என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

உடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 6 / 8 ]

இந்தக்கதையின் முன்பகுதிகளைப் படிக்க:
http://gopu1949.blogspot.com/2011/02/4-8.html பகுதி 1 முதல் 4 வரை
http://gopu1949.blogspot.com/2011/02/5-8.html பகுதி 5

தொடர்ச்சி .............................. பகுதி 6


சற்று நேரத்தில் கண் விழித்த அந்த ஆசாமி தனக்குக் கீழே உள்ள இருக்கைகள் யாவும் காலியாக இருப்பது கண்டு, மெதுவாக அப்பர் பெர்த்திலிருந்து கீழே இறங்கி, சுதந்திரமாகச் சோம்பல் முறித்து விட்டு, சோப்பு, பேஸ்ட், ப்ரஷ், துண்டு, விபூதி சம்புடம் முதலியனவற்றை கையில் எடுத்துக்கொண்டு, தன் ஜோடி செருப்புகளில் ஒன்று மட்டும் கண்ணுக்குப் புலப்பட, மற்றொன்றைத் தேடி எடுக்க கீழே குனிந்தார். வாராணசி வரை செல்ல வேண்டிய அந்த வண்டி அலஹாபாத்திலிருந்து புறப்பட இன்னும் ஏழு நிமிடங்களே இருந்தன.

சங்கர மடத்தை அடைந்த பட்டாபியின் குடும்பத்தை வரவேற்று, தங்குவதற்கு ரூம் கொடுத்து, பாத்ரூம் டாய்லெட் வசதிகளை விளக்கி விட்டு, “எல்லோரும் ஸ்நானம் செய்து விட்டு, ஆகாரம் முடித்து விட்டு, பயணக் களைப்பு தீர சற்று ஓய்வு எடுத்துக்கோங்கோ. மத்யானமா நான் வந்து, நாளைக்கு திரிவேணி சங்கமம் போய் என்னென்ன கர்மாக்கள் எப்படி எப்படி செய்யணும், கங்கா ஜலத்தை சின்னச் சின்ன சொம்புகளில் அடைத்து சீல் செய்து கொள்வது எப்படி; பிறகு மறுநாள் காசிக்குப் போய் தம்பதி பூஜை செய்வது, புனித கங்கையின் பல்வேறு ஸ்நான கட்டங்களில், படகில் சென்று பித்ருக்களுக்கு பிண்டம் போடுவது, காசி விஸ்வநாதர் + விசாலாக்ஷியைத் தரிசனம் செய்வது, காலபைரவர் கோவிலுக்குப் போய் மந்திரம் சொல்லி காசிக்கயிறு அணிவது, அதற்கு மறுநாள் கயா போய், கயா ஸ்ரார்த்தம் செய்வது முதலியனவற்றைப் பற்றி விபரமாகச் சொல்லுகிறேன்” என்று சொல்லி விட்டு, நித்யப்படி பூஜை செய்ய தன் பூஜை ரூமுக்குள் புகுந்தார், சங்கரமடத்து சாஸ்திரிகள்.

அவர் இவ்வாறு சுருக்கமாகச் சொல்லிவிட்டு தன் நித்தியப்படி பூஜை செய்யச் சென்றதும் ,பட்டாபிக்கு ஏதோ சுருக்கென்றது. ரத்தக் கொதிப்பு உச்சநிலைக்கு எகிறியது. ரயிலின் ஓரமாக உள்ளடங்கி வைத்த அஸ்திக் கலசத்துடன் கூடிய அட்டைப்பெட்டி, ரயிலிலிருந்து இவர்களுடன் கொண்டு வரப்படவில்லை.

சென்னையை விட்டுக் கிளம்பும் போது, தூக்கி வரமுடியாமல் மிகவும் கனமாக இருந்த ஒரு பெரிய பை, இப்போது ரயிலில் வரும் போது பங்கஜத்தால், எளிதில் தூக்க செளகர்யமாக வேறு ஒரு காலிப் பையின் உதவியினால், இரண்டாக மாற்றப்பட்டதால், மொத்த சாமான்களின் எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னையை விட்டுப் புறப்படும் போது மொத்தம் 12 பேக்கிங் ஆக இருந்தவை, ரயிலில் வரும் போது பங்கஜத்தால் 13 ஆக மாற்றப்பட்ட விபரம் யாருக்குமே தெரிய நியாயமில்லை. பங்கஜத்திற்கும் அது ஞாபகம் வராமல் போய் விட்டது.

