About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, April 7, 2014

VGK 10 / 04 / 04 - VGK 01 to VGK 10 - ................ பரிசு மழை பற்றியதோர் அலசல் ! - வெற்றி ! வெற்றி !! வெற்றி !!!





அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்.


தங்கள் அனைவரின் ஒத்துழைப்பினால், உற்சாகத்தினால், ஆர்வத்துடனான ஈடுபாட்டினால் நாம் அறிவித்த  “சிறுகதை விமர்சனப் போட்டி” வெற்றிகரமாக வாராவாரம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. 

இதுவரை 12 சிறுகதைகள் வெளியிடப்பட்டு, 10 சிறுகதைகளுக்கான விமர்சனப்போட்டி முடிவுகளும் முற்றிலுமாக வெளியிடப்பட்டுள்ளன. 

மொத்தம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட நமது நாற்பது [ 40 ]  ‘சிறுகதை விமர்சனப் போட்டி’களில் MORE THAN 25% வெற்றிகரமாக முடிந்துள்ளன.






[திரும்பிப் பார்க்கிறேன்]



முதல் 10 கதைகளுக்கான 

விமர்சனங்களுக்குப் 
பல்வேறு பரிசுகள் பெற்றோர் 
பற்றிய ஓர் அலசல் இதோ:






  

1. திரு. ரமணி  [தீதும் நன்றும் பிறர் தர வாரா] அவர்கள்

VGK-01 I PRIZE FULL                150
VGK-02 I PRIZE SHARING          75
VGK-03 I PRIZE SHARING          75
VGK-04 I PRIZE SHARING          75
VGK-06 I PRIZE SHARING          75
VGK-07 II PRIZE SHARING        50
VGK-03 BONUS PRIZE                50
VGK-01 TO 04 HAT-TRICK        100
================================
TOTAL:                              Rs.     650
================================



 

2. திருமதி. இராஜராஜேஸ்வரி [மணிராஜ்] அவர்கள்: 


VGK-04 III PRIZE                           50
VGK-05 I PRIZE SHARING           75
VGK-06 III PRIZE                           50
VGK-08 I PRIZE SHARING           75
VGK-09 I PRIZE SHARING           75
VGK-10 II PRIZE SHARING         50
VGK-03 BONUS PRIZE                 50
VGK-10 BONUS PRIZE                 50
VGK-04 TO 06 HAT-TRICK          50
VGK-08 TO 10 HAT-TRICK          50 ***
==================================
TOTAL:                              RS.    575 
==================================
*** This Hat-Trick figure is arrived as on date. 
This amount may increase according to your further 
continuous Success in VGK 11, VGK 12 and VGK 13.   



 

3. திருமதி கீதா மதிவாணன் [கீதமஞ்சரி] அவர்கள்: 

VGK-03 I PRIZE SHARING           75
VGK-04 II PRIZE SHARING         50
VGK-07 I PRIZE SHARING           75
VGK-08 II PRIZE SHARING         50
VGK-09 II PRIZE SHARING         50
VGK-10 I PRIZE SHARING          75
VGK-03 BONUS PRIZE                 50
VGK-10 BONUS PRIZE                 50
VGK-07 TO 10 HAT-TRICK        100 **
========================================
TOTAL:                         Rs.           575 + 100 = 675
========================================
** This Hat-Trick figure is arrived as on date. This amount may increase according to your further continuous Success in VGK 11 and VGK 12.   

http://gopu1949.blogspot.in/2014/04/vgk-12-01-03-first-prize-winners.html
http://gopu1949.blogspot.in/2014/04/vgk-11-01-03-first-prize-winners.html

with reference to the above announcements the winner has achieved continuous success in VGK-11 & VGK 12 also. Hence the Prize amount Payable is now FIXED as Rs. 675/-  on 20/04/2014, including the Maximum Hat-Trick award of Rs. 200 for VGK-07 to VGK-12. ;)

 

 

4. திருமதி கீதா சாம்பசிவம் [எண்ணங்கள்] அவர்கள்:

VGK-03 II PRIZE SHARING        50
VGK-04 I PRIZE SHARING         75
VGK-07 I PRIZE SHARING         75
VGK-08 II PRIZE SHARING       50
VGK-03 BONUS PRIZE               50
VGK-10 BONUS PRIZE               50
================================
TOTAL:                            Rs.       350
================================



 

5. திரு. E.S. சேஷாத்ரி [காரஞ்சன் - சேஷ்] அவர்கள்: 

VGK-02 III PRIZE                         50
VGK-03 II PRIZE SHARING       50
VGK-08 III PRIZE                        50
VGK-10 I PRIZE SHARING        75
VGK-03 BONUS PRIZE               50
VGK-10 BONUS PRIZE               50
================================
TOTAL:                          Rs         325
================================



 

6. திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் [அரட்டை] அவர்கள்:


VGK-02 I PRIZE SHARING         75
VGK-04 II PRIZE SHARING       50
VGK-05 II PRIZE SHARING       50
VGK-09 II PRIZE SHARING       50
VGK-03 BONUS PRIZE               50
=================================
TOTAL:                          Rs.        275
=================================



 

7. திருமதி கலையரசி [ஊஞ்சல்] அவர்கள்:

VGK-05 I PRIZE SHARING          75
VGK-06 II PRIZE SHARING        50
VGK-09 III PRIZE                         50
VGK-10 III PRIZE                         50
VGK-10 BONUS PRIZE                50
=================================
TOTAL:                           Rs.         275
=================================



 

8. திருமதி ராதாபாலு [எண்ணத்தின் வண்ணங்கள்] அவர்கள்:

VGK-07 II PRIZE SHARING        50
VGK-08 I PRIZE SHARING         75
VGK-10 II PRIZE SHARING       50
VGK-10 BONUS PRIZE               50
================================
TOTAL:                        Rs.           225
================================



 

9. திருமதி தமிழ்முகில் பிரகாசம் [முகிலின் பக்கங்கள்] அவர்கள்:

VGK-03 III PRIZE                        50
VGK-05 III PRIZE                        50
VGK-03 BONUS PRIZE               50
VGK-10 BONUS PRIZE               50
================================
TOTAL:                             Rs.     200
================================




 

10. திருமதி ஷக்தி ப்ரபா [மின்மினிப்பூச்சிகள்] அவர்கள்:

VGK-01 II PRIZE FULL             100
VGK-03 BONUS PRIZE               50
VGK-10 BONUS PRIZE               50
================================
TOTAL:                        Rs.          200
================================


 

11. திரு. J. அரவிந்த் குமார் அவர்கள்:

VGK-05 II PRIZE SHARING          50
VGK-09 I PRIZE SHARING           75
VGK-10 BONUS PRIZE                  50
==================================
TOTAL:                            Rs.          175
==================================


 

12. திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்கள்:

VGK-01 III PRIZE                          50
VGK-06 I PRIZE SHARING          75
VGK-03 BONUS PRIZE                 50
===================================
TOTAL:                          Rs.           175
===================================  


 

13. திரு. முஹம்மது நிஜாமுத்தீன் [நிஜாம் பக்கம்] அவர்கள் :

VGK-06 II PRIZE  SHARING       50
VGK-07 III PRIZE                         50
VGK-03 BONUS PRIZE                50
==================================
TOTAL:                          Rs.          150
==================================



 

14. முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள்:

VGK-02 II PRIZE SHARING            50
VGK-03 BONUS PRIZE                    50
VGK-10 BONUS PRIZE                    50
==================================
TOTAL:                              Rs.         150
==================================



 

15. திண்டுக்கல் திரு. பொன் தனபாலன் அவர்கள்: 

VGK-02 II PRIZE SHARING             50
VGK-03 BONUS PRIZE                     50
===================================
TOTAL:                                Rs.         100
===================================  

 HEARTIEST 



 TO ALL THE WINNERS ! 





மேலே குறிப்பிட்டுள்ள நபர்களைத்தவிர, 'VGK-03' AND/OR ’VGK-10' ஆகிய கதைகளுக்கு விமர்சனம் எழுதி அனுப்பியுள்ள  அனைவருக்குமே போனஸ் பரிசு அளிக்கப்பட உள்ளன. 

அவ்வாறு போனஸ் பரிசுகள் மட்டுமே பெறக்கூடிய அவர்களின் பட்டியல் சற்றே நீண்டதாக இருப்பதால், அவர்கள் அனைவரின் பெயர்களையும் நான் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை. அவர்களுக்கு மட்டும், அதுபற்றி தனியே மின்னஞ்சல் மூலம் தகவல் அளிப்பதாக இருக்கிறேன். அவர்களுக்கும் நம் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.




அடியேன் தனி ஒருவனாக, யாருடைய உதவிகளும் இன்றி இந்தக் கணக்கு வழக்குகளை MANUAL RECORDS ஆக மட்டுமே பதிவு செய்துகொண்டு வருவதால், இதில் என்னையும் அறியாமல் ஒருசில பிழைகள் ஏற்பட்டுவிட வாய்ப்புக்கள் உண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, மேலே தெரிவித்துள்ள பரிசு விபரங்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின், தயவுசெய்து, சம்பந்தப்பட்டவர்கள், பின்னூட்டம் மூலம் சுட்டிக்காட்டினாலோ, அல்லது மெயில் மூலம் தகவல் தெரிவித்தாலோ, மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன். 

இதனால் CLERICAL ERRORS ஏதேனும் இருப்பின் அவற்றை இப்போதே சரிசெய்துகொள்ள ஏதுவாகும்.  PLEASE OFFER YOUR CONFIRMATION and COMMENTS.

இந்தப்போட்டியில் தொடர்ந்தோ அல்லது அவ்வப்போதோ கலந்து கொண்டுவரும் அனைவருமே மிகச்சிறந்த திறமையான எழுத்தாளர்கள் என்பதில் ஐயம் இல்லை. 

தாங்கள் இந்தப்போட்டியில் கலந்துகொள்வது இந்த சுண்டைக்காய்   பரிசுத் தொகையைப் பெறுவதற்காக மட்டும் அல்ல  என்பதும் எனக்கு நன்றாகவே புரிகிறது.  


{ However, it is only, just a Token of Appreciation, 
for your Valuable Reviews, on my Stories. }

தங்களின் விமர்சன எழுத்துத் திறமைகளை, மேலும் மேம்படுத்திக் கொள்ளவும், மனதின் அடியில் அமுங்கியுள்ள அந்தத் தங்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரவும் மட்டுமே, இந்தப் போட்டியினை ஒரு அரிய வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு வருகிறீர்கள் என்பதும் எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது.

இந்தப் போட்டியைப்பற்றி அறியாத, இந்தப் போட்டியில் இதுவரை கலந்துகொள்ளாத, மிகச்சிறந்த விமர்சன எழுத்தாளர்கள் மேலும் பலர் ஆங்காங்கே நம் பதிவுலகில் இருக்கக்கூடும். 

எல்லாப் பதிவர்களைப்பற்றியும் எனக்கோ அல்லது, என் வலைத்தளப் பதிவுகளைப்பற்றி, மற்ற எல்லாப் பதிவர்களுக்குமோ தெரிந்திருக்க வேண்டும் என்ற எந்தவொரு கட்டாயமும் இல்லை அல்லவா !

துபோல மிகச்சிறந்த விமர்சன எழுத்தாளர் ஒருவரைத் தங்களுக்குத் தங்கள் நட்பு வட்டம் மூலம் தெரிந்திருக்குமானால், அவரையும் இந்தப்போட்டியில் கலந்துகொள்ளச் செய்து உதவுங்கள் என உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  

இந்தப்போட்டி மேலும் விறுவிறுப்பாகவும், ஆரோக்யமானதாகவும் அமைய தங்களின் இந்த ஒத்துழைப்பு  மிகவும் உதவக்கூடும் என்பதால் இந்த சிறிய உதவியினை தங்களிடமிருந்து, நானும், என்னைவிட அதிக ஆவலுடன் நம் மதிப்புக்குரிய நடுவர் அவர்களும் எதிர்பார்க்கின்றோம்.

இந்தப்போட்டிகளில் என்னைவிட அதிக ஆர்வம் காட்டி செயல்பட்டு வருபவரும், மிகக்கடினமான உழைப்பாளியும், விமர்சனங்களை ஆர்வத்துடன் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து, போட்டிக்கு வந்துள்ளவற்றில் மிகத்தரமானவைகளை வடிகட்டித் தேர்ந்தெடுத்து, விமர்சனம் எழுதியவர் யார் என்று தனக்கே தெரியாத நிலையிலும், நியாயமான தீர்ப்புக்களை, உடனுக்குடன் அறிவித்து வரும், உயர்திரு நடுவர் அவர்களுக்கு அடியேனின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக 'சிறுகதை விமர்சனப்போட்டி'யில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பிக்க வேணுமாய் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.



பரிசு மழை பலமாகப் பொழிகிறதோ !


  


என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

கோபு [VGK]

gopu 1949.blogspot.in
valambal@gmail.com


இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 

கதையின் தலைப்பு:



VGK-12



” உண்மை சற்றே வெண்மை 





விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


10.04.2014 

 

இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள்.










என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

55 comments:

  1. விமர்சனங்களின் பரிசு பெற்றவர்கள் பற்றிய விபரம்
    அறியத் தந்தமைக்கு நன்றிகள்..!

    ReplyDelete
  2. பரிசுகள் பெற்ற அன்புள்ள‌ங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. அசத்தலான பரிசுப் போட்டியை அறிவித்து பதிவுலகை மகிழ்ச்சியில் ஆழ்த்திவரும் தங்களுக்கும் அதில் அற்புதமான விமரிசனங்களை எழுதி பரிசுகளைக் குவித்துவரும் பதிவன்பர்களுக்கும் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. பரிசு மழையில் நனைந்து பரிசுகளை அள்ளிச் சென்றவர்களுக்கும், இனிமேல் நனையப் போகிறவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. திரு V.G.K அவர்களுக்கு வணக்கம்! “ திருச்சியில் ஒரு இளைஞர் “ - என்று மூத்த வலைப்பதிவர் திரு பழனி.கந்தசாமி சொல்லியது நூற்றுக்கு நூறு உண்மை!

    பிரபல பத்திரிகைகள் அல்லது குழுமங்கள் நடத்த வேண்டிய ஒரு மகத்தான காரியத்தை தனிமனிதனாக வலைப்பக்கம் சிறுகதை விமர்சனப் போட்டியை நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள். இது ஒரு மகத்தான சாதனை. தமிழ் வலைப்பக்க வரலாற்றில் உங்களுக்கென்று ஓர் இடம் உண்டு.

    இந்த போட்டியின் மூலம் பல திறமை மிக்கவர்களையும், புதியவர்களையும் காண முடிந்தது. “ தேவரீர்ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை “ – என்ற பாரதியின் (கண்ணன் என் சேவகன்) வரிகளைப் போல, பதிவுலக மக்கள் அனைவரும் உங்கள் அன்பையே பெரிதெனக் கொள்கின்றனர் என்பது கண்கூடு.



    ReplyDelete
  6. இந்த சிறுகதை விமர்சனப் போட்டியை நடத்தி வரும் வலையுலகப் பிதாமகர் திரு V.G.K அவர்களுக்கும், நடுவராக இருக்கும் ஆசிரியர் அவர்களுக்கும் ( யாரென்று தெரியவில்லை; பிற்பாடு தெரியப்படுத்துவார்) நன்றி!

    ReplyDelete
  7. இளங்கோ அவர்கள் கூறியதைப்போல
    உங்களால் ஒரு நிறுவனம் போல்
    மிகச் சிறப்பாக இதுபோல் எப்படிச்
    செயல்பட முடிகிறது எனப் புரியவில்லை
    ஒரு படைப்பாளிக்கு மிகச் சிறந்த படைப்புகளைத் தர
    அனுபவ அறிவு,அதிக வாசிப்புப் பழக்கம் மட்டும்
    போதுமானதில்லை
    நல்ல விமர்சனப் பக்குவமும் வேண்டும் எனத் தெளிந்து
    ஒரு அருமையான போட்டியை ஏற்பாடு செய்தமைக்கு
    என் மனமார்ந்த நன்றி
    உங்களால் நாங்கள் பக்குவப்பட்டுக் கொண்டிருக்கிறோம்

    ReplyDelete
  8. பரிசு பெற்றவர்கள் பற்றிய விபரம்
    அறியத் தந்தமைக்கு நன்றிகள்..!
    பரிசுகள் பெற்ற அன்புள்ள‌ங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்!
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  9. பரிசு பெற்றவர்கள் பற்றிய விபரம்
    அறியத் தந்தமைக்கு நன்றிகள்..!
    பரிசுகள் பெற்ற அன்புள்ள‌ங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்!
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  10. பரிசு பெற்றவர்களின் விவரங்களைத் தொகுத்து அளித்தமைக்கு நன்றி! பலருடைய திறமைகள் வெளிவர வாய்ப்பளித்த உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் சார்!

    ReplyDelete
  11. விமர்சனம் தரும் பதிவர்களைப் பற்றிய 1-10 கதைகளுக்கான முழுமையான தொகுப்பு. இதை செம்மையாக செய்துவரும் தங்களுக்கு என்றும் என் பாராட்டுக்கள் ஐயா!

    குறிப்பு: கடுமையான போட்டியில் திறமையான விமர்சனங்களைத் தேர்ந்தெடுத்துத் தரும் நடுவர் அவர்களுக்கும் சிறப்பு நன்றிகள்!!

    ReplyDelete
  12. தங்கள் அறிக்கையைப் பார்த்து பிரமித்தேன். அடக்கமாக எவ்வளவு அற்புதமான செயல்பாடு இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்து நிச்சயம் நீங்கள் பெருமையடையலாம். அந்த பெருமையையெல்லாம் போட்டியில் பரிசு பெற்ற, இனிப் பெறப் போகிற அன்பர்களுக்கும் வாரி வழங்கலாம்.

    பரிசு பெறுபவர்களின் பெயர்களைப் பார்க்கும் பொழுது பார்த்தவர்களையே பார்க்கிறோமோ என்று ஒரு பிரமை ஏற்பட்டது உண்மை. இந்த பரிசுப்பட்டியலைப் பார்க்கும் பொழுது ஆரம்பத்தில் கலந்து கொண்ட பரிசுகள் பெற்ற பல அன்பர்களை
    மறந்திருக்கிறோம் என்பது இப்பொழுது தான் தெரிந்தது. வரும் காலத்தில் புதியவர்கள் பலரும் பரிசுகள் பெறப்பெற நிச்சயம்
    பெரும்படையாகும் இந்த வலைத்தள பரிசு பெற்றோர் படை!
    திரு. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் 'தமிழ் வலைப்பக்க வரலாற்றில் உங்களுக்கென்று ஒரு இடம் உண்டு' என்று சொன்னது உண்மையே. தனது படைப்புகளுக்கு விமரிசனம் என்று வரும் பொழுது மாறுபட்ட பார்வைகளையும் புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு அவற்றையும் தன் வளர்ச்சிக்கு உரமாக்கிக் கொள்வதற்கு ஒரு பக்குவம் தேவை.
    எந்த சலனமும் இல்லாத அந்த நிலை ஒரு வரம். தாங்கள் அந்த வரத்தை பெற்றிருப்பது தங்கள் வாழ்க்கையின் சாதனையாக நான் நினைக்கிறேன்.

    வாசகர்கள், சக பதிவர்கள் மனசில் நிலையான ஓர் இடத்தைப் பிடித்தவர் அல்லவா, தாங்கள்?

    பரிசு மழையில் நனைந்த அந்தக் கலர்க்குடை கைவிரித்து நாணிக் கோணி நர்த்தனமிடுவது உங்களின் இந்த வலைத்தளத்தை நேசிக்கும் சக பதிவர்களாய்த் தான் எனக்கு உருவகப்பட்டது. உண்மையில் அவர்களே இந்தக் கொண்டாட்டத்தின் நாயகர்கள்!
    இந்தப் பெருமையெல்லாம் அவர்களையேச் சாரும் என்பதினால் அவர்களே மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்கள். 347 பார்வையாளர்களும் இந்த சாதனையை பார்த்துக் கொண்டு பூத்தூவி வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

    இன்னொரு கண்ணுக்கும் ஆப்ரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்ன நினைவு. தனி ஒருவராக சமாளித்துக் கொண்டிருப்பது அசதியைக் கூட்டலாம். ஒரு சின்ன ஓய்விற்குப் பிறகு இந்த போட்டியைத் தொடரலாம் என்று நீங்கள் நினைத்தாலும் அது நியாயம் தான்.

    உங்களைப் பார்த்து கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது.
    வாழ்த்துக்களும் அன்பான ஆசிகளும்.

    ReplyDelete
  13. முதலில் மிகவும் நன்றி ஐயா...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    தொடர முடியவில்லையே எனும் வருத்தம் ஒவ்வொரு கதைக்கும் உண்டு... வேலைப்பளு + சூழ்நிலை... ம்...

    முடிந்தால் முடியாதது இல்லை... ஆனாலும் திருப்தியுடன் செய்ய வேண்டும்...

    ReplyDelete
  14. பரிசு பெற்றோரின் பட்டியலை தொகுத்து வழங்கியமைக்கு நன்றிகள் ஐயா.

    நல்லதோர் போட்டியினை அறிவித்து, பதிவர்களின் திறன்களை அறியச் செய்து, மென்மேலும் ஊக்கமும் உற்சாகமும் வழங்கும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  15. ஐயாவுக்கு வணக்கம்...
    சிறுகதை விமர்சனப் போட்டியை இவ்வளவு சிறப்பாக நடத்தும் தங்களுக்கு வாழ்த்துக்கள்...

    மிகவும் பொறுமையாக பரிசு பெற்றோர் பட்டியலை தயார் செய்து பதிவு செய்ததில் தெரிகிறது தங்களின் பொறுமை மற்றும் ஒரு போட்டியை நடத்தும் திறமை....

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  16. தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  17. அன்பின் வை.கோ

    அருமையான நற்செயல் - கதை விமர்சனப் போட்டி நடத்தி - பரிசு மழையில் பதிவர்களை நனைய வைத்து - மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது பாராட்டுக்குரிய செயல். இவ்வளவு பணிகளையும் தாங்கள் ஒருவராக - ஒரே ஒரு நடுவரின் உதவியுடன் கதைகளைத் தேர்ந்தெடுத்து - இவ்வளவு விபரமாகப் புள்ளி விபரங்க்ளுடன் பதிவிட்டமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  18. அன்பின் வை.கோ - பரிசுகள் பெற்ற அனைத்துப் பதிவர்களையும் பாராட்டி வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கடுமையான உழைப்பினையும் - தேர்ந்தெடுத்த நடுவரின் உழைப்பினையும் பாராட்டுவதற்குச் சொற்களே இல்லை - வெற்றி பெற்ற அனைவருக்கும் ம்னங்கனிந்த வாழ்த்துகள் - பாராட்டுகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  19. பண மழையில் நனைந்த அனைவருக்கும் உளங் கனிந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. உடல்நிலை சரியில்லாத போதும் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட போதும் அலுக்காமல், சலிக்காமல் இத்தனை விபரங்களை நினைவு வைத்துக் கொண்டு தொகுத்து அதற்கேற்ற படங்களையும் தேர்ந்தெடுத்துப் போட்டு...... உண்மையில் பிரமிக்க வைக்கும் உழைப்பு என்பதோடு அதில் உங்கள் ஈடுபாடும் அசத்துகிறது. திரு ஜீவி அவர்கள் சொன்னது போல் உங்களிடமிருந்து இன்னும் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. இது ஒரு சாதாரணமான வேலை அல்ல. இதை எடுத்துச் செய்யப் பொறுமை மட்டும் போதாது. சலிப்பு இல்லாமல் சகிப்புத் தன்மையோடு எல்லாவற்றையும் பிரித்துத் தனித்தனியாக நடுவருக்கு அனுப்பி, யாரோடது பரிசு பெற்றது என்பதைக் கண்டு கொண்டு..... ம்ஹூம், உங்களால் மட்டுமே முடியும். வாழ்த்துகளும், வணக்கமும்.

    ReplyDelete
  21. பரிசு பெற்றவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். தனிமனிதனாக இவ்வளவு பெரிய விஷயத்தினை செய்து வரும் தங்களுக்கும், நடுவர் அவர்களுக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  22. வலைப்பதிவு நண்பர்கள் குறிப்பிடுவதுபோல் இது ஒரு இமாயல சாதனைதான். வாராவாரம் கதைகளைத் தொகுத்து வெளியிடுவதில் துவங்கி வரும் விமர்சனங்களைத் தொகுத்து நடுவர் அவர்களுக்கு அளிப்பது, நடுவர் தேர்ந்தெடுக்கும் பரிசுக்குரிய விமர்சனங்களை முறைப்படுத்தி முதல், இரண்டாம், மூன்றாம் என்று தனித்தனி பதிவுகளாக்கி சிறப்புற வெளியிடுவது மறுபடி அடுத்த கதையை குறித்த நாளில் வெளியிடுவது என்று மிகவும் திட்டமிடலுடனும் நேரமேலாண்மையுடனும் இந்தப் போட்டியை சிறப்புற நடத்திச் செல்லும் தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் கோபு சார். இப்போது கூடுதல் பதிவாக இதுவரை வெளியிட்டுள்ள விமர்சனங்களில் மொத்தமாய்ப் பரிசுபெற்றவர்களின் பட்டியலை வெளியிட்டுப் பெருமைப்படுத்தியதோடு மற்றவர்களையும் எழுதத் தூண்டும் வண்ணம் ஊக்கமளித்துள்ளீர்கள்.

    ஆரம்பத்தில் விமர்சனம் எழுதத் தயங்கிய நான் இன்று பல தொடர்பரிசுகள் பெற முழுமுதற்காரணம் தாங்களே.. தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி. தங்களுடைய உற்சாகமும் தூண்டுதலுமே தொடர்ந்து எழுதவைத்துக்கொண்டிருக்கின்றன. மிக்க நன்றி கோபு சார்.

    பரிசுகளைப் பெற்றுள்ள அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள். தொடர்ந்து பல பரிசுகளை வென்றிடவும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. பரிசுகள் பெற்ற அனைருக்கும் என் அன்புடன் கூடிய பாராட்டுகள்
    எவ்வளவு நேரம் செலவழித்து திட்டமிட்டு இவ்வளவு ,செய்திகள்,தகவல்கள்,பரிசுகள்,அதைத் தொடர்ந்து கதைகளும்,பரிசு மழைகளும்.ஆர்வம் எப்படிப்பட்டது என்பது, தெளிவாக விளங்குகிறது. பாராட்டுகளுக்கு வார்த்தை தேடவேண்டும். எல்லோருக்கும் வாழ்த்துகள்.அன்புடன்

    ReplyDelete
  24. Vaazhththukkal!
    Pozhuthu kidaikkaathathaal ennal ippothu intha pottiyil kalandhu kolla mudiyavillai; mannikkavum. Illaiyendral, en peyarum vanthirukkumaakkum!! :-))

    ReplyDelete
    Replies
    1. middleclassmadhaviApril 8, 2014 at 4:18 PM

      //Vaazhththukkal! Pozhuthu kidaikkaathathaal ennal ippothu intha pottiyil kalandhu kolla mudiyavillai; mannikkavum. Illaiyendral, en peyarum vanthirukkumaakkum!! :-))

      வாழ்த்துகள். பொழுது கிடைக்காததால் என்னால் இப்போது இந்தப்போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை. மன்னிக்கவும். இல்லையென்றால் என் பெயரும் வந்திருக்குமாக்கும் !! :-)) //

      வாங்கோ, வணக்கம்.

      நான் மிகவும் ஆவலுடன் விமர்சனங்களை எதிர்பார்த்த மேலும் ஒரு டஜன் பெண்மணிகள் [பதிவர்கள்] விலகி நின்று இந்தப்போட்டியினை வேடிக்கை பார்த்து வருவதுடன், தொலைபேசியிலும், மெயிலிலும் தங்களைப்போலவே ஏதேதோ காரணம் சொல்லி சமாளித்து நழுவிக்கொண்டு வருகிறார்கள்.

      அந்த மாபெரும் மகளிர் அணிக்கு தாங்கள் தலைவியாகவோ, உபதலைவியாகவோ, செயலாளராகவோ, கொள்கை பரப்புச் செயலாளராகவோ, பொருளாளராகவோ இருக்கக்கடவது !

      எனினும் தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      பிரியமுள்ள கோபு

      Delete
  25. பரிசு பெற்றிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்......

    உங்கள் தொடர்ந்த ஆர்வத்திற்கும் இடைவிடாத உழைப்பிற்கும் எனது பாராட்டுகள்.

    ReplyDelete
  26. படித்து முடித்து நிறைய நேரம் ஆச்சு பிரமிப்பிலிருந்து விடுபட.
    எப்படி நீங்கள் மட்டுமே தனி ஒருவராய் எல்லாவற்றையும் தொகுத்து , நடுவருக்கு அனுப்பி, மீண்டும் பரிசு பெற்றவர்களை அறிவித்து, அடுத்த கதையை வெளியிட்டு, ......ஹப்பா......மூச்சு வாங்குகிறது.
    உங்களுடைய இத்தனை வேலைக்கும் பின்னாடி தெரிவது உங்களுடைய முழுமையான ஈடுபாடும், தளராத உழைப்பும் என்றே சொல்ல வேண்டும்.

    என் பெயரையும் இந்த லிஸ்டில் பார்க்கும் போது இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாகிறது. இந்த நல் வாய்ப்பை நல்கி என்னுடைய எழுத்து பலரை சென்றடைய வழி வகுத்த உங்களுக்கும், சிறந்த விமரிசனங்களை தேர்ந்தெடுத்து கொடுக்கும் நடுவருக்கும் என் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  27. Paramasivam என்கிற பெயரில் என் கருத்து வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். தவறுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  28. இத்தனை வாரங்கள் தொடர்ச்சியாக இப்போட்டியைத் திறம்பட நடத்தி வருவதுடன் அவ்வப்போது போனஸ் பரிசுகளையும் அறிவித்து யார் யாருக்கு எவ்வளவு என்பதையும் இப்போது ஒரு தொகுப்பாக வெளியிட்ட தங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. குறிப்பிட்ட தேதியில் கதையை வெளியிட்டு அவ்வப்போது எல்லோருக்கும் நினைவுப்படுத்த மெயில் அனுப்பி நடுவர் அவர்களுக்குத் தனி மெயிலில் விமர்சனத்தை அனுப்பி..... அப்பப்பா! பாதி எழுதும் போதே மூச்சு வாங்குகிறது. இத்தனை வேலைகளையும் ஒருவராகச் செய்ய அசாத்திய பொறுமையும் ஊக்கமும் திட்டமிடலும் வேண்டும். இடையிடையே விமர்சனம் எப்படியிருக்க வேண்டும் என்ற குறிப்புகள் வேறு! இத்தனை கன கச்சிதமாக இது போல் ஒரு போட்டியை வேறு யாராவது தொடர்ச்சியாக நடத்தியிருப்பார்களா என்பது சந்தேகமே! பாராட்டுக்கள் கோபு சார்!

    ReplyDelete
  29. அன்புடையீர்,

    அனைவருக்கும் வணக்கம்.

    VGK-03 [சுடிதார் வாங்கப்போறேன்] கதைக்கும் and / or VGK-10 [மறக்க மனம் கூடுதில்லையே] கதைக்கும் விமர்சனம் எழுதி அனுப்பிய அனைவருக்கும் அவர்களுக்கான ‘போனஸ் பரிசு’ ஒதிக்கீட்டுத் தொகை எவ்வளவு என்பது பற்றிய தகவல் அறிவிப்பினை மெயில் மூலம் நான் அனுப்பி விட்டேன்.

    யார் பெயரும் விடுபட்டுப்போகாமல் கவனமாகவே மெயில்கள் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

    Subject : ’அன்புடன் கோபு [ VGK ] - தங்களுக்கான போனஸ் பரிசு பற்றிய அறிவிப்பு’

    என்று எழுதப்பட்டிருக்கும்.

    VGK-03 and / or VGK-10 ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு, தங்களுக்குக் கிடைக்க வேண்டிய ’போனஸ் பரிசுத்தொகை’ பற்றிய மேற்படி மெயில் தகவல் ஏதும் கிடைக்காமல் இருப்பவர்கள் யாரேனும் இருந்தால், தயவுசெய்து என்னை இங்குள்ள பின்னூட்டப்பெட்டி மூலமோ மெயில் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.

    அன்புடன் கோபு [ VGK ]

    ReplyDelete
  30. manual ஆக maintain செய்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.
    அப்படியென்றால், நோட்டுப் புத்தகத்திலா ?
    மிகவும் கஷ்டமாயிற்றே !

    MS OFFICE - Excel sheet உபயோகித்துப் பாருங்களேன் !

    Easy ஆக இருக்கும், மிகுந்த உபயோகமாகவும் இருக்கும்.

    suggestion அதிகப் பிரகங்கித்தனமானதாக இருந்தால், மன்னிக்கவும் .

    இது உங்கள் பார்வைக்கு மட்டும் !

    ReplyDelete
    Replies
    1. G Perumal ChettiarApril 10, 2014 at 4:43 PM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //manual ஆக maintain செய்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். அப்படியென்றால், நோட்டுப் புத்தகத்திலா ?//

      ஆம் ... நோட்டுப்புத்தகங்களில் மட்டுமே தான்.

      //மிகவும் கஷ்டமாயிற்றே !//

      கம்ப்யூட்டர் கண்டு பிடித்து, அது நம் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே கம்ப்யூட்டரைவிட வேகமாகவும், துல்லியமாகவும் கணக்கு வழக்குகளை கையாண்டவன் அல்லவோ இந்த மிகச்சாதாரணமானவன்.

      //MS OFFICE - Excel sheet உபயோகித்துப் பாருங்களேன் !//

      என் அலுவலக நாட்களின் கடைசி 10 வருடங்கள் EXCEL இல் சும்மாப் புகுந்து விளையாடியவன் தான், நான். அதுபற்றி எனக்குத் தெரியாது என்பது அல்ல. பிறருக்குப்பாடம் நடத்தும் அளவுக்கு EXCEL நான் கற்று வைத்துள்ளேன் என்பதே உண்மை.

      //Easy ஆக இருக்கும், மிகுந்த உபயோகமாகவும் இருக்கும்.//

      தாங்கள் சொல்வது எனக்கும் புரிகிறது. இருப்பினும்,
      இந்தப்போட்டி பற்றிய தகவல்கலை MANUAL RECORDS ஆக என் கைப்பட திட்டமிட்டு வடிவமைத்து எழுதி வரும்போதும், அவற்றைப் அவ்வப்போது புரட்டிப்பார்க்கும் போதும், ஏற்படும் மன மகிழ்ச்சி [ஆத்ம திருப்தி] மேற்படி கணினி ரிகார்ட்ஸ்களில் எனக்குக் கிடைப்பது இல்லை.

      கணினியே தவறு செய்யலாம் ஆனால் இந்த கோபாலகிருஷ்ணன் கணக்கில் தவறே செய்ய முடியாது என்ற கர்வமும் எனக்கு மிகவும் அதிகமாகவே உண்டு ஐயா.

      என் தந்தை பள்ளிசென்று படித்தவரே கிடையாது. நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது, ஒரு நாள் இரவு 8 மணிக்கு அவரிடம் நான் ஒரு சிக்கலான கணக்கினைச் சொல்லிவிட்டு, உறங்கப்போய் விட்டேன்.

      பேப்பர் பென்சில் பேனா எதுவுமே இல்லாமல், தூங்காமல்
      மனதிலேயே யோசித்து, விடை கண்டுபிடித்து, இரவு 12 மணிக்கு என்னை எழுப்பி, மிகச்சரியான விடையைச் சொல்லிவிட்டார் என் தந்தை.

      அவர் கூறிய விடையை நான் ஒரு தாளில் எழுதிக்கொண்டு, கூட்டிக் கழித்துப் பெருக்கி வகுத்து, விடை மிகச் சரியாக வந்ததில் அசந்து போனேன்.

      அந்த நள்ளிரவில் அவர் காலில் விழுந்து வணங்கினேன்.

      அப்படிப்பட்ட கணிதப்புலியின் மகன் ஐயா, நான்.

      இன்று இங்கு இதைச் சொல்லிக்கொள்வதில் மிகுந்த பெருமையடைகிறேன்.

      நான் அன்று அவரிடம் கூறிய கணக்கினை இன்று மிகப்பெரிய கணித மேதைகளாலும், பேப்பர் பேனா இல்லாமல் அவரைப்போல குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்குள் மனக்கணக்காகப் போட்டு விடையைச் சொல்லவே முடியாது ஐயா. அந்தக்கணக்கில் அவ்வளவு சிக்கல்கள் உண்டு. ஞாபக சக்தி மிக அதிகம் தேவைப்படும்
      ஐயா.

      //suggestion அதிகப் பிரகங்கித்தனமானதாக இருந்தால், மன்னிக்கவும் . இது உங்கள் பார்வைக்கு மட்டும் !//

      இல்லை ......... இல்லவே இல்லை. எனக்கு SUGGESTIONS அதாவது ஆலோசனைகள் கேட்பதோ சொல்லுவதோ வெல்லம் சாப்பிடுவது போலத்தான். SUGGESTION SCHEME இல் NATIONAL AWARDS கூட வாங்கியுள்ளவன், நான்.

      அன்புடன் கோபு [ VGK ]

      Delete
    2. உங்களின் தன்னம்பிக்கைக்கு என்
      சிரம் தாழ்த்திய வணக்கங்களும் ,
      பாராட்டுக்களும் !

      Delete
  31. தங்களின் அயராத முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. பல எழுத்தாளர்களை நீங்கள் உருவாக்குகின்றீர்கள். தங்களுடைய முயற்சி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கணக்கை தற்போது வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்குமே ஐயா?

    ReplyDelete
    Replies
    1. கே. பி. ஜனா ...April 10, 2014 at 7:56 PM

      வாருங்கள் Mr. K B Jana Sir, வணக்கம்.

      //நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கணக்கை தற்போது வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்குமே ஐயா?//

      அதாவது எந்தக்கணக்குக்கும் விடை இல்லாமல் இருக்காது.

      சிலவற்றை படித்தவர்கள் FORMULA மூலம் போட்டு விடுவார்கள்.

      சில கணக்குகளை மட்டும் நாம் FORMULA உபயோகித்துப் போட்டு விடலாம்.

      சில கணக்குகளை அவ்வாறு போட இயலாது. அவற்றை TRIAL & ERROR என்ற METHOD இல் தான் போட முடியும்.

      மேலும் நான் கொடுத்த அந்தக்கணக்குக்கு 3 விதமான விடைகள் உண்டு.

      FORMULA வைத்தெல்லாம் போட அது சரிப்பட்டு வராது.

      இதில் வேடிக்கை என்னவென்றால், பள்ளிக்கூடப்படிப்பே படிக்காத ஒருவர், தன் அறுபது வயதுக்கு மேல், உடல்நலம் குன்றி நடமாட்டமும் இல்லாத நிலையில், கட்டிலில் அமர்ந்தவாறே, பேப்பர் பேனா பென்சில் போன்ற எந்த எழுதுபொருளும் இன்றி, மனதாலேயே இந்தக் கணக்கினைப்போட்டு மிகச்சரியாக விடையைக் கொண்டுவந்து, என்னிடம் சொன்னது தான் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

      இது போல என் தந்தையும் நானும் எங்களுக்குள் எவ்வளவோ கணக்குகளை பகிர்ந்து கொண்டதும் உண்டு. இதையெல்லாம் என் பதிவுகளிலும் ஏற்கனவே
      கொண்டுவந்துள்ளேன். இருப்பினும் அதிகமான பேர்களுக்கு இதில் ஆர்வம் இல்லை என்பதே உண்மை. அதனால் நானும் அந்தபகுதியை வெளியிடுவதை நிறுத்திக்கொண்டு விட்டேன்.

      அவற்றின் இணைப்புகள் இதோ:

      http://gopu1949.blogspot.in/2011/07/blog-post.html

      இதில் உள்ள 8வது கணக்கு [இட்லி கணக்கு] தான் நான் என் தந்தையிடம் அன்று கொடுத்தது.

      முடிந்தால் பேனா, பென்சில், பேப்பர் இல்லாமல் மனதால் போட முடியுமா என முயற்சித்துப் பாருங்கள்.

      http://gopu1949.blogspot.in/2011/07/2_23.html
      [முதலுக்கு விடையும் அடுத்த புதிய கணக்கும்]

      http://gopu1949.blogspot.in/2011/07/3_30.html
      [இரண்டுக்கு விடையும்,
      மூன்றாவது புதிய கணக்கும், அதற்கான விடையும் ... குழந்தைகளுடன் விளையாட]

      http://gopu1949.blogspot.in/2011/08/4.html
      [நான்காவது புதிய கணக்கும் அதற்கான விடையும் ... குழந்தைகளுடன் விளையாட மட்டுமே.]

      இவைகளுக்கான வரவேற்பு சரியாக இல்லாததால் இந்தப்பகுதியை நான் தொடராமல் நிறுத்திக்கொண்டு விட்டேன்.

      அன்புடன் கோபு [VGK]







      Delete
  33. //அதாவது எந்தக் கணக்குக்கும் விடை இல்லாமல் இருக்காது. //

    விடைக்காகத் தானே கணக்குகளே! (Not only Maths, everything is for results only)

    பதில் இல்லை என்றால் கேள்விகளே கிடையாது என்பது போல்.

    எதிர்பார்ப்பு இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்பது மாதிரி.

    ReplyDelete
    Replies
    1. ஜீவி April 11, 2014 at 11:39 AM

      வாங்கோ, ஸார், வணக்கம்.

      *****அதாவது எந்தக் கணக்குக்கும் விடை இல்லாமல் இருக்காது. *****

      //விடைக்காகத் தானே கணக்குகளே! (Not only Maths, everything is for results only)

      பதில் இல்லை என்றால் கேள்விகளே கிடையாது என்பது போல்.

      எதிர்பார்ப்பு இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்பது மாதிரி.//

      எது சொன்னாலும் மிக அருமையாகச் சொல்கிறீர்கள் ;)

      மேலே தாங்கள் எழுதியுள்ள மிகப்பெரிய பின்னூட்டத்தையும் படித்து மகிழ்ந்தேன். முன்புபோல எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் பதில் எழுத என் சரீரம் இடம் கொடுக்காமல் உள்ளது. நேரப்பற்றாக்குறையும் உள்ளது. அடுத்தடுத்து போட்டி வேலைகளிலும் முழுகிப் போக வேண்டியதாகவும் உள்ளது.

      என்னிடமிருந்து பதில் இல்லை என்றால் அவர்களிடமிருந்து பின்னூட்டமும் இல்லை என சிலர் என்னைப் பாடாய்ப் படுத்த ஆரம்பித்துள்ளனர்.

      தாங்கள் சொல்வது போல என் பதில் = அவர்களின் எதிர்பார்ப்பு.

      அவர்களின் பின்னூட்டம் = எனது [வலைத்தள] வாழ்க்கை.

      ஆண்டவா ! இந்தப்போட்டி முடியும்வரை யாரிடமும் என்னால் போட்டிபோட முடியாமல் உள்ளதே !

      சிவ சிவா ... என சிவனேன்னு இருக்க வேண்டியுள்ளது, ஸார். கோச்சுக்காதீங்கோ, ப்ளீஸ்.

      பிரியமுள்ள கோபு

      Delete
  34. Thankyou soo much vgr sir...very very kind of u to encourage and appreciate ur readers. Congratulations to all others.

    Shakthiprabha

    ReplyDelete
  35. Thankyou so much vgk sir, ur appreciation and encouragement on fellow readers is appreciated a lot. Congratulations to all winners and participants.
    regards,
    shakthi

    ReplyDelete
  36. அனைவருக்கும் வணக்கம்.

    இங்கு அன்புடன் வருகை தந்து, அழகான பல்வேறு கருத்துக்களைச்சொல்லி, மகிழ்ச்சியினைப் பகிர்ந்துகொண்டுள்ள அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதில் எழுத வேண்டும் என்ற ஆசை என் மனதினில் இருப்பினும், அடுத்தடுத்து போட்டி சம்பந்தமான வேலைகள் தலைக்குமேல் தேங்கி நிற்பதால், எனக்கு முன்புபோல நேரம் கிடைக்காமல் உள்ளது. அதனால் என்னை தயவுசெய்து மன்னிக்கவும்.

    சுடச்சுட போட்டி சம்பந்தமான முடிவுகளும், பரிசு பெற்றவர்கள் பற்றிய விபரங்களும் வாராவாரம், எப்படியும் சனி, ஞாயிறு, திங்களுக்குள் வெளியாகிக்கொண்டே இருப்பது மேலும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

    இதே போல பரிசுத்தொகைகளையும், பரிசினை வென்றவர்களுக்கு, சுடச்சுட அனுப்பி வைத்தால் மேலும் மகிழ்ச்சியாக இருக்குமே என என் மனதில் நினைத்தேன்.

    அதற்கான ஆக்கபூர்வமான ஒருசில நடவடிக்கைகள் என்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத்திட்டத்தை வெகு விரைவில் நடைமுறைப்படுத்த தீவிர செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

    ஓரிரு நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு, பரிசு பெற்ற அனைவருக்கும் மெயில் மூலம் தகவல் அளிக்கப்பட உள்ளன என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    உயர்திரு நடுவர் அவர்கள் என்னுடன் மிகச்சிறப்பாக ஒத்துழைத்து இந்தப்போட்டிக்கு இதுவரை உறுதுணையாக இருப்பதுபோலவே, இந்த பரிசுகளை உரியவர்களுக்கு *உரிய நேரத்தில்* சேர்க்கும் பொறுப்பினில் எனக்கு உதவி செய்திட ஒரு மிகத் திறமை வாய்ந்த பதிவர் தாமாகவே முன்வந்துள்ளார்கள். அவருக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    [அதாவது, *உரிய நேரத்தில்* = ஒவ்வொரு 10 கதைகளுக்கான போட்டி அறிவிப்புகள் முற்றிலும் அறிவிக்கப்பட்டதும், என வைத்துக்கொள்ளலாம்]

    நடுவர் யார் என்பது மர்மமாக இருப்பதுபோலவே இந்த உதவியாளர் யார் என்பதும் இப்போதைக்கு மர்மமாகவே இருக்கட்டும். உரிய நேரம் வரும்போது நம் உயர்திரு நடுவர் அவர்களின் பெயரையும், இந்த உதவியாளர் அவர்களின் பெயரையும் பகிரங்கமாக அறிவித்து கெளரவப்படுத்த நினைக்கிறேன்.

    VGK-01 முதல் VGK-10 வரை பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளவர்களுக்கு அவர்களுக்கான மொத்தப் பரிசுத்தொகை வரும் 10.05.2014 க்குள் அவரவர்களுக்கு கிடைக்குமாறு செய்ய இப்போது திட்டமிடப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் தங்களுக்கு என்னிடமிருந்து இது சம்பந்தமாக ஓர் மெயில் வரும்.

    இந்தத்திட்டம் வெற்றிபெற தாங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்.

    பிரியமுள்ள கோபு [ VGK ]

    ReplyDelete
    Replies
    1. VGK-01 TO VGK-10 வரை முதல் 10 போட்டிகளில் பரிசுக்குத் தேர்வானவர்களிடமிருந்தும், அதைத்தவிர போனஸ் பரிசுக்கு மட்டும் தேர்வானவர்களிடமிருந்தும், [பரிசுத்தொகையினை அனுப்பி வைக்க] வங்கிக்கணக்குத் தகவல்கள் அனுப்பி வைக்குமாறு மெயில் மூலம் கேட்டிருந்தேன்.

      வங்கித்தகவல்கள் மெயில் மூலம் 25.04.2014க்குள் அனுப்பி வைத்துள்ள அனைவருக்கும், பரிசுப் பணம் அவரவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பியாகிவிட்டது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

      பரிசுத்தொகை தங்களின் வங்கிக்கணக்குக்கு கிடைக்கப்பெற்றவர்கள் மெயில் மூலம் அதை உறுதிசெய்து எனக்கு தகவல் தெரிவித்தால் நல்லது.

      இதுவரை வங்கித்தகவலை மெயில் மூலம் அனுப்பி வைக்காதவர்கள் தயவுசெய்து 30.04.2014 க்குள் அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      பிரியமுள்ள கோபு [VGK]

      Delete
    2. போட்டிக்கான முதல் 10 கதைகளான VGK-01 to VGK-10 க்கு, பரிசுக்குத்தேர்வான அனைவருக்கும், பரிசுத்தொகை முழுவதுமாக, அவரவர்களின் வங்கிக்கணக்குக்கு அனுப்பப்பட்டு விட்டது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

      VGK-11 To VGK-20 பட்டியலில் மகிழ்ச்சியுடன் மீண்டும் இதேபோல விரைவில் நாம் சந்திப்போம்.

      ஒத்துழைப்பளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் கோபு [VGK]

      Delete
  37. திருமதி கீதா மதிவாணன் அவர்கள் [கீதமஞ்சரி]

    இந்த வெற்றியாளர், தாங்கள் இதுவரை ஒட்டுமொத்தமாகப் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சிகளைத் தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    இணைப்பு: http://geethamanjari.blogspot.in/2014/04/blog-post.html

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  38. ஆஹா.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்... எல்லோரும் இவ்ளோ ஆர்வமாக பங்குபற்றியிருப்பது பார்த்து மிக்க மகிழ்ச்சி... தொடர்ந்தும் அனைவரும் உற்சாகமாக பங்குபற்ற ஆண்டவனை வேண்டிக்கொண்டு.. ஒரு ஓரமா நிற்கிறேன் :).

    ReplyDelete
    Replies
    1. athira June 22, 2014 at 2:51 AM

      வாங்கோ அதிரா, வணக்கம்.

      //ஆஹா.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்... எல்லோரும் இவ்ளோ ஆர்வமாக பங்குபற்றியிருப்பது பார்த்து மிக்க மகிழ்ச்சி... தொடர்ந்தும் அனைவரும் உற்சாகமாக பங்குபற்ற ஆண்டவனை வேண்டிக்கொண்டு.. //

      அனைவர் சார்பிலும் அதிராவுக்கு என் நன்றிகள்.

      //ஒரு ஓரமா நிற்கிறேன் :).//

      ஒரு ஓரமா நின்றாலும், நட்ட நடுவிலே நின்றாலும் என் எல்லாப்பதிவுகளுக்கும் வருகை தந்து கும்மியடிக்கவும், கோலாட்டம் போடவும் மறந்துடாதீங்கோ.

      தங்களின் வருகைதான் எனக்கும் மற்றவர்களுக்கும் ஒருவித கலகலப்பை ஏற்படுத்தும்.

      மிக்க நன்றி, அதிரா ! ;)

      அன்புடன் கோபு அண்ணன்

      Delete
  39. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    இணையம் பக்கம் வரமுடியாத அளவு பயணங்கள், உறவினர் வருகை. நான் நிதானமாய் அனைத்தையும் படிப்பேன். உங்கள் கடின உழைப்புக்கும், அனைவரும் பரிசுபெற வேண்டும் என்ற உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
    உடல்நலத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  40. பத்து கதைகள் முடிந்து விட்டனவா? பாராட்டுகள்.

    ReplyDelete
  41. என்ன ஒரு திட்டமிட்ட உழைப்பு.எவ்வளவு பேரை சந்தோஷப்படுத்தி வருகிறீர்கள் பாராட்டுகள்

    ReplyDelete
  42. //நான் மிகவும் ஆவலுடன் விமர்சனங்களை எதிர்பார்த்த மேலும் ஒரு டஜன் பெண்மணிகள் [பதிவர்கள்] விலகி நின்று இந்தப்போட்டியினை வேடிக்கை பார்த்து வருவதுடன், தொலைபேசியிலும், மெயிலிலும் தங்களைப்போலவே ஏதேதோ காரணம் சொல்லி சமாளித்து நழுவிக்கொண்டு வருகிறார்கள்.//

    ம்ம்ம்ம். இதுல நானும் ஒண்ணு.

    பணி ஓய்வு பெரும் நேரம். அலுவலகப்பணி, வீட்டுப்பணி, குட்டிப்பேத்தி இத்யாதி, இத்யாதி காரணங்களாலதான் முடியல. ஆனா இப்ப ரொம்பவே வருத்தமா இருக்கு.

    புள்ளி விவரங்கள பாக்கும்போது மலைப்பா இருக்கு. இதுக்காக நீங்க எவ்வளவு உழைத்திருப்பீங்கன்னு நினைக்கும் போது ஆச்சரியமா இருக்கு.

    ஆனா இதுக்கு மன்னியும் ஒரு காரணம். THERE IS A WOMAN BEHIND EVERY SUCCESSFUL MAN. CREDIT GOES TO MANNI ALSO

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya September 28, 2015 at 12:10 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      **நான் மிகவும் ஆவலுடன் விமர்சனங்களை எதிர்பார்த்த மேலும் ஒரு டஜன் பெண்மணிகள் [பதிவர்கள்] விலகி நின்று இந்தப்போட்டியினை வேடிக்கை பார்த்து வருவதுடன், தொலைபேசியிலும், மெயிலிலும் தங்களைப்போலவே ஏதேதோ காரணம் சொல்லி சமாளித்து நழுவிக்கொண்டு வருகிறார்கள்.**
      - GOPU to MCM Madam

      //ம்ம்ம்ம். இதுல நானும் ஒண்ணு.//

      ஆமாம், ஜெயா ! :(

      //பணி ஓய்வு பெரும் நேரம். அலுவலகப்பணி, வீட்டுப்பணி, குட்டிப்பேத்தி இத்யாதி, இத்யாதி காரணங்களாலதான் முடியல. ஆனா இப்ப ரொம்பவே வருத்தமா இருக்கு.//

      தங்களின் இந்த வருத்தம் எனக்கும் உண்டு. அதனால் மட்டுமேதான், இனியாவது கலந்துகொள்ளும் அனைவருக்கும் நான் நிச்சயமாகப் பரிசு அளிக்கும் வகையில், மிகச்சுலபமாக இன்னொரு போட்டியே அறிவித்துள்ளேன்.

      Ref: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html அதிலாவது தாங்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வருவது என் மனதுக்கு சற்றே ஆறுதலாக உள்ளது.

      //புள்ளி விவரங்கள பாக்கும்போது மலைப்பா இருக்கு. இதுக்காக நீங்க எவ்வளவு உழைத்திருப்பீங்கன்னு நினைக்கும் போது ஆச்சரியமா இருக்கு.//

      பதிவர்களில் பலரும் பரவலாகக் காட்டிய ஆர்வம் + ஈடுபாடு + ஒத்துழைப்பினால், என்னால் இதற்காக மிகவும் உற்சாகமாகவே உழைக்க முடிந்தது.

      //ஆனா இதுக்கு மன்னியும் ஒரு காரணம். THERE IS A WOMAN BEHIND EVERY SUCCESSFUL MAN. CREDIT GOES TO MANNI ALSO//

      ஆம். உண்மைதான். இந்த என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’ வேலைகளிலெல்லாம் கொஞ்சமும் தலையிடாமலும், தடுக்காமலும், இரவில் தூக்கம் வராத இந்த மனுஷ்யன் ஏதோ செய்துவிட்டுப்போகட்டும் ..... (நமக்குத் தொந்தரவு தராமல் ஆளை விட்டால் போதும்), என நினைத்து, பெரும்பாலும் தொலைகாட்சிப் பெட்டியுடன் ஐக்கியமாகிப்போய், மறைமுகமாக எனக்கு உதவிய பெருமை தங்கள் மன்னிக்கும் நிச்சயம் உண்டு. :)

      பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
  43. இன்னாமா புள்ளி வெவரம்லா தயாரிச்சு போட்டிருக்கீக. படிகவுமே சந்தோசமா இருக்குது.

    ReplyDelete
  44. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் ஜி. வி. சார் சொல்லியிருப்பது மிகவும் சிறப்பு. நல்ல படிப்பு அநுபவம் அனைவருக்குமே கிடைக்கிறது. விமரிசனபோட்டியில் கலந்து கொள்பவர்கள் எல்லாம் உங்கள் பள்ளியில் புடம் போட்ட தங்கமாக ஜொலிக்கிறார்கள்.

    ReplyDelete
  45. பரிசுகளை அள்ளிக் குவித்த அனைவர்க்கும், வாரி வழங்கிய வாத்யாருக்கும் வாழ்த்துகள்..

    ReplyDelete
  46. பரிசு பெற்றவர்களின் விவரங்களைத் தொகுத்து அளித்தமைக்கு நன்றி! பலருடைய திறமைகள் வெளிவர வாய்ப்பளித்த உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் சார்!

    ReplyDelete