அன்பான வருகைக்கும், மகிழ்ச்சியுடன் கூடிய பின்னூட்டத்திற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      முடிந்தால் இந்தத்தொடரின் மற்ற அனைத்துப் பகுதிகளுக்கும் வருகைதர முயற்சி செய்யுங்கோ, மேடம்.

      பெரும்பாலும் தங்களுக்கும் தெரிந்திருக்கக்கூடிய பிரபல எழுத்தாளர்களைப்பற்றிய நூல் அறிமுகம் என்பதால், தங்களுக்கும் இது நிச்சயமாகப் பிடிக்கும் என நான் நம்புகிறேன். - அன்புடன் VGK

      நீக்கு
  19. பதில்கள்
    1. Jeevalingam Yarlpavanan Kasirajalingam
      March 14, 2016 at 9:59 PM

      //சிறந்த பகிர்வு//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      நீக்கு
  20. எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் வலையுலக வேந்தரே! தங்கள் எழுத்தை மீண்டும் கண்டு மகிழ்ச்சியடைகிறோம். ஜீவியின் நூலை விரைவில் நானும் பெறுவேன். நல்ல நூலின் அறிமுகத்திற்கு நன்றி. தொடர்ந்து தங்கள் வலையுலகில் நான் இருப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். இறைவன் தங்களுக்கு எல்லா நலனும் ஆரோக்கியமும் வழங்குவானாக. - இராய செல்லப்பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Chellappa Yagyaswamy March 14, 2016 at 10:45 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் வலையுலக வேந்தரே! //

      அடடா, வலையுலக வேந்தரா????? You too !!!!! :)

      ’எல்லாம் நல்லபடியாக நடக்கும்’ - அசரீரி போன்ற இந்த இனிய சொற்கள் தந்தமைக்கு என் நன்றிகள், சார்.

      //தங்கள் எழுத்தை மீண்டும் கண்டு மகிழ்ச்சியடைகிறோம். //

      தங்களின் இந்த மகிழ்ச்சியில் நான் தன்யனானேன்.

      //ஜீவியின் நூலை விரைவில் நானும் பெறுவேன்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //நல்ல நூலின் அறிமுகத்திற்கு நன்றி. தொடர்ந்து தங்கள் வலையுலகில் நான் இருப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.//

      தங்களின் இந்த உறுதி .... அதுபோதும் எனக்கு. தாங்கள் இருந்தால் எனக்கு யானை பலம் ஏற்படும். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

      //இறைவன் தங்களுக்கு எல்லா நலனும் ஆரோக்கியமும் வழங்குவானாக. - இராய செல்லப்பா.//

      தங்களின் அன்பான அபூர்வமான வருகை ஆச்சர்யம் அளிக்கிறது. தங்களின் இனிய சொற்கள், சோர்ந்து போயுள்ள என் மனதுக்கு மிகவும் ஹிதம் அளிக்கின்றன. மிக்க நன்றி, சார்.

      தொடர்ந்து வாருங்கள். அன்புடன் VGK

      நீக்கு
  21. பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் March 15, 2016 at 8:06 AM

      //மிகவும் மகிழ்ச்சி ஐயா...//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      நீக்கு
  22. மீண்டும் தங்களது பதிவுகளைக் காணும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது..

    என்றென்றும் அம்பாள் துணையிருந்து காத்தருள்வாளாக!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜூ March 15, 2016 at 8:40 AM

      வாங்கோ பிரதர், வணக்கம்.

      //மீண்டும் தங்களது பதிவுகளைக் காணும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது..//

      பல்வேறு மனச் சோர்வுகளுக்கு இடையே, இதுபோல நான் ஒரு தொடர் பதிவிட நேர்ந்துள்ளது, சற்றே என் மனதுக்கு ஆறுதல் தரும் மகிழ்ச்சியாகவே என்னாலும் உணர முடிகிறது.

      //என்றென்றும் அம்பாள் துணையிருந்து காத்தருள்வாளாக!..//

      தங்களின் இந்த இனிய சொற்கள், மனக்காயங்களை நீக்கும் மாமருந்தாகவும் ஹிதமளிப்பதாகவும் உள்ளன. தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், பிரதர்.

      இந்த என் தொடரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தொடர்ந்து வருகை தாருங்கள், பிரதர். - அன்புடன் VGK

      நீக்கு
  23. ஜீவி சாரின் இந்தப் புத்தகத்தை வாங்கி வாசித்துவிட்டுக் கருத்துக்களைப் பகிர்கிறேன். உங்கள் விமரிசனம் சிறப்பாக அமையும். அதற்கு என் முன் கூட்டிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam March 15, 2016 at 10:08 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //ஜீவி சாரின் இந்தப் புத்தகத்தை வாங்கி வாசித்துவிட்டுக் கருத்துக்களைப் பகிர்கிறேன்.//

      ஆஹா, ’எதா செளகர்யம்’ என்பார்கள். அதுபோல தங்கள் செளகர்யம் எப்படியோ அப்படியே செய்யுங்கோ.

      //உங்கள் விமரிசனம் சிறப்பாக அமையும். அதற்கு என் முன் கூட்டிய வாழ்த்துகள்.//

      ஆஹா, காதுக்கு இனிமையான நல்ல வார்த்தைகளை நயமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - VGK

      நீக்கு
  24. வை.கோ சார்! எப்படி இருக்கிறீர்கள்? ஜீ.வி சாரின் புத்தகத்தை வாங்கி விடுவேன். அலைபேசியில் ஜி.வீ சார் இந்தப் புத்தகம் குறித்து நிறையவே சொன்னார். அவர் எழுத்தைப் போலவே அவர் குரலும் மென்மையானது. நான் படித்து என் கருத்துக்களை பதிவாகவே எழுதுவதாய் சொன்னேன். உங்கள் பார்வையில் மேலும் பார்க்க ஆவலாய் உள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோகன்ஜி March 15, 2016 at 11:27 AM

      வாங்கோ ஜி, வணக்கம்.

      //வை.கோ சார்! எப்படி இருக்கிறீர்கள்?//

      கடவுள் கிருபையால் இதுவரை நல்லாவே இருக்கிறேன்.

      //ஜீ.வி சாரின் புத்தகத்தை வாங்கி விடுவேன்.//

      அப்படியா, மிக்க மகிழ்ச்சி.

      //அலைபேசியில் ஜி.வீ சார் இந்தப் புத்தகம் குறித்து நிறையவே சொன்னார். அவர் எழுத்தைப் போலவே அவர் குரலும் மென்மையானது.//

      வெரி குட். குரலில் மென்மையானவர் + எழுத்தில் மேன்மையானவர் என்பதில் எனக்கும் ஐயமில்லை.

      //நான் படித்து என் கருத்துக்களை பதிவாகவே எழுதுவதாய் சொன்னேன்.//

      அச்சா, பஹூத் அச்சா. அப்படியே செய்யுங்கோ.

      //உங்கள் பார்வையில் மேலும் பார்க்க ஆவலாய் உள்ளேன்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ஜி. தொடர்ந்து வாருங்கள் ஜி. - அன்புடன் VGK

      நீக்கு
  25. உங்களின் எழுத்துகளை ஆருவமுடன் எதிர்பார்க்கும் ரசிகை.வாங்க. நிறைய நிறைய வாஷயங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிப்பிக்குள் முத்து. March 15, 2016 at 2:41 PM

      வாங்கோ, வணக்கம்.

      ‘சிப்பிக்குள் முத்து’ முத்தான சத்தான பெயராகத்தான் உள்ளது. வாழ்த்துகள். என் வலைத்தளத்தில் தங்களின் முதல் வருகைக்கு முதலில் என் நன்றிகள்.

      //உங்களின் எழுத்துகளை ஆர்வமுடன் எதிர்பார்க்கும் ரசிகை.வாங்க.//

      ஆஹா, இதைக்கேட்கவே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
      தங்களின் இந்த ஆர்வத்திற்கு என் நன்றிகள்.

      //நிறைய நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.//

      ஆகட்டும். முயற்சிக்கிறேன்.

      14.03.2016 முதல் 21.04.2016 வரை, ஒருநாள்விட்டு ஒருநாள் வீதம் வெளியிடப்பட இருக்கும் இந்த என் தொடர் பதிவுக்குத் தொடர்ந்து, தாங்களும் வருகை தாருங்கள்.

      தாங்கள் வலையுலகிற்கு புதிதாக இருப்பதால் இந்த என் பதிவில் வலதுபுறம் ஓரமாக 380 Followers களின் ஸ்டாம்ப் சைஸ் புகைப்படங்களில் சில தெரிகின்றன அல்லவா. அதன் மேலேயுள்ள Join this Site என்பதை க்ளிக் செய்து, அது கேட்கும் சில மிகச் சுலபமான கேள்விகளுக்கு பதில் கொடுத்துவிட்டு, தாங்களும் என் 381வது Follower ஆக ஆகிக்கொள்ளுங்கள். அப்போதுதான் என் புதிய பதிவுகள் வெளியாகும் போது தங்களின் டேஷ் போர்டில் அவை அவ்வப்போது காட்சியளிக்கும்.

      என் எழுத்துக்களின் ரசிகை என்று தாங்கள் சொல்லியிருப்பதால் மட்டுமே, இந்த ஒரு இரகசியத்தைத் தங்களுக்கு இங்கு தெரிவித்துள்ளேன்.:) - VGK

      நீக்கு
  26. மீண்டும் வருகைக்கு நன்றி& சந்தோஷம். உங்க பதிவு என்றாலே சுவாரசியமான விஷயங்கள் நிறைய கிடைக்கும். வாங்க விளங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. srini vasan March 15, 2016 at 2:54 PM

      வாங்கோ, வணக்கம்.

      //மீண்டும் வருகைக்கு நன்றி & சந்தோஷம். உங்க பதிவு என்றாலே சுவாரசியமான விஷயங்கள் நிறைய கிடைக்கும். வாங்க விளங்க.//

      மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      14.03.2016 முதல் 21.04.2016 வரை, ஒருநாள்விட்டு ஒருநாள் வீதம் வெளியிடப்பட இருக்கும் இந்த என் தொடர் பதிவுக்குத் தொடர்ந்து, தாங்களும் வருகை தாருங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.- VGK

      நீக்கு
  27. வாங்கஸார். ரியலி ரொம்ப சந்தோஷமாக இருக்கு. படிப்பு அனுபவம் நிறைய இருப்பவர்களால்தான் இந்த ஃபீலிங்ஸ புரிந்து கொள்ள முடியும்.புதிய சுவாரசியமான விஷயங்களுக்காக ஆர்வமுடன் வெயிடிங்க்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ராப்தம் March 15, 2016 at 3:01 PM

      வாங்கோ ஸார், வணக்கம்

      //வாங்க ஸார். ரியலி ரொம்ப சந்தோஷமாக இருக்கு. படிப்பு அனுபவம் நிறைய இருப்பவர்களால்தான் இந்த ஃபீலிங்ஸ புரிந்து கொள்ள முடியும்.புதிய சுவாரசியமான விஷயங்களுக்காக ஆர்வமுடன் வெயிடிங்க்.//

      தங்களின் அன்பான அபூர்வமான வருகைக்கும்,அழகான புரிதலுடன் கூடிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      14.03.2016 முதல் 21.04.2016 வரை, ஒருநாள்விட்டு ஒருநாள் வீதம் வெளியிடப்பட இருக்கும் இந்த என் தொடர் பதிவுக்குத் தொடர்ந்து, தாங்களும் வருகை தாருங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.- அன்புடன் VGK

      நீக்கு
  28. ஜீவி சாரின் நூலறிமுகத் தொடர் வழியே தங்களை மீண்டும் பதிவுலகில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி. எப்படியோ ப்ளாக்கர் பிரச்சனை தானாகவே சரியானதிலும் மகிழ்ச்சி. தொடர்ந்துவரும் பதிவுகளுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி March 15, 2016 at 5:41 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //ஜீவி சாரின் நூலறிமுகத் தொடர் வழியே தங்களை மீண்டும் பதிவுலகில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி. எப்படியோ ப்ளாக்கர் பிரச்சனை தானாகவே சரியானதிலும் மகிழ்ச்சி. தொடர்ந்துவரும் பதிவுகளுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான, ஆத்மார்த்தமான, ஆர்வத்துடன் கூடிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். இந்த என் தொடர் முடியும்வரை தொடர்ந்து வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  29. வலையில் மீண்டும் காண்பது மகிழ்ச்சி தொடருங்கள் உங்கள் பார்வையில் ஜீவியின் நூலினை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிமரம் March 15, 2016 at 8:40 PM

      வாங்கோ நேசன் சார், வணக்கம்.

      //வலையில் மீண்டும் காண்பது மகிழ்ச்சி. தொடருங்கள் உங்கள் பார்வையில் ஜீவியின் நூலினை.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      14.03.2016 முதல் 21.04.2016 வரை, ஒருநாள்விட்டு ஒருநாள் வீதம் வெளியிடப்பட இருக்கும் இந்த என் தொடர் பதிவுக்குத் தொடர்ந்து, தாங்களும் வருகை தாருங்கள். - அன்புடன் VGK

      நீக்கு
  30. மீண்டும் ஓர் உற்சாக பதிவோடு வலையுலகம் திரும்பியமைக்கு வாழ்த்துக்கள்! தொடருங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ‘தளிர்’ சுரேஷ் March 15, 2016 at 9:40 PM

      வாங்கோ சுரேஷ், வணக்கம்.

      //மீண்டும் ஓர் உற்சாக பதிவோடு வலையுலகம் திரும்பியமைக்கு வாழ்த்துக்கள்! தொடருங்கள்! நன்றி!//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      14.03.2016 முதல் 21.04.2016 வரை, ஒருநாள்விட்டு ஒருநாள் வீதம் வெளியிடப்பட இருக்கும் இந்த என் தொடர் பதிவுக்குத் தொடர்ந்து, தாங்களும் வருகை தாருங்கள். - VGK

      நீக்கு
  31. ஆகா! ஜீவி புத்தகம் வெளியிட்டிருக்கிறாரா.. எத்தனை சுவாரசியமான தலைப்பு! நிறைய எதிர்பார்க்க வைக்கிறது. நூல் அறிமுகம் செய்தமைக்கு நன்றி. உடல் நலம் சிறக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாதுரை March 16, 2016 at 12:01 AM

      வாங்கோ சார், வணக்கம்.

      //ஆகா! ஜீவி புத்தகம் வெளியிட்டிருக்கிறாரா..//

      அப்படித்தான் போலிருக்கு :)

      //எத்தனை சுவாரசியமான தலைப்பு!//

      அதானே !

      //நிறைய எதிர்பார்க்க வைக்கிறது. நூல் அறிமுகம் செய்தமைக்கு நன்றி.//

      நூலின் மேல் அட்டை பற்றிய அறிமுகம் தான் இந்த முதல் பதிவினில் என்னால் செய்யப்பட்டுள்ளது. உள்ளே உள்ள சரக்குகள் பற்றிய அறிமுகம் இனி அடுத்த பதிவினில் இருந்தே ஆரம்பமாக உள்ளன.

      //உடல் நலம் சிறக்க வேண்டுகிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      தங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்வளிக்கிறது.

      14.03.2016 முதல் 21.04.2016 வரை, ஒருநாள்விட்டு ஒருநாள் வீதம் வெளியிடப்பட இருக்கும் இந்த என் தொடர் பதிவுக்குத் தொடர்ந்து, தாங்களும் வருகை தாருங்கள் .... கருத்தளியுங்கள். தங்கள் கருத்துக்கு எப்போதுமே ஓர் தனிச் சிறப்பிடம் உண்டு என எனக்கும் நம் ஜீவி சாருக்கும் நன்றாகவே தெரியும். ஆதலால் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
      அன்புடன் VGK

      நீக்கு
  32. அன்புள்ள கோபு சார்,

    வணக்கம்.

    சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' என்னும் எனது நூலை தமிழ் இணைய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியும் விமரிசித்தும் தொடர்ச்சியாக பதிவுகள் இடக்ப்போகிற்றிர்கள் என்னும் தகவல் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பல்வேறு அசெளகரியங்களுக்கு இடையேயும் இந்தப் பணியை நீங்கள் மேறிகொண்டிருப்பது புத்தகத்தை வாசித்த உங்கள் வாசிப்பனுபத்தையும் அதுபற்றி எழுத வேண்டும்
    என்கிற ஆவலையும் தங்கள் அன்பையும் தெரிவித்தது.

    இந்தத் தொடர்பதிவுகளை வாசிக்கும் இணைய நண்பர்கள் நூல் பற்றியும், இந்த நூலில் எடுத்தாளப்பட்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்கள் பற்றியும் தெரிந்து கொள்வதில் ஏதாவது மேலதிகத் தகவல்கள் வேண்டினும் அல்லது ஐயங்கள் ஏற்படினும் அதுபற்றி தெரிவிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். தங்கள் அன்புக்கு நன்றி, கோபு சார்.

    மிக்க அன்புடன்,
    ஜீவி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி March 16, 2016 at 11:11 AM

      //அன்புள்ள கோபு சார், வணக்கம்.//

      வாங்கோ சார், நமஸ்காரங்கள், வணக்கம்.

      //சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' என்னும் எனது நூலை தமிழ் இணைய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியும் விமரிசித்தும் தொடர்ச்சியாக பதிவுகள் இடப்போகிறீர்கள் என்னும் தகவல் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.//

      தங்களின் சிரத்தையுடன் கூடிய கடும் உழைப்பில் உருவாகியுள்ள இந்த அருமையானதோர் நூலினை நான் வாசிக்க நேர்ந்தது என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லணும் சார்.

      அதைப்பற்றி தமிழ் இணைய வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் சற்றே சுருக்கமாகவும், அதே சமயம் சற்றே விரிவாகவும் ஏதோ எனக்குத் தெரிந்த முறையில், தெரிந்த வகையில், என் சிற்றறிவுக்கு எட்டியவரை, அறிமுகம் செய்யப்போவது நான் செய்ததோர் பாக்யம் என்றே நினைக்கிறேன்.

      மற்றபடி இதனை ஓர் முழு விமர்சனம் என்றெல்லாம் என்னால் கூறிக்கொள்ள இயலாது. தமிழில் நாகரீகமாக எழுதுதல், மனதில் வாங்கிக்கொண்டு வாசித்தல், வித்யாசமான கோணத்தில் கருத்தளித்தல், நுட்பமாக விமர்சித்தல் போன்ற அனைத்திலும் கரைகண்டவராக இன்று என் கண்களுக்குக் காட்சியளிக்கும் ஒரே பதிவரான தங்களின் நூலினைப்போய் விமர்சிக்கும் அளவுக்கெல்லாம் எனக்கு அனுபவமோ அறிவோ போதாது. அதனால் இந்த என் தொடரினை தங்கள் நூலினைப்பற்றிய ஓர் புகழுரையாக மட்டுமே தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

      இருப்பினும் என் இந்தத் தொடரின் நிறைவுப்பகுதியில் மட்டும் (பகுதி-20) என் மனதில் தோன்றிய ஒருசில நிறை-குறைகளை மனம் திறந்து கொஞ்சமாக எழுதியுள்ளேன்.

      >>>>>

      நீக்கு
    2. கோபு >>>>> ஜீவி (2)

      //பல்வேறு அசெளகரியங்களுக்கு இடையேயும் இந்தப் பணியை நீங்கள் மேற்கொண்டிருப்பது புத்தகத்தை வாசித்த உங்கள் வாசிப்பனுபத்தையும் அதுபற்றி எழுத வேண்டும் என்கிற ஆவலையும் தங்கள் அன்பையும் தெரிவித்தது.//

      ஆமாம் சார். இந்த என் தொடரினை நான் சில நாட்களுக்கு முன்பாகவேகூட வெளியிடத் துவங்கத்தான் நினைத்திருந்தேன். அதற்கு தயாராகவும் என்னை ஆக்கிக்கொண்டிருந்தேன்.

      ஆனால் பல்வேறு எதிர்பாராத நிகழ்வுகளாலும், அதனால் எனக்குள் ஏற்பட்டிருந்த சொல்ல இயலாத சோகங்களாலும் சற்றே இதனை வெளியிடுவதை நான் ஒத்திப்போடும்படியாக ஆகிவிட்டது.

      அதனால் தங்களின் இந்த ஆகச்சிறந்த நூலினைப்பற்றிய என் அறிமுகம் என்பது, எனக்கு வலையுலகில் முதலிடம் பெற்றுத்தராமல், இரண்டாமிடத்தை மட்டுமே பெற்றுத்தந்துள்ளது.

      அதனால் பரவாயில்லை. எப்படியோ இந்த ஒரு தொடர் வெளியீட்டினால், துயரத்தில் ஆழ்ந்திருந்த எனக்கு ஓர் மன மாற்றத்தைத் (Mind Diversion) தந்துள்ளதில் எனக்கும் மகிழ்ச்சி + ஆறுதல் மட்டுமே.

      இதில் முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ள நம் ‘ஊஞ்சல்’ வலைப்பதிவர் திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கு என் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றிகளையும் இங்கு மீண்டும் பதிவு செய்துகொள்கிறேன்.

      >>>>>

      நீக்கு
    3. கோபு >>>>> ஜீவி (3)

      //இந்தத் தொடர்பதிவுகளை வாசிக்கும் இணைய நண்பர்கள் நூல் பற்றியும், இந்த நூலில் எடுத்தாளப்பட்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்கள் பற்றியும் தெரிந்து கொள்வதில் ஏதாவது மேலதிகத் தகவல்கள் வேண்டினும் அல்லது ஐயங்கள் ஏற்படினும் அதுபற்றி தெரிவிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.//

      நம் இணைய வாசகர்களுக்கு, இதற்கு ஒரு வாய்ப்புத்தர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தால் மட்டுமே, இந்த என் தொடர் வெளியீடுகளின் ஒவ்வொரு பகுதிக்கும் இடையே 48 மணி நேர இடைவெளி கொடுத்துள்ளேன். அவர்களில் சிலராவது இந்த அரிய பெரிய வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு பயனடைவார்கள் என நம்புகிறேன்.

      >>>>>

      நீக்கு
    4. கோபு >>>>> ஜீவி (4)

      //தங்கள் அன்புக்கு நன்றி, கோபு சார். மிக்க அன்புடன், ஜீவி//

      தங்களின் இந்த அற்புதமான நூலினை அறிமுகம் செய்யும் பாக்யத்தால் என் வலைப்பக்கம் அடுத்த 38 நாட்களுக்கும் ஒளிர்ந்து மிளிரப்போவது நிச்சயம். அதற்கு நான்தான் தங்களுக்கு என் நன்றிகளைச் சொல்ல வேண்டும்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  33. அன்புள்ள V.G.K.அவர்களுக்கு வணக்கம். உங்கள் பதிவினில் எனது பெயரையும், எனது வலைத்தளம் பற்றியும் குறிப்பிட்டமைக்கு நன்றி. நீங்கள் மீண்டும் உங்கள் வலைப்பதிவினில் எழுத வந்தமைக்கு எனது மகிழ்ச்சியும் நன்றியும். உங்கள் வாசர் வட்டத்தின் வரவேற்பினை அவரவர் பின்னூட்டங்கள் மூலம் அறிய முடிகிறது.

    உங்களது இந்த பதிவை வழக்கம் போல, எனது டேஷ் போர்டில் வெளியான அன்றே படித்து விட்டேன். நீங்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்த ஜீவியின் இந்த நூலை நானும் வாங்கி படித்துக் கொண்டு இருக்கிறேன். அப்பாவின் உடல்நிலை, மருத்துவ மனைக்கு அவரை அழைத்து செல்லுதல் போன்ற அலைச்சல் காரணமாக ஜீவியின் நூலைப் பற்றிய எனது விமர்சனம் தள்ளிப் போகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ March 16, 2016 at 9:35 PM

      //அன்புள்ள V.G.K.அவர்களுக்கு வணக்கம்.//

      வாங்கோ சார், வணக்கம்.

      //உங்கள் பதிவினில் எனது பெயரையும், எனது வலைத்தளம் பற்றியும் குறிப்பிட்டமைக்கு நன்றி.//

      அடடா, நமக்குள் நன்றியெல்லாம் எதற்கு சார்? தாங்கள் என்னைப்பற்றியும் என் வலைத்தளத்தினைப் பற்றியும் தங்கள் வலைத்தளத்தில் இதுவரை எவ்வளவோ முறை எழுதியுள்ளீர்கள். அதனுடன் ஒப்பிட்டால் இது மிகவும் தம்மாத்தூண்டுதான். அதுவும் இவையெல்லாம் மிகவும் அவசியமாகச் சொல்ல வேண்டியவைகள் அல்லவா, சார்!

      //நீங்கள் மீண்டும் உங்கள் வலைப்பதிவினில் எழுத வந்தமைக்கு எனது மகிழ்ச்சியும் நன்றியும்.//

      ஏதோ அதுபோல ஒரு சூழ்நிலை உருவாகிவிட்டது. எனக்கும் இதில் பெரும் மகிழ்ச்சியும், சற்றே மன ஆறுதலும் கிடைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

      //உங்கள் வாசகர் வட்டத்தின் வரவேற்பினை அவரவர் பின்னூட்டங்கள் மூலம் அறிய முடிகிறது.//

      வாசகர் வட்டத்தின் வரவேற்பும் பின்னூட்டங்களும் மட்டுமே என் போன்றவர்களுக்கு உயிர் மூச்சாக உள்ளது.

      //உங்களது இந்த பதிவை வழக்கம் போல, எனது டேஷ் போர்டில் வெளியான அன்றே படித்து விட்டேன்.//

      சந்தோஷம், சார்.

      //நீங்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்த ஜீவியின் இந்த நூலை நானும் வாங்கி படித்துக் கொண்டு இருக்கிறேன்.//

      தெரியும். மிக மிக சந்தோஷம், சார்.

      //அப்பாவின் உடல்நிலை, மருத்துவ மனைக்கு அவரை அழைத்து செல்லுதல் போன்ற அலைச்சல் காரணமாக ஜீவியின் நூலைப் பற்றிய எனது விமர்சனம் தள்ளிப் போகிறது.//

      நேரம் கிடைக்கையில் மெதுவாகப் பொறுமையாகப் படித்துவிட்டு, தங்களின் தனிப்பாணியில் விமர்சனம் எழுதுங்கோ, சார். ஆவலுடன் நானும் அதனை ஒருநாள் எதிர்பார்க்கிறேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். அன்புடன் VGK

      நீக்கு
    2. தமிழ் இளங்கோ சார்! தங்கள் பின்னூட்டம் பார்த்து நெகிழ்ச்சியாக இருந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் விமரிசனம் எழுதிக் கொள்ளலாம். அப்பாவைப் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவே முக்கியம். -- ஜீவி

      நீக்கு
  34. குருஜி கும்பிட்டுகிடுதேன். நீங்க மொதகா ஸ்ரீ ராஜராஜேஸுவரி அம்மனை கும்பிட்டுபோட்டு மறுக்கா பதிவு போட வந்து போட்டீக. நானு ஒங்கள கும்பிட்டுகிட்டு கமண்டு போட " வெரசா" )))))) ஓடி வந்துபிட்டன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru March 21, 2016 at 12:44 PM

      //குருஜி கும்பிட்டுகிடுதேன்.//

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //நீங்க மொதகா ஸ்ரீ ராஜராஜேஸுவரி அம்மனை கும்பிட்டுபோட்டு மறுக்கா பதிவு போட வந்து போட்டீக.//

      ’ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள்’ அது என்ன, என்னால் லேஸில் மறக்கக்கூடிய பெயரா? பதிவுலகிலும் என் பல்வேறு வெற்றிகளுக்குப் பின்னால் மறைந்துள்ள தெய்வாம்சம் அவர்கள் மட்டும் தானே!

      //நானு ஒங்கள கும்பிட்டுகிட்டு கமண்டு போட " வெரசா" )))))) ஓடி வந்துபிட்டன்.//

      மிக்க மகிழ்ச்சி, முருகு. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி, முருகு. பார்ப்போம். - அன்புடன் குருஜி கோபு.

      நீக்கு
  35. பதிவுக்கு வாழ்த்துக்கள் வை.கோ அவர்களே. உங்கள் பதிவுகளை பலர் எதிர்பார்க்கிறார்கள். ஜீ.வீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Shakthiprabha April 2, 2016 at 2:12 PM

      வாங்கோ ஷக்தி, வணக்கம்மா, நலம் தானே? தங்களின் அன்பான வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

      //பதிவுக்கு வாழ்த்துக்கள் வை.கோ அவர்களே. உங்கள் பதிவுகளை பலர் எதிர்பார்க்கிறார்கள். ஜீ.வீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்!//

      நீண்ட நாட்களுக்குப்பின் என் பதிவினில் தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஷக்தி.

      தங்களால் முடியுமானால் இந்த ஒரு தொடருக்கு மட்டும், அனைத்துப்பகுதிகளுக்கும் வருகை தந்து கருத்தளிக்கவும்.

      இந்தத்தொடருக்கான மொத்தம் 20 பகுதிகளில் இதுவரை 10 பகுதிகள் வெளியாகியுள்ளன. ஒரு நாள்விட்டு ஒருநாள் வீதம் 21.04.2016 மட்டும் இந்தத்தொடர் வெளியாக உள்ளது. தங்கள் செளகர்யப்படி மட்டுமே. இதில் என் கட்டாயமோ வற்புருத்தலோ ஏதும் இல்லை.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு