என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

மலரே.............குறிஞ்சி மலரே ! [ பகுதி 2 of 3 ]







மலரே........குறிஞ்சி மலரே ! 

[சிறுகதை - சிறு தொடர்கதை - பகுதி 2 of 3]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

முன்கதை முடிந்த இடம்:


தனக்கு என்று தனியாக செல்போன் எதுவும் கிடையாது என்றும், அதற்கு அவசியமும் இல்லை என்றும் கல்பனா கூறும்போதே அவளுக்கு கண் கலங்கி தொண்டையை அடைத்தது. தன் கணவரின் செல் நம்பரை மட்டும் நந்தினியிடம் கொடுத்தாள்.    


“ஏய் .. நீ என்னடி சொல்றே? இந்த நவீன யுகத்தில், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதிக்கீட்டு மஸோதா பாராளுமன்றத்தில் நிறைவேற இருக்கும் நேரத்தில், செல்போன் வைத்துக்கொள்ள உனக்கு அவசியம் இல்லையா?   கல்லூரி நாட்களில் புரட்சிகரமாக,பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக விளங்கி, எங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இருந்த நீயா, இப்படிப் பட்டிக்காட்டுப்பாட்டி மாதிரி பேசுகிறாய்? என்னால் நம்பவே முடியவில்லை” என்றாள் நந்தினி.


கூண்டில் அடைக்கப்பட்டு வீட்டினுள் தொங்கிக்கொண்டிருந்த ஒரு ஜோடி பச்சைக்கிளிகள் கீ..கீ.. எனக்கத்தின. 

“ஒன் மினிட் நந்தினி” என்று கூறிவிட்டு, கிளிகளின் பசிக்கு பழங்கள், கொட்டைகள் என கூண்டினுள் போட்டுவிட்டு, குடிக்க நீரும் ஊற்றினாள், கல்பனா.









“கிளிகள் வளர்க்கிறோம் நந்தினி; இரண்டு பச்சைக்கிளிகள். கோவைப்பழச் சிவப்புடன் வளைந்த மூக்குடன், பார்க்க வெகு அழகாக உள்ளன. அவைகள் தான் இப்போது கத்தின. ஸாரிடீ...அவைகளுக்கு ஆகாரம் கொடுத்து விட்டு வந்தேன்” என்றாள் கல்பனா.

“பெண்கள் சுதந்திரத்தைப்பற்றி அனல் பறக்கும் விதமாக கல்லூரி விழாவில் அருமையான சொற்பொழிவு ஆற்றி, பலரின் கைத்தட்டல்களைப் பெற்று, எங்கள் அனைவருக்குமே ஒருவித விழிப்புணர்வு ஏற்படுத்திய நீ போய், சுதந்திரமாகப் பறக்க வேண்டிய கிளிகளைக் கூண்டில் அடைத்து வீட்டில் வளர்கிறாயா? என்னால் நம்பவே முடியவில்லையேடி, கல்பனா” என்றாள் நந்தினி.

“நான் என்ன செய்வது நந்தினி? நானும் முன்புபோல் சுதந்திரப்பறவை இல்லையே இன்றைக்கு; திருமணத்திற்குப்பிறகு நானும் இந்தக்கிளிகள் போல ஒரு கூண்டுக்கிளியாகவே தானே இருந்து வருகிறேன். தயவுசெய்து புரிந்து கொள்ளுடி” என்றாள் கல்பனா.

“ஏன் நீ இப்போது அந்த பேங்க் வேலையைத் தொடரவில்லையா? ராஜிநாமா செய்து விட்டாயா? உன் கணவர் உன்னுடன் அன்புடன் தானே இருக்கிறார்? என்று வினவினாள் நந்தினி.

”ரொம்ப ரொம்ப அன்புடன் இருக்கிறார். அது தான் பிரச்சனையே. ஒருவித வித்யாசமான பொஸஸிவ்நெஸ். வீட்டைவிட்டு எங்குமே நான் தனியாகப் போகக்கூடாது. வேலைக்கும் போகக்கூடாது. யாரிடமும் பேசக்கூடாது. ஜன்னலிலோ, பால்கனியிலோ நின்று வெளியில் வேடிக்கைகூட பார்க்கக்கூடாது. 

வீட்டு வேலைகள் செய்ய, சமையல் செய்ய, துணிதுவைக்க, இஸ்திரி போட்டுவர, கடைக்குப்போய் காய்கறி மளிகை சாமான்கள் வாங்கிவர என அனைத்து வேலைகளையும் கவனிக்க தனியாக இரண்டு வேலைக்காரப் பெண்களை வேறு நியமித்துள்ளார். 

மகாராணி போல் ஓய்வெடுப்பதும், சாப்பிடுவதும், தூங்குவதும், டீ.வி. பார்ப்பதும், செய்தித்தாள்கள் வார மாத இதழ்கள் படிப்பதும் மட்டுமே எனக்கு வேலை. என் பொழுதுபோக்கிற்கு என்னைப்போலவே வீட்டினுள் சிறைப்பறவைகளாக இருக்கும் இந்த இரண்டு கிளிகள் மட்டுமே.

எப்போதாவது வாரம் ஒருநாள் வெள்ளிக்கிழமை மட்டும் அருகில் உள்ள ஒரு கோயிலுக்குப் போய்வருவேன். இன்று கூட வெள்ளிக்கிழமையானதால் போய் வந்தேன், அதுவும் பாதுகாவலர் போல கூடவரும் என் மாமியாருடன்.

என் பேங்க் வேலையை இன்னும் நான் ராஜிநாமா செய்யவில்லையே தவிர, ராஜிநாமா செய்துவிட்டது போலத்தான். கல்யாணம் ஆனதிலிருந்து லாங்க் லீவில் இருக்கிறேன்” என்றாள் கல்பனா.       



"ஓ.கே. கல்பனா, நேரம் ஆகிறது. உன் வீட்டுக்காரர் பெயரும், அவர் வேலை பார்க்கும் அலுவலகப்பெயரும், அவர் டூட்டி விஷயமாக ஹரித்வார் செல்லும் இடத்தின் விலாசமும் சொல்லு, குறித்துக்கொள்கிறேன்.  மற்ற விஷயங்கள் நாளைக்கு பகலில் பேசிக்கொள்ளலாம்” என்றாள் நந்தினி.


அவள் கேட்ட தகவல்களையெல்லாம் கொடுத்துவிட்டு “நீ அவரை உன் வீட்டுக்கு வரச்சொல்லி இப்போது கூப்பிட வேண்டாம். அவர் மிகவும் சங்கோஜப்பேர்வழி. நீ கூப்பிட்டால் உடனே புறப்பட்டு வந்து விடவும் மாட்டார். பிறகு உன் கல்யாணத்திற்கு நானே அவரை வற்புருத்தி கட்டாயம் அழைத்து வருகிறேன்” என்றாள் கல்பனா.


“ஓ.கே. ..... பை ..... குட் நைட்” தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டனர்.




தான் போலீஸ் ஜீப்பில் கண்ட காட்சியை கல்பனாவிடம் சொல்லாமல் இருந்து விட்ட நந்தினிக்கும் தூக்கமில்லை.  கணவனைடமிருந்து எந்தத்தகவலும் வராத கவலையில் கல்பனாவுக்கும் தூக்கம் வரவில்லை.


இனிமையான கல்லூரி நாட்களையும், தன்னை மறக்காமல் இன்று தன்னுடன் போன் செய்து பேசிய நந்தினியையும் நினைத்து மகிழ்ந்து கொண்டாள் கல்பனா.


முதன் முதலாக, நாட்டின் தலைநகரில், ஏதோவொரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட சிவராமனுக்கும் தூக்கம் வராமல், துக்கம் தொண்டையை அடைத்துக்கொண்டது. 


தன்னுடைய உடமைகளான சூட்கேஸ், மணிபர்ஸ், ஏ.டி.எம். கார்டு, செல்போன், ஐடெண்டிஃபிகேஷன் கார்டு, டிரெயின் டிக்கெட் என எல்லாமே கொள்ளையடிக்கப்பட்டு, தானும் ஏமாற்றப்பட்டு, நிர்கதியாக நின்ற தன்னை, தீவிரவாதியாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் பிடித்து உள்ளே தள்ளியுள்ள போலீஸ்காரர்களின் கெடுபிடிகளும், மனிதாபிமானமற்ற முறையில் தான் நடத்தப்படுவதையும் நினைத்து, வருந்த மட்டுமே முடிந்ததே தவிர வேறு எதுவுமே செய்ய இயலவில்லை.




டெல்லியில், தனக்கு உதவிட யாருமே இல்லையே; மேற்கொண்டு என்ன நடக்குமோ; கல்பனாவுடன் கூட தன் நிலைமையைச்சொல்லி பேச முடியவில்லையே என வருந்திக்கொண்டிருந்தான்.




இந்த அஃபிஷியல் ட்யூர் முடிந்ததும், அடுத்தவாரம் ஜாலியாக கல்பனாவுடன் ஊட்டி மலர் கண்காட்சிக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தான். சிறுவயது முதலே அபூர்வமாகப்பூக்கும் குறிஞ்சி மலரைக்காண வேண்டும் என்ற ஒரு ஆவல், சிவராமனுக்கு. இன்றுவரை அது நிறைவேறாத ஒரு ஆசையாகவே உள்ளது. இந்த ஆண்டும் தனது நெடுநாளைய ஆசை நிறைவேறாதபடி இந்த மன உளைச்சலுடன் கூடிய எதிர்பாராத சிறைவாசம்.


சிவராமனைப் பொருத்தவரை இந்தச் சிறைவாசமும், குறிஞ்சி மலரைப்போலவே இதுவரைப் பார்த்தறியாத ஒரு புது அனுபவம் தான்.    
   




தொடரும்

42 கருத்துகள்:

  1. கல்லூரி நாட்களில் புரட்சிகரமாக,பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக விளங்கி, எங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இருந்த நீயா, இப்படிப் பட்டிக்காட்டுப்பாட்டி மாதிரி பேசுகிறாய்? என்னால் நம்பவே முடியவில்லை” என்றாள் நந்தினி.//

    பெரும்பாலும் கல்லூரிக்காலங்களில் புதுமைப்பெண்கள் பிறகு இப்படித்தான்.

    பதிலளிநீக்கு
  2. @அனைவருக்குமே ஒருவித விழிப்புணர்வு ஏற்படுத்திய நீ போய், சுதந்திரமாகப் பறக்க வேண்டிய கிளிகளைக் கூண்டில் அடைத்து வீட்டில் வளர்கிறாயா? //

    முடிவெடுப்பத் கூண்டில் வளரும் கிளியும், அதை வளர்க்கும் கிளியும் அல்லவே!1

    பதிலளிநீக்கு
  3. சிவராமனைப் பொருத்தவரை இந்தச் சிறைவாசமும், குறிஞ்சி மலரைப்போலவே இதுவரைப் பார்த்தறியாத ஒரு புது அனுபவம் தான். /

    நாங்களும் கதை சுபமுடிவாக சிறையிலிருந்து விடுதலையாக எதிர்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. மலரே........குறிஞ்சி மலரே ! குறிஞ்சி மலராய் மலர்ந்த கதைக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. இன்னும் பல சிவராமன்கள் இருக்கிறார்கள். நல்லவர்கள்தான் ஆனாலும் பெண் சுதந்திரம் பற்றி பேச மறுக்கிறார்கள். அவர்களுக்கும் நாட்டு நடப்பினால் நம்பிக்கை இல்லாமல்தானே போகிறது.

    பதிலளிநீக்கு
  6. சுவாரஸ்யமாக கதை சொல்லிப் போகும் போக்கிலேயே
    சொல்ல வேண்டிய சமூகப் பிரச்சனைகளையும்
    மிக நாசூக்காகச் சொல்லிப்போகும் தங்கள்
    திறன் மிக மிக அருமை
    கதை சுவாரஸ்யமாகப் போகிறது
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து

    பதிலளிநீக்கு
  7. இந்த முறையும் இப்பதிவு எனது டாஷ் போர்டில் வரவில்லை. என்ன காரணமோ.?கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் சொல்லி கதையின் போக்கை யூகிக்க விடுகிறீர்கள்.எங்கோ ஏதோ எதிர்பாராதது நடக்கும் போலிருக்கிறது. தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. “பெண்கள் சுதந்திரத்தைப்பற்றி அனல் பறக்கும் விதமாக கல்லூரி விழாவில் அருமையான சொற்பொழிவு ஆற்றி, பலரின் கைத்தட்டல்களைப் பெற்று, எங்கள் அனைவருக்குமே ஒருவித விழிப்புணர்வு ஏற்படுத்திய நீ போய், சுதந்திரமாகப் பறக்க வேண்டிய கிளிகளைக் கூண்டில் அடைத்து வீட்டில் வளர்கிறாயா? என்னால் நம்பவே முடியவில்லையேடி, கல்பனா” என்றாள் நந்தினி.

    “நான் என்ன செய்வது நந்தினி? நானும் முன்புபோல் சுதந்திரப்பறவை இல்லையே இன்றைக்கு; திருமணத்திற்குப்பிறகு நானும் இந்தக்கிளிகள் போல ஒரு கூண்டுக்கிளியாகவே தானே இருந்து வருகிறேன். தயவுசெய்து புரிந்து கொள்ளுடி” என்றாள் கல்பனா.


    ...How sad!

    பதிலளிநீக்கு
  9. Ramani said...

    சுவாரஸ்யமாக கதை சொல்லிப் போகும் போக்கிலேயே
    சொல்ல வேண்டிய சமூகப் பிரச்சனைகளையும்
    மிக நாசூக்காகச் சொல்லிப்போகும் தங்கள்
    திறன் மிக மிக அருமை


    .... Repeat! :-)

    பதிலளிநீக்கு
  10. கூண்டுக்கிளி விஷயம் சொல்லாமல் சொன்னது போல சிவராமனிடம் தொடர்பு கொள்ள அலைபேசி உட்பட ஏதும் இல்லை என்றும் உணர்த்தி விட்டீர்கள். நந்தினி போலீஸ் ஸ்டேஷன் விசாரித்துதான் வரவேண்டும் போலும்! தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  11. விறுவிறுப்பு அதிகம் ஆகிவிட்டது. அடுத்த பகுதியில் முடிவு என்பதால் காத்திருக்கிறேன்... திக்.திக்...உடன்...

    பதிலளிநீக்கு
  12. சிவராமன் சீக்கிரம் திருந்த இது ஒரு நல்ல சான்ஸ்தான்.. கதை அருமை கோபால் சார்..:)

    பதிலளிநீக்கு
  13. நல்ல எதிர் பார்ப்போடு கதை
    தொடர்கிறது
    வாழத்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  14. கதை சுவாரஸ்யமாகப் போகிறது...
    காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  15. அட பாவமே,நாயகன் சந்தேக கேஸில் மாட்டிகிட்டாரா?ஹிந்தி தெரிந்தால் கொஞ்சம் பரவாயில்ல.முடிவை எதிர்பார்த்து தொடருகிறேன்

    பதிலளிநீக்கு
  16. நீ போய், சுதந்திரமாகப் பறக்க வேண்டிய கிளிகளைக் கூண்டில் அடைத்து வீட்டில் வளர்கிறாயா? //

    அருமையான மிக எளிமையாக கதையைக் கொண்டு போகிறீர்கள். மிக எளிமையாக எழுதுவது எப்படி என்று உங்களிடம் பலர் படிக்க வேண்டும். பணி தொடரட்டும் ஐயா! நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  17. ”ரொம்ப ரொம்ப அன்புடன் இருக்கிறார். அது தான் பிரச்சனையே. ஒருவித வித்யாசமான பொஸஸிவ்நெஸ். வீட்டைவிட்டு எங்குமே நான் தனியாகப் போகக்கூடாது. வேலைக்கும் போகக்கூடாது. யாரிடமும் பேசக்கூடாது. ஜன்னலிலோ, பால்கனியிலோ நின்று வெளியில் வேடிக்கைகூட பார்க்கக்கூடாது. /

    இப்பிடியும் இருக்கிறாங்க பல கணவர்கள்..

    புதிமைப்பெண்கள் வேலையைக்காட்டினாலும் என்ற பயம் போல..
    அருமையான கதை ஐயா..

    பதிலளிநீக்கு
  18. போனபதிவில் சிவராமனை போலீஸ்
    ஜீப்பில் பார்த்ததும் வேரு விதமாக
    நினைக்க வைத்தது. இந்த பதிவில்
    அவன் உண்மை நிலை புரிந்தது.
    கதையை அழகாக நகர்த்தி செல்கிரீர்கள்.
    அடுத்து என்னன்னு ரொம்ப எதிர்பார்ப்புதான்.

    பதிலளிநீக்கு
  19. கதை நல்ல நடையுடன் சென்று கொண்டிருக்கிறது. சிவராமன் இந்த சந்தர்ப்பத்தில் திருந்த வேண்டும். கல்பனா வேலையை இது வரை ராஜினாமா செய்யாததும் நல்லது தான்.

    அடுத்த பகுதியில் முடியும் என்பதால் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம் சார்.

    பதிலளிநீக்கு
  20. கடைசி பகுதியை மிகவும் எதிர்பார்க்கிறேன்,,

    பதிலளிநீக்கு
  21. அருமையாய் பூத்து மர்மமாய் ஆடுகிறது காற்றில்.. குறிஞ்சி மலர்.
    அடுத்த பகுதியில் அதன் வாசம் எட்டி விடும் என்பதால் எனக்குள்ளும் ஆசுவாசம்.

    பதிலளிநீக்கு
  22. சுவாரசியாமான கதை. சிவராமன் திருந்துவானா? கல்பனாக்கு நல்வழி கிடைக்குமா? தெரிந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  24. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  25. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  26. கூண்டில் இரண்டு பச்சைக் கிளிகள் அல்ல மூன்று கிளிகள்.சுவாரஸ்யமாக உள்ளது

    பதிலளிநீக்கு
  27. //raji said...
    கூண்டில் இரண்டு பச்சைக் கிளிகள் அல்ல மூன்று கிளிகள்.சுவாரஸ்யமாக உள்ளது//

    மூன்று கிளிகள் மட்டும் அல்ல; தங்களையும் சேர்த்து நான்கு கிளிகளோ என்று எனக்குத்தோன்றுகிறது, தங்களின் நான்கு பின்னூட்டங்களையும் ஒரே மாதிரியாக அடுத்தடுத்துப் பார்த்ததும்.

    vgk

    பதிலளிநீக்கு
  28. இந்தக்கதையின் இரண்டாம் பகுதிக்கும் அன்புடன் வருகை தந்து, ஆர்வமுடன் வரவேற்று, அரிய கருத்துக்கள் அளித்து உற்சாகமூட்டி பாராட்டியுள்ள என் அன்பான சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  29. தொடரும் சுவாரசியம்

    இதுபோல் உலகில் எத்தனை எத்தனை கூண்டுக் கிளிகள்.

    எங்கஅம்மாவுக்கு அம்மா காலத்தில சொல்லுவா, பிறந்தாத்துல இருந்து யாராவது வந்தா சமையலறை கதவிற்கு பின்னாடி நின்று கொண்டு பார்ப்பார்களாம்.

    கூண்டுக் கிளிக்கு விடுதலை கிடைக்குமா? அதற்கு மகிழ்ச்சி கிட்டுமா?

    தெரிந்து கொள்ள அடுத்த பகுதிக்குச் செல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JAYANTHI RAMANIJanuary 24, 2013 at 1:37 AM

      வாங்கோ, வணக்கம்.

      //தொடரும் சுவாரசியம்//

      தங்களின் அன்பான வருகையினால் மட்டுமே சுவாரசியம் தொடர்கிறதோ?

      //இதுபோல் உலகில் எத்தனை எத்தனை கூண்டுக் கிளிகள்.//

      எண்ணிலடங்காமல் உள்ளன என்பதே உண்மை. ;(

      //எங்கஅம்மாவுக்கு அம்மா காலத்தில சொல்லுவா, பிறந்தாத்துல இருந்து யாராவது வந்தா சமையலறை கதவிற்கு பின்னாடி நின்று கொண்டு பார்ப்பார்களாம்.//

      அப்படியே நேரிலேயே பேசுவதுபோல எப்படித்தான் தங்களால் இப்படி எழுத முடிகிறதோ!.

      கிளிகொஞ்சும் பேச்சுப்போல உள்ளது!!.

      மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். ;)))))

      //கூண்டுக் கிளிக்கு விடுதலை கிடைக்குமா? அதற்கு மகிழ்ச்சி கிட்டுமா?//

      தெரியவில்லையே!

      //தெரிந்து கொள்ள அடுத்த பகுதிக்குச் செல்கிறேன்.//

      ஆஹா, பேஷாப் போய்ட்டு வாங்கோ!

      நன்றியோ நன்றிகள்.

      நீக்கு
  30. காலத்தின் விளையாட்டை யாரே அறிவார்? ஆனாலும் நல்ல சஸ்பென்ஸ்தான்.

    பதிலளிநீக்கு
  31. கூண்டுக் கிளியைப் போல கல்பனாவின் நிலைமையை புரிய வச்சுட்டீங்க.சிவராமன் மன நிலையை பார்த்ததும கதையில் சுவாரசியமான ட்விஸ்ட் வச்சிருக்கீங்கன்னு புரிஞ்சுக்க முடியுது.

    பதிலளிநீக்கு
  32. இந்த கத தலப்புல 2ஆஃப்3--னு வருதே. மொதக எங்கின போயிடிச்சி

    பதிலளிநீக்கு
  33. mru October 12, 2015 at 9:57 AM

    //இந்த கத தலப்புல 2ஆஃப்3--னு வருதே. மொதக எங்கின போயிடிச்சி?//

    இதோ இங்கே இருக்கு:
    http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_19.html

    -=-=-=-=-

    இதோ உங்கள் பின்னூட்டம்:

    mru has left a new comment on the post "மலரே.............குறிஞ்சி மலரே ! [ பகுதி 1 of 3 ...":

    சோட்டுகாரிக எப்பூடில்லா நெனப்பாகன்னு ரசனயா சொல்லினிங்க.
    -=-=-=-=-

    :) கதைக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லாமல் ஏதேதோ பின்னூட்டமிட்டு வருகிறீர்கள். இருப்பினும் பரவாயில்லை. மகிழ்ச்சியே. :)

    பதிலளிநீக்கு
  34. இல்லீங்களே நந்தினியும் கல்பனாவும் ஒண்ணா படிச்சவங்கதானீ ஃபரண்ட்ஸ் காலேஜ் மேட் அல்லாருமே சோட்டுகாரின்னுபிட்டுதா சொல்லிகிடுவம்

    பதிலளிநீக்கு
  35. ஃபரெண்டுக இருவரும் மனசு விட்டு பேசுரத ரசிச்சு சொல்லினிங்கல அதா சொல்லினன்

    பதிலளிநீக்கு
  36. காலேஜ் நாட்களில் பீசும் பீச்சுகளுக்கும் அமையும் நிதர்சன வாழ்க்கைக்கும் சம்மந்தமே இருக்காதுபோல. சுதந்திரமா இருக்க ணும்னு நினைச்சவங்க இப்படி கிளிகளை கூண்டில் அடைக்கிறவங்களா மாறி போயிடறாங்களே.

    பதிலளிநீக்கு
  37. 'கூண்டுக்கிளி"....அதுக்கு என்னாச்சு...விழா மேடை வேற திருமண மேடை வேறயோ...

    பதிலளிநீக்கு
  38. //“நான் என்ன செய்வது நந்தினி? நானும் முன்புபோல் சுதந்திரப்பறவை இல்லையே இன்றைக்கு; திருமணத்திற்குப்பிறகு நானும் இந்தக்கிளிகள் போல ஒரு கூண்டுக்கிளியாகவே தானே இருந்து வருகிறேன். தயவுசெய்து புரிந்து கொள்ளுடி” என்றாள் கல்பனா.//
    விறுவிறுப்பாய் தொடர்கிறது! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு