About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, February 28, 2014

VGK 07 - ஆப்பிள் கன்னங்களும் ....... அபூர்வ எண்ணங்களும் !



இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்: 06.03.2014 
வியாழக்கிழமை

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 
[ V A L A M B A L @ G M A I L  .  C O M ]

REFERENCE NUMBER:  VGK 07

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:


  

 


ஆப்பிள் கன்னங்களும் 

அபூர்வ எண்ணங்களும் !


[சிறுகதை]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


 

”டேய் ... சீமாச்சூ! ஒரு சின்ன ஹெல்ப் பண்ணணும்...டா. 

அந்தப் பிள்ளையார் கோயில் டெய்லரிடம் போய் இந்தப் புதுசா தைத்த ஜாக்கெட்டை கைப்பக்கம் கொஞ்சம் பிரிச்சு லூஸ் ஆக ஆக்கிக்கொண்டு வரணும்...டா. 

விலை ஜாஸ்தியான ஒஸ்தித் துணி...டா. 

ஜாக்பாட் நிகழ்ச்சியில் வந்த, குஷ்பு போல முதுகுப் பக்கம் பெரிய ஜன்னலா வைக்கச் சொன்னேன்டா. 

ஏதோ சுமாரான ஜன்னலாக வைத்துவிட்டு கைகள் பக்கம் ரொம்பவும் டைட்டா தைத்துத் தொலைத்து விட்டான்.....டா. 

அளவு ரவிக்கையைக் கொடுக்கும் போதே படித்துப் படித்து சொன்னேன்....டா. 

பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிவிட்டு, வேணும்னே இப்படி டைட்டாகத் தைத்துத் தொலைத்திருக்கிறான்....டா. 

நானே அந்த டெய்லரிடம் போகலாம்ன்னு தான் நினைச்சேன்....டா. 

ஆனாக்க அவனையும், அவன் அசட்டுச் சிரிப்பையும், திருட்டு முழியையும், பார்க்க எனக்கு சகிக்கலை...டா, பிடிக்கலை...டா”, என்றாள் என் பக்கத்து வீட்டு ஜிகினாஸ்ரீ. 

அவளின் உண்மைப் பெயர் என்னவோ ’ஜெயஸ்ரீ’ தான். இருந்தாலும் நான் அவளுக்கு என் மனதுக்குள் வைத்துள்ள பெயர் ஜிகினாஸ்ரீ. 

நொடிக்கு நூறு தடவை என்னை “டா” போட்டு பேசி வருகிறாள். “ஸ்ரீனிவாசன்” என்கிற என் முழுப்பெயரைச் சுருக்கி “சீமாச்சூ” என்கிறாள். அதிலும் எனக்கென்னவோ என் மனதுக்குள் ஒரு வித கிளுகிளுப்பு தான்.

சின்ன வயதிலிருந்தே எங்களுக்குள் மிகவும் பழக்கம். தாயக்கட்டம், பரமபத சோபன படம், பல்லாங்குழி, கண்ணாமூச்சி, பாண்டி, பம்பரம், கோலிக்குண்டு, சடுகுடு, பச்சைக்குதிரை தாண்டுதல் எனப் பல விளையாட்டுகள், நாங்கள் சேர்ந்தே ஜாலியாக விளையாடியதுண்டு.

என்னை விட அவள் இரண்டு வயது சிறியவள். விஞ்ஞான பாட நோட்டில் சயன்ஸ் டயக்கிராம் வரைய என் உதவியை நாடுவாள். அவளுக்கு சரியாக ஓவியம் வரைய வராது. 

இந்த வேலை, அந்த வேலை என்று பாகுபாடு இல்லாமல் என்னை நன்றாகவே எல்லாவற்றிற்கும் பயன் படுத்திக் கொள்வாள்.

நானும் மகுடிக்கு மயங்கும் நாகம் போல அவள் எது சொன்னாலும், சின்ன வயதிலிருந்து என்னையும் அறியாமல் தட்டாமல் செய்து கொடுத்துப் பழகி வந்து விட்டேன்.  

ஒருநாள் மதியம் அவள் வீட்டுக்கு நான் எதற்கோ சென்றிருந்தேன். அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து, அங்கிருந்ததோர் வார இதழைப் படித்துக்கொண்டிருந்தேன். இவள் குளிப்பதற்காக பாத்ரூமுக்குள் நுழைந்து விட்டாள். அவள் வீட்டிலோ அன்று வேறு யாருமே இல்லை.

சற்று நேரத்தில் பாத்ரூம் கதவை லேஸாகக் கொஞ்சூண்டு மட்டும் திறந்து, தன் கைகள் மட்டும் வெளியே தெரிவதுபோல, தன் உள்பாவாடையை என்னை நோக்கி வெளியே விட்டெறிந்தாள். 

”டேய் சீமாச்சூ, இந்தப் பாவாடையிலிருந்து நழுவிவிட்ட நாடாவை மளமளன்னு ஊக்குபோட்டு கோர்த்துக்கொடு...டா;  ஊக்கு அதோ அந்த அலமாரியில் மூன்றாவது தட்டில் முன்னுடிக்க இருக்கு பாரு...டா” என்றும் அவள் சொன்னதுண்டு.  

நானும் அன்று அவளின் அந்த உள்பாவாடை நாடாவை மளமளன்னு ஊக்கால் கோர்த்து, பயபக்தியுடன், பாத் ரூம் கதவின் கைப்பிடியில் சொருகிவிட்டு, அவளிடம் எடுத்துக்கோ என்று சொல்லிவிட்டு, வார இதழை விட்ட இடத்தில் தொடங்கி படித்ததுண்டு.


 


என் தந்தையும் அவள் தந்தையும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றி வரும் நண்பர்கள். என் தாயும் அவள் தாயும் மிகவும் சிநேகிதிகள். அக்கம்பக்கத்திலேயே தான் எங்கள் வீடுகள். நாங்கள் இவ்வாறு சிறு வயதிலிருந்தே ஒன்றாகப்பழகி வருவதை யாருமே தவறாகவோ, வித்யாசமாகவோ நினைப்பதில்லை. 

நான் படிப்பில் சுமார் தான். இப்போது பீ.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். அவள் அப்படியில்லை. படிப்பில் படு சுட்டி. ப்ளஸ் டூ வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் வாங்கிப் புகழ் பெற்றவள்.

படிப்பு மட்டும் அல்ல, அவள் அழகோ அழகு. அன்று சிறு வயதில் என்னைவிட நோஞ்சானாகத் தான் இருந்தாள். அவள் எட்டாவது படிக்கும் போது, அவர்கள் வீட்டில் திடீரென ஒரு விழா எடுத்தார்கள்.

காது, மூக்கு, கழுத்து, கைகள் என புதுப்புது நகைகள் அணிவித்திருந்தார்கள். இதுவரை கவுன், பாவாடை சட்டை, சுடிதார், நைட்டி என அணிந்திருந்தவளுக்கு பட்டுப்பாவாடை சட்டையுடன், நல்ல பளபளப்பான ஜிகினா ஜரிகைகளுடன் மின்னும் தாவணி அணிவித்திருந்தார்கள். தலை நிறைய கலர் கலராக பூச்சூடிக்கொண்டிருந்தாள். 


கழுத்தில் நெருக்கமாகத் தொடுத்த நறுமணம் கமழும் மல்லிகைப்பூ மாலை அணிவித்திருந்தனர். அந்த மாலையின் அடியில் குஞ்சலம் போல சில பட்டு ரோஜாக்கள் தொங்கிக்கொண்டிருந்தன.

பூப்போட்ட தாவணியின் ஜரிகைகள் ஜிகினா போல மிகவும் பளபளப்பாக டால் அடித்துக் கண்ணைப் பறிப்பதாக இருந்தது. 

அதைப் பார்த்து திகைத்துப்போன நான், அவளை ஜிகினாஸ்ரீ என்று வாய் தவறி அழைத்தேன். விழா அமர்க்களத்தில் நான் சொன்னது அவள் காதில் சரியாக விழவில்லை போலும். 

அவள் வயதுக்கு வந்து விட்டதாகப் பேசிக்கொண்டார்கள். எங்கள் எல்லோருக்கும் இனிப்புப் புட்டு, எள்ளுப்பொடி என ஏதேதோ தின்பதற்கான பலகாரங்கள் கொடுத்தார்கள். 

பெண்களெல்லாம் என் ஜிகினாஸ்ரீயை ஒரு நாற்காலியில் பட்டுத்துணி போட்டு அமர வைத்து, கூடி நின்று பாட்டுப் பாடினார்கள். பெண்மணிகளின் கோலாட்டமும் கும்மாளமுமாக விழா இனிதே நடைபெற்றது. 

எனக்குத்தான் இந்த திடீர் விழாவைப் பற்றி ஒன்றும் புரியவில்லை. என் தாய் உள்பட எனக்குப் புரியும் படியாக யாரும் எதுவும் எடுத்துச் சொல்லவும் இல்லை. 

பிறகு ஒரு நாள் இது பற்றிய என் சந்தேகத்தை நான் அவளிடமே கேட்டு விட்டேன். 

அதற்கு அவள் தன் தலையில் அடித்துக்கொண்டு, “மக்கு, மக்கு; பத்தாவது படிக்கிறாய்; உனக்கே உனக்காக ஒரு எழவும் புரியாது...டா. என்னைக் கேட்டது போல வேறு யாரையும் கேட்டு வைக்காதே...டா; அப்புறம் உனக்கு உதைதான் விழும்; 

உனக்கு முரட்டு மீசை முளைக்கும் போது ஒரு பொண்டாட்டி வருவாள்...டா. அவளிடம் போய் உன் சந்தேகங்களைக் கேளு...டா. அவ எல்லாம் விபரமா உனக்குச் சொல்லுவா...டா” என்றாள்.

இப்போது தான் அரும்பு மீசை முளைக்கலாமா என்று பார்த்துவரும் என் மேல் உதட்டுக்கும், நாசித் துவாரங்களுக்கும் இடைப்பட்ட பகுதியைத் தடவி பார்த்துக் கொண்டேன். 

அவளைவிட இரண்டு வயது பெரியவனாகிய எனக்கு, எங்கள் வீட்டில், வயது வந்து விட்டதாக விழா எதுவுமே எடுக்கவில்லை. இவளுக்கு மட்டும் என்ன திடீர் விழா ? என்பதே எனக்கான மிகப்பெரிய சந்தேகம். 

பள்ளியில் விசாரித்ததில் பருவம் அடைந்த வயதுப்பெண்களுக்கு நடைபெறும் விழாவென்றும், அதைப் ’பூப்பு நீராட்டு விழா’ என்று சொல்லுவார்கள் என்றும், ஏதேதோ தனக்குத் தெரிந்ததைச் சொன்னான் என் வயது நண்பன் ஒருவன்.

மொத்தத்தில் யாருக்கும் ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லையோ அல்லது எனக்குப் புரியும்படியாகத்தான் எடுத்துச் சொல்லத் தெரியவில்லையோ ! 

சரியென்று நானும் அதைப் பற்றி சந்தேகம் கேட்பதையே பிறகு ஒரு வழியாக விட்டு விட்டேன். 

  



அந்த விழா நடைபெற்ற பிறகு, அவளின் நடை உடை பாவனை தோற்றம், எல்லாவற்றிலும் ஒரு வித திடீர் மாற்றங்கள். 


திடீரென கொஞ்ச நாளிலேயே நல்ல சதை பிடிப்புடன் மொழு மொழுவென்று தேக அமைப்பு மாறி விட்டது. 

ஆப்பிள் போன்ற செழுமையான கன்னங்கள், ஆங்காங்கே அசத்தலான மேடு பள்ளங்கள் என ஆளே முற்றிலும் மாறி விட்டாள். 

என்னை “டா” போட்டு அழைப்பதும், அதிகாரமாக வேலை ஏவுவதும் மட்டும் இப்போதும் குறையவே இல்லை. அவள் எங்கு போனாலும் என்னையும் துணைக்கு அழைத்துப் போவதும், கடையில் வாங்கிய துணிமணிகள் போன்ற பொருட்களை என்னை விட்டு தூக்கி வரச்செய்வதுமாக, மொத்தத்தில் என்னை, ஒரு வேலையாள் போலவே நடத்தி வந்தாள். 

ஆனால் ஒன்று மட்டும் சொல்லியே ஆகவேண்டும். ஹோட்டலில் வயிறு முட்ட டிபனும், ஐஸ் க்ரீம் போன்றவையும், அவள் செலவிலேயே, அவ்வப்போது எனக்கு வாங்கித் தரவும் தவற மாட்டாள். 

நானும் அவளுடன் சிறு வயதிலிருந்தே பழகிய தோஷமோ என்னவோ தெரியவில்லை, வாலிப வயதாகிய எனக்கு அவள் மேல் நாளுக்கு நாள் ஒரு வித ஈர்ப்பும் இனக் கவர்ச்சியுமாக, என்னை ஆட்டிப் படைத்து வந்த ஏதோவொன்று, அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடியாடி உதவிகள் செய்து வரச் செய்தது என்னை. 

எனக்கு இப்போதெல்லாம் அவளைப் பார்க்காவிட்டாலோ, அவளுடன் பேசாவிட்டாலோ, ஏதோ பைத்தியம் பிடித்தாற்போல ஒரு உணர்வு ஏற்பட்டு வருகிறது.

நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு போகும் போது, அவள் பொறியியற் கல்லூரியில் நுழைந்து படிக்க முயற்சித்து வருகிறாள். 

சிறந்த படிப்பாளியும், வருங்கால இஞ்ஜினியருமான அவளை, சாதாரணமானதொரு பட்டதாரியாகப் போகும் நான் என் சுமாரான நிறத்துடனும், மிகச் சாதாரணமான பெர்சனாலிடியுடனும், என்னுடைய வாழ்க்கைத் துணைவியாக அடைய முடியுமா?

அவளுக்கு என் மேல் ஒரு வித ஈர்ப்பும், ஈடுபாடும் ஏற்பட நான் என்ன செய்வது என்று யோசித்து, முடிவில் என்னுடைய ஓவியத் திறமைகளை முழுவதும் உபயோகித்து, என் மனதில் முழுவதுமாக நிறைந்துள்ள என் அன்புக்குரிய அவளை மிகப்பெரிய அளவில் ஓவியமாகத் தீட்டி வர்ணம் கொடுத்து வந்தேன்.

அவளின் அதே, ஆப்பிள் கன்னங்களுடன் படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. அதை ப்ரேம் போட்டு அவளுக்கு என் அன்புப் பரிசாக அளிக்க நினைத்துக் கொண்டிருந்தேன். 

நேற்று மாலை நல்ல ராயல் ஆப்பிள் பழமொன்று பெரியதாக வாங்கி வந்திருந்தேன். நான் வரைந்த அவளின் படத்தையும், படத்தில் நான் வரைந்துள்ள அவளின் ஆப்பிள் கன்னங்களையும், நான் வாங்கி வந்த ஆப்பிளையும் மாறி மாறிப் பார்த்து வெகுநேரம் ரசித்துக்கொண்டிருந்தேன்.

பிறகு ஆப்பிள் பழத்தைக் கத்தியால் எனக்கேயுள்ள காதல் கலையுணர்வோடு அழகாக வெட்டினேன்.


நான் கஷ்டப்பட்டு வரைந்திருந்த படத்திலிருந்த அவளின் கன்னத்தின் மேல், அந்த ஒரேயொரு துண்டு ஆப்பிளை வைத்து, குனிந்து என் வாயினால் கவ்வி ருசித்தேன். 

அவள் கன்னத்தையே நான், லேசாகக் கடித்து விட்டது போன்ற ஒரு வித இன்பம் எனக்கு ஏற்பட்டது. 

அந்த நேற்றைய இன்ப நிகழ்ச்சியையே மீண்டும் மீண்டும் என் மனதில் நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்த என் கையில், இப்போது அவளின் ஜாக்கெட் டெய்லரிடம் சென்று ஆல்டர் செய்து வரக் கொடுக்கப்பட்டுள்ளது. 


   

டைட்டான அவளின் ஜாக்கெட்டை லூஸாக்க, அவள் சொன்ன அந்த டெய்லரிடம் போய் அமர்ந்திருந்தேன். 


ஜாக்கெட்டை மட்டுமில்லாமல் என்னையும் லூஸாக்கி விட்டது அந்த டெய்லர் சொன்ன சமாசாரம். 



“யாரு சாமி, அந்தப் புதுப் பையன்? அந்தப் பொண்ணு அடிக்கடி ஒரு வாட்டசாட்டமான, சிவத்த, வாலிபனுடன் பைக்கில் உட்கார்ந்து ரெளண்டு அடிக்குது !” என்ற ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் அந்த டெய்லர். 

“யோவ் ! வாய்க்கு வந்தபடி ஏதாவது உளறாதே; அவள் அப்படிப் பட்ட பெண் இல்லை” என்றேன் நான். 

“நான் இப்போ என்ன சொல்லிப்புட்டேன்னு நீங்க கோச்சுக்கிறீங்க? 

அந்தப் பையன் யாருன்னு உங்களுக்குத் தெரியுமோன்னு கேட்டேன். தெரிந்தா யாருன்னு சொல்லுங்க; இல்லாவிட்டால் தெரியாதுன்னு சொல்லிட்டுப் போங்க !

அந்தப் பையன் ஏதாவது சொந்தக்கார முறைப் பையனாக் கூட இருக்கலாம். அல்லது நண்பனாக இருக்கலாம். கூடவே அந்தப் பெண்ணுடன் காலேஜில் படிப்பவனாகக் கூட இருக்கலாம். 

கம்ப்யூட்டர், சாட்டிங் அல்லது செல் போன் தொடர்புன்னு ஏதேதோ நியூஸ் பேப்பர்களில் போடுறாங்களே அது போல கூட இருகலாம். 

ஏதோ பாய் ஃப்ரண்டுன்னு சொல்றாங்களே அதுவாகவும் கூட இருக்கலாம்.

அவன் யாராக இருந்தாலும் சரி; நமக்கு எதற்கு வீண் ஊர் வம்பு” 
என்று சொல்லி, கைப்பக்கம் சற்று லூஸாக்கிய அந்த ஜாக்கெட்டை ஒரு பேப்பர் பையில் போட்டு என்னிடம் கொடுத்தார் அந்த டெய்லர். 

இதையெல்லாம் கேட்ட எனக்கு ஒரே பதட்டமாகிப் போனது. ஜிகினாஸ்ரீ ஒரு வேளை எனக்குக் கிடைக்காமல் போய் விடுவாளோ? 

இனியும் தாமதிக்காமல் அவளிடம் என் காதலைத் தெரிவித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேனே தவிர, அவளிடம் எப்படி ஆரம்பிப்பது, எப்படிப் பேசுவது என்பது ஒன்றும் புரியாமல் ஒரே குழப்பமாக இருந்தது, எனக்கு. 

தன் புது ஜாக்கெட்டை கையில் வாங்கிக் கொண்டவள்,

“தாங்க்யூ.....டா சீமாச்சூஊஊ...” என்றாள். 

அப்போதே சுடச்சுட அவளிடம் ஏதோ கேட்க நினைத்த நான், சற்றே தயங்கினேன். 

“அந்த டெய்லர் உன்னிடம் ஏதாவது கேட்டானா” என்றாள் அவளாகவே. 

“நீ யாருடனோ பைக்கில் ஊர் சுற்றுகிறாயாமே; அதை அவர் பார்த்து விட்டதில் உனக்கு ஒரு குற்ற உணர்ச்சியோ ! அதனால் தான் நீ டெய்லர் கடைக்குச் செல்லாமல் என்னை அனுப்பினாயோ?” 

கேட்டுவிடலாமா என்று நினைத்தும் என் வாயிலிருந்து வார்த்தைகள் வெளியே வர மறுத்தன.

“அந்த டெய்லர் என்னிடம் என்ன கேட்பார் என்று நீ எதிர்பார்க்கிறாய்?” என்றேன், மிகவும் புத்திசாலித் தனமாக அவளை மடக்குவதாக நினைத்து. 

”நீ சுத்த ட்யூப் லைட்டுடா, சீமாச்சூ; ஜாக்கெட்டை லூஸாக்கிக் கொடுத்தற்கு ஏதாவது காசு கேட்டானா?” என்றாள் சர்வ அலட்சியமாக. 

“அதெல்லாம் ஒண்ணும் கேட்கவில்லை. எல்லாமே அவன் செய்த கோளாறு தானே,  எப்படிக் கேட்பான்” என்று மட்டும் சொல்லிவிட்டு என் வீடு நோக்கி சென்று விட்டேன்.

    

நான் வரைய ஆரம்பித்த அவளின் படத்தை பைனல் டச் அப் செய்து, கீழே ஜிகினாஸ்ரீ என்கிற ஜெயஸ்ரீ என்று எழுதி, என் கையொப்பமிட்டு, ப்ரேம் செய்து கொண்டு வந்து விட்டேன்.

என் தாயாரிடம் மட்டும் காட்டினேன். “சபாஷ்...டா ஸ்ரீனிவாஸா, சூப்பரா வரைந்திருக்கிறாய். வரும் பதினெட்டாம் தேதி அவளுக்கு பிறந்த நாள் வருகிறது. அப்போது கொண்டுபோய் அவளிடம் கொடு. ரொம்பவும் சந்தோஷப்படுவாள்” என்றாள் என் அம்மா. 

“தாங்க் யூ..... ம்மா” என்றேன். 

ஆனால் பதினெட்டாம் தேதிக்கு, முழுசா இன்னும் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்தப்பத்து நாட்களும் பத்து யுகமாக, நத்தை வேகத்தில் நகர்ந்தன. 

ஒருவழியாக அந்தப் பதினெட்டாம் தேதியும் வந்தது. 

நானும் என் அம்மாவும் அவர்கள் வீட்டுக்குப் புறப்பட்டோம். ஞாபகமாக அழகிய பேப்பர் கலர் பேக்கிங்குடன் படத்தை ஒரு ஃபேன்ஸி பையில் போட்டு கையில் எடுத்துச் சென்றேன்.

அவர்கள் வீட்டுக்குள் நுழையும் போதே, நிறைய ஜோடி காலணிகள் வீட்டு வாசலில் கிடந்ததைக் காண முடிந்தது. 

உள்ளே அங்கு யார் யாரோ புது முகங்களுடன், பழத்தட்டுகள் மற்றும் பரிசுப் பொருட்களுடன் சோபாவில் அமர்ந்திருந்தனர்.

எங்களை ஜிகினாஸ்ரீயின் பெற்றோர்கள் வரவேற்று அமரச் செய்தனர். அவர்களுக்கு எங்களையும், எங்களுக்கு அவர்களையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தனர். 

டெய்லர் சொன்ன அதே வாட்டசாட்டமான சிவத்த வாலிபன், என் கையைப் பிடித்து குலுக்கியவாறே “அயம்... சுரேஷ்... சாப்ட்வேர் இஞ்சினியர்.... டி.ஸி.எஸ்; நெள அட் யுனைடெட் ஸ்டேட்ஸ்; ஜெயஸ்ரீயின் அத்தை பிள்ளை தான் நான்; கிளாட் டு மீட் யூ; ஜெயஸ்ரீ உங்களைப்பற்றி நிறைய என்னிடம் சொல்லியிருக்கிறாள்” என்றான். 

புத்தம் புதியதொரு பட்டுப்புடவையில், சர்வ அலங்காரங்களுடன், என் ஜிகினாஸ்ரீ, கையில் ஒரு ட்ரேயில் ஸ்வீட் காரம் முதலியன எடுத்து வந்து, மிகவும் நிதானமாக, முகத்தில் வெட்கத்துடன் கூடிய புன்னகையுடன், எல்லோருக்கும் விநியோகம் செய்ய ஆரம்பித்தாள். 

என்னைப் பார்த்ததும் “வாடா சீமாச்சூ, நீ எப்போ வந்தாய்? என்னுடைய ’வுட் பீ’ சுரேஷைப் பார்த்தாயா, உனக்கு அவரைப் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டாள்.

“பார்த்தேன், உனக்கு எல்லா விதத்திலும் மிகவும் பொருத்தமானவரே” என்றேன்.

என் கையிலிருந்த, நான் வரைந்துள்ள அவளின் படத்தை, அவளிடம் கொடுக்கத் தோன்றவில்லை எனக்கு. 

ஆனாலும் அவளாகவே என் கையிலிருந்து வெடுக்கென அதைப் பிடுங்கிக் கொண்டு பிரித்துப் பார்த்து, அசந்து போனாள். 

“யூ ஆர் ரியல்லி வெரி கிரேட்....டா..... சீமாச்சூ” என்று கூறி என் கையைப் பிடித்து ஒரு குலுக்குக் குலுக்கி, விரல்களை முத்தமிட்டு, தன் கண்களில் ஒத்திக் கொண்டாள். 

பிறகு தன் வருங்காலக் கணவன் சுரேஷிடம் அந்தப் படத்தை நீட்டினாள். அவரும் அதை ரசித்துப் பார்த்து விட்டு, எழுந்து என்னிடம் ஓடி வந்து என்னைக் கட்டித் தழுவிக் கொண்டார். என்னை மிகவும் புகழ்ந்து பாராட்டினார்.

“எப்படி ஸார், இவ்வளவு தத்ரூபமாக வரைய முடிகிறது உங்களால்?” என்றார் சுரேஷ். 

“எந்த உருவம் என் மனதில் ஆழமாகப் பதியுமோ, அதை என் கைகள் மிகச் சுலபமாக வரைந்து விடும்” என்று சொல்லத் துடித்தது, என் உதடுகள். ஆனால் நான் எதுவுமே சொல்லவில்லை. 

“எங்க சீமாச்சூ .... சின்ன வயதிலிருந்து நன்றாக படங்கள் வரையுவான். எனக்கு சயன்ஸ் டயக்ராம் எல்லாம் இவன் தான் வரைந்து தந்து உதவுவான். படம் வரைவதில் எங்கள் சீமாச்சூ... சீமாச்சூ... தான்” என்று பெருமையாகக் கூறினாள், ஜிகினாஸ்ரீ. 

சுரேஷுக்கும் ஜெயஸ்ரீக்கும் வரும் தை பிறந்ததும் கல்யாணம் நடத்தலாம்னு இருக்கிறோம் என்று பொதுவாக அங்கு கூடியிருப்பவர்களுக்கும், எங்களுக்குமாக ஒரு தகவல் போல, ஜெயஸ்ரீயின் அப்பா மிகுந்த சந்தோஷத்துடன் தெரிவித்தார்.

“டேய், சீமாச்சூ, இந்தக் கல்யாணம் முடியும் வரை நிறைய வேலைகள் இருக்கும்....டா. நீ தான்...டா எனக்குக் கூடமாட இருந்து எல்லா உதவிகளும் செய்யணும். எனக்குக் கூடப் பிறந்த அண்ணன் தம்பிகள் யாரும் இல்லாத குறையை நீ தான்...டா தீர்த்து வைக்கணும்” என்று உத்தரவு பிறப்பித்தாள், என் அன்புக்குரிய ஜிகினாஸ்ரீ.

நான் வரைந்த ஓவியம் அவர்கள் வீட்டுச் சுவரில் ஆணி அடித்து அப்போதே மாட்ட ஏற்பாடானது. 

எவனோவொரு வேலையாள் சுத்தியலால் ஆணியை ஓங்கி அடிக்கும் போது, ஒரு ஆணி பறந்து வந்து, அங்கே அருகில் அமர்ந்திருந்த, என் நெற்றிப் பொட்டில் வேகமாக மோதித் தெறித்து கீழே விழுந்தது. நல்ல வேளையாக, என் கண் விழியினில் படாமல் தப்பியது. 

அதை யாரும் கவனிக்காத போதும், என்னால் மட்டுமே அந்த வலியை நன்கு உணர முடிந்தது. 

’ஜெயஸ்ரீ’ வீட்டில் சிற்றுண்டி சாப்பிட்டிருந்த நான் எழுந்து அருகிலிருந்த, வாஷ்பேசினில் கை கழுவிக் கொண்டேன்.



oooooOooooo





”VGK 05 - காதலாவது 
கத்திரிக்காயாவது”

என்ற சிறுகதை 
விமர்சனப்போட்டிக்கு 
ஏராளமானவர்கள் 
உற்சாகத்துடன் கலந்துகொண்டு
தாராளமாக விமர்சனங்கள் 
எழுதி அசத்தியுள்ளது
மிகவும் சந்தோஷமாக உள்ளது.

அந்தப்போட்டிக்கான விமர்சனங்களில்
பரிசுக்குத் தேர்வானவைகள் மட்டும்
வெகு விரைவில் வெளியாக உள்ளன 
என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன் கோபு [ VGK ]

oooooOooooo




”யாரோ சொன்னது”

"எதை எழுதினாலும் எழுதுபவரின் மன ஓட்டம் வரிகளில் படிந்து ஆற்றோட்டம் போல அழகாக அமைவது எழுதுவதின் சிறப்பைக் கூட்டும்.  


கதைக்கு மட்டுமல்ல .... விமரிசனங்களுக்கும் விமரிசிப்பவரின் இந்த எண்ண ஓட்ட அமைதி இன்றியமையாத ஒன்று.

விமரிசிக்கப் போகும் வரிகளை // ......... // இப்படி அடைப்புக்குறிக்குள் சிறையிட்டு துண்டு துண்டாக அந்த அடைப்புச் செய்தியை விமரிசிப்பது அல்லது சிறப்பித்து சொல்வது, சொல்லப் போகும் எண்ண ஓட்ட வேகத்திற்கு தடுப்பு அணை போட்டதாகவே அமையும்.  

இந்த அடைப்பாகிய தடுப்பு வேலிகள் நடுநடுவே குறுக்கிட்டு குறுக்கிட்டு கோர்வையாகச் சொல்லப் போவதின் அழகையும் குலைக்கும்.   

விமரிசிக்கப் போகும் வரிகளை உள்வாங்கிக் கொண்டு தன் மொழியில், தன் நடையில், அவற்றையே வெளிப்படுத்தினால், விமரிசனங்களின் அழகும் கூடும்."  

                                  [ இது யாரோ எப்போதோ எங்கோ என்றோ சொன்னது ]



இப்படி அடிக்கடி 'விமரிசனக்கலை' பற்றி பலர் சொன்னதை அல்லது நான் படித்ததை அவ்வப்போது வெளியிடுவதாக இருக்கிறேன். 

எங்கிருந்தெல்லாமோ திரட்டப்படும் இப்படியான கருத்துக்கள் விமரிசனங்கள் எழுதுவோருக்கு உதவியாக இருந்தால் எனக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி தான்.


அன்புடன் கோபு [ VGK ]


50 comments:

  1. ’ஜெயஸ்ரீ’ வீட்டில் சிற்றுண்டி சாப்பிட்டிருந்த சீமாச்சு எழுந்து அருகிலிருந்த, வாஷ்பேசினில் கை கழுவிக் கொண்டதோடு மனதையும் கழுவிக்கொண்டு கதையை நிறைவாக்கிய விதம் நேர்த்தியாக இருக்கிறது..!பாராட்டுக்கள்..!.

    ReplyDelete
  2. கதை அருமை... விமரிசனக்கலை பற்றிய தகவல்களுக்கும் நன்றி ஐயா...

    ReplyDelete
  3. விமர்சனக் கலை பற்றிய செய்திகள் அருமை ஐயா
    நன்றி

    ReplyDelete
  4. எனக்கும் சீமாச்சு வாஷ்பேஸினில்,கைகழுவிக்கொண்ட வரி படிக்கும் போது, மனதையும் கழுவிக்கொண்டிருப்பான், எவ்வளவு அழகான முடிவு, வித்தியாஸமாக உணர்த்தியது நல்ல ரஸனை.
    அன்புடன்

    ReplyDelete
  5. ”ஜெயஸ்ரீ என்கிற ஜிகினாஸ்ரீ” அழகான கதைக்கு பாராட்டுகள் சார்.

    போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. விமர்சனக்கலை பற்றிய விளக்கம் மிகவும் பயனுள்ளது..

    ReplyDelete
  7. ஒரு பதிவுக்கு கருத்துரை வழங்குவது வேறு..
    விமர்சனம் எழுதுவது கருத்துரையை விட மாறுபட்டது என்பதை தெளிவாக்கி கதையைப் பற்றிய பார்வையை கூர்மைப்படுத்துகிறது..சிறப்பான முயற்சி..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  8. Mail message from Mr. R. Rajagopal Sir [PA to GM/F, BHEL, Tiruchi-14]

    2163012 - RAJAGOPAL R 10:02 (3 minutes ago) to me

    அன்புள்ள கோபு சார் அவர்களுக்கு,

    தங்கள் கதையை ரசித்துப்படித்தேன். ஜிகினாஸ்ரீ, சுரேஷ் இவர்களின் கள்ளங்கபடமற்ற மனத்தையும் சீமாச்சூவின் பக்குவத்தையும் உணர்ந்தேன். நன்றி.

    இப்படிக்கு
    ராஜகோபால்//

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    முதன் முதலாக கள்ளங்கபடமற்ற தூய செந்தமிழினில் பின்னூட்டம் இட்டுள்ள தங்கள் பக்குவத்தை நானும் உணர்ந்து மகிழ்ந்தேன். ;))))))

    மிக்க நன்றி.
    அன்புடன் கோபு

    ReplyDelete
  9. வயசுக்கேற்ற சீமாச்சுவின் ஆசைகள் அப்படியே பிரதிபலிக்க வைத்திருப்பதில் கதை ஆசிரியர் எதார்த்தமாக வார்த்தைகளைபயன்படுத்திஅமர்க்களப்படுத்தியிருக்கார் நன்றி

    ReplyDelete
  10. கண்களில் பட்ட ஓவியம் ஒன்று
    நெஞ்சினில் படிந்தது காவியமாய் !ஆக
    கதை படிந்து விட்டது விமர்சனம் ?....
    வரும் வரும் வந்துகொண்டே இருக்குது ஐயா :))

    ReplyDelete
  11. அருமையான கதை.....

    போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்......

    ReplyDelete
  12. சீமாச்சூ...
    உனக்கென்றே எங்கோ ஒரு பொண்ணு பொறந்திருப்பா...டா...
    கவலைப்படாதே...டா...
    அவளைக் கண்ணாலம் கட்டிக்கிட்டு அவளைக் காதல் பண்ணு...டா...!

    ReplyDelete
  13. சீமாச்சூ...
    உனக்கென்றே எங்கோ ஒரு பொண்ணு பொறந்திருப்பா...டா...
    கவலைப்படாதே...டா...
    அவளைக் கண்ணாலம் கட்டிக்கிட்டு அவளைக் காதல் பண்ணு...டா...!

    ReplyDelete
  14. ஒரு வாலிபனின் எண்ண ஓட்டத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ள விதம் அருமை.யதார்த்தமான முடிவு.பாராட்டுகள்.--

    ReplyDelete
  15. ஒரு வாலிபனின் எண்ண ஓட்டத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ள விதம் அருமை.யதார்த்தமான முடிவு.பாராட்டுகள்.--

    ReplyDelete
  16. sirugadhai migavumarumai.yadhrathamana mudivu.vazhthukkal

    ReplyDelete
    Replies
    1. Swarnam Venkateswaran March 8, 2014 at 10:43 PM
      //sirugadhai migavum arumai//

      Swarnam VenkateswaranMarch 8, 2014 at 10:45 PM
      //sirugadhai migavumarumai.yadhrathamana mudivu.vazhthukkal//

      தங்களின் அன்பான முதல் வருகைக்கும், அழகான பாராட்டுக்கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  17. உயர்திரு கோபு அவர்களே!
    மிகவும் யதார்த்தமான கதை. வாலிபம் வந்த போதும், மழலை மனம் மாறாத சீமாச்சூ'வின் குணாதிசயங்கள் வாசகர் மனதைக் கவர்கின்றது.
    அருமையான சிறுகதைக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இல. விக்னேஷ் March 17, 2014 at 8:49 PM

      வாருங்கள், வணக்கம் நண்பரே ! என் வலைத்தளத்திற்கு தங்களின் முதல் வருகைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      //உயர்திரு கோபு அவர்களே!
      மிகவும் யதார்த்தமான கதை. வாலிபம் வந்த போதும், மழலை மனம் மாறாத சீமாச்சூ'வின் குணாதிசயங்கள் வாசகர் மனதைக் கவர்கின்றது.
      அருமையான சிறுகதைக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்.//

      தங்களின் பாராட்டுக்கள் மகிழ்ச்சியளிக்கின்றன. தொடர்ந்து வாருங்கள். வாராவாரம் நடைபெறும் சிறுகதை விமர்சனப் போட்டிகளில் முடிந்தால் பங்கு கொள்ளுங்கள்.

      மேலும் விபரங்களுக்கு

      http://gopu1949.blogspot.in/2014/01/blog-post.html

      அன்புடன் கோபு

      Delete
  18. வணக்கம் திரு கோபு ஐயா,

    பதிவுலக பிதாமகர் என பரிசு பெற்ற ஒருவர் தங்களை பாராட்டியிருந்ததும், எங்கள் மதுரையின் பதிவுலக ஆசான் திரு சீனா அவர்களின் குறிப்பையும் பார்த்து முதன் முறையாக தங்கள் தளத்திற்கு வந்தேன்.

    சிறுகதை மிகச் சிறப்பாக இருந்தது. ஆங்காங்கே கண்கள் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ள சிறிய படங்கள். எதிரெதிரே இருவர் பேசுவதை (visual) நேரில் பார்ப்பது போல் உணர்வை தோன்றச் செய்ய சொற்றொடர்களை வண்ணங்களால் பிரித்த விதம் அருமை. அடுத்து வரும் சிறுகதைகளில் நானும் விமர்சகனாக கலந்து கொள்கிறேன்.

    வலைப்பூவை நான் மிகச் சில நேரங்களில் மட்டுமே பார்க்கிறேன். எனது வலைப்பூ http://www.sathikkalaam.blogspot.in/

    நன்றி, நட்புடன் தொடர்கிறேன்

    எஸ்.சம்பத்

    ReplyDelete
    Replies
    1. எஸ் சம்பத் March 22, 2014 at 8:45 AM

      //வணக்கம் திரு கோபு ஐயா,//

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா. தங்களின் முதல் வருகை மிகவும் மகிழ்வளிக்கிறது.

      //பதிவுலக பிதாமகர் என பரிசு பெற்ற ஒருவர் தங்களை பாராட்டியிருந்ததும், எங்கள் மதுரையின் பதிவுலக ஆசான் திரு சீனா அவர்களின் குறிப்பையும் பார்த்து முதன் முறையாக தங்கள் தளத்திற்கு வந்தேன்.//

      சந்தோஷம். தங்களை இங்கு வரவழைக்க காரணமாக இருந்த திரு. ரமணி அவர்களுக்கும், என் அருமை நண்பர் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களுக்கும் என் நன்றிகள்.

      //சிறுகதை மிகச் சிறப்பாக இருந்தது.//

      மிகவும் சந்தோஷம்.

      //ஆங்காங்கே கண்கள் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ள சிறிய படங்கள். எதிரெதிரே இருவர் பேசுவதை (visual) நேரில் பார்ப்பது போல் உணர்வை தோன்றச் செய்ய சொற்றொடர்களை வண்ணங்களால் பிரித்த விதம் அருமை.//

      அடியேன் எது செய்தாலும் அதில் ஒரு முழுமையும், முழுத்திருப்தியும் [PERFECTION & SELF SATISFACTION] இருக்க வேண்டும் என நினைத்து என்னால் இயன்றவரை முயற்சிப்பேன். அதுவே என் பலம் மற்றும் பலகீனமாகும்.

      //அடுத்து வரும் சிறுகதைகளில் நானும் விமர்சகனாக கலந்து கொள்கிறேன்.//

      கட்டாயமாகக் கலந்து கொள்ளுங்கள். இந்த வாரப்போட்டியிலேயே கலந்து கொள்ளுங்கள்.

      தலைப்பு: “மறக்க மனம் கூடுதில்லையே”
      இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html
      இறுதிநாள்: வரும் வியாழன் இரவு 8 மணிக்குள் மட்டுமே.

      மேலும் தங்களுக்கு 30 வாய்ப்புகளும் உள்ளன.

      ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ஒரு சிறுகதை வீதம் வெளியிடப்படும். அதிலிருந்து 6-7 நாட்களுக்குள் விமர்சனம் எனக்கு வந்து சேர வேண்டும்.

      தாங்கள் விமர்சனம் எழுதி அனுப்பியதும் என்னிடமிருந்து ஒரு STD. ACKNOWLEDGEMENT தங்களுக்குக் கிடைக்க வேண்டும். அது மிகவும் முக்கியம். அதை FOLLOW செய்துகொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பாகும். பிரதி வியாழன் இரவு 8 மணிக்கு மேல் வரும் விமர்சனங்கள், போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அதனால் ஒரு நாள் முன்பாகவே அதாவது புதன் கிழமைக்குள் அனுப்பி வைக்க முயற்சிக்கவும்.

      தங்களின் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

      //வலைப்பூவை நான் மிகச் சில நேரங்களில் மட்டுமே பார்க்கிறேன். எனது வலைப்பூ http://www.sathikkalaam.blogspot.in/ //

      தகவலுக்கு மிக்க நன்றி. இந்த என் ‘சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ முடியும் வரை பிறர் பதிவுகளுக்குச்சென்று, நான் கருத்துச்சொல்வதை பெரும்பாலும் நிறுத்தி வைத்துள்ளேன். நேரமின்மை மட்டுமே காரணமாகும்.

      //நன்றி, நட்புடன் தொடர்கிறேன் ...... எஸ்.சம்பத்//

      ஆஹா, நன்றி, தொடருங்கள் ஐயா.

      எனினும் தங்களின் பதிவினில் நான் இன்று FOLLOWER ஆகியுள்ளேன் என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

      அன்புடன் கோபு [VGK]

      Delete
  19. வணக்கம் ஐயா,

    தங்கள் தளத்தினை பின்பற்றுவதற்காக பல முறை முயற்சித்தும் வரவில்லை, ஏன் என தெரியவில்லை. எனது மின்னஞ்சல் முகவரி dss1961@gmail.com. புதிய பதிவுகளை பகிரும் நட்புகளில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன்

    நட்புடன்
    எஸ்.சம்பத்

    ReplyDelete
    Replies
    1. எஸ் சம்பத் March 22, 2014 at 9:31 PM

      //வணக்கம் ஐயா,//

      வாருங்கள். வணக்கம்.

      //தங்கள் தளத்தினை பின்பற்றுவதற்காக பல முறை முயற்சித்தும் வரவில்லை, ஏன் என தெரியவில்லை.//

      அது ஏன் என எனக்கும் தெரியாது ஐயா. கணினி பற்றிய தொழில்நுட்பங்கள் எனக்கு எதுவுமே தெரியாது. புரியாது.

      ஏதோ நான் எனக்குத்தெரிந்த வரை பதிவிடுவேன். வெளியிடுவேன். அத்தோடு சரி.

      பல நேரங்களில் அந்த என் பதிவுகள் டேஷ்-போர்டிலேயே தெரிவதும் இல்லை. பிறரின் பதிவுகளும் என் டேஷ் போர்டிலே பெரும்பாலான நேரங்களில் தெரிவதும் இல்லை. என்னவோ நடக்குது. மர்மமாய்த்தான் இருக்குது.

      // எனது மின்னஞ்சல் முகவரி dss1961@gmail.com. புதிய பதிவுகளை பகிரும் நட்புகளில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன்//

      ஆகட்டும் ஐயா. தகவலுக்கு மிக்க நன்றி

      //நட்புடன்
      எஸ்.சம்பத்//

      அன்புள்ள கோபு [VGK]

      Delete
  20. வணக்கம் ஐயா,

    தங்கள் தளத்தினை பின்பற்றுவதற்காக பல முறை முயற்சித்தும் வரவில்லை, ஏன் என தெரியவில்லை. எனது மின்னஞ்சல் முகவரி dss1961@gmail.com. புதிய பதிவுகளை பகிரும் நட்புகளில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன்

    நட்புடன்
    எஸ்.சம்பத்

    ReplyDelete
  21. இந்த சிறுகதைக்கான விமர்சனப்போட்டியில் கலந்துகொண்ட திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் [அவர்களின் விமர்சனம் போட்டியின் நடுவர் அவர்களால் பரிசுக்குத்தேர்வாகாமல் இருந்தும்கூட] அவர்களின் விமர்சனத்தைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்கள்.

    இணைப்பு: http://muhilneel.blogspot.com/2014/04/blog-post_15.html

    அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் VGK

    ReplyDelete
  22. இந்த சிறுகதைக்கு பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு இதோ:

    http://swamysmusings.blogspot.com/2014/10/blog-post_20.html

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட அதனைத்தன் பதிவினில் வெளியிட்டு சிறப்பித்துள்ள முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]
    ooooooooooooooooooooooooooo

    ReplyDelete
  23. பெண்களின் மதி நுட்பம் ஆண்களுக்கு இல்லைதான்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

      அன்புடையீர்,

      வணக்கம்.

      31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இதுவரை, 2011 ஜனவரி முதல் 2014 பிப்ரவரி வரையிலான 38 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)

      என்றும் அன்புடன் VGK

      Delete
  24. உங்க கதைகள்லாம் படிக்கும்போது உஙக பக்கத்துலயே உக்காந்து கேட்பது போல இருக்கு.அதுதான் உங்க எழுத்து திறமைக்கு கிடைத்த வெற்றி

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் August 25, 2015 at 12:03 PM

      வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

      //உங்க கதைகள்லாம் படிக்கும்போது உஙக பக்கத்துலயே உக்காந்து கேட்பது போல இருக்கு. அதுதான் உங்க எழுத்து திறமைக்கு கிடைத்த வெற்றி//

      ஆஹா ...... சும்மாச் சொக்க வைக்கும் கருத்துகள் :)))))) மிக்க நன்றீங்கோ !

      Delete
    2. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

      வணக்கம்மா.

      31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 பிப்ரவரி வரை முதல் 38 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      பிரியமுள்ள நட்புடன் கோபு

      Delete
  25. உங்கள் எல்லா சிறுகதைகளும் சிறப்பு சிறுகதைகள்.

    உங்களுக்குன்னு தலைப்பு கிடைக்கறது பாருங்கோ.

    பரிசு பெறப்போகும் விமர்சகர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya September 27, 2015 at 7:19 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்.

      //உங்கள் எல்லா சிறுகதைகளும் சிறப்பு சிறுகதைகள். //

      மிக்க மகிழ்ச்சி.

      //உங்களுக்குன்னு தலைப்பு கிடைக்கறது பாருங்கோ.//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! ஏதோ எனக்கு மனதில் தோன்றியது ... உடனே மறக்காமல் அதையே அப்படியே வைத்தும் விட்டேன்.

      அதைக்குறிப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளதற்கு மிக்க நன்றி. :)

      //பரிசு பெறப்போகும் விமர்சகர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.//

      :)

      Delete
  26. அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு:

    அன்புள்ள ஜெயா,

    வணக்கம்மா !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 பிப்ரவரி மாதம் வரை முதல் 38 மாதங்களில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

    பிரியமுள்ள நட்புடன் கோபு

    ReplyDelete
  27. கத நல்லாருக்குது. இதும் விமரிசன போட்டிக்குள்ள கதயா.

    ReplyDelete
  28. அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:

    அன்புள்ள (mru) முருகு,

    வணக்கம்மா !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 பிப்ரவரி மாதம் வரை, முதல் 38 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் ஏதோவொரு பின்னூட்டம் / பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு

    ReplyDelete
  29. நல்லகதை சீமாச்சுவின் வெகுளித்தனம் இயல்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது ஆனாலும் ஒன் ஸைடு லவ் ஸ்டோரி.

    ReplyDelete
  30. அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
    திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 பிப்ரவரி மாதம் முடிய, என்னால் முதல் 38 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    ReplyDelete
  31. நான் வரைந்த ஓவியம் அவர்கள் வீட்டுச் சுவரில் ஆணி அடித்து அப்போதே மாட்ட ஏற்பாடானது.

    எவனோவொரு வேலையாள் சுத்தியலால் ஆணியை ஓங்கி அடிக்கும் போது, ஒரு ஆணி பறந்து வந்து, அங்கே அருகில் அமர்ந்திருந்த, என் நெற்றிப் பொட்டில் வேகமாக மோதித் தெறித்து கீழே விழுந்தது. நல்ல வேளையாக, என் கண் விழியினில் படாமல் தப்பியது.

    அதை யாரும் கவனிக்காத போதும், என்னால் மட்டுமே அந்த வலியை நன்கு உணர முடிந்தது.

    ’ஜெயஸ்ரீ’ வீட்டில் சிற்றுண்டி சாப்பிட்டிருந்த நான் எழுந்து அருகிலிருந்த, வாஷ்பேசினில் கை கழுவிக் கொண்டேன்.// கதையை சுருக்கமாக கிளைமாக்ஸில் தந்திருக்கும் உத்தி அருமை. வளர்பருவத்தில் பசங்களையும், பொண்ணுங்களையும் அவர்கள் கோணத்திலேயே ஸ்டடி செய்து எழுதிய விதம்...அருமை..இதையும் நான் மிஸ்பண்ணிட்டேனே...

    ReplyDelete
  32. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
    So far your Completion Status:

    489 out of 750 (65.2%) that too within
    13 Days from 26th Nov. 2015.
    -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

    அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
    திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 பிப்ரவரி மாதம் வரை, என்னால் முதல் 38 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    ReplyDelete
  33. காதல் ஒரு தெய்வீக உணர்வு. மனிதனின் இதயத்தை மென்மையாக்கும் அற்புத உணர்வு அது. ஆனால் ஒருதலைக்காதல் இதற்கு நேர் எதிராக வெறியையும், முரட்டுதனத்தையும் உருவாக்கும். ஒருதலைக்காதல் என்ற வட்டத்தில் சிக்கிக் கொள்ளும் இன்றைய இளைஞர்களின் நிலைப்பாடுபோல் அல்லாமல். கைநழுவிப்போன காதலியை எண்ணி தன்னை வருத்திக் கொள்ளாமல், அவளையும் பழிவாங்க எண்ணாமல் கைகழுவியதாகக் காட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.

    ReplyDelete
    Replies
    1. My Dear Mr. Seshadri Sir,

      வாங்கோ, வணக்கம்.

      கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
  34. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், என் வலையுலக ஆரம்ப காலக்கட்டத்தில் 2011-இல், வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 50 + 33 = 83

    அதற்கான இணைப்புகள்:

    https://gopu1949.blogspot.in/2011/01/blog-post_17.html

    https://gopu1949.blogspot.in/2011/11/blog-post_08.html

    ReplyDelete
  35. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

    முதல் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/03/vgk-07-01-03-first-prize-winners-vgk-500.html

    இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/03/vgk-07-02-03-second-prize-winners.html

    மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
    http://gopu1949.blogspot.in/2014/03/vgk-07-03-03-third-prize-winner.html

    சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

    ReplyDelete
  36. Mail message received today 31.03.2017 at 09.46 Hrs.
    =====================================================

    அன்பின் கோபு ஸார்,

    சீமாச்சுஊஊஊ கதை அல்ல திரைப்படம்.

    மனதோடு ரீல் புகுந்து ஓடியது போலவே இருந்தது. கடைசி டச்....... நச்.... என்று ஆணி அடித்த கதை.

    தகுதிக்கு மீறியும், நிகழ்கால உரிமையையும் இவ்வளவு அழகாக எழுத்தில் ஜிகினாஸ்ரீக்கு சிலை வடித்த விதம் அருமை.

    கதை சிறிது ......... சாரம் பெரிது.

    இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின்
    பரம ரஸிகை

    ReplyDelete
  37. கதை போலவே இல்ல... உண்மையில் நடந்த விஷயங்களாகவே நினைக்கதோணுது..உங்க எழுத்து திறணை அப்படி...

    ReplyDelete
    Replies
    1. shamaine bosco January 25, 2018 at 10:37 AM

      வாங்கோ ஷம்மு, வணக்கம்.

      //கதை போலவே இல்ல... உண்மையில் நடந்த விஷயங்களாகவே நினைக்கதோணுது..உங்க எழுத்து திறன் அப்படி...//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஷம்மு.

      அன்புடன் கிஷ்ணா(ஜி)ஜா

      Delete
  38. COMMENTS FROM Mr. V. NATANA SABAPATHI Sir, in my WhatsApp STATUS page on 25.08.2018 :-

    -=-=-=-=-=-

    ‘ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்’ என்ற சிறுகதையில் சீனிவாசன் என்கிற சீமாச்சுக்கு ஜெயஸ்ரீ மேல் அந்த பதின்ம வயதில் ஏற்படும் மையலை, கண்மூடித்தனமான அன்பை வெகு இயல்பாக சொல்லி கதையை நகர்த்தி இறுதியில் அவளுக்கு அவளுடைய அத்தை பிள்ளையுடன் திருமணம் என்றதும் அவளை மனதிலிருந்து நீக்கிவிட்டான் என்பதை கைகழுவும் தொட்டியில் அவன் கைகழுவுவதை சொல்லி ஒரு குறும்படம் பார்த்த உணர்வை தந்துவிட்டீர்கள். பாராட்டுகள்!

    “எந்த உருவம் என் மனதில் ஆழமாகப் பதியுமோ, அதை என் கைகள் மிகச் சுலபமாக வரைந்து விடும்” என்று இந்த கதையில் வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை. வாழ்த்துகள்!

    -=-=-=-=-=-

    கதையை மிகவும் ரஸித்துப்படித்து, விரிவாகவும், அழகாகவும் அருமையாகவும், பொறுமையாகவும் பின்னூட்டம் அளித்துள்ள திரு. வே. நடன சபாபதி ஐயா அவர்களுக்கு அடியேனின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு

    ReplyDelete