About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, August 5, 2013

36] குறை நிலாவிலும் குளுமை !

2
ஸ்ரீராமஜயம்



உடம்பு நமக்கு சிறை. நம் உண்மையான வீடு ஆனந்தமான மோட்சம்தான். நாம் சிறையை விட்டு சொந்த இடத்தில் இருக்க வேண்டும். விடுதலையாகி இறைவனுக்குள் போய் இருக்கிற நம் உண்மையான வீட்டை அடைய முயல வேண்டும். 

அந்த வீடு தான் எல்லையற்ற இன்பம். உலகில் காலம், தேசம், பொருள் இந்த மூன்றிலும் நிறைந்து இருக்கும் பேரின்பம்.

பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும். 

தேய்ந்துபோன சந்திரக்கலைக்கும் கூட குளுமையும் பிரகாசமும் இருப்பதால், அதைப் பரமசிவன் தம் தலையில் தரித்து உலகமெல்லாம் பார்த்துப் புகழும்படி செய்கிறார்.


oooooOooooo


எழுத்தாளர் ’ஸ்ரீதர்’ என்னும் 
’பரணிதரன்’ அவர்களுக்கு 
ஏற்பட்டதோர் அனுபவம்


Amazing experience – don’t miss. 

We all do this same mistake in different shape and form. 

I have read several similar incidents where Periyava asked 
“why did you go there?”

The real answer is nothing but our stupidity and lack of understanding that 
Periyava is Eswaran.

Once we have that engraved in our brain we will not go anywhere.



அவராலே உன்னை 
என்னடா பண்ண முடியும்?


அவர் ஒரு மாசித்தர். பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டக்கூடியவர். நோய்களைக் குணமாக்கிய பெருமைகளும் அவருக்குண்டு. 

என் சகோதரர் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தாங்க முடியாத வயிற்று வலியால் துடித்தபோது, உடனடி நிவாரணத்துக்காக அந்தச் சித்தரிடம் அவரை நான் அழைத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. பூஜை செய்து அண்ணனுக்கு திருநீறுப் பிரஸாதம் தந்தார் சித்தர்.

நான் அவரை நாடி வந்துவிட்டதால் நிச்சயமாகத் தன்னைப் பற்றிக் கட்டுரைகள் எழுதுவேன் என்று எதிர்பார்த்தார் அவர். ஆனால், நான் அதில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிந்ததும், அவர்பால் என்னை ஈர்ப்பதற்காக எனக்கு அழைப்புகள் விடுத்தார்.

மீண்டும் ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஒருநாள் அவரிடம் சென்றேன். நடுநிசி நேரம். அறைக் கதவைத் தாழிட்டுவிட்டு, எனக்குச் சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார் அந்தச் சித்தர். 

வடித்த சாதத்தை உள்ளங்கையில் வைத்துத் தேய்த்தார். அது மீண்டும் அரிசியானது. வெந்தப் பருப்பைத் தேய்த்துத் துவரம் பருப்பாக்கினார். திருச்சானூர் மஞ்சள் வந்தது. பழநி விபூதி, மீனாட்சி குங்குமம் இப்படி எத்தனையோ… நான் அவற்றில் உற்சாகம் காட்டாமல் ஒரு சாட்சியாக அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

“இவ்வளவு செஞ்சு காட்றேன், ஆச்சரியப்படாம இருக்கீங்களே, மனசுலே என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க?” என்று சற்றுக் கடுமையாகவே கேட்டார்.

“நீங்கள் இவற்றைக்காட்டிலும் பிரமிக்கத்தக்க அற்புதங்கள் செய்து காட்டும் சக்தி படைத்தவர் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் எனக்கு எதுவுமே ஆச்சரியமாகத் தோன்றவில்லை” என்றேன்.

“எழுத்தாளர் ஆச்சே… அதான் சாமர்த்தியமா பேசறீங்க…” என்றார். இப்போது அவர் பேச்சில் மட்டுமல்ல, முகத்திலும் கோபம் தெரிந்தது. எனக்குச் சற்று பயமாக இருந்தது. 

மணிபர்சில் இருந்த பெரியவா படத்தைப் பற்றிக் கொள்ளும் பொருட்டு கைகட்டி நின்றேன். நான் வழிக்கு வருவதாக நினைத்துக் கொண்ட அவர், “உங்களுக்கு உபதேசம் பண்றேன், மந்திரத்தை எழுதிக்குங்க” என்று கூறி கையை நீட்டினார். 

பேப்பரும் பேனாவும் எங்கிருந்தோ வந்தன.


“பிடிங்க” என்று இரண்டையும் என்னிடம் தந்தார். வாங்கிக் கொண்டேன்.


“ம்ம்ம்ம்ம்… எழுதிக்குங்க….”

“வேண்டாங்க…..எனக்கு உபதேசம் ஒன்றும் தேவையில்லை..”

“என்னாது… என் உபதேசம் கிடைக்காதான்னு அவனவன் காத்துக்கிட்டு இருக்கான். நீங்க வாணாண்றீங்களே….!” என்று உரக்கச் சத்தம் போட்டார்.

எனக்கு அடிவயிற்றில் கிலி பிசைந்தெடுத்து, 

”மன்னிச்சுடுங்க” என்று கூறியபடி, பேப்பரையும் பேனாவையும் மேஜை மீது வைத்தேன்.

அவர் இருக்கையிலிருந்து எழுந்தார். எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. பெரியவாளையே தியானம் செய்யத் தொடங்கினேன்.

சித்தர் என்னருகில் வந்தார். என் வலது தோள்பட்டையைத் தொட்டார். 

“இந்தக் கையாலேதானே எழுதறீங்க… இதை எழுதவிடாம என்னாலே செய்ய முடியும்…. பார்க்கறீங்களா?” என்று கூறி லேசாக அழுத்தினார். 

அடுத்த கணம், என் கை சற்று கீழே இறங்கி, தொள தொளவென்று ஆடியது. பெரும் திகில் என்னைப் பற்றிக் கொண்டது. கண்களில் நீர் முட்டி நின்றது. உடம்பே நடுங்கியது. என்ன செய்வது என்று புரியாமல் பதறிப்போனேன். 

அந்நிலையிலும் ‘பெரியவா, பெரியவா’ என்று நெஞ்சு நினைவுபடுத்திக் கொண்டிருந்தது.

“என்னைப் பற்றி எழுதறேன்னு இப்பவாவது சொல்லுங்க… கையைச் சரி பண்ணிடறேன்” என்றார் அந்தச் சித்தர்.

அந்நிலையிலும் நான் வாயைத் திறக்கவில்லை!

அந்தச் சித்தர் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லாமல் நின்றிருந்தாலும், என்னுள்ளே நிலவிய அச்ச உணர்வை என் முகபாவம் அவருக்குக் காட்டிக் கொடுத்திருக்க வேண்டும்.

“பாவம், ரொம்பப் பயந்து போயிருக்கீங்க. நான் கையைச் சரி பண்ணிடறேன். என் சக்தி என்னன்னு இப்பவாவது நீங்க புரிஞ்சிகிட்டா போதும்” என்று என் வலது தோள்பட்டையைத் தொட்டு, கையைத் தடவி விட்டார். 

உடனேயே என் கரம் பழையபடி ஆகிவிட்டதை என்னால் உணர முடிந்தது.

அடுத்தபடி ஏதாவது செய்துவிடப் போகிறாரே என்ற பயத்தில், “நான் போகலாமா?” என்று சற்றுத் தயக்கத்துடனேயே கேட்டேன். அவர் சிரித்தார்.

“இப்பப் போயிட்டு வாங்க. பயமெல்லாம் முழுக்கத் தெளிஞ்சப்பறம் இன்னொரு நாள் வாங்க. பேசுவோம்” என்று கூறிக் கதவைத் திறந்து விட்டார். 

‘இன்றைக்குத் தப்பித்தோம்’ என்று எண்ணியவாறு வீட்டுக்கு விரைந்தேன்.

வீட்டுக்குச் சென்ற பிறகு நடந்தவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் சாதாரணமாகத்தான் என் வீட்டாரிடம் நான் சொன்னேன். சித்தர் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களைக் கூறி, நான் மடித்து வைத்திருந்த அரிசி, பருப்பு, மஞ்சள் பொட்டலங்களைப் பிரித்துக் காட்டினேன். அவர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். 

அறைக்குள் நான் அனுபவித்த வேதனையையும் என்னை வாட்டிய நடுக்கத்தையும் சற்று வேடிக்கையாகவே விவரித்தேன். ஆனால், படுத்துக்கொண்ட பிறகு, என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.

சித்தரின் முகபாவமும், பேச்சும், செய்கையும் சிந்தையைக் குழப்பி என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. மனதின் அடித்தளத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒரு கலக்கம். ஒரு திகில். ஒரு பீதி….! புரண்டு புரண்டு படுத்தேன்… அசதியில் ஒரு நொடி கண்ணயர்ந்தால், கனவில் தோற்றமும் பேச்சும் சுழன்றாடின. மறுகணம் அலறிப் புடைத்துக் கொண்டு ஒரு விழிப்பு… இந்த அரட்டல் புரட்டலிலே பொழுதும் விடிந்து விட்டது.

ஏறத்தாழ ஒரு வாரம், என் அன்றாட அலுவல்களில் ஓர் இயந்திரத்தன்மை நிலவியதற்கு, மாறிய என் மனநிலைதான் காரணம் என்று என்னால் உணர முடிந்தது.

படுத்தேன், எழுந்தேன், குளித்தேன். படித்தேன், பேசினேன், உணவருந்தினேன், அலுவலகம் சென்றேன், எழுதினேன், திருத்தினேன், மாலை நண்பர்களுடன் ஓட்டலுக்குச் சென்றேன். சினிமா பார்த்தேன், சிரித்தேன், அரட்டை அடித்தேன். 

ஆனால், அன்று நடுநிசியில் அந்த அறைக்குள் நடந்தவை ஆழ்மனதில் குடியேறி, என் செயல்களுக்குச் செயற்கை முலாம் பூசி, நெஞ்சை நெருடிக் கொண்டிருந்தன. 

என் எண்ணங்களின் பின்னணியில், இன்னது என்று அடையாளம் காண முடியாத அச்சமும் கலவரமும் எதிரொலித்துக் கொண்டிருக்க, எதையுமே வெளியில் சொல்ல முடியாமல் நான் நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தேன். 

என் அகவாழ்க்கை, புறவாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டுப் போய், ஒரு பீதி என்னை நிரந்தர நிழலாகத் தொடர்ந்து கொண்டிருப்பது போன்ற திக்பிரமையில் சிக்கி, அதனின்றும் மீள வழி தெரியாமல் சிதைந்து போனேன்.

நான் எத்தனைதான் மறக்க முயன்றாலும், அந்த நள்ளிரவின் அசாதாரண நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் என் நினைவுக்கு வந்து, என்னை வாட்டி வதைத்தன. 

நான் சித்தரிடம் நடந்து கொண்டதும் பேசியதும் முறையற்றவையாக இருந்தால், அதன் விளைவுகள் பயங்கரமானதாக இருக்குமோ என்ற தவிப்பு ஒரு புறம்; அவரிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்து, நான் போகாமல் இருந்தால் விபரீதங்கள் ஏற்படுமோ என்ற மனக்கொந்தளிப்பு மறுபுறம். நாளுக்கு நாள் இதுவே ஒரு மனநோயாகப் பரவி, பேய் பிடித்தவன் போல் தத்தளித்துக் கொண்டிருந்தேன்.

ஒருநாள் மாலை, யாரிடமாவது சொன்னால்தான் அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் என் அரிய நண்பன் டன்லப் கிருஷ்ணன் இல்லம் சென்று அழமாட்டாக் குறையாக என் மனநிலையை எடுத்துக் கூறினேன்.

" பெரியவா இருக்கா, பார்த்துப்பா’ என்று எல்லோருக்கும் தைரியம் சொல்லும் நீயே இப்படிப் பயந்துண்டிருக்கியே” என்று என்னைப் பார்த்துப் பரிதாபப்பட்ட நண்பன், எனக்குத் தைரியம் சொன்னான்.

” தைரியமாக இருக்கும்படி பக்தி அறிவுறுத்துகிறது. ஆனால், நெஞ்சு குமுறித் துடிக்கிறது. நான் என்ன செய்ய? எனக்கு உடனே பெரியவாளைப் பார்த்து, எல்லாத்தையும் அவர்கிட்டே சொல்லியாகணும். நீ என்னோட வரணும்… நீதான் காரை ஓட்டணும்… உடனே புறப்படு…. இப்பவே போயாகணும்” என்று அவசரப்படுத்தினேன்.


தொடரும் .....






ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியாகும்.



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

06.08.2013 செவ்வாய்க்கிழமை

41 comments:

  1. பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும்.

    தேய்ந்துபோன சந்திரக்கலைக்கும் கூட குளுமையும் பிரகாசமும் இருப்பதால், அதைப் பரமசிவன் தம் தலையில் தரித்து உலகமெல்லாம் பார்த்துப் புகழும்படி செய்கிறார்.

    குளுமையான பகிர்வுகள்..!

    ReplyDelete
  2. " பெரியவா இருக்கா, பார்த்துப்பா’ என்று எல்லோருக்கும் தைரியம் சொல்லும் நீயே இப்படிப் பயந்துண்டிருக்கியே” என்று என்னைப் பார்த்துப் பரிதாபப்பட்ட நண்பன், எனக்குத் தைரியம் சொன்னான்.

    சாட்சாத் பெரியவா தான்
    பயத்தைப்போக்குபவர்..!

    ReplyDelete
  3. ஏறத்தாழ ஒரு வாரம், என் அன்றாட அலுவல்களில் ஓர் இயந்திரத்தன்மை நிலவியதற்கு, மாறிய என் மனநிலைதான் காரணம் என்று என்னால் உணர முடிந்தது.

    மிரளவைக்கும் அனுபவம்..!

    ReplyDelete
  4. //பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும்.
    //

    நிஜமான வார்த்தைகள்...


    சம்பவம் மிரளவைக்குது...

    ReplyDelete
  5. நிகழ்வினைப் படிக்கவே அதிர்ச்சியாய் இருக்கிறது
    அனுபவித்தவர் என்ன பாடுபட்டிருப்பார்
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

    ReplyDelete
  6. பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும்.
    உண்மை வரிகள் ஐயா. நன்றி

    ReplyDelete
  7. //பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும்.//

    அமுத மொழிகள் தொடரட்டும். நானும் தொடர்கிறேன்.

    ReplyDelete
  8. படிக்கும்போதே திகில் உணர முடிகிறது. பரணீதரனுக்கு எதுவும் ஆகாது என்றும் உள்மனசு சொல்கிறது. ‘பெரியவா’ பார்த்துப்பார் !

    ReplyDelete
  9. பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும்....Ithai mudindavarai naam seyya vendum.

    Baraneedharanukku appuram periyavaa yeppadi anugraham pannaarnu therinjukka aavalaai irukkiren!

    ReplyDelete
  10. ஆகா, திரும்பத் தொடரும் போட ஆரம்பித்து விட்டீர்களா? :-)) சீக்கிரம் அடுத்த பகுதியை வெளியிடுங்கள்!

    ReplyDelete
  11. ஆரம்பத்தில் உண்மையான வரிகள்... முடிவில் "அடுத்து என்ன...?" எனும் ஆவலுடன்...

    ReplyDelete
  12. பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும். If we follow this in our life, no misunderstandings will arise. But isit possible......?

    Achooo aparam???????????
    Nalaikke adutha padhivai podunkalen pl.

    viji


    ReplyDelete
  13. அமுதமொழிகளை படித்து புரிந்து கொண்டேன்.

    எழுத்தாளருக்கு அதன் பிறகு என்ன ஆனது, என்று திகில் பரவுகிறது.

    ReplyDelete
  14. யாரிடம் என்ன தப்பு கண்டு பிடிக்கலாம் என்று ஆராய்ந்து கொண்டே இருப்பவர்கள் மத்தியில் அவர்களின் நல்ல குணங்களைப் பட்டியலிட
    இது நல்ல வழி. குறைகளைக் கண்டு கொள்ளாதே. நிறைகளைப் பட்டியலிடு. சந்திர கலை தேய்ந்தாலும் குளிர்ச்சியைக் கொடுக்கும்.நல்ல உவமை. சித்தர்களில் இப்படி ஒரு வகையா? அடுத்து ஆவலைத் தூண்டுகிறது. அன்புடன்

    ReplyDelete
  15. வழக்கம்போல சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்கள். அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  16. //பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும். //

    நூத்துக்கு நூறு உண்மை.

    வழக்கம் போல் சஸ்பென்ஸ். அடுத்த பதிவை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  17. /பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும். //

    Dharmar`s vision is Your mission.
    Well said Vaiko sir...

    ReplyDelete
  18. பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும். //
    நல்ல அமுதமொழி.

    " பெரியவா இருக்கா, பார்த்துப்பா’ என்று எல்லோருக்கும் தைரியம் சொல்லும் நீயே இப்படிப் பயந்துண்டிருக்கியே” //

    அது தானே!
    பெரிய்வா அருளால் தான் சித்தர் ஒன்றும் செய்யாமல் விட்டார்.

    ReplyDelete
  19. தொடருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete
  20. \\பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும். \\

    பிறருடன் சிநேகமனோபாவத்தை வளர்த்துக்கொள்ள இந்த குணம் மிகவும் முக்கியம்.

    எழுத்தாளரின் கலவர மனநிலையை எளிதில் புரிந்துகொள்ள இயல்கிறது.அவருக்கு தேறுதல் கிடைத்ததா? மாறுதல் நடந்ததா? அறியும் ஆவலுடன் தொடர்கிறேன்.

    ReplyDelete
  21. யோக மார்க்கத்தில் செல்லும் வழியில்
    நம்மை ஏமாற்றி படுகுழியில் தள்ளும்
    சக்திகளே சித்திகள்.

    குருவின் துணையோடு செல்லுபவன்
    குரு கருணையினால் அதில் விழாமல்
    காப்பாற்றப்படுவான்.

    குருவை உதாசீனப்படுத்துபவன்
    சித்திகளிடம் சிக்கிக்கொண்டு அகந்தை
    தலைக்கேறி பிறருக்கு தொல்லை
    கொடுத்து அவனும் அழிவான்.

    இது எப்படி என்றால் தாயை இழந்து
    சிற்றன்னையிடம் சிக்கி அல்லல்படும்
    முதல் தார குழந்தைபோலாகும்.
    பெற்ற தாய் போய்விட்டாலும்
    தன்னை காப்பாற்ற இன்னொரு
    தாய் கிடைத்துவிட்டால் என்று
    நம்பும் குழந்தை போலாகும் இது.

    ஆனால் அது எப்படி
    வேண்டுமானாலும் நடக்கலாம்
    பெற்ற தாயை விட அதிக அன்பு செலுத்தி
    வளர்த்த பெண்ணும் உண்டு.
    மாறாக கொடுமைப்படுத்திய
    மாற்றான் தாயும் உண்டு இவ்வுலகில்.
    ஆனால் இந்த உலகில் இரண்டாவது
    நிலைமைதான் அதிகம்.

    எனவே எந்நிலையிலும் குருவின்
    துணையின்றி இந்த உலகில்
    ஆன்மீக சாதனை செய்வது
    லகான் இல்லாத குதிரை மீது சவாரி செய்வது போல்.
    எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.

    குருவே மனித வடிவில்
    வந்துள்ள இறைவன்.

    இந்த உண்மையை அனைவரும்
    உணரவேண்டும் உயவேண்டும்.
    உணர்ந்தவர்கள் உண்மையை
    உணர்ந்துகொள்வார்கள்.

    மற்றவர்கள். அறியாமையில்
    அமிழ்ந்து போவார்கள்.

    ReplyDelete
  22. தொடருங்கள்;ஆவலுடன் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  23. அன்புடையீர்!.. எனது வலைத்தளத்திற்கும் வருகை தந்து சிறப்பித்தமைக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!..

    ReplyDelete
  24. அன்புடையீர்!.. எனது வலைத் தளத்திற்கும் வருகை தந்து சிறப்பித்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  25. Very very beautifully said, just looking at the bad qualities of other people is never going to help any body, wonderful and beautiful qualities should always be revealed... lovely post sir. thank you very much for sharing...

    ReplyDelete
  26. திரு. பரணிதரனுக்கு நடந்த சம்பவம் அச்சத்தை தூண்டுவதாக இருக்கிறது. இதோ அடுத்த பகுதியைப் படித்து விடுகிறேன்.

    ReplyDelete
  27. //பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும். //

    எங்கே! நானெல்லாம் குறையைத் தான் முதல்லே கண்டுபிடிக்கிறேன். கொஞ்சமானும் இந்தக் குணம் வரணும், பகவானேனு வேண்டிக்கலாம்.

    //தேய்ந்துபோன சந்திரக்கலைக்கும் கூட குளுமையும் பிரகாசமும் இருப்பதால், அதைப் பரமசிவன் தம் தலையில் தரித்து உலகமெல்லாம் பார்த்துப் புகழும்படி செய்கிறார்.//

    ஈசனின் கருணையே கருணை.

    ReplyDelete
  28. இது ஏற்கெனவே படிச்சிருக்கேன். என்றாலும் மீண்டும் படிக்கச் சுவை தான். :))

    ReplyDelete
  29. அடுத்து......... அறிய தொடர்கிறேன்.

    ReplyDelete
  30. பெரியவாளின் அனுக்ரஹத்தால் எழுத்தாளருக்கு ஒன்றும் ஆகியிருக்காது. நடமாடும் தெய்வத்தை நம்பியவர்கள் கைவிடப் பட மாட்டார்கள்.

    ReplyDelete
  31. எழுத்தாளருக்கு அதன் பிறகு என்ன ஆனது, என்று திகில் பரவுகிறது!//பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும். அற்புதம்!

    ReplyDelete
  32. அன்பின் வை.கோ - பெரியவா பெரியவா தான் - ஐயமே இல்லை - அடுத்த் பதிவையும் பார்க்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  33. குட்டிச் சம்பவம் அருமை..
    தொடரட்டும் அவரது பெருமை..

    ReplyDelete
  34. சித்து விளையாட்டுகள் ஆன்மீகம் அல்ல.

    ReplyDelete
  35. சித்தர்களுக்கு கூட தங்களைப்பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ளணும்னு ஆசை இருந்திருக்கு அதை உங்க மூலமா வெளிப்படணும்னு நினைச்சிருப்பார் போல.. நீங்க பிடி கொடுக்காம இருந்தது அவருக்கு வருத்தம் போல.

    ReplyDelete
  36. அந்த சித்தரு ஏன் அப்பூடிலா நடந்துகிட்டாரு. மனசுல கலக்கம் இருந்திச்சின்னா சோறுதண்ணி எறங்காது ஒறங்கிகிட ஏலாது. அது ரொம்பவே கஸ்டம்

    ReplyDelete
  37. பெரியவா இருக்கா பார்த்துப்பா. மற்றவர் சொல்லியா புரியணும். அந்த சித்தர் இன்னும் பக்குவ நிலை அடையலை. அவரிடம் போயிருக்கவே கூடாதுதான்

    ReplyDelete
  38. பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும்.

    தேய்ந்துபோன சந்திரக்கலைக்கும் கூட குளுமையும் பிரகாசமும் இருப்பதால், அதைப் பரமசிவன் தம் தலையில் தரித்து உலகமெல்லாம் பார்த்துப் புகழும்படி செய்கிறார்.// குறையில்லாதவன் மனிதனல்லன்...மஹான்..சரீ...அந்த சித்தர் யாரு???

    ReplyDelete
  39. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (12.06.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://www.facebook.com/groups/396189224217111/permalink/412393722596661/

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  40. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (13.06.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=412970599205640

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete