About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, October 7, 2013

61 / 1 / 2 ] ஓடித் தாவும் மனதை இழுத்துப்பிடித்தல்.

2
ஸ்ரீராமஜயம்
மனதைக் கட்டுப்படுத்த முயற்சி எடுக்காமல் விட்டுவிடாதே.

வெளியில் ஓடுகிற அதை ஒவ்வொரு தரமும் மறுபடி உன் வழிக்கு இழுத்துக்கொண்டு வரப்பார்.

இப்படி விடாமுயற்சியுடன் எதிர்த்துப் போராடிக்கொண்டே இருந்தால் அது ஒருநாள் அடங்கி பணிந்து போக ஆரம்பித்துவிடும்.

வேதங்கள் வகுத்துள்ள தர்மத்தில் இரண்டு மார்க்கங்கள்: [1] பிரவிருத்தி மார்க்கம், [2] நிவ்ருத்தி மார்க்கம்.

உலக வாழ்க்கையை நன்றாக தர்மமாக நடத்துவதற்கு ப்ரவிருத்தி மார்க்கம்.  

அதை முடித்துவிட்டு, பரமாத்மாவோடு ஐக்கியமாகி பிறப்பு இறப்பிலிருந்து  விடுதலை பெறுவதற்கு நிவ்ருத்தி மார்க்கம்.

தினமும் அரைமணி நேரமாவது மெளனமாக தியானம் பண்ண வேண்டும். 

“மெளனம் கலக நாஸ்தி”;  ”மெளனம் சர்வார்த்த ஸாதகம்”

oooooOooooo


மடமா சர்க்கஸ் கம்பெனியா ? 

[ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளிடம் ஒரு பொடியன் கேட்டது]

பத்து வயஸ் பையன் பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு, பெரியவாளிடம் ஏதோ கேட்கும் ஆசையில் நகர்ந்து போகாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அவன் மனஸில் பொங்கும் கேள்வியின் துடிப்பு, முகத்தில் ப்ரதிபலித்தது. பெரியவா அனுஷ்டானமெல்லாம் முடிந்து விஸ்ராந்தியாக அமர்ந்திருந்தார். இந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்துவிட்டு, "என்ன?" என்பது போல் ஜாடை செய்தார். குழந்தைக்கு பயம் கிடையாது என்பதை இதோ.. ப்ரூவ் பண்ணிவிட்டான்......


"பெரியவா.... இந்த மடத்ல யானை, குதிரை, ஒட்டகம் எல்லாம் இருக்கே! இதெல்லாம் சர்க்கஸ் கம்பெனிலதானே இருக்கும்?..."
 
 


  
  
                  


சுற்றி இருந்த கார்யஸ்தர்கள், பக்தர்கள் எல்லாருக்கும் உள்ளே ஒரே உதறல்! எசகுபிசகா எதையாவது கேட்டுடறதுகள்... என்று தவித்தார்கள். பெரியவா குழந்தையின் முகத்தைப் பார்த்தார்.....

"அந்தக் காலத்ல, நம்ம தேசத்ல நெறைய ராஜாக்கள் இருந்தா..... முன்னாடி மடத்ல இருந்த ஸ்வாமிகளை தர்சனம் பண்ண வரச்சே...ல்லாம் யானை, குதிரை, ஒட்டகம், பசு மாடு, காளை மாடு, அம்பாரி எல்லாம் காணிக்கையாக் குடுத்துட்டுப் போவா.... இப்போ இங்க இருக்கற ம்ருகங்கள் எல்லாம்... மடத்ல வம்ஸ பரம்பரைன்னு சொல்றா மாதிரி இருந்துண்டிருக்கு. பசுவுக்கும், யானைக்கும் தெனோமும் பூஜை நடக்கறது. நவராத்ரி காலத்ல குதிரைக்கும் பூஜை உண்டு.....

...... இந்த ம்ருகங்களுக்கு கொஞ்சம் training குடுத்தாலும் போறும்! நாம சொன்னபடி கேக்கும்! ஆனா....... எங்கிட்ட வர்ற மனுஷாளுக்கு எவ்வளவுதான் training குடுத்தாலும், சொன்னபடி கேக்க மாட்டா.... அதுதான் எனக்கு ரொம்ப வருத்தம்!"


ஒரு மஹா பெரிய கசப்பான உண்மையை படாரென்று போட்டு உடைத்தார்! குழந்தைக்கோ குதிரை, யானை, ஒட்டகம் விஷயத்துக்கு பெரியவா குடுத்த explanation பரம த்ருப்தி ! சிரித்துக் கொண்டே ஓடிவிட்டான். ஆனால் நாம்? 

முன்பு ஒருமுறை ஒரு கார்யஸ்த்தரிடம் "ஏண்டா....கண்ணா! மடத்துக்கு ஏன் இவ்ளோவ் கூட்டம் வருது தெரியுமோ?" என்று கேட்டார். 

"பெரியவாளை தர்சனம் பண்ண......."

"ஆமா...... பாதிப்பேர் என்னை தர்சனம் பண்ண வர்றா..... மீதிப்பேர், யானை, ஒட்டகத்தைப் பாக்க வரா..." என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

[ Thanks to Amrita Varshini ]


oooooOooooo

மகிழ்ச்சிப்பகிர்வு

மீண்டும் ஓர் 
இனிய பதிவர் சந்திப்பு.


இதோ இப்போதே இதன் அடுத்த பகுதியில் 
[பகுதி - 61 / 2 / 2]
தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளது.

காணத்தவறாதீர்கள்


41 comments:

 1. ...... இந்த ம்ருகங்களுக்கு கொஞ்சம் training குடுத்தாலும் போறும்! நாம சொன்னபடி கேக்கும்! ஆனா....... எங்கிட்ட வர்ற மனுஷாளுக்கு எவ்வளவுதான் training குடுத்தாலும், சொன்னபடி கேக்க மாட்டா.... அதுதான் எனக்கு ரொம்ப வருத்தம்
  so bad no?

  ReplyDelete
 2. மார்க்கங்களின் விளக்கங்களுக்கு நன்றி ஐயா...

  பெரியவாவின் வருத்தம் நிஜம் தான்...

  ஆவலுடன் அடுத்த பதிவிற்கு செல்கிறேன்...

  ReplyDelete
 3. மனிதர்களை விட இந்த மிருகங்கள் எத்தனை பாசமாக நம்மிடம் பழகும் நம் மனநிலையை மகிழ்ச்சிக்கு கொண்டும் வரும் ...
  வெளியில் ஓடும் மனதை அவ்வவ்போது இழுத்து சரிசெய்ய வேண்டும் என்பதை உணர்த்திய வரிகள் நன்றிங்க. ஐயா.

  ReplyDelete
 4. அரிய தகவல்களுக்கு நன்றி. பெரியவா சொல்வது உண்மையே. யார் கேட்கிறோம்! :(

  ReplyDelete
 5. “மெளனம் கலக நாஸ்தி”; ”மெளனம் சர்வார்த்த ஸாதகம்”

  ஆழ்ந்த த்த்துவ விளக்கம் அருமை..!

  ReplyDelete
 6. "ஆமா...... பாதிப்பேர் என்னை தர்சனம் பண்ண வர்றா..... மீதிப்பேர், யானை, ஒட்டகத்தைப் பாக்க வரா..." என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

  உண்மையை எத்தனை எளிதாக உணர்த்துகிறார் பெரியவர்..!

  ReplyDelete
 7. மனதைக் கட்டுப்படுத்த முயற்சி எடுக்காமல் விட்டுவிடாதே.

  வெளியில் ஓடுகிற அதை ஒவ்வொரு தரமும் மறுபடி உன் வழிக்கு இழுத்துக்கொண்டு வரப்பார்.

  இப்படி விடாமுயற்சியுடன் எதிர்த்துப் போராடிக்கொண்டே இருந்தால் அது ஒருநாள் அடங்கி பணிந்து போக ஆரம்பித்துவிடும்.

  முயற்சி இருந்தால் பழ்க்கம் கை கூடும் ..!

  ReplyDelete
 8. தினமும் அரைமணி நேரமாவது மெளனமாக தியானம் பண்ண வேண்டும்.

  “மெளனம் கலக நாஸ்தி”; ”மெளனம் சர்வார்த்த ஸாதகம்”//
  அருமையான உபதேசம். மனதை நாம் தான் பழக்க வேண்டும்.
  நாள்பட நாள்பட நம் கைகுள் வரும் .

  இந்த ம்ருகங்களுக்கு கொஞ்சம் training குடுத்தாலும் போறும்!//

  நன்றாக சொன்னார்கள் குரு.
  இது போன்ற நல்லவைகளை நாள் தோறும் படிக்கும் போது மனது வசப்படும்.
  பகிர்வுக்கு நன்றி.  ReplyDelete
 9. தங்கள் அருமையான பதிவை படித்து மகிழ்ந்தோம். தொடருங்கள்!

  ReplyDelete
 10. பெரியவர் பேச்சைக் கேட்பதில்லைதான்..அவர் ஆசிர்வாதத்துடன் நடப்பதாகக் கூறும் திருமணங்களில் வரதட்சிணை வாங்கப் படுகிறது, பட்டு உடுத்தப் படுகிறது.

  ReplyDelete
 11. மனதைக் கட்டுப்படுத்த ஒவ்வொருதரமும் அதை இழுத்துக்கொண்டுவர முயற்சி செய்யவேண்டும். அது ஒருநாள்
  அடங்கிப் பணிந்து போகும். நல்ல உபாயம்.. கட்டுக்குள் அடங்கினால் எவ்வளவு நன்மையாக இருக்கும். யோசிக்கவே ஸந்தோஶமாக இருக்கிரது.
  நம் மனஸுக்கே கட்டுப்பட ட்ரெயினிங் கொடுக்க வேண்டும்.
  ஆசாரியர் எவ்வளவு அழகாக உவமைகள் கொடுக்கிரார்.
  ஒரு பதிவைவிட ஒரு பதிவு எவ்வளவு விஶயங்கள் அதிகம்.
  சிந்திக்க வைக்கிறது. அன்புடன்

  ReplyDelete
 12. யானையை அங்குசத்தால்
  அடக்குதல் போல மனத்தை
  தியானத்தால் தான் அடக்க முடியும்
  அதுவும் தொடர் முயற்சியால் மட்டுமே என்பதை
  மகாப்பெரியவர் புரிகிறவர் புரிந்து கொள்ளட்டும் என
  எளிதாகச் சொல்லிப்போனதை தாங்கள் பதிவு செய்த
  விதம் மிக மிகச் சிறப்பு
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. எல்லா மிருகங்களையும் அடக்கிவிடலாம். ஆனால் மனம் என்னும் குரங்கை அடக்குவது எத்தனை கடினம்?
  பெரியாவாளை பார்க்கப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு பெரியவா வேண்டாம் என்று சொல்லும் பட்டாடை அணிந்து சொல்லுகிறோம்!

  குழந்தையின் கேள்வியும், பெரியவாளின் பதிலும் அருமை.
  // "ஆமா...... பாதிப்பேர் என்னை தர்சனம் பண்ண வர்றா..... மீதிப்பேர், யானை, ஒட்டகத்தைப் பாக்க வரா..." // ரசித்த வரிகள்!

  ReplyDelete
 14. அருமையான விளக்கம்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 15. சிந்தையை யடக்கியே சும்மா விருக்கிற
  திறமரிது சத்தாகி யென்
  சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே
  தேசோ மயானந்தமே.

  என்ற தாயுமானவர் பாடல் வரிகள்தான் ஞாபகம் வந்தன. (தேசோமயானந்தம், பாடல் எண்.8)

  ReplyDelete
 16. நேற்று நீங்களும் நானும் அன்பின் சீனா வலைப்பதிவர் சந்திப்பின் போது பெமினா ஹோட்டல் வரவேற்பு ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தோம். அன்பின் சீனா கம்ப்யூட்டர் பிரிவுக்கு சென்ரு விட்டார். நான் அந்தநாளில் பெரியவர் திருச்சி நேஷனல் கல்லூரி உயர்நிலைப் பள்ளி மைதானத்திற்கு வரும்போது கோயில் யானையெல்லாம் கொண்டு வருவார்கள் என்று சொன்னேன். நீங்களும் யானையுடன் ஒட்டகம், குதிரை முதலானவற்றையும் கொண்டு வருவதை நினைவூட்டினீர்கள்.
  இன்று அதே மாதிரியான காட்சிகளுடன் இந்த பதிவு. ஆச்சரியமாக இருக்கிறது. ஏதோ தொலைவிலுணர்தல் (TELEPATHY) போன்று இருக்கிறது.  ReplyDelete
 17. Very nice post, make me angry to read this lovely post...
  Thanks for sharing sir...

  ReplyDelete
 18. மனதை அடக்கும் அங்குசத்தை அறிந்து யாவரும் மன அடக்கம் காண ஒரு வழிகாட்டி

  ReplyDelete
 19. பெரியவாளின் வார்த்தை எளிமை! எத்தனை வலிமை! அருமை! நன்றி ஐயா!

  ReplyDelete
 20. அமுத மொழிகளும், பெரியவாளின் விளக்கங்களும் அருமை.

  ReplyDelete
 21. மனதைக்கட்டுப்படுத்தல் அற்புதமான விளக்கம்.

  ReplyDelete
 22. அருமையான விளக்கம்,பகிர்வுக்கு நன்றி ஐயா!!

  ReplyDelete
 23. அன்பின் வை.கோ

  ஓடித் தாவும் மனதை இழுத்துப்பிடித்தல். - பதிவு அருமை -

  //தினமும் அரைமணி நேரமாவது மெளனமாக தியானம் பண்ண வேண்டும். // - இயலுமா - முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை - முயல வேண்டும்,.

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 24. அன்பின் வை.கோ

  //
  பெரியவா.... இந்த மடத்ல யானை, குதிரை, ஒட்டகம் எல்லாம் இருக்கே! இதெல்லாம் சர்க்கஸ் கம்பெனிலதானே இருக்கும்?...".
  //

  கேடது ஒரு பையன் - பெரியவா கூறியது :
  //
  "அந்தக் காலத்ல, நம்ம தேசத்ல நெறைய ராஜாக்கள் இருந்தா..... முன்னாடி மடத்ல இருந்த ஸ்வாமிகளை தர்சனம் பண்ண வரச்சே...ல்லாம் யானை, குதிரை, ஒட்டகம், பசு மாடு, காளை மாடு, அம்பாரி எல்லாம் காணிக்கையாக் குடுத்துட்டுப் போவா.... இப்போ இங்க இருக்கற ம்ருகங்கள் எல்லாம்... மடத்ல வம்ஸ பரம்பரைன்னு சொல்றா மாதிரி இருந்துண்டிருக்கு. பசுவுக்கும், யானைக்கும் தெனோமும் பூஜை நடக்கறது. நவராத்ரி காலத்ல குதிரைக்கும் பூஜை உண்டு.....//

  அருமை அருமையான பதில் - மற்றொரு பதில் :
  //
  இந்த ம்ருகங்களுக்கு கொஞ்சம் training குடுத்தாலும் போறும்! நாம சொன்னபடி கேக்கும்! ஆனா....... எங்கிட்ட வர்ற மனுஷாளுக்கு எவ்வளவுதான் training குடுத்தாலும், சொன்னபடி கேக்க மாட்டா.... அதுதான் எனக்கு ரொம்ப வருத்தம்!"
  //

  பாருங்களேன் - ஸ்ரீஸ்ரீஸ்ரீ ம்காப் பெரியவாலீன் வருத்த்ம தோய்ந்த பதில் - என்ன செய்வது.

  நான் கூட மகாப் பெரியவாளைன் பட்டினப் பிரவேசம் பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்.

  http://cheenakay.blogspot.in/2007/08/1.html

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 25. அருமையான விளக்கம். பகிர்வுக்கு வாழ்த்து.
  Vetha.Elangathilakam

  ReplyDelete
 26. பெரியவாளுக்கும் அந்த சிறுவனுக்கும் நடந்த சம்பாஷனை பல விஷயங்களை விளக்குவதாக இருக்கிறது. அதை எங்களுடன் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 27. குழந்தை கேட்ட கேள்விக்கு சுற்றியிருந்த பெரியவர்களுக்கு கேளாமலே பதில் கிடைத்தது.
  அதுதான் பெரியவாவின் அறிவுத்திறன்.

  ReplyDelete
 28. \\தினமும் அரைமணி நேரமாவது மெளனமாக தியானம் பண்ண வேண்டும்.\\

  கட்டாயம் வேண்டும். மௌனமாக இருப்பதோடு மனத்தில் எந்த சஞ்சலமும் இல்லாது அமைதியாக இருப்பதும் அவசியம்.

  பெரியவரின் கூர்ந்த அவதானிப்பு வியக்கவைக்கிறது. உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்திய பாங்கு நெகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.

  ReplyDelete
 29. //தினமும் அரைமணி நேரமாவது மெளனமாக தியானம் பண்ண வேண்டும். //

  இது மட்டும் சாத்தியப் பட்டால்.... எவ்வளவு .நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 30. கேள்வி கேட்டது குழந்தை
  பதில் கிடைத்ததோ அனைவருக்கும்
  நன்றி ஐயா

  ReplyDelete
 31. ஆவ்வ்வ்வ்வ் இது மிஸ்ஸான பதிவு.. ஆனா நான் மிஸ்ஸாகாமல் வந்திட்டனாக்கும்..:)

  ///"ஆமா...... பாதிப்பேர் என்னை தர்சனம் பண்ண வர்றா..... மீதிப்பேர், யானை, ஒட்டகத்தைப் பாக்க வரா..." என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.///

  இதுக்குத்தான் அர்த்தமுள்ள இந்துமதத்தில் கண்ணதாசன் சொல்லியிருக்கிறார்ர்....
  “கடவுளை வணங்க வைப்பதற்குக் கூட, எதையாவது காட்டித்தானே மக்களை அழைக்க வேண்டியிருக்கிறது”... இதனால்தான்.. கோயில்களில் இசை நிகழ்ச்சிகள்.. நாட்டுக்கூத்து , பாட்டுக் கச்சேரி, வில்லுப்பாட்டு என ஆரம்பிக்கப் பட்டதுபோலும்.

  ReplyDelete
 32. //
  ...... இந்த ம்ருகங்களுக்கு கொஞ்சம் training குடுத்தாலும் போறும்! நாம சொன்னபடி கேக்கும்! ஆனா....... எங்கிட்ட வர்ற மனுஷாளுக்கு எவ்வளவுதான் training குடுத்தாலும், சொன்னபடி கேக்க மாட்டா.... அதுதான் எனக்கு ரொம்ப வருத்தம்!"/// :-((

  ReplyDelete
 33. மனசை கட்டுப்படுத்த அப்பியாஸம் வேண்டும் மனம் ஒரு குரங்கு இழுத்துபிடிக்க பயிற்சி தேவை நிம்மதியாக வாழ கடவுளை தியானிக்க நமக்கு எத்தனையோ அனுஷ்ட்டானங்களை சொல்லியிருக்கிறார்கள் முன்னோர்கள் பத்து காயத்ரி பண்ணுவதற்குள் எத்தனை சிந்தனைகள்
  இருந்தாலும் முயற்சிக்கவேண்டும் பதிவுக்கு நன்றி

  ReplyDelete
 34. மனதைக் கட்டுப்படுத்தறதுங்கறது பெரிய விஷயம்.

  ReplyDelete

 35. மனதைக் கட்டுப்படுத்த முயற்சி எடுக்காமல் விட்டுவிடாதே.

  வெளியில் ஓடுகிற அதை ஒவ்வொரு தரமும் மறுபடி உன் வழிக்கு இழுத்துக்கொண்டு வரப்பார்.

  இப்படி விடாமுயற்சியுடன் எதிர்த்துப் போராடிக்கொண்டே இருந்தால் அது ஒருநாள் அடங்கி பணிந்து போக ஆரம்பித்துவிடும்.

  தினமும் அரைமணி நேரமாவது மெளனமாக தியானம் பண்ண வேண்டும். உண்மைதான்.

  ReplyDelete
 36. //“மெளனம் கலக நாஸ்தி”; ”மெளனம் சர்வார்த்த ஸாதகம்”//

  எப்பேர்ப்பட்ட தத்துவம். மௌனமாக இருப்பதால் எவ்வளவோ சண்டைகள் தவிர்க்கப்படுமே.

  //...... இந்த ம்ருகங்களுக்கு கொஞ்சம் training குடுத்தாலும் போறும்! நாம சொன்னபடி கேக்கும்! ஆனா....... எங்கிட்ட வர்ற மனுஷாளுக்கு எவ்வளவுதான் training குடுத்தாலும், சொன்னபடி கேக்க மாட்டா.... அதுதான் எனக்கு ரொம்ப வருத்தம்!"//

  மனம் ஒரு குரங்கு, மனித மனம் ஒரு குரங்கு. அதை தாவிக் கொண்டே இருக்காமல் தடுப்பதும் மனிதனின் கையில் தான் இருக்கிறது.

  // "ஆமா...... பாதிப்பேர் என்னை தர்சனம் பண்ண வர்றா..... மீதிப்பேர், யானை, ஒட்டகத்தைப் பாக்க வரா..." என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.//

  வழக்கம் போல் மகா பெரியவாளின் நகைச்சுவை.

  ReplyDelete
 37. இந்த பதிவிலியும் போன பதிவிலியும் எளுத்தல்லா ரொம்பவே சிருசா தெரிஞ்சிச்சி. படிக்கவே ஏலலே. நானு மொபைல்லந்து தா கமண்டு போடுறேன் அதா தப்பு நெறயா வருது பொடிஎளுத்த பெரிசும் பண்ண ஏலலே.

  ReplyDelete
 38. அலைபாயும் மனதை கட்டுப்படுத்துவதுதானே கஷ்டமா இருக்கு.நீங்க எழுதி வரும் பெரியவாளோட அமுத மொழிகளைப் படிக்கிற சிலராவது இதுக்கு கண்டிப்பா முயற்சி செய்வாங்கதான்.

  ReplyDelete
 39. தினமும் அரைமணி நேரமாவது மெளனமாக தியானம் பண்ண வேண்டும்.

  “மெளனம் கலக நாஸ்தி”; ”மெளனம் சர்வார்த்த ஸாதகம்”/// எனக்கும் மீண்டும் தொடர ஒரு உத்வேகம் பிறக்கிறது...

  ReplyDelete
 40. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (05.07.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:-

  https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=433835043785862

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete