About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, January 30, 2011

ப வ ழ ம்




”ஒரிஜினல் நற்பவழம், எங்க அண்ணன் வெளிநாட்டுக்குப் போய் வந்தபோது எனக்காகவே ஆசையாக வாங்கி வந்தது” என ராஜி வழக்கம் போல தன் பிறந்த வீட்டுப் பெருமையை, அக்கம் பக்கத்து வீட்டாரிடன் பீத்திக் கொண்டிருந்தாள்.

யார் போட்ட தூபமோ தெரியவில்லை. தலையணி மந்திரம் ஓதும் வேளையில், அந்தப் பவழத்தில் தங்கம் தோய்த்து, மாலையாக்கி கழுத்தில் போட்டுக் கொண்டால், தோஷங்கள் நிவர்த்தியாகி, ஒரு சில நோய்கள் நம்மைத் தாக்காமல் இருக்குமாம், என்றாள்.

நானும் நள்ளிரவு நேரத்தில் ஏதோ ஒரு ஜோரிலோ அல்லது தூக்கக் கலக்கத்திலோ “அப்படியே செய்து விட்டால் போச்சு” என்று சொன்னதாக ஒரு ஸ்வப்ன ஞாபகம் மட்டுமே உள்ளது. 

மறுநாள் ஆபீஸ் சென்றதும் தான் கவனித்தேன். என் பர்ஸில் ஆயிரம் ரூபாய் குறைந்திருந்தது.

ராஜியைக் கூப்பிட்டுக் கேட்டதற்கு, ”நீங்கள் தான் நேத்து ராத்திரி ஆசையாகச் சொன்னேளே! பவழ மாலைக்கு ஆர்டர் கொடுத்து அட்வான்ஸ் கொடுத்து விட்டேன்” என்றாள். 

இந்த விஷயத்தில் மட்டும் , அவளின் சுறுசுறுப்பு என்னை மிகவும் பிரமிக்கச் செய்தது.

ஒரு வாரம் ஆனது, நானும் அந்த விஷயத்தை அத்தோடு மறந்து விட்டேன்.

“பவழ மாலை ரெடியாகி விட்டதாம்; கடைக்காரர் போன் செய்து சொன்னார்; ஆபீஸ் விட்டு வரும் போது மறக்காமல் வாங்கி வந்துடுங்க; என் அண்ணாவும் மன்னியும் (அண்ணனும் அண்ணியும்) இன்று இரவு நம் வீட்டுக்கு வருவதாகச் சொல்லியிருக்காங்க; அவர்கள் வந்ததும் அப்படியே அதையும் கழுத்தில் போட்டுக்காட்டி விடலாம்” என்று அன்புக்கட்டளை இட்டாள், என் அருமை ராஜி.

கடைக்குப் போனபின் தான் எனக்குத் தெரியும்,  பவழத்தின் மேல் மூனே முக்கால் பவுன் தங்கம் போடப்பட்டுள்ளது என்ற விஷயம். 

அட்வான்ஸ் பணம் ஆயிரம் போக, தங்கம் விலை, கூலி, சேதாரம், வரி, சேவை வரி அது இது என்று சுளையாக அறுபத்து இரண்டாயிரம் ரூபாய் தரணும் என்றார் அந்த நகைக் கடைக்காரர். 

நல்பவழம் வாங்கி வந்த மச்சானை மனதிற்குள் திட்டித்தீர்த்தேன். 

ரொக்கக் கையிருப்பு, ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் என்ற எல்லாவற்றின் மூலமும் நகைக்கடைக்குத் தர வேண்டிய பணத்தைக் கட்டி விட்டு, ஒருவழியாக பவழ மாலையுடன் வீட்டுக்கு விரைந்தேன்.

ஆளுயரக் கண்ணாடி முன் நின்று பவழ மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டு, இப்படியும் அப்படியும் திரும்பித் திரும்பி, தன் உடலை ஒரு ஆட்டு ஆட்டி விட்டு, பிறகு என் தோளில் தன் தோளால் ஒரு இடி இடித்துவிட்டு, அக்கம்பக்கத்தவரிடம் அலட்டிக்கொள்ள ஆரம்பித்தாள் என்னவள்.

ஆபீஸ் விட்டு வந்ததும், வழக்கமாக எனக்குக் கிடைக்கும் டிபன் காஃபி கிடைக்காத கடுப்பை விட, அவள் மற்றவர்களிடம் போய், இந்தப் பவழ மாலை என் அண்ணன் வெளி நாட்டிலிருந்து, எனக்காகவே ஆசை ஆசையாக வாங்கி வந்தது என்று பெருமையாகச் சொன்னதில், சுளையாக அறுபத்து மூவாயிரம் ரூபாய் கொடுத்த எனக்கு மிகுந்த கடுப்பை ஏற்படுத்தியது.

ooooooooooo


இந்தச் சிறுகதை www.nilacharal.com என்ற இணைய தளத்தில் March 2007 க்கான மிகச்சிறந்த சிறுகதையாக தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்டது.

43 comments:

  1. போனாப் போவுது ஸார்.. நம்ம மச்சானுக்குத் தானே பெருமை எல்லாம்.. விட்டுக் கொடுத்து போவோம்.. (இதுக்கு பேருதான் என்ன அடிச்சலும் தாங்கறது)

    ReplyDelete
  2. ஹஹஅஹா.. எல்லா வீட்டுலயும் நடப்பதுதானே .. பிறந்த வீடு பெருமை பேசுவது பெண்களின் வழமை

    ReplyDelete
  3. நல்ல கதையா இருக்கே. அறுபத்து மூவாயிரம் ரூபாய் கொடுத்தவர்க்கு ஒரு பாராட்டும் இல்லையா? பாவம்! ஆனாலும் வெளிப்படையா ஒண்ணும் சொல்ல முடியாது! மனசுக்குள்தான் சொல்லிக்கணும்!

    ReplyDelete
  4. "நற்ப‌வ‌ழமாலை" ஒரு வாழ்விய‌ல். உண்மையைக‌ளில் சிலவ‌ற்றை இப்ப‌டி க‌தைகளில் தான் கொட்டித்தீர்க‌ முடிகிற‌து. சாரிதானே வைகோ சார்?

    ReplyDelete
  5. பவழம் அண்ணன் கொடுத்த்து; தங்கம் என்னோடது - அப்படின்னு கூடக்கூட சொல்லிக்க வேண்டியது தான்!

    ReplyDelete
  6. ஐயோ பாவம்
    வேறென்ன சொல்ல?

    ReplyDelete
  7. உங்க வீட்டிலேயும் அப்படியா? கேட்கிறதிற்கு ஸாரி..ஸாரி...பார்ப்பதற்க்கு ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது........

    ReplyDelete
  8. ரிஷபன் said... //போனாப் போவுது ஸார்..
    நம்ம மச்சானுக்குத் தானே பெருமை எல்லாம்.. விட்டுக் கொடுத்து போவோம்.. (இதுக்கு பேருதான் என்ன அடிச்சாலும் தாங்கறது)//

    அன்புள்ள என் எழுத்துலக குருநாதர் திரு. ரிஷபன் சார் அவர்களின் அபூர்வ வருகைக்கும், என்ன அடிச்சாலும் தாங்கி, விட்டுக் கொடுத்துட்டுப் போவோம், என்று (இல்வாழ்க்கை இனிமையாகக் கழிய வேண்டி), எடுத்துரைத்த உயர்ந்ததொரு உபதேசத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  9. எல் கே said...// ஹஹஅஹா.. எல்லா வீட்டுலயும் நடப்பதுதானே .. பிறந்த வீடு பெருமை பேசுவது பெண்களின் வழமை //

    தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    எல்லா வீட்டுலேயும் இவ்வாறு நடப்பதோ, எல்லாப் பெண்களும் அவ்வாறு பிறந்த வீட்டுப் பெருமை பேசுபவர்களாக இருப்பதோ இல்லை சார்.

    நீங்கள் சொல்வதெல்லாம் டீ.வி & சீரியல் வருவதற்கு முன்பு, முன்னொரு காலத்தில் நடந்திருக்கலாம். இப்போது பேச்சே குறைந்து விட்டது.

    பெரும்பாலானவர்கள் ஆபீஸ் போய் விடுகிறார்கள். வீட்டில் உள்ள ஒரு சிலர் டீ.வி. சீரியலில் மூழ்கிவிடுகிறார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் அதிகமாக பேசுவதில்லை.

    ReplyDelete
  10. வெங்கட் நாகராஜ் said...// நல்ல கதையா இருக்கே. அறுபத்து மூவாயிரம் ரூபாய் கொடுத்தவர்க்கு ஒரு பாராட்டும் இல்லையா? பாவம்! ஆனாலும் வெளிப்படையா ஒண்ணும் சொல்ல முடியாது! மனசுக்குள்தான் சொல்லிக்கணும்!//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    வெளிப்படையா ஒண்ணும் சொல்லாவிட்டாலும், இந்தக் கதையில் வரும் கதாநாயகனின் மனம் முழுவதும் கதாநாயகி “ராஜி” நீக்கமற நிறைந்திருப்பதால் தானே, இவ்வளவு ரூபாய் பணம் செலவு செய்கிறார். ஆதாயமில்லாமலா இருக்கும் ? அவளின் ஒரு புன்னகை போதுமே இந்தப் பொன் நகையை விட அவருக்கு என்றும் மகிழ்ச்சியளிக்க !

    ReplyDelete
  11. vasan said...// "நற்ப‌வ‌ழமாலை" ஒரு வாழ்விய‌ல். உண்மைக‌ளில் சிலவ‌ற்றை இப்ப‌டி க‌தைகளில் தான் கொட்டித்தீர்க்க‌ முடிகிற‌து. சரிதானே வைகோ சார்?//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    வாழ்வியல் ரகசிய உண்மைகளைப் புட்டுப்புட்டு வைத்து விட்டீர்கள். நீங்கள் சொன்னா அது சரியாகத் தான் இருக்கும்.

    ReplyDelete
  12. middleclassmadhavi said...// பவழம் அண்ணன் கொடுத்த்து; தங்கம் என்னோடது - அப்படின்னு கூடக்கூட சொல்லிக்க வேண்டியது தான்! //

    தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    மாப்பிள்ளை ...... இவர் தான் ..... ஆனாக்க இவர் போட்டிருக்கிறாரே டிரஸ் ... அது என்னோடது ... என்று சந்திக்கும் ஒவ்வொருவரிடமும், செந்திலைக் காட்டி ரஜினி சொல்லுவாரே; அது போலவா?

    ReplyDelete
  13. raji said...// ஐயோ பாவம் ... வேறென்ன சொல்ல?//

    தங்கள் வருகைக்கும், கதாநாயகன் மேல் காட்டும் ’ஐயோ பாவம்’ என்ற அனுதாபத்திற்கும் நன்றிகள்.
    ’வேறென்ன சொல்ல’ நானும்.

    ReplyDelete
  14. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
    //உங்க வீட்டிலேயும் அப்படியா? கேட்கிறதிற்கு ஸாரி..ஸாரி...பார்ப்பதற்க்கு ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது........//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    அப்போ அங்கேயேயும் அப்படியே தானா? சும்மா தமாஷுக்குத் தான் சொல்லுகிறீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

    என் சஷ்டியப்தபூர்த்தி விழாவினை ஒட்டி, சிறுகதைத் தொகுப்பு நூல்கள் இரண்டு, வந்திருந்த அனைவருக்கும் இலவச வெளியீடு செய்தபோது, நீங்கள் மேடை ஏறி நகைச் சுவையாகப் பேசியது நினைவிருக்கிறதா? ”இந்த அன்னதான ஸமாஜ கல்யாண மண்டபத்தை என்னால் மறக்கவே முடியாது. சுமார் 24 வருஷங்களுக்கு முன்பு இங்கு எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது” என்று சொல்லி எங்கள் எல்லோரையும் என்னாச்சோ ஏதாச்சோ என்று திடுக்கிடச் செய்து, பிறகு எனக்கும் இதே மண்டபத்தில், இதே மேடையில் தான் திருமணம் நடைபெற்றது” என்று சொல்லி சிரிக்க வைத்தீர்கள். அந்த வீடியோவை, சந்தர்ப்பம் கிடைக்கும் போது தங்கள் துணைவியாரிடம் போட்டுக் காண்பிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது தாங்கள் எழுதியுள்ள இந்தப் பின்னூட்டமும் என்னிடம் உள்ளது. நீங்கள் மாட்டப்போவது நிச்சயமே.

    ReplyDelete
  15. இவ்வளவு பணம் செலவழித்து வாங்கி கொடுத்தவருக்கு காபி, டிபன் கூட கிடைக்கலையா? ஐய்யோ பாவம்.

    ReplyDelete
  16. கோவை2தில்லி said...// இவ்வளவு பணம் செலவழித்து வாங்கி கொடுத்தவருக்கு காபி, டிபன் கூட கிடைக்கலையா? ஐய்யோ பாவம்.//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    பவழமாலை வாங்கிக்கொண்டு வந்த அன்று மட்டும், வாங்கிக் கொண்டு வந்ததனால் மட்டும், (ராஜியின் சந்தோஷ மிகுதியினாலும், பிறர் பாராட்டை உடனடியாகப் பெற வேண்டும் என்ற ஆவலினாலும்) வழக்கமாக அவருக்குக் கிடைக்கும் மாலை நேரக் காஃபி, டிபன் etc., உரிய நேரத்தில் கிடைக்காமல் போனது.

    ஒரு வேளை இரவு ஸ்பெஷல் விருந்தளிக்கப் பட்டிருக்கலாம்.

    ReplyDelete
  17. கோபு ஸார்! நீங்களே சொன்ன மாதிரி இப்படிப் பெருமை பீத்திக்கிற காலமும் மலையேறிப் போச்சு.யாரும் யாருடனும் பேசிக் கொள்வது இல்லை.கதையிலாவது ராஜி அக்கம்பக்கத்திலுள்ளவர்களிடம் ரெண்டு வார்த்தை பேசிட்டுப் போகட்டுமே?

    நானாயிருந்தால் இந்த நற்பவழம் வீட்டுள்ளே நுழைந்தால் வேறெதுவும் நடக்காது என்று முன்கூட்டியே செலவோடு செலவா டிஃபன் காபி முடிச்சுட்டுத் தெம்பாப் போயிருப்பேன்.பாவம் ஸார் நீங்க.

    ReplyDelete
  18. திரு.சுந்தர்ஜி அவர்களே,
    தங்கள் வருகைக்கும், என்னைப்போலவே

    //இந்த நற்பவழம் வீட்டுள்ளே நுழைந்தால் வேறெதுவும் நடக்காது என்று முன்கூட்டியே செலவோடு செலவா டிஃபன் காபி முடிச்சுட்டுத் தெம்பாப் போயிருப்பேன்.//

    என்ற தங்கள் சுபாவத்திற்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    இந்தக் கதையில் வரும் கதாநாயகனுக்கு, விவரம் பத்தாது. புது மாப்பிள்ளையாக இருப்பாரோ என்னவோ;

    சும்மாவா? நமக்கெல்லாம் எவ்வளவு அனுபவம், இது போன்ற விஷயங்களில்.

    அன்புடன்............

    ReplyDelete
  19. வை.கோ.ஸார்.. நாம நேரில பார்த்து..பேசி..ரொம்ப நாளாச்சு..ஃப்ரீயா இருக்கும் போது ஒரு நா.. நாம இர்ண்டு பேரும் ஒரு ஃபைவ்
    ஸ்டார் ஹோட்டலில் டிபன் சாப்பிடலாமா?

    பின் குறிப்பு: வரும் போது மறக்காமல் அந்த விடியோ கேஸட்டைக் கொண்டு வரவும்!!

    ReplyDelete
  20. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
    //வை.கோ.ஸார்.. நாம நேரில பார்த்து.. பேசி.. ரொம்ப நாளாச்சு..ஃப்ரீயா இருக்கும் போது ஒரு நா.. நாம இர்ண்டு பேரும் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் டிபன் சாப்பிடலாமா?

    பின் குறிப்பு: வரும் போது மறக்காமல் அந்த விடியோ கேஸட்டைக் கொண்டு வரவும்!!//

    தங்களின் மறு வருகைக்கும் அழைப்புக்கும் நன்றி.

    நீங்கள் மாட்டப்போவது நிச்சயம், என்று நான் சொன்னதும், அரண்டு மிரண்டு போய் என்னைத் தாஜா செய்து, ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குக் கூப்பிட்டு, வீடியோ கேஸட்டைக் கைப்பற்றிவிட திட்டமிடுவது புரிகிறது.

    இவ்வளவு வருட இல் வாழ்க்கைக்குப் பிறகும், தர்ம பத்னியிடம்,[என்னைப் போலவே] இவ்வளவு பயம் கொண்டுள்ளதான தங்களின் நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு.

    20.02.2011 ஞாயிறு நடைபெறும், எங்கள் வீட்டு விழாவுக்கு கட்டாயம் குடும்பத்துடன் வாங்க. ஷார்ஜாவிலிருந்து திருமதி. மனோ சுவாமிநாதன் தனது வருகையை உறுதி செய்துள்ளார்கள். தங்களையும், திரு. ரிஷபன் அவர்களையும் அன்றைய விழாவில் சந்திப்பதில் அவர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளார்கள்.

    மற்றவை நேரில்.

    ReplyDelete
  21. பவழமாலைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. இராஜராஜேஸ்வரி said...
    //பவழமாலைக்கு வாழ்த்துக்கள்.//

    மிக்க மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete
  23. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  24. அற்புதமான படைப்பு.வாழ்த்துக்கள்.கதையில்
    ஒரு கணவருடைய கஷ்டத்தை அழகாக எதார்த்தமாக சுட்டிக் காட்டியது சூப்பர்.

    ReplyDelete
  25. Asiya Omar said...
    //அற்புதமான படைப்பு.

    வாழ்த்துக்கள்.

    கதையில் ஒரு கணவருடைய கஷ்டத்தை அழகாக எதார்த்தமாக சுட்டிக் காட்டியது சூப்பர்.//

    தங்கள் அன்பான வருகைக்கும், அழகான [அதுவும் ஆண்களின் கஷ்டத்தை உணர்ந்து கூறியுள்ள]
    கருத்துக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  26. குடும்பத்தில் நடக்கும் நடைமுறை வாழ்க்கையை அழகாக தந்திருக்கிறீங்க அண்ணா. அருமையான கதை.

    ReplyDelete
  27. ammulu September 25, 2012 3:08 AM
    //குடும்பத்தில் நடக்கும் நடைமுறை வாழ்க்கையை அழகாக தந்திருக்கிறீங்க அண்ணா. அருமையான கதை.//

    அன்புத் தங்கையின் வருகையும், மிகவும் யதார்த்தமாக எடுத்துக்கொண்டு வழங்கியுள்ள அழகான கருத்துக்களும் மகிழ்வளிக்கின்றன. மிக்க நன்றி சகோதரி.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  28. ஹாஹா...

    எல்லார் வீட்டிலும் இந்த இடி கிடைக்கத்தான் செய்கிறது.. பாவம் ஆண்களின் நிலை....இல்லை இல்லை கணவர்களின் நிலை....

    ஆசை ஆசையா வெளிநாட்டில் இருந்து பவழம் மட்டுமே வாங்கிக்கொடுத்த அண்ணா அந்த பவழத்தை மோதிரமாகவோ கம்மலாகவோ செயினாகவோ செய்து கொண்டு வந்து கொடுக்க அண்ணி விட்டிருக்கமாட்டாங்க போல... அதனால் தான் பவழம் மட்டும் கொடுத்திருக்கார் அண்ணா... அதான் அதில் பொன் சேர்க்க ஏமாந்த சோணகிரி மாப்பிள்ளை இருக்காரே :)

    பவழத்தை மாலையா போட்டுக்க படுக்கையில் அவர்கள் கேட்டதும் ஸ்வப்னத்தில் சொன்னது போல ஹாஹா இந்த வரிகள் படித்ததும் சிரிப்பு வந்துவிட்டது அண்ணா....

    இப்படி தான் நிறைய வீட்டில் நகைகள் தூக்கக்கலக்கத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதோ என்று சந்தேகமாக இருக்கிறது....

    என்ன தான் அண்ணா வாங்கிக்கொடுத்ததை அக்கம் பக்கத்தில் சொல்லி அலட்டிக்கொண்டாலும் ( அலட்டிக்கலன்னா தூக்கமே வராது அன்றைய பொழுதும் முடியாது அதுவேற விஷயம்) 62 ஆயிரமா அடேங்கப்பா தங்கத்தின் விலை அப்பவே உயர்வு தான் போல.... கணவன் செலவு செய்த 62000 ஆயிரம் மனைவி கண்ணுக்கு தெரியவே இல்லைப்போல என்ன ஒரு உரிமை...

    ரசித்து வாசித்தேன் அண்ணா.. எழுத்து நடையில் நகைச்சுவை மட்டுமல்லாது கணவர்களின் சங்கடங்களை மிக அசத்தலாக எழுத்தில் வடித்தது சிறப்பு அண்ணா....

    பவழம் யார் யாருக்கு ராசியோ அவர்களெல்லாம் இனிமே அண்ணாக்கு மெயில் அனுப்பிரனும்பா... அண்ணா பவழம் வாங்கி தந்தால் தானே நாங்க எங்க ஆத்துக்காரர் கிட்ட சொல்லி மாலை வாங்கி போட்டுக்கமுடியும்..

    அசத்தலான நடைக்கொண்ட சிறப்பான கதை பகிர்வுக்கும் நிலாச்சாரலில் 2007 ல தங்களின் கதை சிறந்த கதையாக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் அண்ணா....

    அட இந்த ஐடியா தந்தமைக்கு அன்பு நன்றிகள் அண்ணா... :)

    ReplyDelete
    Replies
    1. மஞ்சுபாஷிணிDecember 9, 2012 10:00 PM
      //ஹாஹா... ....................
      ..................................//

      அன்புள்ள மஞ்சு,

      வாங்கோ, வணக்கம்.

      தங்களின் முழு ஈடுபாட்டுடன் கூடிய மிக நீண்ட பின்னூட்டம் வாசித்து மகிழ்ந்தேன். அப்படியே நேரிலோ அல்லது தொலைபேசியிலோ பேசுவது போலவே உள்ளதும்மா!

      கணவர்களின் மேல் உங்களுக்கு ஏற்படும் பரிதாபம்,

      ஏமாந்த சோணகிரி மாப்பிள்ளை என்ற ஒரு புதுப்பட்டம்,

      ஸ்வப்ன ஞாபகத்தைப்படித்து நீங்கள் சிரித்தது,

      தூக்கக்கலக்கத்தில் ஏதோ ஒரு ஜோரில் ஒப்புதல் வாங்குவது,

      அக்கம்பக்கத்தில் சொல்லி அலட்டிக்காட்டா தூக்கம் வராது,

      தங்கம் விலை உயர்வு பற்றி ஏதும் கண்டுகொள்ளாமல் உரிமை எடுத்துக்கொள்ளும் தங்கமான மனைவி

      என்று ஏதேதோ சொல்லிவந்து கடைசியில்

      //அட இந்த ஐடியா தந்தமைக்கு அன்பு நன்றிகள் அண்ணா... :)//

      எனச்சொல்லியிருக்கிறீர்கள்.

      என் தங்கை மஞ்சுவின் ஆத்துக்காரரை நினைக்க எனக்கு பாவமாக உள்ளது.

      அதனால் கோபு அண்ணா, மஞ்சுவுக்காக பவழங்கள் மட்டும் வாங்கித்தருவதாக இல்லை.

      தங்கத்துடன் சேர்த்த பவழமாலையாகவே இன்றே அனுப்பி வைக்கலாம் என நினைக்கிறேன்*****.

      பிரியமுள்ள கோபு அண்ணா.



      [***** மெயில் மூலம் தான்*****]

      Delete
  29. இப்படித்தான் உலகில் நடக்கிறது. கஷ்டப்படுகிறது நாம். ஆனால் பேர் வாங்கறதோ வேறு யாரோ?

    ReplyDelete
  30. அம்மா வீட்டுல இருந்து வந்தா ஒஸ்திதான் ராஜி. இல்லைன்னு சொல்லல. அதுக்குன்னு ஆத்துக்காரரை கவனிக்காம இருக்கலாமோ? சரி இனிமே நன்னா கவனியுங்கோ?

    என்ன ‘அவ்விடத்தில் எப்படின்னு’ கேக்கறேளா?

    ஒரு நடை வந்துதான் பாருங்கோளேன்.

    ReplyDelete
  31. இந்த பொண்ணு களுக்கு இவ்வளவு நகை ஆசையா? சரி இருநதுவட்டு போகட்டும். அதுக்காக புருஷனை விட்டுக் கொடுக்கலாமோ?

    ReplyDelete
  32. பெண்ணின் மனத்தை இதைவிடவும் அழகாக காட்டிவிட முடியாது. பிறந்தவீட்டைப் பற்றி புகுந்தவீட்டில் பெருமை பேசுவார்கள். புகுந்த வீட்டைப் பற்றி பிறந்தவீட்டில் பெருமை பேசுவார்கள்.. பெண்களின் மனப்போக்கு அப்படி.. போகுமிடமெல்லாம் பெருமை பேசும் குணம்.. :)

    ReplyDelete
  33. இது நல்ல கதயா இருக்கே பொறந்தவூட்டு பெருமக்காக கட்டின புருசன விட்டுகிடலாமா எந்தூரு நாயம்?

    ReplyDelete
  34. ஆண்களே ஐயோபாவம் அடிச்சா திருப்பிகூட அடிக்க தெரியாத ஏமாளிகள்தான். அந்த அம்மிணி பிறந்த வீட்டு பெருமை பேசிக்கட்டும் வேண்டாம்னு சொல்லலை. ஆனா புருஷனை ஒரு மனுஷனாகூட மதிக்கலயே. வெரி வெரி பேட்.

    ReplyDelete
  35. மாப்புள இவருதான் ஆனா இவரு போட்டிருக்கிற சட்ட என்னோடது....அப்படிங்கிறமாதிரி அண்ணன் வாங்கித்தந்த பவழ-மாலைதானே அது...என்னதான் 63 ஆயிரம் தந்தாலும் அது தங்க மாலை ஆயிடுமா...??? சரியான தலைப்புதான்...

    ReplyDelete
  36. //ஆபீஸ் விட்டு வந்ததும், வழக்கமாக எனக்குக் கிடைக்கும் டிபன் காஃபி கிடைக்காத கடுப்பை விட, அவள் மற்றவர்களிடம் போய், இந்தப் பவழ மாலை என் அண்ணன் வெளி நாட்டிலிருந்து, எனக்காகவே ஆசை ஆசையாக வாங்கி வந்தது என்று பெருமையாகச் சொன்னதில், சுளையாக அறுபத்து மூவாயிரம் ரூபாய் கொடுத்த எனக்கு மிகுந்த கடுப்பை ஏற்படுத்தியது.//
    ஐயோ பாவம்!

    ReplyDelete
  37. இப்பவும் பெண்களுக்கு பிறந்தவீட்டு பாசமும் பெருமையும் இருக்கத்தான் செய்யுது. அதுல ஒன்னும் தப்பில்லதான். அந்த பவழத்துக்கு மேற்கொண்டு சேர்த்த தங்கத்தின் விலைதான் மறக்க& மறைக்கப்பட்டுவிட்டது. பவழமாலை கிடைத்த சந்தோழத்தில் கணவருக்கு ஸ்வீட் காரம் காபி கொடுத்திருக்கக்கூடாதோ. இவரை " எப்படி" யும் சமாளிச்சுக்கலாம்னு எண்ணி இருப்பாங்க போல. ஆரண்யநிவாஸ் சாரின் பின்னூட்டம்(2) தங்களின் ரிப்ள படிச்சு நல்லா சிரிக்கமுடிந்தது. ரொம்பவே குறும்புகாரர்தான் நீங்க. நான் இந்த பழய பதிவெல்லாம் படித்து ரசித்து போடும் பின்னூட்டங்களுக்கு உடனடியாக ரிப்ளை பண்ணிடுவீங்க இல்லியா அதனாலதான் "அங்க" யும் எதிர் பார்த்தேன். யாரிடமும் எந்த எதிர் பார்ப்பும் வச்சுக்ககூடாதுன்னு அறிவு சொல்லுது. உணர்வுகளால நிறைந்திருக்கும் மனது கேக்க மாட்டேங்குதே. அறிவுபூர்வமா சொல்றத கௌக்கறதா??? உணர்வுபூர்வமா சொல்றத கேக்கறதா??????????????

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... February 5, 2016 at 11:15 AM

      வாங்கோ, வணக்கம்.

      //இப்பவும் பெண்களுக்கு பிறந்தவீட்டு பாசமும் பெருமையும் இருக்கத்தான் செய்யுது. அதுல ஒன்னும் தப்பில்லதான்.//

      அதெல்லாம் ஒன்றும் தப்பே இல்லை. பிறந்த வீட்டில் நடப்பட்ட நாற்றல்லவா, ஒரு ஸ்டேஜில் வேரோடு பிடுங்கப்பட்டு இங்கு புகுந்த வீட்டில் கொண்டுவந்து மீண்டும் நட்டு, நன்கு தழைத்து வளரும் பயிராக்கப்பட்டுள்ளது :)

      //அந்த பவழத்துக்கு மேற்கொண்டு சேர்த்த தங்கத்தின் விலைதான் மறக்க & மறைக்கப்பட்டுவிட்டது.//

      அதுதான் இதில் மறைந்துள்ளது. என்னதான் அதில் நாம் தங்கம் சேர்த்தாலும் அது ’பவழமாலை’ என்று தானே பிறகும் அழைக்கபடுகிறது. :)

      //பவழமாலை கிடைத்த சந்தோஷத்தில் கணவருக்கு ஸ்வீட் காரம் காபி கொடுத்திருக்கக்கூடாதோ.//

      கொடுத்திருக்கலாம்தான்.

      ஆனால் பவழமாலை வரப்போகும் சந்தோஷத்தில் ஒருவேளை மறந்திருப்பாள் .... அன்று ஸ்வீட் + டிபன் + காஃபி தயார் செய்யவே :)

      பால் பாக்கெட் கூட வாங்கி சேமித்திருந்தாளோ இல்லையோ? :)

      //இவரை " எப்படி" யும் சமாளிச்சுக்கலாம்னு எண்ணி இருப்பாங்க போல.//

      ஆமாம். இரவு வேளையானால் இந்த மனுஷன் செக்குமாடு போலத் தன்னைத்தானே சுற்றிச்சுற்றி வந்தாக வேண்டும் எனவும், அப்போது எப்படியும் இவரை மிகச் சுலபமாக சமாளித்துக்கொள்ளலாம் எனவும் நினைத்திருப்பாள். :)

      //ஆரண்யநிவாஸ் சாரின் பின்னூட்டம்(2) தங்களின் ரிப்ள படிச்சு நல்லா சிரிக்கமுடிந்தது. ரொம்பவே குறும்புகாரர்தான் நீங்க.//

      அவர் என் இனிய நண்பர். ஒரே அலுவலகத்தில் நாங்கள் பல்லாண்டுகள் சேர்ந்து பணியாற்றியுள்ளோம். என் வீட்டுக்கு அவரும், அவர் வீட்டுக்கு நானும் போய் வருவதும் உண்டு. எங்கள் இருவருக்குமே நகைச்சுவை உணர்வுகள் அதிகம் உண்டு. இதோ இந்தப்பதிவினைப் பாருங்கோ, ப்ளீஸ்:

      http://gopu1949.blogspot.in/2014/08/blog-post.html

      //நான் இந்த பழய பதிவெல்லாம் படித்து ரசித்து போடும் பின்னூட்டங்களுக்கு உடனடியாக ரிப்ளை பண்ணிடுவீங்க இல்லியா அதனாலதான் "அங்க" யும் எதிர் பார்த்தேன்.//

      அதனால் பரவாயில்லை. தங்களின் எதிர்பார்ப்பில் எந்தத்தப்பும் இல்லை. நானும்கூட உங்களைப்போலவேதான், சிலரிடம் மட்டும், இதனை கட்டாயமாக எதிர்பார்ப்பது உண்டு. அவர்களில் சிலர் என்னை ஏமாற்றியதும் உண்டு.

      //யாரிடமும் எந்த எதிர் பார்ப்பும் வச்சுக்ககூடாதுன்னு அறிவு சொல்லுது. உணர்வுகளால நிறைந்திருக்கும் மனது கேக்க மாட்டேங்குதே. அறிவுபூர்வமா சொல்றத கேட்கிறதா??? உணர்வுபூர்வமா சொல்றத கேக்கறதா??????????????//

      நம் உணர்வுகள் மட்டுமே (நம் அறிவினை பல நேரங்களில் மழுங்கடித்துவிட்டு) கடைசியில் ஜெயிக்கும். இதில் எனக்கும் நிறைய அனுபவங்கள் உண்டு.

      உணர்வுகள் மேல்எழும்பி பேரெழுச்சியை ஏற்படுத்தும் போதெல்லாம் அறிவினைக் கழட்டி நான் அப்புறப்படுத்தி விடுவேன். இது பொதுவாக மனித இயல்புதான்.

      நாம் யாருமே மஹான்கள் அல்ல. சிற்றின்பத்தையே பேரின்பமாக நினைப்பவர்கள் மட்டுமே. நன்கு யோசித்துப்பார்த்தால் இதில் ஒன்றும் தப்போ/தவறோ இல்லை என்ற முடிவுக்குத்தான் நானும் வந்துள்ளேன்.

      பேரின்பம் பற்றி எவ்வளவு சிந்தித்தாலும் நம் மூளைக்கு அது விளங்கப்போவது இல்லை. ஒருநாளும் அதை நாம் எட்டப்போவதும் இல்லை.

      புரியாத ஒன்றைப்பற்றி மண்டையை உடைத்துக்கொள்வதில் எனக்கு இஷ்டமில்லை. சிற்றின்பமே இன்றைக்கு மிகச்சுலபமாக நமக்கு எட்டக்கூடிய பேரின்பமாகும்.

      எனவே, நிறுத்தி, நிதானமாக, இதனால் ஆபத்து ஏதும் வராதா என மட்டும் கொஞ்சம் யோசித்துப் பார்த்துவிட்டு, உணர்வு பூர்வமாகவே எப்போதும் செயல் படுங்கோ. வாழ்த்துகள். :)

      அன்புடன் VGK

      Delete
  38. ஹப்பா.... எவுவளவு விவரமான நீண்ட ரிப்ளை. தேங்க்ஸ் அ லாட்.....

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... February 6, 2016 at 10:10 AM

      //ஹப்பா.... எவுவளவு விவரமான நீண்ட ரிப்ளை. தேங்க்ஸ் அ லாட்.....//

      :))))) மிக்க நன்றி. :)))))

      Delete
  39. இந்த விஷயத்தில் மட்டும் அவளின் சுறுசுறுப்பு என்னைப் பிரமிக்கச் செய்தது
    கடைக்குப் போன பின் தான் தெரியும் பவழத்தின் மேல் மூனே முக்கால் பவுன் போடப்பட்டுள்ள விஷயம்.
    என்ற வரிகளை மிகவும் ரசித்தேன். பலவீடுகளில் நடக்கும் ஒரு நிகழ்வைச் சுவையான கதையாக்கி விட்டீர்கள். அது மார்ச் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதையாகத் தேர்வு பெற்றதுக்குப் பாராட்டுகள் கோபு சார்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், கதையின் ஒருசில இடங்களை மிகவும் ரசித்ததாகச் சொல்லி, சுட்டிக்காட்டிப் பாராட்டியுள்ளதற்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். :)

      Delete