என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 16 நவம்பர், 2013

81 ] செலவே வரவு !

2
ஸ்ரீராமஜயம்




சொந்தச் செலவுகளைக் குறைவாக்கிக்கொண்டு, தான தர்மங்களுக்கு முடிந்த மட்டும் செலவழிக்க வேண்டும்.

செலவுகளுக்குள், நமக்கு என்று இல்லாமல், தானமாகச் செலவழிப்பதுதான் உண்மையில் நமக்கு வரவு.

இதனால் புண்ணிய ‘வரவு’ கிடைக்கிறது. தனக்கென்று செலவழிப்பதில் பெற முடியாத ஆன்ம உயர்வை இதனாலேயே பெறுகிறோம்.

சிரத்தையோடு இன்றைக்கே ஒரு பிள்ளையார் சுழி போட்டு, ஆத்ம வழியில் போக ஆரம்பித்தால், என்றைக்கோ ஒருநாள் லட்சியத்திற்கு போய்ச்சேரலாம்.

“நிச்சயமாக ஒருநாள் நாமே பரப்பிரும்மமாகிற பெரிய அனுபவம் நமக்கும் வாய்க்கும்” என்ற சிரத்தையுடன் சாதனையைப் பின்பற்ற வேண்டும். 

சத்தியம் என்றால் வாக்கும், மனதும் ஒன்றாக இருப்பதுதான். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம்.  


oooooOooooo

[ 1 ]

பெரியவாளா இல்லையா ? சந்தேக நிவர்த்தி 

[ சிறிய நகைச்சுவை சம்பவம் ]


ஒரு வைஷ்ணவ சிறுவன் பெரியவாளிடம் அபார பக்தி கொண்டவன். அவனுக்கு உபநயனம் நடந்து ரெண்டு வாரம் இருக்கும். 

அப்போது பெரியவா அவன் இருக்கும் கிராமத்தில் பட்னப்ரவேசம் பண்ணினார். 

எல்லோர் வீட்டிலும் பூர்ணகும்ப மரியாதை பண்ணினார்கள். இவன் வீட்டிலும் பூர்ணகும்பம் கொடுத்துவிட்டு எல்லாரும் பெரியவாளுடைய பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தனர். 

இந்தப் பையனும் புதுப்பூணூல் ஜோரில் "அபிவாதயே" சொல்லி பெரியவாளை நமஸ்கரித்தான். 

"அபச்சாரம்! அபச்சாரம்! டே, அம்பி! பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்றச்சே அபிவாதயே சொல்லப்டாதுடா !"

பக்கத்தில் பல குரல்கள் ஏககாலத்தில் ஒலித்தன. 

பையன் மனஸில் ஓடிய எண்ணமோ,

"பூணூல் போட்டு வைத்த வாத்யார்தானே பெரியவாளப் பாத்தா நமஸ்காரம் பண்ணிட்டு அபிவாதயே சொல்லூன்னு" சொன்னார் ! இவா என்னடான்னா சொல்லப்புடாதுன்னு சொல்றாளே ! 


அப்போ இவா பெரியவாளா? இல்லையா?" 


அந்தர்யாமி சிரித்துக்கொண்டே, "ஒனக்கு என்னைப் பாத்ததும் பெரியவாளா, இல்லியான்னு சந்தேஹம் வந்துடுத்தோல்லியோ?".
பையனுக்கு தூக்கி வாரிப் போட்டது! என்னது இது? X-ray மாதிரி சொல்றாரே! 

பையனை முன்னிட்டு எல்லாருக்கும் திருவாய் மலர்ந்தார்.

"அபிவாதயேங்கறது ஒரு Life History மாதிரி. 


