About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, March 24, 2016

ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 6’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.
நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள்,  செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி.

இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.  
9) பெரியவர்  ஆர் வி
[பக்கம் 60 முதல் 64 வரை]


ஆர்பாட்டமில்லாத அர்த்தமுள்ள நடையழகு; கொஞ்சம்கூட சலிப்பேற்றாத, வழுவழுப்பான பாதையில் பயணிப்பதைப்போன்ற உணர்வை ஏற்படுத்தும் வார்த்தை லாவகம், கிளுகிளுப்பைப் பூசிக்கொண்டு புன்முறுவல் பூக்க வைக்கும் சொல்லாடல்கள்; சுருக்கமாகச்சொன்னால், தமிழ்மொழியின் சகல சிறப்புக்களையும் பளீரிடும் மின்னல்கொடி போல அங்கங்கே வீசிக்காட்டும், பாசாங்கற்ற பளிங்கு நடையழகுக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் ஆர்வி. பாரதி சொன்னது போல, ‘எழுத்து எமக்குத் தொழில்’ என்று கூறி குடும்பத்தையும் நடத்திக்கொண்டு எழுத்தை நம்பியே வாழ்ந்து காட்டியவர். 33 ஆண்டுகளுக்கும் மேலாக கலைமகள் பத்திரிகை குழுமத்தில் ஒருவராய் இருந்ததோடு கலைமகள் வெளியீடான ’கண்ணன்’ சிறுவர் பத்திரிகைக்கு ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

பெரியவர் ஆர்வி எழுதியுள்ள முதல் நாவல் ‘உதய சூரியன்’ 1942-இல் சுதேசமித்திரனில் பிரசுரமாகியுள்ளது.  

இவரை இவரின் மாம்பலம் வீட்டில் நேரில் சந்தித்துள்ள ஜீவி, இவரின் அருமை பெருமைகளையும், இவர் வாங்கியுள்ள பல்வேறு விருதுகளையும், இவரால் ஊக்கமும் உற்சாகமும் அளித்து அறிமுகப்படுத்த இளம் எழுத்தாளர்கள் பலரையும் பட்டியலிட்டுள்ளார்கள்.

ஆர்வி ஐயா எழுத்தில் கல்கியில் தொடராக வெளிவந்துள்ள ‘தேன்கூடு’ ‘காணிக்கை’ சுதேசமித்திரனில் தொடராக வெளிவந்துள்ள ’திரைக்குப்பின்’ ‘அணையா விளக்கு’ ‘மேம்பாலம்’ ’முகராசி’ ’சொப்பண வாழ்க்கை’ ‘பனிமதிப்பாவை’ ‘மனித நிழல்கள்’ ’சந்தனப்பேழை’ ‘யெளவன மயக்கம்’ ‘வெளி வேஷங்கள்’ ‘அலை ஓய்ந்தது’ மற்றும் காவிரிப் பூம்பட்டினம் தொடர்பாக எழுதிய ‘இருளில் ஒரு தாரகை’ பல்லவ பிற்கால சோழர் காலத்தை ஒட்டி எழுதப்பெற்ற ‘ஆதித்தன் காதலி’ ஆகிய பல நாவல்கள் தன் நினைவினில் உள்ளதாக மிகவும் சிலாகித்துச் சொல்கிறார் ஜீவி. 

இவர் ஆசிரியராக இருந்த ’கண்ணன்’ பத்திரிகையில் மூதறிஞர் ராஜாஜியில் ஆரம்பித்து பல்வேறு எழுத்துலக + அரசியல் ஜாம்பவான்கள் குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு மிகப்பெரிய பட்டியலே கொடுத்துள்ளார் ஜீவி. 

ஆர்வி அவர்கள் எழுதிய நாவல்கள், அவர் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு ஆற்றிய பணிகள் என்று ஆர்வி அவர்களுடன் நெருங்கிய பழக்கம் கொண்டிருந்த ஜீவி விவரிப்பதைப் படிக்கும் பொழுது சுவாரஸ்யமாக இருக்கிறது.
நான் நேரில் சந்தித்த 40 வது பதிவர்
திருமதி. துளசிகோபால் அவர்கள்
http://thulasidhalam.blogspot.in/
சந்தித்தநாள்: 07.02.2016 
{சந்தித்த இடம்: பதிவர் திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள் இல்லம், ஸ்ரீரங்கம்}


 

மேலும் அதிக விபரங்களுக்கு


நான் நேரில் சந்தித்த 41 வது பதிவர்
திரு. S.P. செந்தில் குமார் அவர்கள்
வலைத்தளம்: கூட்டாஞ்சோறு
http://senthilmsp.blogspot.com/
சந்தித்த நாள் (நேற்று): 23.03.2016 
{சந்தித்த இடம்: என் இல்லம்  ....
உடன் வருகை தந்திருந்த பதிவர் 
திருச்சி. தி. தமிழ் இளங்கோ அவர்கள்}

 


 
’தினத்தந்தி’ வழங்கும் 
’நம்மமுடியாத உண்மைகள்’
(’தினம் ஒரு தகவல்’ தொகுப்பு) By எஸ்.பி. செந்தில் குமார்
என்ற தன் சமீபத்திய நூல் வெளியீடு ஒன்றினையும்

 ஜொலித்து கண்ணைப் பறிக்கும் அழகிய அட்டையுடன் கூடிய  
‘ஹாலிடே நியூஸ்’ 
என்ற ’தமிழின் முதல் சுற்றுலா மாத இதழ்’ 
(ஏப்ரில் 2016)  பிரதி ஒன்றினையும் 
எனக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

‘ஹாலிடே நியூஸ்’ 
இதழின் இணை ஆசிரியர் இவர் 
என்பதும் குறிப்பிடத்தக்கது.


திருச்சி. தி. தமிழ் இளங்கோ அவர்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கியது 
சுகிசிவம் அவர்கள் எழுதி, பிரேமா பிரசுரம், சென்னை வெளியிட்டுள்ள 
‘ஆதி சங்கரர்’ என்ற நூல்.


என்னுடைய சிறுகதைத் தொகுப்பு நூலான 
’எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு...’
திரு. எஸ்.பி. செந்தில் குமார் அவர்களுக்கு என்னால் அளிக்கப்பட்டது.


எங்கள் இல்லத்தில் நாங்கள் மூவரும்
எங்கள் கட்டடத்தின் உச்சியில்   

முதல் முறையாக என் இல்லத்துக்கு 
வருகை தந்து மகிழ்வித்த 
பிரபல பதிவர் திரு. எஸ்.பி. செந்தில் குமார் 
(மதுரை) அவர்களுக்கும்,
அவருடன் வருகை தந்து மகிழ்வித்த (திருச்சி பதிவர்)
திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கும்
என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.  
10) ’பசித்த மானுடம்’ படைத்த
கரிச்சான் குஞ்சு
[பக்கம் 65 முதல் 67 வரை]
புத்தகத்தின் பெயர்: ‘பசித்த மானுடம்’. பெயர் வினோதம் காரணமாகவோ என்னவோ, அந்தப் புதினத்தை எழுதியவரின் பெயரான ‘கரிச்சான் குஞ்சு’ என்பதையும் என்னால் மறக்க இயலவில்லை என்கிறார், அப்போது சேலத்தில் வசித்து வந்த நம் ஜீவி. 

பின்னால்தான் தெரியுமாம் ..... மணிக்கொடி காலத்தின் முடிசூடா சிறுகதை மன்னன் கு.ப.ராஜகோபாலன் ’கரிச்சான்’ என்ற புனைப்பெயரிலும் எழுதியதனால், அவரின் அத்யந்த சீடரான நாராயணஸ்வாமி என்பவர், தனக்குப் புனைப்பெயராக ‘கரிச்சான் குஞ்சு’ என்பதை வரித்துக்கொண்டார் என்பது. 

பின்னால் ‘காலச்சுவடு’ பதிப்பகம், ‘பசித்த மானுட’த்தை புத்தகமாகப் பிரசுரித்திருக்கிறது. வாழ்க்கையின் வேகமான புரட்டிப்போடுதலின், அதன் தென்றலிலும் சூறாவளியிலும் சிக்கிக்கொண்ட வெவ்வேறு மனிதர்கள் பெற்ற பரிசையும், பாடத்தையும் சொல்லும் புனிதம் ‘பசித்த மானுடம்’ 

'What is true and relevant in Indian Philosophy?' என்று ஓர் ஆகச்சிறந்த நூல், அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யா எழுதியது. அழகாக இந்தத்தத்துவ நூலை மொழிபெயர்த்திருப்பவர் கரிச்சான் குஞ்சு அவர்கள்; ‘இவரால்தான் இது முடியும்’ என்கிற மாதிரி. 

’ஞானம் என்பது செறுக்காகித் தன்னையே பிடிசாம்பலாய்ச் சாப்பிட்டு விடாமல், அந்த வேள்வியை, ஏழ்மையிலும் புன்னகையுடன் எதிர்கொண்டு, தனது மேதமையின் ஸ்மரணையே இல்லாமல் வாழ்ந்துள்ள இவரின் வாழ்க்கையின் மகத்துவம் புரிகிறது’ என்கிறார் ஜீவி.

எப்போதாவது கும்பகோணம் செல்கையில், டபீர் தெரு நுழைய நேரிடுகையில், கரிச்சான் குஞ்சு சாரின் நினைவு மேலோங்கி நெஞ்சை கனக்கச்செய்யும், என்கிறார் ஜீவி. 

இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும். 

என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்  

இதன் அடுத்த பகுதியில் 
இடம்பெறப்போகும் 
இரு பிரபல எழுத்தாளர்கள்:

 
  
   வெளியீடு: 26.03.2016 பிற்பகல் 3 மணிக்கு.

காணத் தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள் !! 

 

58 comments:

 1. இருவரது எழுத்தும் வாசித்ததில்லை!

  கூட்டாஞ்சோறு எஸ் பி செந்தில்குமார் வருகையா? அடடே.. வடை வாங்கிக் கொடுத்தீர்களா?

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம். March 24, 2016 at 3:32 PM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம், வணக்கம்.

   //இருவரது எழுத்தும் வாசித்ததில்லை!//

   அதனால் என்ன? சந்தோஷமே. :)

   //கூட்டாஞ்சோறு எஸ் பி செந்தில்குமார் வருகையா? //

   ஆம். சாயங்காலம் 5.30 முதல் 7 மணி வரை மட்டும் இனிய சந்திப்பு. நல்லவேளையாக பகல் 11 மணி சுமாருக்கு ஃபோன் செய்து, மாலை 5 to 6 சந்திக்கலாமா என முன்கூட்டியே கேட்டுவிட்டுத்தான் வந்திருந்தார்கள்.

   //அடடே.. வடை வாங்கிக் கொடுத்தீர்களா?//

   துரதிஷ்டவசமாக என் வீட்டருகே உள்ள சூடான வடை/பஜ்ஜி போடும் கடை அன்றும் (23rd) விடுமுறையாகிப் போய்விட்டது.

   ஆனால் நேற்று 24th அது திறக்கப்பட்டிருந்தது. 23rd வந்திருந்த அவர்களுக்கு வாங்கிக்கொடுக்க முடியவில்லையே என்ற தாபத்தில், நான் நேற்று ஒரு அரை டஜன் பஜ்ஜிகள் மட்டும் சூடாக வாங்கி, அவர்களை நினைத்துக்கொண்டே உள்ளே தள்ளினேன்.

   அவர்களுக்கு அன்று ஸ்வீட் சோன்பப்டி, முறுக்குகள், பிஸ்கட்ஸ், நறுக்கிய வெள்ளரிப்பிஞ்சு துண்டுகள், இரண்டு ரெளண்ட் (குவார்ட்டர் அளவு) ஜில்ஜில் மேங்கோ ஜூஸ் முதலியன முதலில் கொடுக்கப்பட்டன.

   பிறகு மொட்டை மாடிக்குக் கூட்டிப்போய் வந்த களைப்பு தீர நம் வீட்டு ஸ்பெஷல் ஃபில்டர் காஃபி கொடுத்து அனுப்ப மட்டுமே முடிந்தது.

   >>>>>

   Delete
  2. //ஆனால் நேற்று 24th அது திறக்கப்பட்டிருந்தது. 23rd வந்திருந்த அவர்களுக்கு வாங்கிக்கொடுக்க முடியவில்லையே என்ற தாபத்தில், நான் நேற்று ஒரு அரை டஜன் பஜ்ஜிகள் மட்டும் சூடாக வாங்கி, அவர்களை நினைத்துக்கொண்டே உள்ளே தள்ளினேன்.//


   ஹா... ஹா... ஹா.. இது நல்ல ஐடியாவா இருக்கே! நானும் இனி இதை Follow பண்ண முயற்சிக்கிறேன்!

   Delete
 2. நான் பார்த்தபோது இருந்ததற்கு உங்கள் அறையின் தோற்றம் சற்றே மாறி இருக்கிறதோ!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம். March 24, 2016 at 3:33 PM

   //நான் பார்த்தபோது இருந்ததற்கு உங்கள் அறையின் தோற்றம் சற்றே மாறி இருக்கிறதோ!//

   இல்லை ஸ்ரீராம், அதே அடசல்கள், அதே இடங்களில் இன்றும் அப்படி அப்படியேதான் உள்ளன. எதுவும் மாறவில்லை. மாற்றவும் இல்லை. போட்டோ எடுக்கும்போது பீரோ கண்ணாடியில் க்ளார் அடிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாக ஓர் பெட்ஷீட் மட்டும் போட்டு போத்தி இருக்கிறேன். மற்றபடி ஏதும் மாற்றமே இல்லை.

   தங்களின் அன்பான வருகைக்கும், வேடிக்கையான கேள்விகளுடன் கூடிய கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஸ்ரீராம். அன்புடன் VGK

   Delete
  2. VGK >>>>> ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்.

   என் அறையைப் பற்றி தங்களின் ஓர் ஒப்பீட்டுக்காக
   பின்னூட்ட எண்ணிக்கைகள் மிகச்சரியாக 100 காட்டும் என் பதிவின் இணைப்பு இதோ:

   http://gopu1949.blogspot.in/2015/01/blog-post_30.html

   அன்புடன் VGK

   Delete
  3. VGK >>>>> ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்.

   மேலே நான் ஸ்வீட் சோன்பப்டியில் ஆரம்பித்துக் கொடுத்துள்ள பட்டியலில் பச்சைக்கலர் மோரீஸ் முரட்டு வாழைப்பழங்கள், குடிநீர் போன்றவை விட்டுப்போய் உள்ளன. எங்களின் அன்றைய பேச்சு சுவாரஸ்யத்தில் மேலும் ஏதேனும் ஐட்டம்ஸ் கூட விடுபட்டுப் போய் இருக்கலாமோ என்னவோ :) - VGK

   Delete
 3. நிறய பதிவர்களை அறிமுகப்படுத்தும் விதம் ரசிக்க வைக்குது. ஆர்.வி.ஸார் கரிச்சான்குஞ்சு ஸார்( எப்படிலாம் புனைப்பெயர் யோசிக்குறாங்க) இப்ப கலைமகள் சுதேச மித்திரன் பத்திரிகைகள் பாக்கவே முடியறதில்ல. கண்ணன் ( குழந்தைகள்) பத்ரிகை ஓரளவு நினைவில் இருக்கு. டைம் மிஷினில் ஏறி அந்த பழயகாலத்துக்குபோயி ஒரு டூர் அடிச்சு நல்ல எழுத்துக்களை படித்து ரசிக்கணும்.
  (பெருமூச்சுமட்டுமே விட முடியும்).பழயகாலமோ புதிய காலமோ எழுத்தாளர்கள் என்றுமே எழுத்தாளர்கள்தானே.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... March 24, 2016 at 6:25 PM

   வாங்கோ, வணக்கம்.

   //நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்தும் விதம் ரசிக்க வைக்குது.//

   என்னுடைய 1 to 39 பதிவர் சந்திப்புக்களை அழகிய படங்களுடன், அற்புதச் செய்திகளாகக் காண இதோ எந்தன் தொடர்:

   இதன் ஆரம்பப் பகுதிக்கான இணைப்பு:
   http://gopu1949.blogspot.in/2015/02/1-of-6.html

   நிறைவுப்பகுதிக்கான இணைப்பு:
   http://gopu1949.blogspot.in/2015/02/7.html

   //ஆர்.வி. ஸார், கரிச்சான்குஞ்சு ஸார் (எப்படிலாம் புனைப்பெயர் யோசிக்குறாங்க)//

   ஆர்.வி. என்பது மிகவும் நார்மலானதோர் பெயர் மட்டுமே, என்னை சிலர் வீஜீ (VG) என ராகத்துடன் அழைப்பதுபோலவே.

   ‘கரிச்சான் குஞ்சு’ என்ற பெயர் மிகவும் வேடிக்கையாகவும் விசித்திரமாகவும்தான் உள்ளது.

   //இப்ப கலைமகள் சுதேச மித்திரன் பத்திரிகைகள் பாக்கவே முடியறதில்ல.//

   இன்றைய நிலவரம்பற்றி எனக்குத் தெரியவில்லை. சுதேசமித்திரன் நாளிதழ் 1960-1965 வாக்கில் சற்றே பிரபலமாக இருந்துள்ளது என நான் கேள்விப்பட்டுள்ளேன்.

   அதுபோல ‘கலைமகள்’ ஓர் தரமான இலக்கிய இதழாகவே இருந்துள்ளது.

   இன்றைய வெகுஜன வரவேற்பினைப் பெற்று வரும் வெட்டிச்செய்திகளும், அரசியல் செய்திகளும், சினிமாச் செய்திகளும் ’கலைமகள்’ இல் சுத்தமாக இருக்கவே இருக்காது எனவும் கேள்விப்பட்டுள்ளேன்.

   //கண்ணன் ( குழந்தைகள்) பத்திரிகை ஓரளவு நினைவில் இருக்கு.//

   அதுவும் எனக்கு நினைவில் இல்லை. என் குழந்தைப்பருவத்தில் ‘அம்புலிமாமா’ மிகவும் பிரபலமாக இருந்தது. என் குழந்தைகளின் குழந்தைப்பருவத்தில் ‘கோகுலம்’ பற்றி எனக்குத் தெரியவந்தது. வேறொன்றும் நான் அறியேன் பராபரமே.

   //டைம் மிஷினில் ஏறி அந்த பழயகாலத்துக்குபோயி ஒரு டூர் அடிச்சு நல்ல எழுத்துக்களை படித்து ரசிக்கணும். (பெருமூச்சுமட்டுமே விட முடியும்).//

   செய்யுங்கோ. (அல்லது பெருமூச்சாவது விடுங்கோ)

   //பழைய காலமோ புதிய காலமோ எழுத்தாளர்கள் என்றுமே எழுத்தாளர்கள்தானே.//

   அதுசரி. எழுதுபவனெல்லாம் எழுத்தாளன் ஆகிவிட முடியுமா என்ன? நான் ஒரு எழுத்தாளன் என அவனவன் தனக்குள் சொல்லிக்கொள்ளலாம். அதை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

   படிக்கும் வாசகன் அல்லவா, அவரை ஓர் தரமான எழுத்தாளர் என முதலில் ஏற்றுக்கொள்ளணும், அவர் படைப்பினை முழுவதுமாக ரஸித்துப் படிக்கணும். அவ்வாறு படித்த அதில் ஒரு 10-20 பேர்களாவது வருகை தந்து, ஏனோ தானோ என இல்லாமல், ஆழ்ந்து படித்த தன் வாசிப்பு அனுபவத்தின் அடிப்படையில், ஆத்மார்த்தமாகப் பாராட்டி வித்யாசமாக கருத்துச்சொல்லணும். இவையெல்லாம்தான் இதில் மிக மிக முக்கியமானதாகும்.

   சும்மா த.ம. வோட் போடமுடியவில்லை என்றோ, த.ம.7 என்றோ எழுதிவிட்டுச் செல்வதில் யாருக்கு என்ன லாபம்?

   பதிவு எழுதியவருக்கோ, கருத்து எழுதிச் சென்றவருக்கோ, இதில் என்ன பெரிய பெருமை வேண்டிக்கிடக்கு, யோசித்துப்பாருங்க.

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.- VGK

   Delete
 4. பதிவர் வருகை இன்னமும் தொடர்கிறதா. இன்றய அறிமுகங்களும் அவர்களின் எழுத்துகளின் ரசனையும் தெரிந்து கொள்ள முடிந்தது. கல்கி தொடங்கி புனைபெயர் வைத்துக்கொள்ளாத எழுத்தாளர் யாருமே இல்லையோ.

  ReplyDelete
  Replies
  1. srini vasan March 24, 2016 at 6:35 PM

   வாங்கோ, வணக்கம்.

   //பதிவர் வருகை இன்னமும் தொடர்கிறதா.//

   அது எப்போதுமே தொடரத்தான் செய்யும். தற்சமயம் இதிலெல்லாம் அதிக விருப்பம் இல்லாமல் நான் வலையுலகிலிருந்து ஒதுங்கி, சற்றே ஒளிந்து கொண்டிருந்தாலும்கூட, என்னை சிலர், ஏதோ ஒரு அன்பினால் சந்திக்க விரும்பி வந்துகொண்டுதான் உள்ளார்கள். எனக்கும் இதில் மகிழ்ச்சியே. :)

   பிறர் என்னை வற்புருத்திக் கட்டாயப்படுத்தாமல், உள்ளூராக இருப்பினும்கூட, நானாக யாரையும் சந்திக்க விரும்பி என் வீட்டை விட்டு புறப்பட்டுச் செல்வது இல்லை. உள்ளூராகவும் இருந்து, ஒருவேளை போகவர கார் ஏற்பாடு செய்து கொடுத்தார்களேயானால் போனால் போகிறது என்று நான் போய் வருவதும் உண்டு. :)

   //இன்றைய அறிமுகங்களும் அவர்களின் எழுத்துகளின் ரசனையும் தெரிந்து கொள்ள முடிந்தது.//

   சந்தோஷம்.

   //கல்கி தொடங்கி புனைபெயர் வைத்துக்கொள்ளாத எழுத்தாளர் யாருமே இல்லையோ.//

   என்னைப்போல பிழைக்கத்தெரியாத அப்பாவிகளில் ஒருசிலர், ஆங்காங்கே புனைப்பெயர் ஏதும் இல்லாமலும் எழுதிக்கொண்டு இருக்கக்கூடும் என நினைக்கிறேன்.

   கல்-யாணி கி-ருஷ்ணமூர்த்தி என்பதன் சுருக்கமே ‘கல்கி’ ஆனது என கேள்விப்பட்டுள்ளேன்.

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. - VGK

   Delete
 5. நேற்று நண்பர் தமிழ் இளங்கோ அவர்களுடன் தங்களை தங்கள் இல்லத்தில் சந்தித்து, உரையாடியதை மறக்க முடியாது. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நன்றிகள் பல அய்யா!

  ReplyDelete
  Replies
  1. S.P.SENTHIL KUMAR March 24, 2016 at 8:57 PM

   வாங்கோ, வணக்கம்.

   //நேற்று நண்பர் தமிழ் இளங்கோ அவர்களுடன் தங்களை தங்கள் இல்லத்தில் சந்தித்து, உரையாடியதை மறக்க முடியாது. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நன்றிகள் பல அய்யா!//

   நம் வாழ்க்கையில், ஒர்முறையாவது இவரை நாம் நேரில் சந்திக்க மாட்டோமா என எனக்குள், என் மனதுக்குள் நினைத்திருந்த பதிவுலக எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர்.

   இந்த நம் சந்திப்பில் உங்களைப்போலவே எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே. தங்கள் சந்திப்பினை என்னாலும் என்றும் மறக்க இயலாதுதான்.

   தாங்கள் என்னிடம் கொடுத்துள்ள நூலின் வடிவமைப்பும், அதிலுள்ள வண்ண வண்ணப் படங்களும், தகவல்களும் மிக அருமையாக உள்ளன. அதில் கொஞ்சூண்டு மட்டுமே இதுவரை நான் படித்து முடித்துள்ளேன்.

   அரியதொரு பொக்கிஷம் கிடைத்தது போல நான் மிகவும் ஆனந்தம் அடைந்துள்ளேன்.

   என் இல்லம்தேடி வந்த, தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கு நானும் என் குடும்பத்தாரும்தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். மிக்க நன்றி, நண்பரே.

   தங்களை அன்புடன் என்னிடம் அழைத்துவந்த திருச்சி திரு. தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளை இங்கு நான் பதிவு செய்துகொள்கிறேன்.

   என்றும் அன்புடன் VGK

   Delete
 6. கரிச்சான் குஞ்சு அவர்களின்
  கதைகளைப் படித்திருக்கிறேன்
  பாரதிக்கு தாசன் போல்
  கரிச்சான் அவர்களுக்கு குஞ்சு
  என்கிற காரணப் பெயர் இன்றுதான்
  தெரிந்து கொண்டேன்
  நிஜமாகவே கரிச்சான் அவர்களை
  இதுவரை அறியாதது அவர்களது
  ஆக்கங்களைப் படிக்காதது கொஞ்சம் உறுத்துகிறது
  வாங்கிப் படித்துவிடுவேன்.
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. Ramani S March 25, 2016 at 5:12 AM

   வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

   //கரிச்சான் குஞ்சு அவர்களின் கதைகளைப் படித்திருக்கிறேன். பாரதிக்கு தாசன் போல் கரிச்சான் அவர்களுக்கு குஞ்சு என்கிற காரணப் பெயர் இன்றுதான்
   தெரிந்து கொண்டேன்.//

   மிக்க மகிழ்ச்சி, சார்.

   //நிஜமாகவே கரிச்சான் அவர்களை இதுவரை அறியாதது அவர்களது ஆக்கங்களைப் படிக்காதது கொஞ்சம் உறுத்துகிறது. வாங்கிப் படித்துவிடுவேன். பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்//

   தங்களின் அன்பான வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார். - VGK

   Delete
 7. அம்புலிமாமாவுக்கு அடுத்து நான் இளம்பிராயத்தில்
  தேடித் தேடிப் படித்தது கண்ணன் இதழ்தான்
  எமக்குப் படிக்கும் ஆர்வத்தை அதிகம் ஊட்டியது
  அந்த இதழ்தான்.ஆர் வி அவர்களின் எழுத்து
  ஆர்ப்பாட்டமில்லாது மிக இயல்பாக இருக்கும்
  சில நாவல்கள் படித்திருக்கிறேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. Ramani S March 25, 2016 at 5:18 AM

   வாங்கோ....

   //அம்புலிமாமாவுக்கு அடுத்து நான் இளம்பிராயத்தில்
   தேடித் தேடிப் படித்தது கண்ணன் இதழ்தான் எமக்குப் படிக்கும் ஆர்வத்தை அதிகம் ஊட்டியது அந்த இதழ்தான். ஆர் வி அவர்களின் எழுத்து
   ஆர்ப்பாட்டமில்லாது மிக இயல்பாக இருக்கும்
   சில நாவல்கள் படித்திருக்கிறேன்
   பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்//

   மிக்க மகிழ்ச்சி சார். எனக்கு இந்த கண்ணன் இதழ் பற்றி ஏதும் தெரியாது. ஓஸியில் கிடைத்தபோது என் சிறு வயதில் ’அம்புலிமாமா’ நான் விரும்பிப்படித்ததுண்டு. அதில் உள்ள எழுத்துக்கள் பெரியதாக ஜோராக இருக்கும். படங்களும் சூப்பராக இருக்கும். அதில் தொடர்ந்து வந்துள்ள விக்ரமாதித்தன் + வேதாளம் கதை படிக்க ஒருவித சுவாரஸ்யமாகவும் த்ரில்லிங்காகவும் இருக்கும். :) மிக்க நன்றி, சார். - VGK

   Delete
 8. பதிவர்கள் அதிகம் பேரை தனிப்பட்ட முறையில்
  சந்தித்தது தாங்களாகத்தான் இருக்கும் என
  நினைக்கிறேன்,விரைவில் அது நூறைத் தொட
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. Ramani S March 25, 2016 at 5:20 AM

   வாங்கோ ....

   //பதிவர்கள் அதிகம் பேரை தனிப்பட்ட முறையில் சந்தித்தது தாங்களாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன், விரைவில் அது நூறைத் தொட
   மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி சார். நூறு என்று இல்லாவிட்டாலும் ஐம்பதுக்குள் ஆவது அது அமையட்டும். அந்த 50க்குள் தங்களை நான் சந்திக்கும் இனியதோர் பாக்யமும் அமையட்டும். மிக்க நன்றி, சார். VGK

   Delete
 9. Replies
  1. பழனி.கந்தசாமி March 25, 2016 at 6:18 AM

   //படித்தேன்.//

   வாங்கோ சார், மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். VGK

   Delete
 10. புத்தக விமர்சனம் விரிவாய் நகர்கிறது...
  செந்தில் சார்... தமிழ் இளங்கோ ஐயா வரவின் மகிழ்ச்சி புகைப்படங்களில்...

  ReplyDelete
  Replies
  1. பரிவை சே.குமார் March 25, 2016 at 12:31 PM

   வாங்கோ, வணக்கம்.

   //புத்தக விமர்சனம் விரிவாய் நகர்கிறது... செந்தில் சார்... தமிழ் இளங்கோ ஐயா வரவின் மகிழ்ச்சி புகைப்படங்களில்...//

   :) தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete

 11. திரு ஆர் வி. அவர்கள் பற்றியும் கரிச்சான் குஞ்சு என்கிற திரு கு.ப.ரா அவர்கள் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய, ஏனோ தெரியவில்லை அவர்களது படைப்புகளைப் படித்ததில்லை. திரு ஜீ.வி அவர்கள் சொன்னதை நீங்கள் விவரிப்பதை படித்ததும் இருவரின் படைப்புகளை படிக்கவேண்டும் என்ற வேட்கை எழுந்துள்ளது. அதற்காக தங்களுக்கும் திரு ஜீ.வி அவர்களுக்கும் நன்றி!

  நமக்கு ‘கூட்டாஞ்சோறு’ படைக்கும் திரு S.P. செந்தில்குமார் அவர்கள் தங்களை சந்தித்தது பற்றி அறிந்து மிக்க மகிழ்ச்சி. தாங்கள் இன்னும் சந்திக்கப்போகும் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இருக்க ஆசை

  ReplyDelete
  Replies
  1. வே.நடனசபாபதி March 25, 2016 at 12:46 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //திரு. ஆர்.வி. அவர்கள் பற்றியும் கரிச்சான் குஞ்சு என்கிற நாராயணஸ்வாமி அவர்கள் பற்றியும் (அதாவது கரிச்சான் என்ற புனைப்பெயர் கொண்ட திரு. கு.ப.ரா அவர்களின் அத்யந்த சீடரான கரிச்சான்குஞ்சுவைப் பற்றியும்) கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய, ஏனோ தெரியவில்லை அவர்களது படைப்புகளைப் படித்ததில்லை. திரு ஜீ.வி அவர்கள் சொன்னதை நீங்கள் விவரிப்பதை படித்ததும் இருவரின் படைப்புகளை படிக்கவேண்டும் என்ற வேட்கை எழுந்துள்ளது. அதற்காக தங்களுக்கும் திரு. ஜீ.வி அவர்களுக்கும் நன்றி! //

   மிக்க மகிழ்ச்சி, சார். இதுபோன்ற வேட்கை சில பேர்களுக்காவது எழும்படி செய்வதே நூல் அறிமுகங்களின் பிரதான நோக்கமாகும். அது தங்கள் மூலம் நிறைவேறுவது கேட்க எனக்கும் சந்தோஷமே.

   //நமக்கு ‘கூட்டாஞ்சோறு’ படைக்கும் திரு S.P. செந்தில்குமார் அவர்கள் தங்களை சந்தித்தது பற்றி அறிந்து மிக்க மகிழ்ச்சி.//

   இது திடீரென நானே அன்று எதிர்பாராததோர் இனிய சந்திப்பு, சார். அன்று காலை 11 மணியளவில் அவர் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு, ”மதுரையிலிருந்து திருச்சிக்கு சில வேலைகளாக வந்துள்ளேன். இன்று மாலையில் உங்களை நேரில் சந்திக்க வரலாமா சார்” என்று கேட்டார். என் தொலைபேசி எண், நம் நண்பர் திரு. தமிழ் இளங்கோ அவர்களிடம் பெற்றிருப்பார் என நினைக்கிறேன். அன்று காலையில் இவருக்கு முன்பே திரு. தமிழ் இளங்கோ அவர்களும் இருமுறை என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறார். ஆனால் நான் அசந்து தூங்கிக்கொண்டிருந்தால் அந்த இரு அழைப்புகள் பற்றியும் எனக்குத் தெரியாமலேயே போய்விட்டது. திரு. செந்தில் குமாரிடம் நான் பேசியபிறகு, திரு. தமிழ் இளங்கோ அவர்களுடனும் நான் பேசி மாலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள் நாம் சந்திப்போம் என உறுதி செய்தேன். அதன்படி இருவரும் என் இல்லத்திற்கு 5.30 மணி சுமாருக்கு வருகை தந்தார்கள். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் சந்தித்து எங்களுக்குள் பேசி மகிழ்ந்தோம்.

   //தாங்கள் இன்னும் சந்திக்கப்போகும் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இருக்க ஆசை//

   நிச்சயமாக நாம் விரைவில் சந்திப்போம் சார். நான் நேரில் சந்திக்க நினைக்கும் + விரும்பும் நம் வலைப்பதிவர்களில், தாங்களும் மிகவும் முக்கியமான ஒருவரே. திருச்சி பக்கம் தாங்கள் வருவதாக இருந்தால் ஒரிரு நாள் முன்கூட்டியே எனக்குத்தகவல் கொடுங்கோ சார். மெயில் கொடுத்தால்கூடப் போதும்.

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், விரிவான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். அன்புடன் VGK

   Delete
 12. கரிச்சான் குஞ்சு அவர்களின் இயற்பெயர் நாராயணஸ்வாமி. இவர் பள்ளி ஆசிரியராக பணிபுரிஜ்தார். கு.ப.ர்ர. மீது மிகவும் மரியாதை கொண்டவர் இவர்.

  கு.ப.ரா. அவர்கள் 'கரிச்சான்' என்ற புனைப்பெயரையும் கொண்டிருந்தார். அதனால் கு.ப.ரா. வழிவந்தவன் என்று சொல்லிக் கொள்வதற்காக நாராயணஸ்வாமி கரிச்சான் குஞ்சு என்ற புனைப்பெயரைக் கொண்டார்.

  ReplyDelete
 13. ஆர்.வி. எழுத்துக்களைப் படித்ததில்லை. கரிச்சான் குஞ்சுவின் ‘பசித்த மானுடம்’ நாவலை ரசித்து, அனுபவித்து இரண்டு தடவைகள் படித்து இருக்கிறேன். இந்த நூலைப் பற்றிய எனது விமர்சனமும் எனது வலைத்தளத்தில் உண்டு.

  மேலே சொன்ன இருபெரும் எழுத்தாளர்களுக்கு இடையில், மதுரை S.P. செந்தில்குமார் மற்றும் அடியேனின் தங்களுடனான சந்திப்பை, இடைச் செருகலாக போட்டு நெருக்கி விட்டீர்கள். தனிப்பதிவாக எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். தங்களைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில், மதுரை S.P. செந்தில்குமார் அவர்கள் அழைத்தவுடனேயே கிளம்பி விட்டேன். உங்களைச் சந்திப்பதற்கு முன்னர் மணவை ஜேம்ஸ் மற்றும் ‘ஊமைக் கனவுகள்’ ஜோசப் விஜு இருவரையும் சந்தித்து விட்டு உங்கள் இல்லம் வந்தோம். சந்தித்த நிகழ்வினை இனிமையான நடையில் சொல்லி மகிழ்ந்துள்ளீர்கள். மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ March 25, 2016 at 5:43 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //ஆர்.வி. எழுத்துக்களைப் படித்ததில்லை.//

   ஓஹோ ! (நானும் படித்தது இல்லை)

   //கரிச்சான் குஞ்சுவின் ‘பசித்த மானுடம்’ நாவலை ரசித்து, அனுபவித்து இரண்டு தடவைகள் படித்து இருக்கிறேன். இந்த நூலைப் பற்றிய எனது விமர்சனமும் எனது வலைத்தளத்தில் உண்டு.//

   ஆஹா, மிக்க மகிழ்ச்சி. தங்களின் விமர்சனத்தில் அதனைப்படிக்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்,

   //மேலே சொன்ன இருபெரும் எழுத்தாளர்களுக்கு இடையில், மதுரை S.P. செந்தில்குமார் மற்றும் அடியேனின் தங்களுடனான சந்திப்பை, இடைச் செருகலாக போட்டு நெருக்கி விட்டீர்கள். தனிப்பதிவாக எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.//

   இந்த என் தொடர் 14.03.2016 முதல் ஆரம்பித்து 21.04.2016 வரை தொடர்ச்சியாக ஒருநாள் விட்டு ஒருநாள் வீதம் வெளியிடுவதாக ஏற்கனவே SCHEDULE செய்து, திட்டமிட்டு அறிவிக்கப்பட்டும் விட்டதால், இன்றைய என் பதிவினிலேயே (பகுதி-6) இந்த நம் அவசர சந்திப்பினையும் நான் கொண்டுவரும்படி ஆகிவிட்டது.

   இருப்பினும் அந்த முதுபெரும் எழுத்தாளர்கள் இருவரையும் மேலும் கீழுமாக அகட்டி தள்ளிவிட்டு, நம் சந்திப்பினை நடுவில் CENTRE OF ATTRACTION ஆகக் கொண்டு வந்துள்ளேனாக்கும். :)

   //தங்களைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில், மதுரை S.P. செந்தில்குமார் அவர்கள் அழைத்தவுடனேயே கிளம்பி விட்டேன்.//

   மிக்க மகிழ்ச்சி சார். தாங்கள் அவருடனேயே சேர்ந்து வந்ததும் மிகவும் நல்லதாப்போச்சு. இல்லாதுபோனால் என் வீட்டுக்கு வரும் வழி முதலியன சொல்லி அவருக்குப் புரியவைக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டு இருந்திருக்கும்.

   தங்களையே நான் பார்த்து ரொம்ப நாளாச்சு. கடைசியாக ஸ்ரீரங்கத்தில் நாம் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொண்டும் ஒன்றரை மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. என் இல்லத்தில் தங்களை நான் சந்தித்தது சென்ற வருஷம் 2015-இல் மட்டுமே. 2016 என்ற புத்தாண்டில் என் இல்லத்தில் முதன் முதலாக சந்திக்கும் பதிவர்கள் நீங்கள் இருவரும் மட்டுமே. அதில் எனக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியே.

   //உங்களைச் சந்திப்பதற்கு முன்னர் மணவை ஜேம்ஸ் மற்றும் ‘ஊமைக் கனவுகள்’ ஜோசப் விஜு இருவரையும் சந்தித்து விட்டு உங்கள் இல்லம் வந்தோம்.//

   அப்படியா! அவர்கள் இருவரும் நம் திருச்சியில் தான் இருக்கிறார்களா? தாங்கள் சொல்லும் இதுவே எனக்குப் புதிய செய்தியாக உள்ளது.

   //சந்தித்த நிகழ்வினை இனிமையான நடையில் சொல்லி மகிழ்ந்துள்ளீர்கள். மிக்க நன்றி.//

   தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். என்றும் அன்புடன் VGK

   Delete
 14. நான் லேட்டா வந்துட்டேனோ.ஒவ்வொரு பதவலும் இரண்டு பிரபலங்களை அறிமுகப்படுத்தி வறீங்க. தெரிந்து கொள்வதில் சந்தோஷம். நன்றி...

  ReplyDelete
  Replies
  1. ஆல் இஸ் வெல்....... March 25, 2016 at 6:02 PM

   வாங்கோ, வணக்கம்.

   //நான் லேட்டா வந்துட்டேனோ.//

   இல்லை. பறந்து வந்துள்ளீர்கள் வெகு வேகமாக ! (சந்தேகமானால் உங்கள் PROFILE PHOTO வை நீங்களே பாருங்கோ)

   //ஒவ்வொரு பதிவிலும் இரண்டு பிரபலங்களை அறிமுகப்படுத்தி வருகிறீங்க.//

   நல்ல ஒரு கண்டுபிடிப்பு.

   //தெரிந்து கொள்வதில் சந்தோஷம். நன்றி...//

   தாங்கள் தெரிந்து கொண்டதில் எனக்கும் சந்தோஷம்.

   தொடர் வருகைக்கும், தொய்வில்லாக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

   Delete
 15. இவங்களபத்தி இப்த்தான் கேள்வி படுறேன்.சிறப்பான அறிமுகங்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்...

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. March 25, 2016 at 6:37 PM

   வாங்கோ, வணக்கம். இப்போத்தான் நினைச்சேன். ஆயுஷு நூறு .... இல்லை ஆயிரம் முத்துவுக்கு.:)

   //இவங்களபத்தி இப்பத்தான் கேள்விப்படுறேன். சிறப்பான அறிமுகங்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்...//

   மிக்க மகிழ்ச்சீங்க. தங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றீங்க ! வாழ்க !!

   யாரோ ஒருத்தர் சொல்றார்ன்னு ஹிந்திப் பாட்டுப் பக்கம் மாறிப் போகப்போறீங்களா?

   ’தமிழுக்கு .... அமுதென்று .... பெயர்’ மறந்துடாதீங்கோ.

   இந்தப்பாட்டையே கூட நீங்க நேயர் விருப்பம் போல எனக்காகப் போடலாமாக்கும். :))))) - VGK

   Delete
  2. அன்புள்ள திரு V.G.K அவர்களுக்கு வணக்கம்! நேரம் கிடைக்கும்போது, கரிச்சான் குஞ்சு - ”பசித்த மானிடம்” http://tthamizhelango.blogspot.com/2012/03/blog-post_08.html என்ற எனது பதிவினைப் படித்து பார்க்கவும்.

   Delete
  3. தி.தமிழ் இளங்கோ March 26, 2016 at 9:10 AM

   வாங்கோ சார், வணக்கம்.

   //அன்புள்ள திரு V.G.K அவர்களுக்கு வணக்கம்! நேரம் கிடைக்கும்போது, கரிச்சான் குஞ்சு - ”பசித்த மானிடம்” http://tthamizhelango.blogspot.com/2012/03/blog-post_08.html என்ற எனது பதிவினைப் படித்து பார்க்கவும்.//

   ஏற்கனவே படித்து 16.03.2012 அன்றே பின்னூட்டமும் இட்டுள்ளேன். இன்று மீண்டும் ஒருமுறை படித்து இரஸித்தேன். தகவலுக்கு நன்றிகள், சார்.

   அன்புடன் VGK

   Delete
 16. ஆர்வி அவர்கள் எழுதிய நாவல்கள், அவர் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு ஆற்றிய பணிகள் என்று ஆர்வி அவர்களுடன் நெருங்கிய பழக்கம் கொண்டிருந்த ஜீவி விவரிப்பதைப் படிக்கும் பொழுது சுவாரஸ்யமாக இருக்கிறது.//

  உண்மைதான், படிக்க தெரிந்து கொள்ள எவ்வளவு
  விவரங்கள் !


  //ஞானம் என்பது செறுக்காகித் தன்னையே பிடிசாம்பலாய்ச் சாப்பிட்டு விடாமல், அந்த வேள்வியை, ஏழ்மையிலும் புன்னகையுடன் எதிர்கொண்டு, தனது மேதமையின் ஸ்மரணையே இல்லாமல் வாழ்ந்துள்ள இவரின் வாழ்க்கையின் மகத்துவம் புரிகிறது’ என்கிறார் ஜீவி.//

  நாராயணசாமி அவர்கள் கரிச்சான் குஞ்சு என்று புனைப்பெயர் வைத்துக் கொண்டு எழுதியதும், தான் எனும் அகந்தை தலைக்கு ஏறாமல் வாழ்ந்த மாமனிதரை பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி ஜீவி சாருக்கும், உங்களுக்கும்.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு March 26, 2016 at 3:48 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   **ஆர்வி அவர்கள் எழுதிய நாவல்கள், அவர் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு ஆற்றிய பணிகள் என்று ஆர்வி அவர்களுடன் நெருங்கிய பழக்கம் கொண்டிருந்த ஜீவி விவரிப்பதைப் படிக்கும் பொழுது சுவாரஸ்யமாக இருக்கிறது.**

   //உண்மைதான், படிக்க தெரிந்து கொள்ள எவ்வளவு
   விவரங்கள் !//

   ஆமாம் மேடம், மிகவும் சந்தோஷம்.

   **ஞானம் என்பது செறுக்காகித் தன்னையே பிடிசாம்பலாய்ச் சாப்பிட்டு விடாமல், அந்த வேள்வியை, ஏழ்மையிலும் புன்னகையுடன் எதிர்கொண்டு, தனது மேதமையின் ஸ்மரணையே இல்லாமல் வாழ்ந்துள்ள இவரின் வாழ்க்கையின் மகத்துவம் புரிகிறது’ என்கிறார் ஜீவி.**

   //நாராயணசாமி அவர்கள் கரிச்சான் குஞ்சு என்று புனைப்பெயர் வைத்துக் கொண்டு எழுதியதும், தான் எனும் அகந்தை தலைக்கு ஏறாமல் வாழ்ந்த மாமனிதரை பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி ஜீவி சாருக்கும், உங்களுக்கும்.//

   பொருளாதாரத்தில் ஏழ்மையாயினும் பாண்டித்யத்தில் மிகப்பெரிய பணக்காரர்களாக இருந்துள்ள + எதையும் முற்றிலும் கற்று உணர்ந்து தெளிந்துள்ள மஹான்களின் மகத்துவமே இதுதான்.

   தங்களின் அன்பான வருகைக்கும், சிறப்பான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். VGK

   Delete
 17. பதிவர் சந்திப்பு விவரங்கள் அருமை. படங்கள் எல்லாம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு March 26, 2016 at 4:05 PM

   வாங்கோ மேடம் .....

   //பதிவர் சந்திப்பு விவரங்கள் அருமை. படங்கள் எல்லாம் அருமை.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். - VGK

   Delete
 18. எழுத்துலகின் சிறப்பு வாய்ந்த பெரியவர் ஆர்வி அவர்களைப் பற்றி இப்போதுதான் அறிகிறேன்.. இதுவரை அறிந்திராத எழுத்தாளர்களைப் பற்றியும் அறியும்போது இவ்வளவுநாள் இவர்களைப் பற்றி அறியாமல் போனோமே என்ற ஆதங்கம் எழுந்தாலும் இப்போதாவது அறிந்துகொள்ள முடிந்ததே என்னும் மகிழ்வு எழுகிறது. அதற்கான வாய்ப்பினை நல்கிய ஜீவி சாருக்கும் வழிவகுத்த தங்களுக்கும் மிக்க நன்றி.

  கரிச்சான் குஞ்சு அவர்களின் வாழ்க்கை குறித்த ஜீவி சாரின் எழுத்து, அவரது சிறப்பினை மேலும் எடுத்தியம்புகிறது. ஆசானின் மேல் கொண்ட பற்றால் அடிமை என்று பெயர்படும் தாசனை புனைபெயராக்கிக் கொண்டோர் பலரை அறிவோம். ஆனால் ஆசானைத் தாயாய்க்கொண்டு தன்னை அவர்தம்பிள்ளையாய் எண்ணி புனைபெயரிட்டுக்கொண்ட நாராயணஸ்வாமி அவர்களின் செயல் வியப்பூட்டுகிறது.

  ReplyDelete
  Replies
  1. கீத மஞ்சரி March 26, 2016 at 4:46 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //எழுத்துலகின் சிறப்பு வாய்ந்த பெரியவர் ஆர்வி அவர்களைப் பற்றி இப்போதுதான் அறிகிறேன்.. இதுவரை அறிந்திராத எழுத்தாளர்களைப் பற்றியும் அறியும்போது இவ்வளவுநாள் இவர்களைப் பற்றி அறியாமல் போனோமே என்ற ஆதங்கம் எழுந்தாலும் இப்போதாவது அறிந்துகொள்ள முடிந்ததே என்னும் மகிழ்வு எழுகிறது.//

   நம் ஜீவி சாரின் நூலினைப்படித்ததும், எனக்கும் இதே போன்ற எண்ணங்கள்தான் ஏற்பட்டன.

   //அதற்கான வாய்ப்பினை நல்கிய ஜீவி சாருக்கும் வழிவகுத்த தங்களுக்கும் மிக்க நன்றி. //

   மிக்க மகிழ்ச்சி, மேடம்.

   //கரிச்சான் குஞ்சு அவர்களின் வாழ்க்கை குறித்த ஜீவி சாரின் எழுத்து, அவரது சிறப்பினை மேலும் எடுத்தியம்புகிறது.//

   ஆமாம் மேடம்.

   //ஆசானின் மேல் கொண்ட பற்றால் அடிமை என்று பெயர்படும் தாசனை புனைபெயராக்கிக் கொண்டோர் பலரை அறிவோம்.//

   ஆம். பாரதிதாசன், கண்ணதாசன், இராமதாஸர், புரந்தரதாஸர் என எவ்வளவோ பேர்களை நாம் நேரிலும், நம் வாழ்நாளிலும், சில சரித்திரங்களிலும், புராணங்களிலும்கூட அறிகிறோம்.

   //ஆனால் ஆசானைத் தாயாய்க்கொண்டு தன்னை அவர்தம்பிள்ளையாய் எண்ணி புனைபெயரிட்டுக்கொண்ட நாராயணஸ்வாமி அவர்களின் செயல் வியப்பூட்டுகிறது. //

   பொதுவாக பறவைகளின் அல்லது கோழிகளின் குழந்தைகளைத்தான் குஞ்சு எனச் சொல்லி நானும் அறிவேன். கரிச்சான் குஞ்சாகிய இவர் தன் ஆசானாகிய கரிச்சானை தன் தாயாகவே ஏற்றுக்கொண்டு செயல் பட்டுள்ளார் என்ற தங்களின் இந்த மாபெரும் விளக்கம் மட்டுமே என்னை இப்போது மிகவும் வியப்பூட்டுவதாக உள்ளது.

   இதில் தாங்கள் காட்டியுள்ள தங்களின் கூர்மையான அறிவுக்கும், தனித்தன்மை வாய்ந்த தனிப்பார்வைக்கும், மிக அழகிய எனக்குத் திருப்தியளிக்கும் விளக்கத்திற்கும் என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.

   ’விமர்சன வித்தகி’ என்றால் சும்மாவா? :)

   பிரியமுள்ள கோபு

   Delete

 19. பதிவுலக எழுத்தாளர்களின் சந்திப்பு பற்றிய விவரங்களும் படங்களும் மனத்துக்கு மகிழ்வளிக்கின்றன. பதிவுலகில் நான் இதுவரை எவரையும் நேரில் சந்தித்ததில்லை என்ற ஆதங்கம் இருந்தாலும் இதுபோன்ற படங்களைப் பார்க்கும்போது சந்திப்பில் நானும் கலந்துகொண்டாற்போன்ற மகிழ்வேற்படுகிறது. முக்கியமாய் திருச்சி மலைக்கோட்டை பின்னணியைப்பார்க்கும்போது அதிகமாகவே உணர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கீத மஞ்சரி March 26, 2016 at 4:49 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   பதிவுலக எழுத்தாளர்களின் சந்திப்பு பற்றிய விவரங்களும் படங்களும் மனத்துக்கு மகிழ்வளிக்கின்றன. பதிவுலகில் நான் இதுவரை எவரையும் நேரில் சந்தித்ததில்லை என்ற ஆதங்கம் இருந்தாலும் இதுபோன்ற படங்களைப் பார்க்கும்போது சந்திப்பில் நானும் கலந்துகொண்டாற்போன்ற மகிழ்வேற்படுகிறது. முக்கியமாய் திருச்சி மலைக்கோட்டை பின்னணியைப்பார்க்கும்போது அதிகமாகவே உணர்கிறேன். //

   நம்ம ஊர் மலைக்கோட்டை, எப்போதுமே தன்னைவிட மிகப்பெரிய மனக்கோட்டைகளை நாம் நம் மனதில் கட்ட வழிவகுக்கும் என்பது நாமும், திருச்சியான நம் ஊர்க்காரர்களும் நன்கு அறிந்த ஒன்றே. :)

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், மிகச்சிறப்பு வாய்ந்த உணர்வுபூர்வமான + ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   பிரியமுள்ள கோபு

   Delete
 20. இதுவரை தெரிந்திராத பல எழுத்தாளர்களை இங்கே தெரிந்து கொள்ள முடிகிறது.ஸாமி காட்டிதான் கொடுக்கும் ஊட்டிக்கொடுக்காதுன்னு சொல்லுவாங்க. இங்கயோ ஜி.வி.ஸாரும் நீங்களும் ஊட்டியே விடுறீங்க.

  ReplyDelete
  Replies
  1. ப்ராப்தம் March 26, 2016 at 5:17 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இதுவரை தெரிந்திராத பல எழுத்தாளர்களை இங்கே தெரிந்து கொள்ள முடிகிறது.//

   சந்தோஷம்.

   //ஸாமி காட்டிதான் கொடுக்கும். ஆனால் ஊட்டிக் கொடுக்காதுன்னு சொல்லுவாங்க. இங்கேயோ ஜீ.வி.ஸாரும் நீங்களும் ஊட்டியே விடுறீங்க.//

   ஆஹா, நன்றாக உணர்ந்து சொல்லியுள்ளீர்கள்.

   ஊட்டியே கொடுத்தாலும் அதனை உட்கொள்ளும் ’ப்ராப்தம்’ எல்லோருக்கும் அமைந்துவிடாது.

   ‘பிராப்தம்’ அவர்களுக்கு அந்தப் ‘ப்ராப்தம்’ அமைந்துள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே.

   தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

   Delete
 21. கரிச்சான் குஞ்சு - சுவாரசியமான விவரம். பதிவு எழுதத் தொடங்கிய பிறகு தற்செயலாக அறிந்து கொண்ட பெயர் கரிச்சான் குஞ்சு. யார் சிலாகித்துச் சொன்னார்கள் என்று நினைவில்லை - ஆனால் பெயர் அப்படியே பதிந்துவிட்டது. இவர்களையெல்லாம் படித்தவர் என்ற வகையில் ஜீவியைக் கும்பிடத் தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. அப்பாதுரை March 26, 2016 at 11:00 PM

   வாங்கோ சார், வணக்கம்.

   //கரிச்சான் குஞ்சு - சுவாரசியமான விவரம். பதிவு எழுதத் தொடங்கிய பிறகு தற்செயலாக அறிந்து கொண்ட பெயர் கரிச்சான் குஞ்சு. யார் சிலாகித்துச் சொன்னார்கள் என்று நினைவில்லை - ஆனால் பெயர் அப்படியே பதிந்துவிட்டது.//

   ஆஹா, சந்தோஷம், சார்.

   //இவர்களையெல்லாம் படித்தவர் என்ற வகையில் ஜீவியைக் கும்பிடத் தோன்றுகிறது.//

   மிகச்சரியாகச் சொன்னீர்கள். கும்பிடப்பட வேண்டியவர்தான்.

   தங்கள் அன்பான தொடர் வருகைக்கும், அருமையான பொறுமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார். - VGK

   Delete
 22. கு.ப. ரா தான் அவர்கள்தான்
  கரிச்சான் என அறிய மிக்க சந்தோஷம்
  காரணம் இளைய வயதில் எங்கள் ஊர்
  நூலகத்தில் உள்ள ஏறகுறைய அனைத்து
  நூல்களையும் தேடித் தேடி படைத்துவிடுவேன்
  குறிப்பிட்ட புத்தகத்தைத் தேடி எவரும் கேட்க
  அதன் இருப்பிடம் தெரியவில்லையெனில்
  நூலகர் " அந்தப் பையன் வரட்டும் "
  எனச் சொல்லுவார். காரணம் புத்தகம் தேடுகையில்
  இரண்டு நல்ல புத்தகம் கிடைத்தால் அதில் ஒன்றை
  காந்தியடிகள் நூல்கள் இருக்கும் அடுக்கில்
  நுழைத்துவைத்துச் சென்றுவிடுவேன்
  யாரும் அந்தப் பக்கம் போக மாட்டார்கள்
  அப்போதே "கடலும் கிழவனும் "
  முழுக்கதையைப் படித்திருக்கிறேன் என்றால்
  எனது தீவிர வாசிப்பின் தன்மையைப்
  புரிந்து கொள்ளலாம்

  இந்த நிலையில் கரிச்சான் என்கிற பெயர் கூடத்
  தெரியாமல் இருந்டிருக்கிறேனே எனத் தெரிய
  கொஞ்சம் சங்கடப் பட்டுத்தான் போனேன்
  நல்லவேளை அது கு.ப.ரா தான் என அறிய
  கொஞ்சம் சந்தோஷம்

  பின்னூட்ட்டத்தில் அதைத் தெரிவித்த
  ஜீவி சாருக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. Ramani S March 28, 2016 at 4:59 AM

   வாங்கோ Mr. RAMANI Sir, மீண்டும் வணக்கம்.

   //காரணம் புத்தகம் தேடுகையில் இரண்டு நல்ல புத்தகம் கிடைத்தால் அதில் ஒன்றை காந்தியடிகள் நூல்கள் இருக்கும் அடுக்கில் நுழைத்துவைத்துச் சென்றுவிடுவேன். யாரும் அந்தப் பக்கம் போக மாட்டார்கள்//

   நல்ல நகைச்சுவை. மிகவும் ரஸித்தேன்.

   மிக்க நன்றி, சார். அன்புடன் VGK

   Delete
 23. கரிச்சான், கரிச்சான் குஞ்சு பெயர்கள் பற்றிய விபரங்களை ஏற்கெனவே அறிந்திருக்கிறேன். பறவை கூர்நோக்கல் - கரிச்சான் குருவி பற்றிய என் பதிவில் இப்படி எழுதியிருக்கிறேன்:-
  “கரிச்சான் என்றவுடன் உங்களுக்குப் புகழ் பெற்ற எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன் நினைவுக்கு வருகிறாரா?
  ஆம். கு.ப.ரா.வின் புனைபெயர்களுள் ஒன்று ‘கரிச்சான்,’.

  கு.ப.ராவின் எழுத்தால் கவரப்பட்ட எழுத்தாளர் நாராயணசாமி, ‘கரிச்சான் குஞ்சு,’ என்ற புனைபெயரில் எழுதினார். இவர் எழுதிய ‘பசித்த மானுடம்,’ புதினம் மிகவும் புகழ் பெற்றது.
  பறவையைப் பற்றிச் சொல்லாமல், எழுத்தாளரைப் பற்றிச் சொல்வதும் ஒரு காரணமாகத் தான்.
  தமிழில் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் இருவர், இப்பறவையின் பெயரைப் புனைபெயராய்ச் சூடியிருப்பது, இப்புள்ளுக்கும் பெருமை தானே?”
  பசித்த மானுடம் நான் படிக்க வேண்டிய லிஸ்டில் உள்ளது. எப்போது படிக்க வாய்ப்புக்கிடைக்குமோ தெரியவில்லை. ஆர்.வி அவர்கள் எழுதிய எதையும் வாசித்ததில்லை. இந்நூல் பார்த்தே அவர் படைப்புகள் பற்றித் தெரிந்து கொண்டேன்.
  நூல் விமர்சனத்துக்கிடையில் தமிழ் இளங்கோ & செந்தில் அவர்களைச் சந்தித்த விபரத்தையும் வெளியிட்டுள்ளீர்கள். இருவரையும் புதுகை பதிவர் விழாவன்று சந்திக்கும் அருமையான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
  அவர்கள் பெயரைச் சொல்லிக்கொண்டு பஜ்ஜிகள் நீங்கள் வாங்கி உள்ளே தள்ளியது நல்ல தமாஷ்! ரசித்துச் சிரித்தேன்.
  நன்றி சார்!

  ReplyDelete
  Replies
  1. ஞா. கலையரசி March 28, 2016 at 7:43 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //கரிச்சான், கரிச்சான் குஞ்சு பெயர்கள் பற்றிய விபரங்களை ஏற்கெனவே அறிந்திருக்கிறேன். பறவை கூர்நோக்கல் - கரிச்சான் குருவி பற்றிய என் பதிவில் இப்படி எழுதியிருக்கிறேன்:-

   “கரிச்சான் என்றவுடன் உங்களுக்குப் புகழ் பெற்ற எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன் நினைவுக்கு வருகிறாரா?

   ஆம். கு.ப.ரா.வின் புனைபெயர்களுள் ஒன்று ‘கரிச்சான்,’.

   கு.ப.ராவின் எழுத்தால் கவரப்பட்ட எழுத்தாளர் நாராயணசாமி, ‘கரிச்சான் குஞ்சு,’ என்ற புனைபெயரில் எழுதினார். இவர் எழுதிய ‘பசித்த மானுடம்,’ புதினம் மிகவும் புகழ் பெற்றது.

   பறவையைப் பற்றிச் சொல்லாமல், எழுத்தாளரைப் பற்றிச் சொல்வதும் ஒரு காரணமாகத் தான்.

   தமிழில் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் இருவர், இப்பறவையின் பெயரைப் புனைபெயராய்ச் சூடியிருப்பது, இப்புள்ளுக்கும் பெருமை தானே?” //

   தங்களின் வலைத்தளத்தினில் நானும் இதனைப்படித்துள்ளேன். ஜீவி சாரின் நூலில் வரிசையாக நான் படித்து வந்தபோது ‘கரிச்சான் குஞ்சு’ என்ற தலைப்பைப் பார்த்ததுமே, எனக்குத் தங்கள் ஞாபகமும், தங்களின் அந்தப்பதிவின் ஞாபகமும், அந்தக் கரிச்சான் என்ற பறவையின் ஞாபமும் மட்டுமே வந்தன.

   //பசித்த மானுடம் நான் படிக்க வேண்டிய லிஸ்டில் உள்ளது. எப்போது படிக்க வாய்ப்புக்கிடைக்குமோ தெரியவில்லை.//

   படிக்க வேண்டும் என்று ஆவலுடன் நினைப்பதும் ஓர் பசியேதான். இருப்பினும் பசி வேளையில் படிக்காமல் திருப்தியாகவும் நிறைவாகவும் சாப்பிட்டபின் படியுங்கோ, ப்ளீஸ். :)

   //ஆர்.வி அவர்கள் எழுதிய எதையும் வாசித்ததில்லை. இந்நூல் பார்த்தே அவர் படைப்புகள் பற்றித் தெரிந்து கொண்டேன்.//

   அப்படியா! ஆச்சர்யம்தான்!!

   //நூல் விமர்சனத்துக்கிடையில் தமிழ் இளங்கோ & செந்தில் அவர்களைச் சந்தித்த விபரத்தையும் வெளியிட்டுள்ளீர்கள். இருவரையும் புதுகை பதிவர் விழாவன்று சந்திக்கும் அருமையான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.//

   இருவரும் மிகவும் நல்லவர்கள். சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே. முதன் முதலாக நான் அன்று சந்திக்க நேர்ந்த திரு. செந்தில்குமார், அவர்கள் ‘நிறைகுடம் தளும்பாது’ என்பதுபோல அமைதியோ அமைதியாக இருந்தார். கொஞ்சம் கொஞ்சம் செய்திகளை மட்டுமே இனிமையாகப் பேசி மகிழ்வித்தார். என்னைப்போல வள வளா ஆசாமி இல்லை என்று அறிந்துகொண்டேன். :)

   //அவர்கள் பெயரைச் சொல்லிக்கொண்டு பஜ்ஜிகள் நீங்கள் வாங்கி உள்ளே தள்ளியது நல்ல தமாஷ்! ரசித்துச் சிரித்தேன். நன்றி சார்! //

   :))))))))))))))))))))

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பல கருத்துக்களுக்கும், என் நகைச்சுவை வரிகளை நன்கு ரஸித்து மகிழ்ந்ததற்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். நன்றியுடன் கோபு

   Delete
 24. ஆர்வியை நேரிலேயே பார்த்து அவர் கதைகளைப்பற்றிச் சொல்லி இருக்கேன். என் சம்பந்திக்கு அவர் சம்பந்தி என்பதால் எங்கள் பிள்ளை நிச்சயதார்த்தத்துக்கு வந்தார். கல்யாணத்துக்கு வர முடியலை! அப்போவே உடல்நலம் குன்ற ஆரம்பித்திருந்தது. கரிச்சான் குஞ்சுவின் சில கதைகளை வாசித்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam March 29, 2016 at 4:49 PM

   வாங்கோ வணக்கம்.

   //ஆர்வியை நேரிலேயே பார்த்து அவர் கதைகளைப்பற்றிச் சொல்லி இருக்கேன். என் சம்பந்திக்கு அவர் சம்பந்தி என்பதால் எங்கள் பிள்ளை நிச்சயதார்த்தத்துக்கு வந்தார். கல்யாணத்துக்கு வர முடியலை! அப்போவே உடல்நலம் குன்ற ஆரம்பித்திருந்தது.//

   எழுத்துலகில் தாங்கள் மிகப் பெரும்புள்ளி என என்னால் இப்போது மீண்டும் அறிய முடிகிறது. மிகவும் சந்தோஷம், மேடம்.

   //கரிச்சான் குஞ்சுவின் சில கதைகளை வாசித்திருக்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

   Delete
 25. மேஷா ஸாரி குருஜி டைபு சொதப்புது....... மேஸாக சுத்துதே மின்னலு உருண்ட அது " இந்த" ஒங்ட மின்னுவா??????....ஒங்கட சந்திச்சுகிட ஆரெல்லா வாராக. எனிக்கு ஒங்கட நேருல பாக்கோணும்........
  இங்கிட்டும் ஒரு வயசாளி படம் போட்டிக. கரிச்சான் குஞ்சு. இன்னா பேரு குருஜி.......

  ReplyDelete
  Replies
  1. mru March 30, 2016 at 10:20 AM

   வாங்கோ முருகு, வணக்கம்மா.

   //மேஷா ஸாரி குருஜி டைபு சொதப்புது....... மேலாக சுத்துதே மின்னலு உருண்ட அது " இந்த" ஒங்கட மின்னலுவா??????....//

   எங்கட ’மின்னலு முருகு’வே தான், அப்படி சும்மா ஜோராக ஜொலிக்குமாறு மேலே நான் காட்டியுள்ளேன்.

   //ஒங்கட சந்திச்சுகிட ஆரெல்லா வாராக. எனக்கு ஒங்கட நேருல பாக்கோணும்........//

   சீக்கரம் புறப்பட்டு வாங்கோ முருகு. உங்களுக்காக அலங்கரிக்கப்பட்ட ரூ 1000 பரிசுப்பணமும், அந்தப் பார்க்கர் பேனாவும் என்னிடம் இன்னும் பத்திரமாக உள்ளன. தங்களின் வருகைக்காகக் காத்துள்ளன அவைகளும் .... என்னைப்போலவே.

   //இங்கிட்டும் ஒரு வயசாளி படம் போட்டிக. கரிச்சான் குஞ்சு. இன்னா பேரு குருஜி.......//

   கரிச்சான் என்பது ஓர் பறவையின் பெயர். ஒரு பிரபல எழுத்தாளர் அந்தக்காலத்தில் இதை புனைப்பெயராக வைத்திருந்தார். அவரை குருஜியாக ஏற்றுக்கொண்ட இந்தப்பெரியவர் தனக்கு ‘கரிச்சான் குஞ்சு’ என புனைப் பெயர் சூட்டிக்கொண்டுள்ளார். இப்போ விளங்கிச்சா?

   தங்களின் அன்பான வருகைக்கு நன்றி, முருகு.

   அன்புடன் குருஜி கோபு

   Delete
 26. எழுத்தாளர்கள் இவர்களை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டோம் விரிவாக. மிக்க நன்றி சார்.

  ஆனால் மற்ற இருவரையும் அதான் நம்ம வலை நண்பர்கள் அவர்களை நன்றாகத் தெரியுமே!!! அருமையான சந்திப்பு. செந்தில் அவர்களது தளத்தில் வாசித்தோம். இப்போதுதான் வலைப்பக்கம் வருவதால் இளங்கோ அவர்களின் பக்கமும் செல்ல வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. Thulasidharan V Thillaiakathu April 3, 2016 at 3:39 PM

   வாங்கோ, வணக்கம்.

   //எழுத்தாளர்கள் இவர்களை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டோம் விரிவாக. மிக்க நன்றி சார்.//

   மிக்க மகிழ்ச்சி, சார்.

   //ஆனால் மற்ற இருவரையும் அதான் நம்ம வலை நண்பர்கள் அவர்களை நன்றாகத் தெரியுமே!!!//

   அவர்கள் இன்றைய பதிவுலகப் பிரபலங்கள் ஆச்சே.:)

   //அருமையான சந்திப்பு. செந்தில் அவர்களது தளத்தில் வாசித்தோம். இப்போதுதான் வலைப்பக்கம் வருவதால் இளங்கோ அவர்களின் பக்கமும் செல்ல வேண்டும்...//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

   Delete
 27. பதிவுலக முக்கனிகளின் சந்திப்பு அருமை வாழ்த்துகள் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. KILLERGEE Devakottai June 14, 2016 at 2:20 PM

   //பதிவுலக முக்கனிகளின் சந்திப்பு அருமை. வாழ்த்துகள் ஐயா.//

   வாங்கோ, வணக்கம்.

   முக்கனிகள் போன்ற அருமையான வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete