About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, February 23, 2014

VGK 04 / 01 / 03 ] FIRST PRIZE WINNERS ! "காதல் வங்கி”





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 



VGK 04 ]  ” காதல் வங்கி  ”


இணைப்பு:



மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

கணிசமான எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 









நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து



















இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 








   


மற்றவர்களுக்கு: 






    



முதல் பரிசினை 


வென்றுள்ளவர்கள் இருவர்: 



அதில் ஒருவர்


திருமதி. கீதா சாம்பசிவம் 



அவர்கள்








sivamgss.blogspot.in



" எண்ணங்கள் “









முதல் பரிசினை வென்றுள்ள 



திருமதி. கீதா சாம்பசிவம்


 அவர்களின் விமர்சனம்:






வங்கி வேலை கிடைப்பதை விடக் கடினமானது அதைச் சரியாக நிறைவேற்றுவது.  இங்கே ஜானகி வாடிக்கையாளரின் மனதைக் கவரும் வண்னம் சேவையில் சிறந்தவளாக இருக்கிறாள். இதிலிருந்தே அவளைப் பற்றி ஒரு மாதிரிப் புரிய ஆரம்பிக்கிறது. இளைஞர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக வங்கிக்கு நற்பெயர் வாங்கிக் கொடுக்கும் விதத்தில் வாடிக்கையாளருக்குச் சேவை செய்கிறாள்.  


அங்கே எத்தனையோ வாலிபர்கள் வந்து போனாலும்  அவர்கள் எவரையும் இவளுக்குப் பிடிக்கவில்லை. எல்லாருடனும் சகஜமாகப் பழகினாலும் தன் எல்லை எது எனப் புரிந்து வைத்திருக்கிறாள். 


அப்போது தான் வருகிறார் ரகுராமன்.  பெயர்ப் பொருத்தமே அசத்தல்.  ரகுராமன் - ஜானகி. என்றாலும் முதலில் அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை.  சாதாரண வாடிக்கையாளராகத் தான் இருந்திருக்கார்.  ஆனால் அவருக்கு வங்கி குறித்த விஷயங்கள் எதுவும் தெரியாது,  முழுமையாக ஜானகியை நம்பி வங்கியில் வாடிக்கையாளராகச் சேர்கிறார். ஜானகியும் ஒரு வங்கிக் காசாளராகவே அவருக்கு வேண்டிய உதவிகள் செய்கிறாள். 

ரகுராமனைக் குறித்து ஜானகி அறிய நேர்ந்தது அவங்க வீட்டில் நடந்த ஏதோ ஒரு சுப நிகழ்வில்.  வந்தவர் வைதிக பிரமசாரி என அறிகிறாள் ஜானகி. குடும்பப் பாரம்பரியத்தின் மேலும் கலாசாரத்தின் மேலும் ஓர் ஆழமான பிடிப்பு அவள் மனதின் ஓர் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.  முழுதும் மறையவில்லை. ஆனால் அது வெளிப்பட நேர்ந்தது ரகுராமனை ஜானகி சந்தித்த பின்னர் தான். முதலில் அவருடைய படிப்பிலும், வித்வத்திலும் ஏற்பட்ட பிரமிப்பில் அவரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள நினைத்தவள், தொடர்ந்து அவரைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என நினைக்கிறாள்.  இது தான் காதல்.  இது ரகுராமன் மனதிலும் பிரதிபலிக்கிறது.

ஒரு பெண்ணோ, ஆணோ ஒருவரைப் பார்த்ததும், அவர்கள் மனதில் உடனடியாகத் தோன்றுவது மாற்றுப் பாலினத்திடம் சாதாரணமாக ஏற்படும் இனக்கவர்ச்சியே.  ஆனால் காதல் என்பது பெண்ணின் மனதில் தோன்றும் அதே சமயம் அதன் பிரதிபலிப்பு அவள் காதலிக்கும் அந்த ஆணிடமும் தோன்ற வேண்டும். இது வயது வித்தியாசம் பார்க்காது, படிப்போ, வேலையோ, அழகோ, பணமோ எதுவும் பார்க்காது. ஒருவரை ஒருவர் பார்ப்பதிலும், நினைப்பதிலுமே மனம் சந்தோஷம் அடையும். ரகுராமன் நவநாகரிக இளைஞரே அல்ல. வங்கியிலோ, அல்லது வேறெங்குமோ வேலை செய்யவில்லை. இந்தக்கால நவநாகரிக உடைகள் அணிபவரும் அல்ல. இத்தனையும் மீறி ஆசார, அநுஷ்டானங்களைக் கடுமையாகக் கடைப்பிடிக்கும் ரகுராமன்  நவநாகரிகப் பெண்ணான ஜானகியின் மனதைக் கவர்ந்ததோடு அல்லாமல் அது கல்யாணம் வரைக்கும் போய்விட்டது.

ஜானகிக்குத் தன் படிப்பெல்லாம் வெறும் ஏட்டுப்படிப்பு. ரகுராமன் படிப்புத் தான் உண்மையில் வாழ்க்கைக்குப் பலன் தரக்கூடியது என்று புரிந்து கொள்ளும் அறிவும் இருக்கிறது.  இந்தக்கால இளைஞர்களின் போக்கும் அவளுக்குப் பிடிக்கவில்லை. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றிருக்கும் இந்த வாழ்க்கையை வெறுக்கிறாள்.  அதே சமயம் வங்கி வேலையை விடவும் தயாரில்லை.  சுகமான வாழ்க்கைக்குப் பணம் தேவைன்னு இருவரும் தெரிந்து கொண்டு தேவையான பணமும் சேர்த்துக் கொண்டு பின்னரே கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.  அதுவும் ஜானகியின் பெற்றோர், உற்றார், உறவினரின் முழு சம்மதத்தோடு.

காதல் செய்வதால் இருவரும் ஊர் சுற்றவில்லை.  ஹோட்டல், சினிமா, பார்க்குனு உட்கார்ந்து பேசலை.  ரகுராமன் வங்கிக்குப் பணம் போட வருகையிலே பார்ப்பது தான்.  அதுவே போதுமானதாக இருந்திருக்கிறது.  எல்லாவற்றிலும் ஒரு நிதானம், அவசரமின்மை, திட்டமிடுதல், தேர்ந்தெடுத்துச் செய்தல் என இருவரும் எல்லாவிதத்திலும் ஒத்துப் போய்க் கடைசியில் திருமணமும் செய்துக்கறாங்க. 

கல்யாணம் ஆகிவிட்டது என்றாலும் வங்கி வேலையை விடாமல் அதே சமயம் பாரம்பரியப் பழக்கங்களுக்கும் முன்னுரிமை கொடுத்துத் தன் குல வழக்கப்படி மடிசாருடன் வங்கி வேலைக்கு வந்து செல்கிறாள் ஜானகி.  இதற்காக வெட்கப்படவில்லை என்பது இங்கே முக்கியம்.  இப்போது அவளைப் பார்ப்பவர்களுக்கும் மன நிறைவு.  நமக்கும் மன நிறைவு. 

பெண்ணால் தான் குடும்ப வழக்கங்கள், குல ஆசாரங்கள் கடைப்பிடிக்கப்படும். ஆகவே அந்தப் பெண்ணுக்கு  இப்படியான ஆசாரங்களையும், குடும்ப வழக்கங்களையும் கடைப்பிடிப்பவர் மாப்பிள்ளை ஆவதற்கு உதவும் பெண்ணின் தாயும் போற்றுதலுக்குரியவரே. அவர் தன் வளர்ப்பு சரியானது என்பதை அறிந்து கொண்டு  மகிழ்ச்சியே அடைகிறார்.  

தாயும், பெண்ணும் ஒரு தோழி போல் மனம் விட்டுப் பேசி ஒருவர் மனதை இன்னொருவர் புரிந்து கொள்வது இங்கே கூர்ந்து கவனிக்கத் தக்கது.  ஒவ்வொரு தாயும் தன் பெண்ணை எப்படி வளர்க்க வேண்டும், அவள் கல்யாண வயதில் எப்படி அவளிடம் மனதைப் புரிந்துகொள்ளும்படி பேச வேண்டும் என்றெல்லாம் இந்தத் தாயிடமிருந்து அறிய முடிகிறது.   

திருமணத்தில் பெண்ணின் விருப்பம் எவ்வளவு முக்கியம் என்பதும் இங்கே புரிய வருகிறது.   குடும்ப வாழ்க்கையில் பெற்றோர் தலையீடும் இல்லை. ஒருவரை ஒருவர் அநுசரித்துப் போகாமல் நினைத்தால் சண்டை, பிறந்த வீடு செல்வது, உடனே விவாகரத்து என இருக்கும் இந்தக்கால கட்டத்துக்குத் தேவையான கதை.

காதல் செய்வதை விட அதைக் கல்யாணம் வரை கொண்டுபோவது கடினம் ஏனெனில் அந்தக் கல்யாணம் நிலைத்திருப்பதும் பெண், பிள்ளை இருவர் கைகளிலும் இருக்கிறது.  அந்த விஷயத்தில் ரகுராமனுக்கும் சரி, ஜானகிக்கும் சரி மன முதிர்ச்சி கொஞ்சம் அதிகமாவே இருக்கிறது.  எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்துடன் குடும்ப வாழ்க்கைக்கும் தயாராக இருக்கின்றனர்.  

காதலர் தினம் நெருங்கி வரும் வேளையில் இந்த மாறுபட்டக் காதல் கல்யாணம் குறித்துப் படித்துப் புரிந்து கொள்ள நேர்ந்ததும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  

இப்படியான பெண்கள் இன்னமும் வாழ்வதாலேயே அவர்களாலேயே நம் பாரம்பரியமும், கலாசாரமும், ஆசார அநுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பதும் கொஞ்சமாவது இருந்து கொண்டிருக்கிறது. இது அவ்வளவு விரைவில் மறையக் கூடிய ஒன்றல்ல என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது. 

 





மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.




     



முதல் பரிசினை 




வென்றுள்ள மற்றொருவர் யார் ?





தொடர்ச்சியாக 


முதல் பரிசினை 


அதுவும் நான்காம் முறையாக


வென்றுள்ள 






’விமர்சன சக்ரவர்த்தி ’



திரு. ரமணி 








முதல் பரிசினைத் தொடர்ச்சியாக வென்று வரும் 

விமர்சனச் சக்ரவர்த்தி  


திரு. ரமணி 


அவர்களின் விமர்சனம் இதோ: 



கதைக் களம் வங்கியாக இருப்பதால்

இது வங்கிக் காதலாகத்தானே இருக்க வேண்டும் ?

இது என்ன காதல் வங்கி  ?



கதை என்று சொன்னால் ஒரு திருப்பம்

ஒர் அதிர்ச்சி ஒரு எதிர்பாராத புரட்சிகரமான முடிவு

எனவெல்லாம் தானே இருக்கவேண்டும் ?

எந்த வித சிறு அதிர்வும் இல்லாது

ஒரு சொகுசுப் பேருந்தில்

நேர்கோட்டுப்பாதையில் பயணிப்பதைப் போன்றுச்

செல்லும் இந்தக் கதை எந்த வகையில் சேர்த்தி ?



மாற்றம் ஒன்றே மாறாதது .

காலச் சூழலுக்குத் தகுந்தாற்போல தன்னை

மாற்றிக் கொள்ளாத எதுவும்பிழைக்கமுடியாது

நிலைக்க  முடியாது எனவெல்லாம்

பயிற்றுவிக்கப்படுகிற இந்தக் காலத்தில்

பழமையை இன்னும் சரியாகச் சொன்னால்

பழைய பஞ்சாங்க வாழ்க்கை முறையை

சிறப்பித்துச் சொல்லும் இந்தக் கதையை

இதன் கருத்தை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும் ?



இந்தக் கதையைப் படித்து முடித்ததும்

இப்படிப்பட்ட எண்ணங்களெல்லாம்  உங்களுக்குத்

தோன்றினால் நிச்சயம் தவறே இல்லை

தோன்றவில்லையெனில்தான் அது தவறு



ஏனெனில் ஒரு படைப்பைப் படிக்கிற அனைவரும்

டைப்பாளியின் போக்கில்  அவரது நோக்கில்

படித்துப் பின் அதை நம் போக்கில் புரிந்து கொள்ள

முயலுகிற வழக்கம் எல்லாம் மாறி

வெகு காலமாகிவிட்டது



நாம் எல்லோரும் எல்லாவற்றிலும் சரியோ தவறோ

ஒரு கருத்துகைக் கொண்டிருக்கிறோம் அல்லது

ஒரு கருத்தைக் கொள்ளும்படியாக

பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம்



நம் கருத்துக்கு ஒத்துப் போகிற கதையெனில்

அதிலுள்ள பிற சிறப்பு அம்சங்கள் குறித்து

அலசி ஆராயத் துவங்குகிறோம்.மாறாக இருப்பின்

அப்படைப்பைக் குதறித் தள்ளத் தயாராயிருக்கிறோம்

அல்லது கண்டு கொள்ளாது புறக்கணித்து

ஒதுங்குகிறோம்



இந்தக் கதையை விமர்சிக்கும் முன்னால் இவ்வளவு

நீண்ட முன்னுரை எழுதுவதன் காரணமே

இந்தக் கதை இப்படி இரண்டு எல்லைக் கோட்டின் அருகில்

இருந்து ஆராயாது இயல்பாக அணுகி ரசிக்கவேண்டிய

கதை என்பதால்தான்



பொதுவாக வங்கியெனச் சொன்னால் பணம் போடும் இடம்

எடுக்கும் இடம் என்பதைவிட பணம் இருக்கும் இடம்

எனத்தான் நாம் பொருள் கொள்கிறோம்



அந்த வகையில் இந்தக் காதல் வங்கிக்கான

பொருளாக காதல் இருக்குமிடம் நிலைக்குமிடம்

எனச் சொல்லலாம்



அடுத்ததாக காதல்

உலகில் அனைத்து மொழிகளிலும் அதிகமாக

விளக்கம் சொல்லப்பட்ட இன்னும் மிகச் சரியாக

விளக்கம் சொல்ல முடியாத சொற்கள் எனச் சொன்னால்

அது நிச்சயம் கடவுள்,கவிதை,காதல் என்கிற

மூன்று சொற்களாகத்தான் இருக்கமுடியும்



இந்தக் கதை பூடகமாக அந்தக் காதலுக்கு

அருமையான விளக்கம் சொல்லிப்போகிறது

என்றால் நிச்சயம் மிகையில்லை



மனித வாழ்வுக்கு அத்தியாவசியத் தேவையாக

உணவு, உடை ,இருப்பிடம் எனச் சொல்வதைப்போல

உண்மையான காதலுக்கு உடல் ,உணர்வு,ஆன்மா

இவைகளின்  ஒத்திசைவு அவசியத் தேவை



ஒரு உடல் வெறி கொள்ள 
ஒரு உடல் மறுப்பது எனில் 
அது காமக் காதல்



இருவரின் உடல் மட்டும் 
ஒத்துச் செல்கிறது எனில் 
அது மிருகக்காதல்



இருவரின் உடலும் உணர்வும் 
ஒத்துச் செல்லுகிறதெனில் 
அது சராசரிக் காதல்



ஆன்மா மட்டுமே 
ஒத்துச் செல்லுகிறதெனில்

அது தெய்வீகக் காதல் 

எனச் சொல்லலாம்



இன்னும் சுருக்கமாகச் சொன்னால்

உடலில் துவங்கி  உணர்வில் வளர்ந்து

ஆன்மாவில் நிலை கொள்கிற காதலை விட

ஆன்மாவில் துவங்கி உணர்வில் வளர்ந்து

உடலில் முடிவில் சங்கமிக்கிற

(அல்லது சங்கமிக்காமலே போகிற ) 
காதலே நிச்சயமாக தெய்வீகக் காதல்



ஜானகி ரகுராமன் காதல் நிச்சயம்

தெய்வீகக் காதல்தான்



இதைப் பூடகமாகச் சொல்லத்தான்

நாம்புரிந்து கொள்ளும்படியாகச் சொல்லத்தான்

ஜானகியின் தாயாரை நமக்காக சில சராசரி

மனிதர்கள் நோக்கில் (அவர் அப்படி இல்லையென்றாலும் )

சில கேள்விகள் எழுப்பச் செய்து அதற்கு

ஜானகி மூலம் அருமையான விளக்கமளிக்கிறார்



அவர் விளக்கம் மூலமே இது சராசரி

வங்கிக்காதல் இல்லை

இது காலம் கடந்து நிலைக்கிற காதல் வங்கி

என்பதுமிக எளிதாய் நமக்குப் புரிந்து போகிறது



பயண இலக்கு  மிகத் தூரமாக இருப்பவர்களுக்கு

அதிக வளைவு நெளிவுகளற்ற

நான்கு வழிச் சாலைகள் தான் ஏற்புடையது

என்பதைப்போல



மிக உயர்ந்த நோக்கத்திற்காக கதை சொல்ல

நினைப்பவர்களுக்கு சுவாரஸ்யம் கூட்டுவதற்காக

செய்யப்படுகிற நெளிவு சுழிவு யுக்திகள்

(எதிர் கதாபாத்திரங்கள், முரண் நிகழ்வுகள் )

நிச்சயம் தேவையில்லை. குறிப்பாக இந்தக்

கதைக்கு அது தேவைப்படவில்லை



முடிவாக ஏன் எதற்கு என்கிற கேள்விகளைத்

தொடர்ந்து நம் செயல்பாடுகள் இருக்குமாயின்

கலாச்சாரப் பண்பாட்டுக் குழப்பங்கள் நேர

வாய்ப்பே இல்லை



உடல் ஆரோக்கியத்திற்கு உணவு என்பது போய்

அது நாக்கிற்கு என ஆனதைப் போல



சீதோஷ்ண நிலையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள

உடை என்பது போய் பகட்டுக்கு என ஆனதைப் போல



வாழ்வின் தேவைக்குத் தேவையான பொருட்கள்

என்பது போய் தன் செழுமையைக் காட்டுவதற்கு

என ஆனது போல



வாழ்வின் தேவைக்கு வேலை என்பது போய்

வேலைக்காக வாழ்வது என்பது போல



சிறந்த வாழ்வுக்கு காதல் என்பது போய்

உடலுறவுக்கு தலைவாசல் காதல் என்பது போல



வாழ்வின் அனைத்து நிலைகளிலும் மாறுதல்கள்

புதுமைகள் புரட்சிகள் என்கிற பெயரில்

அர்த்தமற்ற அழிவைத் தருகிற போக்கே தொடர்வதற்குப் பதில்

அர்த்தமுள்ள உயர்வைத் தருகிற உன்னதமான

பழமையும் பழைய பஞ்சாங்கமுமே தொடரலாமோ

என்கிற ஆதங்கம் அனைவர் மனதிலும்

இன்றையச் சூழலில் வரத்தான் செய்கிறது



மாறுதலும் புதுமையும் உயர்வையும் நன்மையையும்

தருமாயின் வரவேற்கத்தக்கதே.


அதுவே அழிவையும் நலிவையும் தருமாயின்

நிச்சயம் மாறுதல்களை நாம்

மறுபரிசீலனை செய்யத்தான் வேண்டும் எனும்

ஒரு திடமான கருத்தை இக்கதை நம்முள்

ஏற்படுத்திப் போவது நிஜம்



சென்ற விமர்சனப் போட்டியில் திரு, ரமணி அவர்கள்

அலசி காயப்போடுவது மட்டுமல்ல விமர்சனம் எனக்

குறிப்பிட்டிருந்தார். அதுவும் சரிதான்.


[ ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இதுவும் சரிதான் !! 
தங்களைத் தாங்களே மறைத்துக்கொள்ள  
அருமையானதோர் டெக்னிக் - ரஸித்தேன். vgk ;))))) ]



என்னைப் பொருத்தவரை விமர்சனம் என்பது

ஒரு ஸ்தலத்தைச் சேவிக்கச் செல்பவன் அந்த

ஸ்தலப் புராணத்தைத் தெரிந்து கொண்டு சேவித்தல்

எத்தனைச் சிறப்போ அதைப் போல



கதையின் அந்தராத்மாவை புரியச் சொல்லி விட்டு

வாசகனை அவன் போக்கில் கதையை படிக்கத்

தூண்டுவதும் நல்ல விமர்சனமாக இருக்க முடியும்



அதனாலேயே கதையின் சுருக்கத்தை  சிறந்த

வரிகளைக் கோடிட்டுக் காட்டும் (அதிகப் பிரசங்கி )

வேலையை நான் செய்யவில்லை



ஒரு நெல்லை நூறு நெல்லாக பெருக்கிக் காட்டுதல்

மூலம் ஒரு நிலம் செழுமையான நிலம் என

தன்னை நிரூபிப்பதைப் போல



ஒரு சிறுகதை வாசகனுக்குள் பல்வேறு தொடர்

சிந்தனைகளை  பெருக்கிப் போகிறதெனில் 
அதுதான் மிகச் சிறந்த கதை ....


வேறு அத்தாட்சிகளும் சான்றிதழ்களும் அதற்கெதற்கு ?



கதையைப் படிப்பவர் அனைவரின்

சிந்தனை விளக்கைச் சிறப்பாகத் தூண்டி

நன்றாக ஒளிவிடச் செய்யும்

அற்புதமான கதையைத் தந்தமைக்கு

மிக்க நன்றியும் தொடர வாழ்த்துக்களும்  வை.கோ. சார் .







  



மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 

இனிய நல்வாழ்த்துகள்.



  
    









    










    




மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.







நடுவர் அவர்களின் 

வழிகாட்டுதல்களின்படி

முதல்  பரிசுக்கான தொகை 

இவ்விருவருக்கும் 



சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.






இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் ஏற்கனவே 

வெளியிடப்பட்டுள்ளன.



இணைப்புகள்:

http://gopu1949.blogspot.in/2014/02/vgk-04-03-03-third-prize-winner.html


http://gopu1949.blogspot.in/2014/02/vgk-04-02-03-second-prize-winners.html



காணத்தவறாதீர்கள் !






அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.





நாம் விழுவது எழுவதற்காகவே 


என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் 


இந்தக்கிளியைப் பாருங்கள் !




போட்டியில் 


உற்சாகமாக 


தொடர்ந்து 


கலந்துகொள்ள


மறவாதீர்கள் !!







இந்த வார சிறுகதை விமர்சனப் 


போட்டிக்கான இணைப்பு: 


http://gopu1949.blogspot.in/2014/02/vgk-06.html


கதையின் தலைப்பு:



”உடம்பெல்லாம் உப்புச்சீடை !”





விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


27.02.2014  


இந்திய நேரம் இரவு 8 மணிக்குள் 






போட்டி எண்: VGK 05 + VGK 06


ஆகிய இரு கதைகளுக்குமோ அல்லது 


அவற்றில் ஏதாவது ஒன்றுக்கோ


விமர்சனம் எழுதி  அனுப்புபவர்கள் 


மிகவும் அதிர்ஷ்டசாலிகளே !



ஏனென்றால் அவர்களுக்கு 


'முதல் பரிசு' பெறும் 


வாய்ப்புகள் ஏராளம் ..... ஏராளம் !




இதுவரை விமர்சனச் சக்ரவர்த்தியாகத் 


திகழ்ந்து வரும்


திரு. ரமணி அவர்களின் இடத்தையே கூட


மிகச்சுலபமாக உங்களால் பிடித்துவிட முடியும்.



புரிந்து கொள்ளுங்கள் !



உடனே விமர்சனம் 


எழுதி  அனுப்புங்கள் !!





*வாழ்த்துகள் *









என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

60 comments:

  1. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும், முதல் பரிசு மேடையில் அசையாது வீற்றிருக்கும் திரு. ரமணி சார் அவர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. முதல் பரிசினை வென்றுள்ள திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி February 23, 2014 at 5:24 PM

      வாங்கோ, வணக்கம்.

      //முதல் பரிசினை வென்றுள்ள திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!//

      திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் தற்சமயம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இல்லை. தற்காலிகமாக தலைநகர் டெல்லிக்குப்போய் இருக்கிறார்கள்.

      குறிப்பாக என்னிடம் தனியே தகவல் சொல்லி விட்டுத்தான் போனார்கள். ரொம்ப நல்லவங்க ! ;)

      அவர்களுக்கு முதல் பரிசு கிடைத்துள்ள விஷயத்தை நான் டெலிஃபோனில் தெரிவிக்கும்போதுகூட ரயில் பயணத்தில் தான் இருந்தார்கள்.

      எனவே அவர்களுக்கான தங்களின் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் அவர்கள் சார்பில் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      பிரியமுள்ள VGK

      Delete
  3. தொடர்ச்சியாக முதல் பரிசினை அதுவும் நான்காம் முறையாக வென்றுள்ள ’விமர்சன சக்ரவர்த்தி ’திரு. ரமணி ஐயா அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்..

    ஒரு விமர்சனம் எப்படி எழுதப்படவேண்டும் என்று
    அழகாக பாடம் நடத்துகிறார்..

    கதையின் ஒரு வரியைக் கூட மேற்கோளாக எழுதாமல் ..
    அதன் கருப்பொருளை அலசி ஆராய்ந்து ஆழ்ந்து பொருளுணர்த்தும் அற்புத ஆற்றல் கைவரப்பெற்ற
    ஐயா அவர்களுக்கு விமர்சனச் சக்ரவர்த்தி பட்டம்
    மிகப்பொருத்தம் தான்..! வாழ்த்துகள்...பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி February 23, 2014 at 5:30 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஐயா அவர்களுக்கு விமர்சனச் சக்ரவர்த்தி பட்டம்
      மிகப்பொருத்தம் தான்..! //

      தாங்களே சொல்லிவிட்டபின் அப்பீல் ஏது ? ;)))))))))

      என் செயலுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து தாங்கள் ஆதரித்துள்ளது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.

      தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள VGK

      Delete
  4. அருமையான விமர்சனங்கள்...

    திருமதி கீதா சாம்பசிவம் அம்மா அவர்களுக்கும், விமர்சன சக்ரவர்த்தி திரு. ரமணி ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலன் February 23, 2014 at 5:42 PM

      வாங்கோ Mr DD Sir, வணக்கம்.

      //அருமையான விமர்சனங்கள்...

      திருமதி கீதா சாம்பசிவம் அம்மா அவர்களுக்கும், விமர்சன சக்ரவர்த்தி திரு. ரமணி ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...//

      மிக்க நன்றி. அன்புடன் VGK

      Delete

  5. [ ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இதுவும் சரிதான் !!
    தங்களைத் தாங்களே மறைத்துக்கொள்ள
    அருமையானதோர் டெக்னிக் - ரஸித்தேன். vgk ;))))) ] ///

    ஐயா அவர்களின் கைதேர்ந்த எழுத்து நடையை மறைக்கக்கமுடியுமா எனன ..!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ .... வாங்கோ .... வாங்கோ !!!

      வணக்கம்/வந்தனங்கள்

      ******[ ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இதுவும் சரிதான் !!
      தங்களைத் தாங்களே மறைத்துக்கொள்ள
      அருமையானதோர் டெக்னிக் - ரஸித்தேன். vgk ;))))) ] *****

      //ஐயா அவர்களின் கைதேர்ந்த எழுத்து நடையை மறைக்க முடியுமா எனன ..! //

      முடியவே முடியாது தான். நானும் அப்படியே இதனை 100% ஒப்புக்கொள்கிறேன்.

      ஐயா அவர்களின் கைதேர்ந்த எழுத்து நடையை மட்டுமல்ல..... சாதாரணமாக, எதையுமே யாருமே யாரிடமுமே வெகுநாட்கள் மறைக்க முடியாது .... என்பதே உண்மை.

      தங்களின் அன்பான மீண்டும் மீண்டும் வருகையும், அழகான கருத்துக்களும் என்னை மகிழ்விக்கின்றன.

      மிக்க நன்றி. பிரியமுள்ள VGK

      Delete
  6. பட்டமும் பரிசும் மகிழ்ச்சியை விட
    தக்க வைத்துக்கொள்ளவேண்டுமே
    இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டுமே என்னும்
    பயத்தையே அதிகரித்துப் போகிறது
    பாராட்டுக்கும் பரிசுக்கும் பட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. Ramani S February 23, 2014 at 6:09 PM

      வாங்கோ, வணக்கம் Mr. Ramani Sir.

      மீண்டும் என் அன்பான வாழ்த்துகள்.

      //பட்டமும் பரிசும் மகிழ்ச்சியை விட, தக்க வைத்துக்கொள்ளவேண்டுமே இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டுமே என்னும் பயத்தையே அதிகரித்துப் போகிறது பாராட்டுக்கும் பரிசுக்கும் பட்டத்திற்கும்
      மனமார்ந்த நன்றி//

      வலையுலகில் சமீபத்தில் நடைபெற்றுவரும் ஒருசில போட்டிகளில் தங்களை நடுவர் குழுவில் ஒருவராக நியமிக்கிறார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.

      அப்படியிருந்தும், உங்களை நான் இந்தப்போட்டியில் கட்டாயமாக தொடர்ச்சியாகக் கலந்து கொள்ள வேண்டும் என என் மெயில் மூலம் தைர்யமாகக் கேட்டுக் கொண்டபோது, தாங்களும் பெரிய மனது பண்ணி அதற்கு ஒத்துக்கொண்டதுடன், என்னுடைய இந்த புதிய முயற்சியினை வெகுவாகப் பாராட்டி மிகவும் ஆறுதலாக பதிலும் அளித்திருந்தீர்கள்.

      தங்களின் எழுத்துக்களின் வலிமையை நன்கு உணர்ந்தவன் என்ற முறையில் தாங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதில் எனக்கு ஒன்றும் வியப்பே இல்லை.

      தங்கள் திறமைகளை மற்றவர்களும் நன்கு அறிய வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. அது இப்போது, அதுவும் அதற்குள், ஆரம்பத்திலேயே நிறைவேறிப்போனதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே.

      >>>>>

      Delete
    2. என் நலம் விரும்பியும், நான் அறிவித்துள்ள விசித்திரமான புதுமையான போட்டியின் அடிப்படை நோக்கத்தினை மிகவும் புகழ்ந்து பாராட்டியவரும், என் மீதுள்ள தனி பிரியத்தினால் மட்டுமே நடுவராக இருக்க சம்மதித்தவருமான, என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய நடுவர் அவர்கள் ’மிகவும் நியாயமானவர்’, ’திறமையானவர்’, ’சற்றும் பாரபட்சமே பார்க்காதவர்’, ’யார் எழுதினார்கள் என்று பார்க்காமல் என்ன எழுதியுள்ளார்கள் என்பதை மட்டுமே பார்த்து துல்லியமாக எடை போடக்கூடியவர்’, என்பதும் நிரூபணமாகியுள்ளது என்பதைத் தாங்களும் பிறரும் அறிந்துகொள்ள, நன்கு புரிந்து கொள்ள, இதுவரை வெளியிடப்பட்டுள்ள பரிசு முடிவுகளே சாட்சியாக உள்ளன.

      அதில் எனக்கு ஏற்பட்டுள்ள மகிழ்ச்சிகளை சொல்லில் எழுத்தில் கொண்டுவருவது அவ்வளவு சுலபமல்ல.

      >>>>>

      Delete
    3. இதில் எனக்குள்ள மிகப்பெரிய சந்தோஷம் என்னவென்றால், தங்களின் விமர்சனத்தால் ‘ஒரு விமர்சனம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதைக்கற்றுத்தரும் ஆஸானாக தாங்கள் இருக்கிறீர்கள்’ என பலரும் சொல்லியுள்ளனர்.

      நம் அன்புக்குரிய திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் மேலே தன் பின்னூட்டத்தில் சொல்லியுள்ளது போல கதையின் ஒரு வரியைக் கூட மேற்கோளாக எழுதாமல், அதன் கருப்பொருளை அலசி ஆராய்ந்து ஆழ்ந்து பொருளுணர்த்தும் அற்புத ஆற்றல் கைவரப்பெற்ற தங்களின் எழுத்து ஸ்டைலுக்கு அடியேன் அளித்துள்ள ’சிறுகதை விமர்சனச் சக்ரவர்த்தி’ என்ற பட்டம் மிகப்பொருத்தம் தானே !

      >>>>>

      Delete
    4. இந்த சிறுகதை விமர்சனப்போட்டி நாளுக்கு நாள் நன்கு மெருகேறி வந்துகொண்டுள்ளது என்பதில் ஐயம் இல்லை. மிகச்சிறப்பான வரவேற்பினைப் பெற்றுள்ளது.

      இந்த சிறுகதை விமர்சனப்போட்டி என்ற புதுமையான என் திட்டம் இன்று உலகம் பூராவும் பரவியுள்ளது. பலரும் இதன் அடிப்படை நோக்கத்தினை அறிந்து, தங்களின் மெயில்கள் மூலம் பாராட்டி வருகிறார்கள்.

      ஒவ்வொரு சிறு கதை விமர்சனப்போட்டிக்கும் புதியவர்கள் பலர் ஆர்வத்துடன், பல வெளிநாடுகளிலிருந்து கலந்துகொண்டு வருகிறார்கள் என்பதும் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளது.

      போகப்போக மேலும் பல புதிய பதிவர்களின் எழுத்துத் திறமைகள் நமக்குப் பளிச்சென்று தெரியக்கூடும் என நான் நம்புகிறேன்.

      அதுவே இந்தப்போட்டியில் நாம் எதிர்பார்க்கும் முழுப் பலனாக அமையும் எனவும் எதிர்பார்க்கிறேன்.

      >>>>>

      Delete
    5. தங்களுடைய இந்த விமர்சனத்தில், குறிப்பாக தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் கவந்த வரிகள்:

      //இன்னும் சுருக்கமாகச் சொன்னால் உடலில் துவங்கி , உணர்வில் வளர்ந்து, ஆன்மாவில் நிலை கொள்கிற காதலை விட ,

      ஆன்மாவில் துவங்கி, உணர்வில் வளர்ந்து, உடலில் முடிவில் சங்கமிக்கிற (அல்லது சங்கமிக்காமலே போகிற ) காதலே நிச்சயமாக தெய்வீகக் காதல் //

      அதுவும் அடைப்புக்குறிக்குள் தாங்கள் காட்டியுள்ள
      // (அல்லது சங்கமிக்காமலே போகிற) // என்ற வரிகள் என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்தது.

      அதிலுள்ள உண்மையை என்னால் நன்றாகவே , அனுபவ பூர்வமாகவே, உணரவும் முடிகிறது.

      EXCELLENT WORDS ;) SIMPLY SUPERB !! ;)

      அதற்காக தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள் + நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு [VGK]

      Delete
    6. http://yaathoramani.blogspot.in/2014/02/httpgopu1949.html

      இந்தத்தங்களின் பதிவினில் நான் எழுதியுள்ள என் மனம் திறந்த கருத்துக்களைப் படிக்காதவர்கள் மீண்டும் போய்ப் படிக்கட்டும் என்பதற்காக இங்கு அதன் இணைப்பினைக் கொடுத்துள்ளேன். vgk

      Delete
  7. மிகச் சிறப்பாக கதையின் அருமையான அம்சங்களை
    சுட்டிக் காட்டி விமர்சித்து முதல் பரிசு பெறும்
    நாம் விரும்பித் தொடரும் சிறந்த பதிவர்
    கீதா சம்பசிவம் அவர்களுக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. முதல் பரிசினை வென்ற கீதா மாமிக்கும், ரமணி சாருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. முதல் பரிசினை வென்றுள்ள திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கும், திரு. இரமணி ஐயா அவர்களுக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. தங்களின் தகவலுக்கு : http://muhilneel.blogspot.com/2014/02/blog-post_23.html

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலன் February 23, 2014 at 8:32 PM

      வாங்கோ Mr DD Sir.

      //தங்களின் தகவலுக்கு : http://muhilneel.blogspot.com/2014/02/blog-post_23.html//

      தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி. தங்களின் சரியான தகவலால் மட்டுமே நான் அந்தத்தளத்திற்குச் சென்று பார்த்து மகிழ முடிந்தது. அங்கு என் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளேன்.

      அவர்கள் செய்துள்ளது புதுமையான முயற்சியாகவும் அழகாகவும், பாராட்டும் படியாகவும் உள்ளது.

      நன்றியுடன் VGK

      Delete
  11. முதல் பரிசினை வென்றுள்ள திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கும், திரு. இரமணி ஐயா அவர்களுக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்! மேலும் பல பரிசுகளை வெல்ல வாழ்த்துகள்! நன்றி!

    ReplyDelete
  12. மிகச் சரியாக என் நாடிப்பிடித்து
    என் எண்ணத்தை மிக அருமையாக
    முழுமையாக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

    தீபாவளிப் பரிசுப் போட்டிக்கு நடுவராக
    இருக்க நேர்ந்தபோது நடுவராக இருப்பதால்
    இப்போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லையே
    என்கிற ஆதங்கம் அதிகம் இருந்தது

    பொறுக்கமுடியாது போட்டிகென இல்லாது
    பங்கு பெறுவோருக்கு ஒரு குறிப்பாக
    இருக்கட்டுமே என்று நானும் கூட
    போட்டிக்கான தலைப்பில் ஒரு கவிதை
    எழுதிப் பதிவிட்டிருந்தேன்

    விமர்சனத்திற்கு மிகப் பரந்து விரிந்த பார்வையும்
    ஆழ்ந்து மிக நெருங்கிப் பார்க்கும் மனோபாவமும்
    இருந்தால் போதும் (.இன்னும் சரியாக்ச் சொன்னால்
    மிக மிக விலகியும் மிக மிக நெருங்கியும்)
    என்பது எனது கருத்து.அதற்குப் பயிற்சிப் பெற
    தங்கள் போட்டி ஒரு நல்ல வாய்ப்பாக எனக்கு
    உள்ளது

    பரிசு கிடைப்பது கூட கரும்புத் தின்னக் கூலி போலத்தான்
    என்பதுதான் என் அபிப்பிராயம்

    மீண்டும் மனமார்ந்த நன்றியுடன்...

    ReplyDelete
    Replies
    1. Ramani S February 23, 2014 at 8:54 PM

      //மிகச் சரியாக என் நாடிப்பிடித்து என் எண்ணத்தை மிக அருமையாக முழுமையாக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.//

      ;))))) மிகவும் சந்தோஷம் Mr Ramani Sir. ;)))))

      >>>>>

      Delete
    2. //தீபாவளிப் பரிசுப் போட்டிக்கு நடுவராக இருக்க நேர்ந்தபோது நடுவராக இருப்பதால் இப்போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லையே என்கிற ஆதங்கம் அதிகம் இருந்தது.//

      அதே ஆதங்கம் என் “சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு நடுவராக இருப்பவருக்கும் மிக அதிகமாக இருப்பதை என்னால் நன்கு உணர முடிகிறது.

      >>>>>

      Delete
    3. //பொறுக்கமுடியாது போட்டிகென இல்லாது பங்கு பெறுவோருக்கு ஒரு குறிப்பாக இருக்கட்டுமே என்று நானும் கூட போட்டிக்கான தலைப்பில் ஒரு கவிதை எழுதிப் பதிவிட்டிருந்தேன்//

      ;))))) இதை என்னாலும் நன்கு உணர்ந்துகொள்ள முடிகிறது.

      அதுபோன்றே இந்த சிறுகதை விமர்சனப் போட்டியின் முடிவின் போதும், [அக்டோபர் 2014 தீபாவளிக்குப்பிறகே இது முடிவடையக்கூடும் என நம்புகிறேன்] .......

      தனது பரிசீலனைக்காக, ஒவ்வொரு சிறுகதைக்கும் வந்திருந்த அத்தனை விமர்சனங்களையும், ஒட்டு மொத்தமாக விமர்சனம் செய்து,

      இந்தப் போட்டியில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும்,

      இதில் எனக்கிருந்த ஈடுபாடுகளையும்,

      நடுவருடனான என் அணுகுமுறைகள் பற்றியும்,

      நடுவர் அவர்களின் கருத்துக்களை ஓர் நீண்ட கட்டுரையாக எழுதச்சொல்லி என் தளத்திலேயே
      வெளியிடலாம் என என் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

      அப்போது இந்தப்போட்டியில் இதுவரை நடுவராக செயல்பட்டவர் யார்? என்பதும் எல்லோருக்கும் பகிரங்கமாகத் தெரியப்படுத்தப்படும்.

      >>>>>

      Delete
    4. //விமர்சனத்திற்கு மிகப் பரந்து விரிந்த பார்வையும் ஆழ்ந்து மிக நெருங்கிப் பார்க்கும் மனோபாவமும் இருந்தால் போதும் (இன்னும் சரியாகச் சொன்னால் மிக மிக விலகியும் மிக மிக நெருங்கியும்) என்பது எனது கருத்து. அதற்குப் பயிற்சிப் பெற தங்கள் போட்டி ஒரு நல்ல வாய்ப்பாக எனக்கு உள்ளது.//

      மிக்க நன்றி. தங்களின் பாணி தனி தான். தங்கள் ஸ்டைல் தனி தான். பாராட்டுகிறேன்.

      இருப்பினும் ஒவ்வொருவரும் அவரவர்கள் பாணியில்
      விமர்சனம் எழுதுவதே நல்லது / சிறந்தது / வரவேற்கத்தக்கது என்று நான் நினைக்கிறேன்.

      இந்த உலகில் எவ்வளவு கோடி ஜனங்கள் இருப்பினும்,
      ஒருவரைப்போன்ற முகத்தோற்றம் மற்றவருக்கு இல்லாமல் உள்ளது மிகவும் விசித்திரம் அல்லவா!

      நம் கைவிரல்களே ஐந்தும் ஒரேவிதமாக இல்லாமல் தனித்தனியாக ஐந்து விதமாக அல்லவா உள்ளது !!

      அது போல இருப்பதால் தானே நமது பல்வேறு கைவேலைகளுக்கும் அவை உதவியாக உள்ளன !!!

      அதனால் ஒருவர் பாணியில் மற்றொருவர் எழுத வேண்டும் என நினைப்பதும் சரியல்ல என்று நான் கருதுகிறேன். இது தங்களுக்கும் மிக நன்றாகவே தெரிந்த விஷயம் தான். இதை இங்கு தங்களுக்கு எழுதுவதுபோல மற்றவர்களுக்காக மட்டுமே எழுதியுள்ளேன். ;)))))

      >>>>>

      Delete
    5. இதுவரை வெளியாகியுள்ள பரிசு முடிவுகளை அலசி ஆராயும்போது ஒருசில விஷயங்களை நாம் நன்கு உணர முடிகிறது.

      அதாவது போட்டி அறிவிப்பினில் கொடுத்துள்ளபடி, ஒரு முழுநீள கட்டுரை வடிவில் சுமார் 200 வார்த்தைகள் அல்லது 40 வரிகளுக்குக் குறையாமல், சற்றே வித்யாசமான கருத்துக்களையும் கொண்ட
      விமர்சனங்களே தேர்வாகின்றன என்பது தெளிவாகிறது.

      சமையலறை என்பது சற்று முன்னே பின்னே எப்படி இருந்தாலும்கூட, சமைத்த உணவு பரிமாறும் விதம் அன்பாகவும், பண்பாகவும் இருந்து பரிமாறப்படும் இடமும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தால் தானே ரஸித்து, ருசித்து நம்மால் சாப்பிட முடியும்!

      அதே போலவே விமர்சனங்களிலும் ”THE WAY OF PRESENTATION" என்பது பரிசுக்குத் தேர்வாக மிக மிக முக்கியம் என்பது என் சொந்தக் கருத்தாகும்.

      >>>>>

      Delete
    6. //பரிசு கிடைப்பது கூட கரும்புத் தின்னக் கூலி போலத்தான் என்பதுதான் என் அபிப்பிராயம்//

      இதை நான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன், ஸார்.

      இந்த ’என் சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் மிகச்சிறப்பாகவும், மிகவும் ஈடுபாட்டுடனும், தங்களின் எழுத்துக்களில் முத்திரை பதிக்கும் தனித்தன்மை வாய்ந்தவர்களாகவுமே
      தங்களின் விமர்சனங்களை எழுதி வருகிறார்கள்.

      அனைவருக்குமே பரிசளிக்க மாட்டோமா எனவும் எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

      அவர்களின் ஊக்கத்திற்கு உதவ முடியாமல் உள்ளோமே
      என்று எனக்கு ஒருவித ஏக்கம் ஏற்படுகிறது, என்பதே உண்மை.

      இருப்பினும் ஒருசில விதிமுறைகளுடன் ஏற்கனவே
      அறிவிக்கப்பட்டுவிட்ட இந்தப்போட்டியில், திடீரென்று
      இனி விதிமுறைகளை மாற்றுவது என்பது அவ்வளவாக
      நன்றாகவோ நாகரீகமாகவோ இருக்காது.

      அதற்காகவே நான் அவ்வப்போது, ஒருசில குறிப்பிட்ட கதைகளுக்கு மட்டும், போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்குமே ஓர் சிறிய போனஸ் பரிசினை அளிக்க முன் வந்துள்ளேன். [ உதாரணம் VGK 03 - சுடிதார் வாங்கப் போறேன். http://gopu1949.blogspot.in/2014/01/vgk-03.html ]

      அதைத்தவிர ஊக்கப்பரிசு பற்றியும் என் போட்டி
      அறிவிப்பினிலேயே தெரிவித்துள்ளேன்.

      ஒவ்வொருவரிடமிருந்தும், ஒவ்வொரு கதைக்கும் எனக்குக் கிடைத்திடும் விமர்சனங்களை எல்லாம் நான்
      அரிய பொக்கிஷமாக நினைத்து, தனியே சேமித்து, திரும்பத்திரும்ப, நினைக்கும் போதெல்லாம் படித்து மகிழ்ந்து இன்புற்று வருகிறேன்.

      >>>>>

      Delete
    7. என்னிடம் தனி அக்கறையும், அதிகப்பிரியமும்
      கொண்டுள்ள, அதே சமயம், தங்களைப்போலவே
      மிகச்சிறப்பாக எழுதும் திறமையும் கொண்ட, நான் மிகவும் எதிர்பார்த்த, எழுத்துலகப் ‘புலிகள்’ பலர், இன்னும் இந்தப் போட்டியிலேயே கலந்து கொள்ளாமல் பதுங்கியுள்ளனர். [அவர்களின் பெயர்களை இங்கு நான் குறிப்பிட விரும்பவில்லை]

      திடீரென்று அவர்களில் சிலர் சீறிப்பாய்ந்து வந்தாலும் வரலாம். கடைசிவரை வராமலேயே இருந்தாலும் இருக்கலாம். யாரையும் ஓரளவுக்கு மேல் வற்புருத்தி அழைக்க எனக்கு விருப்பம் இல்லை.

      >>>>>

      Delete
    8. ஆனால் ஒவ்வொரு சிறுகதைக்கும் ஒருசில [எனக்கு முற்றிலும் இதுவரை முன்பின் அறிமுகமே இல்லாதவர்கள்] புதியவர்கள் அவர்களாகவே எப்படியோ வருகை தந்து இந்தப்போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்து வருவது என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      இதனால் பலரின் புதிய அறிமுகங்களும் நட்புகளும் கிடைக்க மிகச்சிறந்த வாய்ப்பாக இந்தப்போட்டி எனக்கு அமைந்துள்ளதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள். ;)))))

      ஓரளவு மனம் திறந்து பேச வாய்ப்பளித்த தங்களுக்கு
      மீண்டும் என் மனமார்ந்த நன்றிகளுடன் ...

      கோபு [VGK]

      Delete
  13. சிறப்பான விமர்சனங்களை முத்த பரிசுக்குத் தேர்ந்தெடுத்த நடுவருக்கு நன்றிகள்.
    வெற்றியாளர்கள் திருமதி கீதா சாம்பசிவம் மற்றும்
    திரு. ரமணி ஆகியோருக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. சிறப்பான விமர்சனத்தை எழுதி வெற்றி பெற்ற இருவருக்கும்
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. அம்பாளடியாள் வலைத்தளம் February 23, 2014 at 10:21 PM

      //மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு//

      நன்றியெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். VGK 06 ’உடம்பெல்லாம் உப்புச்சீடை’ என்ற கதைக்கு விமர்சனம் அனுப்பப்போவதாக, மிகவும் அதிசயமாகச் சொல்லியிருந்தீர்களே ! அது என்னாச்சு ?

      எனக்கு இன்னும் வந்து சேரவில்லை. நாளை வியாழன் கடைசி நாள். அதுவும் இந்திய நேரம் மிகச்சரியாக இரவு 8 மணியுடன் தங்களுக்கான அரிய வாய்ப்பு நழுவி விடும்.

      நினைவிருக்கட்டும். அதன்பின் உடனே சற்று நேரத்தில் "VGK 07 ........." வெளியாகிவிடும். ஜாக்கிரதை !

      அதன் தலைப்பைப் பார்த்ததுமே, போட்டியில் கலந்து கொள்ளத்துடிக்கும் தங்கள் மனஸு ;))))) என்பது நிச்சயம்.

      அன்புடன் கோபு [VGK]

      Delete
  15. சகோதரி கீதா சாம்பசிவம் மற்றும் கவிஞர் ரமணி இருவருக்கும் எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. எனக்குப் பரிசு கிடைக்கும் என்பதே எதிர்பார்க்கவே இல்லை. திரு ரமணி சாரின் விமரிசனத்தையும்மீறி என்னையும் தேர்ந்தெடுத்த நடுவருக்கு என் நன்றியும், வணக்கமும். இதில் விமரிசனம் என்னிடமிருந்து வர தாமதம் ஆனால் உடனடியாக என்னை எழுதச் சொல்லி தொடர்ந்து ஊக்குவிக்கும் நண்பர், என் அருமை சகோதரர் திரு வைகோ அவர்களுக்கும் என் நன்றியும் வணக்கமும்.

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam February 24, 2014 at 6:11 AM

      வாங்கோ மேடம், வணக்கம், செளகர்யமாக டெல்லிக்கு போய்ச்சேர்ந்து விட்டீர்கள் என்பது இதனால் உறுதியாகி விட்டது. சந்தோஷம்.

      //எனக்குப் பரிசு கிடைக்கும் என்பதே எதிர்பார்க்கவே இல்லை. திரு ரமணி சாரின் விமரிசனத்தையும்மீறி என்னையும் தேர்ந்தெடுத்த நடுவருக்கு என் நன்றியும், வணக்கமும்.//

      நடுவர் யார் என்ற மர்மம் நீடிக்க வேண்டியதாக இருப்பதால். நடுவர் சார்பில் என் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும், மகிழ்ச்சிகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

      // இதில் விமரிசனம் என்னிடமிருந்து வர தாமதம் ஆனால் உடனடியாக என்னை எழுதச் சொல்லி தொடர்ந்து ஊக்குவிக்கும் நண்பர், என் அருமை சகோதரர் திரு வைகோ அவர்களுக்கும் என் நன்றியும் வணக்கமும்.//

      ஆரம்பத்தில் இந்தப்போட்டியில் கலந்து கொள்ளவே நீங்க பயந்தீர்கள். தொடர்ந்து நானும் வேப்பிலை அடித்தேன். இப்போ என்னடான்னா அடுத்தடுத்து பரிசுகள் வாங்கி, அதுவும் இந்தமுறை முதல் பரிசையே தட்டி, மற்றவர்களை பயமுறுத்தி வருகிறீர்கள். ;)))))))))))

      மனம் நிறைந்த இனிய அன்பு வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

      அன்புடன் கோபு [VGK]

      Delete
  17. முதல் இரண்டு, மூன்று கதைகளில் நிர்ணயிக்கப்பட்ட 200 வார்த்தைகளுக்கு மேல் செல்லக்கூடாது என நினைத்தேன். ஆனால் 2,3 பதிவுகளில் வெளி வந்த பரிசுக்குரிய விமரிசனங்களைப் படித்ததும் தான் எழுத வேண்டிய முறை புரிந்தது. அதன் பின்னர் தைரியமாகவும், தாராளமாகவும் விமரிசித்து எழுத ஆரம்பித்தேன். அந்த வகையில் எனக்குக் கற்பித்து வரும் திரு ரமணி சார் அவர்களுக்கும் என் நன்றி உரித்தாகுக.

    இதை சுரதா மொழி மாற்றி மூலம் எழுதுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam February 24, 2014 at 6:15 AM

      //முதல் இரண்டு, மூன்று கதைகளில் நிர்ணயிக்கப்பட்ட 200 வார்த்தைகளுக்கு மேல் செல்லக்கூடாது என நினைத்தேன். //

      தாங்கள் நினைத்தது முற்றிலும் தவறு.

      தாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பக்கம்பக்கமாக எழுதித்தள்ளலாம். அதற்கு வரம்பு ஏதும் சொல்லப்படவில்லை என்பதை முதலில் தெரிந்து கொள்ளவும்..

      சுமார் 200 வார்த்தைகள் அல்லது 40 வரிகளுக்குக் குறையாமல், ஒரு முழுநீள தொடர்க் கட்டுரை வடிவில் இருந்தால் நல்லது என்பதே போட்டி விதிகளில் சொல்லப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இங்கு நினைவூட்டுகிறேன்.

      அன்புடன் VGK

      Delete
  18. திரு ரமணி அவர்கள் விமரிசனம் எழுதத் தேவையான பார்வையைக் கூறி இருப்பதையும் கருத்தில் கொள்கிறேன். போட்டிகளில் இருந்தே விலகி நிற்கும் என்னைத் தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொள்ளத் தூண்டும் திரு வை.கோ. அவர்களுக்கும் என் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam February 24, 2014 at 6:17 AM

      //போட்டிகளில் இருந்தே விலகி நிற்கும் என்னைத் தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொள்ளத் தூண்டும் திரு வை.கோ. அவர்களுக்கும் என் நன்றி.//

      இனி நான் தங்களைத் தூண்டி விட்டுக்கொண்டே இருக்க வேண்டிய அவசியமே எனக்கு இருக்காது என நான் உறுதியாக நம்புகிறேன். ;)))))) அ ப் பா டி ! நி ம் ம தி !!

      Delete
  19. அப்பா என்ன அருமையான விமரிசனம். மிக்க அருமையாக அலசி,உலர்த்தி,மடித்து,இஸ்திரிபோட்டு, படிக்கப்,படிக்கத் தெவிட்டாதது. வாழ்த்துகள். ஆஹா முதல்ப் பரிசு. அன்புடன்

    ReplyDelete
  20. கீதா ஸாம்பசிவம் ரொம்பவே அழகான விமரிசனம். ரமணி அவர்களுடயது,உங்களுடயது என நல்ல தேர்வு.?,ஸமமான
    எண்ணத்தேர்வு. உங்கள் இருவரையும் பாராட்டி வாழ்த்துகிறேன்.அன்புடன்

    ReplyDelete
  21. முதற்பரிசுக்கு மாத்திரம் நான் சொந்தக்காரன் என்று தன இடத்தை விடாது தக்க வைத்துக் கொண்டிருக்கும் ரமணி சாருக்கு ஒரு ஜே. கீதா சாம்பசிவம் அவர்களும் மிக நேர்த்தியாக விமர்சனம் தந்து முதல் பரிசைத் தட்டிக் கொண்டுள்ளார். அவருக்கும் பாராட்டுக்கள்

    ReplyDelete
  22. முதல் பரிசு பெறும் கீதா சாம்பசிவம் அவர்களுக்குப் பாராட்டுக்கள். முதல் பரிசினை நான்கு முறையாகத் தொடர்ந்து பெறும் ரமணி சார் அவர்களுக்கு விமர்சன சக்ரவர்த்தி என்ற பட்டம் சாலப்பொருத்தம். விமர்சனம் எப்படியிருக்க வெண்டும் என்பதை அவர் எழுதிய விமர்சனங்களைப் படித்துத் தான் தெரிந்து கொண்டேன். விமர்சனம் என்பது ஒரு கலை. அது அவருக்கு நன்றாகவே கைவரப்பெற்றிருக்கிறது. இப்போட்டியை அறிவித்து அவரது விமர்சனத் திறமையை வெளிக்கொணர்ந்த கோபு சாருக்கும் நன்றிகள் பல!

    ReplyDelete
    Replies
    1. Kalayarassy G February 24, 2014 at 10:49 PM

      //இப்போட்டியை அறிவித்து அவரது விமர்சனத் திறமையை வெளிக்கொணர்ந்த கோபு சாருக்கும் நன்றிகள் பல!//

      தங்களின் அன்பான முதல் வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      ஊஞ்சலில் ஜாலியாக ஆடுவதுபோலவே, இனிவரும் அனைத்துப் போட்டிகளிலும், ஜாலியாகத் தாங்களும் தொடர்ந்து பங்கு கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      இன்னும் தங்களுக்காகவே 35 வாய்ப்புகள் உள்ளன. அதில் ஒரு வாய்ப்பு நாளை வியாழன் இரவு இந்திய நேரம் மிகச்சரியாக 8 மணியுடன் முடிவடைகிறது.

      நினைவு இருக்கட்டும்.

      அன்புடன் கோபு

      Delete
  23. தொடர்ந்து முதல் பரிசைத்தட்டிசென்றுகொண்டிருக்கும் திரு ரமணி அவ்ர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் கதையை ரசிப்பதா விமர்சனங்களை ரசிப்பதா இதுவே போட்டியாக எனக்கு தோன்றுகிறது.படிப்பவர்களுக்கு அருமையான விருந்து. நன்றி

    ReplyDelete
  24. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும், முதல் பரிசு திரு. ரமணி சார் அவர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.
    Vetha Elangathilakam.

    ReplyDelete
  25. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும், முதல் பரிசு திரு. ரமணி சார் அவர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.
    Vetha.Elanagthilakam.

    ReplyDelete
  26. இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. இந்த இரு வெற்றியாளர்களும், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    http://yaathoramani.blogspot.in/2014/02/blog-post_6318.html
    திரு. ரமணி அவர்கள்

    http://sivamgss.blogspot.in/2014/03/blog-post_2.html
    திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  28. முதல் பரிசை வென்ற திருமதி கீதா சாம்பசிவம் மற்றும் திரு ரமணி அவர்களைப் பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  29. பரிசு வென்ற திருமதி கீதாசாம்பசிவம் திரு ரமணி சார் அவர்களுக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  30. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் திரு ரமணி (பரிசு மேலே பரிசு பெற்ற) அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya September 27, 2015 at 7:16 PM

      //திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் திரு ரமணி (பரிசு மேலே பரிசு பெற்ற) அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி +மிக்க நன்றி :)

      Delete
  31. ஒவ்வொருத்தங்களும் இன்னாமா ரசிச்சு எளுதுறாங்க. பரிசு கெலிச்சவங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  32. திருமதி கீதாசாம்பசிவம் மேடம் திரு ரமணிஸார் வாழ்த்துகள்

    ReplyDelete
  33. இப்படியான பெண்கள் இன்னமும் வாழ்வதாலேயே அவர்களாலேயே நம் பாரம்பரியமும், கலாசாரமும், ஆசார அநுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பதும் கொஞ்சமாவது இருந்து கொண்டிருக்கிறது. இது அவ்வளவு விரைவில் மறையக் கூடிய ஒன்றல்ல என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது. // உண்மைதான்!!!

    பொதுவாக வங்கியெனச் சொன்னால் பணம் போடும் இடம்

    எடுக்கும் இடம் என்பதைவிட பணம் இருக்கும் இடம்

    எனத்தான் நாம் பொருள் கொள்கிறோம்



    அந்த வகையில் இந்தக் காதல் வங்கிக்கான

    பொருளாக காதல் இருக்குமிடம் நிலைக்குமிடம்

    எனச் சொல்லலாம்// இந்த ஆங்கிள் ரொம்ப நல்லா இருக்கே.. வெற்றி பெற்ற இருவர்க்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  34. முதல் பரிசினை வென்றுள்ள திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கும், திரு. இரமணி ஐயா அவர்களுக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்! மேலும் பல பரிசுகளை வெல்ல வாழ்த்துகள்! நன்றி!

    ReplyDelete