என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 4 நவம்பர், 2013

75 / 1 / 2 ] நதியை வரவேற்கும் கடல் !

2
ஸ்ரீராமஜயம்
எதிலுமே சரி, லெவல், அதாவது அளவு அறிந்து, அந்த மட்டத்தோடு நிற்கிற மனோபாவம் வந்தால் தான், சாந்தம் உண்டாகும்.

லெவலுக்கு மீறிச் செய்கிற ‘தாட்பூட்’ காரியங்கள் பிறருக்குப் பிரமிப்பூட்டலாம். 

ஆனால் இதனால், நாமே நம் சாந்தியைக் குலைத்துக் கொள்வதுதான் பலனாக அமையும்.

உருட்டல், புரட்டல், இரைச்சல் எல்லாவற்றையும் குறைத்து அடக்கமாக வருகிற நதியை சமுத்திரம் எதிர்கொண்டு சென்று வாங்கிக் கொள்கிறது. 

 

இதனால்தான் நதியின் சங்கம ஸ்தானங்களுக்குச் சிறிது தூரம் முன்னாலிருந்தே ஆற்று ஜலம் உப்புக்கரிக்கிறது. 

நாம் லெவலை மீறாமல், அடக்கமாகச் சென்றால், பரமாத்ம சமுத்திரம், நம்மை எதிர்கொண்டு அழைத்துப் போய்த்தனக்குள் அடக்கம் செய்து கொண்டு விடும்.  

   

 

  
oooooOooooo

02.11.2013 தீபாவளி 
பண்டிகையன்று 
அதிகாலையில் 
”மேட்டூர் ஸ்வாமிகள்” 
கோவிந்தபுரத்தில் 
ஸித்தியடைந்தார்கள்.


'மேட்டூர் ஸ்வாமிகள் '
என்று  அழைக்கப்பட்ட 
மிகப் புனிதமானவர்.


மேற்படி ஸ்வாமிகளைப்பற்றி அடியேன் அறிந்துள்ள ஒருசில தகவல்கள்:-

இவருடைய பூர்வாஸ்ரமப் பெயர் “இராஜகோபாலன்” என்பதாகும். 

இரசாயனப் பொறியியல் பட்டதாரியான இவர் சிறிது காலம் ’மேட்டூர் கெமிகல்ஸ்’ கம்பெனியில் பொறியாளராகப் பணியாற்றியவர். 

சிறுவயதிலேயே மிகுந்த ஞானமும், பக்குவமும் ஏற்பட்டுவிட்ட இவருக்கு, காஞ்சி மஹா ஸ்வாமிகளிடம் தீவிரமான பக்தி ஏற்பட்டது. 

சாக்ஷாத் பரமேஸ்வரனின் மறு அவதாரமே ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி மஹா ஸ்வாமிகள் என்ற பேருண்மையை மிகச்சுலபமாக உணர்ந்து கொண்டுவிட்ட இவர், ஒருநாள் தன் அலுவலக வேலையை திடீரென ராஜிநாமா செய்து விட்டு, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்ய வந்து சேர்ந்து விட்டார். 

ஒருசில வருடங்கள் மட்டுமே, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு கைங்கர்யம் செய்யும் பாக்யம் கிடைத்த இவரை, துறவரம் மேற்கொள்ளுமாறு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஆக்ஞை இட்டார்கள். 

தானும் துறவி ஆகிவிட்டால், தொடர்ந்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்ய முடியாது போகுமே என்று தன் மனதில் நினைத்தாலும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஆக்ஞையை மீற முடியாமல், அந்த ஆக்ஞையே தனக்குக் கிடைத்த மாபெரும் பாக்யமாகக் கருதிய இவரும், தன் பால்ய வயதினிலேயே துறவியானார்.  

அன்று முதல் இவர் மேட்டூர் ஸ்வாமிகள் என்றே பலராலும் அழைக்கப்பட்டு வந்தார்.  

வேத சாஸ்திரங்கள் அனைத்தும் கற்று அதன்படியே வாழ்ந்து காட்டியவர். மஹாஸ்வாமிகள் குறித்தும், அவர்களது சிந்தனைகள் குறித்தும் பல்வேறு தகவல்களை வெளியுலகுக்குக் கொண்டுவந்த பெருமைக்குரியவர்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா மேற்கொண்டு வந்த சந்நியாஸ சம்ப்ரதாய நடைமுறைகள் அனைத்தையும் முழுமையாகத் தானும் கடைபிடித்து வந்தார். 

வாகனங்களில் செல்வதை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டு, பாத யாத்திரையாகவே பாரத தேசம் முழுவதும் உள்ள  கோயில்களுக்கும், மடங்களுக்கும் சென்று வந்துள்ளார். 

மக்களிடையே சமுதாய வளர்ச்சி, பசுமை மற்றும் இயற்கை நேசம், பசு வளர்ப்பு ஆகியவற்றில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தினார்.  அனைத்துக் காரியங்களும் இறைவன் சித்தப்படி, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அருளால் நடக்கின்றன என்று சொல்லிவந்தார். 

ஞான வைராக்யங்கள் கொண்ட இவர் தன்னை வெளியுலகுக்கு அதிகம் தெரியப்படுத்திக் கொண்டது கிடையாது. தன்னை போட்டோ எடுப்பதைக்கூட தவிர்க்கும்படி பக்தர்களிடம் கேட்டுக்கொள்வார்.    

இவருடைய புகைப்படங்களோ, இவரைப்பற்றிய செய்திகளோ எங்கும் எதிலும் அதிகமாக வெளிவந்ததும் கிடையாது. அவர் இவற்றையெல்லாம் அடியோடு வெறுப்பவராகவே இருந்து வந்தார்.

துறவியானபின்பு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுடனேயே சிலகாலம், தங்கி இருந்த இவர், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஸித்தியான பிறகு, கும்பகோணம் அருகில் உள்ள கோவிந்தபுரம் என்ற ஊரில்  *ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் தபோவனத்தில்*ஓர்  குடிலில் ஆஸ்ரமம் அமைத்துக்கொண்டு தங்கியிருந்து, அங்கு வரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார். 

[*தற்போது மிகப்பெரியதாகவும் மிகப்பிரபலமாகவும் அமைந்துள்ள ஸ்ரீ பாண்டுரங்கன் கோயிலின் பிரதான நுழைவாயிலுக்கு நேர் எதிர்புறம் அமைந்துள்ளது இந்தத் தபோவனம்* ]

மஹா ஞானியான இவரை, [மூன்று சந்தர்ப்பங்களில்] நேரில் தரிஸித்து, நமஸ்கரித்து, மனம்விட்டுப்பேசி மகிழ்ந்த பாக்யம் பெற்றவர்களில், அடியேனும் ஒருவன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்ரீ இராஜகோபாலன்  அவர்கள்
தன் பால்ய வயதில் 
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுடன்
சேர்ந்து உள்ள ஓர் அபூர்வமான படம். 


ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளுடன் 
உள்ள  இந்தக்கூட்டத்திலும் 
இடதுபுற ஓரமாக கைகட்டி நிற்பவர் 
ஸ்ரீ இராஜகோபாலன் அவர்களே !

-oOo-

திவ்ய க்ஷேத்ரமான கோவிந்தபுரத்தில் [தனது 74வது வயதில்] ஸித்தியடைந்து, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் திருவடிகளை அடைந்துள்ள இந்த மஹானுக்கு, அங்கேயே ஓர் ப்ருந்தாவன அதிஷ்டானம் அமைத்துள்ளார்கள். 

கோவிந்தபுரத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைப்பவர்கள் இந்த மஹானின் ப்ருந்தாவன அதிஷ்டானத்தை 12 பிரதக்ஷணங்கள் செய்து, நான்கு நமஸ்காரங்கள் செய்து விட்டு வரவும். 

இவ்வாறு எளிய வாழ்க்கை வாழ்ந்த, மஹாஞானிகளான மஹான்களின் ஆசியாலும், அனுக்ரஹத்தாலும் நம் அனைவரின் வாழ்விலும் சுபமங்கல நிகழ்ச்சிகள் ஏற்படும் என்பது ஸத்தியம்.

அன்புடன் VGK


oooooOooooo


பிரமிக்க வைக்கும்
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் தமிழ்

தமிழ் மொழியிலே பெரியவாளுக்கு இருந்த பேரறிவு முத்தமிழ்க் காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது.

ஒரு முறை கி.வா.ஜ-விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று கேட்டார். 

மேலும் “சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது சொல்லுங்கள்!” என்கிறார்.

கி,வா.ஜ. அடக்கமாக, ”பெரியவா சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!” என்றார்

“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது. இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு, இனிமை இவற்றைக் குறிப்பதகாவே இருக்கும். 

மழலை, குழல், அழகு, குழந்தை, கழல், நிழல், பழம், யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடத்தில் உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமா” என்கிறார்.

உடனே கி.வா.ஜ., “இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்!” என்றாராம்.

சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும் “யாமா மாநீ யாமா மா” என்ற மாற்றுமாலைப் பதிகம் மிகவும் கடினம். 

அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும் கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்துப் பிரித்து மிக எளிமைப்படுத்திப் பொருள் சொன்னார். பெரிய வித்வான்கள் பிரமித்துப் போனார்கள்.

அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று, முக்கால், அரை, கால், அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா, கீழரை என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து எழுதுகிறார், தெரியுமா?” என்று கேட்டு,

முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்
விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….

என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார்.

அதன் பொருளையும் தனக்கே உரிய முறையில், 

“முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டு காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது காலாகப் பயன்படுத்துகிறோமே….. அந்த நிலை வருவதற்குள், 

முன்னரையில் வீழாமுன்… தலைமுடியில் நரை வருவதற்கு முன்னாலே 

விக்கலும் இருமலும் வருவதற்கு முன்…. 

யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்….. 

ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப் போகும் முன்…

காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!” என்று மிக அழகாக விளக்குகிறார்.

மேலும் “என்ன அழகு பார்த்தேளா! [ஏகம் என்றால் ஒன்று] ஒன்று என்ற  அந்த ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக் கீழேயே உள்ள கீழரை வரை எட்டு அளவுகளையும் கோத்துத் துதித்திருக்கிறாரே!” என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.

எதையுமே இப்படி விளக்கமாகப் பொழிந்து தள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்!!

[Thanks to Sage of Kanchi 29 09 2013]

oooooOoooooஇதன் தொடர்ச்சி 
இன்றே இப்போதே 
தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளது.

காணத்தவறாதீர்கள்.பகுதி 75 / 2 / 2   

தலைப்பு:பச்சைக்கிளி ....

முத்துச்சரம் ....

முல்லைக்கொடி .... 


யாரோ ?
53 கருத்துகள்:

 1. மகானின் ஆசிகள் உங்கள் மூலம் கிடைத்ததாக உணருகிறோம்...நன்றி ஐயா..

  பதிலளிநீக்கு
 2. இவரது பெயர் மட்டும் கேள்விப்பட்டு இருக்கிறேன் . இந்த பதிவு மூலம் முழு விபரமும் அறிந்தேன் . மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 3. எதிலுமே சரி, லெவல், அதாவது அளவு அறிந்து, அந்த மட்டத்தோடு நிற்கிற மனோபாவம் வந்தால் தான், சாந்தம் உண்டாகும்.

  லெவலுக்கு மீறிச் செய்கிற ‘தாட்பூட்’ காரியங்கள் பிறருக்குப் பிரமிப்பூட்டலாம்.

  ஆனால் இதனால், நாமே நம் சாந்தியைக் குலைத்துக் கொள்வதுதான் பலனாக அமையும்.

  உருட்டல், புரட்டல், இரைச்சல் எல்லாவற்றையும் குறைத்து அடக்கமாக வருகிற நதியை சமுத்திரம் எதிர்கொண்டு சென்று வாங்கிக் கொள்கிறது.

  அளவுக்கு மிஞ்சினால்
  அமுதமும் நஞ்சு தானே..!

  பதிலளிநீக்கு
 4. எதையுமே இப்படி விளக்கமாகப் பொழிந்து தள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்!!

  அமுத மழையாகப்பொழிந்து கேட்பவர்களையும் பாக்கியசாலிகளாக்கிய அழகிய பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 5. எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது. இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு, இனிமை இவற்றைக் குறிப்பதகாவே இருக்கும்.

  மழலை, குழல், அழகு, குழந்தை, கழல், நிழல், பழம், யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடத்தில் உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமா” என்கிறார்.

  அமிழ்தினும் இனிய தமிழமுதை பருகத்தந்த
  அற்புத பகிர்வுகள் அருமை..!

  பதிலளிநீக்கு
 6. திவ்ய க்ஷேத்ரமான கோவிந்தபுரத்தில் [தனது 74வது வயதில்] ஸித்தியடைந்து, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் திருவடிகளை அடைந்துள்ள இந்த மஹானுக்கு, அங்கேயே ஓர் ப்ருந்தாவன அதிஷ்டானம் அமைத்துள்ளார்கள்.

  கோவிந்தபுரத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைப்பவர்கள் இந்த மஹானின் ப்ருந்தாவன அதிஷ்டானத்தை 12 பிரதக்ஷணங்கள் செய்து, நான்கு நமஸ்காரங்கள் செய்து விட்டு வரவும்.

  சிறப்பான தகவல்கள்...தந்தமைக்கு நன்றிகள்..!

  பதிலளிநீக்கு
 7. மேட்டூர் ஸ்வாமிகள் பற்றி தெரியாது! தங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். பெரியவாளின் தமிழ் அறிவும் விளக்கும் பாங்கும் வியக்க வைத்தன! அருமையான பதிவு! நன்றி!

  பதிலளிநீக்கு
 8. அபூர்வமான படம் உட்பட அனைத்தும் அருமை சிறப்பு ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 9. இறுதியில் நாம் அடையும் இடத்தினை
  அறிந்து செயல்படுதல் அவசியம்...
  இருக்கிறது என்ற ஆட்டமும்
  இல்லையே என்ற சோகமும் தேவையில்லை...
  பதமாக பரமாத்மாவின் திருவடி அடைதல் பற்றிய விளக்கம் அருமை ஐயா..
  மேட்டூர் சுவாமிகள் பற்றிய தகவல்கள் புதியவை..

  பதிலளிநீக்கு
 10. வணக்கம்
  ஐயா
  பதிவில் ஆழமாக கேள்விக்களை தொடுத்து அதற்கான விளங்கங்கள் எல்லாம் அருமை பார்வைக்கு கிடைக்காத அழகிய படங்கள் எல்லாம் பதிவுக்கு ஒரு மகுடம் வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 11. லெவல் க்ராஸின் கதவு மனதுதான். தன்னிலை அறிந்து பாகுபட்ட மனதோடு அடக்கமாக இருந்தால் சாந்தம் ஓரளவாவது வரும்.

  லெவல் வியாக்யானம் அருமை. மேட்டூர் ஸ்வாமிகள் பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன். தமிழுக்கு அமிழ்தென்ற பெயர். ழ வின் காரணமாகவே அமைந்துள்ளது.
  பெரியவர் அவர்களின் வார்த்தைக்கு வார்த்தை அமிர்தம்தான்.
  நதியின் ஸங்கமம் கடலில் எவ்வளவு அமைதியாக அமைந்து விடுகிறது. எவ்வளவு உண்மைகள். கோவைப்படுத்தி எழுதவில்லைநான். அமைதி,அமைதி. அழகான வார்த்தை.
  உணர்ச்சி பூர்வமான பதிவு. அன்புடன்

  பதிலளிநீக்கு
 12. உருட்டல், புரட்டல், இரைச்சல் எல்லாவற்றையும் குறைத்து அடக்கமாக வருகிற நதியை சமுத்திரம் எதிர்கொண்டு சென்று வாங்கிக் கொள்கிறது. //
  அருமையான விளக்கம்.

  மேட்டூர் ஸ்வாமிகள் '
  என்று அழைக்கப்பட்ட
  மிகப் புனிதமானவர்.//
  ஸ்வாமிகள் பற்றி நன்கு தெரிந்து கொண்டோம்.
  கோவிந்தபுரத்தில் அவர் ப்ருந்தாவன அதிஷ்டானம் போய் நமஸ்காரம் செய்து வருகிறோம் நன்றி.

  முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
  அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்
  விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
  கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….//

  பாட்டுக்கு மஹாபெரியவாளின் விளக்கம் அருமை.
  படங்கள், செய்திகள் எல்லாம் அருமை.
  பகிர்வுக்கு, வாழ்த்துக்கள், நன்றி.

  யாரோ?
  நான் நினைத்தவர்தானா! என்பதை உங்கள் பதிவில் அறிய காத்து இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. அந்த லெவல் தெரியாமலே பல முறைகளில் குழம்பித்தவிக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 14. 'ழ' எழுத்தின் அருமையை தமிழ் என்ற பதத்தின் பெருமையை பெரியவாள் அருமையாக கி.வா.ஜ. விடம் விளக்கியதை எங்களுக்குத் தந்த தங்கள் பதிவு பெருமைக்குரியது.

  பதிலளிநீக்கு
 15. //நாம் லெவலை மீறாமல், அடக்கமாகச் சென்றால், பரமாத்ம சமுத்திரம், நம்மை எதிர்கொண்டு அழைத்துப் போய்த்தனக்குள் அடக்கம் செய்து கொண்டு விடும். //
  அழகாய்ச் சொன்னீர்கள்!

  பதிலளிநீக்கு
 16. எத்தனை விவரங்கள்..... அடுத்த பதிவுக்கு இதோ இப்பவே வரேன்......

  பதிலளிநீக்கு
 17. மேட்டூர் ஸ்வாமிகள் பற்றிய அரிய தகவல்கள் + புகைப்படங்களுக்கு நன்றி! தமிழுக்கு விளக்கம் மற்றும் அளவீடுகலை வைத்துப் பாடிய பாடல்களுக்கு பொருள் உரைத்த விதமும் அருமை! பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 18. அய்யாவிற்கு வணக்கம்.
  எதிலும் லெவல் என்பது இருந்தால் எல்லாம் சுபம் தான். மேட்டூர் சுவாமிகள் பற்றி தங்கள் மூலமே அறிந்து கொண்டேன். வினாக்கள் எழுப்பி விடையும் கண்டது புதுமை. பெரியாவாளின் விளக்கம் அருமை அய்யா. மாகான்களின் வாய்மொழிகளைப் பகிர்ந்து உலகை நல்வழிப்படுத்தும் முயற்சியில் இறங்கியமைக்கு நன்றிகள் அய்யா. தொடரட்டும் தங்கள் ஆன்மீக சிந்தனைகள்..

  பதிலளிநீக்கு
 19. அடக்கம் அமரருள் உய்க்கும் பகட்டு படாடோபம் சக்திக்கு மீறி செலவு செய்து பெருமைக்காக பின் சிரமப்படும் பலருக்கும் பெரியவாளின் மகத்தான அறிவுறை
  மேட்டூர் ஸ்வாமிகளை காஞ்சிபுரம் சென்ற போதெல்லாம் பூர்வாசிரமத்தில் பார்த்து பேசியது கிடைத்த பாக்யம் எப்பேர்பட்ட மஹான் வாழ்நாள் முழுதும் பெரியவாளுக்குஅர்பணித்தவர் பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 20. அன்பின் வை.கோ

  நதியை வரவேற்கும் கடல் - பதிவு அருமை - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் படங்கள் - காணக் கிடைக்காத படங்கள் அருமை - மேட்டூர் ஸ்வாமிகளீன் படமும் - அவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளிடம் பழகி - துறவறம் பூண்டதும் அருமை. - தீபாவளி அன்று மேட்டூர் சுவாமிகள் சித்தி அடைந்தார்கள் - பதிவு நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 21. அன்பின் வைகோ - மகாப் பெரியவாளீன் தமிழ் அறிவும் - அவர் தமிழ் என்ற சொல்லின் பெயர்க்காரணத்திற்கு அளித்த விளக்கமும் அருமை. - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 22. Such a wonderful explanation about Tamil and feeling great to know about Metur Swamigal,thanks a lot for sharing

  பதிலளிநீக்கு
 23. மகாபெரியவரின் தமிழறிவு பிரமிக்க வைக்கிறது.
  மேட்ரூர் சுவாமிகள் பற்றிய செய்தி படங்களுடன் அருமை.
  பெரியவர்களின் ஆசி உங்கள் பதிவின் மூலம் எங்களுக்குக் கிடைக்கிறது என்பது உண்மை.

  பதிலளிநீக்கு
 24. புண்ணியப் பதிவு.
  பல தெரியக் கிடைத்தது.
  மிக்க நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 25. மகா பெரியவரின் தமிழார்வம் பிரமிப்பா இருக்கு..மேட்டூர் சுவாமிகள் பற்றி இந்த பதிவின்ன் மூலம் அரிந்துக் கொண்டேன்,மிக்க நன்றி ஐயா!!

  பதிலளிநீக்கு
 26. ழ் எனும் எழுத்து மலையாளத்திலும் உண்டு, பெரியவருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை மலையாளம் தமிழின் கிளை மொழி என்று கருதியதால் அப்படிச் சொல்லி இருப்பாரோ என்னவோ. எண்ணிக்கையில் அமைந்த பாடலுக்குப் பொருள் சொன்ன விதம் ரசிக்க வைக்கிறது. இது சிலேடை என்று கொள்ளலாமா.?

  பதிலளிநீக்கு
 27. கோபு அண்ணன் ஓடுங்க ... ஓடுங்க..:)) எங்காவது நல்ல பெரிய புளியங்கொப்பு, மாங்கொப்பில ஏறி இருந்திடுங்கோ:)... முதலாவது படத்தில.. கடல் ஆடுதே:) சுனாமி வரப்போகுதூஊஊஊஊஊஊஊஊஊஊ:))..

  பதிலளிநீக்கு
 28. உண்மைதான்ன் எப்பவுமே விரலுக்குத் தக்கதாக வீக்கம் இருந்திட்டால்ல் எல்லாம் அமைதியாக இருக்கும்.

  //கோவிந்தபுரத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைப்பவர்கள் இந்த மஹானின் ப்ருந்தாவன அதிஷ்டானத்தை 12 பிரதக்ஷணங்கள் செய்து, நான்கு நமஸ்காரங்கள் செய்து விட்டு வரவும். //

  இவர் பற்றிய தகவல் முற்றிலும் புதிது. எங்கு போவது, எதைப் பார்ப்பது, எதைவிடுவது.... காலம் ரொம்பக் குறுகியது...

  பதிலளிநீக்கு
 29. காளமேகப் புலவரின் பாடலும் கருத்தும் மிகநன்றாக இருக்கு.

  பச்சைக்கிளி.. முத்துச்சரம்.. முல்லைக்கொடி... யாரோ ஒரு நம்பாலரைச்:) சொல்றீங்க என்பது மட்டும் புரியுது.. வெளிவரட்டும்.. பார்த்திடலாம்ம்ம்

  பதிலளிநீக்கு
 30. //நாம் லெவலை மீறாமல், அடக்கமாகச் சென்றால், பரமாத்ம சமுத்திரம், நம்மை எதிர்கொண்டு அழைத்துப் போய்த்தனக்குள் அடக்கம் செய்து கொண்டு விடும//

  arumayana thodakkam!

  with various life incidents with spiritual leaders, the post gave so many spiritual explanations. Thanks for sharing Gopu Sir.

  Thanks for the wishes and blessings :-)

  பதிலளிநீக்கு
 31. மேட்டுர் சுவாமிகள் சரித்திரம் படிக்கப் பெற்றேன் நன்றி.
  பெரியவாளின் " தமிழ் " அர்த்தம் தெரியத் தந்தமைக்கு நன்றி.
  அதுவும் ஏகாம்பரேஸ்வரரின் பெருமையை விளக்கும் பாடலும், அதற்கு மஹா பெரியவரின் விளக்கமும் எத்தனை அருமை!
  நன்றி கோபு சார் மஹா பெரியவரின் அமுதங்காலி வாரி வழங்குவதற்கு.

  பதிலளிநீக்கு
 32. Sage of Kanchi தளத்தில் மேட்டூர் ஸ்வாமிகள் சித்தி அடைந்தது குறித்துப் படித்தேன். ஆனால் இப்போது தான் அவரைக்குறித்த முழுத் தகவல்களையும் படித்துத் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 33. எத்தனை ஆழமான அற்புதமான விஷயங்கள்
  தங்கள் பதிவின் மூலம்தான் இத்தனை
  உன்னதமான விஷயங்களை அறிந்து கொள்ளமுடிகிறது
  எப்படி நன்றி சொல்வதெனத் தெரியவில்லை
  பொக்கிஷங்கள் தொடர வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 34. Such a divine post, thanks for sharing. I was just wondering how you seem to get the photos, they are such a great treasure...

  பதிலளிநீக்கு
 35. பரமாத்ம சமுத்திரம் விளக்கம் சிந்திக்க வைக்கின்றது.

  பதிலளிநீக்கு
 36. தமிழ் ஆழம் காணமுடியாத பெருங்கடல்
  அதில் மூழ்க மூழ்க முத்துக்கள்
  கிடைத்துக்கொண்டே இருக்கும்
  தமிழார்வம் கொண்டவர்களுக்கு.

  மற்றபடி தமில் டாமில் என்று
  உணர்ச்சிவசப்பட்டு வெற்றுக் கூச்சல் போடுபவர்களுக்கு அதன் அருமை தெரியாது.

  பெரியவா சகல கலா வல்லவர் என்பது
  எல்லோருக்கும் தெரியும் வண்ணம்
  பதிவுகளை வெளியிடும்
  உமக்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 37. கோவிந்தபுரத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைப்பவர்கள் இந்த மஹானின் ப்ருந்தாவன அதிஷ்டானத்தை 12 பிரதக்ஷணங்கள் செய்து, நான்கு நமஸ்காரங்கள் செய்து விட்டு வரவும்

  Thanks for this info. Sure I will visit here.

  பதிலளிநீக்கு
 38. மேட்டூர் ஸ்வாமிகள் பற்றிய விவரங்கள் புதிதானவை! நன்றி

  தமிழுக்கு அழகான பொருளுரைத்த பெரியவா, பாடலையும் இலக்கண சுத்தமாக விளக்கியுள்ளாரே!!

  பதிலளிநீக்கு
 39. மேட்டூர் சுவாமிகள் பற்றி அறிந்து கொண்டேன். ஏற்கனவே அவரைப் பற்றி ஒன்றிரண்டு வரிகளில் ஒரு பதிவில் நீங்கள் எழுதியிருப்பதாக நினைவு. கிவாஜ என்றாலே சிலேடைத் தமிழ்தான்.

  பதிலளிநீக்கு
 40. மேட்டூர் ஸ்வாமியைப் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். எத்தனை பெரிய மகான்! தகவல்களுக்கு நன்றி. மாலை மாற்றுப்பதிகம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். காளமேகப்புலவரின் பாட்டிற்கு பெரியவாளின் விளக்கம் அருமை.

  பதிலளிநீக்கு
 41. தமிழுக்கு விளக்கம் கொடுத்த பெரியவா பேச்சை கிவாஜ ஏற்றுக்கொண்டது அருமை.

  பதிலளிநீக்கு
 42. மேட்டூர் ஸ்வாமிகள் பற்றிய தகவல்களும் தமிழுக்கு விளக்கம் கொடுத்ததும் சிறப்பு

  பதிலளிநீக்கு
 43. //நாம் லெவலை மீறாமல், அடக்கமாகச் சென்றால், பரமாத்ம சமுத்திரம், நம்மை எதிர்கொண்டு அழைத்துப் போய்த்தனக்குள் அடக்கம் செய்து கொண்டு விடும். //

  YOU SHOULD KNOW YOUR LIMIT அப்படீன்னு சொல்லறாளே அதானோ இது.

  மேட்டூர் சுவாமிகள் பற்றிய தகவல் முன்பே தெரிந்திருந்தால், இரண்டு முறை கோவிந்தபுரம் சென்றிருந்தபோது தரிசித்திருப்பேன். பாக்கியம் இருந்தால் அடுத்த முறை வாய்ப்பு கிடைக்காமலா போய் விடும்.

  பதிலளிநீக்கு
 44. கோபு அண்ணா,
  உங்களுக்கு ஒரு வேண்டுகோள். அதிஷ்டானங்களைப் பற்றியும், அது யாருடையது என்பதைப் பற்றியும், அந்த மகான்களைப் பற்றியும் தனியாக பதிவு போடுங்களேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   //மேட்டூர் சுவாமிகள் பற்றிய தகவல் முன்பே தெரிந்திருந்தால், இரண்டு முறை கோவிந்தபுரம் சென்றிருந்தபோது தரிசித்திருப்பேன். பாக்கியம் இருந்தால் அடுத்த முறை வாய்ப்பு கிடைக்காமலா போய் விடும்.//

   நிச்சயமாகக் கிடைக்கும்.

   //கோபு அண்ணா, உங்களுக்கு ஒரு வேண்டுகோள். அதிஷ்டானங்களைப் பற்றியும், அது யாருடையது என்பதைப் பற்றியும், அந்த மகான்களைப் பற்றியும் தனியாக பதிவு போடுங்களேன்.//

   NOTED. இது ஏதோ இந்தப்பதிவினை வெளியிடும் சமயம் .. தீபாவளி நேரம் ... அவர்களின் பிருந்தாவனப்பிரவேசம் நிகழ்ந்துவிட்டதாலும் .... ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளிடம் மிகுந்த பக்தியுடன் இருந்த மஹான் என்பதாலும் இதிலேயே சொல்வது பொருத்தமாக இருக்கும் என நினைத்து வெளியிட்டு விட்டேன்.

   தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 45. மேட்டீர் ஸ்வாமிகள் பற்றி உங்க பதிவு மூலமாகத்தெரிந்து கொள்ளமுடிந்தது. "ழ" எழுத்தின் மகிமை தமிழுக்கே உள்ள தனிச்சிறப்பு.

  பதிலளிநீக்கு
 46. நாம் லெவலை மீறாமல், அடக்கமாகச் சென்றால், பரமாத்ம சமுத்திரம், நம்மை எதிர்கொண்டு அழைத்துப் போய்த்தனக்குள் அடக்கம் செய்து கொண்டு விடும்.// இன்றைய அமுதத்துளி அளிக்கும் படிப்பினை...மேட்டூர் ஸ்வாமிகள் குறித்த பதிவும் ஒரு தனி அனுபவம்.

  பதிலளிநீக்கு
 47. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (23.07.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:-

  https://www.facebook.com/groups/396189224217111/permalink/450890385413661/

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 48. இந்த பதிவின் மற்றொரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (24.07.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:-

  https://www.facebook.com/groups/396189224217111/permalink/452451228590910/

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு