About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, April 5, 2014

VGK 10 / 03 / 04 THIRD PRIZE WINNER - ’மறக்க மனம் கூடுதில்லையே !’





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 





VGK 10 - 

” மறக்க மனம் கூடுதில்லையே “




மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து















இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 






  


மற்றவர்களுக்கு: 







    

மூன்றாம் பரிசினை 


வென்றுள்ளவர் 





திருமதி ஞா. கலையரசி   


அவர்கள்




வலைத்தளம்:


”ஊஞ்சல்” 

http://www.unjal.blogspot.com.au/








  





மூன்றாம் பரிசினை வென்றுள்ள 



திருமதி. ஞா. கலையரசி 


 அவர்களின் விமர்சனம் இதோ:




வாழ்க்கை என்றுமே ஒரு புதிர் தான்.  அனுபவம் தான் நமக்குப் பாடம் கற்பிக்கும் ஆசான்.  ஒவ்வொருவரும் வாழ்ந்து பார்த்துத் தான் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள வேண்டும்.  கிட்டத்தட்ட வாழ்நாளில் பாதிக்கு மேல் கழித்த பின்னரே, நமக்குக் கிடைத்த பட்டறிவின் மூலம் வாழ்க்கை ஓரளவு நமக்குப் புரிபடத் துவங்குகிறது.

இளமையில் நம்மைக் கவரும் முக்கிய அம்சம் அழகு தான்; ஆனால் முதுமையில் தான், அழகும் இளமையும் ஆரோக்கியமும் சாசுவதமில்லை என்ற உண்மை நமக்கு உறைக்கின்றது.

பெற்றோர் ஏற்கெனவே நம் வயதில் வாழ்ந்து பார்த்தவர்கள் என்பதால் அவர்கள் இந்த உண்மையை அனுபவம் மூலம் உணர்ந்திருக்கிறார்கள்.  அதனால் தான் அழகை விட, நம் குடும்பத்துக்கேற்ற குத்துவிளக்காக பெண் இருக்க வேண்டும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.  பெண்ணின் பெற்றோர், சமூகத்தில் அவர்கள் குடும்பம் சம்பாதித்துள்ள நல்ல பெயர், பெண்ணின் ஒழுக்கம், வளர்ப்பு முறை இவற்றைப் பார்த்துத் தம் பிள்ளைகளுக்கு முடிவு செய்கின்றனர். இளமையில் உடலை மட்டும் அடிப்படையாக வைத்து எழுப்பப்படும் காதல் கோட்டைக்குப் பெரும்பாலான பெற்றோர் எதிரிகளாய் இருப்பது, இக்காரணத்தினால் தான். 

அழகு தேவதையின் அலங்கோல நிலைபற்றியறியும் போது மனம் மிக வருந்தவே செய்கிறது.  அவளது தற்போதைய நிலைமைக்குக் காரணம் என்ன?  ஏன் புத்தி பேதலித்தது என்பதை ஆசிரியர், நம் யூகத்துக்கு விட்டுவிட்டார்.  எல்லாவற்றையும் விலாவாரியாக விவரிக்காமல் சிலவற்றை, வாசகர் யூகத்துக்கு விடுவது தானே, தற்போதைய பாணி!

சாதாரண கார் புரோக்கர் பெண்ணை, அவளது அழகைப் பார்த்துத் தான் பணக்கார கணவன் திருமணம் செய்திருக்க வேண்டும்.  அவளது மனதைப் புரிந்து கொள்ளாமல், புற அழகைப் பார்த்துத் திருமணம் செய்தவன், மோகம் தீர்ந்த பின் அவளை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தினானோ? 

மிகவும் அழகான மனைவி வாய்க்கப்பெற்ற கணவன்மார்களில் பெரும்பாலோருக்குச் சந்தேகம் கூடப் பிறந்த வியாதியாக இருக்கும்.  பெற்றோர் வீட்டில் ஒரு நாளைக்கு ஒரு கார் என்று சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த செல்லக்கிளியைக் காசு கொடுத்து வாங்கி வெளியே யார் கண்ணிலும் படவிடாமல் கூட்டுக்குள் அடைத்தது தான், அவளது புத்தி பேதலிக்கக் காரணமோ?  இப்படியெல்லாம் கதை வாசிப்பவரைச் சிந்திக்க வைப்பதில் வெற்றி பெறுகிறார் ஆசிரியர்.

அவளை இந்த நிலைமையில் பார்த்த பிறகு, நம் மனைவி நல்ல ஆரோக்கியமாக அழகாக இருக்கிறாள்; நம் பெற்றோர் நமக்கு நல்லது தான் செய்திருக்கிறார்கள்; அவர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்; நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும் எண்ணமே, இக்கதைசொல்லிக்கும் ஏற்படுவதாகக் காட்டியிருப்பது மிகவும் யதார்த்தம்.

தான் விரும்பியவனை மணந்திருந்தால், வறுமையில் உழலாமல் செல்வச்செழிப்பில் மிதந்திருக்கலாம் என்று எண்ணாமல், நல்லவேளை தன்னைத் திருமணம் செய்திருந்தால் தன் துரதிஷ்டம், இவனைச் சுகப்பட வைக்காமல் கஷ்டப்பட வைத்திருக்கும்; இவன் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணும் ஈரோட்டுக்காரியின் பாத்திரப்படைப்பு தான் எல்லாவற்றையும் விட மிகவும் உன்னதமானது. 

அம்மாவின் மனநிலையைக் காரணம் காட்டிப் பெண்ணை நிராகரிக்காமல் மகனுக்கு மணம் முடிக்க நினைப்பவனாக கதைசொல்லியைப் படைத்திருப்பதில் ஆசிரியரின் மனித நேயம் வெளிப்படுகிறது.   

சிகிச்சையில் அவள் நிச்சயம் குணமடைவாள் என்று நம்பிக்கையுடன் நேர்மறையாக சொல்லிக் கதையை முடித்திருப்பதும் வரவேற்கத்தக்கது. 

ஈரோட்டுக்காரி கதை சொல்லியையும்,  மதராஸ்காரியைக் கதாநாயகனும்,  அவளது மகளை இவன் மகனும்,  இவர்களது வாழ்க்கை அனுபவங்களை உணர்வு பூர்வமாக விவரிக்கும் இக்கதையை நாமும், மறக்க மனம் கூடுதில்லை!.

சிறந்த கதையைப் படைத்த கோபு சார் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!

நன்றியுடன்,
ஞா. கலையரசி



 










மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.




    



   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.










இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.




காணத்தவறாதீர்கள் !










’போனஸ் பரிசு’ பற்றிய 
மகிழ்ச்சியானதோர் தகவல்




’மறக்க மனம் கூடுதில்லையே’ என்ற
இந்தக் குறிப்பிட்ட சிறுகதைக்கு 

 விமர்சனம் எழுதி 

அனுப்பியுள்ள 

ஒவ்வொருவருக்குமே 

மூன்றாம் பரிசுக்குச் சமமான தொகை என்னால் 

 போனஸ் பரிசாக ’

அளிக்கப்பட உள்ளது என்பதை 
பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏன்? எதற்கு? எப்படி? என யாரும் குறுக்குக்கேள்வி எதுவும் கேட்கக்கூடாது.  ஒருசில கதைகளையும், அவை உருவாகக் காரணமாக இருந்த சூழ்நிலைகளையும் நினைக்கையில் மனதில் அவ்வப்போது ஏற்படும் ஏதோவொரு [ எழுத்தில் எடுத்துரைக்க இயலாத ] சந்தோஷம் மட்டுமே இதற்குக் காரணமாகும். 

நடுவர் அவர்களால் பரிசுக்கு இங்கு இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுக்கும் இந்த போனஸ் பரிசு என்னால் உபரியாக அளிக்கப்படும் என்பதையும் மேலும் மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோன்ற போனஸ் பரிசுகள் அவ்வப்போது மேலும் ஒருசில கதைகளுக்கு மட்டும் என்னால் அறிவிக்கப்பட உள்ளன. அவை எந்தெந்த கதைகள் என்பது மட்டும் இப்போதைக்கு ’சஸ்பென்ஸ்’.

அதனால் இந்த ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான அனைத்துக் கதைகளுக்கும், அனைவருமே, இப்போது போலவே மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள். அப்போதுதான் போனஸ் பரிசு கிடைக்கும் வாய்ப்புக்களும் தங்களுக்கு அவ்வப்போது அமையக்கூடும்.

முதன் முதலில் என்  டும்.. டும்.. டும்.. டும்.. போட்டி அறிவிப்பினில் http://gopu1949.blogspot.in/2014/01/blog-post.html தெரிவிக்கப்பட்டுள்ள ஊக்கப்பரிசுக்கும், இந்த போனஸ் பரிசுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. 

அது வேறு தனியாக ! இது வேறு போனஸாக !!

மகிழ்ச்சி தானே ! தங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.    







அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



” உண்மை 


சற்றே 


வெண்மை 





விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


10.04.2014  


இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள்.















என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

29 comments:

  1. திரு VGK அவர்கள் நடத்தும் சிறுகதை விமர்சனப் போட்டியில் மூன்றாம் பரிசினை வென்றுள்ள சகோதரி ஞா. கலையரசி அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல பரிசுகளை வெல்ல வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களோடு மேலும் பல பரிசுகளை வெல்ல ஊக்கமும் ஆக்கமும் தந்துதவும் திரு தமிழ் இளங்கோ அவர்களுக்கு என் நன்றி!

      Delete
  2. மூன்றாம் பரிசினை வென்றுள்ள திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..


    அவர்களின் விமர்சனம்
    திருமதி. ஞா. கலையரசி

    அவர்களின் அருமையான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மேடம்!

      Delete
  3. சகோதரி திருமதி கலையரசி அவர்களுக்கு உளங் கனிந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது நல்வாழ்த்துக்களுக்கு என் நன்றி!

      Delete
  4. சகோதரி கலையரசி அவர்களுக்க உளங் கனிந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. 3-ஆம் -பரிசு விமர்சனத்தில் திருமதி. கலையரசி அவர்கள் தனது கருத்துக்களைத் தெளிவாக, அழகாக தந்துள்ளார்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களது பாராட்டு என்னை மேலும் எழுத ஊக்குவிக்கிறது. மிக்க நன்றி நிஜாமுத்தீன்!

      Delete
    2. உங்களது பாராட்டு என்னை மேலும் எழுத ஊக்குவிக்கிறது. மிக்க நன்றி நிஜாமுத்தீன்!

      Delete
  6. சிறந்த விமரிசனம்! பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அருமையான கருத்துக்களடங்கிய விமர்சனம்.
    பரிசு பெற்ற திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கு
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  8. மூன்றாம் பரிசுக்கு என் விமர்சனத்தைத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் திரு கோபு சார் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Kalayarassy G April 5, 2014 at 11:11 PM

      வாங்கோ, வணக்கம்.

      //மூன்றாம் பரிசுக்கு என் விமர்சனத்தைத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் திரு கோபு சார் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறேன்.//

      உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும், என் சார்பிலும் தங்களுக்கு எங்கள் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

      நாளுக்கு நாள் மெருகூட்டப்பட்டு ஜொலித்துவரும், தங்களின் மாறுபட்ட ரசனையுடன் கூடிய எழுத்துக்களுக்கு, இதே போட்டியில் மேலும் மேலும் நிறைய பரிசுகள் கிடைக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட ஆசை. ;)))))

      அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      பிரியமுள்ள கோபு [VGK]

      Delete
  9. மூன்றாம் பரிசு பெற்ற திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள் !

    ReplyDelete
  10. திருமதி ஞா. கலையரசி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. நல்லதொரு விமர்சனம். மூன்றாம் பரிசு பெற்ற திருமதி கலையரசி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

    போனஸ் பரிசினை அறிவித்து புதிய உற்சாகத்தை எழுப்பியுள்ள கோபுசாருக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  12. நல்ல விமர்சனம். மூன்றாம் பரிசு பெற்று திருமதி கலையரசி அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. 'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'

    ’VGK-10 மறக்க மனம் கூடுதில்லையெ’

    இந்த சிறுகதைக்கு திருமதி. ஞா. கலையரசி அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த, பரிசுக்குத் தேர்வான விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் வலைத்தளப் பதிவினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு இதோ:

    http://unjal.blogspot.in/2014/11/4.html

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி ஞா. கலையரசி அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன் கோபு [VGK]
    ooooooooooooooooooooooooooo

    ReplyDelete
  14. பரிசு பெற்ற கலையரசிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. பரிசு பெற்ற கலையரசி அவர்களுக்கு வாழ்த்துகள.

    ReplyDelete
  16. பரிசு மழையில் விமர்சகர்களை நனைய வைக்கும் கோபு அண்ணாவுக்கு ஜே,

    பரிசு பெற்ற திருமதி ஞா கலையரசி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya September 28, 2015 at 9:30 AM

      //பரிசு மழையில் விமர்சகர்களை நனைய வைக்கும் கோபு அண்ணாவுக்கு ஜே,//

      அடடா ! நாம் எல்லோருமே ’ஜே’ போடும் ’ஜெ’ மூலம் எனக்கொரு ‘ஜே’ யா? மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      //பரிசு பெற்ற திருமதி ஞா கலையரசி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

      :)

      Delete
  17. பரிசு பெற்ற கலயரசியவங்களுக்கு வாழ்த்துகள்.ஊவ்வொரு வரியயும் ரசிச்சு விமரிசனம் எளுதிஇருக்காங்கோ.

    ReplyDelete
  18. திருமதி கலையரசி அவர்களுக்கு வாழ்த்துகள். இளமையில் நம் கண்களுக்கு தென்படுவது அழகுதான் பெற்றோரும் இளவயதை வாழ்ந்து அநுபவித்தவர்கள்தானே வரும் பெண்ணிடம் அவர்கள் மேலும் சில விஷயங்களை எதிர்பார்ப்பது சரியான கண்ணோட்டம்தான் என்று சொல்கிறார்கள்.

    ReplyDelete
  19. தான் விரும்பியவனை மணந்திருந்தால், வறுமையில் உழலாமல் செல்வச்செழிப்பில் மிதந்திருக்கலாம் என்று எண்ணாமல், நல்லவேளை தன்னைத் திருமணம் செய்திருந்தால் தன் துரதிஷ்டம், இவனைச் சுகப்பட வைக்காமல் கஷ்டப்பட வைத்திருக்கும்; இவன் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணும் ஈரோட்டுக்காரியின் பாத்திரப்படைப்பு தான் எல்லாவற்றையும் விட மிகவும் உன்னதமானது. // ரசித்தேன். வெற்றிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. //மூன்றாம் பரிசினை வென்றுள்ள சகோதரி ஞா. கலையரசி அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல பரிசுகளை வெல்ல வாழ்த்துகள்!

    ReplyDelete
  21. இந்த மேற்படி கதைக்காக அறிவிக்கப்பட்டிருந்த ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்காகத் தான் 26.03.2014 அன்று அனுப்பிவைத்த விமர்சனத்தை, சரியாக 4 ஆண்டுகளும் 48 மணி நேரங்களும் கழித்து இன்று (28.03.2018) தன் வலைத்தளத்தினில் ஓர் தனிப்பதிவாக வெளியிட்டு மகிழ்ந்துள்ளார் ’எனது எண்ணங்கள்’ வலைப்பதிவர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்.

    அவரின் விமர்சனத்தைப்படிக்க இதோ இணைப்பு:
    http://tthamizhelango.blogspot.com/2018/03/vgk10.html

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete