என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 30 நவம்பர், 2013

88] இலாப நஷ்டம்.

2
ஸ்ரீராமஜயம்
சாப்பிடுகிற நாட்களிலும் இறைவனைத் தியானம் பண்ணுங்கள். உண்ணா நோன்பு இருக்கும்  நாட்களிலும், சாப்பிடாமலிருந்தும் தியானம் பண்ணிப்பாருங்கள். தனக்கே நன்கு வித்யாசம் தெரியும். 

அந்த இலாபத்திற்காக இந்த நஷ்டப்படலாம் என்பதையும் தெரிந்து கொள்வீர்கள்.

இப்போது இது உயர்ந்த ருசி என்று அதிகமாக சாப்பிட்டாலும் இந்த ஐந்து, பத்து நிமிடங்களுக்கு அப்புறம் அது நம் நாக்கில் நிற்கிறதா என்ன?

இது என்ன நிரந்தரமாக நம் வயிற்றில் இருந்துகொண்டு மறுபடியும் பசிக்காமலேயே பண்ணப்போகிறதா என்ன? என்று நம்மை நாமே கேட்டுக் கொண்டு கட்டுப்பாடு பண்ணிக் கொள்ள வேண்டும்.

நாம் பண்ணிய பாபங்களுக்கு எல்லாம், தராசின் எதிர்த்தட்டில் புண்ணிய காரியங்களை ஏற்றித்தான் ஆக வேண்டும்.

மனசை நிறுத்திவிட்டால், கர்மா இல்லை;ஜென்மா இல்லை; மோக்ஷம்  மட்டும் தான்.

oooooOooooo

அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய 
மிக முக்கியமானதோர் நிகழ்ச்சி  !

”ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு 
தண்ணி பிடிச்சாலும் நிக்காது”மஹா பெரியவர் ஊர் ஊராகச்சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த சமயம். அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு நாள் ஒரு விவசாயி, பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு சந்தித்தார். 

அவரிடம் துளியும் உற்சாகம் இல்லை. முகமும் இருளடைந்து போய் இருந்தது. வாயைத்திறந்து தன் துன்பங்களைப்பற்றி கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்திலேயே அவரின் துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது.

இருந்தும் அந்த விவசாயி, சாமீ ... ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாமான்னு கூடத் தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.

பெரியவர் அவரிடம், “குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார்.

”குலதெய்வமா .... அப்படின்னா? - திருப்பிக்கேட்டார் அவர். 

சரிதான் .... உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?” 

ஆமாம் சாமி .... வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கும் கடவுள் நம்பிக்கை இல்லாததால் அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.

”உன் முன்னோர்கள் யாராவது இப்போ உயிரோட இருக்காங்களா?

”ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழிப் பாட்டனார் அவர்”

“அவர்கிட்டப்போய் உங்க குலதெய்வம் பத்திக் கொஞ்சம் கேட்டுண்டு வா

ஏன் சாமீ .... அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாத்தான் என் பிரச்சனை 
தீருமா?”

”அப்படித்தான் வெச்சுக்கோயேன்..... 

என்ன சாமீ ... நீங்க .... ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?”  

“நான் அப்படிச்சொல்லவே இல்லையே! 

”அப்ப இந்த சாமில ஒண்ணக் கும்பிடச்சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சிட்டு வரச் சொல்றீங்களே!” 

காரணமாத்தான் சொல்றேன். 

ஓட்டைப்பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. 

நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. 

வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான். 

எனக்குப் பாத்திரமேகூட தேவையில்லை. 

ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை. 

பாத்திரம் இருந்தால்த் தானே எதையும் அதுலே போட்டு வைக்க முடியும்? 

அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப்போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளியே போகுமா ... போகாதா? 

”அப்போ குலதெய்வம்தான் பாத்திரமா ... அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?”

நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு, அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரையிலே படும்படி நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார். 

அவரும் ஒரு பத்துநாள் கழித்து, சாமீ! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் ‘பேச்சாயி’ங்கற ஒரு அம்மன். அதோடக் கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சிபோய் கிடந்தது. யாருமே போகாம விட்டதால, கோயில் புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய்ப் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க ஒரு நடுகல் தான் ’பேச்சாயி!’ ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டு வரேன்” என்றார்.  

சபாஷ் ... அந்தக்கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவர்!

”சாமீ! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே ... எதுவுமே சொல்லலியே?”

”அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன். 

நான் சொன்னதை மறந்துடாதே ... பேச்சாயியை விட்டுடாதே!

அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்தமுறை அவரிடம் ஓர் செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்றுதான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.

“சாமீ ! இப்போ நான் நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்தில பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க ... இந்த அதிசயம் எப்படி நடந்தது?” என்று அவர் திரும்பவும் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார். ...... அது  ..... ?

ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது குறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாக அனைவருமே அறிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும்.

’’நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். 

முன்னோர்கள் என்றால், நமக்கு முன் பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். 

ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழிப் பாட்டன், பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழிப் பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதைக் கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் “கோத்திரம்” என்னும் ஒரு ரிஷியின் வழி வழிப்பாதை. 

பிற கோத்ரத்திலிருந்து பெண்கள் வந்து இந்த வழி வழிப்பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக்கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

அடுத்துஇவர்கள் அவ்வளவு பேருக்குமே  நக்ஷத்திரம் வேறாக
உடலமைப்பு வேறாககுணப்பாடுகள் வேறாகவும் 
இருக்கும்

அதுதான் இயற்கையும் கூடஆனால்கோத்திர வழி மாறாதபடி 
இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில் 
கைகூப்பி  நின்றிருப்பார்கள்தலைமுடி கொடுத்திருப்பார்கள்
காது குத்துவது போன்ற வழிவழிச் செயல் பாடுகளும் நடந்துமிருக்கும்.   

இந்த உலகில் ஆயிரம் கோயில்கள் இருக்கலாம்அந்தக் 
கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்போகாமலும் இருக்கலாம்
அதற்கு உத்தரவாதம் இல்லை

ஆனால் குலதெய்வக்கோயில்களுக்குநாம் பக்தி என்கிற ஒன்றை 
அறிவதற்கு முன்பேநம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு 
செல்லப்பட்டுவணங்க வைக்கவும் படுகிறோம்.  

இதன்படிப் பார்த்தால்குலதெய்வ சந்நதியில் சென்று நாம் நிற்கும்போது
நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்இந்த வரிசைத் தொடர்பை 
வேறு எங்காவதுஎந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?”  

---- பெரியவர் சொல்லச்சொல்லபர்மாக்காரரிடம் பரவசம் !

அது மட்டுமல்லஒரு மனிதனின் பிறப்புக்குப்பின்னே இப்படியொரு 
பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூடத் தெரியாமல்
அதிகபக்ஷம் இருபாட்டன் பாட்டி பெயர்களுக்கு மேல் தெரியாமல் 
அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?

ஒரு குடும்பத்தைப்  பொறுத்தவரையில் அந்த இறைசக்தி 
குலதெய்வமாகஅவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது
இப்படிச்சொல்வது கூட ஒரு தவறு

வெளிப்பட வகை செய்யப்பட்டது

அதுவும் யாரால்நம் முன்னோர்களால் 
அவர்கள் யார்நம்முடைய தொடக்கங்கள்......   
நாம் யார்அந்தத்தொடக்கத்தின் தொடர்ச்சி ! 
மொத்தத்தில் நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.

இந்த வழிவழிப்போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் 
புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம்

இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே
நாம்அங்கேபோய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் 
அந்த இறைசக்தியைத் தொழும்போதுஅவர்களும் பித்ருக்களாக 
விண்ணில் இருந்து  பார்க்கிறார்கள்

நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம்

இது எத்தனை தூரப் பார்வையோடுவடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?

பெரியவர் விளக்கி முடிக்க வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப்போனது. 

இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப்பெரிய நல்ல சமாச்சாரம் 
ஒன்றும் அடங்கியுள்ளது

சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால்அதுவுமல்லாது 
பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் 
போகிறது என்று வையுங்கள்அதாவதுகண்ணுக்குப் புலப்படாத 
இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை
நான் ஒன்றும் முட்டாள் இல்லை என்று அவர் வீராப்பாபேசி
நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் 
நிலை வந்தாலும் பெரிதாய் தோஷமில்லை

அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே
இந்தப் பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு 
ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால்அவர் ஒருநாள் நிச்சயம் மனம் மாறி 
அருள்தொடர்புக்கு ஆட்படுவார் என்பதுதான் இதிலுள்ள மிகச்சிறந்த 
ஒரு விஷயமாகும் 

இப்படி நம்பிக்கையற்றுப் போனவர்தன் பிள்ளைகளை அழைத்துவர 
மாட்டாரேஅவர்கள்இதனால் இந்தப் பரம்பரை தொடர்புக்கு 
ஆட்படாமல் போய்விடுவார்களே என்று ஒரு கேள்வி எழலாம்

பெரும்பாலும் ஒருவழியில்ஒரே கோத்திரத்தில் திருமணங்கள் 
புரிந்து கொள்ளாமல்முன்னோர் காட்டிய வழியில் போகும் பட்சத்தில்
வாழ்வில் நமக்கு பெரிய கஷ்டங்கள் வருவது இல்லை என்பதுதான் 
இம்மட்டில் புரிந்துகொள்ள வேண்டிய விஷயமாகும்

உடம்புக்கு உணவு பொருட்களால் சக்தி ஏற்படுவதுபோல
மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது”. 

-=-=-=-

ஒரு குலதெய்வத்தின் பின்னால். இப்படியான பிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளன. குலதெய்வத்தை பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல்போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது. பர்மாக்காரர் வரையிலும் அது தான் நிகழ்ந்துள்ளது.

எனக்கும் இந்தக்குலதெய்வ விஷயம் பெரும் உற்சாகத்தைத் தந்தது. நான் எங்க குலதெய்வக்கோயிலுக்குப் போனபோது, என் பார்வையே மாறிப்போனது. அந்தக்கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்களையும் தொடும்போது, என் தாத்தன் தொட்ட தூண் .... என் தாத்தன் முன்நின்று மூச்சுவிட்ட இடம் .... என் முப்பாட்டன், அதற்கும் முற்பட்ட பாட்டன் நடந்து திரிந்த தரைப் பரப்பு ... அவர்களைப் பார்த்த பெருமாள் என்னையும் பார்க்கிறார் என்பதா? இல்லை, அவர்கள் பார்த்த பெருமாளை நான் பார்க்கிறேன் என்பதா? ஒன்று உறுதி, அந்தப்பெருமாளை வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவே எத்தனை பெரிய அனுக்ரஹம்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் இந்தக்குலதெய்வ விளக்கமும், இதன் பின்புலமும் எனக்குள் நம் முன்னோர்கள் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்திற்று.


கட்டுரை எழுதியவர்: இந்திரா செளந்தரராஜன்
நன்றி : தீபம் [கல்கி வழங்கும் ஆன்மிக இதழ்]


-=-=-=-=-

My sincere thanks to 
My Dear Mr. RISHABAN Srinivasan Sir,  
for bringing this Very Beautiful Article 
to my notice on 25.11.2013.

I have just retyped it here.

-=-=-=-=- 


http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_23.html
மேற்படி இணைப்பினில் அடியேன் எழுதியுள்ள 
குலதெய்வமே உன்னைக் கொண்டாடுவேன் 
என்ற  சிறப்புக்கட்டுரை அழகான 
படங்களுடன் இடம்பெற்றுள்ளது.

எங்கள் குலதெய்வம் தொடர்பான இதர பதிவுகள்:

http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_05.html  

http://jaghamani.blogspot.com/2011_07_01_archive.html 

http://jaghamani.blogspot.com/2011/05/blog-post_05.html

-=-=-=-=- RICHNESS is not 
Earning More, 
Spending More Or Saving More, 
but 
"RICHNESS IS 
WHEN YOU NEED NO MORE"

-oOo-ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.


என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

55 கருத்துகள்:

 1. நாம் பண்ணிய பாபங்களுக்கு எல்லாம், தராசின் எதிர்த்தட்டில் புண்ணிய காரியங்களை ஏற்றித்தான் ஆக வேண்டும்.

  மனசை நிறுத்திவிட்டால், கர்மா இல்லை;ஜென்மா இல்லை; மோக்ஷம் மட்டும் தான்

  மனமது செம்மையானால் அனைத்தும் நலமே..!

  பதிலளிநீக்கு
 2. குலதெய்வ வழிபாட்டிற்கு எத்தனை சக்தி! பர்மாக்காரர் அதற்கு அத்தாட்சி.
  சின்ன வயதில் பக்தி இல்லை என்கிறவர்கள், நாற்பது வயதில் பக்திமான்கள் ஆகிவிடுவார்கள்.
  மகாபெரியவரின் சொற்கள் ஒவ்வொன்றும் அமுதம் தான்.எங்களை அமுத வெள்ளத்தில் திளைக்கச் செய்யும் உங்களுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 3. குலதெய்வத்தை பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல்போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது.

  குல தெய்வத்தின் சிறப்பை அருமையாக எடுத்துரைத்து வழிகாட்டிய மகானுக்கு நமஸ்காரங்கள்..!

  பதிலளிநீக்கு
 4. ”ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு
  தண்ணி பிடிச்சாலும் நிக்காது”

  குலதெய்வ வழிபாட்டின் சிறப்பை சத் பாத்திரமாக விவரித்த அருமையான பகிர்வுகள்..1

  பதிலளிநீக்கு
 5. நம் முன்னோர்கள் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்தும் சிறப்பான பகிர்வுகளுக்கு நன்றிகள்..!

  பதிலளிநீக்கு
 6. RICHNESS is not Earning More, Spending More Or Saving More, but
  "RICHNESS IS WHEN YOU NEED NO MORE"

  அழகான பொன்மொழி ...
  போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து..!

  பதிலளிநீக்கு
 7. அன்பின் வை.கோ - இலாப நஷ்டம் பதிவு அருமை - நன்று நன்று -
  நாம் பண்ணிய பாபங்களுக்கு எல்லாம், தராசின் எதிர்த்தட்டில் புண்ணிய காரியங்களை ஏற்றித்தான் ஆக வேண்டும். - அருமையான அறிவுரை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 8. குல தெய்வம் பற்றி எமது மூன்று பதிவுகளின் லிங்க கொடுத்து சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

  பதிலளிநீக்கு
 9. நான் எங்க குலதெய்வக்கோயிலுக்குப் போனபோது, என் பார்வையே மாறிப்போனது. /////

  மனநிலை மாற்றத்தை ஏற்படுத்தமுடிகிற அற்புத சக்தி குலதெய்வக்கோவில்களுக்கு உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை..!

  பதிலளிநீக்கு
 10. அன்பின் வை.கோ - குலதெய்வத்தினை வணங்குவதென்பது நமக்கு நண்மைகள் விளையத்தான் - குலத்துவத்தினை விள்க்கியமை நன்று - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா அவர்க்ளுக்கே உரிய பாணீயில் குல தெய்வம் என்பது எது என விளக்கியமை நன்று. நாங்கள் இன்னும் குல தெய்வத்தினை வணங்கி வருகிறோம். நல்லதொரு சிந்தனை = நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 11. // நாம் பண்ணிய பாபங்களுக்கு எல்லாம், தராசின் எதிர்த்தட்டில் புண்ணிய காரியங்களை ஏற்றித்தான் ஆக வேண்டும். //

  அருமை... உண்மை...

  // குலதெய்வ சந்நதியில் சென்று நாம் நிற்கும்போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை
  வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா...? //

  மிகவும் சிறப்பு ஐயா...

  மிக்க நன்றி... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 12. குலதெய்வத்தை போற்றுவது குறித்த பெரியவாளின் விளக்கங்கள் அருமை... சிறப்பான பகிர்வு...

  பதிலளிநீக்கு
 13. குலதெய்வ வழிபாடு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அழகாய்ச் சொல்லி விட்டார். இது ஏற்கெனவே படிச்சிருந்தாலும் மறுபடி படிக்கப் படிக்கப் பரவசம். அவரவர் குலதெய்வமும் அதற்கான வழிபாடும் எத்தனை முக்கியம் என்பதும், அனைவரும் அறிய வேண்டிய ஒன்றே.

  பதிலளிநீக்கு
 14. அன்பின் திரு வை. கோ சார்,

  அருமையான பதிவு. எந்த ஒரு நல்ல காரியமும் குல தெய்வத்தை வேண்டிச் செய்வதே சிறப்பாக இருக்கும். ஆழ்ந்து மனதில் பதியச் செய்த இடுகை. நன்றி.

  பதிலளிநீக்கு
 15. உடம்புக்கு உணவு பொருட்களால் சக்தி ஏற்படுவதுபோல,
  மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது”. //
  அருமையான அமுத மொழி. இறை அருள் தான் சக்தி. அதுவும் குலதெய்வவழிபாடு மிக முக்கியம் என்பதை அழகாய் விளக்கமாய் சொல்லி இருக்கிறார்கள்.
  பகிர்வுக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. உடம்பிற்கு உணவு தேவைபோல,மனதிற்கு இறை சக்தி அவசியம்.
  குலதெய்வ வழிபாடு என்பது அவசியம் என்பது வுக்கியமான விஷயம். பெரியவர்கள் எடுத்துக் காட்டாக இதையெல்லாம் செய்வது அவசியம். அப்போதுதானே தலை முறைக்கும் இதன் அவசியம் விளங்கும். நல்ல பதிவு.
  குலதெய்வமே என்ன என்று தெரியாதவர்களுக்கு என்ன வழி.
  அதையும் சொல்லுங்கள். எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும். அன்புடன்

  பதிலளிநீக்கு
 17. நம்பிக்கையும் மனதின் ஏற்றுக்கொள்ளல் இரண்டுமே சேர்ந்ததுதான் வாழ்க்கை . உங்கள் பதிவு மனதுக்கு நம்பிக்கையை விதைக்கின்றது . தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 18. குல தெய்வ வழிபாட்டின் முக்கியத்தவம் பற்றிய விளக்கம் படிக்க படிக்க பரவசமானது. நம் முன்னோர்கள் எதையும் ஒரு காரணமில்லாமல் செய்யவில்லை என்பது நிதர்சனமாய் புரிகிறது. நன்றி பகிர்விற்கு.

  பதிலளிநீக்கு
 19. குலதெய்வ வழிபாடு குறித்து
  இதுவரை அறியாத அறிந்திருக்கவேண்டிய
  அருமையான பொக்கிஷச் செய்தி
  பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
 20. ரொம்ப அருமையான, சிறப்பான பகிர்வு!!..இன்றைய பல பிரச்னைகளுக்கு மூல காரணமே, பலருக்கு குலதெய்வம் எது என்று தெரியாமல் போய்விட்டதுதான்.

  நம் இல்லங்களில், நிலை வாசற்படியில் குல தெய்வம் குடியிருந்து காப்பதாக ஐதீகம்.எனவே தான், நாள் கிழமைகளில், வாசல் நிலைக்கு மஞ்சள் குங்குமம் வைத்து, மாவிலை கட்டி, பூ வைத்து வழிபடுகிறோம். எத்தகைய பெருந்துன்பத்திலும், ஓடி வந்து காப்பது குலதெய்வமே...குலத்தைக் காக்கும் குலதெய்வ வழிபாடு.

  தங்களின் மிக அருமையான சேவைக்கு என் மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
 21. குல தெய்வ வழிபாடு - குலம் விளங்கச் செய்யும் என்பதில் ஐயமே இல்லை!..

  நம் முன்னோர் நின்ற பூமியில் நிற்கின்றோம் என்பதே - நமக்குப் பெருமை!..

  அருமையான விஷயத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!..

  பதிலளிநீக்கு
 22. குலதெய்வக்கோயிலுக்குப் போனபோது, என் பார்வையே மாறிப்போனது. அந்தக்கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்களையும் தொடும்போது, என் தாத்தன் தொட்ட தூண் .... என் தாத்தன் முன்நின்று மூச்சுவிட்ட இடம் .... என் முப்பாட்டன், அதற்கும் முற்பட்ட பாட்டன் நடந்து திரிந்த தரைப் பரப்பு ... அவர்களைப் பார்த்த பெருமாள் என்னையும் பார்க்கிறார் என்பதா? இல்லை, அவர்கள் பார்த்த பெருமாளை நான் பார்க்கிறேன் என்பதா? ஒன்று உறுதி, அந்தப்பெருமாளை வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவே எத்தனை பெரிய அனுக்ரஹம்./குலதெய்வவழிபாட்டின் அவசியத்தை வலியுறுத்திய விதம் அருமை! நன்றி!

  பதிலளிநீக்கு
 23. குலதெய்வ வழிபாட்டிற்கு எத்தனை சக்தி!

  பதிலளிநீக்கு
 24. குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியமானது என்பதை மஹாபெரியவாள் எத்தனை அழகாக எல்லோருக்கும் அருளியிருக்கிறார்கள்.குலதெய்வம் பற்றி ஒருமுறைபெரியவாள் வாயால் நேரிலேயேகேட்ட பாக்யம் கிடைத்தது அதன் பின்னால்தான் நாங்கள் வேட்டனுர் செல்ல ஆரம்பித்தோம் உண்மையில் அதன் பிறகு நல்ல மாற்றங்கள் பகிர்வுக்கு நன்றீ

  பதிலளிநீக்கு
 25. குலதெய்வத்தை போற்றுவது குறித்த பெரியவாளின் விளக்கங்கள் அருமை... சிறப்பான பகிர்வு...

  பதிலளிநீக்கு
 26. // ”அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப்பின்னே இப்படியொரு
  பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூடத் தெரியாமல்,
  அதிகபக்ஷம் இருபாட்டன் பாட்டி பெயர்களுக்கு மேல் தெரியாமல்
  அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?//

  எவ்வளவு வருத்ததுடன் சொல்லிருக்கா.........

  பதிலளிநீக்கு
 27. அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம். ஏற்கனவே நீங்கள் எழுதிய உங்கள் குலதெய்வம் பற்றிய கட்டுரையையும், சகோதரி இராஜராஜேஸ்வரி பதிவுகளையும் படித்து இருக்கிறேன். இப்போது இந்திரா செளந்தரராஜன் எழுதிய குலதெய்வ வழிபாடு பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 28. Kula deiva vazhipaadu - is a must and very very true sir. Thanks sir for sharing about it, our ancestors have done and said everything for a reason, but most of the times it is not told and never reach the younger generation.wonderful post sir...

  பதிலளிநீக்கு
 29. அய்யாவிற்கு வணக்கம்
  //நாம் பண்ணிய பாபங்களுக்கு எல்லாம், தராசின் எதிர்த்தட்டில் புண்ணிய காரியங்களை ஏற்றித்தான் ஆக வேண்டும்.// வாழும் போதே நமது செய்கையினால் பாவங்களுக்கு புண்ணியம் தேடித்தான் ஆக வேண்டுமென்பதை மிக அழகாக சொல்லி விட்டீர்கள் அய்யா.
  பெருஞ்செல்வன் என்பது எதையும் பெறாதவன் என்பதில் எவ்வளவு பெரிய உண்மை மறைந்துள்ளது. அழகான பொன்மொழியைப் பகிர்ந்தமைக்கும் நன்றிகள் அய்யா.

  பதிலளிநீக்கு
 30. குலதெய்வ வழிபாடு பற்றி மிக சிறப்பான பகிர்வு!!

  பதிலளிநீக்கு
 31. 'குலதெய்வத்தை பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல்போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது.'

  நல்விளக்கம்.

  பதிலளிநீக்கு
 32. ஓட்டை பாத்திரத்தில் ஓட்டையை அடைத்துவிட்டால் தண்ணீர் நிற்கும்
  கோவிந்தா என்னும் கோந்துவை
  பூசிவிட்டால் நீர் கசிவது நின்றுவிடும்.

  பதிலளிநீக்கு
 33. குல தெய்வ வழிபாடு பற்றிய மிகச் சிறப்பான பகிர்வு....

  பெரியவா தந்த நல்ல விளக்கம் மனதில் பதிந்தது....

  பதிலளிநீக்கு
 34. ஆஹா குலதெய்வம் பற்றி மிக சிறந்த வார்த்தைகள்
  இதில் ஆச்சர்யம் என்னவென்றால் எதற்கும் நேரமில்லை என்று கூறும் இளய தலைமுறை குலதெய்வ கோயிலக்கு
  போகனம்ன ஒன்னும் சொல்லாம வந்து விடுகிறார்கள்

  பதிலளிநீக்கு
 35. ஓட்டைப் பாத்திரமும் குல தெய்வமும் மிக நல்ல விளக்கம்.

  பதிலளிநீக்கு
 36. //RICHNESS is not
  Earning More,
  Spending More Or Saving More,
  but
  "RICHNESS IS
  WHEN YOU NEED NO MORE"//

  சூப்பர்.

  பதிலளிநீக்கு
 37. //இப்போது இது உயர்ந்த ருசி என்று அதிகமாக சாப்பிட்டாலும் இந்த ஐந்து, பத்து நிமிடங்களுக்கு அப்புறம் அது நம் நாக்கில் நிற்கிறதா என்ன?

  இது என்ன நிரந்தரமாக நம் வயிற்றில் இருந்துகொண்டு மறுபடியும் பசிக்காமலேயே பண்ணப்போகிறதா என்ன? என்று நம்மை நாமே கேட்டுக் கொண்டு கட்டுப்பாடு பண்ணிக் கொள்ள வேண்டும்.// சத்தியமான வார்த்தைகள்!!

  குலதெய்வ வழிபாட்டு மஹிமையைத் தெரிந்து கொண்டேன், நன்றி!!

  பதிலளிநீக்கு
 38. குல தெய்வ வழிபாடு ஒருவனுடைய குலம் தழைக்க அவசியம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

   அன்புடையீர்,

   வணக்கம்.

   31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இதுவரை, 2011 ஜனவரி முதல் 2013 நவம்பர் வரையிலான 35 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)

   என்றும் அன்புடன் VGK

   நீக்கு
 39. கலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததென்று தெரிந்து கொள்ள முடிந்தது. சில குலதெய்வம் கோவில்களில் பெண்களை அனுமதிப்பதில்லையே சடையுடையார் எங்க குலதெய்வம். ஆண்களைமட்டும்தான் அங்கு அனுமதிக்கிறார்கள் ஏன்????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

   வணக்கம்மா.

   31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 நவம்பர் வரை முதல் 35 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   பிரியமுள்ள நட்புடன் கோபு

   நீக்கு
  2. பூந்தளிர் August 23, 2015 at 5:46 PM

   வாங்கோ, வணக்கம்.

   //குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததென்று தெரிந்து கொள்ள முடிந்தது.//

   அப்படியா! மிகவும் சந்தோஷம்.

   //சில குலதெய்வம் கோவில்களில் பெண்களை அனுமதிப்பதில்லையே.//

   அதற்கு ஏதேனும் குறிப்பிட்ட காரணங்கள் இருக்கலாம். மிகப்பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோயிலில்கூட, பெண்களில் 7-8 வயதுக்கு உட்பட்ட மிகச்சிறு குழந்தைகளையும், 55-60 வயதுக்கு மேற்பட்ட வயதான பெண்களையும் மட்டுமே அனுமதிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

   //சடையுடையார் எங்க குலதெய்வம்.//

   கேள்விப்பட்டதே இல்லை.

   இது எந்த மாநிலத்தில், எந்த ஊரில் உள்ளது? சொல்லுங்கோ, ப்ளீஸ்.

   //ஆண்களைமட்டும்தான் அங்கு அனுமதிக்கிறார்கள் ஏன்????//

   ஏன் என்று எனக்குத் தெரியவில்லையே !

   நீக்கு
 40. // இது என்ன நிரந்தரமாக நம் வயிற்றில் இருந்துகொண்டு மறுபடியும் பசிக்காமலேயே பண்ணப்போகிறதா என்ன? என்று நம்மை நாமே கேட்டுக் கொண்டு கட்டுப்பாடு பண்ணிக் கொள்ள வேண்டும்.//

  இதையெல்லாம் தினமும் படித்தால்தான் என்னைப் போன்றவர்களுக்கு கடை பிடிக்கத் தோன்றும்.

  குல தெய்வம், குல தெய்வ வழிபாடு பற்றிய விளக்கங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya September 17, 2015 at 6:45 PM

   **இது என்ன நிரந்தரமாக நம் வயிற்றில் இருந்துகொண்டு மறுபடியும் பசிக்காமலேயே பண்ணப்போகிறதா என்ன? என்று நம்மை நாமே கேட்டுக் கொண்டு கட்டுப்பாடு பண்ணிக் கொள்ள வேண்டும்.**

   //இதையெல்லாம் தினமும் படித்தால்தான் என்னைப் போன்றவர்களுக்கு கடை பிடிக்கத் தோன்றும்.

   குல தெய்வம், குல தெய்வ வழிபாடு பற்றிய விளக்கங்கள் அருமை.//

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஜெயா.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 41. அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,

  அன்புள்ள ஜெயா,

  வணக்கம்மா !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 நவம்பர் மாதம் வரை முதல் 35 மாதங்களில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

  பிரியமுள்ள நட்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 42. பக்திங்குர வெசயமெல்லா யாரு சொல்லினாலும் வெளங்காதுதா. அவளுங்களே உணரணும்

  பதிலளிநீக்கு
 43. அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:

  அன்புள்ள (mru) முருகு,

  வணக்கம்மா !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 நவம்பர் மாதம் வரை, முதல் 35 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு

  பதிலளிநீக்கு
 44. குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியமென்பதை விமக்கியபதிவு.

  பதிலளிநீக்கு
 45. அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
  திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 நவம்பர் மாதம் முடிய, என்னால் முதல் 35 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  பதிலளிநீக்கு
 46. குலதெய்வ வழிபாட்டின் மேன்மை குறித்த விளக்கம் மிகவும் அவசியமான ஒன்று..அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 47. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
  So far your Completion Status:

  441 out of 750 (58.8%) within
  12 Days from 26th Nov. 2015.
  -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

  அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
  திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 நவம்பர் மாதம் வரை, என்னால் முதல் 35 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  பதிலளிநீக்கு
 48. கோமதி அரசுNovember 30, 2013 at 3:52 PM
  உடம்புக்கு உணவு பொருட்களால் சக்தி ஏற்படுவதுபோல,
  மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது”. //
  அருமையான அமுத மொழி. இறை அருள் தான் சக்தி. அதுவும் குலதெய்வவழிபாடு மிக முக்கியம் என்பதை அழகாய் விளக்கமாய் சொல்லி இருக்கிறார்கள்.
  பகிர்வுக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.//

  திங்களும், சனியும் குலதெய்வ வழிபாட்டுக்கு சிறந்த நாள் என்பார்கள். நீங்கள் இன்று குலதெய்வ வழிபாடு பற்றி குரு சொன்னதை எனக்கு சுட்டி அனுப்பி இருக்கிறீர்கள்.

  மீண்டும் படித்தேன். பழைய பின்னூட்டமும் பார்த்தேன்.

  //உடம்புக்கு உணவு பொருட்களால் சக்தி ஏற்படுவதுபோல,
  மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது”. /

  தினம் குலதெய்வ வழிபாடு செய்கிறேன். அவர்தான் மன கஷ்டங்களுக்கு நடுவே நம்பிக்கை ஓளியாக வாழவைத்துக் கொண்டு இருக்கிறார் சார்.
  நன்றி.
  அருமையான பதிவு. மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் பதிவு.
  நம்பிக்கை ஒளி தரும் பதிவு.
  மீண்டும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அரசு June 19, 2017 at 8:53 AM

   தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு