என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 14 நவம்பர், 2013

80 ] எது மூட நம்பிக்கை ?

2
ஸ்ரீராமஜயம்


[ நம்முடைய  கண்ணாடி  தலைக்குமேல்  ஏறலாம்.  
''நான்''   என்ற அகந்தைதான்  தலைக்கு மேல்  ஏறக்கூடாது  
என்கிறாரோ ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாப்பெரியவா !! ]

-oOo-



இப்போது கடைசியில் ஒருத்தருக்கும் ஒரு மதச்சின்னமும் இல்லை என்று ஆக்கிக்கொண்டிருக்கிறோம்.

பாக்கி அடையாளங்களை வெட்கப்படாமல் போட்டுக் கொள்கிறோம்.

ஆத்மாவுக்கு நல்லது செய்கிற மதச்சின்னங்களைப் போட்டுக்கொள்ள மட்டும் வெட்கப்படுகிறோம்.

‘எல்லாம் ஸ்யூபர்ஸ்டிஷன் [மூட நம்பிக்கை]’ என்கிறோம்.

சீர்திருத்தம் என்று ஆரம்பிக்கிறோம்.

இப்படிச் சொல்லிக்கொண்டே சீர்திருத்தக்காரர்கள் என்று அடையாளம் தெரிவதற்காக ஒரு குல்லா போட்டுக்கொள்கிறோம் அல்லது ஏதோ ஒரு கலரில் சட்டை துண்டு போட்டுக்கொள்கிறோம்.  

இவற்றிற்கு தெய்வத்திற்கும் மேலான முக்கியத்வம் தருகிறோம். 

ஒவ்வொரு குடும்பத்திலும் ஈஸ்வர பூஜை நடக்க வேண்டும். ஒரு மணிச் சத்தம் கேட்க வேண்டும். கோயிலிலும், வீட்டு பூஜையிலும் ஸ்வாமிக்கு ஐந்து உபசாரம் செய்ய வேண்டும்.

oooooOooooo

ஓர் சில சுவாரஸ்யமான 
சம்பவங்கள்.

காஞ்சி மஹாப்பெரியவரை தங்கள் குருவாக ஏற்றவர்கள் எத்தனையோ பேர் உண்டு. வாழும் தெய்வமான அவரை, இன்றும் கூட பலரும் மானசீக குருவாக ஏற்று வருகின்றனர். 

ஆனால், அந்த குரு, தனக்கு குரு என்று யாரைச் சொன்னார் தெரியுமா? தெரிந்தால், மிகவும் ஆச்சரியப்படுவீர்கள்.

மஹாபெரியவரிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒரு பணக்கார பக்தர், அடிக்கடி காஞ்சி மடம் வந்து பெரியவரைத் தரிசித்து செல்வார். ஒருமுறை, அவர் தனது குடும்பத்தாருடன், தான் வாங்கிய புதிய காரில் மடத்திற்கு வந்தார். 

அதுசமயம் ஸ்ரீ மஹாபெரியவா அவர்கள் அருகிலுள்ள கலவை கிராமத்திற்கு சென்றுள்ளார் என்பதை அறிந்து, இவரும் அங்கு சென்றார்.


கலவையில் பெரியவரைத் தரிசித்த அவர், தன் கார் சாவியை பெரியவரிடம் கொடுத்து, “பெரியவரே! தாங்கள் தொட்டு ஆசிர்வதிக்க வேண்டும்,” என்றார்.



பெரியவர் அவரிடம், கலவையில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயரைச் சொல்லி, “நீ அங்கு செல். அங்குள்ள மரத்தின் அடியில், ஒரு பெரியவர் தாடி மீசையுடன் படுத்திருப்பார். அவரை உன் புதுக்காரில் அழைத்து வா,” என்று உத்தரவிட்டார்.

பெரியவர் சொன்னபடியே, அவரும் அங்கு சென்று அந்த முதியவரை அழைத்து வந்தார். இருவரும் பெரியவர் முன்னால் அடக்கமாக நின்றனர்.

பெரியவர் பணக்காரரிடம்,

“இவரை யாரென்று உனக்குத் தெரியாது. ஏன் அழைத்து வரச்சொன்னேன் என்றும் தெரியாதல்லவா ! 

இவர் தான் எனக்கு குரு. 

நான் துறவுப்பட்டம் ஏற்பதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து கலவைக்கு வந்தேன். 

அங்கிருந்து என்னை “ஜட்கா’வில் (குதிரை வண்டி) அழைத்து வந்தவர் இவர் தான். 

வரும் வழியில் ஸ்ரீமடம் குறித்தும், அங்குள்ள நடைமுறைகள் குறித்தும், தனக்குத் தெரிந்த மொழியில் (இயல்பான பேச்சு) எனக்குச் சொல்லிக்கொண்டே வந்தவர். 

அவர் மூலம் பல விஷயங்களை நான் அறிந்து கொண்டேன், அது மட்டுமல்ல, மிகவும் ராசியானவரும் கூட. 

அவர் கையில் சாவியைக் கொடுத்து வாங்கிக்கொள், நலமாய் இருப்பாய்,” என்றார்.

ஆச்சரியப்பட்ட பணக்காரர், அந்த முதியவரிடம் சாவியைக் கொடுத்து வாங்கிக் கொண்டார். 

ஜாதி மதம் பாராமல், தனக்காக ஜட்கா ஓட்டி வரும் போது, இயல்பான தகவல்களைச் சொன்னவரை தனது குருவாக ஏற்ற மஹாபெரியவரின் பரந்த மனப்பான்மையை புகழ்வதற்கு வார்த்தைகள் ஏது !

அந்த தெய்வத்தை நம் மானசீக குருவாக ஏற்று, அவரது நல்லாசியுடன் உயர்ந்த நிலையை அடைவோம்.


[Thanks to  sage of kanchi 26.09.2013 ]

oooooOooooo

[ 2 ]


செல்லம்மா பாட்டி 

செய்த பாதபூஜை


பெரியவாளையே, தன் வாழ்க்கையாக, ஸத்குருவாக, தோழராக, யஜமானராக பல வழிகளில் வழிப்பட்டு ஸதா அவரையே சிந்தையில் நிறுத்தி வழிபட்ட செல்லம்மா பாட்டிக்கு அவர் செய்த அருளை பார்ப்போம். 

ஒரு முறை பெரியவா திருவாரூருக்கு வருகை புரிந்திருந்தார். 

பாட்டிக்கு பெரியவாளுக்கு பாதபூஜை செய்ய ஆவல். 

வருமானம் ஏதும் இல்லாத பாட்டி தன் தங்கை மகனிடம் ரூ.200 கடனாகக் கேட்கிறார்.

அவர் இல்லை என்று கூற பாட்டி, மனம் நொந்து கண்ணீர் சிந்தி இறைவனை மானசீகமாக கேட்கிறார்.



பகல் ஸ்வப்பனத்தில் ஒரு குட்டையான மனிதர் வேஷ்டி, அங்கவஸ்த்திரம் தரித்து, “உனக்குப் பணம்தானே வேண்டும், கட்டாயம் தருகிறேன்” என்று கூறி மறைந்து விட்டார். 

பகல் ஸ்வப்பனம் பலிக்காதே என்ற கவலையோடு மீண்டும் இறைவனிடம், தன் எண்ணம் ஈடேறும் வரை, ஆகாரம் எடுக்காமல் தியானத்திலேயே இருக்கிறார்.

அப்பொழுது அவர் தங்கை மகன், “பெரியம்மா உனக்கு மணி ஆர்டர் வந்திருக்கிறது” என்று கூறினார். 

அனுப்பியது யார் என்ற விவரம் அதில் இல்லை, பாட்டி புரியாமல் திகைத்தார். பெரியவா தன் ஆசையை நிறைவேற்றச் செய்த ஆச்சரியத்தை எண்ணி பாட்டி ஆனந்த கண்ணீர் விட்டார். 

உடனே ஸ்ரீ மடத்தில் பணத்தைக் கட்டி, பாதுகா பூஜை செய்து பேரானந்தம் அடைந்தார். 

ஆனால் பணம் அனுப்பியது யார் என்று கடைசி வரை தெரியவில்லை.

[ நன்றி: அமிர்த வாஹினி 23.07.2013 ]

oooooOooooo


[ 3 ]



'ஆனந்த விகடன்' ஆசிரியராக இருந்த எழுத்தாளர் 

மணியன். பிற்காலத்தில் தனக்குச் சொந்தமாக '
இதயம் பேசுகிறது' என்கிற பத்திரிகையை 
ஆரம்பித்தார்.


அந்தப் பத்திரிகையில் அவர் வெளிநாட்டுக்குச் 
சென்று இருந்தபோது நடந்த ஓர் அற்புதமான 
விஷயத்தைக் குறிப்பிட்டு இருக்கிறார். 







எந்த 
நாட்டிற்குப் போனாலும் அவர் தங்கும் அறையில் 

இருக்கும் மேஜை மீது காஞ்சி மஹானின் படத்தை 
வைத்து, தினமும் வணங்குவது வழக்கம். அவர் 



அப்போது தங்கி இருந்தது ஓர் ஆங்கிலேயரின் வீடு.


வீட்டின் சொந்தக்காரர், மணியனிடம் 
"படத்தில் இருப்பவர் யார்?" என்று கேட்டு 
இருக்கிறார்.  



"அவர் நான் வணங்கும் தெய்வம்" 
என்று பதில் சொன்னார் மணியன்.

"சக்தி வாய்ந்த தெய்வமா அவர்? நாம் நினைத்தது 
நடக்குமா? என்று ஆங்கிலேயர் ஒரு வினா எழுப்ப, 
அதற்கும் மணியன் பதில் சொன்னார்.

"நாம் உண்மையாக வேண்டிக் கொண்டால், 
நிச்சயம் நாம் நினைத்தது நடக்கும். அந்த 
கருணைக்கடல் அதை நிறைவேற்றி வைப்பார்.

மணியன் சொன்ன தோரணை, அவர் குரலில் 
ஒலித்த பக்தி, ஆங்கிலேயரை நம்பச் செய்தது.

"என் மகன் எங்கோ போய்விட்டான்... அவனைப் 
பிரிந்து என் மனைவி ஓயாமல் அழுது கொண்டு 
இருக்கிறாள். அதனால்தான் ஒரு நம்பிக்கையோடு 
உங்களிடம் கேட்டேன்"

"எங்கள் குருவான காஞ்சி மஹானை நீங்கள் 
மனமுருகி பிரார்த்தியுங்கள்.. உங்களுக்கு அவரது அருள்
நிச்சயம் கிட்டும்”.

மணியன் வாக்கை அப்படியே ஏற்றுக்கொண்ட 
ஆங்கிலேயர், காஞ்சி தெய்வத்தின் படத்தின் 
முன் நின்று மனமுருகி வேண்டி தனக்கு 
அருள் புரியும்படி வேண்டிக் கொண்டார்.

சில மணி நேரம் கடந்ததும், அவரது வீட்டு 
போன் ஒலித்தது. 



ஆங்கிலேயர் போய் போனை 
எடுத்தார். போனில் வந்த செய்தி அவருக்கு 
அளவு கடந்த வியப்பை அளித்தது.

காணாமற்போன அவரது மகன்தான் பேசினான்.

தான் எங்கேயோ போயிருந்ததாகவும், 
இப்போது ஊருக்கு வந்துவிட்டதாகவும், உடனே 
வீட்டுக்கு வருவதாகவும் தகவல் சொன்னான்.

ஆங்கிலேயருக்கு மெய் சிலிர்த்தது. காஞ்சி மஹானை 
வணங்கியபடியே, மணியனுக்கு நன்றி சொன்னார்.

"எங்கள் தெய்வம்... இவர்தான்.... இந்த உருவில்தான் 
தெய்வத்தைப் பார்ப்போம்" என்று கடல் கடந்து 
எங்கேயோ இருந்த ஆங்கிலேய தம்பதிகள் 
ஆனந்த அனுபவத்தில் உருகி நின்றார்கள்.
 


[ அமிர்த வாஹிணியில் வந்த செய்தி --- 17-07.2013 ]

oooooOooooo

ஓர் மகிழ்ச்சியான செய்தி



என் பதிவுகளுக்குத் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவரும் நம் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திருமதி. கோமதி அரசு அவர்கள், தனது வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, தாய்நாடு திரும்பியுள்ளார்கள்.



அமெரிக்காவில் உள்ள நியூஜெர்ஸிக்கு இன்பச்சுற்றுலாவாகச் சென்றிருந்த திருமதி கோமதி அரசு அவர்கள்  தனது சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 11.11.2013 அன்று அமெரிக்காவிலிருந்து கிளம்பி, ஜெர்மனி வந்து, அங்கிருந்து வேறு விமானத்தில் ஏறி பெங்களூருக்கு வந்திறங்கி, பெங்களூரிலிருந்து மீண்டும் வேறொரு விமானம் மூலம் கோவைக்கு செளகர்யமாக வந்து சேர்ந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 


கோவையில் உள்ள நெருங்கிய உறவினர் வீட்டில் ஒரு வாரம் தங்கிவிட்டு, தன் சொந்த ஊரான மயிலாடுதுறை [மாயவரம்] செல்ல இருக்கிறார்கள். 

W E L C O M E 
TO 

 

Mrs. GOMATHI ARASU Madam




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

56 கருத்துகள்:

  1. பகல் கனவுகூட பெரியவாளை நினைத்ததால் பலித்திருக்கிறது.
    செல்லமா பாட்டியின் குரு பக்தியது. மதச்சின்னங்கள் மறந்து விட்டது. சொன்னால் மனச் சினம் தலை தூக்குகிறது. இப்படி எனக்குத் தோன்றுகிறது.
    மணியனின் இதயம் பேசுகிறதில் நீங்கள் குறிப்பிட்ட ஆங்கிலேயரின் நம்பிக்கை பலித்தது படித்தது ஞாபகம் வந்தது.
    கோமதி அரசு அவர்கள் இந்தியா திரும்பியது நல்வரவாகுக.
    அமுத மொழிகளின் இடுகைகள் அருமையாக இருக்கிரது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  2. Guruvin gurvai arinthi mika mika makilsi.

    Aha chellamma pattiyin santhoshathai unara mudikirathu.

    Oru angelayarukku arul purintha Deivam enakkum arulkudukkuma?
    Arulkidaikumma>?????????????
    velinattu payanam innimayanathuthan. Gomathiarasu avarkalum enjoy seithrupparkal ennru namukiren.
    viji

    பதிலளிநீக்கு
  3. என் பதிவுகளுக்குத் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவரும் நம் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திருமதி. கோமதி அரசு அவர்கள், தனது வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, தாய்நாடு திரும்பியுள்ளார்கள்.

    Welcome !

    பதிலளிநீக்கு
  4. நாம் உண்மையாக வேண்டிக் கொண்டால்,
    நிச்சயம் நாம் நினைத்தது நடக்கும். அந்த
    கருணைக்கடல் அதை நிறைவேற்றி வைப்பார்.

    True !

    பதிலளிநீக்கு
  5. பகல் ஸ்வப்பனம் பலிக்காதே என்ற கவலையோடு மீண்டும் இறைவனிடம், தன் எண்ணம் ஈடேறும் வரை, ஆகாரம் எடுக்காமல் தியானத்திலேயே இருக்கிறார்.

    பக்தி ஜெயித்தது !

    பதிலளிநீக்கு
  6. ஜாதி மதம் பாராமல், தனக்காக ஜட்கா ஓட்டி வரும் போது, இயல்பான தகவல்களைச் சொன்னவரை தனது குருவாக ஏற்ற மஹாபெரியவரின் பரந்த மனப்பான்மையை புகழ்வதற்கு வார்த்தைகள் ஏது !

    கருணைக் கடல் !

    பதிலளிநீக்கு
  7. இரு நிகழ்ச்சிகளுமே படித்தவை தான் என்றாலும் பெரியவாளைப் பற்றிய செய்திகள் மீண்டும், மீண்டும் படிக்கப் படிக்கப் பரவசம் ஊட்டுபவை. இன்றைய மனோநிலைக்கு ஆறுதலாகவும் இருந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  8. கோமதி அரசு அவர்கள் தாய்நாடு திரும்பியது குறித்து மகிழ்ச்சியும், வரவேற்பும். தாய்நாட்டுக்கு நல்வரவு.

    பதிலளிநீக்கு
  9. விஸ்வரூப தரிசனம் நிஜ பாத தரிசனம் - அற்புதம் .. நமஸ்காரங்கள்..!

    பதிலளிநீக்கு
  10. ஜாதி மதம் பாராமல், தனக்காக ஜட்கா ஓட்டி வரும் போது, இயல்பான தகவல்களைச் சொன்னவரை தனது குருவாக ஏற்ற மஹாபெரியவரின் பரந்த மனப்பான்மையை புகழ்வதற்கு வார்த்தைகள் ஏது !

    குருவின் அளவிடற்கரிய பெருமைகள் ..!

    பதிலளிநீக்கு
  11. பெரியாவா தன் ஆசையை நிறைவேற்றச் செய்த ஆச்சரியத்தை எண்ணி பாட்டி ஆனந்த கண்ணீர் விட்டார்.

    ஆச்சரியமான நிகழ்வுகள்..!

    பதிலளிநீக்கு
  12. அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திருமதி. கோமதி அரசு அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  13. பக்தி பகல்வேஷம் என்பதாக இருக்ககூடாது ஆத்மார்த்தமான பக்திக்கு அனுபவபூர்வமாக பலன் தெரியும் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாயவே மஹாபெரியவாளிடம் பக்தி கொள்வோர் எந்த மனக்கஷ்டமும் நீங்கி ஆனநத ப்படுவது அனுபவபூர்வமான உண்மை .நீறில்லா நெற்றி பாழ்.அவரவர் சின்னஙகளை அணிவோம் நன்றி

    பதிலளிநீக்கு
  14. மதச்சின்னங்கள் குறித்த பெரியவாளின் பார்வை தீர்க்கமானது! பெரியவாளின் அற்புதங்கள் ஆனந்தத்தை வரவழைக்கின்றன! அருமையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  15. ''..ஆங்கிலேயருக்கு மெய் சிலிர்த்தது...'''
    எனக்கும் தான்.
    திருமதி கோமதி வருகை மகிழ்ச்சி.
    அங்கிருந்தாலும அன்புள்ளம் அவர் எனக்குக் கருத்துகள் இட்டார்.
    தங்கள் பதிவு இனிமை. ரசித்து வாசித்து மகிழ்ந்தேன்.
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  16. நம்முடைய கண்ணாடி தலைக்குமேல் ஏறலாம்.
    ''நான்'' என்ற அகந்தைதான் தலைக்கு மேல் ஏறக்கூடாது
    என்கிறாரோ ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாப்பெரியவா !! ]
    //அருமை! இரசித்தேன்! ஒவ்வொருவர் அனுபவமும் மெய்சிலிர்க்க வைத்தது! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் அய்யா..
    //ஜாதி மதம் பாராமல், தனக்காக ஜட்கா ஓட்டி வரும் போது, இயல்பான தகவல்களைச் சொன்னவரை தனது குருவாக ஏற்ற மஹாபெரியவரின் பரந்த மனப்பான்மையை புகழ்வதற்கு வார்த்தைகள் ஏது !// எவ்வளவு பெரிய விசயம் அதான் அவர் பெரியவர்.

    பதிலளிநீக்கு
  18. பெரியவரை நினைத்து படுத்தால் பகல் கனவு கூட பலிக்கிறதே. என்னே ஒரு ஆச்சரியம். உண்மையில் தங்கள் மூலம் பெரியாவாளின் அற்புதங்களைத் தெரிந்து கொள்கிறேன். படிக்கும் போதே மெய்சிலிர்க்கிறேன். அற்புதங்களை நீங்களும் அற்புதமாகப் பதிவிடுவது சிறப்பு அய்யா..

    பதிலளிநீக்கு
  19. வெளிநாட்டு தம்பதியினருக்கு அருளிய பெரியவரின் மகிமையே மகிமை. வேண்டுவதை உடனே அருள்வது சத்திய புருசனான பெரியாவாளுக்கே சாத்தியமாகிறது. அவரின் மகிமை கண்டு அகம் மகிழ்கிறது. பகிர்வுக்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  20. தனது வெளிநாட்டு பயணத்தை சிறப்பாக முடித்து தாயகம் வந்திருக்கும் அன்பிற்குரிய சகோதரி, அம்மா அவர்களுக்கு எனது இதயம்கனிந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. திருமதி கோமதி அரசுவிற்கு ,"Welcome back Home".
    மஹா பெரியவரின் குரு பற்றி அறிந்து வியப்படைந்தேன்.
    பாட்டிக்கு அருளியவிதமும் நெகிழ்ச்சியளித்தது.
    நன்றி.வாழ்த்துக்கள்.
    தொடருங்கள்.....

    பதிலளிநீக்கு
  22. பகல் கனவு கூட பெரியவரின் மீதுள்ள பக்தியால் பலித்துள்ளது...அற்புதம்,பகிர்வுக்கு நன்றி ஐயா!!

    பதிலளிநீக்கு
  23. திருமதி. கோமதி அரசு அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  24. தன்னுடைய கண்ணாடியை நெற்றிக்கு மேல் ஏற்றிக்கொண்ட பெரியவரின் வித்தியாசமான படத்தை இப்போதுதான் பார்க்கிறேன்.
    பெரியவர் துறவுப்பட்டம் ஏற்பதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து கலவைக்கு வந்தபோது ஜட்காவில் அழைத்து வந்தவர்தான் அவரது குரு என்றபோது, அவரை ஞானகுருவாத் தெரிந்து கொண்டேன். செல்லமாள் பாட்டி, எழுத்தாளர் மணியன் நிகழ்ச்சிகளையும் தெரிந்து கொண்டேன்.

    சகோதரி கோமதிஅரசு அவர்களுக்கு வாழ்த்துக்கள்!



    பதிலளிநீக்கு
  25. சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை ..Very nice..

    பதிலளிநீக்கு
  26. அழகான அருமையான பகிர்வு.. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  27. பெரியவரின் குருவும், செல்லம்மா பாட்டியின் பாத பூஜையும் படித்து வியந்திட்டேன்.

    ///ஆனால் பணம் அனுப்பியது யார் என்று கடைசி வரை தெரியவில்லை.///// இன்னுமா புரியவில்லை அது அதிராதான் என:)) ஹையோ ச்சும்மா ஒரு ஆசையில் சொன்னேன்ன்.. மன்னிச்சிடுங்கோ:))

    பதிலளிநீக்கு
  28. அமிர்த வாஹினி செய்தி கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு.

    திருமதி கோமதி அரசு அவர்கள்.. அமெரிக்காவிலிருந்து அதிராவுக்கு என்ன வாங்கி வந்திருக்கிறா:) என ஒருக்கால் கேட்டுச் சொல்லுங்கோ கோபு அண்ணன்.... எதுக்கோ?.. இல்ல அட்ரஸ் அனுப்பத்தான்ன்:)).. அப்போதானே பார்சலில் அனுப்ப முடியும்:).

    பதிலளிநீக்கு
  29. மதச் சின்னங்களை அவமதிப்பதனாலோ அல்லது மூட நம்பிக்கை என்று விட்டு விலகுவதனாலோ இறைவன் இல்லை என்றாகி விடுமா !!செல்லமாப் பாட்டி போன்று அன்று தொட்டு இன்றுவரை நாமும் இறைவனின் அதிசயத்தைக் கண்டு வியந்தவண்ணமே தான் உள்ளோம் .
    இறைவன் எங்கும் நிறைந்திருக்கின்றான் என்ற உணர்வே மனிதனை மனிதனாக வாழ வைத்துக் கொண்டு இருக்கின்றது .அருமையான பகிர்வு கண்டு மகிழ்ந்தேன் .திருமதி .கோமதி அரசுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  30. செல்லம்மா பாட்டி, ஆங்கிலேயர் என பெரியவரின் மகிமையை தொடர்ந்து படிக்க ஆச்சர்யம்... ஆனந்தம்... பரவசம் கிடைக்கிறது...

    பதிலளிநீக்கு
  31. very beautiful and informative post sir, thank you very much for sharing...

    பதிலளிநீக்கு
  32. திருமதி. கோமதி அரசு அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  33. காணாமல் போன மகனை மீண்டும் பெற்ற அந்த சேதி படிக்க நெகிழ்ந்துபோனோம். பெரியவாளின் கருணையும் அருளும் தங்கள் பதிவின் வழி படித்து மகிழ்கிறோம்...

    பதிலளிநீக்கு
  34. நம்பிக்கை மலையையும் நகர்த்தும்- உதாரணம் ஆஞ்சநேயசுவாமி -அவர் மலையையே தூக்கி கொண்டு வந்து விட்டார்
    நம்பிக்கை இருந்தால் கடலையே குடித்து விடலாம்- அகத்திய பெருமான் ஏழு கடலையும் குடித்துவிட்டார்.
    அதுபோல் தான் பெரியவாவின் மீது நம்பிக்கை
    வைத்தவர்களின் நம்பிக்கை என்றும் வீண் போனது கிடையாது.

    நல்லதோர் சத்சங்கம் இல்லையென்றால்
    நல்லதோர் சிந்தனைகள் இல்லை
    நல்ல சிந்தனைகள் இல்லையென்றால்
    நல்லதோர் வாழ்க்கையில்லை.

    ஹிந்து தர்மத்தின் மகிமையை உணராது
    மனம் போன போக்கில் வாழ்ந்தால்
    வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி ஏது ?

    பெரியவரின் அறிவுரைகளை சிரமேற்கொண்டவர்கள்
    சீரும் சிறப்புமாகதான் வாழ்கிறார்கள் என்பதில் கடுகளவும் ஐயமில்லை.

    பதிலளிநீக்கு
  35. காஞ்சி பரமாச்சார்ய ஸ்வாமிகளின் கீர்த்திகளைப் படிக்கும் போது மெய் சிலிர்க்கின்றது!.. மனம் நிறைவான தகவல்களுடன் அருமையான பதிவு!..

    பதிலளிநீக்கு
  36. இனி கோமதி அக்காவின் பயணக்கட்டுரையை எதிபார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  37. பதிவினை ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  38. I think that my previous comment was not saved properly....
    //சீர்திருத்தம் என்று ஆரம்பிக்கிறோம்.

    இப்படிச் சொல்லிக்கொண்டே சீர்திருத்தக்காரர்கள் என்று அடையாளம் தெரிவதற்காக ஒரு குல்லா போட்டுக்கொள்கிறோம் அல்லது ஏதோ ஒரு கலரில் சட்டை துண்டு போட்டுக்கொள்கிறோம். // inRu eththanai perukku ithu poruththamaaga irukkirathu!! Periyavaalin thanithuvame anraiya nadappukerpa, puriyumpadi azhagaana vaarththaikalil solli vilanga vaippadhu!!
    Thanks!

    பதிலளிநீக்கு
  39. ஜட்கா ஓட்டுனரிலிருந்து வெளி நாட்டு மனிதர் வரை எத்தனை எத்தனை பேருக்கு அவரது அன்பு கிடைத்து விட்டது.....

    படித்தேன். பரவசம் அடைந்தேன்.... தொடரட்டும் அமுத மொழிகள்.

    பதிலளிநீக்கு
  40. அன்பின் வை.கோ

    எது மூட நம்பிக்கை - பதிவு அருமை

    கண்ணாடியைத் தலைக்கு ஏற்றிக் கொண்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் படம் நன்று நன்று - இது வரை பார்க்காத படம்.

    விஸ்வரூப தரிசனம் நிஜ பாத தரிசனம் - நன்று நன்று

    குடும்பத்தில் ஈஸ்வர பூஜை - மணீச்சத்தத்துடன் கூடிய பூஜை நடக்க வேண்டும் - சத்தியமான சொற்றொடர்.

    மகாப் பெரியவா - மடத்துச் செய்திகளை இயல்பாகக் கூறிய ஜட்கா வண்டி ஓட்டுனரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டது பற்றிய அரிய தகவல் பகிர்வினிற்கு நன்றி

    செல்லம்மா பாட்டி செய்த பாத பூஜை - அதனைச் செய்ய பணமில்லாத நேரத்தில் மணி ஆர்டர் வந்தது நற்செயல். அதுதான் மகாப் பெரியவாளின் செயல்.

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளை வணங்கியவுடன் - காணாமல் போன பைஅயன் த்ஜிரும்ப வந்ததும் - அதுவும் அயலகத்தில் -அயல் நாட்டூக் காரருக்கு மகாப் பெரிய்வாளின் அனுக்ரஹம் . அருமை அருமை

    கோமதி அரசு தன் வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தை வெற்றி கரமாக சிறப்புடன் முடித்துத் தாயகம் திரும்பியது நற்செயல்.

    வருக வருக என வரவேற்கிறேன்

    நல்வாழ்த்துகள் கோமதி அரசு

    நல்வாழ்த்துகள் வை.கோ


    நட்புடன் சீனா



    பதிலளிநீக்கு
  41. தாங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் மெய் சிலிர்க்க வைத்தன....

    கோமதிம்மா இந்தியா திரும்பியது குறித்து மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  42. பாதபூஜை, மகன் திரும்பியது அற்புத நிகழ்வுகள். எல்லாம் அவரின்அருள்.

    கோமதி அரசு அவர்கள் சுற்றுப் பயணம் முடித்து நாடு திரும்பியது அறிந்து மகிழ்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  43. ஒவ்வொரு குடும்பத்திலும் ஈஸ்வர பூஜை நடக்க வேண்டும். ஒரு மணிச் சத்தம் கேட்க வேண்டும். கோயிலிலும், வீட்டு பூஜையிலும் ஸ்வாமிக்கு ஐந்து உபசாரம் செய்ய வேண்டும்//

    அருமையான அமுத மொழி.
    அவ்ர் அவர்கள் மத சின்னம் அணிந்து , பூஜை செய்வது மிகவும் அவசியம்.
    அற்புத நிகழவுகள் பகிர்வும் படங்களும் மிக அருமை.
    எனக்கு இவ்வளவு சிறப்பு அளித்து கெளரவப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி சார்.
    அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
    உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  44. ஒவ்வொரு நிகழ்வும் மனதை நெகிழச்செய்கிறது.

    பதிலளிநீக்கு
  45. உலகில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நற்செய்தி வைத்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  46. அமுத மொழிகள் கேடக படிக்க படிக்க இன்னும் இன்னும் னுதான் எதிர் பார்க்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  47. // ஆத்மாவுக்கு நல்லது செய்கிற மதச்சின்னங்களைப் போட்டுக்கொள்ள மட்டும் வெட்கப்படுகிறோம்.//

    நீர் இல்லா நெற்றி பாழ்.

    திருநீறு இருக்கட்டும். கொசுப் பொட்டுகளை விட்டு கொஞ்சம் கண்ணுக்குத் தெரியறமாதிரி பொட்டு இட்டுக்கக் கூடாதோ? என் சின்ன வயசுல எல்லாம் பொட்டு இட்டுக்க மறந்துட்டா என்ன மதம் மாறிட்டயான்னு கேப்பா? ம். இப்ப அதெல்லாம் யாரு மதிக்கறா?

    பதிலளிநீக்கு
  48. // ஜாதி மதம் பாராமல், தனக்காக ஜட்கா ஓட்டி வரும் போது, இயல்பான தகவல்களைச் சொன்னவரை தனது குருவாக ஏற்ற மஹாபெரியவரின் பரந்த மனப்பான்மையை புகழ்வதற்கு வார்த்தைகள் ஏது !//

    பெரியவா என்றும் பெரியவா தான்.

    பதிலளிநீக்கு
  49. //ஆனால் பணம் அனுப்பியது யார் என்று கடைசி வரை தெரியவில்லை.//

    அது மகா பெரியவாளின் அருள் அல்லவா?

    // "எங்கள் தெய்வம்... இவர்தான்.... இந்த உருவில்தான்
    தெய்வத்தைப் பார்ப்போம்" என்று கடல் கடந்து
    எங்கேயோ இருந்த ஆங்கிலேய தம்பதிகள்
    ஆனந்த அனுபவத்தில் உருகி நின்றார்கள்.//

    அப்பப்பா! என்ன ஒரு அனுபவம்

    ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      தங்களின் அன்பான மும்முறை வருகைகளுக்கும் அழகான விரிவான ஆழ்ந்த கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  50. ஃபுல்லா சரண்டராவுதுதான் பக்திக்கு அளகு

    பதிலளிநீக்கு
  51. ஜட்கா ஓட்டுபவரிலிருந்து வெளிநாட்டுக்காரர் வரையிலும் பெரியவா அருள் செய்திருக்காளே. அவர்களெல்லாம் பாக்கிய சாலிகள்.

    பதிலளிநீக்கு
  52. மதங்களைக் கடந்த மஹான் என்பதற்கு இதுதான் உதாரணம்..

    பதிலளிநீக்கு
  53. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (30.07.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://www.facebook.com/groups/396189224217111/permalink/458414017994631/

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  54. இந்த பதிவின் மற்றொரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (31.07.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=459601837875849

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு