என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 10 நவம்பர், 2013

78 ] கனியாகும் காய் !

2
ஸ்ரீராமஜயம்




“வயிற்றைக்கட்டி வாயைக்கட்டி” என்பதற்கு சாப்பாடு, பேச்சு இரண்டையும் கட்டுப்படுத்து என்பதுதான் உட்பொருள்.

ஆனால் நாமோ நேர்மாறாக, வயிற்றுக்கும் வாய்க்கும் அதிகமான வேலையைக் கொடுக்கிறோம்.

நம்முடைய காமம், குரோதம் முதலிய காய்ப்பு எல்லாம், காய் பழமாக ஆவதுபோல், படிப்படியாக துவர்த்து, புளித்து, அப்புறம் மதுரமாக ஆக வேண்டும். 

நமக்கு இன்னென்ன குறைகள் இருக்கின்றனவே என அழ வேண்டாம்.

பகவானை நினைத்து பக்தியோடு இருந்து, மக்களுக்கு நம்மாலான தொண்டைச் செய்து கொண்டிருந்தால், தன்னால் காலக்கிரமத்தில், இந்தக் குறைகள் எல்லாம் போய் பழுத்த பழமாக அன்பு என்கிற ஒரே மதுரமாக ஆகிவிடுவோம்.


பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே நாம் வெளிப்படுத்த வேண்டும்.

oooooOooooo


ஒருசில சுவையான சம்பவங்கள்

[ 1 ]

பெரியவாளுடைய பரமபக்தர் ஒருவருக்கு காது கேட்காது! 

புஸ்தகம் படிக்க முடியாதபடி பார்வைக் குறைபாடு! 

எதிரில் நிற்பவர்கள் கூட ஏதோ நிழல் மாதிரித்தான் தெரிவார்கள். 

அந்த வயசான பக்தருக்கு ரொம்ப தீவிரமான ஆசை ஒன்று இருந்தது. 

ஏக்கம் என்று கூட சொல்லலாம்.

அது அவருக்கு ஒரு விதத்தில் வெறியாகவே இருந்தது. பாவம்! 

"சரஸ்வதி"யிடந்தானே மனக்குறையை சொல்ல வேண்டும்? 

பெரியவாளிடம் ரொம்ப மனஸ் உருகி வேண்டினார்.


"பெரியவா... எனக்கு ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், பகவத்கீதை, பதினெட்டு புராணங்கள் எல்லாத்தையும் படிச்சு என்னோட ஜன்மாவை கடைத்தேத்திக்கணும்.... ஆனா, என்னால புஸ்தகம் படிக்க முடியாது. கண் பார்வை முக்காவாசி கெடையாது. காதால கேக்கலாம்..ன்னா காதும் கேக்கலை. நான் என்ன பண்ணுவேன்? பெரியவாதான் எனக்கு கதி"



அப்போது பெரியவாளை சுற்றி சில பண்டிதர்களும் அங்கே இருந்தார்கள். பெரியவா அவர்களிடம் "இவரோ ராமாயண, மஹாபாரதம்,புராணம் எல்லாத்தையும் படிக்கணும்ன்னு ரொம்ப ஆசைப் படறார்....கண் பார்வை செரியில்லே! என்ன பண்ணலாம்?" 



சர்வக்ஞத்வம் என்பதன் முதல் தகுதியே தனக்கு எல்லாம் தெரிந்தும், அதைப் பற்றி கொஞ்சங்கூட சட்டை செய்யாமல் [ஆஞ்சநேய ஸ்வாமி மாதிரி] மற்ற பேருக்கு முக்யத்துவம் கொடுப்பதுதான். 



பண்டிதர்களுக்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை. பெரியவாளே சொன்னார்......


"நைமிசாரண்யம்ன்னு ஒரு க்ஷேத்ரம் இருக்கு தெரியுமோ?"....

"தெரியும்"

"அங்க என்ன விசேஷம்?"

"அங்கதான் ரிஷிகள்ளாம் புராணங்கள் கேட்டா......"

"புராணங்களை எழுதினது யாரு?"

"வ்யாஸர்...."
"வ்யாஸாச்சார்யாள் புராணங்கள் எழுதின எடம்ன்னு ஒரு ஸ்தலம் இருக்கு. 

’வ்யாஸகத்தி’ ன்னு பேரு!....."



பண்டிதர்களுக்கோ ஆச்சர்யம்! அவர்களுக்கும் இது புது விஷயமாக இருந்தது. 



நைமிசாரண்யம் போய்விட்டு வந்தவர்களுக்கு கூட இந்த இடம் பற்றி தெரிந்திருக்கவில்லை! 

ரொம்ப நுணக்கமான விஷயங்கள் கூட பெரியவாளுக்கு தெரியும்.



பக்தரை அருகில் அழைத்து "குடும்பத்தோட நைமிசாரண்யம் போயி, கொஞ்சநாள் அங்க தங்கு! 

வ்யாஸர் புராணங்கள் எழுதின எடத்ல விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணு! 


அப்புறம் ஒனக்கே எல்லாப் புராணங்களும் மனஸ்ல ஸ்புரிக்கும் !..."

நிச்சயமாக அந்த பக்தருக்கு ஸ்புரித்திருக்கும். 

பெரியவா சொன்னது அனுபவ ஸாத்யமான வழி! 

அநுக்ரஹ வழி! 

இனிமேல் நைமிசாரண்யம் செல்பவர்கள் "வ்யாஸகத்தி" யை கண்டுபிடித்து, எத்தனை நமஸ்காரம் பண்ண முடியுமோ, அத்தனை பண்ணலாமே!


[Thanks to Mr. RISHABAN SRINIVASAN Sir and to his friend Mr. Ramanathan Sir also for forwarding this message on 19.09.2013]  

-=-=-=-=-

[ 2 ]


வட இந்தியாவில் வேலை பார்க்கும் நம் ஊர்காரர் ஒருவர், மஹாபெரியவா தரிசனத்துக்கு வந்தார்.



அவருக்கு ஒரு பிரச்சினை.



செவிகளில், எப்போதும் ஏதோ பேச்சு கேட்டு கொண்டே இருக்கிறது !



அந்தப் பேச்சு, ஆஞ்சநேயருடைய குரல் என்ற எண்ணம் எப்படியோ வந்துவிட்டது அவருக்கு.


 



இந்தத் தெய்வீக சக்தியை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா ? நண்பர்கள் தான் சும்மா இருக்க விடுவார்களா ?


குறி சொல்வதற்கு என்று ஒரு நாளை ஒதுக்கினார்.

யாருக்குத்தான் கஷ்டங்கள் இல்லை ? 

எனவே கூட்டமான கூட்டம். 

அதிலும் கட்டணம் ஏதுமில்லை என்றால் கூட்டத்துக்குக் கேட்க வேண்டுமா ?
 

ஆனால் குறி சொல்கிற அன்பருக்குத்தான் மன நிம்மதி இல்லை.


பெரியவாளிடம் வேண்டிக்கொண்டார் : 

“வடக்கே இருப்பதற்கு எனக்குப் பிடிக்கவில்லை. 

பெரியவா அனுக்ரஹத்தாலே, மெட்ராசுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கணும் ….”

“எங்கிட்ட ஏன் சொல்றே ? 

உனக்குத்தான் ஆஞ்சநேயர் அருள் பரிபூரணமா இருக்கே … 

ஹனுமானிடமே பிராத்தனை பண்ணிக்கோயேன் ….”

அன்பர், அப்படியே கூசிக்குறுகிப் போய்விட்டார்.

” ஆஞ்சநேயர் பேசுகிறார் என்பது நானாகச் சொன்னதுதான். 

என்ன துர்தேவதையோ தெரியவில்லை. 

என்னைத் தூங்கவிடமாட்டேன் என்கிறது ..... 


அது சொல்கிற பதில் சிலபேர்களுக்குப் பலித்துவிடுவதால் எல்லோரும் நம்புகிறார்கள். 

எனக்குத்தான் நம்பிக்கையில்லை. 

பெரியவா என் கஷ்டத்தைப் போக்கணும் …”

பெரியவாள் சொன்னார்கள் :

“எப்போதும் ராமநாமா சொல்லிண்டு இரு. 

கும்பகோணம் பக்கத்துலே கோவிந்தபுரம் போதேந்திராள் அதிஷ்டானத்திலே கொஞ்சநாள் தங்கு. “


பத்து நாள்கள் கழித்து மகிழ்ச்சியோடு வந்து பெரியவாவை தரிஸனம் செய்தார் அன்பர்.

“என்ன, ஆஞ்சநேய ஸ்வாமி, ராமசேவைக்குப் போயிட்டாரா?” 

என்று கேட்டார் பெரியவா குறும்புத்தனமாக. !!!!!


-oOo-
ஸ்ரீ மஹாபெரியவாளின் ஆக்ஞைப்படி ( புரட்டாசி பௌர்ணமி திதியில் ) ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகளின் ஆராதனை ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.
-oOo-

[ Thanks to Amritha Vahini  12.10.2013 ] 
-=-=-=-=-

[ 3 ]

கோவிந்தபுரம் ஸ்ரீ போதேந்த்ராள் ஒருமுறை ஒரு வீட்டில் பிக்ஷைக்கு போனபோது, அங்கிருந்த குழந்தை பிறவி ஊமை, செவிடு! ஸ்வாமிகள் "ராம நாம ஸித்தாந்தம்" பண்ணிக்கொண்டு வரும்போது, இந்தக் குழந்தைக்கு "ராமா !" என்ற நாமாமுதத்தை காதாலும் பருக முடியாது, வாயாலும் சொல்ல முடியாதே! இதை எப்படி கரையேற்றுவது?" என்று ஒரு பெருங்கருணை அந்தக் குழந்தை விஷயமாக அவர் உள்ளத்தில் எழுந்தது.
அந்த வீட்டில் பிக்ஷை ஆனதும், தன்னுடைய உச்சிஷ்டத்தை கொஞ்சம் இலையில் விட்டுவிட்டு கிளம்பினார்.
அந்தக் குழந்தை ஸ்வாமிகளின் உச்சிஷ்டத்தை, அதன் மஹத்துவம் தெரியாமலே உண்டது. நமக்கு தெரிகிறதோ, தெரியவில்லையோ, மஹான்களின் பார்வை, ஸ்பர்ஸம், உச்சிஷ்டம் இதெல்லாம் தானே செய்ய வேண்டிய வேலையை செய்து, நம் பாவங்களை அடியோடு [ஆகாம்யம், சஞ்சிதம்] அழித்து, நம்மை மோக்ஷபர்யந்தம் அழைத்துச் சென்று விடும். 

அந்த குழந்தை ஆச்சர்யமாக பேசியது!
நம்மைப் போல் காக்கா, குருவி, என்றெல்லாம் சொல்லவில்லையாம்...... பகவானின் நாமத்தை [திவ்ய ஞானம்] கரதாளம் பண்ணிக் கொண்டு பாடி ஆடியதாம் ! 

"இதினமே ஸுதினமு" என்று மனஸில் கொண்டு ஸதா பகவானின் நாமங்களை தவிர அன்யதா எதையும் நினைக்காமல் இருக்க ஸத்குருவின் பாதங்களில் நமஸ்கரித்து ப்ரார்த்தித்து கொள்ளுவோம்.
[ Thanks to Mr. RISHABAN SRINIVASAN Sir for sharing this on 19.09.2013]





ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.






என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

50 கருத்துகள்:

  1. இதுவரை அறியாத ஸேத்திரங்கள் குறித்தும்
    அதன் மகிமைகள் குறித்தும்
    ஆச்சாரியாரின் அனுக்கிரங்கள் குறித்தும்
    தங்கள் பதிவின் மூலமே அறிந்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  2. அருமையான சம்பவங்கள். குழந்தை ராம நாமத்தையே தினமும் பேசியது என்று படித்ததும் 'தினமே சுதினமு சீதா ராம..' என்ற பத்ராச்சால ராமதாசர் கீத்தனை நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். November 10, 2013 at 1:50 AM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      //அருமையான சம்பவங்கள். குழந்தை ராம நாமத்தையே தினமும் பேசியது என்று படித்ததும் 'தினமே சுதினமு சீதா ராம..' என்ற பத்ராச்சால ராமதாசர் கீத்தனை நினைவுக்கு வந்தது.//

      நமக்குள் என்ன ஒரு ஒற்றுமை பாருங்கோ. இந்த மெயில் எனக்குக்கிடைத்து நான் படித்தவுடன், எனக்கும் ஸ்ரீ இராமதாஸர் பத்ராசல இராமனை நினைத்து மனமுருகிப் பாடிய அதே கீர்த்தனை தான் நினைவுக்கு வந்தது.

      இந்த மஹாபக்திமானான இராமதாஸர் சரித்திரத்தை நான் ஸ்ரீ ஹரிஜீ [ஸ்ரீமதி விஸாஹா ஹரி அவர்களின் கணவர்] சொல்ல, தினமும் மெய்மறந்து இரவு முழுவதும் கேஸட் போட்டு, திரும்பத்திரும்ப கேட்டதுண்டு.

      அந்தக்கதை எனக்கு அப்படியே மனப்பாடம் ஆகிவிட்டது.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  3. புதுசாய் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்; நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  4. அருமையான அனுபவ பகிர்வுகள்! ஞான மொழிகள் மிகவும் சிறப்பு! தொடர்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. இனிமேல் நைமிசாரண்யம் செல்பவர்கள் "வ்யாஸகத்தி" யை கண்டுபிடித்து, எத்தனை நமஸ்காரம் பண்ண முடியுமோ, அத்தனை பண்ணலாமே
    அடடா இதுஎனக்கு நான் அங்கு போனபோது தெரியாமல் போச்சு
    இனிமேல் சந்தர்பம் கிடைக்க போறது இல்லை

    பெரியவா பத்திபடிக்கபடிக்க ரொம்ப இனிமையா இறுக்கு.
    மென்மேலும் நிறைய எழுதுங்கோ
    விஜி

    பதிலளிநீக்கு
  6. பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே நாம் வெளிப்படுத்த வேண்டும்.//

    அமுதமொழி அருமை.
    கடைபிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.
    இன்று பதிவில் பகிர்ந்து கொண்டது எல்லாம் குருவின் அருளால் நலமாக இருக்கலாம். நம் கேள்விகளுக்கு நல்ல பதில் கிடைக்கும். குரு அருள் இருந்தால் போதும் வாழ்க்கையில் என்பதை எடுத்து சொல்லும் அருமையான பதிவு.

    //இதினமே ஸுதினமு" என்று மனஸில் கொண்டு ஸதா பகவானின் நாமங்களை தவிர அன்யதா எதையும் நினைக்காமல் இருக்க ஸத்குருவின் பாதங்களில் நமஸ்கரித்து ப்ரார்த்தித்து கொள்ளுவோம்.//
    ஸத்குருவின் பாதங்களில் நமஸ்கரித்து ப்ரார்த்திக் கொள்கிறேன்.
    அருமையான பதிவை அளித்த உங்களுக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  7. ///பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே நாம் வெளிப்படுத்த வேண்டும்.///
    அருமையான பதிவு ஐயா நன்றி

    பதிலளிநீக்கு
  8. நம்முடைய குறைகளை நினைக்காமல், பிறருக்குத் தொண்டு செய்து கொண்டு, பகவன்னானாமாவை சொல்லிக் கொண்டிருந்தால் காலக்கிரமத்தில் பழுத்த பழமாகி அன்பு என்ற மதுரமாக மாறிவிடுவோம்.. நல்ல உபதேசம். கேட்கவே இனிமை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  9. இந்த நாளே நல்லநாள் என்று நினைத்து பகவானின் நாமங்களையே நினைத்து மற்றெதையும் நினையாமல் இருக்க குருவருளைப் ப்ரார்த்திப்போம். இதைத் தவிர சிரந்த வழி வேறெதுவும் கிடையாது. மனதில்க் கொள்வோம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  10. அன்பு அய்யாவிற்கு வணக்கம்..
    //நம்முடைய காமம், குரோதம் முதலிய காய்ப்பு எல்லாம், காய் பழமாக ஆவதுபோல், படிப்படியாக துவர்த்து, புளித்து, அப்புறம் மதுரமாக ஆக வேண்டும்// உணமையான வார்த்தைகள். பிறரின் குறை தவிர்த்து நிறை காண வேண்டும் என்பது அழகான அருள் வாக்கு. பகிர்வுக்கு நன்றீங்க அய்யா...

    பதிலளிநீக்கு
  11. //நம்முடைய காமம், குரோதம் முதலிய காய்ப்பு எல்லாம், காய் பழமாக ஆவதுபோல், படிப்படியாக துவர்த்து, புளித்து, அப்புறம் மதுரமாக ஆக வேண்டும்.
    நமக்கு இன்னென்ன குறைகள் இருக்கின்றனவே என அழ வேண்டாம்.
    பகவானை நினைத்து பக்தியோடு இருந்து, மக்களுக்கு நம்மாலான தொண்டைச் செய்து கொண்டிருந்தால், தன்னால் காலக்கிரமத்தில், இந்தக் குறைகள் எல்லாம் போய் பழுத்த பழமாக அன்பு என்கிற ஒரே மதுரமாக ஆகிவிடுவோம்.//
    அருமையான வரிகள்!

    பதிலளிநீக்கு
  12. //பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே நாம் வெளிப்படுத்த வேண்டும்.//

    அருமையான அமுதமொழி. எல்லோரும் எல்லாவற்றையும் வாழ்வில் பட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை. பெரியவர்களின் மொழிகளைப் பின்பற்றினாலே போதும். ஆனால் நாம்தான்.....

    பதிலளிநீக்கு
  13. அமுத மொழிகள் மனத்தைக் குளிர்விக்கும் மழையாகவே பொழிகிறது. நைமிசாரண்யம் பற்றிய சிறப்பு அறிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  14. அன்பின் வை.கோ

    கனியாகும் பாய் - பதிவு அருமை
    வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி - விளக்கம் அருமை

    //பகவானை நினைத்து பக்தியோடு இருந்து, மக்களுக்கு நம்மாலான தொண்டைச் செய்து கொண்டிருந்தால், தன்னால் காலக்கிரமத்தில், இந்தக் குறைகள் எல்லாம் போய் பழுத்த பழமாக அன்பு என்கிற ஒரே மதுரமாக ஆகிவிடுவோம்.//

    பக்தரின் பிரச்னையைப் புரிந்து கொண்டு - அதனைத் தீர்ப்பதற்கான வழியினையும் கூற ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளால் தான் இயலும்.

    “என்ன, ஆஞ்சநேய ஸ்வாமி, ராமசேவைக்குப் போயிட்டாரா?”

    பக்தரின் பிரச்னை - தீர்ப்பதற்கான வழை - பெரியவா தீர்த்து வைத்து விட்டாரல்லவா .....


    நன்று நன்று - பதிவு நன்று - தகவல் பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நற்செயல் வாழ்க ! நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  15. மகா பெரியவரின் ஆச்சரியங்கள் பலவற்றை அறிந்து கொள்ளத் தருவதற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  16. எனக்கு வேணுமென்றே:):) வோட் பண்ணாத காரணத்தால்ல்:)) இப்பதிவு படிக்கவும் மாட்டேன்ன்:) பின்னூட்டம் போடவும் மாட்டேன் என்பதை:) அந்தக் கணக்குப் பார்க்கும் பச்சைக் கிளியாரின்.. அருகிலிருக்கும் உடைந்த கால்மேல் அடித்துச் சத்தியம் செய்கிறேன்ன்ன்:)))...

    உஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பாஆஆஆஆஆ ஒவ்வொரு முறையும்.. எதையாவது சொல்லி மிரட்டியே:) வாங்க வேண்டியிருக்கே முருகா:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira November 10, 2013 at 3:00 PM

      வாங்கோ அதிரா, வணக்கம்.

      //எனக்கு வேணுமென்றே:):) வோட் பண்ணாத காரணத்தால்ல்:)) இப்பதிவு படிக்கவும் மாட்டேன்ன்:) பின்னூட்டம் போடவும் மாட்டேன் என்பதை:) அந்தக் கணக்குப் பார்க்கும் பச்சைக் கிளியாரின்.. அருகிலிருக்கும் உடைந்த கால்மேல் அடித்துச் சத்தியம் செய்கிறேன்ன்ன்:)))...

      உஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பாஆஆஆஆஆ ஒவ்வொரு முறையும்.. எதையாவது சொல்லி மிரட்டியே:) வாங்க வேண்டியிருக்கே முருகா:))//

      வெரி ஸாரி ... அதிரா. உண்மையில் மறந்துட்டேன்.

      இப்போ வோட் அளித்து விட்டேன்.

      என் வோட் எண்: 5 [அஞ்சு]

      தங்கள் மெயில் விலாசம் தெரியாததால் இது விஷயமாக விரிவாகப் பேச இயலவில்லை.

      நம் அஞ்சு மூலமாக உங்களுக்குத் தகவல் தருகிறேன்.

      அது உங்களுக்கு மிகவும் சாதகமாகவே இருக்கும்.

      அன்புடன் கோபு அண்ணன்

      [ஊசிக்குறிப்பு:

      இனி என் பதிவுகளுக்கு மீண்டும் வாங்கோ. கலகலப்பாக வழக்கம் போல கலக்குங்கோ. ;))))) ]

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என்ன கோபு அண்ணன்? உங்களுக்கு என் பகிடி/நகைச்சுவை புரியவில்லையா?:).. நான் சும்மாதானே எழுதினேன்ன்.. பின்னூட்டமிடமாட்டேன் என.. நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து மின்னி முழக்குவேன்ன்.. பதிவைப் படிக்காமல் ஒரு வரியில் நல்லாயிருக்கு என எழுதிட்டு ஓடப் பிடிக்காது, அதனாலேயே.. நேரம் கிடைக்கும்போது ஆறுதலாகப் படித்து பின்னூட்ட சற்று தாமதமாகிடுது.. மற்றும் படி ஒன்றுமில்லை.. இதை எங்கேயும் கொப்பி பேஸ்ட் பண்ணிடாதீங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ:))

      நீக்கு
  17. //நம்முடைய காமம், குரோதம் முதலிய காய்ப்பு எல்லாம், காய் பழமாக ஆவதுபோல், படிப்படியாக துவர்த்து, புளித்து, அப்புறம் மதுரமாக ஆக வேண்டும்//
    //பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே நாம் வெளிப்படுத்த வேண்டும்.//
    அமுதமொழிகள் அருமை! பகிர்விற்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  18. அருமையான பகிர்வு. அறியாத பல செய்திகள் அறியத் தந்தமைக்கு நன்றி பல.

    அன்புடன்
    பவள சங்கரி

    பதிலளிநீக்கு
  19. வியாசகத்தி பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன். நன்றி!

    பதிலளிநீக்கு
  20. அமுத மொழிகள், அற்புத சம்பவங்கள்
    மனம் சுத்தமாக்கும் மார்க்கம்.
    மிக நன்றி.
    இறையருள் நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  21. வியாஸகத்தி பற்றிய தகவல் அறிந்து கொண்டேன் மகிழ்ச்சி நம் குறைகளை பற்றி கவலை பட்டுக்கொண்டே இருக்காமல் அதேசமயம் பிறரிடமும் குறை காணாமல் இறைவனை உள்ளன்புடன் நேர்மையாய் பக்தி செய்துவர எல்லாம் நல்லதாகவே நடக்கும் மாற்றுதிறனாளிகளை மதிக்கவேண்டும் கும‌ரகுருபரர் பிறவியில் வாய் பேசமுடியாமல் இருந்து அம்பாளின் அனுக்ரஹ்த்தால் பேசும் சக்திபெற்று பிள்ளைதமிழ் இயற்றினார்
    போதேந்திராள் ராமநாம சித்தாந்தம் உச்சிஷ்ட மகிமை காஞ்சி காமகோடி பீடாதிபதிகளாக இருந்து பகவன் நாம மகிமையை கலியுகத்துக்கு உணர்த்திய மஹான் அருமையான பகிர்வு மிக்கநன்றி
    தயாகரோ குருனாதா க்ருபாகரோ குருநாதா காவேரி தீரவாஸகுருனாதா காமகோடிபீடவாஸகுருனாதா ராமநாம ஸித்தாந்தகுருநாதா

    பதிலளிநீக்கு
  22. நம்முடைய காமம், குரோதம் முதலிய காய்ப்பு எல்லாம், காய் பழமாக ஆவதுபோல், படிப்படியாக துவர்த்து, புளித்து, அப்புறம் மதுரமாக ஆக வேண்டும்.
    பிறகே துறவு பூணவேண்டும்..!

