About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, February 6, 2019

வலைப்பதிவர் தி. தமிழ் இளங்கோ .... நினைவலைகள்எனது அருமை நண்பரும், 'எனது எண்ணங்கள்’ http://tthamizhelango.blogspot.com என்ற வலைத்தளத்தின் பிரபல வலையுலகப் பதிவருமான திருச்சி, திருமழபாடி, திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்  02.02.2019 சனிக்கிழமை காலை சுமார் 9.15 மணிக்கு, திருச்சி K.K.நகர் பேருந்து நிலையம் அருகேயுள்ள நாகப்பன் நகரில்,  அவரது சொந்த இல்லத்தில், மூச்சுத்திணறல் அதிகமானது காரணமாக, அகால மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி அடியேனுக்கு, அன்று பகல் சுமார் 12 மணிக்கு மேல், அவரது ஒரே மகனாகிய திரு. அரவிந்தன் என்பவரால் [94861 14574] தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டது. 

இதைக்கேள்விப்பட்டதும் அதிர்ச்சியிலும், அழுகையிலும் மூழ்கிவிட்ட என்னால் எந்தவொரு வேலைகளிலும் ஈடுபட முடியாமல் போய் விட்டதால் இந்தப்பதிவினை இப்போது மிகவும் தாமதமாக வெளியிட நேர்ந்துள்ளது.  இருப்பினும் அவர் காலமான செய்தியினை அன்று முழுவதும், வாட்ஸ்-அப் மூலமும், மெயில் மின்னஞ்சல் மூலமும், தொலைபேசி மூலமும், நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுலக நண்பர்களுக்கு அறிவித்துக்கொண்டே இருந்தேன்.  

01.03.1955 இல் பிறந்துள்ள நம் தி. தமிழ் இளங்கோ அவர்கள் State Bank of India வில் பணியாற்றி விருப்ப ஓய்வு (VRS) பெற்று வந்தவர். அவரின் மனைவி திருச்சியிலேயே BSNL இல் இன்றும் பணியாற்றி வருகிறார்.  இன்னும் திருமணம் ஆகாத ஒரே பிள்ளை தன் படிப்பு முடிந்து திருச்சியிலேயே ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரின் ஒரே மகள் தற்சமயம், தன் கணவர் மற்றும் குழந்தையுடன் அமெரிக்காவில் இருந்து வருகிறார். 

என்றும் தன் எழுத்துக்களின் மூலமும், அன்பான + பண்பான + நாகரீகமான, பிறர் மனம் புண்படாத வகையில் பழகிவந்த இனிய அணுகுமுறைகள் மூலமும் நம் எல்லோருடைய இதயத்திலும், எப்போதும் வாழ்ந்து வரும் தமிழ் இளங்கோ அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.


   


எங்களுக்குள் நேரடியாக எங்களின் முதல் சந்திப்பு நிகழ்ந்த நாள்: 27.02.2013. கடைசியாக நாங்கள் இருவரும் சந்திக்க நேர்ந்த நாள்: 01.01.2019. இதற்கிடையில் நாங்கள் பலமுறை, பல இடங்களிலும், பல விழாக்களிலும் சந்தித்து மகிழ்ந்துள்ளோம்.

புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வமுள்ளவர். புத்தகக் கண்காட்சிகள் நடைபெறும், ஊர் ஊராகச் சென்று,  நூல்களைத்தேடித் தேடி வாங்கி அடுக்கி சேகரிப்பதிலும்,  படிப்பதிலும், பிறருக்கு அவற்றை அன்பளிப்பாக அளிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

கடந்த நான்கு-ஐந்து நாட்களாக அவரின் வலைத்தளத்தில் அவர் என்னைப் பற்றி எழுதியுள்ள பதிவுகளில் சிலவற்றையும், எனது வலைத்தளத்தில், அடியேன் அவரைப் பற்றி எழுதியுள்ள பதிவுகளில் சிலவற்றையும், படித்துக்கொண்டு அவரின் நினைவாகவே இருந்து வந்தேன். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.


திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களின் 
’எனது எண்ணங்கள்’ வலைத்தளத்தில் 
வெளியிடப்பட்டுள்ள பதிவுகள்:-


திருச்சியும் பதிவர் வை.கோபாலகிருஷ்ணனும் [04.09.2012]

திருச்சி பதிவர் VGK அவர்களை சந்தித்தேன் [27.02.2013]

திருச்சியில் மூத்த பதிவர் GMB ஐயா அவர்களோடு ஓர் இனிய சந்திப்பு [03.07.2013]

எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு... V.G.K.  (நூல் விமர்சனம் 10.09.2013)

அன்பின் சீனா - மெய்யம்மை ஆச்சி தம்பதியினருடன் ஓர் சந்திப்பு (07.10.2013)

ஆரண்ய நிவாஸ் - ஓரு இலக்கிய அனுபவம் (15.08.2014)

தமிழ் வலையுலகில் விருதுகள் (15.09.2014)

திருச்சி மாவட்ட வலைப்பதிவர்களே ! (17.09.2014)

வெளிநாடு செல்லும் V.G.K. - வாழ்த்துகள் (14.11.2014)

ஸ்ரீரங்கம் வலைப்பதிவர் சந்திப்பு (23.02.2015)

பயணங்கள் முடிவதில்லை by VGK (28.01.2016)

ஸ்ரீரங்கம் வலைப்பதிவர் சந்திப்பு (08.02.2016)

VGK அவர்களுக்கு ஓர் வேண்டுகோள் (13.02.2016)

இராய செல்லப்பா அவர்களுடன் ஒரு சந்திப்பு (09.01.2018)


சிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK 03 - சுடிதார் வாங்கப் போறேன் (25.03.2018)


சிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே! (28.03.2018)


எனது வலைத்தளத்தில் 
வெளியிடப்பட்டுள்ள சில பதிவுகள்:-

http://gopu1949.blogspot.com/2013/03/blog-post_3629.html
ஓடி வந்த பரிசும் தேடி வந்த பதிவர்களும்

சந்தித்த வேளையில் ... பகுதி - 2 of 6

சந்தித்த வேளையில் ... பகுதி - 4 of 6  

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் - [பகுதி-3] 

 


சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் - [பகுதி-4] எங்கள் அடுக்குமாடிக் கட்டட உச்சியில் (மொட்டை மாடியில்) தமிழ் இளங்கோ 

  


யானை வரும் பின்னே ... மணி ஓசை வரும் முன்னே ! 
 


2017 >>>>> 2018 வாழ்த்துகள்

  


ஹனிமூன் வந்துள்ள பதிவர் தம்பதியினர் !  >>>>>

 2019 புத்தாண்டு வாழ்த்துகள்   >>>>>

 

 
அன்றும், இன்றும், என்றும்
நீங்காத நினைவுகளுடன்


பதிவர்களாகிய நாங்கள். 


 

[ வை. கோபாலகிருஷ்ணன் ]
29 comments:

 1. போற்றுதலுக்கு உரிய மனிதர் மறைந்து விட்டார்
  ஆழந்த இரங்கல்

  ReplyDelete
 2. உங்களிடமிருந்து இவ்வளவு நாட்களாக அஞ்சலி இடுகை வரவில்லையே என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

  தகவலை எனக்குச் சொல்லும்போது நீங்கள் எவ்வளவு உணர்ச்சிவசப் பட்டிருந்தீர்கள் என்பதை உணர்ந்தேன். அதனால் சில நாட்கள் எடுக்கிறதோ எனவும் நினைத்தேன்.

  அவரை இதுவரை தளத்தின்மூலமே பரிச்சயம். நேரடியாகச் சந்தித்ததில்லை. அதற்கே எனக்கு மனது வருத்தமாக இருக்கும்போது, பழகிய உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வருத்தம் இருக்கும். சிறிய வயதிலேயே மறைந்ததால் அதிர்ச்சியும் இருக்கும்.

  உங்கள் இடுகை வாயிலாக, தமிழ் இளங்கோ சாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 3. உங்களிடமிருந்து இவ்வளவு நாட்களாக அஞ்சலி இடுகை வரவில்லையே என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

  தகவலை எனக்குச் சொல்லும்போது நீங்கள் எவ்வளவு உணர்ச்சிவசப் பட்டிருந்தீர்கள் என்பதை உணர்ந்தேன். அதனால் சில நாட்கள் எடுக்கிறதோ எனவும் நினைத்தேன்.

  அவரை இதுவரை தளத்தின்மூலமே பரிச்சயம். நேரடியாகச் சந்தித்ததில்லை. அதற்கே எனக்கு மனது வருத்தமாக இருக்கும்போது, பழகிய உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வருத்தம் இருக்கும். சிறிய வயதிலேயே மறைந்ததால் அதிர்ச்சியும் இருக்கும்.

