About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, October 12, 2013

64] கசக்கும் வாழ்வே இனிக்கும்.

2
ஸ்ரீராமஜயம்


ஒரு பசு இருந்தால் அது பலபேருக்குப் பால் கொடுக்கிறது. ஆனாலும் அத்தனை பேருக்கும் அது பால் சுரப்பதற்கு, அதை ஊக்குவிப்பதாக, அதனுடைய சொந்தக்கன்று ஒன்று அதன் மடியில் ஊட்டிப்பெற வேண்டியிருக்கிறது.

அப்படித்தான் உபதேசம் என்கிற பால், அது தக்க தகுதிகள் பெற்ற எல்லாருக்கும் பொருத்தமானதாக இருந்தாலும், குறிப்பாக ஒரு சீடனை உத்தேசித்து குரு செய்வதாகவே இருக்கும். மனிதராகப் பிறந்து விட்டால் கஷ்டம், ஆபத்து எல்லாமே வரத்தான் செய்யும். 

அதை உணர்ந்துதான் புத்தாண்டில் பூக்கும் வேப்பம் பூவை உண்கின்றோம்.  வருடத்துவக்கத்திலேயே கசப்பை ஏற்கிறோம்.

ஏறக்குறைய வருட முடிவில் வரும் பொங்கல் பண்டிகையில் கரும்பை ருசிக்கிறோம்.

ஆரம்பத்திலேயே இனித்துவிட்டால், முடிவில் கசந்து போகும்.


’இளமையில் கல்’ என்று சொல்லியிருக்கிறது. அதுவே பிரம்மச்சர்ய ஆஸ்ரமம். 


oooooOooooo

அம்பாளுடைய ரூபம் எப்படி இருக்கும்? 

[ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொன்னது]

சாதாரணமாக, பத்துப் பேருக்கு, நூறு பேருக்கு அன்னதானம் செய்கிற ஒரு நல்ல ஜீவனின் முகத்தைப் பார்த்தால், அதில் எத்தனை அன்பு சொட்டுகிறது? 

அன்னதானம் செய்து, பலர் வயிறாரச் சாப்பிட்டு சந்தோஷப்படுகிறபோது, அந்த அன்னதாதாவின் சந்தோஷத்தைப் பாருங்கள். 

அந்த சந்தோஷத்தில் அவன் முகத்தில் எவ்வளவு அன்பு சொட்டுகிறது. சாப்பிடுகிறவனைவிட சாப்பாடு போட்டவனுக்குத்தான் ஆனந்தம் அதிகம் இருக்கிறது. 

ஒரு பத்து பேர் அல்லது நூறு பேருக்கு மட்டும் ஒரே ஒரு வேளை சோறு போடுகின்றவனிடமே இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கின்றன. 

மகா பாபங்களைச் செய்து, காரியத்தில் செய்யாவிட்டாலும், மனஸினால் மகா பாபங்களை நினைத்து, ஒரு வேளை சோறு கிடைக்கக்கூட யோக்கியதை இல்லாத நம் இத்தனை பேருக்கும் கோடானுகோடி ஜீவன்களுக்கும், கல்பகோடி காலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தி அன்ன பூரணியான ஈஸ்வரியான அம்பாள்தான். 


அவளுடைய அன்பையும், அதனால் உண்டான ஆனந்த ஸ்வரூபத்தையும் நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. 

அம்பாள் ஸெளந்தரியஸ்வரூபம் என்கிறார்கள். 

அவளைப் பற்றி 'ஸெளந்தரிய லஹரி' என்றே ஆச்சாரியாள் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார். 

இத்தனை ஸெளந்தரியமும், லாவண்யமும் அவளுக்கு எப்படி வந்தது என்றால் அன்புதான் அழகாகிறது. 

காருண்யம்தான் லாவண்யம். 

பாக்கி சரீர அழகு ஒர் அழகல்ல. 

கொஞ்சம் கோபம் வந்தால், துளி ஜுரம் வந்தால், சரீர அழகு போய்விடுகிறது. 

அம்பாளோ நிரந்தரமான கருணாமூர்த்தியாக எப்போதும் லாவண்யமாக இருக்கிறாள். 

எந்த பக்தருக்கு எந்த ரூபத்தில் மனசு ஈடுபடுமோ, அந்த ரூபத்தில் வந்து அருள் செய்வதற்காகப் பல ரூபங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாள். 

ஸ்ரீ இராஜராஜேஸ்வரி, ஸ்ரீ புவனேஸ்வரி, ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ காளியாத்தா, ஸ்ரீமாரியாத்தா என்று இப்படி ஸெளம்யமாகவும் உக்ரமாகவும் பல தினுசில் அவளை ஆராதிக்க வேறு வேறு ரூபம் கொள்கிறாள்.


ஸ்ரீ இராஜராஜேஸ்வரி


ஸ்ரீ புவனேஸ்வரி

 

ஸ்ரீ துர்க்கை

 

ஸ்ரீ காளியம்மன் 

 
ஸ்ரீ மாரியம்மன் [சமயபுரம்]

ஒவ்வொரு ரூபத்தையும் பிரத்யக்ஷமாகத் தரிசனம் செய்ய வேண்டுமானால், அதற்கு உபாபயமாக ஒவ்வொரு மந்திரம் இருக்கிறது. 

மந்திரம் என்பது ஒரு சப்தக் கோவை - அக்ஷரங்களின் கூட்டம். பல வடிவங்களில் இருக்கிற அம்பாளே பல சப்தங்களாகவும், அக்ஷரங்களாகவும் இருக்கிறாள். 

அவளுடைய அநுக்கிரஹத்தால் மஹாகவியாகப் பரிணமித்த காளிதாஸர் அவளை ஸர்வ வர்ணாத்மிகே, ஸர்வ மந்த்ராத்மிகே என்று 'சியாமளா தண்டகத்தில்' ஸ்துதி செய்கிறார். 

வர்ணம் என்றால் நிறம் என்று நினைப்பீர்கள். 

வர்ணம் என்றால் அக்ஷரம் என்று அர்த்தம். 

ஒலி வடிவான அக்ஷரங்களும், ஒளி வடிவமான ரூபங்களும் ஒரே மூலத்திலிருந்து வந்தவைதான். அவை ஒன்றுக்கொன்று நிரம்ப நெருக்கமான சம்பந்தம் உடையவை. 

ஸயன்ஸ் நிபுணர்கள்கூட இந்த ஒற்றுமையைச் சொல்கிறார்கள். ஜலக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்த்தார்கள். அப்போது அவற்றின் அதிர்வுகளைப் (vibration) பொறுத்து ஜலத்தின் மேலே மிதக்கிற லேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்தன. நாதத்துக்கே ரூபம் கொடுக்கற சக்தி இருக்கிறது என்று இதனால் தெரிகிறது.

ஒரு பெரிய அலை மடிந்து மடிந்து சிறு சிறு அலைகளாகி அடங்குகிற மாதிரிச் சில சப்தங்கள் இருக்கின்றன. இதை வீசிதரங்கம் என்பார்கள். 

ஒரே கொப்புளிப்பில் பலவாகத் தெறிப்பதுபோல் விழுகிற சப்தங்களை முகுளம் என்பார்கள். 

இப்படிப் பலவகைப்பட்ட சப்தங்களையெல்லாம் ஐம்பத்தொரு அக்ஷரங்களாகப் பிரித்திருக்கிறார்கள். 

இவற்றுக்குப் பெயர் மாத்ருகா என்பது. 

மாத்ரு என்றால் தாயார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். 

சப்தமாகவும், எழுத்தாகவும் அம்பாள் இருக்கிறாள். 

இவற்றில் சில சப்தக் கோவைகளை விடாமல் ஜபிக்கும்போது, அவற்றுக்குரிய ரூபங்களும் பிரத்யக்ஷமாகின்றன. 

இப்படிப்பட்ட சப்தக் கோவைகளைத்தான் மந்திரம் என்கிறோம். மந்திரமே அம்பாளின் ஸ்வரூபம்தான். 

கை கால் முதலான அவயங்களோடு ஆயுதங்களைத் தரித்த வடிவங்களைப் போலவே எல்லா மந்திரங்களும் அவள் வடிவம்தான். 

அதோடுகூட, இந்த மந்திரங்களை ஒருமுகப்பட்ட சித்தத்தோடு தீவிரமாக ஜபம் செய்தால், அவளே அந்தந்த மந்திரத்துக்குரிய ரூபத்தில், சரணாகதி அவயவங்களுடனும், ஆயுதங்களுடனும், முத்திரைகள் முதலியவற்றுடனும் தரிசனம் தருவாள். 

இந்த மந்திரங்கள் எல்லாவற்றுக்கும் மூலமாக இருப்பது பிரணவம். 

அதிலிருந்து இந்த நாம, ரூபப் பிரபஞ்ஜம் முழுக்க வந்தது. 

நாத ஸ்வரூபிணியான அம்பாளே ஒங்காரமாகிய அந்தப் பிரணவமும் ஆவாள். 

அ,உ,ம மூன்றும் சேர்ந்து ’ஓம்’ என்று ஆகிறது. 

அ - சிருஷ்டி; உ - பரிபாலனம்; ம - சம்ஹாரம் என்பார்கள். 

அதனால் முத்தொழிலும் செய்யும் மூல சக்தியே பிரணவம். 

இதையே அம்பாளின் தொழில்களில் விசேஷமான கருணையைக்காட்டும் பரிபாலனத்தில் தொடங்கினால், 
உ - ம - அ - என்றாகும். 

அதுதான் ’உமா’ என்பது. 

உபநிஷதமும் அவளை ’உமா ஹைமவதி’ என்றே சொல்கிறது.

[ Thanks to Amritha Vahini - 10.10.2013 ]

 

 

 

அனைவருக்கும் இனிய 
நவராத்திரி, 
சரஸ்வதி பூஜை, 
விஜயதஸமி 
நல்வாழ்த்துகள்.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் 
65/1/4, 65/2/4, 65/3/4 and 65/4/4 என 
நான்கு தனித்தனிப் 
பகுதிகளாக வெளியாகும்.

இந்த அமுதமழை பதிவுகளுக்கு
இதுவரை வருகை தந்துள்ள 
அனைவரின் பெயர்களும் 
அவற்றில் இடம்பெற்றிருக்கும்.

காணத்தவறாதீர்கள்.


என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

69 comments:

 1. இனிய
  நவராத்திரி,
  சரஸ்வதி பூஜை,
  விஜயதஸமி
  நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. இத்தனை ஸெளந்தரியமும், லாவண்யமும் அவளுக்கு எப்படி வந்தது என்றால் அன்புதான் அழகாகிறது.

  காருண்யம்தான் லாவண்யம்.

  அழகான பகிர்வுகள்..!

  ReplyDelete
 3. கோடானுகோடி ஜீவன்களுக்கும், கல்பகோடி காலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தி அன்ன பூரணியான ஈஸ்வரியான அம்பாள்தான்.
  அன்னை அன்னபூரணுக்கு அநேக நம்ஸ்காரங்கள்..!

  ReplyDelete
 4. ஆரம்பத்திலேயே இனித்துவிட்டால், முடிவில் கசந்து போகும்.

  இனிக்கிற வாழ்வே கசக்கும்
  கசக்கிற வாழ்வே இனிக்கும்
  இதுவே வாழ்விவின் நிதர்சனம்..!

  ReplyDelete
 5. மனிதராகப் பிறந்து விட்டால் கஷ்டம், ஆபத்து எல்லாமே வரத்தான் செய்யும்.

  அதை உணர்ந்துதான் புத்தாண்டில் பூக்கும் வேப்பம் பூவை உண்கின்றோம். வருடத்துவக்கத்திலேயே கசப்பை ஏற்கிறோம்.

  ஏறக்குறைய வருட முடிவில் வரும் பொங்கல் பண்டிகையில் கரும்பை ருசிக்கிறோம்.

  பண்டிகைகளின் தத்துவங்களை அழகாக எடுத்துக்காட்டிய அருமையான பதிவுக்கு இனிய பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!

  ReplyDelete
 6. // அப்படித்தான் உபதேசம் என்கிற பால், அது தக்க தகுதிகள் பெற்ற எல்லாருக்கும் பொருத்தமானதாக இருந்தாலும், குறிப்பாக ஒரு சீடனை உத்தேசித்து குரு செய்வதாகவே இருக்கும். //

  பழைய நீதி உரைகள் (பாஷ்யங்கள்) மற்றும் தத்துவ விளக்கங்கள் “ குரு – சிஷ்யன் ” பாவனையில் இருப்பதைக் காணலாம்.

  // இந்த அமுதமழை பதிவுகளுக்கு இதுவரை வருகை தந்துள்ள
  அனைவரின் பெயர்களும் அவற்றில் இடம்பெற்றிருக்கும்.
  காணத்தவறாதீர்கள்.//
  வெள்ளித்திரையில் காண ஆவலாய் இருக்கிறேன்.

  ReplyDelete
 7. அம்பாளின் தொழில்களில் விசேஷமான கருணையைக்காட்டும் பரிபாலனத்தில் தொடங்கினால்,
  உ - ம - அ - என்றாகும்.

  அதுதான் ’உமா’ என்பது.

  இமயமலையில் மானசரோவரில் வசிக்கும் அன்னப்பறவைகள் உமா ..உமா .. என்று சப்தமிட்டு பரம்பொருளை அருமையாக உணர்த்தும்..!

  ReplyDelete
 8. எந்த பக்தருக்கு என்த ரூபம் விருப்பமோ அந்த ரூபமாக வந்து அருள்புரிவாள் அம்பிகை. கண்கொள்ளாக் காட்சியாக அன்னையின் பலவித ரூபங்கள் கண்டு ,மனது எவ்வளவு ஸந்தோஶிக்கிறது. அன்னையின் அனைத்து வடிவங்களையும் மனது ஆராதிக்கிறது. அவ்வளவு ரூபங்களுக்கும் ்நந்த கோடி நமஸ்காரங்கள். அன்புடன்

  ReplyDelete
 9. அனந்த கோடி நமஸ்காரங்கள்.

  ReplyDelete
 10. //ஒரு பசு இருந்தால் அது பலபேருக்குப் பால் கொடுக்கிறது. ஆனாலும் அத்தனை பேருக்கும் அது பால் சுரப்பதற்கு, அதை ஊக்குவிப்பதாக, அதனுடைய சொந்தக்கன்று ஒன்று அதன் மடியில் ஊட்டிப்பெற வேண்டியிருக்கிறது.
  அப்படித்தான் உபதேசம் என்கிற பால், அது தக்க தகுதிகள் பெற்ற எல்லாருக்கும் பொருத்தமானதாக இருந்தாலும், குறிப்பாக ஒரு சீடனை உத்தேசித்து குரு செய்வதாகவே இருக்கும். //
  ஆஹா! அருமையான விளக்கம்!.

  ReplyDelete
 11. அன்பின் வை.கோ

  பசு பால் சுரப்பதற்கு அதன் மடியில் அதன் கன்று முட்டி மோதி பால் குடிக்க வேண்டி இருக்கிறது. அப்படித்தான் உபதேசம் என்கிற பால் - குரு சீடனுக்கு அளிப்பது.

  //
  அதை உணர்ந்துதான் புத்தாண்டில் பூக்கும் வேப்பம் பூவை உண்கின்றோம். வருடத்துவக்கத்திலேயே கசப்பை ஏற்கிறோம்.

  ஏறக்குறைய வருட முடிவில் வரும் பொங்கல் பண்டிகையில் கரும்பை ருசிக்கிறோம்.

  ஆரம்பத்திலேயே இனித்துவிட்டால், முடிவில் கசந்து போகும்.
  //

  அருமையான சிந்தனை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 12. அன்பின் வை.கோ

  அன்னதானம் செய்பவனுக்கு ஏற்படும் மகிழ்ச்சி சாப்பிட்டவனுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியை விட அதிகமாய் இருக்கும். - உண்மை உண்மை.

  அம்பாள் ஸெளந்தரியஸ்வரூபம் விளக்கம் அருமை.

  //அவளைப் பற்றி 'ஸெளந்தரிய லஹரி' என்றே ஆச்சாரியாள் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார். // - நன்று நன்று.

  //
  ஸ்ரீ இராஜராஜேஸ்வரி, ஸ்ரீ புவனேஸ்வரி, ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ காளியாத்தா, ஸ்ரீமாரியாத்தா என்று இப்படி ஸெளம்யமாகவும் உக்ரமாகவும் பல தினுசில் அவளை ஆராதிக்க வேறு வேறு ரூபம் கொள்கிறாள். //

  அம்பாளின் பலப் பல படங்கள் - இராஜ இராஜேஸ்வரியினைப் பின் தொடர்கிறீர்களா ? அத்த்னைக்கும் விளக்கங்கள் - நன்று நன்று.

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 13. அனைவருக்கும் இனிய
  நவராத்திரி,
  சரஸ்வதி பூஜை,
  விஜயதஸமி
  நல்வாழ்த்துகள்.

  நட்புடன் சீனா

  ReplyDelete
 14. பசுவுடன் ஒப்பீடு செய்தது அருமை ஐயா. தானத்தில் சிறந்தது அன்னதானம். நன்றி ஐயா

  ReplyDelete
 15. ஆஹா அற்புதம்
  வேறென்ன சொல்ல
  ஆழமான கருத்துடன் கூடிய
  அற்புதமான விளக்கம்
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
  இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. வணக்கம் அய்யா, இனிய
  நவராத்திரி,
  சரஸ்வதி பூஜை,
  விஜயதஸமி
  நல்வாழ்த்துகள்.
  ’ஆரம்பத்திலேயே இனித்துவிட்டால், முடிவில் கசந்து போகும்.” பதிவின் ஆரம்பத்திலேயே அழகான வாழ்வியல் உண்மை நறுக்குனு சொல்ல்ட்டீங்க அய்யா. அம்பாளின் ரூபத்தை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அற்புதமாக எளிமையாக விளக்கிய விதம் சிறப்பு.

  ReplyDelete
 17. ///அன்னதானம் செய்து, பலர் வயிறாரச் சாப்பிட்டு சந்தோஷப்படுகிறபோது, அந்த அன்னதாதாவின் சந்தோஷத்தைப் பாருங்கள்./// தானங்களில் அன்னதானமே சிறந்தது. ஏழைகளின் பசியைத் தீர்ப்பவர் தான் அவர்களுக்கு கடவுள் ஆகீறார்.

  ReplyDelete
 18. ///ஸ்ரீ இராஜராஜேஸ்வரி, ஸ்ரீ புவனேஸ்வரி, ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ காளியாத்தா, ஸ்ரீமாரியாத்தா என்று இப்படி ஸெளம்யமாகவும் உக்ரமாகவும் பல தினுசில் அவளை ஆராதிக்க வேறு வேறு ரூபம் கொள்கிறாள்./// அழகான விளக்கத்தை அன்பர்களுக்கு பெரியவா வழங்கியிருப்பது மெய்சிலிர்க்கிறது.

  ReplyDelete
 19. ஓம் என்பதற்கும் விளக்கம் தந்து நம்மளையெல்லாம் அம்பாளிடம் சரணடையும் பதிவைத் தந்த தங்களுக்கு நன்றீங்க அய்யா. மீண்டும் தங்களுக்கு இனிய
  நவராத்திரி,
  சரஸ்வதி பூஜை,
  விஜயதஸமி
  நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 20. அம்பிகையின் அழகு வடிவங்கள் அற்புதம்
  அம்பிகையை சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம் என்றான் பாரதி
  பெண்கள் அனைவரும் பராசக்தியின் அம்சங்களே
  அவ்வாறு வழிபடுபவர்களுக்கு அவர்களால் எந்த துன்பமும் வாராது.
  ஆண்களாலும் அவர்களுக்கு துன்பம் இழைக்க இயலாது.
  இந்த உண்மையை உண்மையில் உணர்ந்தவர்கள், அபிராமி பட்டர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள்.
  கோயிலில் மட்டும் சிலையாக கண்டு வணங்குவதோடு நிறுத்திகொள்ளாமல் வெளியிலும் அவர்கள் ,யாதுமாகி நின்றாய் காளி ,எங்கும் நீ நிறைந்தாய் என்ற உயரிய பண்பை இந்த உலகம் கைக்கொண்டால் இந்த உலகம் இன்பமயமாகும். அதற்கு அந்த பராசக்தியின் அருள்தான் துணை நிற்கவேண்டும்.

  ReplyDelete
 21. வேப்பம் பூ, கரும்பு உதாரணம் அருமை ஐயா...

  விளக்கங்களும் பிரமாதம்... இனிய சரஸ்வதி பூஜை, விஜயதஸமி நல்வாழ்த்துகள் ஐயா...

  ReplyDelete
 22. //அம்பாளோ நிரந்தரமான கருணாமூர்த்தியாக எப்போதும் லாவண்யமாக இருக்கிறாள்.

  எந்த பக்தருக்கு எந்த ரூபத்தில் மனசு ஈடுபடுமோ, அந்த ரூபத்தில் வந்து அருள் செய்வதற்காகப் பல ரூபங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாள்.

  ஸ்ரீ இராஜராஜேஸ்வரி, ஸ்ரீ புவனேஸ்வரி, ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ காளியாத்தா, ஸ்ரீமாரியாத்தா என்று இப்படி ஸெளம்யமாகவும் உக்ரமாகவும் பல தினுசில் அவளை ஆராதிக்க வேறு வேறு ரூபம் கொள்கிறாள்.//
  இன்று அனைத்து ரூபங்களிலும் அன்னையை உங்கள் பதிவில் கண்டு தரிசித்து மகிழ்ந்தேன்.
  பதிவு வெகு அருமை.
  உங்களுக்கும் எங்கள் நவராத்திரி, சரஸ்வதி பூஜை, விஜயதஸமி
  நல்வாழ்த்துகள்.
  அழகான அன்பு மயமான அன்னையின் வடிவங்களை தரிசிக்க வாய்ப்பு அளித்த பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
 23. எந்த பக்தருக்கு எந்த ரூபத்தில் மனம் ஈடுபடுமோ, அந்த ரூபத்தில் வந்து அருள் செய்கின்றாள்!..

  மனம் நிறைந்த பதிவு!..

  இனிய சரஸ்வதி பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துகள்!..

  ReplyDelete
 24. // ஒரு பசு இருந்தால் அது பலபேருக்குப் பால் கொடுக்கிறது. ஆனாலும் அத்தனை பேருக்கும் அது பால் சுரப்பதற்கு, அதை ஊக்குவிப்பதாக, அதனுடைய சொந்தக்கன்று ஒன்று அதன் மடியில் ஊட்டிப்பெற வேண்டியிருக்கிறது.

  அப்படித்தான் உபதேசம் என்கிற பால், அது தக்க தகுதிகள் பெற்ற எல்லாருக்கும் பொருத்தமானதாக இருந்தாலும், குறிப்பாக ஒரு சீடனை உத்தேசித்து குரு செய்வதாகவே இருக்கும்.

  மனிதராகப் பிறந்து விட்டால் கஷ்டம், ஆபத்து எல்லாமே வரத்தான் செய்யும்.

  அதை உணர்ந்துதான் புத்தாண்டில் பூக்கும் வேப்பம் பூவை உண்கின்றோம். வருடத்துவக்கத்திலேயே கசப்பை ஏற்கிறோம்.

  ஏறக்குறைய வருட முடிவில் வரும் பொங்கல் பண்டிகையில் கரும்பை ருசிக்கிறோம்.//

  மிக அருமை!!

  // காருண்யம்தான் லாவண்யம்.

  பாக்கி சரீர அழகு ஒர் அழகல்ல. //

  உங்கள் எழுத்து நாளுக்கு நாள் மெருகேறிக்கொன்டே இருக்கிறது!!

  நல்ல விஷயங்களை சொல்வதும் கூட அன்ன தானம் மாதிரி தான்!! பெறுபவர்களை விட தருபவர்கள் தான் அன்பினாலும் நல்ல எண்ணங்களாலும் மிக அழகாகிப்போகிறார்கள்!!

  இனிய வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 25. இனிய
  சரஸ்வதி பூஜை,
  நல்வாழ்த்துகள்.
  Vetha.Elangathilakam

  ReplyDelete
 26. Aha, aha.........
  Arumai vegu arumai.....
  velakkangal....., padangal....,
  deiveegam......Manu santhoshama mariduthu.
  Thanks thanks a lot.
  viji

  ReplyDelete
 27. நீங்க கூப்பிட்டதும் உடனே என்னால் வரமுடியறதில்லை. மெதுவாத் தான் வர முடியுது. :)))) எல்லாரும் இப்படியே மெயில் கொடுத்துக் கூப்பிட்டால் ஒரு மாதிரியாப் போய்ப் படிச்சுடுவேன் போலிருக்கு. :))))) இல்லைனா போக முடியலை, படிச்சாலும் பின்னூட்டம் போட முடியலை. :)))) அவசரமா ஒரு பார்வை பார்த்துட்டு வந்துடுவேன். அப்புறமாப் பின்னூட்டம் போடலாம்னு, அப்புறமா மறந்தே போகும். :))))

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam October 13, 2013 at 12:48 AM

   வாங்கோ, வணக்கம்.

   //நீங்க கூப்பிட்டதும் உடனே என்னால் வரமுடியறதில்லை. மெதுவாத் தான் வர முடியுது. :)))) //

   ஒன்றும் அவசரமே இல்லை. என்ன இப்போ முஹூர்த்தம் தட்டுக்கிட்டுப்போச்சு? மெதுவாகவே வாங்கோ, போதும். நம் இருவராலும் ஒரே ஓட்டமாக ஓடி வர முடியாதுதான். ஒத்துக்கொள்கிறேன். ;)

   //எல்லாரும் இப்படியே மெயில் கொடுத்துக் கூப்பிட்டால் ஒரு மாதிரியாப் போய்ப் படிச்சுடுவேன் போலிருக்கு. :))))) //

   மெயில் எல்லோருக்கும் கொடுக்கப்படுவது இல்லை. ஞாபக மறதி பேராசிரியர்களான சிலருக்கு மட்டும், அதுவும் அவர்களில் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க, என் கணக்குப்பிள்ளைக் ‘கிளி’யாரால் தரப்பட்டு வருகிறது.

   ஏதும் சிரமம் இருந்தால் சொல்லுங்கோ, கிளியைக்கூட்டில் அடைத்து, செயல்படாமல் செய்து விடுகிறேன். ;)

   பிரியமுள்ள கோபு

   Delete
 28. பதிவுக்குச் சம்பந்தமில்லாமல் பின்னூட்டம் போட்டுட்டு இருக்கேன். :)))) பசுவை உதாரணம் சொன்னது அருமை. அதே போல் பசியோடு இருக்கிறவங்களுக்குச் சாப்பாடு போட்டு அவங்க சாப்பிட்டதும் முகத்திலே தெரியும் அலாதியான திருப்தியால் மனம் நெகிழ்ந்து தான் போகும். :))))

  ReplyDelete
 29. அம்பாளின் பல்வேறு சொரூபங்களும் அருமை. அன்னபூரணி குறித்து நேத்து எழுதினேன். இங்கேயும் கிட்டத் தட்ட அவளே. இன்னும் நிறைய எழுதலாம். நேரம் தான் இல்லை. :(

  ReplyDelete
 30. ஏற்ற கசப்பு எல்லாம் நீங்கிட
  இனிய மாம்பழச் சாறே வாராய்
  ஊக்கம் மிகவும் உடையவளாயினும்
  உடன் பிறந்தவர்களைக் காப்பவளும் நானே
  ஈற்றில் கடமை பெரிதென எண்ணி
  இடையிடையே மறைந்திடும் கன்னி இவள்
  வாக்குப் பலித்திட வேண்டும் என்று
  எனை வாழ்த்திட வேண்டும்
  கோபாலகிருஷ்ணரே இன்றும் :))))))))))

  நவராத்திரி, சரஸ்வதி பூஜை,
  விஜயதஸமி நல்வாழ்த்துகள் பெற்றிட வந்தேன் .
  அம்பாளடியாள் நானுமிங்கே ......

  ReplyDelete
  Replies
  1. Ambal adiyalOctober 13, 2013 at 2:56 AM

   வாங்கோ, வணக்கம்.

   //ஏற்ற கசப்பு எல்லாம் நீங்கிட
   இனிய மாம்பழச் சாறே வாராய்
   ஊக்கம் மிகவும் உடையவளாயினும்
   உடன் பிறந்தவர்களைக் காப்பவளும் நானே
   ஈற்றில் கடமை பெரிதென எண்ணி
   இடையிடையே மறைந்திடும் கன்னி இவள்
   வாக்குப் பலித்திட வேண்டும் என்று
   எனை வாழ்த்திட வேண்டும்
   கோபாலகிருஷ்ணரே இன்றும் :)))))))))) //

   அருமை. மிகவும் அருமையான பாடலுடன் கூடிய
   பிரார்த்தனை. தாங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று
   சீரும் சிறப்புமாக நீடூழி வாழ பிரார்த்திக்கிறேன்,
   ஆசீர்வதிக்கிறேன்.

   //நவராத்திரி, சரஸ்வதி பூஜை, விஜயதஸமி நல்வாழ்த்துகள் பெற்றிட வந்தேன். அம்பாளடியாள் நானுமிங்கே ......//

   பெயரிலேயே அம்பாளை வைத்துள்ள தங்களுக்கு
   கவலை ஏதும் வேண்டாம். என் நல்வாழ்த்துகள் தங்களுக்கு
   எப்போதுமே உண்டு.

   மேலும் தங்களுக்கு ஓர் மகிழ்ச்சியான மேங்கோ ஜூஸ்
   காத்திருக்கிறது என் அடுத்த பதிவினில். ;)))))

   அன்புடன் VGK

   Delete
  2. அஹா எனக்கே எனக்கா ?...சொக்கா உன்றன் கருணையே கருணையப்பா :)))))
   விரும்பிய மாங்கனிச் சாற்றை விடுவேனோ மனமே மயங்காதிரு காத்திருக்கின்றேன்
   கவலை வேண்டாம் .அடுத்த பதிவு அகத்தில் நிறையட்டும் !! :))))
   மிக்க நன்றி ஐயா மனமுவந்து வாழ்த்திய நல் வாழ்த்திற்கும் நற் செய்திக்கும் :))))

   Delete
 31. பெரியவாளின் குரு-சிஷ்ய விளக்கமும், வாழ்க்கை பாடம் வேப்பம்பூ கரும்பூ விளக்கமும். அம்பாளின் ரூப விளக்கமும் மிக அருமை! ஓர் அற்புத ஆன்மீக களஞ்சியமாக திகழ்கிறது தொடர்! தொடர்ந்து வருகிறேன்! நன்றியும் வணக்கங்களும்!

  ReplyDelete
 32. இனிய சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 33. சரஸ்வதி தின அன்பு நல்வாழ்த்துகள் அண்ணா உங்களுக்கும் மன்னிக்கும் பிள்ளைகள் எல்லோருக்கும்.

  ReplyDelete
 34. உபதேசமும் அறிவுரையும் கூட பெற தகுதிகள் இருக்கவேண்டும் என்ற அற்புதமான வரிகள் படித்தேன் அண்ணா..

  பசு எப்படி தடங்கல் இல்லாது பால் கொடுக்கிறதோ அதே போல் அதற்கும் அதன் கன்றை அதனிடம் விட வேண்டும் என்றும்...

  எத்தனைப்பேர் இருந்தாலும் சிஷ்யனாகும் தகுதி உடையவனுக்கே மந்திரம் உபதேசிக்கப்படுகிறது குருவால்...

  பாண்டவர்களில் அர்ஜுனனை மட்டுமே தேர்ந்தெடுத்தார் பகவான் கீதையை உலகுக்கு உணர்த்த...அற்புதமான பகிர்வு அண்ணா,

  ReplyDelete
  Replies
  1. ஏன் பகவான் அர்ஜுனனை தேர்ந்தெடுத்தார் கீதையை உபதேசிக்க என்று பெரியோர்களெல்லாம் அறிவுப்பூர்வமான வாதங்களை எடுத்துரைத்துக்கொண்டிருந்த சபையில் பள்ளி மாணவன் ஒருவன் மிவும் சிம்பிளாக அல்பபெட் ஆர்டர் அதாவது அகரவரிசைப்படி அர்ஜுனன் பெயர் முதலில் வருவதால் அவனைத்தேர்ந்தெடுத்ததாக சொல்லி வியக்கவைத்தான் ..!

   Delete
  2. இராஜராஜேஸ்வரி October 14, 2013 at 5:30 AM

   வாங்கோ, வணக்கம்.

   //ஏன் பகவான் அர்ஜுனனை தேர்ந்தெடுத்தார் கீதையை உபதேசிக்க என்று பெரியோர்களெல்லாம் அறிவுப்பூர்வமான வாதங்களை எடுத்துரைத்துக்கொண்டிருந்த சபையில் பள்ளி மாணவன் ஒருவன் மிகவும் சிம்பிளாக அல்பபெட் ஆர்டர் அதாவது அகரவரிசைப்படி அர்ஜுனன் பெயர் முதலில் வருவதால் அவனைத்தேர்ந்தெடுத்ததாக சொல்லி வியக்கவைத்தான் ..!//

   இதை இன்று தான் நான் முதன் முதலாக தங்கள் மூலம் கேள்விப்படுவதால், குபீரென்று சிரித்து விட்டேன். நல்ல நகைச்சுவையாகவும் உள்ளது. உண்மையாகவும் மிகச் சரியாகவுமே உள்ளது.

   அந்தப்பொடியன் [பள்ளி மாணவன் ஒருவன்] அஸால்டாகச்சொன்னதோ அல்லது பள்ளி மாணவன் சொன்னதாகத் தங்களின் கற்பனையோ! ;)))))

   ஆனால் நான் இதை மிகவும் ரஸித்தேன். மஞ்சுவும் ரஸித்துச்சிரிப்பாள் என நினைக்கிறேன்.

   நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி.

   A for Arjunan,
   B for Beeman,
   D for Dharmar,
   N for Nagulan &
   S for Sahadhevan.

   ;))))) Superb ! Thanks a Lot ! Madam. vgk

   -=-=-=-=-=-

   அன்புள்ள மஞ்சு,

   இதைப்பார்த்தீர்களா? படித்தீர்களா? ரஸித்தீர்களா?

   Timely Joke !

   Is it not ?;)))))

   அன்புடன் கோபு

   Delete
 35. பசிக்கும் வயிற்றுக்கு அன்னம் தரும் அன்னப்பூரணியாகவும்...

  கொடுப்பதில் இருக்கும் சந்தோஷமும் பற்றி ரொம்ப அருமையாக சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
 36. அம்பாள் படங்கள் எல்லாம் அற்புதமாக கொடுத்து, விளக்கங்கள் தந்து சிறப்பான பகிர்வை கொடுத்திருக்கீங்க அண்ணா.. அன்பு நன்றிகளுடனான ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.

  ReplyDelete
 37. நவராத்திரி சிறப்பு பதிவாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள் அம்பாளின் கருணை அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திப்போம் நன்றி

  ReplyDelete
 38. மஹா பெரியவாளின் அமுத மழை ஆசிகளுடன் இந்த வருட நவராத்திரி வெகு இனிமையாக கடந்து சென்றது.

  எல்லா அம்பிகை ஸ்வரூபங்களையும் ஒரு சேர ஒரே பக்கத்தில் பார்ப்பது ஆனந்த மயம்.
  இனிய சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 39. சிறப்பான .பகிர்வு... படங்கள் மிக அழகு.

  இனிய சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 40. இனிமையான பதிவில் அழகான அம்பாளின் படங்கள் அருமை. இனிய சரஸ்வதி பூஜை, விஜயதஸமி நல்வாழ்த்துகள் ஐயா

  ReplyDelete
 41. விஜயதசமி நல்வாழ்த்துகள் !

  ReplyDelete
 42. / எந்த பக்தருக்கு எந்த ரூபத்தில் மனசு ஈடுபடுமோ, அந்த ரூபத்தில் வந்து அருள் செய்வதற்காகப் பல ரூபங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாள்./---எந்த தானத்தாலும் திருப்தியாகாதவர் அன்னதானத்தால் வயிறு போதும் போதும் என்று திருப்தி அடைவதைக் காணும்ப்பொது கொடுப்பதின் மகிமை தெரியும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 43. //கசக்கும் வாழ்வே இனிக்கும்.// அப்போ இனிக்கும் வாழ்வு கசக்குமோ?:)) ஹா..ஹா..ஹா.. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)... நவராத்திரியை அலங்கரிப்பதுபோல அழகிய படங்கள்.

  ReplyDelete
 44. அருமையான விளக்கம் ஐயா,தெரியாத தகவல்களை தெரிந்துக்கொண்டேன்..நன்றி!!

  ReplyDelete
 45. "எப்பொழுதும் ஆனந்தசொரூபியவள்"

  அம்பிகையின் அழகிய திருவுருவங்களை கண்டு மகிழும் பாக்கியம் கிடைத்தது.

  ReplyDelete
 46. //ஒரு பசு இருந்தால் அது பலபேருக்குப் பால் கொடுக்கிறது. ஆனாலும் அத்தனை பேருக்கும் அது பால் சுரப்பதற்கு, அதை ஊக்குவிப்பதாக, அதனுடைய சொந்தக்கன்று ஒன்று அதன் மடியில் ஊட்டிப்பெற வேண்டியிருக்கிறது.
  அப்படித்தான் உபதேசம் என்கிற பால், அது தக்க தகுதிகள் பெற்ற எல்லாருக்கும் பொருத்தமானதாக இருந்தாலும், குறிப்பாக ஒரு சீடனை உத்தேசித்து குரு செய்வதாகவே இருக்கும். //அருமையான விளக்கங்களுடன் அழகிய படங்களுடன் அமைந்த அருளமுதம் அழகு! நன்றி ஐயா!

  ReplyDelete
 47. அம்பாளின் பலவித நாமங்கள் , கருணையே உருவான அவளின் படங்கள் பற்றி பார்க்க படிக்க மிக்க மன நிறைவு.

  ReplyDelete
 48. அன்பே உருவானதால்தான் அவளும் அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாயிருக்கிறாள் என்று சொல்லும் பதிவும், அழகு மிளிரும் படங்களும் மிகவும் அருமை. மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 49. அம்பாளின் வடிவங்களையும் சிறப்புகளையும் கூறிய இப்பதிவு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

  ReplyDelete
 50. இன்பமும் துன்பமும் இணைந்ததே வாழ்க்கை என்னும் தத்துவத்தை இனிப்பும் கசப்பும் கொண்டு விளக்கியமை சிறப்பு. மந்திரம் என்பது சப்தங்களின் கோவையே என்னும் சங்கதி அறிந்து மகிழ்ந்தேன். அழகழகான படங்களுடன் மனங்கவரும் சிறப்பான பதிவு. நன்றி வை.கோ.சார்

  ReplyDelete
 51. அம்பாள் படங்களின் கருணை மழையிலே நனைந்தேன்!! நன்றி

  ReplyDelete
 52. Beautiful pictures of amman and very nice explanation... thank you very much for sharing...

  ReplyDelete
 53. அம்பாளின் அனைத்து அம்சங்களையும் கண்டேன.

  ReplyDelete
 54. அம்பாள்களின் தரிசனம் கோவிலுக்கு செல்லாமலேயே கிடைத்துவிட்டது. நன்றி

  ReplyDelete
 55. // மனிதராகப் பிறந்து விட்டால் கஷ்டம், ஆபத்து எல்லாமே வரத்தான் செய்யும். அதை உணர்ந்துதான் புத்தாண்டில் பூக்கும் வேப்பம் பூவை உண்கின்றோம். வருடத்துவக்கத்திலேயே கசப்பை ஏற்கிறோம்.ஏறக்குறைய வருட முடிவில் வரும் பொங்கல் பண்டிகையில் கரும்பை ருசிக்கிறோம். ஆரம்பத்திலேயே இனித்துவிட்டால், முடிவில் கசந்து போகும்.//

  வாவ். மிகவும் எளிமையான வாழ்க்கை தத்துவம்.

  ReplyDelete
 56. // மகா பாபங்களைச் செய்து, காரியத்தில் செய்யாவிட்டாலும், மனஸினால் மகா பாபங்களை நினைத்து, ஒரு வேளை சோறு கிடைக்கக்கூட யோக்கியதை இல்லாத நம் இத்தனை பேருக்கும் கோடானுகோடி ஜீவன்களுக்கும், கல்பகோடி காலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தி அன்ன பூரணியான ஈஸ்வரியான அம்பாள்தான். //

  ஆமாம்.

  “பெண்ணவளின் கண்ணழகைப் பேசி முடியாது,
  பேரழகுக்கீடாக வேறொன்றும் கிடையாது”

  சாந்த சொரூபிணிக்கு ஈடு, இணை ஏது?

  ReplyDelete
 57. அன்னையின் புகைப் படங்கள் அனைத்தும் அருமையோ, அருமை.

  //ஏன் பகவான் அர்ஜுனனை தேர்ந்தெடுத்தார் கீதையை உபதேசிக்க என்று பெரியோர்களெல்லாம் அறிவுப்பூர்வமான வாதங்களை எடுத்துரைத்துக்கொண்டிருந்த சபையில் பள்ளி மாணவன் ஒருவன் மிவும் சிம்பிளாக அல்பபெட் ஆர்டர் அதாவது அகரவரிசைப்படி அர்ஜுனன் பெயர் முதலில் வருவதால் அவனைத்தேர்ந்தெடுத்ததாக சொல்லி வியக்கவைத்தான் ..!//

  ரசித்து சிரித்தேன்.

  ReplyDelete
 58. Jayanthi JayaSeptember 9, 2015 at 2:16 PM

  வாங்கோ ஜெயா, வணக்கம்.

  //அன்னையின் புகைப் படங்கள் அனைத்தும் அருமையோ, அருமை.

  ஏன் பகவான் அர்ஜுனனை தேர்ந்தெடுத்தார் கீதையை உபதேசிக்க என்று பெரியோர்களெல்லாம் அறிவுப்பூர்வமான வாதங்களை எடுத்துரைத்துக்கொண்டிருந்த சபையில் பள்ளி மாணவன் ஒருவன் மிவும் சிம்பிளாக அல்பபெட் ஆர்டர் அதாவது அகரவரிசைப்படி அர்ஜுனன் பெயர் முதலில் வருவதால் அவனைத்தேர்ந்தெடுத்ததாக சொல்லி வியக்கவைத்தான் ..!

  ரசித்து சிரித்தேன்.//

  அது மஞ்சுவுக்கு அவங்க கொடுத்துள்ள பதில்.

  நானும் தான் மிகவும் ரசித்துச் சிரித்து மகிழ்ந்தேன். :))))))

  ReplyDelete
 59. பலவிதமான பொம்பள சாமி படங்கலா நல்லாகீது

  ReplyDelete
 60. அம்பாள்களின் தரிசனம் காண கண் கோடி வேணும். பகவான் கீதோபதேசம் செய்ய ஏன் அர்சசுனனை தேர்ந்தார். அந்த மாணவன் எவ்வளவு ஈசியாக விளக்கிவிட்டான்.

  ReplyDelete
 61. ஆரம்பத்திலேயே இனித்துவிட்டால், முடிவில் கசந்து போகும்.///ஒரு வரியில் எத்தனைப்பெரிய தத்துவம்...படங்கள் கண்ணுக்கும் மனதுக்கும் நிறைவு..

  ReplyDelete
 62. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (08.07.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:-

  https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=436831403486226

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete