About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, April 7, 2014

VGK 10 / 01 / 04 FIRST PRIZE WINNERS - ’மறக்க மனம் கூடுதில்லையே !’





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 



VGK 10 - 

” மறக்க மனம் கூடுதில்லையே “



 


  



மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து















இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 






  


மற்றவர்களுக்கு: 






     


முதல் பரிசினை 

வென்றுள்ளவர்கள் இருவர்.


அதில் ஒருவர்



திரு. E.S. சேஷாத்ரி   


அவர்கள்









வலைத்தளம்: 

காரஞ்சன் [சேஷ்] 

esseshadri.blogspot.com





  



முதல் பரிசினை 

முதன் முதலாக வென்றுள்ள 



திரு. E.S. சேஷாத்ரி


அவர்களின் விமர்சனம் இதோ:


கதாசிரியரே கதாநாயகனோ?. முன்கதைச் சுருக்கத்தை கண்முன்னே நிறுத்திய அருமையான நடை  அந்நாளில் இது திரைக்கதையாக வடிவமைக்கப்பெற்று, மறைந்த காதல் மன்னன் ஜெமினி அவர்களோ (அ) நடிகர் திலகம் சிவாஜி அவர்களோ நடித்து திரைப்படமாக வெளிவந்திருந்தால் நிச்சயம் வசூலைக் குவித்து, இன்றும் பேசப்படும் படங்களில் ஒன்றாய் அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.



ஆயிரம் ஆசைகளை உள்ளடக்கி  இருந்தாலும், அந்தக்காலத்து  இளைஞர்களின் அடக்கமான நடைமுறைகள், உயர்ந்ததோர் சுயக் கட்டுப்பாடு, அவர்தம் பொழுதுபோக்கு, மன ஓட்டம் முதலியவற்றைத் தெள்ளிய முறையில் எடுத்துக்காட்டும் இடங்கள் இனிமை.



அந்தக்கால திருச்சி வாழ்க்கையினை விளக்கும் பொழுது, ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சார்ந்த திரைப் படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் விதமாய் காட்சிகளின் வர்ணனைகள் அமைந்துள்ளன. அந்தக் கால ஓட்டு வீடுகள்,ஒற்றுமையான வாழ்க்கை, திருட்டுப் பயமற்ற நிலை, கட்டுப்பாட்டுடன் கூடிய கண்ணியமான நடைமுறைகள், காலை விடியலின் அன்றாட நிகழ்வுகளை விவரிக்கும் பாங்கு முதலியன தேர்ந்தெடுத்த சொற்களால் விவரிக்கப் பட்டுள்ளன. 

இன்றைய தலைமுறை  இழந்த விஷயங்களாகிவிட்டன. தன்னைச் சுற்றி வந்தவள், இலை மறை காய் போல் இதயத்தில் இவர்மீது இருந்த காதலை வெளிப்படுத்தியதாய் விவரிக்கும் வரிகள் பழைய கால திரைப்படக் காட்சிகளைப் பார்த்த உணர்வை ஏற்படுத்துகின்றன.



தன் மனம் விரும்பியவளை விவரித்த விதம், அவளது அழகுருவை அருமையாய் ரசித்த ஒழுங்கு அவர்தம் வீட்டுவாயிலில் நின்று, பின் அவர்களால் அழைக்கப்பட்டு உபசரிப்புக்குள்ளான போதும் உண்மையான உள்ளக்கிடக்கையை விவரிக்க இயலாமல் இருந்த விதம், ஆசீர்வாதம் பெறும்போது தமது அவாவை அசைபோட்டது என்று எல்லாமே ஆற்றொழுக்கோடு அருமையாய் அமைக்கப்பட்டு அன்றைய இளைய தலைமுறை வளர்ந்த விதத்தை  நினைவூட்டுவதாய் அமைந்துள்ளது.



படிப்பு முடிந்தபின் கிடைத்த வேலையில் சேர்ந்து, பின் தன் தகுதிக்கேற்ற வேலையைத் தேட முயலும் நிகழ்வு இன்றைய இளைஞர்களிலிருந்து வேறுபட்டு, அவர்களை நிதர்சனத்திற்குத் தயாராக்கும் நோக்கில் எடுத்துரைக்கப் பட்டுள்ளது.



வேலையில் சேர்ந்ததும்,  பெற்றோர்கள் ஏற்ற வயதில் இல்லறத்துணையைத் தேடி மணமுடித்தபோது, அதை மனமுவந்து ஏற்று தமக்கெனப் பிறந்தவள் இவள்தான் எனும் மனப்பக்குவத்தை அடைந்து சீரிய முறையில் இல்லறம் நடத்துவதாய் அமைத்தது மிகச் சிறப்பு.



தன்னை விரும்பியவளை, பல வருடங்களுக்குப்பின் சந்திக்க நேர்கையில் அவள் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் அவர் மீது கொண்டிருந்த ஆழமான அன்பை வெளிக்கொணர்ந்த விதமும், ஆத்ம திருப்திக்காக அன்றொருநாள் மட்டும் அவள் விரும்பிய சிற்சில பொருட்களை உரிமையோடு தானே வாங்கிக் கொண்டதும், இவர் மனமுவந்து அளித்த முழுப் பணத்தையும் பெற்றுக்கொள்ள மறுத்ததும், இவரிடத்தில் அவள் கொண்டிருந்த கண்ணியமான காதலை வெளிப்படுத்துவதாய் அமைந்ததும் முதல் தரமானது.



தனது மகனின் தேர்வான மருமகளைப்  பார்த்தபோது மனதில் விரிந்த காட்சிப் பிரதிபலிப்பு அற்புதம். அவர்கள் வீட்டிற்குச் சென்றதும், பெண்ணுடைய அம்மாவைப் பார்க்க நேர்கையில் அவள் தன்னால் விரும்பப் பட்டவள் என்று அறிந்தபோது, தான் விரும்பியவள் தன்னையே மறந்த நிலையில் இருப்பதைப் பார்த்து   ....... மனம் வருந்தி தாங்கொணாத் துயருற்றதையும், தலை திருப்பி நின்றதையும் தத்ரூபமாய் விளக்கியது தரமானதொரு நடை.


தன் மகன் செல்வந்தரான கோபிநாத் அவர்களின் மகளை தான் விரும்புவதையும், ஆனால் அவளின் அம்மாவின் தற்போதைய நிலையை நீக்கி நோக்கினால் ஏற்றுக் கொள்ளவதில் எந்தவொரு தடையும் இருக்கமுடியாதென நியாயப் படுத்தும் விதமாய் உரைக்கும் போது “அவளும் ஒரு காலத்தில் அழகாய் இருந்தவள்தானே!” என தன் மனத்தினுள் இவர் உரைப்பதாய் அமைத்தது மிக அற்புதம்.



தான் விரும்பியவளுக்கு தன் மகனை மருமகனாக்கியதில் “இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று” என்ற கூற்றை இரண்டாம் முறையாய் உணர்ந்த விதம் இனிமை. ஈரோட்டுப் பெண்ணையும், சென்னை வாசியையும் தமது இல்லத்தரசியுடன் ஒப்பிட்டு இன்றும் தனது பெற்றோரின் தேர்வு மிகச் சரியாய் அமைந்ததை சிலாகித்த விதம் சிறப்பு.



இளைஞனாய் இருந்தபோது தன்னம்பிக்கையுடனும், விரும்பியது கிடைக்காதபோது, கிடைத்ததை விரும்பி ஏற்று இனிய முறையில் இல்லறம் நடத்தியதிலும், தன்னை விரும்பியவளைச் சந்திக்க நேர்ந்தபோது, கண்ணியமாய் நடந்து கொண்ட விதத்திலும், தான் விரும்பியவள் தன்னிலை மறந்த நிலையில் இருப்பினும் அவள் பெண்ணை விரும்பிய  தன் பிள்ளையின் காதலை ஏற்று அதற்குச் சம்மதம் சொல்லும் தந்தையாய் விளங்கும் இடத்திலும் கதாநாயகன் நம் நெஞ்சங்களில் நீங்காத ஓர் இடத்தைப் பிடித்துவிடுகிறார்.



இந்தக் கதை இன்றைய இளைஞர்களிடம் நற்சிந்தனையைத் தூண்டி, தன்னம்பிக்கை, கண்ணியம், காருண்யம், மன உறுதி ஆகியவற்றை விதைக்கும் வண்ணம் அமைந்துள்ளது. கதாசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

-காரஞ்சன்(சேஷ்) 




மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.



 

    


முதல் பரிசினை வென்று பகிர்ந்து கொண்டுள்ள

மற்றொருவர் ‘ஹாட்-ட்ரிக்’ சாதனையாளர்

திருமதி 



கீதா மதிவாணன் 


அவர்கள்




இந்தப்போட்டியில் முதல் பரிசினை வென்று 

பகிர்ந்து கொண்டதுடன்


சென்ற போட்டியில் ஹாட்-ட்ரிக் 

பரிசு பெற தகுதி பெற்றிருந்த இவர்

இதிலும் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளதால்

தனக்குக்கிடைத்த ஹாட்-ட்ரிக் தொகையை


இருமடங்காகப்பெற 



தற்போது தகுதி பெற்றுள்ளார்.


இவரின் தொடர் வெற்றியினைப் பொறுத்து, 

இவருக்கான ஹார்-ட்ரிக் பரிசு 


மும்மடங்காகவோ 


அல்லது 


நான்கு மடங்காகவோ 


கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

 
வலைத்தளம் : ” கீதமஞ்சரி ”



geethamanjari.blogspot.in


முதல் பரிசினை வென்றுள்ள



திருமதி 



கீதா மதிவாணன் 


அவர்களின் விமர்சனம் இதோ:






கதாநாயகன் - மூன்று பெண்கள் - மூன்றுவிதமான காதல். அந்த மூன்றுவிதக் காதலையும் மிகவும் அற்புதமாகக் கதையில் காட்டியுள்ளார் கதாசிரியர். சில சம்பவங்கள் மூலம் கதாபாத்திரங்களின் உள்ளத்தை வெளிப்படையாக சொல்லாமலேயே நமக்குணர்த்தும் அவரது எழுத்தாளுமை வியக்கவைக்கிறது. வாழ்க்கையை முன்னும்பின்னுமாக ஒரு ஊஞ்சலைப் போல் ஆட்டி காலத்தின் கோலத்தை நாமறியச் செய்யும் இடங்களும் அபாரம்.

கதாசிரியரின் வர்ணனையில் நாற்பது வருடத்துக்கு முந்தைய காலம் ஒரு கருப்புவெள்ளைத் திரைப்படம் போல் கண்முன் விரிந்து மறைகிறது. அந்த ஒண்டுக்குடித்தனத்துக்குள் நாமும் கொஞ்சநேரம் மூச்சுமுட்ட வாழ்ந்து வெளியில் வருகிறோம். அப்போதைய சூழலில் ஒரு ஆணும் பெண்ணும் பார்க்கவோ பேசவோ பழகவோ எவ்வளவு சிரமங்கள் என்பதையும் இப்போது மகன், தான் காதலிக்கும் பெண்ணை மட்டுமல்லாது அவள் தந்தையையும் திருமணப்பேச்சு பேச தன் பெற்றோரிடம் அழைத்துவருவதையும் காட்டி காலமாற்றத்தை நமக்கு நன்றாகவே உணர்த்துகிறார் ஆசிரியர். வாழ்க்கைச் சம்பவங்களையும் எண்ணக்கோர்வையையும் பிரதிபலிக்கும் தடங்கலற்றஎழுத்தோட்டத்துக்குப் பாராட்டுகள்.

சரி, இப்போது கதை பற்றிய விமர்சனத்துக்கு வருவோம். மூன்று பெண்களிடத்தும் மூன்றுவகையானக் காதலைக் காண்கிறார் கதாநாயகன் (கதாநாயகனுக்கு அறுபது வயதுக்குமேல் ஆகிவிட்டதே.. அவன் இவன் என்றால் மரியாதையாகுமா? அதனால் அவர் இவர்தான்) கதாநாயகனின் நண்பர்களுக்கும் கதாநாயகனின் சம்பந்திக்கும் பெயர் சூட்டியுள்ள கதாசிரியர், கதாநாயகனுக்கும் அவருடைய காதலியர்களுக்கும் மனைவிக்கும் மட்டும் பெயர் சூட்டாமல் விட்டதற்கு காரணம் தற்செயலா? வேண்டுமென்றா? என்பது தெரியவில்லை. பெயரில்லாமையால் அவர்களைக் குறிப்பிடுவது நமக்கு கொஞ்சம் சிரமம்தான். கதாநாயகனைப் போல் உரிமையாய் நாமும் ஈரோட்டுக்காரி, மதராஸ்காரி என்று குறிப்பிடுதல் நாகரிகமாகாதே. அதனால் அவரை விரும்பியவள், அவர் விரும்பியவள், அவர் மனைவி என்றே குறிப்பிடுவோம்.

அவரை விரும்பியவள் – அழகில்லை… ஆனால் நல்ல உடற்கட்டு. முன்பற்கள் சற்றுத் தூக்கல்… ஆனால் எப்போதும் சிரித்தமுகமாய் இருப்பவள். கதாநாயகனின் நடை உடை பாவனைகளில் நாகரிகத்தைக் கற்றுக்கொடுத்தவள். அவரிடத்தில் மிகுந்த அக்கறை காட்டுபவள். இவர் அவளை அலட்சியப்படுத்துவது தெரிந்தும் அவர்மேல் அதீதமான பிரேமையுடன் என்றேனும் இவருடைய கடைக்கண் பார்வையேனும் தன்மேல் விழாதா என்று காதலுடன் சுற்றிச் சுற்றி வந்தவள். வறுமையில் வாழும் அவளை நாற்பது வருடங்களுக்குப் பின்னும் அதே இயல்பான சிரிப்பும் கலகலப்பான பேச்சுமாக காண்கையில் நமக்கு வியப்பெழுகிறது. இவளுடன் இருந்தால் கவலையெல்லாம் மறந்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம் போலிருக்கிறதே என்ற எண்ணத்தை கதாநாயகனுக்குள் எழவைக்கிறாள். மாறாத காதலை மனத்துக்குள் சுமக்கிறாள் என்பதை கதாநாயகனின் விசிட்டிங் கார்டை அவள் மறைவிடத்தில் பத்திரப்படுத்துவதைக் குறிப்பிடுவதன்மூலம் மறைமுகமாய் நமக்குணர்த்துகிறார் கதாசிரியர். அவளுடைய வறுமை நிலையையும் நேரடியாய் குறிப்பிடவில்லை. கதாநாயகனின் பர்ஸைப் பிடுங்கி பணம் எவ்வளவு இருக்கிறது என்று பார்ப்பது, பர்ஸிலிருந்து அவளாகவே பணத்தை எடுத்து செலவழிப்பது, அவள் கையெழுத்துப்போட்டுத்தரவும் அவனுடைய பணத்தையே உபயோகிப்பது போன்ற அவளுடைய செய்கைகள் மூலமே நமக்கு உணர்த்துகிறது தேர்ந்த எழுத்து. இங்கு இன்னொரு விஷயத்தையும் பார்க்கவேண்டும். கதாநாயகன் அவளுக்கு, நல்ல பெரிய கடையில் செருப்பு வாங்கித்தர முனையும்போது மறுத்து மலிவுவிலையில் வாங்கிக் கொள்வது, முழுப்பணத்தையும் நீயே வைத்துக்கொள் என்னும்போது மறுத்துவிடுவது போன்ற செயல்களின் மூலம் அவள் பணத்துக்கு ஆசைப்படுபவளாக இல்லை என்பதையும் கதாசிரியர் கோடிட்டுக் காட்டிவிடுகிறார். பிறகு என்னதான் அவள் எதிர்பார்ப்பு?  ஒருநாள் மட்டும் அவருடைய மனைவி போல் உரிமையாய் அவர் பணத்தில் தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதன் மூலமே தன்னை திருப்திப்படுத்திக்கொள்கிறாள். அவருடன் செலவழித்த அந்த ஒருமணி நேரமும், அவளுக்காக அவர் செலவழித்த சிறுதொகையுமே போதுமானது அவளுக்கு… என்னவொரு அற்புதமான மனம்! அவளுடைய காதல் நம் மனத்தில் ஒரு ஆழமான தாக்கத்தை உண்டாக்குவது உண்மை.

அவர் விரும்பியவள்- அழகுதேவதை, துணிச்சல்காரி… கொஞ்சம் வசதிபடைத்தவளும்கூட. என்ன இருந்தும் என்ன பயன்? அவள் நம் கதாநாயகனை ஏறிட்டும் பார்க்கவில்லையே… இவர்தான் அவள்மேல் காதலாகிக் கசிந்துருகியிருக்கிறார். அவளிடத்தில் நேரடியாய் சொல்வதற்கே வாய்ப்பில்லாத சூழலில் அவளுடைய தாய் தந்தையரிடத்தில் ஆசி வாங்கும்போது பதிலுக்கு “அதி சீக்கரமேவ நீங்களே எனக்கு மாமனார் மாமியாராகப் பிராப்திரஸ்து” என்று உள்மனம் சொல்லச் சொல்வது பலத்த வேடிக்கை. சொல்லியிருந்தால் என்னவாகியிருந்திருக்கும்? கற்பனைக்கே எட்டவில்லை. கொலுசு, ஜிமிக்கி இத்யாதிகளால் அவரை ஈர்த்திருந்த அத்தகைய அழகுப்பதுமையை, நாகரீக நங்கையை… தன் மானசீக காதலியை…. நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஒரு மனநோயாளியாய்ப் பார்க்கும்போது அவரது மனம் படும் வேதனையை நம்மாலும் உணரமுடிகிறது.. அந்த அளவுக்கு அவளைப் பற்றிய வர்ணனைகள் கதையின் முற்பகுதியில் நம்மை வசீகரிக்கின்றன. செல்வக்கொழிப்பான வாழ்க்கை அமைந்தாலும் அன்பின்மையோ, ஆதரவின்மையோ… அலட்சியமோ, உதாசீனமோ, மன உளைச்சலோ ஏதோ ஒன்று அவளை இன்று இந்த நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கவேண்டும். அதையும் நம்மையே யூகிக்கவைக்கிறார் ஆசிரியர்.   

காதல் மறுக்கப்பட்ட நிலையிலும் வறுமையிலும் ஒருத்தியால் சிரித்த முகம் மாறாமல் வாழமுடிவதோடு அவளுடனிருப்பவர்களையும் சந்தோஷப்படுத்த முடிகிறது… நல்ல வாழ்க்கை அமைந்தும்துணிச்சல்காரியாயிருந்தும் ஒருத்தியால் வாழ்க்கையில் சோபிக்கமுடியாமல் போய்விட்டது. என்ன ஒருவாழ்க்கைமுரண்!

கதாசிரியரின் இல்வாழ்க்கை – இது மூன்றாவது காதல். எவ்வித ஏற்ற இறக்கங்களும் இன்றி சுமுகமான காதல் வாழ்க்கைப் பயணம். நல்ல மனைவி… குடும்பத்துக்கு ஏற்றவள்.. கணவனிடத்தில் காதலுடன் வாழ்பவள்… என்று சகல சற்குணங்களும் கொண்ட மாது. நாற்பது வருட தாம்பத்யம் எவ்வளவு இறுக்கமானது என்பதை கடலலைகளுக்கு மத்தியில் கெட்டியாகக் கோர்த்திருக்கும் இணைகரங்களே நமக்குரைக்கின்றன. தன் வாழ்க்கையில் குறுக்கிட்டப் பெண்களை மறந்துபோயிருக்கும் நிலையில் மீண்டும் அவர்களை சந்திக்கும் சூழலில் கதாநாயகனின் எண்ணவோட்டங்களை விவரிக்கும் சரளமான எழுத்து, இது கதை என்பதையும் மறக்கச் செய்துவிடுகிறது.

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல் இதுவரையிலான வாழ்க்கையில் தன் மனைவியுடன் தர்க்கமோ கருத்துவேறுபாடோ ஏற்படும் காலங்களில் கதாசிரியரின் மனம் தன் காதலியை நினைத்து ஏங்கியிருக்கலாம். இனி அவ்வாறு ஏங்கும் வாய்ப்பினைக் கொடுக்கவில்லை காலமும் சூழலும். இருப்பதைக் கொண்டு நிறைவடையும் மனமே யாவற்றிலும் உயர்வானது என்ற எண்ணத்தை வாசகராகிய நம் மனத்திலும் தோன்றச்செய்யும் அற்புதக் கதை இது.

ஒருவேளை அவர் விரும்பியவளும் அவரை விரும்பியவளும் இன்று எந்தக் குறையுமின்றி நல்ல நிலையில் இருந்து கதாநாயகனின் நிலை மாறுபட்டிருந்தால்…. அப்போதைய மனவோட்டம் என்னவாக இருக்கும்? யாருக்குத் தெரியும்? மனித மனத்தை யாரால் அறியக்கூடும்?  








 

    




   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.






நடுவர் அவர்களின் 

வழிகாட்டுதல்களின்படி

முதல்  பரிசுக்கான தொகை 

இவ்விருவருக்கும் 

சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.



-oOo-



போட்டியில் பரிசு பெற்றுள்ள மற்றவர்கள் 

பற்றிய விபரங்கள்  தனித்தனிப்

பதிவுகளாக பல மணி நேர இடைவெளிகளில்

ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. 

இணைப்புகள் இதோ:


http://gopu1949.blogspot.in/2014/04/vgk-10-02-04-second-prize-winners.html 

http://gopu1949.blogspot.in/2014/04/vgk-10-03-04-third-prize-winner.html 


காணத்தவறாதீர்கள் !







’போனஸ் பரிசு’ பற்றிய 
மகிழ்ச்சியானதோர் தகவல்



’மறக்க மனம் கூடுதில்லையே’ 

என்ற இந்தக் குறிப்பிட்ட சிறுகதைக்கு 

 விமர்சனம் எழுதி 

அனுப்பியுள்ள 

ஒவ்வொருவருக்குமே 

மூன்றாம் பரிசுக்குச் சமமான தொகை என்னால் 

 போனஸ் பரிசாக ’

அளிக்கப்பட உள்ளது என்பதை 
பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏன்? எதற்கு? எப்படி? என யாரும் குறுக்குக்கேள்வி எதுவும் கேட்கக்கூடாது.  ஒருசில கதைகளையும், அவை உருவாகக் காரணமாக இருந்த சூழ்நிலைகளையும் நினைக்கையில் மனதில் அவ்வப்போது ஏற்படும் ஏதோவொரு [ எழுத்தில் எடுத்துரைக்க இயலாத ] சந்தோஷம் மட்டுமே இதற்குக் காரணமாகும். 

நடுவர் அவர்களால் பரிசுக்கு இங்கு இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுக்கும் இந்த போனஸ் பரிசு என்னால் உபரியாக அளிக்கப்படும் என்பதையும் மேலும் மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோன்ற போனஸ் பரிசுகள் அவ்வப்போது மேலும் ஒருசில கதைகளுக்கு மட்டும் என்னால் அறிவிக்கப்பட உள்ளன. அவை எந்தெந்த கதைகள் என்பது மட்டும் இப்போதைக்கு ’சஸ்பென்ஸ்’.

அதனால் இந்த ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான அனைத்துக் கதைகளுக்கும், அனைவருமே, இப்போது போலவே மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள். அப்போதுதான் போனஸ் பரிசு கிடைக்கும் வாய்ப்புக்களும் தங்களுக்கு அவ்வப்போது அமையக்கூடும்.

முதன் முதலில் என்  டும்.. டும்.. டும்.. டும்.. போட்டி அறிவிப்பினில் http://gopu1949.blogspot.in/2014/01/blog-post.html தெரிவிக்கப்பட்டுள்ள ஊக்கப்பரிசுக்கும், இந்த போனஸ் பரிசுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. 

அது வேறு தனியாக ! இது வேறு போனஸாக !!

மகிழ்ச்சி தானே ! தங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.    








oooooOooooo


இதுவரை முதல் பத்து கதைகளுக்கான 
விமர்சனப் போட்டி பரிசு முடிவுகள் 

முற்றிலுமாக வெளியிடப்பட்டுள்ளன.


  [[
சிறுகதை விமர்சனதாரர்களா  ..... கொக்கா ! 


இதுவரை ஹாட்-ட்ரிக் 
வெற்றியாளர்கள் 
பட்டியலில் உள்ளோர் :





1] திரு. ரமணி அவர்கள் 
[VGK-01 to VGK-04]

தொடர்ச்சியாக  அடுத்தடுத்து நான்கு முறைகள்

2] திருமதி கீதா மதிவாணன் **அவர்கள்
[VGK-07 to VGK-10] 
தொடர்ச்சியாக  அடுத்தடுத்து நான்கு முறைகள்

3] திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் 
[VGK-04 to VGK-06] 
தொடர்ச்சியாக  அடுத்தடுத்து மூன்று  முறைகள்

4] திருமதி. இராஜராஜேஸ்வரி **அவர்கள் 
[VGK-08 to VGK-10] 
மீண்டும் தொடர்ச்சியாக  அடுத்தடுத்து மூன்று  முறைகள்

oooOooo

இந்தப்பட்டியலில் அடுத்தது யார் ?

இதைப்படித்துக்கொண்டிருக்கும்
நீங்களாகவும் இருக்கலாம் !

oooooOooooo

ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் 
பட்டியலில் இம்முறை

முன்னேற்றத்துடன் 
மீண்டும் இடம் பெற்றுள்ள

திருமதி.  

        கீதா மதிவாணன்  

 [கீத மஞ்சரி ] 

அவர்களுக்கும்

மீண்டும் புதிதாகவே 
இரண்டாம் முறையாக இடம் பெற்றுள்ள 

திருமதி.

இராஜராஜேஸ்வரி 

[ மணிராஜ் ]

அவர்களுக்கும்



நம் ஸ்பெஷல் பாராட்டுக்கள் + 
நல்வாழ்த்துகள்.

** இவர்களின் தொடர் வெற்றியினைப் பொறுத்து
ஹாட்-ட்ரிக் பரிசுக்கான தொகை பிறகு நிர்ணயிக்கப்படும்.
அது பற்றிய மேலும் விபரங்களுக்கு இணைப்பு:

oooooOooooo


இதன் தொடர்ச்சியாக 
அடுத்து வெளியிடப்பட இருக்கும்
VGK 10 / 04 / 04 என்ற ஸ்பெஷல் பதிவினில்

இதுவரை இந்தப்போட்டியின்
VGK-01 TO VGK-10 இல்
பரிசுக்குத் தேர்வானோர் பற்றிய
ஒட்டுமொத்த அலசல் ...

ஒவ்வொருவருக்கும் கிடைக்க உள்ள 
பரிசுத்தொகையுடன்
வெளியிடப்பட உள்ளது.



காணத்தவறாதீர்கள்

oooooOooooo



அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo





இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 

கதையின் தலைப்பு:



” உண்மை சற்றே வெண்மை 





விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


10.04.2014 

 

இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள்.











என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்









25 comments:

  1. சிறுகதை விமர்சனப் போட்டியில் முதல் பரிசினை பெற்ற சகோதரர் E.S. சேஷாத்ரி மற்றும் கீதா மதிவாணன் ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. இரு விமர்சனங்களும் அருமை...

    திரு. E.S. சேஷாத்ரி அவர்களுக்கும், 'ஹாட்-ட்ரிக்’ வெற்றி பெற்ற திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    தனி போனஸ் பலருக்கும் மேலும் உற்சாகம் அளிக்கும் ஐயா...

    ReplyDelete
  3. முதல் பரிசினை முதன் முதலாக வென்றுள்ள திரு. E.S. சேஷாத்ரி
    அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..

    அவரது அருமையான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  4. திருமதி கீதாமதிவாணன் அவர்கள் முதல் பரிசும்
    ஹாட்ட்ரிக் வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றிருப்பதற்கு
    இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  5. முதல் பரிசு பெற்ற திரு. E .S . சேஷாத்ரி அவர்களுக்கும், திருமதி.கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. பரிசு பெற்ற திரு. சேஷாத்ரி, திருமதி.கீதா மதிவாணன் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! உங்கள் விமரிசனப் போட்டி பதிவுலகுக்கு ஓர் நல்வரவு!

    ReplyDelete
  7. முதல் பரிசு பெற்ற திரு. சேஷாத்ரி அவர்களுக்கும்,
    திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கும்
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. முதல் பரிசுக்கு முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்வளிக்கிறது. பரிசு பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுகள்! வாழ்த்திய அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி!

    ReplyDelete
  9. இந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    http://esseshadri.blogspot.com/2014/04/vgk.html

    திரு E S சேஷாத்ரி [காரஞ்சன் சேஷ்] அவர்கள்

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  10. மீண்டுமொருமுறை பரிசுக்குரியதாய் என் விமர்சனம் அதுவும் முதல் பரிசுக்குரியதாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மகிழ்வை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. முதலில் இப்போட்டியில் தயங்கித் தயங்கி கலந்துகொண்டிருந்த நான் இப்போது மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொள்ளத் துவங்கியுள்ளேன். பலருடைய விமர்சனங்களையும் படித்தும், விமர்சனம் குறித்து அவ்வப்போது தாங்கள் வழங்கும் டிப்ஸ்களை வாசித்தும் விமர்சனம் குறித்த பல கோணங்களை அறியமுடிகிறது. இந்தத் தொடர் வெற்றிக்குக் காரணம் தாங்களே அன்றி வேறாருமில்லை. மிகவும் நன்றி கோபுசார்.

    ReplyDelete
  11. முதல் பரிசினை திரு.சேஷாத்ரி அவர்களோடு பகிர்ந்துகொள்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன். அவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. முதல் பரிசு பெற்ற திரு சேஷாத்ரி அவர்களுக்கும் சகோதரி திருமதி கீதமஞ்சரி அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  13. முதல் பரிசு வெற்றியாளர்கள் திரு. சேஷாத்ரி அவர்களுக்கும்
    திருமதி. கீதமஞ்சரி அவர்களுக்கும் என்
    வாழ்த்துக்கள்!

    "பதிவுலகின் புதுமை" என்று அன்போடு அழைக்கப்படும்
    திரு. வி. ஜி. கே. ஐயா அவர்களுக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete

  14. திருமதி கீதா மதிவாணன் அவர்கள் [கீதமஞ்சரி]

    இந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    இணைப்பு: http://geethamanjari.blogspot.in/2014/04/blog-post.html

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  15. இந்த வெற்றியாளர் ’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்கள் தான் பெற்றுள்ள இந்த வெற்றியினைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    இணைப்பு:
    http://www.geethamanjari.blogspot.com.au/2014/04/blog-post.html

    தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  16. சேஷாத்ரி மற்றும் கீதா மதிவாணன் இருவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  17. பரிசு பெற்ற திரு சேஷாத்ரி திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  18. பரிசு பெற்ற திரு சேஷாத்ரி அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya September 28, 2015 at 12:03 PM

      //பரிசு பெற்ற திரு சேஷாத்ரி அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள்//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

      Delete
  19. பரிசு வென்ற திருமதிகீதா மதிவாணன் திருசேஷாத்திரி அவங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. திருமதி கீதாமதிவாணன் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்.. இந்த கதை சிவாஜி ஜெமினி நடித்து திரைப்படமாக வந்தால் நல்லா இருக்கும்னு சொல்றாங்க.

    ReplyDelete
  21. ஈரோட்டுப் பெண்ணையும், சென்னை வாசியையும் தமது இல்லத்தரசியுடன் ஒப்பிட்டு இன்றும் தனது பெற்றோரின் தேர்வு மிகச் சரியாய் அமைந்ததை சிலாகித்த விதம் சிறப்பு.// ரசித்தேன்.
    //தன் வாழ்க்கையில் குறுக்கிட்டப் பெண்களை மறந்துபோயிருக்கும் நிலையில் மீண்டும் அவர்களை சந்திக்கும் சூழலில் கதாநாயகனின் எண்ணவோட்டங்களை விவரிக்கும் சரளமான எழுத்து, இது கதை என்பதையும் மறக்கச் செய்துவிடுகிறது.// அதுதானே வாத்யாரின் பாணி. பரிசுபெற்ற இருவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. முதல் பரிசுக்கு முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்வளிக்கிறது. பரிசு பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுகள்! வாழ்த்திய அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி!

    ReplyDelete
  23. Mail message received today 31.03.2017 at 15.46 Hrs.
    =====================================================

    அன்பின் கோபு ஸார்,

    சில கதைகள் படிக்கும் போதே மறந்து போகும். சில கதைகள் படித்ததும் மறந்து போகும்.... சில கதைகள் மணிக்கணக்கில் மனத்துள் நிற்கும். சிலவை நாட்கள் ... வாரங்கள்.... மாதங்கள்... ஆண்டுகள்... என்று நீளும்.

    சில கதைகள் "மறக்க மனம் கூடுதில்லையே..."

    கூடவே பிரயாணம் செய்யும் மனத்துள் ஒரு ஓரத்தில்... ஒரு உண்மையை சொல்லிக் கொண்டே கற்றுத் தரும். இதோ..... மனம் மறக்காத பல கதைகளில் இதுவும் ஒன்றாகி..... என்ன சொல்வது.... எழுத்துக்கள் ஒன்றாகக் கூடி..... ஏதோ சத்திய பிரமாணம் செய்து கொண்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அருமையான சிந்தனை.... சூடான கும்பகோணம் டிகிரி காப்பி மாதிரி பிரமாதம்.....! அன்புடன்

    இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின்
    பரம ரஸிகை

    ReplyDelete
  24. இந்த மேற்படி கதைக்காக அறிவிக்கப்பட்டிருந்த ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்காகத் தான் 26.03.2014 அன்று அனுப்பிவைத்த விமர்சனத்தை, சரியாக 4 ஆண்டுகளும் 48 மணி நேரங்களும் கழித்து இன்று (28.03.2018) தன் வலைத்தளத்தினில் ஓர் தனிப்பதிவாக வெளியிட்டு மகிழ்ந்துள்ளார் ’எனது எண்ணங்கள்’ வலைப்பதிவர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்.

    அவரின் விமர்சனத்தைப்படிக்க இதோ இணைப்பு:
    http://tthamizhelango.blogspot.com/2018/03/vgk10.html

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete