About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, February 2, 2011

வரம்

அவர்கள் இருவரும் அறுபது வயதைத் தாண்டிய, ஆனால் ஆரோக்கியமான தம்பதி. அந்த ஜோடி தங்களது நாற்பதாவது திருமண நாளை, ஒரு சிறிய தேனீர் விடுதியில், மிகுந்த அன்புடனும், எளிமையாகவும், சிறப்பாகவும் கொண்டாடியது.

அவர்களின் பாசத்தையும், நேசத்தையும், பிரியத்தையும், காதலையும் உணர்ந்த தேவதை ஒன்று, அவர்கள் முன்பு தோன்றி, திருமண நாள் வாழ்த்துக்கள் கூறி, ஆளுக்கு ஒரு வரம் வீதம் கேட்டால் அளிப்பதாகச் சொன்னது.

இதைக் கேட்டு மனம் மகிழ்ந்த மனைவி, “ஆஹா, நான் என் பிரியமுள்ள கணவருடன் இந்த உலகைச் சுற்றி வர விரும்புகிறேன்” என்றாள்.

உடனே அதற்கான பெரிய பயணத்திட்டம், விமானப் பயண முன் பதிவுக்கான சீட்டுகள், மற்றும் ஆங்காங்கே தங்குவதற்கான ஹோட்டல் முன் பதிவுகள், உணவு வசதிகள், வெவ்வேறு நாட்டு பணக்கட்டுகள், ஒவ்வொரு இடத்திலும் உள்ளூரைச் சுற்றிப் பார்க்க வாடகைக்காருக்கான முன் பதிவுகள், தொலைபேசி எண்கள், புத்தாடைகள் மற்றும் பயணத்திற்கான அனைத்துப் பொருட்களும் அவள் முன், தேவதையால் அளிக்கப் பட்டன. இதைப் பார்த்து வியந்து போனார்கள், அவர்கள் இருவரும்.

இதைக் கண்ட கணவர் ஒரு நொடி சிந்தித்தார் . நல்லதொரு அரிய வாய்ப்பு இது. இதைத் தவற விட்டால் மீண்டும் கிடைக்கக் கூடியது அல்ல, என்று எண்ணினார்.

மனைவியைப் பார்த்து, “நான் கேட்கப் போகும் இந்த வரத்திற்காக என்னை நீ மன்னிக்க வேண்டும்” என்று கூறி விட்டு, தேவதையிடம் ஒரு விசித்திரமான வரம் கேட்கலானார்.

”என் மனைவி, என்னை விட 30 வயது சிறியவளாக இருக்க விரும்புகிறேன். இது தான் எனக்குத் தேவையான வரம்” என்றார்.

இதைக்கேட்டதும், அவர் மனைவி மட்டுமல்லாமல், அந்த தேவதையும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தது.


ஓரளவு வயதாகியும், ஆண்களுக்கு தொடர்ந்து ஏற்படும் இது போன்ற சபல புத்தியை எண்ணி வியந்தனர், அவர் மனைவியும் அந்த தேவதையும்.

இருப்பினும், தேவதை தான் ஏற்கனவே வாக்குக் கொடுத்தபடி, உடனே அவரின் வரத்தையும் நிறைவேற்றிக் கொடுத்து விட்டு, மறைந்து விட்டது.

.....

...........

..................

நன்றி கெட்ட, முட்டாள் தனமான, பேராசை பிடித்த இந்த மனிதருக்கு கிடைத்தது உண்மையிலேயே “வரம்” தானா? என்று அவருக்கே இப்போது புரியாமல் குழப்பம் ஏற்பட்டது.

...

......

.........

....................

பாவம் ...... அவர், இப்போது 92 வயதுக் குடுகுடுக் கிழவராக தேவதையால் மாற்றப்பட்டிருந்தார்.



28 comments:

  1. பேராசை பெருநஷ்டம் என்பது இந்தப் பெரியவருக்குப் பொருந்தும் என நினைக்கிறேன். நல்ல நகைச்சுவையான கதை. பகிர்வுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  2. முதல் இரண்டு பத்திகளுக்கும்
    கடைசி இரண்டு பத்திகளுக்கும் தான்
    எத்தனை முரண்.மிக அழகாக
    மிக அழ்கான கதை சொல்லியிருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வரம் சாபமான கதை

    ஐயோ பாவம்

    ReplyDelete
  4. பேராசை பெரு நஷ்டம்

    ReplyDelete
  5. பாவம் மனைவி! அவர் வரமும் வீணாகி விட்டது! அருமையான நீதிக் கதை!

    ReplyDelete
  6. இப்படி ஆகி போச்சே!!!!!!!
    நல்லதொரு நீதிக் கதை.

    ReplyDelete
  7. Ramani said... //முதல் இரண்டு பத்திகளுக்கும் கடைசி இரண்டு பத்திகளுக்கும் தான் எத்தனை முரண்.மிக அழகாக மிக அழ்கான கதை சொல்லியிருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்//

    அன்புள்ள ரமணி சார், தங்கள் முதல் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். தங்கள் வாழ்த்துக்கள் என்னை மிகவும் உற்சாகப் படுத்தியுள்ளது. மீண்டும் நன்றி.

    திரு. வெங்கட்
    திரு. எல். கே
    திருமதி ராஜி
    திருமதி மி கி மாதவி &
    திருமதி கோவை2தில்லி

    தங்கள் அனைவரின் அன்பான வருகைக்கும், ஆதரவான கருத்துக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  8. Wow gr8 story gr8 ending! "covet all lose all"the proverb best suits to this story.

    ReplyDelete
  9. Girija said...
    Wow gr8 story gr8 ending! "covet all lose all"the proverb best suits to this story.

    Thank you very much Girija !

    [This is also a new story for you & not covered in any of the 3 books so far released]

    ReplyDelete
  10. நன்றி கெட்ட, முட்டாள் தனமான, பேராசை பிடித்த இந்த மனிதருக்கு கிடைத்தது உண்மையிலேயே “வரம்” தானா? என்று அவருக்கே இப்போது புரியாமல் குழப்பம் ஏற்பட்டது.

    நினைக்கும் கேடு
    தனக்கே வருமே வரமாக !

    ReplyDelete
  11. அவர்களின் பாசத்தையும், நேசத்தையும், பிரியத்தையும், காதலையும் உணர்ந்த தேவதை ஒன்று, அவர்கள் முன்பு தோன்றி, திருமண நாள் வாழ்த்துக்கள் கூறி, ஆளுக்கு ஒரு வரம் வீதம் கேட்டால் அளிப்பதாகச் சொன்னது.

    வரமளிக்கும் தேவதை அளித்த வரத்தை இப்படி வீணாக்கிவிட்டாரே அறிவுக்கொழுந்து கணவன் !

    ReplyDelete
  12. இராஜராஜேஸ்வரி said...
    நன்றி கெட்ட, முட்டாள் தனமான, பேராசை பிடித்த இந்த மனிதருக்கு கிடைத்தது உண்மையிலேயே “வரம்” தானா? என்று அவருக்கே இப்போது புரியாமல் குழப்பம் ஏற்பட்டது.

    நினைக்கும் கேடு
    தனக்கே வருமே வரமாக !//

    நல்லாவே சொல்லிட்டீங்க!
    அதே.... அதே....

    ReplyDelete
  13. இராஜராஜேஸ்வரி said...
    அவர்களின் பாசத்தையும், நேசத்தையும், பிரியத்தையும், காதலையும் உணர்ந்த தேவதை ஒன்று, அவர்கள் முன்பு தோன்றி, திருமண நாள் வாழ்த்துக்கள் கூறி, ஆளுக்கு ஒரு வரம் வீதம் கேட்டால் அளிப்பதாகச் சொன்னது.

    வரமளிக்கும் தேவதை அளித்த வரத்தை இப்படி வீணாக்கிவிட்டாரே அறிவுக்கொழுந்து கணவன் !//

    அதானே, பாருங்கள்..... ;(

    அறிவுக்கொழுந்து ..
    ஒரே சிரிப்பு தான் எனக்கு.

    ஏற்கனவே “உலக்கைக்கொழுந்து” என்பது பற்றி ஒரு மிகப்பெரிய விளக்கம் ஒன்றினை என் பின்னூட்டப்பெட்டியில் கொடுத்து அசந்தியிருந்தீர்கள். அதுவும் நினைவுக்கு வந்தது.

    கொட்டப்பாக்கு .....
    கொழுந்து வெத்தல .....
    போட்டா வாய் மணக்கும் ....
    பாடலும் நினைவுக்கு வந்தது.

    நிறைய கொழுந்தன்கள் உடையவராகையால் ‘கொழுந்து’ என்ற சொல் உங்களுக்கு நல்லா அத்துப்பொடி ஆகியிருக்கும் என்றும் நான் நினைக்கிறேன்.

    அழகான கருத்துக்களுக்கும், அன்பான வருகைக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  14. //இந்த மனிதருக்கு கிடைத்தது உண்மையிலேயே “வரம்” தானா? என்று அவருக்கே இப்போது புரியாமல் குழப்பம் ஏற்பட்டது.//
    எனக்கும்தான்.

    சூப்பர் அண்ணா.நீங்க எழுதிய விதம் அருமை. நல்ல கதை.

    ReplyDelete
    Replies
    1. ammulu October 4, 2012 12:32 AM
      ****இந்த மனிதருக்கு கிடைத்தது உண்மையிலேயே “வரம்” தானா? என்று அவருக்கே இப்போது புரியாமல் குழப்பம் ஏற்பட்டது.****

      //எனக்கும்தான்.//

      ஆஹா! அருமையான உணர்வுக்குழப்பம் தங்களுக்கும்.

      //சூப்பர் அண்ணா.நீங்க எழுதிய விதம் அருமை. நல்ல கதை.//

      தங்கள் அன்பான வருகைக்கும். அழகான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், அம்முலு.

      அன்பின் அண்ணா
      கோபு

      Delete
  15. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு(குறைவு) என்பார்கள். பேராசைக்காரனுக்கும் புத்தி மட்டுத்தான்:)

    இப்படி இருக்கிறதைவிட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்டா இருந்ததும் போச்சே!!! இதைத்தான் இருந்ததையும் இழந்தாய் போற்றி என்று நாம் நகைச்சுவையாய் சொல்வதுண்டு:)))

    நல்ல நறுக்குக் கதை. பிடிச்சிருக்கு.
    வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  16. அன்பின் இளமதி,

    வணக்கம். வாங்கோ.

    //நல்ல நறுக்குக் கதை. பிடிச்சிருக்கு.
    வாழ்த்துக்கள் ஐயா!//

    ரொம்ப சந்தோஷம்....ம்ம்ம்ம்மா ;)

    ஆசைப்படலாம் தப்பில்லை ஆனால் பேராசைப்படக்கூடாது என்று அழகாகச் சொல்லிட்டீங்க. அதனால் ஆசை மட்டும் இனி நாம் பட வேண்டும், பேராசை படக்கூடாது என்று புரிந்து கொள்வோம்.

    அன்பான வருகைக்கும் அழகான சொல்லுக்கும் மனமார்ந்த நன்றிகள், ’யங் மூன்’.

    பிரியமுள்ள
    VGK

    ReplyDelete
  17. அடடா! என்ன இது இப்படி எழுதிட்டேளே.

    முதல் நான்கு பத்திகளைப் படித்ததும்:

    மே 1, 2013 எங்களுக்கு முப்பதாவது திருமணநாள். எங்களுக்கும் இது போல் ஏதாவது வரம் கிடைக்குமான்னு யோசிச்சேன்.

    முழுக்க படிச்சதும் புஸ்ஸுன்னு காத்து இறங்கின பலூன் மாதிரி ஆயிடுத்து மனசு.

    சாமி கிட்ட எறும்பு, நான் கடிச்சதும் சாகணும்ன்னு முட்டாள்தனமா வரம் கேட்ட மாதிரி இல்ல இருக்கு.

    ஆனா ஒண்ணு. திரு ரமணி (அதான் எங்காத்துக்காரர்) இந்த மாதிரி பைத்தியக்காரத்தனமா எல்லாம் வரம் கேக்க மாட்டார். ரொம்ப கெட்டிக்காரராக்கும்.

    ReplyDelete
  18. //JAYANTHI RAMANIFebruary 8, 2013 at 1:41 AM

    வாங்கோ, வணக்கம்.

    //அடடா! என்ன இது இப்படி எழுதிட்டேளே.

    முதல் நான்கு பத்திகளைப் படித்ததும்:

    மே 1, 2013 எங்களுக்கு முப்பதாவது திருமணநாள். எங்களுக்கும் இது போல் ஏதாவது வரம் கிடைக்குமான்னு யோசிச்சேன்.//

    சந்தோஷம். NOTED. அன்பான ஆசிகள். அட்வான்ஸ் வாழ்த்துகள். வரம் கிடைக்காவிட்டாலும் என்னிடமிருந்து அன்று உங்களுக்கு ஓர் ஆச்சர்யம் வந்து சேரும்.

    //முழுக்க படிச்சதும் புஸ்ஸுன்னு காத்து இறங்கின பலூன் மாதிரி ஆயிடுத்து மனசு.//

    காத்து இறங்கின பலூன் ... இந்த இடத்தில் இது மிகச்சிறந்த உதாரணம். ;)))))))

    நல்லா நகைச்சுவையா [Timely Joke] ஏதாவது சொல்லி என்னையே சிரிக்க வைக்கும் சாமர்த்தியம் உங்களிடம் உள்ளது. நிறைய இடத்தில் இதை நான் கவனித்து விட்டேன்.

    உங்கள் பெண் சொன்னது கரெக்ட் தான். [”அதாவது எல்லா வீடுகளிலும் குழந்தைகள் தான் வாலாக இருக்கும் ஆனால் எங்கள் வீட்டின் என் அம்மா தான் வாலு” என்று சொன்னது.] அவங்க வாய்க்கு சர்க்கரை தான் போடணும்.

    //சாமி கிட்ட எறும்பு, நான் கடிச்சதும் சாகணும்ன்னு முட்டாள்தனமா வரம் கேட்ட மாதிரி இல்ல இருக்கு.//

    எறும்பு கடித்தால் நாம் அதை அடிப்போம். அதுவல்லவா செத்துப்போகும். இதுவும் முட்டாள் தனத்திற்கு மிகச்சரியான உதாரணம் தான்.

    //ஆனா ஒண்ணு. திரு ரமணி (அதான் எங்காத்துக்காரர்) இந்த மாதிரி பைத்தியக்காரத்தனமா எல்லாம் வரம் கேக்க மாட்டார். ரொம்ப கெட்டிக்காரராக்கும்.//

    சந்தோஷம். ஏற்கனவே கெட்டிக்காரராகவே இருந்திருப்பார். உங்களை மணந்த பிறகு அவரின் கெட்டிக்காரத்தனம் பலமடங்கு உயர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    தங்களுக்கும் அவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

    தங்களின் அன்பான வருகைக்கும், நகைச்சுவை மிகுந்த கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
  19. பல சமயங்களில் நாம் இப்படித்தான் யோசிக்காமல் முடிவுகள் எடுக்கிறோம்.

    எண்ணித்துணிக கருமம் துணிந்த பின்
    எண்ணுவம் என்பது இழுக்கு.

    என்று வள்ளுவர் சொன்னது மிகவும் பொருத்தம்.

    ReplyDelete
  20. அந்த மனுஷர் ஏன் அப்படி வரம் கேட்டார். அந்த அம்மா கேட்ட வரத்தையும் தேவதை கொடுத்ததா?

    ReplyDelete
  21. பேராசை பெருநஷ்டம் என்று சும்மாவா சொன்னார்கள்? வரமில்லாத போதே வாழ்க்கை இனிதாய் இருந்திருக்கும். இப்போது வரமென்று நினைத்து சாபத்தை அல்லவா பெற்றுக்கொண்டிருக்கிறார். சொந்த செலவில் சூனியம் என்பது இதுதானோ? நகைச்சுவையும் நீதியும் கலந்த அருமையான கதை. பாராட்டுகள் கோபு சார்.

    ReplyDelete
  22. கத நல்லா இருந்திச்சி. அந்த வயசாளி ஏன் அப்படி ஒரு வரம் கேக்காக.

    ReplyDelete
  23. திடீர்னு ஒரு தேவதை நம்ம முன்னால தோன்றி ஏதாவது வரம் கேளுன்னா பதட்டத்துல என்ன கேக்கணும்னே தோணாதுதான். அந்த பெரியவரும் பதட்ட்ப்பட்டுத்தான் அப்படி ஒரு வரத்த கேட்டிருக்கணும்.

    ReplyDelete
  24. அடடா...செம டுவிஸ்ட்...கடைசியில் மிகவும்...ரசித்து....சிரித்தேன்...நீங்கள் எப்புடி சினிமா பக்கம் போகாம மிஸ் பண்ணுனீங்கன்னு தெரியல...சூப்பர்...சிறிய சபலத்துக்கு செரி மாத்து...

    ReplyDelete
  25. பேராசையின் பலன் இந்த நிலை! அருமை!

    ReplyDelete
  26. நாற்பதாவது திருமண நாளை சந்தோஷமாக கொண்டாடும் அன்பான அந்த தம்பதிகளுக்கு தேவதை வரம் கொடுக்க நினைத்தது நல்ல விஷயம்தான். அந்த அம்மாவும் அவங்களுக்கு பிடிச்சமாதிரி வரம் கேட்டாங்க. அந்த பெரியவர் மனதில் மட்டும் சபலம் புகுந்துகிட்டதுபோல. தன் மனைவி 30- வயது சிறியவளாக இனுக்கும்படி கேட்டது மனைவியை எப்பவும் இளமையாக பார்க்க எண்ணி இருக்கலாம். அதேசமயம் அவனின் 92-- வது வயதில் அவர்கேட்ட வரத்தால் அவருக்கே எந்தவித பிரயோசனமும் இருக்காதே..........

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... February 8, 2016 at 10:12 AM

      வாங்கோ, வணக்கம்.

      //நாற்பதாவது திருமண நாளை சந்தோஷமாக கொண்டாடும் அன்பான அந்த தம்பதிகளுக்கு தேவதை வரம் கொடுக்க நினைத்தது நல்ல விஷயம்தான்.//

      ஆம்.... நல்ல அதிர்ஷ்டம் தான் அவர்களுக்கு !

      //அந்த அம்மாவும் அவங்களுக்கு பிடிச்சமாதிரி வரம் கேட்டாங்க.//

      கரெக்டு :)

      //அந்த பெரியவர் மனதில் மட்டும் சபலம் புகுந்துகிட்டதுபோல. தன் மனைவி 30- வயது சிறியவளாக இருக்கும்படி கேட்டது மனைவியை எப்பவும் இளமையாக பார்க்க எண்ணி இருக்கலாம்.//

      பொதுவாக எல்லா ஆண்களுக்குமே ஏற்படும் அற்புதமான இயல்பான சபலம்தான் இது. தன் மனைவிக்கு இன்னும் இன்னும் இளமை ஊஞ்சலாட வேண்டும் என நினைத்து நியாயமான ஆசைதான் பட்டுள்ளார், அந்த மனிதர்.

      //அதேசமயம் அவரின் 92-- வது வயதில் அவர் கேட்ட வரத்தால் அவருக்கே எந்தவித பிரயோசனமும் இருக்காதே..........//

      அதானே ! 92 வயதில் உடலும், உள்ளமும், ஸ்பேர் பார்ட்ஸ் உறுப்புக்களும் ஒன்றுமே அவருடன் ஒத்துழைக்காதே .... அவரே இதனை எதிர்பார்க்கவில்லை போலும் .... ’உள்ளதும் போச்சு நொள்ளைக்கண்ணா’ என்றொரு பழமொழி சொல்வார்கள். அதுபோல் அல்லவா ஆகிவிட்டது அவரின் நிலை. அவரை நினைக்க எனக்கே மிகவும் பரிதாபமாக உள்ளது. அவர் மனைவியின் நிலமையும் இனி மிகவும் கஷ்டமே. :)

      தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      Delete