About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, August 28, 2011

ஏழைப் பிள்ளையார்


2
=




ஏழைப்பிள்ளையார் கோயிலின் மேற்கூரை






சிறிய அந்தக்கோயிலின் முழுத்தோற்றம்






ஏழைப்பிள்ளையார் அபிஷேகத்திற்கு ஆயத்தம் ஆகியுள்ளார்



மக்களுக்குள் தான் ஏழை பணக்காரர் என்ற வித்யாசங்கள் உண்டு என்றால் கடவுளுக்குள்ளும் ஏழை பணக்காரர் என்ற வித்யாசங்கள் உண்டா? என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் எழுவது நியாயமே!



நான் பொய் சொல்லவில்லை. ஏழைப் பிள்ளையார் என்று ஒருவர் இருக்கிறார். ஏழைப்பிள்ளையார் கோயில் என்று ஒரு கோவிலும் உள்ளது. சந்தேகம் உள்ளவர்கள் எங்கள் திருச்சிக்கு வாருங்கள். 


திருச்சியில் மிகப்பிரபலமான உச்சிப்பிள்ளையார் மற்றும் தாயுமானவர் மலையைச்சுற்றி தேரோடும் நான்கு வீதிகள் உண்டு. உச்சிப்பிள்ளையார் மற்றும் தாயுமானவர் கோயிலின் பிரதான நுழைவாயில் தெற்கு நோக்கி அமைந்திருக்கும். 

அந்த பிரதான நுழைவாயில், அந்த மிகப்பெரிய தெருவின் மத்தியில் அமைந்திருப்பதால், நுழைவாயிலை நோக்கி நின்றால் நம் வலதுகைப்பக்கத்தை [கிழக்குப்பக்கத்தை] அந்தக்காலத்தில் சின்னக்கடை வீதி என்று அழைப்பார்கள், இன்று அங்கு சின்னக்கடைகளே ஏதும் கிடையாது என்பது போல உலக அளவில் பிரபலமான ஆலுக்காஸ் நகைக்கடையும், மற்றும் கோபால்தாஸ் போன்ற தங்க வைர நகைக்கடைகளும், ஜவுளிக்கடைகளுமாக மாறிவிட்டது.. 

அதேபோல கோயிலின் பிரதான நுழைவாயிலை நோக்கி நின்றால் நம் இடது பக்கத்தை [மேற்குப்பக்கத்தை] அந்தக்காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் (NSB) ரோடு என்று அழைப்பார்கள். இன்று அந்தத்தலைவரின் பெயர் சொல்லி யாராவது வெளியூர் ஆசாமிகள் விசாரித்தால், அந்தத்தெருவை அடையாளம் காட்டுபவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். 

அந்த அளவுக்கு “சாரதாஸ்” என்ற ஜவுளிக்கடலும், மங்கள் and  மங்கள் என்ற நகை மற்றும் பாத்திரங்கள் கடலும், ரத்னா ஸ்டோர்ஸ் என்ற மிகப்பெரிய பாத்திர வியாபாரக்கடலும் தங்கள் கடல் அலைகளை தொடர்ந்து மோதிமோதி, கடற்கரை போல மக்களைக் கவர்ந்து இழுத்து வருகின்றன.

தேரோடும் தெற்கு வீதி [சின்னக்கடை வீதி மற்றும் NSB Road]

(1) உச்சிப்பிள்ளையார் [கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்]
(2) கீழே ஸ்ரீ மாணிக்க விநாயகர் [கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்]
(3) கிரிப்பிரதக்ஷணமாக வந்தால் வட மேற்கு மூலையில் ஸ்ரீ சங்கடஹர கணபதி [தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்]

தேரோடும் மேற்குவீதி 

இந்த மேற்கு வீதி நந்தி கோயில் தெரு என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் தாயுமானவர் கோயிலுக்குச் சொந்தமான பிரும்மாண்ட நந்தியும், அழகிய தெப்பக்குளமும் அமைந்துள்ளது. பிரபலமான ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாதர் ஸ்வாமி கோயிலின் ஒரு நுழைவாயிலும் இதே தெருவில் அமைந்துள்ளது.  இந்தத்தெருவினில் நிறைய வணிக வளாகங்களும், வங்கிகளும் அமைந்துள்ளன.

(4) இந்த பிரும்மாண்ட நந்தி கிழக்கு முகமாக அமைந்திருக்க, அதன் வால்புறம் மேற்கு நோக்கி உள்ளது. இதன் அருகிலேயே   ஹனுமனுக்கும், பிள்ளையாருக்குமாக இரண்டு தனித்தனி கோயில்கள் அருகருகே மேற்கு நோக்கி அமைந்துள்ளன. இது தான் நாலாவது பிள்ளையார்.

தேரோடும் வடக்கு வீதி

இது “வடக்கு ஆண்டார் தெரு” என்று அழைக்கப்படுகிறது.  பெரும்பாலும் குடியிருப்புகள் உள்ள பகுதி. இந்தத்தெருவில் மட்டும் நான்கு பிள்ளையார் கோயில்கள் உள்ளன. எல்லாமே தெற்கு நோக்கியுள்ள பிள்ளையார்கள்.

(5) வடமேற்கு மூலையில் அரசமரத்தடியில் உள்ள வரஸித்தி விநாயகர் 

(6) செல்வ விநாயகர்

(7)  ஏழைப்பிள்ளையார் எனப்படும் ஸப்தபுரீஸ்வரர்

(8) ஸ்ரீ நிர்தானந்த விநாயகர்

தேரோடும் கிழக்கு வீதி

இது கீழாண்டார் தெரு (அல்லது கிழக்கு ஆண்டார் தெரு) என்று அழைக்கப்படுகிறது. இங்கும் குடியிருப்புகள், கடைகள் மற்றும் கோயிலின் இரண்டு மிகப்பெரிய தேர்கள் நிறுத்துமிடம் முதலியன உள்ளன.

  (9) வடகிழக்கு மூலை அரசமர ஸித்தி விநாயகர் (கிழக்கு நோக்கி உள்ளார்)

(10) ஸ்ரீ முத்தாளம்மன் திருக்கோயில் வாசல் பிள்ளையார் 
        (கிழக்கு நோக்கியபடி)

(11) மேற்படி பிள்ளையாரைப் பார்த்தபடி இன்னொரு பிள்ளையார்
       (மேற்கு நோக்கியபடி)

(12) தென் கிழக்கு மூலையில் ஸ்ரீ ஸித்தி விநாயகர் (கிழக்கு நோக்கியபடி)

இவ்வாறாக திருச்சி உச்சிப்பிள்ளையார் மலையையும், மலையைச்சுற்றியுள்ள தேரோடும் நான்கு வீதிகளிலுமாகச் சேர்த்து மொத்தம் 12 விநாயகர்கள் மிகவும் பிரபலமாக, சிறிய கோயில்கள் கொண்டு உள்ளனர். தினமும் அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை எல்லாம் நடைபெறுகின்றன. சங்கடஹரசதுர்த்தி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

இவற்றில் எண்ணிக்கையில் ஏழாவதான [வடக்கு ஆண்டார் தெருவில் அமைந்துள்ள] ஏழைப்பிள்ளையார் என்னும் ஸப்தபுரீஸ்வரர் பற்றி ஒரு சிறிய விளக்கம் கொடுக்க விரும்புகிறேன்.

சங்கீதத்தில் ஏழு ஸ்வரங்களை ஸப்த ஸ்வரங்கள் என்போம். ஸப்தகிரி என்றால் ஏழுமலை என்று பொருள்.  ஸப்தரிஷி என்றால் ஏழு முனிவர்கள் என்று அர்த்தம். “ஸப்த” என்ற வடமொழிச்சொல்லுக்கு ஏழு என்று பொருள். ஏழு என்பது முழுமையைக் குறிப்பதாகும்.  உச்சிப்பிள்ளையாரிலிருந்து ஆரம்பித்து மலையைப் பிரதக்ஷணமாக வரும்போது ஏழாவதாக உள்ள இவர் ’ஏழாவது பிள்ளையார்’ என்று தான் இருந்திருக்க வேண்டும். நாளடைவில் இந்த ‘ஏழாவது பிள்ளையார்’ சொல்வழக்கில் ”ஏழைப்பிள்ளையார்” ஆகி இருப்பார் என்பது எனது ஆராய்ச்சியாகும்.  

ஏழை மக்களுக்கு அருள் பாலிப்பவராக இருப்பதனாலும் அவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம்.  ஸப்தபுரீஸ்வரர் என்ற திருநாமமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மலையேறி உச்சிப்பிள்ளையாரை தரிஸிக்க இயலாதவர்கள் இந்த ஏழைப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டாலே அது உச்சிபிள்ளையாரை தரிஸித்ததற்கு சமமாகும் என்றும் சொல்லுகிறார்கள். பக்தர்கள் முழுத்தேங்காய்களின் குடுமிப்பகுதிகளை கயிற்றால் கோத்து மாலையாக இந்த ஏழைப்பிள்ளையாருக்கு அணிவித்து மகிழ்கிறார்கள்.  

இந்த ஏழைப்பிள்ளையார் கோயில் வாசலிலிருந்து பார்த்தாலே அந்த பணக்கார உச்சிப்பிள்ளையார் கோயில் அழகாகத்தெரியும்படி அமைந்துள்ளது இந்தக்கோயிலின் மற்றொரு சிறப்பாகும். 





ஏழைப்பிள்ளையார் கோயில் வாசலிலிருந்தே
பணக்கார உச்சிப்பிள்ளையார் கோயிலையும் பார்க்கும் வசதி

-o-o-o-o-o-o-o-o-





[ இந்த ஏழைப் பிள்ளையார், தான் குடிகொண்டிருக்கும் அதே திருச்சி வடக்கு ஆண்டார் தெருவில் தான், இந்த ஏழை எளிய அந்தணனாகிய அடியேனையும் [வை. கோபாலகிருஷ்ணனையும்] குடி அமர்த்தியுள்ளார், என்பதை நன்றியுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.]








இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.








”பெருமை வாய்ந்த பிள்ளையார்”
என்ற தலைப்பில் நம் அன்புக்குரிய 
கொங்கு நாட்டுத்தங்கம்
கோவை திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்
 வெளியிட்டுள்ள பதிவினைக்காணத் தவறாதீர்கள்.
http://jaghamani.blogspot.com/2011/08/blog-post_28.html








என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்




-oOo-







44 comments:

  1. அழகிய சிறிய பிள்ளையார்.

    ReplyDelete
  2. உச்சிப் பிள்ளையார் பற்றி
    உரிய நேரத்தில் பதிவு
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  3. ஏழைப் பிள்ளையார் பற்றிய குறிப்பு வெகு ஜோர்!!

    ReplyDelete
  4. ஏழை பிள்ளையார் பற்றிய தகவலும் அவருடைய பெயருக்கான விளக்கமும் அருமை.

    ReplyDelete
  5. திருச்சில படிச்சப்போ இந்த ஏரியா சுத்தி இருக்கேன். ஆனா இந்த விஷயம் எல்லாம் தெரியாது. அடுத்த முறை நல்லா பாக்கணும்.

    ReplyDelete
  6. இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. பிள்ளையார் பதிவு அருமை அய்யா

    ReplyDelete
  8. உங்களுடனேயே பிரதட்சணமாக சுற்றி எல்லா பிள்ளயார்களையும் வணங்கிக் கொண்டேன்! ஏழைப் பிள்ளையார்/ஏழாவது பிள்ளையார் ஆராய்ச்சி சரி என்றுதான் தோன்றுகிறது. விநாயகர் சதுர்த்திப் பதிவு..!

    ReplyDelete
  9. பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்..

    எவ்ளோ பிள்ளையார்....

    உங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். :-)

    ReplyDelete
  10. அடடா......ஏழாம் பிள்ளையாரை இப்படி ஏழையாக்கிட்டாங்களே நம்ம மக்கள்ஸ்!

    படங்கள் அருமை. திருச்சி வர நேர்ந்தால் இவரைக் கண்டுக்கிடணும். ஒரு நேர்ச்சை வைச்சுக்கறேனே!

    புள்ளையார் சதுர்த்திக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  11. இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. ஏழைப்பிள்ளையார் கோயில் வாசலிலிருந்தேபணக்கார உச்சிப்பிள்ளையார் கோயிலையும் பார்க்கும் வசதி//

    அருமையான பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  13. உச்சிப்பிள்ளையாரிலிருந்து ஆரம்பித்து மலையைப் பிரதக்ஷணமாக வரும்போது ஏழாவதாக உள்ள இவர் ’ஏழாவது பிள்ளையார்’ என்று தான் இருந்திருக்க வேண்டும்./

    ச்ப்த பிள்ளையார் பிரதரட்சிணம் செய்வித்த தங்கள் கருணைக்கு நன்றி.

    ReplyDelete
  14. ஏழை பிள்ளையார், மற்றும் உச்சி பிள்ளையார் பற்றிய விவரங்கள் அருமை. பிள்ளையார் சதுர்த்தி வரும் நாளில் பிள்ளையார் பற்றி எத்தனை விவரங்கள்... உங்களது கடும் உழைப்பு பகிர்வில் தெரிகிறது....

    ReplyDelete
  15. விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  16. இந்த ஏழைப்பிள்ளையார் கோயில் வாசலிலிருந்து பார்த்தாலே அந்த பணக்கார உச்சிப்பிள்ளையார் கோயில் அழகாகத்தெரியும்படி அமைந்துள்ளது இந்தக்கோயிலின் மற்றொரு சிறப்பாகும்
    அருமை
    இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. மலைக்கோட்டையை சுற்றி எத்தனை சிறிய கோவில்கள். அத்தனையும் தனித்துவம் பெற்றவை. அந்த குன்றே பிள்ளையாருக்கு பிரியமானதல்லவா. சிதறுகாய் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். இன்றைக்கும் சமையலுக்கு தேங்காய் உடைக்கும்போதுகூட பிளையாரை வேண்டித்தான் தேங்காய் உடைப்போம். திருச்சியில் தேங்காய் எங்கு உடைத்தாலும் பிள்ளையார் ஓடி வந்துவிடுவார் என்று நம்பிக்கை.

    ReplyDelete
  18. திருச்சியில் அதிக நாட்கள் வசித்திருந்தாலும் இது பற்றி ஏதும் அறிந்தெனில்லை. அடுத்த முறை திருச்சி வரும்போது ஒரு ரவுண்ட் அடிக்க வேண்டும்.

    ReplyDelete
  19. ஏழை பிள்ளையார் பற்றியும் சிறப்பான படங்களுடன் பதிவு செய்துள்ளீர் உண்மையில் பாராட்டுகள் நல்ல கற்பனை வளமிக்கவர் நேர்த்தியுடன் செய்த ஓவியம் போல உளம் கனிந்த பாராட்டுகள் நன்றி

    ReplyDelete
  20. ஏழைப் பிள்ளையார் பற்றிய தகவல்கள் அருமை சார்.

    பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. On the subject of Pilliar Koil, you have rightly started the article with a "Pilliar Chuzhi" - our age old custom forgotten these days. Well done! There's no reason to drop such symbols, at least in our private correspondence (sadly, no one writes these days, though) instead of looking into logical reaons for doing so.

    ReplyDelete
  22. இதுவரை கேட்டிராத பிள்ளையார் தகவல்... நன்றி

    ReplyDelete
  23. உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். கீழ்க்கண்ட வலைத்தளத்தில் பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/

    ReplyDelete
  24. வினாயகர் சதூர்த்திக்கு பிள்ளையார் சம்பந்தமான பதிவுக்கு நன்றி... வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சகோதரரே

    ReplyDelete
  25. // மனோ சாமிநாதன் said...
    உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். கீழ்க்கண்ட வலைத்தளத்தில் பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/ //

    அன்புள்ள திருமதி மனோசுவாமிநாதன் அவர்களுக்கு, முதற்கண் என் அன்பு கலந்த வணக்கங்கள்.

    பத்திரிக்கைகளில் மட்டுமே எழுதி வந்த என்னை, வலைப்பூவினில் வந்து எழுதுமாறும், அதனால் நமக்கு ஒரு ஆத்ம திருப்தி ஏற்படும் என்று சொல்லி, என்னை வலைப்பூவினில் எழுதத்தூண்டியதே தாங்கள் தானே!
    அதை என்னால் என்றுமே மறக்க இயலாதே!!

    முதல் நாள், முதல் முத்தாக, அதுவும் சமையல் முத்துக்களில் ஒன்றாக, என்னை அடையாளம் காட்டி அசத்துவீர்கள் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

    அந்தக்குறிப்பிட்ட பதிவும் [”உணவே வா.... உயிரே போ...”] தங்களின் வேண்டுகோளுக்கும், அன்புக்கட்டளைக்கும் அடிபணிந்து நான் எழுதிய தொடர்பதிவே என்பதும் உங்களுக்கு நினைவு இருக்கலாம்.

    இங்கு என் வீட்டில் எல்லா [மகன்கள்+ பேரன்கள்+பேத்தி என அனைத்து குடும்ப முத்துக்களும்] முத்துக்களும் வந்து என்னை அன்புடன் கூடிய முத்து மாலையாகக் கோர்த்துக் கொண்டிருப்பதால், இந்த மாதம் முழுவதும் அதிகமாக வலைப்பூப் பக்கம் வர முடியாத சூழ்நிலையில் உள்ளேன்.

    தாங்கள் அறிமுகம் செய்துள்ள அனைத்து முத்துக்களுமே அருமை.

    அனைவருக்கும் + உங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    ReplyDelete
  26. அருமையான பதிவு.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. ஏழைப் பிள்ளையார் பெயர் விளக்கம் அருமை
    படங்களும் பதிவும் அற்புதம்
    திருச்சிக்கு முழுமுதற்கடவுளான
    உச்சிப்பிள்ளயாரையும் ஏழாவது பிள்ளையாரையும்
    தினமும் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவராக இருப்பது குறித்து
    மிக்க மகிழ்ச்சி
    சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. அறியாத தகவல். நல்ல photo

    ReplyDelete
  29. அன்புடன் வருகை தந்து அழகிய கருத்துக்கள் கூறி உற்சாகப்படுத்தி வரவேற்று பாராட்டியுள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். அன்புடன் vgk

    ReplyDelete
  30. ஒப்பிலியப்பன் உப்பிலி ஆனதுபோல் இவர் ஏழைப்பிள்ளையார் ஆகிட்டாரா :-)

    ReplyDelete
  31. படங்களோடு தகவல்கள் அருமை.

    ReplyDelete
  32. அன்பின் வை.கோ

    திருச்சி உச்சிப் பிள்ளையாரிலிருந்து ஏழைப்பிள்ளையார் வரை 12 விநாயகர்கள் பற்றிய பதிவு நன்று - விநாயகர் ஆகவல் பகிர்வினிற்கு நன்றி -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  33. cheena (சீனா)September 8, 2013 at 10:47 PM
    அன்பின் வை.கோ

    திருச்சி உச்சிப் பிள்ளையாரிலிருந்து ஏழைப்பிள்ளையார் வரை 12 விநாயகர்கள் பற்றிய பதிவு நன்று - விநாயகர் ஆகவல் பகிர்வினிற்கு நன்றி -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நல்வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா. அன்புடன் VGK

    ReplyDelete
  34. எல்லா பிள்ளையாரைப்பற்றியும் இதுவரை தெரிநுதிராத தகவல்களுடன் ஆனந்தமாக தரிசிக்கவும் வச்சுட்டீங்க.

    ReplyDelete
  35. சங்கட ஹர சதுர்த்தியான இன்று இந்தப் பதிவைப் படிப்பது என் பாக்கியமே.

    ஆனா உங்க வீட்டுக்கு வந்த போது அந்தப் பிள்ளையாரை தரிசிக்கிற வாய்பு எனக்கு கிடைக்கலயே. ஆமாம் மத்தியானம் 12 மணிக்கு எந்த சுவாமி கோவில் தான் திறந்து இருக்கும். BETTER LUCK NEXT TIME என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  36. இந்த புள்ளயாரப்பர பத்திலா தெரியாதுங்க கொளுக்கட்ட போட்டோ படத்துலதா கண்டுகிட்டன்

    ReplyDelete
    Replies
    1. mru October 12, 2015 at 10:07 AM

      //இந்த புள்ளயாரப்பர பத்திலா தெரியாதுங்க கொளுக்கட்ட போட்டோ படத்துலதா கண்டுகிட்டன்//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      அதனால் பரவாயில்லை. எல்லோருக்கும் எல்லாமே தெரிந்திருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாதுதான். புரிந்துகொண்டேன்.

      இதுபோன்ற என் ஒருசில ஆன்மீகப் பதிவுகளில் படங்களையும், மற்ற தங்களுக்குப் பிடித்தமான ஏதோவொரு விஷயத்தையும் பற்றி மட்டும், பின்னூட்டம் கொடுத்துக்கொண்டு போய்க்கினே இருங்கோ.

      கடைசியில் தங்களுக்கான மிகப்பெரிய ’கொழுக்கட்டை’ பரிசு என்ற பெயரில் எப்படியும் கிடைத்து விடும். :)

      அன்புடன் குருஜி

      Delete
  37. ஏழைப்பிள்ளையாரோ பணக்கார பிள்ளையாரோ அவர் ஏழை பணக்காரர் என்று வித்யாசம் பார்க்காமல்தான் அருள் பாலித்து வருகியார். படங்கள் தகவல்கள் எல்லாமே நல்லா கருக்கு.

    ReplyDelete
  38. எழைப்பிள்ளையாரும் அருளை வாரி வழங்குவதில் பணக்கார பிள்ளையார்தான்...அது சரி இந்த ஸ்டாடிடிக்ஸ் எல்லாம் எங்கே கலக்ட் பண்றீங்க வாத்யாரே..அசத்தல்..

    ReplyDelete
  39. புதிய தகவல்கள்! ஏழைப்பிள்ளையாரை தரிசிக்கும் ஆவல் என்னுள் எழுகிறது!

    ReplyDelete
  40. உச்சிப்பிள்ளையாரிலிருந்து ஆரம்பித்து மலையைப் பிரதக்ஷணமாக வரும்போது ஏழாவதாக உள்ள இவர் ’ஏழாவது பிள்ளையார்’ என்று தான் இருந்திருக்க வேண்டும். நாளடைவில் இந்த ‘ஏழாவது பிள்ளையார்’ சொல்வழக்கில் ”ஏழைப்பிள்ளையார்” ஆகி இருப்பார் என்பது எனது ஆராய்ச்சியாகும். //

    உங்கள் ஆராய்ச்சி சரியாக தான் இருக்கும்.
    மலையைச்சுற்றி உள்ள பிள்ளையார்களைப் பற்றி அறிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete