About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, October 7, 2013

61 / 2 / 2 ] மீண்டும் பதிவர் சந்திப்பு - அன்பின் திரு. சீனா ஐயா அவர்களின் திருச்சி விஜயம். .

மகிழ்ச்சிப்பகிர்வு

[ பகுதி 61 / 1 / 2 இன் தொடர்ச்சி ]

மீண்டும் ஓர் 
இனிய பதிவர் சந்திப்பு.

வலைப்பதிவு உலக 
பீஷ்மப் பிதாமகரும்
வலைச்சர நிர்வாகக்குழுத் தலைவருமான

’அன்பின் திரு. சீனா ஐயா ’
என்று அனைவராலும் 
அன்புடன்அழைக்கப்படும்

ஆத்தங்குடி 

திரு. பெ.க.சு.பெ.கரு.கா. சிதம்பரம் செட்டியார் 

அவர்களும்

அவரின் துணைவியார்

திருமதி: *மெய்யம்மை ஆச்சி* அவர்களும்


*அவரும் ஓர் பதிவரே

நேற்று 06.10.2013 ஞாயிறு மாலை
திருச்சிக்கு வருகை தந்து மகிழ்வித்தார்கள்.

  
[அசைபோடுவது]   

[பட்டறிவும் பாடமும் - எண்ணச்சிறகுகள்]

இந்த தம்பதியினரைப்பற்றிய 
மேலும் சில சுவையான 
படங்கள் + தகவல்கள் அறிய

திருச்சி மாநகர பதிவர்கள் சார்பில்
இந்தப் பதிவர் தம்பதியினருக்கு 
TIRUCHI JUNCTION - HOTEL FEMINA வில்
சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


பொன்னாடை போத்தி வரவேற்பு ]


[எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு ....

சிறுகதைத்தொகுப்பு நூல் பரிசளிப்பு]


[திருமதிக்கு தொகுப்பு நூல் + ஸ்வீட்ஸ் அளித்தல்]

-oOo-


இந்த இனிய வரவேற்பு + சந்திப்பு
நிகழ்ச்சியில் என்னுடன் கலந்துகொண்ட
திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு

[http://tthamizhelango.blogspot.com/ 
எனது எண்ணங்கள்]
என் மனமார்ந்த இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.[அன்பின் திரு. சீனா ஐயா அவர்களுக்கு
 திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் 
அளித்த பரிசு நூல்]

-oOo-

அதன் பிறகு அடியேனின் இல்லத்திற்கும் 
அன்புடன் வருகை தந்த பதிவர் தம்பதிகள்பல்வேறு பயணங்களுக்கு இடையேயும்
கருமமே கண்ணாயினாராக, நேற்று ஞாயிறு இரவு
 வலைச்சரத்தின் இந்த வார புதிய ஆசிரியராக


’தென்றல் சசிகலா ’ அவர்களை 
என் இல்லத்து கணனியிலிருந்து நியமிக்கிறார். 

 
என் இல்லத்து அடசல்களுக்கு இடையே
அவசரமாக எடுக்கப்பட்ட புகைப்படம் 

-oOo-

என் இல்லத்திலிருந்து கிளம்பும் முன்பு
என் வீட்டு ஜன்னல் கம்பிகள் வழியேமலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை
மின் விளக்கு அலங்காரங்களுடன்
ஜகத்ஜோதியாக தரிஸித்துவிட்டு,
நேராக ஸ்ரீரங்கம் சென்று, அங்கு ஓங்கி உயர்ந்து ஒய்யாரமாக நிற்கும் 
அரங்கனின் இராஜகோபுரத்தையும் 
மின்விளக்குகளுடன் தரிஸித்துவிட்டு 


திருமதி கீதா சாம்பசிவம்
திருமதி கோவை2தில்லி
திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன்

ஆகிய மூவரையும் 
அவரவர்கள் இல்லத்திற்கே 
சென்று பார்த்து விட்டு,

திருச்சி மாவட்ட பத்திரிகை எழுத்தாளர்
திரு. கிரிஜா மணாளனுடனும்
கைபேசியில் உரையாடிவிட்டுஇதோ இந்தக்காரில் ஏறி என்னிடமிருந்து
பிரியாவிடை பெற்றுச்சென்றனர்.

-oOo-

அழகாக முன்னறிவிப்புகள் கொடுத்துவிட்டு
சொன்ன நேரத்தில் மிகச்சரியாக 
திருச்சிக்கு அன்புடன் விஜயம் செய்து 
பெரும்பாலான பதிவர்களை சந்தித்து மகிழ்வித்த 
அன்பின் திரு சீனா ஐயா + அவரின் துணைவியார் 
ஆகிய இருவருக்கும், 
திருச்சி மாவட்ட பதிவர்கள் சார்பிலும்
தனிப்பட்ட முறையிலும் என் மனமார்ந்த 
இனிய அன்பு நன்றிகளைத் 
தெரிவித்துக்கொள்கிறேன்.ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியாகும்.

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

78 comments:

 1. வரவேற்பும், இனிய சந்திப்பும், படங்களும் சிறப்பு ஐயா... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. சீனா ஐயா அவர்களின் திருச்சி பயணம் பதிவர்களை சந்தித்து விட்டு பகவானையும் தரிஸித்துவிட்டு தங்களுக்கு ஒரு பதிவையும் பதித்துவிட்டு சிறப்பாக அமைத்து விட்டார்.

  வலைப்பதிவு உலக பீஷ்மப் பிதாமகருக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுகள். நன்றி ஐயா.

  ReplyDelete
 3. Aha neeithale innikkum santhippu?
  viji

  ReplyDelete
 4. அழகான படங்களுடன் அருமையாக பகிர்ந்து விட்டீர்கள். சந்திப்பின் மகிழ்ச்சி எங்களையும் பற்றிக்கொண்டது.

  ReplyDelete
 5. எதிர்பாரா இனிய சந்திப்பு நேற்று. அழைத்து வந்த உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. உடல் அசதியையும் பொருட்படுத்தாமல் வந்து சிறப்பித்த சீனா தம்பதியினருக்கும் நன்றி. சரியானபடி உபசரிக்கத் தான் இயலவில்லை. :(

  ReplyDelete
 6. தங்கள் உடன் இருந்த நண்பர் தமிழ் இளங்கோ வலைச்சரத்தில் பின்னூட்டத்தில் தெரிவித்தது பார்த்து மகிழ்ந்தேன். தாங்களும் பகிர்ந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. நன்றிங்க.

  ReplyDelete
 7. அடுத்தடுத்து மினி பதிவர் மீட்! சந்தோஷ தருணங்கள்.

  ReplyDelete
 8. அழகாக முன்னறிவிப்புகள் கொடுத்துவிட்டு
  சொன்ன நேரத்தில் மிகச்சரியாக
  திருச்சிக்கு அன்புடன் விஜயம் செய்து
  பெரும்பாலான பதிவர்களை சந்தித்து மகிழ்வித்த
  அன்பின் திரு சீனா ஐயா + அவரின் துணைவியார்
  இருவருக்கும், இனிய பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

  ReplyDelete
 9. பல்வேறு பயணங்களுக்கு இடையேயும்
  கருமமே கண்ணாயினாராக, நேற்று ஞாயிறு இரவு
  வலைச்சரத்தின் இந்த வார புதிய ஆசிரியராக
  ’தென்றல் சசிகலா ’ அவர்களை
  என் இல்லத்து கணனியிலிருந்து நியமிக்கிறார்.

  தென்றலான இனிய அறிமுகம்..!

  ReplyDelete
 10. சீனா ஐயா அவர்களுக்கு வணக்கம்! சந்திப்பு இனிமை!

  ReplyDelete
 11. மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை
  மின் விளக்கு அலங்காரங்களுடன்
  ஜகத்ஜோதியாக தரிஸித்துவிட்டு

  ஓங்கி உயர்ந்து ஒய்யாரமாக நிற்கும்
  அரங்கனின் இராஜகோபுரத்தையும்
  மின்விளக்குகளுடன் எங்களுக்கும் தரிசனம் செய்வித்தமைக்கு இனிய நன்றிகள்..!

  ReplyDelete
 12. நல்ல உள்ளம் வாழ்க!

  ReplyDelete
 13. அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! அன்பின் சீனா தம்பதியினர் வரும் தகவலை முன்னதாகவே எனக்கு தந்து என்னையும் ஹோட்டல் பெமினாவிற்கு வரச் சொல்லி அன்பை பொழிந்தமைக்கு நன்றி! மேலும் பல்வேறு பணிகளுக்கும் இடையில் அன்பின் சீனா தம்பதியினரை வரவேற்றதோடு மட்டுமல்லாது, வர இயலாத மற்ற திருச்சி வலைப்பதிவர்கள இல்லத்திற்கும் அழைத்துச் சென்று சிறப்பித்து விட்டீர்கள். நீங்கள் ஒரு நல்ல நிர்வாகி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ( A GOOD ORGANIZER AND CO - ORDINATOR)


  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோOctober 7, 2013 at 2:47 AM

   //அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!//

   வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

   //அன்பின் சீனா தம்பதியினர் வரும் தகவலை முன்னதாகவே எனக்கு தந்து என்னையும் ஹோட்டல் பெமினாவிற்கு வரச் சொல்லி அன்பை பொழிந்தமைக்கு நன்றி!//

   அடடா, நான் அன்பைப்பொழிந்தது ஒருபுறம் இருக்கட்டும்.

   தாங்கள் என் அன்புக்குக் கட்டுப்பட்டு, மிகுந்த ஆர்வத்துடன், ஐந்து மணிக்கு வாருங்கள் ஐயா போதும் என்று நான் சொல்லியும், 4.15 க்கே ஹோட்டல் ஃபெமினா வாசலுக்கு வந்து விட்டீர்களே!

   என் அன்புப்பேரன் ’அநிருத்’தின் திடீர் வருகையால் நான் தான் அங்கு வந்துசேர 5.15 ஆகிவிட்டது. 15 நிமிடங்கள் நான் தான் தாமதமாக வந்துள்ளேன்.

   எனக்கு முன்னதாக அவ்விடம் முதல் ஆளாக வருகை தந்த தங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.

   // மேலும் பல்வேறு பணிகளுக்கும் இடையில் அன்பின் சீனா தம்பதியினரை வரவேற்றதோடு மட்டுமல்லாது, வர இயலாத மற்ற திருச்சி வலைப்பதிவர்கள் இல்லத்திற்கும் அழைத்துச் சென்று சிறப்பித்து விட்டீர்கள்.//

   எனக்கு இதுவரை ஓரளவு பழக்கம் ஆகியுள்ள திருச்சி பதிவர்கள் மொத்தமே ஆறு பேர்கள் மட்டுமே. அதாவது என்னைத்தவிர ஐந்து பேர்கள் மட்டுமே.

   அதிலும் திருமதி கீதா சாம்பசிவம் அவர்களை நான் இதுவரை நேரில் சந்தித்ததும் இல்லை.

   அவர்கள் இதுவரை ஆயிரக்கணக்கான பதிவுகள் வெளியிட்டு மூத்த பதிவராக இருப்பதாலும், திரு. சீனா ஐயா அவர்களுக்கு நிச்சயமாக பரிச்சயம் உள்ளவர்களாக இருக்கக்கூடும் என்பதாலும். தான் கட்டாயமாகக் கலந்து கொள்வேன் என என்னிடம் தொலைபேசியில் தகவல் சொல்லியிருந்ததாலும், அவர்கள் நிச்சயம் வருவார்கள் என நான் எதிர்பார்த்தேன்.

   ஆனால் நவராத்திரி நேரமானதால் அவர்கள் வேறு ஒரு உறவினரின் அழைப்பினை ஏற்று அங்கு செல்லுமாறு நேர்ந்து விட்டது.

   தன்னால் வர இயலாமல் உள்ளதாக நேற்று மதியம் 12.45க்கு எனக்கு ஃபோன் மூலம் தெரிவித்து விட்டார்கள்.

   அதுபோலவே கோவை2தில்லி அவர்களின் குழந்தை ரோஷ்ணியை முதன்முதலாக பாட்டு க்ளாஸுக்கு அனுப்ப வேண்டியதோர் சூழ்நிலை.

   ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி நேற்று சென்னை செல்ல வேண்டியதோர் அவசிய அவசர வேலை.

   திரு ரிஷபன் சாருக்கு ஆபீஸில் அரையாண்டுக் கணக்கு முடிப்பு + ஆடிட்டிங் என பல்வேறு நிர்பந்தங்கள், ஞாயிற்றுக்கிழமையும் ஆபீஸ் செல்ல வேண்டிய பொறுப்புள்ள மேலாளர் பதவி வகிப்பவர்.

   // நீங்கள் ஒரு நல்ல நிர்வாகி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ( A GOOD ORGANIZER AND CO - ORDINATOR)//

   அடடா, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை ... ஐயா.

   ஒருகாலத்தில் தாங்கள் சொல்வதுபோல, நானும் பேரெழுச்சியுடன் செயல்பட்டவன் தான்.

   இப்போதெல்ல்லாம் எதற்குமே அலட்டிக்கொள்ளாத சுத்த வழுவட்டையாகிவிட்டேன். சுகவாசியாகவும் முழுச்சோம்பேறியாகவும் ஆகிவிட்டேன்.

   நான் உண்டு, என் ஏ.ஸி. ரூம் உண்டு, என் கணினி உண்டு என்றாகிப்போய் விட்டேன்.

   எதற்காகவும் யாருக்காகவும் எங்கும் போய் அலைவதோ திரிவதோ வெயிலில் உடம்பை நோக அடித்துக் கொள்வதோ சுத்தமாகக் கிடையாது.

   அன்பின் திரு. சீனா ஐயா அவர்களைப்பார்க்க நான் துள்ளி எழுந்து சுறுசுறுப்பாகப் புறப்பட்டதைப்பார்த்த என் மனைவிக்கே மிகுந்த ஆச்சர்யம்.

   அதுவும் அவரை அழைத்துக்கொண்டு, ஸ்ரீரங்கம் வரை வீடுவீடாகச்சென்றதைக்கேட்க அதைவிட ஆச்சர்யம்.

   நம்மாளா! .... இப்படியா! .... என கேள்விப்பட்டதும் முதலில் நம்பவே மறுத்து விட்டாள். ;)))))

   ஏதோ நமக்கு மனதுக்குப்பிடித்தமான அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள் நம்ம ஊருக்கு வருவதாகச் சொல்லிவிட்டார்கள். நாம் ஒரு ஆறு பேர்களாக அவரைப் போய் சந்தித்துப்பேசி மகிழ வேண்டும் என எண்ணினேன். கடைசியில் ஆறுக்கு நாம் இருவர் மட்டுமே தேறினோம்.

   ஆறுக்கு ஆறு இல்லாவிட்டாலும் ஆறுக்கு அஞ்சு [ஆரஞ்சு] பார்த்ததில் அவருக்கும் மகிழ்ச்சி. எனக்கும் மகிழ்ச்சி.

   ஏதோ ஒரு திடீர் யோசனைதான். கடைசிநேரத்தில் எடுத்த முடிவு. முயற்சித்தேன். வெற்றிகரமாகவே முடிந்தது. இந்த என் ஏற்பாட்டில் எல்லோருக்குமே மனதுக்குத் திருப்தியாகிப்போனது. எல்லாமே கடவுள் செயல்.

   அந்த விட்டுப்போன ஆறாவது பதிவருக்கு பதில் என் பேரன் அநிருத்தைப் பார்க்க முடிந்தது, அன்பின் திரு சீனா ஐயா தம்பதியினரால்.

   அவர்கள் என் இல்லத்தில் நுழையும் சமயம், பேரன் ஊருக்குக் கிளம்பிக்கொண்டிருக்க, ஒருவரையொருவர் சந்திக்க நேர்ந்தது.

   ”அநிருத்” என்று பெயர்சொல்லி அன்பின் திரு. சீனா ஐயா அழைக்க, என் பேரன் உள்பட வீட்டில் உள்ள எல்லோருக்குமே ஆச்சர்யமாக இருந்தது. எவ்வளவு ஒரு ஞாபகசக்தியுடன் பேரன் பெயரைச்சொல்லி அழைக்கிறார் என நானும் ஆச்சர்யப்பட்டேன்.

   என் பதிவினில் எப்போதோ நான் எழுதியிருந்தது அவரின் மனதினில் அப்படியே பதிந்துபோய் உள்ளது. ;)

   தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், ஐயா.   .

   Delete
 14. எங்களால் பதிவர் சந்திப்பில் பங்கெடுக்க முடியாமல் போனாலும் , எங்கள் சார்பில் வருகை தந்த பதிவர் சீனு அய்யா மற்றும் குடும்பத்தார்க்கு தாங்களும் இளங்கோ ஐயாவும் தந்த வரவேற்பை படித்து மிக்க சந்தோசம் .
  எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 15. பதிவர் சந்திப்பு மிக அருமை.
  திருச்சி என்றால் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுடன் சந்திப்பு. அன்பாய் பண்பாய் பதிவர்கள் மகிழும் அன்பு இல்லமாய்
  இருப்பது மகிழ்ச்சி.

  ReplyDelete
 16. இனிய சந்திப்பும், படங்களும் சிறப்பு ஐயா... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 17. இனிய சந்திப்பும், படங்களும் சிறப்பு ஐயா... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 18. ஆஹா ! பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி. என்னவொரு சிறப்பான வரவேற்பும் பகிர்வும்.

  ReplyDelete
 19. அன்பின் சீனா மற்றும் அவரது துணைவியார் ஆகியோரது திருச்சி வருகையை அழகிய புகைப்படங்களுடன் பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 20. திரு.சீனா அவர்களை மதுரையில் சந்திக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது.பேசவும் பழகவும் இனிமையான மனிதர்.பதிவர் சந்திப்பு பதிவு அருமை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 21. iniya sawthippai azakaaka pakirwthu pataththutan asaththi vittiirkaL.vaazththukkaL.

  ReplyDelete
 22. எதுவும் விடுபட்டு விடக்கூடாது
  சுவாரஸ்யம் குறைந்துவிடவும் கூடாது என
  படங்களுடன் சுருக்கமாகவும் வெகு சிறப்பாகவும்
  பதிவிடப்பட்ட பதிவர் சந்திப்புப் பதிவு
  வெகு வெகு அருமை
  பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. பதிவர் ஸந்திப்புகள் படிக்க எனக்கு விருப்பமிகம். எவ்வளவு பேர்களை நன்றாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் வரவேற்பும், உபசரிப்பும், விஜயம் செய்பவர்களின் மகத்துவமும்.
  நாமும் அவரகளை நேரில் பார்த்தமாதிரி உணர்ச்சிகளும், எவ்வளவு அழகாக இருக்கிரது மனதிற்கு.
  இன்னும் நிறைய பதிவாளர்களின் வருகைகளை கண்டு களிக்கக்
  காத்திருக்கிறேன். படங்களெல்லாம் அழகு. அன்புடன்

  ReplyDelete
 24. அன்பின் சீனா ஐயாவை தம்பதிகளாகப் பார்க்க ஆனந்தமாக இருக்கிறது. உண்மையிலேயே மினி பதிவர் மாநாடு மிக அருமையாக ஏற்பாடு செய்துவிட்டீர்கள் போலிருக்கிறதே!
  பாராட்டுக்கள்!
  மற்ற பதிவர்கள் எடுத்த படங்கள் எல்லாம் அவரவர்கள் வலைத்தளத்தில் வருமா?

  ReplyDelete
 25. படங்களுடன் பதிவர் சந்திப்பு விளக்கம் சிறப்பு! சீரிய முறையில் வரவேற்று உபசரித்து அதை பதிவாக்கி சிறப்பாக தந்தமைக்கும் நன்றி!

  ReplyDelete
 26. மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 27. பதிவர் சந்திப்பின் பதிவு சிறப்பாக உள்ளது. தாங்கள் சந்தித்ததுடன் நாங்களும் சந்தித்த மாதிரியான அனுபவம் கிடைத்தது. நன்றி.

  ReplyDelete
 28. உங்கள் புண்ணியத்தில் திருமிகு சீனா ஐயா தம்பதியை சந்திக்கும் நல்வாய்ப்பு கிட்டியது. நன்றி வைகோ ஸார்.

  ReplyDelete
 29. இதுபோன்ற பதிவர் சந்திப்பில் நானும் எப்போது இணைவேன் என்று காத்திருக்கிறேன். மிகவும் சுவாரசியமாக இருந்தது. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ, நமஸ்காரம். வணக்கம்.

   தாங்கள் தற்சமயம் ஒருமாதமாக ஸ்ரீரங்கத்தில் தான் இருப்பதான தகவலும், தங்கள் விலாசம், கைபேசி எண் முதலியனவும் இன்று இப்போதுதான் கிடைக்கபெற்றேன்.

   நேற்றே இவைகள் எனக்குத் தெரிந்திருந்தால், நிச்சயமாக அன்பின் திரு சீனா ஐயா தம்பதியருடன் தங்கள் இல்லத்திற்கும் வருகை தந்து தங்களையும் நான் சந்தித்திருப்பேன்.

   ஆனால் தங்களை நான் சென்னையில் ஓர் நிகழ்ச்சியில் ஏற்கனவே சந்தித்துள்ளேன். அப்போது எனக்கு தங்களுடன் அதிகமாக தொடர்போ/பழக்கமோ எல்லாததால் என்னை நான் அறிமுகம் செய்து கொள்ள முடியாமல் போய்விட்டது.

   அந்த நிகழ்ச்சி சம்பந்தமான படம் இந்த இணைப்பினில் உள்ளது. டெல்லி கணேஷ், இல.கணேசன், உதயம் ராம் ஆகியோர் கலந்துகொண்ட பரிசளிப்பு விழா நிகழ்ச்சி, அது.

   http://gopu1949.blogspot.in/2011/07/4.html

   அந்த நிகழ்ச்சிக்கு வருகை தருவதாக இருந்த திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களும் கடைசி நிமிடத்தில் வரமுடியாமல் போய்விட்டது. அவர்கள் அன்று அந்த விழாவுக்கு வந்திருந்தால் என்னை உங்களுக்கு நிச்சயமாக அறிமுகம் செய்து வைத்திருந்திருப்பார்கள்.

   தங்களின் அன்பான வருகைக்கும், சுவாரஸ்யமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   விரைவில் சந்திப்போம்.

   Delete
 30. நீங்கள் எழுதும் பதிவுகளில் அன்பின் சீனா வந்து அதிக பின்னூட்டங்கள் தருவது, உங்கள் பதிவுகளில் திருமணநாள் வாழ்த்து போன்ற அவரைப் பற்றிய நெருக்கம், உங்கள் மூலம் வலைச்சர ஆசிரியர்கள் நியமனம் -இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது உங்கள் இருவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்கனவே ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன் நேற்றுதான் இருவருமே ஒருவரையொருவர் முதன்முதலாகப் பார்க்கிறீர்கள் என்றவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி என்று (அதாவது அவருக்கும் உங்களுக்கும் எப்படி நட்பு தொடங்கியது என்பதனை) சொல்லவும்.


  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ October 7, 2013 at 10:21 AM

   அன்புள்ள ஐயா, வாங்கோ, வணக்கம்.

   தங்களின் மீண்டும் வருகை எனக்கு மகிழ்வளிக்கிறது.

   //நீங்கள் எழுதும் பதிவுகளில் அன்பின் சீனா வந்து அதிக பின்னூட்டங்கள் தருவது, உங்கள் பதிவுகளில் திருமணநாள் வாழ்த்து போன்ற அவரைப் பற்றிய நெருக்கம், உங்கள் மூலம் வலைச்சர ஆசிரியர்கள் நியமனம் -இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது உங்கள் இருவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்கனவே ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்//

   தாங்கள் நினைத்ததில் வியப்பேதும் இல்லை ஐயா

   நேரில் இதுவரை சந்திக்காவிட்டாலும், சிலருடன் சிலருக்கு ஒருவித ஸ்பெஷல் ATTACHMENTS ஏற்படத்தான் செய்கிறது. அது ஏதோ ஜன்மஜன்மமாக தொடரும் ஒருவித உறவாகத்தான் இருக்கும்போலத் தெரிகிறது.

   ஒருவரின் பெயரிலோ, அணுகுமுறையிலோ, ஆத்மார்த்தமான பின்னூட்ட வரிகளிலோ, பாராட்டுக்களிலோ, வாசிப்பு அனுபவத்திலோ, மிகச்சிறந்த படைப்புக்களிலோ ஒருவித தனி பிரியமும் பாசமும் நம்மையும் அறியாமல் தொற்றிக்கொண்டு விடுகிறது. பசைபோல இருவர் உள்ளமும் ஒட்டிக்கொண்டு விடுகிறது.

   இதில் ஒருவரையொருவர் நேரில் சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்ற எந்தவொரு கட்டாயமும் இல்லை.

   IN FACT ஒருவர் மீது ஒருவருக்கு நேரில் சந்திக்காமலேயே ஏற்பட்டுள்ள GOOD IMAGE ஐ, நேரில் சந்தித்து SPOIL செய்துகொள்ளாமல் இருப்பதே நல்லது என்பேன், நான்.

   ஓரளவு சமவயது அல்லது 5-10 வருட வித்யாசங்கள், ஒரே மாதிரியான அனுபவங்கள், ஒரே மாதிரியான ரசனைகள் உள்ளவர்களுக்கு, இதுபோன்ற நட்புகள் மிகவும் சுலபமாக ஏற்பட்டு, ஈர்க்கப்பட்டு விடுகின்றன.

   என் பதிவுகளை வாசித்துப் பின்னூட்டம் இடுபவர்களைத் தவிர என்னிடம் மிகவும் நெருக்கமாக, பாசமாக, ஆத்மார்த்த அன்பு செலுத்தி பழகிவருபவர்கள் இப்போதெல்லாம் மிகவும் அதிகமாக ஆகிவிட்டனர்.

   அவர்களில் சிலர் என் பதிவுகள் பக்கம் வருகை தந்து கருத்தேதும் கூட சொல்ல மாட்டார்கள்.

   தனிப்பட்ட முறையில் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். பலவித சந்தேகங்கள் கேட்பார்கள். அவர்களுக்குள்ள பல பிரச்சனைகளைப்பற்றி என்னுடன் மனம் விட்டு விவாதிப்பார்கள்.

   என்னுடன் பேசி, என்னிடமிருந்து ஒரு ஆறுதலான பதில் கிடைப்பதில் மகிழ்பவர்கள் ஏராளம்.

   என் எழுத்துக்களால் அவர்களுக்கு நான் ஆறுதலாக இருப்பதனால் அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

   அவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை நான் வேறு யாருக்கும் தெரிவிக்க மாட்டேன் என்பதில் அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையும் உள்ளது.

   அதுபோல என்னுடைய ஒருசில பிரத்யேகப் பிரச்சனைகளையும் நான் அவர்களிடம் தெரிவிப்பதே இல்லை.

   என்னிடம் பேசினாலே ... என்னிடமிருந்து ஒரு பதில் வந்தாலே ... மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக மனக்கவலைகள் எல்லாம் நீக்கியது போல உணர்வதாக பலரும் இதுவரை சொல்லியிருக்கிறார்கள் + எழுதியும் இருக்கிறார்கள்.

   உலகின் பல பகுதிகளில் உள்ளவர்களுக்கு, ஏதோ நம் எழுத்துக்களால் மனச்சாந்தி அளிக்க முடியுமாறு கடவுள் நம்மை இன்றளவு வைத்திருப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே.

   >>>>>

   Delete
  2. VGK To திரு. தமிழ் இளங்கோ [2]

   //நேற்றுதான் இருவருமே ஒருவரையொருவர் முதன்முதலாகப் பார்க்கிறீர்கள் என்றவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.//

   ஆம் ஐயா. எனக்கும் ஆச்சர்யம் தான். நானும் அவரும் தொலைபேசியிலும், மெயில் மூலமும் பலமணி நேரம் பக்கம் பக்கமாகப் பேசி மகிழ்ந்துள்ளோம்.

   இருப்பினும் உங்கள் எதிரிலும், அவர் மனைவி எதிரிலும், நேரில் முதன்முதலாக சந்தித்தபோது எனக்கும் அவருக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

   உண்மையைச்சொல்ல வேண்டுமானால் நேற்று நாங்கள் எதுவுமே பேசவே இல்லை.

   “பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ” என்பார்களே. அதுபோன்ற நிலையில் தான் நாங்கள் இருவருமே இருந்தோம்.

   >>>>>

   Delete

  3. VGK To திரு. தமிழ் இளங்கோ [3]

   //எப்படி என்று (அதாவது அவருக்கும் உங்களுக்கும் எப்படி நட்பு தொடங்கியது என்பதனை) சொல்லவும்.//

   அதெல்லாம் மிகப்பெரிய கதைகள் ஐயா. ஒரேயடியாக அவற்றை இங்கு ஓபனாக ஒருசில வரிகளில் சொல்லிவிட முடியாது.

   இருப்பினும் கொஞ்சமாகச் சொல்கிறேன், ஐயா.

   நான் பதிவிட ஆரம்பித்தது ஜனவரி 2011. அதே ஆண்டு ஜூன் மாதம் என்னை ஒருவார வலைச்சர ஆசிரியராக பணியாற்றிடுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் ஒருசில காரணங்களால் நான் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதுதான் எங்கள் தொடர்பின் முதல் ஆரம்பம்.

   அதன்பிறகு பலமுறை தொலைபேசியிலும் பேசியுள்ளார். நான் என் நிலைமையை அவருக்கு விளக்கியுள்ளேன்.

   [இன்றுவரை நான் வலைச்சர ஆசிரியர் பணியை ஏற்றுக்கொள்ளவில்லை.

   நேற்று கூட கோவை2தில்லை அவர்களும், திரு. ரிஷபன் அவர்களும் இதை அன்பின் திரு. சீனா ஐயா அவர்களிடம் நினைவூட்டி, என்னை வலைச்சர ஆசிரியராக நியமிக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்து மகிழ்ந்து கொண்டனர்]

   அதன்பிறகு எனக்குத்தெரிந்த யாராவது ஒரு பதிவர் பெயரை வலைச்சர ஆசிரியராக நியமிக்கப் பரிந்துரையாவது செய்யுங்கள் என வேண்டினார்.

   ஒருவர் பெயரை நான் உடனடியாகப் பரிந்துரைத்தேன்.

   அவரா !!!!!! என சற்றே யோசித்தார் ...... ?

   ”ஏன் அவருக்கு என்ன? அவரைத்தவிர வேறு யாரையும் பரிந்துரைக்க மாட்டேன். ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பாருங்கள் ஐயா. பிறகு சொல்லுங்கள்” என்றேன்.

   வாய்ப்பும் அளிக்கப்பட்டது. நான் பரிந்துரைத்தவர், வலைச்சர சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு ஓர் சரித்திர சாதனை படைத்து விட்டார்.

   தினமும் காலையில் ஒன்று மாலையில் ஒன்று என இரண்டு இரண்டு பதிவுகள் கொடுத்து, அந்த ஒரே வாரத்தில் 200க்கும் மேற்பட்ட புதுப்புதுப்பதிவர்களை அறிமுகம் செய்து அசத்தி விட்டார்,

   அன்பின் திரு. சீனா ஐயாவே அசந்து போய் விட்டார்.

   அந்த வாரத்தில் என்னை அடிக்கடி தொடர்புகொண்டு இது சம்பந்தமாகப் பாராட்டி மகிழ்ந்தார்.

   அந்தப்பதிவரும் அவர் தரும் பல்வேறு படைப்புக்களுமே எங்களின் நட்பு மேலும் மேலும் வளர பாலமாக அமைந்து போனது என்று சொன்னால் மிகையாகாது.

   அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு பதிவர்களை வலைச்சர ஆசிரியர்களாக நியமிக்க நானே பரிந்துரை செய்ய வேண்டும் என என்னிடம் கேட்டுக்கொண்டார்கள்.

   பலமுறை நானும் அவருக்கு இதுவிஷயத்தில் நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் உதவிகள் செய்தேன்.

   ஆலோசனைகளும் வழங்கினேன்.

   இதைப்பற்றி கூட என் சமீபத்தியப்பதிவு ஒன்றின் இறுதியில் லேஸாகச் சுட்டிக்காட்டியுள்ளேன்.

   இணைப்பு: http://gopu1949.blogspot.in/2013/09/45-1-6.html

   மேலும் நான் பிறருக்கு எழுதும் மறுமொழிகளை மிகவும் பொறுமையாகப் படித்துவிட்டு, அந்தப்பதிவரையும் என்னையும் சேர்ந்தே, அவர் தரும் மறுமொழிகளில் பாராட்டுவது, திரு. அன்பின் சீனா அவர்களின் சிறப்பான குணமாகும்.

   என்னைத்தனியாகவும் கூப்பிட்டுப்பாராட்டுவார். அதில் நான் காட்டியுள்ள ஆர்வம், மறுமொழி தருவதற்காக நான் எடுத்துக்கொண்ட சிரத்தை, செலவழித்த நேரம் போன்ற அனைத்துக் கோணங்களையும் ஆராய்ந்து மனம் திறந்து பாராட்டுவார்.

   இவ்விதமாக நாளுக்கு நாள் எங்கள் நட்பும் நீளமாக, அகலமாக, ஆழமாக, ஆரோக்யமாக வளர்ந்துகொண்டே வந்துள்ளது என்பதை மட்டும் சுருக்கமாகத் தெரிவித்துக்கொண்டு முடிக்கிறேன், ஐயா. ;)))))

   அன்புடன் VGK

   Delete
 31. அனைத்தும் சிறப்பு. வலை உலகு, வலை நட்பு என உலகு விரிகின்றது . அனைவரும் ஒன்றுபட்ட வாழ்வு வாழ வலையும் துணைபுரியும்

  ReplyDelete
 32. சந்திப்பு விவரங்கள் அருமை ஐயா. சீனா ஐயாவை மட்டுமன்றி அவர் பயணித்த மகிழ்வுந்தினைக் கூட படம் எடுத்து வெளியிட்ட தங்களின் ஆர்வம் அறிந்து மலைத்து நிற்கின்றேன் ஐயா. நன்றி

  ReplyDelete
 33. என்னால் தான் வர இயலாமல் போய் விட்டது...அழைப்பிற்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 34. அருமை!!. பதிவர் உலகத்திலிருப்போரின் நட்பை எடுத்துக்காட்டும் அழகிய பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி!!.

  ReplyDelete
 35. அருமை!!. பதிவர் உலகத்திலிருப்போரின் நட்பை எடுத்துக்காட்டும் அழகிய பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி!!.

  ReplyDelete
 36. அழகானப் படங்கள். சுவையான பகிர்வுகள்.

  என்னால் கலந்து கொள்ள இயலாமல் போனாலும், எதிர்பாராத விதமாக தாங்கள் மூவருமே நேரில் வந்து சந்தித்தது, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நன்றிகள் பல தங்களுக்கு சார்...

  திடீரென வந்ததால் என்னாலும் ஒழுங்காக உபசரிக்க முடியவில்லை....:(

  சீனா ஐயாவையும், மெய்யம்மை ஆச்சியையும் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி.

  திருச்சிப் பதிவர்களில் திரு. தமிழ் இளங்கோ அவர்களைத் தான் நான் இதுவரை சந்தித்ததில்லை...என்னவர் முன்பு ஒருமுறை அவரை இப்ராஹிம் பார்க் என்று நினைக்கிறேன். அங்கு சந்தித்து உரையாடியிருக்கிறார்.

  தாங்கள் மாமியை அழைத்துக் கொண்டு நிதானமாக ஒருநாள் வாருங்கள் சார்.

  ReplyDelete
 37. வலையுலகம் படர்ந்து பரவட்டும்...அன்பின் சீனா ஐயா அவர்களின் பதிவுகளை நான் இதுவரைப் படித்ததில்லை..இன்றே படிக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. அன்பின் க்லையபெருமாள் - என் பதிவுகளைப் படிக்க அவ்வளவு ஆசையா ? நேரமிருப்பின் படியுங்களேன் -

   என் திருச்சி தஞ்சை சுற்றுலா பற்றிய பதிவு - படியுங்களேன்

   http://cheenakay.blogspot.in/2013/10/6-7-8-2013.html,

   நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

   Delete
 38. அடடா மீண்டும் மீண்டும் சந்திப்போ.. வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் பொன்னாடை போர்த்தும் வைபவங்கள்...

  ReplyDelete
 39. //[எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு ....

  சிறுகதைத்தொகுப்பு நூல் பரிசளிப்பு]
  ///
  வாவ்வ்வ்வ்வ்வ்..

  //[திருமதிக்கு தொகுப்பு நூல் + ஸ்வீட்ஸ் அளித்தல்]
  /// அதுக்குள் என்ன சுவீட்ஸ் இருக்கெனச் சொல்லவேயில்லை:)

  ReplyDelete
 40. //பல்வேறு பயணங்களுக்கு இடையேயும்
  கருமமே கண்ணாயினாராக, நேற்று ஞாயிறு இரவு
  வலைச்சரத்தின் இந்த வார புதிய ஆசிரியராக
  ’தென்றல் சசிகலா ’ அவர்களை
  என் இல்லத்து கணனியிலிருந்து நியமிக்கிறார். // புது வலைச்சர ஆசிரியர் சசிகலா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  ஊ.குறிப்பு:
  உங்கள் கணனிப் படம் பார்த்து என்னமோ சொல்ல வந்தேன்ன்:).. நோ இன்று ஊசிக்குறிப்பேதும் இல்லை:)

  ReplyDelete
 41. //என் இல்லத்து அடசல்களுக்கு இடையே
  அவசரமாக எடுக்கப்பட்ட புகைப்படம்
  ///
  நோஓஓஓஓஓஓ சேர்ப்பில்லை சேர்ப்பில்லை.. வீட்டு ஆன்ரியைப் படத்தில காணவில்லை... :)

  ReplyDelete
 42. //திருமதி கீதா சாம்பசிவம்
  திருமதி கோவை2தில்லி
  திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன்

  ஆகிய மூவரையும்
  அவரவர்கள் இல்லத்திற்கே
  சென்று பார்த்து விட்டு,///
  வாழ்த்துக்கள்...

  //இதோ இந்தக்காரில் ஏறி என்னிடமிருந்து
  பிரியாவிடை பெற்றுச்சென்றனர்./// கார் நம்பர் குறிச்சு வச்சிட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன் :)

  ReplyDelete
 43. ///ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்
  ’அமுத மழை ’
  தொடர்ந்து பொழியும்.

  இதன் தொடர்ச்சி
  நாளை மறுநாள் வெளியாகும்.
  /// என்ர வல்லிபுர நாகதம்பிரானே:).... எப்பத்தான் ஓய்வு கிடைக்கப் போகுதோ?:) மீ கிளிக்குச் சொன்னேனாக்கும்:).. ஏற்கனவே தள்ளாடித்தள்ளாடி கணக்கெடுக்குது கிளி:)

  ஒரு ஐடியா:).. ஏன் கோபு அண்ணன் இந்தக் கிளியை மாத்திப்போட்டு.. புதுக்கிளியை நியமியுங்கோவன் கணக்கெடுக்க?:)) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:)).. மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ஸ் 6 இயேர்ஸ்:).

  ReplyDelete
 44. இனிய சந்திப்புகளை அழகாக படங்களுடன் பகிர்ந்துள்ளீர்கள். கண்டு மகிழ்ந்தோம். மிக்க நன்றி.

  அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 45. திரு சீனா ஐயா மற்றும் அவரது துணைவியார் ஆகியோரது திருச்சி வருகையை அழகான புகைப்படங்களுடன் தங்களுக்கே உரித்தான பாணியில் பகிர்ந்தமைக்கு நன்றி! அருமை!
  //இப்போதெல்ல்லாம் எதற்குமே அலட்டிக்கொள்ளாத சுத்த வழுவட்டையாகிவிட்டேன். சுகவாசியாகவும் முழுச்சோம்பேறியாகவும் ஆகிவிட்டேன்.
  // இதைத்தான் ஐயா ஏற்றுக் கொள்ள முடியவில்லை! விறுவிறுப்புடனும், சுறுசுறுப்புடனும் தங்கள் பணியாற்றும் விதம் வியக்க வைக்கிறது! தொடரட்டும் தங்களின் பொன்னான பதிவுகள்! நன்றி!

  ReplyDelete
 46. சந்திப்பு இனிமையாக நடைப்பெற்றதில் மிக்க மகிழ்ச்சி ஐயா!!

  ReplyDelete
 47. கவுனி அரிசி பொங்கல் செட்டிநாட்டின் பாரம்பரிய உணவு ஐயா ...உடல்நலத்திற்க்கு மிகவும் நல்லது,நம்மூரில் கிடைக்கிறது,விலை சற்று ஜாஸ்தி..உபயோகித்து பாருங்கள்...

  ReplyDelete
 48. இனிய சந்திப்பு விவரம் இனிப்பாக இருந்தது. பகிர்விற்கு இனிய நன்றி.
  அன்புடன் வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 49. சீனா ஐயாவுடனான சந்தோஷ சந்திப்பின் போட்டோக்களில் உங்கள் மகிழ்ச்சி புரிகிறது.
  நாங்களும் உங்கள் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள வாய்ப்பளித்து பதிவிட்டதற்கு நன்றி வைகோ சார்.

  ReplyDelete
 50. பதிவர்களின் சந்திப்பு ஒரு பரவசத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.

  ReplyDelete
 51. அன்பின் சீனா ஐயா, மெய்யம்மை ஆச்சி, தி.தமிழ் இளங்கோ ஐயா இவர்களுடனான சந்திப்பின் புகைப்படங்கள் அருமை. பின்னூட்டத்தில் இளங்கோ ஐயா குறிப்பிட்டது போல் தாங்கள் நல்லதொரு ஒருங்கிணைப்பாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நேர்த்தியான பதிவு. நிறைவான உணர்வு.

  ReplyDelete
 52. சந்திப்பில் கலந்து கொள்ள என்னையும் அழைத்தமைக்கு நன்றி. தலைநகரில் இருந்ததால் வர இயலவில்லை.

  அடுத்த பயணத்தின் போது எல்லோரையும் சந்திக்கிறேன்.

  தீபாவளி சமயத்தில் வர இருக்கிறேன். தகவல் பின்னர் சொல்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அன்பின் வை.கோ - வெங்கட் நாகராஜ் தீபாவள் சமயத்தில் திருச்சி வருகிறேன் என்கிறார். பிரமாண்டமான பதிவர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். நாங்கள் கட்டாயம் கலந்து கொள்கிறோம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

   Delete
  2. அன்பின் வெங்கட் நாகராஜ் - ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் - தீபாவளி சமயத்தில் வருவது மகிழ்ச்சியினைத் தரும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

   Delete
  3. cheena (சீனா) October 13, 2013 at 3:14 AM

   வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

   //அன்பின் வை.கோ - வெங்கட் நாகராஜ் தீபாவளி சமயத்தில் திருச்சி வருகிறேன் என்கிறார். //

   அவர் பாதி நாள் திருச்சி ஸ்ரீரங்கத்திலும், மீதி நாட்கள் தலைநகர் டெல்லியிலும் இருந்து வருகிறார் ஐயா.

   தீபாவளி பண்டிகையை பெற்றோர் + மனைவி + மகளுடன் கொண்டாட அவர் திருச்சிக்கு வருவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

   //பிரமாண்டமான பதிவர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். //

   திருச்சி மாவட்டப் பதிவர்களிலேயே மிகவும் இளமையான, துடிப்பான, எழுச்சிமிக்க பதிவர்கள் இருவர் உண்டென்றால் அது நம் வெங்கட் ஜீயும் அவர் மனைவியும் பதிவருமான கோவை2தில்லி அவர்களும் மட்டுமே.

   அதனால் அவர்கள் இருவருமே அவர்கள் செளகர்யத்திற்கு தகுந்தபடி, பிரமாண்டமான பதிவர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யட்டும்.

   //நாங்கள் கட்டாயம் கலந்து கொள்கிறோம். //

   மற்ற பதிவர்களாகிய நாம் எல்லோரும் கட்டாயம் அதில் கலந்து கொள்வோம். ;)

   //நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

   அன்புடன் VGK

   Delete
 53. அன்பினின் இனிய வை. கோ!

  வணக்கம்
  திருமிகு சீனா ஐயா அவர்களும் அவர் தம் துணைவியாரும் தங்கள் இல்லம் வந்து சென்றது பற்றிய
  பதிவு கண்டு மட்டற்ற உவகை கொண்டேன்! அவர்கள் வலையுலகத்திற்கு செய்யும் சேவை (வரைச்சரம்) ஒப்பற்றது
  வாழ்க அவர்கள் பல்லாண்டு! நான் சென்ற வாரம் (புதன்) குடும்பத்தோடு மதுரை சென்று மறுநாளே கொடைக்கானல்
  சென்று விட்டதால் ,அன்பின் சீனா அவர்களிடம் கைபேசி மூலமே பேச முடிந்தது திருமிகு இரமணி அவர்களும், தமிழ் வாசி அவர்களும் நானிருத்த விடுதிக்கு நேரில் வந்து உரையாடி
  உதவினர்! அன்பர் திண்டுக்கல் தனபாலும் கைபேசி மூலம் தொடர்பு கொண்டார்! திரும்பி வரும்போது, திருச்சி வந்த போது
  தங்களையும் அன்பர் ரிஸபன் அவர்களையும் நினைத்துக் கொண்டே வந்தேன்! எப்படியும் விரைவில் சந்திப்போம் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. புலவர் இராமாநுசம் October 13, 2013 at 10:16 PM

   //அன்பினின் இனிய வை. கோ! வணக்கம்.//

   வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

   //திருமிகு சீனா ஐயா அவர்களும் அவர் தம் துணைவியாரும் தங்கள் இல்லம் வந்து சென்றது பற்றிய
   பதிவு கண்டு மட்டற்ற உவகை கொண்டேன்! //

   மிகவும் சந்தோஷம் ஐயா.

   //அவர்கள் வலையுலகத்திற்கு செய்யும் சேவை (வலைச்சரம்) ஒப்பற்றது. வாழ்க அவர்கள் பல்லாண்டு!//

   ஆம் ஐயா, சரியாகவே சொல்லியுள்ளீர்கள் ஐயா. அவர்கள் பல்லாண்டு வாழ இறைவன் அருளட்டும், ஐயா.

   //நான் சென்ற வாரம் (புதன்) குடும்பத்தோடு மதுரை சென்று மறுநாளே கொடைக்கானல் சென்று விட்டதால், அன்பின் சீனா அவர்களிடம் கைபேசி மூலமே பேச முடிந்தது. திருமிகு இரமணி அவர்களும், தமிழ் வாசி அவர்களும் நானிருத்த விடுதிக்கு நேரில் வந்து உரையாடிஉதவினர்! அன்பர் திண்டுக்கல் தனபாலும் கைபேசி மூலம் தொடர்பு கொண்டார்! //

   அப்படியா ஐயா, கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, ஐயா.

   //திரும்பி வரும்போது, திருச்சி வந்த போது தங்களையும் அன்பர் ரிஸபன் அவர்களையும் நினைத்துக் கொண்டே வந்தேன்! //

   ஆஹா, தகவல் கொடுத்திருந்தால் நானே தங்களை சந்திக்க வந்திருப்பேனே, ஐயா.

   //எப்படியும் விரைவில் சந்திப்போம் நன்றி!//

   பிராப்தம் இருப்பின் நிச்சயமாக, நாம் விரைவில் சந்திப்போம் ஐயா.

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

   Delete
 54. மகிழ்ச்சி தாங்களின் பக்கம் தற்பொழுதுதான் வந்துள்ளேன்... நானும் திருச்சிதான்

  ReplyDelete
  Replies
  1. ஆ.ஞானசேகரன் October 16, 2013 at 11:23 AM

   வாருங்கள், வணக்கம்.

   //மகிழ்ச்சி தாங்களின் பக்கம் தற்பொழுதுதான் வந்துள்ளேன்... நானும் திருச்சிதான்//

   அப்படியா ! திருச்சியா !! மிக்க மகிழ்ச்சி.

   என் வலைப்பக்கம் தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

   அன்புடன் VGK

   Delete
 55. புகைப்படங்கள் பதிவின் துணையாய் இருந்தன. காரைக் கூட விட்டு வைக்கவில்லை?!! :-))

  ReplyDelete
 56. நேரில் பார்க்காமலே நிறைய நண்பர்களை உருவாக்குகிறது பேனா நண்பர்கள் முன்பு பத்திரிகைகளில் எழுதி கடிதபோக்குவரத்து மூலமாகவே உயிருக்குயிறாய் ஆகிவிடுவதுமுண்டு காதல் கோட்டை சினிமாபோலவும் உண்டு திடீரென நேரில் சந்திக்கும் போது அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை தொடரட்டும் பதிவர்கள் சந்திப்பு

  ReplyDelete
 57. அருமை அருமை கோபு சார்.

  நானும் உங்க புண்ணியத்துல மலைக்கோட்டைப் பிள்ளையாரையும் ஸ்ரீரங்கம் பெருமாளையும் தரிசித்தேன். :)

  ReplyDelete
  Replies
  1. Thenammai Lakshmanan June 21, 2014 at 6:36 PM

   //அருமை அருமை கோபு சார்.

   நானும் உங்க புண்ணியத்துல மலைக்கோட்டைப் பிள்ளையாரையும் ஸ்ரீரங்கம் பெருமாளையும் தரிசித்தேன். :)//

   வாங்கோ வணக்கம். மிக்க நன்றி. தங்களின் இன்றைய சாடர்டே ஜாலி கார்னருக்கு நான் வருகை தந்ததால் தங்களை இங்கு என்னால் சுட்டிகொடுத்து வரவழைக்க முடிந்தது. சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் கோபு

   Delete
 58. சந்திப்புப் படங்கள் அருமையாக இருக்கின்றன.

  ReplyDelete
 59. பதிவர் சந்திப்புடன் திருச்சியையும் ஓரளவு சுற்றிக்காட்டி விட்டீர்கள். ரொம்ப நல்லா இருக்கு.

  ReplyDelete
 60. தேன் இருக்கும் இடத்தைத் தேடித்தானே வண்டுகள் பறந்து வரும். அதான் பதிவர்கள் உங்களைத் தேடி வருகிறார்கள்.

  வழக்கம் போல் அருமையோ அருமை

  அன்பின் சீனா ஐயா அவர்களுடன் கைப் பேசியில் உரையாடி இருக்கிறேன். அவரை சந்திக்கும் வாய்ப்பு எப்பொழுது கிடைக்குமோ தெரியவில்லை.

  ReplyDelete
 61. பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள் நானுகூட ஒருக்கா வந்துபிடணும்.

  ReplyDelete
 62. தங்களை சந்திக்க வந்த திரு சீனா ஐயாவுக்கு வாழ்த்துகள். அதை எங்களுடன் சுவாரசியமாக தங்களுக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
 63. இன்னிக்கு நெட் படுத்தறது. பாதி பின்னூட்டம்போடும் போதே எரர் வரது. திரு சீனா ஐயா சந்திப்பை சுவாரசியமாக பகிர்ந்து கொண்டதற்கும் திருச்சியை ஃப்ரீயா சுற்றி காட்டியதற்கும் நன்றி.

  ReplyDelete
 64. அருமையான சந்திப்புதான்...மஃப்டில வந்த போலீஸ் எஸ்பி மாதிரி மிடுக்கு மீசை...தோற்றம்...வாத்யார் எப்போதுமே ஆஜானுபாகு...வாட் ய காம்பினேஷன்???

  ReplyDelete
 65. இப்போதுதான் இந்தப் பதிவைப் படிக்கிறேன். இவரைப் பற்றி அதிகமாக அறிந்ததேயில்லை. பதிவர்கள் அன்பைப் பெற்ற சீனா சார் (திரு சிதம்பரம் அவர்கள்) அனைவர் மனதிலும் வாழட்டும்.

  ReplyDelete
 66. 16.10.1950 இல் பிறந்தவரும், ’அன்பின் திரு. சீனா ஐயா’ என்று வலையுலகில் அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவரும், வலையுலக மூத்த பதிவருமான ’ஆத்தங்குடி திரு. பெ.க.சு.பெ.கரு.கா. சிதம்பரம் செட்டியார் அவர்கள் 16.03.2019 சனிக்கிழமையன்று அவரின் சொந்த ஊரான மதுரையில், காலமானார் என்ற அதிர்ச்சியும், துக்கமும் தரும் செய்திகள் பலரின் வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

  என்னுடன் மிகவும் பிரியமாகவும், அன்புடனும், பாசத்துடனும் பழகி வந்த அவரின் இந்தப் பிரிவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மிகவும் உயர்ந்த எண்ணங்கள் கொண்ட, அருமையான, மிகவும் நல்ல மனிதர் அவர்.

  அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

  அவரின் பிரிவினால் வாடும் அவரின் அன்பு மனைவி + இதர குடும்பத்தார் அனைவருடனும் என் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். :(

  ReplyDelete