About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, February 23, 2015

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ! பகுதி-2

22.02.2015 ஞாயிறு மாலை 4.30 முதல் இரவு 7.30 வரை
இனிமையான பதிவர்கள் சந்திப்பு நடைபெற்ற இடம்:

மூத்த பதிவரும், மிகச்சிறந்த எழுத்தாளருமான
திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்களின்
ஸ்ரீரங்கம் இல்லத்தில்.

 


திருமதி


       ருக்மணி சேஷசாயீ   

அவர்கள்

‘ பாட்டி சொல்லும் கதைகள் ’

chuttikadhai.blogspot.in

’ மணிமணியாய் சிந்தனை ’

rukmaniseshasayee.blogspot.in
’எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு’  
என்கிற நூல் அவர்களுக்கு நான் பரிசளித்தல்


இவர்கள் என் வலைத்தளத்தினில் நடைபெற்ற 
சிறுகதை விமர்சனப்போட்டியில்
ஒரேயொரு முறை கலந்துகொண்டு 
பரிசினை வென்றுள்ளார்கள்.

VGK-16 - ஜாதிப்பூ 
கதைக்கான இணைப்பு:மேற்படி போட்டியில் இவர்கள் பரிசு பெற்றதற்கான அறிவிப்பு + 
இவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனத்தினைப் படிக்க:

சிறுகதை விமர்சனப்போட்டியில் ஒட்டுமொத்தமாகப்
பரிசுகளை வென்றோர் படங்களுக்கும் பல்வேறு அலசல்களுக்கும்


இவர்களை நான் பலமுறை கேட்டுக்கொண்டும், தன்னுடைய வங்கிக் கணக்கு விபரங்களை எனக்கு அனுப்பி வைக்காமலேயே இருந்து வந்ததால், இவருக்கான பரிசுத்தொகையினை என்னால் அனுப்பி வைக்க முடியாமல் அது என்னிடம் நிலுவையிலேயே இருந்து வந்தது. 
http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html  இந்த என் இணைப்பினில் காட்டியுள்ள 255 

நபர்களில் அனைவருக்குமே அவரவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு உரிய தேதிகளில் 

பரிசுப்பணம் பட்டுவாடா ஆகியிருந்தும், இவர்கள் ஒருவரின் பரிசுத்தொகையை 

இவர்களிடம் என்னால் சேர்க்க முடியாமல் போய் விட்டதே, என எனக்குள் ஓர் மனக்குறை 

இருந்துகொண்டே இருந்தது. 22.02.2015 ஞாயிறன்று இவர்களை இவர்களின் இல்லத்திலேயே நேரில் சந்திக்கும் வாய்ப்பு 

கிடைத்ததால், இவர்களுக்கான பரிசுத்தொகையை என்னால் இரட்டிப்பாகக் கொடுத்து 

வரமுடிந்தது. தாமதமான பட்டுவாடாவுக்காக இவர்களுக்கான பரிசுத் தொகை மட்டும் 

இரட்டிப்பாகக் கொடுக்க நான் முடிவெடுத்திருந்தேன். 


மேலும் என் போட்டிகளில் கலந்துகொண்டவர்களில் இவர் ஒருவரே ஒருவருக்கு 
மட்டுமாவது, வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்பாமல், நேரிலேயே என் கையால் மற்ற 
சில பதிவர்களின் முன்னிலையில், அவர்களின் பலத்த கரகோஷத்துடன், இதனை 
என்னால் கொடுக்க முடிந்ததில் எனக்கும் ஓர் மகிழ்ச்சியே! :)
அலங்கரிக்கப்பட்ட பரிசுத்தொகையின்
முன் பக்கமும் பின் பக்கமும்
மேலும் கீழுமாகக் காட்டப்பட்டுள்ளன.திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்கள் தன் வீட்டுக்கு அன்புடன் வருகை தந்திருந்த அனைத்துப் பதிவர்களையும் அன்புடன் ஒருவித தாய்ப்பாசத்துடன் வரவேற்று, ஸ்வீட்ஸ், உருளைக்கிழங்கு சாப்ட் போண்டாக்கள், மிருதுவான இட்லிகள், சாம்பார், சட்னி,  காஃபி, வாழைப்பழம் என அனைத்தும் கொடுத்து உபசரித்ததுடன் தான் எழுதிய ’திருக்குறள் கதைகள்’ என்ற ஒப்பற்ற நூல் ஒன்றினையும் அன்புப் பரிசாகவும் அளித்தார்கள்.


அவர்கள் எழுதிய நூலினை அவர்கள் 
கையொப்பத்துடன் எனக்கு பரிசளித்தபோது !

எம்.ஏ., பி.லிட் படித்துள்ள திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்கள் ஓர் குழந்தை எழுத்தாளர். குழந்தைகளுக்கான நீதிக்கதைகள் பல எழுதியுள்ளார்கள். ’கணினியில் கதை சொல்லும் கதைப்பாட்டி’ எனவும் பாராட்டுக்கள் பெற்றுள்ளார்கள். சென்னையிலிருந்து வெளிவரும் ’நம் உரத்த சிந்தனை’ என்ற தன்னம்பிக்கையூட்டும் தமிழ் மாத இதழ் மூலமாக ஒவ்வொரு ஆண்டும், தன் கணவரின் நினைவாக ‘அமரர் சேஷசாயி நினைவுச் சிறுகதைப் போட்டி’ என நடத்தி, சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கு பரிசும் அளித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

22.02.2015 ஞாயிறன்று நடைபெற்ற திருச்சி பதிவர்களின் சந்திப்பு ஏன் இவர்கள் வீட்டில் இவ்வளவு அவசரமாக நடத்தப்பட வேண்டும்? என்று தாங்கள் நினைப்பது மிகவும் நியாயம் தான். அது ஒரு பெரிய கதை ........

அடுத்த பதிவினில் சொல்கிறேன்.

தொடரும்


என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்] 

-oOo-

தேன் போன்ற இனிமையான 
பேரன்பு மிக்க தேனம்மைக்காக இந்தப்படம்
இப்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ளது:47 comments:

  1. உங்கள் கைவண்ணத்தில் பரிசுத்தொகை ஜொலித்தது !

    ReplyDelete
  2. செவிக்கும் வயிற்றுக்கும் உணவு கிட்டிய ஆனந்தம் எங்களுக்கு

    ReplyDelete
  3. ருக்மணி மேடம் சிறந்த எழுத்தாளர் அவரை பெங்கலூரில் சந்தித்தேன்..அன்பும் பரிவும் மிக்கவர்... அவருக்கு நீங்கள் அளித்த பரிசுத்தொகை அவர் மனம்போலவே ஜொலிக்கிறது

    ReplyDelete
  4. ஆஹா.... சிறப்பான வகையில் பரிசுத்தொகை அளித்து விட்டீர்கள்.....

    மேலும் என்ன நடந்தது என்று தெரிந்தாலும்.... தொடர்கிறேன்!

    ReplyDelete
  5. 5 ரூபாய் நோட்டுகளைப் பார்த்து அசந்தேன்.

    ReplyDelete
  6. தங்களது கைவண்ணத்தில் ரூபாய் நோட்டுகளின் அணிவகுப்பு அருமை ஐயா. அதை எடுக்க மனமே வராது. அவ்வளவு அழகு.

    ReplyDelete
  7. கோபு சார் அந்த கலையில் வல்லவர்!

    ReplyDelete
  8. பரிசளிப்பதில் நீங்கள் காட்டும் நேர்த்தி உங்களது .ஸ்பெஷாலிட்டி. .சார்.
    நானும் இங்கிருந்தே பலத்த கைத்தட்டல் அளிக்கிறேன். உங்களுக்கும் திருமதி ருக்மணி அவர்களுக்கும்.
    வாழ்த்துக்கள்.......

    ReplyDelete
  9. வெகு அருமையான பதிவு. அலங்காரமான பதிவும் கூட.
    ரிஷபன் ஜி அவர்களின் பதிவைப் படிக்கத்தான் என்னால் முடியவில்லை.
    மிக நன்றி கோபு சார்.

    ReplyDelete
  10. நேற்றைய பதிவர்கள் சந்திப்பின் அனுபவங்கள் தங்களின் கை வண்ணத்தில் படிப்பதற்கு சுவரசியமாகவும் இனிமையாகவும் இருந்தன!

    ReplyDelete
  11. பதிவர் சந்திப்பு நடந்த விபரம் அறிந்து மகிழ்ச்சி. திருமதி ருக்மணிக்குத் தாங்கள் அளித்த பரிசு வெகு அழகு! எதையும் நேர்த்தியுடன் செய்வது தங்களுக்குக் கைவந்த கலை! ருக்மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. சூப்பரா சொன்னீங்க கலை :)

      Delete
  12. 22/02/2015 அன்று மாலை எனது நண்பர் Dr.Rajuவின் மகள் கல்யாண ரிஸப்ஷனுக்காக அம்மா மண்டபம் வரை வந்திருந்தேன். தொலைபேசியில் கூறியிருந்தால் கூட நேரில் ஆஜராகியிருப்பேன். தோழர் வை.கோ என்றும் இளமையாக இருக்கிறார்! எனினும், இதனை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  13. முதல் புகைப்படத்தில் உங்கள் கை மறைக்காமளிருக்க கீதா மாமி எட்டிப் பார்ப்பது அழகு!

    வங்கிக் கணக்கு அனுப்பாததால் பரிசுத் தொகியை அனுப்ப முடியாத உங்கள் வருத்தத்துக்கு ஒரு வடிகால் கிடைத்தது மகிழ்ச்சி. அதை உங்கள் பாணியில் கலைப்பொருளாக வழங்கி இருப்பதற்கு ஒரு சபாஷ்!

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  14. பதிவர் என்ற சொந்தங்கள் தொடர்கதைதான் அருமை.
    பரிசுதொகை அழகாய் அலங்கரித்து கொடுத்தவிதம் மிக மிக அருமை.

    படங்கள் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  15. பொறுமையாக ரூபாய் நோட்டுக்களை விசிறி போல் வைத்து அதை அழகான அலங்காரத்தோடு கொடுத்தார். உண்மையிலேயே வைகோ சாரின் பொறுமையும், உழைப்பும், நேர்த்தியான வேலைத் திறனும் ஆச்சரியப்படத்தக்கது. பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப அழகா இருக்கீங்க கீத்ஸ் :)

      Delete
  16. அழகான பரிசு...

    இனிய சந்திப்பு...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. மகிழ்ச்சி. அடுத்தமுறை நானும்......

    ReplyDelete
    Replies
    1. துள்சி என்னையும் மறக்காண்டாம். :)

      Delete
  18. சுவாரசியமான பதிவு.அருமையான படங்கள். ருக்மணி மேடத்துக்கு நீங்க அளித்த பரிசு அருமை.

    ReplyDelete
  19. சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது. வலைப்பதிவர்கள் சந்திப்பும் அப்படித்தான். நீங்கள் சந்தித்த வேளையோடு நிறுத்திக் கொள்ள நினைத்தீர்கள். அதுவே மகிழ்ச்சியான தொடர்கதை ஆயிற்று.

    மூத்த வலைப்பதிவர் திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்களைப் பற்றிய சிறப்பான தகவல்களைப் பகிர்ந்து கொண்டீர்கள். ரூபாய் நோட்டுகளை விசிறிபோல் அடுக்கி அவருக்கு பரிசினை வழங்கியவிதம், உங்களின் கலை நுணுக்கத்தைக் காட்டுவதாக உள்ளது. வழக்கம்போல சஸ்பென்ஸ் வைத்து எழுதியது , மீண்டும் உங்கள் பக்கம் வந்து, படிக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இதன் அடுத்த தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  20. ருக்மணியம்மாவுக்கு பரிசளித்த பண விசிறி வெகு அழகாக இருந்தது. எதையும் நேர்த்தியாக செய்யும் மனப்பாங்குக்கு பாராட்டுகள் சார்.

    ருக்மணியம்மாவும் திறமைகள் பல படைத்தவர். நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார். ஆபரணங்கள் செய்வதிலும் அவருக்கு ஆர்வம் உண்டு. முன்பு ரோஷ்ணிக்கும் பரிசளித்திருக்கிறார். அவர் வயது ஒரு தடையல்ல என்பதற்கு உதாரணம். பேரனிடம் கணினி கற்று வலைப்பூவில் எழுதி வருகிறார்.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பளிச்சின்னு இருக்கீங்க நீங்களும் ரோஷிணியும் :)

      Delete

  21. சந்திப்புகள் மகிழ்வூட்டும்
    மகிழ்வூட்டும் பதிவர்கள் சந்திக்கையில்
    சந்திப்புகள் பயன்தருமே!

    ReplyDelete
  22. பணத்தைக் கொடுப்பது பெரிதல்ல. பரிசை அழகாய் அலங்கரித்துக் கொடுத்துள்ளது சிறப்பு சார். மிகப் பெரும் கைதட்டல் உங்களுக்கு

    சந்திப்பு சிறப்பாக தித்தித்தது. ஆமா என்ன ஸ்வீட்டுன்னு சொல்லலியே. சொன்னா படிச்சே ஜொள்ளிப்பேன்.

    ருக்கு அம்மா கையால நானும் காஃபி சாப்பிட்டுருக்கேன். சென்னையில் எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் அவங்க இருந்தாங்க. அடிக்கடி மீட் பண்ணுவோம். மிஸ் யூ ருக்கும்மா

    ReplyDelete
    Replies
    1. Thenammai Lakshmanan February 24, 2015 at 10:35 PM

      வாங்கோ, வணக்கம்.

      //பணத்தைக் கொடுப்பது பெரிதல்ல. பரிசை அழகாய் அலங்கரித்துக் கொடுத்துள்ளது சிறப்பு சார். மிகப் பெரும் கைதட்டல் உங்களுக்கு//

      மிக்க மகிழ்ச்சி ... மிக்க நன்றி. :)

      //சந்திப்பு சிறப்பாக தித்தித்தது. ஆமா என்ன ஸ்வீட்டுன்னு சொல்லலியே. //

      ஸ்வீட்: தேங்காய் பர்பி [20+20=40 ஆக] இரண்டு டப்பாக்களில் கொண்டு சென்றேன். தேன் அங்கு வருகை தராததால் ஒரு டப்பாவில் அதுவும்18 மட்டுமே செலவானது. இரண்டே இரண்டு மட்டுமே இப்போது பாக்கி உள்ளது.

      //சொன்னா படிச்சே ஜொள்ளிப்பேன்.//

      படித்தே மட்டுமல்ல .... பார்த்தும் ஜொள்ளிக்க அந்த மீதி இரண்டு ஸ்வீட்டினை படமாகவே இப்போது தங்களுக்காகவே இணைத்துள்ளேன்.

      //ருக்கு அம்மா கையால நானும் காஃபி சாப்பிட்டுருக்கேன். சென்னையில் எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் அவங்க இருந்தாங்க. அடிக்கடி மீட் பண்ணுவோம். மிஸ் யூ ருக்கும்மா//

      ஆம். இது எனக்கும் தெரியும். ஏற்கனவே ஒருமுறை சொல்லியிருக்கீங்க. 15.05.2011 அன்று சென்னை எக்மோர் கன்னிமாரா வாசக சாலையில் நடந்ததோர் ‘நம் உரத்த சிந்தனை’ பரிசளிப்பு விழாவினில் நானும், ருக்கு மேடமும் ஒரே மேடையில் சந்தித்திருக்கிறோம்.

      Ref. Link: http://gopu1949.blogspot.in/2015/02/1-of-6.html அந்த விழாவிற்கு தாங்கள் வருவதாகத்தான் இருந்தீர்கள். ஆனால் கடைசி நேரத்தில் வரமுடியாமல் போனதாக என்னிடம் ஏற்கனவே சொல்லியுள்ளீர்கள்.

      மிகப்பிரபலமான தங்களுக்கு இருக்கும் ஆயிரம் வேலைகளுக்கு இடையேயும் இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, அழகாக தேன் போன்ற பல கருத்துக்களை இனிமையாகப் பகிர்ந்துகொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      அன்புடன் கோபு

      Delete
    2. Thenammai Lakshmanan February 24, 2015 at 10:35 PM

      //சந்திப்பு சிறப்பாக தித்தித்தது. ஆமா என்ன ஸ்வீட்டுன்னு சொல்லலியே. சொன்னா படிச்சே ஜொள்ளிப்பேன்.//

      ருக்கு மாமி எங்களுக்குக்கொடுத்தது, மில்க் ஸ்வீட்ஸ் - சதுரமான வடிவில் மல்டி கலரில், ஒரு பாதி அரக்குக் கலராகவும், மறுபாதி மஞ்சள் நிறத்திலும் இருந்தது.

      VGK

      Delete
  23. அன்பான சந்திப்பு நிகழ்ந்திருகின்றது ..மிக அருமையாக உள்ளது உங்கள் கைவண்ணத்தில் ரூபாய் பரிசு ...ஆதி சுற்றளவில் வளந்துட்டிங்க ,ரோஷ்னி வளத்தியில் வளந்துட்டாங்க ...

    ReplyDelete
    Replies
    1. thirumathi bs sridhar February 25, 2015 at 10:23 AM

      வாங்கோ ஆச்சி, வணக்கம். தங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்வளிக்கிறது.

      //அன்பான சந்திப்பு நிகழ்ந்திருகின்றது ..மிக அருமையாக உள்ளது உங்கள் கைவண்ணத்தில் ரூபாய் பரிசு ...//

      மிக்க மகிழ்ச்சி .... மிக்க நன்றி. :)

      //ஆதி சுற்றளவில் வளந்துட்டீங்க//

      பிறரின் சுற்றளவைப்பற்றி நீங்களும் நானும் வாயைத் திறந்து ஒரு வார்த்தைகூட பேசவே கூடாதாக்கும். :))

      //ரோஷ்னி வளத்தியில் வளந்துட்டாங்க ...//

      ரோஷ்ணியின் அப்பாவும் அம்மாவும் நல்ல உயரமாக இருக்கும்போது ரோஷ்ணி மட்டும் வளராமல் என்ன செய்வாள்?

      மேலும் மேலும் நன்கு வளர்வாள், தோற்றத்தில் மட்டுமல்ல .... படிப்பு, ஓவியம், கைவேலைகள், சங்கீதம், பதிவுகள், புகைப்படத்தொழில் நுட்பங்கள் போன்ற அனைத்துத் துறைகளிலுமே கொடிகட்டிப் பறப்பாள் என எனக்குத் தோன்றுகிறது.

      குழந்தை ரோஷ்ணியை நாமும் ஆசீர்வதிப்போம்.

      ஆச்சியின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு

      Delete
    2. ஆச்சி - நான் தில்லியில் இருந்து வந்ததை விட வெயிட் நல்லாவே குறைந்து தான் போயிருக்கேன். ஏறக்குறைய ஒரு வருடமாக டயட்டில் இருக்கிறேன். உடற்பயிற்சியும், நடைபயிற்சியும், யோகாவும் தினந்தோறும் கடைபிடிக்கிறேன். எல்லாருமே இளைச்சு போயிட்டதா தான் சொல்றாங்க.... நீங்க மட்டும் தான் ஜாஸ்தியா ஆனதா சொல்றீங்க. தேங்க்ஸ்...:)

      எல்லோரும் காலை வேளையில் காபி, டீ, பால் ஏதாவது ஒன்றாவது இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் நான் பால் சேர்த்துக் கொள்வதை நிறுத்தி ஆறு மாதங்களுக்கு மேலாகிறது.....:)) மாலை மட்டும் 1 கப் டீ...:)

      இன்னும் பலவும் இருக்கு.....:)

      Delete
    3. வை.கோ சார் - ஆசீர்வாதங்களுக்கு மிக்க நன்றி.

      Delete
  24. //அலங்கரிக்கப்பட்ட பரிசுத்தொகையின்
    முன் பக்கமும் பின் பக்கமும்
    மேலும் கீழுமாகக் காட்டப்பட்டுள்ளன.//

    எல்லாவற்றையும் தாண்டிய உங்கள் ஈடுபாடு தான் ஜொலித்துக் கொண்டு முன் நிற்கிறது.. எதையும் எவ்வளவு நேர்த்தியாகச் செய்கிறீர்கள் என் று எழுதுவதற்குள், ஈடுபாடு இருந்தால் தன்னாலே நேர்த்தி வரும் என்கிற உண்மை மனசில் பளிச்சிடுகிறது! மனசில் அன்பு பூத்துக் குலுங்கினால் கூடவே ஈடுபாடும் வந்துவிடுமோ, கோபு சார்?..

    ReplyDelete
  25. ஜீவி February 25, 2015 at 2:39 PM

    வாங்கோ, நமஸ்காரம், வணக்கம்.

    **அலங்கரிக்கப்பட்ட பரிசுத்தொகையின் முன் பக்கமும் பின் பக்கமும் மேலும் கீழுமாகக் காட்டப்பட்டுள்ளன.**

    //எல்லாவற்றையும் தாண்டிய உங்கள் ஈடுபாடு தான் ஜொலித்துக் கொண்டு முன் நிற்கிறது.. எதையும் எவ்வளவு நேர்த்தியாகச் செய்கிறீர்கள் என்று எழுதுவதற்குள், ஈடுபாடு இருந்தால் தன்னாலே நேர்த்தி வரும் என்கிற உண்மை மனசில் பளிச்சிடுகிறது! மனசில் அன்பு பூத்துக் குலுங்கினால் கூடவே ஈடுபாடும் வந்துவிடுமோ, கோபு சார்?..//

    நம் சிறுகதை விமர்சனப்போட்டிகளில் உயர்திரு நடுவராகிய தங்களால் பரிசுக்குத்தேர்வான அனைத்து 198 விமர்சனதாரர்களுக்கும் பரிசுத்தொகைகளை மிகச்சரியாக வழங்கிவிட்டோம் என்ற முழுத்திருப்தி 22.02.2015 ஞாயிறு அன்று மாலைவேளையில்தான் எனக்கு ஏற்பட்டது.

    இதில் பணப்பட்டுவாடாக்கள் ஆன 197 நபர்கள் போக, பட்டுவாடா ஆகாத அந்த ஒரேயொருவர் பற்றிய மனக்குறை நீண்ட நாட்களாகவே என் அடிமனதில் உறுத்திக்கொண்டிருந்ததால், ஈடுபாடு தானாகவே ஏற்பட்டு விட்டது.

    எல்லாவற்றிற்கும் தங்களின் அன்பும் ஆசீர்வாதமும் மட்டுமே காரணம், ஸார்.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
  26. எத்தனை முறை சொன்னாலும், உங்களுக்கு இணை நீங்களே தான்.

    என் பெண்ணும் நீங்கள் கொடுத்த ரூபாய் விசிறியை வெகு பத்திரமாக வைத்திருக்கிறாள்.

    உங்களின் வாழ்த்துக்களை மாப்பிள்ளை, பெண் இருவருக்கும் நீங்கள் சொன்னபடி சனிக்கிழமை அன்றே அனுப்பி விட்டேன்.

    //இதில் பணப்பட்டுவாடாக்கள் ஆன 197 நபர்கள் போக, பட்டுவாடா ஆகாத அந்த ஒரேயொருவர் பற்றிய மனக்குறை நீண்ட நாட்களாகவே என் அடிமனதில் உறுத்திக்கொண்டிருந்ததால், ஈடுபாடு தானாகவே ஏற்பட்டு விட்டது. //

    உங்கள் குறை நீங்கி விட்டது. ஆனால் திருச்சிக்கு வந்து பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற எங்கள் குறை உங்கள் பதிவுகளைப் பார்த்து கொஞ்சூண்டு தான் குறைந்திருக்கு.

    ருக்மணி அம்மாவிற்கு என் வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

    அன்புடன்
    ஜெயந்தி ரமணி

    ReplyDelete
  27. செய்வன திருந்தச் செய் என்று சொல்வார்கள். அதற்கேற்ப தாங்கள் எந்தப் பொறுப்பை எடுத்தாலும் மிக நேர்த்தியாக செய்வதும் அதற்காக கடினமாய் உழைப்பதும் எப்போதும் என்னை வியக்கவைக்கும் விஷயங்கள். இங்கு ருக்மணி மேடத்துக்கான பரிசும் அப்படியே. பாராட்டுகள் கோபு சார்.

    ReplyDelete
  28. தாமதமாகப் பட்டுவாடா ஆனாலும் இரட்டிப்பாக, அதுவும் தாங்களே நேரில் சென்று கொடுக்க முடிந்ததில் திருப்தி அடைந்திருப்பீர்கள்! தங்கள் கைவண்ணத்தில் அலங்கரிக்கப் பட்ட பரிசுத் தொகை அழகாய் மிளிர்வதைக் கண்டு வியந்தேன்! நன்றி ஐயா!

    ReplyDelete
  29. எல்லோரும் எழுதியிருக்கும் பின்னூட்டங்கள் எல்லாம் நன்ராக உங்களையறிந்து எழுதியிருக்கிரார்கள். எல்லா கலையிலும் வித்தகரான உங்களின் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். ஸந்திப்பு களை கட்டிவிட்டது. தொடருகிறேன். அன்புடன்

    ReplyDelete
  30. பகிர்வும் படங்களும் நல்லா இருக்கு. பாராட்டுகள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  31. ’கணினியில் கதை சொல்லும் கதைப்பாட்டி’ எனவும் பாராட்டுக்கள் பெற்றுள்ளார்கள். சென்னையிலிருந்து வெளிவரும் ’நம் உரத்த சிந்தனை’ என்ற தன்னம்பிக்கையூட்டும் தமிழ் மாத இதழ் மூலமாக ஒவ்வொரு ஆண்டும், தன் கணவரின் நினைவாக ‘அமரர் சேஷசாயி நினைவுச் சிறுகதைப் போட்டி’ என நடத்தி, சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கு பரிசும் அளித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது./

    அருமையான மனம் கவர்ந்த எழுத்தாளர் பற்றி குறிப்புகள் சிறப்பு...
    தித்திக்கும் சந்திப்புகள்...

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி October 19, 2015 at 10:53 AM

      வாங்கோ, வணக்கம்.

      **’கணினியில் கதை சொல்லும் கதைப்பாட்டி’ எனவும் பாராட்டுக்கள் பெற்றுள்ளார்கள். சென்னையிலிருந்து வெளிவரும் ’நம் உரத்த சிந்தனை’ என்ற தன்னம்பிக்கையூட்டும் தமிழ் மாத இதழ் மூலமாக ஒவ்வொரு ஆண்டும், தன் கணவரின் நினைவாக ‘அமரர் சேஷசாயி நினைவுச் சிறுகதைப் போட்டி’ என நடத்தி, சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கு பரிசும் அளித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.**

      //அருமையான மனம் கவர்ந்த எழுத்தாளர் பற்றி குறிப்புகள் சிறப்பு... தித்திக்கும் சந்திப்புகள்...//

      அருமையான மனம் கவர்ந்த தங்களின் அன்பு வருகைக்கும், தித்திக்கும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      Delete
  32. அவங்கூட்டுல காபிதண்ணி டிபனெல்லா தருவாஙகனு மொதகவே சொல்லிபினா நானுகூட ஓடோடி வந்திருப்பேன்ல. பொறவால அந்த தேனம்மை அம்மாவங்களுக்காக இன்னாமோ ஸ்வீட்டு படம் போட்டீகளே அது இன்னாது.

    ReplyDelete
  33. இனிய சந்தோஷமான பகிர்வுகள் தொடரட்டும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  34. இனிய சந்தோஷமான பகிர்வுகள் தொடரட்டும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  35. எல்லாமே ஜாம்பவான்கள்தான் போலிருக்கிறது. தொடருங்கள். தொடர்கிறேன்.

    ReplyDelete