About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, February 27, 2011

'எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 4 / 8 ]

ஒரு வழியாக லிஃப்டில் சிதறி இருந்த மசால்வடைத் துகள்களை சுத்தப்படுத்தி விட்டு, அவர்கள் மூவரும் வேண்டா வெறுப்பாக தங்கள் வீட்டை நெருங்கினர்.

வீட்டு வாசலில் பூட்டைத் தன் கையால் பிடித்து இழுத்தபடி, மணச்சநல்லூரிலிருந்து வந்துள்ள அம்புஜத்தின் உடன்பிறப்பு கோவிந்தன் நின்று கொண்டிருந்தான்.

“வாடா .... கோவிந்தா, செளக்யமா? எப்போது வந்தாய்? பாவம் ... ரொம்ப நேரமா வாசலிலேயே நிற்கிறாயா?” என்று தன் உடன்பிறந்த தம்பியை கண்டு உவகையுடன் விசாரித்தாள் அம்புஜம்.

ராமசுப்புவைப் பொறுத்தவரை அவர் மச்சினன் (மச்சினன்=மனைவியின் சகோதரன்) கோவிந்தனைக் கண்டாலே அவருக்கு சுத்தமாகப் பிடிக்காது. முரட்டு மீசை வைத்துக் கொண்டு, கைலியை முழங்காலுக்கு மேல் மடித்துக் கட்டிக்கொண்டு, அகராதித்தனமாக ஏதாவது பேசிக்கொண்டு, வேலை வெட்டி என்று எதுவும் இல்லாமல், கோவில் மாடு போல சுற்றிக்கொண்டு, எப்பவும் ஒரு பேட்டை ரெளடி போல, அவர் கண்களுக்குத் தெரிபவன். மொத்தத்தில் அவன் ஒரு ஒரு வாய்ச் சவடால் பேர்வழி. அடிக்கடி மணச்சநல்லூரிலிருந்து புறப்பட்டு அக்கா வீட்டுக்கு வந்து டேரா போடுபவன். அவனால் அவருக்கு நேற்றுவரை ஒரு பிரயோசனமும் இல்லை.

ஆனால் இன்று அவரும் அவனை மனதார வரவேற்றார். கோவிந்தனுக்கே அவரின் இந்தச் செயல் ஆச்சர்யமாக இருந்தது.

“கோவிந்தா நீ தான் இதற்கு சரியான ஆளு! நம்ம வீட்டிலே ஒரு எலி புகுந்து அட்டகாசம் பண்ணுது. என்னான்னு கொஞ்சம் பார்த்து விரட்டி விட்டுடு. உன் அக்காளும், மறுமானும் ( மறுமான் = அக்கா பிள்ளை ) ரொம்பவும் பயந்து நடுங்கிப் போய் இருக்கிறார்கள்” என்று, தான் ரொம்ப தைர்யசாலி போலப் பேசினார்.

“எலி தானே ... அது என்ன புலியா ... ஏன் இந்தக் கிலி உங்களுக்கு?” என்று ஒரு வீர வசனத்தைப் பொழிந்து விட்டு ”கவலையே படாதீங்கோ, இன்று அதை உண்டு இல்லைன்னு பண்ணிடறேன்” என்று தைர்யம் சொன்னான்.

வீட்டைத் திறந்து நால்வரும் உள்ளே போனதும் “சூடா ஒரு காஃபி போடு அக்கா ... அப்படியே ஏதாவது பஜ்ஜியும் கெட்டிச் சட்னியும் பண்ணினாக்கூட இந்த மாதிரி நேரத்துக்கு சாப்பிட ஜோராயிருக்கும்” என்றான், கோவிந்தன்.

“நீ முதலில் எலி எங்கே உள்ளதுன்னு கண்டு பிடிச்சு அதை வெளியேற்ற வழியைப் பாரு ... சமையல் ரூமுக்குப் போகவே உங்க அக்கா பயப்படறா” என்றார் ராமசுப்பு.

சமையல் அறைக்குள் புகுந்து ராக்குகளில் இருந்த அனைத்து சாமான்களையும் ஹால் பக்கம் வெளியேற்றினான் கோவிந்தன். பிறகு உயரமான மர ஸ்டூல் ஒன்று போட்டுக்கொண்டு, உயரத்தில் இருந்த லாஃப்ட்களில் உள்ள அனைத்து சாக்கு மூட்டைகள், அட்டைப் பெட்டிகள் என எல்லாவற்றையும் எடுத்து, தொப்தொப்பென்று கீழே போட ஆரம்பித்தான். சாமான்கள் உடையுமோ, நசுங்குமோ அல்லது தரையில் புதிதாகப் போடப்பட்ட டைல்ஸ் கற்களில் கீறல் விழுமோ என்ற பயத்தில் ராமசுப்புவே அவனுக்கு கூடமாட உதவி செய்யத் தயாரானார்.

“பார்த்து அத்திம்பேர் (அத்திம்பேர்=அக்காவின் கணவர்)! நீங்க போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்கோ. உங்கள் உச்சந்தலையின் மேல் அந்த எலி எகிறிக்குதித்து, உங்கள் உடம்பெல்லாம் ஊடுருவி, உள்ளங்கால் வழியாகப் பிராண்டிட்டுப் போய் விடப் போகிறது” என்று எச்சரித்தான், கோவிந்தன்.

இதைக் கேட்டதும் ராமசுப்புவுக்கு, நிஜமாகவே அது போல நடந்து விட்டது போல ஒரு பிரமை ஏற்பட்டு, அரண்டு மிரண்டு போய், பெட்ரூம் கதவை சாத்தி விட்டு, ஃபேனைத் தட்டிவிட்டு, கட்டிலில் போய் அமர்ந்தார்.

மின்விசிறி சுழல ஆரம்பித்ததும், அதில் பல நாட்களாகத் தொங்கிக் கொண்டிருந்த கருத்த தடியான ஒட்டடைக்கற்றை ஒன்று அவர் மேல் தொப்பென்று விழுந்ததில், எலியோ என பயந்து போய், கட்டிலிலிருந்து எழுந்த அவர் ஒரு பரத நாட்டியமே ஆடியதில், அங்கிருந்த டீப்பாய் மேல் இருந்த இருமல் சிரப் மருந்து பாட்டில் கீழே விழுந்து, அது உடைந்து அதிலிருந்து கொட்டிய திரவம் அடிபட்ட எலியின் ரத்த ஆறு போலக் காட்சியளித்தது.


தொடரும்

39 comments:

 1. அரண்டவன் கண்ணுக்கு மிரண்டது எல்லாம் பேய்

  ReplyDelete
 2. ஆஹா எலி வேட்டை தொடங்கி விட்டது போல… எலியை வெற்றி கொண்ட புலி ஆனாரா கோவிந்தன்? பார்க்கலாம் அடுத்த பகிர்வில் :)

  ReplyDelete
 3. ஒரு வேளை தன்னோட முக்கியத்துவம் தெரியணும்னு கோவிந்தன் தான் இந்த எலியை அவரோட கடைசி விசிட்ல கொண்டு வந்து விட்டாரோ ? ம்ம்..
  ரூம் போட்டு யோசிப்பவர் போல..

  ReplyDelete
 4. எலி வேட்டைக்குப் போன புலி!!

  ReplyDelete
 5. எலி வேட்டையின் இறுதியில் எலி பிடிபடுமா! விரைவில் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 6. கதையும் அருமை... உறவுகளுக்கான விளக்கமும் அருமை!

  ReplyDelete
 7. Nalla nadaiyudan selkirathu kathai

  ReplyDelete
 8. Sir actualy pc is under repair.am temporarily using Rangamani's oficial laptop or his mobile for putting coments.that too whenever available.so 1ly in english.am sory pl

  ReplyDelete
 9. எலி சலிக்கவில்லை...ஆவலுடன்

  ReplyDelete
 10. எல் கே said...
  //அரண்டவன் கண்ணுக்கு மிரண்டது எல்லாம் பேய்//
  ’மிரண்டது’க்கு பதிலாக இருண்டது என்பார்கள் என்று நினைக்கிறேன். நன்றி!

  ReplyDelete
 11. வெங்கட் நாகராஜ் said...
  //ஆஹா எலி வேட்டை தொடங்கி விட்டது போல… எலியை வெற்றி கொண்ட புலி ஆனாரா கோவிந்தன்? பார்க்கலாம் அடுத்த பகிர்வில் :)//

  ஆமாம் ! எலி வேட்டை ஒரு வழியாக ஆரம்பித்து விட்டது; எப்போ எப்படி முடியுமோ? கோவிந்தன் புலி ஆனாரா? கோவிந்தா ஆனாரா? பார்ப்போம்.
  இந்த எலித் தொல்லையால் அவருக்கு பஜ்ஜி & காஃபி கூட அக்காவால் செய்து தரமுடியவில்லை, பாவம்.

  ReplyDelete
 12. Ganesh said...
  //ஒரு வேளை தன்னோட முக்கியத்துவம் தெரியணும்னு கோவிந்தன் தான் இந்த எலியை அவரோட கடைசி விசிட்ல கொண்டு வந்து
  விட்டாரோ ? ம்ம்..
  ரூம் போட்டு யோசிப்பவர் போல..//

  ரூம் போட்டு யோசித்து பரிசீலனை செய்ய வேண்டிய பாய்ண்ட் தான்; அவனுக்கு அவன் அத்திம்பேர் தான் எந்த முக்கியத்துவமும் தராமல் அவன் மேல் கடுப்புடன் இருக்கிறாரே !

  ReplyDelete
 13. இராஜராஜேஸ்வரி said...
  //எலி வேட்டைக்குப் போன புலி!!//
  ஆம், மற்ற அனைவருக்கும் ஒரே கிலி

  ReplyDelete
 14. கோவை2தில்லி said...
  //எலி வேட்டையின் இறுதியில் எலி பிடிபடுமா! விரைவில் எதிர்பார்க்கிறேன்.//

  இறுதிப்பகுதிக்குப் போனால் தான் தெரியும் மேடம். அதுவரை என்னென்ன கூத்துகள் நடக்குமோ நானும் உங்களைப் போலவே ஒருவித எதிர்பார்ப்புடன் மேலும் எலியை (கதையை) ஓடவிடும் சிந்தனையில் இப்போது.

  ReplyDelete
 15. middleclassmadhavi said...
  //கதையும் அருமை... உறவுகளுக்கான விளக்கமும் அருமை!//
  ஆஹா, அனைத்துமே அருமை; உங்களின் பின்னூட்டம் போலவே.
  நன்றி மேடம்.

  ReplyDelete
 16. raji said...
  //Nalla nadaiyudan selkirathu kathai//
  தங்கள் பாராட்டுக்கு நன்றி. கதையின் என் நடை நன்றாகச் செல்வது இருக்கட்டும். அந்த எலி நடந்தோ ஓடியோ ஒளிந்தோ எங்கே சென்று ஒளிந்துள்ளது என்பதே எல்லோருடைய கவலையும்.

  raji said...
  //Sir actualy pc is under repair.//
  ஒருவேளை அந்த எலி உங்கள் வீட்டுப் PC க்குள் நுழைந்து அதனால் PC ரிப்பேர் ஆகியிருக்குமோ என்று எனக்கு ஒரே விசாரமாக உள்ளது.

  ReplyDelete
 17. மோகன்ஜி said...
  //எலி சலிக்கவில்லை...ஆவலுடன்//

  எலி என்ன எலிஸபத் ராணியா? உங்களுக்கு சலிக்காமல் இருப்பதற்கும், நீங்கள் ஆவலுடன் இருப்பதற்கும்?

  Any way, தங்கள் வருகைக்கும் எலியின் மேல் sorry கதையின் மேல் கொண்ட காதலுக்கும் நன்றி.

  ReplyDelete
 18. ஓட்டடை மேலே விழ, அவர் அரண்டு போய் புதுவிதமான பரதநாட்டியமே ஆடுவதும், புலி, எலி, கிலி என்று டி.ஆர். ஸ்டைலில் வரும் வசனமும் உத்தரவாதமான சிரிப்புக்கு கியாரண்டி தந்தன. Superb!

  ReplyDelete
  Replies
  1. நிரஞ்சனா April 21, 2012 6:32 PM
   ஓட்டடை மேலே விழ, அவர் அரண்டு போய் புதுவிதமான பரதநாட்டியமே ஆடுவதும், புலி, எலி, கிலி என்று டி.ஆர். ஸ்டைலில் வரும் வசனமும் உத்தரவாதமான சிரிப்புக்கு கியாரண்டி தந்தன. Superb!//

   தங்களின் அன்பான வருகைக்கும், கதையின் நகைச்சுவைக் காட்சிகளை அழகாகச் சுட்டிக்காட்டி Superb! என புகழ்ந்துள்ளதற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

   Delete
 19. “எலி தானே ... அது என்ன புலியா ... ஏன் இந்தக் கிலி உங்களுக்கு?” /
  கோவிந்தன் அடுக்க்குதொடரில் பேசுவதை பார்த்தா :)) ஒரு நதிகள் நினைவுக்கு வரார் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், நிர்மலா.

   Delete
 20. மலை ஏறினாலும் மச்சினர் தயவு வேணும்னு ராமசுப்புக்கு புரிஞ்சுடுத்து..பிடிக்காத மச்சினர் என்றாலும் எலிக்காக உதவியை கேட்டுட்டார். மச்சினர் என்ன செலவு வைக்கப் போறாரோ..:)))

  ReplyDelete
  Replies
  1. ராதா ராணி October 4, 2012 9:53 PM
   //மலை ஏறினாலும் மச்சினர் தயவு வேணும்னு ராமசுப்புக்கு புரிஞ்சுடுத்து..//

   ஆஹா இப்படி ஒரு பழமொழியிருக்கா?
   சொன்னதற்கு நன்றி.

   //பிடிக்காத மச்சினர் என்றாலும் எலிக்காக உதவியை கேட்டுட்டார்.//

   ஆமாம். ஆமாம்.

   //மச்சினர் என்ன செலவு வைக்கப் போறாரோ..:)))//

   கரெக்டா பாய்ண்டை பிடிச்சுட்டீங்க. சபாஷ் ! ;)))))

   அன்புடன்
   VGK

   Delete
 21. இந்த மச்சினன்களைக் கண்டால் ஏன் ஒருவருக்கும் பிடிப்பதில்லை?

  ReplyDelete
  Replies
  1. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

   அன்புடையீர்,

   வணக்கம்.

   31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக வருகை தந்து பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன் 2011 ஜனவரி + பிப்ரவரி ஆகிய இரு மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து என் அனைத்துப்பதிவுகளுக்கும் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   அன்புடன் VGK

   Delete
 22. எலி சிக்குவதற்குள் ராமசுப்புவின் வீட்டுக்கள் என்னவெல்லாம் கலவரம் நடக்கப் போகறதோ?

  //ராமசுப்புவைப் பொறுத்தவரை அவர் மச்சினன் (மச்சினன்=மனைவியின் சகோதரன்) கோவிந்தனைக் கண்டாலே அவருக்கு சுத்தமாகப் பிடிக்காது. //

  மச்சினியா இருந்திருந்தா பிடிச்சிருக்கும்.

  ஆனா இப்ப எலியோட அட்டகாசத்துக்கு மச்சினன் தேவலாம்ன்னு தோணிடுத்து போல இருக்கு ராமசுப்புவுக்கு.

  இனி எலிக்குப் பதிலா மச்சினனின் அட்டகாசம் கொடி கட்டிப் பறக்கப் போறதோ?

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள ஜெயா,

   வணக்கம்மா !

   31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன் 2011 ஜனவரி + பிப்ரவரி மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக .வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   பிரியமுள்ள கோபு

   Delete
  2. Jayanthi Jaya April 22, 2015 at 10:12 PM

   //கோவிந்தன் என்ற மச்சினனாக இல்லாமல், மச்சினியா
   இருந்திருந்தா ராமசுப்புவுக்குப் பிடிச்சிருக்கும். //

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! மிகவும் ரஸித்தேன், ஜெ :).

   Delete
 23. எலி வேட்டைக்கு ஆள் வந்தாச்சா. அதகளம் ஊரம்பமாகட்டும்

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள சிவகாமி (பூந்தளிர்),

   வணக்கம்மா.

   31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன் 2011 ஜனவரி மற்றும் 2011 பிப்ரவரி மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியில் வெற்றிபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   பிரியமுள்ள கோபு

   Delete
 24. எலி வேட்ட சிரிப்பாணியா போயிகிட்டிருக்குது

  ReplyDelete
 25. வேட்டையாடு விளையாடு ஒரு எலிய வச்சு இப்படி பணறீங்களே சார்.

  ReplyDelete
 26. அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் மற்றும் 2011 பிப்ரவரி மாதம் ஆகிய இரு மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete
 27. //“எலி தானே ... அது என்ன புலியா ... ஏன் இந்தக் கிலி உங்களுக்கு?”// வடிவேலு டயலாக் மாதிரி நல்லாத்தான் இருக்கு...ஆனா புடிச்சாரா???..தொடருவோம்

  ReplyDelete
 28. அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
  திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் மற்றும் பிப்ரவரி மாதம் ஆகிய இரு மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete
 29. சிரித்து வயிறு வலித்தது!அருமை!

  ReplyDelete
 30. அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
  திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதமும் 2011 பிப்ரவரி மாதமும் என்னால் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete
 31. எலி வேட்டை சுறு சுறுப்பா கலகலப்பா போகுது. கோவிந்தன் வரும்போதே காபி சூடான பஜ்ஜினு ஆர்டர் பண்ணுறாரே. உண்ட மயக்கத்தில் அவர் தூங்க ஆரம்பிச்சா அந்த பொல்லாத எலி அவர்மேல டான்ஸ் ஆட ஆரம்பித்து விடுமே..... ஏற்கனவே ராமசுப்பு வேர காத்தாடிலேந்து பறந்து அவர்மேல விழுந்த தூசிய பார்த்து எலிதானோன்னு பரதநாட்டியம் ஆடியதில் இருமல் சிரப் பாட்டில் ஒடைஞ்சு போச்சி.. பரண் மேலேந்து எடுத்த தட்டு முட்டு சாமான்களுக்கு நடுவால புகுந்துகிட்டு எலி அட்டகாசம் பண்ணப்போகுது......

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... April 3, 2016 at 11:03 AM

   வாங்கோ, வணக்கம்.

   //எலி வேட்டை சுறு சுறுப்பா கலகலப்பா போகுது.//

   அப்படியா! சந்தோஷம்.

   //கோவிந்தன் வரும்போதே காபி சூடான பஜ்ஜினு ஆர்டர் பண்ணுறாரே.//

   அதானே!

   உண்ட மயக்கத்தில் அவர் தூங்க ஆரம்பிச்சா அந்த பொல்லாத எலி அவர்மேல டான்ஸ் ஆட ஆரம்பித்து விடுமே..... ஏற்கனவே ராமசுப்பு வேற காத்தாடிலேந்து பறந்து அவர்மேல விழுந்த தூசிய பார்த்து எலிதானோன்னு பரதநாட்டியம் ஆடியதில் இருமல் சிரப் பாட்டில் ஒடைஞ்சு போச்சி..//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ..... :)

   //பரண் மேலேந்து எடுத்த தட்டு முட்டு சாமான்களுக்கு நடுவால புகுந்துகிட்டு எலி அட்டகாசம் பண்ணப்போகுது......//

   ஹைய்யோ :) ஒரே கொண்டாட்டம்தான் அந்த எலிக்கு.

   தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

   Delete