என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 23 அக்டோபர், 2013

69] அழுக்கற்ற மனம் !

2
ஸ்ரீராமஜயம்

பணம் மட்டுமல்ல. இப்படியே தான் நாம் வார்த்தைகளை உபயோகிக்கும் போது ஒரு சொல்கூட அதிகமாக உபயோகிக்கக்கூடாது. அளவாக கணக்காகப் பேச வேண்டும். அதனால் நமக்கும் சரி, நம் பேச்சைக் கேட்கிறவர்களுக்கும் சரி, பொழுது மிச்சமாகும்.

வீடு அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. துணி அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. உடம்பு அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. நம் மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும்.

வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் இரண்டின் பிரகாரமும் அரை வயிற்றுக்குத்தான் சாப்பிட வேண்டும். கால் வயிற்றுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். மற்ற கால் வயிறு வாயுவுக்கு விட்டுவிட வேண்டும். 


போதும் என்ற மனமே பொன்னான திருப்தியைத் தருகிறது.

oooooOooooo

இழந்த கண் பார்வை 
மீண்டும் கிடைத்த அதிசயம்

மஹா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்துவந்த மடத்தின் மூத்த ஊழியர்களில் ஒருவர் பாலு. மஹா பெரியவர் தேனம்பாக்கத்தில் தங்கியிருந்தபோது நடந்த சிலிர்ப்பான சில சம்பவங்களை அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

”கேரளத்தில் இருந்து பெண்ணொருத்தி பெரியவாளைத் தரிசிக்க வந்தாள். அவள் கர்ப்பமாக இருந்தபோது, தரையில் தடுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு விட்டதாம். அதிலிருந்து அடிக்கடி ஃபிட்ஸ் மாதிரியான பாதிப்பால் அவஸ்தைப்பட்டு வந்தாள்.

அவளின் கண்பார்வையும் பறிபோனதாம். காலக்கிரமத்தில் குழந்தை பிறந்தது என்றாலும், அவளின் பார்வை திரும்பவில்லை.

இந்த நிலையில் அவர்களின் குடும்பத்துக்குப் பரிச்சயமான நண்பர் ஒருவர் பிரஸ்னம் பார்க்கச் சொன்னாராம். அவரே நம்பூதிரி ஒருவரையும் அழைத்து வந்திருக்கிறார். 

பெண்ணின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்த நம்பூதிரி, ”கவலைப்படாதீங்க, கண்பார்வை கிடைச்சுடும். ஆனால், நீங்க க்ஷேத்திராடனம் செய்யணும். குருவாயூரில் துவங்கி, கும்பகோணம், திருவிடைமருதூர்னு புண்ணிய ஸ்தலங்களுக்கெல்லாம் போயி வேண்டிக்கோங்க. முடிந்தால் அந்தத் தலங்களில் தீர்த்தமாடுறதும் விசேஷம்”னு சொல்லியிருக்கார்.

அதன்படியே க்ஷேத்திராடனம் கிளம்பிய அந்தப் பெண்மணி, வைத்தீஸ்வரன் கோயிலுக்கும் சென்றாளாம். அங்கே ஸ்வாமி சந்நிதியில், குருக்கள் தீபாராதனை முடிந்து தட்டை நீட்டியதும், ஆரத்தி எடுத்துக்கொண்டவள், தட்டில் நூறு ரூபாய் தக்ஷணை வைத்தாளாம். 

குருக்களுக்கு ஆச்சரியம். இவளுக்குப் பார்வை இல்லை என்பதைத் தெரிந்துகொண்டவர், ”அம்மா… இது பத்து ரூபாய் இல்ல; நூறு ரூபாய் நோட்டு” என்று சொல்லியிருக்கிறார். 

இவளும், ”பரவாயில்லை… எடுத்துக்கோங்க” என்றாளாம். 

உடனே அந்தக் குருக்கள், ”நீங்க பெரியவாளைப் பார்த்ததில்லையா?” என்று கேட்டாராம். 

அவர் யாரைச் சொல்கிறார் என்று இந்தப் பெண்மணிக்குத் தெரியவில்லை. குருக்களிடமே விசாரித்திருக்கிறாள். 

“காஞ்சிபுரத்தில் இருக்காரே, சங்கர மடத்தில்… அவரை தரிசனம் செய்யுங்கோ” என்று அறிவுறுத்தியிருக்கிறார் குருக்கள்.

இவளும் உடனே அங்கிருந்து புறப்பட்டு, சிதம்பரம் சென்றுவிட்டு, அப்படியே காஞ்சிபுரத்துக்கும் வந்தாளாம். அன்று, சென்னையில் ஒரு பிரமுகர் வீட்டில் உபநயனம். அவர்களுக்குப் பிரஸாதம் எல்லாம் அனுப்பிவிட்டு, மடத்தில் அமர்ந்திருந்தார் பெரியவா. 

அந்த நேரம் அங்கே வந்த இந்தப் பெண்மணி, தான் கொண்டு வந்த பழங்களை அருகில் இருந்த நாற்காலியில் வைத்துவிட்டு, தனது நிலைமையை விவரித்தாள். 

வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்னபடி, காஞ்சி முனிவரைத் தரிசிக்க வந்திருக்கும் விஷயத்தையும் கண்கலங்கச் சொன்னாள்.

உடனே அவளின் புருஷனைக் கூப்பிட்ட பெரியவா, ”என்னைத் தெரியறதான்னு உங்க சம்சாரத்துக்கிட்டே கேளுங்க!” என்றார். அத்துடன், அருகிலிருந்த டார்ச் லைட்டை எடுத்து, தன் முகத்தில் வெளிச்சம் அடித்துக் கொண்டார் மஹா பெரியவா.

அதே நேரம் அந்தப் பெண், ”குருக்கள் சொன்ன சந்நியாஸி இதோ தெரிகிறாரே!” என்றாளாம் சத்தமாக… பரவசம் பொங்க!

ஆமாம்… காஞ்சி தெய்வம் அவளுக்குக் கருணை புரிந்தது. ‘நம்பினார் கெடுவதில்லை… இது நான்கு மறைத் தீர்ப்பு’ என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்! காஞ்சி முனிவரின் சந்நிதானத்தில் அந்தப் பெண்மணிக்குப் பார்வை கிடைத்தது.

அவளுக்கு கண்பார்வை மீண்டும் கிடைக்க பிராப்தம் இருந்தது. அதற்கும் மேலாக தெய்வத்தின் மீதும், வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்ன பிறகு மஹாபெரியவா மீதும் அவள் வைத்திருந்த அதீத நம்பிக்கையும் வீண்போகவில்லை.

ஆனால் இது குறித்து மஹா பெரியவாளிடம் கேட்டபோது, அவர் என்ன சொன்னார் தெரியுமா?

‘என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன் பூர்வ ஜன்ம பலன், உன்னோட நம்பிக்கை, நான் தினம் தினம் தியானம் செய்யற அம்பாள் காமாக்ஷியோட கருணை… எல்லாம்தான் காரணம்!’ என்றார்.


oooooOooooo

இதைப் பகிர்ந்து கொண்ட ராயபுரம் ஸ்ரீ பாலு அண்ணா அவர்களுக்கு அடியேன் கோபுவின் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள் / நமஸ்காரங்கள். 

இந்த ராயபுரம் ஸ்ரீ பாலு அண்ணா அவர்களைப்பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ளேன்.  சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் ஸ்ரீ மஹாபெரியவாளுடன் கூடவே இருந்து கைங்கர்யம் செய்துள்ள புண்ணியாத்மா.

அந்த சிறப்புப்பதிவினைப் படிக்காதவர்கள் படிக்க இதோ இணைப்பு:

[ பொக்கிஷம் தொடரின் பகுதி-9 ]

தலைப்பு:


 "நானும் என் அம்பாளும் !"

அதிசய நிகழ்வு !

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியாகும்

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

51 கருத்துகள்:

 1. //வீடு அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. துணி அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. உடம்பு அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. நம் மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும்./// உண்மையிலும் உண்மை...... “ஆடையைப் பார்த்து எடை போட்டிடக்கூடாது, சேற்றிலேதான் செந்தாமரை மலர்கிறது...”. இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா.

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வைகோ

  பதிவு அருமை - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப்பெரியவாளின் சந்நிதானத்தில பார்வையற்ற பெண்மணிக்குப் பார்வை கிடைத்தது.

  //வீடு அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. துணி அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. உடம்பு அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. நம் மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். //

  ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் அருமையான அறிவுரை.

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 3. வீடு அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. துணி அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. உடம்பு அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. நம் மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும்.//
  அமுத மொழி அற்புதம்.


  வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் இரண்டின் பிரகாரமும் அரை வயிற்றுக்குத்தான் சாப்பிட வேண்டும். கால் வயிற்றுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். மற்ற கால் வயிறு வாயுவுக்கு விட்டுவிட வேண்டும்.


  போதும் என்ற மனமே பொன்னான திருப்தியைத் தருகிறது.//

  அமுத மொழிகளை வாழ்வில் கடை பிடித்தால் வாழ்வு வளம் பெறும்.

  //தெய்வத்தின் மீதும், வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்ன பிறகு மஹாபெரியவா மீதும் அவள் வைத்திருந்த அதீத நம்பிக்கையும் வீண்போகவில்லை.//

  நம்பிக்கை என்றும் வீண் போவது இல்லை நான்குமறை தீர்ப்பு அல்லவா!
  இதை எல்லாம் படிக்கும் போது தெய்வ பக்தியும், குருபக்தியும் வாழ்வில் எவ்வளவு உன்னதமானது என்று புரியும்.
  குருவின் அற்புத கருணைகள், அவர் காமாக்ஷியிடம் வைத்து இருக்கும் எல்லையற்ற பக்தி நம்பிக்கை எல்லாம் படிக்க தந்த ராயபுரம் ஸ்ரீ பாலு அண்ணா அவர்களுக்கும், உங்களுக்கும் வணக்கங்கள், வாழ்த்துக்கள்.
  நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 4. ‘நம்பினார் கெடுவதில்லை… இது நான்கு மறைத் தீர்ப்பு’ என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்!

  கண்ணும் கருத்துமாய் அருமையான பகிர்வுகள்..!

  பதிலளிநீக்கு
 5. ‘என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன் பூர்வ ஜன்ம பலன், உன்னோட நம்பிக்கை, நான் தினம் தினம் தியானம் செய்யற அம்பாள் காமாக்ஷியோட கருணை… எல்லாம் தான் காரணம்!’

  - பரமாச்சார்ய ஸ்வாமிகளின் திருவடிகள் போற்றி!..

  பதிலளிநீக்கு
 6. போதும் என்ற மனமே பொன்னான திருப்தியைத் தருகிறது.

  போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்பது பழமொழியாயிற்றே..!

  பதிலளிநீக்கு
 7. பணம் மட்டுமல்ல. இப்படியே தான் நாம் வார்த்தைகளை உபயோகிக்கும் போது ஒரு சொல்கூட அதிகமாக உபயோகிக்கக்கூடாது. அளவாக கணக்காகப் பேச வேண்டும். அதனால் நமக்கும் சரி, நம் பேச்சைக் கேட்கிறவர்களுக்கும் சரி, பொழுது மிச்சமாகும்.

  பேச்சு என்பது வெள்ளி
  மௌனம் என்பது தங்கமாயிற்றே ..
  மௌனம் கலக நாஸ்தி என அளவறிந்து அளந்து பேசினால் நலம் பெறலாம்..!

  பதிலளிநீக்கு
 8. நம்பினார் கெடுவதில்லை… இது நான்கு மறைத் தீர்ப்பு’ என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்! காஞ்சி முனிவரின் சந்நிதானத்தில் அந்தப் பெண்மணிக்குப் பார்வை கிடைத்தது.

  நலம் பல புரிந்த நம்பிக்கை கண்களில் ஒளியாய் பிறந்து , மனதில் நிறைகிறது..!

  பதிலளிநீக்கு
 9. அமுதமழையாய் கருணை பிரவகிக்கும் அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 10. வீடு அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. துணி அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. உடம்பு அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. நம் மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும்.// சத்தியமான வார்த்தைகள்! கேரள பெண்மணிக்கு கண்பார்வை அளித்த பெரியவாளின் கருணை தெய்வீகமானது! அருமையான பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 11. மனதில் அழுக்கு கூடாது, அளவான வாக்கில் உண்மையும் சுத்தமும் இருக்க வேண்டும். பெரியவர்கள் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்கள். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. மன அழுக்கு இருந்தால் மற்றெந்த சுத்தமும் பிரயோஜனமில்லை.
  தெய்வ நம்பிக்கை இருந்து க்ஷேத்ராடனம் செய்திருக்கிராள்.
  குருவின் அருள் இருந்ததால் அவரைச் சந்திக்க வந்திருக்கிராள்.
  கண் குருடானாலும், பக்தியும்,நம்பிக்கையும்,இருந்திருக்கிரது.
  பார்வை மீண்டது மாத்திரமல்ல. இம்மாதிரி எல்லோருக்கும்
  உதாரணம் காட்டக்கூடிய அளவிற்கு மனது சுத்தமாக இருந்திருக்கிரது. இம்மாதிரி பாக்கியம் செய்தவர்களின் பெருமை எவ்வளவு சொன்னாலும் தகும். குருவின்,மகிமையும்,அவர்கள் வணங்கும்,காமாக்ஷியின் மகிமைகளும்.. அன்புடன்

  பதிலளிநீக்கு
 13. /// நம் மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும்... போதும் என்ற மனமே பொன்னான திருப்தியைத் தருகிறது... ///

  சிறப்பான கருத்துகளுடன் அதிசயம் மெய்சிலிர்க்க வைத்தது... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 14. மனதில் அழுக்கு கூடாது, அளவான வாக்கில் உண்மையும் சுத்தமும் இருக்க வேண்டும்.
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 15. அழுக்கற்ற மனம் ! அழகான மனம்!
  பகவானின் பார்வை பட்டதும் இழந்த கண் பார்வை மீண்டும் கிடைத்த அதிசயம் ஆச்சர்யம்.
  //போதும் என்ற மனமே பொன்னான திருப்தியைத் தருகிறது//
  நல்ல பகிர்வு. நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 16. கண் பார்வை தந்த அந்த கருணைக் கடலின் அருளை படித்து சிலிர்த்தேன்..

  பதிலளிநீக்கு
 17. //வீடு அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. துணி அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. உடம்பு அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. நம் மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும்.//

  சிறப்பான அமுத மொழி.

  அம்மாளுக்கு கண் பார்வை கிடைத்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி....

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் அய்யா.
  கண்பார்வை இழந்த அந்த அம்மாவுக்கு பெரியவா கண்ணொளி அளித்த விடயம் கேட்டு நெகிழ்ந்து போனேன் என்று தான் சொல்ல வேண்டும். பெரியவாளின் அற்புதங்களை தொடர்ந்து பதிந்து வரும் தங்களுக்கு நன்றி அய்யா
  ============
  ///என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன் பூர்வ ஜன்ம பலன், உன்னோட நம்பிக்கை, நான் தினம் தினம் தியானம் செய்யற அம்பாள் காமாக்ஷியோட கருணை… எல்லாம்தான் காரணம்!’ என்றார்./// பெரியவர் பெரியவர் தான்.

  பதிலளிநீக்கு
 19. //

  வீடு அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. துணி அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. உடம்பு அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. நம் மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும்.//
  எத்தனை சத்திய வரிகள்!

  பதிலளிநீக்கு
 20. மனத் தூய்மை பற்றிய பெரியவாளின் கருத்து மனதை தொட்டது.
  பெரியவா சொன்னதுபோல, அந்தப் பெண்ணின் பூர்வ ஜன்ம புண்ணியம், அவர் நம்பிக்கை, காமாட்சியின் கருணை - இவற்றிற்கு சிகரம் வைத்தாற்போல பெரியவாளின் கருணை!

  பதிலளிநீக்கு
 21. // வீடு அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. துணி அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. உடம்பு அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. நம் மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். //

  மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
  ஆகுல நீர பிற - திருக்குறள்

  பதிலளிநீக்கு
 22. நம் மனம் அழுக்கில்லாமல் இருக்க வேண்டும்.... சரியாச் சொன்னீங்க...

  பார்வையிழந்த பெண்மணிக்கு பார்வை கிடைத்தது.... பெரியவரைப் பற்றி ஒவ்வொரு பதிவிலும் புதிது புதிதாக தெரிநது கொள்ள முடிகிறது.... நன்றி ஐயா....

  பதிலளிநீக்கு
 23. பெரியவா உபதேசத்திலே மற்ற இரண்டு முடிகிறதென்றாலும் முதல் தான் சிரமமாக இருக்கிறது. சுருங்கச் சொல்லி விளங்க
  வைத்தல் ஒரு கலை. அந்த கலை கைவரப் பெற முடிந்ததில்லை.
  பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 24. வீடு அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. துணி அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. உடம்பு அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. நம் மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும்
  எவ்வளவு உண்மையான வார்த்தைகள்
  மிக அருமையான வார்த்தைகள்

  பதிலளிநீக்கு
 25. பெரியவா பத்தி இந்த generaion குழந்தைகள் அறிந்துகொள்ள நிறைய நிகழ்வுகளை குடுத்து அறிய பணி செய்து அற்புதம் நிகழ்த்திய உங்களை வணங்குவதை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை
  நன்றிகள் ஆயிரம்
  எல்லார் சார்பிலும்
  விஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. viji October 24, 2013 at 4:57 AM

   பிரியமுள்ள விஜி .... வணக்கம்மா. வாங்கோ, வாங்கோ !

   //பெரியவா பத்தி இந்த generation குழந்தைகள் அறிந்து கொள்ள நிறைய நிகழ்வுகளைக் கொடுத்து அரிய பணி செய்து அற்புதம் நிகழ்த்திய உங்களை வணங்குவதை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை. நன்றிகள் ஆயிரம்
   எல்லார் சார்பிலும் ... விஜி//

   அன்புள்ள விஜியிடமிருந்து எனக்கு, முதன் முதலாக, நம் தாய்மொழியாம் தமிழில் இன்று கிடைத்துள்ள அழகான இரண்டு பின்னூட்டங்களும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறன.

   தங்களின் இந்த முயற்சிக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். இனிய அன்பு நன்றிகள். இதுபோலவே தொடருங்கோ விஜி .... மகிழ்ச்சியோ மகிழ்ச்சிம்மா. ;)

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 26. "நம் மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும்."

  "நம்பிக்கைதான் பெண்ணுக்கு பார்வையை கொடுத்தது" என்றார். நல்ல அறிவுரை.

  பதிலளிநீக்கு
 27. மனம்தூய்மைசெய்வினைதூய்மைஇரண்டும் இனம் தூய்மை தூவா வரும்

  கண் இழந்த பெண்ணுக்கு பார்வை அருளிய பெரியவா முக்கண்ணணின் ஸ்வரூபம் அல்லவா பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 28. அருமையான பகிர்வு. அந்தப் பெண்ணின் நம்பிக்கையும், இறை அருளும், குரு அருளுமே அவளைக் காப்பாற்றியது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  மனத் தூய்மை குறித்த அமுத மொழிகளுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 29. நம்பிக்கையின் அவசியத்தை அழகாகச் சொன்ன பதிவு! மஹாபெரியவாளின் கருணைக்கு கரையேது? பகிர்விற்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 30. பெரியவாள் கருணைக்கடல்.. கன்பனிக்கிறது பதிவைப்படித்ததும்

  பதிலளிநீக்கு
 31. கண் பனிக்கிறது என முன் மடலில் இருக்கவேண்டும்

  பதிலளிநீக்கு
 32. மனம் அழுக்கின்றி இருத்தல் வேண்டும்.
  கண்பார்வை கிடைத்த அருள் மிக அற்புதம்.
  இறையாசி நிறையட்டும்.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்

  பதிலளிநீக்கு
 33. //அரை வயிற்றுக்குத்தான் சாப்பிட வேண்டும். கால் வயிற்றுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். மற்ற கால் வயிறு வாயுவுக்கு விட்டுவிட வேண்டும். //

  நபிகள் நாயகம் அவர்களும் இதே செய்தியை ஒரு ஹதீஸில் பதிவு செய்து உள்ளார்கள் .அவ்வாறே வாழ்ந்தார்கள் என்பது வரலாறு .

  பதிலளிநீக்கு
 34. மனதில் அழுக்கு சேர்ந்தால் அது அழுக்காறு
  அழுக்காறு ஓடும் இடத்தில் நறுமணமா வரும்?
  நாற்றம்தான் அடிக்கும்.

  எவ்வளவு சென்ட் போட்டாலும் அதன் நாற்றம்
  அடங்காது அது முகத்திலும், செயலிலும், நடவடிக்கைகளிலும் வெளிப்பட்டு மானத்தை வாங்கும்.

  பெரியவாவின் அறிவுரைகளை சிரமேற்க்கொண்டு
  நடந்தால் இந்த ஜன்ம அழுக்குகளோடு பூர்வ ஜன்ம அழுக்குகளும் நீங்கி சித்த சுத்தி ஏற்படும். சித்த சுத்தி
  ஏற்பட்டால் நல்ல கதியடையும் மார்க்கம் புலப்படும்.

  அருமையான பதிவு VGK

  பதிலளிநீக்கு
 35. நீங்கள் வழங்கும் அமுத மழை ,இளைய தலைமுறை படிக்க பல நல்ல விஷயங்கள்
  இருக்கின்றது.
  பெண்மணிக்கு கண் பார்வை அளித்ததுமில்லாமல் காமாட்சி அருள் என்று சொல்லில்
  அவர் தன் எளிமைப் பண்பை வெளிப்படுத்தி உள்ளது மனதை உருக்கிய பன்பு.
  வாழ்த்துக்கள்..........அஅருமையான தெய்வாம்சம் கலந்த பதிவு.

  பதிலளிநீக்கு
 36. அமுத மழையில் பெரியாளின் கருணை மழை!!

  பதிலளிநீக்கு
 37. போதும் என்றே மனமே பொன் செய்யும் மருந்து...அருமை ஐயா!!

  பெரியவரின் கருணைபகிர்வு கண்கலங்குகிறது,நம்பினோர் கைவிடப்படுவதில்லை..

  பதிலளிநீக்கு
 38. \\பணம் மட்டுமல்ல. இப்படியே தான் நாம் வார்த்தைகளை உபயோகிக்கும் போது ஒரு சொல்கூட அதிகமாக உபயோகிக்கக்கூடாது. அளவாக கணக்காகப் பேச வேண்டும். அதனால் நமக்கும் சரி, நம் பேச்சைக் கேட்கிறவர்களுக்கும் சரி, பொழுது மிச்சமாகும்.\\ எவ்வளவு அற்புதமான கருத்து. குறைந்த வார்த்தைகளில் நிறைவான செய்தி. பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.

  பதிலளிநீக்கு
 39. அன்னையின் அருள் பெரியவா மூலமாகக் கிடைத்தது.

  பதிலளிநீக்கு
 40. அவளுக்கு கண்பார்வை மீண்டும் கிடைக்க பிராப்தம் இருந்தது. அதற்கும் மேலாக தெய்வத்தின் மீதும், வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்ன பிறகு மஹாபெரியவா மீதும் அவள் வைத்திருந்த அதீத நம்பிக்கையும் வீண்போகவில்லை.


  //‘என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன் பூர்வ ஜன்ம பலன், உன்னோட நம்பிக்கை, நான் தினம் தினம் தியானம் செய்யற அம்பாள் காமாக்ஷியோட கருணை… எல்லாம்தான் காரணம்!’ என்றார்.//

  என்ன ஒரு பெருந்தன்மையான பதில்  பதிலளிநீக்கு
 41. // வீடு அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. துணி அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. உடம்பு அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. நம் மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும்.

  வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் இரண்டின் பிரகாரமும் அரை வயிற்றுக்குத்தான் சாப்பிட வேண்டும். கால் வயிற்றுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். மற்ற கால் வயிறு வாயுவுக்கு விட்டுவிட வேண்டும்.


  போதும் என்ற மனமே பொன்னான திருப்தியைத் தருகிறது.//

  மகா பெரியவாளின் அமுத மொழிகளைக் கடை பிடித்தால் மகிழ்ச்சியான, திருப்தியான வாழ்வு நிச்சயம்.

  பதிலளிநீக்கு
 42. // ‘என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன் பூர்வ ஜன்ம பலன், உன்னோட நம்பிக்கை, நான் தினம் தினம் தியானம் செய்யற அம்பாள் காமாக்ஷியோட கருணை… எல்லாம்தான் காரணம்!’ என்றார்.//

  அவரே ஈஸ்வர சொரூபம். இருந்தாலும் என்ன ஒரு தன்னடக்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 43. அந்த அம்மாளுக்கு கண் பார்வை வந்தது ஆச்சரியமான வெசயம்தா.

  பதிலளிநீக்கு
 44. நான் எதுவுமே பண்ணலை. உன்பூர்வஜன்ம பலன் அம்பாள் காமாட்சியோட அருள்.. என்ன ஒரு பெருந்தன்மை.

  பதிலளிநீக்கு
 45. டு அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. துணி அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. உடம்பு அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. நம் மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும்.

  வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் இரண்டின் பிரகாரமும் அரை வயிற்றுக்குத்தான் சாப்பிட வேண்டும். கால் வயிற்றுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். மற்ற கால் வயிறு வாயுவுக்கு விட்டுவிட வேண்டும். //எக்காலத்துக்கும் பொருந்தும். பார்வை மீண்டதற்குக் காரணம் நம்பினார் கெடுவதில்லை..


  பதிலளிநீக்கு
 46. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (14.07.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:-

  https://www.facebook.com/groups/396189224217111/permalink/442264719609561/

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு