About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, March 18, 2016

ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 3



’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன்  ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.




நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள்,  செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி.

இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.  



3) 'மணிக்கொடி'
பி.எஸ். ராமையா
[பக்கம் 26 முதல் 29 வரை]

 

’மணிக்கொடி’யின் முதல் இதழ் பார்த்து ராமையா சொக்கிப்போனார். அந்தப்பத்திரிகையில் பணியாற்ற வேண்டுமென்கிற ஆசையில் பத்திரிகை அலுவலகத்திற்கு வந்து தமது ஆசையை உரிமையாளர் ஸ்ரீநிவாசனிடம் தெரிவிக்கிறார். ராமையாவுக்கு பத்திரிகைக்கு விளம்பரம் சேகரிக்கும் வேலை கிடைக்கிறது. எந்த வேலையானாலும் சரி, இந்தப் பத்திரிகைக்கு ஏதாவது ஒரு வகையில் உழைக்கவேண்டுமென்கிற உள்ளக்கிடக்கையில் ஒப்புக்கொள்கிறார் ராமையா.

’நீடாமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் மாதிரி’ என்று தஞ்சைப்பகுதியில் அந்தக்காலத்தில் ஒரு வழக்கு மொழி உண்டு. அந்த மாதிரியான சின்ன ரயில் நிலையங்களில் ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர்தான் பணிக்கு இருப்பவராய் இருக்கும். டிக்கெட் கொடுப்பதும் அவரே, வெளியேறும் பயணிகளிடம் டிக்கெட் கலெக்ட் செய்வதும் அவரே, பாயிண்ட்ஸ்மேனும் அவரே. அந்த ஸ்டேஷன்மாஸ்டர் மாதிரி, எழுத, பிழைதிருத்த, பேப்பர் வாங்க, தபால் நிலையம் செல்ல, ஸ்டாம்ப் ஒட்டி பார்ஸல் கட்ட என்று ராமையா அந்தப் பத்திரிகைக்கு சகலமும் ஆகிறார். விழிப்பிலும், தூக்கத்திலும் ராமையாவுக்கு மணிக்கொடியே மனசு பூராவும் வியாபித்து அந்தப் பத்திரிகைக்காகத்தான் பிறப்பெடுத்திருக்கிறோம் என்கிறதான நினைப்பு மேலோங்குகிறது.  

'மணிக்கொடி’ பி.எஸ். ராமையா அவர்களை நீடாமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் மாதிரி என வேடிக்கையாக ஒப்பிட்டுச் சொல்கிறார் ஜீவி. சுதந்திரப் போராட்ட வீரரான இவரைப்பற்றிய மேலும்  சுவாரஸ்யமான பல தகவல்கள் ஜீவியின் நூலில் உள்ளன.


ஆனந்த விகடன் போட்டியில் பரிசுபெற்ற சமூக சீர்திருத்த புரட்சிக்கதையான ‘மலரும் மணமும்’ பி.எஸ். ராமையா எழுதியதே. 1936ல் மணிக்கொடியில் இவர் எழுதியுள்ள ‘கார்னிவல்’ என்ற கதை பற்றியும், ’போட்டிக் கதை’ என்ற தலைப்பில் இவர் எழுதியுள்ள சிறுகதை பற்றியும் ஜீவி புகழ்ந்து சொல்லியுள்ளார். 

பி.எஸ். ராமையாவின் மிகச்சிறந்த நாடக ஆக்கங்களான ’தேரோட்டி மகன்’ ‘பூவிலங்கு’ ‘மல்லியம் மங்களம்’ ‘பாஞ்சாலி சபதம்’ என்பவற்றின் சிறப்புக்களையும் ஜீவி மறக்காமல் நமக்கு நினைவூட்டுகிறார். திரைப்பட இயக்குனர் ஸ்ரீதர் கைவண்ணத்தில் உருவான ‘போலீஸ்காரன் மகள்’ திரைப்படமே பி.எஸ். ராமையாவின் வெற்றி கண்ட நாடகமே என்கிறார் ஜீவி. ‘இந்த மன்றத்தில் .... ஓடிவரும் .... இளம் தென்றலைக் கேட்கின்றேன்... என்ற புகழ்பெற்ற இனிமையான பாடல் இடம்பெற்ற படம் இது என்பதையும் ஜீவி நமக்கு நினைவூட்டத் தவறவில்லை. 



4) புதுப்பாதை அமைத்த 
புதுமைப்பித்தன்
[பக்கம் 30 முதல் 35 வரை]





எதுபற்றியும் ஊன்றி கவனித்து அதுபற்றி தன்னில் பதிந்ததை அல்லது அதுபற்றி படித்துப் பிடித்ததை கதைகளாக வடித்துவிடும் துடிதுடிப்பு புதுமைப்பித்தனின் எழுத்துக்களில் தெரிகிறது. அவர் தரும் கதைகளின் முடிவும் பளீரென்று மின்னல் வெட்டாய் நிகழ்ந்து இதற்குமேல் விவரிக்க என்ன இருக்கிறது என்ற உணர்வையும் தோற்றுவிக்கும் என்கிறார் ஜீவி.

அதற்கு உதாரணமாக ‘பொன்னகரம்’ ‘ஒருநாள் கழித்து’ கல்கி அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’ [கலைமகளில் வெளியானது]; ‘சாப விமோசனம்’; ‘உணர்ச்சியின் அடிமைகள்’; ‘கயிற்றரவு’; ‘காஞ்சனை’; ‘மனித யந்திரம்’; ‘கபடாபுரம்’ போன்ற பலகதைகளை எடுத்துக்கொண்டு அலசி ஆராய்ந்து அவற்றில் உள்ள தனித்தன்மைகளை தனக்கே உரித்தான பாணியில் சிலாகித்துச் சொல்லியுள்ளார் ஜீவி. 


ஒவ்வொன்றையும் படிக்கப்படிக்க வெகு சுவாரஸ்யமாக உள்ளது.




இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும். 

என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்



  

இதன் அடுத்த பகுதியில் 
இடம்பெறப்போகும் 
இரு பிரபல எழுத்தாளர்கள்:

 


 வெளியீடு: 20.03.2016 பிற்பகல் 3 மணிக்கு.

காணத் தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள் !! 

 

63 comments:

  1. எங்கள் ப்ளாக்கில் 'மணிக்கொடி காலம்' என்று பி எஸ் ராமையா பற்றி பதிவிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது. நல்ல பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம். March 18, 2016 at 3:16 PM

      வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.

      //எங்கள் ப்ளாக்கில் 'மணிக்கொடி காலம்' என்று பி எஸ் ராமையா பற்றி பதிவிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது. நல்ல பகிர்வு.//

      எங்கள் ப்ளாக்கில் அது ('மணிக்) கொடி கட்டிப் பறந்த காலமாக இருக்குமோ என்னவோ :)

      தங்களின் அன்பான வருகைக்கும், இனிய நினைவுகளுடன் கூடிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்ரீராம். - vgk

      Delete
  2. Replies
    1. பழனி.கந்தசாமிMarch 18, 2016 at 3:34 PM

      //ரசித்தேன்.//

      வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - vgk

      Delete
  3. மணிக்கொடி பி.எஸ். ராமையா அவர்களைப் பற்றி அறிந்தேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலன் March 18, 2016 at 5:20 PM

      //மணிக்கொடி பி.எஸ். ராமையா அவர்களைப் பற்றி அறிந்தேன்... நன்றி...//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - vgk

      Delete

  4. மணிக்கொடி பி.எஸ்.ராமையா புதுமைப்பித்தன் அவர்கள் பற்றியும் எனது அண்ணன் மூலம் (அவரும் ஒரு எழுத்தாளர்) 1957 ஆம் ஆண்டிலேயே கேள்விப்பட்டிருக்கிறேன்.
    நீடாமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் மாதிரி என்ற சொல்லாடலை மணிக்கொடி பத்திரிக்கையில் எல்லா பணிகளையும் செய்த திரு பி.எஸ்.ராமையா அவர்கள் பணியோடு ஒப்பிட்ட திரு ஜீ.வி. அவர்களின் எழுத்தை இரசித்தேன். எங்கள் பக்கம் அதையே ‘ஓராசிரியர் பள்ளி போல’ என்பார்கள்.

    திரு புதுமைப்பித்தன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞர் என்பதற்காக மட்டுமல்ல. அவர் எங்கள் ஊரில் பிறந்தவர் என்பதற்காகவும் தான். அவரது தந்தையார் எங்கள் ஊரான விருத்தாசலத்தில் பணி புரிந்தபோது புதுமைப்பித்தன் பிறந்ததால் அவருக்கு விருத்தாசலம் என்றே பெயரிட்டனர் என்பார்கள். அவரது ‘கடவுளும் கந்தசாமியும், கயிற்றறவு, கபாடபுரம் போன்ற கதைகளை 1957 ஆம் ஆண்டிலேயே வாசித்து அவரது இரசிகனானேன். அவரைப்பற்றி திரு ஜீ.வி அவர்கள் என்ன எழுதியிருக்கிறார் என்பதை அறிய அவரது நூலை வாங்கி படிக்கவேண்டும் ஆவல் எழுகிறது.

    திரு ஜீ.வி அவர்களின் படைப்பை சுருக்கி அதன் சாராம்சத்தை தங்கள் பாணியில் தந்தமைக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வே.நடனசபாபதி March 18, 2016 at 5:34 PM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //மணிக்கொடி பி.எஸ்.ராமையா புதுமைப்பித்தன் அவர்கள் பற்றியும் எனது அண்ணன் மூலம் (அவரும் ஒரு எழுத்தாளர்) 1957 ஆம் ஆண்டிலேயே கேள்விப்பட்டிருக்கிறேன். //

      ஆஹா, இதைக்கேட்கவே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. 1957 .... அப்போது நான் 7 வயதுப் பையனாக மட்டுமே இருந்திருப்பேன். :)

      //நீடாமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் மாதிரி என்ற சொல்லாடலை மணிக்கொடி பத்திரிக்கையில் எல்லா பணிகளையும் செய்த திரு பி.எஸ்.ராமையா அவர்கள் பணியோடு ஒப்பிட்ட திரு ஜீ.வி. அவர்களின் எழுத்தை இரசித்தேன். எங்கள் பக்கம் அதையே ‘ஓராசிரியர் பள்ளி போல’ என்பார்கள்.//

      ஆம். இதுபோல ’ஒன் மேன் ஆபீஸ்’ பல உண்டுதான். சில போஸ்ட் ஆபீஸ்களும் இதுபோல செயல்பட்டு வந்ததை நானே சமீபத்தில்கூட பார்த்தது உண்டு.

      {ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி ஜங்ஷன் போன்ற சற்றே பெரிய இரயில்வே ஸ்டேஷன்களில், வண்டி வந்து நின்றதும், பயணிகளுக்கு தாகத்திற்கு அருந்த, குடிநீர் தருவதற்காகவே ஒருசிலரை பணியில் நியமித்திருப்பார்களாம். இப்போது போல காசு கொடுத்து வாங்கும் மினரல் வாட்டர் பாட்டில்கள் ஏதும் வராத காலம் அது. கழுத்தில் நீர் நிரம்பிய ஒரு பானை போன்ற தகர டிரம்மைக்கட்டிக்கொண்டு, நிறைய அலுமினிய டம்ளர்களையும் கையில் வைத்துக்கொண்டு, சிலர் இந்த பிறருக்கு தாக சாந்தியளிக்கும் புனிதப் பணியில் மும்முரமாக ஈடுபடுவார்களாம். நான் சின்னப்பையனாக இருந்தபோது, அதுபோன்ற பணியில் இருந்தவர் எங்கள் வீட்டருகே ஒருவர் குடியிருந்தார். பள்ளிப்படிப்பே படிக்காத, அபார சம்சாரியான அவர், ’தான் ஒரு இரயில்வே ஊழியர் ... கவர்ண்மெண்ட் சர்வண்ட் ஆக்கும்’ என மிகப் பெருமையாகவும், கெளரவமாகவும் பிறரிடம் அடிக்கடி ஓயாமல் சொல்லிக்கொண்டே இருப்பார். இதை அடிக்கடி கேட்டு சலித்துப்போன என் அப்பா, என்னிடம் ஒருநாள் கிண்டலாகச் சொன்னார்: “இரயில்வேயில் இவருக்கு என்ன வேலை தெரியுமா? இரயில் நின்றால் மட்டுமே இவர் இங்குமங்கும் ஓடி ஓடி வேலை செய்ய வேண்டும் .... இரயில் ஓடினால் இவர் நிற்க வேண்டும்” என்று. அது எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.}

      //திரு. புதுமைப்பித்தன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞர் என்பதற்காக மட்டுமல்ல. அவர் எங்கள் ஊரில் பிறந்தவர் என்பதற்காகவும் தான். அவரது தந்தையார் எங்கள் ஊரான விருத்தாசலத்தில் பணி புரிந்தபோது புதுமைப்பித்தன் பிறந்ததால் அவருக்கு விருத்தாசலம் என்றே பெயரிட்டனர் என்பார்கள்.//

      ஆஹா, நீங்களும் விருத்தாசலமா! பிரபலமான ஒருவர் நம் ஊர்க்காரர் என்றால் அவர்மேல் நமக்கு ஒரு தனி பாசம் இருக்கத்தான் செய்யும். மிக்க மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.

      //அவரது ‘கடவுளும் கந்தசாமியும், கயிற்றறவு, கபாடபுரம் போன்ற கதைகளை 1957 ஆம் ஆண்டிலேயே வாசித்து அவரது இரசிகனானேன்.//

      இதையும் கேட்க எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

      //அவரைப்பற்றி திரு ஜீ.வி அவர்கள் என்ன எழுதியிருக்கிறார் என்பதை அறிய அவரது நூலை வாங்கி படிக்கவேண்டும் ஆவல் எழுகிறது. //

      தங்களுக்கு இதுபோல எழுந்துள்ள ஆவலுக்கு மிக்க மகிழ்ச்சி, சார்.

      //திரு. ஜீ.வி அவர்களின் படைப்பை சுருக்கி அதன் சாராம்சத்தை தங்கள் பாணியில் தந்தமைக்கு பாராட்டுக்கள்! //

      தங்கள் அன்பான தொடர் வருகைக்கும், அருமையான விரிவான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார் - VGK

      Delete
  5. சார் தங்களின் முகவரி தரலாமா,,?
    எனது நூலை அனுப்பி வைக்கிறேன்/

    ReplyDelete
    Replies
    1. Vimalan Perali March 18, 2016 at 8:11 PM

      வாங்கோ, வணக்கம்.

      //சார் தங்களின் முகவரி தரலாமா..?
      எனது நூலை அனுப்பி வைக்கிறேன்//

      தங்களின் அன்புக்கு நன்றி.

      ’இச்சி மரம் சொன்ன கதை' என்ற தலைப்பினில் சமீபத்தில் தங்களின் ஆறாவது சிறுகதைத்தொகுப்பு நூல் வெளியிடப்பட்டுள்ளதை அறிந்தேன். மனமார்ந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். - VGK

      Delete
  6. நல்ல அறிமுகம்,வாழ்த்துக்கள்/

    ReplyDelete
    Replies
    1. Vimalan Perali March 18, 2016 at 8:12 PM

      //நல்ல அறிமுகம், வாழ்த்துக்கள்//

      தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK

      Delete
  7. நல்லதோர் அறிமுகம். மூன்று பகுதிகளையும் ஒரு சேர இன்று தான் படிக்க முடிந்தது.

    ReplyDelete
    Replies
    1. வெங்கட் நாகராஜ் March 19, 2016 at 7:47 AM

      வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

      //நல்லதோர் அறிமுகம். மூன்று பகுதிகளையும் ஒரு சேர இன்று தான் படிக்க முடிந்தது.//

      அதனால் பரவாயில்லை. மிகவும் சந்தோஷம் + மிக்க நன்றி.

      நானும் தங்கள் பதிவுகளில் நிறைய படித்து பின்னூட்டமிட வேண்டியுள்ளது. ஒரு மாதமாகவே Pending Items நிறைய சேர்ந்துவிட்டன. நானும் சோர்ந்து போய்விட்டேன். - அன்புடன் VGK

      Delete
  8. திரு பி.எஸ்.ராமையா ஸார் திரு புதுமைப்பித்தன் ஸார் அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... March 19, 2016 at 10:08 AM

      வாங்கோ, வணக்கம்.

      //திரு பி.எஸ்.ராமையா ஸார் திரு புதுமைப்பித்தன் ஸார் அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  9. இன்றும் இரண்டு பிரபல எழுத்தாளர்களைத்தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி

    ReplyDelete
    Replies
    1. srini vasan March 19, 2016 at 10:18 AM

      வாங்கோ, வணக்கம்.

      //இன்றும் இரண்டு பிரபல எழுத்தாளர்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  10. நல்ல அறிமுகங்களுக்கு நன்றி. பின்னூட்டங்களின் மூலமாக நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் March 19, 2016 at 10:21 AM

      வாங்கோ, வணக்கம்.

      //நல்ல அறிமுகங்களுக்கு நன்றி.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      //பின்னூட்டங்களின் மூலமாக நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.//

      ஆமாம், சில சமயங்களில் பின்னூட்டங்களில் உள்ள விஷயங்கள் பதிவில் உள்ள விஷயங்களையே தூக்கி சாப்பிட்டுவிடும்தான். :)

      அதுதான் என் வலைத்தளத்தில் உள்ள ஸ்பெஷாலிடி என்று நிறைய பேர்கள் ஏற்கனவே என்னிடம் சொல்லியுள்ளார்கள்.

      இதோ நம் Mr. RAMANI Sir அவர்களின் சமீபத்திய இந்தப்பதிவையும் அதில் உள்ள பின்னூட்டங்களையும் முடிந்தால் பொறுமையாகப் படித்துப்பாருங்கோ.

      http://yaathoramani.blogspot.in/2016/02/blog-post_80.html

      அதிலும் குறிப்பாக திருவாளர்கள்: (1) கே.பி.ஜனா (2) ஸ்ரீராம் (3) அ.முஹம்மது நிஜாமுத்தீன் (4) S.P. செந்தில்குமார் + திருமதிகள் (5) பூந்தளிர் (6) வல்லிசிம்ஹன் (7) ஷக்திப்ரபா (8) தேனம்மை லெக்ஷ்மணன் (9) கீதமஞ்சரி ஆகியோர் கொடுத்துள்ள பின்னூட்டங்களையும், அந்தப்பதிவுக்கு நான் கொடுத்துள்ள நிறைய பின்னூட்டங்களையும் வாசிக்கத் தவறாதீர்கள். :)

      அன்புடன் VGK

      Delete
    2. (1) கே. பி. ஜனா... said...

      பதிவுலகத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதம் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்களின் பதிவுகள்.
      February 7, 2016 at 12:41 AM

      Delete
    3. (2) ஸ்ரீராம். said...

      பின்னூட்டங்களின் எண்ணிக்கையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். அதுவே முக்கிய காரணம் என்று சொல்ல முடியாது.

      வைகோ ஸார் பதிவுகள் தனிரகம். தமிழ்மண இணைப்பு போன்றவை இல்லாமலேயே புகழ் பெற்றவர் அவர். நண்பர்கள் ஜாஸ்தி. இத்தனைக்கும் மற்றவர்களின் பதிவுகளில் அவர் சமீப காலமாகத்தான் அதிகம் பின்னூட்டம் போடுகிறார். மற்றவர்கள் பதிவுக்கு அவர் வராத நேரங்களிலும் அவருக்கு வாசகர் எண்ணிக்கைக் குறையவில்லை என்பது சிறப்பு.

      Delete
    4. (3) அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

      திரு. வி. ஜி. கே. அவர்களின் பதிவுகளில் பின்னூட்டங்களின் எண்ணிக்கையைவிட என்னைக் கவர்ந்த அம்சம், பின்னூட்டங்களின் சுவாரஸ்யத் தன்மைதான். February 7, 2016 at 12:48 AM

      Delete
    5. (4) Thulasidharan V Thillaiakathu said...

      ஆம் வைகோ சாருக்குத், தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் அவர் இல்லை என்றாலும், பின்னூட்டங்கள் வருவது தனிச் சிறப்புதான். அதுவே வலையுலகில் அவரது பெருமையைச் சொல்லிவிடுகின்றது.

      தற்போது அவரது ஊக்கம் நிறைந்த பின்னூட்டங்கள் எங்களுக்கு மிகவும் உற்சாகம் அளிக்கின்றது என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

      Delete
    6. (5) S.P.SENTHIL KUMAR said...

      வை கோ அய்யாவின் பின்னூட்டங்களே தனித்தன்மை வாய்ந்தவை. மிக ஆழமான பின்னூட்டமாக இருக்கும். அதிலும் சில வரிகளைக் குறிப்பிட்டு அதை விமர்சித்திருப்பார். அதுவும் அருமையாக இருக்கும். அவரது சாதனையை யாரும் தொடுவது கடினமே.

      Delete
    7. (6) வல்லிசிம்ஹன் said...

      உண்மைதான். திரு. கோபாலகிருஷ்ணனின் பதிவில் பின்னூட்டங்கள் தனி நாவலாகும் தகுதி பெற்றவை.
      February 7, 2016 at 5:58 AM

      Delete
    8. (7) Shakthiprabha said...

      அவர் பதிவுலக ஜாம்பவான்...பின்னூட்டங்களும் கதை படிக்கும். February 8, 2016 at 4:37 AM

      Delete
    9. (8) Thenammai Lakshmanan said...

      பதிவுகளைப் போலவே பின்னூட்டங்களுக்குப் பதிலளிப்பதிலும் சிறப்பு கொடுப்பவர் கோபால் சார் அவர்கள்.

      எல்லார் பதிவுகளிலும் இருக்கும் சுவாரசியத் தன்மையைக் குறிப்பிடுவதோடு பிடிக்காத சிலது இருந்தால் நாகரீகமாகக் குட்டவும் செய்வார் :)
      February 8, 2016 at 7:08 PM

      Delete
    10. (9) கீத மஞ்சரி said...

      பதிவுலகில் பெரும் சாதனையாளரான கோபு சாருக்கு மனமார்ந்த பாராட்டுகள். அவரையும் அவருடைய சாதனையையும் இங்கு குறிப்பிட்டமைக்கு நன்றி ரமணி சார். கோபு சாரின் பின்னூட்டங்கள் பெருகுவதற்குக் காரணம் பின்னூட்டமிட்ட ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமாக அவர் பெரியதொரு பதில் தருவதும் அப்பதில் ஏனோ தானோ என்றில்லாமல் அர்ப்பணிப்புடன் இருப்பதும்தான் என்று நினைக்கிறேன். பின்னூட்டங்களைக் கணக்கெடுத்து அவற்றை முறைப்படுத்தித் தொகுத்து பதிவில் வெளியிட்டு சிறப்பிப்பதும் அவரது பதிவுகளில் வாசகர்களின் எண்ணிக்கையும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் காரணம்.

      அவரிடமிருந்து நாம் கற்கவேண்டியவை பல உண்டு.
      February 10, 2016 at 10:23 PM

      Delete
    11. (10) பூந்தளிர் said...

      மேலே ஒருவர் சொல்லி இருப்பது போல கோ..பூ.. சார் பதிவில் வரும் பின்னூட்டங்களின் சுவாரசியம் அதிகமாக இருப்பது ஒருபுறம் இருக்க, அவர் அனைவருக்கும் கொடுக்கும் ரிப்ளை பின்னூட்டங்களோ லென்தியாகவும், ஆத்மார்த்தமாகவும், சுவாரசியமாகவும் இருக்கும்.

      சக பதிவர்கள் மேல் அவர் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு புரிந்துகொள்ள முடிகிறது...
      February 7, 2016 at 4:54 AM

      Delete
  11. பிரபல எழுத்தாளர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் தெரிந்துகொள்ளலாம் முடிகிறது.நன்றி..

    ReplyDelete
    Replies
    1. ஆல் இஸ் வெல்....... March 19, 2016 at 10:28 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பிரபல எழுத்தாளர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது. நன்றி..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  12. சிறப்பான அறிமுகங்கள். வாழ்த்துகளும். நன்றிகளும்..

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. March 19, 2016 at 10:36 AM

      வாங்கோ, வணக்கம்.

      //சிறப்பான அறிமுகங்கள். வாழ்த்துகளும். நன்றிகளும்..//

      மிகவும் சந்தோஷம். தங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றி. - VGK

      Delete
  13. Replies
    1. பரிவை சே.குமார் March 19, 2016 at 1:03 PM

      வாங்கோ, வணக்கம்.

      //நல்ல பகிர்வு ஐயா...//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete
  14. பி எஸ் ராமையா அவர்கள், புதுமைபித்தன் அவர்கள் இருவரை பற்றியும் நல்ல விபரங்கள் அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அரசு March 19, 2016 at 2:47 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //பி எஸ் ராமையா அவர்கள், புதுமைபித்தன் அவர்கள் இருவரை பற்றியும் நல்ல விபரங்கள் அறிந்தேன். நன்றி.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      Delete
  15. ‘போலீஸ்காரன் மகள்’ திரைப்படமே பி.எஸ். ராமையாவின் வெற்றி கண்ட நாடகமே என்கிறார் ஜீவி. ‘இந்த மன்றத்தில் .... ஓடிவரும் .... இளம் தென்றலைக் கேட்கின்றேன்... என்ற புகழ்பெற்ற இனிமையான பாடல் இடம்பெற்ற படம் இது என்பதையும் ஜீவி நமக்கு நினைவூட்டத் தவறவில்லை. //

    போலிஸ்காரன் மகள் படத்தில் எல்லா பாடல்களும் நன்றாக ஜீவி சார் குறிப்பிட்ட பாடல் மிக நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அரசு March 19, 2016 at 2:54 PM

      வாங்கோ, தங்களின் மீண்டும் வருகைக்கு நன்றி.

      **‘போலீஸ்காரன் மகள்’ திரைப்படமே பி.எஸ். ராமையாவின் வெற்றி கண்ட நாடகமே என்கிறார் ஜீவி. ‘இந்த மன்றத்தில் .... ஓடிவரும் .... இளம் தென்றலைக் கேட்கின்றேன்... என்ற புகழ்பெற்ற இனிமையான பாடல் இடம்பெற்ற படம் இது என்பதையும் ஜீவி நமக்கு நினைவூட்டத் தவறவில்லை.**

      //போலிஸ்காரன் மகள் படத்தில் எல்லா பாடல்களும் நன்றாக .... ஜீவி சார் குறிப்பிட்ட பாடல் மிக நன்றாக இருக்கும்.//

      அந்தக்காலத் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள பல மிக இனிமையான பாடல்களை மட்டும் ரேடியோ அல்லது டி.வி.யில் நான் ரஸித்துக் கேட்பதுண்டு.

      அது எந்தப்படத்தில் இடம்பெற்ற பாடல் என்பதெல்லாம் அதிகமாக யோசித்துப்பார்த்து மண்டை காயும் பழக்கம் எனக்குக் கிடையாது.

      ஜீவி சார் சொன்னதால்தான் இந்த இனிமையான பாடல் அந்தப்படத்தில் வருகிறது என்பதே எனக்குத் தெரியவந்தது. நான் அந்தக்குறிப்பிட்ட படத்தையும் பார்த்தது இல்லை. அதனாலும் எனக்கு இது தெரியாமல் போய் இருக்கக்கூடும்.

      தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம். - VGK

      Delete
  16. இன்றைய பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள பி.எஸ்.ராமையா மற்றும் புதுமைப்பித்தன் இருவருடைய சில சிறுகதைகளை அழியாச்சுடர்கள் தளத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால் வாசிப்பில் தோய்ந்த ஜீவி சாரின் எழுத்தினை வாசிப்பது தனி வாசிப்பனுபவத்தைத் தரும் என்பது உண்மை. அதைத் தங்கள் பதிவும் உணர்த்துகிறது. தொடர்ந்து வரவிருக்கும் எழுத்தாளர்களைப் பற்றி அறியும் ஆவலுடன் தொடர்கிறேன் கோபு சார்.

    ReplyDelete
    Replies
    1. கீத மஞ்சரி March 19, 2016 at 5:13 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //இன்றைய பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள பி.எஸ்.ராமையா மற்றும் புதுமைப்பித்தன் இருவருடைய சில சிறுகதைகளை அழியாச்சுடர்கள் தளத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால் வாசிப்பில் தோய்ந்த ஜீவி சாரின் எழுத்தினை வாசிப்பது தனி வாசிப்பனுபவத்தைத் தரும் என்பது உண்மை. அதைத் தங்கள் பதிவும் உணர்த்துகிறது. தொடர்ந்து வரவிருக்கும் எழுத்தாளர்களைப் பற்றி அறியும் ஆவலுடன் தொடர்கிறேன் கோபு சார்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான, விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். தொடர்ந்து வருகைதர இருப்பது கேட்க மிகவும் சந்தோஷம் மேடம். வாங்கோ.

      பிரியமுள்ள கோபு

      Delete
  17. புதுமைப்பித்தன் கதைகள் பலவற்றை வாசித்துச் சிலாகித்திருக்கிறேன். அவர் கதையில் மின்னல் வெட்டு போன்று தெறிக்கும் கடைசி வரியைப் படித்துப் பிரமித்திருக்கிறேன். அவரைப் பிரமாதமாய் ஜீவி சார் அறிமுகம் செய்திருக்கிறார். பி எஸ் ராமையாவின் கதைகளை நான் வாசித்ததில்லை. போலீஸ்காரன் மகள் அவருடைய நாடகம் என்பது எனக்குப் புதுச்செய்தி. ராமையா மணிக்கொடி இதழில் சேர்ந்த பிறகு நிதிநெருக்கடி காரணமாக இதழ் வெளி வராத சூழ்நிலை ஏற்பட்ட போது அவரே நடத்தப் பொறுப்பேற்றுக்கொண்ட விஷயத்தை ஜீவி சார், ஒரு பிரும்மாண்ட கப்பலில் வேலைக்குச் சேர்பவன், அக்கப்பலையே பெரிய ஆபத்து ஒன்றிலிருந்து காப்பாற்றிய கதைக்கு ஒப்பிடுவது மிகவும் பொருத்தம்! வழக்கம் போலப் பின்னூட்டங்களும் அதற்குத் தங்கள் பதில்களும் அசத்தல்! தொடருங்கள் தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஞா. கலையரசி March 19, 2016 at 7:59 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //புதுமைப்பித்தன் கதைகள் பலவற்றை வாசித்துச் சிலாகித்திருக்கிறேன். அவர் கதையில் மின்னல் வெட்டு போன்று தெறிக்கும் கடைசி வரியைப் படித்துப் பிரமித்திருக்கிறேன்.//

      மிக்க மகிழ்ச்சி மேடம்.

      //அவரைப் பிரமாதமாய் ஜீவி சார் அறிமுகம் செய்திருக்கிறார்.//

      :) ஆமாம். :)

      //பி எஸ் ராமையாவின் கதைகளை நான் வாசித்ததில்லை. போலீஸ்காரன் மகள் அவருடைய நாடகம் என்பது எனக்குப் புதுச்செய்தி.//

      நானும் வாசித்தது இல்லை. எனக்கும் இது ஜீவி சார் மூலம் கிடைத்த புதிய செய்தி மட்டுமே.

      //ராமையா மணிக்கொடி இதழில் சேர்ந்த பிறகு நிதிநெருக்கடி காரணமாக இதழ் வெளி வராத சூழ்நிலை ஏற்பட்ட போது அவரே நடத்தப் பொறுப்பேற்றுக்கொண்ட விஷயத்தை ஜீவி சார், ஒரு பிரும்மாண்ட கப்பலில் வேலைக்குச் சேர்பவன், அக்கப்பலையே பெரிய ஆபத்து ஒன்றிலிருந்து காப்பாற்றிய கதைக்கு ஒப்பிடுவது மிகவும் பொருத்தம்!//

      அவர் சொல்லியுள்ள இந்த ஒப்பீட்டு உதாரணத்தை நானும் மிகவும் ரசித்தேன்.

      //வழக்கம் போலப் பின்னூட்டங்களும் அதற்குத் தங்கள் பதில்களும் அசத்தல்! தொடருங்கள் தொடர்கிறேன்.//

      :) தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அசத்தலான விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நன்றியுடன் கோபு

      Delete
    2. //ஒரு பிர்மாண்டமான க்ப்பலில் சாதாரண வேலைக்குச் சேருபபவன்...//

      வெகு நுணுக்கமாக வாசித்து வாசிப்பின் பலனை அடைந்ததற்கு வாழ்த்துக்கள், கலையரசி!
      படித்தது படித்தது மாதிரியே உங்கள் நினைவில் பதிந்திருக்கிறதே, ஆச்சரியம்! இதுவே ஒரு துணைப்பாட நூலாக இருந்தால் நூற்றுக்கு நூறு மார்க் உங்களுக்குத் தான் போலிருக்கு!

      Delete
  18. அன்புள்ள திரு V.G.K அவர்களுக்கு வணக்கம். தங்களது ஜீவி எழுதிய- ”ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை” என்ற நூலுக்கு தாங்கள் எழுதும் தொடர் என்பதே வலையுலகில் புதுமைதான். பின்னே, ஒரு விமர்சன நூலுக்கு எழுதும் விமர்சனமே ஒரு தொடர் என்றால், ஆச்சரியம்தானே. வலையுலகில் இதுமாதிரியான தடாலடியான புதுமைகளை நீங்கள் மட்டுமே செய்ய முடியும்.

    நீங்கள் எழுதும் சுவாரஸ்யமான இந்த தொடரின் சாயல், நான் எழுதப் போகும் எனது விமர்சனத்திலும் வந்துவிடக் கூடாது என்று நான் கவனமாக இருக்க வேண்டும் போலிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தி.தமிழ் இளங்கோ March 20, 2016 at 6:43 AM

      //அன்புள்ள திரு V.G.K அவர்களுக்கு வணக்கம்.//

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //தங்களது ஜீவி எழுதிய- ”ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை” என்ற நூலுக்கு தாங்கள் எழுதும் தொடர் என்பதே வலையுலகில் புதுமைதான். பின்னே, ஒரு விமர்சன நூலுக்கு எழுதும் விமர்சனமே ஒரு தொடர் என்றால், ஆச்சரியம்தானே.//

      எனக்கே இது ஆச்சர்யமாகத்தான் உள்ளது. :)

      ஏற்கனவே நம் வலைப்பதிவர் கீதமஞ்சரி அவர்களின் நூலுக்காக ஐந்து பகுதிகளுடன் ஓர் தொடர் எழுதிய அனுபவமும் எனக்கு உள்ளது. அதற்கே எனக்கு வாசகர்களிடமிருந்து ஏராளமாக வரவேற்புகள் கிடைத்திருந்தன.

      http://gopu1949.blogspot.in/2015/09/part-1-of-5.html
      http://gopu1949.blogspot.in/2015/09/part-2-of-5.html
      http://gopu1949.blogspot.in/2015/09/part-3-of-5.html
      http://gopu1949.blogspot.in/2015/09/part-4-of-5.html
      http://gopu1949.blogspot.in/2015/09/part-5-of-5.html

      அதன்பின் நம் ஹனி மேடத்தின் கவிதை நூலுக்கான விமர்சனம் எழுதினேன். அந்த அனுபவமும் எனக்குள் சேர்ந்துகொண்டது.

      http://gopu1949.blogspot.in/2015/10/blog-post_31.html


      //வலையுலகில் இதுமாதிரியான தடாலடியான புதுமைகளை நீங்கள் மட்டுமே செய்ய முடியும்.//

      ஆஹா, இதைத்தங்கள் மூலம் இங்கு கேட்பதில் தன்யனானேன்.

      ’வித்யாசத்தில் இருக்குது வெற்றி’ என்ற மாபெரும் போட்டியில் வென்றவன் அல்லவா நான் ....

      http://gopu1949.blogspot.in/2011/04/6_17.html

      //நீங்கள் எழுதும் சுவாரஸ்யமான இந்த தொடரின் சாயல், நான் எழுதப் போகும் எனது விமர்சனத்திலும் வந்துவிடக் கூடாது என்று நான் கவனமாக இருக்க வேண்டும் போலிருக்கிறது.//

      எழுத்துலகில் தங்கள் பாணியே தனி சார். என்னையே சமயத்தில் ஆச்சர்யப்பட வைக்கும் பாணி அது. அதனால் என் இந்தத்தொடரின் சாயல், தாங்கள் எழுதப்போகும் தங்களின் விமர்சனத்தில் துளியும் வராது என்பது எனக்கு மிக நன்றாகத் தெரியும். அதனால் தாங்கள் கவனமாக இருக்க வேண்டிய அவசியமே ஏதும் இருக்காது.

      எதையுமே உறுப்படியாக எழுதத்தெரியாமல் சொதப்பிக்கொண்டு இன்று தவித்துவரும் + எழுத மேட்டரே கிடைக்கவில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கும் சில பதிவர்களே, இதற்கெல்லாம் யோசிக்க வேண்டும், கவலைப்பட வேண்டும். :)

      உங்களாலும் என்னாலும் எந்தத் தலைப்பிலும், எந்த நேரத்திலும், எதைப்பற்றி வேண்டுமானாலும், பக்கம் பக்கமாக எந்த முன்தயாரிப்பும் (Preparations) இல்லாமலேயே, ஜனரஞ்சகமாக அனைவரும் வரவேற்கும் விதமாக எழுதித்தள்ள முடியுமே சார். :) :)

      தங்களின் அன்பான வருகைக்கும் என்னைக்கொஞ்சம் மனம் திறந்து பேச வைத்ததற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார். அன்புடன் VGK

      Delete
  19. முதல்ல போட்ட கமெண்ட் ஒரு அவசரத்தில் போட்டது. எனக்கே திருப்தியாக இல்ல. மறுபடி வந்துட்டேன். நிதானமாக அனைவரின் பின்னூட்டமும் படித்த பிறகுதான் பி.எஸ். ராமையா, புதுமைபித்தன் அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. இவங்க கதைகள் படிக்கும் வாய்ப்பு இதுவரை கிடைத்ததில்லை. தேடி பார்க்கணும்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... March 20, 2016 at 10:01 AM

      வாங்கோ, வணக்கம். தங்களின் மீண்டும் வருகை எனக்கு மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.

      //முதல்ல போட்ட கமெண்ட் ஒரு அவசரத்தில் போட்டது. எனக்கே திருப்தியாக இல்ல. மறுபடி வந்துட்டேன்.//

      சந்தோஷம். மிகவும் சந்தோஷம். ஒரு வளரும் எழுத்தாளருக்கு தன் எழுத்துக்களில் லேஸில் திருப்தி வராது. அதுபோல வரவும் கூடாது.

      //நிதானமாக அனைவரின் பின்னூட்டமும் படித்த பிறகுதான் பி.எஸ். ராமையா, புதுமைபித்தன் அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. இவங்க கதைகள் படிக்கும் வாய்ப்பு இதுவரை கிடைத்ததில்லை. தேடி பார்க்கணும்.//

      ஆஹா, தங்களின் இந்த ஆர்வத்திற்கு என் பாராட்டுகள். மீண்டும் வருகைக்கு மிக்க நன்றி. - VGK

      Delete
  20. மிகச் சுருக்கமாக இருக்கிறதோ என்ற எண்ணம்
    இந்த அறிமுகப் பதிவுகளைப் படிக்கத் தோன்றியது
    ஒருவேளை மிக விரிவாக எழுதினால்
    முழு நூலை வாங்கிப் படிக்கையில்
    சுவாரஸ்யம் குறைந்து போகலாம்
    எனக் கருதிக் கூட இருக்கலாம்
    எனச் சமாதானம் செய்து கொண்டேன்
    " நீடாமங்கலம் ஸ்டேஸன் மாஸ்டர் "
    வியளக்கம் வெகுவாக இரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. Ramani S March 20, 2016 at 4:35 PM

      வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

      //மிகச் சுருக்கமாக இருக்கிறதோ என்ற எண்ணம்
      இந்த அறிமுகப் பதிவுகளைப் படிக்கத் தோன்றியது.//

      இருக்கலாம். இன்னும் மிக விரிவாக எழுத வேண்டும் என்ற ஆசை எனக்குள்ளும் இருந்தது உண்மைதான்.

      //ஒருவேளை மிக விரிவாக எழுதினால் முழு நூலை வாங்கிப் படிக்கையில் சுவாரஸ்யம் குறைந்து போகலாம்
      எனக் கருதிக் கூட இருக்கலாம் எனச் சமாதானம் செய்து கொண்டேன்.//

      அப்படியேதான் நானும் எனக்குள் யோசித்தேன். உதாரணமாக பி.எஸ்.ராமையா பற்றி ஜீவி அவர்கள் தன் நூலில் நான்கு பக்கங்களில் ஏறக்குறைய 1000 வார்த்தைகளில் எழுதியுள்ளார். நான் இங்கு அதனைப் பற்றி எழுதியுள்ளவை சுமார் 200 வார்த்தைகளில் மட்டுமே இருக்கலாம் என நினைக்கிறேன். அதுவும் அதில் நீடாமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டரே நூறு வார்த்தைகளைச் சாப்பிட்டிருப்பார். :)

      இனி வெளிவரப்போகும் என் பகுதிகளிலாவது மேலும் கொஞ்சம் சுவாரஸ்யங்களைக் கூட்டி, மிகவும் சுருக்கமாக இல்லாமல், சற்றே சுவைசேர்த்து பரிமாறலாமா எனவும் எனக்குள் நினைத்துள்ளேன். எவ்வளவு தூரம் முடியும் என நாம் பார்ப்போம்.

      //" நீடாமங்கலம் ஸ்டேஸன் மாஸ்டர் "
      விளக்கம் வெகுவாக இரசித்தேன்.//

      :) மிக்க மகிழ்ச்சி சார். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK

      Delete
  21. விமரிசன நடுவரின் நூலுக்கே விமர்சனம் பேஷ் பேஷ்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சார், வணக்கம்.

      //விமரிசன நடுவரின் நூலுக்கே விமர்சனம் பேஷ் பேஷ்//

      2014-இல் 10 மாதங்களுக்கு மேல், தொடர்ச்சியாக நாற்பது வாரங்களுக்கு நான் என் வலைத்தளத்தினில் ’சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ நடத்தி அதற்கு இவரை நடுவராக இருக்கும்படி வேண்டிக் கேட்டுக்கொண்டதே, எழுத்துலகிலும், வாசிப்பு அனுபவங்களிலும் இவரின் பாண்டித்யத்தை நான் நன்கு உணர்ந்திருந்ததால் மட்டுமே.

      இந்த நான் வெளியிட்டுவரும் தொடர் அவரின் நூலுக்கான விமர்சனம் அல்ல. இவரின் நூலினையோ, எழுத்துக்களையோ விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு எந்தவொரு தகுதியும் கிடையாது.

      ஏதோ நான் படித்த இவரின் நூலினில் என்னைக்கவர்ந்த ஒருசில விஷயங்களை பிறருடன் பகிர்ந்துகொள்கிறேன்.

      இது ஓர் நூல் அறிமுகம் + நூல் பற்றிய பாராட்டுரை அல்லது புகழுரை என்று வைத்துக்கொள்ளலாம்.

      தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி,சார். - VGK

      Delete
  22. ஹையாஆஆஆஆ இதுல வார வெள்ள பூவு சுத்திகிட்டே இருக்குதே.. எப்பூடிஇஇஇ. நீங்கதான் பின்னாடிலேந்து சுத்தி விடுறீகளா குருஜி....

    ReplyDelete
    Replies
    1. mru March 21, 2016 at 12:51 PM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //ஹையாஆஆஆஆ இதுல வார வெள்ள பூவு சுத்திகிட்டே இருக்குதே.. எப்பூடிஇஇஇ.//

      ஆஹா, குழந்தை மனம் கொண்ட உங்களின் ரசனையே தனி, முருகு. கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      //நீங்கதான் பின்னாடிலேந்து சுத்தி விடுறீகளா குருஜி....//

      சுத்திவிடும் பழக்கமெல்லாம் என்னிடம் எப்போதுமே இல்லையாக்கும் :)

      ரம்மி சீட்டாட்டத்தில் ஜோக்கர் வந்தால் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதுபோலவே தங்களின் அன்பு வருகையும் அழகுக்கருத்துக்களும். மிக்க நன்றி, முருகு.

      அன்புடன் குருஜி கோபு

      Delete
  23. என் அம்மாவுக்குப் பிடித்த நாவலாசிரியர்களில் பி.எஸ்.ராமையாவும் ஒருவர். அந்தக்காலத்துக் குமுதத்தில் இவரின் பல நாவல்கள் வந்திருக்கின்றன. புத்தகமாக வந்த ஒரு நாவல் கதாநாயகி காதல் கல்யாணம் பண்ணிக் கொள்வாள். போலீசாருக்குப் பயந்து திருட்டுத்தனமாக அவளைச் சந்திக்க வரும் கணவன். வெளியே யாரிடமும் சொல்ல மாட்டாள். ஆனால் அதுவே அவள் வாழ்க்கையில் பெரிய இடராக அமையும். கணவன் சந்தேகம் கடைசியில் தீர்ந்தாலும் அவள் மனம் விரிந்தது, விரிந்ததே என்று முடிவு! அந்தக் காலத்திலேயே பெண் மனத்தையும் அவள் துன்பத்தையும் அலசி ஆராய்ந்து எழுதியவர் பி.எஸ்.ராமையா! அருமையாக எழுதுவார்.

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam March 21, 2016 at 1:54 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //என் அம்மாவுக்குப் பிடித்த நாவலாசிரியர்களில் பி.எஸ்.ராமையாவும் ஒருவர். அந்தக்காலத்துக் குமுதத்தில் இவரின் பல நாவல்கள் வந்திருக்கின்றன. புத்தகமாக வந்த ஒரு நாவல் கதாநாயகி, காதல் கல்யாணம் பண்ணிக் கொள்வாள். போலீசாருக்குப் பயந்து திருட்டுத்தனமாக அவளைச் சந்திக்க வரும் கணவன். வெளியே யாரிடமும் சொல்ல மாட்டாள். ஆனால் அதுவே அவள் வாழ்க்கையில் பெரிய இடராக அமையும். கணவன் சந்தேகம் கடைசியில் தீர்ந்தாலும் அவள் மனம் விரிந்தது, விரிந்ததே என்று முடிவு! அந்தக் காலத்திலேயே பெண் மனத்தையும் அவள் துன்பத்தையும் அலசி ஆராய்ந்து எழுதியவர் பி.எஸ்.ராமையா! அருமையாக எழுதுவார்.//

      ஆஹா, தங்களின் இனிய நினைவலைகளைப் பகிர்ந்து இங்கு சொல்லியுள்ளது மிக அழகாக உள்ளது. மிக்க நன்றி, மேடம். - VGK

      Delete
  24. புதுமைப் பித்தன் தான் ஏற்கெனவே சொல்லிட்டேனே! ஒன்றிரண்டு தான் படித்திருக்கேன். அதிலே கடவுளும் கந்தசாமியும் ஒன்று! அகல்யா கூட அவர் எழுதியது தான் என எண்ணுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam March 21, 2016 at 1:55 PM

      வாங்கோ ....

      //புதுமைப் பித்தன் தான் ஏற்கெனவே சொல்லிட்டேனே! ஒன்றிரண்டு தான் படித்திருக்கேன். அதிலே கடவுளும் கந்தசாமியும் ஒன்று! அகல்யா கூட அவர் எழுதியது தான் என எண்ணுகிறேன்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், வாசிப்பு அனுபவம் வாய்ந்த கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நான் இந்த நூலில் வரும் பிரபலங்கள் யாரையுமே ஏற்கனவே வாசித்தது இல்லை என்பதால் தங்களின் ஐயங்களுக்கு நம் ஜீவி சாரே ஒருவேளை பதில் அளித்தாலும் அளிக்கலாம். அன்புடன் VGK

      Delete
  25. புதுமைப்பித்தன் அவர்களைப் பற்றியும் அவரது எழுத்துகள் பற்றியும் அறிவோம். பி எஸ் ராமையா அவர்களையும் அறிவோம் ஆனால் அவர் எழுத்துகளை வாசித்ததில்லை. இங்கு நீங்கள் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தியமைக்கும் மிக்க நன்றி. ஜி வி சாரின் புத்தகம் வாசிக்க வேண்டும். பி எஸ் ராமையா அவர்களின் எழுத்தையும்.

    நல்ல அறிமுகம் சார். மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. Thulasidharan V Thillaiakathu March 21, 2016 at 7:21 PM

      வாங்கோ, வணக்கம்.

      //புதுமைப்பித்தன் அவர்களைப் பற்றியும் அவரது எழுத்துகள் பற்றியும் அறிவோம்.//

      சந்தோஷம்.

      பி எஸ் ராமையா அவர்களையும் அறிவோம் .. ஆனால் அவர் எழுத்துகளை வாசித்ததில்லை. இங்கு நீங்கள் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தியமைக்கும் மிக்க நன்றி. ஜீவி சாரின் புத்தகம் வாசிக்க வேண்டும். பி எஸ் ராமையா அவர்களின் எழுத்தையும்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //நல்ல அறிமுகம் சார். மிக்க நன்றி//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான இனிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

      Delete
  26. ராமையா படித்ததில்லை. நீடாமங்கலம் ஸ்டேஷன்மாஸ்டர் நல்ல உவமை. ஒரு காலத்தில் நெல்லிக்குப்பம் போஸ்ட்மாஸ்டரையும் அப்படித்தான் சொல்வார்கள்.

    புதுமைப்பித்தன் - தமிழறிந்த பலன்.

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை March 26, 2016 at 11:20 PM

      வாங்கோ சார், வணக்கம்.

      //ராமையா படித்ததில்லை. நீடாமங்கலம் ஸ்டேஷன்மாஸ்டர் நல்ல உவமை. ஒரு காலத்தில் நெல்லிக்குப்பம் போஸ்ட்மாஸ்டரையும் அப்படித்தான் சொல்வார்கள்.//

      :)

      //புதுமைப்பித்தன் - தமிழறிந்த பலன்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார். - VGK

      Delete