என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 2 ஆகஸ்ட், 2014

VGK 27 / 03 / 03 - THIRD PRIZE WINNER - ’அவன் போட்ட கணக்கு’


’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு VGK 27 - ” அவன் போட்ட கணக்கு ” 


  

 

 
மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 
நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  
ஐந்து
  

இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள்.   


மற்றவர்களுக்கு:     


முத்தான மூன்றாம் பரிசினை 


வென்றுள்ளவர் 

 திரு. E.S. சேஷாத்ரி   


அவர்கள்
வலைத்தளம்: 

காரஞ்சன் [சேஷ்] 

esseshadri.blogspot.com


முத்தான மூன்றாம் பரிசினை வென்றுள்ள திரு. 


 E.S. சேஷாத்ரி  அவர்களின் விமர்சனம் இதோ:

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள் கிராமப்புறங்களில். Man proposes, God disposes என்பது ஆங்கிலப் பழமொழி. இதைச்சார்ந்த கதையாக இருக்கும் என்பதை கதையின் தலைப்பு நமக்கு ஓரளவு உணர்த்திவிடுகிறது.
“பூஜ்ஜியத்துகுள்ளே ஒரு
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனைப் புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்”
என்றொரு பழைய பாடல் நம் நினைவுக்கு வருகிறது. அத்தகைய இறைவனின் கணக்கை நம்மால் அறிந்து கொண்டு தீர்க்க முடியுமா?
அனைவரின் வாழ்விலும்  நடக்கும் பலநிகழ்வுகளுக்கான  காரணங்களை நம்மால் 
அறிந்துகொள்ளமுடியாது எல்லாம் வல்ல இறைவன் ஒவ்வொரு நிகழ்வுக்குள்ளும்  ஒரு காரணத்தை ஒளித்து வைத்திருப்பான்.  அதை அறிந்துகொள்வதில்தான்  அனைவரும் 
வேறுபடுகின்றோம்எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும்
புரிந்துகொள்ளும் சக்தியை அருளவும் இறைவனிடம்மனம் தளராது  முழுநம்பிக்கை வைத்து, ‘எல்லாம் நமது நன்மைக்கே’ என்ற பக்குவத்தை வளர்த்துக்கொண்டால், சோதனைகளும் சாதனைகளாகிவிடும்எந்தத்துரோகமும் நம்மை 
ஒன்றும் செய்துவிட முடியாது என்ற தத்துவத்தை எத்தனை அழகாக விளக்க முயன்றிருக்கிறார் கதாசிரியர்.
கதாபாத்திரத் தேர்வுகள் அத்தனை அருமை. பள்ளிக்கூட ப்யூன் தமிழ்மணியின் மகன் மாசிலாமணி, மருத்துவம் படிக்க வேண்டுமென ஆசைப்படுகிறார். அப்பாவும் மனக்கணக்குப் போடுகிறார். ஆனால் யதார்த்தமோ வேறு மாதிரி இருக்கிறது. பல்மருத்துவப் படிப்பிற்குத்தான் இடம் கிடைக்கும் என்ற நிலையில், குழப்பத்தோடு கணக்காசிரியரிடம் வருகிறார்.
அவரின் வார்த்தைகளின் மூலம் இன்றைய சமுதாயச் சூழலை எவ்வளவு அழகாக ஆசிரியர் எடுத்துரைக்கிறார்! தான் சாதாரண நிலையில் இருந்தாலும் தன் மகனை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டுவர ஆசைப்படும் பெற்றோர். அதற்காக தம்முடைய சொத்து மற்றும் சேமிப்பையும் அர்ப்பணிக்கத் துணிகின்றனர். பெற்றோரின் ஆசையோ அல்லது பிள்ளைகளின் ஆசையோ, அவ்வாறு வாய்ப்பமைந்து அதை நன்கு பயன்படுத்தி முன்னேறி பெற்றோரைப் போற்றிக் காத்திடும் பிள்ளைகள் அமைந்துவிட்டால் அதை விட சொர்க்கம் மண்ணுலகில் இல்லை. முன்னேறியபின் கவனிக்காமல் கைவிட்டால், அதை விட நரகமும் இல்லை.
குழப்பத்திலிருந்த ப்யூனுக்கு பல் மருத்துவம் ஒன்றும் சாதாரணமான படிப்பல்ல என்பதை, 32 பற்கள் ஒவ்வொருவருக்கும் எனத் தொடங்கி, அதில் ஆடும் பற்கள், சிகிச்சை நாடும் பற்கள் என்றெல்லாம் பற்பல புள்ளிவிவரங்களுடன் அவனுக்கு விளக்கி, அவனைப் பல்தெரிய சிரிக்க வைக்கும் கணக்காசிரியர், நமக்குள்ளும் பல்லுக்கு வைத்தியம் செய்வதில் பல்லாயிரம் புள்ளி விவரங்களா என வியக்க வைத்து விடுகிறார். அது மட்டுமல்ல, ஏழையோ, பணக்காரனோ, அரசியல்வாதியோ, அதிகாரியோ அனைவரும் பல்லைக்காட்டிக் கொண்டு பல் மருத்துவரிடம் வந்தாக வேண்டிய நிர்ப்பந்தம் உண்டென்பதையும், ஹோட்டல் மெனுவைப்போல பல்வைத்தியத்தில் இத்தனை வியாதிகள் பற்களில் உண்டா என வியப்பு ஏற்படும் படி பட்டியலிட்டு, அவரது மகன் பல் மருத்துவம் பார்ப்பதன் மூலம் ஈட்டும் பணத்தை எண்ணவே நேரம் போதாது என்ற எண்ணத்தை அவனுள் விதைத்து, ஒரு மாணவனின் சந்தேகத்தைப் பூரணமாக நிவர்த்தி செய்து கணக்காசிரியர் சொன்ன கணக்கு சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையைப் பெற்ற கணக்காசிரியர் ஆகி விடுகிறார்.
காலங்கள் உருண்டோட, சரியாகக் கணக்குப்போட்டுக் கொடுத்த கணக்கு வாத்யார், ப்யூனிடம் இன்னும் ஒரு மாதத்தில் உன் மகன் பல் மருத்துவப் படிப்பை முடித்துத் திரும்பிய உடன் உன் கஷ்டமெல்லாம் தீரப்போகும் வேளை நெருங்கிவிட்டது என உரைக்கையில்தான் கணக்காசிரியருக்குத் தன் கணக்கிலும் பிழையிருப்பதை உணரமுடிந்தது. அவன் போட்ட கணக்கை அறிந்திட அவனியில் ஆசிரியர் உண்டோ?
தன் உடன் பயின்றவளுடன், காதல் வலையில் சிக்கிய தன் மகன், மேற்படிப்புக்காக அவளுடன் வெளிநாடு செல்ல இருப்பதையும், அதற்கான செலவை அந்தப் பெண்ணின் வீட்டாரே ஏற்றுக் கொள்வதாக இருப்பதாகவும் கூறும் போது ஏதோ தன் தோழனிடம் சொல்லுவதுபோல் சொல்லிச்சென்றது வருத்தமளிக்கிறது என்கிறார்.
தோளுக்கு மிஞ்சினால் தோழன் தானே? அந்த நேரத்தில் தன் பற்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் பிடுங்கி எறிந்தது போல் இருந்தது என உரைக்கும் இடத்தில் அந்த பெற்றவனின் மனத்துயரை இதைவிடச் சிறப்பாக உரைத்திருக்க முடியாது.
வலையில் சிக்கிய பறவை, கடவுள் போட்ட கணக்கைப் புரிந்து கொள்ள முடியாமல் தலையைப் பிய்த்துக் கொள்ளும் கணக்காசிரியர், ஆடிப்போன உள்ளத்துடன் இருக்கும் ப்யூனை சிம்பாலிக்காக மணியுடன் ஆடும் பள்ளிக்கூடம் என சூழ்நிலைகளை விளக்கிட நேர்த்தியான படத்தேர்வுகள். ஒரு படம் ஓராயிரம் வார்த்தைகளை உணரவைத்து விடுகிறது.
எளிமையான பாத்திரங்கள் மூலம், கோர்வையாகக் கதையை நகர்த்தி, “அவன் போட்ட கணக்கை அவனியில் யாரறிவார்?”, “கடமையைச் செய் பலனை எதிர்பாராதே!” எனும் தத்துவத்தை நம் மனதில் பதிய வைத்து விடுகிறார். நமக்கும் இதற்குப் பின்னாலும் ஏதோ ஒரு கணக்கை இறைவன் வைத்திருப்பான் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதற்கேற்றார்போல் காற்றில் மிதந்து, “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை! நடந்ததையே நினைத்திருந்தால் என்றும் அமைதியில்லை” எனும் காலத்தால் அழியாத கவியரசரின் பாடல் வரிகள் நம் காதுகளில் ஒலிக்கிறது.
நல்லதொரு படைப்பைத்தந்த கதாசிரியருக்கு என் பாராட்டுகளுடன் நன்றி கலந்த வணக்கத்தையும் உரித்தாக்குகிறேன்.
-காரஞ்சன்(சேஷ்)மனம் நிறைந்த பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகள்.
     
 
முத்தான மூன்றாம் பரிசினை வென்றதுடன்

இரண்டாம் முறையாக மீண்டும் 


ஒரு புது ஹாட்-ட்ரிக் அடித்துள்ள


திரு.    E.S. சேஷாத்ரி    அவர்களுக்கு நம் 

மனமார்ந்த பாராட்டுக்கள் +

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.  VGK-25  To  VGK-27 


   
  

Hat-Trick Prize Amount will be fixed later according to his

Continuous Further Success in VGK-28, VGK-29 and VGK-30
    மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.


இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.காணத்தவறாதீர்கள் !


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOoooooஇந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:VGK-29’அட்டெண்டர் ஆறுமுகம்’
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


07.08.2014  


இந்திய நேரம் இரவு 8 மணிக்குள்.என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

15 கருத்துகள்:

 1. மூன்றாம் பரிசினை வென்றுள்ள நண்பர் சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. பெற்றோரின் ஆசையோ அல்லது பிள்ளைகளின் ஆசையோ, அவ்வாறு வாய்ப்பமைந்து அதை நன்கு பயன்படுத்தி முன்னேறி பெற்றோரைப் போற்றிக் காத்திடும் பிள்ளைகள் அமைந்துவிட்டால் அதை விட சொர்க்கம் மண்ணுலகில் இல்லை. முன்னேறியபின் கவனிக்காமல் கைவிட்டால், அதை விட நரகமும் இல்லை.//

  நிதர்சன சமுதாயத்தை கண்ணாடியாக பிரதிபலித்த
  அருமையான வரிகள்..

  பதிலளிநீக்கு
 3. முத்தான மூன்றாம் பரிசினை வென்றதுடன்
  இரண்டாம் முறையாக மீண்டும் ஹாட்-ட்ரிக் அடித்துள்ள
  திரு.E.S. சேஷாத்ரி அவர்களுக்கு பாராட்டுக்கள் .
  இனிய நல்வாழ்த்துகள்.

  இரண்டு பின்னூட்டங்களில் ஒன்றைக் காணவில்லை..
  எனவே மீண்டும் ..மீண்டும்..

  பதிலளிநீக்கு
 4. மூன்றாம் பரிசினை வென்றுள்ள திரு சேஷாத்திரி அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. நல்லதொரு விமர்சனம். கவியரசரின் வரிகளும் கீதையின் வரிகளும் விமர்சனத்தினூடே இழைந்து மேலும் சிறப்பூட்டுகின்றன. திரு.சேஷாத்ரி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 6. மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது மகிழ்வளிக்கிறது! வாழ்த்திய/வாழ்த்தப்போகும் அன்புளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி! வாய்ப்பளித்த திரு வைகோ அவர்களுக்கும், தேற்வு செய்த நடுவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

  பதிலளிநீக்கு
 7. //எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும்,
  புரிந்துகொள்ளும் சக்தியை அருளவும் இறைவனிடம், மனம் தளராது முழுநம்பிக்கை
  வைத்து, ‘எல்லாம் நமது நன்மைக்கே’ என்ற பக்குவத்தை வளர்த்துக்கொண்டால், சோதனைகளும் சாதனைகளாகிவிடும். எந்தத்துரோகமும் நம்மை
  ஒன்றும் செய்துவிட முடியாது என்ற தத்துவத்தை எத்தனை அழகாக விளக்க முயன்றிருக்கிறார் கதாசிரியர்.// யதார்த்த வரிகள்! முத்தான மூன்றாம் பரிசை வென்றமைக்கு வாழ்த்துகள் நண்பரே! அன்புடன் MGR

  பதிலளிநீக்கு
 8. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (22.07.2015) கிடைத்துள்ள, ஓர் பின்னூட்டம்:

  -=-=-=-=-=-=-

  அவன் போட்ட கணக்கு:

  அம்மாடியோ..... கணக்கு வாத்தியார் போட்ட கணக்கு.... மணல்கயிறு விசு அவர்களையும், நம்ம விஜயகாந்த் அவர்களையும் கூட ஒரேயடியாத் தள்ளிப் போட்டுவிட்டது. அப்படி ஒரு துல்லியம்.

  எங்கிருந்து கண்டுபிடிச்சீங்க இப்படி ஒரு தனித்துவம் வாய்ந்த ஒரு கணக்குப் புலியை. நம்ப அரசியலுக்கும் இவர் தான் இப்போ அவசரத்தேவை.

  தமிழ்மணி, அவரது நம்பிக்கையின் பல்லை அவர் மகனே முதலில் பிடுங்கிய போது 'கணக்குத் தவறிப் போனதற்கு'.... ஆஹா..... கதையின் முடிவு நச்ச்ச்.....ன்னு கணக்கு வாத்தியார் தலையில் ஒன்று வைத்தது போல இருந்தது...!

  -=-=-=-=-=-=-

  இப்படிக்கு,
  தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

  பதிலளிநீக்கு
 9. மூன்றாம் பரிசினை வென்றுள்ள திரு சேஷாத்திரி அவர்களுக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 10. பரிசு வென்ற திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 11. மூன்றாம் பரிசினை வென்றுள்ள திரு சேஷாத்திரி அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. பரிசு வென்ற திரு சேஷாத்திரி அவங்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள் பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு என்கிற அழகான பாடலுடன் விமரிசனத்தை தொடங்கி நல்லா எழுதி இருக்கிறார்.

  பதிலளிநீக்கு