About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, October 5, 2013

60] குருவிடம் வந்து சேரும் பாபங்கள்.

2
ஸ்ரீராமஜயம்


 

ஒருவனை கவனித்து நல்வழிப்படுத்துகிற பொறுப்பு இன்னொருத்தருக்கு இருக்கும்போது, அந்த ஒருவன் தப்பு செய்தால் அந்தத்தப்பு அவனை நல்வழிப்படுத்துபவரையே சேரும்,

குடிமக்கள் செய்யும் பாபம் அரசனைச் சேரும்; 

மனைவி செய்யும் பாபம் கணவனைச் சேரும்;

சிஷ்யன் செய்யும் பாபம் குருவைச்சேரும்,

என்று நீதி சாஸ்திரம் சொல்கிறது. 

சாதாரண குரு என்றால் ஒருசில சிஷ்யர்கள் இருப்பார்கள். அவர்கள் செய்கிற சிறிதளவு பாபம் குருவிடம் சேரும். 

ஒருவர் ’ஜகத்குரு’ என்றால் அவரிடம் எத்தனை பாபம் வந்து சேரும்? உலகின் அத்தனை பாபங்களும் வந்து சேரும்.

பாபம் நீங்க ஒரே வழி பகவத் த்யானம் தான்.

இதனால் தான் பகவத்பாதாள், “ஜனங்களை த்யானத்தில் ஈடு படுத்துங்கள்; அவர்கள் தியானம்  செய்யாவிட்டால், அவர்களுக்காகவும் சேர்த்து நீங்கள் தியானம் பண்ணுங்கள்” என்று ஆக்ஞை செய்திருக்கிறார். 


oooooOoooooஓர் அற்புத நிகழ்வு


மஹாபெரியவா மூலம் நன்மை பெற்றவர்கள் பட்டியல் மிக நீண்டது. அவர் கருணை எல்லோர் மீதும் மழை போல் பொழிந்தது. 

அந்தக் கருணை மழையில் நனைந்தவர்கள் மஹா பெரியவரிடம் மாறாத மரியாதையும் அன்பும் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு சம்பவம்தான் இது.

1980-ல் கேரள ஆளுநராக இருந்தவர் திருமதி ஜோதி வெங்கடாசலம். அப்போது அவரிடம் செயலராகப் பணியாற்றி வந்தவர் டி.வி.சுவாமிநாதன். 

ஒரு டிசம்பர் மாதக் கடைசியில், அவரின் உடல்நிலை பாதித்து, தினமும் காய்ச்சல் வர ஆரம்பித்தது. கூடவே, எடையும் குறைந்துகொண்டு வந்தது. ரத்தப் பரிசோதனை செய்தார்கள்; எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தார்கள்.


பின்பு, சுவாமிநாதனைத் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி நிபுணர்களிடம் கொண்டுபோய்க் காண்பிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அங்கே, நுரையீரல் துறை நிபுணர்கள் அவரைப் பரிசோதித்தனர்.

நுரையீரலின் மேற்பகுதியில், புற்று நோய் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறது!’ என்றார் முதன்மை மருத்துவர்.


விஷயம் உடனே ஆளுநர் திருமதி ஜோதி வெங்கடாசலம் அவர்களுக்குத் தெரிவிக்கப் பட்டது. மனிதாபிமானம் மிக்க அவர் பதறிப் போய், ‘சென்னையில் நல்ல மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என்றால், அங்கே சுவாமிநாதனைக் கூட்டிக்கொண்டு போங்கள். அதற்கான நடவடிக்கையை உடனே எடுங்கள்!’ என்றார். 

அதன்பின், சென்னை - அரசு பொதுமருத்துவமனையில் சுவாமிநாதனைச் சேர்த்தனர்.

அவரை, புகழ்பெற்ற மருத்துவரான டாக்டர் கே.வி.கிருஷ்ணசுவாமி, தீவிரமாகப் பரிசோதனை செய்தார்.


‘இதில் புற்று நோய் அறிகுறி எதுவும் தெரிய வில்லை. ஆனால், நுரையீரலின் மேல் பகுதியில் ஓர் அழுத்தம் தென்படுகிறது. அதை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்!’ என்றார்.


இதற்கிடையே, டாக்டர் செரியனையும் சென்று பார்த்தார் சுவாமிநாதன். 

அவரது எக்ஸ்ரே படங்களை எல்லாம் பல கோணங்களில் வைத்துப் பார்த்த டாக்டர் செரியனின் முகத்தில் சற்றுத் துயரம் தெரிந்தது. 

’இடது நுரையீரலின் மேலே புற்று நோய் பாதித்திருக்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டாக வேண்டும். ஏற்கெனவே நான்கைந்து மாதங்கள் வீணாகிப் போய் விட்டன. இனியும் காலதாமதம் செய்யாதீர்கள்!’ என்றார் அவர்.பாவம், சுவாமிநாதனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. 

1981-ஆம் ஆண்டு, மார்ச் மாதம், அவர் டெல்லி போகவேண்டிய வேலை வந்தது. அங்கேயும் ஒரு சோதனை நடத்திப் பார்த்துவிட முயன்றார். 

அங்கே பிரபல மருத்துவர் டாக்டர் கோபிநாத், சுவாமிநாதனின் நுரையீரலைப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, டாக்டர் கிருஷ்ணசுவாமி சொன்னது போலவே, ”நுரையீரலின் மேற்பகுதியில் அழுத்தம் இருக்கிறது. மூன்று மாதங்கள் தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டு விட்டு, பின்னர் எக்ஸ்ரே எடுத்துப் பரிசோதனை செய்யலாம், கவலைப்படாதீர்கள்!’ என்றார்.சுவாமிநாதனுக்கு மஹா பெரியவாளிடம் அளவு கடந்த பக்தி உண்டு. 

அவர் எப்போதும் தன் மீது அலாதியான பரிவு காட்டி வந்திருப்பது அவருக்கு நினைவு வந்தது. 

பெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாம் இப்படி வெவ்வேறான கருத்துக்கள் கூறியதில், அவருக்கு மிகவும் கவலையாகப் போய்விட்டது. ஆரம்பத்திலேயே மஹா பெரியவாளிடம் சரணடைந்திருக்கலாமோ என்றுவருத்தப்பட்டார். எத்தனை பெரிய குழப்பமாக இருந்தாலும், அவரிடம் தாம் கொண்டிருந்த அளவற்ற பக்தி தம்மைக் காப்பாற்றும் என்று பரிபூரணமாக நம்பினார்.அப்போது, கர்நாடக - மகாராஷ்டிர எல்லையில் மஹாபெரியவா தங்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.


சுவாமிநாதனின் சார்பாக அவரது நெருங்கிய நண்பரும், பெரியவாளின் பரம பக்தருமான ஜோஷி என்பவர், சுவாமிநாதன் படும் துன்பத்தை பெரியவாளிடம் எடுத்துச் சொன்னார்.


அதன்பின், மஹா பெரியவா சில மணி நேரம் கடும் மவுனம் அனுசரிக்கத் தொடங்கிவிட்டார்.

அப்போது அவரின் முகாரவிந்தத்தில் ஏற்பட்டிருந்த தேஜோமயமான ஒளி, அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. 

‘அது என்ன அப்படிப்பட்ட ஒரு பிரகாசம்!’ என்று சுற்றி இருந்தவர்கள் கொஞ்சம் பயந்து கூடப் போனார்கள்.சற்று நேரத்துக்குப் பிறகு, மவுனத்தைக் கலைத்தார் பெரியவா. 

எதிரே நின்றுகொண்டிருந்த ஜோஷி மற்றும் கண்ணன் இருவரையும் அருகில் அழைத்து, ‘அவனுக்கு அதெல்லாம் ஒண்ணும் வராது!’ என்று மிகவும் கருணை யோடு, ஆனால் அழுத்தமாகச் சொன்னார்.


ஜோஷி இதைத் தொலைபேசி மூலம் சுவாமிநாதனிடம் சொல்ல, அவருக்கு ஒரே மகிழ்ச்சி! இனம் தெரியாத புத்துணர்ச்சி! 

ஜோஷியின் வார்த்தைகள் மஹா பெரியவாளின் வாய் வார்த்தைகளாகவே அவர் காதில் விழ, மெய்சிலிர்த்துப் போனார்.


அன்றைய தினத்திலிருந்து, மாலையில் காய்ச்சல் வருவது நின்றது. முகத்தில் இருந்த தளர்ச்சியும், சோர்வும், கவலை ரேகைகளும் மெள்ள மெள்ள அகன்றன. உடல் எடை குறை வதும் நின்றது. முகத்தில் ஒரு புதிய பொலிவு வந்தது.


ஆனால், மே மாதத்திலிருந்து மறுபடியும் அவருக்கு உடம்பு படுத்த ஆரம்பித்துவிட்டது. ஓயாத இருமலும், காய்ச்சலும் வர ஆரம்பித்தன. 

கேரள ஆளுனரின் குடும்ப ஆலோசகரான ஒரு மருத்துவர், சுவாமிநாதனின் பழைய எக்ஸ்ரே படங்களையும் மருத்துவக் குறிப்புகளையும் பார்த்துவிட்டு, மிக நவீன கருவியால் இன்னும் சில படங்கள் எடுத்துப் பார்த்தார்.


அந்த நிபுணரின் முகம் வருத்தத்தில் தோய்ந்தது. 

படத்தில், நுரையீரலின் மேல் பக்கத்தில் புதிதாக ஒரு நிழல் தெரிந்தது. 

சுவாமிநாதனுக்குப் புற்று நோய் இரண்டாம் கட்ட நிலையை அடைந்துவிட்டது என்றும், ஆனால் அறுவை சிகிச்சையை அவர் தாங்கும் நிலையில் இல்லை என்றும் கூறினார். ’

உடனடியாக கீமோதெரபி எனப்படும் கதிர் இயக்க சிகிச்சை தொடங்க வேண்டும். அதுகூட இறுதி நிலை வலியினால் உண்டாகும் வேதனையைக் குறைக்கத்தான் உதவும்!’ என்றார். அவர் ஆளுநருக்கு ஒரு தனிக்குறிப்பும் எழுதி அனுப்பினார். அதில், மூன்று மாதங்களுக்குள் சுவாமிநாதனின் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தார்.ஆளுனர் திருமதி ஜோதி வெங்கடாசலத்துக்குத் தன் உதவியாளர் சுவாமிநாதன் மீது மிகவும் பரிதாபம் உண்டாயிற்று. 

மறுபடியும் டெல்லி அகில இந்திய மருத்துவ மனையைத் தொடர்புகொண்டு, மூத்த மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின்பேரில் சுவாமிநாதனை சென்னைக்கு அனுப்பி, ரயில்வே ஆஸ்பத்திரியில் சேர்க்கச் செய்தார். 

அங்கே, சுவாமிநாதனின் இதயம் மிகவும் பலகீனமாக இருப்பதாகவும், அதன் காரணமாக இதயத்தில் ரத்தம் தேங்கிப்போய், தாங்கும் சக்தியைக் கடந்ததும் வெடித்து விடும் போன்ற அபாய கட்டத்தில் இருப்பதாகவும், பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்கள்.சுவாமிநாதன் நடுநடுங்கிப்போனார். 

மீண்டும் நண்பர் ஜோஷியிடம் தன் நிலைமையை எடுத்துச்சொல்லி, பெரியவாளிடம் முறையிடுமாறு கேட்டுக் கொண்டார். 

அதன்படி, ஜோஷியும் மஹா பெரியவாளை மீண்டும் தரிசித்து, ‘சுவாமிநாதனின் மனைவிக்கு மாங்கல்ய பிக்ஷை கேட்கிறேன், சுவாமி!’ என்று சொல்லிக் குலுங்கிக் குலுங்கி அழுதார்.பக்தரின் அபாய நிலை தெரிந்தும், மஹா பெரியவா சும்மா இருப்பாரோ? 

சிறிது நேர மவுனத்துக்குப் பின், ஸ்நானம் செய்யப் புறப்பட்டார். ஜோஷி தம்பதியர் பயபக்தியுடன் ஒதுங்கி நின்றனர்.


நீர் நிறைந்த தொட்டியில் இறங்கி நின்ற பெரியவா, ஜோஷியை அருகில் அழைத்தார். 

சுவாமிநாதன் பற்றிய முழு விவரங்களையும் மீண்டும் ஒரு முறை சொல்லச் சொன்னார். பிறகு ஒரு தடவை நீரில் மூழ்கி எழுந்தார். 

‘அவனுக்கு ஒன்றும் ஆபத்து வராது. அவனுக்கு இது புனர் ஜன்மம்!’ என்று உத்தரவு தருவது போன்று அருளினார்.ஜோஷி இதை சுவாமிநாதனுக்குத் தெரிவித்து, தைரியமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

நவீன கருவிகளின் கணிப்பு, மருத்துவர்களின் கெடு, நிபுணர்களின் கருத்துக்கள் எல்லாம் அவருக்கு மூன்று மாதங்களே என்று நிர்ணயித்து விட்ட பிறகு, எப்படித் தைரியமாக இருப்பது? எந்த சக்தியால் இதை மாற்ற முடியும்?


மறுபடி, டெல்லியில் 15 நாட்கள் சோதனைகள் நடந்தன. 

மஹா பெரியவாளே ‘அவனுக்குப் புனர்ஜன்மம்’ என்று கூறிவிட்ட பிறகு, அந்தத் தெய்வத்தின் வாக்குக்கு மறுவாக்கு உண்டோ? அதற்கான பலன்கள் கிட்டவே செய்தன. 

எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு, ஓர் அற்புதமே நிகழ்ந்திருந்தது. திருவனந்தபுரத்தில் எடுத்த எக்ஸ்ரே படத்தில் காணப்பட்ட கருநிழல், டெல்லியில் எடுத்த படத்தில் முற்றிலும் மறைந்திருந்தது.டெல்லி பரிசோதனையின் முடிவில், சில எதிர்பாராத உண்மைகள் தெரிய வந்தன. 

சுவாமிநாதனுக்குப் பிறவியிலேயே மூக்குத்தண்டில் வளைவு உண்டு. அதன் காரணமாக, அவருக்கு ஜலதோஷம் பிடிக்கும் போதெல்லாம் சளி வெளியே வராமல், நுரையீரலுக்குள் சேர்ந்து, உறைந்து போய், அதனால்தான் நுரையீரலில் அழுத்தம் காணப் பட்டது. அதுதான் கரு நிழல் போல் எக்ஸ்ரேயில் தெரிந்திருக்கிறது. 

அதைத்தான் புற்று நோய் என வல்லுநர்கள் தவறான முடிவுக்கு வரக் காரணமாக இருந்தது.சுவாமிநாதனுக்குத் திருவனந்தபுரம் மருத்துவ மனையில் ஒரு சிறு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் பூரண குணம் அடைந்தார். 

மூன்று மாதமே அவருக்கு ஆயுட்காலம் என்று புகழ்பெற்ற மருத்துவர்கள் சொல்லியிருந்தபோதும், பெரியவாளிடம் அவர் கொண்டிருந்த அளப்பரிய பக்தி அவரைக் காப்பாற்றியது.

அவர் மஹா பெரியவாளை தரிஸனம் செய்யச் சென்றபோது, அவர் தம் அருகில் இருந்த கண்ணனிடம், ‘சுவாமிநாதன் வந்திருக்கானே, பார்த்தியா? புற்று நோய், அது இதுன்னு அவனை பயமுறுத்திட்டாளாமே?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டாராம்.மஹானின் கருணைக் கடாக்ஷம் கிடைத்துவிட்டால், அதற்கு மேல் வேறு என்னதான் வேண்டும்?


[Thanks to my eldest son 

Sri. G. Ramaprasad at Dubai for sharing this article ]oooooOooooo

என் இல்லத்தில் நிகழ்ந்த
குட்டியூண்டு பதிவர் மாநாடு.


 
உட்கார்ந்து யோசிப்போமில்லே.. ?

பிரபல நகைச்சுவைப் பதிவர்
”சேட்டைக்காரன்”
அவர்களின் திடீர் வருகை
என்னை மிகவும் மகிழ்வித்தது.

 
[பொன்னாடை போத்தி வரவேற்றல்]

ச ந் தி த் த  வேளையில்  ....
சி ந் தி க் க வே   இல்லை ....
த ந் து வி ட் டே ன்  என்னை ..... ;)


என்ற பாடல்போல, பெருமகிழ்ச்சியுடன் அவரைச் சந்தித்ததும், நான் இறுகக் கட்டித்தழுவி அணைத்துக்கொண்டேன். 

பிறகு ’அவரின் உடல் உறுப்புக்கள் ஓமப்பொடி போல நொறுங்கி விடும்’ என என் உள்மனது என்னை எச்சரித்ததால், உடனே என் அன்புப் பிடியிலிருந்து அவரை விடுவித்து விட்டேன். 

நல்லவேளையாக அசம்பாவிதங்கள் ஏதும் இதற்கிடையில் நிகழ்ந்துவிடவில்லை. ;)

 
[எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு ....
சிறுகதைத்தொகுப்பு நூல் பரிசளிப்பு]

-oOo-

03.10.2013 வியாழக்கிழமை இரவு 7.15 க்கு 
திரு. R. வேணுகோபாலன் அவர்கள் 
{புனைப்பெயர்கள்: 
[1] சேட்டைக்காரன் [2] நாஞ்சில் வேணு}
என் இல்லத்திற்கு அன்புடன் வருகை தந்தார்.

அவரின் திருக்கரங்களால்
அன்புடன் கையொப்பமிட்டு அளித்த 
“மொட்டைத்தலையும் 
முழங்காலும்”
கிடைக்கப்பெற்றேன். ;)


அதிலும் அவர் நகைச்சுவையுடன்
எழுதிக்கொடுத்துள்ள வாசகம் இதோ:

”வை.கோ. என்னும் 
பாற்கடலுக்குப்
பரிசாக இந்த 
பாக்கெட் பால்”

- சே.கா 03/10/13 திருச்சி


என்னுடைய நகைச்சுவைச் சிறுகதைகள் 
சிலவற்றை மனம் திறந்து பாராட்டினார்.

குறிப்பாக அடியேன் எழுதி வெளியிட்டிருந்த
“வந்துவிட்டார் வ.வ.ஸ்ரீ. 
புதிய கட்சி: மூ,பொ.போ.மு.க. உதயம்”
என்ற கதையில் வரும் கதாபாத்திரமான 
வழுவட்டை ஸ்ரீநிவாஸனை
எழுச்சியுடன் நினைவு படுத்தி 
மிகவும் பாராட்டினார்.

வஸிஷ்டர் வாயால் பிரும்மரிஷி 
பட்டம் கிடைத்தது போல 
உணர்ந்து மகிழ்ந்தேன்.

என்னுடைய இந்த ஒரு கதையின் 
எட்டு பகுதிகளுக்கும் சேர்த்து 
சேட்டைக்காரன் அவர்கள் மட்டும்
கொடுத்துள்ள பின்னூட்டங்களின் 
மொத்த எண்ணிக்கை 36 
என்பதே எனக்குக்கிடைத்த மாபெரும் 
வெற்றியாக நான் நினைத்து 
அன்று மகிழ்ந்துள்ளேன்.

இந்த அளவுக்கு அவர் மனம் திறந்து 
மற்றொரு எழுத்தாளரைப் பாராட்டி 
வேறு எந்தப்பதிவர்களின் பதிவுகளிலுமே 
கருத்து எழுதியதாக நான் பார்த்தது இல்லை.

என் நகைச்சுவை 
எழுத்துக்களுக்கு 
எனக்குக்கிடைத்த 
மாபெரும் 
’ஆஸ்கார் விருதாக’ 
இதை நினைத்து நான் 
இன்றும் பூரிப்படைகிறேன்.

-oOo-

சேட்டை அவர்கள் என் வீட்டுக்கு வருகை தந்துள்ளார் என நான் தகவல் கொடுத்ததும், சேட்டையைக் காணாமல் கோட்டை விட்டுவிடக்கூடாது என்ற ஆவலில் என் இல்லம் தேடி ஓடி வந்த திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்களுக்கும், ஆரண்யநிவாஸ் திரு. ஆர். இராமமூர்த்தி அவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

03.10.2013 இரவு 07.15 மணி முதல் 08.30 மணிவரை, குளுகுளு அறையில் ஜிலுஜிலுவென்று எங்களுக்குள் மனம் விட்டுப்பேசி, மகிழ முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. 

அவர் பணியாற்றி வருவதும் கணக்கியல் துறை, நகைச்சுவையில் நாட்டம்,  கையால் படம் வரைவதில் அவருக்கும் ஆர்வம், பிரியமாக அருந்த விரும்பும் பானம் காஃபி என்பது போன்ற பல விஷயங்களில் என்னுடைய டேஸ்டும் அவருடைய டேஸ்ட்டும் ஒத்துபோவதாக இருந்தன. 

உருவத்தில் மட்டும் என்னுடன் ஒத்துப்போகாமல் மிகவும் ஒடிசலாகவே இருந்தார்.  ;)


என் இல்லத்திற்கு அன்புடன் வருகை தந்து 
மகிழ்வளித்த ’சேட்டைக்காரன்’ என்கிற
திரு R. வேணுகோபாலன் அவர்களுக்கு
என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். 
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியிடப்படும்.

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

71 comments:

 1. ஆஹா ! பதிவர் சந்திப்பும் மகிழ்ச்சியான பகிர்வும் எங்களையும் மகிழ்வித்தது. வரவேற்பு சூப்பர்.பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. சுவாமிநாதன் அவர்களின் அனுபவம் மெய்சிலிர்க்க வைத்தது. பெரியவாளின் கருணையே கருணை தான்....

  சேட்டைக்காரன் அவர்களின் வருகை குறித்து மகிழ்ச்சி. அவரை நாங்கள் சென்னையில் பதிவர் மாநாட்டில் சந்தித்து பேசியிருக்கிறோம்.

  ReplyDelete


 3. பதிவுலகில் நகைச்சுவை ராஜபாட்டையில் நடைபோடும் சேட்டை உங்கள் அன்புப் பிடியில் படும் பாட்டை ரசனையுடன் படிக்கக் கிடைத்தது எங்களுக்கு வேட்டை!

  ReplyDelete
 4. பெரியவரின் மூலம் சுவாமிநாதன் அவர்கள் பெற்ற அனுபவம் அருமை...

  சேட்டைக்காரன் அவர்களின் சந்திப்புக் குறித்து மகிழ்ச்சி.

  ReplyDelete
 5. பாபம் நீங்க ஒரே வழி பகவத் த்யானம் தான்.

  இதனால் தான் பகவத்பாதாள், “ஜனங்களை த்யானத்தில் ஈடு படுத்துங்கள்; அவர்கள் தியானம் செய்யாவிட்டால், அவர்களுக்காகவும் சேர்த்து நீங்கள் தியானம் பண்ணுங்கள்” என்று ஆக்ஞை செய்திருக்கிறார்.

  அருமையான பயனுள்ள பகிர்வுகள்..!

  ReplyDelete
 6. வஸிஷ்டர் வாயால் பிரும்மரிஷி பட்டம் கிடைத்தது போல
  உணர்ந்து மகிழ்ந்தேன்.

  என்னுடைய இந்த ஒரு கதையின் எட்டு பகுதிகளுக்கும் சேர்த்து
  சேட்டைக்காரன் அவர்கள் மட்டும்கொடுத்துள்ள பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை 36 என்பதே எனக்குக்கிடைத்த மாபெரும் வெற்றியாக நான் நினைத்து அன்று மகிழ்ந்துள்ளேன்.

  மணிமகுடத்தில் ஒளிரும் வைரமாக மகிழ்ச்சிப்பகிர்வு

  ReplyDelete
 7. என் நகைச்சுவை எழுத்துக்களுக்கு எனக்குக்கிடைத்த மாபெரும்
  ’ஆஸ்கார் விருதாக’ இதை நினைத்து நான் இன்றும் பூரிப்படைகிறேன்.//

  ஆஸ்கார் விருதாக கிடைத்த பாராட்டுக்களுக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 8. ”வை.கோ. என்னும் பாற்கடலுக்குப்பரிசாக இந்த பாக்கெட் பால்”//

  மகிழ்ச்சிப்பொங்கல்..!!

  ReplyDelete
 9. மஹாபெரியவா மூலம் நன்மை பெற்றவர்கள் பட்டியல் மிக நீண்டது. அவர் கருணை எல்லோர் மீதும் மழை போல் பொழிந்தது.

  அந்தக் கருணை மழையில் நனைந்தவர்கள் மஹா பெரியவரிடம் மாறாத மரியாதையும் அன்பும் கொண்டிருந்தார்கள்.

  அன்பை அமுத மழையாய் வர்ஷித்த கருணைக்கடல்
  அல்லவா மஹா பெரியவர்..!

  ReplyDelete
 10. குட்டி பதிவர் சந்திப்பு மகிழ்ச்சி!

  ReplyDelete
 11. அடிக்கடி மினி பதிவர் சந்திப்பு நிக்ழ்த்தி மகிழ்ந்து பதிவிடுவது நிங்களாகத்தான் இருக்கும்.வாழ்த்துக்கள்.தொடருஙக்ள்.

  ReplyDelete
 12. ஓர் அற்புத நிகழ்வு ஒரு நம்பிக்கையின் பிரதிபலிப்பு. திரு சுவாமிநாதனின் நம்பிக்கை வீண் போகவில்லை!

  ReplyDelete
 13. //… … … பெருமகிழ்ச்சியுடன் அவரைச் சந்தித்ததும், நான் இறுகக் கட்டித்தழுவி அணைத்துக்கொண்டேன். பிறகு ’அவரின் உடல் உறுப்புக்கள் ஓமப்பொடி போல நொறுங்கி விடும்’ என என் உள்மனது என்னை எச்சரித்ததால், உடனே என் அன்புப் பிடியிலிருந்து அவரை விடுவித்து விட்டேன். நல்லவேளையாக அசம்பாவிதங்கள் ஏதும் இதற்கிடையில் நிகழ்ந்துவிடவில்லை.//

  நகைச்சுவை சேட்டைக்காரனுக்கு நகைச்சுவையான வரவேற்பு! உங்கள் இருவருக்குமே வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. மஹானின் கருணைக் கடாக்ஷம் அருமை அற்புதம்.

  நகைச்சுவைப் பதிவர் சேட்டைக்காரனின் சந்திப்பு இனிமையான தொகுப்பு. பாராட்டுக்கள் வாழ்த்துகள் நன்றி ஐயா.

  ReplyDelete
 15. சக்தி விகடனில் இந்தச் செய்தி வந்திருந்தது. சில வருடங்கள் முன்னர் ரமணி அண்ணா எழுதி வந்தது. மற்றபடி நாம் குருவைக் காக்க வேண்டி எத்தனை ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டோம். நமக்காக இல்லாட்டியும் நம் பாவங்கள் ஜகத்குருவைப் போய் அடைகிறதால் நாம் பாவம் செய்யாமல் கூடியவரை கவனமாக இருக்கணும்.

  ReplyDelete
 16. அருமையான பதிவு. பெரியவரிடம் பலரும் பல அனுபவங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். பகிர்விற்கு நன்றி. சேட்டைக்காரன் பதிவரின் சந்திப்பிற்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 17. நண்பர்கள் இணைந்தாலே பெரும் மகிழ்வுதான். அந்த மகிழ்வைப் பகிர்ந்து கொண்டமைக்குப் பாராட்டுகள்.
  மகாப்பெரியவரைப் பற்றிய பல அருமையான நிகழ்ச்சிகள் உள்ளத்தை மிகவும் பரவசப் படுத்துகின்றன.நல்ல பயனுள்ள பகிர்வுக்கு நன்றி பல.

  ReplyDelete
 18. பகவத்பாதாள், “ஜனங்களை த்யானத்தில் ஈடு படுத்துங்கள்; அவர்கள் தியானம் செய்யாவிட்டால், அவர்களுக்காகவும் சேர்த்து நீங்கள் தியானம் பண்ணுங்கள்” என்று ஆக்ஞை செய்திருக்கிறார். //
  அருமையான அமுத மொழி, பகிர்வுக்கு நன்றி.

  மஹானின் கருணைக் கடாக்ஷம் கிடைத்துவிட்டால், அதற்கு மேல் வேறு என்னதான் வேண்டும்?//
  ஆம், வேறு என்ன வேண்டும்!
  திரு .சுவாமிநாதன் அவர்கள் நலபெற்றது குருவின் அருளால் என்று படிக்கும் போது குருவின் மகிமை தெரிகிறது.
  நல்ல செய்திகளை சொல்லி வருவதற்கு நன்றி.

  பதிவர் சேட்டைக்காரன் அவர்கள் சந்திப்பும், அவர் உங்களைப் பற்றி எழுதி கொடுத்ததும் அருமை.
  வாழ்த்துக்கள்.


  ReplyDelete
 19. ஸ்ரீ பெரியவர் அவர்களின் அருட் கொடை பற்றிய பல சம்பவங்கள் கேட்டிருக்கிறேன். அவர் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தெய்வம்.

  குட்டி மீட்டிங்கில் மாபெரும் எழுத்தாளுமைகள்.
  ரிஷபன்ஷி
  ஆர்.ஆர்.ஆர்
  சேட்டைக்காரன் என்ற ஸ்ரீ வேணு
  தாங்கள். ஆஹா ஒரு சங்கமம் அல்லவா அது.
  நாக்களும் ஒரு குட்டி மீட்டிங் போடலாம்ன்னா
  குட்டி...துக்கம் தான் வருது..............ஹி..ஹி

  ReplyDelete
 20. பதிவர் சந்திப்பும் மகிழ்ச்சியான பகிர்வும் எங்களையும் மகிழ்வித்தது. வரவேற்பு சூப்பர்.

  ReplyDelete
 21. குருவின் பொறுப்புகளை அழகாகச் சொல்லியிருக்கிறார்.

  மினி பதிவர் சந்திப்பு உற்சாகமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  ReplyDelete
 22. உடற்கூறில் பாதிப்புகள். பல டாக்டர்களின் பல முடிவுகள் பெரியவர் அருளால் பூரண குணம்..! ஆச்சரியமான விஷ்யங்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 23. பிறருடைய காலைத் தொட்டு வணங்கக் கூடாது என்பார்கள் நம் பாபம் அவருக்குப் போய்விடும் என்று சொல்வார்கள்.

  ReplyDelete
 24. நம் பாவங்கள் குருவைப் போய்ச்சேரும் என்ற பயத்திலாவது பாவங்கள் செய்யாமல் இருக்க வேண்டும்.
  சேட்டைக்காரன் அவர்களை போன மாதம் பதிவர் விழாவில் சந்தித்து பேசியதை நினைத்துக் கொண்டேன்.
  எனக்கும் ஸ்ரீரங்கம் வந்து உங்களையும் திரு ரிஷபன், திருமதி கீதா, திருமதி ஆதி, திரு இளங்கோ, திரு ராமமூர்த்தி எல்லோரையும் சந்திக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது.
  திருமதி ருக்மிணி சேஷசாயியும் ஸ்ரீரங்கத்தில் இருக்கிறார். உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 25. சம்பிரதாயத்துக்காகச் சொல்லவில்லை ஐயா! எப்போது திருச்சிக்கு வந்தாலும் நான் மறக்காமல் செல்லுமிடம் சமயபுரம் மாரியம்மன் கோவில். இம்முறை, நேரப்பற்றாக்குறை காரணமாக அது நிகழாதது குறையாகவே தெரியவில்லை. அம்மன் அருளால் உங்களது இல்லத்தில், திரு.ரிஷபன், திரு. ஆரண்ய நிவாஸ் இராமமூர்த்தி ஆகியோரைச் சந்தித்து அளவளாவ முடிந்தது என்றே தோன்றுகிறது. உங்கள் இல்லத்தாரின் விருந்தோம்பல் நெகிழ வைத்தது. மற்றபடி, என்னைப் பற்றி இவ்வளவு சிலாகித்து எழுதி ‘ நிறைகுடம் நீர் தளும்பலில்’ என்பதை நீங்கள் நிரூபித்திருக்கிறீர்கள் ஐயா. சந்திப்பு இனி அடிக்கடி தொடரும்! :-)

  ReplyDelete
 26. Ramani S has left a new comment on your post "59] மந்திர சடங்குகளில் பிடிப்பு ஏற்பட ..... !":

  சேட்டைக்காரன் அவர்களுடன் சிறிது நேரம் பேசினால கூட
  அவர் எதிர்பாராது சூழ் நிலைக்குத் தகுந்தாற்ப்போல உதிர்க்கிற ஹாஸ்ய மொழிகள் நம்மை மகிழ்வின் உச்சத்திற்கே கொண்டு
  சென்று விடும். நான் பல சமயம் ரசித்து மகிழ்ந்திருக்கிறேன்
  அதை நீங்கள் பதிவு செய்த விதம் அருமை. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. பெரியவாளைப் பற்றியும் அவர் நிகழ்த்திய அற்புதங்களைப் பற்றியும் படிக்கப் படிக்க வாழ்க்கையைப் பற்றிய அச்சம் விலகிக் கொண்டே போகிறது. நன்றி.

  ReplyDelete
 28. பாலு சார்,
  அதுனால தான் எல்லா மந்திரிகளும் அம்மா கால்ல நெடுஞ்சாண்கிடையா விழுகிறார்களோ?

  ReplyDelete
 29. அன்புள்ள ஐயா.

  வணக்கம்.

  எனக்குப் பிடித்த வலைப்பதிவுகளுள் உங்களுடையதும் ஒன்று. ஆனால் என்னுடைய பணி இறுக்கம் உறவுகளின் பிரிவு எனத் தொடர்நிகழ்வுகள் கணிப்பொறி வரவிடாமல் கைது செய்து பணிச்சிறையில் அடைத்துள்ளன. எனவே விருப்பமிருந்தால் என்கிற சொல்லை இனி பயன்படுத்தாதீர்கள். அது சங்கடப்படுத்துகிறது. அவசியம் வருவேன். கருத்துரைக்கவில்லை என்றாலும் படித்துவிடுவேன். சில சமயங்களில் மட்டுமே இதற்கு அவசியம் கருத்துரைக்கவேண்டும் என்று மனதிற்குத் தோன்றும். அவ்வளவே. கட்டாயத்தில் எதற்கும் கருத்துரைக்கமாட்டேன். சேட்டைக்காரன் உங்களுக்குத் தந்த நுர்லில் தந்திருக்கிற குறிப்பு பாற்கடலுக்கு பால்பாக்கட் நல்ல சுவை, நகைச்சுவை. ரசிக்கிறேன். வாய்ப்பமைவில் வருவேன். நன்றியுடனும் அவசரமாகவும் விடைபெறுகிறேன்.

  ReplyDelete
 30. புற்று நோயும் பெரியவர்; அருளும். அருமை.
  பதிவர் விருந்தினா மகிழ்வு பகிர்விற்கும் மிக நன்றி.
  சுவை, பக்தியாக உள்ளது பதிவுஇ
  இறையருள் நிறையட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 31. எங்கெங்கும் எப்போதும் வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 32. MAHAA PERIYAVAL KARUNAIYE KARUNAI MIKKA MAGIZCHIYAGA ULLADHU THAMIZ TYPE PANNAMAL IRUPPADHAI MANNIKKAVUM THANK YOU

  ReplyDelete
 33. அன்பின் வை.கோ

  குருவிடம் வந்து சேரும் பாபங்கள் - பதிவு அருமை - முதல் படத்திலேயே அருமையாக எத்தனை எத்தனை ஸ்ரீஸ்ரீஸ்ரீ ம்காப் பெரியவாளின் படங்கள் - அத்தனையும் அருமை

  பகிர்வினிற்கு நன்றி

  //
  சிஷ்யன் செய்யும் பாபம் குருவைச்சேரும்,

  சாதாரண குரு என்றால் ஒருசில சிஷ்யர்கள் இருப்பார்கள். அவர்கள் செய்கிற சிறிதளவு பாபம் குருவிடம் சேரும்.

  ஒருவர் ’ஜகத்குரு’ என்றால் அவரிடம் எத்தனை பாபம் வந்து சேரும்? உலகின் அத்தனை பாபங்களும் வந்து சேரும்.

  பாபம் நீங்க ஒரே வழி பகவத் த்யானம் தான்.

  இதனால் தான் பகவத்பாதாள், “ஜனங்களை த்யானத்தில் ஈடு படுத்துங்கள்; அவர்கள் தியானம் செய்யாவிட்டால், அவர்களுக்காகவும் சேர்த்து நீங்கள் தியானம் பண்ணுங்கள்” என்று ஆக்ஞை செய்திருக்கிறார்.
  //

  மிக மிக அருமை - சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 34. அன்பின் வை.கோ

  அற்புத நிக்ழவு அருமை

  ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளால் முடியாததென ஒன்றுண்டா என்ன ? கிடையவே கிடையாது - அவர் நினைத்ததை முடிக்கும் ஆற்றல் பெற்றவர். பல்வேறு ஊர்களில் பல்வேறு மருத்துவர்கள் கூற்றுக்கு எதிராக - சுவாமி நாதனைக் காப்பாற்றியவர் அவர். நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 35. அன்பின் வைகோ - மூத்த மகன் ராம்பிரகாஷினிற்கு நன்றி - பகிர்ந்த நிகழ்வு மேன்மேலும் பகிரப்பட்டு பலரிடம் சென்றிருக்கிறது - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 36. அன்பின் வை.கோ

  பதிவர் சந்திப்பு - மனம் மகிழ நடந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி -

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 37. திரு.சேட்டைக்காரன் அவர்களுடன் ஏற்பட்ட சந்திப்பு பற்றி வழக்கம் போல நகைச்சுவை மிளிர அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! இனிய வாழ்த்துக்க்ள்!!

  ReplyDelete
 38. தங்கள் உபயத்தால் எனக்கும் சேட்டையின் தரிசனம் கிட்டியது.. கூடவே ஆரண்யநிவாஸ்.. மாபெரும் ஆளுமைகள் மத்தியில் எளியேனும் நின்றது என வாழ்நாளில் கிட்டிய பாக்கியம்.. சேட்டைக்காரன் அவர்களைப் பார்க்கும் என் நீண்ட நாள் ஆவல் உங்களால் நிறைவேறியது.. ஜென்ம சாபல்யமாச்சு எனக்கு. அதற்காகவே என் ஸ்பெஷல் நன்றி.. உங்களுக்கு

  ReplyDelete
 39. மஹா பெரியவரின் கருணையே கருணை. அவர் இல்லாவிட்டாலும் அவருடைய அருட் பார்வை நம் பக்கம் திரும்பாதா என்று மனம் ஏங்குகிறது.
  பதிவர் சந்திப்பின் நகைச்சுவை பதிவைக் கண்டேன். நீங்கள் கொடுத்துள்ள சுட்டிக்கான முன்னோட்டம் படிக்க ஆவலைத் தூண்டுகிறது.
  நன்றி பகிர்விற்கு.

  ReplyDelete
 40. பெரியவரின் பகிர்வு ஆச்சரியம் ஐயா!சேட்டைக்காரன் சந்திப்பும் சிந்திப்பும் சுவாரசியம்!

  ReplyDelete
 41. சுவாமிநாதனுக்கு ஏற்பட்ட அஶௌகரியம் கூட சூரியனைக்கண்ட
  பனிபோல , விலக குருவின் கருணை உதவி செய்தது.
  பாபம் நீங்க வழி பகவத்தியானம்தான். அருமையான அமுதமொழி.
  எல்லோராலும் எளிதில் கடைபிடிக்கக் கூடியது. அன்புடன்

  ReplyDelete
 42. //உருவத்தில் மட்டும் என்னுடன் ஒத்துப்போகாமல் மிகவும் ஒடிசலாகவே இருந்தார். ;)// enna oru varuththam??!! :-))

  ReplyDelete
 43. உங்களுடைய குட்டி பதிவர் ஸந்திப்பு நன்றாக இருந்தது. நான் இந்த பதிவர் ஸந்திப்பு ஸமாசாரங்கள் எங்கு படிக்கக் கிடைத்தாலும் படித்து மகிழுவேன். ஆர்வம் எனக்கு. நிறைய பேர்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிகிரது.
  நகைச்சுவை உங்கள் பங்கும் தெறிகிறது.
  பெரியவாளைப் பற்றி திரும்பத் திரும்ப தெறிந்து கொள்வதில்
  இருக்கும் விசேஶங்கள். கருத்திலடங்காதவை. நன்றி. அன்புடன்

  ReplyDelete
 44. பாபம் நீங்க ஒரே வழி பகவத் த்யானம் தான்
  romba romba seri.பெருமகிழ்ச்சியுடன் அவரைச் சந்தித்ததும், நான் இறுகக் கட்டித்தழுவி அணைத்துக்கொண்டேன். பிறகு ’அவரின் உடல் உறுப்புக்கள் ஓமப்பொடி போல நொறுங்கி விடும்’ என என் உள்மனது என்னை எச்சரித்ததால், உடனே என் அன்புப் பிடியிலிருந்து அவரை விடுவித்து விட்டேன். நல்லவேளையாக அசம்பாவிதங்கள் ஏதும் இதற்கிடையில் நிகழ்ந்துவிடவில்லை
  ahahahahaha


  ”வை.கோ. என்னும்
  பாற்கடலுக்குப்
  பரிசாக இந்த
  பாக்கெட் பால்”

  romba romba seri


  என் இல்லத்திற்கு அன்புடன் வருகை தந்து

  மகிழ்வளித்த ’சேட்டைக்காரன்’ என்கிற

  திரு R. வேணுகோபாலன் அவர்களுக்கு

  என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்
  engaludan pakirnthukondathukku special thanks.

  ReplyDelete
 45. குட்டியூண்டு பதிவர் மாநாடு - அதில்
  கொட்டிய அன்போ பாலாறு
  கட்டிப்போட்டது காலத்தின் ஏடு - அதில்
  கண்டுகொண்டதோ கண்ணியம் நூறு

  வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன்...

  ReplyDelete
 46. மஹாபெரியவாளின் கருணைக்கு எல்லையில்லை! அற்புதங்கள் நிகழ்த்திய மஹான்! தங்களின் நகைச்சுவை உணர்வு எங்களுக்கு பெரிய விருந்து! நன்றி!

  ReplyDelete
 47. //மனைவி செய்யும் பாபம் கணவனைச் சேரும்;//

  நோ..நோ..நோஒ.. நான் இதை ஒத்துக்க மாட்டேன்ன்ன்:) அதெப்பூடி?.. அதிலயும்.. இந்த பந்தியில் கணவன் செய்யும் பாவம் என , ஒரு வரி இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்போ ஆண்கள் பாவம் செய்வதில்லையா?... கூப்பிடுங்கோ நாட்டாமையை.. தீர்ப்பை மாத்தச் சொல்லுங்கோ:)

  ReplyDelete
  Replies
  1. கணவன் செய்த பாபம் கணவனையே சேரும் ..
   அவரே அனுபவித்துக்கொள்ள வேண்டியதுதான் ..!

   ஆனால் கணவன் செய்யும் புண்ணியத்தில் மட்டும் மனைவிக்கு பங்கு உண்டு..!

   கணவனை புண்ணியங்கள் செய்ய ஊக்குவிக்க மனைவிக்கு உற்சாகமளிக்க முன்னோர்கள் இப்படி சொல்லியிருக்கலாம் ..!

   Delete
  2. மனைவி செய்யும் பாபம் கணவனைச் சேரும்;/
   மனைவி செய்யும் பாபத்தை தவிர்க்க முயற்சிக்க கணவனுக்கு அறிவுறுத்த தர்மசாஸ்திரம் வலியுறுத்துவதற்காக சொல்லிய்ருக்கிறது ..

   யார் சொல்லியும் கேட்காத மனைவி ஒருவேளை கணவன் சொல்லி திருந்தலாமே..!

   Delete
 48. அதிசயக் குட்டிக் கதை, சுவாமிநாதன் அவர்களின் 3 மாத காலக்கேடு நீங்கியது... நல்ல அனுபவமே.. ஒரு வகையில் இதுவும் ஒரு ஜோசியம்தான்ன்.

  ReplyDelete
 49. ///[பொன்னாடை போத்தி வரவேற்றல்]

  ச ந் தி த் த வேளையில் ....
  சி ந் தி க் க வே இல்லை ....
  த ந் து வி ட் டே ன் என்னை ..... ;)///

  சே..சே...சே... என்ன கொடுமை சாமீஈஈஈஈஈஈஈஈ:))

  ReplyDelete
 50. //“மொட்டைத்தலையும்
  முழங்காலும்”//

  ஹா..ஹா..ஹா.. கோபு அண்ணனுக்கு மொட்டத்தலை வரமுன்பே.. புத்தகம் தந்துவிட்டாரோ?:))... கிக்..கிக்..கீஈஈஈஈஈஈ:))


  ////அதிலும் அவர் நகைச்சுவையுடன்
  எழுதிக்கொடுத்துள்ள வாசகம் இதோ:

  ”வை.கோ. என்னும்
  பாற்கடலுக்குப்
  பரிசாக இந்த
  பாக்கெட் பால்”//// பஞ் டயலாக் சூப்பர்ர்...:))

  ReplyDelete
 51. //என் இல்லத்திற்கு அன்புடன் வருகை தந்து
  மகிழ்வளித்த ’சேட்டைக்காரன்’ என்கிற
  திரு R. வேணுகோபாலன் அவர்களுக்கு
  என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். ///

  உங்கள் இல்லத்தில் நிகழ்ந்த இனிய சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.

  ஊசிக்குறிப்பு:
  அந்தக் கணக்கெடுக்கும் கிளியாருக்குச் சொல்லிடுங்கோ.. என் பின்னூட்டங்களை ஒழுங்கா எடுக்கச் சொல்லி...:)

  ReplyDelete
 52. Great read as usual and congratz Sir :)

  ReplyDelete
 53. Nanbarin varugaiyum, varaverpum pramadham, very nice and lovely post sir. Thank you very much for sharing....

  ReplyDelete
 54. சந்திப்பு குட்டியூண்டு என்றாலும் மகிழ்ச்சிப் பெரியது. நன்றி ஐயா

  ReplyDelete
 55. பெரியவாளின் அமுதத்தில் நனைந்தோம்.

  மகிழ்ச்சியான சந்திப்புகள் தொடரட்டும். சேட்டைக்காரன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 56. பெரியவரின் கருணை மெய்சிலிர்க்கிறது,எல்லோருக்கும் இந்த மகா பாக்கியம் கிடைக்காது..

  ஆஹா மறுபடியும் பதிவர் சந்திப்பா,தொடரட்டும் ஐயா..மிக்க மகிழ்ச்சி!!

  ReplyDelete
 57. அபயம் என்று அடி பணிந்தவரை காப்பாற்றும் சக்தி படைத்தவரே சத்குரு ஆவார். அவருக்கும் இறைவனுக்கும் வேறுபாடு கிடையாது. மற்றவரெல்லாம் ஆசிரியர்களே.

  பெரியவாவின் சரிதம் மனதிற்கு சாந்தியும், வாழ்வில் இன்பமும் ,வளமும் ஒருங்கே அளிக்கும் அமிர்தமாகும்
  பாராட்டுக்கள்

  ReplyDelete
 58. Very happy to read all the posts about Maha Periyavaa.....

  I too had the opportunity of meeting Mr. Settai twice - in Chennai.....

  [Sorry for commenting in English!]

  ReplyDelete
 59. வியப்பூட்டும் நிகழ்வு. பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.

  தங்கள் இல்லத்தில் பதிவர்களின் சந்திப்பு புகைப்படங்களின் வழியேயும் தங்கள் பதிவின் வாயிலாகவும் கண்டுகளித்தேன். அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 60. பெரியவா பற்றிய சம்பவங்கள் மென்மேலும் பிரமிப்பைத் தருகின்றன.
  பதிவர் சந்திப்புகள் அருமை!

  ReplyDelete
 61. கணவன் செய்யும் புண்னியத்தில் நல்ல மனைவிக்கு தானாகவே பாதிபோய்விடும் அதேசமயம் மனைவிசெய்யும் பாபங்களும் கணவனுக்கு முழுவதுமாக கிடைக்கும் என்று தர்மசாஸ்த்திரத்தில் கூறுகிறதாம்
  என்னவோ சற்று பயமாகத்தான் இருக்கு பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 62. பாபங்களை குரு ஏற்றுக்கொள்வார் என்பது எனக்கு ஒரு புதிய செய்தி.

  ReplyDelete
 63. சாதாரண குரு என்றால் ஒருசில சிஷ்யர்கள் இருப்பார்கள். அவர்கள் செய்கிற சிறிதளவு பாபம் குருவிடம் சேரும்.

  ஒருவர் ’ஜகத்குரு’ என்றால் அவரிடம் எத்தனை பாபம் வந்து சேரும்? உலகின் அத்தனை பாபங்களும் வந்து சேரும்.

  பாபம் நீங்க ஒரே வழி பகவத் த்யானம் தான்.

  இதனால் தான் பகவத்பாதாள், “ஜனங்களை த்யானத்தில் ஈடு படுத்துங்கள்; அவர்கள் தியானம் செய்யாவிட்டால், அவர்களுக்காகவும் சேர்த்து நீங்கள் தியானம் பண்ணுங்கள்” என்று ஆக்ஞை செய்திருக்கிறார்.

  ReplyDelete
 64. //மனைவி செய்யும் பாபம் கணவனைச் சேரும்;//

  பொதுவா பெண்கள் ரொம்ப பாபம் செய்ய மாட்டாங்கறதாலதான் இப்படி சொல்லி இருப்பாங்களோ? ஆனா இப்ப காலம் மாறிப் போச்சு. கலி முத்திப் போச்சு.

  மனைவியோ, கணவனோ, மக்களோ பாபம் செய்யாம இருந்தா நன்னா இருக்கும்.

  //இதனால் தான் பகவத்பாதாள், “ஜனங்களை த்யானத்தில் ஈடு படுத்துங்கள்; அவர்கள் தியானம் செய்யாவிட்டால், அவர்களுக்காகவும் சேர்த்து நீங்கள் தியானம் பண்ணுங்கள்” என்று ஆக்ஞை செய்திருக்கிறார். //

  பெரியவா சொன்னா பெருமாளே சொன்ன மாதிரி.

  மகா பெரியவா சொன்னா.....
  நம்ப நன்மைக்காக அவர் நிறைய சொல்லி இருக்கார். அதன்படி நடந்தா நமக்கு நல்லது.

  சுவாமிநாதனின் புற்று நோய் காணாமல் போனதில் என்ன அதிசயம். மகா பெரியவாளின் கடைக்கண் பார்வை பட்டால் எந்த நோயும் பறந்து போகுமே.

  நீங்களே ஒரு சேட்டைக்காரன் (நகைச்சுவையாய் கதைகள் எழுதுவதை சொல்கிறேன்). சேட்டைக்காரனை இன்னொரு சேட்டைக்காரன் சந்தித்தாரா? அமர்க்களம் போங்கள்.


  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜெயா, வணக்கம்.

   //நீங்களே ஒரு சேட்டைக்காரன் (நகைச்சுவையாய் கதைகள் எழுதுவதை சொல்கிறேன்). சேட்டைக்காரனை இன்னொரு சேட்டைக்காரன் சந்தித்தாரா? அமர்க்களம் போங்கள். //

   :))))) சந்தோஷம்.

   Delete
 65. மருக்காவும் பதிவரு சந்திப்பா. நடத்துங்க நடத்துங்க.

  ReplyDelete
 66. திரு சேட்டைக்காரன் சந்திப்பை கலகலப்பாக பகிர்ந்து கொண்டது ஒரே கலகலப்பு மற்றவர்களுக்காக நாமே த்யானம் செய்து விடலாம்தான்.

  ReplyDelete
 67. உன்னதமான படம்!!!! மகானால் மறுபிறவி பெற்றவர்...இன்னும் எத்தனை மனிதர்களோ!!!

  ReplyDelete
 68. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (04.07.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:-

  https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=432759627226737

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete