About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, August 19, 2011

மலரே.............குறிஞ்சி மலரே ! [ பகுதி 1 of 3 ]


மலரே . . . . . குறிஞ்சி மலரே!


[ சிறுகதைத்தொடர் ]


By வை. கோபாலகிருஷ்ணன்


-oOo-

டெல்லியின் அந்தப்பரபரப்பான போக்குவரத்து நெரிசல் மிகுந்தப் பகுதியில், சிக்னல் சிவப்பு விளக்காக மாறியதால் நந்தினியின் கார் நிறுத்தப்பட்டது. அவளின் காரை உரசுவது போல நெருக்கமாக அந்த போலீஸ் ஜீப்பும் சடர்ன் ப்ரேக்கிடப்பட்டு டயர்கள் தேயும்படி ஒரு சப்தம் எழுப்பியபடி நின்றது.

அதனுள் கைகளில் விலங்கிடப்பட்டபடி ஒரு இளைஞன். நந்தினிக்கு அவனை எங்கேயோ எப்போதோ பார்த்துப் பரிச்சியப்பட்ட ஒரு முகமாகத் தோன்றியும் சரிவர ஞாபகம் வரவில்லை. சிவந்த நிறம். வயது 25க்கு மேல் 30க்குள் இருக்கும். கர்லிங் சுருள் முடி நெற்றியில் விழுந்தபடி.

வேறு ஏதோ ஒருபுறம் திரும்பியபடி இருந்த அந்த வாலிபன், நந்தினியின் பக்கமாக தன் முகத்தைத் திருப்பியதும் வலது கன்னத்தின் மூக்கின் அருகில் இருந்த காய்ந்த திராட்சை போன்ற அந்த சிறிய மச்சம் நந்தியின் கண்ணில் பட்டதும், ஒரு சிறு பொறி தட்டியது அவள் நினைவுக்கு.

அதற்குள் சிக்னல் மாறி அந்த ஜீப் சீறிப்பாய்ந்து வலது புறமாகத் திரும்ப, இவள் வண்டி நேராக சென்று கொண்டிருந்தது. சுமார் ஆறு மாதங்கள் முன்பு அவளின் கல்லூரித்தோழி கல்பனாவின் கல்யாணத்திற்கு சேலம் சென்று வந்தது, மனதில் ஓடத்துவங்கியது.

”திருஷ்டிப்பொட்டுபோல, உன் வீட்டுக்காரரின் கன்னத்தில் என்னடி காயம்?”  என்று தான் கல்பனாவிடம் கிசுகிசுக்க, தன் அருகில் இருந்த மைதிலி, “இந்த வண்ணக்கிளி செய்த மாயம்!” என்று கல்பனாவைச் சுட்டிக்காட்டியபடி சொல்ல, தாங்கள் மூன்று பேருமே கொல்லென்று சிரித்தது பசுமையாக நினைவில் வந்தது.


அப்படியென்றால் இந்த விலங்கிடப்பட்ட இளைஞன் ஒருவேளை நம் கல்பனாவின் கணவராக இருக்குமோ! மனதில் ஒரு சிறு சந்தேகம் எழுந்தது. கல்பனாவின் செல் நம்பர் கைவசம் உள்ள போனின் பதிவு செய்யப்படவில்லை. சேலத்தில் தன்னுடன் படித்த ஒரு சில தோழிகளை விசாரித்து கல்பனாவின் லேண்ட்லைன் போன் நம்பர் மட்டுமே கிடைப்பதற்குள், ஒரு வழியாக நந்தினியின் கார் அவளின் வீட்டு போர்ட்டிகோவுக்குள் நுழைந்து நின்றதும், இறங்கி வீட்டினுள் சென்றாள்.


கல்பனாவைத் தொடர்ந்து தொடர்பு கொண்டும், ரிங் போய்க்கொண்டே இருந்தும், யாரும் போனை எடுப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை விஷயம் கேள்விப்பட்டு டெல்லிக்கே புறப்பட்டு வந்து கொண்டிருப்பாளோ? பல்வேறு சிந்தனைகளில் மூழ்கியவாறு உணவருந்த உட்கார்ந்தும் சாப்பிட முடியாமல் ஒருவித சங்கடமாக உணர்ந்தாள்.


வெள்ளிக்கிழமை கோயிலுக்குப்போய்விட்டு, வீட்டுக்கு வந்த கல்பனா டெலிபோன் அருகிலேயே நெடுநேரம் அமர்ந்திருந்தும் தன் கணவரிடமிருந்து அழைப்பு வராததில் மிகவும் கவலை கொண்டாள்.


இவள் அவரின் செல் போனுக்கு முயற்சித்தும், தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக தகவல் வந்த வண்ணமே இருந்தது. கல்பனா சாப்பிட்டு இரவு படுக்கப்போகும் முன், டெலிபோன் மணி ஒலித்தது. கல்பனா பாய்ந்து வந்து போன் ரிஸீவரை கையில் எடுத்து “ஹலோ கல்பனா ஹியர்” என்றாள்.


”ஹலோ, கல்பனா, நான் நந்தினி பேசறேன். நீ எப்படி இருக்கே! உன் கணவர் எப்படி இருக்கிறார்!  ஏதும் விசேஷம் க்ளாட் நியூஸ் உண்டா?” என்றாள்.


“ஹலோ, நந்தினி; நான் நல்லா இருக்கேன். இந்த மாதம் தான் எனக்கு பீரியட்ஸ் தள்ளிப்போய், கன்பாஃர்ம் செய்திருக்கிறார்கள்”.


“கன்க்ராஜுலேஷன்ஸ் கல்பனா; உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கோ..!


“தாங்க் யூ டீ; நீ எப்படி இருக்க! என்ன ராத்திரி திடீர்ன்னு அண்டைம்ல இப்படி கூப்பிட்டு அசத்துகிறாய்! உன்னிடமிருந்து போன் வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லைடீ. டெல்லியிலிருந்தா பேசுகிறாய்? என் வீட்டுக்காரர் கூட ஏதோ டூட்டி விஷயமா டெல்லியில் இறங்கி இப்போது ஹரித்வார் போய்க்கொண்டு இருப்பார்ன்னு நினைக்கிறேன். H.நிஜாமுதீன் ஸ்டேஷன் நெருங்குவதாக ஐந்து மணி சுமாருக்கு போன் செய்து சொன்னார். அவர் டெல்லிப்பக்கம் போவது இது தான் முதல் தடவை. அவரிடமிருந்து தான் போன் வருகிறது என்று நினைத்து போனை எடுத்தேன். ஆனால் உன்னுடைய போன்; வாட் ய வெரி சர்ப்ரைஸ் டு மீ” என்றாள் கல்பனா.


நந்தினிக்கு எப்படி மேற்கொண்டு இவளிடம் அந்த விஷயத்தைப்பற்றிச் சொல்வது என்று மிகவும் சங்கடமாக இருந்தது. சொல்லவும் விரும்பவில்லை. தனக்கே சந்தேகமாக உள்ள ஒரு விஷயம். இவளிடம் சொல்லி இவளையும் நிம்மதியாகத் தூங்க விடாமல் செய்வதில் விருப்பமில்லை.


“சும்மாதாண்டி போன் செய்தேன். எனக்கும் கல்யாணம் நிச்சயமாக உள்ளது. டெல்லி மாப்பிள்ளை தான்” என்றாள்.


“அப்படியா! ஆல் தெ பெஸ்ட். ரொம்ப ரொம்ப சந்தோஷம்டீ. உன் வுட் பீ என்ன பண்ணுகிறார்? எப்போ கல்யாணம்? எங்கே கல்யாணம்?” வியப்புடன் வினவினாள் கல்பனா.


“அவரும் என்னைப்போலவே இங்கு வக்கீலாகவே பிராக்டீஸ் செய்து வருகிறார்.  டெல்லியில் தான் கல்யாணம். இன்னும் கல்யாண தேதி முடிவாகவில்லை. பிறகு சொல்கிறேன். நீயும் உன் கணவரும் கட்டாயம் என் கல்யாணத்திற்கு டெல்லி வரணும். உன் வீட்டுக்காரர் செல்போன் நம்பரும், உன் செல்போன் நம்பரும், எனக்குக்கொடு. அவர் வந்துள்ள இந்த டிரிப்பிலேயே எங்கள் வீட்டுக்கு வந்து விட்டுப்போகட்டும். நானும் அவருடன் பேசுகிறேன். நீயும் அவரிடம் சொல்லு” என்றாள் நந்தினி.


தனக்கு என்று தனியாக செல்போன் எதுவும் கிடையாது என்றும், அதற்கு அவசியமும் இல்லை என்றும் கல்பனா கூறும்போதே அவளுக்கு கண் கலங்கி தொண்டையை அடைத்தது. தன் கணவரின் செல் நம்பரை மட்டும் நந்தினியிடம் கொடுத்தாள்.    


தொடரும் 

   

41 comments:

 1. ஆரம்பமே பல எதிர் பார்ப்புகளைத்
  தூண்டி விடுகிர விதமா இருக்கு.
  அடுத்து என்ன ந்னு வெயிட்டிங்க்

  ReplyDelete
 2. கல்பனா எதுக்கு அழுதுகிட்டே செல் நம்பர் குடுத்தா? தொடரும்
  ... சீக்கிரம்...

  ReplyDelete
 3. நல்ல விருவிருப்பான ஆரம்பம்.அடுத்து நடக்க போவதை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறோம்.

  ReplyDelete
 4. ரன்வேயில் ஓட ஆரம்பித்த விமானம் டேக் ஆப் ஆகி வானில் பறக்க ஆரம்பித்த மாதிரி விறுவிறுப்பான கதை.

  ReplyDelete
 5. குறிஞ்சிமலராய் பூத்துக்குலுங்கும் நடையழகுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 6. தாங்கள் மூன்று பேருமே கொல்லென்று சிரித்தது பசுமையாக நினைவில் வந்தது.
  பசுமை நிறைந்த நினைவுகள்..
  பாடிக்களித்த தோழியர்...
  மலரும் நினைவுகள்.....

  ReplyDelete
 7. உன்னுடைய போன்; வாட் ய வெரி சர்ப்ரைஸ் டு மீ” என்றாள் கல்பனா.//
  //அவரும் என்னைப்போலவே இங்கு வக்கீலாகவே பிராக்டீஸ் செய்து வருகிறார்//

  எங்களுக்கும் சர்ப்ரைஸ்.
  வக்கீல் நந்தினி உதவி செய்து விடுவிப்பாளா??

  ReplyDelete
 8. தனக்கு என்று தனியாக செல்போன் எதுவும் கிடையாது என்றும், அதற்கு அவசியமும் இல்லை என்றும் கல்பனா கூறும்போதே அவளுக்கு கண் கலங்கி தொண்டையை அடைத்தது. //

  சஸ்பென்ஸ்! விஷயம் பிடிபட்டுவிட்டது.

  ReplyDelete
 9. நல்லா ஆரம்பமாகியிருக்கு.. முதல்பகுதியிலேயே சஸ்பென்ஸா!!

  ReplyDelete
 10. அடடா! இது தில்லி கதையா!
  விறுவிறுப்பாக செல்கிறது.
  கல்பனாவின் கணவர் எதற்காக போலீஸில் மாட்டினார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறோம்.

  ஆரம்பமே நல்லா இருக்கு சார்...

  ReplyDelete
 11. விறுவிறுப்பு... சுறுசுறு... எப்போ நெக்ஸ்ட் பார்ட்?

  ReplyDelete
 12. ஐயா எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்..
  அசத்தல் கதை...
  தொடக்கமே சுப்பர்...

  ReplyDelete
 13. அவிழ்ந்தும் அவிழாத‌தும் மாதிரியொரு ச‌ஸ்பென்ஸ்... ந‌ந்தினி வ‌க்கீல் என்ப‌து! எங்க‌ளுக்கெல்லாம் போக்குக் காட்டிவிட்டு வேறு பாதையில் க‌தையை ந‌க‌ர்த்தும் எண்ண‌மிருக்கிற‌தா?!

  ReplyDelete
 14. தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. ஆரம்பமே விறுவிறுப்பு...

  கதைக் களம் எங்கள் ஊரா... அது இன்னும் எனது ஆர்வத்தினை அதிகப்படுத்துகிறது...

  அடுத்த பகுதிக்கான ஆவலான காத்திருப்பில் இருக்கிறேன்...

  ReplyDelete
 16. பரபரப்பும் அதேவேளை அச்ச உணர்வுடன் கதைக்களம் நகருகிறது தான் தோழி கணவனின் சாயலை ஒத்த ஒருவன் காவலர்களின் பிடியில் சிக்கி இருந்தமை தான் தோழி இடம் கூறாமல் நாசுக்காக விசாரித்தமை நல்ல தேர்ந்தவரின் அணுகு முறையாக பளிச்சிடுகிறது பாராட்டுகள் தொடர்க

  ReplyDelete
 17. ஆரம்பமே அதகளமா பரபரன்னு இருக்கு
  தொடருகிறேன்.......................

  ReplyDelete
 18. நல்ல ஆரம்பம்.அடுத்து என்ன!...ஆவல்......
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 19. நல்ல விருவிருப்பான ஆரம்பம்.அடுத்து நடக்க போவதை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறோம்...

  ReplyDelete
 20. தில்லி தான் களமா.... பூந்து விளையாடுங்க.. :-))

  ReplyDelete
 21. தலைநகரில் வைத்து மர்மமா..
  தலையைப் பிய்த்துக் கொண்டு அடுத்த பகுதிக்காக..

  ReplyDelete
 22. நல்ல விறுவிறுப்பாக செல்லும் போது தொடரும்.. சீக்கிரம் தொடருங்கள். கோபால் சார்.:)

  ReplyDelete
 23. அசத்தல் ஆரம்பம் நிமிர்ந்து உட்கார வைத்துவிட்டது
  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து

  ReplyDelete
 24. சஸ்பன்சாக உள்ளது.தில்லியினுள் கதை செல்வது இன்னும் ஆர்வமாக உள்ளது.தொடருகிறேன்.

  ReplyDelete
 25. ஆரம்பித்திருக்கும் கதையின் கனத்தைப் பார்த்தால் (கதா நாயகி வக்கீல் -தோழியின் கணவன் கைது- என்ன குற்றம் என்று தெரியாத நிலை-) சிறுகதைத் தொடர் நெடுங்கதை ஆகும் வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றுகிறது! முதல் பகுதியிலேயே சுவாரஸ்யத்தை ஆரம்பித்து விட்டீர்கள். தொடர்வதைப் பார்க்க ஆவல்.

  ReplyDelete
 26. சிந்திக்கத் தூண்டும் முடிச்சுகளுடன் கதை தொடங்கியுள்ளது. தொடர்கிறேன் சார்.

  ReplyDelete
 27. அடுத்தது...

  ஆவல்! ஆவல்! காத்திருக்குறேன்
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 28. அன்புடன் வருகை தந்து ஆர்வமுடன் வரவேற்று, அரிய கருத்துக்கள் அளித்து உற்சாகமூட்டி பாராட்டியுள்ள என் அன்பான சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  என்றும் அன்புடன் தங்கள் vgk

  ReplyDelete
 29. வாசித்தாயிற்று, அடுத்த பாகம் படிக்கப் போகிறேன். :)

  ReplyDelete
 30. ஆரம்பமே அட்டகாசம்.

  நான் ரொம்ப LUCKY. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா 3 பாகத்தையும் ஒரே மூச்சில படிச்சுடுவேனே.

  நல்ல கற்பனை வளம். நல்ல நடை.

  வாழ்த்துக்களுடன்
  அடுத்த பகுதிக்குச் செல்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. //JAYANTHI RAMANIJanuary 24, 2013 at 1:31 AM
   ஆரம்பமே அட்டகாசம்.

   நான் ரொம்ப LUCKY. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா 3 பாகத்தையும் ஒரே மூச்சில படிச்சுடுவேனே.

   நல்ல கற்பனை வளம். நல்ல நடை.

   வாழ்த்துக்களுடன்//

   வாருங்கள், சந்தோஷம், .... நன்றி.

   //அடுத்த பகுதிக்குச் செல்கிறேன்.//

   ஆஹா, சென்று வாருங்கள். ;)

   Delete
 31. ஒரு இக்கட்டான நிலையை நாசூக்காக கையாண்ட விதம் மனதை வருடுகிறது.

  ReplyDelete
 32. நல்ல சினேகிதிகள் பல நாட்கள் கழிதுது பேசும் போது எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுதுவார்கள் என்று ரசித்து சொல்லிருக்கீங்க.

  ReplyDelete
 33. சோட்டுகாரிக எப்பூடில்லா நெனப்பாகன்னு ரசனயா சொல்லினிங்க.

  ReplyDelete
 34. ஆரம்பமே விறுவிறுப்பா இருக்கு. அடுத்து என்ன வரப்போகுதோன்னு ரொம்ப எதிர் பார்க்க வைக்குது. நாங்க ஒன்ன நினைக்க நீங்க எதிர்பார்க்காம வேர ட்விஸ்ட் வச்சிருப்பீங்களே.

  ReplyDelete
 35. ராஜேஷ் குமார் பாணில ஒரு திரில் கதை...அவரோட நீங்கதான் சீனியர்னு நெனக்கிறேன்...நீங்க வெரைட்டி கிங்-ல...

  ReplyDelete