என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 21 அக்டோபர், 2013

68] நம் பாப மூட்டைகளைக் கரைக்க ...

2
ஸ்ரீராமஜயம்
நாம் வாக்கினாலும், மனத்தினாலும், கைகால் முதலியவற்றாலும், பாபம் செய்து இருக்கிறோம். 

அந்தப் பாபங்களை எல்லாம் வாக்கையும், மனதையும், அந்தந்த உறுப்புக்களையும் கொண்டே, புண்ணியம் செய்து கரைத்து விட வேண்டும். 

நாம் இந்த உலகை விட்டுப்போவதற்குள் “பாப மூட்டை இல்லை” என்று சொல்லும்படி செய்துகொண்டால், அப்புறம் பஞ்சைப்போல ஆனந்தமாகப் பறந்து போகலாம்.

நாம் இப்போது நான்கு விதங்களில் பாபம் செய்கிறோம். உடம்பால் பல கெட்ட காரியங்கள், வாயால் புரளிப்பேச்சும் பொய்யும், மனதில் கெட்ட நினைவுகள். பணத்தினால் செய்கிற பாபத்தைச் சொல்லவே வேண்டாம்.

இப்படி எந்த நான்கால் பாபம் செய்தோமோ அந்த நான்காலுமே புண்ணியம் செய்யப்பழக வேண்டும்.

-oOo-

யோக்யதை இல்லாத ஒருவன், குருவிடம் அடங்கி இருந்தாலே, அவன் மனது நல்ல பக்குவம் அடையும்.  

oooooOooooo

அடுப்பங்கரை மதம்
KITCHEN RELIGION

ஜவஹர்லால் நேரு, அடிக்கடி விவேகானந்தாவை கோட் பண்ணி, "kitchen religion " "அடுப்பங்கரை மதம்" என்று ஹிந்து மதத்தை தாம் ரொம்ப நன்றாக பரிஹாசம் செய்கிறோம் என்று நினைக்கிறார். 

வாஸ்தவத்தில் நேருதான் ஹிந்து மதத்தின் சாரத்தை புரிந்துகொண்டு அதற்கு certificate தருகிறார்; நம் மதம் அடுப்பங்கரை மதம்தான்" என்று ஒரு சஸ்பென்ஸ் வைத்தார், மஹாஸ்வாமிகள்.  பிறகு தொடர்ந்து பேசுகிறார்.


நாரதர் சனத்குமாரரிடம் போய் ஆத்மவித்தை உபதேசிக்க சொன்னார். அப்போது சனத்குமாரர், "ஆஹார சுத்தவ் சத்வ சுத்தி;" என்றுதான் ஆரம்பிக்கிறார். 

சாந்தோக்கிய உபநிஷத்திலேயே இந்த விஷயம் இருக்கிறது. "தூய உணவில் ஆரம்பி; அதுதான் குணம் தூய்மை ஆவதற்கு வழி. இப்படி சித்த சுத்தி ஏற்பட்ட பின்தான் படிப்படியாக ஈஸ்வர ஸ்மரணம், கட்டுக்கள் விடுபட்ட மோக்ஷம் எல்லாம் சித்திக்கும்" என்று சனத்குமாரரே kitchen religion ல்லதான் ஆரம்பிக்கிறார்" 


இன்னொருத்தர் உதவியில்லாம அவாவா கார்யத்தை அவாவாளே பண்ணிக்கறா மாதிரி கல்வித் திட்டத்தில கொண்டு வரணும்ன்னுதானே சமூஹ சீர்திருத்தவாதிகள் சொல்லறா? 

அதுனாலதான், வாழ்க்கைக்கு முக்யமா வேணுங்கற அன்னத்தை அவனவன் ஸ்வயம்பாகம் பண்ணிக்க கத்துக் குடுத்துட்டா அதுதான் நெஜமான சீர்திருத்தம். 

சாஸ்த்ர வாக்யம் ஒண்ணு இருக்கு...  "பஞ்சாசத் வத்ஸராத் ஊர்த்வம் ந குர்யாத் பாணி பீடநம்" அப்படீன்னா அம்பது வயசுக்கு மேல கல்யாணம் பண்ணிக்கக்கூடாது. 

புருஷாளுக்கே வயசானவிட்டு, சமையல் பண்ண தெரிஞ்சிருக்கணும்ன்னு சாஸ்த்ரம் சொல்றது. சமையல் தெரிஞ்சுட்டா, வானப்ரஸ்தம் போக வேண்டிய வயஸ்ல தாம்பத்யத்துக்கு திரும்பற ஆபாசம் நடக்காம இருக்குமோல்லியோ?முன்னமாதிரி இல்லாம இப்போ பக்ஷிகள் மாதிரி பூலோகத்ல எங்கெங்கே வேலை உண்டோ, அங்கங்கே போகணுங்கற நெலைமைல ஸ்வயம்பாகம் அத்யாவஸ்யமாறது. 

சுத்தத்துக்கு சுத்தம்; ஸத்வத்துக்கு ஸத்வம்; அதோட வெந்ததும் வேகாததுமா, சுகாதரமற்ற முறையில்  சமைச்சததை ஹோட்டல்ல சாப்ட்டு சாப்ட்டு, சின்ன வயஸ்லேயே அல்சர், அது இதுன்னு அவஸ்தை படாம இருக்கலாம். 

சின்னதா ரொட்டி, பொங்கல் மாதிரி பண்ணத் தெரிஞ்சிண்டா போறும். 

இப்போ என்னடான்னா, கணக்கு வழக்கில்லாம வ்யாதிகள்தான் சர்வ வ்யாபகமா இருக்கு.ரொம்ப தூரம் ப்ரயாணம் பண்ணணும்னாக்கூட பூரி, சத்துமா இதுகளை பண்ணி எடுத்துண்டு, பாலையோ, மோரையோ விட்டு சாப்ட்டுக்கலாம். 

அரிசியை நன்னா செவக்க வறுத்து பொடிச்சு வெச்சிண்டா அதுதான் சத்துமா. அதுல பாலையோ, மோரையோ விட்டு சாப்டா, புஸ்ன்னு ஊறிண்டு பசியடங்கி, புஷ்டியாவும் இருக்கும். 'குக்கர், கிக்கர்' கூட வேண்டாம். சுலபமா நாலைஞ்சு தினுசு அதுல பண்ணிக்கலாம்தான். 

ஆனா, குக்கர்ன்னு ஆரம்பிச்சா, அப்புறம் அஞ்சறைப்பெட்டி, ரொம்ப புளி, காரம் ன்னு எல்லாம் கூடவே வரும். உடம்புக்கு வரும். பரிஹாரமா மருந்து, அந்த மருந்துல அநாச்சாரம்...ன்னு போய்ண்டிருக்கும். 

அதுனால, ஒரு சாமான், ரெண்டு சாமான்னு வெச்சிண்டு, ஸாத்வீகமா பெரியவா சொல்றா மாதிரி, மதுரமா, ஸ்நிக்தமா லேசான ஆகாரத்தை நாமே தயார் பண்ணி சாப்பிடணுங்கறதை "ஜன்ம வ்ரதமா" எடுத்துக்கணும். 

"ஸ்நிக்தம்" ன்னா பசையுள்ளதுங்கறதுக்காக நெய் சொட்ட சொட்ட இருக்கணும்னு அர்த்தமில்லே. வறட்டு வறட்டுன்னு இல்லாம பால்லையோ, மோர்லையோ ஊறினதா இருக்கணும். சரி. அப்பிடி ரொம்ப சிம்பிளா சமைசுண்டா, அதிதி சம்ஸ்காரம் எப்பிடி பண்ணறது? அதையும் பெரிய தர்மமா சொல்லியிருக்கேன்னா, வர்றவாளுக்கு பாலும், பழமும் குடுக்கலாம். நம்ம கையால குடுக்கறது, அவாளோட குக்ஷில போகணும். அவ்வளவுதான். 

அந்தக் காலத்ல திருடனுக்கு கூட பால்சாதம் போட்டுட்டா, அவன் அந்த ஆத்ல திருடமாட்டான். நல்ல எண்ணத்தை வளக்கறது பால். அதுனாலதான் பாலோட, பழத்தையும் சேர்த்துக் குடுக்கச் சொல்றேன். எல்லாத்துக்கும் மேல, நாம சமைச்சதை பகவானுக்கு நிவேதனம் பண்ணிட்டு அதுல இருக்கற கொஞ்ச நஞ்ச தோஷத்தையும் போக்கிடணும். 

வேற மூர்த்தி, விக்ரஹம் இல்லாட்டா கூட, ப்ரத்யக்ஷ தெய்வமா இருக்கும் சூர்ய பகவானுக்கு நிவேதனம் பண்ணிடணும். 

[Thanks to Amritha Vahini  06.08.2013]

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி 
நாளை மறுதினம் வெளியாகும்.

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

61 கருத்துகள்:

 1. ஆம் உணவுதானே நம் முக்குணங்களுக்கும்
  ஆதாரமாக விளங்குகிறது
  அதற்கான அற்புத விளக்கத்தை
  ஆச்சாரியார் அவர்களின் மொழியில் கேட்டு
  பெரும்பயன் கொண்டோம்
  பகிர்வுக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 2. புண்ணியத்திற்கான வழிமுறைகளும், அடுப்பங்கரை மதம் + ஸ்நிக்தம் பற்றிய விளக்கம் அருமை ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. நாம் இந்த உலகை விட்டுப்போவதற்குள் “பாப மூட்டை இல்லை” என்று சொல்லும்படி செய்துகொண்டால், அப்புறம் பஞ்சைப்போல ஆனந்தமாகப் பறந்து போகலாம்.

  ஆனந்தமான பகிர்வுகள்..!

  பதிலளிநீக்கு
 4. அதுனால, ஒரு சாமான், ரெண்டு சாமான்னு வெச்சிண்டு, ஸாத்வீகமா பெரியவா சொல்றா மாதிரி, மதுரமா, ஸ்நிக்தமா லேசான ஆகாரத்தை நாமே தயார் பண்ணி சாப்பிடணுங்கறதை "ஜன்ம வ்ரதமா" எடுத்துக்கணும்...

  எப்போதும் ஆகாரத்தில் நியமமாக இருந்துவிட்டால்
  பல துன்பங்கள் தவிர்க்கப்படுகின்றன..!

  பதிலளிநீக்கு
 5. வர்றவாளுக்கு பாலும், பழமும் குடுக்கலாம். நம்ம கையால குடுக்கறது, அவாளோட குக்ஷில போகணும். அவ்வளவுதான்.

  உண்டவீட்டுக்கு இரண்டகம் நினைப்பதையும் பால் தவிர்க்கிறது என்பது ஆச்சரியமையான ந்ப்லைப்பாடு..

  பதிலளிநீக்கு
 6. "தூய உணவில் ஆரம்பி; அதுதான் குணம் தூய்மை ஆவதற்கு வழி. இப்படி சித்த சுத்தி ஏற்பட்ட பின்தான் படிப்படியாக ஈஸ்வர ஸ்மரணம், கட்டுக்கள் விடுபட்ட மோக்ஷம் எல்லாம் சித்திக்கும்" என்று சனத்குமாரரே kitchen religion ல்லதான் ஆரம்பிக்கிறார்"

  ஆரம்பமே அருமை..!

  பதிலளிநீக்கு
 7. ஒருகுருஎன்று இருந்தால் நல்லதைச் சொல்லுவார். நமக்கு யோக்யதை இருக்கோ இல்லையோ சில விஶயங்கள் நல்லதில்லை என்றாவது புலப்படும்.
  மனது,வாக்கு,செயல்களினால் செய்த பாபங்களை அதைக்கொண்டே வாழ் நாளில் நிவர்த்திக்க வேண்டும்.
  பாபத்தை சுலபமாகச் செய்து விடலாம். நிவர்த்திக்க இம்மாதிரி குரு உபதேசங்கள் வாயிலாக எப்போதும் கிடைக்காது. தேர்ந்தெடுத்துக் கொடுத்தது மிகவும் நல்லது. பதிவு.
  பாபம் செய்யாதிரு மனமே.
  நாளை கோபம் செய்தே எமன் கொண்டோடிப் போவான்.
  இந்த வார்த்தைகள் வேதநாயகம் பிள்ளை அவர்களின்
  பெண் மதி மாலையில் உள்ளது..எந்தகாலத்திலோ படித்தது ஞாபகம் வந்தது. நல்ல பகிர்வு. அன்புடன்

  பதிலளிநீக்கு
 8. உண்மைதான்...பாவங்களைத் தீர்க்க கொஞ்சமாவது பரிகாரம் செய்யவேண்டும்..

  பதிலளிநீக்கு
 9. ''..ஆனா, குக்கர்ன்னு ஆரம்பிச்சா, அப்புறம் அஞ்சறைப்பெட்டி, ரொம்ப புளி, காரம் ன்னு எல்லாம் கூடவே வரும். உடம்புக்கு வரும்...''' எவ்வளவு சரியான மொழி.
  'ஆசை தானே அனைத்திற்கும் மூல காரணம்.
  நன்றி ஐயா.
  இறையாசி நிறையட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 10. "தூய உணவில் ஆரம்பி; அதுதான் குணம் தூய்மை ஆவதற்கு வழி. இப்படி சித்த சுத்தி ஏற்பட்ட பின் தான் படிப்படியாக எல்லாம் சித்திக்கும்"

  ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டிய நல்ல விஷயம்.
  இனிய பதிவு!.. மகிழ்ச்சி!..

  பதிலளிநீக்கு


 11. தமோ குணம் ரஜோ குணம் என உள்ள முக்குணங்களுக்கு அடிப்படையாக விளங்கும் உணவின் முக்கியத்துவம் மிக சிறப்பாக விளக்கம் படித்தோம்....

  பதிலளிநீக்கு
 12. //முன்னமாதிரி இல்லாம இப்போ பக்ஷிகள் மாதிரி பூலோகத்ல எங்கெங்கே வேலை உண்டோ, அங்கங்கே போகணுங்கற நெலைமைல ஸ்வயம்பாகம் அத்யாவஸ்யமாறது. //

  பதிலளிநீக்கு
 13. அன்னம்தான் பிரம்மம் என்று உபநிஷதங்கள் சொல்கின்றன
  அன்ன சுத்தியே ஆத்ம சுத்தி

  அன்னவிசாரத்திர்க்குப் பிறகுதான் ஆத்மா விசாரம்
  ஞானந்தகிரி ஸ்வாமிகள்

  கண்ட இடங்களில் சுகாதாரமற்ற முறையில் தயாராகும் உணவுகளை உண்பதால் உடல் கெட்டு உள்ளமும் கெட்டு போவது கண்கூடு.

  எனவே வெளியில் தயாரிக்கப்படும் உணவுகளை தவிர்த்தல் நலம்

  கடந்த காலத்தில் எங்கு சென்றாலும் கட்டு சோறு எடுத்து சென்றுதான் உணவு உண்டனர்.

  இல்லையேல் சமைத்து அந்த உணவை இறைவனுக்கு நைவேத்தியம் செய்த பிறகு உண்டனர். நோயற்று வாழ்ந்தனர்.
  மகிழ்ச்சியுடன் நிம்மதியான வாழ்வு பெற்றனர்.

  கையில் அவல் இருந்தால் அதிலிருந்து பலவிதமான
  உணவுகளை தயாரித்துக்கொள்ளலாம். சூடான வெந்நீர் ,தயிர்,மற்றும் சில பொடிகள் இருந்தால் போதும்.

  பெரியவாவின் கருத்துக்கள் நினைவில் கொண்டு செயல்பட்டால் பல பிரச்சினைகளை தவிர்க்கலாம்

  நல்ல பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 14. அரிசியை நன்னா செவக்க வறுத்து பொடிச்சு வெச்சிண்டா அதுதான் சத்துமா. அதுல பாலையோ, மோரையோ விட்டு சாப்டா, புஸ்ன்னு ஊறிண்டு பசியடங்கி, புஷ்டியாவும் இருக்கும். 'குக்கர், கிக்கர்' கூட வேண்டாம். சுலபமா நாலைஞ்சு தினுசு அதுல பண்ணிக்கலாம்தான். //
  அருமையான அமுத மொழி இதை கடை பிடித்தால் வாழ்நாளில் நோய் நொடி இல்லாமல் இருக்கலாம்.

  முன் எல்லாம் எங்காவது போனால் இப்படி , சத்துமாவு,சத்துமா உருண்டை, அவல் , பால், பழங்களுடன் முடித்துக் கொண்டு எல்லோரும் ஆரோக்கியமாய் இருந்தார்கள். இப்போது எந்த ஊருக்கு சென்றாலும் சாப்பாடு மூட்டை எல்லாம் கட்ட முடியாது. அந்த ஊரில் என்ன உணவு மிக சிறப்பானது அதை சாப்பிட்டு பார்க்க வேண்டுமென்றும், அந்த உணவுகளுக்கு நாம் பழகவில்லை என்றால் நம்மை கேலி செய்வதும், நடக்கிறது.
  இளைய தலைமுறைகள் நிறைய புதுமையான உணவுகளை பழகி விட்டார்கள். எவ்வளவு உணவுகள் புதுமையாக வெளியில் உண்டாலும் வீட்டுக்கு வந்து ரசம், சாதம், மோர்சாதம், சாப்பிட்டால் தான், பரம திருப்தியாக இருக்கிறது.


  எல்லாத்துக்கும் மேல, நாம சமைச்சதை பகவானுக்கு நிவேதனம் பண்ணிட்டு அதுல இருக்கற கொஞ்ச நஞ்ச தோஷத்தையும் போக்கிடணும்.

  வேற மூர்த்தி, விக்ரஹம் இல்லாட்டா கூட, ப்ரத்யக்ஷ தெய்வமா இருக்கும் சூர்ய பகவானுக்கு நிவேதனம் பண்ணிடணும். //
  அருமையான் அமுத மொழி.
  இறைவனுக்கு அளிக்க பட்ட உணவை அளவோடு பிரசாதமாக உண்டால் நலமாக இருக்கலாம்.

  //குக்கர்ன்னு ஆரம்பிச்சா, அப்புறம் அஞ்சறைப்பெட்டி, ரொம்ப புளி, காரம் ன்னு எல்லாம் கூடவே வரும்//

  குக்கர் என்று ஆரம்பித்தால் இந்த நாக்கு அடுத்து சுவையான உணவுகளை தேட சொல்வது நிஜம்.

  வெளியூர்களுக்கு மூன்று நாட்கள் தங்குவது போல் போனால் மின்சார குக்கர் எடுத்து போவோம் போகும் இடங்களில் சாதம் மட்டும் வைத்துக் கொண்டு பொடி வகைகள் போட்டு சாப்பிட்டுக் கொள்வோம். ஆனால் இந்த முறை ஒரு நாள் மட்டும் கையில் உணவு எடுத்துக் கொண்டு மூன்று தினங்கள் வெளியில் போய் இருந்தோம். சைவ உணவு என்று தேடி தேடி சாப்பிடுவது , வெளி நாட்டில் தோசை, வடை , இட்லி என்று தேடி சாப்பிட்டு நொந்த உள்ளத்துக்கு தேவையான கருத்துக்களை குரு அவர்கள் உபதேசித்து இருக்கிறார்கள்.

  //வர்றவாளுக்கு பாலும், பழமும் குடுக்கலாம். நம்ம கையால குடுக்கறது, அவாளோட குக்ஷில போகணும். அவ்வளவுதான்.//

  அருமையான கருத்து.
  பால் நல்ல எண்ணங்களை கொடுக்கும் என்பது மகிழ்ச்சியான செய்தி.
  அருமையான கருத்துக்கள் அடங்கிய அமுத மொழிகளை தொகுத்து தருவதற்கு உங்களுக்கு நன்றிகள்.
  வாழ்த்துக்கள்.


  பதிலளிநீக்கு
 15. அவருக்கென்ன ... சொல்லிவிட்டார். கடைப் பிடிக்க ஜனங்களைத் தேட வேண்டும்.. இந்த அரிசி சத்துமா அவ்வப்போது கைகொடுக்கலாம் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. // அதுனாலதான், வாழ்க்கைக்கு முக்யமா வேணுங்கற அன்னத்தை அவனவன் ஸ்வயம்பாகம் பண்ணிக்க கத்துக் குடுத்துட்டா அதுதான் நெஜமான சீர்திருத்தம்.

  // - இப்படி எல்லா ஆண்களும் சமைக்க கத்துக்கிட்டா நல்லாத்தான் இருக்கும்.
  வெளியில் சுவைக்காக சேர்க்கப்படும் செயற்கை பொருட்களால் உடலுக்கு தீங்குதான்... வீட்டு முறை உணவுதான் சிறந்தது.
  பயனுள்ள விஷயங்கள்... நன்றி!

  பதிலளிநீக்கு
 17. உடல்,மனசு, பணம், வாக்கினால் செய்த பாபங்களை அவைகளினாலேயே துடைத்துவிட வேண்டும்! நல்ல அறிவுரை! உணவினால்தான் உடலும் மனசும் கெடுகிறது. தாமே சமைத்து எளிமையாக உண்ணப்பழக வேண்டும் என்பதும் நல்லதொரு கருத்து! பெரியவாளின் அமுத மொழிகளை தொடர்ந்து பகிர்ந்து நல்வழிப்படுத்தும் தங்களுக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 18. அடுப்பங்கரை மதம் என்று எத்தனை எத்தனை விஷயங்கள் சொல்லிவிட்டார், மஹா பெரியவா? எந்த விஷயமானாலும் மிகவும் ஆழ்ந்து சிந்தித்து பேசுவது படிக்க சுவாரஸ்யமாகவும், ஒவ்வொரு வார்த்தை முடிந்த பின்னும் 'உண்மை, உண்மை' என்று நம்மை தலையாட்ட வைத்துவிடுகிறார்.
  ஆண்கள் சமையல் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியத்தை மிக அருமையாக கூறியிருக்கிறார்.
  பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 19. மனோவாக்காய கர்மேந்த்ரிய ஞானேந்த்ரிய வ்யாபரைஹி ஸம்பாவிதானாம்ஸமபாதகானாம் ஸர்வபாபக்ஷயார்த்தம் காவேர்யாம் மஹாநத்யாம் ஸ்னானமஹஞ்ச கரிஷ்யே

  பதிலளிநீக்கு
 20. //எல்லாத்துக்கும் மேல, நாம சமைச்சதை பகவானுக்கு நிவேதனம் பண்ணிட்டு அதுல இருக்கற கொஞ்ச நஞ்ச தோஷத்தையும் போக்கிடணும். //

  நிவேதனத் தத்துவமே இது தான் போலும். அது எப்படிப் போகுன்னா சூரியனைக் கண்ட பனி போலன்னு நெனைச்ச மாத்திரத்தில், அடுத்த வரியே--

  //வேற மூர்த்தி, விக்ரஹம் இல்லாட்டா கூட, ப்ரத்யக்ஷ தெய்வமா இருக்கும் சூர்ய பகவானுக்கு நிவேதனம் பண்ணிடணும்.//

  --ன்னு பெரியவா சொல்லியிருப்பது அருளமுதமா மனசில் படர்ந்தது.

  குழந்தைக்கு சொல்ற மாதிரி ரொம்ப எளிமையா இருக்கறது
  வரட்டு சந்தேகங்களுக்கும் தெளிவைக் கொடுக்கறதா அமையறது தான் பெரியவா எது சொன்னாலும் அதில் இருக்கற சூட்சுமம்.

  //வேற மூர்த்தி, விக்ரஹம் இல்லாட்டா கூட, ப்ரத்யக்ஷ தெய்வமா இருக்கும் சூர்ய பகவானுக்கு நிவேதனம் பண்ணிடணும். //

  உருவமில்லை என்று நினைக்க வேண்டாம். இதோ, நிதர்சன உண்மையா கண்ணுக்குத் தெரியறார், பார்! பார்த்துக்கோ'ன்னும் சொல்லிட்டார்!

  பதிலளிநீக்கு
 21. அந்தக் காலத்ல திருடனுக்கு கூட பால்சாதம் போட்டுட்டா, அவன் அந்த ஆத்ல திருடமாட்டான். நல்ல எண்ணத்தை வளக்கறது பால். அதுனாலதான் பாலோட, பழத்தையும் சேர்த்துக் குடுக்கச் சொல்றேன்.
  Ethu annatha kalam. Eppooooo?
  nalla post sir. rachichen.
  viji


  பதிலளிநீக்கு
 22. "அடுப்பங்கரை மதம் "என்பது பற்றி இப்போது தான் தெரிந்து கொண்டேன். ஆனால் அதற்கு மஹா பெரியவர் சொல்லிய விளக்கம் தான் சூப்பர்.
  நன்றி அருமையான தகவலை பகிர்ந்ததற்கு.

  பதிலளிநீக்கு
 23. ஸ்ரீமஹாபெரியவாளின் உபதேசம் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று..சமைப்பவரிடம் என்ன பாவனை(நினைவு) இருக்குமோ அது சாப்பிடுபவரை கட்டாயம் பாதிக்கும். அதனாலேயே, சமைக்கும் போது இறைநாமங்களை ஜெபிக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது. வெளியிடங்களில் இதை நாம் எதிர்பார்க்க முடியாது..

  திருமிகு. கோமதி அரசு அவர்கள் சொன்னதைப் போல், மின்சார குக்கர் எடுத்துச் செல்வது நல்ல யோசனை.

  அருமையானதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 24. அன்பு அய்யாவிற்கு வணக்கம்
  நம்முடைய குணங்களை நாம் உண்ணும் உணவே தீர்மானிக்கிறது. அந்த உணவை இறைவனுக்கும் படைக்க வேண்டிய நோக்கத்தை தங்களின் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். ஆகாரம் செய்வது முதற்கொண்டு எவ்வளவு சாப்பிட வேண்டுமென்பதையும் பெரிவாளே சொல்லியிருப்பது சிறப்பு. நல்ல பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

  பதிலளிநீக்கு
 25. பாவ மூட்டை இல்லையேல், ஆனந்தம் பரமானந்தம்தான்.
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 26. புண்ணியம் செய்வதற்கான வழிகளும்,பெரியவரின் விளக்கமும் சூப்பர்ர்..

  பதிலளிநீக்கு
 27. அழகான விளக்கம் அய்யா... பாவமூட்டைகள் இல்லையேல் ஆனந்தம் தான். கதை மிகவும் பிடித்தது...

  பதிலளிநீக்கு
 28. "தூய உணவில் ஆரம்பி; அதுதான் குணம் தூய்மை ஆவதற்கு வழி. இப்படி சித்த சுத்தி ஏற்பட்ட பின்தான் படிப்படியாக ஈஸ்வர ஸ்மரணம், கட்டுக்கள் விடுபட்ட மோக்ஷம் எல்லாம் சித்திக்கும்" என்று சனத்குமாரரே kitchen religion ல்லதான் ஆரம்பிக்கிறார்" // //
  அற்புதம்! மஹா பெரியவாளின் விளக்கங்கள் கலங்கியிருப்பவர்களுக்கும் கலங்கரை விளக்கங்கள்! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 29. அடுப்பங்கரை மதம் பற்றிய விளக்கம் அருமை...
  வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 30. இன்றும் கூட நீயா நானா நிகழ்வில் எங்கள் அடுப்பங்கரையால்
  பெறக்கூடிய நன்மைகள் பலதையும் நாம் இழந்து கொண்டே
  போகின்றோம் அதனால் தான் உடல் சுகவீனமுற்ற நிலையில்
  மருத்துவர்களையே நம்பி வாழும் நிலை உள்ளது என்று பலரும்
  விசனம் தெரிவித்தனர் .உணவுப் பழக்க வழக்கம் உடலுக்கு
  மட்டும் அல்ல உள்ளத்துக்கும் நல்லுணர்வைக் கொடுக்கும் என்ற
  உண்மையை அடுப்பங்கரை மதம் மிகவும் சிறந்த முறையில் சொல்லிச்
  சென்றுள்ளது .அருமை !.பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .

  பதிலளிநீக்கு
 31. இனிய வணக்கம் ஐயா..
  முள்ளை முள்ளால் தான் எடுக்கவேண்டும் என்பதுபோல..
  எதனால் எதைக்கொண்டு பாபங்கள் செய்கிறோமோ
  அதைக்கொண்டு புண்ணியங்கள் செய்திடல் நன்று...
  ஆழமான வார்த்தைகள் ஐயா...

  பதிலளிநீக்கு
 32. அன்பின் வை.கோ

  நாம் பாவங்களை எந்தெந்த உறுப்புகளீனால் செய்கின்றோமோ அந்தந்த உறுப்புகளினாலேயே புண்ணீயம் செய்து கரைத்து விட வேண்டும். அருமையான உபதேசம்,.

  உல்கை விட்டுப் போவதற்குள் பாப மூட்டையைக் கரைத்து விட வேண்டும்.,

  உடம்பு வாய் மனம் பணம் - இவைகளால் செய்யும் பாவங்கள் இந்த நான்கினாலேயே செய்யப்படும் புண்னீயங்களால் கரைக்கப் பட வேண்டும்.

  ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளீன் சொற்கள் நாம் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள்.

  அருமை அருமை - அமுத மழை அருமை

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 33. அன்பின் வை.கோ - அடுப்பங்கரை மதம் - விளக்கம் அருமை - கடைப்பிடிக்கலாம் - காலம் மாற மாற நாம் பழைய கடைப்பிடிக்க வேண்டிய நல்ல பழக்கங்களை எல்லாம் விட்டு விட்டோம். நாம் ப்ழைய காலத்துக்கு மாற வேண்டும். அருமையான அறிவுரை.

  நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 34. உண்ணும் உணவினை வைத்து தான் நமது குணமும் இருக்கிறது - அதானே....

  பாபங்களை மூட்டை மூட்டையாக சேர்க்கிறோம். சேர்த்த பாவங்களை தீர்க்க நல்ல வழி.....

  சிறப்பான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 35. பாபங்களை கரைத்து விடும் விதமும், அடுப்பங்கரை மதமும் பற்றிய விளக்கங்களும் அருமை. நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 36. ஆஹார சுத்தவ் சத்வ சுத்தி;"

  அருமையான தத்துவங்களை எளிமையாக
  விளக்கியதற்குப் பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 37. Kitchen Cabinet என்பது போல Kitchen Religion. பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 38. Mail message from Nilaa maghal 10:45 (50 minutes ago) to me

  வணக்கம் ஐயா... நலம் தானா? ரிஷபன் சார், ஆரார் சார் உட்பட...

  தங்கள் பதிவுகளை அவ்வப்போது வலையுலாவும் போது படித்து விடுகிறேன். தமிழில் கருத்துரையிட (வலைப்பூக்களில் மட்டும்) எங்கள் கணினியில் ஏதோ சிக்கல் உள்ளதால் இவ்வழியைத் தேர்ந்துள்ளேன்.

  //'நம் பாப மூட்டைகளைக் கரைக்க' பெரியவா அனாயசமாக சொன்ன வழிமுறைகளும் தங்களின் விளக்கங்களும் அன்பர்களின் கருத்துகளும் படிக்கவும் சிந்திக்கவும் சுவை மிகுவிப்பதாய். நல்லனவற்றை அடிக்கடி நியாபகப் படுத்திக்கொள்வது அவ்வழியில் நிற்க துணைபுரியும்.

  உணவின் அருமையும் நம் கலாச்சாரப் பெருமையும் ஒருங்கே பளிச்சிட்டது.//

  நாங்கள் அனைவரும் நலமே. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 39. ஆஹா ஆஹா ஆண்களைச் சமைச்சுப் பழகும்படி சொல்லியிருக்கிறார்ர்.. அதை ஆரு கேக்கிறா:). அப்புறம் 60 வயசுக்கு மேல் கல்யாணம் வாணாமாம்ம்:).. ஆனா 60 வயசிலதானே.. கல்யாணங்கள் மேளதாளத்தோடு நடக்குது:) கோபு அண்ணனே சீர்வரிசை கொடுத்து நடத்தி வைக்கிறார்ர்:).. எங்கிட்டயேவா?:) விடமாட்டனில்ல:))..

  கார் பங்களா.. கான்ட்பாக்காகி, கான்ட்பாக் ஐஸ்கிரீமாகி.. ஐஸ்கிரிம்ம்ம் ஊசாகி:)).. இனி வரும் பதிவுகளுக்கு அதுகூட இருக்காதாக்கும்:) நான் சீர் வரிசையைச் சொன்னேன்:).. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).

  பதிலளிநீக்கு
 40. அன்புள்ள அதிரா,

  வணக்கம்.

  ஓடியாங்கோ, ஓடியாங்கோ ....

  உடனே ஓடியாங்கோ ...............

  கிளி வந்து கொத்துவதற்கு முன் ஓடியாங்கோ:..........

  இப்படிக்கு,

  கணக்குப்பிள்ளைக்கிளி
  22.10.2013////

  உந்தக் கிளிப்பிள்ளைக்கு நல்ல பசுப்பால்ல 4,5 நித்திரைக்குளிசை கரைச்சுக் கொடுங்கோ கோபு அண்ணன்:)).. போற வழியில புண்ணியமாப்போகும்:).

  பதிலளிநீக்கு
 41. அமுத மொழிகளும், பெரியவாளின் வார்த்தைகளில் அடுப்பங்கரை மதம் பற்றியும் நிறைய விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.

  பதிலளிநீக்கு
 42. சிறப்பான பகிர்வு. அடுப்பங்கரை அற்புதம்.

  பதிலளிநீக்கு
 43. சாத்வீக உணவு தானே மனிதர்களின் குணாதிசயங்களின் மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைகிறது. ஆகவே பெரியவா சொன்னது சரியே. நாம தான் சாப்பாடும் வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டுப் பாவத்தையும் மூட்டை, மூட்டையாகக் கட்டிக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 44. ////நாம் இப்போது நான்கு விதங்களில் பாபம் செய்கிறோம். உடம்பால் பல கெட்ட காரியங்கள், வாயால் புரளிப்பேச்சும் பொய்யும், மனதில் கெட்ட நினைவுகள். பணத்தினால் செய்கிற பாபத்தைச் சொல்லவே வேண்டாம்.

  இப்படி எந்த நான்கால் பாபம் செய்தோமோ அந்த நான்காலுமே புண்ணியம் செய்யப்பழக வேண்டும்.///

  இது மிகவும் சரியாக சொன்னீர்கள் ஐயா ..இதை விடுத்து இன்று பல பொல்லா மனங்கள் பாவ கறையை நீரில் கழுவுது

  நீங்க சொன்ன மாதிரி செய்தால் தான் பாவம் கழியும்

  பதிலளிநீக்கு
 45. பெரியவா சொற்கள் பெரிய விஷயங்களையும் எளிமையாகப் புரிய வைக்கின்றன. நன்றி

  பதிலளிநீக்கு
 46. \\நாம் இப்போது நான்கு விதங்களில் பாபம் செய்கிறோம். உடம்பால் பல கெட்ட காரியங்கள், வாயால் புரளிப்பேச்சும் பொய்யும், மனதில் கெட்ட நினைவுகள். பணத்தினால் செய்கிற பாபத்தைச் சொல்லவே வேண்டாம்.

  இப்படி எந்த நான்கால் பாபம் செய்தோமோ அந்த நான்காலுமே புண்ணியம் செய்யப்பழக வேண்டும்.\\

  ஒவ்வொருவரும மனத்தில் இருத்திக்கொள்ளவேண்டிய வரிகள்.

  பிரயாண சமயங்களில் மிகவும் எளிமையாகவும் சுகாதாரமாகவும் தமக்குத்தாமே உணவு தயாரித்து உண்ணும் முறையை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார். பகிர்வுக்கு மிக்க நன்றி வை.கோ.சார்.

  பதிலளிநீக்கு
 47. ஸ்வயம்பாகம் சிலாக்யம்னு பெரியவா சொல்லீட்டா அதுக்கு அப்பீல் ஏது?

  பதிலளிநீக்கு
 48. ஆம் உணவுதானே நம் முக்குணங்களுக்கும்
  ஆதாரமாக விளங்குகிறது
  அதற்கான அற்புத விளக்கத்தை
  ஆச்சாரியார் அவர்களின் மொழியில் கேட்டு
  பெரும்பயன் கொண்டோம்
  பகிர்வுக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 49. // நாம் இப்போது நான்கு விதங்களில் பாபம் செய்கிறோம். உடம்பால் பல கெட்ட காரியங்கள், வாயால் புரளிப்பேச்சும் பொய்யும், மனதில் கெட்ட நினைவுகள். பணத்தினால் செய்கிற பாபத்தைச் சொல்லவே வேண்டாம்.

  இப்படி எந்த நான்கால் பாபம் செய்தோமோ அந்த நான்காலுமே புண்ணியம் செய்யப்பழக வேண்டும்.//

  இதையெல்லாம் தினமும் படித்தால் தான் நம் மனசும் அடங்கும், ஒரு நல் வழிக்கு வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   //இதையெல்லாம் தினமும் படித்தால் தான் நம் மனசும் அடங்கும், ஒரு நல் வழிக்கு வரும்.//

   :)))))

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஜெயா.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 50. //சுத்தத்துக்கு சுத்தம்; ஸத்வத்துக்கு ஸத்வம்; //

  காந்தி சிறைச்சாலையில் இருந்த பொழுது ஒரு நாள் “இன்று எனக்காக யார் சமையல் செய்தது என்று கேட்டாராம்”. அன்று அவருக்கு எப்பொழுதும் சமையல் செய்பவர் விடுப்பில் சென்றிருந்ததால் வேறு ஒருவர் சமையல் செய்திருந்தாராம். என்று இல்லாமல் அன்று தனக்குக் காரணமே இல்லாமல் கோபம் வந்ததால் காந்தி யார் சமையல் செய்தது என்று கேட்டாராம். சமைப்பவரின் மன நிலை அவர் சமையலை சாப்பிட்டவரையும் பாதிக்கிறது.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya September 12, 2015 at 7:21 PM

   **சுத்தத்துக்கு சுத்தம்; ஸத்வத்துக்கு ஸத்வம்;**

   காந்தியின் சிறைச்சாலைச் சாப்பாட்டு அனுபவம் பற்றிய கதை அருமை. கேள்விப்பட்டுள்ளேன். பகிர்வுக்கு நன்றி, ஜெயா.

   >>>>>

   நீக்கு
 51. // எல்லாத்துக்கும் மேல, நாம சமைச்சதை பகவானுக்கு நிவேதனம் பண்ணிட்டு அதுல இருக்கற கொஞ்ச நஞ்ச தோஷத்தையும் போக்கிடணும். //

  உண்மை. என் பாட்டி எதை சாப்பிட்டாலும், எந்த இடத்தில் இருந்தாலும் ‘சர்வம் கிருஷ்ணார்ப்பணம்” என்று சொல்லிவிட்டு சாப்பிடுவார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya September 12, 2015 at 7:22 PM


   ** எல்லாத்துக்கும் மேல, நாம சமைச்சதை பகவானுக்கு நிவேதனம் பண்ணிட்டு அதுல இருக்கற கொஞ்ச நஞ்ச தோஷத்தையும் போக்கிடணும்.**

   //உண்மை. என் பாட்டி எதை சாப்பிட்டாலும், எந்த இடத்தில் இருந்தாலும் ‘சர்வம் கிருஷ்ணார்ப்பணம்” என்று சொல்லிவிட்டு சாப்பிடுவார்.//

   என் மாமியாரும் கூட அப்படித்தான். என் மாமனார் ஒருபடி மேல். ‘கோவிந்த, கோவிந்த கோவிந்தா’ என்று சொல்லியே எதையும் சாப்பிடுவார். :))

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஜெயா.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 52. ஓஹோ அது அப்பூடியா. நல்ல சாப்பாடு தின்னினா நல்ல கொணங்க வளருமோ.

  பதிலளிநீக்கு
 53. நாம் உண்ணும் உணவின் தன்மையும் நம் குணங்களை தீர்மானிக்கிறது. சாத்வீகமான உணவையே எப்பொழுதும் உட்கொண்டால்.நல்லதுதானே.

  பதிலளிநீக்கு
 54. சுத்தம் சோறு போடும்...அதையும் சுத்தமாக உண்ணவேண்டும்..கடைபிடிக்கவேண்டிய நல்ல விஷயம்..

  பதிலளிநீக்கு
 55. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (13.07.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:-

  https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=441027909733242

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு