About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, January 14, 2011

அமுதைப் பொழியும் நிலவே ! [ பகுதி 1 of 2 ]

என் அலுவலகத்திற்கு மட்டும் அன்று விடுமுறை. காலை சுமார் ஏழு மணி. வீட்டிலே மின் வெட்டு. காற்று வாங்க காலாற நடந்து கொண்டிருந்தேன்.

திருச்சிக்குப் புதியதாக, அரசால் ஒரு சில தொடர் பேருந்துகள் (மிக நீளமான ரயில் பெட்டிகள் போல இணைக்கப்பட்டிருக்கும் இரண்டு பஸ்கள்) விடப்பட்டுள்ளன. அதில் பயணிக்க வேண்டும் என்று எனக்கும் பல நாட்களாக ஒரு ஆசை உண்டு. நேற்று வரை அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை.


அந்தத் தொடர் பேருந்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கென்னவோ விசித்திரமான ஒரு சில நினைவுகள் அடிக்கடி வருவதுண்டு. சிறு வயதில் நான் கண்ட மழைக்கால ‘மரவட்டை’ என்று அழைக்கப்படும் ரெயில் பூச்சியைப் போல அது நீளமாக இருப்பதாக மனதில் தோன்றும். மேலும் என்றோ ஒரு நாள் தெருவில் வால் பக்கமாக இணைந்தபடி இரு பைரவர்கள் என் கண்களில் பட்டனர். அந்த இரு பைரவர்களைப் போலவே இந்த இரண்டு பேருந்துகளையும் மிகவும் கஷ்டப்பட்டு இணைத்துள்ளார்களே என்றும் நினைத்துக் கொள்வதுண்டு.

சுப்ரமணியபுரம் டீ.வி.எஸ். டோல்கேட் அருகே, இன்று ரோட்டில் நடந்து சென்ற என்னை உரசுவது போல என் அருகே தொடர்பேருந்து ஒன்று வந்து நினறது. கும்பல் அதிகமாக இல்லாததால், நானும் அதில் ஏறிக்கொண்டு, ஜன்னல் பக்கமாக ஒரு இருக்கையில் காற்று நன்றாக வரும்படி அமர்ந்து கொண்டேன்.

அந்தப் பேருந்து பொன்மலைப்பட்டியிலிருந்து துவாக்குடி வரை செல்வதாக அறிந்து கொண்டேன். காற்றாட துவாக்குடி வரை போய்விட்டு இதே பேருந்தில் திரும்ப வந்து விட்டால், வீட்டில் மின் தடையும் நீங்கி விடும். பாதி விடுமுறையை பஸ்ஸிலும், மீதியை வீட்டிலும் கழித்து விடலாம் என்று கணக்குப் போட்டு பஸ் டிக்கெட் வாங்கிக் கொண்டேன்.


வெறும் காற்று வாங்க வேண்டி, காசு கொடுத்துப் பயணமா, என நீங்கள் கேட்பது எனக்கும் புரிகிறது. நான் என்ன செய்வது? மின் வெட்டுச் சமயங்களில் சாமான்ய மனிதனின் பிழைப்பும் இன்று நாய்ப் பிழைப்பாகத்தானே உள்ளது.


வண்டி நகர்ந்த சிறிது நேரத்திலேயே வீசிய காற்று மிகவும் சுகமாக இருந்தது. அடுத்தப் பேருந்து நிறுத்தத்திலேயே இளம் வயதுப் பெண்கள் பலரும் ஏறிக் கொண்டு பேருந்தை கலகலப்பாக்கினர்.

ஒரே மல்லிகை மணம் கமழ ஆரம்பித்தது. எனது பக்கத்து இருக்கையில் ஒரு அழகு தேவதை வந்து அமர்ந்தாள்.


“எக்ஸ்க்யூஸ் மீ, ஸார், இந்த பஸ் பீ.ஹெச்.ஈ.எல். வழியாகத் தானே போகிறது?”


“ஆமாம், நீங்கள் எங்கே போகணும்?”

“ பீ.ஹெச்.ஈ.எல். இல் உள்ள ‘வெல்டிங் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்’ க்கு எட்டு மணிக்குள் போய்ச் சேரணும், ஸார்; தயவுசெய்து ஸ்டாப்பிங் வந்ததும் சொல்லுங்கோ ஸார்” என்று குழைந்தாள்.

[குறிக்கோள் ஏதும் இல்லாமல் புறப்பட்ட என் பயணத்தில், பிறருக்கு, அதுவும் ஒரு அழகு தேவதைக்கு, உதவும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை நழுவ விடக் கூடாது என்பதில் உறுதியானேன்.

பல்வேறு பில்டிங் காண்ட்ராக்ட் விஷயமாக, பல முறை இவள் போக வேண்டியதாகச் சொல்லும் இடத்திற்கு நான் சென்று வந்துள்ளதால், அது எனக்கு மிகவும் பரிச்சயமான இடமாக இருப்பதும், ஒரு விதத்தில் நல்லதாகப் போய் விட்டது]

“ஓ...கட்டாயமாகச் சொல்கிறேன். நானும் அங்கே தான் போகிறேன். நீங்கள் என்ன வேலையாக அங்கே போகிறீர்கள்?”

நான் பாலக்காட்டிலிருந்து வந்துள்ளேன். ஐ.டி.ஐ. தொழிற்கல்வி பயின்றுள்ளேன். உலோகப் பற்றவைப்பை சிறப்புப் பாடமாக கற்றுள்ளேன். வெல்டிங் சம்பந்தமாக உலகத்தரம் வாய்ந்த சிறப்புப் பயிற்சி எடுக்கப்போகிறேன். இதோ எனக்கு வந்துள்ள அழைப்புக் கடிதம். இன்று முதல் ஒரு மாதம் அந்த ட்ரைனிங் எடுக்கணும். தினமும் வரணும். இன்று முதன் முதலாகப் போவதால், பஸ் ரூட், வழி முதலியன தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது”. என்றாள் மலையாளம் கலந்த பாலக்காட்டுத் தமிழில்.


அழைப்புக் கடிதத்தை நோட்டமிட்டேன். பெயர்: அமுதா. வயது: 19, கனிந்த பருவம், அழகிய உருவம், அரைத்த சந்தன நிறம், மிடுக்கான உடை, துடுக்கான பார்வை, வெல்டிங் சம்பந்தமாக ட்ரைனிங் எடுக்கப்போகிறாள்.

அவளின் ட்ரைனிங் முடியும் இந்த ஒரு மாத காலத்திற்குள் அவளுடன் என்னையும் நான் வெல்டிங் செய்து கொள்ள வேண்டும். முடியுமா? முயற்சிப்போம். என்னுள் பலவிதமான எண்ணங்கள் அலை மோதி, மனதில் பட்டாம் பூச்சிகள் சிறகு விரித்துப் பறக்கத் தொடங்கின.


“இந்த பஸ் நேராக நீங்கள் போக வேண்டிய இடத்துக்குப் போகாது. திருவெறும்பூர் தாண்டியதும் ஒரு மிகப்பெரிய ரவுண்டானா வரும். அதை ‘கணேசா பாயிண்ட்’ என்று சொல்லுவார்கள். அங்கே இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து போய்விடலாம்” என்றேன்.

”ஓ. கே. ஸார், ஆட்டோவுக்கு எவ்வளவு பணம் தரும்படியாக இருக்கும்?” என்றாள்.

“நோ ப்ராப்ளம்; நானே ஆட்டோவில் கொண்டு போய் விடுகிறேன். எனக்கும் அந்தப் பக்கம் ஒரு வேலை உள்ளது. நீங்களும் எட்டு மணிக்குள் அங்கு போய்ச் சேர வேண்டுமே! ... அதிருக்கட்டும் ... திருச்சியில் மேலும் ஒரு மாதம் தாங்கள் தங்கி ட்ரைனிங் எடுக்கணுமே, யாராவது சொந்தக்காரர்கள் இருக்கிறார்களா? எங்கு தங்கப் போவதாக இருக்கிறீர்கள்?”


“நேற்று இரவு மட்டும் கல்லுக்குழி என்ற இடத்தில் உள்ள என் சினேகிதியின் வீட்டில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு தங்கிக் கொண்டேன். இன்று மாலை அவளுடனேயே சென்று வேறு எங்காவது லேடீஸ் ஹாஸ்டல் போன்ற நல்ல பாதுகாப்பான செளகர்யமான இடமாகப் பார்க்கணும் என்று இருக்கிறேன்”. என்றாள்.


என்னுடைய விஸிடிங் கார்டு, வீட்டு விலாசம், செல்போன் நம்பர் முதலியன கொடுத்தேன்.

“எந்த உதவி எப்போது தேவைப் பட்டாலும், உடனே தயங்காமல் என்னைத் தொடர்பு கொள்ளலாம்” என்றேன்.

“தாங்க்யூ ஸார்” என்றபடியே அவற்றை தன் அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய கைப்பைக்குள் திணித்துக் கொண்டாள்.

என்னையே முழுவதுமாக அவள் தன்னுள் ஐக்கியமாக்கிக் கொண்டது போல உணர்ந்து மகிழ்ந்தேன்.
ஞாபகமாக அந்த அமுதைப் பொழியும் நிலவின் செல்போன் நம்பரையும் வாங்கி என் செல்போனில் பதிவு செய்து, டெஸ்ட் கால் கொடுத்து, தொடர்பு எண்ணை உறுதிப் படுத்திக் கொண்டேன்.

இன்று இரவு அவளை ஒரு நல்ல பாதுகாப்பான இடத்தில் தங்கச் செய்து, அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து, அசத்த வேண்டும் என மனதிற்குள் திட்டம் தீட்டினேன்.

“குமரிப்பெண்ணின் ... உள்ளத்திலே ... குடியிருக்க ... நான் வரவேண்டும் ... குடியிருக்க நான் வருவதென்றால் ... வாடகை என்ன தர வேண்டும் என்ற அழகான பாடல் பேருந்தில் அப்போது ஒலித்தது, நல்ல சகுனமாகத் தோன்றியது.

அவள் மனதில் இடம் பிடித்து அவளை வெல்டிங்கோ அல்லது வெட்டிங்கோ செய்து கொள்ள, அவளிடம் முதலில் என் காதல் நெஞ்சைத் தர வேண்டும் என்று புரிந்து கொண்டேன். என் இந்தக் காதல் முயற்சியில் எனக்கு வெற்றி கிட்டுமா என சிந்திக்கலானேன்.



தொடரும்...

[ இதன் தொடர்ச்சி இதோ இப்போதே - பகுதி 2 இல்]


26 comments:

  1. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்

    http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_20.html

    ReplyDelete
  2. //அப்படியே நம்ம கோபாலகிருஷ்ணன் சாரோட இந்தக் கதையும் படி . இதை படிச்சாவது வெறும் பகல் கனவு காணாம உருப்படற வழியைப் பாரு.//

    ஆஹா....தான் பெற்ற இன்பம் (அல்லது துன்பம்) பெறுக இந்த வையகமும் என்ற நல்ல எண்ணத்தில், என் படைப்புகளை மற்றவர்களும் படித்து மகிழ வழி செய்திருக்கிறீர்கள் என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். தங்களின் இந்த முயற்சிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    வளரட்டும் உங்களின் இத்தகைய அருமையான அறிமுகப்பணி. அன்பான வாழ்த்துகள் !

    ReplyDelete
  3. இன்று வலைச்சரத்தால் அறிமுகம் செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள். வலையுலகில் மேலும் சாதிக்க நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அன்புள்ள “பாரத்... பாரதி.” அவர்களே,
    தங்கள் முதல் வருகைக்கும், அன்பான வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  5. சிறு வயதில் நான் கண்ட மழைக்கால ‘மரவட்டை’ என்று அழைக்கப்படும் ரெயில் பூச்சியைப் போல அது நீளமாக இருப்பதாக மனதில் தோன்றும்.

    அந்தப்பூச்சிக்கே ரயில் பூச்சி என்று பெயரிட்டு விளையாடிய நினைவுகள் ரயிலேறி வந்து மகிழ்வித்தன,, பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. குறிக்கோள் ஏதும் இல்லாமல் புறப்பட்ட என் பயணத்தில், பிறருக்கு, அதுவும் ஒரு அழகு தேவதைக்கு, உதவும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை நழுவ விடக் கூடாது என்பதில் உறுதியானேன்

    குறிக்கோள் கிடைத்து
    குறிப்பறிந்து அழகு தேவதைக்கு செய்யும் உதவிகள் இப்படியாவது ஒரு அமுதைப்பொழியும் பொழுதுபோக்கு கிடைத்ததே அந்த ஹீரோவுக்கு !

    ReplyDelete
  7. அவள் மனதில் இடம் பிடித்து அவளை வெல்டிங்கோ அல்லது வெட்டிங்கோ செய்து கொள்ள, அவளிடம் முதலில் என் காதல் நெஞ்சைத் தர வேண்டும் என்று புரிந்து கொண்டேன். என் இந்தக் காதல் முயற்சியில் எனக்கு வெற்றி கிட்டுமா என சிந்திக்கலானேன்.


    பேருந்தில் ஓடும் நினைவலைகளின் கற்பனைகள் ..கனவுகள் ....

    ReplyDelete
  8. இராஜராஜேஸ்வரி said...
    சிறு வயதில் நான் கண்ட மழைக்கால ‘மரவட்டை’ என்று அழைக்கப்படும் ரெயில் பூச்சியைப் போல அது நீளமாக இருப்பதாக மனதில் தோன்றும்.

    //அந்தப்பூச்சிக்கே ரயில் பூச்சி என்று பெயரிட்டு விளையாடிய நினைவுகள் ரயிலேறி வந்து மகிழ்வித்தன,, பாராட்டுக்கள்..//

    தங்களின் மாறுபட்ட குழந்தைப்பருவ நினைவலைகள், அதிவேக ரயில் வண்டியின் ஜன்னலோரப் பயணம் போல் என்னையும் மகிழ்வித்தது.

    மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    ReplyDelete
  9. இராஜராஜேஸ்வரி said...
    குறிக்கோள் ஏதும் இல்லாமல் புறப்பட்ட என் பயணத்தில், பிறருக்கு, அதுவும் ஒரு அழகு தேவதைக்கு, உதவும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை நழுவ விடக் கூடாது என்பதில் உறுதியானேன்

    //குறிக்கோள் கிடைத்து
    குறிப்பறிந்து அழகு தேவதைக்கு செய்யும் உதவிகள் இப்படியாவது ஒரு அமுதைப்பொழியும் பொழுதுபோக்கு கிடைத்ததே அந்த ஹீரோவுக்கு !//

    பகற்கனவில் வந்த ஏதோ ஓர் தற்காலிக மகிழ்ச்சி தான் அந்த ஹீரோவுக்கு. இருப்பினும் அந்த க்ஷணம் மிகவும் இனிமையல்லவா!

    இந்தத்தங்களின் அருமையான கருத்துக்கள் கிடைத்துள்ள க்ஷணமும் எனக்கு மிகவும் இனிமையல்லவோ!!

    மனமார்ந்த அன்பான நன்றிக்ள், மேடம்.

    ReplyDelete
  10. இராஜராஜேஸ்வரி said...
    அவள் மனதில் இடம் பிடித்து அவளை வெல்டிங்கோ அல்லது வெட்டிங்கோ செய்து கொள்ள, அவளிடம் முதலில் என் காதல் நெஞ்சைத் தர வேண்டும் என்று புரிந்து கொண்டேன். என் இந்தக் காதல் முயற்சியில் எனக்கு வெற்றி கிட்டுமா என சிந்திக்கலானேன்.


    //பேருந்தில் ஓடும் நினைவலைகளின் கற்பனைகள் ..கனவுகள் ....//

    கற்பனையென்றாலும்......
    கற்சிலையென்றாலும்......
    கந்தனே உனை மறவேன் ..

    பாடல்போல தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் என்றும் மறக்க முடியாதவையே.

    என் மனமார்ந்த நன்றிகள். vgk

    ReplyDelete
  11. பாரதியார் நன்கு அனுபவித்துத்தான் பாடியுள்ளார். "கேரளத்து இளம் கன்னியருடனே". நினைக்கும்போதை இனுக்கும் பாடல் வரிகள் நினைவிற்கு வந்திருக்குமே.

    ReplyDelete
  12. பேஷ், பலே பேஷ்.
    கண்டதும் காதலோ. அன்பே அமுதான்னு அடுத்த பகுதியில பாடுவீங்களோ? சொந்த அனுபவமோ?

    எப்படியோ குட்டிச் சிறுகதை சூப்பரோ சூப்பர்

    ReplyDelete
  13. ஆஹா அழகான இளம் பெண்களைக்கண்டு விட்டால் இந்த ஆண்களின் மனது இப்படி குரங்காட்டம் ஸாரி குதியாட்டம் போடுமோ?

    ReplyDelete
  14. எத்தனை வயது ஆனால்தான் என்ன? உள்ளுக்குள் இருக்கும் குழந்தைமை சில தருணங்களில் தன்னையறியாமலேயே வெளிப்பட்டுவிடுகிறது. அதுதான் இந்தக் கதையின் நாயகனையும் தொடர்பேருந்தில் பயணிக்கத் தூண்டுகிறது. அந்தத் தொடர்பேருந்தை வர்ணிக்கும் வரிகளில் கற்பனை கட்டுக்கடங்காமல் விரியும் அழகு ஆஹா…

    ஒரு பெண்ணைப் பார்த்தமாத்திரத்திலேயே காதல் பொங்கிப் பெருகி வெல்டிங்கோ வெட்டிங்கோ செய்யுமளவுக்கு போக, பேருந்தில் ஒலித்த பாடலும் பக்கவாத்தியமாய் தாளமிசைத்து உதவுகிறது. கதாநாயகனின் இந்த காதல் முயற்சியில் வெற்றி கிட்டுமா? .

    ReplyDelete
  15. கத சொல்லிப்போர ரூட்டு நல்லா இருக்கு. ஒருவயசுப் பொண்ணு பக்கத்துல வந்தா காட்டியும் இம்பூட்டு விசயமும் கண்டுகிடுவாங்களோ

    ReplyDelete
  16. கதையைப்படித்து உடனே பின்னூட்டம் போட வந்துடறேன்.மத்தவங்கல்லாம் என்ன சொல்லியிர்க்காங்கனு பார்க்க ஆசைதான். ஆனா டைம் ரொம்ப டைட் இல்லையா. கரண்டு கட்டுனா இப்படி காத்தாட பஸ்ல ட்ராவல் பண்றது நல்லாதான் இருக்கும். போனஸா ம்ம்ம்ம் ..... அழகான பொண்ணுகளோட தரிசனம் வேர. சொல்லணுமா???

    ReplyDelete
  17. ஆஹா...காத்து வாங்க கிளம்புனா, கவிதை மல்லிகை மோகினி ரூபத்தில வருதே...வெல்டிங்/வெட்டிங் ஆச்சான்னு ஆர்வத்தை தூண்டுற மாதிரி கொண்டு வந்து...தொடரும்...கணேசா டாக்கீஸ்லதான் நான் ஏறக்குறய 40 வருஷம் முன்னால செம்மீன் படம் பாத்தேன்...அதே ரூட்ல போனா.... ஷீலாவா...ஹீரோவுக்கு அதிர்ஷ்டம் எப்படின்னு பாக்கலாம்...

    ReplyDelete
  18. //அவள் மனதில் இடம் பிடித்து அவளை வெல்டிங்கோ அல்லது வெட்டிங்கோ செய்து கொள்ள, அவளிடம் முதலில் என் காதல் நெஞ்சைத் தர வேண்டும் என்று புரிந்து கொண்டேன். என் இந்தக் காதல் முயற்சியில் எனக்கு வெற்றி கிட்டுமா என சிந்திக்கலானேன்.
    // ம்ம்ம்!

    ReplyDelete
  19. தொடர் பேரீந்தை பற்றி நினைத்ததும் மனதில் என்னல்லாம் கற்பனைகள் வருது. மரவட்டை பூச்சி ஓ..கே.. பைரவர்கள் உதாரணம் சற்றே டூஊஊஊஊஊஊமச்...
    கரண்ட்

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... January 23, 2016 at 5:42 PM

      வாங்கோ, வணக்கம்.

      //தொடர் பேருந்தை பற்றி நினைத்ததும் மனதில் என்னல்லாம் கற்பனைகள் வருது. மரவட்டை பூச்சி ஓ..கே.. பைரவர்கள் உதாரணம் சற்றே டூஊஊஊஊஊஊமச்...//

      :) சற்றே டூஊஊஊஊஊஊமச்... ஆக இருப்பினும், மரவட்டை பூச்சியைவிட, பைரவர்கள் உதாரணம் பலரையும் கவந்துள்ளதாக என்னால் உணரப்பட்டது. விமர்சனப்போட்டியில் கலந்து கொண்டவர்கள் + பரிசு பெற்றவர்கள்கூட இதைப்பற்றி மிகவும் சிலாகித்துப் பாராட்டியே சொல்லியுள்ளார்கள். :)

      Delete
  20. கரண்ட் கட் சமயம் இதுபோல பஸ்ல காத்தாட போய்வருவது நல்ல டைம்பாஸ்தான். கூடவே போனஸா இளவயது பெண்ணின் பேச்சுத் துணைவேறு.இளவயதுக்கே உண்டான சபல சலன புத்தி எண்ணும் எண்ணங்கள்..போன் நம்பர் வீட்டு அட்ரஸ் வரை கொடுக்கும் ஸ்வாதீனம் எல்லாமே இயல்பாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... January 23, 2016 at 5:46 PM

      //கரண்ட் கட் சமயம் இதுபோல பஸ்ல காத்தாட போய்வருவது நல்ல டைம்பாஸ்தான். கூடவே போனஸா இளவயது பெண்ணின் பேச்சுத் துணைவேறு. இளவயதுக்கே உண்டான சபல சலன புத்தி எண்ணும் எண்ணங்கள்.. போன் நம்பர் வீட்டு அட்ரஸ் வரை கொடுக்கும் ஸ்வாதீனம் எல்லாமே இயல்பாக இருக்கு.//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான இயல்பான, ஸ்வாதீனமான கருத்துக்களுக்கும் என் இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  21. ஒவ்வொருவர் ரசனை ஒவ்வொரு விதமாக இருக்கும் இல்லயா. எனக்கு பட்டதை நான் சொன்னேன். ப்ளீஸ்.. டோண்ட்... மிஸ்டேக்...மீ...

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... January 24, 2016 at 5:28 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஒவ்வொருவர் ரசனை ஒவ்வொரு விதமாக இருக்கும் இல்லயா.//

      நிச்சயமாக .... வாசகர் ஒவ்வொருவரின் டேஸ்ட்டும் ஒவ்வொரு விதமாக மட்டுமேதான் இருக்கும் என்பதே உண்மை.

      //எனக்கு பட்டதை நான் சொன்னேன். ப்ளீஸ்.. டோண்ட்... மிஸ்டேக்...மீ...//

      தங்கள் மனதுக்குப்பட்டதை இது போல வெளிப்படையாகச் சொன்னதுதான் எனக்கும் பிடித்துள்ளது. அதைத்தான் நானும் எப்போதும் எதிர்பார்க்கிறேன். இதில் எந்தவிதமான தவறும் இல்லை. நானும் உங்களை மிஸ்டேக் செய்துகொள்ளவும் இல்லை. தங்களின் எந்தக் கருத்துக்களையும் (Whether Positive of Negative) மிகுந்த ஆவலுடன் மட்டுமே எதிர்பார்க்கிறேன்.

      சிறுகதை விமர்சனப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருமே இந்த ஒரு பாய்ண்டை டச் பண்ணாமல் விடவில்லை. பாதிப்பேர் மிகவும் ரஸித்துப் பாராட்டியும், மீதி பாதிப்பேர் இதைத் தவிர்த்திருக்கலாம் என்றும்தான் சொல்லியிருக்கிறார்கள்.

      குறை/நிறை இரண்டையும் எதிர்பார்த்துத்தான் பின்னூட்டப்போட்டி + சிறுகதை விமர்சனப்போட்டிகள் ஆகிய இரண்டையும் நான் என் வலைத்தளத்தினில் நடத்தினேன்.

      தங்களின் தொடர் வருகைக்கும், மனதில் படும் கருத்துக்களை துணிந்து கூறிவருவதற்கும் என் அன்பான இனிய நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete