About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, May 24, 2011

மூ க் கு த் தி [ பகுதி 2 of 7 ]



முன்கதை முடிந்த இடம்:

கையில் குடையுடன், மஞ்சள் பையில் பணத்துடன், ஒரு நல்ல நாளில், நல்ல நேரத்தில்,  பஸ் பிடித்து, டவுனில் உள்ள ஒரு பிரபல நகைக்கடைக்குள், காலை பத்து மணிக்குப் பிரவேசித்தேன்.

-------------------------

வாசல் கண்ணாடிக்கதவை திறந்து விட்டார் ஒருவர், ராணுவ சிப்பாய் உடையில். கடையில் கூட்டமான கூட்டம்.டவுனில் சினிமாக்கொட்டகை, ரேஷன் கடை, அடுத்தது டாஸ்மாக் கடையில் தான் கூட்டமாக இருக்கும் என்று பார்த்துள்ளேன், கேள்விப்பட்டுள்ளேன்.  அதற்கு அடுத்தபடியாக பஸ் ஸ்டாண்டுகளிலும், ரயில்வே ஸ்டேஷன்களிலிலும் மக்கள் கூட்டம் அலைமோதும்.

இப்போது ஜவுளிக்கடைகளிலும், நகைக்கடைகளிலும், பண்டிகைகாலம் ஏதும் இல்லாதபோதும் கூட, மக்கள் கூட்டம்கூட்டமாக வந்து, போட்டிபோட்டுக்கொண்டு, ஏதேதோ வாங்கிச்செல்கின்றனர்.

மக்களின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாகவும், நாட்டில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளதாகவும், ஏதேதோ செய்திகள் படித்த ஞாபகம் எனக்குள் ஏற்பட்டது. 

தங்கம் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருவதாகவும் சொல்லுகிறார்கள். மேலும் மேலும் உயரக்கூடும் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் இவ்வாறு கூடுகிறார்களோ என்னவோ?

எங்கிருந்து தான் எப்படித்தான், பணம் புரளுகிறதோ ! கிராமத்தானாகிய எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.வரட்சியால் தண்ணீர் இல்லாமலும், மழை வெள்ளத்தால் அதிகத்தண்ணீர் சூழ்ந்தும், பயிர்கள் வீணாகி, அல்லல்படும் எனக்கு, தங்கம் வாங்க இவர்கள் பணத்தைத் தண்ணீர் போல செலவு செய்வதைப்பார்க்க வேடிக்கையாகத்தான் இருந்தது.

அந்த குளிரூட்டப்பட்ட கடையில் முதலில் என்னை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தபோதும், ஒருவன் டிப்டாப் உடையில் என்னை நெருங்கி, “பெரியவரே, குடையை நீட்டிக்கொண்டு இப்படி குறுக்கே நிற்காதீர்கள், மற்றவர்கள் மேல் அது குத்திவிடும். உங்களுக்கு என்ன வேண்டும்” என்று வினவினான்.

”மூக்குத்தி ஒன்று பார்க்க வேண்டும்” என்றேன்.

“நேராகப்போய் அந்தக்கடைசியில் உள்ள லிஃப்டில் ஏறி நாலாவது மாடிக்குப்போங்க” என்றான்.

லிஃப்டில் ஏறுவதற்கே ஒரு நீண்ட க்யூ வரிசை காத்திருந்தது.  பேசாமல் படி ஏறிச்சென்றுவிடலாமா என்று நான் நினைத்தபோதே, “அய்யா, பெரியவரே! சீக்கரம் நகர்ந்து போங்க, லிஃப்ட் வந்து விட்டது” என்று சொல்லி என்னை அந்த லிஃப்ட் ரூமுக்குள் தள்ளிக்கொண்டு போய்விட்டனர், அங்கு கூடியிருந்த ஜனங்கள்.


தொடரும் 

  
{ இந்தக்கதையின் தொடர்ச்சி [பகுதி 3 / 7] நாளை மறுநாள் வியாழக்கிழமை 26.05.2011 அன்று வெளியிடப்படும். }

37 comments:

  1. சின்ன சின்ன பாகமாக பிரித்து , தொடர் கதையைத் தந்து இருப்பதால், வாசிக்க இன்னும் நன்றாக இருக்கிறது. :-)

    ReplyDelete
  2. அட நகைக்கடைக்குள் போயாச்சா! நாங்களும் உங்களுடனேயே லிஃப்டில் இருந்த கொஞ்ச இடத்தில் ஏறிவிட்டோம்….

    ReplyDelete
  3. நாங்களும் வரோம் உங்க கூட மூக்குத்தி வாங்க

    ReplyDelete
  4. கதை விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது..

    ReplyDelete
  5. தொடர்கின்றோம்...

    ReplyDelete
  6. வந்துட்டம்மய்ய வந்துட்டோம்...

    ReplyDelete
  7. என்ன இந்த முறை சுருக்கிவிட்டீர்கள்? இப்போதுதான் கடைக்குள் வந்திருக்கிறீர்கள்! இப்போதெல்லாம் நகைக்கடை, ஜவுளிக்கடைகளில் கூட்டம் அதிகம் என்பது உண்மைதான்! கதை இனிமையாக போய்க்கொண்டு இருக்கிறது!

    ReplyDelete
  8. மூக்குத்தி பற்றிய கதையென்பதால் மூக்குத்தி சைஸிலேயே கதையையும் நகத்தறீங்க போலிருக்கு?

    ReplyDelete
  9. கதை ஆரம்பித்தவுடன் முடியற மாதிரி இருக்கு.. அவ்ளோ சுவாரஸ்யமா இருக்கு!!

    ReplyDelete
  10. வரட்சியால் தண்ணீர் இல்லாமலும், மழை வெள்ளத்தால் அதிகத்தண்ணீர் சூழ்ந்தும், பயிர்கள் வீணாகி, அல்லல்படும் எனக்கு, தங்கம் வாங்க இவர்கள் பணத்தைத் தண்ணீர் போல செலவு செய்வதைப்பார்க்க வேடிக்கையாகத்தான் இருந்தது.//
    தண்ணீர் பிரச்சினை. தண்ணீரே பிரச்சினை.

    ReplyDelete
  11. அந்த குளிரூட்டப்பட்ட கடையில் குடையை நீட்டிக்கொண்டு குறுக்கே நிற்பவரையும், கடையையும் நன்றாக பார்க்க முடிகிறது. அருமையாய் விவரிப்புடன் கூடிய நடைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. டவுனில் சினிமாக்கொட்டகை, ரேஷன் கடை, அடுத்தது டாஸ்மாக் கடையில் தான் கூட்டமாக இருக்கும் என்று பார்த்துள்ளேன், கேள்விப்பட்டுள்ளேன்.

    இந்த இடத்தில் உங்கள் சமூக அக்கறையையும் அழகாக சொல்லி போகிறீர்கள் ஐயா, ஆவலாய் தொடர்கிறேன்

    ReplyDelete
  13. பணம் எங்கிருந்துதான் புரள்கிறதோ. ---பணம் பட்டுவாடா செய்து பழகிய உங்களுக்கே இந்த சந்தேகமா. ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு ஜவுளி கடையில் ஒரு கிராமத்தான் போய், ஒரு சேலையைக் காட்டி விலை கேட்டான். அது அவரால் வாங்க முடியாது என்று சிப்பந்தி கூறினான், அவர் பொறுமையாக வேறு பொறுளைக்காட்டி விலை கேட்டார், சிப்பந்தியும் அலட்ச்சியமாகவே பதிலளித்து க் கொண்டிருந்தான். அந்தப் பெரியவர் கோபமடைந்து அப்போதே அந்தக் கடையையே விலை பேசி வாங்கி அந்த சிப்பந்தியை வீட்டுக்கனுப்பினதாக கதை போகும்.

    ReplyDelete
  14. மூக்குத்தி லிஃட் மேலே அண்ணாச்சி உக்காந்து போறாரம்மா....

    ReplyDelete
  15. அக்ஷ்யதிரிதியை நாளை நினைவு படுத்துகிறது இந்தப் பதிவு.கதை சுவாரஸ்யமாக போய்க்கொண்டு இருக்கிறது. வாழத்துக்கள்.

    ReplyDelete
  16. தொடர்கிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. சரளமாக யதார்த்தமாக செல்கிறது கதை.

    ReplyDelete
  18. //வரட்சியால் தண்ணீர் இல்லாமலும், மழை வெள்ளத்தால் அதிகத்தண்ணீர் சூழ்ந்தும், பயிர்கள் வீணாகி, அல்லல்படும் எனக்கு, தங்கம் வாங்க இவர்கள் பணத்தைத் தண்ணீர் போல செலவு செய்வதைப்பார்க்க வேடிக்கையாகத்தான் இருந்தது.//இந்த இடத்தில் உங்கள் சமூக அக்கறையையும் அழகாக சொல்லி போகிறீர்கள் ஐயா, ஆவலாய் தொடர்கிறேன்

    ReplyDelete
  19. இந்தப்பகுதிக்கு வருகை தந்து தங்களின் மேலான கருத்துக்களை எடுத்துச்சொல்லி, என்னைப்பாராட்டி உற்சாகம் கொடுத்துள்ள உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  20. நானும் உங்களுடன் லிஃப்டுக்குள் வந்து விட்டேன் மூக்குத்தியை வாங்கிக் கொள்ள!

    ReplyDelete
  21. கோவை2தில்லி said...
    //நானும் உங்களுடன் லிஃப்டுக்குள் வந்து விட்டேன் மூக்குத்தியை வாங்கிக் கொள்ள!//

    மிக்க நன்றி, மேடம்.

    ReplyDelete
  22. // லிஃப்டில் ஏறுவதற்கே ஒரு நீண்ட க்யூ வரிசை காத்திருந்தது.//
    ஆட்களை கடைக்காரர்கள் அசத்தும் வேலைகளில் இதுவும் ஒன்று. கடை அமைப்பை நன்றாகவே அலசி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  23. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம்.

    தங்களின் அன்பான வருகையும், கதையினை நன்கு ஆழமாக ஊன்றி வாசித்து, அழகாக அற்புதமாக விமர்சனம் செய்துள்ளதும் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

    //கடை அமைப்பை நன்றாகவே அலசி இருக்கிறீர்கள்.//

    ஸ்பெஷல் நன்றிகள், ஐயா. ;)))))

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  24. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. கோபு அண்ணன் எனக்கு முதலாவது ஓபின் ஆகல்ல... ரெண்டாவது ஆகிட்டுது.. ஐ மீன்.. மூக்குத்தித் தொடர்... அந்தப் பெரியவர் கையில் ஒரு குடையோடு நிற்பது மனக்கண் முன் தெரியுது.. நில்லுங்க.. அடுத்து லிவ்ட்டால இறங்கியிருப்பார் பார்த்திட்டுச் சொல்றேன்ன்ன்...

    ReplyDelete
  25. athira October 22, 2012 1:20 PM
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. கோபு அண்ணன் எனக்கு முதலாவது ஓபின் ஆகல்ல... ரெண்டாவது ஆகிட்டுது.. //

    அன்புள்ள அதிரடி அதிரா,

    எனக்கு ஒண்ணாவது ஓபன் ஆகுதே. ஒருவேளை அது என்னோடதா இருப்பதாலே எனக்கு மட்டும் சுலபமாக ஓபன் ஆகுதோ.

    என்னோடதா இருந்தாலும் உங்களுக்கு அது ஓபன் ஆகாமல் பயனில்லாமல் இருப்பதில் எனக்கு மிகவும் வருத்தமே. ;(

    //ஐ மீன்.. மூக்குத்தித் தொடர்... //

    அட நீங்க வேறு. நானும் அதையே தாங்கச் சொன்னேன். பிறகு ஒண்ணாவது ஜிப்பையாச் சொன்னேன். அப்புறம் நீங்களெல்லாம் அடிக்கடி உபயோகிக்கும் இந்த ”அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..” ன்னா என்னங்க?

    //அந்தப் பெரியவர் கையில் ஒரு குடையோடு நிற்பது மனக்கண் முன் தெரியுது.. நில்லுங்க.. அடுத்து லிவ்ட்டால இறங்கியிருப்பார் பார்த்திட்டுச் சொல்றேன்ன்ன்...//

    மெதுவாப் பார்த்துட்டுச் சொல்லுங்கோ.

    அப்புறம் எனக்கு ஒரு டவுட்டு.
    இரண்டுக்குப்போய்விட்டு பிறகு ஒண்ணுக்குப்போகமுடியாதா?

    ஐ மீன் ... இரண்டாம் பகுதியைப்படிச்சிட்டு, அங்கிருந்து OLDER POST ஐ கப்புன்னு அமுக்கி கபால்ன்னு முதல் பகுதிக்குப் போக முடியாதான்னு கேட்கிறேன்.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    ReplyDelete
  26. Priya Anandakumar August 22, 2013 at 6:17 AM

    வாங்கோ, வணக்கம்.

    //very lightly going story nice...//

    மிக்க நன்றி, மேடம்.

    ReplyDelete
  27. எல்லாக்கடைகளிலும் திருவிழாக்கூட்டம் எங்கிருந்து வருகிறது என்பது புரிவதேயில்லை.

    ReplyDelete
  28. ஒரு கிராமத்து ஆள் இது போல நகைககடை களைப்பார்த்து பிரமித்து பயந்து கூடத் தான் போயிடுவாங்க.

    ReplyDelete
  29. அதான. இந்த சரவணா ஸ்டோர்ஸ்ல தினமும் திருவிழா தான். பார்க்க ரொம்ப சாதாரணமா இருப்பாங்க. ஆனால் கை கொள்ளாம பை வெச்சிருப்பாங்க. என்னதான் வாங்குவாங்களோன்னு நானும் யோசிப்பேன்.

    யோசிச்சு என்ன பிரயோசனம்.
    அதை உங்களை மாதிரி அழகா எழுதத் தெரியறதா.

    ம் என்னமோ போங்கோ.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya June 2, 2015 at 10:21 PM

      //அதான. இந்த சரவணா ஸ்டோர்ஸ்ல தினமும் திருவிழா தான். பார்க்க ரொம்ப சாதாரணமா இருப்பாங்க. ஆனால் கை கொள்ளாம பை வெச்சிருப்பாங்க. என்னதான் வாங்குவாங்களோன்னு நானும் யோசிப்பேன்.

      யோசிச்சு என்ன பிரயோசனம்.
      அதை உங்களை மாதிரி அழகா எழுதத் தெரியறதா.

      ம் என்னமோ போங்கோ//

      :) எழுதிப்பழகப்பழக ஜோரா வரும், ஜெயா. கவலை வேண்டாம். நமது சொந்த அன்றாட அனுபவங்கள் + கற்பனை + கொஞ்சம் நகைச்சுவை = கதை. அவ்வளவு தானே ஜெயா. முயற்சி செய்து பாருங்கோ. முடியும்.

      Delete
  30. இதுபோல பெரிய கடய கண்டுகிட்டாலே உள்ளுக்குள்ள் ஒதரலெடுக்கும்போல.. மூக்கு குத்தினா இன்னா?

    ReplyDelete
  31. என்னதான் தங்கத்தின் விலை தாறுமாராக உயர்ந்திருந்தாலும் நகை கடைகளில் கூட்டம் அலைமோதிக்கொண்டுதான் இருக்கு. கிராமத்து ஆள் னா கையில் குடை ஒரு மஞ்சப்பை இருந்தாகணுமே. அதுதான் அவங்க ட்ரேட் மார்க் போல. சரி லிஃப்டுல ஏறி மேல வந்துட்டோம்.

    ReplyDelete
  32. பள பள பகட்டு கார்ப்பரேட் நகைக் கடைக்குள்ளார போய் லிப்டுக்கும் போயாச்சு...நெக்ஸ்ட்...?போய்த்தான் பாப்போம்...

    ReplyDelete
  33. அருமை! அடுத்து என்ன? ஆவல் மேலிடுகிரது அறிய!

    ReplyDelete
  34. ஒரு கிராமத்து ஆள் பெரிய நகைக்கடையில் நுழைந்தால் எப்படில்லாம் பிரமிச்சு போவாங்கன்னு ரசிச்சு சொல்லி இருக்கீங்க. கூடவே ட்ரேட் மார்க் மஞ்சப்பையும் பெரிய குடை...இவை இரண்டும்தான் கிராமத்து ஆளுகளுக்கு அடையாளமா இருக்கு.லிஃப்ட பாத்து அவர் பயப்படலியா....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      Delete