About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, March 28, 2016

ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 8’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.
நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள்,  செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி .

இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.  
13) கடல் கண்ட கனவு .. 
மீ.ப.சோமு
[பக்கம் 86 முதல் 89 வரை]


'வட்டத்தொட்டி’ என்பது திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் ரசிகமணி டி.கே.சி.யின் இல்லத்து நடுமுற்றத்தில் வட்டவடிவில் தொட்டிக்கட்டு அமைப்பில் இருந்த இடத்தில் தமிழ்ச்சான்றோர்கள் ஒன்றாகக்கூடி இலக்கியச் செல்வங்களை இனிமையாகப் பகிர்ந்து கொள்வார்கள். ராஜாஜியும், கல்கியும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் இதில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர். தவறாமல் மீ.ப. சோமசுந்தரம் அந்தக்கூட்டங்களில் ஓர் மாணவனைப்போல கலந்து கொள்வார். இதுவே தமிழ் இலக்கியத்தில் மிகுந்த பற்றுடன் பரிச்சயம் கொள்வதற்கு அவருக்குத் தூண்டுகோலாக அமைந்தது என்கிறார், ஜீவி.  

கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மறைந்த உடன், சிலரின் வேண்டுகோளை ஏற்று கல்கி பத்திரிகையின் ஆசிரியராக சில காலம் இருந்தார். அவர் கல்கியில் எழுதிய அழகான நாவல்தான் ’ரவிசந்திரிகா’. கல்கியில் வெளிவந்த ‘கடல் கண்ட கனவு’ என்ற நாவல் அழகான வர்ணனைகள் கொண்ட அவரின் அற்புதமான படைப்பாகும். இதைத்தவிர ‘நந்தவனம்’ ’எந்தையும் தாயும்’ ஆகிய இரு நாவல்களையும் சோமு எழுதியுள்ளார். ‘கேளாத கானம்’ ‘மஞ்சள் ரோஜா’ ‘திருப்புகழ் சாமியார்’ ஆனந்த விகடனில் சிறுகதைப் போட்டிக்கான பரிசுபெற்று பிரசுரம் ஆன  ’கல்லறை மோகினி' என்று நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறார்; ‘ஐம்பொன் மெட்டி’ ‘வீதிக்கதவு’ என்று இவரின் சிறுகதைத்தொகுப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. இவரின் ‘பொருநைக் கரையிலே’ ‘இளவேனில்’ ஆகிய கவிதைத்தொகுப்புகள் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் என பல தகவல்கள் கூறுகிறார், ஜீவி.  

இராஜாஜி அவர்களுக்கு அணுக்கமாக இருந்து அவரின் பிரசித்திபெற்ற ஆக்கங்களுக்கு எழுத்து வேலைகளில் உதவியாய் இருந்திருக்கிறார் சோமு அவர்கள். மீ.பா. சோமு அவர்கள் எழுதியுள்ள சித்தர்களின் வரலாறு பற்றி செய்த ஆய்வுகள். ‘சித்தர் இலக்கியம்’ என்னும் தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொகுப்பு நூலாக வெளியிட்டுள்ளது. 

கல்கியில் சோமு அவர்களால் எழுதப்பட்ட ‘அக்கரைச்சீமையில் ஆறுமாதங்கள்’ என்ற பயணக்கட்டுரைத் தொடருக்கு பிற்காலத்தில் சாகித்ய அகாதமி, விருது வழங்கியுள்ளது. இவரது படைப்புகள் பலவற்றை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது என இந்த நூலில் ஜீவி, மீ.பா.சோமு பற்றி பலசெய்திகளை அடுக்கிக்கொண்டே போய் உள்ளார்.14) சூரல் நாற்காலிப் பெரியவர் 
’நகுலன்’
[பக்கம் 90 முதல் 95 வரை]’நிழல்கள்’, ’நினைவுப்பாதை’, ’நாய்கள்’, ’நவீனன் டைரி’, ’சில அத்யாயங்கள்’, ’இவர்கள்’, ’வாக்குமூலம்’, ’அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி’ என்று 1965 இல் ஆரம்பித்து 2002 வரை நகுலன் எட்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். இவரின் இயற்பெயர்: துரைசாமி. இவரின் மிகப்பிரபலமான ஏழே வரிக்கவிதையொன்று ’ராமச்சந்திரனா என்று கேட்டேன்’ என்று ஆரம்பிக்கும். இவரது கோட் ஸ்டாண்டு கவிதைகள் இவரை என்றும் நம் நினைவில் வைத்திருக்கும். 

தான் பழகிக்களித்த, பழகி விலகிப்போன படைப்பாளி சகாக்களைப் பற்றி ‘இவர்கள்’ நாவலில் நிறைய தகவல்கள் கிடைக்கும். இறப்பு குறித்து எதிர்கொண்ட ஆவலாதிகளைக்கொண்டது ’வாக்குமூலம்’. தமது சொந்த செலவில் நகுலன் தொகுத்து வழங்கிய 'குருக்ஷேத்திரம்’ என்ற தொகுப்பு நூலைப்பற்றி சிறப்பித்துச் சொல்லியுள்ளார் ஜீவி. அதில் நகுலன் ரசித்த, எழுத்தால் தன்னைக் கவர்ந்தவர்களின் படைப்புக்களைப் பார்த்துப் பார்த்து தொகுத்துள்ளார் எனச்சொல்லி மகிழ்கிறார் ஜீவி.  சிறு பத்திரிகைகளில் நகுலனைப் பார்க்கத் தவறியவர்களுக்கு ‘காவ்யா’ மூலம் தொடர்ந்து நகுலன் படிக்கக்கிடைத்தார் என்றும் சொல்லி பூரித்துப்போய் உள்ளார்.


இவர் பிறந்த ஊர் கும்பகோணம். வளர்ந்து ஆளாகி வாழ்ந்தது திருவனந்தபுரம். கடைசிவரை திருமணமே செய்துகொள்ளாமல் 85 ஆண்டுகாலம் வாழ்ந்து மறைந்தவர், நகுலன்.


இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும். 

என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்  

இதன் அடுத்த பகுதியில் 
இடம்பெறப்போகும் 
இரு பிரபல எழுத்தாளர்கள்: 


  
   வெளியீடு: 30.03.2016 பிற்பகல் 3 மணிக்கு.

காணத் தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள் !! 

 

39 comments:

 1. அறிமுகம் அருமை நண்பரே
  இதுவரை நான் நூல்கள்
  படித்ததில்லை இந்த பதிவு
  நூல்கள் படிக்க ஆவலை
  தூண்டுகிறது.....
  அறிமுகம் தொடரட்டும் நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. Ajai Sunilkar Joseph March 28, 2016 at 3:43 PM

   வாங்கோ, வணக்கம்.

   //அறிமுகம் அருமை நண்பரே. இதுவரை நான் நூல்கள்
   படித்ததில்லை. இந்த பதிவு நூல்கள் படிக்க ஆவலைத்
   தூண்டுகிறது..... அறிமுகம் தொடரட்டும் நண்பரே..//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   Delete


 2. திரு மீ.ப.சோமு அவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவரது படைப்புகளைப் படித்ததில்லை. இந்த தொடர் தந்த மேலதிக தகவல்களால் அவரது படைப்புகளை படிக்க ஆவலாய் உள்ளேன்.

  நகுலன் என்கிற திரு துரைசாமி அவர்கள் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இவரும் ‘கும்மோணத்துக்காரர்’ என்பதை அறியும்போது வியப்பே மேலிடுகிறது. இவரது படைப்புகளையும் படிக்க ஆசை.

  திரு ஜீ.வி அவர்கள் அறிமுகம் செய்துள்ள மறக்கமுடியாத தமிழ் எழுத்தாளர்களை தங்களின் தொடர் மூலம் அறிய வைத்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வே.நடனசபாபதி March 28, 2016 at 6:04 PM

   வாங்கோ சார், வணக்கம்.

   //திரு மீ.ப.சோமு அவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவரது படைப்புகளைப் படித்ததில்லை. இந்த தொடர் தந்த மேலதிக தகவல்களால் அவரது படைப்புகளை படிக்க ஆவலாய் உள்ளேன். //

   மிக்க மகிழ்ச்சி சார்.

   //நகுலன் என்கிற திரு துரைசாமி அவர்கள் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.//

   அப்படியா? நல்லது.

   //இவரும் ‘கும்மோணத்துக்காரர்’ என்பதை அறியும்போது வியப்பே மேலிடுகிறது. இவரது படைப்புகளையும் படிக்க ஆசை.//

   சந்தோஷம். ஜீவி சார் நூலின் அறிமுகங்களில் நிறைய எழுத்தாளர்கள் கும்மோணத்துக்காரர்களாகவே இருக்கிறார்கள். ஜீவி சாரே கும்மோணத்துக்காரர் என்பதாலோ என்னவோ :)

   சங்கீத மும்மூர்த்திகளாக ஓரளவு சமகாலத்தில் வாழ்ந்துள்ள .....

   1762...1827 சியாமா சாஸ்திரிகள்
   1767...1848 தியாகப்பிரும்மம்
   1776...1835 முத்துஸ்வாமி தீக்ஷதர்

   ஆகிய மூவருமே காவிரிக்கரைக்காரர்கள்தான். மூவருமே திருவாரூர், திருவையாறு போன்ற ஸ்தலங்களில் பாடியுள்ளனர்.

   அதுபோல இந்த பிரபல எழுத்தாளர்களில் பலரும் காவிரிக்கரைக் காரர்களாகவே உள்ளனர், என்பது மேலும் வியப்பாகத்தான் உள்ளது.

   //திரு ஜீ.வி அவர்கள் அறிமுகம் செய்துள்ள மறக்கமுடியாத தமிழ் எழுத்தாளர்களை தங்களின் தொடர் மூலம் அறிய வைத்தமைக்கு நன்றி! //

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். - VGK

   Delete
 3. மீ ப சோமு பற்றி திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய நூல் ஒன்றிலும் படித்து விட்டு, ஜீவி ஸார் தனது பூவனம் தளத்தில் இவரைப் பற்றி எழுதி இருந்த பதிவில் ஒரு கூடுதல் குறிப்புக் கொடுத்த நினைவு!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம். March 28, 2016 at 6:41 PM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம், வணக்கம்.

   //மீ ப சோமு பற்றி திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய நூல் ஒன்றிலும் படித்து விட்டு, ஜீவி ஸார் தனது பூவனம் தளத்தில் இவரைப் பற்றி எழுதி இருந்த பதிவில் ஒரு கூடுதல் குறிப்புக் கொடுத்த நினைவு!//

   இருக்கலாம். தங்களின் வருகைக்கு மிக்க நன்றி, ஸ்ரீராம். - VGK

   Delete
 4. மீ.ப.சோமு அவர்களின் சிறுகதைகள்
  படித்துள்ளேன்.நாவல்கள் எதுவும் படித்ததில்லை

  நகுலன் அவர்களின் கவிதைத் தொகுதி
  வாங்கிப் படித்து மூச்சு வாங்கியதுதான் மிச்சம்
  முன்பெல்லாம் அறிஞர் குழாம் பாராட்டுகிற
  எல்லா எழுத்தாளர்களையும் நானும்
  கண்ணை மூடிக்கொண்டு நானும்
  நமக்கெதுக்கு வம்பு எனப் பாராட்டிவிடுவேன்

  இப்போதெல்லாம் நமக்கு இலக்கிய அறிவு ,முதிர்ச்சி
  போறவில்லை எனச் சொன்னாலும் பரவாயில்லை என
  புரியாததை புரியவில்லை யெனவே
  சொல்லிவிடுவதுண்டு

  கதையில் மௌனி போல கவிதையில்
  நகுலன் அவர்கள்.

  அவருடைய கதைகள் படித்ததில்லை
  வாங்கிப் படிக்கவேண்டும்

  குருட்சேத்திரம் வாங்க உத்தேசம்

  அருமையான அறிமுகங்கள்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. Ramani S March 28, 2016 at 7:44 PM

   வாங்கோ Mr. S. RAMANI Sir, வணக்கம்.

   //மீ.ப.சோமு அவர்களின் சிறுகதைகள் படித்துள்ளேன். நாவல்கள் எதுவும் படித்ததில்லை.//

   அப்படியா, சந்தோஷம். ஏதோ படித்துள்ளீர்களே .... அதுவே பெரிய விஷயம் தானே.

   //நகுலன் அவர்களின் கவிதைத் தொகுதி வாங்கிப் படித்து மூச்சு வாங்கியதுதான் மிச்சம்.//

   அடடா, அப்படியா ! ஏனோ?

   //முன்பெல்லாம் அறிஞர் குழாம் பாராட்டுகிற எல்லா எழுத்தாளர்களையும் நானும் கண்ணை மூடிக்கொண்டு, நானும் நமக்கெதுக்கு வம்பு எனப் பாராட்டிவிடுவேன்.//

   ஓஹோ ! பொதுவாக பெரும்பாலோர் இன்றும் செய்துகொண்டிருப்பதுதான் இது. :)

   //இப்போதெல்லாம் நமக்கு இலக்கிய அறிவு, முதிர்ச்சி
   போறவில்லை எனச் சொன்னாலும் பரவாயில்லை என
   புரியாததை புரியவில்லையெனவே சொல்லிவிடுவதுண்டு.//

   இதுபோலச் சொல்லவும் ஓர் துணிவு வேண்டும். அது தங்களுக்கு இருக்கிறது. பாராட்டுகள். மேலும் தங்களுக்கே புரியாத எழுத்துக்கள், எங்களைப்போன்ற சாமானியர்களுக்கு சுத்தமாகவே புரியாதுதான்.

   அவ்வளவு ஏன்; நம் இன்றைய பதிவர்களின் சில எழுத்துக்களே எனக்குப் புரிவது இல்லை. மண்டை காய்ந்து விடுகிறது. அந்தக்காலப் பிரபலங்களின் எழுத்துக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். :)

   //கதையில் மௌனி போல கவிதையில் நகுலன் அவர்கள்.//

   :) புரிந்துகொண்டேன்.

   //அவருடைய கதைகள் படித்ததில்லை. வாங்கிப் படிக்கவேண்டும்//

   நல்லது.

   //குருட்சேத்திரம் வாங்க உத்தேசம்//

   மகிழ்ச்சி.

   //அருமையான அறிமுகங்கள். பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி சார். தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், தொய்வில்லாத நேர்மையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார். - VGK

   Delete
 5. இருவரைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். நகுலனின் நினைவுப்பாதை வாங்கி வைத்திருக்கிறேன். இன்னும் வாசிக்கவில்லை. நன்றி கோபு சார்!

  ReplyDelete
  Replies
  1. ஞா. கலையரசி March 28, 2016 at 7:50 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //இருவரைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன்.//

   சந்தோஷம்.

   //நகுலனின் நினைவுப்பாதை வாங்கி வைத்திருக்கிறேன். இன்னும் வாசிக்கவில்லை.//

   தங்களின் வாசிப்பு ஆர்வத்தினால் ஏராளமாக நூல்களை வாங்கிக்குவித்து வைத்துள்ளீர்கள் என என்னால் நன்கு உணர முடிகிறது. மெதுவாக நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாகக் கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கவும், மேடம்.

   //நன்றி கோபு சார்!//

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், நேர்மையான உண்மையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   நன்றியுடன் கோபு.

   Delete
 6. மீ.ப. சோமசுந்தரம் அவர்களைப் பற்றியும் நகுலன் அவர்களைப் பற்றியும் அரிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.
  நன்றி ஜீவி சாருக்கும், உங்களுக்கும்.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு March 29, 2016 at 6:58 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //மீ.ப. சோமசுந்தரம் அவர்களைப் பற்றியும் நகுலன் அவர்களைப் பற்றியும் அரிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி ஜீவி சாருக்கும், உங்களுக்கும்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   Delete
 7. இன்றைய பதவியிலும் இரண்டு பிரபல எழுத்தாளர்களைத்தெரிந்து கொள்ளமுடிந்தது. நன்றி..

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. March 29, 2016 at 9:41 AM

   வாங்கோ, வணக்கம்.

   //இன்றைய ப தி வி லு ம் இரண்டு பிரபல எழுத்தாளர்களைத்தெரிந்து கொள்ளமுடிந்தது. நன்றி..//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றீங்கோ. - VGK

   Delete
 8. நல்ல வாசிப்பு அனுபவம் வேண்டும் என்று தேடுதல் ஆர்வம் உண்டு. நல்ல எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் தெரிந்து கொள்ள இதுபோல பதிவுகள் மிகவும் உபயோகமாக இருக்கு.இதுபோல யாராவது எடுத்துச் சொன்னால்தானே புரிந்து கொள்ளமுடியும். அந்த சிறப்பான பணியை ஜி.வி. ஸாரும் தாங்களும் சிறப்பாக செய்து வருகிறீர்கள். நன்றி ஸார்....

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... March 29, 2016 at 9:48 AM

   வாங்கோ, வணக்கம்.

   //நல்ல வாசிப்பு அனுபவம் வேண்டும் என்று தேடுதல் ஆர்வம் உண்டு. நல்ல எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் தெரிந்து கொள்ள இதுபோல பதிவுகள் மிகவும் உபயோகமாக இருக்கு.//

   சந்தோஷம்.

   //இதுபோல யாராவது எடுத்துச் சொன்னால்தானே புரிந்து கொள்ளமுடியும்.//

   அதுவும் சரிதான் :)

   //அந்த சிறப்பான பணியை ஜி.வி. ஸாரும் தாங்களும் சிறப்பாக செய்து வருகிறீர்கள். நன்றி ஸார்....//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் தொடர் வருகைக்கு என் நன்றியோ நன்றிகள். - VGK

   Delete
 9. இன்றய பிரபல எழுத்தாளர்கள் அறிமுகங்களுக்கு நன்றிகள்..

  ReplyDelete
  Replies
  1. ஆல் இஸ் வெல்....... March 29, 2016 at 10:28 AM

   //இன்றைய பிரபல எழுத்தாளர்கள் அறிமுகங்களுக்கு நன்றிகள்..//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.vgk

   Delete
 10. இன்றும் இரண்டு பிரபல எழுத்தாளர்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இதற்கு மேல என்ன சொல்வதுனு தெரியலயே????

  ReplyDelete
  Replies
  1. ப்ராப்தம் March 29, 2016 at 10:31 AM

   வாங்கோ, வணக்கம்.

   //இன்றும் இரண்டு பிரபல எழுத்தாளர்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.//

   மிக்க மகிழ்ச்சி.

   //இதற்கு மேல என்ன சொல்வதுனு தெரியலயே????//

   இதற்குமேல் இங்கு ஒன்றும் சொல்ல வேண்டாம். ஆனால் அங்கு எதிர்பார்க்கிறேனாக்கும். :) - VGK

   Delete
 11. நல்ல அறிமுகங்கள்.உங்க பக்கம் வரத்தொடங்கிய பிறகு. நிறய விஷயங்கள் நிறய எழுத்தாளர்களை தெரிந்து கொள்ள அருமையான வாய்ப்புகள் கிடைக்கிறது. நன்றிகள் ஸார்...

  ReplyDelete
  Replies
  1. srini vasan March 29, 2016 at 11:02 AM

   வாங்கோ, வணக்கம்.

   //நல்ல அறிமுகங்கள்.உங்க பக்கம் வரத்தொடங்கிய பிறகு. நிறைய விஷயங்கள் நிறைய எழுத்தாளர்களை தெரிந்து கொள்ள அருமையான வாய்ப்புகள் கிடைக்கிறது. நன்றிகள் ஸார்...//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. vgk

   Delete
 12. நகுலனைப் படித்தது இல்லை. மீ.ப.சோமு அவர்களைப் படித்திருக்கிறேன். ரவிசந்திரிகா பலமுறை படித்த கதை! "க" பாஷையில் யானையிடம் வள்ளி பேசுவாள். இரு மனைவியரைத் திருமணம் செய்து கொண்டே ஆகவேண்டும் என்றிருந்த சட்டத்தைத் தன் வளர்ப்பு யானை மூலம் மாற்றி இருப்பாள் வள்ளி (வள்ளி தானா?)

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam March 29, 2016 at 4:46 PM

   வாங்கோ, வணக்கம்.

   //நகுலனைப் படித்தது இல்லை.//

   பரவாயில்லை.

   //மீ.ப.சோமு அவர்களைப் படித்திருக்கிறேன்.//

   மிகவும் சந்தோஷம்.

   //ரவிசந்திரிகா பலமுறை படித்த கதை!//

   வெரிகுட். ரவி ஒரு புல்லாங்குழல் மேதை. அவர் எடுத்து வளர்த்த பெண்: சந்திரிகா. இவர்கள் இருவரின் பெயர்களையும் இணைத்து ‘ரவிசந்திரிகா’ நாவல் பெயர் ஆயிற்று. இசையில் மிகுந்த ஈடுபாடுகொண்ட சோமு தன் நாவலில் பெயரை ரவிசந்திரிகா எனத் தேர்ந்தெடுத்ததில் வியப்பேதும் இல்லை. ஒரு இராகத்தின் பெயரே ரவிச்சந்திரா என்பதும் இங்கு பொருத்தமாகப் போகிறது. இவையெல்லாம் ஜீவி சாரின் நூல் மூலமாக நான் அறிந்துகொண்டது.

   //"க" பாஷையில் யானையிடம் வள்ளி பேசுவாள். இரு மனைவியரைத் திருமணம் செய்து கொண்டே ஆகவேண்டும் என்றிருந்த சட்டத்தைத் தன் வளர்ப்பு யானை மூலம் மாற்றி இருப்பாள் வள்ளி (வள்ளி தானா?)//

   எனக்குத் தெரியவில்லையே மேடம். இதற்கு நம் ஜீவி சாரே வருகைதந்து, ஒருவேளை தங்களுக்கு பதிலளிப்பார் என நான் எதிர்பார்க்கிறேன்.

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம். - VGK

   Delete
 13. இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் எழுத்தாளர்களின் பெயர்களை நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். தங்கள் பதிவின் மூலமே அவர்களைப் பற்றி நெருக்கமாக அறிந்துகொள்ள முடிகிறது. அந்த வாய்ப்பை நல்கிய ஜீவி அவர்களுக்கும், அவரின் நூல் வழியாக தினமும் இரண்டு எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் தங்களுக்கும் நன்றிகள் அய்யா!

  ReplyDelete
  Replies
  1. S.P.SENTHIL KUMAR March 29, 2016 at 7:17 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் எழுத்தாளர்களின் பெயர்களை நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். தங்கள் பதிவின் மூலமே அவர்களைப் பற்றி நெருக்கமாக அறிந்துகொள்ள முடிகிறது.//

   மிக்க மகிழ்ச்சி.

   //அந்த வாய்ப்பை நல்கிய ஜீவி அவர்களுக்கும், அவரின் நூல் வழியாக தினமும் இரண்டு எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் தங்களுக்கும் நன்றிகள் அய்யா!//

   தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

   Delete
 14. நட்சத்திரங்கலா சூப்பரா சொலிக்குது.அது இன்னா சூரல் நாக்காலி. ஏதுமே வெளங்கிகிட ஏலலியே.. இங்கூட்டும் ஒரு வயசாளி படம்தா போட்டிக.. ஆமா ஒரு டவுட்டு மிஸ்டேக் பண்ணிகிட கோடாது வெளங்கிச்சா???????? ஒங்கட ஆளக்காணோமே. ரெண்டு பேத்துக்கும் முட்டிகிச்சா????????.......

  ReplyDelete
  Replies
  1. mru March 30, 2016 at 10:30 AM

   வாங்கோ முருகு, வணக்கம். செளக்யமா, சந்தோஷமா இருக்கீகளா? அம்மி நலமா? அண்ணன் + அண்ணி நலமா?

   //நட்சத்திரங்கலா சூப்பரா சொலிக்குது.//

   மிக்க மகிழ்ச்சி.

   //அது இன்னா சூரல் நாக்காலி. ஏதுமே வெளங்கிகிட ஏலலியே..//

   ’சூரல்’ என்றால் ’பிரம்பு’ என்று பொருள்.

   சூரல் நாற்காலி = பிரம்பினால் செய்யப்பட்ட நாற்காலி.

   இப்போ வெளங்கிட ஏலிச்சா? :)

   //இங்கூட்டும் ஒரு வயசாளி படம்தா போட்டிக..//

   எழுத்தாளர்களில் சிலர் பிற்காலாத்தில் வயசாளிகளாக இருக்கக்கூடும் அல்லவா. அவர்களும் என்றோ ஒருநாள் உங்களைப்போல இளமையாக இருந்தவர்கள் மட்டுமே என்பதை எண்ணிப்பாருங்கோ, முருகு. என்றைக்குமே ஒருவர் இளமையுடன் இருக்க முடியாது அல்லவா?

   //ஆமா ஒரு டவுட்டு மிஸ்டேக் பண்ணிகிட கோடாது வெளங்கிச்சா????????//

   சரி. ஓரளவு விளங்கிக்கிட்டேன்.

   //ஒங்கட ஆளக்காணோமே. ரெண்டு பேத்துக்கும் முட்டிகிச்சா????????.......//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

   அவர்கள் இங்கு வராததில் எனக்கும் மனசுக்கு மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது. அழுகையே வருகிறதாக்கும்.

   அவங்க ஏன் இங்கு வருவதில்லை என எனக்குத் தெரியலையே முருகு. நான் யாரையும் இந்த என் தொடருக்கு வாங்கோ என வெற்றிலை-பாக்கு வைத்து அழைப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். அதனால் ஒருவேளை என் மீது கோபமாக இருக்குமோ என்னவோ?

   ஏன் வரவில்லை? என்று நீங்களே அவர்களிடம் கேட்டு எனக்கும் பதில் சொல்லுங்கோ, முருகு.

   தங்களின் அன்பான வருகைக்கும், வழக்கம்போல அலம்பலான இயல்பான கேள்விகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், முருகு.

   அன்புடன் குருஜி கோபு

   Delete
 15. மீ.ப.சோமு அவர்கள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர அவரது படைப்புகள் எதையும் வாசித்ததில்லை. நகுலன் அவர்களின் கவிதைகள் சிலவற்றை ஆங்காங்கே வாசித்திருக்கிறேன். மற்றப்படைப்புகள் பரிச்சயம் இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் வாசிப்பேன். இந்தப் பதிவு மூலம் இவர்கள் இருவரைப் பற்றியும் அறியமுடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. ஜீவி சாருக்கும் தங்களுக்கும் மிகவும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கீத மஞ்சரி March 31, 2016 at 1:56 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //மீ.ப.சோமு அவர்கள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர அவரது படைப்புகள் எதையும் வாசித்ததில்லை. நகுலன் அவர்களின் கவிதைகள் சிலவற்றை ஆங்காங்கே வாசித்திருக்கிறேன். மற்றப்படைப்புகள் பரிச்சயம் இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் வாசிப்பேன். இந்தப் பதிவு மூலம் இவர்கள் இருவரைப் பற்றியும் அறியமுடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. ஜீவி சாருக்கும் தங்களுக்கும் மிகவும் நன்றி.//

   தங்களின் அன்பான வருகைக்கும், மகிழ்ச்சியுடன் கூடிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   பிரியமுள்ள கோபு

   Delete
 16. இவர்களின் பெயர்களை அறிந்திருந்தாலும், தங்கள் பதிவுகள் பல தகவல்களைச் சொல்லி கூடுதலாக அறிய முடிகின்றது சார். மிக்க நன்றி பல எழுத்தாளர்களைத் தெரிந்து கொள்ள முடிகின்றது

  ReplyDelete
  Replies
  1. Thulasidharan V Thillaiakathu April 3, 2016 at 7:14 AM

   வாங்கோ, வணக்கம்.

   //இவர்களின் பெயர்களை அறிந்திருந்தாலும், தங்கள் பதிவுகள் பல தகவல்களைச் சொல்லி கூடுதலாக அறிய முடிகின்றது சார். மிக்க நன்றி பல எழுத்தாளர்களைத் தெரிந்து கொள்ள முடிகின்றது//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

   Delete
 17. அன்புள்ள மூத்த வலைப்பதிவர் V.G.K. அவர்களுக்கு வணக்கம்! மீ.ப.சோமு பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். எழுத்தாளர் நகுலனின் கவிதை, கட்டுரைகளை ‘தீபம்’ இதழ் தொகுப்பு போன்றவற்றில் படித்து இருக்கிறேன். ரசிகமணி டி.கே.சி அவர்களை கம்பராமாயணத்திற்கு அத்தாரிட்டி என்பார்கள். அவர் நடத்திய இலக்கிய வட்டம் பற்றி இங்கு குறிப்பிட்டதில் மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ April 3, 2016 at 10:10 PM

   //அன்புள்ள மூத்த வலைப்பதிவர் V.G.K. அவர்களுக்கு வணக்கம்!//

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //மீ.ப.சோமு பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். எழுத்தாளர் நகுலனின் கவிதை, கட்டுரைகளை ‘தீபம்’ இதழ் தொகுப்பு போன்றவற்றில் படித்து இருக்கிறேன்.

   மிக்க மகிழ்ச்சி, சார்.

   //ரசிகமணி டி.கே.சி அவர்களை கம்பராமாயணத்திற்கு அத்தாரிட்டி என்பார்கள். அவர் நடத்திய இலக்கிய வட்டம் பற்றி இங்கு குறிப்பிட்டதில் மிக்க மகிழ்ச்சி.//

   ஜீவி சாரின் நூலில் இது என்னை மிகவும் கவர்ந்ததாக இருந்தது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தில் பல்லாண்டுகள் நான் உறுப்பினராக இருந்தது, ஒவ்வொரு மாதக்கூட்டங்களுக்கும் நானும் ஆர்வத்துடன் போய் கலந்துகொண்ட அனுபவமும் எனக்கு உண்டு. அதெல்லாம் ஒருகாலம் என இப்போது ஆகிவிட்டது.

   தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். - அன்புடன் VGK

   Delete
 18. சோமு கேள்விட்டதுண்டு. நகுலன்... படிக்க நேர்ந்தது. நகுலன் என்ற புனைப்பெயர் வைத்துக்கொள்ளலாம் என்ற ஆசையுடன் ஒரு கதை எழுதி அந்த நாள் குங்குமத்துக்கு அனுப்பியிருந்தேன். சாவி கூப்பிட்டனுப்பியிருந்தார். முதல் சந்திப்பு. நகுலன் பற்றிச் சொல்லி, உன் மாதிரி எழுத்தாளரெல்லாம் நகுலன் போல் வர ஆசைப்படலாம்.. தப்பில்லே.. ஆனா எழுதணும், பெயரை மட்டும் வச்சுட்டா போறாது.. என்ற ரீதியில் எடுத்துச் சொன்னார். அவரிடம் 'சார் நான் சுஜாதா தவிர தமிழில் படிச்சதே இல்லை.. நகுலன் பெயர் பிடிக்கும்னு வச்சுகிட்டேன் அவ்ளோ தான்.. சத்தியமே வேறே ஒண்ணுமில்லே' என்று காலில் விழாத குறையாகச் சொன்னேன். (என் கதையை என் பெயரிலேயே வெளியிட்டார். நிறைய திருத்தங்கள்.. வேறே கதை). சில வாரங்கள் கழித்து கன்னிமாராவில் நகுலன் படித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அப்பாதுரை April 8, 2016 at 12:13 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //சோமு கேள்விட்டதுண்டு. நகுலன்... படிக்க நேர்ந்தது. நகுலன் என்ற புனைப்பெயர் வைத்துக்கொள்ளலாம் என்ற ஆசையுடன் ஒரு கதை எழுதி அந்த நாள் குங்குமத்துக்கு அனுப்பியிருந்தேன். சாவி கூப்பிட்டனுப்பியிருந்தார். முதல் சந்திப்பு. நகுலன் பற்றிச் சொல்லி, உன் மாதிரி எழுத்தாளரெல்லாம் நகுலன் போல் வர ஆசைப்படலாம்.. தப்பில்லே.. ஆனா எழுதணும், பெயரை மட்டும் வச்சுட்டா போறாது.. என்ற ரீதியில் எடுத்துச் சொன்னார். அவரிடம் 'சார் நான் சுஜாதா தவிர தமிழில் படிச்சதே இல்லை.. நகுலன் பெயர் பிடிக்கும்னு வச்சுகிட்டேன் அவ்ளோ தான்.. சத்தியமே வேறே ஒண்ணுமில்லே' என்று காலில் விழாத குறையாகச் சொன்னேன். (என் கதையை என் பெயரிலேயே வெளியிட்டார். நிறைய திருத்தங்கள்.. வேறே கதை). சில வாரங்கள் கழித்து கன்னிமாராவில் நகுலன் படித்தேன்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான சுவாரஸ்யமான அனுபவக் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். - VGK

   Delete
 19. நகுலன் சமீபத்தில் தான் 2010 வாக்கில் மறைந்தார் என்று நினைக்கிறேன். அவர் மறைவுச் செய்தியும் எனக்கு சாவி சந்திப்பை நினைவூட்டியது.

  ReplyDelete
  Replies
  1. அப்பாதுரை April 8, 2016 at 12:15 PM

   //நகுலன் சமீபத்தில் தான் 2010 வாக்கில் மறைந்தார் என்று நினைக்கிறேன். அவர் மறைவுச் செய்தியும் எனக்கு சாவி சந்திப்பை நினைவூட்டியது.//

   எழுத்தாளர் நகுலன் மறைந்த நாள்: 17/05/2007

   - VGK

   Delete
  2. டி. கே. துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட நகுலன் பிறந்தது தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் ஆனாலும் இறுதிவரை வாழ்ந்தது கேரளத்தின் திருவனந்தபுரத்தில். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் முதுகலையும் ஆராய்ச்சிப் பட்டமும் பெற்றவர். திருவனந்தபுரம் இவானியர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

   தமிழ்ச் சிறுகதைகளில் பல புதிய பரிசோதனைகள் செய்தவர். பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன ஆங்கில இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 'எழுத்து' இதழில் எழுதத் துவங்கியவர். இவர் தொகுத்த 'குருக்ஷேத்திரம்' இலக்கியத் தொகுப்பு, தமிழில் மிக முக்கியமானதாகும். விளக்கு விருது, ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் நகுலன்.

   நகுலனின் கவிதைகள் பெரும்பாலும் மனம் சார்ந்தவைகள். அவர் மனிதனின் இருப்பு சார்ந்தே கவிதைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

   குறிப்பிடத்தக்க படைப்புகள்:
   =============================
   நகுலன் கவிதைகள்
   நாய்கள்
   ரோகிகள்
   வாக்குமூலம்
   மஞ்சள்நிறப் பூனை.

   இதுவரை வெளியாகிவுள்ள நகுலனின் கவிதை நூல்கள்:

   1.கோட் ஸ்டான்ட் கவிதைகள் (1981)
   2.சுருதி (1987)
   3.மூன்று,ஐந்து (1987)
   4.இரு நீண்ட கவிதைகள் (1991)
   5.நகுலன் கவிதைகள் (2001)

   ஆங்கிலத்தில்:
   1.Words to the listening air (1968)
   2.Poems by nakulan (1981)
   3.Non being (1986).

   - VGK

   Delete