About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, February 21, 2011

'எலி' ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 1 / 8 ]

அன்று வெள்ளிக்கிழமை. ராமசுப்பு ஆபீஸுக்கு வந்து இரண்டு மணி நேரம் கூட ஆகாத நிலையில் அவருடைய போன் ஒலித்தது.

“ஹலோ, ராமசுப்பு ஹியர்” என்றார்

“அப்பா.... நீ உடனே புறப்பட்டு வீட்டுக்கு வா. நம்ம வீட்டிலும் அந்த சனியன் புகுந்து விட்டது. எனக்கும் அம்மாவுக்கும் என்ன செய்வதென்றே புரியாமல், படுக்கை அறை கட்டிலின் மீது ஏறி, ஆளுக்கு ஒரு தடிக்குச்சியால் தட்டிக் கொண்டே இருக்கிறோம்.” போனில் பேசினான் அவரின் ஒரே வாரிசு, பத்தாம் வகுப்பு படிக்கும் ராஜூ.

ராகு காலம் என்று கூட பார்க்காமல் அரை நாள் லீவும், கால் நாள் பர்மிஷனும் எழுதிக்கொடுத்து விட்டு, உடனே பஸ் பிடித்து கிளம்பி விட்டார் ராமசுப்பு. பஸ்ஸில் பயணிக்கும் போது அவர் மனதிலும் ஒரே படபடப்பு.

சிறு வயது முதற்கொண்டே பல்லி, பாச்சை, கரப்பான் பூச்சி, சுண்டெலி, பெருச்சாளி, தவளை, ஓணான் போன்ற எந்த ஜந்துவைக் கண்டாலும், அவருக்கும், அவருக்கென்று வாய்த்த மனைவிக்கும், அவர்களுக்குப் பிறந்த பையனுக்கும் ஒரு வித அருவருப்பு கலந்த பயம்.

அவர்கள் வசித்து வரும் “எலிஸபத் டவர்ஸ்” என்ற புத்தம் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பில் கொஞ்ச நாட்களாகவே முரட்டு எலி ஒன்று அடிக்கடி கண்ணில் தென்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

அந்த எலிஸபத் டவர்ஸ் குடியிருப்போர் நலச் சங்கத்தின் செயலாளரான ராமசுப்புவை, இந்த எலி விஷயமாக சென்ற வாரம் கூட்டப்பட்ட சிறப்புப் பொதுக்கூட்டத்தில், எல்லோருமாக சேர்ந்து (பல எலிகள் சேர்ந்து கூட்டமாக குடைவது போல) குடைந்ததில் மனுஷன் ஏற்கனவே நொந்து நூலாகிப் போய் இருந்தார். இந்த ஒரு சிறிய எலிப் பிரச்சனையைக் கூட தீர்க்க முடியாத செயலாளரின் செயலற்ற போக்கிற்கு, கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து, அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி, மன நிறைவு கொண்டு மகிழ்ந்தனர் அந்தக் குடியிருப்பு வாசிகள்.

புதிதாகக் குடி வந்த முதல் மாடி, முதல் வீட்டு முத்துசாமி மேல் அனைவருக்குமே ஒரு சந்தேகம். அவர் குடும்ப உபயோகப் பொருட்கள் என்ற பெயரில் பலவிதமான அடசல்களை லாரியிலிருந்து இறக்கியதைப் பலரும் முகம் சுளித்தவாறு பார்த்திருந்தனர். ஒரு வேளை இந்த சனியன் அவர் மூலம் இந்த அடுக்கு மாடி வளாகத்தினுள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் இருக்கலாம்.

வாசலில் நிற்கும் வாட்ச்மேன் இதையெல்லாம் உள்ளே நுழையும் போதே கடுமையான சோதனை செய்து கண்டு பிடித்திருக்க வேண்டும். அவன் ஒரு சரியான சோம்பேறி. பல நேரங்களில் நின்று கொண்டே தூங்குபவன்.

மீட்டிங்கில் பலர் சொன்ன பலவிதமான ஆலோசனைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், செயல் வடிவம் கொடுத்துப் போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எதுவும் எடுக்காமல், வழக்கம் போல ‘எங்கேயோ எண்ணெய் மழை பெய்கிறது; நமக்கென்ன’ என்பது போல எதுவும் அலட்டிக்கொள்ளாமல் இருந்து வந்தார், செயலாளர் ராமசுப்பு.

இப்போது அந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தாற்போல இவர்கள் வீட்டுக்குள்ளேயே நுழைந்துள்ளது.


தொடரும்

25 comments:

 1. good start.

  Eagerly waiting for the rest.

  ReplyDelete
 2. சரளமான எழுத்து நடை.... அருமை.

  ReplyDelete
 3. அட!காமெடி ஸ்டோரியா?

  ஆரம்பமே நல்லாருக்கே

  ******************
  கல்கியின் மாத்தி யோசிங்க பகுதியில் தாங்கள் எழுதியதை
  உங்கள் பதிவில்தான் படித்தேன்.ஆனா
  கமென்ட் போடலாம்னு பாக்சுக்கு போறச்சே
  உங்க 'ப்லாக்' கே காக்கா ஊஷ்னு போய்டுத்து.
  அப்பறம் ஓப்பன் ஆகல.

  அதனால அந்த கமென்ட்டையும் இங்கயே போட்டுடறேன்.
  வித விதமா மாத்தி யோசிச்சு கலக்கிட்டீங்க

  ReplyDelete
 4. 'எலி'ஸபத் டவர்ஸ்!

  ReplyDelete
 5. எலி பிரச்சனை வைத்து ஒரு தொடர்கதை. முதல் பகுதியே நன்றாக ஆரம்பித்து இருக்கிறது. எலி ஜெயித்ததா இல்லை ராமசுப்பு ஜெயித்தாரா பார்க்கலாம்:)

  ReplyDelete
 6. எலி ஸபெத் டவரில் எலியா???
  வழக்கம் போல ‘எங்கேயோ எண்ணெய் மழை பெய்கிறது; நமக்கென்ன’ என்பது போல எதுவும் அலட்டிக்கொள்ளாமல் இருந்து வந்தார், செயலாளர் ராமசுப்பு.//
  செயலாளர் சிறப்புப் பட்டம் கொடுத்து கவுரவிக்கலாமா??

  ReplyDelete
 7. அய்யய்யோ! எலியா! நான் சேர் மேலே ஏறிக் கொள்கிறேன். அடுத்து என்ன பண்ணினார்?

  ReplyDelete
 8. புதிய இந்த நகைச்சுவைத் தொடருக்கு இதுவரை வரவேற்பு கொடுத்துள்ள உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்களும், நெஞ்சார்ந்த நன்றிகளும்.

  இதன் அடுத்தடுத்த பகுதிகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் வெளியிட நினைக்கிறேன். அதன்படி அடுத்த பகுதி (பகுதி 2) நாளை வெளியிடப்படும்.

  ReplyDelete
 9. raji said...
  // அட! காமெடி ஸ்டோரியா?
  ஆரம்பமே நல்லாருக்கே !
  ******************
  கல்கியின் மாத்தி யோசிங்க பகுதியில் தாங்கள் எழுதியதை உங்கள் பதிவில்தான் படித்தேன்.ஆனா
  கமென்ட் போடலாம்னு பாக்சுக்கு போறச்சே
  உங்க 'ப்லாக்' கே காக்கா ஊஷ்னு போய்டுத்து.
  அப்பறம் ஓப்பன் ஆகல.

  அதனால அந்த கமென்ட்டையும் இங்கேயே போட்டுடறேன்.
  வித விதமா மாத்தி யோசிச்சு கலக்கிட்டீங்க //

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

  கல்கி விஷயம் ப்ளாக்கில் கொண்டு வருமாறு, திரு மோஹன்ஜி அவர்களும் திருமதி கோவை2தில்லி அவர்களும் விரும்பிக் கேட்டிருந்தனர்.

  எனவே அதைப் பற்றி என் வலைப்பூவில் பதிவு செய்தேன். பிறகு விளக்கம் கேட்டிருந்த இருவரின் Mail ID யும் என்னிடம் இருந்த்தால், அவர்களுக்கு மட்டும் மெயில் மூலம் அனுப்பி விட்டு, வலைப்பூவிலிருந்து நீக்கி விட்டேன்.

  இந்த ஒரு 10 நிமிட இடைவெளிக்குள் தாங்க்ளும் அதைப் படித்து விட்டதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே. நான் கல்கிக்கு, வளவளவென்று எழுதியதை வெளியிட்டு எல்லோருடைய பொன்னான நேரங்களையும் வீண் செய்யணுமா? என்று நினைத்துத் தான் நீக்கி விட்டேன்.

  ”காக்கா ஊஷ்னு” என்ற வரிகள் என்னை எங்கோ கொண்டு சென்று விட்டது. அப்போது என் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு 5 வயதுப் பெண் குழந்தை. உங்கள் பெயர் தான் அவளுக்கும். இரட்டைப் பின்னலுடன், பாவாடை சட்டையுடன், குறுகுறுவென்று அழகாக இருப்பாள். கையில் சில்லாக்கு வைத்துக்கொண்டு, கண்ணை மூடிகொண்டு, ஒத்தைக்காலைத் தூக்கிக் கொண்டு, (நொண்டி அடித்து) பாண்டி விளையாடுவாள்.

  அவள் தன் தம்பி தங்கைகளிடம் எதையாவது மறைத்தபடி, இதே ”காக்கா ஊஷ்னு” என்று அடிக்கடி சொல்லுவாள். அது ஞாபகம் வந்து உங்களின் இந்த வரிகளை மிகவும் ரஸித்தேன். அதிலும் பெயர் ஒற்றுமை தான் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

  ReplyDelete
 10. ஹை! ஸ்டார்ட்டிங் நல்லா Hilareousஆ சுவாரஸ்யமா இருக்கு Uncle. முழுசாப் படிக்கணும்னு ஆசையக் கிளப்பிடுச்சு. நாளைக்கு Sundayங்கறதால மொத்தப் பகுதியையும் படிச்சுட்டு, அந்தந்தப் பகுதியில நான் நினைக்கறதை சொல்றேன். எனக்கு நீங்க தந்த Encouragement + Energy Tonicக்கு என்னோட Heartful Thanks!

  ReplyDelete
 11. எனக்கு எலி பெருசாளிக்கேல்லாம் பயம் இல்லை
  ஒன்லி கரப்பான் பூச்சி :)))
  நல்லவேளை இங்கே அது இல்லை
  எனக்கு ஜி ஜி ..அவர்தான் GOD GANESH மற்றும் அவர் வாகனம் எலியார் ரொம்ப பிடிக்கும் ...:)

  ReplyDelete
  Replies
  1. angelin October 3, 2012 2:38 AM
   எனக்கு எலி பெருசாளிக்கேல்லாம் பயம் இல்லை
   ஒன்லி கரப்பான் பூச்சி :)))
   நல்லவேளை இங்கே அது இல்லை
   எனக்கு ஜி ஜி ..அவர்தான் GOD GANESH மற்றும் அவர் வாகனம் எலியார் ரொம்ப பிடிக்கும் ...:)//

   வாங்கோ நிர்மலா. வீ.ஜீ யாகிய எனக்கு ஜி.ஜி.யின் வாகனமாக இருப்பினும் எலியைப் பிடிக்காது. உங்களுக்குப் பிடிக்காத கரப்பான் பூச்சியையும் பிடிக்காது. பொதுவாக நாய் பூனை போன்ற எந்த ஒரு ஜந்துக்களையுமே பிடிக்காது. எனக்குப்பிடித்த ஒன்றே ஒன்று ... நிர்மலா போன்றவர்கள் தரும் பின்னூட்டம் மட்டுமே.

   அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், நிர்மலா.

   பிரியமுள்ள
   கோபு

   Delete
 12. ஆரம்பமே அசத்தலா கொண்டு போறீங்க அண்ணா ..அடுத்து என்னநு ஆவலோட இரண்டாம் பகுதிக்கு போறேன்.

  ReplyDelete
 13. ராதா ராணி October 4, 2012 8:40 PM
  //ஆரம்பமே அசத்தலா கொண்டு போறீங்க அண்ணா ..அடுத்து என்னன்னு ஆவலோட இரண்டாம் பகுதிக்கு போறேன்.//

  வாருங்கள் தங்கச்சி. நல்லா இருக்கீங்களா? நலம் தானே?

  ஒவ்வொரு பகுதிக்கும் நீங்களும் எலியைத் துரத்தியபடிச் செல்லுங்கோ. நானும் பின்னாடியே சற்று தாமதமாக பூனை போல வந்து பதில் அளிப்பேன்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 14. அன்புத்தங்கை ராதா ராணி அவர்களே,

  நீங்கள் நல்ல நகைச்சுவை விரும்பியாக இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

  02 10 2012 அன்று வலைச்சரத்தில் என் மற்றொரு அன்புத்தஙகை மஞ்சு என்பவர் என்னைப்பற்றி எழுதியுள்ளார்கள். அதைப்போய் படியுங்கள். அங்கு உடனே மறக்காமல் ஒரு கருத்து அளியுங்கள்.

  அதில் பல்வேறு சிரிப்புக் கதைகளின் இணைப்புக்ள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு அவை மிகவும் பயன்படக்கூடும்.

  இதோ வலைச்சரத்தின் இணைப்பு:

  http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

  அன்புடன்
  கோபு அண்ணா

  ReplyDelete
 15. பாம்பைக்கண்டால்தான் படையும் நடுங்கும் என்று சொன்னார்கள். இங்கு ஒரு எலிக்கே இப்படி நடுங்குகிறார்கள்.

  ReplyDelete
 16. எலிக்கு பயம் எல்லாம் இல்லாவிட்டாலும் ஒருவித அருவெறுப்பு. இப்ப எனக்கு எலியெல்லாம் தெய்வம். ஆமாம் அதெல்லாம் பத்தி எட்டுக்கட்டி சொல்லி தானே இந்த லயாக்குட்டிய சமாளிக்கறேன்.

  பாதி ராத்திரிக்கு எலி அடிச்ச (உண்மையில் அடிச்சது அவர் அதான் எங்க வீட்டய்யா) நாங்க எது மேலயாவது ஏறி நின்னுண்டு அதோ அங்க பாருங்க, இதோ இங்க பாருங்கன்னு சொல்லி அவர் கிட்ட திட்டும் வாங்கிண்டு அட்வான்சும் கொடுக்காம, வாடகையும் கொடுக்காம ஆட்டம் போட்ட எலியைத் துரத்தி நிம்மதிப் பெருமூச்சு (கொஞ்ச நாள் தான் அவங்க மறுபடியும் வருவாங்க இல்ல) விடுவோம்.

  ReplyDelete
 17. ப்ளாட்டுக்கும், கதைக்கும் பொருத்தமான பெயர்.

  வித்தியாசமாய் யோசிக்கிறீர்கள்.

  எலிக்குக் கொண்டாட்டம்.
  வீட்டில் இருக்கறவங்களுக்குத் திண்டாட்டம்.

  ReplyDelete
 18. பெயரிலேயே எலி இருப்பதால் இங்கு வந்ததா? எப்படியோ எங்களுக்கெல்லாம் ஒரு சிறிப்பு கதை கிடைக்கப் போகுது. ஹையா ஜாலி.

  ReplyDelete
 19. அக்காங தலப்புக்கேத்த கத புடிச்சுபோட்டிக. ஆரம்பமே சிரிப்பாணிதா

  ReplyDelete
 20. நகைச்சுவைக்கதைக்கு நாங்கரெடி நீங்க ரெடியா. எலிசபத்டவர்னு பெயர் வச்சதால எலி அத படிச்சுட்டு நமக்காக யாரோ வீடெல்லாம் கட்டி இருக்காங்கனு அங்கே குடி வந்துடுத்தோ????????

  ReplyDelete
 21. எலி-சபெத் டவர்ஸ்...தலைப்பே கதை சொல்லும்....அசத்தல் ஆரம்பம்...உள்ளே செல்வோம்..

  ReplyDelete
 22. அருமையான துவக்கம்! அடுத்து என்ன? சிரிக்க ஆவல்!

  ReplyDelete
 23. அங்க வந்து பின்னூட்டம் போடும் பிஸியில் இருந்துட்டேன்.கதையின் தலைப்பு பார்த்ததுமே எலிய வச்சு ஒரு காமெடி கலாட்டா பண்ணப்போறீங்கனு நெனச்சேன்.ஆபீஸுக்கு போன உடனே மகனின் ஃபோன் வரவும் ராகுகாலம்னுகூட பாக்காம அரைநாள் லீவும் கால் நாள் பர்மிஷனும் போட்டு விட்டு கிளம்புவதில் தொடங்குது சிரிப்பு... (எதுக்குதான் ராகுகாலம்லாம் பாப்பாங்களோ????) )))))... புதுசா குடுத்தனம் வந்தவங்க சாமான்களை லாரியிலிருந்து இறக்கும்போதே எலியும் எக்ஸ்ட்ரா லக்கேஜா உள்ளே வந்திருக்குமோனு (எப்படிலாம்) சந்தேகபடறாங்க. இதுல வாச்மேனுக்கு வேற அர்ச்சனை நடக்குது. அடுக்குமாடி வீடுகளின் செகரடரி என்றால் எதுக்கெல்ஸாம் யாருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிவருது.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... March 22, 2016 at 9:59 AM

   வாங்கோ, வணக்கம்.

   //அங்க வந்து பின்னூட்டம் போடும் பிஸியில் இருந்துட்டேன்.//

   அதனால் என்ன? பரவாயில்லை. புரிந்துகொண்டேன்.

   //கதையின் தலைப்பு பார்த்ததுமே எலிய வச்சு ஒரு காமெடி கலாட்டா பண்ணப்போறீங்கனு நெனச்சேன்.//

   அதே அதே ! :)

   //ஆபீஸுக்கு போன உடனே மகனின் ஃபோன் வரவும் ராகுகாலம்னுகூட பாக்காம அரைநாள் லீவும் கால் நாள் பர்மிஷனும் போட்டு விட்டு கிளம்புவதில் தொடங்குது சிரிப்பு... (எதுக்குதான் ராகுகாலம்லாம் பாப்பாங்களோ????) )))))...//

   :) தங்களின் தனி ரசனைக்கு மிக்க மகிழ்ச்சி.

   //புதுசா குடுத்தனம் வந்தவங்க சாமான்களை லாரியிலிருந்து இறக்கும்போதே எலியும் எக்ஸ்ட்ரா லக்கேஜா உள்ளே வந்திருக்குமோனு (எப்படிலாம்) சந்தேகபடறாங்க.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

   //இதுல வாச்மேனுக்கு வேற அர்ச்சனை நடக்குது. அடுக்குமாடி வீடுகளின் செகரடரி என்றால் எதுக்கெல்லாம் யாருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிவருது.//

   அந்த என் அனுபவத்தில் தானே, இந்தக்கதையும் இங்கு பிறந்துள்ளது. :)

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

   Delete