என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 6 மார்ச், 2016

’மணிராஜ்’ வலைப்பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நம் கண்ணீர் அஞ்சலி :(


’மணிராஜ்’ 
வலைப்பதிவர் 
திருமதி. இராஜராஜேஸ்வரி 
அவர்களுக்கு நம் 
கண்ணீர் அஞ்சலி :(


சில மாதங்களாகவே உடல்நிலை 
சரியில்லாமல் இருந்துவந்த
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
09.02.2016 அன்று
இறைவனடி சேர்ந்துவிட்டார்கள்
என அவர்களின் வாரிசுகள்
வெளியிட்டுள்ள பதிவு
மூலம் கேள்விப்படுகிறோம்.
http://jaghamani.blogspot.com/2016/03/blog-post_92.html

-oOo-

அவர்களின் இந்த அகால மரணத்தால்
 மிகவும் மனம் வருந்துகிறோம்.

-oOo-


அவர்களின் ஆன்மா சாந்தியடைய
ப்ரார்த்திக்கிறோம்.

 

தாங்கவே முடியாத மன வருத்தங்களுடன்
வை. கோபாலகிருஷ்ணன்

71 கருத்துகள்:

 1. எனக்கே நம்ப முடியவில்லை. அவருக்கு உடல் நலம் சரியில்லை என்றே தெரியாது. மனசுக்கு மிக துக்கமாக இருக்கிறது. அவரது ஆன்மா நிச்சயம் இறைவனை அடைந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 2. அவர்கள் ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்......

  பதிலளிநீக்கு
 3. ஐயா,

  பதிவு அதிர்ச்சி அளிக்கிறது :(

  இராஜராஜேஸ்வரி அம்மாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. மிகவும் வருத்தமான செய்தி.. மனம் கலங்கி விட்டது..

  நல்ல விஷயங்களைத் தினமும் தளத்தில் வழங்கியவர்..

  அவரது ஆன்மா - இறை நிழலில் இன்புற்றிருப்பதாக..

  பதிலளிநீக்கு
 5. அருமையாக மிகுந்த உழைப்புடன் தன் பதிவுகளை அற்புதமாக வார்த்தெடுத்தவர். இறை நம்பிக்கையில் அசையாத நம்பிக்கை கொண்டவர். வாசிக்க வாசிக்க மனதை நிறைக்கும் பதிவுகளை எக்காலத்தும் வாசிக்கற மாதிரி விட்டுச் சென்றிருக்கிறார்.

  அன்னாருக்கு மனம் நெகிழ்ந்த ஆழ்ந்த அஞ்சலிகள்.

  பதிலளிநீக்கு

 6. திருமதி இராஜேஸ்வரி அம்மையார் அவர்கள் இயற்கை எய்தியது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையை பிரார்த்திக்கின்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  பதிலளிநீக்கு
 7. இராரா என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்த திருமதி இராஜ ராஜேஸ்வரியின் மறைவு பற்றி அறிந்ததும் ஒரு கணம் நம்பமுடியவில்லை. பெரும்பாலும் ஆன்மீகப் பதிவுகளையே அழகான படங்களுடன் வெளியிட்டு வந்த இராராவுக்கு ஜீனியஸ் என்னும்பட்டம் கொடுத்து மகிழ்ந்தது நினைவில் அவரது நினைவுகள் நிலைத்திருக்கும்

  பதிலளிநீக்கு
 8. இது அதிர்ச்சியான செய்திதான். நமக்கு [தமிழுக்கு] பேரிழப்பு. அவருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்

  பதிலளிநீக்கு
 9. தமிழ் வலையுலகில் நமக்கெல்லாம் வருத்தமான செய்திதான். ஆன்மீகப் பதிவர் திருமதி இராஜ ராஜேஸ்வரி அவர்களது ஆன்மா அமைதி அடைய உங்களோடு நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். உங்கள் பதிவின் வழியே எனது கண்ணீர் அஞ்சலி.

  பதிலளிநீக்கு
 10. ஆன்மீகப் பதிவர் திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களின் மறைவுச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இன்று ஆன்மீகத்தில் சொல்வதற்கு இவர் பதிவில் என்ன இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை உண்டாக்கியவர் இன்று நம்மிடையே இல்லை. மிகுந்த உழைப்புடன் தன பதிவுகளை வெளியிட்டவர். இன்று நம்முடைய இல்லை என்பது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.
  அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. இன்று காலை எனக்கு மிகவும் அதிர்ச்சி அளித்த செய்தி இது. துளசிதரன் / கீதா பதிவிலிருந்துதான் தெரிந்து கொண்டேன். சமீப காலமாகவே உடல் நலமில்லாமல் இருந்தார் என்று தெரியும். ஆனால் இப்படி ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பார் எங்கள் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 12. இறைவனிடமிருந்து வந்த உயிர் அவனிடமே சென்றுவிட்டது.வலை தளத்தில் ஆன்மீக உள்ளங்களில் இறை பக்தியை பரப்பி வந்த அந்த அழிவில்லாத ஆன்மா இனி தன் பணிகளை வேறு ஒரு வடிவத்தில் தொடரும் என்பதில் ஐயமில்லை.

  பதிலளிநீக்கு
 13. மிக்க அதிர்ச்சி அளித்த செய்தி . ராஜியுடன் பேசி இருக்கிறேன். ரத்த அழுத்தத்தால் சில காலம் முன்பு பாதிக்கப்பட்டிருந்தார். இறைவனின் திருவடி நிழல்களில் இளைப்பாறிக் கொண்டிருப்பார் . எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

  பதிலளிநீக்கு
 14. மூத்தப் பதிவரும் ஆன்மிக சிந்தனையாளருமான ராஜராஜேஸ்வரி அம்மா அவர்களின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அம்மா அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 15. தாமரை படம் பார்த்தாலே அவரின் நினைவுதான் வரும்.படங்களும் பதிவுகளும் அம்மாவிற்கு நிகர் யாருமில்லை.மிகவும் வருந்துகின்றேன்.

  பதிலளிநீக்கு
 16. என்ன சொல்றீங்க ஐயா,நம்ப முடியல...ஆழ்ந்த இரங்கல்கள்...

  பதிலளிநீக்கு
 17. அவர்கள் ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்....
  Vetha.Langathilakam.
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 18. நம்பவே முடியவில்லை. இம்மாதிரி ஆன்மீக விஷயங்கள் எழுத எந்த ராஜேச்வரி காணக்கிடைப்பாள். பேரிழப்பு. அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.ராஜேசுவரி ஆகிவிட்டாய் நீ.

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் ஐயா,

  தங்கள் தளத்தில் தான் நான் அவர்கள் குறித்து அதிகம் அறிந்தேன். அவர்களுக்கு எம் ஆழ்ந்த அஞ்சலி,,

  பதிலளிநீக்கு
 20. ஆன்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள்...

  பதிலளிநீக்கு
 21. வணக்கம்
  ஐயா
  ஆன்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள்....
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 22. அடடா! மிகவும் வருத்தமாக இருக்கிறது. பிப்ரவரி 20ம் தேதி ஒரு நாள் ஆன்மீகப் பயணம் சென்ற போது கூட அவரை நினைவு கூர்ந்தேனே.

  அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 23. அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறேன்...

  அவர்களின் ஆன்மீக சேவை பதிவுகளின் இறைசெய்திகளும் கண்கவர் படங்களும் என்றென்றும் நம் நெஞ்சை விட்டு நீங்காதவை.

  அவரது ஆன்மா சாந்தியடைய எம் பிரார்த்தனைகள்!

  பதிலளிநீக்கு
 24. மிகவும் வருத்தமான அதிர்ச்சியான செய்தி :((
  எனது இரண்டு வலைபூக்களுக்கும் வருகை தந்து தவறாமல் பின்னூட்டமிடுவார் ..எல்லார் ப்ளாகிலும்
  அந்த அழகிய தாமரை மலர் இருக்கும் ..அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் ..

  பதிலளிநீக்கு
 25. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் மறைந்தாலும் அவர்கள் ஆன்மீக பதிவுகள் மூலம் வாழ்வார் என்றும். அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன் ஆறுதலை தர வேண்டும்.

  பதிலளிநீக்கு
 26. ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்!

  பதிலளிநீக்கு
 27. மிகவும் அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்! அவரது குடும்பத்தார்க்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள்!

  பதிலளிநீக்கு
 28. அஞ்சு சொன்னதும் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை கோபு அண்ணன், மிகவும் அன்பாக தேடி வந்து எனக்கு ஒழுங்கா கொமெண்ட்ஸ் போடுவா... அவ நம்மோடுதான் இருப்பா, அவவின் ஆத்மா அமைதியடையப் பிரார்த்திப்போம்....

  பதிலளிநீக்கு
 29. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்!

  பதிலளிநீக்கு
 30. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 31. வருத்தமான செய்தி தொடர்ந்து சற்றும் சலிப்பின்றி அருமையான் படங்களுடனும் விளக்கங்களுடனும் ஆன்மீகப் பதிவுகள் தந்தவர் இராஜராஜேஸ்வரி அவர்கள்.ஆழ்ந்த இரங்கல்கள்

  பதிலளிநீக்கு
 32. வைகோ சார் அந்தச் செய்தியைப் படித்ததும் என்ன சொல்ல என்று தெரியவில்லை. அப்படியே பிரமை. அவருக்கு உடல்நலம் சரியில்லை என்று தெரியும். அதனால்தான் பதிவுகள் இல்லை என்றே நினைத்திருந்தோம். ஆனால் இப்படி ஒரு செய்தி மனதை உலுக்கிவிட்டது. அழகான இனிய செந்தமிழில், ஆன்மீகப்பதிவுகள் விழிப்புணர்வு பதிவுகள் கூட எழுதியுள்ளாஅர். மிக மிக அன்பார்ந்த வார்த்தைகள். தங்கள் கதைகளை விமர்சனம் செய்து போட்டியில் வென்று பரிசும் பெற்றவர். அவரது ஆன்மா சாந்தியடையவும் அவரது சுற்றத்தார், குடும்பம், எல்லோருக்கும் இதனைத் தாங்கும் சக்தியையும் அளிக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்...வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை...ஆழ்ந்த இரங்கல்கள். துக்கத்துடன்

  பதிலளிநீக்கு
 33. மிகவும் அதிர்ச்சியும் வருத்தமாகவும் இருக்கிறது.

  பிளாக்கர் டாஷ்போர்ட் திறந்ததும் இவர்களது போஸ்ட் ஒன்று தயாராக காத்திருக்கும், இவரது ஆன்மீக தகவல்களும் படங்களும் மிகவும் அருமையாக இருக்கும்... அடிக்கடி வியந்தது உண்டு, எவ்வாறு இவர்களால் தொடர்ந்து பதிவுகள் எழுதமுடிகிறது என்று... எனக்கு தெரிந்த வரை, அளப்பரிய அவர்களின் உழைப்புக்கு ஈடு இணை யாரும் இல்லை

  மிக வருத்தத்துடன் ஆழ்ந்த இரங்கல்கள் !!

  பதிலளிநீக்கு
 34. அதிர்ச்சி தரும் செய்தி. அவருடைய ஆன்மா சாந்தியடையவும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கவும் என் பிரார்த்தனைகள்!

  பதிலளிநீக்கு
 35. மிகவும் கவலையான செய்தி. அதிர்ச்சியாக இருந்தது அஞ்சுவின் செய்தி பார்த்ததும்.எல்லார் பக்கமும் சென்று பின்னூட்டம் இடுவதில் இவருக்கு நிகர் இல்லை. அவர்களின் ஆன்மீக பதிவுகள், தகவல்கள்,படங்கள் அருமையாக இருக்கும்.
  அவரின் ஆன்மா சந்தியடைய பிராத்திப்போம்.
  அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  பதிலளிநீக்கு
 36. அழகாகச் பதிவுகளைத் பல பக்கமான படங்களைத் தேடி அற்புதமாகத் தனது பதிவுகளைக் தரும் இவரின் இழப்பு வலையுலகுக்கு ஓர் பேரிழப்பு. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 37. என் தளம் உட்பட அனைவரது வலைத்தளங்களிலும் தவறாமல் கருத்து சொல்பவர்... இறந்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்.. ஆத்மா சாந்தி அடையட்டும்... :(

  பதிலளிநீக்கு
 38. மிகவும் வேதனை அளிக்கும் தகவல் ஒன்று இதனைக் கேட்டவுடன் என்னால் நம்ப முடியவில்லை வலையுலகில் ஓர் இமாலைய சாதனை படைத்து வந்த எங்கள் ராஜேஸ்வரி அம்மையாரது ஆன்மா சாந்தி பெறவும் அன்னாரது குடும்பத்தினருக்கு இந்த இழப்பின் வலி நீங்கவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் :(

  பதிலளிநீக்கு
 39. I was thinking about a special shivratri post from her today. shocked to see your email, Gopu sir. Heart felt condolences to her family. May her soul rest in peace.

  பதிலளிநீக்கு
 40. அதிர்ச்சி அடைந்தேன்.இறைவனின் புகழ் பரப்பியவர் இறைவனடி சேர்ந்து விட்டார்.ஆழ்ந்த இரங்கல்கள்

  பதிலளிநீக்கு
 41. மிகவும் அதிர்ச்சியான விஷயம். அவர்களின் குடும்பத்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  பதிலளிநீக்கு
 42. ஆன்மிக பதிவாளர் திருமதி ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். வேறு என்ன சொல்ல.??

  பதிலளிநீக்கு
 43. மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார் என்பதையும் தங்கள் பதிவு வாயிலாகவே அறிந்திருந்தேன். முன்பெல்லாம் எல்லோருடைய வலையிலும் அவரது பின்னூட்டம் தவறாமல் இடம்பெற்றிருக்கும். சிலநாட்களாகவே வர இயலாமை புரிந்தது. ஆனால் இப்படியொரு அதிர்ச்சித் தகவலை எதிர்பார்க்கவே இல்லை. அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  பதிலளிநீக்கு
 44. This is shocking...............so....shocking............ :(((( I cant even gather myself to pray for her yet ...... :(

  பதிலளிநீக்கு
 45. இன்றைக்குத்தான், இப்போது தான் நீண்ட நாட்க‌ளுக்குப்பிறகு என் வலைப்பக்கத்திற்கு வந்தேன். வந்ததுமே திருமதி.ராஜராஜேஸ்வரி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
  அவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்!

  பதிலளிநீக்கு
 46. நம்பவே முடியல. மகனின் திருமண வைபவத்தை கண்குளிர கண்டு சந்தோஷமான மன நிலையில் இருக்கும்போதே இறைவனடி சேர்ந்து விட்டார்கள். உடல் உபாதைதைகளினால் அதிகம் அவஸ்தைப் படவேண்டாம் என்று இறைவன் அவர்களைத் தனுனிடம் அழைத்துக்கொண்டுவிட்டார்னு தான் நினைக்கணும். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்........

  பதிலளிநீக்கு
 47. அம்மா ஏன் நம்ம பக்கம் வரலியேன்னு நினைச்சேன். ஆனா விஷயம் தெரிந்ததும் கலங்கிட்டேன். அவங்க குடும்பத்தினருக்கு என் கண்டலன்ஸ் தெரிவிச்சுக்கறேன். அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 48. அம்மாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  பதிலளிநீக்கு
 49. ஆன்மீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அம்மாவின் மறைவு பதிவுலகத்தையே இந்தளவு பாதித்து இருக்கிறதென்றால் அவரின் குடும்பத்தினரை எவ்வளவு பாதித்திருக்கும்.அன்பானவங்க. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.......

  பதிலளிநீக்கு
 50. அவங்களுக்கு உடம்பு சரியில்லாம இருந்ததே தெரியல. ரொம்ப நாளா பதிவு பக்கம் பாக்க முடியல. ஆனா இப்பதான் விஷயமே தெரிஞ்சுக்க முடிந்தது. அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

  பதிலளிநீக்கு
 51. சில நாட்களாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்திருக்கிறார். ஆனால் இறந்து விடுவார் என்பதை எதிர்பார்க்கவே இல்லை. அவர்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். கோபு சாருக்கும் மிகவும் நெருங்கிய சிநேகிதி ஒருவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது!

  பதிலளிநீக்கு
 52. மன வேதனை அடைந்தேன் ஐயா. உடல் நலம் மீண்டு வந்தார்கள். இப்படி திடிரென...அதிர்ச்சியாக இருக்கிறது. வலைப்பக்கம் வராத காரணத்தால் அறியமுடியாமல் போய் விட்டது. அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 53. My God.
  Its a Shocking news.
  What was wrong with her?
  Oh...My God.

  பதிலளிநீக்கு
 54. மிகவும் வருத்தமான செய்தி.. அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்..

  பதிலளிநீக்கு
 55. அதிர்ச்சியான செய்தி கோபு அண்ணா மெயில் பார்த்து தான் அறிந்தேன். சிரத்தையோடு இதுவரை அறியாத கோயில்களைப்பற்றியெல்லாம் தகவல்கள் சேமித்து அதை மிக அற்புதமாக எழுதி வந்தவர் ராஜராஜேஸ்வரி அவர்கள். அவரிடம் நான் பேசியது குறைவு. ஆனால் அவர் பின்னூட்டம் இல்லாத பதிவுகளே இல்லை என்று சொல்லும் அளவு அத்தனை சிரத்தையோடு எல்லோர் பதிவுகளுக்கும் பின்னூட்டம் இடுவார். தாமரை பூவை பார்த்தாலே இவர் தான் என்று நினைக்கும் அளவுக்கு மனதில் நிறைந்தவர். கோயில் கோயிலாக சென்ற பலன் இவர் பதிவுகள் படித்தாலே கிடைத்துவிடும். மனம் கனத்து இருக்கிறது. இறைவனடியில் இளைப்பாறும் இராஜராஜேஸ்வரியின் ஆன்மாவுக்கு சாந்தி கிடைக்க என் அன்பு பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 56. நம் குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்தது போன்ற துக்கம் தரும் செய்தி இது. எல்லோருடைய பதிவுகளுக்கும் சென்று பின்னூட்டம் தருபவர். வை.கோ சார் நடத்திய விமர்சனப்போட்டியில் பங்கு பெற்று ஏராளமான சாதனைகள் புரிந்தவர். உடல்நலமின்றி இருக்கிறார்; அதனால் தான் முன்பு போல் பதிவுகள் இடுவதில்லை என்று நினைத்திருந்தேன். இப்படியொரு அதிர்ச்சி தரும் செய்தியை எதிர்பார்க்கவேயில்லை. அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 57. குருஜி ஒங்களுக்கும் அவுங்களுக்கும் பதிவுலகில் வெகுநாளய நட்பினை என்னால உணர முடியுது.ஒங்களுக்கு எப்பூடி ஆறுதல் சொல்லுதுனு வெளங்கிகிட ஏலலியே குருஜி.

  பதிலளிநீக்கு
 58. மனத்திற்கு மிகவும் வருத்தமான செய்தி ...அருமையான செய்திகளை பகிர்ந்தவர் இன்று நம்மிடம் இல்லை .. ...

  பதிலளிநீக்கு
 59. மிகவும் அதிர்சியான தகவல் , அவர்கள் குடும்பதாருக்கு இறைவன் இட்டு நிரப்ப முடியாத இந்த இழப்பை தாங்கி கொள்ள சக்தியை கொடுக்கட்டும், பிளாகில் தவறாமல் வந்து அருமையான் கருத்துக்களை தெரிவித்து செல்வாரக்ள். அவர்களுக்கு உடம்புக்கு என்ன?

  பதிலளிநீக்கு
 60. வழக்கம்போல் திருவண்ணாமலை சென்றிருந்த நான்,
  இன்றுதான் திரும்பினேன். மின்னஞ்சலில் செய்தி அறிந்து
  மிகவும் அதிர்ச்சியுற்றேன். அவரின் ஆன்மீகப் பகுதிகளால்
  ஈர்க்கப்பட்டு, சிறு சிறு பின்னுட்டங்கள் எழுதி அறிமுகமாகியவன்
  நான். என் வலைத்தள வருகைக்கு வித்திட்டவரே
  திருமதி. இராஜ ராஜேஸ்வரி அவர்கள்தான்.
  செய்தி அறிந்தவுடன், மனதில் தோன்றியது,
  " ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே "
  என்ற மாணிக்கவாசகரின் வரிகள் தான்.

  திருமதி. இராஜ ராஜேஸ்வரி அவர்களின் சிறந்த
  ஆன்மீகப் பதிவுகளால் கவரப்பட்ட இறைவனும் ,
  ஈர்த்து அவரை ஆட்கொண்டாரோ ?

  அவரின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரின் மனம் அமைதி அடையவும் ,
  அவரின் ஆன்மா சாந்தி அடையவும் ,
  நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை,
  தில்லையுட் கூத்தனை ,
  தென் பாண்டி நாட்டானை,
  அல்லல் பிறவி அறுப்பானை ,
  மனதார இறைஞ்சுகிறேன் .

  பதிலளிநீக்கு
 61. சகோதரியின் ஆன்மா அமைதியில் உறங்கட்டும்:-(((((( அவர்தம் குடும்பத்தார்க்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள்...

  பதிலளிநீக்கு
 62. அன்னாரது ஆன்மா அமைதி பெறட்டும்...
  எனது பிரார்த்தனைகள்

  பதிலளிநீக்கு
 63. என்றும் நம் நினைவலைகளில் நீங்காமல் நிற்கும் ‘மணிராஜ்’ வலைப்பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களின் மறைவுச் செய்தியினைக் கேட்டு, தங்களின் துக்கங்களை என்னுடன் இந்தப்பதிவினில் பின்னூட்டங்கள் வாயிலாகப் பகிர்ந்துகொண்டுள்ள அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 64. அலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு தங்களின் துக்கங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டுள்ள

  திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் (திருச்சி)
  திருமதி. ஆச்சி அவர்கள் (ஹரியானா)
  திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் (சென்னை)
  திருமதி. கெட் விஜி அவர்கள் (அமெரிக்கா)

  ஆகியோருக்கு என் வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 65. மின்னஞ்சல் மூலம் என்னைத் தொடர்புகொண்டு தங்களின் துக்கங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டுள்ள

  திருவாளர்கள்:

  ஸ்ரீராம்
  பட்டாபிராமன்
  முனைவர் பழனி கந்தசாமி
  E S சேஷாத்ரி
  ரவிஜி ரவி

  திருமதிகள்:

  உஷா ஸ்ரீகுமார்
  ஜெயந்தி ஜெயா
  நிலாமகள்
  ஏஞ்சலின்
  ஞா. கலையரசி
  உஷா அன்பரசு
  கீதா சாம்பசிவம்
  ஷக்தி ப்ரபா
  விஜி (விஜயலக்ஷ்மி கிருஷ்ணன்)
  ரமாரவி
  மிடில் க்ளாஸ் மாதவி
  கோமதி அரசு
  மஞ்சுபாஷிணி
  கீதா மதிவாணன்
  ருக்மணி சேஷசாயீ

  ஆகியோருக்கு என் வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 66. ஃபேஸ்புக் மூலம் என்னைத் தொடர்புகொண்டு தங்களின் துக்கங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டுள்ள

  அதிரா மியாவ்
  Mrs. Rama Ravi
  Mrs. Rajalakshmi Paramasivam
  Mrs. Sathi K Sathiya
  Mrs. Aatchi Aatchi
  Mrs. Vetha Langathilakam
  Mrs. Girija Sridhar
  Mrs. Gowri Sivapalan

  Mr. Mohamed Nizamudeen Abul Hakim
  Mr. Venkatasubramanian Sankaranarayanan
  Liela Liela &
  Thillai Muttiah

  ஆகியோருக்கு என் வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 67. 31.12.2015 வரை நான் என் வலைத்தளத்தினில் வெளியிட்டுள்ள என் அனைத்து 808 பதிவுகளுக்கும் ஏராளமாகவும் தாராளமாகவும் பின்னூட்டமிட்டுள்ளார்கள் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்.

  அவர்களின் பிரிவினை நினைத்தாலே இன்னமும் மனதுக்கு மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது.

  இருப்பினும் நாம் என்ன செய்வது?

  நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். :(

  மிகவும் கஷ்டப்பட்டு நம் மனதை நாம் சமாதானம் செய்துகொள்வோம்.

  ooooo

  பதிலளிநீக்கு
 68. கூர்மையான அறிவு அவருக்கு.
  இழப்புக்கு வருந்துகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பாதுரை March 26, 2016 at 4:18 PM

   //கூர்மையான அறிவு அவருக்கு. இழப்புக்கு வருந்துகிறேன்.//

   கூர்மையான அறிவு உடையவராக அவர் இருந்ததனால் மட்டுமே, அவரின் இழப்பு, ஓர் கூர்மையான கத்தியால் நான் தாக்கப்பட்டது போல என்னால் உணரமுடிகிறது.

   நீக்கு