    பதிலளிநீக்கு
  23. சர்வக்ஞத்வம் என்பதன் முதல் தகுதியே தனக்கு எல்லாம் தெரிந்தும், அதைப் பற்றி கொஞ்சங்கூட சட்டை செய்யாமல் [ஆஞ்சநேய ஸ்வாமி மாதிரி] மற்ற பேருக்கு முக்யத்துவம் கொடுப்பதுதான்.

    பெரியவா சொன்னது அனுபவ ஸாத்யமான வழி!

    அநுக்ரஹ வழி! அற்புதம்..!

    பதிலளிநீக்கு
  24. என்ன, ஆஞ்சநேய ஸ்வாமி, ராமசேவைக்குப் போயிட்டாரா?”

    என்று கேட்டார் பெரியவா குறும்புத்தனமாக. !!!!!

    அழகான காட்சி..!

    பதிலளிநீக்கு
  25. //இனிமேல் நைமிசாரண்யம் செல்பவர்கள் "வ்யாஸகத்தி" யை கண்டுபிடித்து, எத்தனை நமஸ்காரம் பண்ண முடியுமோ, அத்தனை பண்ணலாமே!//

    பண்ணினோம். :))) நல்லதொரு பகிர்வு. போதேந்திராள் குறித்த விஷயம் இப்போது அறிந்தேன். ராமநாம மஹிமை குறித்துச் சொல்லவும் வேண்டுமா!

    பதிலளிநீக்கு
  26. எல்லோரும் வயதான பிறகு சாஸ்திரங்களை
    கற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.

    அப்போது ஸ்திரமே இல்லாத மனநிலைதான் இருக்கும்.உடல்நிலையும் அப்படிதான் இருக்கும் என்பதை யார் நினைக்கிறார்கள்.?

    அதனால்தான்
    இளமையில் கல் என்றார்கள்

    அர்த்தம் புரிகிறதோ இல்லையோ கற்றுக்கொண்டுவிட வேண்டும். வாழ்க்கையில் அனுபவங்களை பெறும்போது சாஸ்திரங்களின் பொருள் புரியும்

    கல்வி கற்கிறார்களோ இல்லையோ கண்டதை தின்றுவிட்டு பித்தப்பையில் கல், கிட்னியில் கல் என்று அலைகிறார்கள் அனைவரும்.

    அம்புலன்களை யாரும் அடக்க முடியாது
    அடக்கவும் கூடாது.

    அவைகளை நல்ல சத் விஷயத்தில் நாம் தான் ஈடுபடுத்தவேண்டும்

    அதற்க்கு நல்ல சத்சங்கத்தில்
    நம்மை இணைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

    உண்மையான குருவை நாடி
    நல்ல போதனைகளை பெற்று நல்ல வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.

    நல்ல விஷயங்களை நாள்தோறும் பகிரும் நல்ல பதிவு.

    vgk பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  27. பகவானை நினைத்து பக்தியோடு இருந்து, மக்களுக்கு நம்மால் ஆன தொண்டுகளைச் செய்து கொண்டிருந்தால், காலக் கிரமத்தில், இந்தக் குறைகள் எல்லாம் நீங்கி அன்பில் பழுத்த பழமாக ஆகிவிடுவோம்.

    ஒளி வீசும் வைர வரிகள்.. அருமை.. பதிவினுக்கு மிக்க நன்றி!..

    பதிலளிநீக்கு
  28. சிறப்பான பகிர்வு ஐயா... கருத்துரைகளும் அருமை... (நண்பரின் கைபேசி மூலம் இந்தக் கருத்துரை) நன்றி...

    பதிலளிநீக்கு
  29. ''பதிவைப் படிக்காமல் ஒரு வரியில் நல்லாயிருக்கு என எழுதிட்டு ஓடப் பிடிக்காது,'' எனக்கும் சேர்த்தே சொல்லியிருக்கிறாரோ ஆதிரா அவர்கள். (நன்றி)
    ''பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே நாம் வெளிப்படுத்த வேண்டும்'' மிக அருமையான அனைவரும் பின்பற்ற வேண்டிய நல்லதொரு கருத்து.

    பதிலளிநீக்கு
  30. அறியாத பல செய்திகள்......

    தொடரட்டும் அமுத மொழிகள்....

    பதிலளிநீக்கு
  31. புதுசா இருக்கு,நிறைய விஷயங்கள் தெரிந்துக் கொண்டே, ஐயா!!

    பதிலளிநீக்கு
  32. //பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே நாம் வெளிப்படுத்த வேண்டும்./// உண்மையேதான்ன்.. ஆனால் குறைகளைச் சுட்டிக்காட்டினால்தானே... ஒருவருக்கு தெரியவரும், தாம் செய்வது தவறு என, ஏனெனில் எல்லோருமே, நாம் செய்வது சரி என நினைத்துக் கொண்டேதானே செய்கிறோம்....

    பதிலளிநீக்கு
  33. "பகவானை நினைத்து பக்தியோடு இருந்து, மக்களுக்கு நம்மாலான தொண்டைச் செய்து கொண்டிருந்தால், தன்னால் காலக்கிரமத்தில், இந்தக் குறைகள் எல்லாம் போய் பழுத்த பழமாக அன்பு என்கிற ஒரே மதுரமாக ஆகிவிடுவோம்"
    நல்லமுதம்.

    குழந்தை அற்புதம் சிலிர்க்கின்றது.

    பதிலளிநீக்கு
  34. காது கேட்காத பக்தருக்கு நைமிசாரண்ய யாத்திரை கருணை தெரிகிறது. 'என்ன ஆஞ்சநேயர் ராமசேவைக்கு போயிட்டாரா?' குறும்பு கொப்பளிக்கிறது!
    மகா குருவின் ஆசியில் குழந்தை பேசியது ஆறுதலாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  35. நைமிசாரண்யத்தில் இப்படி ஒரு விசேஷ ஸ்தலம் இருக்கா?

    பதிலளிநீக்கு
  36. உங்க பக்கம் வந்தாலே நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியரது.நன்றிகள்

    பதிலளிநீக்கு
  37. // பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே நாம் வெளிப்படுத்த வேண்டும்.//

    நூத்துக்கு நூறு உண்மை. இதையெல்லாம் படிக்கும்போது புத்தி கொஞ்சம் தெளியத்தான் செய்யுது. அதனால தினமும் படிக்கணும்.

    பதிலளிநீக்கு
  38. மூன்று முத்தான சம்பவங்களையும் படித்தேன். ரசித்தேன். நெகிழ்ந்தேன்.

    வ்யாஸகத்தி பற்றி தெரிந்து கொண்டேன்.

    //“என்ன, ஆஞ்சநேய ஸ்வாமி, ராமசேவைக்குப் போயிட்டாரா?” //

    மகா பெரியவாளுக்கே உரித்தான நகைச்சுவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  39. பதிவு படிச்சுபோட்டு இன்னா கமண்டு கொடுத்துகிடன்னு நெனப்புல மத்தவங்க கமண்டுலா படிச்சு போடுவேன்ல. ஏதோ நல்லா வெசயங்க சொல்லினிங்க போல

    பதிலளிநீக்கு
  40. ஆஞ்சநேயர் ராமசேவைக்கு போயாச்சா என்ன குறும்பு பண்றாங்க பெரியவா. நவரசங்களும் அறிந்தவர்தானே.

    பதிலளிநீக்கு
  41. //பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே நாம் வெளிப்படுத்த வேண்டும்// இப்படி எல்லோரும் இருந்துட்டாக்க எப்புடி இருக்கும்?

    பதிலளிநீக்கு
  42. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (27.07.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://www.facebook.com/groups/396189224217111/permalink/455523644950335/

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு