என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 26 நவம்பர், 2013

86] சுதந்திரம் ... நாட்டுக்கும் நமக்கும் !

2
ஸ்ரீராமஜயம்



நம் தவறுகளைக் கழுவிக்கொள்வதற்காக நாமே ஒவ்வொரு நாளும் அம்பாளிடம் அழவேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்த நிலையில் உள்ள நாம், பிறரைக் தப்புக்கண்டு பிடித்து கோபிக்க நியாயம் ஏது?

அரசியல் சுதந்திரப் போராட்டத்தைப் போலவே ஆன்மிகச் சுதந்திரப் போராட்டத்திலும் நமது நாட்டின் எல்லா மக்களும் ஜாதி, மத பேதமின்றி ஒற்றுமையாக ஒன்று கூடிச் செயல் புரிதல் வேண்டும்.

நம் நாடு சுதந்திரம் அடைந்ததை ஒட்டி, நாமும் தனிப்பட்ட முறையில் சுதந்திரம் அடைய முற்பட வேண்டும். 

நம்மை நாம் முற்றிலும் அறிந்து கொண்டால் தான், நாம் சுதந்திரம்  அடைந்தவர்களாவோம்.


ஒரு வேளை சாப்பிடுகிறவன் யோகி;

இரண்டு வேளை சாப்பிடுகிறவன் போகி;

மூன்று வேளை சாப்பிடுகிறவன் ரோகி. 

oooooOooooo

ஒருசில சம்பவங்கள்

[ 1 ]

’ஈரோடு’ பெயர்க்காரணம்

[மஹா பெரியவா சொன்னது]



தன்னை வணங்க வந்த ஒருவரை ஊர்,பேர் விசாரித்தார்

பெரியவர். 



ஈரோட்டைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. 





”உன் ஊருக்கு அந்தப் பேர் எப்படி வந்தது தெரியுமா" என்றார்.



அவருக்குத் தெரியவில்லை. 



”சரி உங்க ஊர் சுவாமி பேரென்ன?"  
என்றார். 




"ஏதோ வித்தியாசமாக இருக்கும் மறந்து போச்சு.." 
என்றார். 



"ஆர்த்ர கபாலீசுவரர்னு பேரோ?" என்றார் பெரியவா.


"ஆமாம்..ஆமாம்!" என்று அவர் சொல்லவே, 

”அதற்குத்தான்
'ஈரோடு'னு அர்த்தம்” 


'ஆர்த்ரம்னா ஈரம்; கபாலம்னா மண்டையோடு.

ஈர ஓட்டைக் கையிலே வைத்திருப்பதால் [ஈரோடு} சுவாமிக்கு 

அந்தப் பெயர். 

பிரும்மாவோட அஞ்சு தலைலே ஒரு தலையை 

சிவபெருமான் திருகி எடுத்ததால், பிரம்மஹத்தி தோஷத்தினால் 

சிவன் கையிலேயே கபாலம் ஒட்டிக் கொண்டுவிட்டது. 

திருகி 

எடுத்ததால் ரத்தம் சொட்டிய ஈரத்துடன் கூடிய ஓட்டைக் கையிலே 

வைத்திருக்கும் சுவாமியை உடைய ஊர் 'ஈரோடு' என்றார்.  




[ஈர+ஓடு = ஈரோடு] !"


 நன்றி: அமிர்த வாஹிணி 31/08/13

oooooOooooo

[ 2 ]

விதியை மீறாத பெரியவா



தேனம்பாக்கம் பிரும்மபுரீஸ்வரர் ஆலயத்தில் பூஜை செய்யும் விசுவநாத சிவாச்சாரியாருக்கு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பூஜை முறை உண்டு.



தேனம்பாக்கத்தில் தங்கியிருந்த பெரியவா ஒரு நாள், ஏகாம்பரேஸ்வரர் தரிசனத்துக்கு சென்றார்கள். 



அன்றைக்கு விஸ்வநாத சிவாச்சாரியார் முறை.



சிவாச்சாரியாருக்கு கொள்ளை சந்தோஷம். 



தான் பூஜை முறையில் இருக்கும்போது பெரியவா தரிசனத்துக்கு வந்திருக்கிறார்கள். 



தற்செயலான வருகை. முன்கூட்டி சொல்லி விட்டு வரவில்லை.



ஏகாம்பரன் அருளால் பெரியவாளுக்கு தரிசனம் பண்ணி வைக்கும் மகத்தான பேறு கிடைத்திருக்கிறது. 



உள்ளம் நெகிழ்ந்தார், சிவாச்சாரியார்.


"பெரியவா உள்ளே வந்து தரிசனம் பண்ணிக்கலாம்."

"அது கர்ப்பக்கிரஹம். 

ஆகம சாஸ்திரப்படி சிவாச்சாரியார்கள் தான் கர்பக்கிரஹத்துக்குப் போகலாம். 


சில கோவில்களில் கர்பக்கிரஹத்துக்குப் போவதற்கு எங்களுக்கு உரிமை இருக்கு, ரொம்ப காலமாக.

இந்த கோவிலில் அந்த உரிமை இல்லை. 

இங்கிருந்தே ஆனந்தமாக தரிசனம் கிடைக்கிறது. ”

பெரியவா சட்டத்தை மீறியதாக ஒரு சான்று கூட இல்லை.



[Thanks to amirtha vahini 4/9/13]

oooooOooooo

[ 3 ]

கண் பார்வை கிட்டியது

ஒரு முறை பேரனுக்கு வைசூரி போட்டு கண் பார்வை போய் விட்டெதென்று கவலையுடன் ஸ்ரீபெரியவாளிடம் ஒரு அம்மா வந்தார்.

அவரை கவனிக்காமல் வேறு ஒருவரிடம் பேசிக்கொண்டே இருந்தார்.



பேச்சின் இடையில் “பெற்றம்” என்றால் என்ன? என்று பெரியவா கேட்டார். 



பேசிக்கொண்டிருந்தவர் அதற்குக் “கால் நடைகள்” 
என்று பொருள் கூறி, திருப்பாவையில் கூட ”பெற்றம்  மேய்த்துண்ணும் குலம்” என்று வந்திருக்கிறதே என்று தான் சொன்னதை நிறுவினார்.



”இன்னும் எங்கேயாவது வந்திருக்கிறதா” என்று கேட்டார் பெரியவா. 

”ஆமாம், சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்” என்றார் அவர். 

”அது சரி எந்த இடத்தில் எதற்காகப் பாடினார் தெரியுமா? 

சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் பரவை நாச்சியார் என்பவரைக் கல்யாணம் செய்துகொண்டு, மீண்டும் சங்கிலி நாச்சியார் என்பவரைத் தேடி போனார். அவள் மிக எச்சரிக்கையாக, தன்னைப் பிரிய மாட்டேன் என்று சத்தியம் - அதிலும் அந்த ஊர்க்கோயிலில் உள்ள இறைவனைத் தொட்டுச் செய்ய வேண்டும், அப்போதுதான் திருமணம் என்று சொல்லி விடுகிறாள். 

சிவபெருமான்தான் தம்பிரான் தோழராயிற்றே! பார்த்துக் கொள்ளலாம் என்ற துணிவில் சங்கிலி சொன்னதற்கு சுந்தரரும் ஒப்புக்கொண்டார். நேரே ஆதிபுரீஸ்வரரிடம் போனார். நடந்ததைச் சொன்னார். நாளைக்கு நான் சத்தியம் செய்து கொடுக்கும்போது நீ இந்த சந்நதியில் இல்லாமல் வெளியே மகிழம்பூ மரத்தடியில் அமர்ந்துவிடு. ஏனெனில் என் சத்தியத்தைக் காப்பாற்றுவேன் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அதனால் உன்மேல் ஆணையிட முடியாது என்கிறார். சுவாமி ஒப்புக்கொண்டார்.


அதோடு நிற்காமல் சுவாமி, சங்கிலி நாச்சியார் கனவில் வந்து ”சுந்தரரை மகிழ மரத்தடியிலே சத்தியம் பண்ணித் தரச் சொல்லு” என்று சொல்லிவிட்டு வேடிக்கைப் பார்த்தார். 

அவளும் கோயிலுக்கு சுந்தரருடன் வந்ததும், சுவாமி மேல் ஆணையிட வேண்டாம். இந்த மரத்தடியில் சத்தியம் செய்யுங்கள் போதும் என்று சொல்லி, இக்கட்டில் அவரை மாட்டிவிட்டாள். சுந்தரர் பரமன் திருவிளையாடலைத் தெரிந்து கொண்டார். வேறு வழியில்லாமல் சத்தியம் செய்தார்.

சிறிது நாட்கள் கூட அதைக் காப்பாற்ற முடியவில்லை. திருவாருர் தியாகேசனைப் பிரிந்து இருக்க இயலாமல் கிளம்பிவிட்டார். திருவொற்றியூர் எல்லயைத் தாண்டியதும், அவருக்கு இரண்டு கண்களும் பார்வை இழந்தன.

சத்தியம் தவறினவர் தோழனானாலும் இறைவன் நீதி எல்லோருக்கும் சமம்தான்!” தண்டித்தாலும் நீயே கதி!” என்று சிவனைப் போற்றி சுந்தரர் ஒரு பதிகம் பாட ஒரு கண் சரியாகிவிட்டது.

இப்படிக் கதையை வந்த அம்மாவுக்காகவே சொன்ன பெரியவா, ”இந்தப் பதிகம் பாடினா போன கண் திரும்பி வந்து விடும்” என்று முடித்தார். 

இப்படியும் அருள் செய்வதில் ஒரு நாடகமே நடத்தக் கூடியவர் பெரியவா.

ஆலந்தான் உகந்து அமுது செயதானை
ஆதியை அமரர் தொழுது ஏத்தும்

சீலந்தான் பெரிதும் உடையானைச்

சிந்திப்பார் அவர் சிந்தையுளானை

ஏலவார் குழலாள் உமைநங்கை

என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற

காலகாலனைக் கம்பன் எம்மானைக்

காணக்கண் அடியேன் பெற்றவாரே”



என்ற அந்த தேவாரப் பதிகத்தை தேடி எடுத்து, அந்த அம்மாவை தினமும் பாராயணம் பண்ணச் சொல்லி பேரனுக்குப் பார்வை கிடைக்கச் செய்தார்.

ஏதோ, “பெற்றம்” என்ற சொல்லைப் பற்றி ஆராய்ச்சி செய்வதுபோல் பேசி, வருத்தத்துடன் வந்த ஒருவருக்கு அவர் விரும்பியபடி பேரனுக்குப் பார்வை வர ஒரு நீண்ட கதையையும் சொல்லி வழிகாட்டிய அனுக்கிரகம் இது.

சுந்தரர் திருவாரூருக்குப் போய் வேறொரு பதிகம் பாடி மற்றொரு கண் பார்வையும் பெற்றுவிட்டதாக வரலாறு.

இரண்டு பதிகங்களின் மகிமையை உணர்ந்து, பயன் பெற்ற ஒருவர் இன்னும் சாட்சியாக நம்மிடையே இருக்கிறார்.



[எஸ்.கணேச சர்மா எழுதிய புத்தகத்தில் இருந்து ]

oooooOooooo

[ 4 ]

இகத்துக்கும் பரத்துக்கும் வழி

பரமசாதுவான ஒருத்தர் தரிசனத்துக்கு வந்தார். 


பெரியவா முன் நெருஞ்சான்கிடையாக விழுந்தார். பேச முயன்றார். தொண்டை அடைத்துக்கொண்டது, சமாளித்து சொல்லத் தொடங்கினார்.


”நான் ஒண்ணுமே செய்யலே…



இகத்துக்கும் வழி செய்யலே..



சம்பாத்தியம் கிடையாது. 



பரத்துக்கும் ஒண்ணும் பண்ணலே.



கோயில் குளத்துக்கும் போனதேயில்லை.


சந்தியாவந்தனம் கூடப் பண்ணினதில்லை 


இப்போ நினைச்சாலே பயமாயிருக்கு...”


பெரியவாசொன்னார்கள்:



“ஆறுபக்கத்திலுள்ள ஒருகிராமத்திலே போய்த்தங்கு. எத்தனையோவீடு, சும்மா பூட்டிவெச்சிருக்கா. ஒரு வீட்டைபுடிச்சு, நன்னா பராமரிக்கிறேன்னு சொல்லு.



“தினமும் ஆற்றில் ஸ்நானம்செய்து ஸஹஸ்ர காயத்ரி ஜபம் பண்ணு. இது பரத்துக்கு.



“அந்த கிராமத்திலுள்ள போஸ்டாபீஸிலே போய் உட்கார்ந்த்துக்கோ. லெட்டர் எழுதத்தெரியாதவா, மணியார்டர் பாரம் எழுதத்தெரியாதவா, ரெஜிஸ்டர் -- சேவிங்க்ஸ் செய்யத்தெரியாதவா நிறையப்பேர் வருவா. நீ எழுதிக்கொடு. அவா எதாவது கொடுப்பா. அதுபோறும், இகத்துக்கு…



“கூடியவரை தப்புப்பண்ணாமலும், பொய் பேசாமலும் முடிந்த அளவு மெளனவிரதம் இருந்துண்டுவா…”



வந்த அடியார்க்கு ரொம்பவும் திருப்தி. தன்னால் செய்ய முடியாத பரிகாரங்களை செய்யச்சொல்லி விடுவார்களோ என்ற அச்சம் மறைந்தது.



பெரியவாளுக்கு அரிச்சுவடிப் பாடம் நடத்தவும் தெரியும். எம்.ஏ. வகுப்புப்பாடமும் எடுக்கத் தெரியும்.


{Thanks to Mr. M..J.Raman [Manakkal] now at Mumbai 
for sharing this on 22.11.2013}

oooooOooooo

[ 5 ]


“எங்கூட இருந்த  பாப்பா 

எங்கேம்மா?…”!


பெரியவாளை தர்ஸனம் செய்வதற்காக ஒரு தம்பதி தங்கள் ஐந்து வயதுப் பெண் குழந்தையுடன் காரில் காஞ்சிபுரம் கிளம்பினார்கள். அவர்களோடு அந்த பக்தரின் அப்பாவும் கிளம்பினார். சுங்குவார் சத்திரம் அருகில் வரும்போது, கூட வந்த தாத்தாவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருந்ததால், ரோட்டின் ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு, அப்பாவும் மகனும் ரோட்டைக் க்ராஸ் பண்ணி எதிர் பக்கம் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஐந்து செகண்டுக்கு ஒருமுறை குறைந்தது இரண்டு வண்டிகளாவது போய்க்கொண்டிருந்தன. காருக்கு வெளியே தன் அம்மாவுடன் நின்று கொண்டிருந்த குழந்தை, எதிர்பக்கம் வரும் தாத்தாவை பார்த்து விட்டு, ஏதோ இப்போதுதான் புதுஸாகப் பார்ப்பது போல், “தாத்தா!..” என்று கத்திக் கொண்டு, திடீரென்று ஒரேயடியாகத் துள்ளிக்கொண்டு ரோடை க்ராஸ் செய்ய ஆரம்பித்தாள் ! வண்டிகளைப் பற்றிய பயமே அந்தக்குழந்தைக்கு இல்லை!
அம்மாவும் அப்பாவும் தாத்தாவும் பதறிப் போன சமயம்,வேகமாக வந்த லாரி, அந்தக் குழந்தையை தூக்கி வீசி எறிந்தது! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த விபத்து அத்தனை பேரையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது!
அலறிக்கொண்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு காஞ்சிபுரத்தில் ஒரு ஹாஸ்பிடலில் சேர்த்தனர்.
“கொழந்தையை ஒடனே மெட்ராஸுக்கு கொண்டு போய்டுங்க! ரொம்ப ஸீரியஸ்கேஸ்!..” டாக்டர்கள் கைவிரித்து விட்டு, ஏதோ முதலுதவியைச் செய்தனர். விஷயத்தை கேள்விப்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்த அவர்களுடைய சொந்தக்காரர் ஆஸ்பத்ரிக்கு ஓடி வந்து குழந்தையைப் பார்த்து விட்டு, நேராக பெரியவாளிடம்ஓடினார்.
“பெரியவாளைப் பாக்கறதுக்காக வர்றச்சே வழில கொழந்தை மேல லாரி மோதிடுத்து! டாக்டர்கள் கைவிரிச்சுட்டா! பெரியவாதான் கொழந்தையைக் காப்பாத்தணும்..”அழுதார்.
“என்னைப் பாக்க வரச்சேயா ஆக்ஸிடென்ட் ஆய்டுத்து?…” என்று கேட்டுவிட்டு, சற்றுநேரம் கண்களை மூடிக் கொண்டிருந்தார். அப்புறம் பக்கத்தில் இருந்த ஒரு ஆப்பிள்பழத்தை எடுத்து அவர் கையில் ப்ரஸாதமாகப் போட்டுவிட்டு, “மெட்ராஸுக்கு கொழந்தையைப் பாக்க போறச்சே இதைக் குடு. போறதுக்கு முன்னாடி, காமாக்ஷியை தர்ஸனம் பண்ணிட்டுப் போ!…” என்று உத்தரவிட்டார்.
உறவினரும் உடனேயே காமாக்ஷி கோவிலுக்குச் சென்று தர்ஸனம் பண்ணப் போனார். ஆனால், நடை சார்த்தும் நேரம் என்பதால், அவரால் ஒரே ஒரு க்ஷணம் மட்டுமே அம்பாளை தர்ஸனம் பண்ண முடிந்தது.
நெய்தீபச் சுடரில் ஸர்வாலங்கார பூஷிதையாக பச்சைப் பட்டுப் புடவையுடன், அருள்பொழியும் முகத்தோடும் அமர்ந்திருந்த அம்பாளை ஒரு க்ஷணமே தர்ஸனம் பண்ணினாலும், மனஸில் அந்தக் கோலத்தை இருத்தியபடி மெட்ராஸுக்கு பஸ் ஏறினார். நேராக ஹாஸ்பிடலுக்கு சென்று, ICU வில் இருந்த குழந்தையின் தலைமாட்டில் பெரியவா அனுக்ரஹித்துக் கொடுத்த ஆப்பிளை எப்படியோ வைத்துவிட்டார். அழுது கொண்டிருந்த பெற்றோரிடம் பெரியவாளிடம் விஷயத்தைச் சொன்னதைப் பற்றி கூறினார்.
“கொழந்தை “கோமா”க்குப் போய்ட்டா! மணிக்கணக்கோ, நாள்கணக்கோன்னு டாக்டர்சொல்றார்….” அம்மா கதறினாள். சில மணி நேரங்கள் கழிந்தது. ICU வாசலில்குடும்பமே அமர்ந்திருந்தது.
இதோ! குழந்தையின் உடலில் சிறு சிறு அசைவுகள்! “கோமா”; மணிக்கணக்கு; நாள்கணக்கு என்று பெரிய பெரிய டாக்டர்கள் சொன்னதையெல்லாம் அடித்து த்வம்ஸம் பண்ணிவிட்டு, “அம்மா!…” என்று குழந்தையை அழைக்க வைத்தது தெய்வத்தின்அனுக்ரஹம் !
அழுகையெல்லாம் நிமிஷத்தில் காணாமல் போனது. ஓரிரண்டு நாட்களில் ஓரளவு நன்றாகத் தேறிய குழந்தையைத் தனி ரூமுக்கு ஷிப்ட் பண்ணினார்கள். ஆப்பிள் கொண்டு வந்த உறவினரும் கூடவே இருந்தார்.
“அம்மா…..” தீனமாகக் கூப்பிட்டாள் குழந்தை.
“என்னம்மா?….”
“எங்கூட இருந்த பாப்பா எங்கேம்மா?…”
“பாப்பாவா? இங்க ஏதும்மா பாப்பா? நீ ஆஸ்பத்ரிலன்னா இருக்கே! இங்க பாப்பா யாரும் இல்லியேடா!..”
குழந்தை சிணுங்கினாள். “அந்தப் பாப்பா எங்கேம்மா? எனக்கு அவகூட வெளையாடணும்..”
ஏதோ அரைகுறை ஞாபகத்தில் உளறுகிறாள் என்று எண்ணி அவளை சமாதானப்படுத்த வேண்டி “எந்தப் பாப்பா? எப்டி இருந்தா சொல்லு! நான் கூட்டிண்டுவரேன்” என்றாள்.
“பச்சைப் பட்டுப்பாவாடை கட்டிண்டு எங்கூடவே இருந்தாளே! அந்த பாப்பாதான்!…”
மற்றபேருக்கு புரியாவிட்டாலும், ஆப்பிள் கொண்டு வந்த உறவினருக்கு பொட்டில் அடித்தார்ப்போல் புரிந்தது!
“போறதுக்கு முன்னாடி, காமாக்ஷியை தர்ஸனம் பண்ணிட்டுப் போ!…” பெரியவா சொன்னதும், அம்பாள் ஒரு க்ஷணமே தர்ஸனம் தந்தாலும், ஹ்ருதயத்தை விட்டு அகலாவண்ணம், பச்சைப் பட்டுப் புடவையில் காட்சி அளித்ததும் அவருக்குப் புரிந்தது; மேனியெல்லாம் புல்லரித்தது!
பெரியவா சொன்னதுக்கு எத்தனை மஹத்தான அர்த்தம்! அம்பாளே அந்தக் குழந்தைக்கு ஒரு குழந்தை உருவில் வந்து கூட விளையாடி, அவளுக்கு உயிரூட்டியிருக்கிறாள்!
உறவினர், மற்றவர்களுக்கு இதைச் சொன்னதும், திக்கற்றோருக்கு துணை வரும் பெரியவா இருந்த காஞ்சிபுரம் நோக்கி விழுந்து விழுந்து நமஸ்கரித்தனர்.
[Thanks to Shri Srinivasan Subramanyan and  Sage of Kanchi 26.11.2013]




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.



இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

83 கருத்துகள்:

  1. ’’பெரியவா சட்டத்தை மீறியதாக ஒரு சான்று கூட இல்லை!..’’

    அதனால் தான் வானும் வையமும் அவரை வணங்கி நின்றது!..

    //மணிக்கணக்கு; நாள்கணக்கு என்று பெரிய பெரிய டாக்டர்கள் சொன்னதையெல்லாம் அடித்து த்வம்ஸம் பண்ணிவிட்டு, “அம்மா!…” என்று குழந்தையை அழைக்க வைத்தது தெய்வத்தின்அனுக்ரஹம் !

    அழுகையெல்லாம் நிமிஷத்தில் காணாமல் போனது..//

    ஐயா.. எனக்கு அழுகை வந்து விட்டது!..

    குருவே சரணம்!.. காமாக்ஷி அம்பாளே.. சரணம்!..


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜூ November 26, 2013 at 12:18 AM

      வாங்கோ, வணக்கம். இந்தப்பகுதிக்குத் தங்களின் முதல் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

      //ஐயா.. எனக்கு அழுகை வந்து விட்டது!..
      குருவே சரணம்!.. காமாக்ஷி அம்பாளே.. சரணம்!.. //

      தங்களின் அன்பான வருகைக்கும், உணர்வுபூர்வமான அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  2. ஈரோடு பெயர்க்காரணம், பெரியவா அவர்களின் நாடகம் என அனைத்தும் அருமை ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் November 26, 2013 at 2:15 AM

      வாங்கோ, வணக்கம். பகுதி-1 முதல் பகுதி-86 வரை தொடர்ச்சியாக வருகை தந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி, நன்றி.

      நீக்கு
  3. பச்சைப் பட்டுப் பாவாடையில் இருந்த அம்பாளை கண்ட குழந்தை தெய்வீகமானக் குழந்தை தான்.கண் தெரியாத பக்தருக்கு உதவிய மகாபெரியவரின் கருணையே கருணை.
    வாழ்த்துக்கள்.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam November 26, 2013 at 2:37 AM

      வாங்கோ, வணக்கம். பகுதி-1 முதல் பகுதி-86 வரை தொடர்ச்சியாக வருகை தந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி, நன்றி.

      நீக்கு
  4. ஆகமவிதியை மீராத பெரியவாள், கண்பார்வை திரும்பப் பெற தேவாரப் பதிகத்தை தேடிச் சொன்ன பெரியவாள், இகத்துக்கும் பரத்துக்கும் இதமான வழியைச் சொன்ன பெரியவாள், பாப்பாவாக பச்சைப்பவாடை கட்டி ,அன்னையே அருள் பொழியக் காரணமான பெரியவாள் இப்படி பல கோணத்திலும் அமுத மொழிகளைக் காணக் கட்டிக் கொடுத்த பெரியவாள் இதெல்லா மகிமையும் படிக்க,அகக் கண்ணால் பார்த்து மகிழ
    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிரது. எல்லாமே அற்புதம். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kamatchi November 26, 2013 at 4:50 AM

      மாமி, வாங்கோ ... வாங்கோ, நமஸ்காரங்கள், செளக்யமா?

      // இதெல்லா மகிமையும் படிக்க, அகக் கண்ணால் பார்த்து மகிழ, மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லாமே அற்புதம்.//

      மாமி, எல்லாவற்றையும் விட அற்புதம், தாங்கள் இந்த என் தொடர் ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை ஒரு பகுதியும் விடாமல் வந்து கருத்துச்சொல்றேளே !!!!! அது தான் அற்புதம். நான் செய்த பாக்யம்.

      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  5. மிக மிக அருமையான பகிர்வு!!!... மிக்க நன்றி ஐயா!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்வதி இராமச்சந்திரன்.November 26, 2013 at 5:48 AM

      வாங்கோ, வணக்கம்.

      //மிக மிக அருமையான பகிர்வு!!!... மிக்க நன்றி ஐயா!!//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  6. ஐந்து அற்புதமான சம்பவங்கள். அருமையான பகிர்வுகள். படிக்கப் படிக்க பரவசம். அன்புடன் எம்.ஜே.ராமன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Manakkal November 26, 2013 at 7:46 AM

      வாங்கோ Mr. M J Raman Sir, நமஸ்காரம். செளக்யமா?

      //ஐந்து அற்புதமான சம்பவங்கள். அருமையான பகிர்வுகள். படிக்கப் படிக்க பரவசம். அன்புடன் எம்.ஜே.ராமன்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      இதில் நான்காவதாக உள்ளது தாங்கள் எனக்கு மெயில் மூலம் அனுப்பியதே. அதற்கும் மீண்டும் என் நன்றிகள்.

      வியப்பளிக்கும் விஷயங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. ஆயிரம் பதிவுகளாகத் தொடர முடியாததால் இனிவரும் ஒவ்வொன்றிலும் மிகச்சிறப்பான பலவிஷயங்களை மட்டும், ஒவ்வொரு பகுதியிலும் 4 அல்லது 5 வீதம் வெளியிட உள்ளேன்.

      108 பகுதிகளோடு இந்தத்தொடர், வரும் பொங்கலுக்கு முன்பாக, ஸ்ரீபெரியவா அனுக்ரஹத்தில் நிறைவடையக்கூடும் என நம்புகிறேன்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  7. நம் தவறுகளைக் கழுவிக்கொள்வதற்காக நாமே ஒவ்வொரு நாளும் அம்பாளிடம் அழவேண்டிய நிலையில் இருக்கிறோம்.
    இந்த நிலையில் உள்ள நாம், பிறரைக் தப்புக்கண்டு பிடித்து கோபிக்க நியாயம் ஏது?

    தப்புக் கண்டுபிடிப்பதே சிலரின் மகிழ்ச்சியான பொழுதுபோக்காயிற்றே..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி November 26, 2013 at 8:11 AM

      வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வணக்கம். வந்தனம்.

      //தப்புக் கண்டுபிடிப்பதே சிலரின் மகிழ்ச்சியான பொழுதுபோக்காயிற்றே..!//

      தப்பு, தப்பு, தப்பு .... அப்படிசெய்பவர்கள் ஒருக்காலும் மகிழ்ச்சியாக இருக்கவே மாட்டார்கள். அவர்கள் சும்மாப் பொழுதுபோக்குபவர்களாகவும் இருக்கவே முடியாது.

      தன்னுடைய பொன்னான நேரத்தைச் செலவழித்து, பிறர் தப்பேதும் செய்யாமலிருக்க ஒருவேளை நினைத்திருக்கலாம். ஆசைப்பட்டிருக்கலாம்.

      எது எப்படியோ ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளே சொல்லியுள்ளபடி, பிறரைக் தப்புக்கண்டு பிடித்து கோபிக்க கொஞ்சமும் நியாயம் ஏதும் இல்லை தான்.

      நாம் தான், நம் தவறுகளைக் கழுவிக்கொள்வதற்காக அம்பாளிடம் அழவேண்டிய நிலையில் தானே எப்போதுமே இருக்கிறோம்.

      அதனால் அம்பாள் கோபித்துக்கொள்ளாமல் தொடர்ந்து இனியாவது அருள் புரியட்டும் என பிரார்த்திக்கிறேன் !

      இந்த கமெண்ட் தான் எனக்கு முதன்முதலில் வந்திருந்தது. பிறகு மின்தடை ஏற்பட்டு எங்கோ காணமல் போய் விட்டது. தேடிக்கண்டுபிடித்து வெளியிட இவ்வளவு தாமதமாகிவிட்டது.

      தங்களின் அன்பான வருகைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளை மீண்டும் கூறிக்கொள்கிறேன்.

      நீக்கு
  8. சுந்தரர் பதிகம் பாடி கண் பார்வையும் பெற்றுவிட்டதாக வரலாறு.

    பயனுள்ள பதிகப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  9. பெரியவாளுக்கு அரிச்சுவடிப் பாடம் நடத்தவும் தெரியும். எம்.ஏ. வகுப்புப்பாடமும் எடுக்கத் தெரியும்

    ஜகத்குரு என்று அதனால்தான் கொண்டாட்ப்பாடுகிறார்..!

    பதிலளிநீக்கு
  10. அம்பாளே அந்தக் குழந்தைக்கு ஒரு குழந்தை உருவில் வந்து கூட விளையாடி, அவளுக்கு உயிரூட்டியிருக்கிறாள்!

    உயிரோட்டமுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் ..!

    பதிலளிநீக்கு
  11. பெரியவா சட்டத்தை மீறியதாக ஒரு சான்று கூட இல்லை.

    விதியை மீறாதவர் ..ஆத்மார்தமாக நம்பிக்கை கொண்டவர்களின் மோசமான விதிகளை மாற்றியருளிய கருணைதெய்வம் அவர் ..!

    பதிலளிநீக்கு
  12. ஈர ஓட்டைக் கையிலே வைத்திருப்பதால் [ஈரோடு} சுவாமிக்கு
    அந்தப் பெயர்.
    அருமையான விளக்கம் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூரியனைக் கண்டால் சந்தோஷத்துடன் தாமரை மலரும். என்று சொல்வார்கள்.

      இங்கு இப்போது இரவு வெகு நேரமாகியும் செந்தாமரைகள் மலராமல் இருந்தது என் மனதைப் பிசைந்தது.

      இப்போதாவது ஒருவழியாக மலர்ந்துள்ளது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஐந்தாறு கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  13. திருகி
    எடுத்ததால் ரத்தம் சொட்டிய ஈரத்துடன் கூடிய ஓட்டைக் கையிலே
    வைத்திருக்கும் சுவாமியை உடைய ஊர் 'ஈரோடு' என்றார். //
    ஈரோடு பெயர் விவரம் அருமை.

    //அம்பாளே அந்தக் குழந்தைக்கு ஒரு குழந்தை உருவில் வந்து கூட விளையாடி, அவளுக்கு உயிரூட்டியிருக்கிறாள்!//

    அற்புதம்.

    திக்கற்றோருக்கு துணை வரும் பெரியவா இருந்த காஞ்சிபுரம் நோக்கி விழுந்து விழுந்து நமஸ்கரித்தனர்.//
    எல்லோரும் நமஸ்கரிக்க வேண்டும்.
    அருமையான அற்புத பகிர்வு. நன்றி.
    வாழ்த்துக்கள்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு November 26, 2013 at 8:39 AM

      வாங்கோ திருமதி கோமதி அரசு மேடம், வணக்கம்.

      இத்துடன் தாங்கள் இந்தத்தொடரின் பகுதி-1 முதல் இந்தப்பகுதி-86 வரை தொடர்ச்சியாக வருகை தந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. சந்தோஷம்.

      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      வாழ்க வளமுடன் + நலமுடன்.

      நீக்கு
  14. படிப்பவர் மனதை உருகவைத்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு பதிவிடுகிறீர்கள். நாங்கள் என்னதான் செய்வது? கண்ணீர்மல்கப் படித்துவிடுகிறோம். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Chellappa Yagyaswamy November 26, 2013 at 9:29 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம். இந்த என் தொடருக்கு இது தங்களின் முதல் வருகை என பதிவாக்கியுள்ளேன். பகுதி 95/2/2 என்பதில் தங்கள் பெயர் சிறப்பிடம் பெறும்.

      அதைப்பற்றி மேலும் அறிய பகுதி 85/2/2 என்ற என் சென்ற பதிவினைப்பார்க்கவும்.

      //படிப்பவர் மனதை உருகவைத்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு பதிவிடுகிறீர்கள். நாங்கள் என்னதான் செய்வது? கண்ணீர்மல்கப் படித்துவிடுகிறோம். நன்றி!//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  15. அன்பின் வை.கோ

    சுதந்திரம் நாட்டுக்கும் நமக்கும் - பதிவு அருமை - பல்வேறு தகவல்கள் - அத்தனையும் பொறுமையுடன் படித்தேன் - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் சக்தி சக்தியேதான்.

    மகாப் பெரியவா சொன்ன ஈரோடு பெயர்க் காரணம் அருமை.

    சட்டத்தை மீறாத ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா -யாராயிருந்தாலும் சட்டம் சட்டம் தான் என - சட்டத்தினைக் கடைப்பிடித்து - எடுத்துக்காட்டாக விளங்கிய மகாப் பெரியவா ம்காப் பெரியவா தான் - ஐயமே இல்லை,

    பேரனுக்குக் கண் பார்வை போய் விட்டதென்று பெரியவாளிடம் வந்த அம்மையாரிடம் கதை போலக் கூறி - பேரனுக்கு கண் பார்வை பெற வழி சொல்லிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப்பெரியவாளீன் அனுக்ரஹமும் அன்பும் எழுத்தில வடிக்க இயலாதது.

    இகத்துக்கும் பார்த்துக்கும் வழி - பெரியவா சொன்ன வழி அருமை.

    ஆப்பிளைக் கொண்டு போய்க் கொடு - காமாட்சியைத் தரிசனம் செய்து விட்டுப் போ - பெரியவா கூறிய இரு அறிவுரைகளும் அவர்களூக்கு உரித்தானது.

    காமாட்சி அம்மனே - பச்சைப் பட்டுடையில் வந்து - குழந்தையுடன் விளையாடி - அவளைக் குணப்படுத்தியது - காமாட்சி அம்மனின் அருள் - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளீன் அன்புடன் கூடிய அருள்,

    பதிவுகள் தினந்தினம் பல்வேறு தகவல்களுடன் வெளி வந்தாலும் அத்தனையும் தங்களீன் உழைபினைக் காட்டுகிறது - அமுத மொழிகள் அள்ளித் தெளிக்கப் படுகின்றன.

    நற்செயல் புரியும் நண்பருக்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. cheena (சீனா) November 26, 2013 at 2:59 PM

      வாருங்கள் அன்பின் திரு. சீனா ஐயா, வணக்கம் ஐயா.

      //பதிவுகள் தினந்தினம் பல்வேறு தகவல்களுடன் வெளி வந்தாலும் அத்தனையும் தங்களின் உழைபினைக் காட்டுகிறது - அமுத மொழிகள் அள்ளித் தெளிக்கப் படுகின்றன.

      நற்செயல் புரியும் நண்பருக்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

      எல்லாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் கருணையும், தங்களைப்போன்றவர்கள் தரும் ஊக்கமும், உற்சாகமும் மட்டுமே ஐயா.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      நீக்கு
  16. ///நம்மை நாம் முற்றிலும் அறிந்து கொண்டால் தான், நாம் சுதந்திரம் அடைந்தவர்களாவோம்///
    அருமையாகச் சொன்னீர்கள் ஐயா நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தை ஜெயக்குமார் November 26, 2013 at 3:59 PM

      தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  17. பெரியவா பற்றி கேக்க படிக்க கொடுத்து வைத்து இருக்கணும். Each and Every time கண்கள் குளமாகின்றன & மனது உருகி போகின்றன .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. sripriya vidhyashankar November 26, 2013 at 4:43 PM

      வாங்கோ, வணக்கம்.

      //பெரியவா பற்றி கேக்க படிக்க கொடுத்து வைத்து இருக்கணும். Each and Every time கண்கள் குளமாகின்றன & மனது உருகி போகின்றன.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான உருக்கமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      தாங்கள் பகுதி-52 முதல் இந்தப்பகுதி-86 வரை ஓரளவு தொடர்ச்சியாக வருகை தந்துள்ளீர்கள். மகிழ்ச்சி.

      [நடுவே விட்டுப்போயுள்ள பகுதிகள்: 53, 55/2, 60, 61/1, 61/3, 61/4, 63, 69, 74 and 85/1 மட்டுமே.]

      நீக்கு
  18. ஈரோடு பெயர்க்காரணம் அறிந்து வியந்தேன். பெரியவரின் ஆகமவிதிகளை மீறாத பாங்கு அதிசயிக்கவைத்தது.

    சிலிர்ப்பூட்டும் நிகழ்வுப் பகிர்வுகள். மிக்க நன்றி வை.கோ.சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி November 26, 2013 at 6:21 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //ஈரோடு பெயர்க்காரணம் அறிந்து வியந்தேன். பெரியவரின் ஆகமவிதிகளை மீறாத பாங்கு அதிசயிக்கவைத்தது.

      சிலிர்ப்பூட்டும் நிகழ்வுப் பகிர்வுகள். மிக்க நன்றி வை.கோ.சார்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      பகுதி-74 முதல் பகுதி-83 வரை தாங்கள் வருகை தர வேண்டியுள்ளது. அவசரம் இல்லை. தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது முடிந்தால் வருகை தாருங்கள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  19. ஈரோடுக்கு மிக அருகே கோவையில் பிறந்து வளர்த்தாலும்
    ஈரோடு பெயர் காரணம் இன்று தான் அறிகிறேன்.அருமை

    நம்மை நாம் முற்றிலும் அறிந்து கொண்டால் தான், நாம் சுதந்திரம் அடைந்தவர்களாவோம்.
    இது சற்று கடினமான காரியம் தான்,
    பெரியவா சட்டத்தை மீறியதாக ஒரு சான்று கூட இல்லை.
    இன்று சட்டம் என்பதே ஒரு இருட்டு அறையாக மாறிவிட்டது
    கூடியவரை தப்புப்பண்ணாமலும், பொய் பேசாமலும் முடிந்த அளவு மெளனவிரதம் இருந்துண்டுவா
    இது பொதுவான எல்லாருக்குமான அறிவுரை.

    அம்பாளே அந்தக் குழந்தைக்கு ஒரு குழந்தை உருவில் வந்து கூட விளையாடி, அவளுக்கு உயிரூட்டியிருக்கிறாள்
    ஆஹா கருணை காமாக்ஷி........தேவி என்னை கடாக்ஷிதினம்தினம் ஒருமுறை இங்கு வந்து பெரியவா கருணையை படித்தாலே மனசுக்கு நிம்மதி.








    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. viji November 26, 2013 at 7:20 PM

      வாங்கோ விஜி, வணக்கம்.

      //தினம் ஒருமுறை இங்கு வந்து பெரியவா கருணையை படித்தாலே மனசுக்கு நிம்மதி.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  20. ஈரோடு பெயர்க்காரணம் இது வரை அறிந்திராத ஒன்று.....

    ஒவ்வொரு பகிர்வும் அருமை..... தொடரட்டும் அருள் மொழிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் நாகராஜ் November 26, 2013 at 7:30 PM

      வாங்கோ வெங்கட்ஜி. வணக்கம்.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  21. koodiyavarayil thappu pannamalum poi pesamalum mounamaha irundhu matravargaluku thannal mudindha udavihalai sei endru Periyava sonnadhu andha oru adiyarkku mattum illai. nam ovvarukkumdhan. mikka nandri.

    பதிலளிநீக்கு
  22. koodiyavarayil thappu pannamalum poi pesamalum matravargalukku nammal mudindha udavihalai chei endru Maha periyava sonnadhu andha anbarukumattum illai. nam ovvarukkumdhan. mikka nandri.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Nagarajan Narayanan November 27, 2013 at 3:23 PM

      வாங்கோ சார் வணக்கம். முதன் முதலாக இன்று இங்கு தங்களைப் படத்துடன் பார்த்ததில் மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.

      //koodiyavarayil thappu pannamalum poi pesamalum matravargalukku nammal mudindha udavihalai chei endru Maha periyava sonnadhu andha anbarukumattum illai. nam ovvarukkumdhan. mikka nandri.//

      ஆமாம். ஜகத்குரு சொல்வது ஒருவருக்கு மட்டுமே அல்ல. இந்த ஜகத்திலுள்ள அனைவருக்குமே பொருந்தக்கூடியது தான்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
    2. Nagarajan Narayanan November 27, 2013 at 3:02 PM

      வாங்கோ, வணக்கம். தாங்கள் COMMENTS அடித்துவிட்டு அதை SAVE செய்து கொண்டு அதன் பிறகு அனுப்புகிறீர்கள் என நினைக்கிறேன். அதுதான் எப்போதுமே நல்லது. அதுபோலவே தொடர்ந்து செய்யவும்.

      நாம் அனுப்பிய COMMENTS போச்சோ போகலையோ என்று நினைத்து, அதை ஒருமுறைக்கு இருமுறையாக அனுப்பியுள்ளீர்கள் போலிருக்கு. அதுவும் நல்லதுதான். அதில் ஒன்றும் தவறில்லை. பழகும்வரை அதுபோலவே எப்போதும் செய்யவும்.

      அப்போது தான் ஒன்று இல்லாவிட்டாலும் மற்றொன்று இவ்விடம் எனக்குக் கிடைக்கக்கூடும். இரண்டுமே கிடைக்கவும் வழியுள்ளது.

      என் வாடிக்கையாளர்களில் பலரும் இதுபோலத்தான் ஒரே பின்னூட்டத்தை இருமுறை அனுப்பி வருகிறார்கள். ஆனால் நான் வெளியிடும் போது, ஒன்றை மட்டும் வெளியிட்டுவிட்டு, மற்றொன்றை நீக்கி விடுவது வழக்கம்.

      அதாவது Repeated Comments of more than onetime will be deleted by me, in general.

      தங்களுக்கும் இதுபற்றித் தெரியட்டும் என்று மட்டுமே, இங்கு தங்களின் இரண்டு [Repeated Comments] பின்னூட்டங்களையும் அப்படியே வெளியிட்டுள்ளேன்.

      No problem at all. Just for your information, please, Sir. You may do according to your convenience. With Best Wishes...

      அன்புடன் கோபு

      நீக்கு
  23. ஈரோடைச் சேர்ந்த பவளசங்கரி திருநாவுக்கரசு அதன் பெயர்க்காரணம் வேறு ஒன்றைக் கூறினார். தேடிப் பார்க்கணும். :))) மற்றபடி முதல் சம்பவம் புதுசு. படிச்சதில்லை. மற்றவை படிச்சிருக்கேன். அருமையான நிகழ்வுகள். நம்பிக்கையுடன் இறைவனை வணங்கினால் நல்லதே நடக்கும் என்பதற்கு இந்நிகழ்வுகளே ஒரு உதாரணம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha SambasivamNovember 27, 2013 at 7:33 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஈரோடைச் சேர்ந்த பவளசங்கரி திருநாவுக்கரசு அதன் பெயர்க்காரணம் வேறு ஒன்றைக் கூறினார். தேடிப் பார்க்கணும். :))) மற்றபடி முதல் சம்பவம் புதுசு. படிச்சதில்லை.//

      அப்படியா, மிகவும் சந்தோஷம்.

      // மற்றவை படிச்சிருக்கேன்.//

      1500 பதிவுகளைத்தாண்டி, 2000 பதிவுகளை வெற்றிகரமாக எட்டப்போகும் தாங்கள் பெரும்பாலும் படிக்காதது எதுவுமே இருக்காது.

      ஏதோ அடியேன் இதுவரை படித்தவற்றில், அதுவும் எனக்கு மிகவும் பிடித்தவைகளை மட்டும் FILTER செய்து, பிறருக்காக பகிர்ந்து வருகிறேன்.

      ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாள் பிறருக்கு செய்துள்ள அனுக்ரஹங்கள் கடல் அளவுக்கு உள்ளன. அதில் நான் வெளியிட்டு வருவது வெறும் கடுகு அளவு மட்டுமே.

      //அருமையான நிகழ்வுகள். நம்பிக்கையுடன் இறைவனை வணங்கினால் நல்லதே நடக்கும் என்பதற்கு இந்நிகழ்வுகளே ஒரு உதாரணம். நன்றி.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK





      நீக்கு
  24. //குழந்தை சிணுங்கினாள். “அந்தப் பாப்பா எங்கேம்மா? எனக்கு அவகூட வெளையாடணும்..”
    ஏதோ அரைகுறை ஞாபகத்தில் உளறுகிறாள் என்று எண்ணி அவளை சமாதானப்படுத்த வேண்டி “எந்தப் பாப்பா? எப்டி இருந்தா சொல்லு! நான் கூட்டிண்டுவரேன்” என்றாள்.
    “பச்சைப் பட்டுப்பாவாடை கட்டிண்டு எங்கூடவே இருந்தாளே! அந்த பாப்பாதான்!…”
    மற்றபேருக்கு புரியாவிட்டாலும், ஆப்பிள் கொண்டு வந்த உறவினருக்கு பொட்டில் அடித்தார்ப்போல் புரிந்தது!//
    சிலிர்த்துப் போனேன்! பகிர்விற்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s. November 28, 2013 at 8:21 AM

      வாங்கோ, வணக்கம்.

      //சிலிர்த்துப் போனேன்! பகிர்விற்கு நன்றி ஐயா!//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான சிலிரிக்க வைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  25. ஈரோடு பெயர்க் காரணம், பெரியவரின் கோயில் கட்டுப்பாடு,

    // ஆலந்தான் உகந்து அமுது செயதானை
    ஆதியை அமரர் தொழுது ஏத்தும் //

    என்ற தேவாரத்தின் பெருமை , இகத்துக்கும் பரத்துக்கும் வழி தேடிய ஒருவர், மீனாட்சி பாப்பா – என்று நிறையவே செய்திகள் தந்துள்ளீர்கள். நன்றி!



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ November 28, 2013 at 7:29 PM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //நிறையவே செய்திகள் தந்துள்ளீர்கள். நன்றி!//

      இந்தத்தொடரை விரைவில் 108 பகுதிகளுடன் முடித்து விடும் நிலையில் நான் உள்ளேன். பகிர்ந்துகொள்ள ஆயிரக்கணக்கான விஷயங்கள் உள்ளன.

      இருப்பினும் அவற்றில் எனக்கு ஓரளவு பிடித்தமானவற்றை மட்டும் Filter செய்து Juice போல தந்து கொண்டிருக்கிறேன் ஐயா.

      மேலும் நிறைய நண்பர்களிடமிருந்து நிறைய தகவல்கள் தினமும் வந்து குவிந்து கொண்டே உள்ளன.

      அவர் சரித்திரம் / திருவிளையாடல்கள் ஓர் கடல் அளவு மிகப் பெரியது. ஆனால் நான் இங்கு எடுத்துச் சொல்வது ஓர் கடுகளவு மட்டுமே.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  26. மன்னிக்க வேண்டும் முதல் 3மே வாசித்தேன் .
    மிக நீண்டு விட்டது.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. kovaikkavi November 29, 2013 at 1:39 AM

      வாருங்கள் .... வணக்கம்.

      //மன்னிக்க வேண்டும் முதல் 3மே வாசித்தேன் .//

      மன்னிப்பெல்லாம் எதற்கு? தாங்கள் எல்லாவற்றையும் வாசித்து கருத்தளிக்க வேண்டும் என்று எந்தவொரு கட்டாயமும் இல்லையே. இதை எல்லோராலும் வாசிக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது என்பது எனக்கும் தெரியுமே. அதனால் சிரமப்படவே வேண்டாம்.

      //மிக நீண்டு விட்டது. இனிய வாழ்த்து.
      வேதா. இலங்காதிலகம்.//

      இனி வரும் பகுதிகள் இதுபோல கொஞ்சம் நீளமாகவே தான் இருக்கும்.

      தங்களின் அன்பான வருகைக்கும், உண்மையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  27. அனைத்து சம்பவங்களும் பெரியவாளின் சிறப்பை உணர்த்தியது...சிறப்பான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ADHI VENKAT November 30, 2013 at 12:30 AM

      வாங்கோ, வணக்கம்.

      //அனைத்து சம்பவங்களும் பெரியவாளின் சிறப்பை உணர்த்தியது...சிறப்பான பகிர்வு.//

      தங்களின் அன்பான வருகைக்கும் சிறப்பான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.


      நீக்கு
  28. எந்த ஒரு மரபையும் மீறாமல் வாழ்ந்த மஹாபெரியவாளிடமிருந்து நாம் கற்க வேண்டியது எத்தனையோ! பார்வையிழந்த பிள்ளைக்கு பதிகம் சொல்லி நம்பிக்கை கொடுத்தவிதம் மனதை நெகிழ வைக்கிறது.
    குழந்தைக்கு அருள் செய்ய குழந்தையாகவே வந்த அம்பாளின் கருணை மெய் சிலிர்க்கிறது.
    பெரியவா சொன்ன அரிச்சவடி பாடத்தை தினமும் படித்தால் போது. எம்.ஏ. பரீட்சை சுலபமாகப் பாஸ் பண்ணிவிடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ranjani Narayanan November 30, 2013 at 2:10 AM

      வாங்கோ, வணக்கம். பார்த்து ரொம்ப நாளாச்சு. நடுவில் பேசிவிட்டதால், மனதுக்கு ஓர் சின்ன ஆறுதல்.

      தங்கள் Project Work நல்லபடியாக திட்டமிட்டபடி, இறுதித்தேதிக்குள் வெற்றிகரமாக முடிந்திருக்கும் என நம்புகிறேன். சந்தோஷம். ;)

      //எந்த ஒரு மரபையும் மீறாமல் வாழ்ந்த மஹாபெரியவாளிடமிருந்து நாம் கற்க வேண்டியது எத்தனையோ! பார்வையிழந்த பிள்ளைக்கு பதிகம் சொல்லி நம்பிக்கை கொடுத்தவிதம் மனதை நெகிழ வைக்கிறது. குழந்தைக்கு அருள் செய்ய குழந்தையாகவே வந்த அம்பாளின் கருணை மெய் சிலிர்க்கிறது. பெரியவா சொன்ன அரிச்சவடி பாடத்தை தினமும் படித்தால் போது. எம்.ஏ. பரீட்சை சுலபமாகப் பாஸ் பண்ணிவிடலாம்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  29. very very interesting to know about the naming of Erode, lovely and superb post sir, thanks for sharing...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Priya Anandakumar December 2, 2013 at 3:34 AM

      WELCOME Madam. I am very Happy to see you continuously in this Serial right from the beginning of Part-1 to Part-89 [so far released].

      //very very interesting to know about the naming of Erode, lovely and superb post sir, thanks for sharing...//

      My Heartiest Thanks for your kind & continuous entry to my Posts and for offer of valuable Comments. All the Best !

      vgk

      நீக்கு
  30. கோபத்தை அடக்காமல் பிறரை குறை கூறுவது எவ்வளவு தவறு ஆத்மஞானத்தைபெறுவதே நமக்கு உண்மையான சுதந்திரம் ,ஈரோடு பெயர் காரணம் அருமையான விளக்கம்,விதியை மீறாத வைராக்கியம் இஹ பர ஆத்ம விசாரத்துக்கு வழிகாட்டிய அற்புதம் ,காமாக்‌ஷிஅம்மனைதரிசனம் செய்தபலன்குழந்தையை கோமாநிலைக்கு சென்றும் காப்பாற்றிய கருணை மஹாபெரியவாளின் அற்புதங்கள் சிலிர்க்கவைத்தது நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sundaresan Gangadharan December 2, 2013 at 4:17 AM

      வா, சுந்தர். உன் அன்பான வருகைக்கு சந்தோஷம். ;)

      //கோபத்தை அடக்காமல் பிறரை குறை கூறுவது எவ்வளவு தவறு ஆத்மஞானத்தைபெறுவதே நமக்கு உண்மையான சுதந்திரம் ,ஈரோடு பெயர் காரணம் அருமையான விளக்கம்,விதியை மீறாத வைராக்கியம் இஹ பர ஆத்ம விசாரத்துக்கு வழிகாட்டிய அற்புதம் ,காமாக்‌ஷிஅம்மனைதரிசனம் செய்தபலன்குழந்தையை கோமாநிலைக்கு சென்றும் காப்பாற்றிய கருணை மஹாபெரியவாளின் அற்புதங்கள் சிலிர்க்கவைத்தது நன்றி//

      கடந்த 40 பதிவுகளுக்கு மேல் தொடர்ந்து வருகை தந்து கருத்துக்கள் கூறிவருவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

      சந்தோஷம். நன்றி, நன்றி, நன்றி.

      நீக்கு
  31. அய்யாவிற்கு வணக்கம்
    அனைத்து சம்பவங்களும் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து கொண்டது. ஈரோடு பெயர்க்காரணம் அருமை. அருமையான் ஆன்மீகப் பகிர்வுக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ. பாண்டியன் December 2, 2013 at 7:26 AM

      //ஐயாவிற்கு வணக்கம். அனைத்து சம்பவங்களும் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து கொண்டது. ஈரோடு பெயர்க்காரணம் அருமை. அருமையான் ஆன்மீகப் பகிர்வுக்கு நன்றிகள்..//

      வாருங்கள், திரு. அ.பாண்டியன் அவர்களே, வணக்கம்.

      தாங்கள் இந்த என் தொடருக்கு சமீபகாலமாக தொடர்ந்து வருகை தந்து வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

      தாங்கள் இதுவரை வருகை தந்துள்ள பகுதிகள்: 45, 46, 48, 49, 52, 54, 57--59, 62--66, 68--75/1, 76--80, 82--89 ஆகிய 35 பகுதிகள். ;)

      [பகுதி-45 முதல் பகுதி-89 வரையில் தாங்கள் வருகை தராத பகுதிகள் மிகக்குறைவே. அவை 47, 50, 51, 53, 55, 56, 60, 61, 67, 75/2 மற்றும் 81 ஆகிய 11 பகுதிகள் மட்டுமே]

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      -=-=-=-=-

      Sir என்பதற்கு ’ஐயா ’ என்பதே சரியான தமிழ் வார்த்தை.

      தாங்கள் ’அய்யா’ என எழுதுவது தவறானது.

      ayyaa ’அய்யா’ வுக்கு பதில் aiyaa ’ஐயா’ என அடித்து அனுப்பப் பழகிக்கொள்ளவும்.

      -=-=-=-=-

      அன்புடன் VGK

      நீக்கு
  32. சூப்பர்ர்..கடைசி பாராவை படித்ததும் மெய் சிலிர்த்தது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Menaga sathia December 2, 2013 at 10:13 PM

      வாங்கோ மேனகா, வணக்கம்.

      //சூப்பர்ர்..கடைசி பாராவை படித்ததும் மெய் சிலிர்த்தது..//

      தங்களின் அன்பான வருகைக்கும், மெய் சிலிர்த்த கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  33. ஷேத்ரம் என்றால்
    சேஷன் உறையும் இடம்

    சேஷன் என்றால் ஆதிசேஷன் மேல் அறிதுயில்
    கொண்டுள்ள சேஷாத்திரி உறையும் இடம்

    அந்த ஷேத்ரத்தில் உரைபவனுக்கு
    பெயர் ஷேத்ரக்னன்

    அவன்தான் ஒவ்வொரு உயிரிலும் வாசம்
    செய்யும் வாசுதேவன் ஸ்ரீமன் நாராயணன்
    என்று விஷ்ணு சஹஸ்ரநாமம்
    தெரிவிக்கிறது.

    அவனை அறிந்துகொள்வதுதான்
    உண்மையான சுதந்திரம்.

    மற்ற சுதந்திரம் எல்லாம்
    வெறும் பெயரளவே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Pattabi Raman December 3, 2013 at 3:22 AM

      வாங்கோ அண்ணா. நமஸ்காரங்கள்.

      //ஷேத்ரம் என்றால் சேஷன் உறையும் இடம் . அவனை அறிந்துகொள்வதுதான் உண்மையான சுதந்திரம்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், அண்ணா.

      நீக்கு
  34. பதில்கள்
    1. மாதேவி December 3, 2013 at 3:54 AM

      வாங்கோ, வணக்கம்.

      //அனைத்தும் அருமை.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  35. பெரியவாளின் அறிவின் தீட்சண்யமும், கருணை வள்ளன்மையும் பல்வேறு சம்பவங்களால் புரிய வைக்கிறீர்கள்! சேவைக்கு நன்றி! சிறுமியைக் காப்பாற்றிய சம்பவம் மிகவும் நெகிழ வைத்தது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. middleclassmadhavi December 9, 2013 at 10:07 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பெரியவாளின் அறிவின் தீட்சண்யமும், கருணை வள்ளன்மையும் பல்வேறு சம்பவங்களால் புரிய வைக்கிறீர்கள்! சேவைக்கு நன்றி! சிறுமியைக் காப்பாற்றிய சம்பவம் மிகவும் நெகிழ வைத்தது!!//

      //சே வை க் கு ந ன் றி!//

      என் சேவையைப்பாராட்டி, நான் தங்கள் ஆத்துக்கு வரும்போது, காரசாரமான தேங்காய்ச்சேவை [சேவை நாழியில் பிழிந்தது - வறுத்த முந்திரிகள் போட்டது - தொட்டுக்கொள்ள பொரித்த சேவை வடாத்துடன்] ஒரு ப்ளேட் தர வேண்டும். தருவீர்களா? ;)))))

      தங்களின் அன்பான வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  36. ஈரோடு, தேனம்பாக்கம்.. கதைகள் வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கு. குட்டிச் குட்டிச் சம்பவங்களை, ஒவ்வொரு புத்தகமாகத் தேடித் தொகுத்தி, மினக்கெட்டு எமக்காக வழங்குவது மிக மகிழ்ச்சியாக இருக்கு. அனைத்துக்கும் வாழ்த்துக்கள்.

    இனி உங்கட கிளியாரிடம் சொல்லிவிடுங்கோ.. அதிராவின் கணக்கில கூடிக் குறஞ்சாலும்:) பார்த்துப் பாராமல் லிஸ்ட்டில சேர்த்து விடட்டாம் என.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. asha bhosle athira December 9, 2013 at 4:28 PM

      வாங்கோ அதிரா, வணக்கம்.

      //ஈரோடு, தேனம்பாக்கம்.. கதைகள் வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கு. குட்டிச் குட்டிச் சம்பவங்களை, ஒவ்வொரு புத்தகமாகத் தேடித் தொகுத்தி, மினக்கெட்டு எமக்காக வழங்குவது மிக மகிழ்ச்சியாக இருக்கு. அனைத்துக்கும் வாழ்த்துக்கள். //

      மிக்க மகிழ்ச்சி. சந்தோஷம்.

      //இனி உங்கட கிளியாரிடம் சொல்லிவிடுங்கோ.. அதிராவின் கணக்கில கூடிக் குறஞ்சாலும்:) பார்த்துப் பாராமல் லிஸ்ட்டில சேர்த்து விடட்டாம் என.//

      என் கணக்குப்பிள்ளை கிளியாரின் புள்ளி விபரக் கணக்குகள்படி, நான் இதுவரை வெளியிட்டுள்ள இந்தத் தொடரின் முதல் 92 பகுதிகளுக்கும், அதிரா வருகை தந்து கருத்துக்கள் சொல்லி சிறப்பித்துள்ளார்கள் எனத் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

      அதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      பகுதி 95/2/2 ல், தங்களை எப்படியும் அடையாளம் காட்டி சிறப்பித்துவிடும் என் கிளி.

      அதன்பிறகு கிளி ஓரிரு முறை மட்டுமே வரக்கூடும்.

      108 பகுதிகளுடன் இந்த ஆன்மிகத்தொடர் முடிய இருப்பதால், அதன் பிறகு அதற்கு இங்கு வேலை இல்லை என்பதால் அந்தக்கிளி என்னிடமிருந்து பறந்தே போய்விடும். ;)

      அன்புடன் கோபு அண்ணன்

      நீக்கு
  37. யோகியாவதற்குத்தான் எல்லோரும் முயல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  38. எல்லா சம்பவங்களுமே நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  39. // ஒரு வேளை சாப்பிடுகிறவன் யோகி;
    இரண்டு வேளை சாப்பிடுகிறவன் போகி;
    மூன்று வேளை சாப்பிடுகிறவன் ரோகி. //

    ரோகியாக இல்லாவிட்டாலும் போகியாக இருக்க முயற்சி செய்வோம்.

    ஈரோடு பெயர்க்காரணம் இப்பதான் தெரிந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 16, 2015 at 10:30 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்.

      **ஒரு வேளை சாப்பிடுகிறவன் யோகி;
      இரண்டு வேளை சாப்பிடுகிறவன் போகி;
      மூன்று வேளை சாப்பிடுகிறவன் ரோகி.**

      //ரோகியாக இல்லாவிட்டாலும் போகியாக இருக்க முயற்சி செய்வோம். ஈரோடு பெயர்க்காரணம் இப்பதான் தெரிந்தது. நன்றி.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  40. //பெரியவா சட்டத்தை மீறியதாக ஒரு சான்று கூட இல்லை.//

    எப்படி இருக்கும். அவர் மகாபெரியவர் அல்லவா?

    // ஏதோ, “பெற்றம்” என்ற சொல்லைப் பற்றி ஆராய்ச்சி செய்வதுபோல் பேசி, வருத்தத்துடன் வந்த ஒருவருக்கு அவர் விரும்பியபடி பேரனுக்குப் பார்வை வர ஒரு நீண்ட கதையையும் சொல்லி வழிகாட்டிய அனுக்கிரகம் இது.//

    மகா பெரியவாளின் கருணையே கருணை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ ஜெயா, தங்களின் மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது :)

      //எப்படி இருக்கும். அவர் மகாபெரியவர் அல்லவா?//

      //பெற்றம் பற்றி ... மகா பெரியவாளின் கருணையே கருணை //

      :) ஆமாம், ஜெயா. தாங்கள் இதனை நன்கு ‘பார்வை’யிட்டுக் குறிப்பிட்டுச்சொல்லியுள்ளது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.

      >>>>>

      நீக்கு
  41. //பெரியவாளுக்கு அரிச்சுவடிப் பாடம் நடத்தவும் தெரியும். எம்.ஏ. வகுப்புப்பாடமும் எடுக்கத் தெரியும்.//

    எவ்வளவு பெரிய விஷயங்களுக்கு எவ்வளவு எளிதாக தீர்வு சொல்லி விட்டார்.

    // இதோ! குழந்தையின் உடலில் சிறு சிறு அசைவுகள்! “கோமா”; மணிக்கணக்கு; நாள்கணக்கு என்று பெரிய பெரிய டாக்டர்கள் சொன்னதையெல்லாம் அடித்து த்வம்ஸம் பண்ணிவிட்டு, “அம்மா!…” என்று குழந்தையை அழைக்க வைத்தது தெய்வத்தின்அனுக்ரஹம் !//

    நடமாடும் தெய்வம் மகாபெரியவாளின் அனுக்ரஹம்.

    // பெரியவா சொன்னதுக்கு எத்தனை மஹத்தான அர்த்தம்! அம்பாளே அந்தக் குழந்தைக்கு ஒரு குழந்தை உருவில் வந்து கூட விளையாடி, அவளுக்கு உயிரூட்டியிருக்கிறாள்!//

    என்ன ஒரு விளையாட்டு. மெய் சிலிர்க்குது. கண்ணில் நீர் முட்டுகிறது. நெகிழ்ந்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ ஜெயா .... ஆஹா மூன்றாம் முறையாக தங்களின் வருகை ... முக்கனி போலச் சிறப்பாக உள்ளது.

      **பெரியவா சொன்னதுக்கு எத்தனை மஹத்தான அர்த்தம்! அம்பாளே அந்தக் குழந்தைக்கு ஒரு குழந்தை உருவில் வந்து கூட விளையாடி, அவளுக்கு உயிரூட்டியிருக்கிறாள்!**

      //என்ன ஒரு விளையாட்டு. மெய் சிலிர்க்குது. கண்ணில் நீர் முட்டுகிறது. நெகிழ்ந்து விட்டேன்.//

      இதிலுள்ள ஒவ்வொரு விஷயங்களையும் பற்றி அம்பாள் போல ஜெயா விரிவாக எழுதி சிறப்பித்துள்ளது .... மெய் சிலிர்க்குது. கண்ணில் நீர் முட்டுகிறது. நெகிழ வைக்கிறது.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  42. ஈரோடுக்கு பெயரு காரணம் பாதி வெளங்கிச்சி. பாதி வெளங்கல.
    ரோட்டுல அடிபட்டுகிட்ட பச்ச புள்ளைக்கு இன்னா மாதிரி கருணை காட்டிருக்காக.

    பதிலளிநீக்கு
  43. இதுபோல பெரியவாளின் அமுத மழை எங்கள் மீது பொழிவது எப்படி தெரியுமா நீங்களும் பெரியவாளை சந்திச்சு நிறைய அநுபவங்கள் பெற்று இருக்கீங்க இல்லையா ஸோ.... பெரியவா உங்க மூலமா அவரோட அமுத மழையை பொழியவைக்க நினைத்துவிட்டார்.

    பதிலளிநீக்கு
  44. குழந்தையுடன் அம்பாளையே அனுப்பி உயிர்காத்த தன்மை...omnipresent...

    பதிலளிநீக்கு
  45. படித்து மெய்சிலிர்த்துபோனேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Vhptamilnadu Chennai September 28, 2018 at 3:08 PM

      //படித்து மெய்சிலிர்த்துபோனேன்.//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

      நீக்கு