என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 8 நவம்பர், 2013

77 ] ஆசை என்ற அரிப்பு !

2
ஸ்ரீராமஜயம்

ஒன்றைப் பெற்று ஆனந்தப்பட்ட பிறகு, அந்த ஆனந்தம் ஆசையை உண்டாக்கி விடுகிறது. 

எதிர்பாராமல் தானாகவே ஆனந்தமாக வருகிறவையும், பிற்பாடு அது வராதா, வராதா என்று எதிர்பார்க்க வைக்கிற ஆசையை ஏற்படுத்தி விடுகிறது.

எல்லா ஆசையுமே அரிப்புதான். ஆசை என்பதே அரிப்பு தான். அந்த ஆசையின் பூர்த்திக்காகப் பண்ணுவதெல்லாம் சொறிந்து கொடுத்து புண்ணை சீழ்பிடிக்கும்படி ஆக்குவது தான்.

அதிருப்தி தான் தரித்திரம். திருப்தி தான் செல்வம்.

சாவினால் இப்போது உள்ள உடம்பை இல்லாமல் ஆக்கிக்கொள்ள முடியுமே தவிர, உடம்பே இல்லாமல் ஆக்கிக்கொள்ள முடியாது. 

அதனால் “உடம்பு நானில்லை” என்ற ஞானம் தான் தீர்வே தவிர, சாவு தீர்வு அல்ல.

எல்லா மதஸ்தர்களும் மனத்தில் ஒற்றுமையோடு இருப்பதுதான் அவசியம். 

‘யூனிஃபார்மிடி’ அவசியமில்லை.  ‘யூனிடி’ இருப்பதுதான் அவசியம்.

“உங்கள் மத சித்தாத்தங்களைச் சொல்லுங்கள்” என்று கேட்கும்போது அவர்களுக்குக் காரணம் சொல்லத் தெரிய வேண்டும்.

ஆனால், வாஸ்தவத்தில் எந்த மதத்திலும் இருக்கிற ஏராளமான பொது ஜனங்களுக்கு, அந்தந்த மதத்தைப்பற்றிய கொள்கைகள் அவ்வளவாகத் தெரியவே தெரியாது.

oooooOooooo


பணியற்ற நாள் பாழே !

How simply His Holiness Sri Sri Sri Maha Periyavaa says!

தினமும் தூங்கப்போகும் முன்பு இன்று ஜன ஸமுதாயத்துக்கு நாம் ஏதாவது கைங்கர்யம் பண்ணினோமா என்று கேட்டுக்கொள்ள வேண்டும். 

ஈஸ்வரனைப் பற்றிப்  ”பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்று தேவாரத்தில் சொல்லியிருக்கிறது. 

அந்த மாதிரி நாம் பரோபகாரம் பண்ணாமலே ஒருநாள் போயிற்று என்றால், அது நாம் பிறவா நாளே — அன்றைக்கு நாம் செத்துப் போனதற்கு ஸமம்தான் — என்று வருத்தப்பட வேண்டும். 

பந்துக்கள் செத்துப்போனால் நமக்கு தீட்டு என்று, ஒரு புண்ய கார்யத்துக்கும் உதவாமல் ஒதுக்கி விடுகிறார்கள். 

நாமே செத்த மாதிரி என்றால் இதுதான் பெரிய தீட்டு; 

பரோபகாரம் செய்யாத ஒரு தினத்தில் புண்யத்தின் பக்கத்திலேயே நாம் போகவில்லை, தீட்டுக்காரர்களாகி விட்டோம் என்று  FEEL பண்ணவேண்டும்.

நாம் எத்தனை சின்னவர்களாக இருந்தாலும் நம்மாலும் முடியக்கூடிய சின்னத் தொண்டு இல்லாமலில்லை. 

இப்படி அவரவரும் தனியாகவோ, ஸங்கமாகச் சேர்ந்தோ ஏதாவது பொது நலக்கைங்கர்யம் பண்ணியே ஆகவேண்டும். 

தண்ணீரில்லாத ஊரில் ஒரு பத்து பேர் சேர்ந்து கிணறு வெட்டுவது; 

ஏதோ ஒரு பிள்ளையார் கோயில் மதில் இடிந்திருந்தால் அதை நாலு பேராகச் சேர்ந்து கட்டுவது; 

பூஜை நின்று போன ஒரு கிராமக் கோயிலில் ஒரு காலப் பூஜைக்காவது நாலு பேரை யாசித்து மூலதனம் சேகரித்து வைப்பது; 

பசுக்கள் சொறிந்து கொள்வதற்கு ஒரு கல்லேனும் நாட்டுவது; 

நாம் படித்த நல்ல விஷயங்களை நாலுபேருக்குச் சொல்லுவது, எழுதுவது.

 இரண்டு ஸ்லோகமாவது பாசுரமாவது நாமாவளியாவது பாடி நாலு பேர் மனஸில் பகவானைப் பற்றிய நினைப்பை உண்டாக்குவது; 

குப்பை கூளங்களைப் பெருக்குவது  

இந்த மாதிரி ஏதாவது ஒரு தொண்டு அன்றாடம் நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டும். 

ஓசைப்படாமல் செய்ய வேண்டும் என்பது முக்கியம்.

குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு ஸோஷல் ஸர்வீஸ் என்று கிளம்ப வேண்டியதில்லை. 

அதையும் விடாமலே, இதுவும் கடமை என்ற உணர்வோடு சேர்த்துக்கொண்டு செய்ய வேண்டும்.

[Thanks to Sage of Kanchi 01.10.2013]

oooooOooooo

கற்பக வல்லி நின் ...


பொற்பதங்கள் பிடித்தேன் ...


நற்கதி அருள்வாய் அம்மா !

அருள்மிகு கற்பகாம்பாள் 

1] அன்னபக்ஷி மேல் ஹம்சவாஹிணியாக

2] காமதேனு வாகனத்தில் 
கெளரியாக

3] சரஸ்வதி தேவியாக

4] நாக வாகனத்தில் 
பத்ம ஆசனியாக

5] ரிஷப வாகனத்தில் மஹேஸ்வரியாக

6] ஸ்ரீ இராஜராஜேஸ்வரியாக

7] குதிரை வாகனத்தில் 
மீனாக்ஷியாக

8] மகிஷாசுரமர்த்தினியாக

9] சிவபூஜை செய்யும் 
காமாக்ஷியாக

oooooOooooo


FLASH NEWS

மகிழ்ச்சிப்பகிர்வு


இனிய செய்தி !


என் அன்புத்தங்கை மஞ்சுவுக்கு இன்று 08.11.2013 வெள்ளிக்கிழமை திருமண நாள். 

08.11.1989 திருமணம் நடந்த இந்த ஒற்றுமையான தம்பதியினர் தங்களின் 24 வருட இல்வாழ்க்கையை வெற்றிகரமாக முடித்து இன்று 25ம் ஆண்டினில் அடியெடுத்து வைக்கிறார்கள்.

இதுவரை பாராட்டாதவர்கள் உடனே ஓடிச்சென்று பாராட்டி, வாழ்த்தி மகிழுங்கள். 

 

இணைப்பு இதோ:

திருமதி மஞ்சுபாஷிணி அவர்களின் 
“கதம்ப உணர்வுகள்”

அங்கு செல்லும் முன்பு இங்கு 
தயவுசெய்து ஸ்வீட் எடுத்துக்கோங்கோ
பிரியமுள்ள மஞ்சு,

 

  


மிகவும் சந்தோஷமான செய்தியாக உள்ளது. 

மனம் நிறைந்த இனிய அன்பு நல்வாழ்த்துகள். 

பல்லாண்டு பல்லாண்டு இதே மகிழ்ச்சியுடன் 

சந்தோஷமாக மிகவும் சந்தோஷமாக 

தம்பதி இருவரும் 

சகல செளபாக்யங்களுடன் 

நீடூழி வாழப்பிரார்த்திக்கிறோம் / ஆசீர்வதிக்கிறோம்.

அன்புடன் கோபு அண்ணா + மன்னி.

-oOo-

அன்பின் மஞ்சுவை நேரில்  

சந்திக்க விரும்புவோர்

இந்த இணைப்புக்குச்செல்லவும்:


-oOo-
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்72 கருத்துகள்:

 1. ஸ்ரீமஹாபெரியவரின் அமுத மொழிகளைத் தொடர்ந்து தொகுத்தளித்து வரும் பாராட்டத்தக்க சேவை தங்களுடையது. பரோபகாரம் செய்யாத நாளெல்லாம் பிறவாத நாள் போல் கருத வேண்டுமென்ற பொன்னான அறிவுரை என்னாளும் நினைவில் கொள்ளத் தக்கது. தங்களது சகோதரியாருக்கும் என் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள். பகிர்வுக்கும் தகவலளித்தமைக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 2. //ஆனால், வாஸ்தவத்தில் எந்த மதத்திலும் இருக்கிற ஏராளமான பொது ஜனங்களுக்கு, அந்தந்த மதத்தைப்பற்றிய கொள்கைகள் அவ்வளவாகத் தெரியவே தெரியாது.//

  ஆமாம், உண்மை, ஆனால் தெரியாமலேயே பிதற்றல்கள் ஜாஸ்தியா இருக்கும். :))))

  பதிலளிநீக்கு
 3. மஞ்சுவின் வெள்ளிவிழாவுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். ஆசிகள். அமர்க்களமாகக் கொண்டாடி விட்டீர்கள். அது சரி, நகையும், ஸ்வீட்டும் மட்டுமா, புடைவை எல்லாம் இல்லையா? :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புடவை அடுத்த முறை ஊருக்கு போகும்போது நியாபகமாக வாங்கிட்டு வந்துடறேன்பா கீதா :) நிறைவான அன்பு நன்றிகள்பா..

   நீக்கு
 4. ‘யூனிஃபார்மிடி’ அவசியமில்லை.
  ‘யூனிடி’ இருப்பதுதான் அவசியம்.

  வேற்றுமையில் ஒற்றுமைதானே அழகு ..!

  பதிலளிநீக்கு
 5. திருப்தி தான் செல்வம்.

  போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து ..!

  பதிலளிநீக்கு
 6. குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு ஸோஷல் ஸர்வீஸ் என்று கிளம்ப வேண்டியதில்லை.

  அதையும் விடாமலே, இதுவும் கடமை என்ற உணர்வோடு சேர்த்துக்கொண்டு செய்ய வேண்டும்.

  அருமையான விளக்கம் ..!

  பதிலளிநீக்கு
 7. மஞ்சுவுக்கு மனம் நிறைந்த இனிய அன்பு நல்வாழ்த்துகள்.
  பல்லாண்டு பல்லாண்டு இதே மகிழ்ச்சியுடன்
  சந்தோஷமாக மிகவும் சந்தோஷமாக
  தம்பதி இருவரும் சகல செளபாக்யங்களுடன்
  நீடூழி வாழப்பிரார்த்திக்கிறோம்

  பதிலளிநீக்கு
 8. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்
  இலக்கணம் கற்காமல்
  இன்னும் வேணும் இன்னும் வேணும்
  என்று ஆசையை வளர்த்துக்கொண்டு
  அலைபவனுக்கு என்றும் சந்தோஷம்
  இல்லை சுகம் இல்லை.

  எல்லாம் இருந்தும் மனம்
  அதை எல்லாம் அனுபவிக்காது
  எதையோ நாடி ஓடிக்கொண்டிருக்கும்.

  அதிலிருந்து தப்ப வேண்டுமானால்
  கிடைத்ததை கொண்டு. திருப்தி அடையக்
  கற்றுக் கொள்ளவேண்டும்.

  மதம் என்பது இறைவனை
  அறிந்து கொள்ள உதவும்
  வழியே தவிர ஒருவொருக்கொருவர்
  மதம் பிடித்து சண்டை போட்டுக்கொண்டு
  அழிவதர்க்கல்ல என்று மகான்கள்
  அவ்வப்போது தோன்றி மக்களுக்கு
  உணர்த்தி வருகிறார்கள்

  இருந்தும் அவர்கள் காலம் முடிந்தவுடன்
  மத வெறியர்கள் தங்கள் தொழிலை
  தொடங்கிவிடுகிறார்கள்

  மனம், சொல், உடல் இவற்றில் ஏதாவது ஒன்றின் மூலம் பிறர் அறியா வண்ணம் உதவுதல் அவசியம்.

  செல்வம், உழைப்பு, கனிவான பேச்சு, இவற்றால் உதவுதலும் இதில் அடக்கம்.

  நல்லதோர் சிந்தனைகளை
  நாள்தோறும் வலையில்
  விதைக்கும் வைகோபாலா
  நலன்கள் உன்னை என்றென்றும்
  தேடி ஓடி வரும்.

  பதிலளிநீக்கு
 9. பணி செய்யாத நாள் இறந்த நாளே! மிக அருமையாக சொன்னார் பெரியவா! முதலில் சொன்ன பொன்மொழிகளும் அருமை! திருமதி மஞ்சு சுபாஷிணி அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. அருமையான அமுதமொழியுடன் கூடிய அழகான பகிர்வு.

  சில்வர் ஜூப்ளியைக் கொண்டாடும் மஞ்சுவின் வாழ்வில் கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கட்டும்.

  இப்படிக்கு,
  இன்னொரு சில்வர் ஜூப்ளிக்காரி :-))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அமைதிச்சாரல் November 8, 2013 at 3:11 AM

   வாங்கோ, வணக்கம்.

   //அருமையான அமுதமொழியுடன் கூடிய அழகான பகிர்வு.

   சில்வர் ஜூப்ளியைக் கொண்டாடும் மஞ்சுவின் வாழ்வில் கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கட்டும்.

   இப்படிக்கு,
   இன்னொரு சில்வர் ஜூப்ளிக்காரி :-))//

   தங்களுக்கும் என் மனம் நிறைந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான மகிழ்ச்சிப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் கோபு

   நீக்கு
  2. உங்களுக்கும் எங்களின் நிறைந்த 25 ஆம் வருடம் திருமணநாள் நல்வாழ்த்துகள்பா ... மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா வாழ்த்துகளுக்கு.

   நீக்கு
 11. மணநாள் காணும் அன்பு உள்ளங்களுக்கு
  மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்!..
  பல்லாண்டு பல்லாண்டு மகிழ்ச்சியுடன் வாழ்க!..


  வழக்கம் போல அமுத மழை - அமுத மழைதான்!..
  நல்ல விஷயங்களைப் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!..

  பதிலளிநீக்கு
 12. உங்கள் மத சித்தாத்தங்களைச் சொல்லுங்கள்” என்று கேட்கும்போது அவர்களுக்குக் காரணம் சொல்லத் தெரிய வேண்டும்.//

  குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு ஸோஷல் ஸர்வீஸ் என்று கிளம்ப வேண்டியதில்லை.

  அதையும் விடாமலே, இதுவும் கடமை என்ற உணர்வோடு சேர்த்துக்கொண்டு செய்ய வேண்டும்.//

  அருமையான அமுத மொழி.
  பகிர்வுக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. மஞ்சுவிற்கு வாழ்த்துக்கள்.
  மனம் நிறைந்த இனிய அன்பு நல்வாழ்த்துகள்.
  பல்லாண்டு பல்லாண்டு இதே மகிழ்ச்சியுடன்
  சந்தோஷமாக மிகவும் சந்தோஷமாக
  தம்பதி இருவரும் சகல செளபாக்யங்களுடன்
  நீடூழி வாழப்பிரார்த்திக்கிறோம் / ஆசீர்வதிக்கிறோம்.
  நாங்களும் உங்களுடன் சேர்ந்து மஞ்சுவை வாழ்த்துகிறோம்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைவான அன்பு நன்றிகள்பா.... ஆசிகளும் வாழ்த்துகளும் கற்கண்டாய் பொழிகிறதுப்பா..

   நீக்கு
 14. //சாவினால் இப்போது உள்ள உடம்பை இல்லாமல் ஆக்கிக்கொள்ள முடியுமே தவிர, உடம்பே இல்லாமல் ஆக்கிக்கொள்ள முடியாது.
  அதனால் “உடம்பு நானில்லை” என்ற ஞானம் தான் தீர்வே தவிர, சாவு தீர்வு அல்ல.//
  மணியான கருத்து.

  பதிலளிநீக்கு
 15. //ஆசையின் பூர்த்திக்காகப் பண்ணுவதெல்லாம் சொறிந்து கொடுத்து புண்ணை சீழ்பிடிக்கும்படி ஆக்குவது தான்.// அனைவரும் யோசிக்க வேண்டிய கருத்து!

  பதிலளிநீக்கு
 16. அதிருப்திான் தரித்திரம். திருப்திதான் செல்வம். எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.
  ஸோஷியல் ஸர்வீஸ் என்றுபோக வேண்டாம். மனதாலே பிறருக்குத் தீங்கு நினைக்காமல் நன்மை செய்தாலே போதும்.
  பரோபகாரம் இதம் சரீரம் என்று வாழ வேண்டும்.
  எத்தெத்தனை சிந்தனைகள். முடிந்தவரை முயலுவோம்.
  மஞ்சு பாஷிணிக்குத் திருமண நன்னாள் வாழ்த்துகள். ஆசிகள்.
  அமுதமொழிகள் கேளா செவி என்ன செவியோ? அன்புடன்

  பதிலளிநீக்கு
 17. மணநாளைக் கொண்டாடும் மஞ்சு சம்பத் தம்பதிக்கு எங்கள் நல்வாழ்த்துகளும் :)

  பதிலளிநீக்கு
 18. யூனிபார்மிடி அவசியமில்லை. யூனிடி அவசியம். காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிரது..
  இன்னொரு ஸில்வர் ஜூபிலிக்காரிக்கும்,ஆசிகளும்,வாழ்த்துகளும். அன்புடன்

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் அய்யா.
  போதும் எனும் மனம் இருந்தால் உலகமே நம் வசமாகி விடும் என்பதை அனைவரும் உணர வேண்டும். பெரியாவாளின் வாக்கு நமக்கான பொக்கிசங்கள். //பணி செய்யாத நாள் இறந்த நாளே!! உண்மையான, அழகான வார்த்தைகள். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

  பதிலளிநீக்கு
 20. மஞ்சு அம்மா அவர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்..வாழ்த்து சொல்லும் அளவுக்கு நான் பெரிய மனிதனில்லை..அவர்களின் ஆசி எங்களுக்கு இருந்தால் போதும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இறைவன் அருளால் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் என்றென்றும் சௌக்கியமாக இருக்க மனம் நிறைந்த பிரார்த்தனைகள்பா... நிறைவான அன்பு நன்றிகள்.

   நீக்கு
 21. அற்புதமான விஷயம். அதிருப்தி வேண்டாம் திருப்தியோடு இரு என்று சொல்லும் அறிவுரை மஹா பெரியவா மூலம்..

  அம்பாளின் ஒவ்வொரு பெயரும் கற்பகவல்லி நின் பாடலும் படங்களும் அசத்தல் அண்ணா.. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.

  பதிலளிநீக்கு
 22. அண்ணா எங்களுக்கு என்றென்றும் உங்களுடைய மன்னியுடைய ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும். மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா...

  பதிலளிநீக்கு
 23. அம்பாளின் படமும் ,மஹா பெரியவரின் அமுத மொழியும் பார்த்து , படித்து மனம் நிறைந்தது.
  மஞ்சுபாஷினிக்கு என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துக்கள்.
  இந்த தம்பதி பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 24. மஞ்சுவுக்கு மனமார்ந்த இனிய வாழ்த்துக்கள் நேற்றே அங்கே வாழ்த்திட்டேன் ..
  இங்கே ஸ்வீட்ஸ் எடுத்துக்கறேன் இப்போ :)
  Angelin .

  பதிலளிநீக்கு
 25. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதை அழகா சொல்லிருக்கங்க...

  மஞ்சு அவர்களுக்கு இனிய மணநாள் வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 26. ஆசையை அடக்கோணும்.. நல்ல விஷயம் பகிர்ந்திருக்கிறீங்க.

  அடுத்து... பொதுத் தொண்டு... இதுவும் மிக நல்ல பகிர்வே... பசுவுக்கு முதுகு சொறியக் கல் நாட்டுவது.. ஹா..ஹா..ஹா... நல்ல விஷயமெனினும் சிரிப்பை வரவைக்குது...

  பதிலளிநீக்கு
 27. சகோதரி மஞ்சு பாஷினிக்கு என் இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்.

  ஊசிக்குறிப்பு:
  என்னதான் இருந்தாலும், ராஜேஸ்வரி அக்காவுக்கு கொடுத்ததை விட:), ஜேமாமிக்கு கொடுத்ததை விட:) மஞ்சுபாஷினிக்கு கொடுத்த சீர்வரிசை.. மிக மிகக் குறைவாக இருக்கே:) ஏன் இந்த ஓரவஞ்சனை?:)))... அப்பாடாஆஆஆஆஆ பத்த வச்சாச்சூஊஊஊஊஊ:)) எங்கிட்டயேவா?:) பூஸோ கொக்கோ?:) நேத்திரம் சிப்ஸ் தர மாட்டாராமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira November 8, 2013 at 9:42 AM

   //அப்பாடாஆஆஆஆஆ பத்த வச்சாச்சூஊஊஊஊஊ:)) //

   ”பத்தவச்சுட்டேயே ..... ப ர ட் டே”

   ’பதினாறு வயதினிலே’ [அதாவது ’ஸ்வீட் சிக்ஸ்டீன்’ ] என்ற படத்தில் ரஜினியைப்பார்த்து ஒருத்தன் இந்த வசனத்தைச் சொல்லுவான்.

   ‘இது எப்படியிருக்கு’ என வில்லனாக வரும் ரஜினி அடிக்கடி அந்தப்படத்தில் கேட்பார்.

   ஏனோ அந்த ஞாபகம் வந்தது ... இதைப்படித்ததும். ;)))))

   என் மீது மிக அதிகமாகப் பாசம் வைத்துள்ள மஞ்சுவைப் பற்றி உங்களுக்குத்தெரியாது ..... அதிரா. நீங்க என்னதான் பத்த வெச்சாலும்.. ஊஹும்ம்ம் .. பப்பு வேகவே வேகாது.

   நீக்கு
  2. athira November 8, 2013 at 9:42 AM

   //நேத்திரம் சிப்ஸ் தர மாட்டாராமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))//

   Cherub Crafts November 8, 2013 at 2:27 PM
   //Grrrrrrr :)) nendhram chips ........only for meeeee//

   சபாஷ் நிர்மலா ! கரெக்டூஊஊஊஊஊ

   அன்புள்ள அதிராக்கண்ணு .....

   இந்த ’அஞ்சு’வும் ’மஞ்சு’வும் என் இரு கண்கள் போன்றவர்களாக்கும். ;))))) புரிஞ்சுக்கோங்கோ.

   பிறகு உங்களை ஏன் ‘அதிராக்கண்ணு’ என்று எழுதி இருக்கிறேன் தெரியுமா?

   நீங்க என் மூன்றாவது கண்.

   நெற்றிக்கண் போல .... அதைத்திறந்தால் போச்சு. எல்லாமே போச்சு .... ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ;)

   இது எப்படி இருக்கு ?

   அன்புடன் கோபு அண்ணா

   நீக்கு
 28. அதிருப்தி தான் தரித்திரம். திருப்தி தான் செல்வம்.


  aha arumai
  adeappa evvalau parusukal thangaikku
  athristam ullavarakal ungal thangai.
  viji

  பதிலளிநீக்கு
 29. அன்னையின் அழகுப் படமும் ,மஹா பெரியவரின் அமுத மொழியும் நெஞ்சை நிறைத்தன , ்.
  மஞ்சுபாஷினிக்கு சிறப்பாக பதிவிட்டிருக்கிறீர்கள் அவருக்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 30. ஆசையென்ற அவதி என்ற தலைப்ப நல்லதோ என்று தோன்றியது.
  மஞ்சுவுக்கு வாழ்த்து கூறிவிட்டேன் முதலே......
  மிக்க நன்றி. இனிய பதிவு.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 31. அஹா... அருமை...
  அக்காவுக்கு வாழ்த்துச் சொல்ல இப்பவே போறேன்.

  பதிலளிநீக்கு
 32. //திருப்தி தான் செல்வம்// இந்த ஞானம் வந்தாற்பின் வேறென்ன வேண்டும்?!!

  சகோதரி மஞ்சு பாஷினிக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 33. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து திருப்தியே செல்வம் அவரவர் மதங்களை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் பிறர் மதங்களை பற்றீ முழுமையாகத்தெரியாமல் விவாதம் செய்யும் பலருக்காகவே மஹாபெரியவா
  இப்ப்டி உபதேசம் செய்துள்ளார்கள் ஸத்காரியங்களில் நம்மை ஒரளவுக்காவது
  ஈடுபடுத்திகொள்ளவேண்டும் வாழ்வின் ஒவ்வொரு நாளும் அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 34. அன்பின் வை கோ

  ஆசை என்ற அரிப்பு - பதிவு அருமை - பதிவைனையும் மறுமொழிகளையும் படித்து இரசித்தேன். மகிழ்ந்தேன்.

  ஆசை என்ற அரிப்பினைச் சொறிந்து சொறிந்து புண்ணாக்குவது தான் நாம் செய்யும் செயல் - ஆசையினை நிறைவேற்றாமல் - மேன் மேலும் தூண்டுவது தான் நாம் செய்கிற செயல்.

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 35. அன்பின் வை.கோ

  பணியற்ற நாள் பாழே !

  நாம் இந்த சமூகத்துக்கு ஏதாவது சமூக சேவை செய்து கொண்டே இருக்க வேண்டும். ஒன்றும் செய்யாத நாள் பாழான் நாளாகி விடும்.

  பதிவு நன்று நன்று

  நல்வாழ்த்துகல் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 36. அன்பின் வைகோ

  அருள்மிகு கற்பகாம்பாளின் ஒன்பது அலங்காரங்கலூம் அருமை - படங்கள் அத்தனையும் அருமை -

  அருமைத் தங்கை மஞ்சுவினிற்கு 25ம் திருமண நாளன்று - உடன் பிறந்த சகோதரனைப் போல சீர்- இனிப்புகள் - பூக்கள் - தங்க நகைகள் எனத் தூள் கெளபிட்டீங்க. பலே பலே !

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 37. ‘யூனிஃபார்மிடி’ அவசியமில்லை.
  ‘யூனிடி’ இருப்பதுதான் அவசியம்//
  ஏதாவது ஒரு தொண்டு அன்றாடம் நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டும்.ஓசைப்படாமல் செய்ய வேண்டும் என்பது முக்கியம்.// இதைவிட அற்புதமாகவும், அழகாகவும் எப்படி ஐயா கூறமுடியும்! அமுத மொழிகள் அருமை! பகிர்விற்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 38. ஆன்மீகப் பகிர்வுக்கும், வலைப்பதிவர் சகோதரி மஞ்சுவின் திருமணநாள் பற்றிய மகிழ்வுக்கும் நன்றி! சகோதரிக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 39. இது எங்கள் வீட்டுக் களியாணம்! தகவலுக்கு மிக்க நன்றி
  ஐயா .இதோ உடனே செல்கின்றேன் இனிப்பான கருத்தை
  இனிப்போடு சேர்த்துத் தந்தமைக்கும் நன்றி ஐயா .

  பதிலளிநீக்கு
 40. மணநாளைக் கொண்டாடும் மஞ்சு சம்பத் தம்பதிக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 41. //எல்லா ஆசையுமே அரிப்புதான். ஆசை என்பதே அரிப்பு தான். அந்த ஆசையின் பூர்த்திக்காகப் பண்ணுவதெல்லாம் சொறிந்து கொடுத்து புண்ணை சீழ்பிடிக்கும்படி ஆக்குவது தான்.//

  அருமையான அமுத மொழி.....

  மஞ்சுபாஷிணி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 42. amutha mozhikal mikavum arumai....

  manjubaashini avarkalukku thaamathamaana vaazhthukkal...

  பதிலளிநீக்கு
 43. Thanks a lot sir a very divine post, comgrats and anniversary wishes to Mrs. Manju...

  பதிலளிநீக்கு
 44. "அதிருப்தி தான் தரித்திரம். திருப்தி தான் செல்வம்."

  தொண்டு பற்றி நல்விளக்கம்.

  பதிலளிநீக்கு
 45. //எல்லா ஆசையுமே அரிப்புதான். ஆசை என்பதே அரிப்பு தான். அந்த ஆசையின் பூர்த்திக்காகப் பண்ணுவதெல்லாம் சொறிந்து கொடுத்து புண்ணை சீழ்பிடிக்கும்படி ஆக்குவது தான்// ஒவ்வொரு வார்த்தையும் எத்தனை அர்த்த பூரணமாக உள்ளன.
  //குடும்பத்தை விட்டுவிட்டு சோஷல் சர்வீஸ் தேவையில்லை//
  எதை சொல்ல, எதை விட?

  பதிலளிநீக்கு
 46. பரசேவைதான் மனதிற்கு அமைதி தரும்.

  பதிலளிநீக்கு
 47. மண நாள் காணும் மஞ்சுபாஷிணி, அமைதிசாரல் இருவருக்கும் வாழ்துதுகள்

  பதிலளிநீக்கு
 48. //ஆசை என்ற அரிப்பு//

  ஒவ்வொரு எழுத்தும் பொன்னேட்டில் பொறிக்க வேண்டியவை. கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டியவை.

  பதிலளிநீக்கு
 49. // தினமும் தூங்கப்போகும் முன்பு இன்று ஜன ஸமுதாயத்துக்கு நாம் ஏதாவது கைங்கர்யம் பண்ணினோமா என்று கேட்டுக்கொள்ள வேண்டும். //

  ஓடிப்போய் உதவி செய்யாட்டாலும், உட்கார்ந்த இடத்துல இருந்தே நாலு நல்ல விஷயத்தை நம்ப வலைத் தளத்துலயோ, முகப் புத்தகத்திலயோ எழுதினாலே போதுமே. யாராவது பார்த்து அதன்படி நடக்க மாட்டாளா, வருங்கால சந்ததியில யாராவது பார்த்து பயன் பெற மாட்டாளா?
  சரி அதையாவது செய்வோம்.

  பதிலளிநீக்கு
 50. வரம் தரும் கற்பகமாம் மயிலையிலே - ஐ எங்க ஊர்.

  அன்னையின் தரிசனம் கண்ணாரக் கண்டேன்.

  நன்றியோ நன்றி.

  பதிலளிநீக்கு
 51. மஞ்சுபாஷிணிக்கு வாழ்த்து சொல்லலாம்ன்னா ரெண்டு வருஷம் ஓடிப் போச்சே. சரி, மறக்காம இந்த வருஷம் வாழ்த்திடுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   இந்தப்பதிவில் நம் அதிரடி அதிராவின் கமெண்ட்ஸ்களையும் என் பதில்களையும் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். :)))))

   தங்களின் அன்பான நான்குமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 52. மஞ்சுவங்க அமைதிசாரலவங்களுக்கு வாழ்த்துகள். ஸ்வீட்ஸெல்லா வாயி நெறாய அள்ளி போட்டுகிட்டன்

  பதிலளிநீக்கு
 53. திருமதி மஞ்சு திருமதி அமைதிச்சாரல் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 54. ஆனால், வாஸ்தவத்தில் எந்த மதத்திலும் இருக்கிற ஏராளமான பொது ஜனங்களுக்கு, அந்தந்த மதத்தைப்பற்றிய கொள்கைகள் அவ்வளவாகத் தெரியவே தெரியாது.///யோசிக்க வைக்கும் அமுதத் துளிகள். தங்கச்சின்னாலே தனி பாசம்தான்..ஸ்வீட்டு, ப்ரேஸ்லெட்டு,சாக்லெட்டு..

  பதிலளிநீக்கு
 55. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (26.07.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:-

  https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=454445611724805

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு