About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, January 31, 2014

VGK 03 ] சு டி தா ர் வாங்கப் போறேன் !இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்: 06.02.2014 

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com

[ V A L A M B A L @ G M A I L . C O M ]

REFERENCE NUMBER:  VGK 03

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:'சுடிதார் வாங்கப் போறேன் ! சிறுகதை


By வை. கோபாலகிருஷ்ணன்


-oOo-


வெகு நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் ஜவுளிக்கடைக்குப் போக வேண்டிய நிர்பந்தம்.  ஒவ்வொரு தடவை போய் ஜவுளிகள் வாங்கி வந்ததும் இனி அந்தப் பக்கம் போகவே கூடாது என்று சபதம் செய்து கொள்வேன்.

ஊரில் இல்லாத அதிசயமாக என் மனைவிக்கு மட்டும் கடை வீதிக்கு வருவதோ, கடை கடையாக ஏறுவதோ, மணிக்கணக்காக கும்பலில் நின்று புடவை செலெக்ட் செய்வதிலோ துளியும் விருப்பம் கிடையாது.  நான் பார்த்து ஏதாவது அவளுக்கு எடுத்துக் கொடுத்தால் தான் உண்டு.

எனக்குப் பிடித்த கலர், டிசைன் முதலியவற்றில் புடவையும், மேட்ச் ப்ளவுஸ் பிட்டும் ஆசையாக எடுத்து வந்து விடுவேன்.  வீட்டுக்கு வந்ததும், அதை மனைவியிடம் காட்டி அவளை அசத்த வேண்டும் என்றும் ஆசைப்படுவேன்.  அவள் அநேகமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பாள்.  எழுப்பினால் கோபம் வரும்.   அல்லது டி.வி. சீரியலில் மூழ்கி இருப்பாள்.  இடையில் குறுக்கிட்டாலும் பிரச்சனை வரும்.  

டி.வி. சீரியல்கள் முடிந்து அவள் வருவதற்குள் பெரும்பாலும் நான் தூங்கி விடுவேன். நள்ளிரவில் இருவரும் விழித்துக் கொண்டால், நான் வாங்கி வந்த புடவையை காட்ட எண்ணுவது உண்டு.  அதிலும் ஒரு சிறிய பிரச்சனை உண்டு. 

அவளாகவே எங்கே போனீர்கள், என்ன வாங்கிண்டு வந்தீர்கள் என்று ஆசையாகக் கேட்க மாட்டாளா என்று நினைப்பேன்.

கல்யாணம் ஆகி மூணு மாமாங்கத்திற்கு மேல் ஆகி விட்டது. அந்த நாள் முதல் இந்த நாள் வரை அது போல எதுவும் கேட்டதே கிடையாதே; இன்று மட்டும் புதிதாகக் கேட்டு விடப் போகிறாளா என்ன, என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டு, புடவை வாங்கி வந்த விஷயத்தை மெதுவாக எடுத்துரைப்பேன்.  

”இப்போ எதுக்குப் புடவை?  வீட்டில் தான் நிறைய புடவைகள் பிரித்துக் கட்டிக் கொள்ளாமல் புதிதாக இருக்கின்றனவே!” என்பாள்.

எதற்கும் ஆசைப் படமாட்டாள்.  அவஸ்தை கொடுக்க மாட்டாள்.  ஒரு விதத்தில் நான் அதிர்ஷ்டசாலி என்று தான் சொல்ல வேண்டும். 

”இன்னும் நாலு நாட்களில் நமக்கு திருமண நாள் வருகிறதே, அதற்காகத்தான்” என்பேன்.  அதைக் காதில் வாங்கிக் கொண்டாளோ என்னவோ மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டதாக அறிந்து கொள்வேன். 

சமயத்தில் வாங்கி வந்த புடவையை அவள் பார்த்து விடும் வாய்ப்பு ஏற்பட்டால் ”நன்றாக இருக்கிறது.  எனக்கு ரொம்பவும் பிடித்துள்ளது” என்று ஒரு முறையேனும் வாய்தவறியும் சொல்லி விடாமல் சர்வ ஜாக்கிரதையாக இருந்து விடுவாள்.

மின் விளக்கு வெளிச்சத்திலும், சூரிய வெளிச்சத்திலும் பல முறை பார்த்து விட்டு அதை ஒரு ஓரமாக அலட்சியமாக வைத்து விட்டு, ”எந்தக் கடையில் வாங்கினீர்கள்? என்ன விலை?” என்பதைத் தெரிந்து கொண்டு, ”பில் இருக்கிறதா? அது பத்திரமாக இருக்கட்டும்.  தேவைப்பட்டால் இதைக் கொடுத்து விட்டு வேறு புடவை மாற்றி வாங்கி வந்து விடலாம்” என்பாள்.

“திரும்பத் திரும்ப இந்தப் பச்சையும் நீலமும் தான் அமைகிறது”  என்றும் சொல்வதுண்டு. 

”கண்ணைப் பறிப்பது போல, உடம்பு பூராவும் பளபளவென்று ஜரிகையுடன் உள்ளதே, இதெல்லாம் சிறுசுகள் கட்டிக் கொள்ளலாம்.  நான் கட்டிக் கொண்டால் நன்றாக இருக்காது.  குடுகுடுன்னு போய் எதையாவது வாங்கி வந்து விடுகிறீர்கள்.  பரவாயில்லை.  யாராவது சொந்தக்கார சிறுவயசுப் பெண்கள் நம் வீட்டுக்கு வந்தால், வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமத்துடன் கொடுத்து விட்டால் போச்சு” என்பாள்.

அது போல யாராவது வரும் போது இதைப் பற்றிய ஞாபகமே சுத்தமாக வராது என்பது தனி விஷயம்.

உள்ளூரில் உள்ள தன் சமவயதுள்ள மூத்த சம்பந்தி அம்மாள் வரும் போது மட்டும், அந்தப் புடவையை ஞாபகமாக எடுத்துக் காட்டி அபிப்ராயம் கேட்பதுண்டு.

மிகவும் நாகரீகமான மற்றும் விவரமான அந்த அம்மாள் திருவாய் மலர்ந்தருளி என்ன சொல்கிறார்களோ அதைப் பொறுத்தே புடவையை கட்டிக் கொள்வதோ, யாருக்காவது வஸ்த்ர தானமாக கொடுத்து விடுவதோ அல்லது கடைக்குப்போய் அவர்களை விட்டே மாற்றிக் கொண்டு வரச் சொல்வதோ நிகழும்.  இதெல்லாம் அவ்வப்போது நடந்து வந்த பழைய கதைகள்.

சமீபத்தில் ஒருநாள் நான் வாங்கிக் கொடுத்தப் புதுப் புடவையொன்றை சம்பந்தியம்மாள் தந்த ஒப்புதல் மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் என் மனைவி கட்டிக்கொள்ள நேர்ந்தது.   

அது சமயம், எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து மிகவும் சுவாதீனமாகப் பழகும் பெண் ஒருத்தி, “மாமி, வாவ்..... இந்தப்புடவை உங்களுக்கு சூப்பராக இருக்கு, திடீரென்று ஒரு பத்து வயசுக்குறைஞ்சாப்போல இருக்கிறீங்க, நல்ல கலர், நல்ல டிசைன், லைட் வெயிட்டாக, ஷைனிங் ஆக இருக்கு. பார்டரும், தலைப்பும் படு ஜோர் மாமி; எங்கே வாங்கினேள்? நம்ம ஊரா - வெளியூரா? எந்தக்கடையில் வாங்கினேள்? யார் செலெக்‌ஷன்? என்ன விலை?” என ஆச்சர்யமாகப் பல கேள்விகளைக் கேட்கலானாள்.

அவளின் எந்தக்கேள்விகளுக்குமே பதில் அளிக்க முடியாத என் மனைவி, “எனக்கு ஒன்றுமே தெரியாதும்மா; எல்லாம் எங்காத்து மாமாவைக் கேட்டால் தான் தெரியும். அவர் தான் வாங்கிவந்தார்” என்று சொல்லி நழுவப்பார்த்தாள் . 

வந்தவள் சும்மா இல்லாமல், ”அதானே பார்த்தேன், சும்மா சொல்லக்கூடாது மாமி, உங்காத்து மாமா கற்பனையும், ரசனையும் அலாதியானது, நீங்க ரொம்பக்கொடுத்து வச்சவங்க; அடிக்கடி அவர் பெயர் பத்திரிகைகளில் வருகிறது என்றால் சும்மாவா பின்னே?

அடுத்த முறை நான் புடவை எடுக்கப்போகும் போது, என் ஸ்கூட்டர் பின்னாடி உங்காத்து மாமாவை உட்கார வைத்துக்கொண்டு கடைக்குக் கூட்டிப்போய், அவரைவிட்டே செலெக்ட் செய்யச்சொல்லி,  அவர் எது எடுத்துத்தருகிறாரோ அதைத்தான் வாங்கிக்கட்டிக்கப் போகிறேன் ” என்று உசிப்பி விட்டாள்.

என்னவளுக்கு கண்ணில் நீர் வராத குறை தான்.  விட்டால் அந்தப்பெண் என் கைகளைப்பிடித்து குலுக்கி பாராட்டவும் செய்வாள் என்பது எனக்கும் என் மனைவிக்கும் நன்றாகவே தெரியும். அந்தளவு மிகவும் சோஷியல் டைப் அந்தப்பெண். 

என்னவள் என்னைப்பார்த்து ”நீர் எதற்கு இன்னும் இங்கு நிற்கிறீர்?” என்பதுபோல ஒரு முறை முறைத்துவிட்டு, கையில் கிடுக்கியுடன் சமையல் அறைக்குள் புகுந்தாள். நானும் வெளியில் எங்கோ புறப்படுவதுபோல கிளம்பி விட்டேன்.   பிறகு முழுசா மூன்று நாட்களுக்கு என்னுடன் பேசவே இல்லையே. அவ்வளவு ஒரு பொஸஸிவ்நெஸ், அவளுக்கு என் மேல்.  

அன்பையும், பாசத்தையும், பிரியத்தையும் நேருக்குநேர் அவ்வப்போது பகிர்ந்து கொள்ள மாட்டாளே தவிர, இதுபோல வேறு யாராவது உசிப்பிவிட்டால் போச்சு! “நம்மாளு, நமக்கு மட்டும் தான்; இவள் யாரு குறுக்கே” என்று கொதித்தெழுந்து விடும் சுபாவம் கொண்டவள். 

சரி ....... சரி, பழம் கதையெல்லாம் இப்போது எதற்கு? இன்றைய புதுக்கதைக்குப் போவோம்.

இன்று அடியேன் ஜவுளிக்கடைக்குச் செல்வது அடியோடு வேறு ஒரு முக்கியமான விஷயமாக.   ஒரு பெண்ணுக்கு சுடிதார் எடுப்பதற்காக.

எங்களுக்கு மூன்று மகன்கள் மட்டுமே.  முதல் இருவருக்கும் திருமணம் ஆகி வெளி நாட்டிலும், வெளியூரிலும் உள்ளனர். மூன்றாவது மகனுக்கும் வெளியூரில் தான் வேலை.  அவனுக்குத் திருமணம் செய்துவைக்க நாங்கள் இருக்கும் உள்ளூரிலேயே பெண் பார்த்து பிடித்துப்போய், நிச்சயதார்த்த தேதி முதலியன பற்றிய பேச்சு வார்த்தைகளும் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இந்தப் பெண் பார்க்கும் படலத்திற்கும் நிச்சயதார்த்த தினத்திற்கும் இடைவெளி சற்று அதிகம் உள்ளது.   இந்த இடைவெளியில் அந்தப் பெண்ணுக்கு பிறந்த நாள் வருகிறது.

அந்தப் பெண்ணின் பிறந்த நாளுக்கு, வருங்கால மாமனார் மாமியார் என்ற முறையில் ஏதாவது நினைவுப் பரிசுகள் தர வேண்டும் என்ற ஆவலில் இன்று மீண்டும் என்னுடைய ஜவுளிக்கடை பிரவேசம்.

கல்லூரிப் படிப்பை சமீபத்தில் முடித்த இளம் வயது பெண் தானே, நல்ல சுடிதார் ஒன்று வாங்கிக் கொடுப்போம். பிறகு வயதானால் எவ்வளவோ புடவைகள் கட்டிக் கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்குமே என்று நினைத்து ரெடிமேட் சுடிதார்கள் விற்கும் பிரபல ஜவுளிக்கடைக்குள், நான் இப்போது நுழைகிறேன்.

பகுதி-2

நான் உள்ளே நுழைந்த அது, திருச்சியிலேயே மிகப்பெரிய ஜவுளிக் கடல். கண்ணைக் கவரும் ரெடிமேட் ஆடைகள். பகலா இரவா என பிரமிக்க வைக்கும் மின் விளக்குகள் ஜொலிக்கின்றன.  

முழுவதும் குளுகுளு வென்று ஜில்லிட்டுப்போக வைக்கும் ஏ.ஸி க் கட்டடம். கடையின் உள்ளே நுழையும் போதே வருவோர் தலையில் [ஏற்கனவே நமக்குள்ள ஒரு சில முடிகளையும் பறக்கச் செய்யும் புயலென ] ஜில் காற்று வேகமாக அடிக்கும்படி ஒரு சிறப்பு ஏற்பாடு.  வேறு கடைகளுக்குப் போய் விடாமல், இங்கேயே இந்தக்கடையிலேயே நாம் ஜவுளிகள் வாங்கி விட வேண்டும் என்று ப்ரைன் வாஷ் செய்யவதற்காகவே இது போல வைத்திருப்பார்களோ என்னவோ!

எங்கு பார்த்தாலும் ஜவுளி வாங்க வந்துள்ள மக்கள் கூட்டம்.  அவர்களின் ரசனைக்குத் தீனி போட தயாராக இருந்த விற்பனைப் பெண்கள்.

”வாங்க ஸார்! என்ன வேணும்” நுழைவாயிலில் மட்டும் நின்ற ஒரே ஒரு ஆண் மகனின் கேள்வி.

“சுடிதார் வேண்டும்”   நான்.

”நேரே உள்ளே போய் இடது பக்கம் திரும்புங்கள்”

நேரே உள்ளே போனேன்.  இடது பக்கம் திரும்பினேன்.  திரும்பிய இடமெல்லாம் ஒரே சுடிதார் மயம். ஆயிரக்கணக்கான சுடிதார்கள். எங்களை வாங்குபவர் வரமாட்டார்களா என்ற ஏக்கத்துடன் ஹாங்கரில் தொங்கிக் கொண்டிருந்தன.

எதைப் பார்ப்பது, எதை வாங்குவது, ஓராயிரம் குழப்பங்கள் எனக்கு. ஒரு சில விற்பனைப் பெண்கள் என்னை நெருங்கினர்.  

”யாருக்கு சுடிதார்? ....  எவ்வளவு வயது? ..... உயரமா?  குள்ளமா? நிதானமா?  ...... குண்டா இருப்பங்களா?, ஒல்லியா இருப்பாங்களா? மீடியமா இருப்பாங்களா? ....... ஃபுல் ஸ்லீவ்ஸா, முக்கால் சைஸா? ...... என்ன விலையில் பார்க்கிறீர்கள்?” வரிசையாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்து, என்னை பிரமிக்கச் செய்தனர்.  

முன்னப்பின்னே நான் சுடிதார் வாங்கியிருந்தால் தானே, எனக்கு அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்ற விபரம் புரியும்!

தொங்க விட்டுள்ள சுடிதார்களில் ஒரு சிலவற்றை சற்றே இழுத்துப் பார்த்தேன். தடவிப் பார்த்தேன்.  யாரோ ஒரு வயதுப்பெண்ணைத் தொட்டுவிட்டது போல எனக்கு மிகவும் கூச்சமாக வேறு இருந்தது.  இவ்வாறு ஒருவித சங்கடத்துடன் இருந்த என்னை நெருங்கிய அந்தப்பெண் விற்பனையாளர் இங்குள்ளதெல்லாம் விலை ஐநூறு முதல் எழுநூறு வரை, சார்” என்றாள். இருப்பினும் எதுவும் எடுப்பாகவும், கவர்ச்சியாகவும், ஸ்பெஷலாகவும் தெரியவில்லை எனக்கு. 

“இவைகளை விட விலை அதிகமாக ஏதும் உள்ளனவா?” இக்கட்டான சூழலிலிருந்து விலக எண்ணி கேள்வி எழுப்பினேன்.  

விலை ஜாஸ்தியான சுடிதார்கள் அடுக்கப்பட்டுள்ள பிரிவுக்கு என்னைப் பிரியாவிடை கொடுத்தனுப்பினர்.  

ஏற்கனவே நான் பார்த்த பிரிவில் அங்கு தொங்கிய சுடிதார்கள் எல்லாமே அன்ரிஸர்வ்டு ரெயில் பயணிகள் போல, எனக்குக்காட்சியளித்தன.

இந்தப்புதிய பிரிவில் உள்ள சுடிதார்கள், அழகாக தூங்கும் வசதியுடன் பயணிக்கும் ”ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏ.ஸி” பயணிகள் போல, சுகமாக வசதியாக, [பரிதாபமாகத் தொங்கும் நிலை ஏதுமில்லாமல்] ஜோராகக் காட்சியளித்தன. 

அவையாவும் பளபளப்பான கண்ணாடிக் கவர்களில் அடுக்கி மடித்து அழகிய டிசைன்கள் மற்றும் கலர்களில் வைக்கப்பட்டிருந்தன.  அங்கிருந்த இளம் விற்பனைப் பெண்களின் அடுக்கடுக்கான வழக்கமான கேள்விகள் ஆரம்பமாகி விட்டன.

ஏதோ ஒரு சுடிதாரை கையில் எடுத்துப் பார்த்தேன். விலை ஆயிரத்து நானூறு என்று போடப்பட்டிருந்தது.

”எவ்வளவு வயது பெண்ணுக்கு சுடிதார் பார்க்கிறீர்கள்?” என்றாள் ஒருத்தி. 

“22 வயது” என்றேன்.

”நல்ல உயரமானவங்களா சார் ?” என்றாள்.

“ஓரளவு உயரம் தான்;  உங்கள் உயரம் இருக்கும்” என்றேன்.

“எல்லாமே ஃப்ரீ சைஸ் தான்;  யாரு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்” என்றாள்.

“நல்ல கலரா இருப்பாங்களா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள் 

“சிவப்பாக நல்ல கலராகவே இருப்பாள்” என்றேன்.

உயரம், உடல்வாகு, வயது முதலியன சொல்லிவிட அவ்விடம் மாதிரிக்கு விற்பனைப் பெண்கள் பலர் இருந்தனர்.  நிறத்தையோ அழகையோ வர்ணிக்கவும், ஒப்பிடவும் அங்கு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 

ஒரு வேளை அது போல யாரும் பேரழகிகள் இருந்து, சுடிதார் பார்க்க வந்தபோது, யாராவது அவர்களையும் சேர்த்து செலெக்ட் செய்து போய் இருப்பார்களோ என்னவோ;  என்றும் நினைத்துக்கொண்டேன்.  

நூற்றுக்கணக்கான சுடிதார்கள், பல வண்ணங்களில். பல டிசைன்களில் காட்டியும் எனக்கு முழுத் திருப்தியாகவில்லை. நான் விரும்பும் கலர் மற்றும் நான் எதிர்பார்க்கும் டிசைன், என் டேஸ்ட் முதலியவை பிரத்யேகமானது.   மிகவும் வித்யாசமான ரஸனை உள்ளவன் அல்லவோ நான் !

“2000 ரூபாய்க்கு மேல், நல்ல அருமையான கரும் பச்சைக்கலரில், நல்ல வேலைப்பாடுகளுடன் இருந்தால் காட்டுங்களேன்” என்றேன் முடிவாக. .

பட்டு ரோஜாக் கலரில் ஒன்று காட்டப்பட்டது.  கையில் வாங்கித் தொட்டுப் பார்த்த எனக்கு ஓரளவு மனதுக்குப் பிடித்த டிசைனாக இருப்பினும், வரப் போகிற மருமகளுக்கு முதன் முதலாக எடுத்துக் கொடுப்பது, சிவப்பு (டேஞ்சர்) நிறமாக இருக்க வேண்டுமா என்ற சிறிய குழப்பம் என்னுள் ஓடியது. 

“அருமையான கலர் மற்றும் டிசைன் ஸார்” போட்டுப் பார்த்தால் சூப்பராக இருக்கும் அவங்க சிகப்பு உடம்புக்கு” என்றாள். 

ஏற்கனவே நான் தொட்டுப் பார்த்த லைட் சந்தனக்கலர் சுடிதாருக்கும் இதே போலத் தான் சொன்னாள், இவள். அவளுக்கென்ன! ஏதோ ஒன்றை விற்பனை செய்து, பில் போட்டு பணம் கட்ட என்னை அனுப்பி வைக்கணும் சீக்கிரமாக.

டேபிள் டாப் மீது வரிசையாகக் குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சுடிதார்களை, கிளி ஜோஸ்யம் பார்ப்பவரிடம் இருக்கும் கிளி ஒவ்வொரு அட்டையாக எடுத்து நகர்த்துவது போல நகர்த்திக்கொண்டிருந்தேனே தவிர, எதிலும் மனம் லயிக்காமல், அங்கிருந்த ராக்குகளில் அடுக்கப்பட்டிருந்த பல சுடிதார்களையும் வரிசையாக நோட்டமிடலானேன்.  

திடீரென்று ஒரு சுடிதாரைச் சுட்டிக் காட்டி, அதை அந்த அலமாரியிலிருந்து எடுக்கச் சொன்னேன்.

நான் கேட்ட அதே கரும் பச்சைக்கலர்;  வெல்வெட் போன்ற நல்ல பளபளப்பும் வழுவழுப்பும். முன் பகுதியில் மட்டும் அருமையான கண்ணைப் பறிக்கும் வேலைப்பாடுகள்;  தங்கக் கலரில் ஜரிகை, ஜிம்கி, எம்ப்ராய்டரி என அனைத்தும் அருமையாக இருந்தன.

இருந்தும் எனக்கொரு பெரிய குறை.  இரண்டு பக்கமும் கை ஏதும் இல்லாமல் இது முண்டா பனியன் போலல்லவா உள்ளது! என்ற வருத்தம் ஏற்பட்டது.   
பகுதி-3  

”இதே கலர்  இதே டிசைனில் கை வைத்ததாக வேண்டும்” என்றேன்.

என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து அவர்களுக்குள் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிப்பது போலத் தோன்றியது. மல்லாக்காக இருந்த அந்தச் சுடிதாரை குப்புறப்படுக்கப்போட்டாள் அந்த விற்பனைப்பெண். கைகள் இரண்டும், சுடிதாரின் பின்புறம் முதுகுப்புறமாக பின் போட்டு ஒட்டப்பட்டிருந்ததை என்னிடம் சுட்டிக் காட்டினாள்.

”அச்சச்சோ! அந்தக்கைகளுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி வெட்டி பின்புறமாக ஒட்டி வைத்துள்ளீர்கள்?”  ஒருவித அனுதாபத்துடன் வினவினேன் அப்பாவியாக நான்.  

“கைகளைத்தனியே இப்படித்தான் இங்கே வைத்திருப்பார்கள் சார்; அவைகளைத் தனியே வைத்து அவரவர் விருப்பப்படி தைத்துக்கொள்ள வேண்டும்; ஒரு சிலர் கைகள் ஏதும் வேண்டாம், அப்படியே காத்தாட இருக்கட்டும் என்பார்கள்; அதனால் தான் அவற்றைத் தைக்காமல் தனியாக இப்படி வைத்திருக்கிறார்கள்” என்றாள்.

இந்த விளக்கத்தைக்கேட்ட நான் ஒரு வழியாக நிம்மதி அடைந்தேன். அப்படித்தனியே தொங்கிய கைகளும், தோள்பட்டையையொட்டி தைக்கப்பட வேண்டிய இடத்தில் கும்மென்று எக்ஸ்ட்ரா துணிகொடுத்து பஃப் வைத்ததாகவும், கீழே அழகிய கண்ணைக்கவரும் தங்கக்கலரில் பார்டர் கொடுக்கப்பட்டதாகவும், கரும்பச்சை நிறத்தில் ஜம்மென்று இருந்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது.  

என் முகம் வெளிப்படுத்திய திருப்தியை உணர்ந்த அந்த விற்பனைப்பெண் , ”இதன் விலை ரூபாய் 2400 மட்டுமே, அதிலும் 10% தள்ளுபடி உண்டு, சார்”  என்றாள். 

“இதற்கு மேட்சாக இதே கலரில் கால் குழாயும் (பேண்ட்டும்) அங்கவஸ்திரமும் ( துப்பட்டாவும் ) தருவீர்கள் அல்லவா?” என்றேன்.மறுபடியும் ஒரு மாதிரியாக என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவள், “அதே கலரில் வராது சார், யூனிஃபார்ம் மாதிரி போட மாட்டார்கள்” என்றாள்.

“இதற்கு ஜோடி இது தான்” என்று ஒரு வித அழுகமாங்காய் [அழுகிப்போன மாவடு] கலர் போன்ற பழுப்புக் கலரில், ஆனால் மிகவும் நயமான கொசுவலை போன்ற துணியில் துப்பட்டாவும், கால் குழாயும் எடுத்துக் காட்டினாள். உள்புறம் துணி கொடுத்து, டபுள் ஸ்டிச்சிங் செய்து தொளதொள என்று இருந்தது அந்தக் கால்க்குழாய் (பேண்ட்).   

எனக்கு மட்டும் அதே கரும்பச்சைக் கலரில் மேட்ச்சாக இல்லாமல் மங்கிய கலரில் உள்ளதே என்று ஒரு பெரும் குறை மனதுக்குள் இருந்தது. 

சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நான் இருந்த போது, அவற்றைப் பேக் செய்து கொண்டே, “ஒன்று போதுமா சார், வேறு ஏதாவது பார்க்கிறீங்களா” என்றாள்.

கால் குழாயும் துப்பட்டாவும் வேறு கலரில் இருப்பதோடு மட்டுமின்றி, போட்டுகொண்டால் “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” படத்தில் வரும் பானுமதியின் பைஜாமா போல தொளதொளப்பாக இருக்குமோ என்ற விசாரத்துடன், பணம் ரூ. 2160 மட்டும் செலுத்தி விட்டு, பார்ஸலை வாங்கிக் கொண்டு கடையிலிருந்து புறப்பட்டேன். 

அந்த பரபரப்பான பஜாரில், வழிநெடுகிலும் பல இளம் வயதுப் பெண்கள் சுடிதாருடன் தென்பட்டனர். நான் அந்தத் தெருவின் ஒரு ஓரமாக நின்றபடி, வாழ்க்கையில் முதன் முதலாக, அந்த இளம் வயது பெண்களை உச்சி முதல் உள்ளங்கால் வரை உற்று நோட்டமிடலானேன். அவர்களைப் பார்த்துக்கொண்டே என் மனதினுள் சுடிதார்கள் பற்றிய கருத்துக்கணிப்பு நடத்தலானேன்.

அவர்களில் பாதிப் பேர் முக்கால் சைஸாக தொடை வரையிலும், மீதிப்பேர் முழுவதும் மறைப்பது போல முழங்காலுக்குக்கீழ் சற்றே இறக்கமாக (ஃபுல் ஸ்லீவ்ஸ்) சட்டையும் அணிந்திருந்தனர். 

அவர்களில் முக்கால் வாசிப்பேர் சுடிதார் ஒரு கலரிலும், துப்பட்டாவும், கால்குழாயும் வேறு கலரிலும் அணிந்திருந்தனர்.

மீதி கால்வாசிப் பேர்கள், எல்லாம் ஒரே கலரில் மேட்ச் ஆக அணிந்திருந்தனர்.  

இந்த டீன் ஏஜ் பெண்களையெல்லாம் விதவிதமான சைஸ்களிலும், கலர்களிலும், இன்று மட்டும் லுக் விட்ட எனக்கு மீண்டும் மனதில் ஓர் சஞ்சலம் ஏற்பட்டுவிட்டது.  

தவறாக நினைத்து விடாதீர்கள்.  நான் வாங்கி வந்துள்ள சுடிதார் செட்டில், சுடிதார் ஒருகலரும், கால்க்குழாய் வேறு கலருமாக இருப்பதாலும், அதுவும் ஆஃப் ஸ்லீவ்ஸுடன் தொடைவரையுள்ள மாடலாக இருப்பதாலும், அது இன்றைய நவ நாகரீகப் பெண்கள்  உபயோகிக்கக் கூடிய ஃபேஷன் தானா, என்பது தான் என் சஞ்சலமும், சந்தேகமும்.   

இதுபோல சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் சுடிதார் அணிந்த பல பெண்களை, பலவடிவங்களிலும், பல்வேறு ஆடைகளுடனும் கண்குளிர தரிஸித்து வந்த நான், இனிமேல் சுடிதார் அணிந்த எந்தப் பெண்ணையும் பார்த்து மனதைச் சஞ்சலப் படுத்திக் கொள்ளக் கூடாது என்ற முடிவுடன், மலைவாசல் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு, ஒரு ஆட்டோவைப் பிடித்து என் வீடு நோக்கிப் புறப்பட்டேன். 

ஆட்டோவில் வரும்போதும் ஆயிரம் எண்ணங்கள் அலைமோதின.  பெரிய பையன்கள் கல்யாணத்திற்கு ஒரே நாளில் நூற்றுக்கணக்கான புடவைகள், பல்வேறு கலர்கள், டிசைன்கள், விலைகள் என அள்ளி வந்து உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அளித்து மகிழ்வித்த அனுபவம் எனக்கு உண்டு.   இன்று முதன்முதலாக ஒரு சுடிதார் எடுக்கப்போய் அதிலும் பல புதிய அனுபவங்களையும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டதிலும் ஒரு மகிழ்ச்சியே ஏற்பட்டது என்றாலும், மனதில் ஏதோ ஒரு சின்ன விசாரம் இருந்து வந்தது.

புடவையில் கூட எனக்கு என்று ஒருசில தனி அபிப்ராயங்கள் உண்டு. அதாவது ஒருசில புடவைகள் ஒருசிலர் கட்டிக்கொண்டால் மட்டுமே மிக அழகாக இருப்பதுபோல எனக்குத் தோன்றும். அதுபோல ஒருசிலர் எந்த ஒரு புடவை கட்டிக்கொண்டாலும் நல்ல அழகாகவே தென்படுகிறார்களே என்றும் நினைத்துக்கொள்வதுண்டு. ஒருசில புடவைகள் புடவைக்கடை வாசலில் உள்ள பொம்மைக்கு கட்டினால் மட்டுமே ஆடாமல், அசங்காமல், கசங்காமல் வெகு அழகாக இருப்பதுபோல அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்.    

இவ்வாறான பல நினைவுகளுடன் வந்த என்னை, ஆட்டோக்காரர் என் வீட்டு வாசலில் அடித்த சடர்ன் ப்ரேக், நிகழ்காலத்திற்கு மீட்டு வந்தது. ஆட்டோக்காரருக்கு பணம் கொடுத்து, நன்றி சொல்லிவிட்டு, நான் என் வீட்டை அடைந்தேன்.    

வழக்கம்போலவே, எங்கே போனீர்கள், என்ன வாங்கி வந்தீர்கள் என எதுவும் கேட்காவிட்டாலும், நானே சுடிதாரைப்பிரித்து என் மனைவியிடம் நீட்டினேன். வாங்கிப்பார்த்தவள், அதிசயமாக ஒரு சின்ன புன்னகை புரிந்தாள். 

“நீ ஒருமுறை இந்தச்சுடிதாரை அணிந்து பார்த்து, சைஸ் ஓரளவுக்கு அவளுக்கு சரியாக இருக்குமா என்று சொல்கிறாயா?” என்று கேட்டு என்னுடைய வெகுநாள் ஆவலை, மெதுவாக வெளிப்படுத்தலானேன்.

“எல்லாம் அந்தப்பொண்ணுக்கு சரியாகத்தான் இருக்கும்; பேசாமல் கசங்காமல் கொள்ளாமல், அப்படியே அந்த அட்டைப்பெட்டியில் போட்டு பத்திரமாக வையுங்கோ” என்று சொல்லிவிட்டு, ஓடிக்கொண்டிருந்த கிரைண்டரில் கையைவிட்டு, இட்லிமாவை தன் விரல்களால் எடுத்து பதம்பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

அடிக்கடி ஏற்பட்டு வரும் மின் தடை இப்போது ஏற்படாமல், அந்த கிரைண்டர் தொடர்ந்து ஓடியதில் எனக்கு சற்றே எரிச்சல் ஏற்பட்டது.

சுடிதார் அணிந்த நிலையில் என்னவளை மொபைல் போன் கேமரா மூலம் ஒரு படமாவது எடுத்து, தினமும் ஒருமுறை பார்த்து மகிழலாம் என்ற என் நினைப்பு வொர்க்-அவுட் ஆகாமல் நான் மூட்-அவுட் ஆகியும், வழக்கம்போல் என் மனதை நானே சமாதானம் செய்துகொண்டு உடனே இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டேன்.

ஒரு வழியாக வெற்றிலை பாக்கு, பழங்கள், புஷ்பங்கள், சாக்லேட்டுகள், மற்றும் ஸ்வீட் பாக்கெட்களுடன், நான் வெகு கஷ்டப்பட்டு வாங்கி வந்திருந்த சுடிதாரை, என் மனைவி கையால் என் வருங்கால மருமகளுக்கு வழங்க  ஏற்பாடு செய்தேன் நான்.   அந்தப் பெண்ணிடம், அவற்றைச் சந்தோஷமாகக் கொடுத்தாள் என் மனைவி.  

”கலரோ, டிசைனோ, சைஸோ  சரியில்லாவிட்டால் உடனே 2 நாட்களுக்குள் கடையில் கொடுத்து விட்டு வேறு ஒன்று மாற்றி வந்து விடலாம்” என்றோம் அந்தப் பெண்ணிடம். 

ஆனால் அவள் இதுவே நன்றாக இருப்பதாகச் சொல்லி மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டாள். பெண் பார்க்கும் படலம் முடிந்து நிச்சயதார்த்தம் நடைபெற நாள் குறித்துள்ள இடைக்காலத்தில், அவள் இன்று இருக்கும்  நிலைமையில் வேறு என்னதான், எங்களிடம், தைர்யமாகச் சொல்லிவிட முடியும் என்று என் மனதினுள் நினைத்துக் கொண்டேன்.

தனியாகத் தொங்கிக்கொண்டிருந்த கைகள் இரண்டையும் அழகாகத் தைத்து, அதை அப்படியே அணிந்து கொண்டு வருங்கால மாமியாரிடம் காட்டிவிட்டு, ”தனது ஸ்நேகிதிகள் எல்லோருமே இந்த டிரஸ் ரொம்பவும் சூப்பராக இருப்பதாகச் சொல்லிப் பாராட்டினார்கள்” என்றும் கூறி, நன்றி கலந்த நாணத்துடன், பிறந்த நாள் அன்று எங்களை நமஸ்கரித்துச் சென்றாள், அந்தப் பெண்.

அவள் புறப்பட்டுச் சென்ற அடுத்த நிமிடம் என் மூன்றாவது மகனிடமிருந்து எனக்குத் தொலைபேசியில் ஒரு அழைப்பு.

“நீ வாங்கிக் கொடுத்துள்ள சுடிதார் அவளுக்கு மிகவும் நன்றாக இருக்குப்பா. சூப்பர் செலக்‌ஷன், ரொம்பவும் தாங்ஸ்ப்பா” என்றான்.   

திருச்சியிலிருந்து 400 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் இவன் எப்படி அதற்குள் இந்த சுடிதாரைப் பார்த்தான்? என்று எனக்குள் ஒரே வியப்பு.  அவனிடமே  நான் இதைப்பற்றி அப்பாவித்தனமாகக் கேட்டு விட்டேன்.

“மெயிலை ஓபன் செய்து பார் தெரியும்” என்றான்.  

டிஜிடல் கேமராவில் போட்டோ எடுத்து, இண்டெர்நெட் மூலம் அவனுக்கு அனுப்பி விட்டுத் தான் எங்களைப் பார்க்க வந்திருக்கிறாள் எங்கள் வருங்கால மருமகள். 

எது எப்படியோ, நாம் வாங்கி வந்தது நன்றாக இருப்பதாக, வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதில், என் மனம் மகிழ்ச்சிக் கடலில் நீச்சலடித்துக் கொண்டிருந்தது. 


oooooOooooo


ஒன்றுகளில் ஐந்து =   5
பத்துகளில் ஏழு =       70
நூறுகளில் நான்கு = 400

ஆகமொத்தம் ?
********************************
********************************மேற்படி '”தை வெள்ளிக்கிழமை” என்ற 

’சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,


 பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளீர்கள். ;)அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். தங்கள் விமர்சனங்களுக்கு என்னிடமிருந்து 

STANDARD ACKNOWLEDGEMENT

கிடைத்துள்ளதா என்பதை தயவுசெய்து 

உறுதி செய்து கொள்ளவும்.விமர்சனங்கள் யாவும் தற்சமயம்


’தை வெள்ளிக்கிழமை’யாகிய 


இன்றே நடுவர் அவர்களின் தீவிர 

பரிசீலனையில் உள்ளன.பரிசு பெற்றோர் பற்றிய முடிவுகள் 


விரைவில் அறிவிக்கப்படும்.அன்புடன்

VGK

55 comments:

 1. சுடிதார் வாங்கிய கதை அருமை
  நன்றி ஐயா

  ReplyDelete
 2. அன்பின் வை.கோ

  மூன்று பதிவாக வெளியாகி இருக்கும் கதை அருமை - மனைவிக்கு ஒரு சுடிதார் வாங்க ஆசைப்படும் கணவன் - இறுதியில் மருமகளுக்குத்தான் வாங்க இய்லகிறது. மகனின் பாராட்டு கிடைத்த மகிழ்ச்சி - கதை அருமை - மூன்று பதிவிற்கும் சேர்த்து ஒரே விமர்சனம் தானே எழுத வேண்டும் . பொறுமையாக எழுதி அனுப்புகிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 3. “நீ ஒருமுறை இந்தச்சுடிதாரை அணிந்து பார்த்து, சைஸ் ஓரளவுக்கு அவளுக்கு சரியாக இருக்குமா என்று சொல்கிறாயா?” என்று கேட்டு என்னுடைய வெகுநாள் ஆவலை, மெதுவாக வெளிப்படுத்தலானேன்.//

  ஆஹா! ஆசை, ஆசை.அவர்களுக்கு என்று வாங்கி கொடுத்து இருந்தால் போட்டுக் காட்டி இருப்பார்கள்.

  //நாம் வாங்கி வந்தது நன்றாக இருப்பதாக, வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதில், என் மனம் மகிழ்ச்சிக் கடலில் நீச்சலடித்துக் கொண்டிருந்தது.//

  அங்கீகாரம் தேடும் மனதிற்கு அங்கீகாரம் கிடைத்தால் மனம் எனும் கடலில் இன்ப அலை அடிக்காதா?
  வாழ்த்துக்கள்.  ReplyDelete
 4. வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதில், என் மனம் மகிழ்ச்சிக் கடலில் நீச்சலடித்துக் கொண்டிருந்தது. ///

  சுடிதார் வாங்கப்போய்
  சந்தோஷமும் வாங்கிவந்த
  அருமையான கதைக்குப் பாராட்டுக்க்ள்..!

  ReplyDelete
 5. விமர்சனத்தை அனுப்புகிறேன் ஐயா... தங்கள் விமர்சனங்களுக்கு STANDARD ACKNOWLEDGEMENT உடனே அன்றே வந்து விடுகிறது ஐயா...

  நன்றி... வாழ்த்துக்கள்..,.

  ReplyDelete
 6. உடை அணியும் நேர்த்தியும்தான் ஒருவரது தோற்றத்தை அழகாக வெளிப்படுத்துகிறது... துணிக்கடையில் டிரஸ் செலக்ட் பண்றது அவ்வளவு ஈஸியான விஷயமா?
  எப்படியோ உங்க செலக்ஷனுக்கு அங்கீகாரம் கிடைச்சது சந்தோஷம்!

  சிறுகதை அருமை!

  ReplyDelete
 7. Naan innum punnagaiththuk kondirukkiren! very good narration, Gopu Sir!

  ReplyDelete
 8. கதையைப் படித்தேன் ஐயா. நன்று ஐயா!
  மேலும் விமர்சனப் போட்டியுடன் இக்கதையை இணைத்திருப்பது, இனிப்பான செய்தி. எனவே, என் விமர்சனத்தையும் தங்களுக்கு அனுப்பலாம் என எண்ணியுள்ளேன்.
  தொடரட்டும் அன்புப் பரிசுகள்!!

  ReplyDelete
 9. அருமையான சிறுகதை! நன்றி!

  ReplyDelete
 10. அருமையான கதை. பாராட்டுகள்.

  ReplyDelete
 11. முன்பே படித்திருந்தாலும் புதிதாக படிப்பது போன்று சுவையாகவே இருந்தது...

  போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்..

  ReplyDelete
 12. உங்களை கோபித்து கொள்ளட்டுமா? பாராட்டுசெய்யட்டுமா?
  முதலில் கோபித்து கொள்கிறேன்
  கண்ணுக்கு ரெஸ்ட் வேண்டும் என்றால் கேட்காமல் பதிவு போடுகீர்களே அதற்க்கு தான் கோபம்.
  ஒ.கே. ஒ.கே.
  பாராட்டு
  கிரேட் கிரேட் 475 padivoo....
  அதை காசில் கணக்கு போட்ட விதம் கிரேட் கிரேட்........
  It is not an easy joke to issue 475 postings. That too with a mass appeal.......
  I prey God to give you well health to make 1000 and 1000.
  Namaskarangal.
  I went to Nangoor,Gardusevai...So not able to read this imediatly.
  a bit late.
  Takecare.

  ReplyDelete
  Replies
  1. viji February 2, 2014 at 10:34 AM

   வாங்கோ விஜி, வணக்கம்.

   //உங்களை கோபித்து கொள்ளட்டுமா? பாராட்டு செய்யட்டுமா? முதலில் கோபித்து கொள்கிறேன்
   கண்ணுக்கு ரெஸ்ட் வேண்டும் என்றால் கேட்காமல் பதிவு போடுகிறீர்களே அதற்க்கு தான் கோபம்.//

   உரிமையுடன் கோபித்துக்கொண்ட விஜிக்கு வீ.....ஜீ யின் நன்றிகள்.

   //ஓ.கே. ஓ.கே. பாராட்டு
   கிரேட் கிரேட் 475 padivoo....
   அதை காசில் கணக்கு போட்ட விதம் கிரேட் கிரேட்........//

   பெருமையுடன் பாராட்டியுள்ள விஜிக்கு என் நன்றிகள். விஜி மட்டுமாவது இதைக் கண்டுகொண்டு குறிப்பிட்டுச் சொன்னது மகிழ்வளிக்கிறது. ;)

   //It is not an easy joke to issue 475 postings. That too with a mass appeal....... I pray God to give you well health to make 1000 and 1000.//

   Thanks a Lot Viji.

   //Namaskarangal.//

   என் அன்பான ஆசீர்வாதங்கள்.

   //I went to Nangoor,Garudasevai...So not able to read this immediately.
   a bit late.//

   OK No problem at all - Very Happy to hear this.

   //Takecare.// OK Viji.

   அன்புடன் கோபு

   Delete
 13. கதை அருமையாக உள்ளது .. வாழ்த்துக்கள் ஐயா ..

  ReplyDelete
 14. கதை நன்றாக உள்ளது. ஆனால் காலில் அணியும் இறுக்கமான பான்ட் போன்றதே சுடிதார், தொளதொளவென்று இருந்தால் அது சல்வார். மேலே போடும் கமீஸ் அல்லது குர்த்தா தான் அலங்கார வேலைப்பாடுகளோடு காட்சி அளிக்கும். அதற்கும் மேல் மேலே அணியும் துப்பட்டா. இந்த துப்பட்டாவும், சுடிதார் அல்லது சல்வாரும் ஒரே கலரிலும், மேலே அணியும் கமீஸ் அல்லது குர்த்தா கான்ட்ராஸ்ட் கலரிலும் அமையும். சில சிந்தெடிக் சல்வார், குர்த்தாக்களிலும், சுடிதார், கமீஸ்களிலும் ஒரே மாதிரியாக அமைவது உண்டு. சுடிதார் என்பது மேலே அணிவது அல்ல. கால் குழாய் போன்று இருப்பதே சுடிதார் அல்லது அதுவே தொளதொளவென இருந்தால் சல்வார். :))))))

  ReplyDelete
 15. சிறப்பான கதை. மீண்டும் படித்து ரசித்தேன்..... போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. மிக மிக மிக அழகிய சிறுகதை. (போன்ற வாழ்க்கை அனுபவம்.) பொங்கிவந்து தெளிவாக ஓடும் நயாகரா மாதிரி வார்த்தைகள். இளைய பதிவர்கள் உங்கள் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்தாலே போதும், சிறந்த எழுத்தாளராகிவிடலாம்.

  ReplyDelete
  Replies
  1. Chellappa Yagyaswamy February 5, 2014 at 4:36 PM

   வாங்கோ, வணக்கம்.

   //மிக மிக மிக அழகிய சிறுகதை. (போன்ற வாழ்க்கை அனுபவம்.) பொங்கிவந்து தெளிவாக ஓடும் நயாகரா மாதிரி வார்த்தைகள். இளைய பதிவர்கள் உங்கள் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்தாலே போதும், சிறந்த எழுத்தாளராகிவிடலாம்.//

   ஆஹா, ஓர் மிகச்சிறந்த எழுத்தாளரிடமிருந்து வந்துள்ள இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன. மிக்க நன்றி, சார். அன்புடன் VGK

   Delete
 17. ஸொந்த அனுவம் போன்ற கதை. அன்புடன்

  ReplyDelete
 18. இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகாகக் கருத்துக்கள் கூறியுள்ள தங்கள் அனைவரும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
 19. இக்கதையை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் தாங்கள் வாங்கிக்கொடுத்த சுடிதார் மற்றும் அந்த நாளை நினைவு படுதிக்க் கொள்வேன் .மிக நேர்த்தி யாக எழுத்துக்களைப் போட்டு எழுதி உள்ளீர்கள்,..
  அன்பு பரிசுக்கு என் நன்றிகள் மாமா..!!

  ReplyDelete
  Replies
  1. girijasridhar February 7, 2014 at 10:05 PM

   வாம்மா ...... கிரிஜா ! எப்படி இருக்கே ?

   //இக்கதையை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் தாங்கள் வாங்கிக்கொடுத்த சுடிதார் மற்றும் அந்த நாளை நினைவு படுத்திக் கொள்வேன். மிக நேர்த்தியாக எழுத்துக்களைப் போட்டு எழுதி உள்ளீர்கள்..

   அன்பு பரிசுக்கு என் நன்றிகள் மாமா..!! //

   சந்தோஷம் கிரிஜா. நீயும் அநிருத்தும் + பிறக்க உள்ள குழந்தையுமே எங்களுக்கான அன்புப்பரிசுகள் ! ;)))))

   Please take care of your health. That is more important now.

   Affectionately yours,

   GOPU Mama

   Delete
 20. இந்த சிறுகதைக்கு பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு இதோ:

  http://swamysmusings.blogspot.com/2014/09/blog-post_13.html

  இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

  முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
 21. //ஒரு வேளை அது போல யாரும் பேரழகிகள் இருந்து, சுடிதார் பார்க்க வந்தபோது, யாராவது அவர்களையும் சேர்த்து செலெக்ட் செய்து போய் இருப்பார்களோ என்னவோ; என்றும் நினைத்துக்கொண்டேன்.//
  சார், இந்தக் கடை எங்கே இருக்கு, நானும் சுடிதார் (அல்லது சுடிதார் விற்கும் பெண்கள்) வாங்கவேண்டுமே?

  ReplyDelete
  Replies
  1. :)))))

   முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

   அன்புடையீர்,

   வணக்கம்.

   31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இதுவரை, 2011 ஜனவரி முதல் 2014 ஜனவரி வரையிலான 37 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)

   என்றும் அன்புடன் VGK

   Delete
 22. என்ன ஒரு ரசனையான எழுத்து. நானும் கடையில் கூடவே இருந்தமாதிரி இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் August 25, 2015 at 10:54 AM

   வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

   //என்ன ஒரு ரசனையான எழுத்து. நானும் கடையில் கூடவே இருந்தமாதிரி இருக்கு.//

   :)))))))))))))))))))))))) இருக்கும். இருக்கும்.

   மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி. :))))))))))))))))))))))))

   Delete
  2. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

   வணக்கம்மா.

   31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 ஜனவரி வரை முதல் 37 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   பிரியமுள்ள நட்புடன் கோபு

   Delete
 23. மருமகளுக்கு சுடிதார் வாங்கறதுன்னா சும்மாவா?

  அதுக்கு பாராட்டும் கிடைச்சுட்டா. கேக்கவே வேண்டாம்.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya September 26, 2015 at 4:17 PM

   //மருமகளுக்கு சுடிதார் வாங்கறதுன்னா சும்மாவா?
   அதுக்கு பாராட்டும் கிடைச்சுட்டா. கேக்கவே வேண்டாம்.//

   சந்தோஷம் :)

   Delete
 24. அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,

  அன்புள்ள ஜெயா,

  வணக்கம்மா !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 ஜனவரி மாதம் வரை முதல் 37 மாதங்களில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

  பிரியமுள்ள நட்புடன் கோபு

  ReplyDelete
 25. நல்ல கத. டிரஸு செலக்ஷனு பண்ணுரதுல பொம்புள ஆளுக

  ஒங்க கிட்டன தோத்து போவாங்க.

  ReplyDelete
 26. அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:

  அன்புள்ள (mru) முருகு,

  வணக்கம்மா !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 ஜனவரி மாதம் வரை, முதல் 37 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு

  ReplyDelete
 27. ஏற்கனவே அங்கு தொங்கிய சூடிதார்கள் அன்ரிஸர்வ்ட கம்பார்ட் மெண்ட் பயணிகள் போல தோன்றின. படித்ததுமே சிரிப்பு வரது. எப்படி இப்படில்லாம் உதாரணங்கள் பளிச்சிடறது.

  ReplyDelete
 28. அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
  திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 ஜனவரி மாதம் முடிய, என்னால் முதல் 37 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete
 29. நானே நேர்ல போய் சுடிதார் வாங்கிய உணர்வு..அருமை.

  ReplyDelete
 30. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
  So far your Completion Status:

  475 out of 750 (63.33%) that too within
  12 Days from 26th Nov. 2015.
  -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

  அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
  திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 ஜனவரி மாதம் வரை, என்னால் முதல் 37 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete
 31. //வாங்கித்தந்ததைப் பெற்றுக்கொண்டாலும் உடுத்திக்கொள்வதற்கு முன்பாக தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணாளருக்கு அதை டிஜிடல் கேமரா மூலம் போட்டோ எடுத்து, இண்டெர்நெட் மூலம் அனுப்பி அவரது பாராட்டைப் பெற்ற பிறகே அதனை உடுத்திவந்து தன் பிறந்த நாளுக்கான ஆசீர்வாதத்தை தனக்கு ஏற்படவுள்ள புக்ககத்து மாமன் மாமியிடம் பெற்றது மாமனாரைவிட மருமகள்

  சமயோசிதமான ஆற்றலுடையவள் என்பதை மெய்ப்பிக்கின்றது. குடும்பத்தின் குதூகலத்திற்கு வித்திடுகின்ற கதை இது. இத்தகைய விருட்சங்கள் உலகமெலாம் மிகுந்து சாந்தமும் சமாதானமும் நிலவுமாக!


  ReplyDelete
  Replies
  1. My Dear Mr. Seshadri Sir,

   வாங்கோ, வணக்கம்.

   கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   Delete
 32. கலகலப்பான கதை.ஒரு ரெடிமேட் ஷாப்புக்குள் நுழைந்ததுபோல இருக்கு..... விலை உயர்ந்த சூடிதார்களை ஃபர்ஸ்ட்க்ளாஸ் ஏ.ஸி. பயணிகளுடன் ஒப்ளிட்டதும்...... கிளிஜோஸ்யக்காரன் போல ஒவ்வொன்றாய் எடுத்து பார்த்ததும் நல்ல கற்பனை.. இனிமேல ஸல்வாரோ சூடியோ வாங்கணும்னா உங்களை ஸ்கூட்டி பின்னால உக்கார வச்சு கூட்டி போகணும்( உங்கவீட்டுக்கு வந்த ஒரு பொண்ணு அப்படித்தானே சொன்னா.. உங்க வீட்டு மாமி கோவப்ளடுவாங்களே???????? ஆமா ஏதோ போட்டி பத்திலாம் பின்னூட்டத்தில் சொல்லி இருப்பது புரியலியே.....

  ReplyDelete
  Replies
  1. ப்ராப்தம் April 22, 2016 at 8:58 PM

   வாங்கோ சாரூஊஊஊ, வணக்கம்மா.

   //கலகலப்பான கதை. ஒரு ரெடிமேட் ஷாப்புக்குள் நுழைந்ததுபோல இருக்கு..... விலை உயர்ந்த சூடிதார்களை ஃபர்ஸ்ட்க்ளாஸ் ஏ.ஸி. பயணிகளுடன் ஒப்பிட்டதும்...... கிளிஜோஸ்யக்காரன் போல ஒவ்வொன்றாய் எடுத்து பார்த்ததும் நல்ல கற்பனை.. //

   மிக்க மகிழ்ச்சி, சாரூ. :)

   //இனிமேல ஸல்வாரோ சூடியோ வாங்கணும்னா உங்களை ஸ்கூட்டி பின்னால உக்கார வச்சு கூட்டி போகணும்//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

   (உங்கவீட்டுக்கு வந்த ஒரு பொண்ணு அப்படித்தானே சொன்னா.. உங்க வீட்டு மாமி கோபப்படுவாங்களோ????????)

   எங்க வீட்டுக்கு வந்த அந்தப்பொண்ணு அப்படித்தான் அன்று சொன்னாள். நீங்கள் இங்கு வரும்போது பேசிக்கொள்ளலாம். அதெல்லாம் கோபப்படாமல் ஏதேனும் பேசி தாஜா செய்து சரி செய்துகொள்ளலாம். :)

   //ஆமா ஏதோ போட்டி பத்திலாம் பின்னூட்டத்தில் சொல்லி இருப்பது புரியலியே.....//

   2014ம் ஆண்டு நான் என் வலைத்தளத்தினில் ஓர் மெகா போட்டி வைத்திருந்தேன். சிறுகதை விமர்சனப்போட்டி என்று அதற்குப் பெயர். தொடர்ச்சியாக 40 வாரங்களுக்கு வெற்றிகரமாக நடந்தது. அதைப்பற்றி ஆரம்ப அறிவிப்பு இதோ இந்தப்பதிவினில் உள்ளது:

   http://gopu1949.blogspot.in/2014/01/blog-post.html

   இறுதி முடிவுகள் அறிவிப்பு இதோ இந்தப்பதிவினில் உள்ளது:

   http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

   பிரியமுள்ள கோபு

   Delete
 33. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில் வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 75+42+86 = 203

  அதற்கான இணைப்புகள்:

  http://gopu1949.blogspot.in/2011/04/1-of-3.html

  http://gopu1949.blogspot.in/2011/04/2-of-3.html

  http://gopu1949.blogspot.in/2011/04/3-of-3.html

  ReplyDelete
 34. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

  முதல் பரிசுக்குத் தேர்வானவை:
  http://gopu1949.blogspot.in/2014/02/vgk-03-01-03-first-prize-winners.html

  இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
  http://gopu1949.blogspot.in/2014/02/vgk-03-02-03-second-prize-winners.html

  மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
  http://gopu1949.blogspot.in/2014/02/vgk-03-03-03.html

  சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

  http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

  http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

  ReplyDelete
 35. மேற்படி என் சிறுகதையினை மிகவும் பாராட்டி, ’எனது எண்ணங்கள்’ வலைப்பதிவரும் எனது ஆருயிர் நண்பருமான திருச்சி, திருமழபாடி, திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் ஓர் தனிப்பதிவு எழுதி இன்று ’ஸ்ரீராமநவமி’ புண்ணிய தினத்தில் (25.03.2018) வெளியிட்டுள்ளார்கள்.

  அதற்கான இணைப்பு:
  https://tthamizhelango.blogspot.com/2018/03/vgk-03.html

  இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு
  珞

  ReplyDelete
 36. WHATS APP COMMENTS RECEIVED ON 22.08.2018 FROM Mrs. VIJI KRISHNAN, RAIL NAGAR, TIRUCHI

  -=-=-=-

  [22/08 11:44] Viji Rail Nagar: Chudidar vanga poren super.

  -=-=-=-

  Thanks a Lot விஜி !

  அன்புடன் வீ..ஜீ !!

  ReplyDelete
 37. WHATS APP COMMENTS RECEIVED ON 22.08.2018 FROM 'LIBYA VASUDEVAN' RETIRED PERSON FROM BHEL, TIRUCHI NOW AT MELBOURNE

  -=-=-=-=-=-

  [20/08 17:07] Libya Vasudevan Bhel: Super Gopi. அருமையான சிறுகதை உணர்வு பூர்வமான எழுத்துக்கள். தினம் ஒன்று பதிந்தால் நல்லது.

  இப்படிக்கு
  *லிபியா வாசுதேவன்.*
  (உங்களுக்கு உடனே புரிந்து கொள்வதற்காக)

  [20/08 17:10] Libya Vasudevan Bhel: I am now in Melbourne with my second son to take care of our grand daughter. Will stay here upto Dec 20. Hope you and your family are fine.

  How is Trichy after floods in Cauvery? Take care on safety.

  Regards

  [22/08 14:57] Libya Vasudevan Bhel: VGK தூள் கெளப்புறார்👏🏻👏🏻👏🏻👍🏽👍🏽👍🏽

  >>>>>

  ReplyDelete

 38. [22/08 14:58] Libya Vasudevan Bhel:
  Commented by Chandramohan ex Manager OP&C RM👆👆

  -=-=-=-

  [22/08 14:59] Libya Vasudevan Bhel: [22/08, 18:45] Revathi Narayanasamy: Arumaiyana nadai

  [22/08, 18:46] Revathi Narayanasamy: Varnanaigal pramadham

  [22/08, 18:46] Revathi Narayanasamy: VGK kalakkaraar

  My cousin sister from Chennai
  [22/08 15:02] Libya Vasudevan Bhel: Comment rec'd from my Sister Anu Swaminathan just now from Chennai after reading Chudidar Vaangapporeyn ...
  Super vasu.👌👌

  -=-=-=-

  [22/08 15:05] Libya Vasudevan Bhel: I shared to few groups in which my relatives and friends of BHEL are there. Hope you will approve for me to forward your link.

  -=-=-=-

  Sooooper nadai, hope this story reveals your personal life experience...

  -=-=-=-

  மிக்க நன்றி ’லிப்யா வாசுதேவன்’ ஸார். வாட்ஸ்-அப்பில் - STATUS பகுதியில் 20.08.2018 முதல் தினமும் வெளிவர இருக்கும் என் கதைகளின் லிங்க்ஸ்களை தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்து கொள்வதிலும், அவர்களின் கருத்துக்களை வாங்கி எனக்குத் தாங்கள் FORWARD செய்வதிலும் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

  பிரியமுள்ள VGK
  (Retired Accounts Officer/Cash - BHEL -Tiruchi-14)

  ReplyDelete
 39. COMMENTS FROM Mr. V. NATANA SABAPATHI Sir in my WhatsApp STATUS page on 22.08.2018 :-

  -=-=-=-=-=-

  தங்களின் ‘சுடிதார் வாங்கப் போறேன்’ என்ற இன்றைய சிறுகதையைப் படித்தேன்.வரிக்கு வரி நகைச்சுவை இழைந்தோடிய இந்த கதையைப் படிக்கும்போதே நானே அந்த கடையில் இருப்பது போன்ற உணர்வைப் பெற்றேன்.

  விலை குறைவாக உள்ள சுடிதார்கள் எல்லாமே பதிவு செய்யப்படாத ரெயில் வண்டியில் உள்ள பயணிகள் போலவும், அதிக விலையில் உள்ள சுடிதார்கள் இருந்த பிரிவு அழகாக தூங்கும் வசதியுடன் பயணிக்கும் முதல் வகுப்பு குளிர் சாதன பயணிகள் போல, சுகமாக வசதியாக, [பரிதாபமாகத் தொங்கும் நிலை ஏதுமில்லாமல்] ஜோராக தங்களுக்கு காட்சியளித்தன என்ற வரிகளை மிகவும் இரசித்தேன்.

  சுடிதாரை வாங்கிவிட்டு, வெளியே சுடிதார் அணிந்து வரும் பல பெண்களை, பலவடிவங்களிலும், பல்வேறு ஆடைகளுடனும் கண்குளிர தரிசித்து விட்டு இனிமேல் சுடிதார் அணிந்த எந்தப் பெண்ணையும் பார்த்து மனதைச் சஞ்சலப் படுத்திக் கொள்ளக் கூடாது என்ற வரிகளையும் இரசித்தேன்.

  கடைசியில் அந்தக் சுடிதார் வருங்கால மருமகளுக்கு பிடித்திருந்தது என்றும் அதைவிட மகனுக்கும் பிடித்திருந்தது என்றும் நிறைவாக முடித்திருக்கிறீர்கள்.

  உண்மையில் பெண்களுக்கு உடைகள் வாங்குவது அவர்களுக்கே கடினமாக இருக்கும்போது ஆண்களுக்கு அது ஒரு சவால் என்பதை தங்களது பணியில் சுவையாக சிறுகதை வடிவில் தந்திருக்கிறீர்கள். பாராட்டுகள்

  -=-=-=-=-=-

  கதையை மிகவும் ரஸித்துப்படித்து, விரிவாகவும், அழகாகவும் அருமையாகவும், பொறுமையாகவும் பின்னூட்டம் அளித்துள்ள திரு. வே. நடன சபாபதி ஐயா அவர்களுக்கு அடியேனின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்புடன் கோபு

  ReplyDelete
 40. Mr. G. MURALI of M/s. High Energy Batteries Limited, Tiruchi
  appreciated this story through Whats App message on 23.08.2018

  -=-=-=-=-

  [23/08 05:36] Murali G. HEB: ✍சிறுகதை சுடிதார் வாங்கப் போனேன் - சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படித்தேன். புதுக்கதை படித்தது போல் இருந்தது 🤔🤷‍♂😃👏

  -=-=-=-=-

  Thanks a Lot ..... My Dear Murali.

  அன்புடன் கோபு மாமா珞

  ReplyDelete
 41. திருமதி. விஜயலக்ஷ்மி நாராயண மூர்த்தி அவர்கள் இந்தக்கதைக்கான தனது கருத்துக்களை WHATS APP VOICE MESSAGE மூலம் பகிர்ந்துகொண்டு பாராட்டியுள்ளார்கள்.

  விஜி அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்புடன் கோபு
  22.09.2018

  ReplyDelete
 42. WHATS-APP COMMENT GIVEN BY 'MANAKKAL MANI' ON 30.04.19 FOR VGK-03

  நிதர்சனமான உண்மை கலந்த நடை. தொடரட்டும் உங்கள் பயணம்.

  ReplyDelete
 43. WHATS-APP COMMENT RECEIVED ON 09.05.2019 FROM Mr. G V GANESAN22 (+91 99404 65325) FOR THIS STORY:

  -=-=-=-=-=-=-

  Classic ji

  -=-=-=-=-=-=-

  Thank you very much, Sir.
  VGK

  ReplyDelete
 44. COMMENTS RECEIVED IN WHATS-APP ON 06.01.2020 FROM Mrs. ANANTHI NAGARAJAN, BANGALORE [NOW AT MADURAI]

  -=-=-=-=-=-=-

  சுடிதார் வாங்கப் போறேன் கதை நன்றாக இருக்கு.

  -=-=-=-=-=-=-  

  ReplyDelete
 45. WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. MANIVANNAN SIR, 9750571234 ON 24.05.2021

  'சுடிதார் வாங்கப்  போறன்'' இந்த அவசர உலகத்தில்  க்ளைமாக்ஸ் தெரிந்து கொண்டு படம் பார்க்க போகும் ரகம் நான், முடிவைப்பற்றிய பதற்றமின்றி சுகமாக பொழுதைக்கழிப்பதுபோல் சிறுகதைகள் நம்மை மகிழ்விக்கக்கூடியவை. உங்களின் எதார்த்தமான ரசிப்புத்தன்மை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் வியக்க வைக்கிறது எல்லைமீறா ரசனை உணர்வு பாராட்ட தோன்றுகிறது, உண்மையில் குடும்ப உறுப்பினராக உங்களோடு இருந்து நேரில் பார்த்த உணர்வை கண்முன்னே கொண்டுவந்து காட்டிச்சென்றுள்ளீர்கள். நன்றி.

  -=-=-=-=-

  THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS. - VGK 

  ReplyDelete
 46. It is presumed that you have a lot of experience in chudidar. Brilliant idea for the script. All the best sir

  ReplyDelete