அந்தக்காலத்ல மனுஷாள்ளாம் மாப்பிள்ளைய, நீலத்தநல்லூர் சந்தைல, மாடு வாங்கறா மாதிரி, வாங்க மாட்டா! இங்கிதம் தெரிஞ்சவா, அதுனால "அபிவாதயே" மூலமா, இவன் இன்ன கோத்ரம், இன்ன சூத்ரம், இன்னார் பையன்ன்னு தெரிஞ்சுண்டு, பொண்ணைக் குடுக்கலாமா? வேணாமா?ன்னு முடிவு பண்ணுவா. 

நானோ சன்யாசி. எனக்கு பொண்டாட்டி, பொண்ணு இல்லே, ஒனக்குக் குடுக்க. 

அதுனால அபிவாதயே சொல்றது அவஸ்யம் இல்லையே ஒழிய, சொல்வதால் தப்பு ஒன்றும் இல்லே, புரிஞ்சுதா?"


அழகாக அன்பொழுக நடுரோட்டில் அந்த பையனுக்கு உபதேசம் பண்ணினார் உம்மாச்சி தாத்தா...  


[எங்கோ எதிலோ நான் படித்தது]


oooooOooooo

[ 2 ]

1986ல் நடந்த நிகழ்ச்சி:

சந்திரமெளளி என்பவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளிடம் கைங்கர்யம் செய்து வந்தார்.

சந்திரமௌளியின் மாமா ராணுவத்தில் கேப்டனாகப் பணிபுரிந்தவர். 

கடவுள் நம்பிக்கையுடையவராக இருந்தாலும் மடத்திலும் பெரியவாளிடத்திலும் ஈடுபாடு இல்லாதவர். அவரது குடும்பத்தினரும் அப்படியே. 

வேலூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவரது மாப்பிள்ளைக்கு திடீரென்று சிறு நீரகத்தில் கோளாறு. 

வேலூரில் பரிசோதனை செய்த டாக்டர் கையை விரித்துவிட்டார்.



அன்றிரவு மிகவும் துக்கத்துடன் இருந்த அந்த கேப்டனின் பெண் சொப்பனத்தில் ஸ்ரீ பெரியவாள் தோன்றி உன் மாங்கல்யத்தைத் தருகிறாயா? என்று கேட்டார்கள். 

விடிந்தவுடன், அப்போது உடனடியாக ஒரு மஞ்சள் கயிறு கூட இல்லாத நிலையில் ஒரு சணற் கயிற்றில் மஞ்சளைக் கோர்த்து அணிந்து கொண்டு, மாங்கல்யத்தைப் பெரியவாளுக்காக எடுத்து வைத்துவிட்டாள். 

பின் மௌளியிடம் போனில் விஷயத்தைச் சொன்னார்கள். மௌளி அவர்களை உடனே வந்து பெரியவாளை தரிசனம் செய்யச் சொன்னார். ஆனால், அவர்களுக்குப் பதினைந்து நாட்களுக்குப் பிறகுதான் காஞ்சி மடத்திற்கு வர முடிந்தது.



உள்ளே படுத்துக் கொண்டிருந்த பெரியவாள் மௌளியிடம், ”யாராவது தரிசனத்திற்கு வந்திருக்கிறார்களா” என்று வினவினார்கள். 

மௌளி, பெரியவாளுக்குச் சிரமம் வேண்டாம்; வெளியில் வரும்போது தரிசனம் கொடுக்கலாம் என்று சொன்னார். 

அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் தம்பதிகளை உள்ளேயே அழைத்து வரும்படி உத்திரவிட்டார்கள். 

அவர்கள் உள்ளே வந்ததும் மௌளியின் மாமா பெண்ணைப் பார்த்து, ”அதைக் கொண்டு வந்திருக்கிறாயா? தா, தா ..”  என்று கேட்டு மாங்கல்யத்தைப் பெற்றுக்கொண்டார்கள். 

பின்பு பக்கத்திலிருந்த பாலுவிடம் ஒரு பழம் கொண்டுவரச் சொன்னார்கள். 

அவர் சாத்துக்குடி கொண்டு வந்ததும், இந்த புளிப்புப் பழம் வேண்டாம்; வேறு நல்ல பழம் கொண்டுவா என்றார்கள். 

ஒரு நல்ல ஆப்பிள் வந்தது. அதை நகத்தால் கிள்ளிக் கொண்டே வெகு நேரம் கேப்டனின் மாப்பிள்ளையையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்வாமிகள் அந்த ஆப்பிளை அவர்களிடம் கொடுத்துவிட்டு, ”உனக்கு ஒன்றுமில்லை, போ” என்று கூறினார்கள்.



வேலூர் சென்றவுடன் மாப்பிள்ளையை மறுபடியும் பரிசோதனை செய்த, சிறுநீரக சிறப்பு மருத்துவருக்கு ஒரே ஆச்சரியம். 

கிட்னி இரண்டும் ஒரு குறையுமில்லாமல் நன்றாக வேலை செய்தன. 

என்ன நடந்தது? என்று கேட்டு விவரம் அறிந்தவுடன் அந்த டாக்டர், 

Oh, HE is GOD; HE can do anything" என்று வியப்புடன் சொன்னார்.

20 வருஷத்திற்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை [2006] எந்தத் தொந்திரவும் இல்லாமல் இருக்கிறார். 



முன்பு பெரியவாள் என்றாலே உதாசீனமாக, அலட்சிய பாவத்துடன் இருந்த அவர்கள் வீட்டில் இப்போது பெரியவாள் படங்களைத் தவிர வேறு ஒரு படமும் கிடையாது!


[ நன்றி : அம்ருத வாஹினி 24.07.13 ] 


oooooOooooo



 

விளக்கேற்றி வைக்கிறேன் ... 

விடிய விடிய எரியட்டும் !


நடக்க போகும் நாட்கள் எல்லாம் 

நல்லதாக நடக்கட்டும் !!

  

  
   

  
அனைவருக்கும் இனிய 


கார்த்திகை தீப நல்வாழ்த்துகள்





ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

59 கருத்துகள்:

  1. சத்தியம் என்றால் வாக்கும், மனதும் ஒன்றாக இருப்பதுதான். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம்.

    காலையில் மனம் நிறைந்த மகிழ்ச்சி!..

    அமுத மழையில் ஸ்ரீ பரமாச்சார்ய ஸ்வாமிகள் பற்றிய தகவல்கள் அற்புதம்!.. அற்புதம்!..

    பதிலளிநீக்கு
  2. //சொந்தச் செலவுகளைக் குறைவாக்கிக்கொண்டு, தான தர்மங்களுக்கு முடிந்த மட்டும் செலவழிக்க வேண்டும்.
    செலவுகளுக்குள், நமக்கு என்று இல்லாமல், தானமாகச் செலவழிப்பதுதான் உண்மையில் நமக்கு வரவு.
    இதனால் புண்ணிய ‘வரவு’ கிடைக்கிறது. தனக்கென்று செலவழிப்பதில் பெற முடியாத ஆன்ம உயர்வை இதனாலேயே பெறுகிறோம்.//
    எளிமையும் நற்பொருளும் தங்கள் பதிவின் அழகு!

    பதிலளிநீக்கு
  3. அன்பின் வை.கோ - செலவே வரவு - பதிவு அருமை .

    தான தர்மங்களுக்கு செலவழிக்க வேண்டும்

    தானமாக செலவழிப்ப்து உண்மையில் நம்க்கு வரவு - புண்ணிய வரவு.

    பெரியவாளா இல்லையா - சந்தேக நிவர்த்தி

    பெரியவாளுக்கு அபிவாதய சொல்லக் கூடாது - ஏனென்றால் அவர் ஒரு சந்நியாசி

    அவருக்கு மனைவி பிள்ளைகள் இல்லை -

    நடுரோட்டில் அன்புடன் உபதேசம் பண்ணியது ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளீன் குணத்தைக் காட்டுகிறது

    1986ல் நடந்த நிகழ்வு அருமை - பெரியவாளுக்குத் தெரியும் எப்பொழுது எதைச் செய்ய வேண்டுமென்று - பெரியவா பெரியவா தான் .

    நன்று நன்று - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  4. தீபங்கள் அழகாக ஜொலிக்கிறதே! கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்! பெரியவாளின் கருணையும், அருளும் கேட்கையில் மனமுருக செய்கிறது.

    பதிலளிநீக்கு
  5. /// சிரத்தையுடன் சாதனையைப் பின்பற்ற வேண்டும்... /// மிகவும் முக்கியம்...

    தீபங்கள் அழகு... (அழகை சிறப்பாக ரசிக்க Ctrl + Plus-யை பயன்படுத்தவும்... நன்றி...

    வாழ்த்துகள் ஐயா...

    பதிலளிநீக்கு
  6. /// சிரத்தையுடன் சாதனையைப் பின்பற்ற வேண்டும்... /// மிகவும் முக்கியம்...

    தீபங்கள் அழகு... நன்றி...

    வாழ்த்துகள் ஐயா...

    பதிலளிநீக்கு
  7. பெரியவாளின் செயலனைத்தும் எம்மைப் பெருமிதமடைய வைக்கிறது .ஒவ்வொரு நிகழ்வுகளையும் கண்முன் நிறுத்தும் தங்கள் எழுத்தாற்றலைக் கண்டு உள்ளம் குளிர்கிறது .இனிய கார்த்திகைத் தீப நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்கள் மனதை தொடும் செய்திகள்.
    எத்தனை செய்திகள் இந்த அமுத மொழிகளில் .அத்தனையும் ஆன்மிகம் வளர்ப்பவை . தொடரட்டும் உங்கள் பணி.
    வாழ்த்துக்கள்........

    பதிலளிநீக்கு
  9. “நிச்சயமாக ஒருநாள் நாமே பரப்பிரும்மமாகிற பெரிய அனுபவம் நமக்கும் வாய்க்கும்” என்ற சிரத்தையுடன் சாதனையைப் பின்பற்ற வேண்டும்.

    சத்தியம் என்றால் வாக்கும், மனதும் ஒன்றாக இருப்பதுதான். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம்.

    சிரத்தையான சாதனைகள் பலனளிக்கும் சாத்தியத்தை அருமையாக எடுத்துரைத்த இனிய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  10. நமக்கென்றிராமல் தானமாகச் செய்வதுதான் நமக்கு வரவு. தானங்கள் செய்வதற்குக் கூட விரதங்கள்,பூஜை,புனஸ்காரங்கள் என பல வழி இருந்தது. அதெல்லாம் கூட காணக்கிடைக்காததாக ஆகிக் கொண்டு வருகிரது.
    அபிவாதயே சொல்லிய பையனுக்கு பெரியவாள் சொன்னது ,மற்றவர்களுக்கும்,தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது.
    எவ்வளவு அழகிய பொருள் பொதிந்த வியாக்கியானம்.
    கார்த்திகைதீப வாழ்த்துகளுக்கு நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  11. "அபிவாதயேங்கறது ஒரு Life History மாதிரி.

    அந்தக்காலத்ல மனுஷாள்ளாம் மாப்பிள்ளைய, நீலத்தநல்லூர் சந்தைல, மாடு வாங்கறா மாதிரி, வாங்க மாட்டா! இங்கிதம் தெரிஞ்சவா, அதுனால "அபிவாதயே" மூலமா, இவன் இன்ன கோத்ரம், இன்ன சூத்ரம், இன்னார் பையன்ன்னு தெரிஞ்சுண்டு, பொண்ணைக் குடுக்கலாமா? வேணாமா?ன்னு முடிவு பண்ணுவா.

    சிறுவர்களுக்கும் புரியும்படி அருமையாக விளக்கி ,
    நமது பாரம்பர்யத்தின் பெருமையை விளக்கியுள்ள பெரியவாளுக்கு நமஸ்காரங்கள்..!

    பதிலளிநீக்கு
  12. முன்பு பெரியவாள் என்றாலே உதாசீனமாக, அலட்சிய பாவத்துடன் இருந்த அவர்கள் வீட்டில் இப்போது பெரியவாள் படங்களைத் தவிர வேறு ஒரு படமும் கிடையாது!

    உதாசீனம் செய்தவர்களையும் காத்த தெய்வம் நிறைவளிக்கிறது..!

    பதிலளிநீக்கு
  13. இனிய கார்த்திகை தீப நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  14. தர்மகாரியங்களுக்கு மனப்பூர்வமாகசெய்வது புண்ணியவரவுதான் ஸத்காரியங்களுக்காகசெய்வது வங்கியில் பணம்போட்டுவைப்பதுமாதிரிதான் பிற்காலத்தில் நோய்நொடி பெரிய அளவில் வைத்தியத்துக்கு செலவு பண்ண வேண்டியிராது அபிவாதயேவிளக்கம் அனைவருக்குமான உபதேசம் மௌளியின் மாமாவுக்கு சிறுநீரகக்கோளாறு சரியான அதிசயம் கருணைக்கடலின் அற்புதலீலைகளில் ஒன்று நன்றி

    பதிலளிநீக்கு
  15. //சொந்தச் செலவுகளைக் குறைவாக்கிக்கொண்டு, தான தர்மங்களுக்கு முடிந்த மட்டும் செலவழிக்க வேண்டும்.//
    உண்மைதான், ஆனா சொந்தச் செலவுக்கே பணம் போதாமலிருக்காமே:).

    ///சத்தியம் என்றால் வாக்கும், மனதும் ஒன்றாக இருப்பதுதான். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம். ///.. சத்தியம் - உண்மை - நேர்மை...... மெய் சொல்லிக் கெட்டவருமில்லை, பொய் சொல்லி வாழ்ந்தவருமில்லை..

    பதிலளிநீக்கு
  16. அழகாக அன்பொழுக நடுரோட்டில் அந்த பையனுக்கு உபதேசம் பண்ணினார் உம்மாச்சி தாத்தா...


    [எங்கோ எதிலோ நான் படித்தது]/// உம்மாச்சி தாத்தா பெயரே அழகா யிருக்கு.. அனுபவம் அருமை.

    //[ நன்றி : அம்ருத வாஹினி 24.07.13 ] // நன்றி.. இன்னொரு அனுபவக் கதை அருமை.

    பதிலளிநீக்கு
  17. அபிவாதயே சொல்வதன் பொருள் அறிந்துகொண்டேன்! பொன்மொழிகள் அருமை! பெரியவாளின் அற்புதம் மெய் சிலிர்க்க வைத்தது! அருமையான பகிர்வு! நன்றி! இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  18. //விளக்கேற்றி வைக்கிறேன் ...

    விடிய விடிய எரியட்டும் !


    நடக்க போகும் நாட்கள் எல்லாம்

    நல்லதாக நடக்கட்டும் !!//
    எனக்கொரு டவுட்டு கோபு அண்ணன்:).. நாள் எப்படி நடக்கும்?:) அதுக்கு கால் இருக்கா? ரெண்டா நாலா?:)).. நாலெனில் நம்ம கட்சி:))

    பதிலளிநீக்கு
  19. ஓ.. கடைசிப் படம் விளக்கீட்டுக்காகவோ? நான் ஏதோ நம்மட அம்பாளடியாள்பற்றிச் சொல்லப் போறீங்களாக்கும் என அவசரப்பட்டு நினைச்சுட்டேன்ன்ன்:))

    தீபத் திருநாள் வாழ்த்துக்கள்... உங்கட வெளி ஜன்னலில் எல்லாம் சுட்டி விளக்கு ஏத்துங்க கோபு அண்ணன்...

    பதிலளிநீக்கு
  20. தீபத் திருநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி! தங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்! ஜொலிக்கிறது பதிவு... பெரியவா எனும் குணக்குன்றை பிரத்யட்சமாக வர நம் காலம் போதுமோ! கருணை தயாபரர்!

    பதிலளிநீக்கு
  21. கார்த்திகை தீப வாழ்த்துகளுக்கு முதலில் நன்றியைத் தெரிவிக்கிறேன். உங்களுக்கும் வாழ்த்துகள். அருமையான பகிர்வு. இரண்டுமே இது வரை படித்ததும் இல்லை; சொல்லிக் கேட்டதும் இல்லை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. மறுப்பவர்களுக்கும் அருளும்
    ஆண்டவன் அருளினை மகாப்பெரியவரின்
    அனுக்கிரஹம் மூலம் அறிந்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    இனிய கார்த்திகைத் திரு நாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  23. ரொம்ப அருமையான பகிர்வு ஐயா!!..அரிய விஷயங்களை திருக்கார்த்திகை நன்னாளில் தெரிந்து கொண்டேன். ஸ்ரீமஹாபெரியவாளின் பெருங்கருணை நம் அனைவர் மீதும் பொழியட்டும்...ஸ்ரீமஹா பெரியவரின் திருவடிகளே சரணம்!!.. இந்த அரிய சேவைக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!!!

    திருக்கார்த்திகை தீபத் திருநாள், வட இந்தியாவில், 'தேவ தீபாவளி'யாகவும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் திரிபுராரி பௌர்ணமியாகவும், பக்தேஸ்வர விரத தினமாகவும் கடைபிடிக்கப்படுகின்றது. இது குறித்த செய்திகளை அறிய, தங்களுக்கு நேரமும் விருப்பமும் இருக்கும் போது, இந்த சுட்டிக்கு வர வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...http://aalosanai.blogspot.in/2013/11/dev-diwalikartik-purnima-special-post.html

    பதிலளிநீக்கு
  24. சிரத்தையுடன் சாதனையைப் பின்பற்ற வேண்டும்...
    இனிய கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  25. பெரியவாளின் அற்புத சம்பவங்கள் படிக்கப் படிக்கத் தெவிட்டாதன பகிர்வுக்கு நன்றி.

    கார்த்திகைத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  26. சின்ன பையன்னுக்கு விளக்கம் சொல்லி எல்லாருக்கும்
    புரியவைத்த விதம் பெரியவளின் அநுக்ரகம்
    இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள் மீண்டும் நமஸ்காரங்கள்


    பதிலளிநீக்கு
  27. // சொந்தச் செலவுகளைக் குறைவாக்கிக்கொண்டு, தான தர்மங்களுக்கு முடிந்த மட்டும் செலவழிக்க வேண்டும். //

    இதனை ஒவ்வொருவரும் செய்தால் மனிதரிடையே பாசமும் நட்பும் பெருகும். நான் என்னால் ஆனவற்றை செய்து வருகிறேன்.

    வைஷ்ணவ சிறுவனுக்கு உபதேசம், சந்திரமவுலி மாமாவின் நம்பிக்கை – என்று பெரியவரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள். படிக்கப் படிக்க வியப்பு.

    கார்த்திகைத் திருநாள்! தீபத் திருநாள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  28. அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! நான் சித்தார்த்தா அறக்கட்டளைக்காக கம்ப்யூட்டர் பணி செய்து கொண்டு இருந்தபோது அவர்களுடைய ID இல் தவறுதலாக என்னுடைய கருத்துரையை அனுப்பி விட்டேன் என்று நினைக்கிறேன். அதனை நீக்கி விடவும். மறுபடியும் புதிதாக கருத்துரையை தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். தவறுக்கு மன்னிக்கவும்.
    அன்புடன் – தி.தமிழ் இளங்கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ November 17, 2013 at 4:19 AM

      அன்புள்ள ஐயா, வணக்கம்.

      தாங்கள் வேண்டுகோள்படி நான் அதை இங்கு வெளியிடவில்லை. இது தங்கள் தகவலுக்காக.

      //புதிதாக கருத்துரையை தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். //

      சரி ..... ஐயா, மிக்க நன்றி ஐயா.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. அன்புள்ள VGK அவர்களுக்கு நன்றி!

      நீக்கு
  29. // சொந்தச் செலவுகளைக் குறைவாக்கிக்கொண்டு, தான தர்மங்களுக்கு முடிந்த மட்டும் செலவழிக்க வேண்டும். //

    இதனை ஒவ்வொருவரும் செய்தால் மனிதரிடையே பாசமும் நட்பும் பெருகும். நான் என்னால் ஆனவற்றை செய்து வருகிறேன்.

    வைஷ்ணவ சிறுவனுக்கு உபதேசம், சந்திரமவுலி மாமாவின் நம்பிக்கை – என்று பெரியவரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள். படிக்கப் படிக்க வியப்பு.

    கார்த்திகைத் திருநாள்! தீபத் திருநாள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  30. இனிய கார்த்திகைத் திரு நாள் வாழ்த்து.
    பதிவு அருமை.
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  31. ஒவ்வொரு பகிர்விலும் மகாபெரியவரின் அமுதமொழியில் நனைய வைத்து விடுகிறீர்கள்... அருமை ஐயா....

    பதிலளிநீக்கு
  32. செலவு - வரவு பற்றி அமுதமான அமுத மொழிகள்.......

    பதிலளிநீக்கு
  33. BY READING THE ABOVE ARTICLE ONLY, I CAME TO KNOW THE REASON WHY WE SHOULD NOT TELL'' ABIVADAYE '' TO SANNIYASIS. ANOTHER MESSAGE IS THERE IS NO HARM IN DOING A MISTAKE WTHOUT KNOWING THE SAME.

    THANK YOU,

    NAGU.

    பதிலளிநீக்கு
  34. சிறுவனுக்கு உபதேசித்த விதம் அருமை! நம்பினார் கெடுவதில்லை! அமுதமொழிகல் அருமை! கார்த்திகைத் திருநாள் வாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  35. Very beautiful post regarding income and expenditure, interesting incidents. Thanks a lot for sharing sir...

    பதிலளிநீக்கு
  36. அமுதமொழிகளும், சம்பவங்களும் படித்து மகிழ்ந்தேன்...

    பதிலளிநீக்கு
  37. பெரியவரின் கருணையும்,அருளும் மனதை மகிழ்ச்சிக் கொள்ள செய்கிறது,பகிர்வுக்கு நன்றி ஐயா!!

    பதிலளிநீக்கு
  38. "சொந்தச் செலவுகளைக் குறைவாக்கிக்கொண்டு, தான தர்மங்களுக்கு முடிந்த மட்டும் செலவழிக்க வேண்டும்"
    .நல் அறிவுரை..

    அற்புத மருத்துவர்.

    பதிலளிநீக்கு
  39. சொந்தச் செலவுகளைக் குறைவாக்கிக்கொண்டு, தான தர்மங்களுக்கு முடிந்த மட்டும் செலவழிக்க வேண்டும்.//

    அருமையான அமுதமொழி.

    சிறு குழந்தையிடம் அன்பும் கருணையுமாய் விளக்கம் கொடுத்து பேசியது மிக மகிழ்ச்சியான விஷ்யம்.
    அருமையான பகிர்வுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  40. நம்பிக்கைதான் கடவுள்
    அதுதான் உயிர்களை வாழ வைக்கிறது.
    கடவுள் மீது வைத்த நம்பிக்கை amiathiyai தருகிறது
    ஆக்கத்தை தருகிறது.அழியாப் பதம் தருகிறது.

    கடவுளே இல்லை என்ற நம்பிக்கை
    ஏற்றத்தையும் தராது அமைதியையும் தராது.

    ஒவ்வொருவரும் இதை உணரும் காலம் ஒருநாள் வரும்.அப்போது அதன் உண்மையை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

    உலகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுக்கெல்லாம் கடவுள்தான் பொறுப்பு என்று நாத்திகர்கள் கூறுகிறார்கள். கடவுளை காண இயலாமையினால் கடவுளை வணங்குபவர்களை அவர்கள் சாடுகிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் ஒரு குழந்தை சுவரின்மேல் இடித்துக்கொண்டு அழும்போது அத்ன்முன்பு அந்த சுவற்றை இரண்டு தட்டிவிட்டால் அது சமாதானமாகிவிடும் அதைப் போன்றதுதான் இவர்கள் செயலும்.

    பதிலளிநீக்கு
  41. அபிவாதயே பற்றிய விளக்கம் நன்றாக இருந்தது. தன் மேல் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் தன் கருணை மழையைப் பொழியும் மஹா பெரியவாளைப் பற்றிப் படிப்பது ஒரு திவ்யமான அனுபவம்.

    பதிலளிநீக்கு
  42. "அபிவாதயே" பற்றிய நுணுக்கமான செய்தியை பெரியவா பையன் மூலமா எல்லோருக்கும் விளக்கி விட்டார்.

    பதிலளிநீக்கு
  43. பெரியவா பற்றி நீங்க சொல்லி வரும் ஒவ்வொரு நிகழ்வுகளும் சம்பவங்களும் அவ்ளவு நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  44. // சொந்தச் செலவுகளைக் குறைவாக்கிக்கொண்டு, தான தர்மங்களுக்கு முடிந்த மட்டும் செலவழிக்க வேண்டும்.//

    கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தால் இந்தக் காலத்தில் எவ்வளவு வீண் செலவு செய்கிறார்கள் என்பது புரியும். எளிமை இனிமை புரிய எவ்வளவு காலம் ஆகுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      இதை மிகவும் ஆழமாக யோசித்துப்பார்த்து, எளிமையாகப் புரியும் வண்ணம், இனிமையாகத் தாங்கள் இங்கு கூறியுள்ளது, எப்போதும் எளிமையாகவே இருக்க விரும்பும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

      மிக்க நன்றி, ஜெயா

      >>>>>

      நீக்கு
  45. // அழகாக அன்பொழுக நடுரோட்டில் அந்த பையனுக்கு உபதேசம் பண்ணினார் உம்மாச்சி தாத்தா... //

    அவரை விட யாரால் இப்படி அழகாக உபதேசம் பண்ண முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவரை விட யாரால் இப்படி அழகாக உபதேசம் பண்ண முடியும்.//

      மிகச்சரியாகப் புரிந்துகொண்டு சொல்லியுள்ளீர்கள், ஜெ.

      மிக்க மகிழ்ச்சி. :)

      >>>>>

      நீக்கு
  46. // முன்பு பெரியவாள் என்றாலே உதாசீனமாக, அலட்சிய பாவத்துடன் இருந்த அவர்கள் வீட்டில் இப்போது பெரியவாள் படங்களைத் தவிர வேறு ஒரு படமும் கிடையாது!//

    லேட்டா புரிஞ்சுக்காம லேட்டஸ்டா புரிஞ்சுண்டாளே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //லேட்டா புரிஞ்சுக்காம லேட்டஸ்டா புரிஞ்சுண்டாளே.//

      :)))))

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      தங்களின் அன்பான மும்முறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  47. வெளக்கு படங்கலா ஜொலக்குது

    பதிலளிநீக்கு
  48. சத்தியம் என்றால் வாக்கும் மனதும் ஒன்றாக இருப்பதுதான். விளக்கு படங்கள் தீப ஜோதியாக பிரகாசின்றன.

    பதிலளிநீக்கு
  49. செலவே வரவு...அருமைப் பதிவு...படங்கள் கண்ணில் நிற்கிறது...

    பதிலளிநீக்கு
  50. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (02.08.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=461728780996488

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  51. இந்த பதிவின் மற்றொரு பகுதி, நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (04.08.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=463783404124359

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு