About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, February 14, 2011

சிரிக்கலாம் வாங்க ! [ உலக்கை அடி ]

அந்த காலத்திலெல்லாம் பெரும்பாலும் வீட்டுக்கு வீடு மாமியார், தன் மருமகளைப் பாடாய்ப் படுத்தியதைப் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம் அல்லது கேள்விப் பட்டிருக்கிறோம். ஏன் இன்றும் கூட ஆங்காங்கே இவ்வாறு நடப்பதாகச் செய்திகள் வரத்தான் செய்கின்றன.

இப்படியாகத்தானே, மாமியார் கொடுமைகளால் படாத பாடு பட்டு வந்த மருமகள் ஒருத்தி கடைசியில் பொறுமையிழந்து என்ன செய்தாள் என்று நாம் பார்ப்போமா ?

அதற்கு முன் உலக்கை என்றால் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம்:

உலக்கையை பற்றி இப்போது எதற்கு அனாவஸ்யமாக என்கிறீர்களா? அது ஒன்றும் அனாவஸ்யமல்ல, மிகவும் அவஸ்யம் தான்.

உலக்கையை பற்றித் தெரிந்து கொள்ளாதவர்களுக்கு இந்தக்கதையில் வரும் சம்பவத்தைப் படித்தால் உவகை ஏற்படாது, அதனால் தான்.

சுமார் 150 செண்டிமீட்டர் உயரமும், 5 செண்டிமீட்டர் விட்டமும் கொண்ட உருளை வடிவில் (சற்று தடிமனாக) மரத்தினால் செய்யப்பட்ட வழவழப்பான ஒரு கழி. மூங்கில் போன்ற வடிவமைப்பில் ஆன ஒரு மரத்தடி. மேல் பகுதி மற்றும் கீழ்ப் பகுதிகளில் கொஞ்சம் மட்டும் பூண் போட்டு தகரத்தினால் அடித்திருப்பார்கள் ஒரு வித ஃபினிஷிங் அழகு கொடுக்க. உரலில் நெல்லைப் போட்டு, இந்த உலக்கை என்ற தடிமனான கழியால் இடித்து இடித்து, நெல்லிலிருந்து உமியைப் பிரித்து, கைக்குத்தல் அரிசி தயாரிப்பார்கள். உரலில் உள்ள நெல்லை இந்த உலக்கையால் குத்தி இடிப்பது சற்று கஷ்டமான வேலை தான், ஏனென்றால் அது வெயிட் ஆக இருக்கும்; கைகளை வலிக்கும்; படிக்கும் நமக்கல்ல, குத்தி இடிப்பவர்களுக்கு மட்டும்.

சரி, இப்போது கதைக்குப் போவோமா ?


மாமியார் படுத்த படுக்கையாகி விட்டார்கள். ஆட்டம் பாட்டமெல்லாம் இனி நடக்காது என்று ஆகிப்போன நிலை. தனியாக ஒரு ரூமில் அவர்களிடமிருந்து அவ்வப்போது ஏதேதோ முனகல் சப்தங்கள் மட்டும் வந்த வண்ணம் உள்ளது. போனால் போகிறதென்று மூத்த மருமகள் மட்டும் ஏதோ அவ்வப்போது ரூமில் எட்டிப் பார்த்து கவனித்துக் கொண்டு வருகிறாள், உயிர் இருக்கிறதா இல்லையா என்று.

தன்னை அவள் என்ன பாடு படுத்தியிருக்கிறாள்; வாழ்க்கைப்பட்டு வந்த புதிதில் வட்டமாக தோசை வார்க்கவே கஷ்டப்பட்டு வந்த என்னைப் போய், அவர்களுக்கு நான் போட்ட தோசை சுடச்சுட இல்லாமல் இருப்பதாகச் சொல்லி, தோசைத் திருப்பியில் நல்ல சூடு ஏற்றி என் தொடைப் பகுதியில் சூட்டைக் காய்ச்சி இழுத்தவர்கள் தானே இந்த என் மாமியார். அந்தத் தழும்பு கூட இன்றும் ஞாபகார்த்தமாக அப்படியே இருக்கிறதே! அதெற்கெல்லாம் அனுபவிக்க வேண்டாமா, அவ்வளவு சீக்கரம் உயிர் போயிடுமா என்ன! நினைத்துக் கொள்கிறாள் மருமகள்,

அவளும் பொறுத்துப் பொறுத்து பார்த்தாள். இந்த தன் மாமியார்க் கிழவி சட்டென டிக்கெட் வாங்கிக்கொண்டு போகாமல், தானும் சிரமப் பட்டுக்கொண்டு, தன்னையும் சிரமப் படுத்தி வருவதாக உணர்ந்தாள், ஒருநாள்.

எமதர்மராஜா, தன் மாமியாரின் சீட்டைக் கிழிக்க மறந்துட்டானோ? அல்லது சீட்டையே எங்காவது தொலைத்து விட்டு தேடிக்கொண்டிருக்கிறானோ? என்னவோ, நாமே அவனுக்கு ஞாபகப் படுத்தி உதவனும் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, மாமியாரிடமிருந்து முக்கல் முனகலுடன் கூடிய அழைப்பு. நல்லவேளையாக வீட்டில் அவர்கள் இருவரையும் தவிர யாருமே இல்லை.

மளமளவென்று உள்ளே போனாள். சுவர் ஓரமாக மூலையில் ஒரு உலக்கை சாத்தப்பட்டு நின்று கொண்டிருந்தது. அதைக் கையில் எடுத்தாள்; மாமியார் கழுத்தில் ஓங்கி ஒரு போடு போட்டாள்.

பேச்சு மூச்சு நின்று போனது போலத் தோன்றியது, அவளுக்கு. ஊரைக் கூட்டினாள். ஒப்பாரி வைத்தாள். அனைவரும் வந்தனர். கூடி நின்று கழுத்து வீங்கிய கிழவியைக் கண்டனர். வேலைக்குச் சென்றிருந்த தன் கணவர், மற்ற இரு கொழுந்தன்கள், அவர்கள் மனைவிகள் என எல்லோருக்கும் செய்தி போய் அனைவரும கூடி விட்டனர்.

மூத்தவனுக்கு அம்மா மேல் பாசம் அதிகம். “அம்மாவுக்கு திடீரென என்ன ஆச்சு, நீ என் அம்மாவை கவனித்துக் கொள்ளும் லட்சணம் இது தானா” என மனைவியிடம் கத்தினான்.

[தன்னைச் சூட்டைக் காய்ச்சி இழுத்தபோது, வாயை மூடிக்கொண்டு ஊமையாய் இருந்த மகானுபாவர் தான் இவரும். சுத்த வழுவட்டையான ஒரு அம்மாக் கோண்டு.]

அவன் போட்ட சத்தத்தில் அந்தக் கிழவி சற்றே கண் விழித்துப் பார்த்தாள். ஆனால் கழுத்து வீங்கிப் போனதால் அவளால் பேச முடிய வில்லை. தன் மூத்த மகனிடம் ஜாடை காட்டி புரிய வைக்க முயன்றாள்.

சுவற்றின் மூலையில் சாத்தியிருந்த உலக்கை, தன் கழுத்து, மூத்த மருமகள் என மூன்றையும் தன் கை விரலால் மாற்றி மாற்றி சுட்டிக் காட்டி, என்ன நடந்தது என்பதைப் புரிய வைக்கப் பார்த்தாள் அந்தக் கிழவி.

மூத்த மகனுக்கு அவள் சொல்ல வருவது ஒன்றும் விளங்காமல் இருக்கவே, தன் மனைவியைப் பார்த்து என்ன நடந்தது என்பது போல முறைத்துப் பார்க்கிறான்.

நாம் உலக்கையால் போட்ட ஒரு போடு இந்தக் கிழவிக்குப் பத்தவில்லை போலிருக்கு, விட்டால் நம்மையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிடுவாள் போலிருக்கு என்று மனதில் நினைத்துக் கொண்டு, சுதாரிப்புடன் பதில் சொல்ல ஆரம்பிக்கிறாள்:

”என்னங்க இது ! உங்க அம்மா என்ன சொல்லவராங்கன்னு உங்களுக்குமா புரியலே! என்ன தான் அவங்க வயத்துல பொறந்தவங்களா இருந்தாலும், அவங்க என்ன சொல்ல வராங்கன்னு, உங்க யாருக்குமே இப்படிப் புரியாமல் இருக்கே! ரொம்பவும் வேடிக்கை தான் போங்க! அவங்களோடவே ஆரம்பத்திலிருந்து பிரியமாப் பழகின எனக்கு நல்லவே புரியுதுங்க; ஆனால் அதை என் வாயாலேயே சொல்லத்தான் வெட்கமா இருக்குதுங்க” என்றாள் அந்த சாமர்த்தியமான மூத்த மருமகள்.

”என்னன்னு சீக்கரம் சொல்லித் தொலைடீ. நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.” கணவன் அவளிடம் கத்த, சுற்றி நின்ற தம்பிகளும், தம்பி மனைவிகளும் என்னவோ ஏதோ என்று சஸ்பென்ஸுடன் காத்திருக்க, கழுத்தில் அடிபட்ட மாமியாரும் தன் காதைத் தீட்டி கூர்மையாக வைத்துக் கொண்டு, திரும்பத் திரும்ப மூத்த மருமகளையும், மூலையில் சாத்தப்பட்ட உலக்கையையும், தன் கழுத்தையும் கை விரலை நீட்டி காட்டிக்கொண்டே இருந்தாள்.

“மூலையில் சாத்தப்பட்டுள்ள உலக்கையும், கழுத்தில் அணிந்திருக்கும் தன் கல் அட்டிகையும், மூத்த மருமகளாகிய எனக்கே சொந்தம்ன்னு சொல்ல வராங்க என் பிரியமுள்ள மாமியார். ஆனால் பாவம் பேச்சு வராமல் அதைத்தான் ஜாடையாக் காட்டுறாங்க” என்று ஒரே போடாகப் போட்டாள் அந்த மூத்த மருமகள்.

எல்லோரும் அதை அப்படியே நம்பி விட, கிழவி மட்டும் இதைக் கேட்டதும் அண்டப்புளுகு ஆகாசப்புளுகுன்னு, இப்படிச் சொல்லுகிறாளே இந்தப் பாவி மருமகள் என்ற வேதனையில், வாய் அடைத்துப்போய் விட்ட அவளுக்கு நெஞ்சும் அடைத்துப்போய், உண்மையிலேயே உயிரை விட்டுவிட்டாள்.

”தன்னுடைய கடைசி ஆசையை நீங்களெல்லாம் நிறைவேற்றி விடுவீர்கள் என்ற நம்பிக்கையில், இப்போது உங்க அம்மா உயிர் நிம்மதியாகப் போயிடுச்சு பாருங்க” என்று சொல்லியவாறே, கிழவியின் கழுத்திலிருந்த கல் அட்டிகையைக் கழட்டி தன் கழுத்தில் போட்டுக்கொண்டாள், அந்த மூத்த மருமகள்.

மீண்டும் ஒரு வித சந்தேகத்துடன் தன் மனைவியைப் பார்த்த மூத்த பிள்ளையிடம் “நீங்க தான், செத்துப் போயுள்ள உங்க அம்மாவுக்கு மூத்த பிள்ளை; மசமசன்னு நிற்காமல், மளமளன்னு மேற்கொண்டு ஆக வேண்டிய காரியத்தைப் பாருங்கள்” என்று ஒரு அதட்டு போட்டு விட்டு, சுவற்றின் மூலைக்குச்சென்று, ”என் மாமியார் எனக்காக ஆசையாகக் கொடுத்த உலக்கை இது” என்று சொல்லி, அதைக் கட்டிப் பிடித்து கண்களில் ஒத்திக்கொண்டாள்.

-o-o-o-o-o-o-o-

பின் குறிப்பு:

இந்தக்கதை சிரிப்பதற்கு மட்டுமல்ல. சிந்தித்துப் பார்க்கவும் தான். புதிதாக நம் வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வரும் மருமகளை, மாமியார்கள் தன் சொந்தப் பெண்ணாகவே நினைத்து, அன்புடன் பழக வேண்டும். நாகரீகமாக நடத்த வேண்டும். பிரச்சனைகள் வரும் போது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும்.

அன்பு ஒன்றினால் மட்டுமே இந்த உலகில் எதையும் சாதிக்க முடியும் என்பதை இருவருமே உணர வேண்டும். நாம் பிறரிடம் அன்பு செலுத்தினால் தான், அதே அன்பை நாம் பிறரிடமிருந்து ஓரளவுக்காவது எதிர்பார்க்க முடியும்.

அதுபோலவே நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அன்பு செலுத்தி பாராட்டிக் கொள்ளாவிட்டால், இந்தக் கதையில் வரும் மாமியார் மருமகள் போல, விரோதமான எண்ணங்களே மனதில் பதிந்து கடைசியில் அது முற்றிப் போய் ஆபத்திலும், வன்முறையிலும் கொண்டு போய் விட்டு விடும்.

இன்றே இப்போதே பிறரிடம் அன்பு காட்டப் பழகுவோம், பாராட்டு சொல்லப் பழகுவோம். தூய அன்புக்கும், மனமார்ந்த பாராட்டுக்கும் மயங்காதவர் இந்த உலகில் எவரும் இல்லை என்பதை அனைவரும் உணர்வோம்.

அன்புடன் நேரம் ஒதுக்கி நான் எழுதியுள்ள இந்தக்கதையைப் படித்தவர்களை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன். என் அன்பைப் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றியுடன்,
வை.கோபாலகிருஷ்ணன்.

76 comments:

  1. உலக்கையை அந்த மருமகள் தன் மருமகளுக்குக் கொடுக்காமல்(!) இருந்தால் சரி!

    //தூய அன்புக்கும், மனமார்ந்த பாராட்டுக்கும் மயங்காதவர் இந்த உலகில் எவரும் இல்லை என்பதை அனைவரும் உணர்வோம்// அன்பு வாழ்க, வெல்க!

    ReplyDelete
  2. கதையின் நாயக‌னான 'உல‌க்கை'ப் ப‌ட‌ம் காட்டியிருக்க‌லாம்.
    மூட்டை அரிசியும், பாக்க‌ட் ம‌ச‌லாவும் உல‌வும் இந்த‌ கால‌த்தில், உர‌ல், உல‌க்கை
    எல்லாம், ப‌ழைய‌ 'கிராம'போன்க‌ளாய் காணாம‌ல் போய்விட்ட‌ன‌. ("ந‌க‌ர"போன்னு பேர் இருந்த‌ காணாம‌ல் போயிருக்காதோ?) 'உல‌க்கைக் கொழுந்து' என்ற‌ கிராமிய‌ சொல்வ‌ழ‌க்கு கேள்விப்ப‌ட்டிருக்கிறீர்க‌ளா? கொஞ்ச‌ம் எழுதுங்க‌ளேன் பிளீஸ்.

    ReplyDelete
  3. போட்டாளே ஒரு போடு!!
    செக்கொலக்கை மாதிரி நிக்கிறியேன்னு கூட திட்டுவாங்க.. ;-)

    ReplyDelete
  4. //அன்பு ஒன்றினால் மட்டுமே இந்த உலகில் எதையும் சாதிக்க முடியும்// நல்ல வரிகள்.

    உலக்கை! முன்பெல்லாம் திட்டப் பயன்பட்டது. இப்போதோ நிறைய பேர் பார்த்திருக்கக் கூட மட்டார்கள் என நினைக்கிறேன். நல்ல பகிர்வு.

    ReplyDelete
  5. உலக்கை பற்றி விவரிப்பு கொடுக்க வேண்டிய நிலையில்
    அது நம் வாழ்விலிருந்து நீங்கி விட்டது

    //புதிதாக நம் வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வரும் மருமகளை, மாமியார்கள் தன் சொந்தப் பெண்ணாகவே நினைத்து, அன்புடன் பழக வேண்டும். நாகரீகமாக நடத்த வேண்டும். பிரச்சனைகள் வரும் போது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும்//

    இப்படி எல்லாரும் நினைத்தால்
    பல வீடுகளின் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்

    ReplyDelete
  6. "ஒண்ணுக்கும் ஒதவாத உலக்கை', அப்படிங்கிற உலக்கைய வச்சு உலகுக்கு ஒரு பாடம் சொல்லிட்டிங்க.வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த ”உலக்கை அடி ”.

    ReplyDelete
  8. //புதிதாக நம் வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வரும் மருமகளை, மாமியார்கள் தன் சொந்தப் பெண்ணாகவே நினைத்து, அன்புடன் பழக வேண்டும். நாகரீகமாக நடத்த வேண்டும். பிரச்சனைகள் வரும் போது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும்//
    நல்ல கருத்து!

    ReplyDelete
  9. வீட்டில் அனைவரும் சிரித்தோம் சிந்தித்தோம் !!!!I think now a days this trend is getting diminished.

    ReplyDelete
  10. உலக்கைக்கு மெசர்மென்ட்லாம் போட்டு அறிமுகப்படுத்தி முடிவு வரை சுவாரசியமா இருந்தது,இருந்தாலும் அந்த மருமகளுக்கு இத்தனை தைரியம் கூடாது..

    ReplyDelete
  11. middleclassmadhavi said...
    // உலக்கையை அந்த மருமகள் தன் மருமகளுக்குக் கொடுக்காமல்(!) இருந்தால் சரி! //

    இந்தக் கதைக்கான தங்களின் முதல் வருகையில் இதைப் படித்ததும் குபுக் என்று சிரித்தேன். நன்றி.

    ReplyDelete
  12. vasan said...
    //கதையின் நாயக‌னான 'உல‌க்கை'ப் ப‌ட‌ம் காட்டியிருக்க‌லாம்.//

    கம்ப்யூட்டர் உதவியில்லாமலேயே, அழகாக் எந்தப் படத்தையும் free hand இல் வரையும் திறமையை எனக்கு கடவுள் கொடுத்திருக்கிறார் சார்.

    கம்ப்யூட்டரில் எப்படி அதை ப்ளாக்கில் கொண்டு வருவது என்பது தான் எனக்கு இதுவரை புரியாததொரு மர்மமாக உள்ளது. பொறுமையாக எனக்குப் புரியும்படி சொல்லித்தரக்கூடிய ஒரு குரு நாதரை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். அதற்கும் விரைவில் பகவான் தான் அருள் செய்யணும்.

    //மூட்டை அரிசியும், பாக்கெட் ம‌சாலாவும் உல‌வும் இந்த‌ கால‌த்தில், உர‌ல், உல‌க்கை எல்லாம், ப‌ழைய‌ 'கிராம' போன்க‌ளாய் காணாம‌ல் போய்விட்ட‌ன‌. ("ந‌க‌ர"போன்னு பேர் இருந்த‌ காணாம‌ல் போயிருக்காதோ?)//

    Yes, Sir, I do agree with your statement.

    // 'உல‌க்கைக் கொழுந்து' என்ற‌ கிராமிய‌ சொல்வ‌ழ‌க்கு கேள்விப்ப‌ட்டிருக்கிறீர்க‌ளா? கொஞ்ச‌ம் எழுதுங்க‌ளேன் பிளீஸ். //

    இதுவரை கேள்விப்பட்டதில்லை. வேறு யாரிடமாவது பெரியவர்களிடம் கேட்டு தெரிந்தால், எழுதக் கூடியதாகவும் இருந்தால், கட்டாயம் எழுதுகிறேன்.

    தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  13. RVS said...
    // போட்டாளே ஒரு போடு!!
    ஆமாம் சார். ஒரு போடு போட்டது போதாதோ என்று வேறு பிறகு நினைத்துக்கொள்கிறாள், பாருங்கள்.

    //செக்கொலக்கை மாதிரி நிக்கிறியேன்னு கூட திட்டுவாங்க.. ;-) //

    ஆமாம் ஆமாம் அப்படியும் திட்டுவாங்க. நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்

    தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்

    ReplyDelete
  14. வெங்கட் நாகராஜ் said...
    //அன்பு ஒன்றினால் மட்டுமே இந்த உலகில் எதையும் சாதிக்க முடியும்// நல்ல வரிகள்.

    உலக்கை! முன்பெல்லாம் திட்டப் பயன்பட்டது. இப்போதோ நிறைய பேர் பார்த்திருக்கக் கூட மட்டார்கள் என நினைக்கிறேன். நல்ல பகிர்வு //

    ஆமாம். அதனால் தான் உலக்கையைப்பற்றி ஒரு வியாக்ஞானம் முதலிலேயே செய்யும் படி ஆனது.

    தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

    ReplyDelete
  15. Dear Mr. Venkat,
    பின்னூட்டத்திற்கான என் பதிலில் கடைசி வார்த்தையான ’மேடம்’ என்பதை ’வெங்கட்’ என்று மாற்றிப் படிக்கவும். தவறுக்கு மிகவும் வருந்துகிறேன்.

    ReplyDelete
  16. raji said...
    // உலக்கை பற்றி விவரிப்பு கொடுக்க வேண்டிய நிலையில் அது நம் வாழ்விலிருந்து நீங்கி விட்டது

    சரியாகச் சொன்னீர்கள் மேடம். உலக்கை பற்றி தெரியாமல் உலகில் எத்தனையோ பேர்கள் இன்று. தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

    //புதிதாக நம் வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வரும் மருமகளை, மாமியார்கள் தன் சொந்தப் பெண்ணாகவே நினைத்து, அன்புடன் பழக வேண்டும். நாகரீகமாக நடத்த வேண்டும். பிரச்சனைகள் வரும் போது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும்//

    // இப்படி எல்லாரும் நினைத்தால்
    பல வீடுகளின் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் //

    உங்கள் விருப்பபடியே எல்லோரும் நினைக்கட்டும். எப்படியோ இதை வெளியிட்ட நமக்குப் பிரச்சனை
    ஏதும் இல்லாமல், பிரச்சனைகள் முடிவுக்கு வந்தால் சரி தான்.

    ReplyDelete
  17. Kalidoss said...
    //"ஒண்ணுக்கும் ஒதவாத உலக்கை', அப்படிங்கிற உலக்கைய வச்சு உலகுக்கு ஒரு பாடம் சொல்லிட்டிங்க.வாழ்த்துக்கள்...//

    தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி, சார். நேரம் கிடைத்தால் அடிக்கடி வருகை தாருங்கள். WELCOME.

    ReplyDelete
  18. கோவை2தில்லி said...
    //சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த ”உலக்கை அடி ”.//

    உலைக்கை அடியால், நீங்கள் எழுப்பிய சிரிப்பொலியை, நான் கற்பனை செய்து பார்த்து மகிழ்ந்தேன்.

    நீங்கள் ஒருவராவது ’சிரிக்கவும் வைத்தது’ என்று சொன்னதில், எனக்கு என் எதிர்பார்ப்பு கிடைத்து விட்டதாக, ஒரு சின்ன சந்தோஷம் ஏற்பட்டது.

    தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

    ReplyDelete
  19. கே. பி. ஜனா... said...
    //புதிதாக நம் வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வரும் மருமகளை, மாமியார்கள் தன் சொந்தப் பெண்ணாகவே நினைத்து, அன்புடன் பழக வேண்டும். நாகரீகமாக நடத்த வேண்டும். பிரச்சனைகள் வரும் போது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும்//

    நல்ல கருத்து! //

    நண்பரே,

    எழுத்துலகில் ஜொலித்து வருபவரும், எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளருமான தாங்கள், என் வலைப்பூவுக்கு இன்று முதன் முதலாக விஜயம் செய்திருப்பது, அடியேன் செய்த பாக்யம் என்று நினைக்கிறேன்.

    இனி நான் மிகவும் உஷாராக எழுத வேண்டும் என்ற எச்சரிக்கையை என் உள்மனது சொல்லுகிறது.

    தங்கள் வருகைக்கும், ”நல்ல கருத்து” என்ற ஒரே சொல்லுக்கும் அடியேனின் ஆயிரக்கணக்கான மனமார்ந்த நன்றிகள், சார்.

    ReplyDelete
  20. Girija said...
    // வீட்டில் அனைவரும் சிரித்தோம் சிந்தித்தோம் !!!!I think now a days this trend is getting diminished. //

    நீ சிரித்தது எனக்கு பெரிதல்ல. ஏனென்றால் உனக்கு எப்போதுமே 'சிரித்த முகம்' !.

    வீட்டில் உள்ள அனைவரும் சிரித்தார்கள், சிந்தித்தார்கள் என்பதைக் கேட்க மகிழ்ச்சியே.

    Yes. Trend should always change. That is what we want.
    Yours affectionately, vgk

    ReplyDelete
  21. thirumathi bs sridhar said...
    // உலக்கைக்கு மெசர்மென்ட்லாம் போட்டு அறிமுகப்படுத்தி முடிவு வரை சுவாரசியமா இருந்தது. //

    தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

    Measurement & உலைக்கையைப் பற்றிய விபரங்கள் எல்லாம் இந்தக் கால இளைஞர்கள் யாராவது படித்தால் தெரிந்து கொள்ளட்டுமே என்று தான் எழுதினேன்.

    சுவாரஸ்யமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
    அந்த ஒரு வார்த்தை தான் எனக்கும் சுவாரஸ்யமாக இருந்தது.

    // இருந்தாலும் அந்த மருமகளுக்கு இத்தனை தைரியம் கூடாது.. //

    மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள் மேடம். தற்போது உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் மாமியார்களை இந்தக் கதை ஏதாவது வகையில் பாதிக்குமோ என்று எனக்கு ஒரே விசாரமாகவே உள்ளது. அப்படியெல்லாம் எங்கும் எதுவும் நடந்து விடக்கூடாது என கடவுளை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  22. பயத்துடன் தான் படித்தேன். படித்து முடித்தவுடன் கை தன்னையறியாமல் பின்னங்கழுத்துப் பக்கம் சென்றது.
    நல்ல வேளை நான் அந்த மாமியாராக இல்லை! இப்போது உலக்கையும் இல்லை..இல்லை..இல்லையே!

    ReplyDelete
  23. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
    // பயத்துடன் தான் படித்தேன். படித்து முடித்தவுடன் கை தன்னையறியாமல் பின்னங்கழுத்துப் பக்கம் சென்றது.
    நல்ல வேளை நான் அந்த மாமியாராக இல்லை! இப்போது உலக்கையும் இல்லை.. இல்லை.. இல்லையே!//

    தங்கள் வருகைக்கும், நகைச்சுவையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்

    ReplyDelete
  24. உலக்கையைப் பற்றி நீங்கள் கொடுத்த வர்ணனை விக்கிபீடியாவைத் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது கோபு சார்.

    இந்தக் கதை என் பாட்டிக்கபுறம் உங்களிடம்தான் கேக்கிறேன். இதேபோல் மரத்தின் மேல் உட்கார்ந்துகொண்டு மாமியாரைப் பருப்புத் துவையலுக்காக மிரட்டிய மருமகள் கதை ஒன்றும் மங்கலாக நினைவில் அசைகிறது. என் அம்மாவிடம் உடனடியாகக் கேட்க முடியாத சூழல். சீக்கிரம் அதையும் சொல்கிறேன்.

    இதோ ஷாஜஹான்! கொடுக்க வேண்டியதை கொடுத்திடுங்கோ கோபு சார்.

    அது சரி அது எதற்காக ஒரு எக்ஸ்ட்ரா வ்யாக்யானம்?அதுதான் கொஞ்சம் போர்.

    ReplyDelete
  25. சுந்தர்ஜி said...

    // உலக்கையைப் பற்றி நீங்கள் கொடுத்த வர்ணனை விக்கிபீடியாவைத் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது கோபு சார். //

    ஆஹா, அப்படியா! நீங்களே இது போலச் சொல்லி பாராட்டியது, என்னை உற்சாகப்படுத்துகிறது, சார்.

    //இந்தக் கதை என் பாட்டிக்கபுறம் உங்களிடம்தான் கேக்கிறேன். இதேபோல் மரத்தின் மேல் உட்கார்ந்துகொண்டு மாமியாரைப் பருப்புத் துவையலுக்காக மிரட்டிய மருமகள் கதை ஒன்றும் மங்கலாக நினைவில் அசைகிறது. என் அம்மாவிடம் உடனடியாகக் கேட்க முடியாத சூழல். சீக்கிரம் அதையும் சொல்கிறேன்.//

    இதுவும் என் சின்ன வயதில், என் அம்மா தான் எனக்கு மிகச் சுருக்காமகச் சொன்னதாக ஞாபகம். நான் அதை ஊதி ஊதி பெரிதாக்கியுள்ளேன்.

    //இதோ ஷாஜஹான்! கொடுக்க வேண்டியதை கொடுத்திடுங்கோ கோபு சார்.//

    உங்களை என் ப்ளாக் பக்கம் திருப்ப நினைத்தேன். அதற்காக சும்மா விளையாட்டுக்காக எழுதினேன், சார்.

    //அது சரி அது எதற்காக ஒரு எக்ஸ்ட்ரா வ்யாக்யானம்?அதுதான் கொஞ்சம் போர்.//

    காதலர் தினம் அது இது என்று பிஸியாக இருக்கும் இந்தக் கால இளைஞர்/இளைஞிகளுக்கு, உலக்கை என்றால் என்ன என்று புரிய வேண்டுமே என்று தான், வியாக்ஞானம் கொடுக்க வேண்டியதாப் போச்சு, சார். நமக்கு, நீங்கள் சொல்வது போல, அது கொஞ்சம் போர் தான், சார்.

    தங்கள் வருகைக்கும், நகைச்சுவையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்.

    ReplyDelete
  26. நான் போர் என்று சொன்னது உங்களின் பின்குறிப்பைத்தான். உலக்கை பற்றிய உங்களின் குறிப்பின் நையாண்டியை நான் வெகுவாய் ரசித்தேன்.

    ReplyDelete
  27. //சுந்தர்ஜி said...
    நான் போர் என்று சொன்னது உங்களின் பின்குறிப்பைத்தான். உலக்கை பற்றிய உங்களின் குறிப்பின் நையாண்டியை நான் வெகுவாய் ரசித்தேன்.//

    சார், மீண்டும் வருகை தந்ததற்கு மிக்க நன்றி சார்.

    பின் குறிப்பு போடாவிட்டால் நெகடிவ் எண்ண்ங்க்ளுடன் பதிவு செய்திருப்பதாகச் சொல்லி,பலரும் இதை வரவேற்க மாட்டார்கள் என்று நினைத்து எழுதினேன், சார்.

    நிஜ வாழ்க்கையில், அவரவர்களின் உண்மையான எண்ணங்களும் செயலும் எப்படி இருப்பினும், எழுத்தில் அதைக் கொண்டு வரும்போதும், வாசிக்கும் போதும், கருத்துகள் கூறும் போதும் ஒரு நல்ல மெஸ்ஸேஜ் கொடுத்து சிந்திக்கச் செய்வதாக இருந்தால் தான் அதை பொதுவாக யாரும் வரவேற்பதாக எனக்குத் தோன்ற்கிறது.

    எழுத்துலகிலும், வலைப்பூவிலும் அதிக அனுபவம் உள்ள தாங்கள் தான், நான் சொல்ல வருவதைப் புரிந்து கொள்ள முடியும்.

    எழுதும் போது மிக நல்லவனாக, வல்லவனாக, சமூக சிந்தனை உள்ளவனாக நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம் அல்லவா, அது தானே உண்மை?

    நன்றியுடன்,

    ReplyDelete
  28. இல் பொருள் உவமை அணிக்கு உதாரணம் உலக்கைக்
    கொழுந்து. உலக்கை பூண் எல்லாம் போட்டிருக்குமே! நட்டால் கொழுந்து விட்டு முளைக்காதுதானே! அவன் அறிவு உலக்கைக் கொழுந்து என்றால் அறிவிலி என்று பொருள்.
    செக்கில் உலக்கை நின்ற இடத்தில் நிற்க செக்கு மாடுகளால் சுற்றப்பட்டு,எண்ணை எடுப்பர். உபயோக மற்றவர்களைக் குறிக்கப் பயன்படுத்துவர்.னு
    உலக்கைக் கதையால் அறியப்படும் நீதி முக்கியமானது.

    ReplyDelete
  29. இராஜராஜேஸ்வரி said...
    //இல் பொருள் உவமை அணிக்கு உதாரணம் உலக்கைக் கொழுந்து. உலக்கை பூண் எல்லாம் போட்டிருக்குமே! நட்டால் கொழுந்து விட்டு முளைக்காதுதானே! அவன் அறிவு உலக்கைக் கொழுந்து என்றால் அறிவிலி என்று பொருள்.
    செக்கில் உலக்கை நின்ற இடத்தில் நிற்க செக்கு மாடுகளால் சுற்றப்பட்டு,எண்ணை எடுப்பர். உபயோக மற்றவர்களைக் குறிக்கப் பயன்படுத்துவர்.உலக்கைக் கதையால் அறியப்படும் நீதி முக்கியமானது.//

    உலக்கைக் கொழுந்து பற்றிய தங்களின் விளக்கம்
    அருமை. நன்றி.

    ReplyDelete
  30. நன்றாக இருந்தது சார்! உலக்கைக்கு இவ்வளவு நீள முன்னுரை கொடுத்தால் தான் புரிந்து கொள்வார்கள் போல! அப்படியே முறம், அரைக்கும் கல், ஆட்டு கல் போன்றவைகளை உடைய கதைகளை எதிர்பார்க்கிறேன்!

    ReplyDelete
  31. bandhu said...
    நன்றாக இருந்தது சார்! உலக்கைக்கு இவ்வளவு நீள முன்னுரை கொடுத்தால் தான் புரிந்து கொள்வார்கள் போல! அப்படியே முறம், அரைக்கும் கல், ஆட்டு கல் போன்றவைகளை உடைய கதைகளை எதிர்பார்க்கிறேன்!

    தங்களின் முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிகள், சார். முறம், ஆட்டுக்கல், அம்மிக்குழவி போன்றவற்றைப் பற்றியும் நகைச்சுவையாக கொண்டுவர முடியுமா என யோசிக்கிறேன். இது பற்றிய தங்களின் ஆலோசனைக்கு நன்றி.

    ReplyDelete
  32. Mr Gopalakrishnan, I happened to stumble upon your writings. In one stretch, I have been reading all that you have penned. Every one of your stories - even the short ones - is so real, and almost all contain life's lessons. My appreciation to you. Keep going. Very best. Chandramouli

    ReplyDelete
  33. Chandramouli said...
    //Mr Gopalakrishnan, I happened to stumble upon your writings. In one stretch, I have been reading all that you have penned. Every one of your stories - even the short ones - is so real, and almost all contain life's lessons. My appreciation to you. Keep going. Very best. Chandramouli//

    Dear Sir,
    Welcome to your first visit to my blog. I am very happy to note the valuable encouraging lines of your comments.

    Thanks for your appreciation. Today I have visited your blog & made myself as a follower to your 2 blogs out of 3. With kind regards, vgk.

    ReplyDelete
  34. தற்போது உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் மாமியார்களை இந்தக் கதை ஏதாவது வகையில் பாதிக்குமோ //

    டோன்ட் வொர்ரி அண்ணா ...உலக்கை இப்பத்து பெண்களுக்கு மியூசியம் சென்றால் தான் கிடைக்கும் .
    தோசை சூடா இல்லன்ன நாக்கில் சூடு போடுவாங்களா ஆஅ ஆஅ !!!

    ReplyDelete
    Replies
    1. angelin October 12, 2012 6:47 AM
      ***தற்போது உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் மாமியார்களை இந்தக் கதை ஏதாவது வகையில் பாதிக்குமோ ***

      //டோன்ட் வொர்ரி அண்ணா ...உலக்கை இப்பத்து பெண்களுக்கு மியூசியம் சென்றால் தான் கிடைக்கும் .

      தோசை சூடா இல்லன்ன நாக்கில் சூடு போடுவாங்களா ஆஅ ஆஅ !!!//

      நாக்கில் சூடு போடும் மாமியார்களும் இருந்திருப்பார்கள்.

      இந்தக்கதையில் வரும் மாமியார் இவள் தொடையில் சூடு போட்டுவிட்டதாகத்தான் வருகிறது.

      நாக்கில் என்றால் நாலு பேருக்கு அக்கம் பக்கத்துக்குத் தெரிந்து விடுமோல்யோ!

      தொடை என்றால் பிரச்சனை இல்லையோல்யோ!!

      தொடையைக் கொண்டுபோய் எல்லோரிடமும் காட்டி அனுதாபம் பெற முயற்சிக்க முடியாதோல்யோ!!!

      அதனால் தொடையில் போட்டிருப்பாள்.

      மெயில் கிடைத்தது. பார்த்தேன். பரவாயில்லை, இது இப்படியே இருந்து விட்டுப் போகட்டுமே, நிர்மலா.

      DELETE செய்ய வேண்டாம் என நினைக்கிறேன்.

      ஒருவேளை DELETE செய்யணும் என்றால் மீண்டும் மெயில் கொடுங்கோ. செய்து விடுகிறேன்.

      அன்புடன்
      கோபு அண்ணா

      Delete
  35. டோன்ட் வொர்ரி அண்ணா ...உலக்கை இப்பத்து பெண்களுக்கு மியூசியம் சென்றால் தான் கிடைக்கும் .
    தோசை சூடா இல்லன்ன சூடு போடுவாங்களா ஆஅ ஆஅ !!!

    ReplyDelete
    Replies
    1. angelin October 12, 2012 6:51 AM
      //டோன்ட் வொர்ரி அண்ணா ...உலக்கை இப்பத்து பெண்களுக்கு மியூசியம் சென்றால் தான் கிடைக்கும்.//

      அதுவும் சரி தான், நிர்மலா. உலக்கை இல்லாவிட்டால் என்ன? ஆயுதங்களுக்காப் பஞ்சம்.

      மனைவிக்குக் கோபம் வந்தால் சமயல் அறையிலிருந்து ப்ளையிங் சாஸர் போல தட்டு, டவரா, டம்ளர், கிடுக்கி என்று எல்லாமே பறக்கும் என்பார்களே. ;)))))

      //தோசை சூடா இல்லன்ன சூடு போடுவாங்களா ஆஅ ஆஅ !!!//

      ஒரு ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இதெல்லாம் ஆங்காங்கே சகஜமாக நடைபெற்றதாகச் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன்.

      இப்போதுகூட சமையல் Gas Cylinder வெடிப்பதாக அவ்வப்போது செய்திகள் வரத்தானே செய்கிறது. காலத்துக்குத் தகுந்த மாற்றங்கள்.

      எல்லோருக்கும் மனஸு மாறவேண்டும்.
      ஒருவர் மேல் ஒருவருக்கு அன்பு மலர வேண்டும்.

      மலர்ந்த அன்புடன் தங்கள்,
      கோபு அண்ணா

      Delete
  36. அண்ணா ..வாசித்துகொண்டிருக்கும்போது ஒரு சிறு சந்தேகம்
    அந்த மருமகள் வ .வ .ஸ்ரீயின் மகளா ..இல்லை //வழுவட்டை //என்ற வ வ ஸ்ரீயின் காபிரைட் வாசகத்தை சொன்னதால் கேட்டேன் :))

    ReplyDelete
    Replies
    1. //angelin October 12, 2012 6:57 AM
      அண்ணா ..வாசித்துகொண்டிருக்கும்போது ஒரு சிறு சந்தேகம்
      அந்த மருமகள் வ .வ .ஸ்ரீயின் மகளா ..இல்லை **வழுவட்டை** என்ற வ வ ஸ்ரீயின் காபிரைட் வாசகத்தை சொன்னதால் கேட்டேன் :))//

      ஆஹா! இருக்கலாம் நிர்மலா. எவ்வளவு ஞாபகம் வைத்துள்ளீர்கள்? என் வ.வ.ஸ்ரீ. என்ற கதாபாத்திரம் அவர்களையும் அவரின் சொல்லான வழுவட்டை என்பதையும். உங்களுக்கு என் அன்பான பாராட்டுக்கள்.

      எப்படியாவது உங்களின் அன்புத்தோழி அதிரா அவர்களையும் அந்தக்கதையைப் படித்து கருத்துகள் எழுதச் சொல்லுங்கோ. அவ்ர்கள் வந்து கருத்தளித்தால் கலகலப்பாக இருப்பதாக நான் உணர்கிறேன். ஒருசில இடங்களில் [குறும்புகளில்] என்னையே தூக்கி சாப்பிட்டு விடுகிறார்கள்.

      அதைப்பற்றி நான் பிறகு மெயில் தருகிறேன், நிர்மலா.

      அன்புடன்
      கோபு அண்ணா

      Delete
  37. தன் கை விரலால் மாற்றி மாற்றி சுட்டிக் காட்டி, என்ன நடந்தது என்பதைப் புரிய வைக்கப் பார்த்தாள் அந்தக் கிழவி//

    அப்பப்பா அந்த நிலையிலும் மருமகளை காட்டிகொடுப்பதிலேயே குறியா இருக்கிறாரே பொல்லாத மாமியார் :)

    ReplyDelete
    Replies
    1. angelin October 12, 2012 6:59 AM
      ***தன் கை விரலால் மாற்றி மாற்றி சுட்டிக் காட்டி, என்ன நடந்தது என்பதைப் புரிய வைக்கப் பார்த்தாள் அந்தக் கிழவி***

      //அப்பப்பா அந்த நிலையிலும் மருமகளை காட்டிக் கொடுப்பதிலேயே குறியா இருக்கிறாரே பொல்லாத
      மாமியார் :)//

      உலக்கையால் ஒரே போடாக அல்லவா போட்டுவிட்டாள்! எப்படியாவது அதை மற்றவர்களுக்குப் புரிய வைக்கணுமே!!

      கதை நல்லா சிரிப்பாக இருந்ததா, நிர்மலா?

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      Delete


  38. மருமகள் அட்டிகையை ஆசையுடன் அணிந்து கொள்வதை பார்க்கும்போது நிச்சயம் தன மருமகளுக்கு உலக்கை பரிசாக தர மாட்டார்னே நினிக்கிறேன் .
    இது முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை அறிவுறுத்தும் கதை .மருமகளை மகளாய் நினைத்திருந்தா ..இப்படியெல்லாம் உலக்கையடி வாங்க வேண்டியிருந்திருக்காதே :((

    ..அருமையான கதை அழகா சொல்லியிருக்கீங்க ..
    எனக்கு உங்க பின் குறிப்பு மிகவும் பிடித்தது ..இந்த கதைக்கு மிக அவசியம் :))ஏன் என்றால் மாமியார்களும் சந்தேக கண்ணோடு மருமகள பார்க்கலாம்
    மருமகள்களும் take it for granted என்று அட்வான்டேஜ் (உலக்கையை )எடுக்க சாத்தியமாகலாம்
    //தூய அன்புக்கும், மனமார்ந்த பாராட்டுக்கும் மயங்காதவர் இந்த உலகில் எவரும் இல்லை என்பதை அனைவரும் உணர்வோம்.//

    வாழ்க்கையில் ..p and q ..என்று இங்கே சொல்வாங்க ப்ளீஸ் தாங்க்யூ இதன் முதலெழுத்து .இவற்றுடன் சின்ன words of appreciation ..fantastic /nice இதெல்லாம் போதும் சொர்க்கம் நம் கையில் ..
    மாமியாரே தோசை வார்த்து கொடுப்பார் மருமகளுக்கு ..நல்ல அறிவுரையுடன் முடித்திருக்கீங்க .



    ReplyDelete
    Replies
    1. Angelin said...

      //..அருமையான கதை அழகா சொல்லியிருக்கீங்க ..
      எனக்கு உங்க பின் குறிப்பு மிகவும் பிடித்தது ..இந்த கதைக்கு மிக அவசியம் :))//

      ரொம்பவும் சந்தோஷம் நிர்மலா.

      //ஏன் என்றால் மாமியார்களும் சந்தேக கண்ணோடு மருமகளைப் பார்க்கலாம்

      மருமகள்களும் take it for granted என்று அட்வான்டேஜ் (உலக்கையை)எடுக்க சாத்தியமாகலாம்//

      வெகு அழகாகப் புரிந்து கொண்டு எழுதியிருக்கீங்க, நிர்மலா.
      அதனால் தான் நான் அந்தப் பின்குறிப்பே எழுதினேன்.

      ***தூய அன்புக்கும், மனமார்ந்த பாராட்டுக்கும் மயங்காதவர் இந்த உலகில் எவரும் இல்லை என்பதை அனைவரும் உணர்வோம்.***

      //வாழ்க்கையில் ..p and q ..என்று இங்கே சொல்வாங்க ப்ளீஸ் தாங்க்யூ இதன் முதலெழுத்து. இவற்றுடன் சின்ன words of appreciation ..fantastic / nice இதெல்லாம் போதும் சொர்க்கம் நம் கையில் ..//

      THANK YOU, FANTASTIC, VERY NICE, PLEASE ACCEPT My Dear Nirmala ;)

      ஆஹா! சொர்க்கம் இப்போது என் கையிலும், நிர்மலாவால்.
      சந்தோஷமாக உள்ளது.

      //மாமியாரே தோசை வார்த்து கொடுப்பார் மருமகளுக்கு ..நல்ல அறிவுரையுடன் முடித்திருக்கீங்க.//

      எனக்கு நீங்க எப்போ தோசை வார்த்துத் தருவீங்க!
      அதிரஸமும் பாக்கியுள்ளது. இன்றைய லட்டு + வடையும் பாக்கியுள்ளது. பார்த்து சீக்கரம் கவனியுங்க. ரொம்பப் பசிக்குது எனக்கு.

      அப்போ வரட்டுமா? மேலிடத்திடமிருந்து அவசர அழைப்பு வந்தாச்சு. ப்ளையிங் சாஸருக்கு இல்லை. அன்போடு டிபன் சாப்பிட அழைப்பு தான். ;)))))

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      Delete
  39. ஆஹா.. சூப்பர்க் கதை அப்பூடின்னு சொல்லமாட்டேன்ன்:) மனதுக்குள் நினைத்தாலும்:) ஏனெண்டால் மாமியாரை அடிச்ச கதையச்சே அப்போ எப்பூடிச் சூப்பராகும்:))...

    ஆனா கோபு அண்ணன் எழுதிய விதம் சிரிச்சுச் சிரிச்சுப் படிக்க வைக்குது.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் அதிரா, வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

      உங்களை இங்கு என்னிடம் அனுப்பி வைத்த என் அன்புத் தங்கை நிர்மலாவுக்கு என் முதற்கண் நன்றிகள். [அதாவது உங்களின் அஞ்சூவுக்கு .. அதாவது ஏஞ்சலினுக்கு]

      //ஆஹா.. சூப்பர்க் கதை அப்பூடின்னு சொல்லமாட்டேன்ன்:) மனதுக்குள் நினைத்தாலும்:) ஏனெண்டால் மாமியாரை அடிச்ச கதையச்சே அப்போ எப்பூடிச் சூப்பராகும்:))...//

      மனதிற்குள் நினைத்தாலும் ... அதுபோதும் எனக்கு.

      //ஆனா கோபு அண்ணன் எழுதிய விதம் சிரிச்சுச் சிரிச்சுப் படிக்க வைக்குது.//

      தங்களின் சிரிப்பொலியைக் கற்பனை செய்து பார்த்தேன்.
      கலகலவென்று சோழிகளைக் குலுக்கிப்போட்டது போல இருக்குது. மகிழ்ச்சி.

      தொடரும்.....


      Delete
  40. //
    தன் கை விரலால் மாற்றி மாற்றி சுட்டிக் காட்டி, என்ன நடந்தது என்பதைப் புரிய வைக்கப் பார்த்தாள் அந்தக் கிழவி////

    அது.. அந்த மாமியார் என்ன சொல்லியிருப்பார் என்பது ஆருக்குமே புரியல்ல(என்னைத்தவிர:)).. அவ உலக்கையைக் காட்டி, அதைப் பத்திரமா வை , நாளைக்கு உனக்கு வரும் மருமகளுக்கு அது தேவைப்படும் எனச் சொல்ல வெளிக்கிட்டிருப்பா:)

    ReplyDelete
    Replies
    1. VGK to ATHIRA ...

      //அது.. அந்த மாமியார் என்ன சொல்லியிருப்பார் என்பது ஆருக்குமே புரியல்ல(என்னைத்தவிர:))..//

      அது தான் தங்களின் தனித்தன்மை அதிரா. அது தான் எனக்கு உங்களிடம் ரொம்பப்பிடித்ததும்.

      தொடரும்.....

      Delete
  41. ஆனா கோபு அண்ணன் அந்தக் காலம் வேறு இந்தக் காலம் வேறுதானே? மாமியார் சூடு போடுமளவுக்கு நாம் பொறுமையாக இருப்போமோ?:)) எங்கட கை என்ன புளியங்காய் ஆயப் போயிடுமோ:))).. ஹையோ இப்பூடி சவுண்டை வேளைக்கே விட்டு எல்லோரையும் அடக்கிடோணும்:)) ஹா..ஹா..ஹா..:))...

    ReplyDelete
    Replies
    1. VGK TO ATHIRA ......

      //எங்கட கை என்ன புளியங்காய் ஆயப் போயிடுமோ:))).. //

      ஆஹா! அந்தப்புளியங்காய்களை தாங்கள் ஒளித்து வைத்து சுவைத்து மகிழ்ந்ததாகச் சொன்ன இடத்தை நினைத்து, இன்னும் சிரித்துக்கொண்டே இருக்கிறேன். ;))))))))))))

      அந்த இடமே புளித்து வழிந்தாலும், ருசியோ ருசிதான் அது.
      என்னால் என்றுமே மறக்க முடியாத பதில் அது. வாழ்க!

      தொடரும்....

      Delete
  42. முடிவில் நல்ல தத்துவம் சொல்லியிருக்கிறீங்க.. உண்மைதான் அன்புதான் எல்லாம்.

    நானும் அன்புக்கு அடிமை. என்னைப் பொறுத்து அடிதடியால் சாதிக்க முடியாத விஷயங்களைக் கூட அன்பால் சாதித்து விடலாம்.

    மாமியார் நம்மைக் கொடுமைப் படுத்திட்டார் என்பதற்காக, அவவுக்கு வயதான காலத்தில் நாம் அதை திருப்பிச் செய்யக்கூடாது, இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல். அப்படி நடந்து காட்டினால் அந்த வேதனையே , அதாவது இப்படிப்பட்ட நல்ல மருமகளை நான் துன்புறுத்தினேனே எனும் கவலையே அவவைக் கொன்றுவிடும், உலக்கை தேவையில்லை:).

    நகைச்சுவைக் கதை, உங்கள் பதிவுகளும் எங்குமே நகைச்சுவையே தழும்பி நிற்கிறது... 4 அல்லது 6 அ 7 அ 8 ம் நம்பராக இருப்பீங்களோ?

    சரி மீ.. சீயா மீயா...
    அஞ்சுவுக்கும் சீயா மீயா...

    ReplyDelete
    Replies
    1. VGK to ATHIRA .....

      //முடிவில் நல்ல தத்துவம் சொல்லியிருக்கிறீங்க.. உண்மைதான் அன்புதான் எல்லாம்.

      நானும் அன்புக்கு அடிமை. என்னைப் பொறுத்து அடிதடியால் சாதிக்க முடியாத விஷயங்களைக் கூட அன்பால் சாதித்து விடலாம்.//

      அன்புக்கும் அன்பான வருகைக்கும், அன்பைப்பற்றி அழகாகச் சொன்னதற்கும் என் அன்பு நன்றிகள், அதிராவுக்கு.

      தொடரும்.....

      Delete
    2. VGK TO ATHIRA ....

      //நகைச்சுவைக் கதை, உங்கள் பதிவுகளும் எங்குமே நகைச்சுவையே தழும்பி நிற்கிறது... 4 அல்லது 6 அ 7 அ 8 ம் நம்பராக இருப்பீங்களோ?

      சரி மீ.. சீயா மீயா...
      அஞ்சுவுக்கும் சீயா மீயா...//

      மிக்க நன்றி அதிரா? அது என்ன நம்பர்கள்? சற்றே விளக்கம் தேவை. என் ஆங்கில பிறந்த நாள் : 8 [எட்டு]

      சீயா மீயா அஞ்சு எல்லோருக்கும் நன்றியோ நன்றிகள்.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      Delete
  43. ஓ மாமியார்க் கொடுமைன்னு சொல்றது இதுவும்தானா? தோசை சூடா இல்லைன்னு அதுக்கு பதிலா மருமக தொடைல சூடுவைச்ச மாமியார்:’0.
    இது கொடுமை இல்லை கொலை ஆச்சே!

    ஆனா அதைவிட இங்கை என்ன கொடுமைன்னா அதுக்கு பழிவாங்குறேன்னு படுக்கைல நோயோடு கிடந்த மாமியாரை உலக்கையாலே போட்டுத்தள்ள நினைச்ச, சேச்சே நினைக்கல போட்டே தள்ளிய மருமக:(:(:(

    இப்பிடியே பழிக்குப்பழி, ரத்தத்துக்கு ரத்தம்னு போனா எங்கை குடும்பங்கள் நல்லா வாறது?
    எங்கையிருந்து ஒருவர்மேல் மற்றவருக்கு அன்பும், பாராட்டும் தன்மையும் வாறது?

    மாமியார் வந்தவ மருமகள் இல்லை மகள்தான் என்றும் மருமகள் இவர் என் மாமி இல்லை என் அம்மாங்கிற நினைப்பும் செயலும் இருந்தா மட்டுமே அன்புக்கு பஞ்சமே இருக்காது அந்தக் குடும்பத்தில்.

    ஐயா! நீங்கள் எழுதும் பாணி, சிரிக்கவைத்தாலும் சிந்திக்கவும் தூண்டுகிறது
    கசப்பு மருந்தினை தேனுடன் கொடுப்பதுபோல மிக அருமையாக நாசூக்காக கருத்தினை பதிந்துள்ளீர்கள்
    நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. அன்பின் இளமதி,

      வாங்கோ, வாங்கோ, வணக்கம்.
      நல்லா இருக்கீங்களா? செள்க்யம் தானே!

      தங்களின் இந்தப்பின்னூட்டத்திற்கு நான் தாமதமாகவே பதில் தர நேர்ந்துள்ளது. பின்னூட்டத்தை PUBLISH கொடுக்கவே மறந்து போய் கவனிக்காமல் விட்டுவிட்டேன். அதற்கு இங்கு ஓயாமல் நீடித்து வரும் மின்தடை மட்டுமே காரணமல்ல.

      தங்களின் சினேகிதிகளான அஞ்சு + அதிரா என்ற மிகப்பெரிய இரு மேகக்கூட்ட்ங்கள் சூழ்ந்துகொண்டு பலத்த மழையெனப் பொழிந்துள்ள பல்வேறு பின்னூட்டங்களின் இடையே, இந்த இளமதியாகிய ’யங் மூன்’ மறைந்து போனது என்பதே உண்மை.

      நல்லவேளையாக மெயில் மூலம் ஒரு சின்ன ஹிண்ட் கொடுத்திருந்தீர்கள். இப்போது தேடிக்கண்டு பிடித்து விட்டேன் அந்த யங் மூனின் பின்னூட்டத்தினை. இதே போல நான் ஏதும் பப்ளிஷ் கொடுக்கா விட்டாலும், பதில் அளிக்காவிட்டாலும், தாங்கள் எனக்கு உரிமையுடன் அதைத் தெரிவிக்க வேண்டும். அவ்வப்போது ஞாபகப்படுத்த வேண்டும். ஏராளமானவர்களின் தொடர்புகளால் சமயத்தில் இதுபோன்ற முக்கியமானவர்களின் கருத்துக்கள் SPAM இல் கூட போய் மாட்டிக்கொள்வதும் உண்டு.

      நான் பப்ளிஷ் கொடுக்கவில்லை, பதிலும் கொடுக்கவில்லை என்று கோபத்தில் சூடு போடுவீர்களோ, உலக்கையைக் கையில் எடுப்பீர்களோ என எனக்கு ஒரே கவலையாகப் போய் விட்டது.

      இதுவிஷயத்தில் மாமியார் மருமகள் போல நமக்குள் கோபம் எதுவும் வேண்டாம்மா.....

      அன்பினால் மட்டும் ஒருவரையொருவர் ஆட்கொள்வோம்.

      தொடரும்....

      Delete
    2. VGK To இளமதி....

      //ஐயா! நீங்கள் எழுதும் பாணி, சிரிக்கவைத்தாலும் சிந்திக்கவும் தூண்டுகிறது.//

      அப்படியாம்மா.... மிகவும் சந்தோஷம்.
      அப்படீன்னா சிரித்தபின் சிந்தித்தும் உள்ளீர்கள்....
      இந்தக்கருத்தினால் என்னையும் தூண்டிவிட்டுள்ளீர்கள். ;)

      //கசப்பு மருந்தினை தேனுடன் கொடுப்பதுபோல மிக அருமையாக நாசூக்காக கருத்தினை பதிந்துள்ளீர்கள்.//

      அடடா, மிக நல்ல உதாரணம் தான். நாசூக்காக தாங்கள் சொல்லியுள்ளது என் நாக்கெல்லாம் தேனாக இனிக்கிறது.

      //நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்!!!//

      அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ... இளமதி.

      பிரியமுள்ள
      VGK

      Delete
  44. புதிதாக நம் வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வரும் மருமகளை, மாமியார்கள் தன் சொந்தப் பெண்ணாகவே நினைத்து, அன்புடன் பழக வேண்டும். நாகரீகமாக நடத்த வேண்டும்.//- நிஜம்தான் ஆனால் மாமியார்கள் தெம்பு உள்ளவரை அதிகாரம் செலுத்தி கொண்டேதான் இருப்பார்கள். பிறகு மாறினால் கூட மனதில் அந்த வெறுப்பு வந்து வந்து போகும்.

    ReplyDelete
    Replies
    1. உஷா அன்பரசு November 22, 2012 9:43 AM
      *****புதிதாக நம் வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வரும் மருமகளை, மாமியார்கள் தன் சொந்தப் பெண்ணாகவே நினைத்து, அன்புடன் பழக வேண்டும். நாகரீகமாக நடத்த வேண்டும்.*****

      //நிஜம்தான் ஆனால் மாமியார்கள் தெம்பு உள்ளவரை அதிகாரம் செலுத்தி கொண்டேதான் இருப்பார்கள். பிறகு மாறினால் கூட மனதில் அந்த வெறுப்பு வந்து வந்து போகும்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம். vgk

      Delete
  45. இந்த கதை கேள்வி பட்டாலும் கேட்க்கும் போது வந்த சிரிப்பை விட உங்கள் எழுத்தில் உள்ள நையாண்டி ரசிக்க வைத்து சிரிப்பை வரவழைத்தது அண்ணா.:)எத்தனை வருடம் போனாலும் இந்த மாமியார்,மருமகள் கதை ஓயாது.

    ReplyDelete
    Replies
    1. ராதா ராணி November 23, 2012 10:10 AM
      //இந்த கதை கேள்வி பட்டாலும் கேட்க்கும் போது வந்த சிரிப்பை விட உங்கள் எழுத்தில் உள்ள நையாண்டி ரசிக்க வைத்து சிரிப்பை வரவழைத்தது அண்ணா.:)//

      ரொம்பவும் சந்தோஷம்.

      //எத்தனை வருடம் போனாலும் இந்த மாமியார்,மருமகள் கதை ஓயாது.//

      ஆமாம் ஆமாம் .. சரியாகச் சொன்னீர்கள்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பாராட்டு வார்த்தைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சகோதரி.

      அன்புடன்
      VGK

      Delete
  46. சாது மிரண்டால் கதையை வாசித்து விட்டு உங்க லின்க் பார்த்து வந்தால், அடப் பாவமே!கஷ்டம் தான்.இங்கே இப்படியா! நல்ல கருத்துள்ள கதை.சார்.சிரிக்கவா அழவான்னு ஆகிப் போச்சு.

    ReplyDelete
  47. Asiya Omar November 28, 2012 8:06 PM
    //சாது மிரண்டால் கதையை வாசித்து விட்டு உங்க லின்க் பார்த்து வந்தால், அடப் பாவமே!கஷ்டம் தான்.இங்கே இப்படியா! நல்ல கருத்துள்ள கதை.சார்.//

    வாங்கோ மேடம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    //சிரிக்கவா அழவான்னு ஆகிப் போச்சு.//

    கடைசியிலே நீங்க சிரிச்சீங்களா, அழுதீங்களான்னே
    எங்களுக்குச் சொல்லாமலேயே போயிட்டீங்க! ;)

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  48. இந்தக் கதையும் அம்மா சொல்லுவா.

    இன்னும் ஒரு கதை “மாமியாரே! மாமியாரே! மை இட்டுக்கறேளா”ன்னு மருமகள் கேப்பான்னு வரும்.

    அம்மா சீக்கிரம் சென்னைக்கே வந்துடுவா. தம்பி மனைவிக்கு இங்க TRANSFER ஆயிடுத்து. வீடு பாத்துண்டிருக்கா. வந்ததும் அம்மா கிட்ட கேட்டு கோபு சாருக்கு போட்டியா இந்த மாதிரி கதைகளை போடணும்.

    படிச்சதும் அம்மாவோட பேச்சை மீண்டும் ஒரு தடவை கேட்டா மாதிரி இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. JAYANTHI RAMANI January 7, 2013 1:25 AM

      வாங்கோ, திருமதி ஜெயந்தி ரமணி மேடம்.

      //இந்தக் கதையும் அம்மா சொல்லுவா.//

      கேட்கவே சந்தோஷமாக உள்ளது.

      //இன்னும் ஒரு கதை “மாமியாரே! மாமியாரே! மை இட்டுக்கறேளா”ன்னு மருமகள் கேப்பான்னு வரும்.

      அம்மா சீக்கிரம் சென்னைக்கே வந்துடுவா. தம்பி மனைவிக்கு இங்க TRANSFER ஆயிடுத்து. வீடு பாத்துண்டிருக்கா. வந்ததும் அம்மா கிட்ட கேட்டு கோபு சாருக்கு போட்டியா இந்த மாதிரி கதைகளை போடணும்.//

      ஆஹா, கோபு சாருக்கு போட்டியா என்ன, என்னையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு, அழகா நிறைய நகைச்சுவையா எழுதி அசத்துங்கோ. நான் விரும்பி வந்துப் படிக்கிறேன். மறக்காமல் எனக்கு மெயில் மூலம் லிங்க் மட்டும் அனுப்பிடுங்கோ.

      மேலும் நான் என் படைப்புகளை பதிவிட பலநாட்கள் ஆகும் எனத் தோன்றுகிறது. அதுவரை உங்கள் பதிவுகள் பக்கம் தான் என் வாசம் பெரும்பாலும் இருக்கக்கூடும்.

      உங்கள் காட்டில் தான் பெரும்பாலும் என் மழை பொழிய உள்ளது.

      //படிச்சதும் அம்மாவோட பேச்சை மீண்டும் ஒரு தடவை கேட்டா மாதிரி இருக்கு.//

      ஹைய்யோ ! புல்லரிக்குது எனக்கு !!

      பிரியமுள்ள கோபு

      Delete
  49. என்னைப் பொறுத்தவரை எல்லா பெண்களும் நல்ல பெண்கள் தான்.

    மாமியார், மருமகள் உறவு சிறக்க:

    1. முதலில் வீட்டுக்கு வந்த மருமகளை நல்ல முறையில் நடத்த வேண்டும். அப்ப தானா அவங்க ஒழுங்கா இருப்பாங்க (EXCEPTIONS எல்லாவற்றிலும் உண்டு).

    2. ஒரு கணவன் மனைவியிடம் ‘நீயாச்சு, உங்க மாமியாராச்சு, உங்களுக்குள்ள எப்படியோ தீர்த்துக் கொள்ளுங்கள்’ என்றும் அம்மாவிடம் “நீயாச்சு, உன் மருமகளாச்சு” என்றும் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டு இவர்கள் சண்டையில் இடையே நுழையாமல் இருந்தால் கண்டிப்பாக மாமியார், மருமகள்கள் சண்டை குறையும். உறவு சுமுகமாகும்.

    எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

    அன்புடன்
    ஜெயந்தி ரமணி

    ReplyDelete
    Replies
    1. JAYANTHI RAMANIJanuary 7, 2013 1:30 AM

      //என்னைப் பொறுத்தவரை எல்லா பெண்களும் நல்ல பெண்கள் தான்.//

      மிகவும் சரியே. என்னைப் பொறுத்தவரையும் அதே அதே!
      சபாபதே !!

      //மாமியார், மருமகள் உறவு சிறக்க:

      1. முதலில் வீட்டுக்கு வந்த மருமகளை நல்ல முறையில் நடத்த வேண்டும். அப்ப தானா அவங்க ஒழுங்கா இருப்பாங்க (EXCEPTIONS எல்லாவற்றிலும் உண்டு).//

      மிகவும் சரியாகவே சொல்லி விட்டீர்கள்..... EXCEPTIONS உள்பட ;))))).

      2. ஒரு கணவன் மனைவியிடம் ‘நீயாச்சு, உங்க மாமியாராச்சு, உங்களுக்குள்ள எப்படியோ தீர்த்துக் கொள்ளுங்கள்’ என்றும் அம்மாவிடம் “நீயாச்சு, உன் மருமகளாச்சு” என்றும் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டு இவர்கள் சண்டையில் இடையே நுழையாமல் இருந்தால் கண்டிப்பாக மாமியார், மருமகள்கள் சண்டை குறையும். உறவு சுமுகமாகும்.

      ஆஹா, இது பொதுவானதொரு நல்ல டெக்னிக் தான்.

      //எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.//

      இதில் தவறேதும் இல்லை. பகல் பூராவும் அம்மாவிடம் மட்டும் அன்பாக இருப்பது போலவும் மனைவி பக்கமே திரும்பாதது போலவும் நடித்தாலே போதும். எல்லாமே வெற்றியாக Smooth ஆகப் போய்க்கொண்டிருக்கும்.

      இரவில் டோட்டல் சரண்டராகும் போது, ”ஏதோ என் அம்மா ..... வயசானவங்க, வாழ்க்கையிலே ரொம்ப கஷ்டப்பட்டவங்க, நீ வந்தபிறகுதான் தான் நிம்மதியாக இருப்பதாகச் சொன்னாங்க. உனக்கு தன் அனுபவத்தில் எல்லாமே நல்லாவே கற்றுத்தருவாங்க, ஏதாவது கொஞ்சம் அவங்க கோபப்பட்டால், நீ கொஞ்சம் அனுசரித்துப் போய்க்கோ ... ப்ளீஸ் டியர் ... டார்லிங்” என்று ஒரு வார்த்தை அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்தால் ... போதும்.

      இது இன்னொரு விதமான டெக்னிக். OK தானே. உங்களுக்குத் தெரியாததா, நான் புதுசா சொல்லிடப்போறேன்.

      //அன்புடன் ஜெயந்தி ரமணி//

      பிரியமுள்ள கோபு

      Delete
  50. உங்கள் உலக்கை கதை நன்னா இருக்கு...உலகம் எவ்வளவு மாறினாலும் மாறாதது மாமியார்-மருமகள் சண்டை மட்டும்தான் என்பது போல் எல்லா சீரியல்களும் இதே வி ஷயத்தைதான் விதவிதமாய் மெருகேற்றிக் காட்டுகின்றன.நானும் ஒரு மாமியார்தான்...என் அனுபவத்தை கீழ்க்கண்ட இரண்டு பதிவுகளைப் படித்து பின்னூட்டமிட வேண்டுகிறேன்
    .
    http://radhabaloo.blogspot.de/2013/08/blog-post.html

    http://radhabaloo.blogspot.de/2013/07/blog-post_24.html

    ReplyDelete
    Replies
    1. Radha Balu March 4, 2014 at 1:59 PM

      வாங்கோ, வணக்கம்.

      //உங்கள் உலக்கை கதை நன்னா இருக்கு...//

      சந்தோஷம். மிக்க நன்றி.

      //உலகம் எவ்வளவு மாறினாலும் மாறாதது மாமியார்-மருமகள் சண்டை மட்டும்தான் என்பது போல் எல்லா சீரியல்களும் இதே விஷயத்தைதான் விதவிதமாய் மெருகேற்றிக் காட்டுகின்றன.//

      ஆம். நீங்கள் சொல்வது சரியே. அதனால்தான், நான் இப்போதெல்லாம் டி.வி. சீரியல்கள் பார்ப்பதே இல்லை.

      என் மேலிடம் [அதுவும் தன் மருமகளுடன் சேர்ந்தே] அதில் மூழ்கியிருக்கும்போது மட்டுமே, என்னால் பதிவுகள் பக்கம் வரமுடிகிறது. அதுவரையில் நான் டி.வி. நிகழ்ச்சிகளுக்கு நன்றிசொல்லக் கடமைப்பட்டுள்ளேன். ;)

      //நானும் ஒரு மாமியார்தான்... என் அனுபவத்தை கீழ்க்கண்ட இரண்டு பதிவுகளைப் படித்து பின்னூட்டமிட வேண்டுகிறேன்.

      http://radhabaloo.blogspot.de/2013/08/blog-post.html
      http://radhabaloo.blogspot.de/2013/07/blog-post_24.html//

      மாமியாருக்கு ஒரு பேச்சு ...... அதை மதித்து நடந்தால் .... மரியாதை என்பதால் ...... நானும் மாமியாராக தங்களை மதித்து, தங்கள் பதிவுகளைப் பொறுமையாகப் படித்து, பின்னூட்டமிடுவேன் [ஆனால் சற்றே தாமதமாகும்]. ;)))))

      அன்புடன் கோபு [VGK]

      Delete
  51. நகைச்சுவையோடு வாழ்வியல் யதார்த்தம் கலந்து கொடுக்கப்பட்ட அழகான கதை. இதைப்போல உலக்கை கதை ஒன்று வீட்டுக்கு விருந்துண்ண வரும் போலிச்சாமியாருக்கு அந்த வீட்டுப் பெண் உலக்கையைக் கொடுக்க தூக்கிக்கொண்டு விரட்டும் கதை நினைவுக்கு வருகிறது. உலக்கை பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ளத் தேவையான அழகான விளக்கத்துடன் துவங்கி கதையின் முடிவில் எல்லாத் தலைமுறையினருக்கும் தேவையான சிந்தனையை வழங்கி முடித்திருப்பது சிறப்பு. பாராட்டுகள் கோபு சார்.

    ReplyDelete
  52. உலக்கை எதெதுக்கெல்லாம் பயன்படுகிறது பாருங்கள். ஆனாலும் மூத்த மருமகள் புத்திசாலிதான். தன் காரியத்தை எப்படி சாதித்துக்கொள்கிறாள் பாருங்கள்.

    ReplyDelete
  53. உலக்கை பற்றிய குறிப்பு அவசியமானதுதான். நிறய பேருக்கு தெரிந்திருக்க வாய்பில்லை. யார் வூட்லயுமே யூஸ் பண்றதிலலயே? இந்த தலைமுறை மாமியார் மருமகள் எல்லாரும் ஓரளவு நல்ல விதமாகவே பழகி வராங்க. இந்த டி.வி. சீருயல் காரங்கதான ஓவரூட பண்ராங்க. நகைச்சுவைக்காக சொல்லி இருந்தாலும் கூட கதை சுமார் தான் இப்படி சொன்னது தவராக இருநுதால் வெரி ஸாரி.

    ReplyDelete
  54. உலக்கன்னா என்னானு நீங்க சொல்லிபோட்ட பொரவாலதான் வெளங்கிட்டேன். சிரிப்பாணி கத தா

    ReplyDelete
  55. கதை தான் என்றாலும் இப்ப உள்ளவங்க ரொம்பவே அண்டர்ஸ்டாண்டிங்காதான் நடந்துக்கிறாங்க. நல்ல சினேகிதிகள் போல பல விஷயங்களும் பேசிக்கறாங்க. பழைய காஷம் போலலாம் இப்ப இஷ்ஷதான்.

    ReplyDelete
  56. மேலோட்டமாக சிரிப்புக்கதையாக தொன்றும் இது உண்மையில் சீரியஸ் விஷயத்தை சீரிய முறையில் எடுத்துச் சொல்கிறது...உலக்கையால அடிச்ச மறுமகள்...தன் மருமகள்கிட்ட அடிவாங்காதபடி நடந்துகிட்டாக்க சரிதான்...

    ReplyDelete
  57. “மூலையில் சாத்தப்பட்டுள்ள உலக்கையும், கழுத்தில் அணிந்திருக்கும் தன் கல் அட்டிகையும், மூத்த மருமகளாகிய எனக்கே சொந்தம்ன்னு சொல்ல வராங்க என் பிரியமுள்ள மாமியார். ஆனால் பாவம் பேச்சு வராமல் அதைத்தான் ஜாடையாக் காட்டுறாங்க” என்று ஒரே போடாகப் போட்டாள் அந்த மூத்த மருமகள்.//
    என்ன ஒரு வில்லத்தனம்! சிந்திக்க வைத்த கதை!

    ReplyDelete
  58. உங்க கதைகள் எல்லாமே வரிசையா படித்து வருகிறேன். நகைச்சுவை ரொம்பநல்லா வருது. சோக கதைகளிலும் ஓரளவு நகைச்சுவையை நுழைத்து விடுவீர்கள்.பொருத்தமாகவும் அமைந்துவிடும். போனகதையில்(நன்றே செய்) நகைச்சுவை மிஸ்ஸிங். அந்த கதையில் எந்த இடத்திலும் நகைச்சுவையை இணைத்திருக்க முடியாதுதான்.இந்தக்கதை& பின்னூட்டங்கள் எல்லாமே வெகு சுவாரசியம். உலக்கை பற்றிய அறிமுகமும் பின்குறிப்பும் தேவையான விஷயம்தான்.இப்ப நிறைய வீடுகளில் மாமியார் மறுமகள் ரிலேஷன்ஷிப் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்குடன் இருப்பதாகத்தான் தோன்றுகிறது. மாமியார் காட்டிய ஜாடையை தனக்கு சாதகமாக சொன்ன மறுமகளின் அறிவுக கொழுந்தை உலக்கை கொழுந்தாக சொல்லலாமா???? ஆனா இது அறிவிலிதனம் இல்லயே அதி புத்திசாலித்தனமல்லவோ?????

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... March 12, 2016 at 10:18 AM

      வாங்கோ, வணக்கம்.

      //உங்க கதைகள் எல்லாமே வரிசையா படித்து வருகிறேன். நகைச்சுவை ரொம்பநல்லா வருது. சோக கதைகளிலும் ஓரளவு நகைச்சுவையை நுழைத்து விடுவீர்கள். பொருத்தமாகவும் அமைந்துவிடும். போனகதையில் (நன்றே செய்) நகைச்சுவை மிஸ்ஸிங். அந்த கதையில் எந்த இடத்திலும் நகைச்சுவையை இணைத்திருக்க முடியாதுதான். இந்தக்கதை & பின்னூட்டங்கள் எல்லாமே வெகு சுவாரசியம்.//

      புரிதலுக்கு நன்றி. மிக்க மகிழ்ச்சி.

      //உலக்கை பற்றிய அறிமுகமும் பின்குறிப்பும் தேவையான விஷயம்தான். இப்ப நிறைய வீடுகளில் மாமியார் மருமகள் ரிலேஷன்ஷிப் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்குடன் இருப்பதாகத்தான் தோன்றுகிறது.//

      காலம் மாறி வருகிறது. உண்மைதான். வரவேற்க வேண்டியதும்தான். மகன் திருமணத்திற்கு ஏதேனும் ஒரு நல்ல பெண்ணாகக் கிடைத்தால் போதும் என்றாகிவிட்டது ... இப்போது இன்றைய நிலைமை.

      //மாமியார் காட்டிய ஜாடையை தனக்கு சாதகமாக சொன்ன மருமகளின் அறிவுக கொழுந்தை உலக்கை கொழுந்தாக சொல்லலாமா???? ஆனா இது அறிவிலித்தனம் இல்லயே அதி புத்திசாலித்தனமல்லவோ?????//

      :) சுமார் 50 ஆண்டுகளுக்கு முன், இது என் சின்ன வயதில், என் அப்பாவோ அம்மாவோ சொல்லி நான் கேள்விப்பட்டதோர் மிகச்சிறிய கதை.

      அதற்கு நான் என் கற்பனையில் காது, மூக்கு வைத்து கொஞ்சம் நகைச்சுவை கலந்து படிப்போருக்கு சுவாரஸ்யம் கூட்டிப் பதிவாகத் தந்துள்ளேன்.

      தங்களின் தொடர் வருகைக்கும், நீண்ட கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete