About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, March 22, 2016

ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 5

 


’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.
நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள்,  செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி.

இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.  7) ’பாலும் பாவையும்’ 
 விந்தன் 
[பக்கம் 48 முதல் 53 வரை]

 


வரிசையாக ஒவ்வொரு தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியும் வாசித்துக் கொண்டே வரும் பொழுது, எழுத்தாளர் விந்தன் அவர்களைப் பற்றி என் வாசிப்பு அனுபவம் நீள்கையில் என்னையறியாமல் நெகிழ்ந்து போனேன்.

எழுத்தாளர்களில் எத்தனையோ விதம். விந்தனின் நிலைமை, எழுதினால்தான், அடுத்த வேளைக்கு வீட்டில் அடுப்புப்புகையும் என்கிற நிலை. அதனால், தான்பட்ட துயரை போலியாக அல்லாமல் மிகவும் யதார்த்தமாக இவரால் எழுத முடிந்துள்ளது.

அதிகம் பள்ளிப்படிப்பு படித்தவரில்லை. கல்கி பத்திரிகையில் சாதாரண அச்சுக்கோர்க்கும் தொழிலாளியாக பணியில் அமர்ந்தவர். தனது எழுத்துக்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கும்வரை, திருப்தியடையாமல், ’ப்ரூஃப்’ ஆக வரும்போது பலமுறை பலவற்றை இடைஇடையே சேர்த்துக்கொண்டே போகும் வழக்கம் உடைய அமரர் கல்கி அவர்களிடமே, கொஞ்சமும் சலித்துக்கொள்ளாமல் ஈடுகொடுத்து நல்லபெயர் வாங்கியவர் விந்தன்.  

விஜி என்ற பெயரில் எழுதத்துவங்கிய கோவிந்தனுக்கு ’விந்தன்’ என்று புனைப்பெயர் சூட்டியவர் அமரர் கல்கி ஆவார். விந்தனின் எழுத்தாற்றலை நன்கு புரிந்துகொண்ட கல்கி அவர்கள், அவரை ‘கல்கி’ பத்திரிகையில் ஆசிரியர் குழுவில் ஒருவராக்கி தன் பக்கத்தில் அமர்த்திக்கொண்டார். 

இந்த நேரத்தில்தான் விந்தனின் தனிச்சிறப்பான ‘முல்லைக்கொடியாள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் அவரின் 25 கதைகளுடன், தமிழகத்தின் நட்சத்திர பிரசுரமாக அன்று திகழ்ந்த ‘ஸ்டார் பதிப்பகம்’ மூலம் வெளியானது. இதற்கு முன்னுரை எழுதியிருந்தவரும் கல்கி அவர்களே. ’தமிழ் வளர்ச்சிக்கழகம்’ என்பது துவக்கப்பட்டு இந்த விந்தனின் ‘முல்லைக்கொடியாள்’ நூலுக்குத்தான் முதன் முதலாகத் தனது முதல்பரிசினை அளித்து கெளரவித்தது என்கிறார் ஜீவி. 

’மனிதன்’ என்ற பெயரில் ஓர் பத்திரிகையைத் துவங்கி நடத்தியவர் விந்தன். பிறகு ‘புத்தகப்பூங்கா’ என்ற பதிப்பகத்தையே துணிந்து ஆரம்பித்தவர். ‘பாலும் பாவையும்’ இவரின் மறக்க முடியாததோர் நாவல். 

விந்தனைப்பற்றியும் அவர் தன் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி சாதித்துள்ள மேலும் பல வியப்பளிக்கும் செய்திகள் உள்ளன. சிவாஜி + எம்.ஜி.ஆர். சேர்ந்து நடித்துள்ள ஒரே திரைப்படமான ‘கூண்டுக்கிளி’ கதை எழுதியவர் விந்தனே. பிரபலமான பல திரைப்படப்பாடல்களும் இவர் எழுதியுள்ளார். ஒருசில திரைப்பட வசனங்களும் எழுதியுள்ளார் என பல்வேறு தகவல்களைச் சொல்லியுள்ளார் ஜீவி, இந்தத் தன் நூலில். 

அன்றைய அமுதசுரபி ஆசிரியர் வேம்பு (சமீபத்தில் காலமான விக்கிரமன் அவர்கள்தான்) + அந்தக்காலத்தில் தினமணி பத்திரிகையின் உதவி ஆசிரியரான பிரபல எழுத்தாளர் சாவி போன்றோர் விந்தனின் எழுத்துக்களுக்கு பெரிதும் ஆதரவு அளித்து மேலும் புகழ் சேர்த்துள்ளனர். 

புதுமைப்பித்தனுக்கும் ஜெயகாந்தனுக்கும் இடையே அவர்கள் இருவரையும் போலவே எளிய சாதாரண மக்களைப்பற்றி எழுதிப் புகழ் பெற்றவர் இவர் என்று விந்தனைப் பற்றி, ஜீவி இந்த நூலில் தகுந்த சான்றுகளுடன் நிலைநிறுத்தும் பொழுது நம் வாசிப்பு அனுபவம் மேன்மை பெறுகிறது. 

.
பொதுவான சில தகவல்கள்

1971 to 1980 என்னுடைய மிகவும் இளமையான நாட்கள். அப்போதெல்லாம் நம் பாரத நாட்டிலும், குறிப்பாக நம் தமிழ்நாட்டிலும், யாருடைய வீட்டுக்குள்ளும் தொலைகாட்சிப்பெட்டி என்ற ’சனி பகவான்’ நுழையாததோர் பொற்காலம் அது என்று சொல்லலாம். இன்றுபோல கணினி, அலைபேசி போன்ற ’ராகு, கேது’ தொந்தரவுகள் ஏதும் குறுக்கிடாத பொன்னான நாட்கள் அவை.

அப்போதெல்லாம் என்னைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினரில் சிலர் வீடுகளில் மட்டும் கல்கி, ஆனந்த விகடன், குமுதம் போன்ற சில பிரபல வார இதழ்களில் ஏதேனும் ஒன்றை வாங்கிப் படிப்பது வழக்கம். 

அக்கம்பக்கத்தில் வீடுகள் அமைந்துள்ள ஒருசிலர் கூட்டாக சேர்ந்து பணம் போட்டு இவற்றை வாங்கி, தாங்கள் படித்து முடித்ததும், அடுத்தவருக்குப் படிக்கக் கொடுப்பது வழக்கமாக இருந்ததும் உண்டு. இதை Lending Library என்பார்கள்.

இவ்வாறான கூட்டணி முறையில் என் கைகளுக்கு புத்தகம் கடைசியாக வந்துசேரும் போது அது மிகவும் பழசாகிப்போய் இருக்கும். அதனால் என்னவென்று நினைத்து, நான் என்னைப் பொறுத்தவரை அதனை புதிய புத்தகமாகவே நினைத்து, பொறுமையாக வாசித்து மகிழ்ந்ததும் உண்டு. 

இந்த என் மிகவும் துடிப்பான இளமை காலமான (1971-1980) பத்தாண்டுகளுக்குப்பிறகு, நான் பணி ஓய்வு பெற்ற 2009 வரை, என் குடும்ப + அலுவலகப் பொறுப்புகள் எனக்கு மிகவும் அதிகமாகி, அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டதால், என்னால் வார இதழ்கள் எதையும் பொறுமையாக வாசிக்கும் வாய்ப்பு இல்லாமலேயே போய்விட்டது.

1966-இல் அந்தக்கால SSLC (11th Std.) முடித்த எனக்கு மேற்கொண்டு படிக்க மிகுந்த ஆவல் இருந்தும், என்னை அவ்வாறு மேற்படிப்பு படிக்க வைக்க என் வீட்டின் பொருளாதார நிலை இடம் கொடுக்கவில்லை. SSLC (11th Std.) கடைசி தேர்வு எழுதிய நாள்: 04.04.1966. மறுநாளே வேலை தேட ஆரம்பித்ததில், ஒரு கஷ்டமான பணியில் மிகக்குறைவான (மாதம் ரூ. 25 மட்டுமே) சம்பளத்தில் 06.04.1966 அன்று பணியில் நான் சேர நேர்ந்தது. 

அந்த சொற்பச் சம்பளமும் நான் தினமும் அதிகாலை ஒருமணி நேரம் வீதம் டைப்ரைடிங் லோயர் + ஹையர் + ஹை ஸ்பீடு படிக்கப் பணம் கட்டவும் அதற்கான வெள்ளைத் தாள்கள் வாங்கவும் மட்டுமே சரியாக இருந்தது. 

பிறகு 01.01.1968 முதல் வேறு ஒரு வேலைக்கு மாறிச்சென்றேன். அங்கு மாதச்சம்பளமாக ரூ. 100 கிடைத்ததுடன், சற்றே கெளரவமான வேலையாகவும் இருந்து, உலக விஷயங்கள் பலவற்றை நான் அறிந்துகொள்ளவும் உதவியது. என் வீட்டுக்கும் என்னால் கொஞ்சம் பணம் கொடுத்து உதவவும் முடிந்தது. 

1970-இல் L I C , I S R O , S B I போன்றவற்றிலிருந்து உத்யோக அழைப்புகள் ஒரே நேரத்தில் எனக்கு வந்தன. இவற்றில் நான் S.B.I. ஐத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, பெரம்பலூர் மதன கோபாலபுரம் கிளையில் சில மாதங்கள் மட்டும் பணியாற்றினேன். அப்போது திருச்சியிலிருந்து பெரம்பலூருக்கு மொபஸல் பஸ் பயண நேரம் 1 மணி + 45 நிமிடங்கள். அதற்கு பஸ் சார்ஜ் அன்று ரூ. 1 - 50 மட்டுமே.

பிறகு 1970 நவம்பரில் என் சொந்த ஊரான BHEL திருச்சியில் நிரந்தரமான பணிக்கு நான் தேர்வானேன். அதனால் SBI Perambalur வேலையை நான் Resign செய்துகொண்டு வந்துவிட்டேன்.

மேற்கொண்டு எப்படியாவது படிக்க வேண்டும் என்ற ஆர்வத்திலிருந்த நான், என் 40வது வயதில் ஆரம்பித்து 47 வயதுக்குள் மட்டுமே, என் மேற்படிப்பினை தபால் மூலம் தொடர முடிந்தது. மூன்று வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் சேர்ந்து B.Com., M.A., (Sociology), PGD in PM and IR ஆகிய மூன்று பட்டங்களைப் பெற்றேன். எல்லாவற்றிலும் First Attempt லேயே என்னால் Pass செய்ய முடிந்தும் எல்லாவற்றிலும் Second Class மட்டுமே எனக்குக் கிடைத்தன.    

என் பள்ளி வாழ்க்கை பற்றி ‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு சிறிய தொடராக எழுதியுள்ளேன். அதற்கான பகுதி-1 க்கான இணைப்பு:  http://gopu1949.blogspot.in/2012/03/1.html


இந்த எழுத்தாளர் ‘விந்தன்’ அவர்களைப்பற்றி ஜீவி அவர்கள் எழுதியுள்ளதை நான் படித்த கையோடு, ஜீவி சாருக்கு நான் எழுதியிருந்த மின்னஞ்சலின் ஓர் பகுதியை இதோ கீழே கொடுத்துள்ளேன்:Respected and Dear Sir,

நமஸ்காரங்கள், வணக்கம்.

தங்களின் இந்த நூலில் ‘விந்தன்’ பற்றி படித்ததும், விந்தன் மாதிரியேவோ அல்லது விந்தனுக்கு பதிலாகவோ நான் கல்கியில் அச்சுக்கோர்ப்பவனாக திருவாளர். கல்கி அவர்களிடம் பணிக்குச் சேர்ந்திருக்கக்கூடாதா, என நினைத்து ஏங்கினேன். 

BHEL இல் நான் எவ்வளவோ VERY STRICT and TOUGH BOSS களிடம், மாடாக உழைத்து, SINCERE ஆகப் பணியாற்றி, அவர்கள் ஒவ்வொருவரிடம் நல்ல பெயர் வாங்கி நன்மதிப்பைப் பெற்றவன். 

04.11.1970 இல் BHEL இல் ஓர் சாதாரண WORKER (LOWER DIVISION CLERK) ஆகச் சேர்ந்து, பல்வேறு PROMOTION களுக்குப்பிறகு, 20 ஆண்டுகளில் SUPERVISOR ஆகி, அதன் பிறகு மேற்கொண்டு மூன்று பதவி உயர்வுகள் பெற்று அடுத்த 15 ஆண்டுகளில் CHIEF SUPERVISOR ஆகி என் பணி ஓய்வுக்கு, ஓராண்டுக்குமுன் ஓர் EXECUTIVE ஆகவும் ஆனவன்.

ஒருவேளை, BHEL வேலைக்கு பதிலாக, திருவாளர் கல்கி அவர்களிடம் நான் வேலைக்குச் சேர்ந்திருந்தால், அவர் தயவால், அப்போதுமுதலே நானும் ’விந்தன்’ அவர்களைப்போல ஒரு பிரபல எழுத்தாளராகவே ஆக்கப்பட்டிருப்பேனோ என்னவோ ! 

அதற்கு ஏனோ எனக்குப் பிராப்தம் இல்லாமல் போய் விட்டது. இப்போது நினைத்து என்ன பிரயோசனம்? 

பிரியமுள்ள 
கோபு 05/03/2016

அதற்கு ஜீவி அவர்கள் எனக்கு எழுதியுள்ள பதில் மின்னஞ்சலின் ஓர் பகுதி இதோ:

பிரமாதம் சார்.

அந்த கல்கி விஷயம் என்னை ரொம்பவும் இம்ப்ரஸ் பண்ணினது.  

’இன்னும் கொஞ்ச காலத்திற்கு முன்னாடியே பிறந்திருந்து’ என்ற வார்த்தையை மட்டும் இடுக்கில் சேர்த்துக்கொள்ளவும். 


பிரபலம் எழுத்திலா அல்லது வாழ்க்கை வசதியிலா என்பதை காலம் தான் தீர்மானித்திருக்க வேண்டும். எழுத்துப் பணியை மட்டும் ஏற்றுக் கொண்டு தமிழில் பிரபலம் அடைந்த எழுத்தாளர்கள் வெகு  சிலரே. அவர்களுக்கும் அரசியல், திரைப்படம் போன்ற பின்புலன்கள் இருந்தமையால் தான் அதுவும் சாத்தியமாயிற்று.

நீங்க BHEL  பணியில் நீடித்ததே புத்திசாலித்தனம் என்றும் சொல்வேன்.   

அன்புடன், 
ஜீவி 05/03/2016


8) தனித்துவமாய்த் தெரிந்த 
லா.ச.ராமாமிர்தம்
[பக்கம் 54 முதல் 59 வரை]
புறவுலகை மறந்து எழுதியவரின் எழுத்துடன் அதே அலைவரிசையில் ஐக்கியமாகும் அதி அற்புதம் தான் லா.ச.ரா. அவர்களின் படைப்புகள். பல சமயங்களில் தன்னை ஆட்கொண்ட அவஸ்தைகளை, அந்த அவஸ்தைகளினூடேயே விவரித்திருக்கிறார். அப்படி அவர் ஆட்பட்ட தருணங்களிலிருந்து கொஞ்சமே விடுபட்ட நிலையில்கூட, இந்த அந்நியோன்ய விவரிப்பு அவருக்கு சாத்தியப்பட்டிருக்காது என்று தோன்றுகிறது. கண்ட காட்சிகள் அப்படி அப்படியே; தரிசித்த தரிசன தத்ரூபத்தின் விகசிப்பு அப்படியே அதே வழிசலுடன்... சிந்தாமல் சிதறாமல், சிந்தா  நதியாய்... அதே துள்ளலுடன், அதே துவளளுடன், அதே நெகிழ்தல், குழைதலுடன், அதே பரவசத்துடன், அதே சூட்டோடு பரிமாறியிருக்கிறார். தன் நெஞ்சிலிருந்து பிறர் நெஞ்சுக்கு கூடுவிட்டு கூடுபாயச் செய்திருக்கிறார். அந்த சித்து விளையாட்டை அவர் கற்ற எழுத்தால் நடத்திக்காட்டியிருக்கிறார். அனுபவித்த அனுபவிப்பின் பரவசம், அந்த பரவசத்தினூடேயே எழுத்தாய்.... அந்தத் தவம் அவருக்கு சாத்தியப்பட்டுள்ளது, எனச்சொல்லிக்கொண்டே போய் தகுந்த உதாரணங்களுடன் இந்தத் தன் நூலில் தானும் பரவசப்பட்டு  பல விஷயங்களை எழுதிக்குவித்துள்ளார் ஜீவி.

லா.ச.ரா. அவர்களின் சிறுகதைகள் பலவும் ஸ்பானிஷ், ஃப்ரெஞ்ச், ஜெர்மன் போன்ற அயல் நாட்டு மொழிகளில்  மொழிமாற்றம் கண்டுள்ளன என்றும் தினமணி கதிரில் பிரசுரமான அவரின் சுயசரிதம் போன்ற ‘சிந்தாநதி’ க்கு பிற்காலத்தில் சாகித்ய அகாதமி விருது அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார், ஜீவி.  
இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும். 

என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)
 
தொடரும்  

இதன் அடுத்த பகுதியில் 
இடம்பெறப்போகும் 
இரு பிரபல எழுத்தாளர்கள்:
  


  வெளியீடு: 24.03.2016 பிற்பகல் 3 மணிக்கு.

காணத் தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள் !! 

 

51 comments:

 1. விந்தன் அவர்களைபற்றிய வாழ்க்கை வரலாறு தெரிந்து கொண்டேன். எப்போதும் உற்சாகம் ஊட்டவும் , கைதூக்கிவிடவும் பின்புலத்தில் உதவிக்கரம் இருந்தால் மிக நல்லது தான். எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை.

  ஜீவி சாருக்கு நீங்கள் எழுதிய கடிதமும், அவர் உங்களுக்கு எழுதிய பதிவும் அருமை. அன்றைய எழுத்தாளர்கள் நிறைய பேர் வறுமையை தான் சம்பாதித்து இருக்கிறார்கள். புகழ்கூட இறப்புக்கு பின் தான் சிலருக்கு என்பது வருத்தமான விஷயம்.

  இப்போது உள்ள பத்திரிக்கைகள் பதிவுலகில் இருப்பவர்களிடம் கதை, கட்டுரை, படங்கள் வாங்கிப் போட்டுக் கொண்டு இருக்கும் காலம். உங்கள் கதைகள் பத்திரிக்கைகளில் வந்து இருக்கிறது.
  அதற்கு பெருமைப் படுங்கள்.
  ஜீவி சாருக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு March 22, 2016 at 3:20 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //விந்தன் அவர்களைபற்றிய வாழ்க்கை வரலாறு தெரிந்து கொண்டேன்.//

   சந்தோஷம்.

   //எப்போதும் உற்சாகம் ஊட்டவும், கைதூக்கிவிடவும் பின்புலத்தில் உதவிக்கரம் இருந்தால் மிக நல்லது தான். எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை.//

   மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். கரெக்ட்.

   //ஜீவி சாருக்கு நீங்கள் எழுதிய கடிதமும், அவர் உங்களுக்கு எழுதிய பதிவும் அருமை.//

   மிக்க மகிழ்ச்சி. :)

   //அன்றைய எழுத்தாளர்கள் நிறைய பேர் வறுமையை தான் சம்பாதித்து இருக்கிறார்கள். புகழ்கூட இறப்புக்கு பின் தான் சிலருக்கு என்பது வருத்தமான விஷயம்.//

   ஆமாம். ஆமாம். :(

   //இப்போது உள்ள பத்திரிக்கைகள் பதிவுலகில் இருப்பவர்களிடம் கதை, கட்டுரை, படங்கள் வாங்கிப் போட்டுக் கொண்டு இருக்கும் காலம்.//

   தெரிகிறது. புரிகிறது. ’யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்’ என்பது எவ்வளவு உண்மை பாருங்கோ. இதைப்பற்றிகூட நான் ஏற்கனவே எனக்கு நேர்ந்த அனுபவத்தை என் பதிவு ஒன்றினில் எழுதியுள்ளேன். அதற்கான இணைப்பு:

   http://gopu1949.blogspot.in/2012/11/blog-post_3.html

   //உங்கள் கதைகள் பத்திரிக்கைகளில் வந்து இருக்கிறது.
   அதற்கு பெருமைப்படுங்கள்.//

   உண்மையாகவே மிகவும் பெருமையாகத்தான் உணர்ந்தேன். உணர்கிறேன். இனியும் உணர்வேன்.

   //ஜீவி சாருக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம். - VGK

   Delete
 2. லா.சா. ரா எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நிறைய படித்து இருக்கிறேன் அவர் கதைகளை. திருவெண்காடு ஊரில் வசிக்கும் போது எல்லா எழுத்தாளர்களின் கதைகளையும் படித்து இருக்கிறேன். நினைவாற்றல் இப்போது இல்லாதகாரணத்தால் கதைகள் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது படிக்கவில்லை என்று சில கதைகளை படிப்பேன் அடுத்து என்ன வரி என்று சில சமயம் நினைவுக்கு வரும் இந்த கதை படித்து இருக்கிறேன் என்று நினைத்துக் கொள்வேன். ஜீவி சார் மூலம் பழைய எழுத்தாளர்கள் கதையை மீண்டும் படிக்க ஆவல்.
  உங்கள் இருவருக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு March 22, 2016 at 3:27 PM

   வாங்கோ .....

   //லா.சா. ரா எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நிறைய படித்து இருக்கிறேன் அவர் கதைகளை. திருவெண்காடு ஊரில் வசிக்கும் போது எல்லா எழுத்தாளர்களின் கதைகளையும் படித்து இருக்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி.

   //நினைவாற்றல் இப்போது இல்லாதகாரணத்தால் கதைகள் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது படிக்கவில்லை என்று சில கதைகளை படிப்பேன் அடுத்து என்ன வரி என்று சில சமயம் நினைவுக்கு வரும் இந்த கதை படித்து இருக்கிறேன் என்று நினைத்துக் கொள்வேன்.//

   ஞாபகசக்தி குறைவது போன்ற இதெல்லாம் வயதாக வயதாக பொதுவாக நம் எல்லோருக்குமே மிகவும் சகஜம்தான். மேலும் யார் எழுதியுள்ளார்கள் என்பதைவிட என்ன எழுதியுள்ளார்கள், அதை எப்படி எப்படியெல்லாம் சுவைபடச்சொல்லி எழுதியுள்ளார்கள் என்பதே முக்கியமாகும்.

   //ஜீவி சார் மூலம் பழைய எழுத்தாளர்கள் கதையை மீண்டும் படிக்க ஆவல். உங்கள் இருவருக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி மேடம். - VGK

   Delete
 3. விந்தன் அவர்களைப் பற்றி அறிந்து கொண்டோம் சார். ம்ம்ம் இப்படித்தான் எழுத்தாளர்கள் பலர் (தாங்கள் உட்பட) நல்ல கை கொடுத்து உயர்த்திவிடும் பின்புலம் இல்லை என்றால் மேலே தெரிவது கடினம்தான். ஆனால், தாங்கள் அதிலும் இப்போது பெருமைப்படலாம். என்னவென்றால் வலைத்தளத்தில்...பலரும் பாராட்டும் வகையில் தங்கள் எழுத்து..

  தங்களைப் பற்றிச் சொல்லியது, தாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கிறீர்கள் என்பதைச் சொல்லுகிறது. அந்த அனுபவங்கள் பல தான் இன்று உங்கள் எழுத்தில் வடிவம் பெற்று உங்களை மகிழ்விக்கிறது என்று சொல்லலாம்தானே சார்!!!

  லாசரா அறிவோம். நல்ல தகவல்கள். பல அறிய முடிகின்றது. அறிமுகம் அழகாகப் போய்க்கொண்டிருக்கின்றது. அடுத்த அறிமுகத்திற்குக் காத்திருக்கின்றோம் சார்..

  //தொலைகாட்சிப்பெட்டி என்ற ’சனி பகவான்’ நுழையாததோர் பொற்காலம் அது என்று சொல்லலாம். இன்றுபோல கணினி, அலைபேசி போன்ற ’ராகு, கேது’ தொந்தரவுகள் ஏதும் குறுக்கிடாத பொன்னான நாட்கள் அவை.// மிகவும் ரசித்தோம் இந்த வரிகளை..ஆனால் பாருங்கள் சார்...ராகுவும் கேதுவும் பல சமயங்களில் நன்மையே செய்கின்றன இல்லையோ...சனி பகவானைக் கூட நாம் சரியாகப் புரிந்துகொண்டால் அவரும் நன்மை செய்வார்தான் ஆனால் பலரும் அவரை வேறு விதமாகக் கையாள்கின்றார்கள்..ஹஹ

  ReplyDelete
  Replies
  1. Thulasidharan V Thillaiakathu March 22, 2016 at 3:45 PM

   வாங்கோ, வணக்கம்.

   //விந்தன் அவர்களைப் பற்றி அறிந்து கொண்டோம் சார்.//

   மிக்க மகிழ்ச்சி.

   //ம்ம்ம் இப்படித்தான் எழுத்தாளர்கள் பலர் (தாங்கள் உட்பட) நல்ல கை கொடுத்து உயர்த்திவிடும் பின்புலம் இல்லை என்றால் மேலே தெரிவது கடினம்தான்.//

   கைகொடுத்து உயர்த்திவிடும் பின்புலம் மிகவும் முக்கியம். ஆனால் அதுபோல எல்லோருக்கும் எப்போதுமே அமைவது மிகவும் கடினமே.

   //ஆனால், தாங்கள் அதிலும் இப்போது பெருமைப்படலாம். என்னவென்றால் வலைத்தளத்தில்...பலரும் பாராட்டும் வகையில் தங்கள் எழுத்து..//

   அப்படியா! மிக்க மகிழ்ச்சி, சார். இதைத்தங்கள் மூலம் கேட்பதே எனக்கு மிகவும் பெருமையாகத்தான் உள்ளது.

   //தங்களைப் பற்றிச் சொல்லியது, தாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கிறீர்கள் என்பதைச் சொல்லுகிறது. அந்த அனுபவங்கள் பல தான் இன்று உங்கள் எழுத்தில் வடிவம் பெற்று உங்களை மகிழ்விக்கிறது என்று சொல்லலாம்தானே சார்!!! //

   நிச்சயமாக அதே, அதே. அனுபவங்களே நம்மை புடம் போடக்கூடியவை. சொந்த அனுபவ எழுத்துக்களுக்கான வீர்யமும், வரவேற்புகளும் தனிதான். ஸ்பெஷல்தான்.

   //லாசரா அறிவோம். நல்ல தகவல்கள். பல அறிய முடிகின்றது. அறிமுகம் அழகாகப் போய்க்கொண்டிருக்கின்றது. அடுத்த அறிமுகத்திற்குக் காத்திருக்கின்றோம் சார்..//

   மிக்க மகிழ்ச்சி, சார்.

   **தொலைகாட்சிப்பெட்டி என்ற ’சனி பகவான்’ நுழையாததோர் பொற்காலம் அது என்று சொல்லலாம். இன்றுபோல கணினி, அலைபேசி போன்ற ’ராகு, கேது’ தொந்தரவுகள் ஏதும் குறுக்கிடாத பொன்னான நாட்கள் அவை.**

   //மிகவும் ரசித்தோம் இந்த வரிகளை..//

   சந்தோஷம். சும்மா ஏட்டளவில் ரசிக்க மட்டுமே அவை என்னால் இங்கு வேடிக்கைக்காக எழுதப்பட்டுள்ளன.

   //ஆனால் பாருங்கள் சார்...ராகுவும் கேதுவும் பல சமயங்களில் நன்மையே செய்கின்றன இல்லையோ... சனி பகவானைக் கூட நாம் சரியாகப் புரிந்துகொண்டால் அவரும் நன்மை செய்வார்தான் ஆனால் பலரும் அவரை வேறு விதமாகக் கையாள்கின்றார்கள்..ஹஹ//

   இன்றைய நிலையில் இவை எல்லாமே மிக மிக அத்யாவஸ்யப் பொருட்கள் ஆகிவிட்டன. இவை இல்லாவிட்டால் உயிர் வாழ முடியாது, என பெரும்பாலானோர் அவைகளுக்கு அடிமையாகிவிட்டோம். எல்லாவற்றிலும் தாங்கள் சொல்வதுபோல நல்லதும் கெட்டதும் கலந்தே உள்ளன.

   தங்களின் அன்பான வருகைக்கும், மிக நீண்ட விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

   Delete

 4. இன்றைக்கு அறிமுகத்தில் உள்ள கோவிந்தன் என்கிற திரு விந்தன் அவர்களின் ‘பாலும் பாவையும்’ என்ற நாவலை 1957 ஆம் ஆண்டிலேயே படித்திருக்கிறேன். அவர் மிகவும் கஷ்டப்பட்டுதான் முன்னேறியிருக்கிறார் என்பதையும் அவர் சிறு வயதில் தந்தையோடு ஆசாரி வேலையும் செய்திருக்கிறார் எனவும் படித்திருக்கிறேன். ‘மோதிரக்கையால் குட்டு’ வாங்குவதுபோல் கல்கி அவர்களால் அடையாளம் காணப்பட்டிருக்கிறார் என்றால் அவரது திறமையைப் பற்றி சொல்லவேண்டியதில்லை. அவர் கடைசி காலத்தில் கஷ்டப்பட்டார் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரைப்பற்றி தெரியாதவர்களுக்கு அவரை அறிமுகம் செய்திருக்கும் திரு ஜீவி அவர்களுக்கு நன்றி!

  ஒருவேளை கல்கி அவர்களோடு பணியாற்றியிருந்தால் நாமும் ஒரு பெரிய எழுத்தாளராக ஆகியிருக்களோமோ என திரு ஜீவி அவர்களுக்கு எழுதிய அஞ்சலில் குறிப்பிட்டுள்ளீர்கள். இப்போதும் நீங்கள் பெரிய எழுத்தாளர் தான். உழைப்பால் உயர்ந்தவர் நீங்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் ‘ஸ்டேட் பாங்க்’ கில் தொடர்ந்து பணியாற்றியிருந்தால் மிகப்பெரிய இடத்தை எட்டியிருப்பீர்கள். அதோடு ‘ஸ்டேட் பாங்க்’ கிலும் உங்களுக்கு ஏர்வாடி திரு சு.இராதாகிருட்டிணனுக்கு கிடைத்ததுபோல் ஆதரவு கிடைத்திருக்கும். ஆனாலும் என்ன உங்கள் சேவை BHELக்கு என இருக்கும்போது மாற்றவா முடியும்?


  திரு லா.சா,ரா அவர்கள் பற்றியும் எனது அண்ணன் மூலம் அறிந்திருக்கிறேன். இவரது படைப்பு ஒன்று செக்கொலோவாஸ்கிய தமிழறிஞர் திரு கபில் சிவல்பில் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே இவரின் எழுத்தின் வீச்சை அறியலாம். இவரை அறிமுகம் செய்த திரு ஜீவி அவர்களுக்கும், திரு ஜீவி அவர்களின் நூலை எங்களுக்கு அறிமுகம் செய்க்ட்டிருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

  ஒன்று கவனித்தீர்க்களா? பெரும்பாலான எழுத்தாளர்கள் காவிரிக்கரையோரம் பிறந்தவர்களாகவே இருக்கிறார்கள்.(உங்களையும் சேர்த்து)

  ReplyDelete
  Replies
  1. வே.நடனசபாபதி March 22, 2016 at 4:41 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //இன்றைக்கு அறிமுகத்தில் உள்ள கோவிந்தன் என்கிற திரு விந்தன் அவர்களின் ‘பாலும் பாவையும்’ என்ற நாவலை 1957 ஆம் ஆண்டிலேயே படித்திருக்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி, சார்.

   //அவர் மிகவும் கஷ்டப்பட்டுதான் முன்னேறியிருக்கிறார் என்பதையும் அவர் சிறு வயதில் தந்தையோடு ஆசாரி வேலையும் செய்திருக்கிறார் எனவும் படித்திருக்கிறேன். ‘மோதிரக்கையால் குட்டு’ வாங்குவதுபோல் கல்கி அவர்களால் அடையாளம் காணப்பட்டிருக்கிறார் என்றால் அவரது திறமையைப் பற்றி சொல்லவேண்டியதில்லை. அவர் கடைசி காலத்தில் கஷ்டப்பட்டார் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரைப்பற்றி தெரியாதவர்களுக்கு அவரை அறிமுகம் செய்திருக்கும் திரு ஜீவி அவர்களுக்கு நன்றி! //

   இவரைப்பற்றி தாங்கள் அறிந்துள்ள மேலதிகத் தகவல்களுக்கு நன்றி, சார்.

   //ஒருவேளை கல்கி அவர்களோடு பணியாற்றியிருந்தால் நாமும் ஒரு பெரிய எழுத்தாளராக ஆகியிருக்களோமோ என திரு ஜீவி அவர்களுக்கு எழுதிய அஞ்சலில் குறிப்பிட்டுள்ளீர்கள். இப்போதும் நீங்கள் பெரிய எழுத்தாளர் தான். உழைப்பால் உயர்ந்தவர் நீங்கள் என்பதை நான் அறிவேன்.//

   ஊக்கமும் உற்சாகமும் தரக்கூடிய தங்களின் இந்த வார்த்தைகள் என் மனதுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளன.

   >>>>>

   Delete
  2. VGK >>>>> வே.நடனசபாபதி (2)

   //நீங்கள் ‘ஸ்டேட் பாங்க்’ கில் தொடர்ந்து பணியாற்றியிருந்தால் மிகப்பெரிய இடத்தை எட்டியிருப்பீர்கள்.//

   ஒருவேளை அப்படியும் இருந்திருக்கலாம், என நானும் சமயத்தில் கற்பனை செய்து நினைத்துக்கொள்வதுண்டு.

   //அதோடு ‘ஸ்டேட் பாங்க்’ கிலும் உங்களுக்கு ஏர்வாடி திரு சு.இராதாகிருட்டிணனுக்கு கிடைத்ததுபோல் ஆதரவு கிடைத்திருக்கும்.//

   2011ம் ஆண்டில் ரூபாய் ஒரு லட்சத்துடன் கூடிய தமிழக அரசின் உயரிய விருதான ‘பாவேந்தர் பாரதிதாசன் விருது’ பெற்ற கவிஞர் என நினைக்கிறேன். இவரும் ஸ்டேட் பாங்கில் பணிபுரிந்திருக்கக்கூடும் என்பது தங்கள் மூலம் இப்போது தெரிந்துகொண்டேன். :) மிக்க நன்றி, சார்.

   >>>>>

   Delete
  3. VGK >>>>> வே.நடனசபாபதி (3)

   //ஆனாலும் என்ன உங்கள் சேவை BHELக்கு என இருக்கும்போது மாற்றவா முடியும்? //

   அப்போது என்னை நம்பியே என்னுடன் என் வயதான பெற்றோர்கள் இருவரும் இருந்தனர். பணி மாற்றம் ஏதும் ஊர் ஊராக அடிக்கடி இருக்காது என்ற நம்பிக்கையில்தான் எங்களின் சொந்த ஊரான திருச்சி BHEL ஐ நான் அன்று தேர்ந்தெடுத்தேன்.

   SBI ஐ விட்டுவிட்டு BHEL வந்ததில் எனக்கு உள்ளுக்குள் மிகவும் வருத்தமே. SBI PERAMBALUR இல் நான் பார்க்காத வேலைகளே ஏதும் கிடையாது. அங்கு ALL ROUNDER ஆக ALL COUNTER பார்த்தவன் நான்.

   இன்றுபோல COMPUTERS மட்டுமல்ல CALCULATORS கூட உபயோகத்திற்கு வராத காலம் அது. FRIDAY BALANCE என்று LEDGER களைப்புரட்டிப் புரட்டி, ஒவ்வொரு வாடிக்கையாளர் கணக்கிலும் கடைசியாகக் காட்சியளிக்கும் SB ACCOUNT BALANCE ஐ, ஒரு ஸ்டேட்மெண்ட் போல கையினால் எழுதித் தயாரித்து, வாயினால் கூட்டி, வேறு ஒரு முறையில் அது சரிதானா என்று AGENT இடம் உள்ள (AGENT = BRANCH CHIEF MANAGER) FIGURE உடன் TALLY செய்துவிட்டு, மும்பை வொர்லி HEAD OFFICE க்கு அன்றே வெள்ளிக்கிழமையே தபாலில் அனுப்பி வைக்கணும்.

   இது அங்குள்ளவர்களால் மிகவும் கஷ்டமாக உணரப்பட்டதோர் வேலை. நான் போன அன்றே சாயங்காலமாக இந்த வேலையை என்னிடம் ஒப்படைத்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்குள், சுமார் 500 வாடிக்கையாளர்களின் கணக்கில் உள்ள தொகையையும், மிகச்சரியாக எழுதி, ஸ்டேட்மெண்ட் தயாரித்து, வாயாலேயே பக்கம் பக்கமாகக் கூட்டிக்கொண்டுபோய் கொடுத்து விட்டேன்.

   அன்று அங்கு ஏஜண்ட் ஆக இருந்த சீஃப் மேனேஜர் பெயர் Mr. M.N.RAMANATHA IYER. அவரிடம் இருந்த FIGURE உடன் நான் கொடுத்த FIGURE TALLY ஆன மகிழ்ச்சியில் என்னை அப்படியேக் கட்டிப்பிடித்துக் கொண்டார் அவர். (முத்தம் கொடுக்காத குறை மட்டுமே) மிகவும் பாராட்டினார்.

   அங்குள்ள மீதி STAFF அனைவருடனும் இதனைப் பெருமையாகச் சொல்லி மகிழ்ந்தார். அதுவரை ஒரு வாரமாவது இதுபோல யாரும் FIRST STROKE இல் இதனை இவ்வாறு TALLY செய்ததே, அவர்கள் சரித்திரத்திலேயே கிடையாதாம். DIFFERENCE ஐ எடுத்துக்கொண்டு மீண்டும் லெட்ஜர்களைப் புரட்டிக்கொண்டும், டிக் அடித்துக்கொண்டும், 2-3 பேர்களாகச் சேர்ந்து படாதபாடு படுவார்களாம். அவர்கள் அன்று வீட்டுக்குபோக மிகவும் தாமதமாகுமாம்.

   //திரு லா.சா,ரா அவர்கள் பற்றியும் எனது அண்ணன் மூலம் அறிந்திருக்கிறேன். இவரது படைப்பு ஒன்று செக்கொலோவாஸ்கிய தமிழறிஞர் திரு கபில் சிவல்பில் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே இவரின் எழுத்தின் வீச்சை அறியலாம். இவரை அறிமுகம் செய்த திரு ஜீவி அவர்களுக்கும், திரு ஜீவி அவர்களின் நூலை எங்களுக்கு அறிமுகம் செய்துகொண்டிருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்! //

   மிக்க மகிழ்ச்சி சார். தாங்கள் இவ்வாறு கூடுதல் தகவல்கள் அளிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது.

   //ஒன்று கவனித்தீர்க்களா? பெரும்பாலான எழுத்தாளர்கள் காவிரிக்கரையோரம் பிறந்தவர்களாகவே இருக்கிறார்கள். (உங்களையும் சேர்த்து) //

   :) ஆமாம். நானும் இதனை கவனித்தேன். காவிரியில் இன்று தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ, இந்தப்பெருமைகளெல்லாம் ஜாஸ்திதான். அதுதான் காவிரியின் சிறப்பாகும்.

   காவிரியை ஒட்டியுள்ள திவ்ய க்ஷேத்ரங்களும் ஏராளம். நம் இந்தியாவிலேயே காவிரி நதி ஒன்றுக்கு மட்டுமே இந்தப்பெருமைகள் உண்டு.

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும் மிக நீண்ட ஆத்மார்த்தமான அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.- VGK

   Delete
  4. யாராவது புதுசாக தன்னைச் சந்திக்க வரும் பொழுது
   அவரக்ளைப் பற்றித் தானும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அக்கறை கொண்டவர் லா.ச.ரா.
   ஆரம்ப அறிமுகங்களுக்குப் பிறகு பொதுவாக எல்லோரும் கேட்கிற மாத்ரி "என்ன செய்கிறீர்கள்?" என்று லா.ச.ரா. கேட்கும் பொழுது பலர் தங்கள் பத்திரிகைத் தொடர்ப்பு, பிரசுராமான கதைகள் என்று சொல்வார்களாம். அதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, "அதுசரி.. பொழைப்புக்கு?" என்று அடுத்த கேள்வியைப் போடுவாராம் லா.ச.ரா.
   இந்த மாதிரி சின்ன சின்ன வார்த்தைகளில் பெரும் தாத்பரியங்களைப் புதைத்து வைத்திருப்பார் அவர்.
   எங்க்கேயோ படித்ததை பொருத்தம் கருதி இங்கே சொல்லியிருக்கிறேன்.

   Delete
  5. வை.கோ.சார். உன்னதமான மனசு உங்களுக்கு. எனக்குத் தெரிந்து வாழ்க்கையில் இளமையில் ரொம்பவும் கஷ்டப்பட்டு ஓரளவு நல்ல நினைக்கு வந்தவர்கள் பெரும்பாலோர். என்னையும் சேர்த்துத் தான் சொல்கிறேன். ஆனால் சொல்லிக் கொள்கிற மாதிரி ஒரு இலகுவான வாழ்க்கைச் சூழலை அனுபவித்துக் கொண்டிருக்கும் வேளையில் இளமையில் தான் பட்ட கஷ்டத்தையும் நினைத்துப் பார்ப்பவர்கள் வெகு சிலரே. அவர்கல் ஏழ்மையிலும் சரி, ஏற்றத்திலும் சரி ஒரே மாதிரியான உளப்பாங்கைக் கொண்டவராய் இருப்பதை சாதாரணமாய் நாம் பார்க்கலாம்.

   இந்த சமயத்தில் எனக்கு சர்வர் சுந்தரம் படத்தின் ஒரு காட்சி நினைவுக்கு வந்தது. சினிமா நடிகனாய் பெரு வாழ்வு பெற்ற அந்தாளைய ஹோட்டல் சர்வர் சுந்தரம், தான் சர்வராய் இருந்த காலத்து நினைவுகள் மறக்காது, தனது அந்தக்காலத்து சர்வர் உடுப்பை ஒரு ஹேங்கரில் மாட்டி வைத்திருப்பான். கடைசிக் காட்சியில் அந்த உடுப்புகளைக் காட்டி நடிகனான சுந்தரம் நெகிழும் போது அந்தக் காட்சிக்கான பாலசந்தரின் வசனமும் சரி, நாகேஷின் அற்புதமான நடிப்பும் சரி பிரமாதமாக இருக்கும்.

   Delete
  6. ஜீவி March 23, 2016 at 12:21 PM

   வாங்கோ சார், நமஸ்காரங்கள் + வணக்கங்கள்.

   //வை.கோ.சார். உன்னதமான மனசு உங்களுக்கு. எனக்குத் தெரிந்து வாழ்க்கையில் இளமையில் ரொம்பவும் கஷ்டப்பட்டு ஓரளவு நல்ல நினைக்கு வந்தவர்கள் பெரும்பாலோர் ... என்னையும் சேர்த்துத் தான் சொல்கிறேன். ஆனால் சொல்லிக் கொள்கிற மாதிரி ஒரு இலகுவான வாழ்க்கைச் சூழலை அனுபவித்துக் கொண்டிருக்கும் வேளையில் இளமையில் தான் பட்ட கஷ்டத்தையும் நினைத்துப் பார்ப்பவர்கள் வெகு சிலரே. அவர்கள் ஏழ்மையிலும் சரி, ஏற்றத்திலும் சரி ஒரே மாதிரியான உளப்பாங்கைக் கொண்டவராய் இருப்பதை சாதாரணமாய் நாம் பார்க்கலாம்.//

   மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். சிறு வயதில் நம் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களே நமக்கு பாடமாக அமைந்து விடுகின்றன. அவற்றை அவ்வளவு சுலபமாக நம்மால் நம் மனதின் ஆழத்திலிருந்து பிடுங்கி எடுத்து வெளியேற்றிவிட முடியவில்லை. அதன் வடுக்களை ஒருநாளும் நம்மால் மறக்கவும் முடியவில்லை.

   இன்று நம்மிடம் எவ்வளவு பணம் இருப்பினும் அந்த இளமை வாழ்க்கையை நம்மால் இன்று அனுபவிக்க இயலாமல் போகிறது.

   அன்று நாம் எது எதெற்கெல்லாம் சின்னச்சின்னதாக ஆசைப்பட்டமோ .... அதுகூட நமக்கு அன்று கிடைக்காமல் போனாலும் .... அவற்றை ஏராளமான பண வசதிகள் இருந்தும், இன்று ருசிக்க முடியாமல் ஏராளமான கட்டுப்பாடுகளை நமக்கு நாமே விதித்துக்கொள்ள வேண்டியதாக உள்ளதுதான், இதில் உள்ள மிகப்பெரிய கொடுமை.

   //இந்த சமயத்தில் எனக்கு சர்வர் சுந்தரம் படத்தின் ஒரு காட்சி நினைவுக்கு வந்தது. சினிமா நடிகனாய் பெரு வாழ்வு பெற்ற அந்நாளைய ஹோட்டல் சர்வர் சுந்தரம், தான் சர்வராய் இருந்த காலத்து நினைவுகள் மறக்காது, தனது அந்தக்காலத்து சர்வர் உடுப்பை ஒரு ஹேங்கரில் மாட்டி வைத்திருப்பான். கடைசிக் காட்சியில் அந்த உடுப்புகளைக் காட்டி நடிகனான சுந்தரம் நெகிழும் போது அந்தக் காட்சிக்கான பாலசந்தரின் வசனமும் சரி, நாகேஷின் அற்புதமான நடிப்பும் சரி பிரமாதமாக இருக்கும்.//

   அந்த நாட்களில், நான் மிகவும் ரசித்துப் பலமுறை பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. தாங்கள் சொல்லும் காட்சி இப்போதும் என் நினைவுகளில் அப்படியே உள்ளன.

   நாகேஷ் நடித்து 1964-இல் வெளியான சர்வர் சுந்தரமும் (என் வயது அப்போது 14 மட்டுமே), சிவாஜி கணேசன் ப்ரஸ்டீஜ் பத்மநாபனாக நடித்து 1970-இல் வெளியான வியட்நாம் வீடு என்ற திரைப்படமும் (அப்போது எனக்கு வயது: 20), எனக்கு என் வாழ்க்கைக்கு ரோல் மாடலாக அமைந்தன என்று சொல்லலாம்.

   ’வியட்நாம் வீடு’ படத்தில் ஓர் காட்சியில், சிவாஜி Chief Executive ஆக வேலைபார்த்து ஓய்வு பெற்று வீட்டுக்கு வந்தபிறகு, ஒருநாள் அவர் அலுவலகத்திலிருந்து ஓர் Appointment Order அவருக்கு வரும். அதில் அவருக்கு அந்த மிகப்பெரிய கம்பெனியின் தலைவராக அதாவது Chairman and Managing Director, Post Offer செய்திருப்பார்கள். அப்போது சிவாஜி தன் விதவைத்தாயாரின் படத்திற்கு முன் போய் உணர்ச்சிவசப்பட்டு ஓர் வசனம் பேசுவார். அதைக்கேட்டு நான் தியேட்டரிலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளேன், என் 20 வயதில்.

   அதாவது மீண்டும் அதே கம்பெனியில் வேலை கிடைப்பதிலோ, Top Most Position கிடைப்பதிலோ, சம்பளம் தொடர்ச்சியாகக் கிடைக்கப்போவதிலோ அவருக்கு சந்தோஷம் இல்லை. அவருடைய உழைப்பு (அதாவது அவரின் சின்சியர் + டெடிகேடெட் சர்வீஸ்) அந்தக்கம்பெனிக்கு மீண்டும் தேவைப்படுகிறது என்பதைக் கேட்பதில் மட்டுமே மகிழ்ச்சி அடைகிறார்.

   என் அனைத்துச் செயல்களிலும் இன்றும் நான் ஒரு பிரஸ்டீஜ் பத்மநாபனாகவே வாழ்ந்து வருகிறேன். இன்று வரையில் அப்படியேதான் செயல்பட்டும் வருகிறேன். சொந்த மகன்களே ஆனாலும் யாரிடமும் நான் காலணா காசு இதுவரை கேட்டது இல்லை. கேட்டால் நிச்சயம் அள்ளிக்கொண்டுவந்து கொட்டிவிடுவார்கள் என்பதில் ஏதும் எனக்கு சந்தேகமும் இல்லை. கேட்கக்கூடாது, அதுபோல ஒரு நிலைமை எனக்கு வரக்கூடாது. கடைசிவரை என் சொந்தக்காலிலேயே நான் நிற்க வேண்டும் என்பதே என் கொள்கை.

   இருப்பினும் இன்று இதுபோல வீராப்பாகப் பேசிக்கொண்டிருக்கும் நான், நாளை என்ன நடக்கும் என்பதை அறியேன். தெய்வ சங்கல்ப்பம் எப்படியோ ?

   தங்களின் அன்பான வருகைக்கும், ஆதரவான ஊக்கமூட்டும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

   பிரியமுள்ள கோபு

   Delete
 5. Comments of Mr. S. RAMANI Sir for this post (Part-5), is some how or other wrongly routed to the previous post (Part-4). Hence it is pasted by me here, as under - vgk

  Ramani S has left a new comment on the post "ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 5":

  விந்தன் மற்றும் லா ச ரா. என் மனதிற்கு மிகவும் நெருக்கமான மிகவும் பிடித்தமான எழுத்தாளர்கள்.

  ’சிந்தா நதி’ தொடராக வந்த காலத்திலேயே அதை படித்து அவர் எழுத்து குறித்து வியந்திருக்கிறேன்.

  ’லா ச ரா’ வின் கதைகளை நான் எப்போதும் அதற்கான ஒரு தனிமைச் சூழலை ஏற்படுத்திக் கொண்ட பின்பே படிக்கத் துவங்குவேன். அவருடைய கதைகள் அவசர வாசிப்புக்கான கதைகள் அல்ல.

  அதன் த்வனியே தனி. அந்தத் த்வனிக்கான மனோபாவம் இல்லையெனில் அவருடைய கதையின் அருமை, சுகம் புரிந்து கொள்வது கடினம் என்பது என் அபிப்பிராயம்.

  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. To Mr. S. RAMANI Sir

   //விந்தன் மற்றும் லா ச ரா. என் மனதிற்கு மிகவும் நெருக்கமான மிகவும் பிடித்தமான எழுத்தாளர்கள்.

   ’சிந்தா நதி’ தொடராக வந்த காலத்திலேயே அதை படித்து அவர் எழுத்து குறித்து வியந்திருக்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி, சார்.

   //’லா ச ரா’ வின் கதைகளை நான் எப்போதும் அதற்கான ஒரு தனிமைச் சூழலை ஏற்படுத்திக் கொண்ட பின்பே படிக்கத் துவங்குவேன். அவருடைய கதைகள் அவசர வாசிப்புக்கான கதைகள் அல்ல.

   அதன் த்வனியே தனி. அந்தத் த்வனிக்கான மனோபாவம் இல்லையெனில் அவருடைய கதையின் அருமை, சுகம் புரிந்து கொள்வது கடினம் என்பது என் அபிப்பிராயம்.//

   இருக்கலாம். தாங்கள் சொல்வது மிகவும் சரியே. நானும் தனிமைச் சூழலை ஏற்படுத்திக்கொண்டுதான் எதையுமே படிப்பேன். இல்லாவிட்டால் என் மனதில் எதுவும் ஏறாது போகும்.

   //பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். அன்புடன் VGK

   Delete
 6. விந்தன் அவர்களைப் பற்றி ஏற்கெனவே அறிந்திருக்கிறேன். அவர் கதைகள் அதிகம் அறிமுகம் இல்லை. லா.ச.ரா.வை நன்றாகத் தெரியும். அம்பத்தூரில் தான் எங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஞானமூர்த்தி நகரில் இருந்தார். பின்னால் அதை விற்று விட்டு அம்பத்தூரிலேயே பழைய டவுன்ஷிப் ரோடில் வாடகைக்குக் குடி போனார். ஞானமூர்த்தி நகரில் இருக்கையில் அவருடைய கதையின் ஹிந்தி மொழிபெயர்ப்பில் உதவி செய்ய என் பெண் போயிருக்கிறாள். அவளுக்குத் தமிழ் எழுதப் படிக்க வராது. என்றாலும் இவர் சொல்லுவார். அவள் மொழிபெயர்ப்பாள். அப்போது தான் குங்குமத்தில் வந்த இவருடைய ஒரு கதை குறித்த விமரிசனத்தைப் பெண்ணிடம் சொல்லி அனுப்பினேன். அதைக் கேட்டுச் சிரித்த அவர் அம்மாவை வந்து என்னைப் பார்க்கச் சொல் என்றுசொல்லி அனுப்பி இருக்கிறார். ஆனால் என்னால் தான் கடைசி வரை போக முடியவில்லை! என்ன காரணம் என்றே சொல்ல முடியாது! குறிப்பாய் எதுவும் இல்லை. இத்தனைக்கும் அவர் பெண்ணை நிறையத் தரம் பார்த்துப் பேசி இருக்கேன். அவரிடமும் லா.ச.ரா கதைகள் குறித்து விமரிசனங்கள் சொல்லி இருக்கேன். சந்திக்கவே முடியாமல் போன எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam March 22, 2016 at 6:10 PM

   வாங்கோ மேடம், வணக்கம். தங்களின் அனுபவத்தில் ஏராளமான விஷயங்களை எங்களுக்குக் கூடுதலாக விரிவாகச் சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

   // சந்திக்கவே முடியாமல் போன எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.//

   சந்திக்க வாய்ப்புக்கிடைத்தும் சந்திக்க முடியாததோர் நட்பு சிந்திக்க வைக்கிறது இப்போது.

   தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம். - VGK

   Delete
 7. Replies
  1. Ramani S March 22, 2016 at 6:17 PM
   மிக்க நன்றி//

   :) OK Sir :)

   Delete
 8. விந்தனைப் போல் வந்திருக்கலாமோ என்பதை உங்கள் சுயகதை சொல்லவும் ஒரு காரணியாக்கிச் சொன்னதை ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. G.M Balasubramaniam March 22, 2016 at 9:03 PM

   வாங்கோ சார், வணக்கம்.

   //விந்தனைப் போல் வந்திருக்கலாமோ என்பதை உங்கள் சுயகதை சொல்லவும் ஒரு காரணியாக்கிச் சொன்னதை ரசித்தேன்.//

   வாய்ப்புக்கிடைத்தால் நான் எதையும் சொல்லாமல் விடவே மாட்டேன்.

   வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள நம் திரு. வே. நடன சபாபதி, போன்ற ஒருசிலரால் மட்டுமே, நான் சொல்வதையும், அந்தக்காலக்கட்ட சூழ்நிலைகளையும், அனுபவபூர்வமாக நன்கு புரிந்துகொள்ள இயலும்.

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், தனி ரசனைக்கும் மிக்க நன்றி, சார். - VGK

   Delete
 9. லா சா ரா அவர்கள் சிந்தாநதிக்காக சாகித்ய அகதெமி பரிசுபேர் தில்லி வந்தபோது அவருடன் உடனிருந்து உபசரித்த வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவரை அகில இந்திய வானொலியில் பேட்டிக்காக உடன் அழைத்தும் சென்றேன். சுமார் நான்குமணி நேரம் வருடன் பேசமுடிந்தது. தன் வங்கி உலக வாழ்க்கையைப் பற்றிய பல ரகசியங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார். (நானும் வங்கியாளன் என்பதால்).

  விடைபெறும் முன் ஒரு கேள்வி கேட்டாரே பார்க்கவேண்டும்! 'சிந்தாநதி' என்ற நாவலை நீங்கள் படித்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். எனக்கு திடீர் ஐயம். அது நாவல் அல்லவே! சற்றே தயக்கத்துடன் , 'படித்திருக்கிறேன், ஆனால் அது எப்படி நாவலாகும்?' என்றேன். சிரித்துக் கொண்டே சொன்னார்-"இதே கேள்வியை தில்லியில் பல பெரிய மனிதர்களிடம் கேட்டேன். எல்லாரும் ஆஹா, அருமையான நாவலாயிற்றே என்றுதான் சொன்னார்கள்". பிறகு தன்னுடைய வேறு சில நூல்களையும் அவை எழுத நேர்ந்த சந்தர்ப்பங்களையும் பற்றி சுருக்கமாகச் சொன்னார். அந்த நினைவுகள் மறக்கமுடியாதவை! - இராய செல்லப்பா.

  ReplyDelete
  Replies
  1. Chellappa Yagyaswamy March 22, 2016 at 10:06 PM

   வாங்கோ சார், வணக்கம், சார்.

   //லா சா ரா அவர்கள் சிந்தாநதிக்காக சாகித்ய அகாதமி பரிசுபெற தில்லி வந்தபோது, அவருடன் உடனிருந்து உபசரித்த வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவரை அகில இந்திய வானொலியில் பேட்டிக்காக உடன் அழைத்தும் சென்றேன். சுமார் நான்குமணி நேரம் அவருடன் பேசமுடிந்தது. தன் வங்கி உலக வாழ்க்கையைப் பற்றிய பல ரகசியங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார். (நானும் வங்கியாளன் என்பதால்). //

   ஆஹா, இது தங்களுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரியதோர் பாக்யம்தான்.

   //விடைபெறும் முன் ஒரு கேள்வி கேட்டாரே பார்க்கவேண்டும்! 'சிந்தாநதி' என்ற நாவலை நீங்கள் படித்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். எனக்கு திடீர் ஐயம். அது நாவல் அல்லவே! சற்றே தயக்கத்துடன் , 'படித்திருக்கிறேன், ஆனால் அது எப்படி நாவலாகும்?' என்றேன். சிரித்துக் கொண்டே சொன்னார்- "இதே கேள்வியை தில்லியில் பல பெரிய மனிதர்களிடம் கேட்டேன். எல்லாரும் ஆஹா, அருமையான நாவலாயிற்றே என்றுதான் சொன்னார்கள்". //

   மிகவும் வேடிக்கையான மனிதர்தான் போலிருக்கிறது. :)

   //பிறகு தன்னுடைய வேறு சில நூல்களையும் அவை எழுத நேர்ந்த சந்தர்ப்பங்களையும் பற்றி சுருக்கமாகச் சொன்னார். அந்த நினைவுகள் மறக்கமுடியாதவை! - இராய செல்லப்பா.//

   அவரைத் தாங்கள் நேரில் சந்திக்க நேர்ந்து, அவருடனான தங்களின் பல இனிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு இங்கு சொல்லியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது, சார்.

   தங்களின் அன்பு வருகைக்கும், அவருடனான தங்களின் விரிவான பல அனுபவக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு மகிழ்வித்துள்ளதற்கு, என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். அன்புடன் VGK

   Delete
  2. லா.ச.ரா. அவர்களுடன் நீங்கள் கழித்த பொழுது நிச்சயம் பேறு பெற்றதாய் இருந்திருக்குமே செல்லப்பா, சார்?
   லா.ச;ரா. பார்த்த வங்கி வேலை, அவரை விட்டு விடாமல் பல சிறுகதைகளில் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது. வங்கி லாக்கர் ரூமை .பேழையறை' என்று ஒரு கதையில் அழகாக தமிழ்ப்படுத்தியிருப்பார்.

   Delete
 10. இந்த பதிவில் இதுவரை வந்திருக்கும் பின்னூட்டங்கள் எல்லாமே சுவாரசியம். தங்களின் ரிப்ளை பின்னூட்டங்கள் வெகு வெகு ரசனை. ஸ்டேட் பாங்க் வேலைனா சும்மாவா???? திரு விந்தன் ஸார் பற்றிய தகவல்கள்...... சில கஷ்டங்கள்.... சில மோதிரக்கை குட்டுக்கள் எல்லா அனுபவமுமே அவருக்கு கிடைத்திருக்கு. நிறைய அனுபவங்கள் கிடைத்தவர்கள்தான் எழுத்து திறமை கிடைக்கப் பெறுவார்கள் போல...லா.சா.ரா ஸார் பற்றிய தகவல்களும் சுவாரசியம். ஒருவர் பின்னூட்டத்தில் கணினி தொலைக்காட்தி பெட்டி முதலியவைகளை சனீஸ்வரர், ராகு கேதுவுடன் ஒப்பிட்டுக்கூறியது அவரின் கற்பனைத்திறன் புரிய முடிகிறது.நல்ல பல பிரபல எழுத்தாளர்களை இந்த பதிவு மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... March 23, 2016 at 9:53 AM

   வாங்கோ, வணக்கம்.

   //இந்த பதிவில் இதுவரை வந்திருக்கும் பின்னூட்டங்கள் எல்லாமே சுவாரசியம். தங்களின் ரிப்ளை பின்னூட்டங்கள் வெகு வெகு ரசனை.//

   மிக்க மகிழ்ச்சி.

   //ஸ்டேட் பாங்க் வேலைனா சும்மாவா????//

   சும்மா இல்லைதான். எந்த இடத்தில் வேலைபார்க்க நேர்ந்தாலும், நாம் எங்கும் எதிலும் பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும், உண்மையாகவும், நேர்மையாகவும், மனசாட்சிக்கு பயந்தும், வாங்கும் சம்பளத்திற்கு ஏற்ப விசுவாசத்துடன், நம் வேலைமேல் நாமே ஒரு காதல் கொண்டு, முழு விருப்பத்துடனும், மனதுக்கு முழுத்திருப்தியுடனும் செயல்படவேண்டும்.

   //திரு விந்தன் ஸார் பற்றிய தகவல்கள்...... சில கஷ்டங்கள்.... சில மோதிரக்கை குட்டுக்கள் எல்லா அனுபவமுமே அவருக்கு கிடைத்திருக்கு. நிறைய அனுபவங்கள் கிடைத்தவர்கள்தான் எழுத்து திறமை கிடைக்கப் பெறுவார்கள் போல...லா.சா.ரா ஸார் பற்றிய தகவல்களும் சுவாரசியம்.//

   சந்தோஷம்.

   //ஒருவர் பின்னூட்டத்தில் கணினி தொலைக்காட்தி பெட்டி முதலியவைகளை சனீஸ்வரர், ராகு கேதுவுடன் ஒப்பிட்டுக்கூறியது அவரின் கற்பனைத்திறன் புரிய முடிகிறது.//

   அது நானே என் பதிவினில் மேலே சொல்லியுள்ளதுதான். அதை அவர் பாராட்டி மேலும் கொஞ்சம் வித்யாசமாகச் சொல்லியுள்ளார். அதனை நானும் என் பதிலில் ஒப்புக்கொண்டு, இந்தக்காலத்திற்கு தகுந்தவாறு, பாராட்டியே பேசியுள்ளேன்.

   //நல்ல பல பிரபல எழுத்தாளர்களை இந்த பதிவு மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.//

   தங்களின் தொடர் வருகைக்கும், மிக நீண்ட அழகான, ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

   Delete
 11. இளமையில் வசதி வாய்ப்பில்லாத நிலையில் தங்களுடைய கல்வி தொடரமுடியாத சூழலிலும் மனந்தளராமல் வசதி வந்தபோது மேற்படிப்பு படித்து காலத்துக்கும் பணியிடத்துக்கும் ஏற்ப தங்களைத் தயார்படுத்திக்கொண்ட செயல் மிகவும் பாராட்டுக்குரியது. ஜீவி சார் சொன்னதுபோல் நீங்கள் Bhel நிறுவனத்தில் பணியில் தொடர்ந்ததே புத்திசாலித்தனம் என்று நானும் கூறுவேன். நிரந்தர வருமானமில்லாத எத்தனையோ எழுத்தாளர்கள் இறுதிவரை துன்பத்திலேயே உழன்ற கதை நமக்குத் தெரியுமல்லவா?

  விந்தன் அவர்களின் படைப்புகளை அவ்வளவாக வாசித்ததில்லை. லா.ச.ரா. வின் எழுத்துகள் ஓரளவு பரிச்சயமுள்ளது. மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் தேடிப்பிடித்து வாசிக்கவேண்டும் என்னும் ஆவல் உந்துகிறது. பகிர்வுக்கு நன்றி கோபு சார்.

  ReplyDelete
  Replies
  1. கீத மஞ்சரி March 23, 2016 at 10:01 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //இளமையில் வசதி வாய்ப்பில்லாத நிலையில் தங்களுடைய கல்வி தொடரமுடியாத சூழலிலும் மனந்தளராமல் வசதி வந்தபோது மேற்படிப்பு படித்து காலத்துக்கும் பணியிடத்துக்கும் ஏற்ப தங்களைத் தயார்படுத்திக்கொண்ட செயல் மிகவும் பாராட்டுக்குரியது.//

   உணர்ந்து சொல்லியுள்ள, தங்களின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும், பாராட்டுகளுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.

   //ஜீவி சார் சொன்னதுபோல் நீங்கள் BHEL நிறுவனத்தில் பணியில் தொடர்ந்ததே புத்திசாலித்தனம் என்று நானும் கூறுவேன்.//

   தாங்கள் சொல்லும் இதை நானும் மிக நன்றாகவே உணர்ந்திருக்கிறேன்.

   இருப்பினும் ‘விந்தன்’ அவர்களைப்பற்றி நான் ஜீவி சாரின் நூலில் படித்ததும், உடனே எனக்கு ஏற்பட்ட, இந்த என் அப்போதைய உணர்வுகளை, அவரிடம் சொல்லணும் போலத்தோன்றியதால் மட்டுமே, ஓர் ஆசையில் அவ்வாறு எழுதியிருந்தேன்.

   //நிரந்தர வருமானமில்லாத எத்தனையோ எழுத்தாளர்கள் இறுதிவரை துன்பத்திலேயே உழன்ற கதை நமக்குத் தெரியுமல்லவா? //

   ஆமாம். நிச்சயமாக. எழுத்தை மட்டும் நம்பிப் பிழைத்தவர்களில், பொருளாதார நிலையில் தப்பிப்பிழைத்தவர்கள் வெகு சிலரே .... அதுவும் நம் ஜீவி சார் சொல்வதுபோல, அவர்களுக்கு அரசியல் + சினிமா துறையினரின் ஆதரவுகள் இருந்திருந்ததால் மட்டுமே, பிழைத்துள்ளார்கள் என்பதே உண்மை.

   //விந்தன் அவர்களின் படைப்புகளை அவ்வளவாக வாசித்ததில்லை. லா.ச.ரா. வின் எழுத்துகள் ஓரளவு பரிச்சயமுள்ளது. மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் தேடிப்பிடித்து வாசிக்கவேண்டும் என்னும் ஆவல் உந்துகிறது. பகிர்வுக்கு நன்றி கோபு சார்.//

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் மேடம்.

   பிரியமுள்ள கோபு

   Delete
 12. விந்தனின் சிறுகதை ஒன்று படித்திருக்கிறேன். பாலும் பாவையும் வீட்டிலேயே இருந்தும் படித்ததில்லை. லா ச ரா கூட அப்படித்தான். இப்போது அவரது சிறுகதைத் தொகுப்பு வாங்கி வைத்திருக்கிறேன். ஆறு மாதங்கள் ஆகிறது. படிக்க வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம். March 23, 2016 at 6:38 PM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

   //விந்தனின் சிறுகதை ஒன்று படித்திருக்கிறேன்.//

   ஆஹா, சந்தோஷம்.

   //‘பாலும் பாவையும்’ வீட்டிலேயே இருந்தும் படித்ததில்லை.//

   ’பாலிருக்கும் ..... பழமிருக்கும் ..... பசியிருக்காது .... பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது ....’ என்ற பாடல்போல, நூல் நம் கைவசம் இருக்கும் ஆனால் படிக்க நேரமோ மூடோ வராது.

   அதுபோலப் ’பாலும் பாவையும்’ உங்கள் கைவசம் இருந்தும், இன்னும் நீங்கள் அவற்றை அனுபவிக்கவே ஆரம்பிக்கவில்லை போலிருக்குது. :) வெரிகுட் !

   //லா ச ரா கூட அப்படித்தான். இப்போது அவரது சிறுகதைத் தொகுப்பு வாங்கி வைத்திருக்கிறேன். ஆறு மாதங்கள் ஆகிறது. படிக்க வேண்டும்!//

   மெதுவாகவே படியுங்கோ. இன்னும் ஆறு மாதமோ ஆறு வருடங்களோ ஆனாலும் பரவாயில்லை :)

   தங்களின் அன்பான வருகைக்கும், ஸ்ரீராமபிரான் போலவே உண்மைகளைப் புட்டுப்புட்டு வைத்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்ரீராம். - VGK

   Delete
 13. இளமையில் வறுமை கொடிது தான் சார்! நம் தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் வறுமையில் தான் உழன்றிருக்கிறார்கள். எழுத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் பாடு மிகவும் பாவம். கி.ராவுக்கு எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். நல்லவேளை நீங்கள் பெல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தது. இல்லாவிட்டால் உங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு ஆளாக்கியிருக்க முடியாது. இப்போதும் நீங்கள் நல்ல எழுத்தாளர் தான். உங்கள் மூன்று நூல்களுக்குமே விருது கிடைத்திருக்கிறது. வறுமையால் மனம் ஒடிந்து போகாமல் மேற்கொண்டு படித்து அலுவலகத்திலும் உயர் பதவிகளை வகித்துப் பணி ஓய்வு பெற்றிருக்கிறீர்கள். பாராட்டுக்கள் கோபு சார்! விந்தன் கதை நான் படித்ததில்லை. லா.ச.ராவின் அபிதா வாசித்திருக்கிறேன். ஒரு முறை என் அலுவலகத்தில் வேற்றூரிலிருந்து மாற்றல் ஆகி ஆபிசர் ஒருவர் வந்திருந்தார். குடும்பம் இல்லாமல் தனியே அறையில் தங்கியிருந்தார். படிப்பதற்கு ஏதாவது புத்தகம் கொண்டு வந்து கொடுங்களேன் என்று கேட்டார். நான் அப்போது தான் அபிதா வாங்கி வாசித்து முடித்திருந்தேன். அதைக் கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன். யாருக்குமே புத்தகம் இரவல் கொடுக்கக் கூடாது என்பது என் தந்தையின் அறிவுரை. கொடுத்தால் திரும்பி வராது; அப்படியே வந்தாலும் அதைப் பயன்படுத்தமுடியாத படி கிழிந்து போயிருக்கும் என்பார். என் தந்தையின் அறிவுரையை மீறி தயக்கத்துடன் அப்புத்தகத்தை இரவல் கொடுத்தேன். என்ன ஆச்சரியம்! நான் பயந்தது போலன்றி, மறுநாளே புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். படித்துவிட்டீர்களா? எப்படியிருந்தது என்று கேட்டேன். இரண்டு மூன்று பக்கம் படித்துப் பார்த்தேன். ஒன்றுமே புரியவில்லை; புத்தகம் கேட்டால் இதையாக் கொண்டுவந்து கொடுப்பீர்கள்? என்றார். எனக்குச் சிரிப்பு வந்தது. புதிதாக வாசிப்பவர்களுக்கு லா.ச.ராவின் நடை கஷ்டம் தான். அது புரியாததால் தான் புத்தகம் பத்திரமாகத் திரும்பி வந்தது. லா.ச.ராவுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஞா. கலையரசி March 23, 2016 at 9:14 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //இளமையில் வறுமை கொடிது தான் சார்! நம் தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் வறுமையில் தான் உழன்றிருக்கிறார்கள். எழுத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் பாடு மிகவும் பாவம். கி.ராவுக்கு எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள் சிலவற்றைப் படித்திருக்கிறேன்.//

   தாங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான். சந்தேகமே இல்லை.

   //நல்லவேளை நீங்கள் பெல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தது. இல்லாவிட்டால் உங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு ஆளாக்கியிருக்க முடியாது.//

   இதுவும் கரெக்ட்தான். என்னாலும் இதனை நன்கு உணர முடிகிறது.

   //இப்போதும் நீங்கள் நல்ல எழுத்தாளர் தான். உங்கள் மூன்று நூல்களுக்குமே விருது கிடைத்திருக்கிறது.//

   ஆஹா, தங்களுக்குத்தான் எவ்வளவு ஒரு ஞாபக சக்தி :) தன்யனானேன். தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.

   //வறுமையால் மனம் ஒடிந்து போகாமல் மேற்கொண்டு படித்து அலுவலகத்திலும் உயர் பதவிகளை வகித்துப் பணி ஓய்வு பெற்றிருக்கிறீர்கள். பாராட்டுக்கள் கோபு சார்!//

   மிக்க மகிழ்ச்சி மேடம். உணர்ந்து சொல்லியுள்ள தங்களின் பாராட்டுகளுக்கு நன்றிகள், மேடம்.

   //விந்தன் கதை நான் படித்ததில்லை.//

   ஓஹோ. நானும் அதெல்லாம் எதுவும் படித்தது இல்லை.

   //லா.ச.ராவின் அபிதா வாசித்திருக்கிறேன். ஒரு முறை என் அலுவலகத்தில் வேற்றூரிலிருந்து மாற்றல் ஆகி ஆபிசர் ஒருவர் வந்திருந்தார். குடும்பம் இல்லாமல் தனியே அறையில் தங்கியிருந்தார். படிப்பதற்கு ஏதாவது புத்தகம் கொண்டு வந்து கொடுங்களேன் என்று கேட்டார். நான் அப்போது தான் அபிதா வாங்கி வாசித்து முடித்திருந்தேன். அதைக் கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன்.//

   ஆஹா, தக்க சமயத்தில் அவருக்கு நல்லதொரு உதவிதான் செய்திருக்கிறீர்கள்.

   //யாருக்குமே புத்தகம் இரவல் கொடுக்கக் கூடாது என்பது என் தந்தையின் அறிவுரை. கொடுத்தால் திரும்பி வராது; அப்படியே வந்தாலும் அதைப் பயன்படுத்தமுடியாத படி கிழிந்து போயிருக்கும் என்பார். என் தந்தையின் அறிவுரையை மீறி தயக்கத்துடன் அப்புத்தகத்தை இரவல் கொடுத்தேன்.//

   தங்கள் தந்தையார் சொல்வதுதான் சரி. நம் கையைவிட்டுப் போனால் புத்தகம், பேனா போன்ற எதுவானாலும், திரும்பி வரும் என்றோ, அப்படியே திரும்பி வந்தாலும் நாம் கொடுத்தது போலவே இருக்கும் என்றோ சொல்ல இயலாதுதான்.

   //என்ன ஆச்சரியம்! நான் பயந்தது போலன்றி, மறுநாளே புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.//

   புத்தகப்புழுவாக இருந்து, விடிய விடிய ஒரே மூச்சாக படித்து முடித்திருப்பாரோ, என்னவோ!

   //படித்துவிட்டீர்களா? எப்படியிருந்தது என்று கேட்டேன். ”இரண்டு மூன்று பக்கம் படித்துப் பார்த்தேன். ஒன்றுமே புரியவில்லை; புத்தகம் கேட்டால் இதையாக் கொண்டுவந்து கொடுப்பீர்கள்?” என்றார். எனக்குச் சிரிப்பு வந்தது.//

   நல்ல நகைச்சுவை. நானும் இதனை நன்றாகவே ரசித்து இப்போது சற்றே பலக்கச் சிரித்து விட்டேன். :)

   //புதிதாக வாசிப்பவர்களுக்கு லா.ச.ராவின் நடை கஷ்டம் தான். அது புரியாததால் தான் புத்தகம் பத்திரமாகத் திரும்பி வந்தது. லா.ச.ராவுக்கு நன்றி!//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! மீண்டும் மீண்டும் காமெடியாக ஏதாவது சொல்லிச் சிரிக்க வைக்கிறீர்கள்.

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், விரிவான நகைச்சுவை கலந்த விமர்சனக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள் மேடம்.

   - நன்றியுடன் கோபு

   Delete
 14. இன்றும் லாசராவின் படைப்புகள் பிரமாதமாக விற்பனை ஆகின்றன என்பது தான் ஆச்சரியம். புரியாது என்று நினைப்பது லா.ச.ரா. விஷயத்தில் புதிராகவும் இருக்கிறது.

  அட்டை நன்றாக தெரியும்படி லாசராவின் புத்தகத்தை கையில் வைத்திருந்திருந்தீர்கள் என்றால் விஷயம் தெரிந்தவர்கள் வட்டாரத்தில் நம் மதிப்பும் கூடும் என்பது ஒரு நிகழ் உண்மை.

  பஸ்ஸில், இரயிலில் பயணத்தில் லா.ச.ராவின் புத்தகத்தை கையில் வைத்திருந்தீர்கள் என்றால், யாரும் ப்டிக்க கேட்கமாட்டார்கள்! ஆனால், நிச்சயம் இலக்கியம் அறிந்த நண்பர் ஒருவர் எப்படியும் பயணத் தோழமையாகக் கிடைப்பார்!
  லா.ச.ரா.வின் பெயரிலேயே ரிஷி இருக்கிறார்; தோற்றமும் ரிஷி போலவான தோற்றம். அம்பாள் உபாசகர் வேறு.
  வடமொழி வார்த்தை உபயோகங்கள் வேறே அதிகம். அந்தக் கால வாசகர் வட்ட வெளியீடு 'புத்ர;வில் எழுத்துக்களுக்கு இடையே அந்த எழுத்துக்களுக்கு அர்த்தம் கொடுக்கிற படங்கள் (ஓவியங்கள் அல்ல) வேறு இருக்கும். இப்பொழுதிய 'புத்ர'வில் எப்படி என்று தெரியவில்லை.

  லா.ச.ரா.வின் எழுத்து படித்துப் புரிவதற்காக அல்ல; அனுபவமாகிப் புரிய வேண்டியவை. தீயைப் பற்றி அவர் எழுதினார் என்றால் வாசிக்கையிலேயே தீச்சுடல் உணர்வு நம்க்கும் பற்றிக் கொள்ளும். எத்தனை பேருக்கு இவரின் இந்த அனுபவங்கள் சாத்தியமாகி இருக்கும் என்றும் தெரியவில்லை.

  தமிழின் எந்த எழுத்தாளருக்கும் 'இவர் மாதிரி' என்று ஒரு ஆங்கில அல்லது அமெரிக்க எழுத்தாளரைக் காட்டுவார்கள்!

  லா.ச.ரா.வுக்கு மட்டும் அப்படி யாரையும் காட்ட இயலாது.
  (என் புத்தக முன்னுரையில் பட்டும் படாமலும் இதைச் சொல்லியிருக்கிறேன்.)

  ReplyDelete
 15. இந்த பகுதியில் திரு விந்தன்ஸார்...திரு லாரா இருவரைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.அவர்களையெல்லாம் எழுத்துலகில் அங்கீகாரம் கிடைத்து பிரபலம் ஆவதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டிருக்காங்க. பின்னூட்டத்தில் சிலரும் அவர்கள்கூட பழகும் பாக்கியமும் பெற்றிருக்காங்க. நாங்கல்லாம் இந்த சம்பவங்களை எல்லாம் உங்க மூலமாக படித்து ரசிக்க முடிகிறது..நன்றிகள்...

  ReplyDelete
  Replies
  1. srini vasan March 24, 2016 at 12:57 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இந்த பகுதியில் திரு. விந்தன் ஸார்... திரு லா.ச.ரா இருவரைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களையெல்லாம் எழுத்துலகில் அங்கீகாரம் கிடைத்து பிரபலம் ஆவதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டிருக்காங்க. பின்னூட்டத்தில் சிலரும் அவர்கள்கூட பழகும் பாக்கியமும் பெற்றிருக்காங்க. நாங்கெல்லாம் இந்த சம்பவங்களை எல்லாம் உங்க மூலமாக படித்து ரசிக்க முடிகிறது..நன்றிகள்...//

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

   Delete
 16. தங்களின் படிப்பு ஆர்வம் கண்டு வியந்தேன். விடாமுயற்சி என்பது இதுதானோ என்று வியக்கிறேன். என்னுடைய வாழ்க்கையிலும் இம்மாதிரியான நிகழ்வுகள் நடந்துள்ளன. அவைகள் பலவற்றை வெளியில் கூற முடியாது. ஆனாலும் அத்தகைய நிகழ்வுகள்தான் எனக்கு மனதைரியத்தை ஊட்டின.

  ReplyDelete
  Replies
  1. பழனி.கந்தசாமி March 24, 2016 at 1:06 PM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //தங்களின் படிப்பு ஆர்வம் கண்டு வியந்தேன். விடாமுயற்சி என்பது இதுதானோ என்று வியக்கிறேன்.

   உண்மையாக எனக்கு என் பள்ளிப்படிப்பு முடிந்ததும் B.E., or atleast Engineering Diploma படிக்கணும் என்பதே ஆசை. அவ்வாறு படித்திருந்து BHEL இல் நான் நுழைந்திருந்தால் நான் Further Promotions களில் எங்கேயே போய் இருந்திருப்பேன். BHEL ஒரு ENGG. Industry ஆக இருப்பதால் Technical and Non Technical என்ற பிரிவினை மனப்பான்மை (தவிர்க்க முடியாதபடி) உண்டு. Non Technical people க்கு 3 Promotions கிடைப்பதற்குள் Technically qualified people க்கு 6 promotions கிடைத்துவிடும். BHEL இல் சேரும் போதே Professionally qualified Degree உடன் Initial appointment இல் ஒருவர் நுழைந்துவிட்டால், ஓய்வுபெறும் முன் ஒரு GENERAL MANAGER RANK ஐ மிகச் சுலபமாக எட்டிவிட வாய்ப்புகள் அதிகம் உண்டு.

   எனக்கு கிடைக்காத அந்த அரிய வாய்ப்பு என் இளைய மகனுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

   ஆயுள், அதிர்ஷ்டம், உடல்நிலை ஒத்துழைப்பு, கடுமையான உழைப்பு, ஆபீஸில் கைசுத்தமாக இருந்து நல்லபெயர் வாங்குவது ஆகியவையும் மிக மிக முக்கியமான தேவைகளாகும்.

   //என்னுடைய வாழ்க்கையிலும் இம்மாதிரியான நிகழ்வுகள் நடந்துள்ளன. அவைகள் பலவற்றை வெளியில் கூற முடியாது. ஆனாலும் அத்தகைய நிகழ்வுகள்தான் எனக்கு மனதைரியத்தை ஊட்டின.//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார். - அன்புடன் VGK

   Delete
  2. VGK >>>>> Dr.Palani Kandaswamy Sir (2)

   1966 இல் SSLC 11th Std. இல் நான் வாங்கியிருந்த எதேஷ்டமான மதிப்பெண்களுக்கு, திருச்சியிலேயே அன்றும் இன்றும் மிகப்பிரபலமான S I T (Seshasayee Institute of Technology - Ariyamangalam) யில் மிகச்சுலபமாக Admission கிடைத்துவிடும் என்றும், 3 ஆண்டு டிப்ளோமா படிப்புகளுக்கும் சேர்த்தே ரூ. 1000 மட்டுமே செலவாகும் என்றும், என் அக்கம் பக்கத்தில் குடியிருந்த Diploma படித்து நல்ல வேலைகளில் அமர்ந்திருந்த இளைஞர்கள் பலரும் என்னிடமும் என் பெற்றோரிடமும் முட்டிக்கொண்டார்கள். அந்த ரூ. 1000 என்பதுதான் எங்கள் குடும்பத்திற்கு அன்று மிகப் பெரிய பிரச்சனையாக இருந்துவிட்டது. என்ன செய்வது? எனக்கு அன்று இதற்கு ப்ராப்தமோ அதிர்ஷ்டமோ இல்லை. :( - VGK

   Delete
 17. இன்னும் இரண்டு பிரபல எழுத்தாளர்களைத்தெரிந்துகொள்ள கொள்ள முடிந்தது. இப்படி இவங்க எழுதிய புஸ்தகங்கள் கடைகளில் கிடைக்குமா???

  ReplyDelete
  Replies
  1. ப்ராப்தம் March 24, 2016 at 1:09 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இன்னும் இரண்டு பிரபல எழுத்தாளர்களைத் தெரிந்துகொள்ள கொள்ள முடிந்தது. இப்படி இவங்க எழுதிய புஸ்தகங்கள் கடைகளில் கிடைக்குமா???//

   நிச்சயமாகக் கிடைக்கும். தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK

   Delete
 18. ஒவ்வொருவருக்கும் நீங்கள் கொடுத்துள்ள ரிப்ளை பின்னூட்டங்களில் உங்களைப்பற்றி நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கீங்க. அந்த ரிப்ளை எல்லாமே ஒரு கதையை படித்தது போல் இருக்கு. விந்தன்ஸார் லசாரா இவர்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. March 24, 2016 at 1:13 PM

   வாங்கோ, வணக்கம்.

   //ஒவ்வொருவருக்கும் நீங்கள் கொடுத்துள்ள ரிப்ளை பின்னூட்டங்களில் உங்களைப்பற்றி நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கீங்க. அந்த ரிப்ளை எல்லாமே ஒரு கதையை படித்தது போல் இருக்கு.//

   என் சொந்தக்கதை ஓர் மிகப்பெரிய நாவல் போன்றது. அதில் ஏதோ 1% மட்டுமே ஆங்காங்கே, என் பழைய பதிவுகளிலும், இங்கு இதுபோன்ற பின்னூட்டங்கள் வாயிலாகவும் என்னால் இதுவரை சொல்ல முடிந்துள்ளது. :) தாங்கள் இதிலெல்லாம் ஆர்வம் காட்டி படித்து மகிழ்ந்து எடுத்துச் சொல்வதில் எனக்கும் மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

   //விந்தன் ஸார், லசாரா இவர்களை தெரிந்து கொள்ள முடிந்தது.//

   சந்தோஷம். தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

   Delete
 19. ஒவ்வொருவரின் வாழ்க்கையில் அனுபவங்களிலிருந்து நாமும் நல்லது எதையாவது கத்துக்கணும். அப்பதான் புடிச்ச விஷயங்களுக்கு ஏதாவது பிரயோசனம் இருக்கும்..

  ReplyDelete
  Replies
  1. ஆல் இஸ் வெல்....... March 24, 2016 at 1:23 PM

   வாங்கோ, வணக்கம்.

   //ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து நாமும் நல்லது எதையாவது கத்துக்கணும். அப்பதான் படிச்ச விஷயங்களுக்கு ஏதாவது பிரயோசனம் இருக்கும்.//

   வெகு அழகாகச் சொல்லிவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

   Delete
 20. இப்படி ஆகியிருக்கலாம் அப்படி ஆகியிருக்கலாம் என்று எண்ணுவதில் பயனில்லை என்பது தெரிந்தும் நம் மனம் விடாமல் அப்படியே எண்ணுகிறது. வாழ்க்கையின் நாற்சந்திகளில் எப்படித் திரும்புகிறோம் என்பதைக் கணக்கு பார்த்தோமானால் குழப்பமும் திகிலும் தான் மிச்சம். ஜீவி சொல்லியிருப்பது போல் நீங்கள் செய்தது புத்திசாலித்தனம் தான். இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும் என்ற கோட்பாடுடன் கொஞ்சம் கூட சமரசம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் - அப்படி வாழ்ந்தவர்களும் தங்கள் தீர்மானங்களினால் வருந்தவில்லை என்று சொல்லமுடியுமா என்றால் அதுவும் கேள்விக்குறிதான்.

  விந்தன் கேள்விப்பட்டதேயில்லை.

  லாசராவின் படம் - அற்புதம்.

  ReplyDelete
  Replies
  1. அப்பாதுரை March 26, 2016 at 11:09 PM

   வாங்கோ சார், வணக்கம்.

   //இப்படி ஆகியிருக்கலாம் அப்படி ஆகியிருக்கலாம் என்று எண்ணுவதில் பயனில்லை என்பது தெரிந்தும் நம் மனம் விடாமல் அப்படியே எண்ணுகிறது. வாழ்க்கையின் நாற்சந்திகளில் எப்படித் திரும்புகிறோம் என்பதைக் கணக்கு பார்த்தோமானால் குழப்பமும் திகிலும் தான் மிச்சம்.//

   நடந்து முடிந்ததை நினைத்து வருந்துவதில் பிரயோசனம் ஏதும் இல்லைதான். சாதாரண மனித மனத்தால் இதை அடிக்கடி இல்லாவிட்டாலும் ஒருசில சமயங்களில் நினைக்காமல் இருக்கவும் இயலவில்லை.

   //ஜீவி சொல்லியிருப்பது போல் நீங்கள் செய்தது புத்திசாலித்தனம் தான்.//

   யெஸ். கரெக்ட். அது எனக்கும் நன்றாகப் புரிகிறது.

   //இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும் என்ற கோட்பாடுடன் கொஞ்சம் கூட சமரசம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் - அப்படி வாழ்ந்தவர்களும் தங்கள் தீர்மானங்களினால் வருந்தவில்லை என்று சொல்லமுடியுமா என்றால் அதுவும் கேள்விக்குறிதான்.//

   நன்றாகச் சொன்னீர்கள். கேள்விக்குறியே தான்!

   //விந்தன் கேள்விப்பட்டதேயில்லை.//

   நானும் தான். ஜீவி சாரின் இந்த நூலின் மூலம் மட்டுமே தெரிந்துகொண்டேன்.

   //லாசராவின் படம் - அற்புதம்.//

   ஆமாம். நல்ல பறங்கிப்பழம் போல ... பிரும்ம தேஜஸ் உடன் உள்ளார். அம்பாள் உபாசகர் வேறு என்று ஜீவி சொல்கிறார். முகச்சுருக்கங்களிலேயே அவரின் பழுத்த அனுபவமும் தெரிகிறது.

   தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

   Delete
 21. விந்தனின் ’பாலும் பாவையும்’ அந்நாளில் பலராலும் வாசிக்கப்பட்ட நாவல். மாதம் ஒரு நாவல் வரிசையில் ராணிமுத்து இந்த நாவலை வெளியிட்டது.

  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ March 27, 2016 at 5:27 AM

   வாங்கோ சார், வணக்கம்.

   //விந்தனின் ’பாலும் பாவையும்’ அந்நாளில் பலராலும் வாசிக்கப்பட்ட நாவல். மாதம் ஒரு நாவல் வரிசையில் ராணிமுத்து இந்த நாவலை வெளியிட்டது.//

   ஆஹா, அருமையான கூடுதல் தகவல்கள் அளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்.

   அன்புடன் VGK

   Delete
 22. Position as on 27th March 2016 - 11.45 PM

  என் இந்தத்தொடரின் முதல் ஐந்து பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்துச் சிறப்பித்துள்ள

  திருமதிகள்:

  01) ஞா. கலையரசி அவர்கள்
  02) கோமதி அரசு அவர்கள்
  03) கீதா சாம்பசிவம் அவர்கள்
  04) கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்கள்

  செல்விகள்:

  05) சிப்பிக்குள் முத்து அவர்கள்
  06) ப்ராப்தம் அவர்கள்

  திருவாளர்கள்:

  07) துளசிதரன் தில்லையக்காது அவர்கள்
  08) ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்கள்
  09) S. ரமணி அவர்கள்
  10) வே. நடன சபாபதி அவர்கள்
  11) ஸ்ரத்தா... ஸபுரி அவர்கள்
  12) ஆல் இஸ் வெல் அவர்கள்
  13) ஸ்ரீனிவாஸன் அவர்கள்
  14) அப்பாதுரை அவர்கள்
  15) தி. தமிழ் இளங்கோ அவர்கள்

  ஆகியோருக்கு என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இதே போன்ற புள்ளி விபரங்கள் முதல் 10 பகுதிகள் முடிந்ததும் மீண்டும் அறிவிக்க நினைத்துள்ளேன்.

  அன்புடன் VGK

  ReplyDelete
 23. குருஜி கும்பிட்டுகிடுதன். வளமயா இங்கூட்டு வர ஏலல. ஸாரி....மேல்க பறக்குற பலூனுக அல்லா சூப்பராகீது.ஒங்கட சின்னபுள்ள வயசுல படிக்க ஏலாதது பத்திலா அருமயா சொல்லினிக.அப்பத்திக்கே எம்பூட்டு கஸ்டப்பட்டிருக்கீக குருஜி. நீங்ட ரொம்ப ஐயோ பாவம்லா..ஆமா..... ஒரு தாத்தா படத்த போட்டுகிட்டு... லா. ச. ரா.னு சொல்லினிக. பாத்துகிடவே பயமாகீது குருஜி.

  ReplyDelete
  Replies
  1. mru March 30, 2016 at 10:09 AM

   வாங்கோ முருகு, வணக்கம்மா.

   //குருஜி கும்பிட்டுகிடுதன். வளமயா இங்கூட்டு வர ஏலல. ஸாரி....//

   பரவாயில்லை. கல்யாணப்பொண்ணுக்கு ஆயிரம் கவலைகள், ஏக்கங்கள், ஆசைகள், கனவுகள் இருக்கத்தான் இருக்கும். எதற்கும் நேரமே இருக்காதுதான். இதை என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. :)

   //மேலாக பறக்குற பலூனுக அல்லா சூப்பராகீது.//

   சந்தோஷம்.

   //ஒங்கட சின்னபுள்ள வயசுல படிக்க ஏலாதது பத்திலா அருமயா சொல்லினிக. அப்பத்திக்கே எம்பூட்டு கஸ்டப்பட்டிருக்கீக குருஜி. நீங்ட ரொம்ப ஐயோ பாவம்லா..ஆமா.....//

   இளமையில் வறுமை மிகவும் கொடுமைதான் முருகு. நாம் என்ன செய்வது? நம்மில் சிலரின் தலையெழுத்து அதுபோல அமைந்துவிடுகிறது. எல்லாம் நன்மைக்கே என நாமும் எடுத்துக்கொள்வோம். வேறு வழியே இல்லை.

   //ஒரு தாத்தா படத்த போட்டுகிட்டு... லா. ச. ரா.னு சொல்லினிக. பாத்துகிடவே பயமாகீது குருஜி.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! பயப்படாதீங்க முருகு. அவர் நன்கு பழுத்த நிலையில் உள்ளார். நரை முடிகளும், அனுபவச் சுருக்கங்களும் அவரின் முகத்தில் அப்படியே பிரதிபலிக்கின்றன. தெய்வ பக்தி உள்ளவர் என்றும் ஓர் அம்பாள் உபாஸகர் என்றும் கேள்விப் படுகிறோம்.

   ஜொலிக்கும் சிவப்பழமாக பிரும்ம தேஜஸுடன் அவர் எனக்குத் தெரிகிறார்.

   தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி முருகு.

   அன்புடன் குருஜி கோபு

   Delete