About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, June 17, 2013

11] அடங்காத காமத் தீ !

2
ஸ்ரீராமஜயம்
குறைகள் உள்ளவரிடம் அதை எடுத்துக்காட்ட வேண்டுமானால் நமக்கு பூரண தகுதி இருக்க வேண்டும். 

தம்மிடமே ஏராளமான குறைகளை வைத்துக்கொண்டு இன்னொருத்தருக்கு உபதேசம் செய்தால் அது பலனளிக்காது.

காமமும் ஒரு நெருப்புத்தான். அது தீயாக எரிகிறது. அதற்குப் பிரியமான பொருளைக் கொடுப்பதால் பசி அடங்காமல் அதிகமாகிக் கொண்டே போகிறது.  அது நம் மனதையே கறுப்பாக்கிவிடுகிறது.

குற்றம் இழைத்தபின் ஒருவரைத் தண்டிப்பதும், ஒருவர் சுபாவமான தர்ம உணர்ச்சி இல்லாமல் தண்டனைக்கு பயந்தே குற்றம் செய்யாமல் இருக்கச் செய்வதும், இரண்டாம் பட்சம்தான்.

குற்றம் செய்கிற எண்ணமே தோன்றாமல் செய்வதுதான் உயர்ந்தது. 

தரமான வாழ்க்கை என்பது மனநிறைவோடு இருப்பதுதான்.


oooooooooooOooooooooooo

அதிசய நிகழ்வு 

நெஞ்சை உருக்கும் சம்பவம்

மிராசுதாரை மிரள வைத்த மஹாபெரியவா! 

[பகுதி 1 of  10]

பல வருஷங்களுக்கு முன்பு ஒரு சித்ரா பெளர்ணமி தினம். திருவடைமருதூர் ஸ்ரீ மஹாலிங்க ஸ்வாமி கோயிலில், மஹன்யாச ருத்ர ஜபத்துடன்  ஓர் அபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. 

11 வேத பண்டிதர்களை வைத்து அதை நடத்தியவர் திருவாரூரைச் சேர்ந்த மிராசுதார் நாராயணஸ்வாமி என்பவர். காலை எட்டு மணிக்கு ஆரம்பித்து ருத்ராபிஷேகம் மதியம் ஒரு மணி அளவில் பூர்த்தி அடைந்தது. 

காஞ்சி மஹாஸ்வாமிகளிடம் அபரிமிதமான பக்தி கொண்டவர் மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர். ‘எப்படியும் இந்த ருத்ராபிஷேகப் பிரஸாதத்தைப் ஸ்ரீ மஹாபெரியவாளிடம் சேர்த்து விடவேண்டும்' என்று தீர்மானித்தார்.

ருத்ராபிஷேகப் பிரஸாதத்தை பயபக்தியுடன் ஒரு வாழை இலையில் வைத்து, புதுப்பட்டு வஸ்திரத்தில் சுற்றி எடுத்துக்கொண்டார். 

அன்று மாலையே திருவிடைமருதூர் ரயில்வே ஸ்டேஷனில் மதுரை-சென்னை பாஸிஞ்சர் ரயிலில் ஏறினார், மிராசுதார். 

விடியற்காலம் செங்கல்பட்டு ஸ்டேஷனில் இறங்கி பஸ் பிடித்து காஞ்சீபுரம் வந்து சேர்ந்தார் நாராயணஸ்வாமி ஐயர். 

அன்று மடத்தில் ஏகக்கூட்டம். ஸ்நானம் இத்யாதிகளை முடித்துக்கொண்டு, பெரியவா தரிஸனத்திற்காக பிரஸாதத்துடன் காத்திருந்தார் மிராசுதாரர்.

நண்பகல் 12 மணி சுமாருக்கு, ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர் பூஜையை முடித்து விட்டு வந்து உட்கார்ந்தார் மஹாஸ்வாமிகள். பக்தர்கள் கூட்டம் நெருக்கியடித்தது. 

மிராசுதாரரால் ஸ்வாமிகளை நெருங்கவே முடியவில்லை. 

உடனே மிராசுதார், “எல்லோரும் கொஞ்சம் நகருங்கோ, நகருங்கோ,  நா பெரியவாளுக்காக திருவிடைமருதூர், மஹாலிங்க ஸ்வாமியின் ருத்ராபிஷேகப் பிரஸாதம் கொண்டு வந்திருக்கேன். அதை அவாகிட்ட சமர்ப்பிக்கணும்” என்று பிரஸாத மூட்டையைக்காட்டிக் கெஞ்சினார்.

தொடரும்oooooooooooOoooooooooooஅன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்,

28.05.2013 ஆரம்பித்த இந்தத் தொடர்பதிவின் முதல் பத்து பகுதிகள் மட்டும் 15.06.2013 அன்று நிறைவடைந்துள்ளது.  

இந்தக்கிளி போல அந்தப் பத்துப் பகுதிகளையும் நாம் இப்போது  ஒருமுறை திரும்பிச்சென்று பார்ப்போமா? ;)அவ்வப்போது வருகை தந்து கருத்துச்சொல்லி உற்சாகப்படுத்தியுள்ள அனைவருக்கும் என் அன்பார்ந்த இனிய நன்றிகள்.
  பின்னூட்டமிட ஓடிவந்த கிளிகளோ? ;)))))

முதல் 10 பகுதிகளுக்கு, இந்த நிமிட நிலவரப்படி [IST 11.30 AM of 17.06.2013] 
23 ஆண்களும்,  35  பெண்களும், ஆக மொத்தம் 58 பேர்கள் வருகை புரிந்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அமுத மழையில் நனைந்துள்ளார்கள். 


இதுவரை மொத்தம் வந்துள்ள பின்னூட்டங்கள்: 364 

ஆண்களிடமிருந்து வந்துள்ள பின்னூட்டங்கள்:   119 

பெண்களிடமிருந்து வந்துள்ள பின்னூட்டங்கள்:  245


சராசரியாக ஒவ்வொரு பகுதிக்கும் 36 பின்னூட்டங்கள் வீதம் கிடைத்திருப்பது,அடியேனின் இந்தப்புதிய முயற்சிக்கு, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்ரஹம் உள்ளது என்பதை உங்கள் அனைவரின் வாயிலாகவும் எனக்கு உணர்த்தப்பட்டுள்ளதாக எண்ணி மிகவும் மகிழ்கிறேன். அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த ஒரு தொடருக்கு மட்டும், ஒருசில காரணங்களால், பின்னூட்டம் கொடுத்த யாருக்குமே நான் பதில் ஏதும் கொடுக்கவில்லை. அதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன். 
’விழுவது மீண்டும் எழுவதற்காகவே ’
எனத் தன்னம்பிக்கையோடு சொல்லும் 
இந்தக்கிளியைப் பாருங்கோ! ;)))))


பகுதி-1  முதல் பகுதி-10 வரை அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து தங்களின் பொன்னான கருத்துக்களைப் பின்னூட்டமாகக் கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ள 20 நபர்களுக்கு, இந்தப்பகுதியில் பூங்கொத்து மற்றும் ஒருசில மங்கலப்பொருட்கள் அளித்து கெளரவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

 

  

   

   

  


 
 


   

       
 

-oOo-

    


 

[1] திருமதி அம்முலு அவர்கள்
http://piriyasaki.blogspot.in/
பிரியசகி


    
  

[2] திருமதி அதிரா அவர்கள்
என் பக்கம்

    


 

[3] திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்
மணிராஜ்


[கிளிகள் சப்ளை செய்து உதவியுள்ள 
இந்த தெய்வீகக்கிளிக்கு 
என் மனமார்ந்த இனிய நன்றிகள்]    


 

[4] திருமதி இளமதி அவர்கள்
இளையநிலா

    


 

[5] திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள்
எண்ணங்கள்

     

  

[6] திருமதி ஜெயந்தி ரமணி அவர்கள்
மணம் [மனம்] வீசும்

    


 

[7] திருமதி காமாக்ஷி அம்மாள் அவர்கள்
சொல்லுகிறேன்

    

   

[8] திருமதி ’மிடில் கிளாஸ் மாதவி’ அவர்கள்
மிடில் கிளாஸ் மாதவி

     

[9] திருமதி பிரியா ஆனந்தகுமார் அவர்கள்

    
[10] Mrs. Rajalakshmi Paramasivam அவர்கள்
Arattai [அரட்டை] By Rajalakshmi 

    

 

[11] திருமதி ரஞ்ஜனி நாராயணன் அவர்கள்
Ranjani Narayanan

    


 

[12] திருமதி உஷா அன்பரசு அவர்கள்
உஷா அன்பரசு, வேலூர் 

        

[13] திருமதி வல்லி சிம்ஹன் அவர்கள்
நாச்சியார்

    


   

[14] திருமதி விஜயலக்ஷ்மி கிருஷ்ணன் அவர்கள்
Viji's Craft 
 I love Craft

     
  

[15] திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
திண்டுக்கல் தனபாலன்

    


                    

[16] கரந்தை திரு. ஜெயக்குமார் அவர்கள்
கரந்தை ஜெயக்குமார்

    


 

[17] திரு. பட்டாபிராமன் அவர்கள்
ramarasam 

     

 


[18] திரு. E.S. சேஷாத்ரி அவர்கள்
esseshadri.blogspot.com
காரஞ்சன் [சேஷ்]


     

[19] திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்
எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL

    


  

[20] திரு வெங்கட் நாகராஜ் அவர்கள்
வெங்கட் நாகராஜ்
சந்தித்ததும் சிந்தித்தும்

    


========================================================

ஏதோ ஒருசில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இந்தப்பட்டியலில் இடம் பெறாமலும், பூங்கொத்து கிடைக்காமலும் போனவர்கள் இப்போது நினைத்தாலும், அடுத்த வாய்ப்பினில் [அதாவது பகுதி-1 முதல் பகுதி-20 வரை மீண்டும் ஒருநாள் செய்யப்படும் ஆராய்ச்சியில்] இடம் பெறுவதற்கான வாய்ப்பு,  இப்போதும் உள்ளது. 

[உதாரணமாக Ms. மேனகா அவர்கள் இந்தத்தொடரின் முதல் 9 பகுதிகளுக்கும், Mrs. மாதேவி அவர்கள் முதல் 7 பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்துள்ளார்கள். அதுபோல திருமதி ராமலக்ஷ்மி அவர்கள் 1 to 5, 7 and 8 ஆகிய 7 பகுதிகளுக்கு மட்டும் இதுவரை வருகை தந்துள்ளார்கள்] 

பகுதி-1 முதல் பகுதி-20 வரை தொடர்ச்சியாக வருகை தந்து சிறப்பித்துள்ளவர்கள் பற்றிய பட்டியல் பகுதி-25ல் வெளியிடப்படும்.


இன்று பூங்கொத்து பெற்ற அனைவருக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தில், இந்த உலகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், எப்போதும் செளக்யமாகவும், சந்தோஷமாகவும், மனநிம்மதியுடனும், ஒற்றுமையாகவும், மனித நேயத்துடனும் வாழ பிரார்த்திப்போம்.
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

[இதன் தொடர்ச்சி 19.06.2013 புதன்கிழமை வெளியாகும்]

45 comments:

 1. 'திருப்தியான' கருத்துடன் ஆரம்பித்து ஆவலுடன் முடித்து விட்டீர்கள்... தொடர்கிறேன்...

  மங்களகரமான பொருட்களுடன், விதவிதமான ரசிக்க வைக்கும் பூங்கொத்துகள்... நன்றி ஐயா... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  தன்னம்பிக்கை கிளி பிரமாதம்...

  ReplyDelete
 2. ’விழுவது மீண்டும் எழுவதற்காகவே ’
  எனத் தன்னம்பிக்கையோடு சொல்லும்

  இந்தக்கிளியைப் பாருங்கோ
  aha the parrat and the words are so touching to me.
  Then thanks for the flowers. That too red rose.....beautiful. I just love it. I accept the mangala thambulam as if it comes from my peranda veedu cheer. Special thanks for that too.ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தில், இந்த உலகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், எப்போதும் செளக்யமாகவும், சந்தோஷமாகவும், மனநிம்மதியுடனும், ஒற்றுமையாகவும், மனித நேயத்துடனும் வாழ பிரார்த்திப்போம்
  Yes I join hands with the prayer. Thanks a lot sir, joining me as your chain of writing.
  viji

  ReplyDelete
 3. அதற்குள் review வா ?
  புதுமை
  அருமை
  பாராட்டுக்கள்

  ReplyDelete
 4. கிளிகள் அருமை. குட்டிக் கிளிகளை அப்படியே எடுத்துக் கொள்ளத் தோன்றுகிறது.
  மலர்க்கொத்துகள்,மங்கலப் பொருள்கள் வாரிவாரி வழங்கியிருக்கிரீர்கள். கொடுக்கவும், வாங்கவும்,நன்றே நடக்க எல்லோரும் ப்ரார்த்தித்து வாங்கிக் கொள்கிறோம். மஹாப் பெரியவரின் ஆசிகளுடன் கிடைத்திருக்கிரது. ருத்ராபிஷேகப் ப்ரஸாதத்துடன், மேலும் எல்லையில்லாத அருள் வாக்குப் பிரஸாதங்களையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிரோம். ஆசிகள்

  ReplyDelete
 5. அனைவருக்கும் வாழ்த்துகள்.
  அமுதமழையை வாரி வளங்கும் உங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  அமுதமழையில் நனைந்து இன்புற வருகின்றோம். நன்றி.

  ReplyDelete
 6. 20 நபர்களில் ஒருவராக எனக்கும் , இந்தப்பகுதியில் பூங்கொத்து மற்றும் ஒருசில மங்கலப்பொருட்கள் அளித்து கெளரவித்த அன்புள்ள திரு VGK. அவர்களுக்கு எனது நன்றி! மற்றவர்களுக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்!

  (மீண்டும் இங்கு வருவேன்)

  ReplyDelete
 7. சொன்னால் நமபமாட்டீர்கள்! வலைப்பதிவர்களுக்கு VGK சார் ஏதாவது விருதுகள் ( BLOGGERS AWARDS ) கொடுத்துக் கொண்டே இருப்பாரே என்று பத்து நாட்களுக்கு முன்னர்தான் நினைத்தேன். தன்னம்பிக்கை தரும் தத்துவத்தையும் சொல்லி, மங்கலகரமான பொருட்களையும் கொடுத்து அசத்தி விட்டீர்கள்!

  ’விழுவது மீண்டும் எழுவதற்காகவே ’
  எனத் தன்னம்பிக்கையோடு சொல்லும்
  இந்தக்கிளியைப் பாருங்கோ! ;)))))

  ReplyDelete
 8. மஹாபெரியவாளுக்காக பிரசாதம் எடுத்துச் சென்றவர் அதை ஸ்வாமியிடம் கொடுத்தாரா? அருளமுதத்திலும் இந்த சஸ்பென்ஸ் வேண்டாம் கோபு ஸார்!
  இந்த அருளமுதத்தைப் படிக்க கொடுத்துவைத்தவர்கள் தாங்களாகவே வருவார்கள். இதைப் படிப்பதுதான் உண்மையான வரபிரசாதம்.

  நீங்கள் கொடுத்துள்ள எல்லா மங்கலப்பொருட்களுக்கும் நன்றி!

  ReplyDelete
 9. Wow sir, very very interesting and lovely things you have discussed and explained us through out the series.
  This time you had mentioned about confidence with the parrot falling down and getting up, which is very very encouraging for everybody.
  Your like my father, thank you very much for the beautiful red roses, I am really happy that I am learning a lot from all your post. Thank you very much sir for sharing all the life experiences with us..

  ReplyDelete
 10. ஐயா வணக்கம்!

  மாசற்ற மனமும் மயங்காத குணமும்
  பேச வேண்டியதில்லை பெறுமே பேறு
  நேசமுடன் செயலும் நினைவும் சேர்ந்திருக்க
  கூசுமே குறைகாண பிறர்க்கு!..

  ஆரம்பமாக மிக மிக அருமையான தத்துவமதை பதிவு செய்துள்ளீர்கள்! நன்றி!

  அடுத்து, அதிசய நிகழ்வு! தொடர் தொடரட்டும்... தொடர்கிறேன்...

  ’விழுவது மீண்டும் எழுவதற்காகவே ’ தன்னம்பிக்கைக் கிளியின் சாதனை அற்புதம். ரசிக்கவைக்கின்றது.
  மிகவும் அருமை. அழகு!

  ReplyDelete
 11. கௌரவிப்பிற்கு நன்றி!
  ******************
  ஐயா!... கருத்துக்களைப் பின்னூட்டமாகக் கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ள 20 நபர்களை பூங்கொத்து மற்றும் ஒருசில மங்கலப்பொருட்கள் அளித்து கெளரவித்துள்ளமை உங்களின் அளப்பரிய அன்பினை வெளிப்படுத்துகின்றது.
  எனக்கு ஏற்பட்டுள்ள நேரப்போதாமை காரணமாக கருத்துப்பதிவுகளை மிகச் சாதாரனமாகத்தான் நானும் இங்கு இட்டுள்ளேன். அதற்கே எனக்கும் மலர்ச்செண்டு தந்து கௌரவித்துள்ளீர்களே ஐயா!...
  ஆச்சரியம்தான். ஆனாலும் உங்கள் அன்பின் வெளிப்பாடாக உவந்தளித்த மலர்செண்டை ஏற்றுக்கொண்டு மனமுவந்த என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

  உங்களின் இந்த எழுத்துப்பணி தொடர என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

  தேவை இதுவெனக்கண்டு தரும் உங்கள்
  சேவை யாவர்க்கும் சிறப்பே பாரில்
  வாழும் காலம் வரமாய் சுகநலன்கள்
  சூழும் இறையருள் சுரந்து!..

  மிக்க நன்றி ஐயா!

  ReplyDelete
 12. இங்கு ஐயாவின் கௌரவிப்பினைப் பெற்றுக்கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த இனிய நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. மங்களகரமான பொருட்களுடன், பூங்கொத்துகள்... நன்றி ஐயா...
  என்றும் வேண்டும் இந்த அன்பு

  ReplyDelete
 14. முக்கியமான கட்டத்தில் தொடரும்... ஆவலைத் தூண்டிவிடீர்களே ஐயா! பூங்கொத்து அளித்து ஆசீர்வத்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 15. என்ன சார் தொடரில் சஸ்பென்ஸ் வைத்து முடித்து விட்டீர்கள்... ? இருக்கட்டும் ஆவலோடு அடுத்த தொடரில் படித்து விடலாம். மங்கல பொருட்கள் , பரிசுகள், கிளிகள் என போட்டோக்கள் போட்டு அசத்தி விட்டீர்கள்.மிக்க நன்றி!

  ReplyDelete
 16. \\குற்றம் இழைத்தபின் ஒருவரைத் தண்டிப்பதும், ஒருவர் சுபாவமான தர்ம உணர்ச்சி இல்லாமல் தண்டனைக்கு பயந்தே குற்றம் செய்யாமல் இருக்கச் செய்வதும், இரண்டாம் பட்சம்தான்.

  குற்றம் செய்கிற எண்ணமே தோன்றாமல் செய்வதுதான் உயர்ந்தது.\\

  மிகவும் அற்புதமானக் கருத்தை வெளியிட்டுள்ளீர்கள். ஒவ்வொருவரும் மனத்தில் ஏற்று நடக்கவேண்டிய நற்செய்தி இது. நன்றி சார். மிராசுதாரரின் விருப்பம் நிறைவேறியதா? அடுத்தப் பதிவு வரைக் காத்திருக்கிறேன்.

  ஒவ்வொரு பதிவுக்கும் பின்னூட்டமிட்டு ஊக்கமளிப்பவர்களைப் பெருமைப்படுத்தும் தங்களுக்குப் பாராட்டுகள் வை.கோ.சார். பெருமைக்குரிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. அப்புறம் என்னவாயிற்று? சரியான இடத்தில் தொடரும் போட்டுவிட்டீர்களே!
  உங்கள் மங்கலப் பொருட்களுக்கு நன்றி வைகோ சார்.

  ReplyDelete
 18. Waiting for the next part...
  Thanks for your blessings!

  ReplyDelete
 19. பரிசுகளுக்கு நன்றி. புடைவையும் கொடுத்திருக்கீங்க! :))) சில்க் காட்டனா, பட்டா? :))))))

  இதிலே கூட சஸ்பென்ஸ் வைச்சுட்டீங்களே! ரொம்பப் பொறுமையாக உங்களுக்கு வரும் பின்னூட்டங்களைக் கூடக் கணக்கில் எடுத்து யார் எப்போதும் வராங்கனு பார்த்து! ரொம்பப் பொறுமைசாலி சார் நீங்க. இப்படியே எப்போதும் சுறுசுறுப்புடனும், பொறுமையுடனும் இருக்கப் பிரார்த்தனைகள். பெரியவாள் அனுகிரஹத்தால் அனைத்தும் நன்றாக நடக்கும். வாழ்த்துகள்.

  ReplyDelete
 20. /தரமான வாழ்க்கை என்பது மனநிறைவோடு இருப்பதுதான்/ உண்மை. குறைகள் பற்றி கூறியிருப்பதும், பகிர்வும், நன்றி நவின்ற விதமும் அருமை. தொடருங்கள்.

  ReplyDelete
 21. அடடா.. கோபு அண்ணன்.. உங்கள் இத்தலைப்பு மேலே வரவில்லையே எனக்கு. அதனால் தெரியவில்லை, நல்லவேளை தகவல் சொன்னீங்க... பாருங்கோ என் மின்னல் மியாவில் பழசே நிக்குது.. இப்பூடி..

  //VAI. GOPALAKRISHNAN
  10] பேதமில்லாத ஞான நிலை
  3 days ago///.

  இப்படி எத்தனை பேருக்கு தலைப்பு தெரியாமல் இருக்கோ தெரியவில்லை. ஒருதடவை பதிவுக்கு எடிட் கொடுத்து ரிவேர்ட் ரு ட்ராவ் கொடுத்து மீண்டும் பப்ளிஸ் எனக் கொடுத்துப் பாருங்கோ.. அல்லது எனக்கு மட்டும்தான் இப்பூடி எனில் வாணாம்ம்.

  ReplyDelete
 22. ஆவ்வ்வ்வ்வ் பூங்கொத்துக்கு மிக்க மிக்க நன்றிகள். நிறையச் செலவாகியிருக்குமே:).

  //சராசரியாக ஒவ்வொரு பகுதிக்கும் 36 பின்னூட்டங்கள் வீதம் கிடைத்திருப்பது,அடியேனின் இந்தப்புதிய முயற்சிக்கு, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்ரஹம் உள்ளது என்பதை உங்கள் அனைவரின் வாயிலாகவும் எனக்கு உணர்த்தப்பட்டுள்ளதாக எண்ணி மிகவும் மகிழ்கிறேன். //

  அதுதான் முதல் பதிவிலேயே புத்தகம் வந்து அனுக்கிரகம் இருப்பதை நிரூபித்துவிட்டதே...

  ReplyDelete
 23. இதுவரை மொத்தம் வந்துள்ள பின்னூட்டங்கள்: 364

  ஆண்களிடமிருந்து வந்துள்ள பின்னூட்டங்கள்: 119

  பெண்களிடமிருந்து வந்துள்ள பின்னூட்டங்கள்: 245////

  ஹா..ஹா..ஹா.... எங்க போனாலும் எம்பாலார்தான் முதலிடத்திலாக்கும்:)) .. ... ..... கொக்கோ:))).. ஹையோ மீ ஒண்ணுமே சொல்லமாட்டன் ஜாமீஈஈஈஈஈஈஈ:)).

  ReplyDelete
 24. ஆடை ஆபரணம் என கலக்கிட்டீங்க.. எதை எடுக்க எதை விட? எல்லாத்திலும் எடுக்கலாமோ?.... அம்முலு எனக்கு பிடிச்ச சாறியை டக்கெனத் தூக்கிட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

  ReplyDelete
 25. ராஜேஸ்வரி அக்கா..ஓடிவாங்கோஓஓஓஓஒ.. உங்கட கிளிகள் கூண்டோடு களவுபோனது தெரியாமல் அங்கென்ன பண்ணுறீங்க?:)) கெதியா வந்து வழக்குப் போடுங்கோ:)) வேணுமெண்டால்ல் மீ சாட்சிக்கு வாறேன்ன்ன்ன்:))).

  ReplyDelete
 26. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_19.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 27. உங்க பரிசுகளுக்கும்,பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றிகள் கோபு அண்ணா.மிகத்துல்லியமாக கணக்கெடுத்து அனைவருக்கும் பரிசில்கள் வழங்கிகெளரவ‌ப்படுத்தும் உங்களுக்கு மகாபெரியவரின் ஆசீர்வாதம் என்றைக்கும் உண்டு.
  கெளரவிக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. //

  குறைகள் உள்ளவரிடம் அதை எடுத்துக்காட்ட வேண்டுமானால் நமக்கு பூரண தகுதி இருக்க வேண்டும்.


  தம்மிடமே ஏராளமான குறைகளை வைத்துக்கொண்டு இன்னொருத்தருக்கு உபதேசம் செய்தால் அது பலனளிக்காது.//மிக சரியே...

  தொடருங்கள் ஐயா!! நன்றி சொல்லிய விதம் அருமை!!

  ReplyDelete
 29. தரமான வாழ்க்கை என்பது மனநிறைவோடு இருப்பதுதான்.

  கிளிகள் கொஞ்சும் சிறப்பான பரிசுகளுக்கு
  மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

  ReplyDelete
 30. மிக மிக அருமையான வார்த்தைகள்..

  ReplyDelete
 31. இந்தக்கிளி போல அந்தப் பத்துப் பகுதிகளையும் நாம் இப்போது ஒருமுறை திரும்பிச்சென்று பார்ப்போமா? ;)//
  ஊருக்கு போய் விட்டதால் பதிவுகளை படிக்க முடியவில்லை.
  இந்த கிளி போல அந்த விட்டுப்போன பகுதிகளை படிக்க போகிறேன்.

  //உள்ளவரிடம் அதை எடுத்துக்காட்ட வேண்டுமானால் நமக்கு பூரண தகுதி இருக்க வேண்டும்.


  தம்மிடமே ஏராளமான குறைகளை வைத்துக்கொண்டு இன்னொருத்தருக்கு உபதேசம் செய்தால் அது பலனளிக்காது./

  மிக் மிக உண்மை.
  மனநிறைவான வாழ்க்கை கிடைப்பது ஒரு வரபிரசாதம்.
  பதிவு மனதுக்கு நிறைவை கொடுக்கிறது.

  ReplyDelete
 32. 4 நாள் மும்பை சென்று நேற்று இரவு தான் திரும்பி வந்தோம்.
  இன்ப அதிர்ச்சி. சந்தியா கல்யாணத்துக்கு தேவையானவற்றை கொஞ்சமா எடுத்துக்கறேன்.

  குறைகள் உள்ளவரிடம் அதை எடுத்துக்காட்ட வேண்டுமானால் நமக்கு பூரண தகுதி இருக்க வேண்டும்.

  ஒருநாள் ஒரு பெண் தன மகனுடன் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்து தன் மகன் வெல்லம் அதிகமாக சாப்பிடுவதாகவும், அது நல்லதல்ல என்றும், அதிகம் சாப்பிடவேண்டாம் என்றும் அவனுக்கு உபதேசம் செய்யும் படியும் வேண்டினாளாம். அதற்கு பரஹம்சர் 10 நாள் கழித்து வரும்படி கூற அதன் படியே பத்துநாள் கழித்து வந்ததும், அந்த சிறுவனிடம் வெல்லம் சாப்பிடாதே என்று உபதேசம் செய்தாராம்

  சீடர்கள் இதற்கு எதற்கு பத்து நாட்கள் அவகாசம் என்று கேட்டதற்கு தானே அதிகம் வெல்லம் சாப்பிட்டுவந்ததாகவும், தான் நிறுத்திய பிறகுதானே உபதேசம் செய்யமுடியும் என்றும் சொன்னாராம்.

  அட ராமா! இங்கும் சஸ்பென்சா. சரி அடுத்த இழைக்குப் போய் மகா பெரியவா பிரசாதங்களை ஏற்றுக் கொண்டாரான்னு பார்க்கிறேன்.

  பரிசுகளுக்கும், பூங்கொத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 33. //தம்மிடமே ஏராளமான குறைகளை வைத்துக்கொண்டு இன்னொருத்தருக்கு உபதேசம் செய்தால் அது பலனளிக்காது.//

  விழுவது மீண்டும் எழுந்து விடத்தான்.... கிளியின் முயற்சி மட்டும் நம்மிடம் இருந்துவிட்டால்.....

  நல்ல பகிர்வு. தொடர்கிறேன்.

  ReplyDelete
 34. சங்கரரின் அருள் பெறவும் உங்கள் பரிசுகளை பெறவும் வந்துவிடுகின்றேன். ஆன்லைன் சாப்பிங் மாதிரி படங்கள் போட்டுருக்கிங்களே !!!

  ReplyDelete
 35. //விழுவது மீண்டும் எழுந்து விடத்தான்...//

  கிளியைப் போல் எழுந்து கொள்ள பழக வேண்டும்....

  திருவிடைமருதூர் பிரசாதத்தை உடனே கொடுத்தாரா.... தொடர்கிறேன்.

  ReplyDelete
 36. அன்பின் வை.கோ - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மாகாப் பெரியவாளின் அனுகிரகத்தால் அமுத மழை தொடர்ந்து பொழிகிறது - இப்பதிவினில் இன்றையப் பதிவும் பாதி தான் வந்திருகிறது - தொடரும் போட்டு விட்டீர்கள் - காரணம் - மறுமொழிகள் தொடர்ந்து எழுதியவர்களுக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்விக்க வேண்டுமென்ற நல்ல எண்ணமாகவாகவும் இருக்கலாம் - இருப்பினும் அதனை தனிப் பதிவாக இட்டிருக்கலாமே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 37. தொடரின் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 38. மனதுக்கு நிறவான சந்தோஷமான பதிவுக்கு நன்றிகள்

  ReplyDelete
 39. இந்த வாட்டி படங்கள்ள இன்னாலாமோ போட்டுபிட்டீங்க. திங்கதுக்கு ஐஸுக்ரீமு மட்டுதானா

  ReplyDelete
 40. அமுத மழையில் நனைவதில் இருந்து வெளியே வரவே முடியலயே.

  ReplyDelete
 41. குற்றம் செய்கிற எண்ணமே தோன்றாமல் செய்வதுதான் உயர்ந்தது.

  தரமான வாழ்க்கை என்பது மனநிறைவோடு இருப்பதுதான்.// உண்மை வரிகள்...நன்றி

  ReplyDelete
 42. கிளிகள் படம்லாம் பாத்துண்டே இருக்க தோணறது. பூங்கொத்துகள் மற்ற சிறப்பான படங்கள் அழகோ அழகு.

  ReplyDelete
  Replies
  1. happy October 24, 2016 at 11:20 AM

   //கிளிகள் படம்லாம் பாத்துண்டே இருக்க தோணறது. பூங்கொத்துகள் மற்ற சிறப்பான படங்கள் அழகோ அழகு.//

   கிளி கொஞ்சும் அழகான எங்கட ஹாப்பியே, வருக ! வருக !! உன் தாமதமான வருகையும் கருத்துக்களும் கூட, எனக்கு அழகோ அழகு தான்.

   Delete
 43. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (18.05.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:

  https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=400619987107368

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete