என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

43] படிப்பே மருந்து, பத்தியமே பணிவு.

2
ஸ்ரீராமஜயம்






பத்தியம் இல்லாமல் மருந்து மட்டும் பலன் தராது. உங்களுக்கெல்லாம் படிப்புதான் மருந்து என்றால் அதோடு சேர்த்துக்கொள்ள வேண்டிய பத்தியம் தான் பணிவு என்பதே.

பள்ளியில் படித்து வெளிவந்தவர்கள் யோக்கியர்களாக இல்லாவிட்டால், பள்ளிக்கூடம் வைத்த பயன் நமக்கு ஏது?

பக்தி, கட்டுப்பாடு, தியாகம் முதலியவை இல்லாமல், படிப்பால் வெறும் புத்தியை மட்டும் வளர்த்துக்கொண்டால் சாதுர்யமாக அயோக்கியத்தனங்கள் செய்து தப்பித்துக் கொள்வதற்குத்தான் வழியாகிறது.

தியானம் செய்வதே வாழ்க்கையின் முதலான காரியம் என்று கருத வேண்டும். உறுதியான சங்கல்ப்பம் இருந்தால் காலம் கிடைக்காமல் போகாது.




oooooOooooo




“அந்த மஹான்களெல்லாம் 
நம் வீட்டுக்கு வரமாட்டார்கள்…”


காஞ்சிப்பெரியவர் கும்பகோணத்திலுள்ள தெரு வழியாக நடந்து வந்தார். 

ஒரு வீட்டு வாசலில் பந்தல், தோரணம் என அமர்க்களப்பட்டது. 

அவ்வீட்டு சிறுவனுக்கு உபநபயனம் (பூணூல் சடங்கு). 

அந்த வீட்டின் முன் பெரியவர் நின்றார். 

வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து, பாதத்தில் விழுந்து ஆசி பெற்றனர்.

பெரியவர், அன்று புதிதாக உபநயனம் ஆன பையனையும், அவனது பெற்றோரையும் முன்னால் வரும்படி அழைத்தார். 

உபநயனம் நடப்பதற்கு முந்தியநாள் தான், அந்தப் பையன் தன் அப்பாவிடம், ”அப்பா! மஹா பெரியவா நம்ம ஊருக்கு வந்திருக்கிறாரே! எனக்கு பூணூல் சடங்கு நடக்கிற விபரத்தை அவரிடம் சொன்னால், நம் வீட்டுக்கு வருவார் இல்லையா!” என்று கேட்டான்.

அதற்கு அப்பா, "அந்த மஹான்களெல்லாம் நம் வீட்டுக்கு வரமாட்டார்கள்,” என்று சொல்லியிருந்தார்.

ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில், பெரியவரே யாரும் அழைக்காமல் அங்கு வந்து நின்று, தங்களை முன்னால் வரச்சொல்கிறார் என்றால், அவர்களுக்கு எவ்வளவு இன்ப அதிர்ச்சியாக இருக்கும்!

பெரியவர் அந்த சிறுவனை ஆசிர்வதித்தார்.

பின், அடுத்த தெருவுக்கு சென்றார். அவ்வீட்டில், ஒரு சிறுவனும், அவனது பாட்டியும் இருந்தனர். பெரியவரைக் கண்டதும் நமஸ்கரித்தனர்.
பெரியவர் மூதாட்டியிடம், “நேற்று இரவு உன் பேரன், நம் வீட்டுக்கு பெரியவர் வருவாரா என்று கேட்டான் இல்லையா! நீ அதற்கு என்ன சொன்னாய்?” என்றார்.
”பெரியவா! உங்களுக்கு பாதபூஜை செய்யவோ, பிக்ஷை செய்யவோ (தானம் செய்தல்) எங்களிடம் வசதியில்லை, அதனால், நீங்கள் எங்கள் வீட்டுக்கு வரமாட்டீர்கள் என்று சொன்னேன்,” என்றார் மூதாட்டி.

பெரியவர் சிரித்தார்.

“”பார்த்தாயா! இப்போது நான் வந்து விட்டேன், என்ன செய்யப் போறே!” என்றவர், பையனை அருகில் அழைத்து, “என்னைத் தரிசிக்க நீ எதுவும் செய்ய வேண்டாம். உன் வீட்டுக்கு வருவேனா என்று சந்தேகப்பட்டாய் அல்லவா! இப்போ, நான் உன் வீட்டுக்குள்ளேயே வரப்போறேன். நீ அனுமதிப்பாயா?” என்றவர், வீட்டுக்குள் வந்து சிறுவனையும், மூதாட்டியையும் ஆசிர்வதித்தார்.
எங்கு என்ன நடந்தாலும் தெரிந்து கொள்ளும் மஹிமை மிக்கவராக இருந்தார் பெரியவர்.
[மார்ச் 17,2013, தினமலரில் வந்த செய்தி - By சி.வெங்கடேஸ்வரன்]




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியிடப்படும்





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

29.08.2013 வியாழக்கிழமை

39 கருத்துகள்:

  1. படிப்புதான் மருந்து என்றால் அதோடு சேர்த்துக்கொள்ள வேண்டிய பத்தியம் தான் பணிவு என்பதே.
    உண்மை ஐயா நன்றி

    பதிலளிநீக்கு
  2. முக்காலமும் அறிந்தவர்கள் மட்டும்
    அல்லாது ஏழைகளின் பால அன்பும்
    இரக்கமும் கொண்டவர்கள் அல்லவா
    மஹாப் பெரியவரைப்போன்ற மகான்கள்
    ஏழையில் குரல் எப்படி அவர்கள் செவியில்
    விழாமல் போகும்,..
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  3. அதனால்தான் வித்யா வினைய சம்பன்னே
    என்று வடமொழியில் எழுதி வைத்தார்கள்.

    பணிவோடு இருப்பதுதான்
    கற்ற கல்விக்கு அழகு.

    எண்ணத்திலும் செயலிலும்
    பணிவில்லாவிடில் அந்த இடத்தில
    அழிக்கும் அகந்தை குடியேறிவிடும்
    ஆபத்தில் சிக்க வைத்து விடும்.

    அதனால்தான் என்றும்
    மூத்தோர் சொல் வார்த்தை
    அமிர்தம் என்றார்கள்

    அருமையான பதிவு.
    பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  4. அமுத மொழிகளும், பெரியவரின் அனுக்ரஹ மஹிமைகளும் தொடர்ந்து படித்து இன்புற்றேன்....

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  5. பக்தி, கட்டுப்பாடு, தியாகம் முதலியவை இல்லாமல், படிப்பால் வெறும் புத்தியை மட்டும் வளர்த்துக்கொண்டால் சாதுர்யமாக அயோக்கியத்தனங்கள் செய்து தப்பித்துக் கொள்வதற்குத்தான் வழியாகிறது

    How true these wards are......

    எங்கு என்ன நடந்தாலும் தெரிந்து கொள்ளும் மஹிமை மிக்கவராக இருந்தார் பெரியவர்
    I am praying the great great Periyava..
    viji

    பதிலளிநீக்கு
  6. முக்காலமும் உணர்ந்த ஞானி அவர். மனதரிந்து எளிமையாக தரிசனம் கொடுத்தப் பாங்கு. வியக்கத்தக்க மஹாபெரியவர். படிப்புமட்டும் போதாது. பணிவு என்பதற்கு அர்த்தம் வாழ்ந்து காட்டிய பெரியவர். நல்ல பதிவு.அன்புடன்

    பதிலளிநீக்கு
  7. எங்கெங்கோ நட்ப்பதைஎல்லாம் பக்கத்தில் இருந்து கேட்டவர் போல் சொல்கிறாரே !மெய் சிலிர்க்கிறது.

    பதிலளிநீக்கு
  8. Well said about education and discipline.Knowledge with out discipline is certainly of use.Nice post

    பதிலளிநீக்கு
  9. தியானம் செய்வதே வாழ்க்கையின் முதலான காரியம் என்று கருத வேண்டும். உறுதியான சங்கல்ப்பம் இருந்தால் காலம் கிடைக்காமல் போகாது.

    இன்று நிறைய பேர் சொல்லும் காரணம் தியானம் செய்ய நேரமில்லை என்பதே.!

    சங்கல்பம் உறுதியாக இல்லாதபோது காரணங்கள் ஏராளமாக கிடைக்கின்றன..!

    பதிலளிநீக்கு
  10. பத்தியம் தான் பணிவு ..!

    பணியுமாம் என்றும் பெருமை..!

    பதிலளிநீக்கு
  11. எங்கு என்ன நடந்தாலும் தெரிந்து கொள்ளும் மஹிமை மிக்கவராக இருந்தார் பெரியவர்.

    அமுதமழையாய்
    ஆனந்த வர்ஷிப்பு..!

    பதிலளிநீக்கு
  12. //பத்தியம் இல்லாமல் மருந்து மட்டும் பலன் தராது. உங்களுக்கெல்லாம் படிப்புதான் மருந்து என்றால் அதோடு சேர்த்துக்கொள்ள வேண்டிய பத்தியம் தான் பணிவு என்பதே.// - நல்ல கருத்து.

    பதிலளிநீக்கு
  13. படித்தால் மட்டும் ஒருவர் பெரியவராகிவிட முடியாது என்பதை அழகான பொன்மொழியுடன் பதிவாக்கியுள்ளீர்கள் ஐயா. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  14. அன்பின் வை.கோ - படிப்பே மருந்து - பத்தியமே பணிவு - பதிவு அருமை. படிப்பு பணிவு - மருந்து பத்தியம். இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பணியாற்றினாலே விளைவு நன்றாக இருக்கும். அருமையான ஆலோசனை. தியானம் செய்வதே வாழ்க்கையின் முதலான காரியம் என்று கருத வேண்டும். நற்சிந்தனையில் விளைந்த அருமையான - கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரை.

    பதிலளிநீக்கு
  15. அன்பின் வை.கோ - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா நம் வீட்டிற்கெல்லாம் வர மாட்டார்கள் என எண்ணுவது சரியல்ல - நாம் நினைப்பது அவர்களுக்குத் தெரியும் - நம்மை மகிழ்விக்க எப்பபடியும் வருவார்கள் . அருமையான பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  16. வீட்டிற்கு வரமாட்டார்கள் என நினைத்திருந்தால் இப்படி வந்து விசாரிப்பதில் அவருடைய தனித்துவம் தெரிகிறது.

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  17. பத்தியம் இல்லாமல் மருந்து மட்டும் பலன் தராது. உங்களுக்கெல்லாம் படிப்புதான் மருந்து என்றால் அதோடு சேர்த்துக்கொள்ள வேண்டிய பத்தியம் தான் பணிவு என்பதே.//

    பத்தியம் இல்லாத மருந்து பலன் தராது தான்.அது போல் அறிவும், பணிவும் சேர்ந்து இருந்தால் மேன்மை என்பதை அழகாய் எளியவர்களும் புரிந்து கொள்வது போல் சொல்லி இருக்கிறார் மஹா பெரியவர்.

    //தியானம் செய்வதே வாழ்க்கையின் முதலான காரியம் என்று கருத வேண்டும். உறுதியான சங்கல்ப்பம் இருந்தால் காலம் கிடைக்காமல் போகாது.//
    மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.நித்திய பணிகளுக்கு இடையே சிறிது நேரம் தியானத்திற்கு ஒதுக்க வேண்டும்.
    அருமையான அமுதமொழி.
    எளியவர்களூக்கும் அருளும் அருளாளன் என்று இறைவனை சொல்வது போல் நடமாடும் தெய்வமாய், இருந்து இருக்கிறார் மஹா பெரியவர்.

    நாளும் நல்ல அமுதமொழிகளையும், மஹாபெரியவர் ஆற்றிய அற்புதங்களையும் எங்களுக்கு தரும் உங்களுக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.


    பதிலளிநீக்கு
  18. பத்தியம் இல்லாமல் மருந்து மட்டும் பலன் தராது. உங்களுக்கெல்லாம் படிப்புதான் மருந்து என்றால் அதோடு சேர்த்துக்கொள்ள வேண்டிய பத்தியம் தான் பணிவு என்பதே.//
    //உண்மைதான் ஐயா! பெரியவாளின் கருணை மெய்சிலிர்க்க வைத்தது! தொடரட்டும் அற்புதங்கள்! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  19. அமுதமழையில் நனைந்தேன்,தொடரட்டும் ஐயா!!

    பதிலளிநீக்கு
  20. Arumayana ezhuthukkal . Unga blog romba nalla irukku .Happy to follow you.

    பதிலளிநீக்கு
  21. // பக்தி, கட்டுப்பாடு, தியாகம் முதலியவை இல்லாமல், படிப்பால் வெறும் புத்தியை மட்டும் வளர்த்துக்கொண்டால் சாதுர்யமாக அயோக்கியத்தனங்கள் செய்து தப்பித்துக் கொள்வதற்குத்தான் வழியாகிறது. //

    இந்த அருள்மொழியைப் படித்ததும் ,ந்மது மீசைக் கவிஞன் பாரதி சொன்ன “ படித்தவன் சூது வாது செய்தால் ஐயோ என்று போவான்” – என்ற வரிகள ஞாபகம் வந்தது.

    பதிலளிநீக்கு
  22. படிப்பே மருந்து; பத்தியமே பணிவு!! ஆஹா... சொல்லிச் சொல்லி நாவும், நினைந்து நினைந்து மனமும் இனித்துக் கிடக்கிறது... அமுத மழையே தான்!!!

    பதிலளிநீக்கு
  23. பத்தியத்தைத் தினமும் எடுத்துக்கணும். நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. கீதா சொல்வது போல நாம் பத்தியத்தை தினமும் எடுத்துக் கொள்ள வேணும்.
    பெரியவா வருவாரா என்று கேட்ட சிறுவனுக்காக நேரே போய் தரிசனம் கொடுத்த அருளை என்னவென்று சொல்வது?

    பதிலளிநீக்கு
  25. அழகு.. பதிவு அழகு... பதவி வரும்போது பணிவும் வரவேண்டும் அதுதானே அழகு... அழகாகச் சொல்லிட்டீங்கள்.

    பதிலளிநீக்கு
  26. \\பள்ளியில் படித்து வெளிவந்தவர்கள் யோக்கியர்களாக இல்லாவிட்டால், பள்ளிக்கூடம் வைத்த பயன் நமக்கு ஏது?\\

    சுள்ளென்று தைக்கும் நியாயமான கேள்வி.

    குழந்தைகளின் ஏக்கத்தைத் தீர்த்துவைத்த மகிமை போற்றத்தக்கது அல்லவா? பகிர்வுக்கு மிக்க நன்றி வை.கோ.சார்.

    பதிலளிநீக்கு
  27. குழந்தை விரும்பியது என்பதற்காக பணிவுடன் தானே சென்று அருள்கின்றார்.

    பதிலளிநீக்கு
  28. Very interesting sir, knowledge and discipline always goes together... only knowledge and no discipline and vice versa is of no use...

    பதிலளிநீக்கு
  29. // உங்களுக்கெல்லாம் படிப்புதான் மருந்து என்றால் அதோடு சேர்த்துக்கொள்ள வேண்டிய பத்தியம் தான் பணிவு என்பதே.// marunthE pidikka maattEn engirathE!! :-)) Aanulum aazhamaana karuththu; maanavachchelvangaL purinthu koLLa vEndum.

    magaanin nigazhvukaL aascharyangaL.

    பதிலளிநீக்கு
  30. பணிவுடன் சேர்ந்த கல்வியே பயன் தரும் வித்யாகர்வம் கூடாது அருமையான அருளுறை ஏழை பணக்காரன் வித்தியாஸம் பெரியவாளுக்கு கிடையாது குழந்தையின் ஏக்கம் தீர்க்க நேரில் வந்து ஆசி நல்ல பதிவு நன்றி

    பதிலளிநீக்கு
  31. பத்தியம் இல்லாமல் மருந்து மட்டும் பலன் தராது. உங்களுக்கெல்லாம் படிப்புதான் மருந்து என்றால் அதோடு சேர்த்துக்கொள்ள வேண்டிய பத்தியம் தான் பணிவு என்பதே.//

    இந்த விஷயங்களை பள்ளிக்கூடத்திலேயே சொல்லிக் கொடுத்தால் தீவிரவாத கும்பல் குறைந்து விடுமே.

    பிஞ்சு நெஞ்சுக்கும் அருள் புரியும் மகா பெரியவாளின் கருணையை என்னென்று சொல்வது. மெய் சிலிர்க்கிறது.




    பதிலளிநீக்கு
  32. என்ன ஒரு கருணை உள்ளம் பிரமிப்பாகத்தான் இருக்கு.. பதிவின் சில பகுதிகளில் எழுத்து மிகவும் பொடி சாக இருக்கே படிக்க சிரமமா இருக்கு

    பதிலளிநீக்கு
  33. யாரு எங்கன இன்னா பேசிகிட்டாலும் அவுகளுக்கு எப்பூடியோ தெரிஞ்சுடுது.

    பதிலளிநீக்கு
  34. படிப்புதான் மருந்து என்றால் அதோடு சேர்த்துக்கொள்ள வேண்டிய பத்தியம் தான் பணிவு என்பதே.
    உண்மை. பெரியவாளின் அ நுக்ரகம் பெற்றவர்கள் பாக்கிய சாலிகள்.ஆத்மார்த்தமான பக்தியால்தான் அது கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  35. தியானம் செய்வதே வாழ்க்கையின் முதலான காரியம் என்று கருத வேண்டும். உறுதியான சங்கல்ப்பம் இருந்தால் காலம் கிடைக்காமல் போகாது.// நான் சிலகாலம் செய்து ...பின்னர் தொடர்வதில்லை. மீண்டும் தொடர் சங்கல்பம் செய்து கொள்ள இந்தப் பதிவு தூண்டுகிறது...

    பதிலளிநீக்கு
  36. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (19.06.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=417718082064225

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு