என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 9 ஆகஸ்ட், 2014

VGK 28 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - ’வாய் விட்டுச் சிரித்தால்’






’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு :



 VGK-28  

 வாய் விட்டுச் சிரித்தால் 


இணைப்பு:



 

   

 

 





மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 




நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து





  









இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 







  


மற்றவர்களுக்கு: 







    



இனிப்பான இரண்டாம் பரிசினை 


வென்றுள்ளவர்கள் இருவர்.


அதில் ஒருவர்







திருநிறைச்செல்வன்




 J. அரவிந்த் குமார்  



அவர்கள்


வலைத்தள முகவரி


 



இனிப்பான இரண்டாம் 

பரிசினை வென்றுள்ள


திருநிறைச்செல்வன்





 J. அரவிந்த் குமார்  



அவர்களின் விமர்சனம் இதோ:
 


 


பிறந்ததிலிருந்து சிரிக்கத்தெரியாதவனோ என சிடு சிடுமூஞ்சி, கடுகடு கடுவன் பூனை மூஞ்சி, முன்கோபியான  கோபியை கதாநாயகனாக வைத்து ஒரு நகைச்சுவை சிறுகதை எழுதி சிரிப்பாய் சிரிக்கவைக்கும் வல்லமை நம் கதாசிரியருக்கே உரிய தனித்திறமையான  கைவந்த கலையோ என வியக்கிறோம்..!

ஒரு நகைச்சுவை துணுக்கை வைத்து வர்ணணைகள் ஜோடித்து கதைத்தேரை பிரம்மாண்டமாக அழகாக நகர்த்தி வாசகர்களின் மனநிலையில் நிலையாக நிறுத்திவிடுகிறார் கதை ஆசிரியர்..

இடுக்கண் வருங்கால் நகுக என்று எதையும் சிரித்து சமாளிக்கத் தெரியாமல் கடுகடு முகத்துடன் வாழ்க்கையை எதிர்நோக்கி கடினமாக்கிக்கொள்ளும் கோபி போன்றவர்கள் இப்படித்தான் எங்காவது இடித்துக்கொள்வார்கள் .. என்று சந்தடி சாக்கில் நச் என்று மனதில் புரியவைக்கிறார் ஆசிரியர்..

கட்டை விரல் நகம் பெயருமாறு  இடித்து ரத்தம் வழிய மருத்துவமனை சென்றும் அங்கும் தன் அவசரத்தைக் காட்டிய  அவசரக்கார கோபிக்கு நேர்மாறான குணத்துடன் பொறுமையின் பூஷணமாய் காத்திருப்பவர் அறிவுரை கூறுகிறார் ..!

டென்ஷன் ஆனால் டொனேஷனாக வருவது நோய் என்னும் வாழ்க்கைப் பாடமும் கற்றுத்தருகிறார்..!

சில வாரங்களாக மருத்துமனை, டாக்டர், நர்ஸ் என்று கதைகள் சுற்றிச்சுற்றி வருவது நமக்கே ஒரு நோயாளிக் களையை ஏற்படுத்திவிட்டதாக உணரவைக்கிறது..!

ஈறைப்பேனாக்கி பேனைப் பெருமாளாக்கியதைப் போல் துக்கிணியூண்டு தக்கணூண்டு கதைக் கரு சிரிக்கவைக்கும் கதையாக்கியிருப்பது கதாசிரியரின் கற்பனை வளத்திற்குச் சான்று பகர்கிறது..!

காலில் கட்டுப்போட ஏன் சட்டை கழற்றவேண்டும் என்பது கோபியின் கேள்வி..

சொன்னதை செய்ய தயங்கியதால் கோபத்துடன் வந்து உரித்துப்போட முனைகிறாள் ஒரு வெண்புறா நர்ஸ்....

கொரியர் கொடுக்க வந்தவரும் விதிவிலக்கில்லாமல் டோக்கன் வாங்கி தர்மாமீட்டர் வாயில்வைத்து (அப்போதுதானே பேசமுடியாது ) - எனக் கூத்துக்கட்டும் மருத்துவமனை, நடைமுறைகளை எதிர்கொண்டபின்பே மருத்துவரைப் பார்த்து கொரியர் கொடுக்கமுடிகிறது ..! 

இத்தனைக்கும் கொரியர் கொடுக்கத்தான் வந்திருக்கிறார் என்பது நர்ஸுகளுக்கும் மருத்துவருக்கும் தெரிந்திருந்தாலும் கூட என்னும்போது..!  காலில் காயத்துடன் வந்தவர் மட்டும் உடனடியாகப்பார்த்துவிட முடியுமா என்ன?

ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கும் குர்ரம் தான் என்பது மருத்துவமனைகளின் எழுதப்படாத சட்டமோ என்னவோ..

அன்றைக்கு அந்த கொரியர்காரர் நரிமுகத்தில் விழித்திருப்பாரோ என்னவோ..! இருபதாவது டோக்கன் கிடைத்தது.. அதற்கு முந்தைய நாளானால் நூற்று எட்டாவது டோக்கன் என்னும் போது எட்டாவதாகப் பிறந்து கம்சனை அழித்த கிருஷ்ண பரமாத்மாவே வந்தாலும் இந்த நடைமுறைச் சிக்கலுக்குத் தீர்வு காணமுடியுமோ என்னவோ என ஏங்குகிறோம்..!

தினமும் கொரியர்காரருக்கு இதே அக்கப்போரா.. அட போங்கப்பா.. நீங்களும் உங்க மருத்துவமனையும் ..!

இந்த மருத்துவமனை எத்தனையோ தேவலாம் போல, கோவில் கட்டி கும்பிடலாம் போல் தோன்றுகிறது.. வேறொரு ஜோக்கில் தபால் கொடுக்க வந்த தபால்காரரையும் கட்டிலில் படுக்கவைத்து ஒரு க்ளூகோஸ் பாட்டில் ஏற்றிய பிறகே தபால் வாங்கிக் கொள்வார்களாம்.. நல்லவேளை அந்த ஜோக் நம் கதாசிரியர் கண்ணில் படவில்லை என நிம்மதிப் பெருமூச்சு எழுகிறது..

இல்லாவிட்டால் சொட்டும் க்ளூகோஸ்பாட்டில், ஆஸ்பத்திரி பெட், அறுவைச்சிகிச்சை லைவ் ரிலே, எனக் காட்சிப்படுத்தி தலைதெறிக்க ஓடவைத்திருப்பார் கதை ஆசிரியர்..

போன கதையில் பல் கிளீனிங் இயந்திரத்தின் அதிர்வே இன்னும் சும்மா அதிருதில்லே..!   

இந்தக்கதையிலேயே பாருங்கள் .. கட்டைவிரல் நகம் பெயர்ந்த ரத்தம் சொட்டச்சொட்ட படம், ரத்த அழுத்தம் அளக்கும் ஸ்பிக்மோமானோமீட்டர், தர்மாமீட்டர், ஸ்டெதாஸ்கோப் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள், வெண்புறா நர்ஸுகள், காத்திருக்கும் நோயாளிகள், கோபம் கொண்ட கோபியைக் காட்சிப்படுத்த பற்களைக்காட்டிப் பயமுறுத்தும் அல்ஷேசன் நாய் என ஆதிஷேசன் மீது பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமனாக  படங்களின் மூலமாக ஒரு ஆஸ்பத்திரியையையே சிருஷ்டித்து கண்முன் கதையை உலவ வைக்கிறாரே .. படைப்பாளியின் தனித்திறமை.. !

ஃபீஸ்கட்டி அங்கே இங்கே அலையாமல், அந்த மருத்துமனையிலேயே இருக்கும் உபகரணங்கள் துருப்பிடித்துப் போகாமல் இயங்க வைக்க, எல்லா சோதனைகளும் செய்து கொண்ட பிறகே மருத்துவரைப் பார்க்கமுடிவது,  பல கார்பொரேட் மருத்துவமனைகளில் நடப்பதுதான் ... கற்பனை ஒன்றும் கிடையாது..!

மிகுந்த பணச்செலவில் மருத்துவராகி, பளபளபக்கும் ஸ்டார் ஹோட்டல் தரத்துடன் மருத்துவமனை கட்டி, அழகான நர்ஸுகளாகப்பார்த்து பணியில் அமர்த்தி, சம்பளம் தரவேண்டுமானால், அந்த செலவை பகிர்ந்து கொள்ள வேண்டியது நோயாளிகள் தானே..!!

இன்றைய மருத்துவ அவலங்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நாஸுக்காக கதையாக்கி சிரிக்கவைத்து சிந்திக்கவும் வைக்கிறார் ஆசிரியர்.. 

"வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத் தனையது உயர்வு."

என்பது போல நோயாளிகளின் வரவுக்கு இணையாக மருத்துவமனை  அடுக்குகளும் உயருவதே இன்றைய நிலை என்பதை உணருகிறோம்.. 

நகைச்சுவை ஒன்றையே மையமாக்கி கொட்டும் முரசுடன் இணைந்து சிரிக்கவைக்கும் சிரிப்புமின்னல் கீற்றுகளை  இடைவிடாமல் பொழியும் கதை பாராட்டுப்பெறுகிறது..!



 
Thank you !
My Dear Aravind Kumar

- vgk






    

இனிப்பான இரண்டாம் பரிசினை 


வென்றுள்ள மற்றொருவர்

திரு.



     E.S. சேஷாத்ரி    


அவர்கள்


esseshadri.blogspot.in







 

இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள




திரு. E.S. சேஷாத்ரி - காரஞ்சன் [சேஷ்]


அவர்களின் விமர்சனம் இதோ:



“வாய்விட்டுச் சிரித்தால்” எனும் இச்சிறுகதை மூலம், பல மருத்துவமனைகள் வியாபார நோக்கோடு செயல்படுகின்றன என்ற கசப்பான உண்மையை, நகைச்சுவை எனும் தேனைத் தடவி, ஆசிரியர் கொடுத்திருக்கிறார்.

மனிதனை பிற உயிரினங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது சிரிப்பு மட்டுமே. மருந்துகளுக்கெல்லாம் மருந்தாகஇருப்பது சிரிப்பு மருந்து என்று          எண்ணற்றஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றார்கள்கதாசிரியரது நகைச்சுவை,  பொருள் பொதிந்ததாகவும், சிந்தனையைத்தூண்டக் கூடியதாகவும், அறிவுக்கு விருந்தாகவும் அமைகிறது.

முன்கோபம் மிகுந்த பாத்திரத்துக்குப் பெயர் கோபி. நடக்கும் சம்பவங்களோ அவர் பெயருக்கேற்ப  அவரைக் கோபிக்க வைப்பதாகவே அமைகிறது. அவரது போறாத நேரம் கல்லில் கால்தடுக்கிக் கட்டைவிரலில் நகம்பெயர்ந்தது என்றால் அதைவிடப் போறாத நேரம் அருகிலிருந்த அந்த மருத்துவமனை அவர் கண்ணில் பட்டது.

அடிபட்ட விரலுக்குச் சிகிச்சை பெறப்போய் மனஉளைச்சல் அல்லவா அடைய நேரிடுகிறது. அவருக்குமுன் டோக்கன் பெற்று அமர்ந்திருப்பவரை பொறுமையின் உச்சமாய்க் காட்டியது அருமை. அதனால் முன்கோபியான நம் கோபி பாத்திரத்திற்கு வலுசேர்ப்பதாக அமைந்து, கோபியை இன்னும் அதிகம் கோபப்பட வைத்துவிடுகிறது.

பல இலட்சங்களோ அல்லது கோடிகளோ செலவழித்து மருத்துவப் பட்டம் பெற்று, பின்னர் அதிக முதலீட்டில், நகரின் மையப் பகுதியில், அனைத்து வசதிகளுடன் ஆரம்பிக்கும் வியாபாரமாக மருத்துவமும் மாறி வருவது வேதனைக்குரிய விஷயம்.

தன்னை நாடி வருபவரின் நோய் நாடி, நோய் முதல் நாடி, அதன் வாய்நாடி வாய்ப்பச் செயல்பட்ட காலம் மாறி, எந்த வியாதியாயிருந்தாலும், தன்னிடமுள்ள அனைத்து மருத்துவப் பரிசோதனை உபகரணங்களையும் பயன்படுத்தி பரிசோதனை என்ற பெயரில், நோயாளியைத் தேவையற்ற பல சோதனைகளுக்கு உள்ளாக்கி, ஒருவித பயத்தை நோயாளிக்குள் உண்டாக்கிப், பின்னர் எல்லாம் சரியாக இருக்கிறது, இது ஒன்றைத் தவிர என அவர் எந்தக் காரணத்திற்காகச் சிகிச்சை நாடினாரோ (நோயாளியைத் தன் மனதுக்குள்ளே     ”இதைத்தானேயா நான் முதலிலேயே சொன்னேன்?” என்று புலம்ப வைத்து) அதற்கு மாத்திரை என்ற பெயரில் மளிகைக்கடைப் பட்டியல் போல் எழுதியதோடல்லாமல், தான் நடத்தும் மருந்துக் கடையிலேயே மருந்துகளை வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டாக்கி, கணிசமான ஒரு தொகையைக் கறந்துவிட்டு வெளியில் அனுப்பும் நிலை நிலவுகிறது.

இதை விளக்கும் வண்ணம், காலில் அடிபட்ட நம் கோபியை, சட்டையைக் கழட்டச் சொல்லி வெண்புறாக்கள் கட்டளையிடுவதும், எதற்கு இதெல்லாம்? எனக் குழம்பும்போது, கட்டாயச் சோதனைக்கு அவரை உட்படுத்தி, ரத்தக் கொதிப்பு, இதயத்துடிப்பு, ஜுரம் இருக்கிறதா எனப் பரிசோதனை செய்து, அவரின் இரத்தக் கொதிப்பை அதிகரித்து, இதயத்துடிப்பையும் எகிற வைத்து டோக்கன் என்ற பெயரில் அட்டையைக் கொடுப்பதாகக் காண்பிப்பது அருமை.

“இடுக்கண் வருங்கால் நகுக” எனும் குறளுக்கேற்ப முன் அனுபவம் வாய்ந்த கொரியர்க்காரர், 20ஆம் எண் டோக்கனில் அமர்ந்து, காலில் அடிபட்ட கவலையில் இருக்கும் முன்கோபியான நம் கோபியை மட்டுமல்ல நம் அனைவரையுமே சிரிக்க வைத்து விடுகிறார்.

தினமும் கொரியர் தபால் கொடுக்க வரும் அவருக்கே இந்த நிகழ்வு தினமும் நடப்பதாகவும், டாக்டரிடம் முறையிட்டும் பலனில்லை என அவர் உரைப்பது நகைச்சுவையின் உச்சம். அதே நேரத்தில் டாக்டரின் உறவினர்கள் அவரைப் பார்க்க வந்தாலும் இதே நிலைதானோ அந்த மருத்துவமனையில் என்ற எண்ணம் எழுகிறது.

பல தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் நிகழ்வை, சற்று மிகைப்படுத்திய நகைச்சுவையுடன் கதையாக்கி, நம்மை இதுகுறித்துச் சிந்திக்கத் தூண்டும் கதாசிரியர் பாராட்டுக்குரியவர். நோய்க்கேற்ற மருத்துவமனையை நாடச்சொல்லி இந்நாளில் திருவள்ளுவர் இருந்திருந்தால் ஒரு குறளை நிச்சயம் எழுதியிருப்பார் என எண்ணத் தோன்றுகிறது.

இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் காத்திருக்க வேண்டுமா என்ற எண்ணம் கோபியின் மனதில் எழுவது மட்டுமல்ல, நம்முள்ளும் இதுபோன்ற மருத்துவமனையை நாடிச் செல்ல வேண்டுமா? என்ற கேள்வியும் எழுகிறது.

கொரியர் ஆசாமியாக, திரு.மனோபாலா அவர்களும், கோபியாக திரு. வடிவேலு அவர்களும் இந்தக் கதையை நகைச்சுவைக் காட்சியாக நடித்தால் எப்படி இருக்கும் என எண்ணும்போது நம்மால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. சிரித்து சிரித்து வயிறுவலித்தது.

நல்லதொரு நகைச்சுவைப் படைப்பின் மூலம் நம் சிந்தனையைத் தூண்டி விட்ட கதாசிரியருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்!


-காரஞ்சன்(சேஷ்)
esseshadri.blogspot.in
Thank you Mr. Seshadri Sir.
- vgk

  




மனம் நிறைந்த பாராட்டுக்கள்


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.




    




 




இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றதுடன்

இரண்டாம் முறையாக அடித்த  தன் 
 ’ஹாட்-ட்ரிக்’கை 

நான்காம் சுற்றிலும் தக்க வைத்துக்கொண்டுள்ள



E.S. சேஷாத்ரி 


அவர்களுக்கு நம் 

மனமார்ந்த பாராட்டுக்கள் +

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.


 
  VGK-25  To  VGK-28 



      
  


Hat-Trick Prize Amount will be fixed later according to his

Continuous Further Success in VGK-29 and VGK-30



 


    

   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.




நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம் பரிசுக்கான தொகை இவ்விருவருக்கும் 

சரிசமமாகப்பிரித்து வழங்கப்பட உள்ளது.




இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.



காணத்தவறாதீர்கள் !





அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



 VGK-30 



  மடிசார் புடவை   


விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


14.08.2014




இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.















என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

17 கருத்துகள்:

  1. இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள
    திருநிறைச்செல்வன் J. அரவிந்த் குமார் அவர்களுக்கு
    இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  2. இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றதுடன்
    இரண்டாம் முறையாக அடித்த தன் ’ஹாட்-ட்ரிக்’கை
    நான்காம் சுற்றிலும் தக்க வைத்துக்கொண்டுள்ள
    திரு.E.S. சேஷாத்ரி அவர்களுக்கு பாராட்டுக்கள் ..
    இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. //நகைச்சுவை ஒன்றையே மையமாக்கி கொட்டும் முரசுடன் இணைந்து சிரிக்கவைக்கும் சிரிப்புமின்னல் கீற்றுகளை இடைவிடாமல் பொழியும் கதை பாராட்டுப்பெறுகிறது..!//அருமையான விமர்சனம்!
    என்னுடன் பரிசுபெறும் திருநிறைச்செல்வன் J. அரவிந்த் குமார் அவர்களுக்கு பாராட்டுகள்! பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் வழங்கும் நல்லிதயங்களுக்கு என் நன்றி!

    பதிலளிநீக்கு
  4. நண்பர்கள் அரவிந்த் குமார் மற்றம் சேஷாத்திரி இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. //இன்றைய மருத்துவ அவலங்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நாஸுக்காக கதையாக்கி சிரிக்கவைத்து சிந்திக்கவும் வைக்கிறார் ஆசிரியர்..// &
    //அவரது போறாத நேரம் கல்லில் கால்தடுக்கிக் கட்டைவிரலில் நகம்பெயர்ந்தது என்றால் அதைவிடப் போறாத நேரம் அருகிலிருந்த அந்த மருத்துவமனை அவர் கண்ணில் பட்டது.// வெற்றி பெற்ற இருவரின் விமர்சனங்களில் நான் ரசித்த வரிகள்! தொடர் வெற்றிகளுக்கும் தொடரவும் வாழ்த்துகள்! அன்புடன் உங்கள் MGR

    பதிலளிநீக்கு
  6. //இன்றைய மருத்துவ அவலங்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நாஸுக்காக கதையாக்கி சிரிக்கவைத்து சிந்திக்கவும் வைக்கிறார் ஆசிரியர்..// &
    //அவரது போறாத நேரம் கல்லில் கால்தடுக்கிக் கட்டைவிரலில் நகம்பெயர்ந்தது என்றால் அதைவிடப் போறாத நேரம் அருகிலிருந்த அந்த மருத்துவமனை அவர் கண்ணில் பட்டது.// வெற்றி பெற்ற இருவரின் விமர்சனங்களில் நான் ரசித்த வரிகள்! தொடர் வெற்றிகளுக்கும் தொடரவும் வாழ்த்துகள்! அன்புடன் உங்கள் MGR

    பதிலளிநீக்கு
  7. \\சில வாரங்களாக மருத்துமனை, டாக்டர், நர்ஸ் என்று கதைகள் சுற்றிச்சுற்றி வருவது நமக்கே ஒரு நோயாளிக் களையை ஏற்படுத்திவிட்டதாக உணரவைக்கிறது..!\\

    உள்ளதை உள்ளபடி சொல்லி அழகான விமர்சனமெழுதி இரண்டாம் பரிசுக்குத் தேர்வாகியுள்ள திரு. அரவிந்த் குமார் அவர்களுக்கு இனிய பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. \\பல தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் நிகழ்வை, சற்று மிகைப்படுத்திய நகைச்சுவையுடன் கதையாக்கி, நம்மை இதுகுறித்துச் சிந்திக்கத் தூண்டும் கதாசிரியர் பாராட்டுக்குரியவர்.\\

    உண்மையான வரிகள். இரண்டாம் பரிசு பெற்றுள்ள திரு. சேஷாத்ரி அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. அழகான விமரிசனங்கள். பரிசுபெற்ற இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.அன்புடன்

    பதிலளிநீக்கு
  10. ’சேஷ் விருது’ க்கான முதலிடமும் மற்றும் ’கீதா விருது’ க்கான மூன்றாமிடமும் பெற்றுள்ள சாதனையாளர் திரு. E S சேஷாத்ரி அவர்கள், தான் இதுவரை பெற்ற தொடர் வெற்றிகளான VGK-25 TO VGK-40 ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகச் சிறப்பித்து தன் வலைத்தளத்தினில் இன்று தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.

    அதற்கான இணைப்பு:

    http://esseshadri.blogspot.com/2014/11/blog-post.html

    அவருக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  11. திரு. அரவிந்த் குமார் மற்றும் திரு. சேஷாத்திரி அவர்களைப் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. திரு அர்விந்த்குமார் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  13. திரு. அரவிந்த் குமார் அவர்களுக்கும் திரு. சேஷாத்திரி அவர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. பரிசு வென்ற திரு அரவிந்தகுமாரு திரு சேஷாத்திரி அவங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. திரு அரவிந்தகுமார் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள். இருவரின் விமரிசனங்களும் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  16. என்னுடன் பரிசுபெறும் திருநிறைச்செல்வன் J. அரவிந்த் குமார் அவர்களுக்கு பாராட்டுகள்! பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் வழங்கும் நல்லிதயங்களுக்கு என் நன்றி!

    பதிலளிநீக்கு