அதிகாலை தூக்கக் கலக்கத்திலும், ரயிலை விட்டு இறங்க வேண்டும் என்ற அவசரத்திலும், அந்த ஆசாமி முகத்தில் மீண்டும் விழிக்கக் கூடாது என்ற எண்ணத்திலும், அஸ்திக் கலசம் வைத்துக் கட்டப்பட்ட அட்டைப் பெட்டி மட்டும், ரயிலில் உட்காரும் இடத்திற்கு கீழே மிகவும் உள்ளடங்கி ஒரு ஓரமாக இருந்ததால், ரயிலிலேயே மறந்து வைத்து விட்டு, மீதி சாமான்களை மட்டும் எண்ணி மொத்தம் 12 அயிட்டங்கள் மிகச் சரியாக உள்ளன என்ற திருப்தியில் அலஹாபாத் ஸ்டேஷன் வந்ததும், இறங்கி டாக்ஸி பிடித்து சங்கர மடத்துக்கு வந்து விட்டிருந்தனர்.

கொஞ்சம் கூட, பொறுப்போ கவனமோ இல்லை என, பங்கஜமும் பட்டாபியும் ஒருவர் மேல் ஒருவர் பழி போட்டுக் கொண்டிருந்தனர்.

குழந்தைகள் ரவியும் கமலாவும், சங்கர மடத்து வாசலில் புல்வெளியில் படுத்திருந்த பசுக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த பசு ஒன்று தன் முதுகில் மொய்த்துக் கொண்டிருந்த ஈக்களையும், கொசுக்களையும் விரட்டி விரட்டி அடிக்க, தன் நீண்ட வாலைச் சுழட்டிச் சுழட்டி அடிப்பதையும், காதுகள் இரண்டையும் ஆட்டிக்கொண்டே இருப்பதையும் , அதன் கழுத்தில் தொங்கவிடப்பட்டுள்ள சிறிய மணி ஒன்று, அந்தப் பசுவின் அசைவுகளுக்கு ஏற்ப எழுப்பும் இனிய ஒலியையும், ஆராய்ச்சி செய்த வண்ணம் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர்.

பெரியவள் விமலா மட்டும், வந்த இடத்திலும், பட்டாபி, பங்கஜத்தின் வாய்ச் சண்டை முற்றி கைச் சண்டையாக மாறாதவாறு, அவர்களைச் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

கை நிறையப் பணம் உள்ளது. போதாக்குறைக்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்ட், ஏ.டி.எம். கார்டு எல்லாம் உள்ளது. ரயிலில் தவற விட்ட, தன் அன்புத் தந்தையின் அஸ்தியை இந்தப் பணத்தால் வாங்கிவிட முடியுமா? பார்ஸலில் வரவழைக்கத் தான் முடியுமா? பட்டாபி கண் கலங்கினார்.

இங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து, வாராணசி ஸ்டேஷன் வரை ரயிலைத் துரத்திப் பிடித்துப் பார்த்து விட்டு வரலாமா? அதற்குள் யாராவது அதை எடுத்துக் கொண்டு போய் இருப்பார்களோ? அதைப் பிரித்துப் பார்த்து ஏமாந்து போய் குப்பை என்று தூக்கிப் போட்டு ஒருவேளை உடைத்திருப்பார்களோ? பட்டாபிக்கு இவ்வாறு பலவித எண்ணங்கள் தோன்றி வந்தன.

எதற்காக காசிக்குப் புறப்பட்டு வந்தோமோ, அந்தக் காரியமே நடக்குமோ நடக்காதோ என்ற கவலையில் அடிவயிற்றைக் கலக்கிய பட்டாபிக்கு, ஸ்நானம் செய்யவோ, ஆகாரம் செய்யவோ எதுவும் தோன்றாமல் பித்துப் பிடித்தாற்போல ஆகி, தவியாய்த் தவிக்க ஆரம்பித்தார்.

எப்படியும் ஒரு டாக்ஸி பிடித்துப் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என்று தீர்மானித்து ரத்தக் கொதிப்பு மாத்திரை ஒன்றுக்கு இரண்டாகப் போட்டுக் கொண்டு , கிளம்பத் தயாராகி விட்டார்.

“பூஜை அறையிலிருக்கும் சங்கர மடத்து சாஸ்திரிகள் வெளியே வரட்டும். அவரிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போங்கோ” என்று பட்டாபியின் பதட்டத்துடன் கூடிய பயணத்தை சற்றே ஒத்தி வைத்தாள் பங்கஜம்.


தொடரும்33 கருத்துகள்:

 1. பாக்கியராஜ் பாணியில் மிக நிதானமாகவும்
  மிகத் தெளிவாகவும் கதை சொல்லிப் போகிறீர்கள்
  தொடர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. படபடப்பு என்னையும் தொற்றிக் கொண்டு விட்டது

  பதிலளிநீக்கு
 3. சல்யூட் சார்,கதையை சூப்பரா கொண்டு போறதுக்கு.
  உப்புச்சீடை ஆசாமியின் வெயிட்டேஜ் கதைல நெருங்கியாச்சு

  பதிலளிநீக்கு
 4. எதற்காகப் போகிறோமோ அதை மறக்கலாகுமோ....மறக்க முடியுமோ...மறக்க வைப்பது விதியின் செயல். உருவு கண்டெள்ளாமலிருக்க நடக்கும் பாடம்.

  பதிலளிநீக்கு
 5. கதை நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. அடுத்து என்ன ஆகுமென்று ஆவலுடன் காத்திருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 6. 7 நிமிஷம் தானே இருக்கு ரயில் கிளம்ப... அந்த மனிதர் இறங்கினாரா...விறுவிறுப்பான இடத்தில் தொடரும் போட்டுட்டீங்களே!

  பதிலளிநீக்கு
 7. ஆஹா 7 நிமிடம்தான் இருக்கு, வண்டி கிளம்ப! இவர் கிளம்பி போகறதுக்குள்ள வண்டி கிளம்பிடுமே :) அடுத்த பதிவுக்கான துடிப்பு அதிகரித்துவிட்டது….

  பதிலளிநீக்கு
 8. நல்ல தெளிவாக கதை எழுதி இருக்கீர்கள்.
  அடுத்த் தொடரை எதிர்பார்த்து அனைவரும்.
  தொடருங்கள்.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. Ramani said...// பாக்கியராஜ் பாணியில் மிக நிதானமாகவும் மிகத் தெளிவாகவும் கதை சொல்லிப் போகிறீர்கள். தொடர வாழ்த்துக்கள்.//

  பாக்கியராஜ் அவர்களின் நிதானம், தெளிவு & நகைச்சுவை கலந்த நடிப்பு எனக்கும் மிகவும் பிடிக்கும். அவருடன் என்னை நீங்கள் ஒப்பிட்டுப் பாராட்டியுள்ளது மிகவும் ஓவர் தான் என்றாலும் உங்களுக்கு என் நன்றிகள்.

  எல் கே said...//படபடப்பு என்னையும் தொற்றிக் கொண்டு விட்டது.// ஆமாம் சார், பட்டாபியின் நிலமை அது மாதிரி ஆகிவிட்டது. என்ன செய்ய?

  raji said...//சல்யூட் சார்,கதையை சூப்பரா கொண்டு போறதுக்கு.//
  தங்களின் கம்பீரமான சல்யூட், உங்களை ஒரு வீர நங்கையாக என் கண் முன் நிறுத்தி விட்டது.

  //உப்புச்சீடை ஆசாமியின் வெயிட்டேஜ் கதைல நெருங்கியாச்சு//

  ஆமாம்; அவருக்கு நான் ஏதாவது ஒரு வழியில் வெயிட்டேஜ் கொடுக்க வேண்டியதை நல்ல வேளையாக நினைவு படுத்தியுள்ளீர்கள், நன்றி.

  ஸ்ரீராம். said...// எதற்காகப் போகிறோமோ அதை மறக்கலாகுமோ....மறக்க முடியுமோ...மறக்க வைப்பது விதியின் செயல். உருவு கண்டெள்ளாமலிருக்க நடக்கும் பாடம்.//

  இந்தக்கதையால் நாம் அறியும் நீதிக்கருத்தாகிய (Moral of the Story)’உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ என்பதை வெகு அழகாகச் சொல்லி விட்டீர்கள்.
  நன்றி ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !

  கோவை2தில்லி said...// கதை நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. அடுத்து என்ன ஆகுமென்று ஆவலுடன் காத்திருக்கிறேன்!//

  தங்களின் இந்தப் பகுதிக்கான பாராட்டுக்கும், அடுத்தப் பகுதிக்கான ஆவலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  thirumathi bs sridhar said...// ம் ம் ம் ....அப்புறம் //
  அப்புறம் என்ன? அடுத்த பகுதியில் தெரிந்து விடும் !

  middleclassmadhavi said...//
  // 7 நிமிஷம் தானே இருக்கு ரயில் கிளம்ப... அந்த மனிதர் இறங்கினாரா...விறுவிறுப்பான இடத்தில் தொடரும் போட்டுட்டீங்களே! //

  விறுவிறுப்பான இடத்தில் ’தொடரும்’ போடுவது தானே தொடர் கதைக்கு அழகு ! அழகான பதிவுகள் தந்து வரும் தங்களுக்குத் தெரியாததா என்ன ?

  வெங்கட் நாகராஜ் said...
  //ஆஹா 7 நிமிடம்தான் இருக்கு, வண்டி கிளம்ப! இவர் கிளம்பி போகறதுக்குள்ள வண்டி கிளம்பிடுமே //
  ரயில் கிளம்பினாலும் தான் என்ன !
  வாராணசி வரை அந்த எக்ஸ்பிரஸ் ரயிலை, டாக்ஸியில் துரத்த முடிவுசெய்து விட்டாரே நம் பட்டாபி.

  :) அடுத்த பதிவுக்கான துடிப்பு அதிகரித்துவிட்டது….//
  நன்றி. விரைவில் வெளியிட முயற்சிக்கிறேன்.

  ஆயிஷா said... //நல்ல தெளிவாக கதை எழுதி இருக்கிறீர்கள். அடுத்த தொடரை எதிர்பார்த்து அனைவரும். தொடருங்கள். வாழ்த்துக்கள்.//

  தங்களின் பாராட்டுக்கும், அனைவர் சார்பாக தாங்கள் விடுத்திருக்கும் வேண்டுகோளுக்கும் என் நன்றிகள்.
  நிச்சயம் தொடர்வேன் - வாழ்த்துக்கும் நன்றி.


  { இதுவரை என் கூடவே தொடர்ந்து பயணம் செய்து வரும் சக பயணிகளுக்கும், அவ்வப்போது பயணத்தில் பங்கு கொள்ளும் foot-board பயணிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். }

  பதிலளிநீக்கு
 10. எதற்காக காசிக்குப் புறப்பட்டு வந்தோமோ, அந்தக் காரியமே நடக்குமோ நடக்காதோ என்ற கவலை எல்லோரையும் கவலை தொற்றிக் கொள்ளவைத்த கட்டம் !

  பதிலளிநீக்கு
 11. அந்த ஆசாமி முகத்தில் மீண்டும் விழிக்கக் கூடாது என்ற எண்ணத்திலும், அஸ்திக் கலசம் வைத்துக் கட்டப்பட்ட அட்டைப் பெட்டி மட்டும், ரயிலில் உட்காரும் இடத்திற்கு கீழே மிகவும் உள்ளடங்கி ஒரு ஓரமாக இருந்ததால், ரயிலிலேயே மறந்து வைத்து விட்டு, இறங்கி பரிதாபப்படவைத்துவிட்டது பட்டாபி குடும்பம் !

  பதிலளிநீக்கு
 12. சங்கர மடத்து வாசலில் புல்வெளியில் படுத்திருந்த பசுக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.குழந்தைகளுக்கு நல்ல காட்சிதான் !

  பதிலளிநீக்கு
 13. நாளைக்கு திரிவேணி சங்கமம் போய் என்னென்ன கர்மாக்கள் எப்படி எப்படி செய்யணும், கங்கா ஜலத்தை சின்னச் சின்ன சொம்புகளில் அடைத்து சீல் செய்து கொள்வது எப்படி; பிறகு மறுநாள் காசிக்குப் போய் தம்பதி பூஜை செய்வது, புனித கங்கையின் பல்வேறு ஸ்நான கட்டங்களில், படகில் சென்று பித்ருக்களுக்கு பிண்டம் போடுவது, காசி விஸ்வநாதர் + விசாலாக்ஷியைத் தரிசனம் செய்வது, காலபைரவர் கோவிலுக்குப் போய் மந்திரம் சொல்லி காசிக்கயிறு அணிவது, அதற்கு மறுநாள் கயா போய், கயா ஸ்ரார்த்தம் செய்வது என விரிவாக காசிக்கு அழைத்துச்சென்று கங்காதரிசனம் செய்வித்தமைக்கு நன்றி !

  பதிலளிநீக்கு
 14. இராஜராஜேஸ்வரி said...
  எதற்காக காசிக்குப் புறப்பட்டு வந்தோமோ, அந்தக் காரியமே நடக்குமோ நடக்காதோ

  //என்ற கவலை எல்லோரையும் கவலை தொற்றிக் கொள்ளவைத்த கட்டம் !//

  நீங்கள் இந்த என் பதிவுக்கு வருகை தரவில்லையே என்ற கவலை எனக்கும் தொற்றிக்கொண்டிருந்தது, நேற்று வரை.

  நல்லவேளையாக இன்று வந்து விட்டீர்கள்.

  அன்பான வருகை மிகவும் மகிழ்வளிக்கிறது.

  மிக்க நன்றி, மேடம்.

  பதிலளிநீக்கு
 15. இராஜராஜேஸ்வரி said...
  //அந்த ஆசாமி முகத்தில் மீண்டும் விழிக்கக் கூடாது என்ற எண்ணத்திலும், அஸ்திக் கலசம் வைத்துக் கட்டப்பட்ட அட்டைப் பெட்டி மட்டும், ரயிலில் உட்காரும் இடத்திற்கு கீழே மிகவும் உள்ளடங்கி ஒரு ஓரமாக இருந்ததால், ரயிலிலேயே மறந்து வைத்து விட்டு, இறங்கி பரிதாபப்படவைத்துவிட்டது பட்டாபி குடும்பம் !//

  ஆமாம் மேடம். சரியாகவே படித்து புரிந்து, அழகாகவே சொல்லிட்டீங்க!

  சும்மாவா பின்னே!

  வாசிப்பது என்பது சுவாசிப்பது!
  வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள்!!

  என்று சொல்லும் “ம ணி ரா ஜ்”
  அவர்கள் அல்லவா!!

  அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

  பதிலளிநீக்கு
 16. இராஜராஜேஸ்வரி said...
  //சங்கர மடத்து வாசலில் புல்வெளியில் படுத்திருந்த பசுக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

  குழந்தைகளுக்கு நல்ல காட்சிதான் !//

  ஓர் குழந்தையின் மழலைபோல் அழகாகச் சொன்ன கருத்துக்களுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 17. இராஜராஜேஸ்வரி said...
  நாளைக்கு திரிவேணி சங்கமம் போய் என்னென்ன கர்மாக்கள் எப்படி எப்படி செய்யணும், கங்கா ஜலத்தை சின்னச் சின்ன சொம்புகளில் அடைத்து சீல் செய்து கொள்வது எப்படி; பிறகு மறுநாள் காசிக்குப் போய் தம்பதி பூஜை செய்வது, புனித கங்கையின் பல்வேறு ஸ்நான கட்டங்களில், படகில் சென்று பித்ருக்களுக்கு பிண்டம் போடுவது, காசி விஸ்வநாதர் + விசாலாக்ஷியைத் தரிசனம் செய்வது, காலபைரவர் கோவிலுக்குப் போய் மந்திரம் சொல்லி காசிக்கயிறு அணிவது, அதற்கு மறுநாள் கயா போய், கயா ஸ்ரார்த்தம் செய்வது

  //என விரிவாக காசிக்கு அழைத்துச்சென்று கங்காதரிசனம் செய்வித்தமைக்கு நன்றி !//

  இங்கெல்லாம் என் தாய் + மனைவி + குழந்தைகள் மூவருடன் நேரில் சென்று வந்ததால், நினைவைவிட்டு அகலாத அவற்றை அப்படியே என்னால் எழுத முடிந்தது.

  [அப்போது என் சின்னப்பையனுக்கு Just ஒரு வயது தான் ஆகியிருந்தது.
  சென்று வந்த ஆண்டு: 1983.

  இன்றும் என் உறவினர்கள் சிலர் அங்கு மிகவும் வசதியுடன் வாழ்ந்து வருகின்றனர். எங்களை மீண்டும் ஒருமுறை அவ்விடம் வரச்சொல்லி மிகவும் வற்புருத்துகின்றனர். நான் தான் எங்கும் போக விரும்பாமல் முழுச் சோம்பேறியாக இருக்கிறேன்.]

  தங்களின் அன்பான வருகைக்கு நன்றி, மேடம்.

  பதிலளிநீக்கு
 18. “எல்லோரும் ஸ்நானம் செய்து விட்டு, ஆகாரம் முடித்து விட்டு, பயணக் களைப்பு தீர சற்று ஓய்வு எடுத்துக்கோங்கோ. மத்யானமா நான் வந்து, நாளைக்கு திரிவேணி சங்கமம் போய் என்னென்ன கர்மாக்கள் எப்படி எப்படி செய்யணும்,.....///காசிக்கு செல்லும்முன் இப்பதிவை வாசித்துவிட்டு சென்றால் நல்லது என நானும் நினைக்கிறேன் அவ்வளவு விரிவாக எழுதியிருக்கின்றீர்கள். என்மாமியாரும் சென்று வந்து இப்படித்தான் கூறினார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ammulu September 26, 2012 4:03 AM
   ****“எல்லோரும் ஸ்நானம் செய்து விட்டு, ஆகாரம் முடித்து விட்டு, பயணக் களைப்பு தீர சற்று ஓய்வு எடுத்துக்கோங்கோ. மத்யானமா நான் வந்து, நாளைக்கு திரிவேணி சங்கமம் போய் என்னென்ன கர்மாக்கள் எப்படி எப்படி செய்யணும்,.....****

   //காசிக்கு செல்லும்முன் இப்பதிவை வாசித்துவிட்டு சென்றால் நல்லது என நானும் நினைக்கிறேன் அவ்வளவு விரிவாக எழுதியிருக்கின்றீர்கள். என்மாமியாரும் சென்று வந்து இப்படித்தான் கூறினார்கள்.//

   என் அன்புத்தங்கை அம்முலுவின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   விரிவான வித்யாசமான கருத்துக்கள் சொன்னதற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

   பிரியமுள்ள
   VGK

   நீக்கு
 19. சமீபத்தில் திரிவேணி சங்கமம் என்ற தொடர் வெங்கட் நாகராஜ் வலைப்பூவில் வாசித்தேன்.. இப்ப இங்கே காசியின் முக்கியத்துவம் பற்றியும் பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கர்மாக்களை நியதியின்படி எப்படி எங்கு என்று செய்யவேண்டும் என்று மிக விளக்கமாக விரிவாக சாஸ்திரி மூலம் கதையில் சேர்த்தமைக்கு கதாசிரியருக்கு ஒரு ஷொட்டு...

  ஆஹா தெள்ளிய நடை.... மேலிருக்கும் மனிதர் இறங்கி தன் வேலைகளை முடித்துக்கொண்டு செருப்பை எடுக்க குனிந்தபோது அஸ்திக்கலசம் கைகளில் அகப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

  எதுக்காக கிளம்பினோமோ அதை பொறுப்பா மறந்து போனது தான் விசித்திரம்... இதுல பாசிங் த பக்ஸ் போல உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டே என்பது போல அடிதடி பட்டாபி பங்கஜத்துக்குள்.. நல்லவேளை விமலா இருந்ததால் சமாதானப்படுத்தினது சரியாப்போச்சு..

  உண்மையே இத்தனை க்ரெடிட் கார்ட் பணம் என்ன இருந்து என்ன? அப்பாவின் ஆஸ்தியை வாங்கமுடியுமா? சரியான வார்த்தை... கதையாசிரியருக்கு ஒரு சபாஷ்...

  எவர் முகத்தில் விழித்தால் பாவம் என்று நினைத்தாரோ...
  எவரை மனம் வருத்தி் கீழிறக்கவிடாமல் தன் குடும்பம் மட்டும் நன்றாய் சாப்பிட்டு இருக்கணும் என்று கஷ்டப்படுத்தினாரோ அந்த மனிதர் மூலமாக தான் தந்தையின் அஸ்தி கலசம் கொண்டுவரப்படும் என்று நினைக்கிறேன்...

  ஹுஹும் சாஸ்திரி கிட்ட சொல்லிட்டு போங்கோ அப்டின்னு பங்கஜம் சொன்னது...
  அதைக்கேட்டு பட்டாபி சாஸ்திரியிடம் சொல்ல போனபோது அங்கே அந்த மனிதர் அஸ்தி கலசத்துடன் நின்றால் எப்படி இருக்கும்??

  அருமையான எழுத்துநடை... ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க அண்ணா... நம்முடைய செயலும் சிந்தனையும் நல்லவையாக இருக்கவேண்டும். அப்படி இருக்க தவறினால் பகவான் எப்படி எல்லாம் படிப்பினை தருகிறார் என்று எதார்த்தமாக சொல்லி செல்கிறீர்கள் அண்ணா... ஹாட்ஸ் ஆஃப்..

  தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. VGK To மஞ்சு

   //உண்மையே இத்தனை க்ரெடிட் கார்ட் பணம் என்ன இருந்து என்ன? அப்பாவின் ஆஸ்தியை வாங்கமுடியுமா? சரியான வார்த்தை... கதையாசிரியருக்கு ஒரு சபாஷ்...//

   கதாசிரியரைப் பாராட்டியுள்ள ’கதம்ப உணர்வுகள்’க்கு என் மனமார்ந்த மகிழ்ச்சிகள்.

   //அருமையான எழுத்துநடை... ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க அண்ணா... நம்முடைய செயலும் சிந்தனையும் நல்லவையாக இருக்கவேண்டும். அப்படி இருக்க தவறினால் பகவான் எப்படி எல்லாம் படிப்பினை தருகிறார் என்று எதார்த்தமாக சொல்லி செல்கிறீர்கள் அண்ணா... ஹாட்ஸ் ஆஃப்..//

   ரொம்பவும் சந்தோஷம்மா .... மஞ்சு

   //தொடர்கிறேன்...// ததாஸ்து ;)))))

   நீக்கு
 20. ஆஹா புரிஞ்சுடுத்து. அந்த அஸ்தியை உப்புச் சீடை மாமாதான் கொண்டு வந்து கொடுக்கப்போறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. JAYANTHI RAMANI February 4, 2013 at 1:13 AM
   //ஆஹா புரிஞ்சுடுத்து. அந்த அஸ்தியை உப்புச் சீடை மாமாதான் கொண்டு வந்து கொடுக்கப்போறார்.//

   உங்களின் இந்தப்புரிதல் என்னைப் புல்லரிக்க வைக்குதூஊஊஊ. ;)

   நீக்கு
 21. சின்ன சின்ன காரியங்கள் எப்படி பெரிய நஷ்டங்களைக் கொண்டுவரும் என்பதற்கு நல்ல உதாரணம். சஸ்பென்ஸ் எப்படி முடிகிறதென்று பார்ப்போம். ஈஸ்வரன் எல்லாவற்றிற்கும் ஒரு வழி செய்வான்.

  பதிலளிநீக்கு
 22. ஹையா, நான் போன பகுதியிலேயே கதை இப்படித்தான தொடரும் என்று. கொஞசமும் மாறாம அப்படியே இருக்கு.

  பதிலளிநீக்கு
 23. பட்டாபியின் அந்த நேரப் படபடப்பை மிகவும் அருமையாக எழுத்தில் கொண்டுவந்துவிட்டீர்கள். வாசிக்கும்போது நமக்கும் அந்தப் படபடப்பு தொற்றிக்கொள்கிறது. எவ்வளவுதான் பணம் இருந்தாலும் அதனால் இப்போது எந்தப் பயனும் இல்லாமல் போனதை மிக அழகாக வெளிப்படுத்தும் இடம் அருமை. பெரியவரின் மீதான காழ்ப்புணர்வும் அவரிடமிருந்து தப்பிக்கும் அவசரமும், பெற்ற தந்தையின் அஸ்தியையே மறந்துபோகச் செய்திருக்கிறது. தேவைதானா இது?

  பதிலளிநீக்கு
 24. இந்த உப்பு சீட தொடருக்கு மிடிலா ஏன் இண்டர்வெல் போட்டு வேர கத போடுறீங்க. கன்டின்யூட்டி வுட்டுடுதுல்ல.

  பதிலளிநீக்கு
 25. அடடா அந்த பெரியவரப்பத்தியே நினைத்து கோபம்ம் வெறுப்பும் மனதில் நிறைந்திருந்ததால தானே முக்கியமான அஸ்தி கலச பெட்டிய மறந்து போனார்கள்.ரொம்ப பரிதாப நிலமை.

  பதிலளிநீக்கு
 26. பட்டாபியோட கவனமெல்லாம்...பிடிக்காத தோற்றம் கொண்ட மனிதரை தவிர்ப்பதில் சென்றுவிட்டது. பயணம் எதற்கு என்பதையே மறக்கடித்துவிட்டது...டென்ஷன் பீக்கிற்கு போய்க்கொண்டிருக்கிறது...பாத்திரங்களின் நடுவே நானும் ஒரு பாத்திரமாக உணர்கிறேன்...கிளைமாக்ஸ் நெருங்குதுன்னு நினைக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 27. //கை நிறையப் பணம் உள்ளது. போதாக்குறைக்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்ட், ஏ.டி.எம். கார்டு எல்லாம் உள்ளது. ரயிலில் தவற விட்ட, தன் அன்புத் தந்தையின் அஸ்தியை இந்தப் பணத்தால் வாங்கிவிட முடியுமா? பார்ஸலில் வரவழைக்கத் தான் முடியுமா? பட்டாபி கண் கலங்கினார்.//
  அருமை! கதையின் முடிவறியக் காத்திருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 28. அடடா அஸ்தி கலசம் வைத்திருந்த லக்கேஜை மறந்துட்டாங்களா??? காசியில் என்ன என்ன கர்மாவெல்லாம் பண்ண
  உம் என்ற விபரங்களையும் கதையின் ஊடாக சொல்லி சென்றது பொறுத்தம். லக்கேஜ் எண்ணிக்கை மறந்து கணவனும் மனைவியும் ஒருவர் மேல் ஒருவர் பழி போட்டுக்கொள்வது ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் காமெடிதான்.இது எதிலுமே கவனம் செலுத்தாமல் மாட்டின் மேல் ஈ உட்காருவதையும் மாடு அதை வாலாலால் விரட்டுவதையும் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள் கூட நாமும் உட்கார்ந்து விடலாமேன்னு இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... February 19, 2016 at 1:30 PM

   வாங்கோ, வணக்கம்.

   //அடடா அஸ்தி கலசம் வைத்திருந்த லக்கேஜை மறந்துட்டாங்களா???//

   அதே ..... அதே! மறந்துட்டாங்கோ.

   //காசியில் என்ன என்ன கர்மாவெல்லாம் பண்ணனும்
   என்ற விபரங்களையும் கதையின் ஊடாக சொல்லி சென்றது பொருத்தம்.//

   மிக்க மகிழ்ச்சி.

   //லக்கேஜ் எண்ணிக்கை மறந்து கணவனும் மனைவியும் ஒருவர் மேல் ஒருவர் பழி போட்டுக்கொள்வது ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் காமெடிதான்.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா, மிகச் சரியாகவே உணர்ந்து காமெடியாகச் சொல்லியுள்ளீர்கள்.

   //இது எதிலுமே கவனம் செலுத்தாமல், மாட்டின் மேல் ஈ உட்காருவதையும், மாடு அதை வாலால் விரட்டுவதையும் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள் கூட நாமும் உட்கார்ந்து விடலாமேன்னு இருக்கு.//

   ஆமாம். ‘மழலைகள் உலகம் மகத்தானது’ :)

   http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4556.html

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு