’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot. in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.
தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.
நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி
முதற்பதிப்பு: 2016
வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979
அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225
ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள், செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி.
இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.
5) மனக்கோலங்கள் கொண்ட
மெளனி
[பக்கம் 36 முதல் 42 வரை]
சுமைகளோ, சுகங்களோ எல்லாமே வெளியிலிருந்து உள்வாங்கிக்கொண்டவை. உள்வாங்கிக்கொண்டது உண்மையானால், பிரயத்தனப்பட்டோமென்றால் உள்வாங்கிக்கொண்டதை அந்த வெளிவளிக்கே திருப்புதலும் சாத்தியமே என்பதே மெளனி சொல்ல வந்ததும். அவர் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், சூல்கொண்ட மேகம் மழையை உதிர்ப்பது போல, இப்படி உதிர்ப்பதுகூட வெகு சுலபமான காரியம் தானாம்.
மெளனியின் தனித்தன்மையே எந்தக் கருத்தையும் வலிந்து பிறரிடம் திணிக்கும் வழக்கம் அவருக்குக் கிடையாது. படைக்கும் கதாபாத்திரங்களைக்கூட அதிர்ந்து பேசி அதட்டத் தெரியாதவர். அவர்களை மிக மென்மையாகக் கையாள்பவர். அதனால்தான் ’அவன்’ அப்படிச் செய்தான் ‘போலும்’ என்று பட்டும் படாமலும் ’அவன்’ நிலைமையைச் சொல்கிற மாதிரி சொல்லிவிட்டுப் போவார். இந்த மென்மை குணம் காரணமாகவே இந்த ‘போலும்’ வார்த்தையை அடிக்கடி அவர் கதைகளில் காணலாம்.
மெளனியின் தனித்தன்மையே எந்தக் கருத்தையும் வலிந்து பிறரிடம் திணிக்கும் வழக்கம் அவருக்குக் கிடையாது. படைக்கும் கதாபாத்திரங்களைக்கூட அதிர்ந்து பேசி அதட்டத் தெரியாதவர். அவர்களை மிக மென்மையாகக் கையாள்பவர். அதனால்தான் ’அவன்’ அப்படிச் செய்தான் ‘போலும்’ என்று பட்டும் படாமலும் ’அவன்’ நிலைமையைச் சொல்கிற மாதிரி சொல்லிவிட்டுப் போவார். இந்த மென்மை குணம் காரணமாகவே இந்த ‘போலும்’ வார்த்தையை அடிக்கடி அவர் கதைகளில் காணலாம்.
காவிய ஓவியமாய் இடை இடையே கவிதையாய் வரிச் சித்திரங்களாய் கதைகளுக்கு நடு நடுவே வந்துபோகும் வர்ணஜாலங்கள் வேறு இவரின் தனிச்சிறப்பாகும், என்கிறார் ஜீவி.
மெளனியின் முதல் கதையான ‘ஏன்?’; பிறகு வெளியான ‘அழியாச்சுடர்’; ‘பிரபஞ்ச கானம்’ முதலியன ஜீவி அவர்களால் நன்கு அலசி ஆராய்ந்து விஸ்தாரமாகப் பாராட்டிச் சொல்லப்பட்டுள்ளன.
பதினாலு வயதுச் சிறுவன் மாதவன் பள்ளி முடிந்து வீட்டுக்குப் போகையிலே, தனது வகுப்புத் தோழி சுசிலாவிடம், தன் மனக் கட்டுப்பாட்டை இழந்துவிட்டவன் போன்று, “சுசீ, நானும் வீட்டுக்குத்தான், சேர்ந்து போகலாமே?” என்று பொருத்தமில்லாமல் கேட்கிறான்.
இதைக்கேட்டதும் சுசிலா திடுக்கிட்டுத் திரும்பிப்பார்த்து, புருவங்களை உயர்த்தி வியப்புடன் கண்கள் விரியப்பார்த்தது ”ஏன்?” என்று அவனைக் கேட்பது போலிருந்தது.
மெளனியின் முதல் கதையான ‘ஏன்?’; பிறகு வெளியான ‘அழியாச்சுடர்’; ‘பிரபஞ்ச கானம்’ முதலியன ஜீவி அவர்களால் நன்கு அலசி ஆராய்ந்து விஸ்தாரமாகப் பாராட்டிச் சொல்லப்பட்டுள்ளன.
’ஏன்?’
கதையில் ஓரிடத்தைக் கொஞ்சம் பார்ப்போமா?
கதையில் ஓரிடத்தைக் கொஞ்சம் பார்ப்போமா?
பதினாலு வயதுச் சிறுவன் மாதவன் பள்ளி முடிந்து வீட்டுக்குப் போகையிலே, தனது வகுப்புத் தோழி சுசிலாவிடம், தன் மனக் கட்டுப்பாட்டை இழந்துவிட்டவன் போன்று, “சுசீ, நானும் வீட்டுக்குத்தான், சேர்ந்து போகலாமே?” என்று பொருத்தமில்லாமல் கேட்கிறான்.
இதைக்கேட்டதும் சுசிலா திடுக்கிட்டுத் திரும்பிப்பார்த்து, புருவங்களை உயர்த்தி வியப்புடன் கண்கள் விரியப்பார்த்தது ”ஏன்?” என்று அவனைக் கேட்பது போலிருந்தது.
அப்புறம் என்ன ஆச்சு?
’மீதியை வெள்ளித்திரையில் காண்க’ என்பது போல ......
மீதியை ஜீவி சாரின் நூலில் படியுங்கள் ! :)
6) ‘எழுத்து’
சி.சு. செல்லப்பா
சி.சு. செல்லப்பா
[பக்கம் 43 முதல் 47 வரை]
1959 ஜனவரியில் சென்னை திருவல்லிக்கேணியிலிருந்து ‘எழுத்து’ பத்திரிகையை வெளியிட்டவர். துணிச்சலுடன் ‘எழுத்து’ வெளியீடுகளுக்காகவே ஓர் பதிப்பகத்தையே தொடங்கிய அதிசயத்தையும் செய்தவர். தமிழின் முதல் கவிதை நூலான பிச்சமூர்த்தியின் ’காட்டு வாத்து’ இந்தப்பதிப்பகத்தின் மூலம்தான் வெளியானது.
பிரசுரமான ‘எழுத்து’ பிரதிகளைத் தானே சுமந்துகொண்டு, ஊர் ஊராகச் சுற்றித்திரிந்து, இலக்கிய ஆர்வலர்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்திய செல்லப்பாவின் பணி பிரமிக்கத்தக்கது. கல்லூரிகளில் படிகளேறினார். மாணவர்களிடையே தமிழ்ச் சிறுகதை, கவிதை, கட்டுரை என்று கொண்டுபோய்ச் சேர்த்தார். எழுத்தார்வம் உள்ள பலரையும் எழுதவைத்து படைதிரட்டிய பெருமைக்குரியவர் என்று செல்லப்பா அவர்கள் பட்ட பாட்டை ஜீவி ஆத்மார்த்தமாக விவரிக்கும் பொழுது நமக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது.
இவரின் முதல் சிறுகதையான ’சுதந்திர சங்கு’ பற்றியும் அதன்பின் இவரால் எழுதப்பட்டுள்ள ‘குருவிக்குஞ்சு’ ; ’சரசாவின் பொம்மை’ ; கைதியின் கர்வம்’ ; ‘முடி இருந்தது’ ; ‘பந்தயம்’ முதலிய பலகதைகள் பற்றியும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன இந்த ஜீவியின் நூலில்.
‘ஏறு தழுவுதல்’ என்னும் தமிழர் .... பழந்தமிழர் விளையாட்டை இவரைப்போல இவ்வளவு நுண்மையாக யாரும் சொன்னதில்லை என்கிற பெருமையைப் பெறுகிறது இவர் எழுதிய ‘வாடிவாசல்’ என்கிறார் ஜீவி.
பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்ட நேரத்திலும், யாரிடமிருந்தும் எதையும் பெற்றுக்கொள்ள அவரின் சுய கெளரவம் இடம் கொடுத்ததில்லை. நியாயமாக இவருக்குக் கிடைத்த பல்வேறு விருதுகள் உள்பட இதில் அடக்கம் என்பதுதான் ஆச்சர்யம். அவரது காலத்திற்குப் பின்புதான் அவரது ‘சுதந்திர தாகம்’ நூலுக்கு சாகித்ய அகாதமியால் விருது கொடுக்க முடிந்திருக்கிறது.
தன் வாழ்நாளில் இவரால் மறுக்கப்பட்டுள்ள உயரிய விருதுகள் பலவற்றையும்கூட பட்டியலிட்டுள்ளார் ஜீவி.
இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும்.
என்றும் அன்புடன் தங்கள்,
(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்
இதன் அடுத்த பகுதியில்
இடம்பெறப்போகும்
இரு பெரும் எழுத்தாளர்கள் பற்றி இப்பகுதியில் கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிந்தது. தமிழகம் வரும்போது தான் புத்தகம் வாங்க வேண்டும்.
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
வெங்கட் நாகராஜ் March 20, 2016 at 3:11 PM
நீக்குவாங்கோ, வெங்கட் ஜி, வணக்கம்.
//இரு பெரும் எழுத்தாளர்கள் பற்றி இப்பகுதியில் கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிந்தது.//
மிக்க மகிழ்ச்சி.
//தமிழகம் வரும்போது தான் புத்தகம் வாங்க வேண்டும்.//
சந்தோஷம்.
//தொடர்கிறேன்.//
தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், ‘தொடர்கிறேன்’ என்ற சொல்லுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஜி. - VGK
மௌனி கனமான எழுத்தாளர். அதனாலேயே அந்த அத்தியாயமே கனமாகத்தான் இருக்கிறது.
பதிலளிநீக்கு
நீக்குஸ்ரீராம். March 20, 2016 at 3:31 PM
வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.
//மௌனி கனமான எழுத்தாளர். அதனாலேயே அந்த அத்தியாயமே கனமாகத்தான் இருக்கிறது.//
இதுபோன்ற மஹா கனம் பொருந்தியவர்களைப் பற்றித் தாங்கள், தங்கள் வலைத்தளத்தில் எழுதப்போகும்போது, தங்கள் விமர்சன அறிமுகம் இன்னும் அதிக கனமாக இருக்கக்கூடும் என நான் நினைக்கிறேன்.
தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ஸ்ரீராம். - VGK
மௌனி அவர்களின் முழு கதைத் தொகுதிகளையும்
பதிலளிநீக்குஒரு முறை படித்து முடித்துவிட்டேன்
எப்படி குழந்தையுடன் குழந்தையாக
நாமானால் ஒழிய குழந்தையிடம் நெருங்க முடியாதோ
அதைப் போலத்தான் மௌனியின் கதைகளில்
ஒன்ற வேண்டுமாயின் நாமும் மௌனியின்
மன நிலையை புரிந்து தொடர வேண்டும்
இல்லையேல் கஸ்டம்தான்.
சி.சு செல்லப்பா அவர்களின்சில கதைகளை
படித்துள்ளேன்.அவரின் கதைகளை
ஒட்டு மொத்தமாக வாங்கிப் படிக்கவேண்டும்.
அதற்கு முன் ஜீவி அவர்களின் நூலை வாங்கிப்
படித்துவிட்டு பின் வாங்கும் உத்தேசம் இருக்கிறது
பயனுள்ள அற்புதமான தொடர்
பகிர்வுக்கு மிக்க நன்றி
எப்படி குழந்தையுடன் குழந்தையாக நாமானால் ஒழிய-- ஒப்புமைபடுத்திய உதாரணம் அட்டகாசம் ரமணி சார்! அந்த 'அழியாச்சுடர்' ஒன்று போதுமே, காலாதிகாலத்திற்கும் கெளனியின் பெயர் சொல்லிக் கொண்டிருக்க!! கோயில் தூண் யாளி எழுந்து நின்ற நிலையில் கூத்தாடுவது பிரமையாய் மனக்கண்ணில் தெரிகிறது!
நீக்குRamani S March 20, 2016 at 4:43 PM
நீக்குவாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.
//மௌனி அவர்களின் முழு கதைத் தொகுதிகளையும்
ஒரு முறை படித்து முடித்துவிட்டேன்.//
ஆஹா, மிக்க மகிழ்ச்சியான செய்தி இது.
//எப்படி குழந்தையுடன் குழந்தையாக நாமானால் ஒழிய குழந்தையிடம் நெருங்க முடியாதோ அதைப் போலத்தான் மௌனியின் கதைகளில் ஒன்ற வேண்டுமாயின் நாமும் மௌனியின் மன நிலையை புரிந்து தொடர வேண்டும். இல்லையேல் கஷ்டம்தான்.//
மிகச்சிறப்பான உதாரணம் சொல்லியுள்ளீர்கள். இதனை நேற்று நான் என் அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன். என் இரு பேரன்கள் 4 வயது + 3 வயது நேற்று இங்கு வந்திருந்தார்கள். சுமார் நாலு மணி நேரங்கள் என்னுடன் தங்கியிருந்தார்கள். அவர்களுடன் நானும் ஒர் குழந்தையாகவே மாறி ஒட்டிக்கொண்டு ஒரு மணி நேரம் மட்டுமே என்னால் செலவழிக்க முடிந்தது. அதன்பின் எனக்குப் பொறுமையில்லை. அவ்வளவு லூட்டிகள் அடித்தனர். அடிக்கடி தேவைப்படும் மிக முக்கியமானதொரு பொருளை எங்கேயோ விட்டெறிந்துள்ளார்கள். இன்னும் நாங்கள் எங்கள் வீட்டில் அதனை வலைவீசித் தேடிக்கொண்டு இருக்கிறோம். சமத்தும் புத்திசாலித்தனமும் மிக அதிகம். அந்த வயதுக்கே உரிய லூட்டிகளும் ரொம்பவும் ஜாஸ்தியே. :)
//சி.சு செல்லப்பா அவர்களின்சில கதைகளை படித்துள்ளேன். அவரின் கதைகளை ஒட்டு மொத்தமாக வாங்கிப் படிக்கவேண்டும்.//
நல்லது. அதற்கான வாய்ப்பு தங்களுக்குக் கிட்டட்டும்.
//அதற்கு முன் ஜீவி அவர்களின் நூலை வாங்கிப்
படித்துவிட்டு பின் வாங்கும் உத்தேசம் இருக்கிறது//
ஆஹா, இது அதைவிட நல்ல ஐடியாவாகத்தான் உள்ளது. அப்படியும் தாங்கள் செய்யலாம்.
//பயனுள்ள அற்புதமான தொடர். பகிர்வுக்கு மிக்க நன்றி//
சந்தோஷம். தங்களின் தொடர் வருகையும், ஆத்மார்த்தமாகச் சொல்லிப்போகும் அற்புதமான கருத்துக்களும் எனக்குள் ஓர் உற்சாகத்தைத் தந்து வருகிறது. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். - VGK
சி.சு. செல்லப்பா அவர்களின் சிறப்பே தனி ...
பதிலளிநீக்குதிண்டுக்கல் தனபாலன் March 20, 2016 at 4:46 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//சி.சு. செல்லப்பா அவர்களின் சிறப்பே தனி ...//
தாங்களும் அதனை இங்கு தனிச் சிறப்பாகவே சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK
மனக் கோலங்கள் கொண்ட மௌனி அவர்கள் மற்றும் ‘எழுத்து’சி.சு.செல்லப்பா அவர்கள் பற்றிய திரு ஜீவி அவர்களின் பார்வையை இரத்தின சுருக்கமாக கொடுத்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஉள்வாங்கிக்கொண்ட சுகமோ துக்கமோ அவைகளை வெளியே கொண்டுவருவது சாத்தியமே என்பதை சூல் கொண்ட மேகம் மழையை உதிர்ப்பது போல என்ற மக்களுக்கு புரிகின்ற ஒன்றைக்கொண்டு சொல்வது திரு மௌனி அவர்களின் ஜனரஞ்சக எழுத்திற்கு சான்று என்பதை சொல்லியிருக்கும் திரு ஜீவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
‘எழுத்து’சி.சு.செல்லப்பா அவர்களின் எழுத்து இதழ்களை எனது அண்ணன் வீட்டில் பார்த்திருக்கிறேன். அவர்
// பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்ட நேரத்திலும், யாரிடமிருந்தும் எதையும் பெற்றுக்கொள்ள அவரின் சுய கெளரவம் இடம் கொடுத்ததில்லை. //
என்பதை படிக்கும்போது அந்த கால புலவர்களிலிருந்து சமீபகால எழுத்தாளர்கள் வரை வறுமை என்பது அவர்களின் கூடப்பிறந்ததாக இருந்ததோ என நினைக்கத் தோன்றுகிறது. ஆனாலும் ‘புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ என்ற பழமொழிக்கேற்ப திரு சி.சு.செல்லப்பா அவர்கள் யாரிடமும் சுய கௌரவத்தை விட்டு எதையும் பெற்றதில்லை என அறியும்போது பெருமையாக இருக்கிறது.
அவரது காலத்திற்குப் பின்புதான் அவரது ‘சுதந்திர தாகம்’ நூலுக்கு சாகித்ய அகாதமியால் விருது கொடுக்க முடிந்திருக்கிறது. என்பதை அறியும்போது காலஞ்சென்ற எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்கள்
உயிரோடு இருக்கையில் அவர் கஷ்டப்பட்டபோது,
உதவாதவர்கள் தான் இறந்தபின் சிலை திறந்து,
விழா நடத்தி கொண்டாடவேண்டாம் என்பதை
வேளூர் வெ.கந்தசாமிப் பிள்ளை என்ற புனைபெயரில்
இத்தனைக்கும் மேலே இனி ஒன்று
ஐயா நான் செத்ததற்கும் பின்னால் நிதிகள் திரட்டாதீர்
நினைவை விளிம்புகட்டி கல்லில் வடித்து வையாதீர்
வானத்து அமரன் வந்தான் காண்
வந்தது போல் போனான் காண் என்று புலம்பாதீர்
அத்தனையும் வேண்டாம் -
அடியேனை விட்டு விடும்
எழுதியிருந்த கவிதை என் நினைவுக்கு வருகிறது.
திரு ஜீவி அவர்களுக்கு உங்களுக்கும் பாராட்டுக்கள்!
வே.நடனசபாபதி March 21, 2016 at 7:58 AM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//மனக் கோலங்கள் கொண்ட மௌனி அவர்கள் மற்றும் ‘எழுத்து’ சி.சு.செல்லப்பா அவர்கள் பற்றிய திரு ஜீவி அவர்களின் பார்வையை இரத்தின சுருக்கமாக கொடுத்திருக்கிறீர்கள். //
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, சார்.
//உள்வாங்கிக்கொண்ட சுகமோ துக்கமோ அவைகளை வெளியே கொண்டுவருவது சாத்தியமே என்பதை சூல் கொண்ட மேகம் மழையை உதிர்ப்பது போல என்ற மக்களுக்கு புரிகின்ற ஒன்றைக்கொண்டு சொல்வது திரு. மௌனி அவர்களின் ஜனரஞ்சக எழுத்திற்கு சான்று என்பதை சொல்லியிருக்கும் திரு ஜீவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்! //
மிகவும் சந்தோஷம், சார்.
//‘எழுத்து’ சி.சு.செல்லப்பா அவர்களின் எழுத்து இதழ்களை எனது அண்ணன் வீட்டில் பார்த்திருக்கிறேன்.//
மிக்க மகிழ்ச்சி, சார்.
//// அவர் // பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்ட நேரத்திலும், யாரிடமிருந்தும் எதையும் பெற்றுக்கொள்ள அவரின் சுய கெளரவம் இடம் கொடுத்ததில்லை. // என்பதை படிக்கும்போது அந்த கால புலவர்களிலிருந்து சமீபகால எழுத்தாளர்கள் வரை வறுமை என்பது அவர்களின் கூடப்பிறந்ததாக இருந்ததோ என நினைக்கத் தோன்றுகிறது. ////
ஆம். புலமையும் வறுமையும் ஒட்டிப்பிறந்தவை என்றே எனக்கும் நினைக்கத்தோன்றுகிறது.
//ஆனாலும் ‘புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ என்ற பழமொழிக்கேற்ப திரு சி.சு.செல்லப்பா அவர்கள் யாரிடமும் சுய கௌரவத்தை விட்டு எதையும் பெற்றதில்லை என அறியும்போது பெருமையாக இருக்கிறது. //
உண்மை. மிகவும் பெருமைக்குரியவரே என்பது இந்த நூலில் நான் அவரைப்பற்றிப் படித்ததும் என்னாலும் நன்கு உணரமுடிந்தது.
//அவரது காலத்திற்குப் பின்புதான் அவரது ‘சுதந்திர தாகம்’ நூலுக்கு சாகித்ய அகாதமியால் விருது கொடுக்க முடிந்திருக்கிறது என்பதை அறியும்போது காலஞ்சென்ற எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்கள், உயிரோடு இருக்கையில் அவர் கஷ்டப்பட்டபோது, உதவாதவர்கள், தான் இறந்தபின் சிலை திறந்து, விழா நடத்தி கொண்டாடவேண்டாம் என்பதை, வேளூர் வெ.கந்தசாமிப் பிள்ளை என்ற புனைபெயரில், ”இத்தனைக்கும் மேலே இனி ஒன்று ஐயா நான் செத்ததற்கும் பின்னால் நிதிகள் திரட்டாதீர் .. நினைவை விளிம்புகட்டி கல்லில் வடித்து வையாதீர் .. வானத்து அமரன் வந்தான் காண், வந்தது போல் போனான் காண் என்று புலம்பாதீர் .. அத்தனையும் வேண்டாம் .. அடியேனை விட்டு விடும்” என எழுதியிருந்த கவிதை என் நினைவுக்கு வருகிறது.//
நானும் இதனைப் படித்துள்ளேன். மிகச்சரியாகவே உலக யதார்த்தத்தினை நன்கு அனுபவித்து உணர்ந்து சொல்லி உள்ளார்கள்.
//திரு ஜீவி அவர்களுக்கு உங்களுக்கும் பாராட்டுக்கள்! //
மிக்க மகிழ்ச்சி சார். தங்களின் தொடர் வருகையும், ஆத்மார்த்தமாகச் சொல்லிப்போகும் அற்புதமான கருத்துக்களும் எனக்குள் ஓர் உற்சாகத்தைத் தந்து வருகிறது. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். - VGK
அறிமுகப்படுத்தப்படும் எழுத்தாளர்கள் பற்றி அறிய அறிய இந்நூலை முழுவதும் வாசித்துவிட வேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது. சி.சு. செல்லப்பா அவர்களுடைய சில படைப்புகளை வாசித்திருக்கிறேன். மௌனி அவர்களுடையவற்றை இனிதான் வாசிக்கவேண்டும். ஜீவி சாரின் முயற்சிக்குப் பெரும்பாராட்டுகள். அறிமுகப்பகிர்வுக்கு மிகவும் நன்றி கோபு சார்.
பதிலளிநீக்குகீத மஞ்சரி March 21, 2016 at 8:18 AM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//அறிமுகப்படுத்தப்படும் எழுத்தாளர்கள் பற்றி அறிய அறிய இந்நூலை முழுவதும் வாசித்துவிட வேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது.//
எழுத்திலும் வாசிப்பிலும் இயற்கையாகவே ஆர்வமும், அக்கறையும் மிக மிக அதிகம் உள்ள தங்களுக்கு இதுபோன்றதோர் ஆவல் ஏற்பட்டுள்ளதில் எனக்கு வியப்பேதும் இல்லை.
//சி.சு. செல்லப்பா அவர்களுடைய சில படைப்புகளை வாசித்திருக்கிறேன்.//
இதைக் கேட்கவே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, மேடம்.
//மௌனி அவர்களுடையவற்றை இனிதான் வாசிக்கவேண்டும்.//
அதனையும் வாசிக்கும் பிராப்தம் தங்களுக்கு விரைவில் கிடைக்கட்டும்.
//ஜீவி சாரின் முயற்சிக்குப் பெரும்பாராட்டுகள். அறிமுகப்பகிர்வுக்கு மிகவும் நன்றி கோபு சார்.//
தங்களின் தொடர் வருகையும், ஆத்மார்த்தமாகச் சொல்லிப்போகும் அற்புதமான கருத்துக்களும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - பிரியமுள்ள கோபு
'என்றாவது ஒரு நாள்' கைக்கு வந்து சேரும், கீதமஞ்சரி!
பதிலளிநீக்குமிக்க நன்றி ஜீவி சார். "என்றாவது ஒருநாள்" தங்களை வந்து சேரும் நாளும் தொலைவில் இல்லை. :)))
நீக்குஇவ்வளவு அற்புதமான எழுத்தாளர்களை இங்கே நினைவு கூறினார் வேண்டுமென்றால்.. ஜி. வி. ஸாரின் ரசனைகள்.
பதிலளிநீக்குஎழுத்துகளை திறமைகள் எவ்வளவு மேம்பட்டதாக இருக்க வேண்டும். அதையும் இந்தக்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் விதமாக திரு கோபாலகிருஷ்ணன் ஸார் இங்கு பகிர்ந்து கொள்வது எவ்வளவு உயர்வான ரசனை. யான் பெற்ற இன்பம் அனைவரும் பெற இவங்க பகிர்ந்து வரும் எழுத்தாளர்கள், அவர்களின் அற்புதமான எழுத்தில் வெளிவந்திருக்கும் படைப்புகள் பற்றி கோடி காட்டி முழுமையாக அவர்களின் எழுத்துக்களைப்படிக்க ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்கு. இந்த பகுதியில் அறிமுகம் செய்திருக்கும் இரு எழுத்தாளர்களின் படைப்புகள் எதுவும் படித்து ரசிக்க இன்று வரை வாய்ப்பு கிடைக்கவில்லை. இனிமேல் கிடைக்கலாம்.....
ஸ்ரத்தா, ஸபுரி... March 21, 2016 at 11:27 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//இவ்வளவு அற்புதமான எழுத்தாளர்களை இங்கே நினைவு கூற வேண்டுமென்றால்.. ஜீ. வி. ஸாரின் ரசனைகள், எழுத்துகளின் திறமைகள் எவ்வளவு மேம்பட்டதாக இருக்க வேண்டும்.//
தன் பதிவில் தரும் நாகரீகமான எழுத்துக்களிலும், பிறர் எழுத்துக்கள் பற்றிய தனது விமர்சனங்களிலும், தான் பிறருக்குத்தரும் பின்னூட்டங்களிலும், மேம்பட்ட வாசிப்பு அனுபவங்களிலும், அவர் ஓர் தனித்திறமை வாய்ந்தவரும் பாண்டித்யம் அதிகம் உள்ளவரும்தான்.
//அதையும் இந்தக்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் விதமாக திரு கோபாலகிருஷ்ணன் ஸார் இங்கு பகிர்ந்து கொள்வது எவ்வளவு உயர்வான ரசனை. யான் பெற்ற இன்பம் அனைவரும் பெற இவங்க பகிர்ந்து வரும் எழுத்தாளர்கள், அவர்களின் அற்புதமான எழுத்தில் வெளிவந்திருக்கும் படைப்புகள் பற்றி கோடி காட்டி முழுமையாக அவர்களின் எழுத்துக்களைப்படிக்க ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்கு.//
இதனைத் தங்கள் வாயால் இங்கு நான் கேட்க, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாகவும், ஊக்கமும் உற்சாகமும் தருவதாகவும் உள்ளது. தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
//இந்த பகுதியில் அறிமுகம் செய்திருக்கும் இரு எழுத்தாளர்களின் படைப்புகள் எதுவும் படித்து ரசிக்க இன்று வரை வாய்ப்பு கிடைக்கவில்லை. இனிமேல் கிடைக்கலாம்.....//
விரைவில் தங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கட்டும்.
தங்களின் தொடர் வருகையும், ஆத்மார்த்தமாகச் சொல்லிப்போகும் அற்புதமான கருத்துக்களும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் - VGK
சுகங்களோ சுமைகளோ அதை உள்வாங்கி கொண்டு எழுதுவது எல்லாருக்குமே கைவந்து விடாதுதான். திரு மௌனி அவர்கள் அந்த சிறப்பான எழுத்துக்களில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். .திரு சிறப்பான.சுவாரசியமான.செல்லப்பா அவர்களையும் அவர்களின் எழுத்துக்களைப்படிக்க திறமையும் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி
பதிலளிநீக்குப்ராப்தம் March 21, 2016 at 12:01 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//சுகங்களோ சுமைகளோ அதை உள்வாங்கி கொண்டு எழுதுவது எல்லாருக்குமே கைவந்து விடாதுதான். திரு மௌனி அவர்கள் அந்த சிறப்பான எழுத்துக்களில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். சிறப்பான, சுவாரசியமான திரு.செல்லப்பா அவர்களையும் படிக்க அவர்களின் திறமையையும் எழுத்துக்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.//
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி - VGK
குருஜி ஒங்கட பதிவு பத்திலா ஏதுமே சொல்லாங்காட்டியும் ஒங்கட பதிவு பக்கம் வந்துபிட்டேனு பிட்டு ஒங்களுக்கு வெளங்கோணுமில்லா. அதா குண்டக்கா மண்டக்கானுபிட்டு கமண்டு அடிச்சி விடுறேன். மாப்பு கொடுத்து போடுங்கோ குருஜி.
பதிலளிநீக்குmru March 21, 2016 at 12:54 PM
நீக்குவாங்கோ முருகு, வணக்கம்மா. நல்லா இருக்கீங்களா? உங்களை என் பதிவுகள் பக்கம் பார்த்தே ரொம்ப நாளாச்சுது. இன்னிக்காவது வந்தீங்களே, சந்தோஷம்மா.
//குருஜி ஒங்கட பதிவு பத்திலா ஏதுமே சொல்லாங்காட்டியும் ஒங்கட பதிவு பக்கம் வந்துபிட்டேனு பிட்டு ஒங்களுக்கு வெளங்கோணுமில்லா.//
நல்லாவே எனக்கும் வெளங்கிடுச்சு, முருகு. :)
//அதா குண்டக்கா மண்டக்கானுபிட்டு கமண்டு அடிச்சி விடுறேன்.//
பொதுவாக, நகைச்சுவை நடிகர்களோ, நகைச்சுவைக் காட்சிகளோ இல்லாத திரைப்படங்கள் ஓடவே ஓடாது. அவை சுவாரஸ்யமாகவும் இருக்காது. மனம் ஜாலியாக மகிழ்ச்சியாக இருக்க மட்டுமே நாம் சினிமாவுக்குச் செல்லும்போது, அதில் நகைச்சுவை ஏதும் இல்லாமல் இருந்தால், வெறுத்துப்போய் விடும், முருகு.
முருகு வந்து, குண்டக்கா மண்டக்கானுபிட்டு கமெண்ட் அடிச்சு விடுவது, எனக்கு மட்டுமல்ல, இங்கு வந்து கமெண்ட் போடும் எல்லோருக்குமே கூட ஜாலியாக நகைச்சுவையாக மட்டுமே இருக்கக்கூடும்.
//மாப்பு கொடுத்து போடுங்கோ குருஜி.//
தொடர்ந்து வருகை தந்தால் மட்டுமே மாப்பு கொடுப்பதைப் பற்றி யோசிப்பேனாக்கும். :)
தங்களின் அன்பான வருகைக்கும், பதிவுக்கு சற்றும் சம்மந்தமே இல்லாத ஜாலியான கருத்துக்களுக்கும் என் நன்றிகள். வாழ்க !
பிரியமுள்ள குருஜி கோபு
வரிசையாக அறிமுகப்படுத்திவரும் பிரபல எழுத்தாளர்கள் பெயர்கள் படைப்புகள் அனைத்துமே எனக்கு புதிய விஷயங்கள்தான். இப்பவாவது தெரிந்து கொள்ள முடிகிறதே. அதற்கு முழுகாரணகர்த்தா திரு கோபால் ஸார்தான். ஸார் நன்றி. இன்றய பதிவின்மூலம் திரு மௌனி, திரு சி.சு. செல்லப்பா அவர்களைத்தெரிந்து கொள்ள முடிந்தது.
பதிலளிநீக்குசிப்பிக்குள் முத்து. March 21, 2016 at 1:17 PM
நீக்குஆஹா, வாங்கோ, வணக்கம். விலைமதிப்பு வாய்ந்த ’சிப்பிக்குள் முத்து’வை இன்னும் காணுமே என மிகவும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். :)
//வரிசையாக அறிமுகப்படுத்திவரும் பிரபல எழுத்தாளர்கள் பெயர்கள் படைப்புகள் அனைத்துமே எனக்கு புதிய விஷயங்கள்தான்.//
எனக்கும் அப்படியேதான். அதனால் மட்டுமே இந்த என் அறிமுகத்தொடர் வெளியீடு ... யான் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகமும் என்ற உயர்ந்த நோக்கத்தில்.
//இப்பவாவது தெரிந்து கொள்ள முடிகிறதே.//
இப்பவாவது இந்த என் தொடரின் பின்னூட்டங்கள் மூலமாவது ’சிப்பிக்குள் முத்து’ என்ற ஒருவரை என்னாலும் கொஞ்சூண்டு தெரிந்துகொள்ள முடிகிறதே .... அதேபோலத்தான் இதுவும் .... சந்தோஷம் :)
//அதற்கு முழுகாரணகர்த்தா திரு கோபால் ஸார்தான். ஸார் நன்றி.//
ஹைய்ய்ய்யோ ! அடிக்கும் வெயிலுக்கு உச்சி குளிர மிகப்பெரிய ஐஸ் கட்டியாக என் தலையில் இப்படி வைத்துள்ளீர்கள். ’முத்து’வுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
//இன்றைய பதிவின்மூலம் திரு மௌனி, திரு சி.சு. செல்லப்பா அவர்களைத்தெரிந்து கொள்ள முடிந்தது.//
ஆஹா, சந்தோஷம்.
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி - VGK
ஆஹா.இன்று மேலும் ரண்டு பிரபலங்களின் அறிமுகமா. திரு ஜி.வி. ஸார், திரு கோப்ல் ஸார் இருவருமே ரஸனையானவர்கள்தான். இப்படி திறமையான எழுத்தாளர்களை அனைவரும் தெரிந்து கொள்ளணும் என்றுதானே இப்படி ஒருபதிவு போடுகிறார்கள். வாசகர்களுக்கு கொண்டாட்டம்தான்..
பதிலளிநீக்குஆல் இஸ் வெல்....... March 21, 2016 at 1:25 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//ஆஹா, இன்று மேலும் இரண்டு பிரபலங்களின் அறிமுகமா.//
ஆமாம். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இரு பிரபலங்கள் வீதம் மட்டுமே அறிமுகம்.
பாலை அதிகமாகவும் வேக வேகமாகவும் ஊட்டினால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறிவிடும். அதனால் கொஞ்சம் கொஞ்சமாக சிறிய ஸ்பூனில் எடுத்து ஊட்டி விட வேண்டும். அதுபோலத்தான் இதுவும். :)
//திரு ஜி.வி. ஸார், திரு கோபால் ஸார் இருவருமே ரஸனையானவர்கள்தான்.//
என்னென்னவோ ரசனையாகச் சொல்லுகிறீர்கள். எனினும் எனக்கும் மகிழ்ச்சியாகவே உள்ளது. நல்லது. நன்றிகள்.
//இப்படி திறமையான எழுத்தாளர்களை அனைவரும் தெரிந்து கொள்ளணும் என்றுதானே இப்படி ஒருபதிவு போடுகிறார்கள். வாசகர்களுக்கு கொண்டாட்டம்தான்..//
எதையும் நீங்கள் சொன்னால் அது ஒரு தனி அழகாகத்தான் உள்ளது. படிக்கும் வாசகர்களுக்கேக் கொண்டாட்டம் என்றால் எழுதும் எங்களுக்கும் இதில் மிகுந்த மகிழ்ச்சியே.
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி - VGK
பிரபலமான பல எழுத்தாளர்களை இந்த பதிவு மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி ஸார். வேற என்ன சொல்வது.....
பதிலளிநீக்குsrini vasan March 21, 2016 at 1:35 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//பிரபலமான பல எழுத்தாளர்களை இந்த பதிவு மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி ஸார்.//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
//வேற என்ன சொல்வது.....//
அதானே ! .............. நல்லது.:)
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி - VGK
மௌனியை அதிகம் படிக்கவில்லை. சி.சு.செல்லப்பா (சின்னமனூர்க்காரர்) படித்திருக்கேன். அந்தக்காலத்து எழுத்து பத்திரிகையையும் சித்தப்பாவின் சேமிப்பில் பார்த்திருக்கேன். சுதந்திர தாகம் சொந்தமாக வெளியிட்டுவிட்டு மிகச் சிரமப்பட்டார். அவரைக் குறித்து வடக்கு வாசல் பெண்ணேஸ்வரன் எழுதி இருந்தார். படிக்கும்போதே கண்ணீர் வந்தது. அந்த நிலையிலும் சுய கௌரவம் இழக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். இது அந்தப் பக்கத்து மண்ணுக்கே உரியது! அதன் பக்கத்து ஊரான மேல்மங்கலம் என் அப்பாவின் சொந்த ஊர்! கிட்டத்தட்ட அந்த ஊர்க்காரங்களும் இப்படித் தான். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்னும் ரகம்!
பதிலளிநீக்குGeetha Sambasivam March 21, 2016 at 2:00 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//மௌனியை அதிகம் படிக்கவில்லை. சி.சு.செல்லப்பா (சின்னமனூர்க்காரர்) படித்திருக்கேன். அந்தக்காலத்து எழுத்து பத்திரிகையையும் சித்தப்பாவின் சேமிப்பில் பார்த்திருக்கேன். சுதந்திர தாகம் சொந்தமாக வெளியிட்டுவிட்டு மிகச் சிரமப்பட்டார். அவரைக் குறித்து வடக்கு வாசல் பெண்ணேஸ்வரன் எழுதி இருந்தார். படிக்கும்போதே கண்ணீர் வந்தது. அந்த நிலையிலும் சுய கௌரவம் இழக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். இது அந்தப் பக்கத்து மண்ணுக்கே உரியது! அதன் பக்கத்து ஊரான மேல்மங்கலம் என் அப்பாவின் சொந்த ஊர்! கிட்டத்தட்ட அந்த ஊர்க்காரங்களும் இப்படித் தான். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்னும் ரகம்!//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பலவித அனுபவக் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - VGK
மெளனியின் அழியாச்சுடர் இரண்டு மூன்று தடவைகளுக்கு மேல் வாசித்திருக்கிறேன். அது தான் அவருடைய மாஸ்டர் பீஸ் என்று சொன்னார்கள். ஆனால் என்ன முயன்றும் என்னால் அக்கதையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதாவது கதாசிரியரின் மனநிலையுடன் ஒன்ற முடியவில்லை. ரமணி சார் சொல்லியிருப்பது போல அவருடைய மனநிலைக்கு நாம் மாறினால் ஒழிய நமக்குப் புரியாது போலிருக்கிறது. சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் வாங்கி வைத்திருக்கிறேன். இன்னும் வாசிக்கவில்லை. இப்புத்தகம் வாசித்த பிறகு சீக்கிரம் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. இன்றைய அறிமுகங்களைப் பற்றிய பதிவு அருமை. ஆசிரியருக்கும் தங்களுக்கும் பாராட்டுக்கள் கோபு சார்!
பதிலளிநீக்குஞா. கலையரசி March 21, 2016 at 8:59 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//மெளனியின் அழியாச்சுடர் இரண்டு மூன்று தடவைகளுக்கு மேல் வாசித்திருக்கிறேன். அது தான் அவருடைய மாஸ்டர் பீஸ் என்று சொன்னார்கள். ஆனால் என்ன முயன்றும் என்னால் அக்கதையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதாவது கதாசிரியரின் மனநிலையுடன் ஒன்ற முடியவில்லை. ரமணி சார் சொல்லியிருப்பது போல அவருடைய மனநிலைக்கு நாம் மாறினால் ஒழிய நமக்குப் புரியாது போலிருக்கிறது.//
தங்களின் மனதுக்குப் பட்டதை தயங்காமல் இங்கு சொல்லியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதுவே மிகச்சரியான ஆரோக்யமானதோர் விமர்சனமாகவும் இருக்கக்கூடும்.
இவர் வாழ்ந்த காலம் எப்படியோ .... பொதுவாக ஓர் கவிதையோ, கதையோ, கட்டுரையோ எந்த இலக்கியமானாலும் பாமரனுக்கும் எளிதாகப் புரியக்கூடியதாக இருந்தால் தான் நல்லது என நினைப்பவன் நான். அவ்வாறான படைப்புகளே ஜனரஞ்சகமாக அனைத்துத்தரப்பு வாசகர்களின் வரவேற்பினையும் பெற்று வெற்றியடைய முடியும் என்பதும் என் எண்ணம்.
//சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் வாங்கி வைத்திருக்கிறேன். இன்னும் வாசிக்கவில்லை. இப்புத்தகம் வாசித்த பிறகு சீக்கிரம் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.//
தங்களின் இந்த வாசிக்கும் ஆவலுக்கும், ஆர்வத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.
//இன்றைய அறிமுகங்களைப் பற்றிய பதிவு அருமை. ஆசிரியருக்கும் தங்களுக்கும் பாராட்டுக்கள் கோபு சார்!//
தங்களின் தொடர் வருகையும், ஆத்மார்த்தமாகச் சொல்லிப்போகும் அற்புதமான விரிவான கருத்துக்களும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் மேடம்.
நன்றியுடன் கோபு
மெளனியின் இந்தக் கதையை பல மெய்ப்பாடுகளில் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
நீக்குவேறொரு நிகழ்வு சொல்கிறேன். என் நண்பன் என்னிடம் எங்களின் இளம் பருவத்தில் சொன்னது அது.
பத்து வயது சிறுவனாக என் நண்பன் இருக்கும் பொழுது மாந்தோட்டம் ஒன்றின் சுவரேறிக் குதித்து மரத்திலிருந்து விழுந்திருந்த இரண்டு மாம்பழங்களை எடுக்கிறான். தோட்டம் பூராவும் நிசப்தமாக இருக்கிறது. நல்லவேளை, தோட்டக்காரன் எங்கே போனானோ தெரியவில்லை.
பழங்களை சடுதியில் எடுத்த நண்பன் மீண்டும் சுவரேறி வெளியே குதிக்க முற்படுகையில் எதிர் மரத்தில் உட்கார்ந்ந்து கொண்டு குரங்கொன்று இவனையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அதன் தீட்சண்ய பார்வை இவனை என்னவோ செய்கிறது.
அடுத்த நாளும் இதே மாதிரி தப்பாது நடக்கிறது.
அதே மாதிரி இரண்டு மாம்பழங்கள். அதே மாதிரி சுவரேறிக் குதித்தல். அதே மாதிரி அதே குரங்கு அதே மாதிரியான "திருடுகிறாயா?" என்று கேட்பது போன்ற தீட்சண்ய பார்வை.
பார்க்கப் போனால் அந்த தோட்டம் இவன் நண்பனின் அப்பாவுக்குச் சொந்தமானது தான்.
அடுத்த நாளுக்கு அடுத்த நாள் இவன் அந்த நண்பனின் வீட்டுக்குப் போகிறான். "தோட்டத்தில் நிறைய மாம்பழங்கள் பழுத்துத் தொங்கும்.. உன் நண்பனுக்குக் கொடேன்" என்று அவன் அப்பா சொல்கிறார். நண்பன், நண்பனின் அப்பா, இவன் எல்லோரும் தோட்டத்திற்கு வருகிறார்கள்.
நண்பன் சில மாம்பழங்களைப் பறித்து இவனிடம் தருகிறான். அவன் அப்பாவும் கீழே விழுந்திருந்த சில பழங்களை எடுத்து ஒரு சின்ன கூடையில் போட்டு இவனிடம் தரும் பொழுது நிமிர்ந்து பார்க்கிறான்.
குரங்கொன்று மரக்கிளையில் அமர்ந்து இவனையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். இவன் பார்வைக்கு 'அதே' குரங்காகவும் அதை உணர்கிறான். அந்தக் குரங்கின் தீட்சண்ய பார்வை இவனைக் குடைகிறது.
"நேற்று முன் தினம் சுவரேறிக் குதித்து பழங்களைத் திருடியது, நீ தானே?" என்கிற தோரணையில் அந்தக் குரங்கு இவனை உற்றுப் பார்ப்பது போல இருக்கிறது.
அவனுக்கும், அந்தக் குரங்குக்கும் மட்டும் தெரிந்த அந்த ரகசியம் -- நண்பனுக்கும் அவன் அப்பாவுக்கும் தெரியாத அந்த ரகசியம்-- இவனை உறுத்துகிறது.
வாட்டுகிறது. பழங்களை அப்படியே போட்டு விட்டு இந்த இடத்தை விட்டே ஓடிவிடலாமா என்று தோன்றுகிறது. இந்தளவுக்கு இந்தக் கதை போதும்.
அப்படியே இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு பொருந்துகிற மாதிரி, மெளனியின் கதைக்கு இந்த நிகழ்வைப் பொருத்திப் பாருங்கள். கோயில் சந்நிதி, இவன் அவளிடம் சொன்னது, அதற்கு சாட்சியாக இருக்கும் கோயில் சிலைகள், கோயில் தூணில் கூத்தாடும் யாளி--
ஒரு காரியம் நடக்கும் பொழுது யாரும் நம்மைச் சுற்றி இல்லை என்றாலும், எல்லாச் சூழல்களிலும் நாம் தனிமையில் இல்லை, நம்மைச் சுற்றி நம் கண்ணுக்குப் புலப்படாத சில் இருந்து கொண்டே தான் இருக்கின்றன என்ற அமானுஷய உணர்வோடும் இந்தக் கதையை உள்ளார்ந்து பார்க்கலாம்.
அவரவர் நினைப்புக்கேற்ப அர்த்தப் படுத்திக் கொள்கிற மாதிரி இந்தக் கதையை பன்முகத் தோற்றத்தோடு எழுதியது தான் மெளனியின் எழுத்தின் வெற்றி.
'சிறுகதையின் திருமூலர்' என்று புதுமைப்பித்தன் சும்மாவா சொன்னார்?..
நீங்கள் சொன்ன இந்தப் பின்னணியில் மீண்டும் ஒரு முறை வாசித்துப்பார்க்கிறேன். மிகவும் நன்றி ஜீவி சார்!
நீக்குஇரண்டு அவ்வளவாக அறிந்திருக்காத, அருமையான பெரிய எழுத்தாளர்களைப் பற்றித் தெரிந்து கொண்டோம் சார். நல்ல அறிமுகம். மிக்க நன்றி சார். அடுத்த பதிவிற்கு நாளை வருகின்றோம் சார்...
பதிலளிநீக்குThulasidharan V Thillaiakathu March 21, 2016 at 9:22 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//அவ்வளவாக அறிந்திருக்காத, இரண்டு அருமையான பெரிய எழுத்தாளர்களைப் பற்றித் தெரிந்து கொண்டோம் சார். நல்ல அறிமுகம். மிக்க நன்றி சார்.//
தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி.
//அடுத்த பதிவிற்கு நாளை வருகின்றோம் சார்...//
சந்தோஷம். வாங்கோ, மிக்க நன்றி, சார். - VGK
அருமையான நூல் விமர்சனம் சார்.
பதிலளிநீக்கு//ஒரு காரியம் நடக்கும் பொழுது யாரும் நம்மைச் சுற்றி இல்லை என்றாலும், எல்லாச் சூழல்களிலும் நாம் தனிமையில் இல்லை, நம்மைச் சுற்றி நம் கண்ணுக்குப் புலப்படாத சில இருந்து கொண்டே தான் இருக்கின்றன//
ஜீவி சார் சொல்வது உண்மைதான்.
சிறுகதையின் திருமூலர்'மெளனியை பற்றி புதுமை பித்தன் அவர்கள் சொன்னதை அறிந்து கொண்டேன்.
ஜீவி சார் நண்பர் சொன்ன நிகழ்வும் அருமை. மனசாட்சி உறுத்தும் இல்லையா?
கோமதி அரசுMarch 22, 2016 at 9:57 AM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//அருமையான நூல் (விமர்சனம்) அறிமுகம் சார்.//
மிக்க மகிழ்ச்சி.
*ஒரு காரியம் நடக்கும் பொழுது யாரும் நம்மைச் சுற்றி இல்லை என்றாலும், எல்லாச் சூழல்களிலும் நாம் தனிமையில் இல்லை, நம்மைச் சுற்றி நம் கண்ணுக்குப் புலப்படாத சில இருந்து கொண்டே தான் இருக்கின்றன*
//ஜீவி சார் சொல்வது உண்மைதான்.//
:) ஆம். இருப்பினும் நம்மில் சிலரால் மட்டுமே இதனை உணரமுடிகிறது.
//’சிறுகதையின் திருமூலர்'மெளனியை பற்றி புதுமை பித்தன் அவர்கள் சொன்னதை அறிந்து கொண்டேன்.//
நானும்தான். மெளனம் என்ற சொல்லிலிருந்து வந்திருக்குமோ இந்த மெளனி என்ற பெயர்!
//ஜீவி சார் நண்பர் சொன்ன நிகழ்வும் அருமை. மனசாட்சி உறுத்தும் இல்லையா?//
மனசாட்சி உள்ளவர்களுக்கு நிச்சயமாக உறுத்தத்தான் செய்யும்.
நேற்று ’ஹரிஜி’ என்பவரின் (திருமதி. விசாஹா ஹரி அவர்களின் கணவர்) ஓர் சங்கீத உபந்யாசம் மிகவும் ரஸித்துக் கேட்டேன்.
பத்ராசலத்தில் ஸ்ரீராமருக்குக் ப்ரும்மாண்டமான கோயில் எழுப்பியவரான கோபண்ணா என்ற இராமதாஸர் சரித்திரம் அது.
அதில் ஒவ்வொருவருக்கும், தர்மம் தெரிந்தால் மட்டும் போதாது, தர்ம சூட்சுமம் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்லி, அதற்கு வரிசையாக ஒருசில உதாரணங்கள் அருமையாகச் சொல்லி வந்தார், ஹரிஜி.
தர்ம சூட்சுமத்தின் அடிப்படையே அவரவர்களின் மனசாட்சி மட்டுமே.
கோபண்ணா என்கிற இராமதாஸர் சென்ற பாதையும் தர்ம சூட்சுமத்தின் அடிப்படையில், தன் மனசாட்சிப்படி மட்டுமே. அதற்கான ராஜ தண்டனைகளை ஸ்ரீராமர் மேல் பாரத்தைப்போட்டுவிட்டு, ஏற்றுக்கொண்டு பல்வேறு சித்ரவதைகளை சிறையில் அனுபவிக்கிறார்.
கடைசியில் அவர் நம்பியிருந்த ஸ்ரீராமர் அவரைக் கைவிடவில்லை. ஸ்ரீராமர் அருளால் விடுதலை செய்யப்படுகிறார்.
அவருக்கு ராஜ தண்டனை அளித்த சுல்தானுக்கே ஸ்ரீராமர் முதலில் காட்சியளிக்கிறார். ராஜாங்கத்திற்கு கோபண்ணா தர வேண்டிய பணம் பூராவும், ஜொலிக்கும் தங்க மொஹராக்களாக சுல்தான் முன்பு லெக்ஷ்மண ஸ்வாமியால் மூட்டை மூட்டையாகக் கலகலவென்று கொட்டப்படுகிறது.
அதைப்பார்த்த சுல்தான் திகைத்துப்போகிறார்.
ஸ்ரீராமரும் லெக்ஷ்மணரும் மறைந்ததும், சுல்தான் பித்துப்பிடித்தது போல ஆகிவிடுகிறார்.
ராமோஜி கஹாங்? லெக்ஷ்மணோஜி கஹாங்? (கஹாங்?=எங்கிருக்கிறார்கள்?) என்று புலம்ப ஆரம்பித்து விடுகிறார்.
கோபண்ணா என்கிற இராமதாஸர் சுல்தானால் விடுதலை செய்யப்படுகிறார்.
ஸ்ரீ ராமோஜி, ஸ்ரீ லெக்ஷ்மணோஜி இருவரையும் நான் உங்களுக்குக் காட்டுகிறேன் எனச்சொல்லி, சுல்தானை பத்ராசலம் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறார், கோபண்ணா என்கிற இராமதாஸர்
அந்த சுல்தானும் பிறகு இராமதாஸரின் பக்தர்களில் ஒருவராகி விடுகிறார்.
(இந்த நான் நேற்று கேட்ட கதையை இவ்வாறு நான் மிகச்சுருக்கமாக இங்கு முடித்துக் கொள்கிறேன்)
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - அன்புடன் VGK
அருமையான கதை பகிவுக்கு நன்றி சார்.உங்கள் பதில்கள் பின்னூட்டங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கும். ஜீவிசார் கதைக்கு உங்களை விட வேறு யாரால் இப்படி இவ்வளவு அழகாய் விமர்சனம் செய்ய முடியும்? வாசகர்களிடம் பதிலை வரவழைக்க முடியும்?
பதிலளிநீக்குஜீவி சார் பதிவுகளை படித்து கருத்து சொன்னால் அவரும் மகிழ்வார். கலந்துரையாடல் போல் இருந்தால் இன்னும் மகிழ்வார்.
கோமதி அரசு March 22, 2016 at 2:44 PM
நீக்குவாங்கோ, தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்வளிக்கிறது.
//அருமையான கதை பகிர்வுக்கு நன்றி சார். உங்கள் பதில்கள் பின்னூட்டங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கும்.//
மிக்க மகிழ்ச்சி. தங்கள் மூலம் இதைக்கேட்க நான் தன்யனானேன். :)
//ஜீவிசார் (கதைக்கு) நூலுக்கு உங்களை விட வேறு யாரால் இப்படி இவ்வளவு அழகாய் விமர்சனம் செய்ய முடியும்?//
விமர்சனமே அல்ல. அறிமுகம் + புகழுரை மட்டுமே. அவரின் நூலினை விமர்சனம் செய்யும் அளவுக்கு எனக்கு தகுதி கிடையாது என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்காகவும் ஒருமுறை இங்கு இன்று சொல்லிக்கொள்கிறேன்.
//வாசகர்களிடம் பதிலை வரவழைக்க முடியும்?//
இதை வேண்டுமானால் நானும் அப்படியே ஒத்துக்கொள்கிறேன். இதில் ஜீவி சாருக்காக மட்டுமே இங்கு வருகை தருவோர் உங்களைப்போன்ற சிலரும் உள்ளனர், நான் வெளியிடும் பதிவு என்பதனால் மட்டுமே வருகை தருவோர் சிலரும் உள்ளனர், இதெல்லாம் சுத்த DRY SUBJECT என்பதுபோல சுத்தமாகவே ஒதுங்கியுள்ளோர் பலரும் உள்ளனர் என்பதும் எனக்குத் தெரியும். :)
//ஜீவி சார் பதிவுகளை படித்து கருத்து சொன்னால் அவரும் மகிழ்வார். கலந்துரையாடல் போல் இருந்தால் இன்னும் மகிழ்வார்.//
நம் ஜீவி சாரைப்பற்றி மிக நன்றாகவே புரிந்து வைத்துள்ளீர்கள். இருப்பினும் இந்த மகிழ்ச்சி எழுத்தாளர்கள் + பதிவர்கள் எல்லோருக்குமே பொதுவாக உள்ளதோர் எதிர்பார்ப்பு மட்டுமேதான்.
தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும், விரிவான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் நன்றிகள், மேடம். - VGK
விந்தன் மற்றும் லா ச ரா. என் மனதிற்கு
பதிலளிநீக்குமிகவும் நெருக்கமான மிகவும் பிடித்தமான
எழுத்தாளர்கள்.
சிந்தா நதி தொடராக வந்த காலத்திலேயே
அதை படித்த்து அவர் எழுத்து குறித்து வியந்திருக்கிறேன்.
லாசராவின் கதைகளை நான் எப்போதும்
அதற்கான ஒரு தனிமைச் சூழலை
ஏற்படுத்திக் கொண்ட பின்பே படிக்கத்
துவங்குவேன்.அவருடைய கதைகள்
அவசர வாசிப்புக்கான கதைகள் அல்ல.
அதன் த்வனியே தனி.அந்தத் த்வனிக்கான
மனோபாவம் இல்லையெனில்
அவருடைய கதையின் அருமை,சுகம்
புரிந்து கொள்வது கடினம் என்பது என் அபிப்பிராயம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வை.கோபாலகிருஷ்ணன் March 22, 2016 at 5:47 PM
நீக்குதிரு. S. RAMANI Sir அவர்களின் மேற்படி பின்னூட்டம், இந்தத்தொடரின் பகுதி-5 க்கானதாகும். ஏதோ தவறுதலாக இங்கு பகுதி-4 இல் வந்து அமர்ந்துள்ளது.
இதனை அப்படியே நகலெடுத்து, பகுதி-5 இல் இணைத்துள்ளேன்.
This is just for information & for future reference if any, only - vgk
சி.சு.செல்லப்பாவின் புதுக்கவிதை பற்றிய நூலினை வாசித்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குதி.தமிழ் இளங்கோ March 25, 2016 at 5:23 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம்.
//சி.சு.செல்லப்பாவின் புதுக்கவிதை பற்றிய நூலினை வாசித்து இருக்கிறேன்.//
மிக்க மகிழ்ச்சி. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. vgk
இவர்களை அறிந்தவர்கள் உள்ளார்கள் என்பது நிறைவாக இருக்கிறது. (எனக்கு இப்போது தான் அறிமுகம்)
பதிலளிநீக்குஜீவி கிளறியிருப்பது திரட்டுப்பால். அதை சிறு உருண்டைகளாக நீங்கள் வழங்குவது இதம்.
அப்பாதுரை March 26, 2016 at 11:14 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம்.
//இவர்களை அறிந்தவர்கள் உள்ளார்கள் என்பது நிறைவாக இருக்கிறது. (எனக்கு இப்போது தான் அறிமுகம்)//
அதுதான் இதில் உள்ள விசேஷம். (எனக்கும் தான்)
//ஜீவி கிளறியிருப்பது திரட்டுப்பால். அதை சிறு உருண்டைகளாக நீங்கள் வழங்குவது இதம்.//
ஆஹா, வெகு அழகாகச் சொல்லி விட்டீர்கள். அவர் மிகப்பெரிய 37 அடுக்குகள் நிறைய சுவையான திரட்டுப்பால் கிளறிக்கொடுத்துள்ளார். நான் ஒவ்வொரு அடுக்கிலிருந்தும் ஒவ்வொரு ஸ்பூன் வீதம் சும்மா சாம்பிளாக எடுத்துக் கொடுத்துக்கொண்டு வருகிறேன்.
அது தங்களுக்கு இதமாக இருப்பதாகச் சொல்வது என் மனதுக்கும் ஹிதமாக உள்ளது. மிக்க நன்றி சார். VGK