About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, August 24, 2014

வலைச்சரத்தில் 100வது அறிமுகம்



  வலைச்சரத்தில்   

 வெற்றிகரமான  

  100வது அறிமுகம்  

அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான அன்பு வணக்கங்கள்.

இன்று 24.08.2014 ஞாயிறு வலைச்சரத்தில் என்னுடைய வலைத்தளத்தின் 100வது அறிமுகம் நிகழ்ந்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

02.01.2011 அன்று முதன்முதலாக வலைத்தளத்தில் எழுதத் துவங்கிய என்னையும், என் பதிவுகளையும் கடந்த 44 மாதங்களில் பல்வேறு வலைச்சர ஆசிரியர்கள் பாராட்டி வலைச்சரத்தில் எழுதியுள்ளனர்.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் இங்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். 

அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியுமே தனித்தனிப் பதிவுகளாகத் [ஒருசில தொடர் பதிவுகளாக]  தந்து சிறப்பித்து நன்றி கூறவும் எண்ணியுள்ளேன்.

இன்றைய வலைச்சரத்தின் இணைப்பு இதோ:






இந்த வெற்றிகரமான 100வது அறிமுகத்தினைச் செய்து இன்று பெருமை படுத்தியுள்ள என் அன்புச்சகோதரி திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறேன்.


என் அன்புக்குரிய சகோதரி
திருமதி ‘ஜெயந்தி ரமணி’ அவர்கள். 

இவர்களின் வலைத்தளங்கள்
எப்போதும் 


மனம் [மணம்] வீசும்’




எங்களின் நட்புக்கு ஓர் இணைப்புப் பாலமாக 
அமைந்துள்ள ஒரு சில பதிவுகள்  
இதோ தங்களின் பார்வைக்காக:

அறுபதிலும் ஆசை வரும் :)))))

[ படங்களுடன் ]

-oOo-

பனை [பண] விசிறி 

[எங்களின் இனிய சந்திப்பு - படங்களுடன்]



அன்புள்ள திருமதி. ஜெயந்தி  ரமணி அவர்களே ! 

வணக்கம்.

இன்று என்னை வலைச்சரத்தில்
100வது முறையாக அடையாளம் காட்டி
சிறப்பித்துள்ளதற்கு 
என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.



 பிரியமுள்ள கோபு அண்ணா

 


35 comments:

  1. சிறப்புக்கே சிறப்பாய் சிறப்பு சேர்க்கும் அறிமுகம்.

    இனிய வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. கோபு அண்ணா

    என்ன சொல்ல

    வார்த்தைகளே இல்லை.

    அம்மாடி,

    உங்க கிட்ட இருந்து எவ்வளவோ கத்துக்கணும்.
    என்ன ஒரு புள்ளி விவரங்கள். பொறுமையாக எல்லாவற்றையும் தொகுத்து, பிரமிக்க வைக்கிறது.

    என்னே என் பாக்கியம்.

    100 முறை என்ன, 1000 முறை, 10000 உங்களை அறிமுகப்படுத்தலாம். அவ்வளவு நல்ல, நல்ல விஷயங்கள் இருக்கு உங்கள் வலைத்தளத்தில்.


    அன்புடனும்,
    நன்றியுடனும்,
    வணக்கத்துடனும்

    ஜெயந்தி ரமணி

    ReplyDelete
    Replies
    1. உங்க கிட்ட இருந்து எவ்வளவோ கத்துக்கணும். // சத்தியமான வார்த்தை !

      Delete
  3. எடுத்த காரியத்தைச்சிறப்பாய் செய்து முடிக்கும் உங்களுக்கு என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. எத்தனை முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளீர்கள் என்று கணக்காய் சொல்லி அசத்தி விட்டீர்கள் கோபு சார். வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  5. வலைச்சர அறிமுகம் என்பதே சாதாரண விஷயம் அல்ல! அதில் சதம் அடிப்பது என்பது மிகப்பெருமையான விஷயம்! வாழ்த்துக்கள் சார்! விரைவில் சதம் பல சஹஸ்ரங்களாக மாறும் என்பதில் ஐயமில்லை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. வாத்யாரே! இது உங்களைப் பொறுத்தவரை ஒரு செஞ்சுரிக்கான துவக்கம் மட்டுமே! நிச்சயம் நூறாவது நூறினையும் எட்டுவீர்கள்! உருவத்தில் பிராட் மேன்! சாதனையில் சச்சின்! அடி பின்னுங்க! நூற்றில் எனக்கும் பங்கு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்! உங்களின் இந்த வெற்றிக்கு மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன் வாத்யாரே! நடக்கட்டும்! அன்புடன் உங்கள் MGR

    ReplyDelete
  7. எங்களைப்போன்ற வலைச்சரப் பதிவர்கள்
    அனைவருக்கும் அனைத்து விதத்திலும்
    வழிகாட்டியாக இருக்கிற தாங்கள்
    ஆயிரம் முறை அறிமுகப் படுத்தத்தக்கவர்
    என்பதை இங்கு பதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன்

    தொடர்க தங்கள் வலைச்சரத்தொண்டு..
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  8. பல உள்ளங்களைக் கொள்ளைகொண்ட படைப்புகளுக்குச் சொந்தக்காரர் அல்லவா? தொடரட்டும் உங்கள் வலையுலகத்தொண்டு! நிலையாய் ஓரிடம் உங்களுக்கு உண்டு! எங்களை மேலும் மகிழ்விக்கும் வகையில் பல படைப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்! நன்றி!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் அய்யா! அகில உலக V.G.K ரசிகர் மன்றம் தொடங்கிவிட வேண்டியதுதான்!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் ஐயா
    தொடரட்டும் தங்களின் மகத்தானப் பணி

    ReplyDelete
  12. வணக்கம்!..வலைச்சரத்தில் 100வது முறையாக அறிமுகப்படுத்தப்படுவது, தங்கள் எழுத்துத் திறமைக்கும், சக பதிவர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்தும் நட்புள்ளத்திற்கும் கிடைத்திருக்கும் பெருமை மிகு அங்கீகாரம்!.. தங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் !
    வாழ்த்துச் சொன்ன எங்களுக்கு மங்கோ யூஸ் கொடுக்கணும் ஆமா ..:))

    ReplyDelete
  14. உங்கள் பணியும் பாணியும் இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் அறிமுகப் படுத்த உகந்ததே!

    ReplyDelete
  15. வலைச் சரத்தில் வெளியான தங்களின் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!

    வலைச்சர சக்கரவர்த்தியாக இருந்து பல்சுவைக் கதாநாயகராக, அனைத்து பதிவர்களின் அன்பைப் பெற்று, வலையுலகில் பீடுநடை போட்டு உலாவரும் தாங்கள் இன்னும் பலப்பல அருமையான பதிவுகளைத் தந்து பல்லாயிரம் முறை வலைச் சரத்தில் அறிமுகமாக என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. interesting statistic.
    இது ஒரு சாதனை தான். சந்தேகமில்லை.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  17. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. நூறாவது அறிமுகத்துக்கு வாழ்த்துகள். இது போல் இன்னும் பல ஆயிரம் அறிமுகங்கள் அனைவரும் செய்யவும் வாழ்த்துகள். அனைவரையும் கௌரவிக்கும் உங்களை அறிமுகம் செய்யவில்லை என்றால் தான் ஆச்சரியம். மற்றபடி உங்கள் வழக்கம் போல் பிரமிக்கச் செய்யும் புள்ளி விபரங்கள். பொறுமையாக அனைத்தையும் கணக்கெடுக்கிறீர்கள். தொடர்ந்து வெற்றி பெறவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. ஆகா..வித்தியாசமான சாதனை.......வாழ்த்துக்கள் ஐயா........

    ReplyDelete
  20. Eniya vaalththu.
    well come tomy site also.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  21. நூறாவது அறிமுகத்துக்கு வாழ்த்துகள் !

    ReplyDelete
  22. அன்பின் வை.கோ

    தங்களை வலைச்சரத்தில் நூறாவது தடவையாக அறிமுகப் படுத்தி இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி - தங்களூக்கு அறிமுகம் தேவையே இல்லை - வை கோ என்றாலே வலையுலகமே அறியும். தங்களை அறியாத பதிவர்களே கிடையாது. இருப்பினும் ஒவ்வொரு பதிவரும் தங்களை அறிமுகப் படுத்துகிறேன் என தங்களைப் பற்றி வலைச்சரத்தில் எழுதுவது தங்களை மேன் மேலும் உலகம் முழுவதும் உள்ள பதிவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்லதொரு சிந்தனையால்தான்.

    நூறாவது அறிமுகம் செய்த ஜெயந்தி ரமணீக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்

    தங்களை நூறாவது தடவையாக வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கும் பதிவரைத் தொடர்ந்து இன்னும் மற்றவர்களும் மேன்மேலும் அறிமுகப் படுத்த - பதிவுலகமே முன்னின்று செயல்படும்.

    மிக்க மகிழ்ச்சி - உளம் கனிந்த பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  23. வலைச்சர நூறாவது அறிமுகத்துக்கு வாழ்த்துகள் சார்.
    உங்களை நூறாவதாக அறிமுகம் செய்த ஜெயந்தி ரமணி அவர்களுக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  24. இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகான கருத்துக்கள் கூறி வாழ்த்தியுள்ளவர்களுக்கும், தவிர்க்க இயலாத காரணங்களால் இனி தாமதமாக வருகை தந்து வாழ்த்த இருப்போருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    என்னை வலைச்சரத்தில் இதுவரை அறிமுகம் செய்துள்ள 100 வலைச்சர ஆசிரியர்களைப்பற்றியும் நினைவு கூர்ந்து எழுதி, சுமார் 15 பதிவுகளாகத் தொகுத்து முடித்துவிட்டேன். அவைகள் இப்போதே வெளியிட தயார் நிலையில் தான் உள்ளன.

    நேர நெருக்கடிகளாலும், போட்டி சம்பந்தமான வேலைகள் / பதிவுகள் தொடர்ந்து கொடுக்க வேண்டியிருப்பதாலும், எப்போது இவற்றை வெளியிடுவது என்பது தான் யோசனையாக உள்ளது.

    எனினும், சிறுகதை விமர்சனப்போட்டிகள் முடிந்த பிறகு, வரும் நவம்பர் மாதத்தில், தொடர்ச்சியாக தினம் ஒரு பதிவு வீதம் 15 நாட்களுக்குள் வெளியிட்டு விடலாம் என நம்புகிறேன்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  25. வலைச்சரத்தில் தங்களைப் பற்றிய அறிமுகம் ஒருமுறையாவது வாராதா என்று ஒவ்வொருவர் ஏங்கிக்கொண்டிருக்கும் வேளையில் நூறு பதிவர்களால் நூறு முறை அறிமுகம் என்பது ஒரு பெருமை. அந்தப் பெருமை தங்களைப் போன்ற சாதனையாளரை வந்தடைந்திருப்பதில் வியப்பே இல்லை. இதுபோன்ற அறிமுகங்களுக்கு அப்பாற்பட்டவர் தாங்கள் என்றபோதும் புதிதாக வலைப்பக்கம் வருபவர்களுக்கு இவை மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். மனமார்ந்த வாழ்த்துகள் கோபு சார்.

    ReplyDelete
  26. வலைச்சரத்தில் நூறு முறை அறிமுகம் ஆன உங்களை பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  27. வலைச்சர நூறாவது அறிமுகத்துக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  28. வலைச்சர 100---வது அறிமுகத்துக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்.

    ReplyDelete
  29. 100---வது வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள். வலைச்சரத்தில் பிரபலமான பதிவர்களைத்தான் அறிமுகம் செய்வார்களா. எனக்கெல்லாம் ஒருமுறை கூட அறிமுகம் கிடைக்கலியே. அதான் கேட்டேன்.

    ReplyDelete