  உங்கள் இடுகை வாயிலாக, தமிழ் இளங்கோ சாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 4. உங்கள் இடுகைகளை கோர்வையாகக் கொடுத்திருக்கீங்க. பழைய சந்திப்புகளை ரெஃபர் செய்ய உதவியா இருக்கும். இருந்தாலும், படங்களைப் பார்த்த உடனேயே அவைகளைப் படித்த நினைவு வந்துவிட்டது.

  அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

  ReplyDelete
 5. நண்பருக்கு சிறப்பான அஞ்சலி.
  அனைவருக்கும் தகவல் அனுப்பியது நல்ல காரியம்.
  அதற்கு உங்களுக்கு நன்றி.
  பதிவர் சந்திப்புகளில் அவர் எடுத்த படங்கள், பதிவர் சந்திப்புகளில் கலந்து கொண்டது எல்லாம் நினைவுகளில் இருக்கிறது.

  நீங்கள் இப்போது பகிர்ந்து உள்ள படமும் நினைவுகளில் இருக்கிறது. கீதா சாம்பசிவம் வீட்டு மொட்டை மாடியில் எடுத்த படங்களும் நினைவில் இருக்கிறது.

  நினைவுகளில் என்றும் வாழ்வார்.

  ReplyDelete
 6. உங்களின் இந்தக் கட்டுரையின் ஒவ்வொரு வார்த்தையும் உங்கள் இருவருக்குமிடையான நட்பு எவ்வளவு இறுகிய ஒன்று என்று அந்த நட்பின் ஆழத்தைத் தெரியப்படுத்துகிறது. நெஞ்சத்து அக நக நட்பது நட்பு என்று திருவள்ளுவர் சொன்ன நட்பின் தாத்பரியமே இது தான். மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.

  ReplyDelete
 7. //என்றும் தன் எழுத்துக்களின் மூலமும், அன்பான + பண்பான + நாகரீகமான, பிறர் மனம் புண்படாத வகையில் பழகிவந்த இனிய அணுகுமுறைகள் மூலமும்//

  ReplyDelete
 8. //என்றும் தன் எழுத்துக்களின் மூலமும், அன்பான + பண்பான + நாகரீகமான, பிறர் மனம் புண்படாத வகையில் பழகிவந்த இனிய அணுகுமுறைகள் மூலமும்//

  ஆம். இதுதான் எல்லோர் நினைவுக்கும் உடனே வரும்.

  ReplyDelete
 9. ஒரு இனிய நண்பரை இழந்து விட்டோம். அந்த வருத்தம் இன்னும் தீரவில்லை. நமக்கே இப்படி இருக்கும்போது இந்த எதிர்பாராத மறைவினால் துன்பத்தில் இருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களை சொல்லிக்கொள்கிறோம். அவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற மனமார பிரார்த்திக்கிறோம்.

  ReplyDelete
 10. சார், நானும் நேற்று இரண்டு இரங்கல் கருத்து தெரிவித்தேன்.

  ReplyDelete
 11. நண்பரின் இழப்பு மனதை மிகவும் வருத்தபடுத்தும்.
  நீங்கள் செய்தி தெரிவித்த போது மனது மிகவும் கனத்து போய் விட்டது.

  அவரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்தினர்களுக்கு ஆறுதலை இறைவன் தர வேண்டும்.

  தமிழ் இளங்கோ அவர்கள் பதிவர் சந்திப்பில் எடுத்த படங்கள் நினைவுக்கு வந்தது. கீதா சாம்பசிவம் அவர்கள் மொட்டைமாடியில் எடுத்த படங்கள் வீட்டில் எடுத்த படங்கள் எல்லாம் நினைவில் இருக்கிறது.

  துளசி கோபாலுக்கு புத்தகம் கொடுக்கும் படம் போட்டு இருந்தார்கள் துளசி.

  நீங்கள் பகிர்ந்து கொண்ட படங்களும் பார்த்து நினைவு இருக்கிறது.  அன்பான நண்பருக்கு அஞ்சலிகள்.

  ReplyDelete
 12. தங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டேன்.

  ReplyDelete
 13. அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுவோம்... மறக்கவே முடியாத இனியவர்... ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

  ReplyDelete
 14. மிக வருத்தமான இழப்பு...

  நம் நினைவுகளில் என்றும் இருப்பார் ..

  ReplyDelete
 15. இளங்கோ அண்ணனின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன், கோபு அண்ணன் அதிகம் கஸ்டப்பட்டிருப்பீங்கள் என நினைத்துக் கொண்டோம், என்ன பண்ணுவது இக்காலத்தில் 63 வயசென்பது நடு வயதுதானே... இப்போ மரணகாலம் 100 க்கு கிட்ட வந்து கொண்டிருக்கும்போது, இது அநியாயமான நிகழ்வுதான் என்ன பண்ணுவது நமக்கு எந்த ஸ்டேஷனில் இறங்கோணும் என எழுதப்பட்டிருக்கோ அதில் இறங்கித்தானே ஆகோணும்:(.

  ReplyDelete
 16. அனைத்து நினைவுகளையும் திரட்டி போஸ்ட் போட்டிருக்கிறீங்க... படங்கள் பார்க்க மனதை என்னமோ பண்ணுது.

  ReplyDelete
 17. அவருடன் நடந்த அனைத்து சந்திப்பு நிகழ்வுகளையும் ஒரு சேர கோர்வையா இணைத்திருக்கிங்க .
  அவர் ஆன்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றேன்

  ReplyDelete
 18. தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்களின் துக்கத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டவர்கள்:

  1) திரு. நெல்லைத்தமிழன்
  2) திரு. ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி
  3) திரு. வெ. நடன சபாபதி
  4) திருமதி. ஆச்சி - ஹரியானா
  5) திருமதி. மனோ சுவாமிநாதன்

  ReplyDelete
  Replies
  1. 3) திரு. வெ. நடன சபாபதி = தவறு :(
   3) திரு. வே. நடனசபாபதி = சரி

   Delete
 19. Face Book Comment by Mr. Mohanji

  மோகன் ஜி:- மனதை மிக வருத்தமுறச் செய்த மறைவு. உங்களின் நல்ல நண்பர் என்பதை அறிவேன் வைகோ சார். இறைவனின் பாத கமலத்தில் சரண் புகுவார். ஓம் சாந்தி!

  ReplyDelete
 20. மின்னஞ்சல் மூலம் என்னைத் தொடர்புகொண்டு தங்களின் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டவர்கள்:

  திருவாளர்கள்:
  ===============
  1) ஜீவி
  2) முனைவர் பழனி கந்தசாமி
  3) முனைவர் B ஜம்புலிங்கம்
  4) இராய செல்லப்பா

  திருமதிகள்:
  =============
  05) அதிரா மியாவ்
  06) ஏஞ்சலின்
  07) ருக்மணி சேஷசாயீ
  08) ராஜலக்ஷ்மி பரமசிவம்
  09) கோமதி அரசு
  10) தேனம்மை லெக்ஷ்மணன்
  11) கீதா மதிவாணன்
  12) கீதா சாம்பசிவம்
  13) சித்ரா சாலமன்
  14) ஆசியா உமர்
  15) உஷா அன்பரசு, வேலூர்

  ReplyDelete
 21. Whats-App மூலம் என்னைத் தொடர்புகொண்டு தங்களின் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டவர்கள்:

  திருவாளர்கள்:
  ===============
  01. சிட்டுக்குருவி விமலன்
  02. திண்டுக்கல் தனபாலன்
  03. நெல்லைத்தமிழன்
  04. ரவிஜி ரவி
  05. ஸ்ரீராம்
  06. இராய செல்லப்பா யக்ஞசாமி
  07. ஈ.எஸ். சேஷாத்ரி
  08. அப்பாதுரை
  09. யாதோ ரமணி
  10. ரிஷபன்
  11. முகமது நிஜாம்முத்தீன்

  திருமதிகள்:
  ================
  12) ஆதி வெங்கட் - ஸ்ரீரங்கம்
  13) ஷைலஜா - பெங்களூர்
  14) கீதா சாம்பசிவம் - ஸ்ரீரங்கம்
  15) துளசி கெளசல்யா - விருத்தாசலம்
  16) கலையரசி - பாண்டிச்சேரி
  17) கீதா - புதுக்கோட்டை
  18) ஜெயஸ்ரீ ஷங்கர் - ஹைதராபாத்

  ReplyDelete
 22. நெஞ்சை விட்டகலா நேர்மையான வலைப்பதிவர்
  என்றும் என் உள்ளத்தில் இருக்கின்றார்

  ReplyDelete
 23. நண்பர் திரு தி.தமிழ் இளங்கோ அவர்கள் மறைந்த செய்தியை தங்கள் மூலம் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். தங்களை தொடர்பு கொண்டு பேசியபோது தாங்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளீர்கள் எனபதை அறிந்துகொண்டேன். அவரை நேரில் பார்க்காவிடினும் பலமுறை தொலைபேசியில் உரையாடியிருக்கிறேன். பழகுவதற்கு இனிமையானவர். அனைவருக்கும் மரியாதை கொடுக்கக்கூடிய பண்பாளர்.
  என்னை பலமுறை திருச்சி வருமாறு அழைத்திருக்கிறார். திருச்சி வந்தால் தங்கள் வீட்டிற்கும் ‘ ஊமைக்கனவுகள் ‘ வலைப்பதிவர் திரு ஜோசப் விஜய் அவர்களிடமும் அழைத்து செல்வதாக சொல்லியிருந்தார். ஆனால் அது நிறைவேறாமலே யே போய்விட்டது.
  அவர் இந்த வயதில் நம்மைவிட்டு சென்றிருக்கவேண்டியதில்லை. ஆனால் என் செய்ய! அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  ReplyDelete
 24. நல்ல நண்பரை இழந்துவிட்டோம். பல முறை சந்தித்துள்ளேன். பேசியுள்ளேன். திருச்சியில் பௌத்தம் தொடர்பான ஒரு நிகழ்வில் நான் பேசச் சென்றபோது நேரமின்மை காரணமாக பிறருக்குத் தெரிவிக்க முடியவில்லை. அவருக்கு மட்டுமே செய்தியினைத் தெரிவித்தேன். விழா நிகழ்வில் கலந்துகொண்டதோடு அதனை தன்னுடைய தளத்தில் முழுமையாகப் பதிவிட்டிருந்தார். அவருக்கு இது இறக்கவேண்டிய வயதோ, நேரமோ அல்ல. அவரது எழுத்து, பண்பு, நட்புணர்வு அனைத்தையும் நாம் அறிவோம். அவருடைய எழுத்தும், புன்னகையும் என்றும் நம் நினைவில் நிற்கும்.

  ReplyDelete
 25. அவரை எனக்குத் தெரியாது ; ஆனால் நீங்கள் அவரைப் பற்றி முன்பு எழுதியிருந்ததைக் கொண்டு அவர் பழகுவதற்கு இனியவர் என்று எனக்குத் தோன்றியது . இன்னம் வாழவேண்டியவர் ; என்ன செய்வது ? உங்களுடைய துக்கத்தில் பங்கு கொள்கிறேன் .

  ReplyDelete
 26. 16.10.1950 இல் பிறந்தவரும்,

  ’அன்பின் திரு. சீனா ஐயா’ என்று

  வலையுலகில் அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவரும்,

  வலையுலக மூத்த பதிவருமான

  ’ஆத்தங்குடி திரு. பெ.க.சு.பெ.கரு.கா. சிதம்பரம் செட்டியார் அவர்கள்

  16.03.2019 சனிக்கிழமையன்று அவரின் சொந்த ஊரான மதுரையில், காலமானார் என்ற அதிர்ச்சியும், துக்கமும் தரும் செய்திகள் பலரின் வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

  என்னுடன் மிகவும் பிரியமாகவும், அன்புடனும், பாசத்துடனும் பழகி வந்த அவரின் இந்தப் பிரிவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மிகவும் உயர்ந்த எண்ணங்கள் கொண்ட, அருமையான, மிகவும் நல்ல மனிதர் அவர்.

  அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

  அவரின் பிரிவினால் வாடும் அவரின் அன்பு மனைவி + இதர குடும்பத்தார் அனைவருடனும் என் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். :(

  அவருடனான என் சந்திப்பு பற்றி என் வலைத்தளத்தில் அடியேன் படங்களுடன் எழுதியுள்ள பதிவுகளில் சிலவற்றிற்கான இணைப்புகள் இதோ:

  https://gopu1949.blogspot.com/2013/10/61-2-2.html

  https://gopu1949.blogspot.com/2015/02/4-of-6.html

  ReplyDelete
 27. நல்ல அன்பரை பதிவுலகம் இழந்து நிற்பது வேதனையளிக்கிறது ... அன்பரின் ஆன்மாவிற்கு மேன்மையும், சாந்தியும் உண்டாகட்டும்

  ReplyDelete