என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 24 நவம்பர், 2013

85 / 1 / 2 ] நமஸ்காரமா ... தண்டமா ?

2
ஸ்ரீராமஜயம்
அகம்பாவத்தை விட்டு விட்டால், மனசு தாழ்மையாகக் கிடக்கும். 

அப்படிக் கிடந்தே உயர்ந்ததில் உயர்ந்த செளக்யத்தைப் பெற்றுவிடும். 

இந்த மாதிரி மனதைக் கிடத்துவதற்கு அடையாளந்தான், பிடியை விட்டு அதனிடம் விழுகிறாற் போல, பூமியோடு பூமியாக நமஸ்கரித்துக் கிடப்பது.

இந்தத்தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் நமஸ்கரித்தால், அந்த நமஸ்காரமே ‘தண்டம்’ தான்.

“பிறரை ஆட்டி வைக்கிற தன்னையும் ஒருவன் ஆட்டி வைக்கிறான். அதை நல்லபடியான ஆட்டமாக்க வேண்டியவனும் அவனே; எல்லா ஆட்டத்தையும் நிறுத்தி, ஸாந்தி மற்றும் செளக்கியம்  தரக்கூடியவனும் அவன்தான்” என்ற நினைப்பில் தண்டமாக மனதை அவனுக்கு கிடத்துவதுதான் நமஸ்காரம்.


ஒரே முனையை விட்டு அகலாமல் இருப்பதை, ஏகாக்கிரம் என்று சொல்வார்கள்.  அவ்வாறு இருக்க சித்தத்தை பழக்குவதே சித்த சுத்தி.


oooooOooooo

[ 1 ] 

மஹா பெரியவா கண்ணை மூடி ஜபத்தில் ஆழ்ந்தார் என்றால் ஒரு மணி நேரம் ஜபம் செய்வார். கடிகாரத்தை எல்லாம் பார்ப்பது கிடையாது. ஜபத்தில் இருந்து அவர் விழிக்கும்போது சரியாக ஒரு மணி நேரம் கழிந்திருக்கும்'' - எனச் சிலாகிப்புடன் துவங்குகிறார் பாலு.

இவர், காஞ்சி முனிவரின் நிழலாகவே இருந்து பணிவிடைகள் செய்தவர். மிக அற்புதமான நிகழ்வுகளை அவர் பகிர்ந்துகொண்ட போது, மஹாபெரியவாளின் கருணையை எண்ணி கண்கள் பனித்தன நமக்கு.

”ஒருமுறை, அப்போ துணை ஜனாதிபதியா இருந்த பி.டி.ஜாட்டி, பெரியவாளைத் தரிசிக்க வந்திருந்தார். அந்த நேரம் பெரியவா ஜபத்தில் இருந்தார். சரி... ஜனாதிபதி தரிசிச்சுட்டு உடனே கிளம்பிடுவாருன்னு எதிர்பார்த்தோம். ஆனால், அவருக்கு பெரியவாளுடன் நிறைய பேச வேண்டியிருந்தது போலும். பெருமாள் கோயிலில் காத்திருந்தார். இந்த விஷயத்தை மெள்ள தயக்கத்துடன் பெரியவாளிடம் சொன்னோம்.


அவரும்... துணை ஜனாதிபதியை சந்திர மௌலீஸ்வரர் ஆலயத்துக்கு அழைத்துச் சென்று வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், என்ன விசேஷம் தெரியுமா? அவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தும் தனது ஜபத்தையும் அவர் விட்டுவிடவில்லை!'' என்ற ஆச்சரியத்துடன் விவரித்த பாலு, மேலும் தொடர்ந்தார்:


''தான் ஏகாதஸி, துவாதஸி என்று உபவாஸம் இருப்பார். ஆனால் பிறத்தியார் வயிறு வாடினால் பொறுத்துக்க மாட்டார். 

கள்ளுக் கடையில் குடித்து விட்டு வெறும் வயிற்றோடு போவார்களே...அவர்களுக்காகவும் மனம் இரங்கியதுண்டு. 

இந்த நிலையில் வீட்டுக்குப் போனால் அவர்களுக்குச் சாப்பாடு கிடைக்குமா? 


பெரியவா என்ன செய்வார் தெரியுமா? தன்னைப் பார்க்க வருபவர்கள் கொண்டு வரும் வாழைத்தார்களை வழியில் இருக்கும் புளிய மரத்தில் கட்டி தொங்கவிடச் சொல்வார். நல்ல விலை உயர்ந்த ரஸ்தாளி பழங்களாக இருக்கும். 'வயிறு காலியா இருக்கற மனுஷாளும் சாப்பிடட்டும்... பட்சிகளும் சாப்பிடட்டும்’ என்பார். ஆமாம்... அவரின் கருணை.. பேதம் பார்க்காத கருணை!

ஜோஷி என்றொரு பக்தர் உண்டு. தினமும் இரண்டு டின் தயிர் அனுப்புவார். அதேமாதிரி வெல்ல மண்டி நடேசய்யர் மூட்டை மூட்டையா வெல்லம் அனுப்புவார். அவற்றைக் கொண்டு... கோடை காலத்தில் தாகத்துடன் வர்றவங்களுக்கு நீர் மோரும், பானகமும் கொடுக்கச் சொல்லுவார். சில நேரங்களில் வாழைப் பழமும் கொடுப்பது உண்டு.

அப்போது, மடத்தில் பல்லக்குத்தூக்கும் 'பெத்த போகி’ கன்னையன்னு ஒருத்தர்; வயதாகிட்டதால உடம்புல தெம்பு குறைஞ்சுடுச்சு. அவர் பெரியவாகிட்ட வந்து, மடத்துக்கு வெளியே இளநீர் கடை வைத்து பிழைச்சுக்கிறேன்னு அனுமதி கேட்டார். பெரியவாளும் சரின்னுட்டார்.


மறுநாளில் இருந்து நீர்மோர், பானகம் எல்லாம் கட். எங்களுக்கெல்லாம் திகைப்பு. பெரியவா ஏன் இப்படிச் சொல்றார்னு புரியவில்லை. வாய்விட்டுக் கேட்டுவிட்டோம். அவர் என்ன சொன்னார் தெரியுமா? 

'கன்னையன் கடை போட்டு அவன் வியாபாரம் முடியட்டும். அதன்பிறகு நீர்மோர், பானகம் எல்லாம் கொடுக்கலாம். இல்லேன்னா அவனுக்கு எப்படி வியாபாரம் ஆகும்? அவன் பிழைப்புக்கு என்ன செய்வான்?’ என்றார். அதுதான் மஹாபெரியவா!''

oooooOooooo

இதை என்னிடம் நேரில் பகிர்ந்து கொண்ட ராயபுரம் ஸ்ரீ பாலு அண்ணா அவர்களுக்கு அடியேன் கோபுவின் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள் / நமஸ்காரங்கள். 

இந்த ராயபுரம் ஸ்ரீ பாலு அண்ணா அவர்களைப்பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ளேன்.  சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் ஸ்ரீ மஹாபெரியவாளுடன் கூடவே இருந்து கைங்கர்யம் செய்துள்ள புண்ணியாத்மா.

அந்த சிறப்புப்பதிவினைப் படிக்காதவர்கள் படிக்க இதோ இணைப்பு:

[ பொக்கிஷம் தொடரின் பகுதி-9 ]

தலைப்பு:

நானும் என் அம்பாளும் !"
அதிசய நிகழ்வு !

[கீழேயுள்ள சம்பவமும் நம் பாலு அண்ணா பற்றியதே]


oooooOooooo

[ 2 ] 

கும்பகோணத்தை சேர்ந்த பட்டுப் பாட்டி பெரியவாளிடம் அளவில்லாத பக்தி கொண்டவள். 

வ்யாஸராய அக்ரஹாரத்திலிருந்த தன்னுடைய இரண்டு வீடுகளையும் மடத்துக்கே எழுதி வைத்தவள். 

பெரியவா சதாராவில் முகாமிட்டிருந்த போது, பாட்டியும் அங்கு வந்திருந்தாள். நல்ல குளிர்காலம்.  


ஒருநாள் காலை தன்னுடைய பாரிஷதரான பாலு அண்ணாவிடம் ஒரு கம்பிளியை குடுத்து " இதக் கொண்டு போய் பட்டுப் பாட்டிட்ட குடு"  என்றார், பெரியவா.

அன்று நள்ளிரவுக்கு, சற்று முன்புதான் கண்ணயர்ந்த பெரியவா, பாலு அண்ணாவை எழுப்பி, " பட்டுப் பாட்டிக்கு போர்வை குடுத்தியோ?"   என்றார்.
தூக்கிவாரிப் போட்டது! ஆஹா! மறந்தே போய்விட்டோமே! 

" இல்லே பெரியவா......மறந்தே போயிட்டேன்""சரி.இப்போவே போயி அவ எங்க இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு கம்பிளியை அவள்ட்ட 

குடுத்துட்டு வா"இந்த நடுராத்ரியிலா? குளிரான குளிர்! எங்கே போய் பாட்டியை தேடுவது? "காலம்பற குடுத்துடறேனே"தெய்வக் குழந்தை அடம் பிடித்தது. "இல்லே.....இப்பவே குடுத்தாகணும். ராத்ரிலதானே குளிர் ஜாஸ்தி?" 

அலைந்து திரிந்து, இருட்டில் முடங்கிக் கிடக்கும் உருவங்களை எல்லாம் உற்று உற்று 

பார்த்து, கடைசியில் கபிலேஸ்வர் என்ற மராட்டியர் வீட்டில் ஒரு ஓரத்தில் குளிரில் 

முடக்கிக் கொண்டு கிடந்த பாட்டியைக் கண்டுபிடித்து கம்பிளியை சேர்த்தார் பாலு 

அண்ணா. 

பாட்டி அடைந்த சந்தோஷத்துக்கு அளவு இருக்குமா என்ன? 

பெரியவாளோட பட்டு ஹ்ருதயம் கம்பிளியாக அந்த வயஸான ஜீவனுக்கு ஹிதத்தை 

குடுத்தது. 

-=-=-=-அதே பாலு அண்ணா ஒருநாள் ’சம்போட்டி’ என்ற ஊரில் உள்ள கோவிலின் திறந்த 

வெளியில் மார்கழி மாசக் குளிரில் சுருண்டு படுத்து, எப்படியோ உறங்கிப் போனார். 

மறுநாள் விடிகாலை எழுந்தபோது, தன் மேல் ஒரு சால்வை போர்த்தியிருப்பதைக் 

கண்டார். சக பாரிஷதர்கள் யாராவது போர்த்தியிருப்பார்கள் என்று எண்ணி, இது பற்றி 

யாரிடமும் சொல்லவில்லை. 

நாலு நாள் கழித்து, பெரியவா "ஏதுடா பாலு.....போர்வை நன்னாயிருக்கே! ஏது?"  என்று 

கேட்டார்." தெரியலே பெரியவா.....வேதபுரியோ, ஸ்ரீகண்டனோ போத்தியிருப்பா போல இருக்கு. 

நான் தூங்கிண்டிருந்தேன்"   தன் ஊகத்தை சொன்னார் 
பெரியவா ஜாடை பாஷையில் "அப்படி இல்லை"  என்று காட்டிவிட்டு, தன்னுடைய 

மார்பில் தட்டிக் காட்டிக் கொண்டார்! முகத்தில் திருட்டு சிரிப்பு!"நல்ல பனி! நீ பாட்டுக்கு தரைலேயும் ஒண்ணும் விரிச்சுக்காம, போத்திக்கவும் 

போத்திக்காம படுத்துண்டு இருந்தியா.....! ஒங்கம்மா பாத்தா எப்டி நெனைச்சுண்டு 

இருந்திருப்பா....ன்னு தோணித்து..."

தாயினும் சிறந்த தாயான பெரியவாளுடைய இந்த மஹா ப்ரேமையை அனுபவித்த 

பாலு அண்ணா என்ற பாக்யவான் கண்களில் கண்ணீர் மல்க நமஸ்கரித்தார்.
 


[Thanks to Amritha Vahini 22.11.2013]


[ 3 ] 

ஸ்ரீ பெரியவா  ...
ஸ்ரீ கிருஷ்ணனாக


krishna_periyava


“பசு இன்னா இப்டி ஒதைக்குது? கண்ணு ஊட்டிட்டாப்ல இல்ல இருக்குது! ஆனா கன்னு தறில கட்னபடிக்கா இருக்குதே! இதென்னா அக்குறும்பு?’என்று அலுத்து கொள்கிறார், ஸ்ரீ மடத்து இடையர்.

உள்ளே நம்ம பெரியவா குறும்பு குழந்தையாக சிரித்து கொள்கிறார்.

“பாதி ராத்ரில கன்னு “அம்மா”ன்னு கத்தித்து [தம் வயிற்றை தட்டி காட்டி] அதுக்கு போறலைன்னு தெரிஞ்சுது. நான்தான் யாருக்கும் தெரியாம போய் [தம் திருட்டுத்தனத்தை தாமே ரசித்து நகைத்து] கன்னை அவுத்து விட்டேன். அது வயிறு முட்ட முட்ட ஊட்டித்து, அப்புறம்……எங்கேயாவது ஓடிட போறதேன்னு பிடிச்சு கட்டிட்டும் வந்துட்டேன். அதுதான் கறக்க விடமாட்டேங்கறது!”என்றார் அருகிலிருந்தவர்களிடம்.

இம்மாதிரி நிகழ்ச்சி பலமுறை நடந்ததுண்டு!

பசுக்கள் தண்ணீர் பருகுவதை அன்பு நயனங்களால் பருகிகொண்டிருந்த பெரியவாளிடம், ஒரு கன்று துள்ளி ஓடிச்சென்றது. புனித திருவுருவின் மீதே அது உராய்ந்து நிற்க, பாரிஷதர்கள் அதை பிடித்து கட்ட விரைந்தனர்.

பெரியவா “வேண்டாம்” என்று சைகை செய்தார். யாருமே தீண்டாத தெய்வ திருமேனியை உராய்ந்து, பேறு பெற்றுக்கொண்டிருந்தது அந்த கன்று. சற்று ஸ்வாதீனம் பெற்று, பெரியவாளின் உள்ளங்காலை மோந்து, நக்கவும் தொடங்க, உள்ளம் நிறைந்த அவரும் அதன் முதுகை கோதி கொடுத்தார்.

சரியாக அந்த சமயம். வடமதுரையிலிருந்து வந்த ஒரு ஸாது, பெரியவாளின் திருக்கோலத்தை கண்டதும் ஆனந்த பாஷ்பம் அடைந்தார்.

“பீதாம்பரதாரியாக, பசுக்கள் சூழ, ஸ்ரீ சரணத்தை கன்று நக்க, கொட்டிலில் விளங்கும் என் கோவிந்த கோபாலனை பிரத்யக்ஷமாகக் கண்டேனே!” என்று நா தழு தழுக்கக் கூறினார்.

விட்டுப்போன அம்சமான, பச்சை துளசி மாலையும் வர, அதனையும் அணிந்து அந்த வடமதுரை ஸாதுவிற்கு அருளினார்.

[Thanks to Sage of Kanchi 7th July 2013]

oooooOooooo

பகுதி: 85 / 2 / 2

தலைப்பு:

செல்லக்கிளியே ......
மெல்லப்பேசு  !

இன்றே இப்போதே 
தனிப்பதிவாக
வெளியிடப்பட்டுள்ளது.

காணத்தவறாதீர்கள்.
49 கருத்துகள்:

 1. த்தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் நமஸ்கரித்தால், அந்த நமஸ்காரமே ‘தண்டம்’ தான்.

  உணர்ந்து தெளிந்த பகிர்வுகள்..!

  பதிலளிநீக்கு
 2. Periyavaalaippaththi yevvalavu padichchaalum podalai! Nandri, Gopu Sir!

  பதிலளிநீக்கு
 3. எல்லாமே பெரியவா தளத்திலே படிச்சாலும் இங்கேயும் படிச்சு மகிழ்ந்தேன். அதிலும் அந்தப் படம் அருமை! குழலூதும் கிருஷ்ணனோடு பெரியவா! அருமையான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 4. “பீதாம்பரதாரியாக, பசுக்கள் சூழ, ஸ்ரீ சரணத்தை கன்று நக்க, கொட்டிலில் விளங்கும் என் கோவிந்த கோபாலனை பிரத்யக்ஷமாகக் கண்டேனே!” என்று நா தழு தழுக்கக் கூறினார்.

  விட்டுப்போன அம்சமான, பச்சை துளசி மாலையும் வர, அதனையும் அணிந்து அந்த வடமதுரை ஸாதுவிற்கு அருளினார்.

  ஆஹா!.. அருமையான தரிசனம்!..

  பரமாச்சார்யார் திருவடிகள் சரணம்!..

  பதிலளிநீக்கு
 5. “பிறரை ஆட்டி வைக்கிற தன்னையும் ஒருவன் ஆட்டி வைக்கிறான். அதை நல்லபடியான ஆட்டமாக்க வேண்டியவனும் அவனே; எல்லா ஆட்டத்தையும் நிறுத்தி, ஸாந்தி மற்றும் செளக்கியம் தரக்கூடியவனும் அவன்தான்” என்ற நினைப்பில் தண்டமாக மனதை அவனுக்கு கிடத்துவதுதான் நமஸ்காரம்.

  அதுதான் தண்டம் சமர்ப்பித்தல் ..

  பதிலளிநீக்கு
 6. பீதாம்பரதாரியாக, பசுக்கள் சூழ, ஸ்ரீ சரணத்தை கன்று நக்க, கொட்டிலில் விளங்கும் என் கோவிந்த கோபாலனை பிரத்யக்ஷமாகக் கண்டேனே!” என்று நா தழு தழுக்கக் கூறினார்.

  விட்டுப்போன அம்சமான, பச்சை துளசி மாலையும் வர, அதனையும் அணிந்து அந்த வடமதுரை ஸாதுவிற்கு அருளினார்.

  துளசிதளம் மணக்கும் அருமையான காட்சி ..!

  பதிலளிநீக்கு
 7. தாயினும் சிறந்த தாயான பெரியவாளுடைய இந்த மஹா ப்ரேமையை அனுபவித்த

  பாலு அண்ணா என்ற பாக்யவான் கண்களில் கண்ணீர் மல்க நமஸ்கரித்தார். —

  ப்ரேமையுடன் வாத்சல்யமான அன்பை வர்ஷிக்கும் கருணை பகிர்வுகள் அருமை..!

  பதிலளிநீக்கு
 8. பெரியவாளோட பட்டு ஹ்ருதயம் கம்பிளியாக அந்த வயஸான ஜீவனுக்கு ஹிதத்தை குடுத்தது.

  இதமான கருணை உள்ளம்..!

  பதிலளிநீக்கு
 9. அன்பின் வை.கோ - நமஸ்காரமா தண்டமா பதிவு அருமை - பசியாக வருகிற மனிதர்களுக்கும் பட்சிகளுக்கும், தனக்கு வருகிற வாழைப்பழத்தார்களை புளிய மரத்தில்கட்டி வைத்து பயன் படுமாறு செய்பவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா மட்டும் தான்

  அவருக்கு பக்தர்கள் அனுப்பும் தயிர் - வெல்லம் இவை எல்லாம் பயன்படுத்தி வருகிற பக்தர்களுக்கு நீர்மோர் பானகம் எல்லாம் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார் - அதே நேரத்தில் இன்னும்பொரு பக்தர் பெரியவாளின் சம்மதத்தோடு பக்கத்தில் ஒரு கடை ஆரம்பித்து நீர்மோர் பானகம் எல்லாம் விற்க ஆரம்பித்தார்.

  ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா நீர்மோர் பானகம் மடத்தில்தயாரித்து பக்தர்களுக்கு இலவசமாக வழங்குவதை நிறுத்தி விட்டார்.

  பக்தர்கள் பெரியவாளிடம் கேட்ட போது - கடை போட்டவருக்கு நஷ்டம் வரக்கூடாதல்லாவா எனக் கூறி விட்டார்.

  அதே போல் பட்டுப்பாட்டியும் பாலுவும் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்ததை உணர்ந்து - அவர்கள் தூங்கும் போதே பட்டுப் போர்வை போர்த்த ஏற்பாடு செய்தவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா  பதிலளிநீக்கு
 10. அன்பின் வை.கோ - பெரியவாளின் கருணையே கருணை - கண்ணுக்குட்டிக்கு பால் ஊட்டிய பின் - அது கட்டிப்போடப் பட - மாடு கண்ணுக்குட்டிக்கு பால் கொடுக்க மறுக்க - பெரியவா சிரித்துக் கொண்டே அவிழ்த்து விட்டது அருமையான செயல்.

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 11. தாயினும் சிறந்த தாயான பெரியவாளுடைய இந்த மஹா ப்ரேமையை
  அனுபவித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்
  கருணை மகானுக்கு மானசிக நமஸ்காரங்கள்.
  விஜி

  பதிலளிநீக்கு
 12. மகாபெரியவாளுக்கு நமஸ்காரம் அகம்பாவத்தை விட்டு செய்யும் நமஸ்காரம் தான் உண்மையானது .பாலு மாமா சொன்ன சம்பவங்கள் மகா பெரியவாளின் கருணையை நாம் மேலும் அனுபவிக்க முடிகிறது .ஒவ்வொரு சம்பவங்களும் கண்ணில் நீரை வரவழைக்கிறது நல்ல பதிவு நன்றி

  பதிலளிநீக்கு
 13. ///ஒரே முனையை விட்டு அகலாமல் இருப்பதை, ஏகாக்கிரம் என்று சொல்வார்கள். அவ்வாறு இருக்க சித்தத்தை பழக்குவதே சித்த சுத்தி.////
  சித்த சுத்தியின் விளக்கம்அறிந்தேன் ஐயா நன்றி

  பதிலளிநீக்கு
 14. சித்தத்தை பழக்குவதே சித்த சுத்தி... அருமை ஐயா...

  சம்பவங்கள் பரவசப்படுத்தியது... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 15. கருணை வள்ளலாக பெரியவா!! அற்புதங்கள் அருமை!!

  பதிலளிநீக்கு
 16. /தாயினும் சிறந்த தாயான பெரியவாள் / பற்றிய பல குண வெளிப்பாடுகள் அவருடைய சிறப்புகளை எடுத்துக் காட்டுகிறது, அண்மையில் ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் மடத்துப் பெரியவர்களின் படங்களைக் கண்டபோது, அவர் போல் இனி ஒருவர் வர இயலுமா என்னும் எண்ணம்தான் ஓடியது.

  பதிலளிநீக்கு
 17. பெரியவாளோட பட்டு ஹ்ருதயம் கம்பிளியாக அந்த வயஸான ஜீவனுக்கு ஹிதத்தை குடுத்தது.
  //கருணை மழையில் நனைந்த அனைவரும் பாக்யவான்கள்!. பகிர்விற்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 18. கம்பளி தந்ததும், பசுவிடம் பால் குடிக்க கன்றை அவிழ்த்து விட்டதும்..... என அவரின் கருணை பதிவு முழுவதும்.... ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 19. "நல்ல பனி! நீ பாட்டுக்கு தரைலேயும் ஒண்ணும் விரிச்சுக்காம, போத்திக்கவும் போத்திக்காம படுத்துண்டு இருந்தியா.....! ஒங்கம்மா பாத்தா எப்டி நெனைச்சுண்டு இருந்திருப்பா....ன்னு தோணித்து..."
  எவ்வளவு அற்புதமான வரிகள். உலகத்திற்கே பெரியவாளின் உபதேசம்.

  பதிலளிநீக்கு
 20. த்தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் நமஸ்கரித்தால், அந்த நமஸ்காரமே ‘தண்டம்’ தான்//
  அருமையான அமுதமொழி..
  பெரியாவா அவர்களின் அன்பு, கருணை, , குறும்புகள் எல்லாம் படிக்க படிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
  அருமையான பகிர்வுக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.
  படம் பகிர்வு அருமை.

  பதிலளிநீக்கு
 21. தாயினும் சாலப் பரிந்தூட்டும் தாயால குணம் கொண்ட மகாபெரியவரின் மகிமை அறிந்தேன் .நன்றி பகிர்விற்கு.

  பதிலளிநீக்கு
 22. செய்யும் பாவம்களிலேயே மிகக் கொடுமையானது அகம்பாவம்தான். அதை விட்டுவிடவேண்டிய தாத்பர்யத்தைதான் நமஸ்காரம் போதிக்கிரது.
  எதிலிருந்து எது ஸம்பந்தப்பட்ட உண்மை. அவரின் வாக்குகளே
  உண்மையும்,உயர்வும் பொருந்தியதாக இருக்கிறது. வாக்விசேஷமே அதுதான். அன்புடன்

  பதிலளிநீக்கு
 23. நல்ல பனி! நீ பாட்டுக்கு தரைலேயும் ஒண்ணும் விரிச்சுக்காம, போத்திக்கவும்

  போத்திக்காம படுத்துண்டு இருந்தியா.....! ஒங்கம்மா பாத்தா எப்டி நெனைச்சுண்டு

  இருந்திருப்பா....ன்னு தோணித்து..."


  Touching !

  பதிலளிநீக்கு
 24. பெரியவாளோட பட்டு ஹ்ருதயம் கம்பிளியாக அந்த வயஸான ஜீவனுக்கு ஹிதத்தை குடுத்தது.

  மகா பெரியவாளின் கருணையை அனுபவிக்க முடிகிறது !

  பதிலளிநீக்கு
 25. பல்லுயிர்களை ஈவிரக்கமின்றி கொன்று பகுத்துண்டு கொழுத்து சண்டையிட்டுக்கொண்டு திரியும் மனிதர்களிடையே
  பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
  தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க வாழ்ந்து காட்டிய மகானின் சரித்திரம் அனைவரின் மனதிலும் நல்ல சிந்தனைகளை எழுப்பட்டும்.

  அதனால் இந்த வையகத்திலுள்ள மனிதர்களின் மனதில் அன்பும், பாசமும், நேசமும் துளிர் விடட்டும்.

  நன்றி vgk

  பதிலளிநீக்கு
 26. பெரியவாளின் கருணை மழை மெய்சிலிர்க்க வைத்தது! அருமையான பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
 27. பெரியவரின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்ச்சிகள் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 28. அருமையான அனுபவங்கள்..... படிக்கும் போதே மெய் சிலிர்த்தது..

  பதிலளிநீக்கு
 29. இளநீர்க் கடையிலே வியாபாரம் நடக்க வேண்டும் என்பதற்காக, மக்களுக்கு கொடுத்து வந்த மோரை நிறுத்தி விட்டாரே... அப்போ பணமில்லாதோர் என்ன செய்வினமோ??..

  பதிலளிநீக்கு
 30. பெரியவாளின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு நிகழ்வையும் சுவாரஸ்யத்தையும் தந்து நிக்கிறது.

  பதிலளிநீக்கு
 31. சுவராஸ்யமான மகாபெரியவரின் கதைகள்... அருமை...

  பதிலளிநீக்கு
 32. மகாபெரியவரின் கதைகள்... அருமை.
  மகிமை அறிந்தேன் .
  பகிர்விற்கு நன்றி.
  Vetha.Elangathilakam.

  பதிலளிநீக்கு
 33. மகாபெரியவரின் தாய்மை... வணங்கவைக்கிறது. கண்கள் கலங்கவைக்கிறது. பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி வை.கோ.சார்.

  பதிலளிநீக்கு
 34. சம்பங்களைத் தங்கள் பதிவில் கண்டு பரவசம் ஏற்படுகிறது. அனைத்தும் ரசிக்கவும் வைத்து படிப்பினையும் தருகிறது. பகிர்வுக்கு நன்றிகள் அய்யா..

  பதிலளிநீக்கு
 35. தத்துவத்தை உணர்ந்து நமஸ்காரம் செய்வது சிறப்பு என அழகா சொல்லிருக்கீங்க..

  பதிலளிநீக்கு
 36. அம்மாவைப் போலவே பரிவு காட்டும் மஹா பெரியவாளை நினைத்தபோது கண்கள் பனித்தன.

  பதிலளிநீக்கு
 37. ஜீவகாருண்யம் என்றால் என்ன என்பதை டெமான்ஸ்ரேட் செய்திருக்கிறார் பெரியவர்.

  பதிலளிநீக்கு
 38. தத்துவத்தை புரிந்து கொள்ளாமல் நமஸ்கரித்தால் அதுவே தண்டம் தானே?

  பதிலளிநீக்கு
 39. // இந்தத்தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் நமஸ்கரித்தால், அந்த நமஸ்காரமே ‘தண்டம்’ தான்///

  தெலுங்குல ‘தண்டம் பெட்டு’ன்னா நமஸ்காரம் பண்ணுன்னு அர்த்தம். ஆனா அகம்பாவ மனப்பான்மையுடம் ‘தண்டம் பெட்டு’வது தண்டமே.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya September 17, 2015 at 2:53 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்.

   **இந்தத்தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் நமஸ்கரித்தால், அந்த நமஸ்காரமே ‘தண்டம்’ தான்**

   //தெலுங்குல ‘தண்டம் பெட்டு’ன்னா நமஸ்காரம் பண்ணுன்னு அர்த்தம். ஆனா அகம்பாவ மனப்பான்மையுடம் ‘தண்டம் பெட்டு’வது தண்டமே.//

   உங்களுக்குத் தெலுங்குகூடத் தெரியுமா ஜெ !!!!!

   உங்க மன்னியின் பிறந்தாத்துக்குப் பக்கத்திலே ஒரு தெலுங்கு மாமி குடியிருந்ததால் இவளும் கொஞ்சம் கொஞ்சம் தெலுங்கு பேசுவாள் - பேசுவதை நன்னாப் புரிந்துகொள்வாள்.

   நான் ’என்ன சமாசாரம் என்று சாதாரணமாகக் கேட்கும் போது, ‘ஒகடி லேது’ன்னு [ஒன்றுமில்லை] சொல்லி என்னை வெறுப்பேற்றுவாள். :)

   >>>>>

   நீக்கு
 40. //கள்ளுக் கடையில் குடித்து விட்டு வெறும் வயிற்றோடு போவார்களே...அவர்களுக்காகவும் மனம் இரங்கியதுண்டு. //

  இந்த மனம் யாருக்கு வரும்?

  // பாட்டி அடைந்த சந்தோஷத்துக்கு அளவு இருக்குமா என்ன? //

  பொதுவா மனுஷனுக்கு தன்னை யாராவது கவனிச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கும். அதுவும் மகா பெரியவா கவனிச்சா சந்தோஷத்துக்கு அளவு எப்படி இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இந்த மனம் யாருக்கு வரும்?// அதானே :)

   //பொதுவா மனுஷனுக்கு தன்னை யாராவது கவனிச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கும். அதுவும் மகா பெரியவா கவனிச்சா சந்தோஷத்துக்கு அளவு எப்படி இருக்கும்.//

   கரெக்டு ஜெயா. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   >>>>>

   நீக்கு
 41. //“பீதாம்பரதாரியாக, பசுக்கள் சூழ, ஸ்ரீ சரணத்தை கன்று நக்க, கொட்டிலில் விளங்கும் என் கோவிந்த கோபாலனை பிரத்யக்ஷமாகக் கண்டேனே!” என்று நா தழு தழுக்கக் கூறினார்.

  விட்டுப்போன அம்சமான, பச்சை துளசி மாலையும் வர, அதனையும் அணிந்து அந்த வடமதுரை ஸாதுவிற்கு அருளினார்.//

  அருமையான தரிசனம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் அன்பான மும்முறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 42. அல்லாருக்கும் அல்லாமும் வெளங்கி கிட ஏலாதுல்ல.

  பதிலளிநீக்கு
 43. தத்துவத்தை புரிந்து கொள்ளாமல் நமஸ்கரித்தால் அந்த நமஸ்காரமும் தண்டம்தான். உண்மைதான். ஆசாபாசங்களில் சிக்கித்தவிக்கும் சாதாரண ஜனங்கள் தத்துவத்தை எப்படி உணர்ந்து கொள்வார்கள்.

  பதிலளிநீக்கு
 44. அகம்பாவத்தை விட்டு விட்டால், மனசு தாழ்மையாகக் கிடக்கும்.

  அப்படிக் கிடந்தே உயர்ந்ததில் உயர்ந்த செளக்யத்தைப் பெற்றுவிடும்.// என்ன ஒரு தத்துவம்!!!

  பதிலளிநீக்கு