என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 29 அக்டோபர், 2013

72 ] பளபளக்கும் பட்டுப் புடவை !

2
ஸ்ரீராமஜயம்
இங்கே பட்டைப்பற்றி என் அபிப்ராயத்தைச் சொல்ல வேண்டும்.  அது உங்களுக்கே தெரிந்திருக்கும்.

ஒரு முழுப்பட்டுக்காக நூற்றுக்கணக்கில் பட்டுப்பூச்சிகளைக் கொல்ல வேண்டியிருக்கிறது.

இதனாலே ‘அஹிம்ஸா பரமோதர்ம’ என்கிற பெரிய ஆசாரத்துக்கு பங்கம் வந்து விடுகிறது. 


அதுவும் தவிர, பட்டு வஸ்திரங்கள் விலையும் ரொம்ப ஜாஸ்தியாக இருப்பதால், பட்டுப்புடவை மோஹத்தால் குடும்பப் பொருளாதாரமே சீர்கெடுகிறது.

இதுலே வசதி இருக்கிறவர்களைப்பார்த்து வசதி இல்லாதவர்களும் ‘காப்பி’  பண்ணப்பார்ப்பதால் ரொம்பவும் கஷ்டம்  + கடன் உண்டாகிறது.

இந்தக்காரணங்களை உத்தேசித்துத்தான் பட்டு கூடாது என்றுதான் சொல்லிக்கொண்டு வருகிறேன்.   
 

இலட்சக்கணக்கான பட்டுப்பூச்சிகளைக் கொன்று அதிலிருந்து எடுக்கின்ற பட்டினால் நமக்கு ஓர் அலங்காரமா?

oooooOooooo

அநுபூதி பெற்ற குரு கிடைப்பாரா?


குருவை அநுபவியாகத்தான் சாஸ்திரங்கள் காட்டுகின்றன: ‘ப்ரம்ம நிஷ்டம்’ என்று உபநிஷத்தில்; ‘தத்வ தர்சின:’ என்று கீதையில். அப்படிப்பட்டவர், நிஜமாகவே ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரம் பெற்றவர். 

இந்த நாளில் கிடைப்பாரா என்று யோஜனை பண்ண வேண்டாம். நிஜமான முமுக்ஷுதாவோடு தவியாகத் தவித்தால் ஈச்வரன் நிச்சயம் அப்படி ஒருவரைக் காட்டிக் கொடுக்காமல் விடமாட்டான். 

ஸதாகால ப்ரஹ்ம நிஷ்டரோ இல்லையோ, இருக்கிறதற்குள் ச்ரேஷ்டரான ஒருவரைக் காட்டி அவருக்குள்ளே இவனுக்கு மஹாவாக்யம் தருகிற ஸமயத்தில் ஸாக்ஷாத் அந்த ஈச்வரனே ஆவிர்பாவம் ஆகி உபதேசம் பண்ணிவிடுவான். 

அப்படித்தான், அப்படித்தான்! ; அதிலே ஸந்தேஹமே வேண்டாம். இந்த நாளிலும் அநுபவியான குரு கிடைப்பாரா என்று இவன் ஏங்கிக் கொண்டிருக்கிற மாதிரியே, இந்த நாளிலும் நிஜமான முமுக்ஷு கிடைப்பானா என்று ஸ்வாமியும் ஏங்கிக் கொண்டுதான் இருப்பாராதலால் அப்படிப்பட்டவனை விட்டுவிட மாட்டார். 

வெளியிலே ஸ்தூல ரூபத்திலே ஒரு மநுஷ குருவுக்குள்ளேதான் என்றில்லாமல் இவனுடைய அந்தராத்மாவிலேயே அவர் ஸூக்ஷ்ம குருவாக ஆவிர்பவித்தும் அநுக்ரஹிப்பதுண்டுதான். 

ஆனால் அதை நான் சொல்லப்போனால், இந்த அடங்காப் ….. [சட்டென்று வார்த்தையை மாற்றி] அடக்கம் போதாத ஸ்வதந்திர யுகத்தில், ‘குரு என்றே ஒரு ஆள் வேண்டாம். ஈச்வரன், தானே நேராக அப்படி நமக்குள்ளேயே அநுக்ரஹம் பண்ணி விடுவான். சங்கரசார்யாரே சொல்லிவிட்டார்’ என்று ஆரம்பித்துவிடக்கூடும்! 

வெளி குரு இல்லாமல் உள் குருவாக அவனே வருவதென்பது அபூர்வத்திலும் அபூர்வம். ரொம்பவும் அபூர்வமான உசந்த முமுக்ஷுக்களுக்கே அப்படி வருவது ...... அல்லது ரொம்பவும் அபூர்வமான பூர்வ ஸம்ஸ்காரம் இருக்கிறவனுக்கு அவன் முமுக்ஷுவாக இல்லாமல் ஸாமான்ய நிலையிலிருந்தால்கூட ஈச்வரனே இழுத்துப் பிடித்துத் தடுத்தாட்கொள்வதுமுண்டு. 

அதை ஜெனரல் ரூலாக்குவது அடியோடு பிசகு.

பரம ஸத்தியமான ஒன்றை உள்ளபடி உணர்ந்துரைக்கும் மகிழ்ச்சியுடனும் அழுத்தத்துடனும் பிரமாண மொழியாகக் கூறுகிறார்கள்.

[Thanks to Sage of Kanchi 11.09.2013]

oooooOooooo


‘சாஸ்திரத்தை மீறி விட்டோமோ’  


பெரியவர்கள் உலக மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள். தம்மைஅடக்கிக் கொண்டு, தம்மைச் சுருக்கிக்கொண்டு, தம்மை உருக்கிக் கொண்டு, உலக மக்களின் துயர்களை எல்லாம் அடக்குபவர்கள், துன்பத்தைத் துரத்துபவர்கள்.தர்மசாஸ்திரத்தை வாழ்வின் அடித்தளமாகக் கொண்ட ஆன்றோர்கள், கடல்கடந்து செல்வதை சாஸ்திரம் அனுமதிக்காது என்பார்கள். 


காஞ்சி மஹாபெரியவாளின் பக்தர் ஒருவர், சாஸ்திர நியதிகளை உயிராகப் போற்றிவந்தார். 

இவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. 

குடும்ப நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு, வெளிநாடு செல்லும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். 

அந்த நாட்டின் சூழலும் பணியின் தன்மையும் திருப்தியே என்றாலும், ‘சாஸ்திரத்தை மீறி விட்டோமோ’ என்ற உறுத்தல், பக்தரைவாட்டியது. 

தனது மனக்கலக்கத்துக்கு மருந்தாக… மஹாபெரியவாளைஅனுதினமும் தியானித்து வந்தார்! 

அவருக்கு காஞ்சி மஹான் திருவருள் புரிந்தசம்பவத்தை உள்ளம் உருக விவரித்தார் அகிலா கார்த்திகேயன்… ஒரு விடுமுறையில் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகளை ஆசைஆசையாகச் செய்தார். 

குடும்பத்தாரைப் பார்க்கப் போகிறோம் என்பதைவிட,வெகு நாட்களுக்குப் பிறகு காஞ்சி மஹானைத் தரிசிக்கப் போகிறோம் என்ற குதூகலமே அவருக்கு அதிகம் இருந்தது. 

சென்னை வந்ததும்,விமானநிலையத்தில் இருந்து டாக்ஸி பிடித்து காஞ்சிபுரம் சென்றார்.

காஞ்சிமடத்தில், அன்றைய சமையல் குறித்து சிப்பந்திகளிடம் பேசிக்கொண்டிருந்தார் மஹாபெரியவா. 

தரிசனத்துக்காக வந்திருந்த அடியவர்களுக்கு வியப்பு. 

சமையல் இன்னின்ன மாதிரியெல்லாம் இருக்கவேண்டும் என்பது முதற்கொண்டு பெரியவா சிரத்தை எடுத்துக்கொள்கிறாரே? இதுவரை இப்படியெல்லாம் சொன்னது கிடையாதே’என்ற ஆச்சரியம் அவர்களுக்கு.

இந்த நிலையில்தான் மடத்துக்கு வந்துசேர்ந்தார் பக்தர். 

மஹாபெரியவாளைக் கண்டதும் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கினார். 

அவரை ஆசீர்வதித்த பெரியவா, சிப்பந்திகளை அழைத்து, ”இவருக்கு, உடனே ஆகாரம் பண்ணி வையுங்கோ” என்றார்.

வந்ததும் வராததுமாக அந்தப் பக்தரை சாப்பிட அழைத்துச் செல்லும்படி பெரியவா சொல்வது ஏன் என்று ஊழியர்களுக்குப் புரியவில்லை. 

ஆனால்,கடல் கடந்து தன் பக்தன் வந்திருக்கிறான்; வந்ததும், தன்னைத் தரிஸிக்க ஓடிவந்துவிட்டான் .... எனில், அவனுடைய நிலை என்ன என்பது பெரியவாளுக்குத் தெரியாதா?! 

வயிறாரச் சாப்பிட்டு முடித்த பக்தர், மீண்டும் மஹாபெரியவாளுக்கு எதிரில் வந்து நின்றார். 


அவரை உற்றுப் பார்த்த பெரியவா, ”என்ன… உன் விரதம் பூர்த்தி ஆயிடுத்தா?” என்றார்  கருணையும் கரிசனமும் பொங்க. 


அதைக் கேட்டு வியந்து நின்றார் பக்தர்; அவரிடமிருந்து வார்த்தைகளே வரவில்லை! ‘பெரியவா… பெரியவா…’ என்று திருப்பித்திருப்பிச் சொன்னபடியே இருந்தார்; கண்களில் கரகரவென நீர் வழிந்தது!மெள்ளப் புன்னகைத்த காஞ்சி மஹான், ”நானே சொல்லிடறேன்!” என்றுஆரம்பித்தார்…


”இவர், வெளிநாட்டுலே இருந்து வர்றார். அங்கே புறப்பட்டதுலேருந்து எந்த ஆகாரமும் எடுத்துக்கல. என்னை வந்து பார்க்கறவரைக்கும் ஆகாரம் எடுத்துக்கறதில்லேன்னு ஒரு சங்கல்பத்தோட விரதமாஇருந்து, இங்க வந்து சேர்ந்திருக்கார்…” என்றவர், பக்தரைப் பார்த்து, ”என்னநான் சொல்றது சரியான்னோ?” என்று கனிவுடன் கேட்டார். 

அவ்வளவுதான்…தரிசனத்துக்காக நின்றிருந்த அனைவரும் அசந்து போனார்கள். எனில், அந்தப்பக்தரை கேட்கவும் வேணுமா… நெக்குருகி நின்றார் அவர்! 

இதற்கு நடுவில்இன்னொரு சம்பவமும் நடந்தது. 


அந்த பக்தர் சாப்பிடச் சென்றிருந்தநேரத்தில், தன்னை தரிசிக்க வந்திருந்த மற்ற அன்பர்களிடம்,”வெளிநாட்டுலேருந்து இப்ப இங்கே வந்திருக்காரே…அவர்கிட்டேயிருந்து நான் என்ன கேட்டு வாங்கலாம்னு சொல்லுங்கோ” என்று கேட்டாராம். 


இதுவும் அங்கேயுள்ளவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில், எவரிடமும் ‘இதைக் கொடு, அதைக் கொடு’ என்று எதையும் கேட்டறியாதவர் பெரியவர். 

ஆகவே, பதில் சொல்லத் தெரியாமல்திகைத்துப் போனார்கள் அந்த அன்பர்கள். 

இந்த வேளையில்தான் சாப்பிட்டு முடித்து மீண்டும் பெரியவாளைத் தரிசிக்க வந்தார் அந்த பக்தர்! 


அவரையும்சுற்றியிருந்த மற்ற அடியவர்களையும் மெல்லிய சிரிப்புடன் பார்த்த மஹாபெரியவா, ”இவருகிட்டேயிருந்து என்ன கேட்டு வாங்கலாம்னு யாருமே சொல்லலையே…” என்று கேட்டுவிட்டு, அவரே தொடர்ந்தார்… 


”சரி சரி… இவரை அழைச்சுண்டு போய், எள்ளு புண்ணாக்கையும் தையல் இலையையும் எனக்காக வாங்கித் தரச் சொல்லி, வாங்கிக்கோங்கோ!”என்றார். 

அந்த பக்தர், பரம சந்தோஷத்தில் திளைத்தார். 


தெய்வத்துக்கு நிகரான காஞ்சி மஹான், தன்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டாரே’ என்றுநெகிழ்ந்தார்.. ஆனால், மடத்தில் கைங்கர்யம் செய்பவர்களுக்கு மட்டும் சற்று தவிப்பு; ஆனால் பெரியவாளிடம் நேரே கேட்கவும் தயக்கம்! 

இதையெல்லாம்உணராமல் இருப்பாரா பெரியவா. 


அவர்களைப் பார்த்து புன்னகைத்தவர், 

”இந்த பக்தர், என் மேல ரொம்ப பக்தியா, அபிமானமா இருக்கார். 

எங்கிட்ட இருக்கற பிரியத்துனால எனக்கு எதையாவது சேர்ப்பிக்கணும்னு ரொம்பவும் ஆசைப்படறார். 

ஆனா கடல்கடந்து போனவாகிட்டேருந்து, அப்படி எதையும்வாங்கிண்டுட முடியாதபடி, தர்மம் தடுக்கறது. 

இருந்தாலும் எனக்கு என்னோட பக்தர் முக்கியம் இல்லையா?! 

அவரோட மனசை நோக விட்டுட முடியுமா?” 

என்று கூறிவிட்டு சற்றே நிறுத்தியவர், மீண்டும் தொடர்ந்துபேசினார். 

”இப்போ அவர் வாங்கிண்டு வர எள்ளுப் புண்ணாக்கை, மடத்துல இருக்கிற பசு மாட்டுக்குக் கொடுங்கோ ... 

அந்தப் பசுகிட்டே இருந்து தினமும் கறக்கிற பாலை எனக்குக் கொடுங்கோ. 

நான் சந்தோஷமா ஏத்துக்கறேன். 

ஏன்னா, இப்போ அவர் கொடுத்த புண்ணாக்கைப் பசுமாடு சாப்பிட்டு, அது கொடுக்கறபாலில் அந்த தோஷம் எல்லாம் போயிடறதோன்னோ? 
பசு மாட்டு வழியா வந்தா 

எல்லாவிதமான தோஷமும் நிவர்த்தியாயிடும்.


அதனால அவர் மனசுல நெனச்சபடி, எனக்குக் கொடுத்த மாதிரியும் ஆச்சு. 

அதை நான்ஏத்துண்ட மாதிரியும் ஆச்சு. இல்லையா?” 

என்றார் விளக்கம் சொல்வதுபோல! 


இப்படி, தர்மத்துக்கும் குந்தகம் இல்லாமல், தன் மீது அபிமானமும் பக்தியும் செலுத்தும் பக்தர் மனமும் ஆனந்தப்படும்படி செயல்பட்ட கருணை, மஹாபெரியவாளைத் தவிர வேறு யாருக்கு இருக்கும்

’காலடி’யும் மூன்று எழுத்துகள்தான் ’காஞ்சி’யும் மூன்று எழுத்துக்கள்தான் எனக்கு இரண்டுமே ஒன்றுதான். 

அனைவருக்கும் அந்த மஹானின் கருணையும், காருண்யமும், அருளும், அனுக்கிரஹமும் கிட்டட்டும். 
லோகா சமஸ்தா 

ஸுகினோ பவந்து.
[Thanks to Mr RISHABAN Srinivasan Sir, 

for sharing this on 25.10.2013]

oooooOoooooஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி

நாளை மறுநாள் வெளியாகும்.


என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-


ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம 
oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

கண்ணீர் அஞ்சலி


 

நம் பேரன்புக்குரிய பதிவர் ’ஆச்சி’ 
அவர்களின்  பாசமிகு தந்தை [வயது 59] 
22.10.2013 அதிகாலை இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். 


அவர் பிரிவால் வருந்தி வாடும் 
ஆச்சி அவர்களுக்கும், 
அவர்கள் குடும்பத்தாருக்கும் 
நமது ஆழ்ந்த அனுதாபங்களைத் 
தெரிவித்துக் கொள்வோம்.


oooooooooooooooooooooooooooooooooooooooooooooooo


சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
’ஆச்சி’ அவர்களின் வலைத்தள முகவரி


திருமதி  Balasundaram Sridhar அவர்கள்ஆச்சி ஆச்சி
இரங்கல் தெரிவிக்க நினைப்போர் நேரிடையாக 

ஆச்சியின் மேற்படி வலைத்தளத்திலேயே 

பின்னூட்டமிட வேண்டுகிறேன்

59 கருத்துகள்:

 1. /// பட்டினால் நமக்கு ஓர் அலங்காரமா...? ///

  சிந்திக்க வேண்டிய கேள்வு - பெண்களுக்கு...

  மஹாபெரியவாளைப் போல கருணை அனைவருக்கும் வர வேண்டும்...

  நீங்கள் சொல்வது போல் பின்னூட்டம் இடுகிறேன்...

  பதிலளிநீக்கு

 2. இந்த நாளில் கிடைப்பாரா என்று யோஜனை பண்ண வேண்டாம். நிஜமான முமுக்ஷுதாவோடு தவியாகத் தவித்தால் ஈச்வரன் நிச்சயம் அப்படி ஒருவரைக் காட்டிக் கொடுக்காமல் விடமாட்டான்.


  ஸதாகால ப்ரஹ்ம நிஷ்டரோ இல்லையோ, இருக்கிறதற்குள் ச்ரேஷ்டரான ஒருவரைக் காட்டி அவருக்குள்ளே இவனுக்கு மஹாவாக்யம் தருகிற ஸமயத்தில் ஸாக்ஷாத் அந்த ஈச்வரனே ஆவிர்பாவம் ஆகி உபதேசம் பண்ணிவிடுவான்
  அப்படியா அப்படியா................ஆஹா............
  பட்டு புடவை மோஹம் வேண்டாம்னு தான் இறுக்கு.அனாலும் சமையத்தில்........தவிர்க்க முடியவில்லை

  ஆஹா,
  என்ன தீர்க்கமானதொரு முடிவு பெரியவோளோட...............
  நல்ல பதிவுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 3. //இதுலே வசதி இருக்கிறவர்களைப்பார்த்து வசதி இல்லாதவர்களும் ‘காப்பி’ பண்ணப்பார்ப்பதால் ரொம்பவும் கஷ்டம் + கடன் உண்டாகிறது.///

  இது பலரின் வாழ்வில் நடந்து வரும் உண்மை !

  இது பட்டோடு நிற்கவில்லை, பகட்டு வாழ்க்கை வாழ இன்னும் நிறைய இல்லாதவைகள் தேடி கொண்டே இருக்கிறோம் . பட்டு தான் திருந்தனும்

  பதிலளிநீக்கு
 4. புண்ணாக்கைப் பசுமாடு சாப்பிட்டு, அது கொடுக்கறபாலில் அந்த தோஷம் எல்லாம் போயிடறதோன்னோ?

  பக்தர் மனமும் புண்படாமல் சாஸ்திர பங்கமும் வராமல் பெரியவா அளித்த நடு நிலை தீர்ப்பு மிக அழகு.


  பதிலளிநீக்கு
 5. இலட்சக்கணக்கான பட்டுப்பூச்சிகளைக் கொன்று அதிலிருந்து எடுக்கின்ற பட்டினால் நமக்கு ஓர் அலங்காரமா?

  சுள்ளென்று ஒரு உபதேசம்..

  பதிலளிநீக்கு
 6. பட்டுப்புடவை உடுத்துபவர்கள்
  பணக்காரர்களாய் இருக்கலாம்
  பகட்டாக தோன்றலாம்

  அதை நெய்யும் நெசவாளர்கள்
  ஏழ்மையில்தான் வாழ்கிறார்கள்
  என்பதே உண்மை
  இடைத் தரகர்களும் , வியாபாரிகளும்தான்
  வளமாக வாழ்கிறார்கள் . என்பதை
  இந்த உலகம் புரிந்துகொள்ளவேண்டும் .

  அதைதான் பெரியவா
  குறிப்பால் உணர்த்தினார்.

  பெரியவாவின் வார்த்தையை யார்
  கேட்கிறார்கள் ?
  பட்டும் பகட்டும் இல்லாவிடில்
  பணக்காரர்களை இந்த உலகம்
  மதிக்காது
  ..
  ஏதோ ஒரு சிலர் மனம் திருந்தினால் சரி
  அவ்வளவுதான் .

  பதிலளிநீக்கு

 7. குரு நமக்குள்ளே இருந்தாலும்
  புறத்தே அலையும் நம் மனதிற்கு
  உள்ளே இருக்கும் குருவை உணர்த்த
  புறத்தே குரு தேவைப்படுகிறது.

  புறத்தை மறந்து தனக்குள்ளே
  இறைவனைத் தேடுபவனுக்கு
  அவனே குருவாக இருந்து தன்னை
  காட்டிக் கொடுக்கிறான்.

  அருமையான விளக்கம்
  பெரியவாவின் அமுதமொழிகள் அருமை.

  பாராட்டுக்கள் VGK

  பதிலளிநீக்கு
 8. ஒரு முழுப்பட்டுக்காக நூற்றுக்கணக்கில் பட்டுப்பூச்சிகளைக் கொல்ல வேண்டியிருக்கிறது.//

  குரு சொல்வது போல் எனக்கும் பட்டதால் 28 வருடங்காளாய் பட்டு கெட்டுவது இல்லை.
  இப்போது தான் பட்டு போல் நிறைய சேலைகள் வந்து விட்டது.
  முன்பு கைத்தறி சேலை தான் கட்டுவேன். இப்போது குழந்தைகள், உறவினர்கள் விருப்பத்திற்கு ஏற்ப செயற்கை பட்டு கட்டுகிறேன்.
  அதுவும் அலுத்து வருகிறது மறுபடியும் கைத்தறி சேலைகள் பக்கம் ஆசை வருகிறது.

  //வெளியிலே ஸ்தூல ரூபத்திலே ஒரு மநுஷ குருவுக்குள்ளேதான் என்றில்லாமல் இவனுடைய அந்தராத்மாவிலேயே அவர் ஸூக்ஷ்ம குருவாக ஆவிர்பவித்தும் அநுக்ரஹிப்பதுண்டுதான். //

  அருமையான அமுதமொழி.

  //பசு மாட்டு வழியா வந்தா

  எல்லாவிதமான தோஷமும் நிவர்த்தியாயிடும்.


  அதனால அவர் மனசுல நெனச்சபடி, எனக்குக் கொடுத்த மாதிரியும் ஆச்சு.

  அதை நான்ஏத்துண்ட மாதிரியும் ஆச்சு. இல்லையா?”
  என்றார் விளக்கம் சொல்வதுபோல! //

  விளக்கம் மிக அருமை, தன்னை குருவாக கொண்டவரின் மேல் குருவின் கருணையை காட்டும் நிகழ்ச்சி பகிர்வு அருமை.

  //காலடி’யும் மூன்று எழுத்துகள்தான் ’காஞ்சி’யும் மூன்று எழுத்துக்கள்தான் எனக்கு இரண்டுமே ஒன்றுதான்.

  அனைவருக்கும் அந்த மஹானின் கருணையும், காருண்யமும், அருளும், அனுக்கிரஹமும் கிட்டட்டும். //
  அனைவருக்கும் மஹானின் கருணை, காருண்யம், அருள் அனுக்கிரஹ அமுதம் கிடைக்க செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 9. இப்படி, தர்மத்துக்கும் குந்தகம் இல்லாமல், தன் மீது அபிமானமும் பக்தியும் செலுத்தும் பக்தர் மனமும் ஆனந்தப்படும்படி செயல்பட்ட கருணை, மஹாபெரியவாளைத் தவிர வேறு யாருக்கு இருக்கும்//

  ஏதோ தங்கள் வலைத்தளத்தின் மூலம்
  இதுபோன்ற மகாப்பெரியவாளின்
  இதுவரை நாங்கள் அறியாத பல
  அதி அற்புத லீலைகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
 10. எல்லாம் தெரிந்திருந்தும் நான் உபயோகப்படுத்துவதில்லை யென்று சொல்பவர்களின் நம்பர் குரைவாகத்தானிருக்கும்.
  அம்மாதிரி பட்டு பின்னிப் பிணைந்து கிடப்பது தமிழகத்தில்.
  ஆகாத காரியம் ஒன்றுமில்லை. மன உறுதியுடனிருந்தால் பட்டு கட்டாமல் இருந்து,ஜீவவதையை நம்மளவில் குறைக்கலாம்.
  பசுவின் சேவைமூலம் ஃபாரின் ட்ரிப்புக்கு ஆறுதலளித்துவிட்ட
  மென் வருடலான அன்பு சிலிர்க்க வைக்கிரது..
  அனுக்ரஹ அமுதம் அமிர்தமாக இருக்கிரது. அன்புடன்

  பதிலளிநீக்கு
 11. பட்டை ஏன் பயன்படுத்தவேண்டாமென்று மஹாபெரியவா நமக்கு ஏற்றார் போல் விளக்கமாசொல்லியிருக்கிறார்கள் அதுபோல் வெளிநாடுகளுக்கு சென்றுவருவதையும் மிகவும் அழகாகசொல்லியிருக்கிறர்கள் நல்ல பதிவு நன்றி

  பதிலளிநீக்கு
 12. பட்டே வேண்டாம்னாலும் யாரும் கேட்கிறதில்லை. மோகம் என்னமோ பட்டில் தான். எனக்கு விபரம் தெரிந்து அஹிம்சா பட்டில் பாவாடை கட்டி இருக்கேன். அஹிம்சா பட்டும் விலை ஜாஸ்தி தான்.

  பதிலளிநீக்கு
 13. பட்டை பற்றி சிந்திக்க வேண்டிய பகிர்வு...
  மகா பெரியவரின் கருணை அனைவருக்கும் வரவேண்டும்..

  பதிலளிநீக்கு
 14. பட்டு குறித்த பெரியவாளின் கருத்து ஏற்கக்கூடியது தான்....

  பதிலளிநீக்கு
 15. மஹாப்பெரியவரின் உபதேசப்படி பட்டு கட்டாமல் இருப்பவர்களைத் தேடினால் கிடைப்பார்களா சந்தேகமே. எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் திருமணப் பத்திரிகையில் பெரியவரின் அருளாசியுடன் என்று முழக்கமிட்டு பட்டோடும் பகட்டோடும்தான் திருமணங்கள் நடக்கின்றன.

  பதிலளிநீக்கு
 16. இலட்சக்கணக்கான பட்டுப்பூச்சிகளைக் கொன்று அதிலிருந்து எடுக்கின்ற பட்டினால் நமக்கு ஓர் அலங்காரமா?

  அகங்காரம் வேண்டாம் என்று தான் செயகைப்பட்டுக்கு மாறியாகிவிட்டது..!

  பதிலளிநீக்கு
 17. தர்மத்துக்கும் குந்தகம் இல்லாமல், தன் மீது அபிமானமும் பக்தியும் செலுத்தும் பக்தர் மனமும் ஆனந்தப்படும்படி செயல்பட்ட கருணை, மஹாபெரியவாளைத் தவிர வேறு யாருக்கு இருக்கும்

  ’காலடி’யும் மூன்று எழுத்துகள்தான் ’காஞ்சி’யும் மூன்று எழுத்துக்கள்தான் எனக்கு இரண்டுமே ஒன்றுதான்.

  அருமையான பகிர்வுகள்..!

  பதிலளிநீக்கு
 18. பசு மாட்டு வழியா வந்தா

  எல்லாவிதமான தோஷமும் நிவர்த்தியாயிடும்.


  அதனால அவர் மனசுல நெனச்சபடி, எனக்குக் கொடுத்த மாதிரியும் ஆச்சு.

  அதை நான்ஏத்துண்ட மாதிரியும் ஆச்சு. இல்லையா?”


  ஆத்மார்த்தமான அரிய விளக்கம் ..!

  பதிலளிநீக்கு
 19. பரம ஸத்தியமான ஒன்றை உள்ளபடி உணர்ந்துரைக்கும் மகிழ்ச்சியுடனும் அழுத்தத்துடனும் பிரமாண மொழியாகக் கூறுகிறார்கள்.

  அனுபவ சாத்தியமான அமுதமொழிகள்..!

  பதிலளிநீக்கு
 20. அன்பின் வை.கோ

  திருமதி B.S.ஸ்ரீதர் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் அன்னாருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அனுதாபங்களையும் மின்னஞ்சலில் ஆச்சிக்கு அனுப்பி விட்டேன்.

  இங்கு இப்பதிவினைப் பற்றி - பளபளக்கும் பட்டுப் புடவையைப் பற்றி மறுமொழி இட மனமில்லை.

  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 21. அய்யாவிற்கு வணக்கம். பட்டு குறித்த கருத்தும், அன்பரின் மனம் அறிந்து செயல்பட்ட பெரியவா பெரியவா தான். //பசு மாட்டு வழியா வந்தா
  எல்லாவிதமான தோஷமும் நிவர்த்தியாயிடும்.// அனைவரும் அறிய தந்தமைக்கு நன்றி அய்யா.
  ====================

  பதிலளிநீக்கு
 22. பகட்டுப் பட்டுப் பற்றிய கருத்தும், பக்தருக்குத் திருப்தி தரும் விதமாக மகாபெரியவர் எடுத்துக் கொண்ட முயற்சி கண்ணில் நீர் வரவழைத்தன.
  அருளமுத மழைத் தொடர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 23. மஹாப்பெரியவாளின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை
  படிக்கும்போது அவர் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாய் விளங்குகிறது. சிறந்த செய்திகளைத் தரும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
 24. மஹாப்பெரியவாளின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை
  படிக்கும்போது அவர் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாய் விளங்குகிறது. சிறந்த செய்திகளைத் தரும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
 25. உங்களை வழிமொழிகிறேன் ஐயா..
  சில் உயிர்களை கொன்று
  நமக்கான மகிழ்ச்சி தேவையில்லை...

  மகாபெரியவரின் ஆசிகள் கருணை மழையாக
  நம் மீது பொழியட்டும்...

  பதிலளிநீக்கு
 26. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 27. Message from kovaikkavi 12:11 (49 minutes ago) to me

  kovaikkavi (http://kovaikkavi.wordpress.com/) has left a new comment on your post "72 ] பளபளக்கும் பட்டுப் புடவை !":

  //குரு பற்றிய மொழியமைப்பு விளங்கிடச் சிரமமாக இருந்தது.

  அடுத்த பெரியவர் பதிவு எழுத்து சிறிதாகையால் எனக்கு வாசிக்கச் சிரமமாக இருந்தது.//

  இதுபோன்ற நேரங்களில் தாங்கள் படிக்க வேண்டிய பகுதியில் கிளிக் செய்து விட்டு, Key Board இல் உள்ள Control + Plus ஆகிய இரு பட்டன்களையும் ஒரே நேரத்தில் ஒன்றாக அழுத்தினால் எழுத்துகள் பெரியதாகும். மேலும் ஒருமுறை அது போலச்செய்தால் மேலும் பெரியதாகும். படிக்க தெளிவாக இருக்கும்.

  படித்தபிறகு எப்போதும்போலக்கொண்டுவர Control and Minus பட்டன்களை ஒரே நேரத்தில் அமுக்கினால் போதும்.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 28. Message from கீத மஞ்சரி 12:36 (41 minutes ago) to me

  கீத மஞ்சரி has left a new comment on your post "72 ] பளபளக்கும் பட்டுப் புடவை !":

  //சாஸ்திரத்தையும் மீறாமல் அதே சமயம் பக்தரின் விருப்பத்தையும் பூர்த்தி செய்த சாமர்த்தியமும் பக்தர் மேல் பெரியவர் வைத்திருக்கும் அபிமானமும் மனம் ஈர்த்தன. பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.//

  மிக்க நன்றி.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 29. உங்களின் இந்த பதிவின் தலைப்புக்கு ஏற்ப, அந்த வயலட் வண்ண பட்டுப் புடவை பளபளப்பாகத்தான் இருக்கிறது. வடிவமும் எளிமை.அதன் பளபளப்பைப் பார்த்து மயங்கியதால்தான் இந்த தலைப்பு வைத்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வழக்கம் போல பதிவின் சாராம்சம் அருமை!

  பதிலளிநீக்கு
 30. பக்தர் மனம் ஆனந்தம்கொள்ளும்படி அருளும் அவரின் செயல் நெகிழவைக்கின்றது.

  பதிலளிநீக்கு
 31. தங்கள் வலைப்பூ ஓர் ஆன்மிக மல்லிகைப்பூ!

  பதிலளிநீக்கு
 32. பட்டுப்பூச்சியின் உயிர்தியாகத்தால் உருவாகும் பட்டை விலக்க வேண்டும் என்ற பெரியவாளின் கருத்து மிகவும் சிறப்பானது. வெளிநாட்டு அன்பரின் ஆசையை பூர்த்தி செய்தமையும் சிறப்பு! அருமையான பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
 33. இப்படி, தர்மத்துக்கும் குந்தகம் இல்லாமல், தன் மீது அபிமானமும் பக்தியும் செலுத்தும் பக்தர் மனமும் ஆனந்தப்படும்படி செயல்பட்ட கருணை, மஹாபெரியவாளைத் தவிர வேறு யாருக்கு இருக்கும்?//
  உண்மை! நெகிழவைத்த பதிவு! பகிர்விற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 34. ’ஆச்சி’ அவர்களுக்காக பலராலும் எழுதப்பட்டிருந்த கருத்துக்களை நான் இங்கு வெளியிடவில்லை.

  அவற்றை நேரிடையாக ’ஆச்சி’ அவர்களுக்கே அனுப்பி வைத்துள்ளேன்.

  இது சம்பந்தப்பட்டவர்களின் தகவலுக்காக மட்டுமே.

  VGK

  பதிலளிநீக்கு
 35. நெகிழவைத்த பதிவு! பகிர்விற்கு நன்றி!

  இதுபோன்ற நேரங்களில் தாங்கள் படிக்க வேண்டிய பகுதியில் கிளிக் செய்து விட்டு, Key Board இல் உள்ள Control + Plus ஆகிய இரு பட்டன்களையும் ஒரே நேரத்தில் ஒன்றாக அழுத்தினால் எழுத்துகள் பெரியதாகும். மேலும் ஒருமுறை அது போலச்செய்தால் மேலும் பெரியதாகும். படிக்க தெளிவாக இருக்கும்.

  படித்தபிறகு எப்போதும்போலக்கொண்டுவர Control and Minus பட்டன்களை ஒரே நேரத்தில் அமுக்கினால் போதும். //

  நன்றி

  பதிலளிநீக்கு
 36. ஆனந்தத்தில் கண்கள் குளமாகின்றன ..

  பதிலளிநீக்கு
 37. Message from Mrs. Ranjani Narayanan :

  Ranjani Narayanan has left a new comment on the post "72 ] பளபளக்கும் பட்டுப் புடவை !":

  பெரியவாளை தரிசனம் செய்யப் போறேன் என்ற சொல்லி பட்டுப்புடவை உடுத்திக் கொண்டு போகிறார்கள்!

  பதிலளிநீக்கு
 38. Message from ATHIRA :

  athira has left a new comment on the post "72 ] பளபளக்கும் பட்டுப் புடவை !":

  ஆண்டவனுக்கே பட்டைத்தானே சாத்துகிறார்கள்..

  பதிலளிநீக்கு


 39. Ambal adiyal October 29, 2013 at 11:33 PM

  பக்தர்களின் மனத்தை மிக அழகாக அறிந்து கொள்ளக் கூடிய
  பக்குவம் இவர்கள் போன்ற ஞானிகளுக்குத்தானே இருக்க முடியும் !!

  இன்றைய எழுத்திலும் ஒரு நேரடி அறிமுகத்தை உணர முடிந்தது ஐயா. சிறப்பான தகவலுடன் ..... மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 40. ஒரு பட்டுப் புடவைக்காக இத்தனைப் பூச்சிகள் கொல்லப்படுவதில் எனக்கும் உடன்பாடில்லை......

  பதிலளிநீக்கு
 41. //வசதி இருக்கிறவர்களைப்பார்த்து வசதி இல்லாதவர்களும் ‘காப்பி’ பண்ணப்பார்ப்பதால் ரொம்பவும் கஷ்டம் + கடன் உண்டாகிறது.//

  சத்தியமான உண்மை.

  பதிலளிநீக்கு
 42. ஐயா தங்களின் இந்தப் பதிவு என் மனம் கவர்ந்த பதிவு என்று சொல்லலாம்.
  கடல் கடந்த சென்ற பக்தரின் நிலை அறிந்து மகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு
 43. மகத்துவங்கள் மிகுந்த தங்கள் தளத்தில் என் தந்தைக்கான கண்ணீர் அஞ்சலி என்னை நெகிழ வைக்கின்றது.இதற்கு என்ன கைமாறு என்னால் செய்ய முடியும்னு தெரியவில்லை.

  அனுதாபங்களும் இரங்கல்களும் தெரிவித்த பதிவர்களின் பின்னூட்டங்கள் ஆறுதல் தந்தது .நன்றி தெரிவிப்பது சரியெனில் தங்களுக்கும் இரங்கல் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 44. thirumathi bs sridhar November 29, 2013 at 4:25 PM

  வாங்கோ ஆச்சி. மிகவும் வருத்தமான விஷயம் தான். தங்கள் மனது சமாதானம் அடைய நீண்ட நாட்கள் ஆகும் தான்.

  கேள்விப்பட்டதும் எனக்கே மிகவும் வருத்தமாகவும் சங்கடமாகவும் தான் இருந்தது. ஒருசிலரிடம் தொலைபேசி மூலமும் மெயில் மூலமும் தெரிவித்தேன்.

  தெரியாத மற்றவர்களுக்கும் தெரியட்டுமே என இந்தப்பதிவினில் சேர்த்து விட்டேன்.

  தாய் தந்தையரின் பிரிவு என்பது தாங்கிக்கொள்வது கொஞ்சம் கஷ்டம் தான். இருப்பினும் மனதை தைர்யமாக வைத்துக்கொள்ளுங்கோ. நாளடைவில் தான் துக்கங்கள் குறையும்.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 45. பளபளக்கும் பட்டை பற்றி பெரியவா எத்தனை சொன்னாலும் வாங்குவதை யாரும் நிறுத்த மாட்டார்கள். ஆச்சியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. கடவுள் அவருக்கு ஆறுதலைக் கொடுக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 46. தோஷமும் பரிகாரமும் மெய் சிலிர்க்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 47. /இதுலே வசதி இருக்கிறவர்களைப்பார்த்து வசதி இல்லாதவர்களும் ‘காப்பி’ பண்ணப்பார்ப்பதால் ரொம்பவும் கஷ்டம் + கடன் உண்டாகிறது.///

  இது பலரின் வாழ்வில் நடந்து வரும் உண்மை !

  இது பட்டோடு நிற்கவில்லை, பகட்டு வாழ்க்கை வாழ இன்னும் நிறைய இல்லாதவைகள் தேடி கொண்டே இருக்கிறோம் . பட்டு தான் திருந்தனும்

  பதிலளிநீக்கு
 48. திருமணத்திற்குப் பட்டுப்புடவைகள் வாங்க காஞ்சிபுரத்துக்குப் போய்விட்டு அப்படியே மடத்துக்குச் செல்பவர்களும் உண்டு.

  // ஏன்னா, இப்போ அவர் கொடுத்த புண்ணாக்கைப் பசுமாடு சாப்பிட்டு, அது கொடுக்கறபாலில் அந்த தோஷம் எல்லாம் போயிடறதோன்னோ? //

  அப்பப்பா! மெய் சிலிர்க்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya September 15, 2015 at 9:26 AM

   வாங்கோ, ஜெயா, வணக்கம்மா.

   //திருமணத்திற்குப் பட்டுப்புடவைகள் வாங்க காஞ்சிபுரத்துக்குப் போய்விட்டு அப்படியே மடத்துக்குச் செல்பவர்களும் உண்டு. //

   ஆமாம் ..... ஆமாம் ..... முன்பெல்லாம் இதுபோலவே தான் நாம் அனைவருமே செய்திருப்போம்.

   **ஏன்னா, இப்போ அவர் கொடுத்த புண்ணாக்கைப் பசுமாடு சாப்பிட்டு, அது கொடுக்கறபாலில் அந்த தோஷம் எல்லாம் போயிடறதோன்னோ?**

   //அப்பப்பா! மெய் சிலிர்க்கிறது.//

   :))))) மிக்க மகிழ்ச்சி ஜெயா. மிக்க நன்றி :)))))

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 49. பட்டு துணில இம்பூட்டு வெசயமிருக்குதா. நாங்கலா பட்டுதுணி போடறதில்ல

  பதிலளிநீக்கு
 50. இந்தப் பதிவு படிக்கும் சிலராவது பட்டு துணிமீது இருக்கும் மோகத்தை விட்டு விடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது. அப்படி மட்டும் நடந்து விட்டால் அது உங்கள் எழுத்துக்குக்கிடைத்த பெரிய வெற்றிதான்.

  பதிலளிநீக்கு
 51. பட்டுப்புடவை எனக்கும் உடன்பாடில்லாத ஒன்றுதான்..விளக்கம்..அமுதம்..!!

  பதிலளிநீக்கு
 52. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (20.07.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:-

  https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=448150715687628

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு